தட்டையே அலைந்துக்கொண்டு ஏதோ யோசனையில இருந்தவளை தோளில இடித்து “ ஏய் என்னடி யோசனை ஒழுங்காக ப்ளேட்டை பார்த்து சாப்பிடு” என்று நிதானத்துக்கு கொண்டு வந்தாள் ஜெனி.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நால்வரும் காலார பீச் மணலில் நடந்து கொண்டிருக்க“ ஏன்டா விபி உங்க அப்பா உன்னை ஒன்னுமே கேட்கலையா எல்லா உண்மையும் சொன்னப்பிறகும் எப்படி உன்னை வெளியே விட்டார் இத்துனூண்டு கூடவா டவுட் வரலை??” என்றாள் ஜெனி
“ நம்மலாம் யாரு அவ்வளவு சீக்கிரம் மாட்டிருவோமா?” என்று கெத்தாக காலரை தூக்கிவிட “ ஒருநாள் நல்லா மாட்டுவ பாரு அன்னைக்கு உங்க அம்மா தொடப்பக்கட்டையாலயே வெளுக்க போறாங்க” என ஸ்ரே சொன்னாள்.
“ அதெல்லாம் சீன்லயே இல்லை ரொம்ப ஆசைப்படாதே” என்று உறுதியாக கூற ஜெனிக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது. “ எப்படிடா விபி நானும் தெரிஞ்சிக்கறேன்” என்றிட
“ போனாப்போகுது சொல்லுறேன் எங்க அம்மா ராகேஷ் அம்மா மோகன் அம்மா மூனுப்பேரும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் ப்ரண்ட்ஸ் தெரியுமில்லை?? அதே மாதிரி நாங்களும் ஒன்னாக இருக்கனும் என்று அவங்களுக்கு ஆசை அந்த ஆசையை நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்!! அவ்வளவு தான்” என்று தோளைக்குலுக்கி கொண்டே கூறினான்.
“ புரியற மாதிரி சொல்லுடா மெண்டல்”
“எங்க மூணுப்பேருக்கும் எதில் ஒத்துப்போகுதோ இல்லையோ திருட்டு தனம் பன்றதுல நல்ல சிங்க்ல இருப்போம், மூணுப்பேருல யாருக்கு நைட் வெளியேப்போகனும் என்றாலும் குரூப் ஸ்டடிஸ் என்று வீட்டில் சொல்லிட்டு யாராவது ஒருத்தர் வீட்டுக்கு போயிடுவோம் அங்கே கொஞ்சம் நேரம் அட்டெடன்ஸ் போட்டுட்டு சுவர் ஏறி குதித்து எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் ஊர்சுத்திட்டு நல்லப்பிள்ளையா காலையில் வீட்டுக்கு கிளம்பி போகிடுவோம், அப்படியே யாராவது டவுட் வந்து எங்க ரூமுக்கு செக் பண்ண வந்தா பாத்ரூம் போயிருக்கான் என்று சமாளிச்சிடுவோம் அவ்வளவு தான் சிம்பிள் “
“ கண்டுப்பிடிச்சிட மாட்டாங்களா??” என்று புருவத்தை சுருக்கி கேட்க “ அவங்க மூணுப்பேரும் மூவுடல் ஓருயிர் மாதிரி பிண்ணிப்பினைவாங்க தெரியுமா?? ஒருத்தரை ஏமாத்திட்டா போதும் மத்தவங்களை ஈசியா கவுத்திடலாம், அவங்களே வந்து நான் வீட்டிலதான் இருந்தேன் என்று சொன்னா மத்தவங்க நம்பாம இருப்பாங்களா இத்துனூன்டுக்கூட கேள்விக்கேட்க மாட்டாங்க ” என்றான்.
“ இதெல்லாம் நம்புற போலவா இருக்கு??”
“ நாங்க ஒண்ணா இருந்தா மட்டும் போதும் வேறெதுவும் அவங்க கணக்கில் எடுத்துக்கவே மாட்டாங்க!! அவங்களை நம்ப வச்சிட்டா போதும் வாத்தியெல்லாம் தூசித்தட்டி விட்டிறலாம்” என்றான்.
“ மொக்க ப்ளான்டா யாரு கொடுத்தது” என்று சலித்துக்கொள்ள” அந்த மொக்க ப்ளான் தான் இதுவரை என்னை காப்பாத்தி இருக்குமா” என்றவன் “ நம்ம ஏர் ஃபோர்ஸ் ஆபிசர்தான்” என்றான்.
“ அம்மாஞ்சி மாதிரி இருந்திட்டு இதெல்லாம் பண்ணுறானா உன் தங்கச்சி ரொம்ப பாவம்டா” என்றாள் ஸ்ரே.
“ அது அவ பிரச்சனை நீ இப்படி வா “என்று அவளது தோளில் கைப்போட்டு தனியாக அழைத்துச் செல்ல
“ இவனெல்லாம் எவ்வளவு திட்டினாலும் திருந்தவே மாட்டான்டி இவனைப்போய் நம்புறாங்க பாரேன்” என்று தலையில் அடித்துக்கொண்டாள் ஸ்ரீ. அதனை கேட்டு கலகலவென் சிரித்தவள் “ எந்த பேரன்ஸ்டி தான் பிள்ளையை தப்பா சொன்னா நம்புவாங்க நீ முதல்ல நம்புவியா” என்று மாறி கேட்டாள். “ வாஸ்தவம் தான் ஆனால் மனசு கேட்கலையே” என்று கடல்மணலில் கால் பதிய நடந்தாள்.
சிறிது தூரம் மௌனமாக நடந்தவள் அங்கிருந்த மரத்திண்டில் அமர“ எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே கான்சென்ரேட் ஆன் யுவர் பிஸ்னஸ்” என்றுக்கொண்டே அவளருகில் அமர்ந்தாள் ஜெனி.
ஸ்ரேயும் விபி கடற்கரையில் கால் நனைத்து விளையாடிக்கொண்டிருக்க அதனை பார்த்தவள் “ ப்யூட்டிஃபுல் கப்பிள் இல்லை இதுவரை அவளை எங்கேயும் விட்டுக்கொடுத்தது இல்லை அவன்” என்றிட அவர்களை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தவள் கடலலைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
இருவரையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜெனி அவர்கள் சற்று நெருக்கமாகவும் சட்டென பார்வையை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.
தூரத்தில் இருப்பெண் குழந்தைகள் கடற்கரையில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தது. அவர்களை புருவம் சுருக்கி பார்த்தவள் “ தனியாவா வாந்து இருக்காங்க” என்று யோசிக்க
“ அப்பா வாங்க ஜாலியா இருக்கும்” என்று சத்தமிட சற்று தொலைவில் அவர்களையே பார்த்துக்கொண்டு இரு ஆண்கள் நின்றிருந்தனர். அங்கே சற்று இருளாக இருந்ததால் அவளால் இருவரது முகத்தையும் சரியாக பார்க்க முடியவில்லை. வரிவடிவமாகத்தான் அவள் கண்களுக்கு தெரிந்தது. நெடுநெடுவென சாதாரண ஆண்களைவிட அசாத்திய உயரத்தில் ஒருவனும் அவனுக்கு தோள் அளவு ஒருவனும் நின்றிருந்தார்கள்.. அந்த உருவங்கள் எதையோ நினைவுப்படுத்தவதுபோல் இருக்க தலையை உலுக்கி தன்னை சமன்செய்தவள் குழந்தைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். இரண்டும் கொள்ளை அழகு. கொழுக்கொழு கண்ணமும் துறுதுறு கண்களும் என பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
சிறிது நேரத்தில் இரு ஆண்களில் ஒரு உருவம் குழந்தைகளை நோக்கி சென்றது.
வெள்ளை பனியனும் காக்கி பேண்டும் அணிந்து இருந்தான். போலிஸ் என யூகித்துக்கொண்டாள்.
“ விடு கோப்பு இன்னும் கொஞ்சம் நேரம்” என்று கோலிக்குண்டு விழிகளை உருட்டி உருட்டி அழகாக கேட்டது ஒரு குழந்தை. “ ஏன்டி கெஞ்சிட்டு இருக்க? இப்போ பாரு” என்று அவனை பின்னால் இருந்து கடலுக்குள் தள்ளியது இன்னொரு பெண்குழந்தை. தள்ளிவிட்டு கைத்தட்டி சிரித்தவள் “ நீயும் வாப்பா விளையாடலாம்” என்று அந்த நெடியவனிடம் ஓடினாள்.
“ அடியேய் ரௌடி இருடி வரேன்” என்று எழப்பார்க்க கடல் மணலால் அவனை தாக்கிவிட்டு இருட்டில் இருந்த உருவத்திடம் ஓடியது இன்னொரு பெண்குழந்தை.
இருப்பெண்களும் அந்த உருவத்தின் கையை பிடித்து கடல்பக்கமாக இழுக்க அவனும் வெளிச்சத்தின் பக்கம் வரும் சமயம்”கத்திட்டே இருக்கேன் என்னடி பாத்திட்டு இருக்க??” என்று கொண்டு ஜெனியின் கண்ணத்தை பிடித்துதன் பக்கம் திருப்பியிருந்தாள் ஸ்ரே.
“ ப்ச் என்னடி” என்று எரிந்து விழுந்தவள் மறுபடியும் திரும்பி பார்க்க அந்த நெடியவனின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. வெள்ளைசட்டை கருப்பு பேண்ட் அணிந்து இருந்தான். குழந்தைகள் இருபுறமும் அவனது கையை பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிக்கொண்டு இருந்தது. இரும்பிவிடமாட்டானா??? என்று அவள் மணம் ஏனோ தவித்தது. அவர்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க “ ஜெனி டைம் ஆச்சு இன்னொரு நாள் வரலாம் வா” என்று அவசரப்படுத்தினாள். “ ப்ச்” என்று சலித்தவள் ஸ்ரேவை கண்டுக்கொள்ளவே இல்லை.
“ உனக்கென்னடி யோசனை சீக்கிரம் எழும்பி வா நீ வந்துட்டா அவ பின்னாடியே வருவா” என்று ஸ்ரீயின் கையை பிடித்து இழுக்க” அவ கையை விடுடி நான் வரேன்” என்று எழுந்து நின்றாள். “ இங்கே ஸ்விட்ச் போட்டா அங்கே லைட் எரியுதோ” என்றவள் “ அதெல்லாம் முடியாது வாடி” என்று வம்படியாக ஸ்ரீயை இழுத்துக்கொண்டு சென்றாள்.
ஸ்ரீயும் ஏதோ யோசனையில் இருந்தவள் இழுப்பட்டப்படி அவளுடன் செல்ல ஜெனியும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவர்கள் பின்னால் சென்றாள்.
ஜெனி இருட்டில் சென்று மறையவும் அந்த உருவம் திரும்பிப் பார்க்கவும் சரியாக இருந்தது. இருட்டில் சுற்றிமுற்றி எதையோ பார்த்தவன் திரும்பி குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்துவிட்டான்.
அந்த உருவத்தை கண்டதும் ஏனோ மனதில் இனம் ஒரு உணர்வு. மனதில் எதுவோ அழுத்துவதுப்போல் உணர மறுபடியும் நின்று அவனது முதுகினை வெறித்து பார்த்தாள்.
“ இப்போ மட்டும் நீ வரலை அப்படியே விட்டுட்டு போயிட்டேயிருப்போம் பாத்துக்க” என்று பைக்கில் ஏறி அமர்ந்துக் கொண்டே ஸ்ரே கத்தினாள். அவள் கத்திய கத்தில் அனைவரும் ஜெனியை திரும்பி பார்த்தனர்.
“ ஏன்டி காத்துற” என்றுக்கொண்டே தனது கைப்பையில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியிடம் சென்றவள் வண்டியை ஸ்டார்ட் செய்து ஸ்ரீயை ஏத்திக்கொண்டு ஹாஸ்டலை நோக்கி வண்டியை செலுத்தினாள்.
ஹைவேசில் அவர்களது பயணம் சீறாக போய்க்கொண்டிருக்க “ யெஸ் யெஸ் ஐ காட் இட் ஐ காட் இட்” என்று திடிரென குதூகலித்தாள் ஸ்ரீ.
அவளது சத்தத்தில் சடென் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவள் என்னவென்பதுபோல் திரும்பி பார்க்க “ ஜெனி ஐ காட் இட்” என்று அவளது கண்ணத்தில் அழுந்த முத்தமிட்டவள் “ டேய் விபி நீ கிரேட்டா சூப்பரா மச்சி” என்று நடுரோடு என்றுக்கூட பார்க்காமல் கத்தினாள்.
“ எப்பவுமே அப்படி தானே” என்று வண்டியை ஓட்டிக்கொண்டே சொன்னவன் அவர்களைகடந்து முன்னால் செல்ல “ ஜெனி சீக்கிரம் போய் அவனை ஓவர்டேக் பண்ணுடி முன்னாடி போறான் பாரு” என்று அவளது இடுப்பில் கைவைத்து உசுப்ப அவசரமாக வண்டியைவிட்டு இறங்கியவள் “ இடுப்பில் மட்டும் கைவைக்காதே ஸ்ரீ” என்று நெளிந்துக்கொண்டே சொன்னாள்.
திடிரென அவள் இறங்கவும் வண்டி பேலன்ஸ் இல்லாமல் விழப்போக ஹாண்டிலைப்பிடித்து சமன்படுததினாள் ஸ்ரீ.
“ சாரிடி சாரிடி” என்று அருகில் வர “ விடுடி நான்தான் எக்சைட்மெண்ட்ல தெரியாம கைவச்சிட்டேன்” என்றவள் “ சீக்கிரம் ஏறு நம்மதான் முதல்ல போகனும்” என்றவள் ஜெனியை ஏற்றிக்கொண்டு வேகமாக ஸ்கூட்டியை ஓட்டினாள்.
ஒருவழியாக எட்டு மணிக்குள் மூவரும் ஹாஸ்டலை வந்து அடைந்துவிட்டார்கள். “ முதல்ல இந்த வாடர்ன் கிட்ட சொல்லி ரூமை மாத்திட்டு போகனும்டி” என்றுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் ஜெனி.
“ ஏன்டி நல்லாத்தானே இருக்கு” என்று ஸ்ரே இரவு உடைக்கு மாறிக்கொண்டே கேட்க “ பைத்தியம் மாதிரி ராத்திரியில் சிணுங்கறதென்ன? சிரிக்கறதென்ன இது போதாது என்று கூடப்படுத்தா கடிச்சு வைக்கிறாடி இவ” என்று குறைப்படித்தாள் ஜெனி. “ இது வாலிப வயசு அப்படித்தான் இருக்கும்”என்றவள் “அதுதான் தனியாக போயிட்டீங்க இல்லடி ரெண்டு பேரும் அப்பறம் என்ன??” என்று முகத்தை சுருக்கினாள்.
“ எது இந்த நாலு சுவத்துக்குள்ள பெட் மாறி படுத்தது ஒரு குத்தமா” என்றுக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தவள் ஷார்ட்ஸ் டீசர்டுக்கு மாறி வெளியே வந்தாள்.
“ ஏய் விபித்தான்டி கால் எடுக்குறான்” என்றுக்கொண்டே அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் அறைக்கதவை திறந்துக்கொண்டு வரண்டாவிற்கு செல்ல “ அதைத்தான்டி அலாரம் என்று சொல்லுறா மண்டூஸ்” என்றுக்கொண்டே புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க அமர்ந்தாள் ஜெனி. அவளெங்கே அதையெல்லாம் காதில் வாங்கினாள்?? உல்லாசமாக ஃபோனில் கடலை வறுக்க ஆரம்பித்துவிட்டாள் இனி பூகம்பம் வந்தாலும் அசரமாட்டாள்.
“ இப்பதானடி டிராப் பண்ணிட்டு போனான் அதுக்குள்ள கால் எடுக்குறான் இவனுக்கு போரே அடிக்காதா??” என்று கட்டிலில் படுத்துக்கொண்டே கேட்டாள் ஸ்ரீ. “ லவ் ஈஸ் ஃப்ளைணட்மா” என்றவள் புத்தகத்துக்குள் புதைந்து கொண்டாள். “ பேசாம செவிடா இருந்து இருக்கலாம்” என்றிட அங்கிருந்து பதிலையே காணோம். தலையைத்திருப்பி ஜெனியை பார்க்க சீரியஸாக படித்துக் கொண்டிருந்தாள். “ ரைட் இனி இடியே விழுந்தாலும் நீ எழுந்திக்க மாட்ட” என்று நினைத்தவள் “ காலையில் எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு குட் நைட்” என்று நேரத்திற்கே உறங்கிவிட்டாள்.
“ பாய்டா விபி காலையில பார்க்கலாம்” என்றுக்கொண்டே ஸ்ரே அறைக்குள் நுழைய ஜெனி உறங்குவதற்கு பெட்டை தயாராக்கிக்கொண்டிருந்தாள் சத்தமில்லாமல் அவள் பின்னால் சென்றவள் இடுப்பில் கிள்ளி “ குட் நைட் பப்ளிமாஸ்” என்றுவிட்டு ஓடிச்சென்று படுத்துக்கொண்டாள். “ அடியே மண்டூஸ்” என்று கோழிப்போல் சிலுப்பியவள் திரும்பிப் பார்க்க “ நான் தூங்கிட்டேன்” என்று போர்வைக்குள் இருந்து சத்தம் கொடுத்தாள் ஸ்ரே.
“ முதல்ல இதுக்கு ஒரு வழி கண்டுப்பிடிக்கனும், சும்மா சும்மா இடுப்பை கிள்ளிட்டு இருக்கறா” என்று சொல்ல “ அதுக்குத்தான் நான் இருக்கேனே, எனக்கு பழகிடுடி” என்று அசரீரி போல் தாபமான குரல் செவியில் ஒலித்தது.
சுற்றிமுற்றி பார்த்தவள் “ச்ச என்ன ஆச்சு எனக்கு” என்று தலையை உலுக்கியவள் “ இனி நைட்ல தனியா புலம்பக்கூடாது கடவுளே!!” என்று முணுமுணுத்துக்கொண்டு போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டாள். இருட்டில் இரு சிங்கநிறக்கண்கள் பளபளத்தன அந்த விழிகளில் ஒரு ஆவேசம், பால்கனியில் வெற்று முதுகுடன் ஒருவனின் உருவம் வரிவடிவமாக தெரிந்தது,ஏமாத்திட்டல்ல என்று ஒரு ஆளுமையான குரல் நலிந்து ஒலித்தது, போடி என்னை விட்டு போய்த்தொலை என்று மீண்டும் அந்த கம்பீரமான குரல் ஒலிக்க “விஜி” என்று கத்திக்கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
தலை விண்விண்ணென்று வலித்தது கையால் தலையை தாங்கிக்கொண்டே அப்படியே சுருண்டு அமர்ந்தாள். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருக்க “ என்னடி செம்ம தூக்கம் போல இவ்வளவு லேட்டா எழுந்துக்கற” என்றுக்கொண்டே கண்ணாடியின் முன் நின்றிருந்தாள் ஸ்ரே.
“ ஆமான்டி எழுந்துக்க மனசே இல்லைனா பாரேன்” என்று சலிப்பாக சொல்ல கொண்டே சுவர்கடிகாரத்தை பார்க்க மணி கிட்டத்தட்ட ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது.
“ அது எவடி புதுசா விஜி எனக்கு தெரியாம” என்று பொட்டு வைத்துக்கொண்டே கேட்க “ ம்ம்ம் என் லவ்வரு”
“ நினைச்சேன்டி நீ அந்த ராகேஷை ரிஜக்ட் பண்ணும் போதே எனக்கு டவுட், உன் டிபார்ட்மெண்டே அவன் பின்னாடிதான் சுத்திச்சு அவனுக்கே நோ சொல்றேன்னா சம்திங் ராங்னு நினைச்சேன்” என்றவள் ஆர்வமாக அவளருகில் வந்து அமர்ந்தாள்.
“ யாருடி அவ எந்த டிபார்ட்மெண்ட் எப்படி பழக்கம்” என்று கேட்க அவளை ஒருமாதிரி பார்த்தவள் “ ஏற்கனவே லைஃப் ஷேமமா போய்ட்டு இருக்கு!! நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலை இல்லை!! எப்படா என்று பார்த்திட்டு இருக்க” என்று கேட்க ம்க்கும் என்றவள் “ நம்ம மட்டும் தானே இருக்கோம் சொல்லுடி பப்ளிமாஸ்” என்று ஊக்கப்படுத்தினாள்.
“ யாரும் இல்லைடி சும்மா கனவு” என்று நெற்றியை நீவிக்கொணடே கூறினாள். “ நீ புலம்பினதெல்லாம் கேட்டா கனவு மாதிரி தெரியலையே?? எல்லா வில்லங்கமாவல்ல இருக்கு அதான் கேட்டேன்” என்று சொல்லிக்கொண்டே காலேஜ் செல்ல தயாராகினாள்.
அப்போதுதான் திரும்பி பார்த்தாள் கட்டில் காலியாக இருந்தது. “அம்மு எங்கேடி காலேஜ் போயிட்டாளா??” என்க “ தெரியலை உனக்கு ஏதோ லெட்டர் வச்சிட்டு போயிருக்கா பாரு” என்று டேபிளை சுட்டிக்காட்ட கட்டிலில் அமர்ந்தப்படியே எட்டி எடுத்துப் பார்த்தாள்.
லெட்டர் பிரிந்திருந்தது “ அதான் பிரிச்சிட்டியே அப்பறம் எனன் சொல்லித்தொலை என்ன மேட்டர்??” என்று தலையைப்பிடித்துக்கொண்டே கேட்டாள். “ ஏதோ முக்கியமான வேலையாம் வர லேட் ஆகுமாம் டென்ஷன் ஆக வேண்டாம் ஸ்கூட்டியை எடுத்துப்போறேன் ஸ்ரேக்கூட காலேஜ்க்கு போயிடுன்னு எழுதி இருந்தது” என்றாள்.
“ எங்கே என்று கேட்கலையா” என்றிட “ நான் எழுந்திக்கும் போதே ஆளில்லை” என்று புத்தகத்தை பையில் அடைத்துக்கொண்டே கூறினாள்.
சோர்வாக எழுந்து அமர்ந்தவள் “ ஸ்ரே பில்ஸ் இருக்கா தலைவலிக்குது” என்று கேட்க “ இல்லை காலேஜ் போகுற வழியில் வாங்கிக்கலாம் வா சீக்கிரம் கிளம்பு கேண்டீன் மூடிடுவாங்க” என்றிட எழுந்து அமரக்கூட முடியவில்லை.
அப்படியே படுத்து விட்டாள். “ என்னாச்சுடி உடம்புக்கு ஏதும் முடியலையா??” என்று கேட்டுக்கொண்டே நெற்றியில் கைவைத்துப்பார்க்க டெம்ப்ரேச்சர் நார்மலாகத்தான் இருந்தது.
“ தெரியலை வெளியில் சாப்பிட்டது ஏதும் ஒத்துக்கலை போல” என்று கண்ணைமூடிக்கொண்டாள். “ ஹாஸ்பிடல் ஏதும் போவமா முகம் அலம்பிட்டு கிளம்பி வா” என்று கையை பிடித்து உசுப்ப “ இல்லை ஸ்ரே ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் விடு கொஞ்சம் டயர்ட் ஆக இருக்கு” என்று கண்ணை மூடிக்கொண்டே கூறினாள்.
“ கண்ணை திறந்து என்னைப் பாருடி” என்று கதகதப்பான கை கழுத்தில் பட்டதுபோல் ஒரு பிரம்மை. சட்டென கண்ணை திறந்து பார்த்தாள் “ நீ ரெஸ்ட் எடு நான் உனக்கு பெர்மிஷன் சொல்லிடுறேன் ரொம்ப முடியலைனா இவ்னிங் போல ஹாஸ்பிடல் போகலாம் சாப்பாட்டை ரூம்ல வந்து கொடுக்க சொல்லிட்டுப்போறேன்” என்றிட “ ஸ்ரே ஏதாவது பையன் வாய்ஸ் கேட்டுச்சா உனக்கு??”
“ அப்போ விஜி பொண்ணு இல்லையா பையனா?? ஹப்பாடா ஏதோ புரட்சி பண்ணப்போற என்று ஒரு நிமிசத்தில் உன்னை தப்பா நினைச்சுட்டேன்டி” என்று நெஞ்சில் கைவைத்தாள்.
“ உன்கூட வாக்குவாதம் பண்ணக்கூட தெம்பில்லைடி விட்டிடு” என்றவள் சோர்வாக படுத்துக்கொண்டாள். “ ஓகே பாய் டேக் கேர் “ என்றவள் போனில் விபிக்கு அழைத்தாள். உடனே அழைப்பை ஏற்தவன்“ ஆன்த வே பேபி” என்றிட “ சீக்கிரம் வாடா டைம் ஆச்சு” பேசிக்கொண்டே வெளியே சென்றாள்.
ஜெனி கண்ணைமூடி தூங்க முயற்சிக்க சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டாள். சிறிது நேரத்தில் ஏதோ மூச்சடைப்பதுப்போல் உணர்ந்தாள் அவளைச்சுற்றி எதுவோ பலமாக பிடித்து இருந்தது மீண்டும் அந்த நெடிய உருவத்தின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. கத்த முயற்சிக்கிறாள் முடியவில்லை பெருப்பிரயச்சனத்துக்கு பிறகு “ அத்தான்” என்று கத்திககொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.