“ நான் போகமாட்டேன் “ என்று என்று கடற்கரையில் நின்று கத்திக் செய்துகொண்டிருந்தாள் ஸ்ரீ.
“ உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?? எப்பப்பாரு உளறிட்டு இருக்கே??”
“ நான் இந்த கான்ஃபிரன்ஸை அட்டென்ட் பண்ணமாட்டேன் தேவையில்லாம என்னை கம்பெல் பண்ணாதே ஜெனி”
“ வாட் ஈஸ் திஸ் அம்மு? எவ்வளவு பெரிய ஆப்பர்ஜீனிட்டி??இது எத்தனை பேரோட கனவு தெரியுமா?? யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைச்சு இருக்கு நீயேன் உன்னோட டேலன்ட்டை வேஸ்ட் பண்ணுற” என்று சொல்லும்போது ஒரு சிறு வலி மனதில் எழத்தான் செய்தது அதனை புறம்தள்ளியவள் ஸ்ரீயை சம்மதிக்க வைப்பதிலேயே முனைப்பாக இருந்தாள்.
“ லுக் ஜெனி முதல்ல எனக்கு இந்த காம்பெடிஷன்ல பார்ட்டிசிபேட் பண்ண இன்ட்ரஸ்ட்டே இல்லை, உனக்காகதான் நான் இதுக்குள்ளயே வந்தேன்,நீயே இல்லை என்று சொல்லும்போது என்னால முடியாது “ என்று அழுத்தமாக கூறினாள்.
“அம்மு புரிஞ்சோக்கோடி இது உன் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம் அதை இழந்திடாதே, இந்த ஒரு முறை எனக்காக பண்ணு ப்ளீஸ்” என்றாள்.
“ ஏன்டி இப்படி இருக்கே கொஞ்சமாச்சம் சுயநலமா பேசேன்” என்று அயர்வுடன் கூறினாள்.
“ விடுடி வாத்தியை பத்தி முன்னமே தெரிஞ்சதுதானே அவர் பிடிச்ச முயலுக்கு மூணுக்கால் வேறெதுவும் காதிலேயே வாங்கமாட்டார் அப்பறம் எதுக்கு எனர்ஜி வேஸ்ட் பண்ணனும்!! என் பேரு வரும்போதே ஏதாவது பண்ணுவாரு என்று நெனைச்சேன் ஆனால் அறிவுதான் டைம் பாத்து அடிச்சிட்டாரு விடு நெக்ஸ்ட் இயர் நான் போயிக்கறேன்”
“ லூசா நீ, ரெண்டு வருஷமா ஒரு காம்பெடிஷனும் பார்டிசிப்பேட் பண்ணவிடலை அடுத்த வருஷம் மட்டும் எப்படிப்போவ நீ இருக்க என்று தெரிஞ்சாலே அவருக்கு மூக்கு வேர்த்திடும் அப்படி இருக்கும்போது ஈஸியா உன்னை வெளியே விட்டுவிடுவாரா??” என்று கையை கட்டிக்கொண்டு கேட்டாள்.
“என்னடி வாத்தியை ஏதோ ஆன்டி ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணுற அவரு அவ்வளவு எல்லாம் வொர்த் இல்லமா !!” என்று நக்கல் தொனியில் கூறினாள். “ போடி லூசு” என்று ஸ்ரீ சலித்துக்கொண்டாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவள் “ உன் சக்சஸ் உன்னோட ஐடென்ட்டிடி யாருக்காகவும் எதுக்காகவும் அதை விட்டுக்கொடுக்காதே , உன்னோட பெஸ்ட்ட கொடு ஓகே” என்று கூற அதற்கு சம்மதமாக தலையை ஆட்டினாள்.
“ தேங்க் காட் ஒருவாழியா இப்பவாச்சும் ஓகே சொன்னியே” என்று பெருமூச்சுவிட்டவள் அவளை அணைத்துக்கொள்ள “ நினைச்சதை நடத்திட்டல்ல அவ்வளவும் பிடிவாதம்” என்று முகத்தை உற்றென வைத்துக்கொண்டு கூறினாள்.
அந்த பேச்சை விட்டவள் ஜாலி மோடுக்கு மாறி “ கப்பு முக்கியம் பிகிலு விட்டுறாத” என்று சொல்லி சிரிக்க தூரத்தில் இருந்த பீச் ஹோட்டலில் அமர்ந்திருந்த ஸ்ரே
“ எவ்வளவு நேரம் தான்டி வெயிட் பண்ணுறது ட்ரீட்னு சொல்லிக் கூப்பிட்டு வந்துட்டு நீங்க மட்டும் தனியா போய் லவ் பண்ணிட்டு இருக்கீங்க?? உங்க ரொமான்ஸ அப்பறம் வச்சிக்கோங்க சீக்கிரம் வாங்க டைம் ஆச்சு எட்டு மணிக்குள்ள போகலைன்னா அந்த வாடர்ன் பஜாரி கேட்டை இழுத்து சாத்திடுவா அப்பறம் குரங்குக்குட்டி மாதிரி சுவர் ஏறிதான் குதிக்கனும்” என்று குரல் கொடுத்தாள்.
“ பாரு கத்த ஆரம்பிச்சிட்டா இப்ப மட்டும் நீ வரலை உன்னையே முழுங்கி ஏப்பம் விட்டுறுவா கம் “ என்று ஸ்ரீயை கையோடு இழுத்துக்கொண்டு சென்று சேரில் அமர்ந்தாள்.
“ அண்ணா ரெண்டு முட்டைதோசை அதுக்கு முன்ன ஒரு கலக்கி” என்று ரெண்டாவது ப்ளேட் பரோட்டாவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் விபி
“ ஆல்ரெடி பல ரௌன்டு போயிடிச்சு போலவே “ என்று டேபிளில் இருந்த ப்ளேட்டை பார்த்து கொண்டே கூறினாள் ஜெனி.
“ வெயிட் பண்ணுற டைம்ல ஜஸ்ட் ரெண்டு ப்ளேட் தான்டி ஆர்டர் பண்ணான் “ என்று தனக்கான உணவை சாப்பிட தொடங்கினாள் ஸ்ரே.
“ பாத்துடா காரம் ஜாஸ்தியா இருக்கா” என்று ஆதரவாக அவனது தலையை வருடிய ஸ்ரே தண்ணீரை எடுத்துக்கொடுக்க “ அடைச்சிக்க போகுது பொறுமையாக சாப்பிடுங்க சார் அப்பறம் குரூப் ஸ்டடி பண்ண முடியாம போயிடப்போகுது படிக்கற பிள்ளைல” என்று நக்கல் தொனியில் கூற “ விடு அம்மு பாவம் அவன்” என்று அவளை அடக்கிய ஜெனி தனக்கு வேண்டிய உணவுப்பொருட்களை ஆர்டர் செய்தவள்
“ உனக்கு வழக்கம் போல பொடி இட்லிதானே” என்று ஸ்ரீயிடம் திரும்பிக்கேட்க “நானெல்லாம் வெளியே சாப்பிட வந்தா பிரியாணி, பிரைட் ரைஸ், பரோட்டான்னு வெரைட்டி வெரைட்டியாக கேட்பேன் நீ என்னான்னா எப்போ பாரு இந்த பொடி இட்லியையே சலிக்காம சாப்பிடுற எப்படிடி” என்று ஸ்ரே கேட்க “ அது அவ விருப்பம் இதுல உனக்கு என்னடி பிரச்சனை” என்றாள் ஜெனி.
“ அவளை ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுக்கட்டிட்டு வந்துடுவியா?? ஏன் அதை அவ சொல்லமாட்டாளா நீ எதுக்கு எப்பப்பாரு அவளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திட்டு இருக்க” என்றாள்.
“ என் ஆளுக்கு நான் தான் வாய்ஸ் கொடுப்பேன் ஏன் நீ உன் ஆளுக்கு வாயா இல்லை” என்று மாறி கேட்டாள். “ ஏய் நான் சும்மா தானடி இருக்கேன் இப்போ என்ன எதுக்குடி வம்புக்கு இழுக்குற” என்றான் விபி.
“ அப்படியே மூடிட்டு இருந்து இருந்தா இதெல்லாம் நடந்து இருக்குமா” என்று அவனிடம் ஸ்ரீ எகிற ஆரம்பித்து விட
. “ தெரியாம பண்ணிட்டேன் அதுக்குத்தான் வச்சு செய்யறியே அப்பறம் என்னடி” என்றிட “ பச்சை மண்ணு தெரியாம பண்ண போறாங்க” என்று கெட்ட வார்த்தையில் திட்ட வந்தவள் வாயை அடக்கிக்கொணடாள். அவள் கூற வந்தது என்னவென்று புரிந்துக்கொண்டவன் தலைக்குமேல் கையெடுத்துக்கும்பிட்டு “ அம்மா தாய்க்குளமே உன் வாயை சமாளிக்க எனக்கு திரானியில்லை ஐம் டன் விட்டுடுமா “ என்று சரணடைந்துவிட்டான்.
“ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே மிஸ்டர் விபி அதுக்குள்ள கிவப் பண்ணிட்டா எப்படி?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி நக்கல் தொனியில் கேட்டாள் ஜெனி.
“ அறியாப்பிள்ளை தெரியாம பண்ணிட்டான் விடி அம்மு “ என்று ஸ்ரே அவனுக்கு பரிந்து பேச“ விட்டா ரெட்டைப்பிள்ளையா கொடுத்து இருப்பான் இவன் அறியாப்பிள்ளையா?” என்று மாறிக்கேட்டாள். இது வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெனி திரும்பி கடைக்காரரிடம் “ஆர்டர் போட்டு எவ்வளவு நேரம் ஆகுது சீக்கிரம் கொண்டு வாங்கண்ணே நேரத்துக்கே இதுங்களை கொண்டு ஹாஸ்டல்ல தள்ளினால் தான் எனக்கு நிம்மதி” என்று கத்தினாள்.
“ இதோ வந்துட்டேன் பாப்பா!! ஒரு பெரிய பார்சல் ஆர்டர் வந்தது அதான் லேட் ஆகுது” என்று சொல்லிக்கொண்டே வந்தார் அந்த ஹோட்டல் சப்ளையர். “ ரெகுலர் கஸ்டமர்க்கு தான் முன்னுரிமை மறந்திடாதீங்கண்ணே” என்று அவரிடம் வம்படிக்க தொடங்கிவிட்டாள்.
“ நான் உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கதையடிச்சிட்டு இருக்க??” என்று கேட்டாள் ஸ்ரீ.
“ நீ பேசுமா!! நான் வந்த வேலைய பாக்கனும்ல?? எனக்கு சோறுதான் முக்கியம்!!” என்று தோசையை பிய்த்து வாயில் வைத்தாள்.
“எதையும் சீரியஸாகவே எடுத்துக்க மாட்ட கொஞ்சம் கூட உனக்கு வருத்தமாக இல்லையா??”
ஜெனியின் செயலில் கடுப்பான ஸ்ரீ அவளை கொலைவெறியுடன் பார்த்தாள். அவளது பாவனையில் ஏதோ சீரியஸாக பேசப்போகிறாள் என நினைத்து இருக்க அவளோ மாறி கிண்டல் செய்து கொண்டல்லவா இருக்கிறாள்.
இருவரையும் சின்ன சிரிப்புடன் பார்த்தவள் “ நத்திங் ஈஸ் பர்மனென்ட் இன் ஆர் லைப் அம்மு அடுத்த நிமிடம் நிலையில்லாத வாழ்க்கையை நினைச்சு ஏன் இந்த நிமிஷத்தை வீணாக்கனும் ஜஸ்ட் சில் “ என்று கண்ணடித்துக்கூறினாள்.
அவளது பதிலில் சற்று சாமாதானம் அடைந்தாலும் மனதிற்குள் சிறு நெருடல் ஒன்று இருக்கத்தான் செய்தது.
நடந்ததை இனி மாற்ற இயலாது இனி நடக்க போவதை மட்டும் பார்ப்போம் என்று நினைத்து கொண்டிருக்க” அப்படி சொல்லு ஜெனி எப்பப்பாரு சும்மா எண்ணெயில் போட்ட கடுகு மாறி பொறிஞ்சிட்டு வயசுப்பையன் ஜாலியா இருக்க வேண்டாம் ” என்று விபி குறுக்கால் வர மூவரது ஃபோகஸும் ஒன்றாக அவன்பக்கம் திரும்பியது.
“ அப்படி என்ன சொல்லிட்டேன்னு இந்த லுக் விடுறாளுக என்று தெரியலையே” என்று முழித்தவன் “ சரி சரி அமைதியாக சாப்பிட்டு முடிங்க சீக்கிரம்” என்று சமாளிப்பாக சொல்ல “ உன் பொறுப்பு பொரியலை கொஞ்சம் அடக்குடா இன்னும் டைம் இருக்கு” என்று மொக்கை பண்ணிவிட்டாள் ஜெனி.
இவர்கள் இப்படி அரட்டை அடித்துக்கொண்டிருக்க ஸ்ரீயின் எண்ணம் இங்கு இருக்கவே இல்லை. காலையில் நடந்த விசயங்களையே உருப்போட்டுக்கொண்டிருந்தாள்.
“ நீ மட்டும் போடி, நீ பார்த்த வேலைக்கு என்னதான் கடிச்சு கொதறுவாறு ப்ளீஸ்டி” என்று கெஞ்சிக்கொண்டே வந்தான் விபி.
“ நீதானே எல்லாத்துக்கும் காரணம் மரியாதையாக வந்து உண்மையை சொல்லு இல்லனா இன்னைக்கு நடக்கறதே வேற வாடா” என்று அறைக்குள் விபியை இழுத்து கொண்டு நுழைந்தாள் ஸ்ரீ.
“ இன்னையோட இந்த பிரச்சினையை முடிச்சே ஆகனும் உன்னால அவளைதான் அந்த மெண்டல் கார்னர் பண்ணிட்டு இருக்காரு வாடா” என்று திட்டிக்கொண்டே உள்ளே நுழைய தயங்கியபடி ஸ்ரீயின் பின்னால் சென்றான் விபி.
“ வாட் ஈஸ் திஸ் பிரசாத் சார், நீங்க இந்த கல்லூரிக்கு எவ்வளவு பெரிய அசட் தெரியுமா?? இங்கேயே படிச்சு இங்கேயே பேராசிரியராக வேலை பார்த்து இப்போ ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்டா ஆகி இருக்கீங்க, அதுமட்டுமல்லாமல் உங்க ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேரு இன்டர்நேஷனல் லெவல்ல நம்ம காலேஜை பெருமைபடுத்திட்டு இருக்காங்க அப்படி இருக்கும்போது நீங்களே இப்படி பண்ணலாமா, ப்ளீஸ் உங்க முடிவை கொஞ்சம் ரீகன்சிடர் பண்ணுங்க” என்று நீளமாக பேசினார் பிரின்சிபால் முத்துவேல்.
“ நோ சார் என் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை ஐம் லீவிங்” என்று பிடிவாதமாக பேசிக்கொண்டிருந்தார் அனைவராலும் முசுடு,சிடுமூஞ்சி வாத்தி, ஹிட்லர் என செல்லமாக அழைக்கப்படும் ஜெர்னலிசம் டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடி பிரசாத்.
ஸ்ரீயும் விபியும் உள்ளே வந்ததைக்கூட கவனிக்காமல் காரசாரமாக இருவரும் விவாதித்து கொண்டிருந்தனர். இருவரது பேச்சையும் கேட்ட விபி எல்லா உன்னாலதான என்பதுபோல் ஸ்ரீயை கண்களாலேயே குற்றம் சாட்டினான். தெரியுது மூடு என்று சைகை செய்தவள் அவர்களது சம்பாஷனையை ஏதோ படம் பார்ப்பது போல் கூலாக பார்த்து கொண்டிருந்தாள்.
“ இப்படியொரு கேரக்டர்லெஸ் ஸ்டூடண்ட் என்னோட ப்ராஜெக்ட்ல இருக்கறது எனக்கு பிடிக்கலை சார், இந்த காலேஜ் எனக்கு கோவில் மாதிரி எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம் ஆனால் அந்த பொண்ணு” என்று நிறுத்தியவர் “ எனக்கு நினைச்சாவே அறுவறுப்பாக இருக்கு ப்ளீஸ் சார், நான் வளர்ந்த இடம் என் கண்முன்னாலயே நாசாம போகறதை என்னால டாலரேட் பண்ணிக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
வாத்தி பேசுவதை கேட்க கேட்க ஸ்ரீக்கு ரத்த அழுத்தம் ஏறியது “ இப்போ வாயை திறக்கறியா இல்லையா??” என்று மெல்லிய மிரட்டல் குரலில் விபியிடம் கேட்டாள். அவன் அமைதியாக இருந்தானே தவிர வாயை திறப்பதுப்போல் தெரியவில்லை.
“ படிக்கற வயசில் என்ன பழக்கம் சார் இது, நல்ல குடும்பத்துல பிறந்து இருந்தா இந்த மாதிரியெல்லாம் புத்திப்போகுமா?? மறந்துட்டேன் பாருங்க சொல்லிக்கொடுக்க ஆள் இருந்தா தானே ச்ச என்ன பொண்ணோ” என்று வாயைவிட்டுவிட “ சார் மைண்ட் யுவர் வோர்ட்ஸ் சார், ஹௌ கேன் யூ டாக் லைக் தட்” என்று கத்திவிட்டாள் ஸ்ரீ.
“ ஸ்ரீ பிஹேவ் யுவர் செல்ஃப், ஹீ ஈஸ் யுவர் ப்ரோஃபசர் “ என்று கண்டித்தார் முத்து.
“ சார் இவரு எப்படி ஒருப்பொண்ணை பத்தி இவ்வளவு மட்டமாக பேசலாம் முதல்ல அங்கே என்ன நடந்தது என்று தெரியுமா??” என்று விபியை பார்க்க அவன் கையை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவனை பார்த்து சலிப்பாக தலையாட்டியவள் “ யாரோ ஒரு பையன் ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து எங்க ரூமுக்கு வந்தது ஜெனியை பார்க்க இல்லை ஸ்ரேயாவை பார்க்க!!வந்த பையன் யாரு தெரியுமா?? தி கிரேட் பிரசாத் சாரோட சன் வெங்கடேஷ் பிரசாத் அதாவது மிஸ்டர் விபி” என்றுச்சொல்ல வாத்தியால் வாயையே திறக்க முடியவில்லை.
“இதை இருட்டில் யாரோ பார்த்திட்டு வார்டன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க, அந்த நேரத்தில் ரூமுக்குள்ள உடம்பு சரியில்லாமல் இருந்தது நான், எங்கே தேவையில்லாம என்மேல பழி வந்திடுமோ என்று ஜெனி அவமேல பழியை போட்டுக்கிட்டா” என்றாள்.
“ அப்பக்கூட நான் சொன்னேன் உண்மையை சொல்லிடு என்று அதுக்கு அவ என்னச்சொன்னா தெரியுமா ரெண்டு பேரும் அதே டிபார்ட்மென்ட் கண்டிப்பாக ரெண்டு பேருக்கும் பிரச்சினை வரும்!! நான் அதர் டிபார்ட்மெண்ட் தானே எனக்கு நோ இஷ்ஷுஸ் அப்படின்னு தோளைக்குலுக்கிட்டே போய்ட்டா அதுமட்டுமில்லை வந்தது விபி என்று தெரிஞ்சா அது வாத்தி” என்று சொல்லவந்தவள் பின் சுதாரித்துக்கொண்டு” பிரசாத் சாருக்குத்தான் கெட்டப்பேர் இவன் பண்ணதுக்கு அவரோட பேருதான் ஸ்பாயில் ஆகும், அவரு இந்த காலேஜ்க்கே அசட் மாதிரி சோ இத்தோட இந்த பிரச்சினையை விட்டுடு என்று சொன்னா,ஆனால் சில பேர் இதை கடைசி வரை முடிக்க விட மாட்டாங்க போல??ஒரு காம்பெடிஷன்கூட அவளால கலந்துக்க முடியலை அட்லீஸ்ட் இந்த குரூப் ப்ரோஜெக்ட்லயாவது பார்டிசிப்பேட் பண்ண வைக்கத்தான் என் டீம் இந்த கான்பிரன்ஸ என்ரோல் பண்ணோம் ஆனால் அந்த கிரிடிட் கூட அவளுக்கு வரவிட கூடாது என்று சிலப்பேரு ரொம்ப தீவிரமாக இருக்கப்போல தெரியுது சோ என் மனசுக்கு சரியென்று பட்டதைதான் நான் பண்ணேன் மத்தப்படி யாறையும் இன்சல்ட் பண்ணனும் என்று பண்ணலை” என்று அழுத்திக்கூறினாள்.
“ சூப்பர்மா ஸ்ரீ நீ ஏன் இந்த சீரியலுக்கெல்லாம் ஸ்க்ரீன் பிளே எழுதக்கூடாது சூப்பரா ஸ்விஸ்ட்டு அடிக்கறியே” என்று மெச்சினார் பிரசாத்.
“ நீ சொல்லுற அதே நாளில் மிஸ்டர் விபியும் பிரின்சிபால் சாரோட சன் ராகேஷீம் மோகன் வீட்டிலதான் குரூப் ஸ்டடீஸ் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ வந்து புதுசா என்னமோ பேய் கதை சொல்லிட்டு இருக்கிற??பேசாம நீ க்ரைம் ஸ்டோரிக்கு பதிலாக இதையே ஷார்ட் ஃபிலிமா எடு கண்டிப்பாக ஜெயிச்சிடுவ” என்றார்
“ சார் ராகேஷ் ஃபோட்டோகிராபி விபி ஜெர்னலிசம் ரெண்டு பேரும் சேர்ந்து இந்த காலேஜே இல்லாத ஒரு பையன் வீட்டில் குரூப் ஸ்டடிஸ் பண்ணுறாங்க ஈஸ் இட் மேக் எனி சென்ஸ்?? நம்பற மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க” என்றாள்.
“ எனக்கு சென்ஸ் இல்லதான்மா உங்களுக்கு தான் நிறைய இருக்கே பிரின்சிபால் சாரோட சன்னையே சஸ்பென்ட் பண்ண வைக்கிற அளவுக்கு” என்று குத்தலாக பேசினார்.
“ சார் நீங்க வேற எதையோ மனதில் வைத்துக் கொண்டு பேசற மாதிரி இருக்கு”
“ லுக் ஸ்ரீ நீங்க உங்க பிரன்ட் ஜெனிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க என்று இந்த ஹோல் கேம்பஸ்க்கே தெரியும் லைக் ராகேஷ் விசயம் மாதிரி, ஐ டோண்ட் வான்ட் டூ டிஸ்கஸ் எபௌட் இட் அதேமாதிரி இதுவும் ஏன் பொய்யாக இருக்கக்கூடாது என்பதுதான் என்னோட கேள்வி” என்றார்.
“ சார் இந்த விசயத்தில் யாராவது பொய் சொல்லுவாங்களா” என்றாள்.
“உங்க ஃபிரண்டுக்காக நீங்க சொல்லுவாங்க” என்றார்.
இருவரும் மாறிமாறி வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை பார்த்த முத்துவேல் “ ஜஸ்ட் ஸ்டாப் இட் கைஸ்!! ஈஸ் இட் எ டிஸ்கஷன் ரூம் ஆர் எ ஃபிஷ் மார்கெட்” என்று மேசையில் தட்டினார்.
இருவரும் சற்று அமைதியாக “ மிஸ்டர் பிரசாத் ஜஸ்ட் காம்டவுன் ஐ வில் ட்ரஸ்ட் யூ” என்றவர் ஸ்ரீயிடம்” ஸ்ரீ உங்க ஃபோட்டோகிராஃபர் ஜெனிஃபர் லாரன்ஸ் மேல ஏகப்பட்ட அலிகேஷன்ஸ் கேம்ப்பஸ் சைட்ல இருந்து வந்துட்டே இருக்கு, அதுக்கு நான் ஆக்ஷன் எடுத்தா சஸ்பென்ட் இல்லை டிஸ்மிஸே பண்ணலாம் ஆனால் அதையும் மீறி அவங்க இந்த காலேஜ்ல கன்டினியூ பண்ணிட்டு இருக்கறதே பிரசாத் சாராலதான் அதை முதலில் புரிஞ்சிக்கோங்க”
“ ஆனால் இன்னைக்கு நீங்க பண்ணது அவரை இன்சல்ட் பண்ணற மாதிரி இருக்கு, ஒரு கைடோட ஆர்டர நீங்க ஒபே பண்ணவே இல்லை இது சரிதானா??”
“ இந்த காம்பெடிஷனை இனிஷியேட் பண்றதே சார்தான் அவரு நினைச்சு இருந்தா நீங்களோ ஜெனியோ யாருமே இவ்வளவுதூரம் வந்து இருக்க முடியாது!!அப்படி இருக்கும்போது அவருக்கு தெரியாதா யாருக்கு கிரிடிட் வரனும்னு, திறமை என்று வரும்போது அவரோட சன்னையே தள்ளி வச்சிட்டு உங்களை ஹீரோவா ஆக்கியிருக்கார் இதுவே அவரோட பெரிய மனசை தெளிவாக காட்டுது, அதை முதலில் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க “
“இந்த கான்ஃபிரன்ஸ் நம்ம காலேஜோட ப்ரஸ்டீஜ் சம்பந்தப்பட்டது அதுல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது, சோ நீங்க தான் இந்த கான்பிரன்ஸ ரெப்ரசென்ட் பண்ணப்போறீங்க கெட் ரெடி ஃபோர் தட்” என்றார்.
“ பட் சார் திஸ் ஈஸ் நாட் ஃபேர் உண்மை தெரிஞ்சப்பிறகும் அவளை தண்டிக்கறது அநியாயம்” என்று வாயை திறக்க அவளது பேச்சை இடைவெட்டியவர்“ நோ டிஸ்கஷன்ஸ் எபௌட் இட் , ப்ரோஜெக்ட் டீடெயில்ஸ் பிரசாத் சார் கிட்ட கலெக்ட் பண்ணிக்கோங்க இன்னும் ஒன் மந்த்ல நீங்க கிளம்பனும் கெட்ரெடடி!! தட்ஸ் இட்,யூ கேன் லீவ் நவ்” என்று முடித்துக்கொண்டார்.
கையாலாகாத தனத்துடன் பிரின்சிபால் அறையை விட்டு வெளியே வந்தவள் விபியை பிடித்து காய ஆரம்பித்துவிட்டாள். “ வாயை எங்கேயாச்சும் வாடகைக்கு விட்டு வந்துட்டியா, சும்மாவே நிக்கற தப்பு பண்ணா தைரியமாக சொல்லனும்டா இப்படி பம்மிட்டு நிக்கக்கூடாது இந்த லட்சனத்துல உனக்கெல்லாம் லவ் ஒரு கேடு” என்று காச்மூச் என கத்த ஆரம்பித்து விட ஜெனிதான் சமாதானப்படுத்தி ட்ரீட்டுக்கு என்று அழைத்து வந்திருந்தாள்.