அதை பார்த்த அந்த இரு மாணவர்களின் கண்களும் வாயும் தானாகவே விரிய…  “ வாவ்….” என்ற வார்தையை தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை…

மார்க்கெட்டில் தினந்தோறும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மைலேஜூம் வேண்டும், புதிதான மாடல்களும் வேண்டும் என விரும்பும் நடுத்தர வர்க்க ஆண்களுக்காக …குறிப்பாக கல்லூரி மாணர்வர்கள் இளைஞர்கள் என அவர்களை ஈர்க்க…. ஏகப்பட்ட புதிய தொழில்நுட்ப வசததிகள் கொண்ட அக்சஸரீஸ்களை வைத்து அவற்றில் காலூன்ற தொடங்கினான் சத்ரி…

தன் பைக் விற்ற  பணம், மற்றொரு ஆல்ரேசன் செய்ததில் வந்த பணம் என மொத்த பணத்தையும் செகண்ட் ஹேண்ட. பைக் ஒன்றை வாங்கி, அதை மீண்டும் அல்ட்ரா மார்டனாக  திருப்பி வடிவமைப்பிதலும் செலவிட்டான்.

இந்த முறையும் பைக் நன்றாக வர…  இந்த முறை சற்று லாபம் ஏற்றி வைத்து விற்க தொடங்கினான்.

மீண்டும் லாபம் வர அப்படியே அதே போல் ரொட்டேசன் செய்ய தொடங்கினான்..

ஏற்கனவே அவன் செய்த மாடுலேசன் பைக்குகள் ஒன்றிரண்டு அவன் ஊரிலேயே வலம் வர, செலவற்ற விளம்பரம் கிடைத்தது சத்ரிக்கு.

ஒவ்வொருவராய் விசாரித்து  வர தொடங்கினர்…  புதிய மாடல் பைக்கிற்காக எங்கும் ஆண் வர்க்கம், அதில் கூடுதலாய் கல்லூரி மாணவர்கள்.

“உங்களுடைய பைக்கை ஆல்ட்ரேசன் பண்ண விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில ஆக்சஸரீஸ்கள்!!!” என பெரிய பேனர் அடித்து அந்த தெருவின் ஆரம்பத்தில்  நிறுத்தியிருந்தான் சத்ரி.

மேலும் சில கல்லூரிகளின் முன்…  அவர்களின் பார்வை படும் படி விளம்பர பேனர்கள் வைக்க…  மெதுவாய் சூடு பிடிக்க ஆரம்பித்தது ஆட்களும் வர தொடங்கினர்.

மார்க்கெட்டில் கிடைக்கும் , சில குறிப்பிட்ட மாடல் பைக்குகள் எப்போதுமே எப்படி வேண்டுமானாலும் கஸ்டமைஸ் செய்து கொள்ள கூடிய வடிவமைப்பை கொண்டது. அப்படிபட்ட சில பைக்குகளை புதிதாக வாங்கி, அவற்றை தனக்கு விருப்பமான முறையில் புது வகை ஸ்போர்ட்ஸ் பைக்காவோ.. அல்லது அவனது மூளையை குடைந்து புது மாடல்களை உருவாக்கி, அதை போலவே வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் தன்புறமாய் நிருப்பிக் கொண்டிருந்தான் சத்ரி…  முக்கியாமாய் இளைய தலைமுறையினரை…

குறிப்பிட்ட சில அக்சஸரீஸ்கள் சாலை விதிமுறைகளை கருத்தில் கொண்டே மாற்ற வேண்டும். எனவே என்னென்ன வேண்டும் என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வதால் மேலும் மேலும் அவனுக்கு வாடிக்கையாளர்கள் கூட தொடங்கினர்.

பெரிய வீல்கள் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களுக்கு பைக்குகளின் அழகை கூட்டும் விதமாய் நிறைய டிசைன்களில் கிடைக்கும் அலாய் வீல்களும்…  மேலும் அனைவருக்கும் பிடித்தமான,  ஹார்லீ டேவிட்சன் மற்றும் தண்டர்பேர்டு போன்ற மாடல்களுக்கான ரிம்களையும் வேறு வேறு பைக்குகளில் வித்யாசமாய்  புகுத்த தொடங்கினான்.

வித விதமாய் சத்தம் கொடுக்கும் சைலண்சர்களை வைத்தும் நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்தான்… மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மிகக்கடுமையாக நடைமுறைபபடுத்தப்பட்டு வரும் நிலையில் புகைபோக்கியை தேர்ந்தெடுக்கும் போது விதிமுறைகளையும் மனதில் வைத்து .. ஸார்ட் பாட்டில், இந்தோரி, லாங் பாட்டில், வைல்டு போர், மெகாபோன் போன்ற மாடல்களை நடுத்தர வர்க்கத்தினருக்கும்.. பர்ஸ் நிரம்பி வழியும் வாடிக்கையாளர்களுக்கு, கலிதாரோ மற்றும் ரெட் ரூஸ்டர் , டபுள் சைலன்சர் என மற்ற விலை உயர்ந்த பிராண்டுகளை  பரிந்துரை செய்யவும் தவற மாட்டான்….

முழுமையான மாடுலேஷனுக்காய் வரும் பைக்குகளுக்கு…. வித விதமான பைபர், மெட்டல் ஷேப்கள் மார்க்கெட்டிலேயே கிடைப்பதால், அவர்களின் விருப்பத்துடன், வாங்கி ஃபிட் செய்தும் கொடுப்பான்…

யாரடமும் இந்த மாடல் இருக்கவே கூடாது என வரும் பைக் ரேசர்களுக்கு…  தன் கைகளாலேயே பெஸ்ட் ஷேப்பாக செய்து கொடுப்பான்…  தற்போது அதற்கென நிறைய மெஷின்கள் வந்ததாலும் அவனுக்கு அது கஷ்டமாக இல்லை…  இஷ்டமாக செய்யும் வேலையில் கஷ்டம் அவனுக்கு தெரியவே இல்லை…

இதனுடன் எல்இடி விளக்குகள், பைக்குளுக்கு க்ரூஸர் லுக்கினை கொடுக்கும்…. விண்ட்ஷில்டு, யூஸ் அண்டத்ரோ ட்ராவல் போக்குகள்,தரமான சீட்கவர்கள் என எக்ஸ்ட்ரா வேலைகளையும் சேர்த்து பார்க்க தொடங்கினான்.

 ஒரு பைக் விற்று, ஒரு பைக் மாடுலேசன் என்பது போய்.. ஒவ்வொரு முறையும், பைக்குகளின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது… வருடங்களும் ஏற…  பைக்குகளின் எண்ணிக்கையும் கூடியது. வாடிக்கையாளர்களும் கூடினர், அதன் மூலம் பணமும் சேர ஆரம்பித்தது அவனே எதிர்பாராத விதத்தில்

இடப்பற்றாகுறை மட்டுமே….தன் வீட்டின் சைடில் சிறிதாய் தகரத்தில் மறைக்கப்பட்ட இடம்

புதிய உருவ அமைப்புடன் கூடிய பைக்குள் சிலவைகளும், மாடுலேசன் செய்யபட இருந்த பைக்குகளும் , பட்டறை போல நிறைய சாமான்களாலும் அந்த இடம் நிரம்பி வழிந்தது.

 அவனின் விஸ்தாரமான தொழிலுக்கு அந்த இடம்  இடையூராய் இருக்க…  ஏற்கனவே இருந்த சேமிப்பை கொண்டு சிட்டியில் முக்கியமான இடத்தில்  கையில் இருந்த பணத்தை கொண்டு , கான்கீரிட் கட்டிடமாக கட்டிக் கொண்டான்…  இடம் பெரிமாய் இருந்தாலும்.. பாதியில் மட்டுமே கட்டிடம் கட்டி மீதியை கான்கீரிட் செட் போட்டு அழகுற அமைத்துக் கொண்டான்…

சுற்றிலும் குழுமை தரும் மரங்களை நடவும் தவரவில்லை…

“ பைக்கர்ஸ் பாய்ண்ட்” என பெயரிட்டு..புதிய கட்டிடமாக, சர்வீஸ் செய்யும் வேலையில் ஒரு நான்கு பேர் மாடுலேசன் செய்யும் இடத்தில் ஒரு ஐந்து  பேர்…  ரிசப்சனில் இரண்டு பேர்….என ஒரு பத்து பேருக்கு வேலை கொடுத்து கொண்டிருந்தான் சத்ரி.

‘முயற்சி திருவிணையாக்கும்’ என அவனை தெரிந்த எல்லோருக்கும் தெரியவைத்தான்.

எந்த ஒரு வேலை என்றாலும் வேலையின் ஆரம்பத்திலும், முடிவிலும் அவனின் ஆலோசனைகள் கண்டிப்பாய் இருக்கும்படி பார்த்துக் கொண்டான்…

 வெகுவாய் , அதிகமாய் வந்தது லாபம்…  இவனின் சேமிப்பும் ஏற ஆரம்பித்தது

————

அங்கே சாத்வியோ.. செந்தில் சரண்யா கயல் மூவர் மட்டுமே  உலகமென மாறிப் போனாள்….

சங்கரன் மஹா சாத்வி என மூவருக்கும் விரிந்த  விரிசல் அதிகமாகியதே தவிர குறையவில்லை…  பிடிப்பின்றியே சென்றது மூவரின் வாழ்க்கையும்…

விநாயகசுந்தரம், சிவஹாமி , சத்ரி மூவரும் ஊரை காலி செய்த பின்னர் சங்கருக்கு ஏதோ ஒன்றை இழந்தது போல் இருந்த்து ரொம்ப அதிகமாக நடந்து கொண்டோம் என உரைத்தது.

அப்போதும் க்ருத்திகாவின் மீது தான் பழியை போட்டு தன் மனதை தேற்றிக் கொண்டார்.. மஹா க்ருத்திகாவை நினைத்து நினைத்து சாத்வியை விட்டுவிட.. அவளோ வீட்டில் போட்டால் சாப்பாடு இல்லைஎன்றால் பட்டினி என தன் படிப்பை மட்டும் முன்னிருத்தி… வேறு எதற்கும் தன் நினைவை கொடுக்காமல்  முழுதாய் மூன்று வருட பள்ளி வாழ்க்கையை முடித்து வந்தாள்.

இடைஇடையில் ஷிவாவும்..  சாத்வியை கவனிக்கவும் தவறவில்லை…  அது அரசுப்பள்ளி என்பதால் இதர செலவுகள் மட்டுமே…  பள்ளி முடிக்கும் தருவாயில் ஷிவாவிற்கு திருமணம் நடந்துவிட, ஷிவாவின் வீட்டிற்கு சென்று அக்கா, மாமா என அங்கேயும் ஏதாவது ரகளை செய்து, செந்தில் கயல் சரண்யாவுடன் ஏதாவது வம்பு செய்து என தன் தனிமையை மறைக்க கற்றுக்கொண்டாள்.

கஸ்தூரிக்கு ஷிவா நடந்த எல்லாவற்றையும் சொல்லியிருக்க…  கஸ்தூரியும் முடிந்த அளவு சாத்வியை பார்த்துக் கொள்வாள்.

அடுத்ததாக கல்லூரி.. வாழ்க்கை ஆரம்பிக்க…

“ஸ்கூல் படிக்கிற இடத்திலேயே ஒருத்தன் இவ பின்னாடி சுத்தி இருக்கிறான்… இதில் இவ காலேஜ்கு போனா…. எத்தனை பேர்  சுத்தவானுங்களோ வேண்டாம்” என மறுத்த தந்தையை சட்டை செய்யவே இல்லை..

அப்ளிகேஷன் பார்ம் வாங்கி வந்து ,கையெழுத்து கேட்க அதை அலட்சியம் செய்து முறைப்புடன் சென்ற சங்கரை நிறுத்தியது சாத்வியின் வார்த்தைகள்.

“நீங்க கையெழுத்து போடலைனா… நான் போட்டுப்பேன்” என அவளும் முறைத்துக் கொண்டு நிற்க…

“அவ்ளோ தையிரியம் இருக்கா உனக்கு” என மீண்டும் வீட்டினுள் வந்து  எகிற…

கொஞ்சமும் அசரவில்லை சாத்வி…

“இவ்ளோ நாள் ரிப்போர்ட் கார்டில் நீங்க தான் போட்டீங்களா“ என பதில் கேள்வி கேட்க…

பே என விழித்தார் சங்கரன் அவரின் விழிகளை  கூர்மையாக

“இதிலேயும் என்னால் கையெழுத்து போட முடியும்….ஆனா இது ஸ்கூல் இல்லை பாருங்க…  காலேஜ்…. பேரண்ட்ஸ் வர சொல்லுவாங்க… அப்போ உங்ககிட்ட அசிங்கபட முடியாது அதான்  இப்போவே சொல்லிட்டு செய்றேன்” என அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே…  நிரப்பப்பட்ட பார்ம்மில் எஸ் சங்கரன் என அச்சடித்தார் போல் அவரின் கையெழுத்தை போட

அதை எட்டிபார்த்த சங்கரன் ‘ஙே’ என விழித்தபடி நின்றிருந்தார்.

“பிஎஸ்சி மேத்ஸ் ,எடுத்திருக்கேன் பீஸ் இவ்ளோ…  அடுத்தவாரம் அட்மிஷன் போடுவாங்க…  அப்போ வேணும்” என அதிகாரமாய் சொல்ல…

“நான் சொல்றதை நீ கேட்க மாட்ட,. நீ சொல்றதை மட்டும் நான் கேட்கனுமா? நான் பீஸ் கட்ட மாட்டேன்..எப்படி படிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்” என வேட்டியை மடித்துக் கொண்டு சீறியபடி சென்றுவிட்டார்.

சாத்வி தந்தையிடமிருந்து எதிர் பார்க்கும் ஒவ்வொரு செயலும் கடைசியில் எதிர் பார்ப்பினை பொய்யாக்கும் தோல்வியில் முடிய…   உள்ளுக்குள் இறுகிக் கொண்டே சென்றாள்.