அத்தியாயம் -16

திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர்.

ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான மாலை வேலை. பேச்சி பாட்டி வெளி திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

மித்ரா இரண்டு நாட்களாக ரஞ்சன் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தால், அவள் ஒளிவது ரஞ்சனுக்கு தெரிந்தாலும் எவ்வளவு நாள் தப்பிக்கறனு பாக்குறேன் என்று நக்கலாக நினைத்து கொண்டு இருந்தான்.

அன்றும் மித்ரா பதுங்கி பதுங்கி செல்வதை கைகளை கட்டியவாறு பார்த்தவன் கண்களில் குறும்பு மிளிர, சுற்றி பார்த்தான் பேச்சுப் பாட்டி தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து ‘பாட்டி உன்னை இப்போ காப்பாத்திட்டாங்க. அப்புறம் சிக்கும்போது இருக்கு உனக்கு’ என்று நினைத்தவன் வெள்ளை நிற புடவை அணிந்து தேவதையாக செல்பவளை ரசித்துவிட்டு பாட்டியின் அருகில் சென்றான்.

அவனை பார்த்த பாட்டி “வா நிரஞ்சா சாப்டியா”.

“ம்ம்…அதெல்லாம் ஆச்சு. ஆமா யாரு அந்த நிரஞ்சன். நான் ரஞ்சு உன் ரஞ்சு பேச்சி” என்க,

அவரோ அவனை பார்த்து திகைத்து நெஞ்சில் கை வைத்தவர் “ரஞ்சி….. நீ இன்னும் போகலையாடி…”

“எங்க போறது. இன்னும் கொஞ்ச நாள் உன்கூட இருந்துட்டு போலாம்னுதான் இங்கயே இருக்கேன். சரி என்னடி இது அநியாயமா இருக்கு திருவிழாவும் அதுவுமா ஆடு, கோழின்னு வைக்காம சாம்பார வச்சு ஊத்துறீங்க” என்று அவரை வம்பிழுக்கும் பொருட்டு கேட்க,

அவரோ “அது இன்னைக்கு தேரு வருதுல ரஞ்சி அதான் சாம்பார். மத்தியானத்துக்கு ஆடு கோழி எல்லாம் சொல்லியிருக்கு. அதைவிடு ஆமா இன்னும் நீ ஏன் போகாம இருக்க”

”என்ன பேச்சிஉன்கூட கொஞ்ச இருந்துட்டு போகும்போது உன்னையும்……”

“எதே….. எடு வெளக்கமாத்த…நாசமா போனவளே போய் வாய கழுவுடி. என்னடி பேசற. எதுக்கு என்னைய கூட்டிட்டு போகணும்” என்க,

ரஞ்சனோ வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “என்ன பேச்சி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட மேல நீ இல்லாம போர் அடிக்குது வா நாம ரெண்டு பேரும் சோடியா போலாம்”.

“ஏன்டி வா கடை தெருக்கு போய் வளையல் வாங்கிட்டு வரலாம்னு சொல்ற மாதிரி சொல்ற உசுருடி போனா வராது”.

“அதெல்லாம் வரும். நான் இப்போ வரல. இதே மாதிரி மறுக்கா வந்து நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு போலாம். காலு வலி இல்ல, முதுகு வலி இல்ல, நடக்க தேவையில்லை, பறக்கலாம்.

போக வேண்டிய இடத்துக்கு சொடக்கு போடற நேரத்துல போயிடலாம் நல்லா யோசி பேச்சி”

“என்னடி இது அநியாயம் செத்து ஆவியா அலைய யாரவது விளம்பரம் பண்ணுவாங்களா” என்று வாயில் கை வைத்து கொள்ள,
“நான் பண்ணுவேன். வா நாம செத்து…. செத்து விளையாடலாம்”

“என்ன….. செத்து செத்து விளையாடலாமா. ஏன்டி கூறு கேட்டவளே செத்தவுடனே உனக்கு பைத்தியம் புடிச்சுகிச்சா ஒழுங்கா ஓடி போயிடு”

“அப்போ நீ வர மாட்ட” என்று அவரை பார்த்த ரஞ்சன் அவர் முகத்தில் இருக்கும் பயத்தை கண்டு தனக்குள் சிரித்து கொண்டு “சரி மிட்டாய் எங்க?” என்க,

அவரோ “மிட்டாயா?!…..” என்று விழிக்க,

“என்ன பேச்சி ஒரு நாள் வாங்கி குடுத்தா நான் போயிடுவேன்னு நினைச்சியா? எத்தனை வருஷ ஏக்கம் போ போய் இன்னும் நிறைய மிட்டாய் வாங்கிட்டு வா இல்ல. உன் வீட்ல இருக்க எல்லா கோழியையும் ஒரே நைட்ல அடிச்சு சாப்பிட்டுருவேன். அது மட்டும் இல்லாம போகும்போது கையில் மிதக்கும் கனவா நீனு உன்னையும் கையோட தூக்கிட்டு போயிருவேன்”

“ஆத்தி ஒரே ராவுலயா….. வேண்டாண்டியம்மா…வேண்டாம். இந்தா போய் வாங்கிட்டு வாரேன்” என்று எழுந்தவர். அப்படியே தயங்கி நிற்க,

“என்ன போகல”

“இல்ல ரஞ்சு. சாமி தேரு தெரு முக்கு வந்துருச்சு. நான் வேணா அப்புறம் வாங்கிட்டு வரவா”

“சரி….” என்றவன் சொன்னவுடன், அவர் முகம் பிரகாசமாக “நீ போய் மிட்டாய் வாங்கிட்டு வர வரை ஒவ்வொரு கோழியா புடிச்சு ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுட்டு இருக்கேன்” என்றுவிட்டு அவன் செல்ல போக,

“எதே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுறியா. ஏன்டி என்னை இப்படி படுத்தர போறேன் போய் தொலையறேன்”

“ம்ம்…. அது என்ன கோவமா சலிச்சுக்கிட்டு போற, அப்படி ஒன்னும் நீ போக வேண்டாம் சின்ன வயசுல என்கிட்ட புடிங்கி சாப்பிடும்போது மட்டும் நல்லா இருந்துச்சா” என்க,

பாட்டியோ ‘இவ இப்போ நான் கோவமா போறேன்னு சொல்றாளா இல்ல சலிச்சுட்டு போறேன்னு சொல்றாளா’ என்று அதுதான் முக்கியம் என்பது போல் யோசிக்க,

அவர் யோசிப்பதை பார்த்த ரஞ்சன் “சரி நான் போய் அந்த கோழிய பிடிக்கறேன்” என்று போக,

அவன் கையை பிடித்து நிற்க வைத்தவர் “ஹிஹிஹி…. கோவிச்சுக்காதடி ரஞ்சி. இப்போ என்ன உனக்கு மிட்டாய்தானே வேணும் நான் போறேன். ஹிஹிஹி….கோவமா எல்லாம் போகல ஹிஹிஹி…. பாரு சிரிச்சுட்டுதானே இருக்கேன் ஹிஹிஹி….” என்று வராத சிரிப்பை அவர் கஷ்டப்பட்டு இழுக்க,

அதை கண்டு ரஞ்சனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இருந்தாலும் பல்லை கடித்து கொண்டு நின்றவன் “ம்ம்ம் சீக்கிரம் போய் வாங்கிட்டு வா” என்றவுடன் ,

இடுப்பில் கை வைத்து “ஹப்பா….. முருகா…” என்றவாறு எழுந்தவர் ‘சிறுவயசுல ஒரு மிட்டாய புடுங்கி தின்னாலும் தின்னேன். இப்படி வயசான காலத்துல என்னை பாடா படுத்துறா. போற போக்க பார்த்தா இவளுக்கு மிட்டாய் வாங்கி குடுத்தே என் சொத்து அழிஞ்சுடும் போல’ என்று முணகி கொண்டே சென்றார்.

போற போக்கில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவரிடம் “டேய் சொக்கா அந்த கோழிய எல்லாம் திறந்து விடு. அதுப்பாட்டுக்கு வெளிய மேயட்டும். எதுக்கு அடைச்சு வச்சிருக்க. அவ வந்து மொத்தமா கொத்தா திங்கவா” என்று முன் பாதியை வேகமாக சொன்னவர் பின் பாதியை முணகிவிட்டு சென்றார்.

அவர் செல்வதை சிரிப்புடன் பார்த்து கொண்டு நின்றவன் கண்களில் அவளவன் பட, கோழி தொக்கா மாட்டிக்கிச்சு சூப் போட்ற வேண்டியதுதான் என்று நினைத்தவன் அவள் பின்னோடு போய் அவள் இடையில் கை வைக்க போக,

சரியாக இருவருக்கும் இடையில் வந்து நின்றான் ஹர்ஷா.

‘என்ன கை வச்ச உடனே என் ஆளு அவ அண்ணன் உருவத்துக்கு மாறிட்டா’ என்று யோசனையில் இருந்தவன் முன் சொடக்கிட்ட ஹர்ஷா “கைய எடுக்கிறியா” என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல,

“ச்சி….. இவன் இடுப்பையா பிடிச்சா. நீ பிடிக்க வேண்டியா இடுப்பா இது” என்று தன் கையை பார்த்து திட்டியவன், ஹார்ஷாவை பார்த்து “ஏன்டா உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு உன் தங்கச்சி பின்னாடியே சுத்திட்டு இருக்க” என்க,

கடுப்பான ஹர்ஷா “அதை நான் கேட்கணும். உனக்கு வேற இல்லை. என் தங்கச்சி பின்னாடியே சுத்திட்டு இருக்க. இன்னொருவாட்டி அவக்கூட உன்னை பார்த்தேன். சாப்பிட கை இருக்காது பார்த்துக்கோ” என்றுவிட்டு போக,

மித்ராவும் அங்கிருந்து சென்றிருந்தாள். ரொம்ப ஓவராதான் போறான். போடா எனக்கு ஒரு நேரம் வரும் அப்போ உன்ன பேசிக்கறேன்’ என்றுவிட்டு சென்றுவிட்டான்.

சற்று நேரத்தில் தேர் அவர்கள் வீட்டுக்கு அருகில் வந்துவிட கையில் குடுத்துடன் வந்த கிருத்திகா தேருக்கு முன் நீரை ஊற்றி தேங்கா பழ தட்டை எடுத்து வந்து சாமி முன் வைத்து உடைத்து குடும்பமாக அனைவரும் நின்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்க, பேச்சு பாட்டி மூச்சு வாங்க அவர்கள் அருகில் வந்து நின்று சாமி கும்பிட்டார்.

ஒருவழியாக அனைவரும் சாமிகும்பிட்டு முடிய தேரை தள்ளி கொண்டு சென்றனர் இளவட்டங்கள்.

வீட்டுக்குள் சென்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்க, “அண்ணா….. அண்ணா….” என்ற பத்மா குரல் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ஒலிக்க,

தேவகி பாட்டியோ நாளைக்கு கிளம்பற வரை இந்த பாட்டு ஓயாது என்று புலம்பிவிட்டு எழுந்து அறைக்குள் சென்றுவிட,
பேச்சி பாட்டி நிரஞ்சனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தார்.

நேரம் அப்படியே செல்ல, இரவு சீரியல் பார்த்து கொண்டு இருந்த பேச்சியிடம் சென்ற ரஞ்சன் “மிட்டாய் எங்க?” என்று கேட்க,

தன் சுருக்கு பையில் வைத்திருந்த மிட்டாயை எடுத்து குடுத்தவர் “ரஞ்சி எனக்கொரு சந்தேகம். கேட்கட்டா?”

“என்ன சந்தேகம்”
“இல்ல. சாமிகிட்ட பேய் வராதுன்னு சொல்லுவாங்க. சாயந்தரம் தேர்கிட்ட நின்னு நிரஞ்சன் நல்லா சாமி கும்பிட்டான். இப்போ நீ என்கிட்ட வந்து பேசுற அது எப்படி?”

“அது ரொம்ப ஈசி பேச்சி. சாமி வரும்போது வெளிய போயிடுவேன். அப்புறம் உள்ள வந்துடுவேன். பாரு இந்த பையன் நெத்தில திருநீறு இல்ல அதான் வந்தேன்” என்று உண்மை போலவே ரஞ்சன் சொல்ல, அவரும் அதை நம்பிவிட்டார்.

அதன் பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, ஹாசி கண்கள் ஹர்ஷாவை சுற்றி வர, அவனோ அவள் அறைக்கு சென்ற போது நடந்த விஷயங்களால் அவளை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்தான்.

அடுத்த நாள் காலை அனைவரும் ஊருக்கு கிளம்ப, பேச்சி பாட்டிக்கு கண்கள் கலங்கிவிட்டது. மகளை கூட கண்டு கொள்ளாமல் நிரஞ்சனை போய் அணைத்து கொண்டவர் அவன் கேட்காமலே கை நிறைய மிட்டாயை எடுத்து கொடுத்தவர் “அடுத்து உங்க கல்யாணம்தான். அப்போதான் பார்க்க முடியும். இந்த பாட்டிக்கு அப்பப்போ போன்பண்ணி பேசுப்பா” என்றவர் மனம் கணத்துதான் போனது.

நிரஞ்சனோ, ரஞ்சனியோ இருந்த ஒரு வாரமும் அவருடனேயே பேச்சு கொடுத்து வேலை வாங்கி, அரலவிட்ட நிரஞ்சனை அவருக்கு மிகவும் பிடித்து போனது.

தன் பாட்டி தன்னை கண்டு கொள்ளவில்லை என்பதில் கடுப்பான ஹர்ஷா “பாட்டி…” என்று கத்த,

அவரோ “வரேன் இரு ராசா” என்றுவிட்டு நிரஞ்சனிடம் “உடம்ப நல்லா பார்த்துக்கோ ராசா. நேரம் கெட்ட நேரத்துல வெளிய போகாத. இது எங்க குல சாமி திருநீறு நெத்தில வச்சுக்கோ” என்று குடுக்க,

அவரின் அக்கறை, நிரஞ்சன் மனதிற்கு மகிழ்ச்சியாகதான் இருந்தது. அதே சமயம் அவரை விட்டு பிரிவது அவனுக்கும் வருத்தமாக இருந்தது.

அதை அவரிடமே சொல்லி “பாட்டி என்கூட வர்றீங்களா. உங்களை விட்டு போகறதை நினைச்சா கஷ்ட்டமா இருக்கு”

“அட என்ன ராசா உனக்கு எப்போ விருப்பமோ இங்க வா. எனக்கு அந்த ஊரு சரியா இருக்காதுப்பா. நீ சீக்கிரம் ஒரு நல்ல சேதி சொல்லு அங்கன வரேன்” என்று சொல்லி நெட்டி முறித்தவர் அனைவருக்கும் மன. பாரத்துடன் விடையளித்தார்.

வண்டியில் செல்லும்போது ஹர்ஷா எண்ணம் முழுவதும் ஹாசியே நிறைந்து இருந்தாள்.

‘நாம பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு கண்டிப்பா இதுக்கு நாம அவகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும். சாரி கேட்க வேண்டிய லிஸ்ட் அதிகமாகிட்டே போகுது. நாம பார்த்த விஷயம் அவளுக்கு தெரியாது.

பாரின்ல வளர்ந்த பொண்ணுதானே பெருசா எடுத்துக்கமாட்டா’ என்று நினைத்தவாறு அவளை பார்க்க,

ஹாசியோ மித்ராவுடன் மகிழ்ச்சியாக பேசி கொண்டு வந்தாள்.

நாம நினைச்சது கரெக்ட்தான். நடந்த எந்த விஷயத்தையும் அவ பெருசா எடுத்துக்கல, வேற யார்கிட்டயும் சொல்லல அதுக்கு அர்த்தம் என்ன. அதையெல்லாம் அவளே பெருசா எடுத்துக்கலன்னுதானே.

நல்ல பிரண்டு. அவளை நாம இழக்க கூடாது. ஊருக்கு போன உடனே அவகிட்ட சாரி சொல்லி முதல்ல மாதிரி நல்லா பேச சொல்லணும்’ என்று தனக்குள்ளாகவே யோசித்தவன் அறியவில்லை. அவள் அவனை நண்பனாக மட்டும் நினைக்கவில்லை தன் உயிருக்கும் மேலானவனாக நினைக்கிறாள் என்று.

அவரவர் வீட்டுக்கு சென்றவர்கள் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு, தன் அன்றாட வேலைகளை பார்க்க துவங்கினர்.

கிருஷணனிடம் சொல்லிவிட்டு ரேவதியிடம் தங்கள் பிள்ளைகளின் திருமண விஷயத்தைபற்றி பத்மா பேச,

அவரோ சற்றும் யோசிக்காமல் “அதுக்கு என்ன பத்மா நாளைக்கே போய் ஜாதகம் பார்த்துட்டு வந்திரலாம். அதுக்கு அப்புறம் பிள்ளைங்ககிட்ட சொல்லிக்கலாம்” என்க,

அதை கேட்ட பத்மாக்கு நிலை கொள்ள முடியவில்லை.

“நிஜமாதான் சொல்றியா. உனக்கு சம்மதமா உங்க வீட்ல……”

“அவருக்கும் சம்மதம்தான். நானும் இதையேதான் நினைச்சுட்டு இருந்தேன். சரி ஊருக்கு போயிட்டு வந்து பேசலாம்னு வெயிட் பண்ணுனேன். பார்த்தா நீயே வந்து கேட்டுட்ட.

எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா சின்ன வயசுல பேசி வச்சதை மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்” என்றவர் சொல்ல,

தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு தங்கள் மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர்.

அடுத்த நாள் சொன்னது போல் இருவரும் ஜாதகம் பார்க்க சென்றனர். இரு ஜோடிகளுக்கும் பொருத்தம் சரியாக இருக்க மகிழ்ந்து போனவர்கள். வீட்டிற்கு வந்து அந்த சந்தோஷமான விஷயத்தை பெரியவர்கள் அனைவரிடமும் சொன்னார்கள்.

ராஜ், “கிருஷ்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நாம ரெண்டு பேரும் இனி சம்மந்திங்க” என்று அணைத்து கொண்டார்.

சிறியவர்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பின் பெரியவர்கள் அமர்ந்து திருமண பேச்சுவார்த்தயை பேசி முடிவெடுத்தனர். அதன்படி மூன்று மாதத்தில் இரு திருமணமும் ஒன்றாக நடக்க வேண்டும் என்று பேசிவைத்துவிட்டு, மகன், மகளிடம் அதைப்பற்றி பேச பெற்றோர் நால்வரும் ஆசையாக காத்திருந்தனர்.

மாலை வேலை முடிந்து வெளியில் வந்த ஹாசி ஆபிஸ் வாயிலில் நின்றிருந்த ஹர்ஷாவை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

‘ம்ம்… ஊருக்கு போயிட்டு வந்து ஒரு வாரம் ஆச்சே, இன்னும் நம்ம ஆள பார்க்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்துட்டான். என் செல்ல குட்டி என்று இருக்கும் இடத்தில் இருந்தே அவனுக்கு திருஷ்டி எடுப்பது போல் கைகளில் நெட்டி முறித்து, மேலும் சற்று நேரம் ஓரமாக மறைந்து நின்று அவனை சைட் அடித்துவிட்டு,

போதும் போலாம். பாவம் பேபிய எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கறது என்று நினைத்தவள் வராத போனை காதில் வைத்து கொண்டு வேண்டுமென்றே அவனை கவனியாதது போல் நடக்க,

அவள் எதிரில் ஓடி வந்து நின்றான் ஹார்ஷா. அவன் வருவான் என்று அவளுக்குதான் தெரியுமே. இருந்தாலும் அப்போதுதான் கவனிப்பது போல் “ஹேய் ஹர்ஷா நீ எங்க இங்க. என்ன ஆபிஸ் மாறி வந்துட்டியா”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்குதான் வந்தேன். என்கூட வா”.

“முக்கியமான விஷயமா…. என்ன முக்கியமான விஷயம்”

“வா சொல்றேன்” என்று அவள் கை பிடித்து அழைத்து செல்ல, அவளோ அவன் கைகளுக்குள் இருக்கும் தன் கைகளை ஆசையாக பார்த்து கொண்டே ‘நீ இப்படி கூட்டிட்டு போனா. நான் எங்க வேணா வருவேன்’ என்று மகிழ்ச்சியாக நினைத்து கொண்டு சென்றவள் அவன் டூ வீலரில் அமர்ந்து தோளில் கைவைத்து கொள்ள,

அவன் முகமோ சற்று பட படப்பாகதான் இருந்தது.

அவனுடன் செல்லும் ஹாசி அப்போது நினைக்கவில்லை போகும்போது இந்த உலகையே வென்ற மகிழ்ச்சியோடு செல்லும் அவள் வீட்டிற்கு செல்லும்போது உயிர் இருந்தும் பிணமாகதான் செல்ல போகிறாள் என்று…

ஹர்ஷா ஹாசியை எங்கு அழைத்து செல்கிறான் அடுத்த எபியில் பார்க்கலாம்….