“ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில் எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச அப்பறம், ம்ப்ச்” என்றவள்
“நீ தானே இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணின.. இப்போ வந்து பிடிச்சிருக்கா? பிடிக்கலையான்னு குழப்பி விடுற” என சத்ரின் ஆர்வம் நிறைந்த விழிகளை குழப்பமாய் பார்த்துக் கேட்டாள் சாத்வி
‘பிடிக்கவில்லை’ என்ற சாத்வியின் வார்த்தையில் கற்பனை குதிரைகள் எங்பெங்கோ பறந்தது. சாத்வியின் எந்த பேச்சையும் காதில் வாங்காதவனுக்கு கடைசி பேச்சுக்கள் மட்டுமே காதில் விழ
தலையை உலுக்கி “ஆமாம் ஆமாம் இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்” என தனக்கும் சேர்த்து கூறிக் கொண்டு… இதற்கு மேல் இவளை யோசிக்கவே விடக் கூடாது என முடிவெடுத்து, ரொம்ப யோசிக்காத…. உன் கல்யாணம் என்னோட பொறுப்பு… நீ கண்டதை போட்டு யோசிச்சு… நீயும் குழம்பி…. இப்போ என்னையும் குழப்பி விட்டுட்ட பாரு” என இலகுவாய் பேச்சை திசை திருப்பி தன் திருட்டு விழிகளை அவளிடமிருந்து மறைத்தான்.
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் சத்ரி பிடிக்கலை”என ஆழ்ந்த குரலில் கேட்க…
சட்டென அவளை திரும்பி பார்க்க… அவள் குரலுக்கு இணையாக கண்களும் கலங்கி இருந்தது..
“ஹேய் சாவி.. பயப்படாத… நான் இருக்கேன்ல…நான் இருக்கும் போது… நீ அழவும் கூடாது…. பயப்படவும் கூடாது… எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடு“ என தரையில் அமர்ந்திருந்த அவளின் அருகில் சென்று அமர்ந்து ஆறுதலாய் பேசினான்.
சத்ரியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கலங்கிய கண்கள் தாமாகவே உடைப்பெடுக்க.. அவன் மடியில் சரிந்து அப்படியே குப்புற படுத்துக் கொண்டாள் நீர் நிறைந்த கண்களுடன்.
அவளின் செயலை எதிர் பாராதவன் திடுக்கிட்டான். அவள் அழுவதையும் உணர்ந்து மனம் ரணமானது.
“அழாதே சாத்வி.. அழறதுக்கு காரணமே இல்லாதப்போ, எதுக்கு அழுகையை தேடுறலநீ? என் மேல் நம்பிக்கை இருக்குன்னு நீ தானே சொன்னப்பறம் எதுக்கு பயம்? எதுக்கு அழுகை.“ என அவளை கிட்டதட்ட திட்டினான்…
சத்ரின் சமாதானம் எதுவும் எடுபடாமலே போனது அவளிடம். கண்ணீரும் நின்றபாடில்லை.
இவள் அழுவதை தடுக்கமுடியாமல், அடக்கி வச்சு என்ன ஆகப்போகுது அழட்டும் என சாத்வியை அழ விட்டான், அப்படியாவது அவள் துன்பம் குறையாதா… என!
அழுகை மட்டுபட வேண்டும் என சிறிது நேரம் அவளது சுருள் சுருளான கேசத்தினுள் தன் கைகள் கோர்த்து வெகு நேரமாய் வருடி விட கொடுத்தான்.
சிறிது நேரத்தில் அவளது அழுகையும் சற்றே மட்டுப்பட்டதால் அவனை விட்டு எழுந்து அமர்ந்தாள்.
கண்கள் அழுகையினால் சிவந்து கிடந்தது சாத்விக்கு. அவள் கண்களை தன் கைகளாலேயே அழுத்தமாய் துடைத்து விட்டான் சத்ரி?
“எதுக்கு இவ்வளவு பயம்! எவ்வளவு தைரியமானவள்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்! நீ இவ்வளவு அழு மூஞ்சியா இருக்கே ” என கிண்டல் பேச
அதற்கு பதில் கூறாமல் “ இந்த கல்யாணம் நடந்தா நான் சந்தோஷமா இருப்பேனா சத்ரி நான் இழந்த அத்தனை சந்தோஷமும் திரும்ப கிடைக்குமா” என கண்களில் ஆவலை தேக்கி கேட்டாள் சாத்வி….
அவளின் குரல் ஏதோ ஒன்றை தூண்ட “நிச்சயமா, நீ உன் வாழ்க்கையில் இழந்த எல்லாமே திரும்ப கிடைக்கும் சாத்வி… கண்டிப்பா சந்தோஷமா இருக்கத் தான் போற..” என சத்தியம் செய்யாத குறையாய் சொன்னான்.
“சத்தியமா” என சாத்வி வாய் விட்டே கேட்க… சிறு வயது சாத்வி தான் அவனின் கண் முன்னால் தெரிந்தாள்…
“ என் மேல் சத்தியமா” என சத்ரி அவன் தலையில் கை வைக்க போக… அதை தடுத்து அவன் கைகளை தன் தலையில் வைக்க…
அவனின் உள்ளங்கை அப்படியே அவள் தலை மேல் பரவி அழுத்தியது
“உன் மேல் சத்தியமா… இந்த கல்யாணம் உனக்கு சந்தோஷத்தை மட்டும் தான் கொடுக்கும்..” என அவளுக்கு எந்த வார்த்தைகளை சொன்னால் புரியுமோ…. சரியாக அந்த வார்த்தைகளை அந்த செய்கையை உணர்த்தினான்… ஒரு சத்தியத்தால்.
ஆனால் அதையும் தகர்த்தெரிந்தாள் சாத்வி… காதலில் உருகிக் கறைந்த பழைய சாத்வியாய் உயிர்தெழ… கர்வம் கொண்ட சாத்வி சத்ரியிடம் மடிந்து தான் போனாள்.
“கல்யாணம்…. அதில் வர்ர சந்தோஷம் எல்லாம் உன்னை விட பெரிசா தெரியலை எனக்கு” என அழுத்தமாய் கூறி பின் நிதானமாய் அவன் விழிகளுக்குள் ஊடுருவி “நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா… நீ தான் என்னை சந்தோஷமா பார்த்துப்ப” என வெகு நாட்களாய் இல்லையில்லை வெகு வருடங்களாகவே மனதினுள் பதிந்து மறைந்து போன ஒன்றை இன்று தோண்டியெடுக்க
அதிர்ந்து போன சத்ரி அவள் தலையில் இருந்து கைகளை உருவிக் கொண்டான்.
“சொல்லு சத்ரி…. பதில் சொல்லு” என கேட்க…
கரண்டில் கை வைத்தார் போன்று உணர்வில்லாது நின்றவன் அவள் முன் தன் தடுமாற்றத்தை காட்டாது.. “ என்னை நம்புறியா… இல்லையா….” என
“திரும்ப திரும்ப ஒரே வார்த்தையை கேட்டுட்டே இருக்கணுமா.. நீ எத்தனை தடவை கேட்டாலும் பதில் இது ஒன்னு தான்… உன் மேல் நம்பிக்கை இருக்க போய் தான் ரமேஷூக்கு சரின்னு சொன்னேன்…. ஆனால் ரமேஷை பிடிக்கலை.. உன்னை தான் பிடிச்சிருக்கு… ” என கர்வம் கொண்ட சாத்வியாய் போட்டு உடைக்க…
“என் மேல் நம்பிக்கை இருக்கு இல்லையா… அந்த நம்பிக்கையை அப்படியே இழுத்து பிடி…. உன் கல்யாணம் முடியிற வரை… கல்யாணம் பிடிக்கலை, ரமேஷை பிடிக்கலைன்னு சும்மா உளரிட்டே இருக்காமல் கல்யாணப் பெண்ணாய் லட்சனமாய்… இரு.. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு கல்யாணத்திற்கு.. கல்யாண பத்திரிக்கை வந்துடுச்சு… உன் அப்பா அடிச்ச பத்திரிக்கை இது… இதில் ப்ரண்ட்ஸ் கார்டு இருக்கு…. சீக்கிரம் கொடுக்க வேண்டியவங்களுக்கு கொடுத்திடு” என அவள் கைகளில் திணிக்க…
கைகள் பத்திரிக்கையை சுமந்த வண்ணம் “பிடிக்கலைன்னு சொல்லியும் இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு நிக்கிற… அப்பா மாதிரி தான் நீயும்.. உனக்கும் அவருக்கும் ஒரு வித்யாசமும் இல்லை இல்லை எல்லா ஆண்களும் இப்படிதானா” என விரக்தியாய் கூறி… .
“ இரண்டு பேருமே என்னை உயிரோட கொல்றீங்க..” என சொல்லி முடிக்கும் முன்
“சாத்வி” என அவளின் இரு கன்னங்களிலும் கை கொடுத்து, தன் புறமாய் முரட்டு தனமாய் திருப்பியவன் “என்கிட்ட பேசின மாதிரி வேற யார்கிட்டையும் பேசிடாதே பேசவும் கூடாது.”
“இந்த கல்யாணம், நான் சொன்ன தேதியில் நடந்து தான் ஆகனும். உனக்கு வேற வழியில்லை நான் கிளம்புறேன். கல்யாணத்தை நிறுத்த எதாவது பிளான் போட்ட அவ்வளவு தான்! என்னை பத்தி உனக்கே தெரியும் தானே! இல்லை ஞாபகப்படுத்தனுமா!” என்றவன்
“இங்கே இருக்குற வரை மட்டும் தான் உனக்கும், உன்னோட உணர்வுகளுக்கு மரியாதை! அங்கே கிராமத்திற்கு வந்ததில் இருந்து மணமேடை ஏறுற வரைக்கும் சிரிச்ச முகமா தான் இருக்கனும்.. யாருக்காவது சந்தேகம் வந்தது” என பிடித்திருந்த அவள் கன்னங்களை இன்னமுமே அழுத்த வலிஉயிர் வரை சென்று வலித்தது சாத்விக்கு. அது அவனின் உடும்புப் பிடியினாலா? இல்லை தேளாய் கொட்டும் வார்த்தையினாலா?” என இனம் காண முடியாமல்
வலி அறிந்து என்னவோ கைகளை பட்டென விடுவிடுத்து கொண்டு “நான் வரேன் கல்யாணத்திற்கு ரெடியா இரு ” என சொல்லிவிட்டு சத்ரி எழுந்து சென்றுவிட்டான்.
சிறு வயதிலிருந்து தனக்கு தாயாய் தந்தையாய் இருந்த ஒருவனை மனம் தோழன் என்ற நிலையில் இருந்து காதலனாய் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்க, கழுகாய் மூக்கு வேர்த்துவிட்ட சத்ரி அதை சரியாய் இனம் கண்டு கொண்டு அதை நிராகரித்தும் சென்று விட்டான்.
பள்ளிப் பருவ இறுதியில் சத்ரியின் எண்ணங்கள் தான் அவளுக்கு சுவாசம். சத்ரியன் இருக்கும் இடத்தில் தான் சாத்வி இருப்பாள். தாயுடன் கூட அவ்வளவு ஆழமாக பழகி இராதவள் இவனுடன் ஆழுத்தமாய் ஒன்றிக் கொண்டாள். அவன் காட்டிய பாசம் அப்படிபட்டது.
‘நான் சுவாசிக்கிறேன், சுவாசித்துக்கொண்டே இருக்கிறேன்’ என ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டா இருக்கிறார்கள் சுவாசம் என்றைக்கு தடைப்படுகிறதோ அன்று தான் சுவாசத்தின் அருமை தெரியுமாம்.
அதே போல் தான் உணர்ந்தாள் சாத்வி. சத்ரி தன் உணர்வுகளை அன்று தான் புரிந்து கொள்ள வில்லை… இன்றாவது புரிந்து கொள்வான் என இருந்த சிறு நம்பிக்கையும் அறுந்து விழ.. இனி சத்ரி தனக்கில்லை எனத் தெரிந்த பின் மூச்சடைப்பது போல் உணர்ந்தாள்.
காலையில் ஷாப்பிங் என்றதும் அதை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு துள்ளிக் குதிக்காத குறையாய் சத்ரியுடன் நேரத்தை கழிக்க சென்றவளுக்கு திருமணத்திற்கான நகைகளும் உடைகளும் வாங்குவதற்கு தான் அழைத்திருக்கின்றான் என தெரிந்த நொடியில் இருந்து இதோ இந்த நொடி வரை தீயில் இட்ட புழுவாய் தகித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் சத்ரியுடன் வெளியில் சாப்பிடலாம் என மகிழ்ச்சியாய் கிளம்பியவளுக்கு சத்ரியின் நடவடிக்கையில் ஒரு வாய் தண்ணீர் கூட இறங்க மறுத்தது.
ஓரே நாளில் ஷாப்பிங் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடைகளும் நகைகளும் ஒரே இடத்தில் வாங்கப்பட்டு இருந்ததாலும் இருவருக்கும் வேறு எங்கும் செல்லும் நேரமும் அமையவில்லை இடமும் அமையவில்லை.
காலையில் இருந்து சாப்பிடாதது.. சத்ரியின் பேச்சு என அனைத்தும் அவளுக்கு கிறக்கத்தை கொடுக்க.. தட்டு தடுமாறி தன் பெட்டில் சென்று ஏனோ தானோ வென படுத்துவிட்டாள். உடை கூட மாற்றவில்லை… கிறக்கத்தை போக்க தண்ணீர் கூட அருந்தவில்லை.
படுத்த சில நொடிகளில் அழ்ந்த மயக்கத்திறக்கு சென்றுவிட்டாள்.. வெகு நேரமோ சில நேரமோ
ஆழ்ந்த உறக்கத்தில் சத்ரியின் குரல் கேட்டது..
“சாத்வி, இங்கே பாரு… இங்கே பாரு..“ என சாத்வியின் கன்னத்தில் இருமுறை தட்டியது இவன் விரல்கள்.
“எனக்கு இந்த கல்யாணம் வேணும்.. நீ தான் வேணும்” உறக்கத்திலும் உளறினாள் சாத்வி.
“ஏன்டீ இப்படிலாம் பேசுற” கோபத்தில் கணன்றது இவன் வார்த்தைகள்.
“அப்படி தான் பேசுவேன்.. நீ.. நீ தான்.. வேணும்” மயக்கத்திலும் தெளிவாய் பேச, அதை பொறுக்க முடியாதவன் ஏனோ தானோ வென படுத்திருந்தவளின் இடையை பிடித்தான்.
அந்த டிசர்ட் காட்டிய வெண்ணிற இடையில் அழுத்தமாய் படிய டீசர்ட் மேலேறியது. இடையில் இருந்த அவன் கைகள் மெதுவாய் அவளில் ஊர்ந்து காதிற்க்கு நகர்ந்து பின் கழுத்தில் கை கொடுத்து அவளை தன் முகம் நோக்கி திருப்பினான்.
“நீ தான் வேணும்” இன்னும் பிதற்றி கொண்டிருந்தவளை
“சாவி” மனதினை கிழிக்கும் குரல் கேட்டது சாத்விக்கு.. கண்களை திற என மூளை உத்தரவிட, உடல் அதற்கு ஒத்துக்காமல் போக “ம்” என்ற சின்ன முனகல் மட்டுமே வர..
“எதுக்கு சாவி.. இவ்வளவு கஷ்ட படற.. உன் கழுத்தில் தாலி கட்டி என் உயர் போகிற வரைக்கும் உன்கூட திகட்ட திகட்ட வாழப் போறவன் நான் தான் சாவி.. வேற எவனையும் உன் கிட்ட கூட வர விட மாட்டேன்டி..வரவிட மாட்டேன்”என குரல் ஆவேசமாய் மாறியது. அதே ஆவேசம் அவன் கைகளிலும் தெரிய.
அவளின் பின் தலையில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டி தன் அருகில் இழுத்து அவள் இதழ்களை ஆழமாய் தனக்குள் புதைத்துக் கொண்டான்..
கைகள் இரண்டுமே அவள் கழுத்தின் பின்புறம் இருக்க.. அவன் இதழ்கள் அவள் இதழ்களுக்குள் எதையோ தேடி தேடி தோற்று போய் கொண்டிருந்தது.
அவனின் அழுத்தம் தாளாமல் அவள் பின்புறமாய் சரிந்து கொண்டே செல்ல… மீண்டும் அழுத்தமாய் புதைந்து விலகியது அவனின் இதழ்கள்.
இவளும் பரிபூரணமாய் உணர்ந்தாளோ என்னவோ “லவ் யூ சத்ரி” என உளர
அப்படியே கட்டிலிலேயே கிடத்தப்பட்டாள்.
அடுத்த சில பல நிமிடங்களில் மீண்டும் அதே நிலையில் அவள் அமர வைக்கப்பட்டு இந்த முறையும் அவள் இதழ்களில் ஏதோ புகுத்தபட்டது.. ஆனால் அது சத்ரியின் உதடுகள் அல்ல. அவளுக்கு பிடித்த பாதாம் பால் என சரியாய் கண்டு கொண்டு அதை உள் வாங்கினாள்.
அடுத்தாதாக என்ன நடந்தது என தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றவள்.. சிறிது நேரத்திலேயே அடித்து பிடித்து எழ… அருகில் சத்ரி இல்லை…. சாத்வியின் உடல் அவனை உணர, மனம் உணரவே இல்லை… சாத்வியின் கைகள் அவள் இடை உதடுகள் பின் கழுத்து என சத்ரியின் கைகள் அலைபாய்ந்த இடத்திற்கெல்லாம் நகர்ந்தது..
‘பாதாம் போட்ட பால் கூட கொடுத்தானே’ அருகில் தம்ளரை தேட எதுவுமே இல்லை வேகமாய் சமையலறை சென்றாள்.
உடல் ஒத்துழைக்காமல் சற்று தள்ளாடி சற்றே நிதானத்திற்கு வந்தாள்.
சமையலறையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி… தரையிலேயே அமர்ந்தவள் இரு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு் பெரும் குழப்பத்தில் இருந்தவள் “அப்போ, அப்போ எல்லாமே கனவா” என வாய்விட்டு கேட்க