அவளை மீண்டும் அதே இடத்தில் அமர வைத்தான். “எதுக்கு இவ்வளவு வேதனை படனும், அதான் உன் கழுத்தில் தாலி கட்டினது நான் தானே. இன்னும் என்ன?” என அவள் முகத்தை நேராக பார்த்துக் கேட்க..
‘அவனை எப்படி கையாளுவது என தெரியாமல் நின்றிருந்தாள்’ பதிலில்லை அவளிடம்..
“உன் சத்ரி தானே…. அப்பறம் ஏன் அழனும்” அவளின் அமைதியை சத்ரியே உடைத்தான்
அந்த வார்த்தைகள் நன்றாகவே வேலை செய்ய…
“நீ என் சத்ரியே இல்லை… ”என அடக்கி வைத்த கோபம் கொப்பளிக்க… சாத்வி அவனிடம் சீறினாள்
“என் சத்ரி என்னை அழவிடவும் மாட்டான், அழ வச்சவங்களையும் சும்மா விட மாட்டான். ஆனா நீ என்னை அழ வச்சிட்ட. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை… உன்னை பார்த்த நாளில் இருந்து இதோ இப்போ… இந்த நிமிஷம் வரை அழ வச்சிட்ட்….ல்ல” என அடக்கிய மொத்த அழுகையும் வெடித்தது.
சத்ரி பேசுவதற்கு இடமே கொடுக்காமல்
“என்னை தனியா விட்டுடு சத்ரி… உன் முன்னாடி என்னால் அழ கூட முடியலை… என்னை தனியா விடு .. விட்டுடு” என அழுகையை அடக்கிய குரலில் கூற… அதற்கு மேல் சத்ரியும் எதுவும் பேசவில்லை…
அப்படியே சோபாவில் சாய்ந்து அடிபட்ட குழந்தையாய் முகம் வேதனையில் சுருங்க.. பார்க்கவே பாவமாய் இருந்தாள் சாத்வி.
சோபாவின் பின் சத்ரி, சோபாவில் சாத்வி என இருக்க…. அழுகையை தொலைத்து, சாத்வியின் மனம் அமைதியை நாட, அமைதியை தொலைத்து சாத்வியின் மகிழ்ச்சிக்காய் தவித்துக் கொண்டிருந்தது சத்ரியின் மனம்.
எங்கோ வெறித்தபடி சாத்வி இருக்க அவளை வெறித்தபடி சத்ரி இருந்தான்.
ஓய்ந்து போய் கண்களை மூடியிருந்த சாத்வியை நெருங்கி.
“சாவி..” என அன்று கேட்ட அதே மனதை கிழிக்கும் குரலில் படாரென கண் திறந்தாள் சாத்வி.
முகம் ஒன்று கூற… குரல் ஒன்று கூறியது… எது உண்மை என தெரியாத அளவு சாதாரணமாய் அமர்ந்திருந்தான்.
மீண்டும் அவள் கன்னத்தில் கை கொடுத்து தன் முகம் காண செய்தான் சத்ரி… சோபாவின் விளிம்பில் தலை மேல் நோக்கி இருக்க… சத்ரி அவள் முகத்தை பார்த்த வண்ணம் கீழ் நோக்கி இருக்க… அவள் விழிகளுக்குள் நுழைந்தான்..
“உன்னை கொன்னு போடுறதுக்காக உன் கழுத்தில் தாலி கட்டலை” அமைதியாய் வெளிப்பட்டது அவன் ஆத்திரம்
“ம்ப்ச்…. நீயும் என்னை ஏமாத்திட்ட சத்ரி… நீ மாறிட்ட நீ என்னோட சத்ரி இல்லை் என் சத்ரி என்னை அழ விடவே மாட்டான்…. அழ வச்சங்களையும் சும்மா விட மாட்டான்.. நீ பொய் நீ பொய்….” அழுகை நின்று அழுத்தமாய் வந்தது குரல்… ஏற்கனவே சொன்ன வார்த்தைகளை அப்படியே சொல்லி கொண்டே இருந்தாள்.
“ஐயோ…. நான் உன் சத்ரி தாண்டி” என சத்தமாய் கூற வேண்டும் போல் இருந்தது. இந்த்நொடி இவளிடம் கத்தினாள் இருமடங்கு அதிகமாய் இவளும் கத்துவாள். என
“நான் உன்னோட சத்ரி , உன்னை என்னைக்குமே அழ வைக்க கூடாதுன்னு நினைச்சதால தான் இந்த கல்யாணம்.. உன் சந்தோஷத்தை உனக்கு திருப்பி கொடுக்குற உன்னோட அதே சத்ரி தான்.. இப்போ என்னால் ஃப்ரூவ் பண்ண முடியும்..” என அவள் கண்களில் நுழைந்து அவளுக்கு தன்னை புரிய வைத்தான்..
அந்த வார்த்தைகள் அவளுள் பதிய இதயம் துடிக்கும் ஓசை மட்டும் காதை கிழிக்க “கல்யாணத்தில் நீ என்ன குளறுபடி செஞ்ச, சத்ரி” என அவன் சொன்ன வார்த்தைகளில் தனக்கு தேவையானதை சரியாய் கண்டு கொண்டு அதன் காரணத்தை, படபடக்கும் இதயத்தோடு இவள் கேட்கும் நேரம், கண்களின் கீழ் இமைகளில் வைரக் குமிழியாய் நீர் உருண்டு இருக்க… அதீத ஆசையை கண்களில் தேக்கி இவனை பார்த்தாள்.
“ சாவி… செம ஷார்ப் தான்..போ.. “ என நிஜமாகவே சத்ரி பாராட்ட.. சாத்விக்கோ அவன் கிண்டல் செய்வது போல் தோன்ற..
“ கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா….” என கடுப்புடன் கேட்டாள்…
“என்னால் ப்ரூப் பண்ண முடியும்ன்னு’ ஒரு வார்த்தை சொன்னேன்.. நீ அதை மட்டும் விட்டுட்டு… உனக்கு தேவையானதை மட்டும் எடுத்துகிட்ட பார்த்தியா..” என விஷமமாய் கேட்க..
சரியாய் புரிந்து கொண்டாள் சாத்வி…
முதலிரவு… ஆண்களில் மனதில் மனைவியாய் உருப்பெற்றவளின் மீது ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுக்கும் இரவு.
சத்ரிக்கும் கண்டிப்பாய் இருக்கும். ஆனாலும் இப்போது அது முடியாது… என மனதை திடப்படுத்திக் கொண்டு…
“எனக்கு தூக்கம் வருது..” என சோபாவை விட்டு எழுந்தவள், சென்று கட்டிலில் அமர்ந்து படுத்தும் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அதே வேகத்தில் எழுந்தவள், காலடியில் மடித்திருந்த போர்வையை முழுவதுமாய் விரித்து, தன் மேல் போர்த்தி கொண்டு துயில் கொள்ள ஆயத்தமானாள்.
அவளின் செயல்… சிரிப்பை வரவழைக்க… அவளருகில் சென்று “ நான் என்னத்தை பார்த்திடுவேன்னு.. நீ இப்படி இழுத்து போத்தி தூங்குற..ம்ஹூம் தூங்குற மாதிரி நடிக்கிற” என சன்னமாய் வெளியேறிய சிரிப்போடு, அவள் போர்த்தி இருந்த போர்வையை அப்படியே உருவ, போர்வையோடு சேர்ந்து அவளின் புடவை தலைப்பும் சத்ரியின் பிடியில் இருக்க அவன் இழுத்த இழுப்பில், பின்னையும் பிய்த்துக்கொண்டு புடவை அவன் கையோடு வந்தது.
சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான் சத்ரி, இதழ்கள் விஷமமாய் சிரித்தபடி..
ஒரு நொடி என்றாலும் காண கிடைக்காத சாத்வியின் தரிசனம்.. சத்ரிக்கு கிடைத்தும் விட்டது.
சத்ரியின் செயலில் அதிர்ந்து நிற்காமல்.. அவன் கையில் இருந்த புடவையை பிடுங்கி தன் மேல் போட்டு கொண்டு “அதான் பார்த்துட்டேல்ல.. சும்மா நல்லவன் மாதிரி நடிக்காத” சண்டைக்கு தயாராக
இவனின் பார்வையோ மீண்டும் அவள் மீதே இருந்தது.
‘இவன் ஏன், இன்னும் இப்படி பார்க்கிறான்..’ என குனிந்து தன்னை பார்க்க
ஷாக் அடித்தாற்போல், மீண்டும் புடவை தலைப்பை சரி செய்தாள்…. பின்னே புடவை தலைப்பு எதை மறைக்க வேண்டுமோ, அதை மறைக்காமல் அப்படி காட்டி கொண்டிருந்தது.
சத்ரியிடம் சண்டையிடும் ஆர்வத்தில், புடவையை அந்த லட்சனத்தில் தோளில் போட்டிருந்தாள்.
அவளின் செயலில் சத்ரியின் முகம் மென்மையாய் மாற “பர்ஸ்ட் நைட் நடக்காமலேயே இவ்வளவு கிக்… அப்போ நடந்தா” என அவளை தன்புறமாய் திருப்பி இவளை நெருங்கினான் சத்ரி.
“பர்ஸ்ட் நைட்டில் யாரும் தூங்க மாட்டாங்க” என விவரமாய் பேச…
“ தூங்காம” என கடுப்பாய் கேட்க….
“ தூங்காமல் பர்ஸ்ட் நைட் கொண்டாடுவாங்க… ”
“ ஓ… அப்போ நீ என்ன மெஷினா?”என கேட்டுவிட..
“வா… காட்றேன்” என்றபடி இழுத்து அவளை தன் கைகளுக்குள் அடக்கினான் சத்ரி
“ எ…எ….என்ன… ” என திரு திருவென முழிக்க..
“மெஷினான்னு நீ தானே கேட்டே.. நான் மெஷினா… இல்லை மனிதனான்னு… காட்றேன்னு சொன்னேன்” என தெளிவாய் விளக்க…
அவன் இரட்டை அர்த்தம் கலந்த பேச்சில், முகம் சிவந்து போனாலும் அவனிடம் சரண்டைய மறுத்தது மனம்.
அவன் பிடியில் இருந்து திமிறியபடி, அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள்.
நீ விலகுவாயா? அதுவும் என்னை விட்டு! என அதிகளவு உரிமையை அவளிடம் எடுக்க, இவளுக்கோ பொறுமை பறந்தது.
சத்ரியை, அவனது நெருக்கத்தை காயப் படுத்த கூடாது என நினைத்து அமைதியாய் இருந்தவளுக்கு சத்ரியின் செய்கை கோபத்தை கொடுக்க.. அவனை வார்த்தையாய் சு்டு பொசுக்கினாள்..
“ பெரிய, பர்ஸ்ட் நைட், பர்ஸ்ட் நைட்ன்னு பாட்டு பாடற.. அந்த கல்யாணம் நிக்க போய், நீ எனக்கு புருஷனா இங்கே நிக்கிற, இப்படி பேசிட்டு இருக்க.. சப்போஸ்.. ரமேஷை கல்யாணம் பண்ணியிருந்தா, இப்போ நான் அவன் கூட” என சொல்லி முடிக்கும் முன்
சாத்வியின் காதில் இடியே விழுந்தார் போல் சத்ரியின் கைவிரல்கள் பதிந்திருந்தது.
நெருக்கம் விட்டு அதிகளவு விலகு இருந்தான் சத்ரி. சற்று முன் இருந்த முகமா இது எனும் அளவிற்கு ஆக்ரோஷமாய் மாறி இருந்தது.
“இனி அவனோட பேர்கூட உன் வாயில் இருந்து வர கூடாது… இனி நான் மட்டும் தான் உன்னோட புருஷனா, உன்னோட சத்ரியாய் நான் மட்டும் தான் இங்கேயும் இருக்கனும், இங்கேயும் இருக்கனும்” என அவள் இடது மார்பின் மீதும்.. அவளின் நெற்றிப் பொட்டின் மீதும் பட்டும் படாமல் தொட்டு “என்ன புரிஞ்சதா” என உறும
அடி வாங்கியவளோ தலையை கூட அசைக்காமல் கண்களில் நீர் வடிய நின்றிருக்க,
“வீணா அவனை பத்தி பேச என் கோபத்துக்கு ஆளாகாதே, இது தான் லாஸ்ட் உனக்கு வார்னிங்” சொல்லிவிட்டு அவளை நெருங்கி, இழுத்து தனக்குள் அணைத்து கொண்டவன் அப்படியே கட்டிலில் விழுந்தான்.
கைகள் அவளை பிடித்திருந்த பிடியை சிறிதும் தளர்த்தவே இல்லை,அப்படி இறுக்கமான அணைப்பு, உன்னை யாருக்கும் தர மாட்டேன் எனும் விதமான அணைப்பு.
சத்ரி விட்ட அடியில் அழுகை வந்தாலும், அந்த இறுகிய இணைப்பு அவளுள் நிம்மதியை பரவ செய்ய, சத்ரி எப்படி பிடித்திருந்தானோ அப்படியே உறங்கிப் போனாள் சாத்வி..