சுவேரா வீட்டிற்குள் செல்லவும் சாய் லாவண்யா ஹாஸ்ட்டலுக்கு வந்து பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
“உள்ளே விட மாட்டாங்களே! கடவுளே! லாவா எந்த விபரீத முடிவும் எடுத்துக்காம பார்த்துக்கோங்க” என்று கும்பிட்டு நகர்ந்தான்.
விழியான் நேராக ஹாஸ்ட்டலுக்குள் சென்றான். விடுதி காப்பாளர் அவனை பார்த்து, யார் வேணும்? கேட்டார்.
லாவண்யா..
அவளா? அழுதுட்டு இருப்பா..
மேம், அந்த பொண்ணோட அறையை மாற்ற முடியுமா?
யாருப்பா நீ? அவளோட வொர்க் பண்ற பையனா?
எஸ் மேம், அவள் ஏற்கனவே பிரச்சனையில் இருக்கா. அவளுக்கு நல்ல பொண்ணு இருக்கும் அறையாக மாற்றி விடுங்களேன்..
ஆனால்ப்பா..
மேம், பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தாரேன். அவளோட பாதுகாப்பு முக்கியம் அவன் கேட்க, ஓ..அதுக்கு தானா?
பணம் கொடுங்க. நான் மாத்திடுறேன். தனி அறையாக கூட கொடுக்கிறேன்.
நோ மேம். நல்லா பழகும் பொண்ணு இருக்கும் அறை போதும்..
ஓ..சரிப்பா..என்று அவர் அவனையே பார்க்க, அவன் கார்ட்டை அப்படியே அவர் கையில் கொடுத்தான். அவர் அதிர்ந்து அவனை பார்த்தார்.
இந்த பொண்ணுக்காக தானா?
ம்ம்..
காதலா சார்?
ம்ம்..
ஓ.கே சார். நீங்க அடிக்கடி வாங்க.
“ஏன் அவள் அறைக்கு செல்ல அனுமதிக்கப் போறீங்களா? என்ன?” அவன் கேட்க, யாருக்கும் தெரியாமல் வேணும்ன்னா வந்துக்கோங்க என்று அவர் சொல்ல, அவன் புன்னகைத்தான்.
அவளை அடிக்கடி பார்த்துக்கோங்க.
“கண்டிப்பா சார்” என்று அவர் சொல்ல, விழியான் நகர்ந்தான்.
ஆத்விக்கும் துருவினியும் சொன்னது போல் கேஷ் விசயம் முடித்து கோவிலுக்கு சென்றனர். அப்பொழுது சாய் அழைத்து காரை பற்றி கேட்க, அவர்கள் இருக்கும் கோவிலுக்கு வரச் சொன்னான் ஆத்விக்.
சாய் வரும் முன் வழிபாட்டை முடித்து இருவரும் வந்தனர். இருவரையும் பார்த்து புன்னகைத்தான் சாய். துருவினியோ..ஏதும் நடவாதது போல “சாய் நீயும் வாயேன். பீச் போகலாம்” அழைத்தாள்.
துரு, நீங்க போயிட்டு வாங்க. நான் எதுக்கு கரடி போல் அவன் சொல்ல, துருவினி விழித்தாள். ஆத்விக் சிரித்தான்.
நீ எப்படி போவ? பேச்சை மாற்றினாள்.
நான் பார்த்துக்கிறேன் மேடம்.
என்ன புதுசா மேடம் போடுற?
இனி அப்படி தான? சரி தான சார்?
அப்சல்யூட்ல்லி சொல்லி ஆத்விக் புன்னகைத்தான்.
“அத்து” துருவினி முறைக்க, “துரு நல்லா தெரியுது” என்ற சாய், நான் பஸ்ஸில் போயிப்பேன் என்று அவன் செல்ல, இவர்கள் பீச் சென்றனர்.
ஆத்விக் துருவினி மடியில் படுத்துக் கொண்டு, என்னோட அம்மா மடியில இப்படி படுக்கணும்ன்னு எத்தனை வருசமா ஏங்கி இருந்தேன் தெரியுமா வினு? வருத்தமாக பேசினான்.
உங்க அம்மாவை பார்க்க போனீங்களா அத்து?
ம்ம்..போனோம். நானும் கவினும். அதி போல் அம்மாவால் அடைந்து இருக்க முடியாது. வினு, அம்மா நம்முடன் நம்ம வீட்ல இருந்தால் சமாளிச்சுப்பேல்ல?
“என்ன அத்து? இப்படி கேக்குறீங்க? அவங்க அம்மால்ல?”
ம்ம்..அதான்..பார்த்துட்டு அவங்களுக்கு இந்த ஒரு வாய்ப்பை மட்டும் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
ம்ம்..
எனக்கு ஒரு கிஸ் தா வினு? ஆத்விக் கேட்க, அவளது புடவை முந்தானையால் இருவரையும் மூடி அவனுக்கு முத்தம் கொடுத்தாள். சற்று நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள். ஆரியன் வீட்டில் அவளை விட்டு அவன் வீட்டிற்கு ஆத்விக் சென்றான்.
ஆத்விக் வீட்டில் அதிவதினியும் சுகுமாரும் பதட்டமுடன் நின்று கொண்டிருந்தனர்.
“அத்தை, மாமா இந்த நேரத்துல்ல வந்துருக்கீங்க?” ஆத்விக் அவர்களை புருவமுடிச்சுடன் பார்த்தான்.
அண்ணா, கவின் இன்னும் வீட்டுக்கு வரலையாம்..
“அத்தை, முக்கியமான வேலை ஏதாவது இருக்கும். வந்துருவான்” ஆத்விக் சொல்ல, இல்ல ஆது அவன் என்ன வேலை இருந்தாலும் சரியாக ஒன்பது மணிக்குள் வந்து சாப்பிட்டு போவான் பயத்துடன் கூறினார்.
ஆமா ஆது, எனக்குமே ஏதோ பயமா இருக்கு? சுகுமார் சொல்ல, இருங்க ஸ்டேசனுக்கு கால் பண்ணலாம்.
பண்ணி பார்த்துட்டோம் அண்ணா. கால் யாரும் எடுக்கலை.
“அதெப்படி ஸ்டேசனில் யாரும் இல்லாமல் போவாங்க?” ஆத்விக் கேட்டான்.
“ஆமாத்தை, இருங்க மாமாவிடம் பேசலாம்” என்று ஆரியனை அழைத்தான். அவன் எடுக்கவில்லை..
மாமா எடுக்கவில்லை சிந்தனையுடன் அவன் இருக்க, துருவினி ஆத்விக்கை அலைபேசியில் அழைத்தாள்.
வினு மாமா..
அத்து, கவின் அண்ணா..என்று மூச்சிறைத்தது அவளுக்கு.
“என்னாச்சு? வெளியவா இருக்க வினு?”
கவின் அண்ணா ஸ்டேசன்ல்ல அவர் பிடிச்சு வைச்சிருந்த கைதியை அவிழ்த்து விட்டு போலீஸ் ஒருவரை எவனோ கொன்னுட்டு போயிருக்கான். அண்ணா அவரோட வேலை செய்யும் இன்பராஜ் சார் பொண்ணை யாரோ கடத்தீட்டாங்கன்னு கவின் அண்ணா தேடி போன நேரம் செஞ்சிருக்காங்க..
தேடி போன அந்த குட்டிப் பொண்ணோட அப்பா பிள்ளையை காணாமல் வந்துட்டார். ஆனால் அண்ணாவை காணோம். ஆரியன் அண்ணாவும் கவின் அண்ணாவை தேடி போயிருக்காங்க.
“நீ எங்க இருக்க?”
அதி பயந்துட்டு அண்ணாவை தேடி வெளிய வந்துட்டா..அதான் அவளை பிடிக்கப் போறேன்.
அதியை பத்திரமா வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நானும் கிளம்புகிறேன். மாமா வீட்ல இருக்கார்ல்ல? இல்லை அவரும் அதியாவை பிடிக்க வந்துருக்கார்.
வினு, யாரை நம்பி விட்டு வந்திருக்க? அறிவிருக்கா? ஆத்விக் சீற்றமுடன் கத்தினான். அவளிடம் சத்தமில்லாமல் இருக்க, “வினு” அதியா கத்தும் சத்தம் கேட்க, உத்தமசீலனும் “துரு” கத்தினார்.
ஹே, வினு…வினு..ஆத்விக் பதற, அவளிடம் சத்தமில்லை. அந்நேரம் முகமூடியுடன் வந்த ஒருவன் அவளை கொல்ல வந்த ஆட்களுடன் சண்டையிட்டான்.
“வினு, நீங்க போங்க” அவன் கத்த, மூச்சை இழுத்து விட்டு, அத்து ஒன்றுமில்லை. நான் நல்லா இருக்கேன். யாரோ முகமூடி போட்டவன் உதவுகிறான். நாங்க பசங்களை பார்க்க போறோம் அவள் சொல்ல, அதியாவும் உத்தமசீலனும் அவளிடம் வந்து அவளை திட்டினார்கள்.
சுவா, அத்தை, மாமா..நீங்க இருங்க. நானும் கவினை பார்க்க போகிறேன். அவன் இடத்தை பார்த்தால் ஏதாவது தெரிய வரும்.
அண்ணா, நானும் வாரேன்..
சுவா..
அண்ணா, ப்ளீஸ் கண்கலங்கினாள்.
விசயம் சீரியசா இருக்கு. அவனுக்கு ஏதும் ஆகாதுல்லப்பா..
மாமா, நாங்க இருக்கும் போது அவனை விட்ருவோமா?
வா சுவா, அத்தை மாமா இங்கேயே இருங்க. நாங்க கவினோட தான் வருவோம் என்று அவன் நகர்ந்தான்.
“வினுவை யாரு கொல்ல பார்க்கணும்?” ஆத்விக் சிந்தனையுடன் சென்றான்.
நேராக கவின் ஸ்டேசனுக்கு சென்றான். அங்கே இன்பராஜ் தோளில் சாய்ந்து அவர் மனைவி அழுது கொண்டிருந்தார். அவர் கண்கலங்க அமர்ந்திருந்தார்.
சேனல்கள் முழுவதும் ஸ்டேசன் புகுந்து, குழந்தையை கடத்தியது யார்? போலீஸை கொன்ற நபர் யார்? எதற்காக? மற்ற போலீஸார் எங்கே சென்றார்கள்? கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
ஆத்விக்கை பார்த்து, அவனிடம் ரிப்போர்டர் ஒருவர் ஓடி வந்தார்.
சார் இன்ஸ்பெக்டர் உங்க மச்சான்னு கேள்விப்பட்டேன். யார் சார் கொலை செய்திருப்பார்கள்? போலீஸ்காரர் ஒருவரின் குழந்தையையும் கடத்தி இருக்காங்க? இன்ஸ்பெக்டர் இல்லாதது தெரிந்து கொலை செஞ்சிட்டு போயிருக்காங்க. அவர் வீட்ல தூக்கிட்டு இருக்காரா? அவன் கேட்க,
“யோவ், நாங்களே அவரை காணோம்ன்னு தேடி தான் வந்திருக்கோம்” சுவேரா சினமாக கூறினாள்.
யார் சார் இந்த பொண்ணு? அவன் சுவேராவை ஜூம் செய்ய, கேமிராவை பிடுங்கிய ஆத்விக், விசயத்தை கவர் செய்வதில் மட்டும் தான் உங்க கவனம் இருக்கு. உண்மையிலே என்ன நடந்ததுன்னு தெரியணும்ன்னா என்னோட மச்சான் கவின் தான் வரணும்..
“எங்களை உள்ளே விடுங்க சார்” என்ற ஆத்விக்கிடம் இன்பராஜ் ஓடி வந்து அவனை உள்ளே இழுத்து சென்றார்.
சார், சைந்தவி மேம் கேஸ் தான். பிரச்சனைக்கே காரணம்..
ஏற்கனவே சொன்னான். யாருன்னு ஏதாவது ஆதாரம் இருக்கா சார்? ஆத்விக் கேட்க, அவர் தயங்கி வெளியே இருப்பவர்களை பார்த்தார்.
அந்த போலீஸார் சடலத்தை எடுத்து சென்றிருந்தனர். கொலையான இடம் என்பதால் தடுப்பு போடப்பட்டிருந்தது..
ஆரியன் சார் வந்தாங்களா? ஆத்விக் கேட்க, ஆமா சார் வந்தவரை போலீஸ் யாரும் உள்ளே விடலை. அதனால அவங்க மேலதிகாரியை பார்த்துட்டு கவின் சாரை தேட போவதாக சொன்னார்.
சார், அவன் யாருன்னு தெரியலை. இதற்கு முன் ஒரு சின்னக்குழந்தை கேஷ் வந்தது ஐந்து வயது குழந்தை.
“அஞ்சு வயசா?” சுவேரா கேட்டாள்.
ஆமாம்மா. அந்த குழந்தை ஆசிரமத்து குழந்தை. சிட்டி அவுட்டரில் அந்த குழந்தை ஒரு மலையடிவாரத்தில் இறந்து கிடந்தது. சின்ன ஆதாரம் கூட கிடைக்கலை. இப்ப வரை அந்த கேஷ் நிலுவைல்ல இருக்கு.
அதே போல உங்க பொண்ணை? ஆத்விக் கேட்க, அவர் அழ, சார் அழாதீங்க. கவின் அப்படியே விட்ற மாட்டார் என்ற சுவேரா, நீங்க அவரோட போனதா சொன்னாங்க.
ம்ம்..அதே மலையை சுற்றி ஆட்களை வைத்து தேடினோம் ஏதும் கிடைக்கலை. அந்த குழந்தையின் போஸ்ட் மார்ட்டம்ல்ல அவன் அந்த குழந்தையின் உடலில் சில துகள்களை பார்த்து அதை சர்ச் செய்து, அது போதை மருந்து என்றும் அவர் கண்கலங்க..அந்த பொண்ணை அவன் ரேப் செய்திருக்கான்னு தெரிய வந்தது.
“வாட்?” சுவேரா அதிர, அவரோ தன் மனைவி வெளியே அமர்ந்த இடத்தில் இல்லாமல் இருப்பதை பார்த்து ஓடி வந்தார். கதவில் சாய்ந்து கதறி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி..
ராஜ்..நம்ம பொண்ணையும் அவன்..அவன்..அழுதாள்.
இல்ல மேம், உங்க பொண்ணு பாதுகாப்பா உங்க கைக்கு வருவா என்ற சுவேரா,
அண்ணா, மாமாவை அழைத்துக் கொண்டே இரு. எடுத்தார்ன்னா..முதல்ல கவின் இருக்கும் இடம் தெரிந்ததான்னு கேளு இல்லை அவர் எண்ணை டிராக் செய்யச் சொல்லு..
நான்..நான்..அவரிடத்தில் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்..
வேண்டாம்மா. கவின் சாருக்கு அவர் பொருளை கலைத்தால் பிடிக்காது.
“ஆமா, அவருக்கு என்ன தான் பிடிக்கப் போகுது” என்று அலுத்துக் கொண்டு, “திட்டுவாரா அவ்வளவு தான?” சுவேரான்னு என்னை சொல்லிடுங்க. திட்டுனா திட்டட்டும்..என்று பொரிந்து தள்ளி விட்டு கவின் மேசையையும் அவன் பொருட்களையும் பார்த்தாள்.
“இவ்வளவு சீரியசான விசயத்தை வெளியே சொல்லாமல் தனியே எப்படி சமாளிப்பது? இதில் இந்த சைந்தவி இறப்பு வேற” கவினை திட்டிக் கொண்டே ஆரியனை அழைத்தான் ஆத்விக்.
அவன் அலமாரியில் வைத்திருந்து கேஸ் பைல்லை ஒவ்வொன்றாக பார்த்தாள். வேலூர் கொலை வழக்கு இருப்பதை பார்த்து, அங்கிருந்து வந்த பின்னும் பர்சனலாக பார்க்கிறார் போல..எண்ணிக் கொண்டே அவனது மேசையின் கீழிருந்த டிராவரின் அடிப்பக்கம் ஏதோ இருக்க, அதை விலக்க, மூன்று பைல்கள் கீழே விழுந்தது.
அதில் அந்த ஆசிரம ஐந்து வயது பொண்ணை எப்படி கடத்தி இருப்பான்? எப்படி ரேப், கொலை செய்திருப்பான் என கவின் அவன் சிந்தனையில் திரட்டிய தகவல்கள் இருக்க..அதனூடே மேப் ஒன்று இருந்தது.
“அண்ணா” சுவேரா ஆத்விக்கை அழைக்க, அவன் பதறி வந்தான்.
இந்த மேப்..அந்த மலையை சுற்றியுள்ள கிராமம்..இதிலுள்ள எவனோ ஒருவன் தான் குற்றவாளியாக இருப்பான்.
இன்பராஜ் உள்ளே வந்து, இதை சுற்றி பதினொரு கிராமம் இருக்கு சார். எப்படி அவர் தனியே கண்டுபிடிப்பார்? நாம மேலதிகாரியிடம் விசயத்தை சொன்னால் அவங்க ஆட்களை உதவிக்கு அனுப்புவாங்க..
அது சரிவராது என்ற ஆத்விக்கிற்கு துருவினி அழைத்தாள்.
என்ன இவளுக்கு? கடுப்புடன் ஆத்விக் அலைபேசியை எடுக்க, அத்து..அண்ணா அவங்க டீமோட ஏதோ மலைப்பகுதிக்கு போறானாம்..
“ஓ.கே. நீங்க பாதுகாப்பா இருங்க” என்ற ஆத்விக், வினு உன்னை காப்பாற்றிய முகமூடிக்காரன் அங்கே இருக்கானா?
“பார்க்கிறேன் அத்து” துருவினி வெளியே வர, ஸ்டைல்லாக மரத்தில் சாய்ந்து கொண்டிருந்தவன் முகத்தை வேகமாக மறைத்தான்.
ஆமா அத்து…பக்கத்துல்லவா இருக்கான்.
அத்து, அவன் பாதுகாப்புக்காக இருப்பது போல இருக்கு. அன்று தாரா பங்சன்ல்ல பார்த்தவனாக இருக்குமோ?
“ஏய் நில்லு” துருவினி அவனை நோக்கி செல்ல, அவன் பைக்கை விரட்டி சென்று விட்டான்.
பைக்கா?
ஆமா
என்ன மாடல், நம்பர் ஏதாவது பார்த்தாயா? ஆத்விக் கேட்க, அவள் பார்த்ததை கூறினாள்.
சூப்பர் வினு, நீங்க வெளியே வர வேண்டாம். கவனமா இருங்க. அவன் கொல்ல கூட வந்திருக்கலாம்..பார்த்து..என்று அலைபேசியை துண்டித்தான்.
“சுவா, கொலைகாரன் மலைப்பகுதியில் தான் இருக்கான். லெட்ஸ் கோ” ஆத்விக் அவளையும் இழுத்து செல்ல, சுவேரா அவன் கையை விட்டு இன்பராஜ் மனைவியிடம் வந்து, உங்க பொண்ணுக்கு ஏதும் ஆகாது. நாங்க கூட்டிட்டு வாரோம் என்று ஆத்விக்குடன் பைக்கில் ஏற, பத்திரிக்கையாளர்கள் அவர்களை சூழ்ந்தனர்.
“ஹேய்..யாரையும் ஏதும் செய்யாத” ஆத்விக் கத்த, எல்லார் கவனமும் திரும்பும் நேரத்தில் இருவரும் பைக்கில் சென்று விட்டனர்.
மலையடிவாரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஆரியன் தன் ஆட்களுடன் மேலே ஏறினான். எல்லாரும் சிரத்தையுடனும் வேகமுடன் செயல்பட்டனர். உச்சிக்கு சென்றனர். கவின் மட்டுமல்ல யாருமில்லை. யோசனையுடன் ஆரியன் நின்றான்.
அண்ணா, இந்த போஸ்ட் மார்ட்டம்ல்ல இந்த மலையின் பாதியளவிலிருந்து தான் குழந்தை கீழே விழுந்ததாக போட்டிருக்கு.. கவின் ஏதோ மார்க் செய்திருக்கார் புரியலை சுவேரா ஆத்விக் பின் அமர்ந்து அதை பார்த்து பேசிக் கொண்டே வந்தாள்.
அப்படின்னா எனக்கு புரியலை ஆத்விக் சொல்ல, அண்ணா மலைகிட்ட வந்துட்டோம். நிறுத்தாத. அதை முதல்ல நன்றாக சுற்றி கவனிக்கலாம். நமக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்கு என்று சுவேரா சொல்ல, இருவரும் மேலிருந்து கீழாக கவனித்தனர்.
அண்ணா, அங்க ஏதோ துளை தெரியிற மாதிரி இருக்கு. பைக்கை நிறுத்து என்று சுவேரா சொல்ல, இருவரும் இறங்கினார்கள்.
அண்ணா, அது துளையில்லை குகை. பாரு கவின் இந்த மேப்ல்ல அந்த குகையை வட்டமிட்டு வச்சிருக்கார்..
எதை வட்டம் போட்ருக்கார்ன்னு புரியாமல் இவ்வளவு நேரம் வீணாக்கி இருக்கோம். வா அண்ணா..எப்படி ஏறுவது?
அவன் பைக்கிலிருந்து கயிற்றையும் ஏற ஏதுவான உபகரணங்களையும் எடுத்தான்.
எப்புட்றா?
“அது அப்படி தான்” ஆத்விக் சொல்ல, வா போகலாம்.
சுவா, நீ இங்கேயே இரு.
நோ..நானும் வருவேன்.
ஏறணும்..அவன் சொல்ல, என்னால முடியும் என்று அவளது மேல்ச் சட்டையை கழற்றி இடையில் கட்டினாள்.
தலையில் அடித்த ஆத்விக், அவள் கட்டியதை அவிழ்த்து விட்டு, அவளது சட்டை, பேண்ட்டையும் சேர்த்து பெல்ட்டால் இறுக்கினான். பின் இருவரும் ஹூக்குடனாக கயிற்றை இடையில் கட்டி ஏறினர்.
ஆத்விக் வேகமாக ஏற, “இருடா நானும் வாரேன்” என்று அவளும் ஏற, “நீ முன் போ” ஆத்விக் அவளுக்கும் உதவி அவனும் ஏறினான்.
ஆரியனும் அவன் நண்பர்களும் இப்பொழுது தான் அந்த குகையமைப்பை கண்டுபிடித்தனர். அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.
மலையின் இரு பக்கத்தில் குகை அமைப்பு இருப்பதை இரு டீமும் கவனிக்கவில்லை..
குகையின் உள்ளே கவின் கையில் பாப்பாவுடன் நான்கு ஆட்களுடன் போராடிக் கொண்டிருந்தான். அந்நேரம் அவனுக்கு உதவியாக வந்தான் விழியான்.
“கவின், நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்” அவன் சொல்ல, “யாருடா நீ?” நால்வரில் ஒருவன் விழியானை தாக்க, அவனும் அவர்களும் ஈடாக சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் மாஸ்க்கில் ஒருவன் கையை வைக்க, அவனை அடித்து தள்ளி விட்டு, “கவின் போ” கத்தினான்.
அவர்களில் ஒருவன் விழியானை கத்தியால் குத்த வந்தான். அச்சமயம் ஆரியன் அவனை தாக்கியவன் காலில் சுட்டான்.
கவினருகே சென்ற விழியான், “போ சீக்கிரம்” அவனை தள்ள, அவர்களில் மற்றவன் விழியானை தாக்க வந்தான். அதற்குள் மியாவ்..கத்திக் கொண்டே அவன் மீது பாய்ந்து அவனை பிராண்டியது சார்லி.
“சார்லி, உன்னை வராதன்னு சொன்னேன்ல்ல” விழியான் சொல்ல, டேய், இவன் பூனையோட பேசுறான்.
சார்லி சினமுடன் “மியாவ்..மியாவ்” கத்திக் கொண்டே ஒருவன் மீது பாய்ந்தது.
ஆரியன் நண்பர்கள் வந்து விட, கவின் நிற்கும் இடத்தை பார்த்து ஒருவன் அவனை கீழே தள்ள, குழந்தையை அணைத்தவாறு அவன் மலையிலிருந்து விழ, அவன் கையை இறுக பற்றினான் விழியான்.
முதல்ல குழந்தையை பிடி கவின் பாப்பாவை அவனிடம் எக்கி காட்ட, அவனால் பிடிக்க முடியவில்லை. குழந்தையை பிடித்து அவன் கவின் கையை தெரியாமல் விட்டு, “கவின்” கத்தினான்.
சத்தம் கேட்டு ஏறிக் கொண்டிருந்த சுவேராவும் ஆத்விக்கும், கவின் விழுவதை பார்த்து, “மாமூ” என சுவேரா கயிற்றை ஒரு கையால் பிடித்து அவன் கையை பிடிக்க, “டேய் மச்சான்” ஆத்விக் பதறியவாறு சுவேராவை பார்க்க, அவளும் தொங்கிக் கொண்டிருந்தாள்.
எல்லாரும் அவர்களை எட்டி பார்த்தனர்.
“ரா, என்ன பண்ற? விடு” கவின் அவள் கையை எடுக்க முயன்றான்.
“கவின், அவளோட கையை பிடி. விட்ட நானும் விட்ருவேன்” ஆத்விக் சொல்ல, சாக போட்டி போடுறீங்க? மாமா…இந்த லூசுக கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க..தலையை உயர்த்தி ஆரியனை பார்த்தாள்.
லூசா? கவின் கேட்க, உயிரே போகப் போகுது என்ற சுவேரா கவினை பார்த்து, ஹீரோ மாதிரி வந்துட்டு என்னை ஜூரோவக்கா தான் இந்த பிளானா?
“ஆஹ, உன்னை நானா வரச் சொன்னேன்?” அவன் கேட்க, “ஏன்டா எங்க நின்னு சண்டை போடுறீங்க?” பிரகாஷ் எட்டிப் பார்த்து இருவரிடம் கேட்க, ஆரியன் இருவரையும் முறைத்தான்.
“மாமா, குழந்தை எங்க?” சுவேரா கேட்க, விழியான் அவளிடம் குழந்தையை காட்டினான்.
மேலிருந்து கயிற்றை போட்டு விழியான் அவளை பார்த்தான்.
ஏய், நீ யாரு? மாமா அவன் முகமூடியை கழற்றுங்கள். யாருன்னு பார்க்கலாம்.
விழியான் அதிர்ந்து வேகமாக பின் நகர்ந்தான்.
ஆரியா, இங்க முதல்ல இவனுகள பாரு விஷ்ணு கத்தினான். அவன் போராட இவர்கள் சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அய்யய்யோ, பிரகாஷ், லோகேஷ், தருண் அவனுக்கு உதவ சென்றனர்.
“மாம்ஸ், இவங்கள நான் பார்த்துக்கிறேன். நீங்க இவனுகள அழைச்சிட்டு போங்க” விழியான் கூறிக் கொண்டே நகர்ந்தான்.
“நீ யாரு? என்னை எதுக்கு மாம்ஸூன்னு சொல்ற?” ஆரியன் கேட்டான்.
“என்னால இப்ப யாருன்னு சொல்லமுடியாது” என்று அவன் குழந்தையை ஆரியன் கையில் கொடுத்து விட்டு, சார்லி சத்தமிட்டான். அந்த பூனைக்குட்டி அவன் கையில் ஏறியது.
கயிற்றால் செய்யப்பட்ட ஏணி ஒன்றை மேலிருந்த கல்லில் கட்டி விட்டு ஏணியை நீளமாக தொங்கவிட்டு கவின், ஆத்விக், சுவேராவை பார்த்தான்.
கவின் முதல்ல இறங்குங்க என்றான்.
எங்களை உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு. யாரு நீ? சுவேரா கேட்க, நீ தப்பிப்பதை விட சாவது தான் முக்கியம்ன்னா. எல்லாரும் தொங்குங்க. நான் இறங்குகிறேன் அவன் காலை ஏணியில் வைக்க, நான் இறங்குகிறேன் கவின் முதலில் இறங்கினான்..இவ்வளவு பெரிய ஏணி எப்படி அரேஞ்ச் பண்ண முடியும்?
ஆர்மி டீம் வச்சிருப்பாங்க அவன் சொல்ல, ஓ..சுவேரா அவன் கண்ணை பார்க்க, விழியான் முகத்தை திருப்பினான். அவள் ஆத்விக்கை பார்க்க, அவன் யோசனையுடன் நான் எதுக்கு நிற்கணும்? மாமா குழந்தையை கொடுங்க. நான் இறங்குகிறேன் என்று ஆத்விக் சத்தமிட்டான்.
ஆரியன் குழந்தையுடன் வந்து அவனிடம் குழந்தையை கொடுக்க பாப்பா மயக்கத்தில் இருந்தாள். அவளை தோளில் போட்டு கயிறு ஒன்றை அவனுடன் குழந்தையையும் சேர்த்து கட்டி கீழே இறங்க ஆயத்தமானான்.
“டேய் அண்ணா, என்னை விட்டு போகாதடா” சுவேரா சத்தமிட, அதான் மாமா இருக்கார்ல்ல.
அவரும் பாதுகாப்பாக இருக்கார் அவள் சொல்ல, ஏன்ம்மா? ஆரியன் பாவனையில், “கீழே பாதாளம் போல இருக்கு. உனக்கு பயமாகவே இல்லையா?” விஷ்ணு கேட்டான்.
அவள் கீழே பார்த்து கண்ணை மூடி திறந்து, ஆரவ்கிட்ட அடிவாங்குவது போல இது பயங்கரமாக இல்லை.
உன்னோட அண்ணனை உனக்கு அவ்வளவு பிடிக்குமா? லோகேஷ் கேட்க, மனுசனுகளாடா நீங்க? நான் உயிரை கையில பிடிச்சு தொங்கிட்டு இருக்கேன். என்னோட ஆரவ் இருந்தா என்னை இப்படி தொங்க விட்ருப்பானா?
“சுவா, உன்னோட எமோசன் பத்தாது. இன்னும் முயற்சி செய்” ஆத்விக் சொல்லி புன்னகையுடன் இறங்கினான்.
நான் நிஜமாகவே ஃபீல் பண்றேன் என்று அவள் கயிறிலிருந்து கையை எடுக்க அனைவரும் பதறி விட்டனர். விழியான் ஏணியை ஒரு கையிலும் சுவேராவை ஒரு கையிலும் பிடித்து இறங்கினான். எல்லாரும் ஷாக்காக அவனை பார்த்தனர். அவளும் இதை எதிர்பார்க்கவில்லை.
“யாரு நீ?” அவள் அவனது முகமூடியை எடுக்க கையை கொண்டு வந்தாள்.
கையை வச்சிட்டு சும்மா இரு. இல்லை கீழே விட்டு போய்கிட்டே இருப்பேன்.
“மறுபடியும் சொல்லு?” அவள் கேட்க, அவன் அமைதியாக அதே நேரம் வேகமாக இறங்கினான்.
“சொல்லு?” சுவேரா கேட்க, இருவரும் நெருக்கமாக வருவதை பார்த்த கவின் விழியானை எறிப்பது போல பார்த்தான்.
“சொல்லு இல்லை எல்லாருக்கும் தெரியுமாறு செய்திருவேன்” சுவேரா அவனை மிரட்ட.. அவளை கீழே விட்டான். தரையிலிருந்து எட்டடி தான் இருக்கும். அவள் பயத்தில் கத்திக் கொண்டே கவின் மீது பொத்தென விழுந்தாள்
தரையில் இறங்கிய விழியான் இருவரையும் பார்த்து, “வாழ்த்துக்கள்” என்றான்.
“மியாவ்” சார்லி அவனது சட்டையிலிருந்து தலையை நீட்ட, கவினை தள்ளி விட்டு வேகமாக அவனிடம் சென்று..
வாவ்..எவ்வளவு க்யூட் பூனைக்குட்டி..சுவேரா அவனை பார்த்து விட்டு, பூனைக்குட்டி அவள் தூக்க வர, “சார்லி” உள்ள போ அவன் சொல்லவும் அது அவன் சட்டைக்குள் சென்றது.
என்ன? சார்லியா? பூனைக்குட்டி…பூனைக்குட்டி என்ற சுவேரா..ஏய் நீ நீ..ஆத்விக்கை பார்த்து, அண்ணா நம்ம லாவா சொன்னால அவள் பேசும் போதே அவன் வேகமாக அவன் பைக்கை நோக்கி ஓடி விரைந்து எடுத்து சென்றான்.
ஏய்..நில்லு..நில்லு அவள் கத்த, என்ன சுவா?
அண்ணா, நான் கண்டுபிடிச்சிட்டேன். கண்டுபிடிச்சிட்டேன் குதித்தாள் சுவேரா.
“ஏய், எதுக்கு குதிக்கிற?” கவின் சத்தமிட்டான்.
யோவ், நகரு என்று கவினை நகர்த்தி, அண்ணா லாவா சொன்னால்ல அவன் இவன் தான்.
தெளிவா சொல்லு சுவா..
லாவா லவ் பண்றவனை கண்டுபிடிச்சுட்டேன். இந்த முகமூடி போட்டிருப்பவன். அன்றும் இவன் தான அண்ணா காப்பாற்றினான்..
ஆமா, ஆனால் சுவா…வினுவையும் முகமூடி போட்டிருந்தவன் தான் காப்பாற்றி இருக்கான். முகமூடிக்காரன் ஒருவன் இல்லையா? இருவனா? இவனுக யாரு? எதுக்கு நமக்கு உதவுறானுக?
அதை விடு. இவன் கையில தான சார்லி இருக்கான். இவனை தான் லாவா காதலிக்கிறாள். இரு என்று அவள் அலைபேசியில் சாய்யை அழைக்க, அதை பிடுங்கி கட் செய்தான் கவின்.
“எதுக்கு கட் பண்ணீங்க?” கோபமாக கேட்டாள்.
“இவனை பற்றி எதுவும் தெரியாமல் அவளை என்கரேஜ் பண்ணாத” கவின் சொல்ல, ஆமா சுவா எனக்கும் இது தான் சரின்னு படுது.
அய்யோ அண்ணா, நம்ம லாவா இவன் முகத்தை பார்த்திருப்பால்ல? அவளிடம் கேட்டால் இவனை பற்றி தெரியும்ல்ல?
அவளுக்கு இவன் பற்றி எதுவும் தெரியாதுன்னு தான சொன்னா?
இருக்கலாம். முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். பின் அவன் பற்றிய விவரத்தை சேகரித்து விடலாம்.
வா..நாளை பேசலாம். அதுவரை அவளிடம் சொல்லாத.
நான் சாய்யிடம் சொல்ல தான் கால் பண்ணேன். தாரா பங்சன் புட்டேஜ்ஜை எடுத்தால் வீடியோவே கிடைக்கும்.
ஆமால்ல..ஆத்விக் சொல்ல, கவின் இருவரையும் முறைத்தான்.
அவனை பற்றி தெரிந்து என்ன ஆகப் போகுது?
லாவா லவ்வுக்கு உதவும் என்று சுவேரா அவனை முறைக்க, ஆரியன் அவர்களை பிடித்து வந்தான்.
இந்த பாப்பாவுக்கு மூச்சு இருக்கு. வேற என்ன செஞ்சான்னு தெரியலை ஆத்விக் சொல்ல, முதல்ல எல்லாரும் கிளம்புங்க என்று கொலையாளிகள் கையில் கைவிலங்கை மாட்டி கிளம்பினார்கள்.
குழந்தையை கவின் வாங்கிக் கொண்டு தருணுடன் அவர்கள் காரில் ஏறினான்.
ஆத்விக் பைக்கில் ஏறிய சுவேரா, அண்ணா தூக்கமா வருது..
இறுக்கமா என்னை பிடிச்சுக்கோ. கொஞ்ச நேரம் தான் போயிடலாம் பைக்கை விரட்டினான். காரிலிருந்தவாறு கவின் இருவரையும் பார்த்தான்.
ஆரியன் வந்த அவர்கள் துறையின் காரில் குற்றவாளிகளை ஏற்றினார்கள். அவர்கள் கையில் விலங்கை மாட்டி இருந்தனர்.
நேராக கவின் ஹாஸ்பிட்டல் செல்ல, ஆரியன் கவினை அழைத்துக் கொண்டு அவனுடன் அவன் ஸ்டேசன் சென்றான். பாப்பாவை ஹாஸ்ப்பிட்டலில் அழைத்து சென்றனர். அங்கே இன்பராஜூன் அவர் மனைவியும் வந்தனர்.
தன் மகளை கண்ணால் கண்ட பெற்றோர் ஆத்விக்கையும் தருணையும் கையெடுத்து கும்பிட்டனர்.
நாங்க மட்டுமல்ல பாப்பாவை காப்பாற்ற ஆரியன் சார் டீமும் உதவினாங்க தருண் சொல்ல, எங்க பொண்ணுக்கு ஏதுமில்லைல்ல சார்? கேட்டார்.
சரியா தெரியல. எனக்கு என்னமோ மயக்க மருந்தை குழந்தைக்கு கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் ஆத்விக் சொல்லி, இருங்க மாமாவை விட்டு விசாரிக்க சொல்லலாம்..என்று அலைபேசியை எடுத்தான்.
ஸ்டேசனுக்கு வந்தவுடன் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர். குழந்தையை கடத்தியவர்களை பிடித்து விட்டோம் என்று குற்றவாளிகளை முன் நிறுத்தினர்.
கவினை பிடித்த பத்திரிக்கையாளர்கள் அவன் ஸ்டேசனில் நடந்த போலீஸை கொன்றதை பற்றி கேட்டனர்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவன் உள்ளே சென்று பார்த்தான். வருத்தமுடன் அவன் அமர, ஆரியன் அவனருகே வந்து அமர்ந்தான்..
அண்ணா, நான் இல்லாத நேரம். போலீஸை..அவனை சும்மா விடக் கூடாது கவின் சீற்றமுடன் சொன்னான்.
சத்தம் போடாத கவின். கோபம் நம்மை நாமாக இருக்க விடாது. நீ அப்படி தான் சுவா விசயத்துல்ல நடந்துக்கிட்ட. எதையும் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம்.
ம்ம்..
இவனுகள எங்க கஷ்டடிக்கு எடுத்துட்டு போறோம். அப்ப தான் முதலில் இறந்த குழந்தைக்கான நியாயத்தை வாங்கித் தர முடியும்.
இந்த போலீஸ் இறந்த கேஷ் சைந்தவி கேஷா?
ம்ம்..யாரை பிடிச்சு வச்சிருந்த?
அண்ணா, அவன்..கவின் தயங்கினான்.
அவினாஸ் சம்பந்தப்பட்டவனா?
இல்லண்ணா, நான் நினைச்சது தப்பு. அவன் சைந்தவியை உண்மையாகவே காதலித்து இருந்திருக்கான். அவன் அட்டாப்சி டாக்டர். அவனுக்கும் அவன் துறையில் நல்ல பெயர் இருக்கு. திருமணம் மட்டும் அவன் செய்து கொள்ளவில்லை. அவன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை அண்ணா..
ம்ம், எதையும் நன்றாக விசாரித்து சொல்லணும். யார் மீது சந்தேகம் இருந்தாலும் வெளியே சொல்லாமல் அவனை கண்காணித்து செயல்படணும்.
அண்ணா, அந்த முகமூடி போட்டவன்?
உனக்கு பொறாமையா இருக்கா? ஆரியன் புன்னகைக்க, நான் எதுக்கு பொறாமைப்படப் போறேன்?
அண்ணா, அப்ப இவன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? கவின் கேட்க, தெரியும் உறுதியாக சொன்ன ஆரியன், சுவேராவிடம் மனதில் இருப்பதை சொல்லிடு. ஈகோ, கோபம்ன்னு விட்றாத. அத்து அவளுக்கு மாப்பிள்ளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.
கவினுக்கு பெண்களிடம் அதிகம் பேசத் தெரியாது. சிறுவயது பழக்கத்தால் அதியாவிடம் சாதாரணமாக பேசி இருப்பான்.
கவின் சீக்கிரம் காரணமானவனை கண்டுபிடி..
அண்ணா, இவனுடன் சைந்தவி பழகி இருந்தாங்க. அதனால் விசாரிக்க அழைத்தேன். ஆனால் அவ திமிறாக பேசினான். அவனிடம் பேசிய சுதாகர் சாரை அடிக்க வந்தார். போலீஸ் ஸ்டேசன் வந்து இப்படி அவன் போலீஸை அடித்தால் எங்களுக்கு என்ன மரியாதை? அதான் அவனை உள்ளே வைத்தேன். பார்த்தால் இவன் அந்த ஜஸ்ட் ஒன் பார்ட்டி ஹால் ஓனர் மகனாம்..
அவனை வெளியே எடுக்க கொலை செய்யும் வரை போறாங்கன்னா…இதுல்ல அவங்க சம்பந்தப்பட்டது போல தான தோணுது..
ஸ்டேசன் சிசிடிவியை என்று ஆரியன் அதை பார்க்க, அடித்து தொங்க விட்டிருந்தனர்.
கவின் எதையும் பொறுமையா எதிர்கொள். அவசரப்பட்ட உன்னோட வேலை கூட போயிரும். அப்புறம் உன்னோட பெற்றோர் பயத்தில் இருப்பாங்க. முதல்ல அவர்களிடம் பேசு..
ம்ம்..
அண்ணா, இதுக்கு தான் நான் ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் கடிகாரத்தில் சிசிடிவி பொருத்தி இருந்தேன் என்று எழுந்து அதை எடுத்து ஆன் செய்து பார்த்தனர்.
பத்திரிக்கையாளர்களிடம் இதை போட்டு காட்டிட்டு, “உன்னோட விசாரணையை தீவிரமாக ஆரம்பி” ஆரியன் வெளியே வர, கவின் அவன் பின்னே வந்தான். இருவரும் தலையசைத்து செல்ல, அவன் மீதுள்ள எல்லாரின் தவறான பேச்சையும் ஆஃப் செய்தான். குழந்தையை கடத்தி ரேப் செய்தவர்களிடம் வாங்க வேண்டிய விவரங்களை வாங்கி பின் பார்ட்டி ஹால் ஓனரை அவர் மகனையும் கைது செய்து, விசாரிக்கத் தொடங்கினான்.
இடையே இன்பராஜூக்கு கால் செய்து பேசினான்.
பாப்பாவிற்கு கொடுக்கப்பட்ட மருந்து போதை மருந்து. சிறிய அளவானாலும் இரத்தத்தில் கலந்து விட்டதால் அதை செய்ய செய்ய மருத்துவர்கள் சிகிச்சை தொடங்குவதாக சொன்னார்கள்.
இல்ல, இன்னும் தெரியல என்று மருத்துவர் கூறியதை சொல்ல, “அண்ணா, அந்த குட்டிப்பொண்ணு சரியான பின் போகலாமா? அவ அம்மா எங்கே?” பைக்கிலிருந்து இறங்கினாள். ஆத்விக் கையை காட்ட, அவருக்கு ஆறுதலாக அவரருகே அமர்ந்து கொண்டாள். ஆத்விக் அவளை பார்க்க, சார் கவின் சார் உதவிக்கு நான் கிளம்பணும்..
“சுதாகர் சார், விசயத்துல்ல உதவியா இருங்க” தருண் இன்பராஜ் சொல்ல, சாரி சார் உங்களுடன் இருக்க முடியலை. என் மச்சானுக்காக நான் இருக்கேன் ஆத்விக் அவரருகே வந்து அமர்ந்து, சுதாகர் பற்றி விசாரித்தான். அவன் ஒரு பார்வை பார்த்து விட்டு சுவேரா இன்பராஜ் மனைவி கையை பிடித்தார்.
சற்று நேரத்தில் அவர்களின் உறவினர்கள் வந்து விட, பாப்பாவிற்கு பிரச்சனையில்லை என்றவுடன் சுவேராவை ஆத்விக் வீட்டிற்கு அழைத்து சென்றான். அன்றைய இரவு உணவு, தூக்கம் அனைத்தையும் தொலைத்து தங்கள் வேலையை சிறப்பாக பணியாற்றினார்கள் அவர்கள்.