அனைத்து போட்டோகளையும்  ‘சேவ்’ செய்து தன் மெயிலுக்கு பார்வேர்ட் செய்து நேரமாவதை உணர்ந்து கிளம்பினாள்.

அன்றிலிருந்து தினமும் அவனது பேஸ்புக் அக்கௌண்டை பார்க்காமல் விட மாட்டாள்….

‘ரெக்கோஸ்ட் ‘ அனுப்பிட மனமும் கைகளும் துடிக்கும்…. கோபம் ஒரு புறம் என்றாலும், சத்ரி இதை எப்படி எடுத்துக் கொள்வான்..  கண்டிப்பாய் தன்னை கண்டிப்பது உறுதி.. முன்பு போல் சாதாரணமாய் அவனிடம் பேச முடியாது..மேலும் . தன்னை கண்டு கொள்வான் என தனக்கு அறிமுகமான உணர்வுகள் அவளுக்கு பயத்தை கொடுக்க.. அப்படியே அந்த நினைவை கைவிட்டாள்.

தினமும் அவனது ‘”போஸ்ட்டுகள்” ” நண்பர்கள்” அவன் ஒவ்வோன்றிருக்கும் போடும் கமெண்டுகள், அதற்கு ரிப்ளை அனுப்புவது என, அதனை எல்லாம் ஒரு குறு நகையுடன் பார்த்து ரசிப்பாள், மற்றபடி அதற்கு கமெண்டுகள் போடுவதோ, லைக் பண்ணுவதோ எதுவுமே இருக்காது.

 சப்பென சென்று கொண்டிருந்த சாத்வியின் கல்லூரி வாழ்க்கையில் சத்ரியின் நகல் கூட அவருக்கு சுறு சுறுப்பை கொடுக்க…   முகத்தில் அவ்வளவு பரவசம் இருக்கும். ஏதோ இத்தனை வருடம் இழந்த சந்தோசம் எல்லாம் ஒரே நொடியில் மீட்டெடுத்தாற் போல் அவ்வளவு பரவசம்…

வீட்டில் நடக்கும் சிறு பிரச்சனைகளை கூட அவனுடன் தினமும் பேச, மனதிலிருந்த பாரம் குறைவதாய் தெரிய…  மகிழ்ச்சியாய் அவனை பார்க்கவென்றே அவனுடன் பேசவென்றே..  தினமும் சரண்யாவுடன் ப்ரவுஸிங் சென்டர் செல்ல தொடங்கினாள்…

“ஏய், பெரிசா பேஸ்புக்கே பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு…. நீ தாண்டி இப்போ லேட்டா வர்ற” என சரண்யா கிண்டல் செய்ய கூட தொடங்கினாள்.

ஆயிற்று இந்த மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் எழுதாத பேங்க் எக்ஸாம் இல்லை.

ஒவ்வொரு முறை  ரிசல்ட் வரும் போதெல்லாம் , ஒன்று, இரண்டு மார்க்குகளின் வித்யாசத்தில் ,அவளுக்கு வேலை கிடைப்பது தள்ளி போக அதிலும் ஒரு வெறுப்பு வந்தது.

அன்றும் அவனது போட்டோவை ஸ்கீனில் எடுத்து வைத்து அதனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“சத்ரி , பைனல் இயர் வந்துட்டேண்டா..  இது வரை எழு எட்டு பேங்க எக்ஸாம் எழுதிட்டேன்.. இது நான் எழுத போற கடைசி பேங்க் எக்ஸாம்.. இதுலையாவது நான் பாஸ் பண்ணனும்,  பண்ணியே ஆகனும் இல்லை! நீ செத்தடா” என அவனது நகலிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் சாத்வி.

துன்பங்களை குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் ஸ்ரீ ராம ஜெயமிடம் மீண்டும் சரண் புகுந்தாள். அடுத்த எக்ஸாமிற்காய் வேண்டுதலோடு எழுத தொடங்கினாள்.

சத்ரி கொடுத்த சுறு சுறுப்பா…

அவளின் உத்வேகமா..

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற இறுமாப்பா..

பெற்றவர்களின் முன்பு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற இலட்சியமா…

இல்லை எல்லாவற்றையும் மீறிய.. ஆஞ்சநேய பக்தியினாலா.. என ஏதோ ஒன்று அவளுக்கு உறுதிணையாய் இருக்க

கடைசி எக்ஸாமில் பாஸ் செய்து விட்டாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்டெர்வீயுக்கு கூட தானாகவே சென்று வர அதிலும் வெற்றி தான்.

வீட்டிற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது…ஆனால் போஸ்டிங்…  திருச்சி அல்லது மதுரை என்றிருக்க.. கவலை படுவதற்கு பதில் , ஆனந்த தாண்டவம் ஆடியது. மதுரை தான் அருகில் என்றாலும்.. விரும்பி திருச்சியை தேர்வு செய்தாள் சத்ரியை பார்க்கும் ஆசையுடன்.

தந்தையிடமும் தாயிடமும் வேலை கிடைத்ததை ஆசையாய்  சொல்ல…. சங்கரன் முகத்தை திருப்பி “நாங்க சொல்வதை எங்கே நீ கேட்கிற.. உனக்காக மாடா உழைச்சு…  உன் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சு நீயாவது எங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணி ஊருக்குள்ளே தலை நிமிர வைப்பன்னு நினைச்சேன்.. உன்னை வளர்த்து பெரியாளாக்கினது எங்க தப்பு தான்.. போ… எங்கேயும் போ, எக்கேடு கெட்டும் போ” என அவளை அனுப்பி விட இதற்கும் கவலை இல்லை…  ‘எதிர்பார்த்தேன்’ என்றொரு முறுவல்…

மஹாவிற்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை தனியே அனுப்பிட மனம் துடிக்க தான் செய்தது.. அவர் பேச வரும் முன்பே சாத்வி முந்திக் கொண்டாள்

“கடவுள் கொடுத்த வரத்தை   என்னால் எட்டி உதைக்க முடியாது..,போதும் இந்தளவுக்கு என்னை வளர்த்து ‘ பெரிய்யயயய’ ஆளா ஆக்கினதே போதும்.. இனியும் எனக்காக நீங்க ‘மாடா’ உழைக்க வேணாம்.. என்னை நானே பார்த்துப்பேன்“  பேசி முடித்தவளின் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு…  அதே நேரம் கூண்டை  விட்டு பறக்கும் பறவையின் சந்தோசம் இரு உணர்வுகளையும் சிறிதும் வெளிக்காட்டவில்லை சாத்வி…  இதோ கிளம்பி விட்டாள்

லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தாள்…   பேஸ்புக்கில் கண்ட சத்ரியை நேரிலேயே காண ஆவல் கொண்டது அவள் உள்ளம்.

 அவளது கோபங்களை, ஈகோவை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு, அவனை காண சென்றாள் அவனின் கடைக்கே..

“பைக்கர்ஸ் பாய்ண்ட் “ என்றிருந்த  அந்த விஸ்தாரமான கடையை அளந்தபடியே சென்றாள்.

“இங்கே சத்ரியன்..” என அடுத்து என்ன கேட்பது என தெரியாமல் விழித்தபடி கேட்க

“அண்ணா, கஸ்டமர்” என ஒருவன் குரல் கொடுத்து “உள்ளே போங்க , அண்ணா அங்கே தான் இருப்பாங்க” என அவளை அனுப்பி வைத்தான்.

மிகுந்த எதிர்பார்ப்போடு அடி மேல் அடி வைத்து உள்ளே சென்றாள்.

“சொல்லுங்க மேடம்” என கேட்டபடி அந்த அழுக்கு சட்டை ஆணழகன் அவள் முன் தரிசனம் தந்தான் அசால்ட்டாய்,  கண்கள் விரிய பார்த்திருந்தாள், இவன் தன் சத்ரி தானா என?

“என்ன மேடம் பைக் எதுவும் ஆல்ட்ரேசன் செய்யனுமா, இல்லை ரீ மாடலிங் பண்ணனுமா” என சாதாரண கஸ்டமரை விசாரிப்பது போல் கேட்க

இடையே விழுந்தது இவள் தலையில்..

“மேடம் ரிப்பேரா? ரீ மாடலிங்கா?” இவன் அழுத்தமாய் கேட்க

“அது அது” என இவள் வார்த்தைகள்  தடுமாறி நின்றது

அதற்குள். உள்ளே இருந்தவன் “அண்ணா இங்கே வெல்டிங் வைக்க முடியலை” என உள்ளிருந்து இன்னொருவன் சத்தம் கொடுக்க..

“ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன். நீங்கள் வெயிட் பண்ணுங்க” என  அருகில் இருந்த சேரை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.

வேலை முடிந்து பல நிமிடங்கள் கழித்து வெளியே வர, சாத்வி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்..

சத்ரியும் கண்டு கொள்ளவில்லை “வேண்டும் என்றால் மீண்டும் வர போகிறார்கள்” என தோள்களை குலுக்கி சென்று விட்டான்.

சத்ரிக்கு நிஜமாகவே அடையாளம் தெரியவில்லை. ஏற்கனவே ஒன்பாதம் வகுப்பில் பார்த்தவன், அப்போது மூன்று வருடம், கல்லூரி மூன்று வருடம்” என ஆறு வருடங்களில் சாத்வியின் குழந்தை முகம்..  பருவ வளர்ச்சியினால் இப்படி அழகியாய் மாறி தன் முன்  வந்து நிற்பாள் என கனவா கண்டான்…. மேலும் ஏற்கனவே வெல்டிங்கில் இருந்ததாலும், வெளியே அடித்த வெயிலினாலும்…. கூசிய கண்களை சுருக்கியபடி குத்து மதிப்பாய் அவளை பார்த்து பேச.. அவள் முகத்தை சாதாரணமாய் பார்த்தவனுக்கு சத்தியாமாய் அடையாளம் தெரியவில்லை..

ஆனால் பார்த்த அடுத்த நொடி தான் எப்படி அடையாளம் கண்டு கொண்டோம். ஆனால் என்னை அவனுக்கு தெரியவில்லையே அந்தளவுக்கா தன் முகம் மறந்துவிட்டது. உயிரோடு சாவதென்றால் இப்படி தான் வலிக்குமா? எண்ணங்கள் தறிகெட்டு ஓடியபடி  ஹாஸ்டல் வந்தவளுக்கு இதயமே உடையும் உணர்வு…  அழுகை வெடித்து சிதறியது.. வெகு நேரம் கழித்து எழுந்தவளுக்கு  மீண்டும் சத்ரியின் வார்த்தைகள் தான்.. “ உன்னோட எந்த உணர்வுக்கும் வடிகால் தேடாதே” என அசரீரியாய் ஒலித்துக் கொண்டே இருக்க.. அன்றிலிருந்து கல்லாய் இறுகிப் போனாள்..

ஆனல் உயிர் வாழ..உணவு ,மூச்சு காற்று, போன்ற அத்தியாவசியங்களுடன் தானாகவே சேர்ந்து கொண்டது சத்ரியின் பேஸ் புக் தரிசனங்களும் உணர்வுகள் உடையும் நேரங்களில் எழுதும்   “ ஸ்ரீராம ஜெயமும்”

இரண்டையும் அவள் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டாள்..

பேங்கில் ஜாயின் செய்து யாருக்காக தான் வாழ்கிறோம்  என தெரியாத ஓட்டம்.

அடுத்தும் சில வருடங்கள் கடந்தது, பேங்கின் உள்ளேயே நடத்தப்பட்ட தேர்வில் தேர்வாகி, கிளார்க்கில் இருந்து பி.ஓ பதவியை அடைந்தாள்.

ஊரில் இருந்தவரை கவலை தோய்ந்த முகத்துடன் வருபவள்…  வேலை என்றானபின், புதிதாய் சிறகு முளைத்த பறவை போல் உணர்ந்தாள்….ஆனாலும் எதிலோ தோற்ற உணர்வு.

அங்கே சத்ரியோ ஊரில் இருந்த வந்த இத்தனை வருடங்களில் தனக்குரிய பைக் மாட்லேசன் துறையில் தனி முத்திரையை பதித்திருந்தான்.

பைக் ரீமாடலிங் போக குழந்தைகளுக்கான பைக்குகள், மாற்று திறனாளிகளுக்கான பைக்குகள்  என அவர்களையும் விட்டு வைக்காமல் தன்னுடைய தனித்தன்மையால் கவர்ந்து கொண்டிருந்தான்….சத்ரி .