அத்தியாயம் 30

ஆனந்தமாக நுழைய வேண்டிய முதலிரவு அறைக்குள் பாரதி பதைபதைப்போடுதான் வந்தாள்.

தனக்கும் விக்ரமுக்கும் திருமணமாகிவிட்டது என்பது கூட கனவா? நனவா? என்ற குழப்பம். இதில் விக்ரம் பேசாதது வேறு அவளை யோசிக்க வைத்திருக்க, அனல் தெறிக்க விக்ரம் பேசினால் மேலும் ஒரு ரணத்தை தன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்ற அச்சம் அவள் உடலில் ஊடுருவி வியர்வை வழிய, உடம்பு சூடேறி காய்ச்சல் வருவது போல் பிரம்மை தோன்ற பதட்டத்தோடு அறைக்குள் அடியெடுத்து வைத்தாள். 

அவள் எண்ணமெல்லாம் மாயை என்று இன்முகமாக அவளை நெருங்கிய விக்ரம் கையிலிருந்த பால் டம்ளரை மேசையின் மீது வைத்து விட்டு அவளை நிறுத்தி முழு உடலும் தரை தொட அவள் காலில் விழுந்தான்.

“விக்ரம் என்ன பண்ணுற?” பதறிய பாரதி மண்டியிட்டவாறே அவனை எழுப்பினாள்.

அவள் கையை பற்றியவாறே தரையில் அமர்ந்தவன் “பத்து வருஷம் பத்து வருஷம் எனக்காக காத்துகிட்டு இருந்தியே அதுக்காக எத்தனை தடவ வேண்டுமானாலும்…” என்றவனின் வாயை பொத்தியவள்

“நான் ஒன்னும் உனக்காக காத்துகிட்டு இருக்கல. உன் மேல கோபத்துல இருந்தேன்” உண்மையைத்தான் சொன்னாள். என்ன அவன் நிலை அறிந்ததினால் சோகமாக சொன்னாள்.

அவள் கையை பற்றியவாறே அமர்ந்த விக்ரம் “ஆமா… நான் பேசினத்துக்கு நீ கோபமாக இருந்த. சரிதான் போடான்னு சொல்லி யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்திக்கலாமே” நாடியை தடவியவன் “நான் இல்லாம சந்தோசமா வாழ்ந்திருக்க முடியாது” அவள் சுபாவம் அறிந்தததால் புன்னகைத்தவன் “ஆனா வாழ்ந்திருப்ப. பட் நீ என் மேல கோபம் என்று என்ன நெனச்சிக்கிட்டே இருந்தியே. அது கோபத்தால் மட்டும் தானா?” மெலிதாக புன்முறுவல் செய்தான்.    

எல்லாம் மறந்த நிலையில் நான் உன்னை காதலித்தேன் என்றால், நீ என்னை மறவாமல் இத்தனை வருடங்கள் இருந்தாயே அது காதலால் மட்டும் தானென்றான்.   

விக்ரம் சொன்னதும் உண்மைதான். காதல் இல்லாமல் கோபம் என்ற போர்வையில் கூட இத்தனை வருடங்கள் இருந்திட முடியாது.

பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் முணுக்கென எட்டிப் பார்த்திருக்க, அவள் கண்ணீரை சுண்டிவிட்டவாறே “ஒரே வேவ்லெண்ந்த் இருந்தாதான் ப்ரெண்ட்ஸ் ஆவாங்கன்னு சொல்வாங்க. நீ என் பிரெண்டு என்று பார்த்தேனே ஒழிய எனக்கு உன் மேல இருந்த ஈர்ப்பு காதல் என்று புரியவேயில்லை.

ரகுராம் தான் என் பெஸ்ட் பிரென்ட். ஆனா அவன்கிட்டக் கூட நீ என்னை விட நெருங்கிப் பழகக் கூடாதுன்னு. உங்க ரெண்டு பேர் நடுவுளையும்தான் எப்போவும் இருப்பேன். நீ ஊருக்கு போனப்பத்தான் நான் உன்ன லவ் பண்ணுறேன்னே புரிஞ்சது. உன்ன லவ் பண்ணுறேன்னு உறுதியா நம்பின பிறகு அத உன்கிட்ட சொல்ல வந்தப்போதான் ஆக்சிடன்ட் ஆச்சு. அன்னக்கி நீ என்று உன் அக்காவைத்தான் காப்பாத்தினேன்.

இன்னைக்காவது என் மனசுல என்ன இருக்குன்னு சொல்லலாம்னு வந்தப்போ தான் ஆஸ்பிடல்ல இருந்து டாக்டர் வரச்சொல்லி எந்நிலைமைய புரிய வச்சி. அதனால நான் உன்கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லாம, உன்ன என்கிட்டே இருந்து விலக்கி வைக்க ஏதேதோ பேசிட்டேன்.

விக்ரம் பேசப் பேச அன்று நடந்தது இன்றும் கண்முன்னால் வந்து நின்றதில் பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க, துடைத்தவாறே பேசினான் விக்ரம்.

“எல்லாம் மறந்தும் உன்ன மறக்க் முடியாம நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் கனவா கண்டு திரும்ப உன்னையே காதலிக்க ஆரம்பிச்சேன். பத்து வருஷமா கனவுல காதலிச்சத மறந்து திரும்ப பழசெல்லாம் ஞாபகம் வந்து உன் கூட வாழலாமென்று நினச்சா, அதுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சினை” பார்கவியால் தான் பிரச்சினையென்று கூறாமல் தவிர்த்தான்.

உன் அக்கா உன்னை இந்த இடத்தில் தான் வைத்திருக்கின்றாள். உன் வாழ்க்கையில் நடந்தவைகளுக்கும், நடப்பவைகளுக்கும் அவள் காரணமாக இருந்திருக்கின்றாள் என்று கூற எவ்வளவு கணம் எடுக்கும்?

விக்ரம் கூறினால் பாரதி நம்புவாளா?

பத்து வருடங்கள் தன்னை விலக்கி வைத்த விக்ரமை நம்புவாளா? சதா கருச்சிக் கொட்டும் அக்கா மனம் மாறி தன்னோடு இருந்தாலே அவளை நம்புவாளா?

அவளை நம்ப வைக்க சாந்தியே சாட்ச்சியாக நிற்பாள். அப்பொழுதும் நம்பாவிட்டால், நடந்தவைகளை காரண,கர்த்தாவோடு கூறினால் யோசித்து உண்மையை புரிந்துகொள்வாள்.

அதன்பின் கூடப்பிறந்தவளே துரோகம் இழைத்ததாக காலத்துக்கும் மருகுவாள். சாந்தோசமாக வாழ வேண்டிய நேரத்தில் பார்கவியை பற்றிய உண்மையை அறிந்து அதனால் நம் வாழ்க்கையில் பிரச்சினை வேண்டாமென்றுதான் விக்ரம் பாரதியிடம் நடந்த எதையும் சொல்லாமல் மறைத்தான். 

தன் அக்காவின் சுயரூபம் தெரியாமல், கார்த்திகேயனை திருமணம் செய்யப் போனதை தான் விக்ரம் கூறுகிறானென்று எண்ணி “என்ன மன்னிச்சுடு விக்ரம். அன்னைக்கி உன் நிலைமை தெரியாம நீ பேசினத்துக்காக நான் உன்ன விட்டுட்டு போய்ட்டேன். உன்ன நான் புரிஞ்சிக்கவேயில்லை. திரும்ப வந்தப்போ கூட உன் நிலைமையை பத்தி தெரியாம, பத்து வருஷமா நீ என்னை காதலிக்கிறதையும் புரிஞ்சிக்காம என் கோபத்தை இழுத்துப் பிடிச்சிக்கிட்டு உன்ன விட்டு விலக்கணும் என்றுதான் நினச்சேன். யார் என்ன பேசியிருந்தாலும் நானே என் வாயால மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கக் கூடாது. உன்ன பார்த்த பிறகுதான் நான் பண்ண போன காரியத்தோடு வீரியம் புரிஞ்சது. நான் எப்படி… உனக்கு இப்படியொரு துரோகத்த பண்ணப் பார்த்தேன். என்ன மன்னிச்சுடு” அவன் பேசியது தவறென்று கூறாமல் அவள் மீதுதான் தவறென்றாள்.

அவள் இப்படித்தான் பேசுவாள். மொத்த பழியையும் தன்மீது போட்டுக் கொள்வாளென்று விக்ரம் அறிந்துதானிருந்தான்.

“சரி அன்னிக்கி எதோ என் நிலைமை அப்படி இருந்தது. பேசிட்டேன். ஆனா இப்போ கூட உன்ன நம்பாம பழையபடி பேசினேனே அது?” இவ்வளவு இளகிய மனம் இவளுக்கு ஆகாது என்றெண்ணியவனின் முகம் புன்னகைக் கொண்டது. 

தனக்கு எல்லாம் ஞாபகம் வந்து விட்டது என்பதை விக்ரம் இவ்வாறு கூறியிருக்க, அதை புரிந்துக்கொள்ளாமல் “நீயே மூளைக்குழம்பி போய் இருக்க, உன் பார்வைக்கு எல்லாம் தப்பாகத்தான் தெரியும். நான் தான் புரியவைச்சிருக்கணும்” என்றவள் கவலையாக பார்த்தாள்.

“அப்போ நீ என்ன மூளைக் கோளாறு பிடிச்சவன்னு புகழுற” வந்த சிரிப்பை அடக்கினான்.

“என்ன?” நான் என்ன சொன்னேன் என்று விழித்தவள் விக்ரம் புன்னகைப்பதை பார்த்து புரியாமல் அவனையே பார்த்தாள்.

“கெஞ்சினா மிஞ்சுறவங்க மத்தியில, கெஞ்சினா கொஞ்சுரியே. நான் உன்ன ஹக் பண்ணிக்கவா?” அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவளை அணைத்துக் கொண்டவன் “நான் தான் உன்ன அன்னைக்கும் பேசினேன். இன்னைக்கும் தேவையில்லாம சந்தேகப்பட்டு பேசினேன். நான் தான் உன்கிட்ட மன்னிப்புக் கேக்கணும். ஆனா நீ… வீணா உன்னையே வருத்திக்கிற. உன்ன புரிஞ்சிக்காம இருந்த எனக்கு தண்டனை கொடுக்காம கண்ணீர் வடிக்கிற போதும் ரதி…      

எந்த சூழ்நிலையிலையும் என்னால உன்ன மறக்க முடியாது. உன்ன தவிர வேற எதையும் சிந்திக்கவும் முடியாது.

எல்லாத்தையும் மறந்து நான் உன்ன பேசினாலும், நான் தானே பேசினேன். என்ன மன்னிச்சிடுன்னு கேட்க மாட்டேன். உனக்கு மன்னிக்கனும்னு தோணினா மன்னி. இல்லையா என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. ஆனா என் கூட இரு” இதைத்தான் சொல்ல நினைத்தான். சொல்லியவன் அவளை விட்டு விலகாமல் இருந்தான்.

அவளுக்கும் அவன் அணைப்பு தேவைப்பட்டிருந்தது. “என் மேல கோபம் இல்லையே” அவன் காதுக்குள் முணுமுணுத்தாள்.

அவளை தன்னிடமிருந்து விலக்கி அவள் கண்களை ஊடுருவியவாறே “உன் மேல கோபப்பட்டு எப்போ பேசினாலும், நீ எனக்கில்லை என்ற ஏக்கம்தான் என்ன பேச வச்சது என்று இப்போ நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். இப்போதான் நீ எனக்கே எனக்கா இருக்கியே. இனிமேல் கோபப்பட மாட்டேன்” காதலனாக மொழிந்தவன்

கணவனாக “இங்கபாரு… இன்னைக்கி ஒருநாள்தான் டைம் உனக்கு என்கிட்ட என்ன பேசணுமோ, என்ன கேட்கணுமோ இன்னைக்கே கேட்டுட்டு. இன்னைல இருந்து பழசெல்லாம் மறந்து நாம புது வாழ்க்கையை தொடங்கணும்” இவ்வாறு கூறினாலாவது பாரதி மனம் திறப்பாளென்று எண்ணினான் விக்ரம்.

அவளோ அவனைப் பார்ப்பதும், தரையை பார்ப்பதுமாக முழித்தாள்.

அவள் என்னவோ சொல்ல நினைக்கிறாளென்று புரியவே “என்ன?” என்று கண்களையே கேட்டான் விக்ரம் .

அவள் ஒன்றுமில்லையென்று பட்டென்று தலையசைக்கவே, பெருமூச்சுவிட்டவன் “இங்கபாரு… இப்போ நான் உன் ஹஸ்பண்ட். நீ என்கிட்டத்தான் எல்லாத்தையும் சொல்லணும். இப்போ சொல்லப் போறியா? இல்ல நான் போய் தூங்கவா. விடிஞ்சா நீ சொல்லுற எதையும் என் காது கேக்காது” என்றவன் சட்டென்று எழுந்து கட்டில் பக்கம் நகர்ந்தான்.

அவள் பின்னால் வருகிறாளாயென்று விக்ரம் திரும்ப பாரதி அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.

“என்ன சொல்லணும்?” பாவமாய் அவளை பார்த்தவன். இவளை பேச வைக்கவே போராட வேண்டி இருக்கே. இன்னைக்கி பஸ்ட்நைட் நடக்குமா நடக்காதா?” விக்ரமின் மனசாட்ச்சி எகிறிக் குதித்தது.

“இல்ல… அது மாமாவ…” கார்த்திகேயனை திருமணம் செய்ய விளைந்ததை பற்றி விக்ரம் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னாளில் ஞாபகப்படுத்தி பேசிவிடுவானோ என்ற அச்சம் வந்ததில் ஒருவாறு கேட்டிருந்தாள். 

“நீ என்ன ரொம்ப லவ் பண்ணுறான்னு நினச்சேன். ஆனா உனக்கு என்னைவிட உங்கக்கா மேல பாசம் அதிகம்னு தெரிஞ்சிகிட்டேன். இல்லனா நீ அப்படியொரு காரியத்தைப் பண்ணப் பார்த்திருப்பியா?”

அவளை எவ்வாறு வேண்டுமானாலும் சமாதானம் செய்திருக்கலாம். ஆறுதல் கூறியிருக்கலாம். எதை சொன்னாலும் இல்லை நான் பண்ணது தப்புத்தானென்று விடியும் வரை புலம்புவாள். அவளை சமாதானப்படுத்தியே இன்றிரவு கடந்து விடும் என்று இவ்வாறு கூறினான். 

“இல்ல அவ சின்ன வயசுல இருந்தே உடம்பு முடியாம இருக்கால்ல…” தன் அக்காவின் உடல்நிலையையும், மனநிலையையும் எடுத்துக் கூறினால் விக்ரம் தன்னை புரிந்துக்கொள்வானென்று பாரதி நினைக்க,

உடம்பு முடியாமல் இருக்கிறேன் என்ற போர்வையில்தானே பார்கவி ஆட்டிப் படைக்க நினைக்கிறாள் என்ற கோபம் வந்ததில் “இங்க பாரு… நம்ம வாழ்க்கையை நமக்காக வாழனும். அடுத்தவங்களுக்காக வாழக் கூடாது. ஒரு முடிவெடுக்கும் பொழுது பலதடவை யோசிக்கணும். முக்கியமா நாம எடுக்குற முடிவால நாமளே பாதிக்கப்படக் கூடாது. முடிவெடுத்தப் பிறகு பின் வாங்கவும் கூடாது” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறே விக்ரம் பேச

தன்னை புரிந்துக்கொள்ளாமல் பேசுகிறானென்று “என்ன பர்ஸ்ட் நைட் ரூம்ல லெசன் எடுக்குறியா?” முறைத்தாள்.

“ஆமா நீ செய்தது தவறு” என்று விக்ரம் திட்டியிருந்தால் கூட தவறு என் மீதுதானென்று சமாதானம் அடைந்திருப்பாள் போலும், அறிவுரைக்கு கூறவும் கோபம் கொண்டாள்.

சட்டென்று சிரித்தவன் அவள் இடையோடு கைகளை கோர்த்து தன் பக்கம் இழுத்து “ஹப்பா… ஒருவழியா நமக்கு இன்னைக்கி பர்ஸ்ட் நைட் என்று ஞாபகம் வந்திருச்சே. எங்க அழுதே டைம்ம கடத்துவியோன்னு நினச்சேன்” ஹஸ்கி வாய்ஸில் கூற, பாரதிக்கு குப்பென வியர்த்தது.

“இல்ல இல்ல நான் இன்னும் பேசி முடிக்கல” அவனிடமிருந்து விலக முயன்றவள் அவன் அவளை மேலும் தன்னுள் இறுக்கவே தன் இருகைகளையும் அவன் நெஞ்சின் மீது வைத்து தடுக்கலானாள்.

“இன்னைக்கி தான் பர்ஸ்ட் டைம் கட்டிப் புடிச்சேன். கேட்டப் போடுறியே. என்ன சொல்லணுமோ இப்படியே சொல்லு. அதுதான் உனக்கு தண்டனை” அவள் நெற்றியில் முட்டியவன் பேசுமாறு கண்களாளேயே சொன்னான்.

“இப்படி நின்னுகிட்டு எப்படி பேசுறது?” சற்று முன்னும் அவன் அணைப்பில் இருந்தாள் தான். அப்பொழுது இருந்த மனநிலை வேறு. அப்பொழுது ஆறுதலாக அணைத்திருந்தவனின் பேச்சு இப்பொழுது தடம் மாறிச் செல்லகிறது என்று பெண்ணவளுக்கு மெதுவாக புரியவே தடுமாறினாள்.

“அப்போ கம்படபலா பெட்ல கட்டிபுடிச்சிகிட்டே பேசலாமா?” குறும்பாக சிரித்தான் விக்ரம்.

“இல்ல.. இல்ல” மிரண்டவளாக மறுத்தாள் பாரதி.

அவள் கைகளை தன் இடுப்போடு கோர்த்தவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்தவாறே “உன் ஹார்ட்பீட் சவுண்ட் கேட்க நல்லா இருக்கு. கொஞ்ச நேரம் இப்படியே இரு” கண்மூடி நின்றவன் அவள் ஆசுவாசமடையும் வரை அமைதியானான்.      

 விக்ரம் கேட்டதில் எகிறிய பாரதியின் இதயத்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கவே சீராக மூச்சு விட்டவள் “கலவியில் ஈடுபடாமலையே ஒரு குழந்தையை பெற்றெடுத்தேன். அதை சொல்ல விடாமல் இம்சை பண்ணுறானே. இவன் அதை எவ்வாறு எடுத்துக்கொள்வானோ” என்று

“விக்ரம்…” மெதுவாக அவனை அழைத்தாள் பாரதி.

“ம்ம்… சொல்லு…”

“கவி….”

“என்ன உன் மாமாக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வச்சிட்டு கவிய தத்தெடுக்கணுமா?” சிரிக்காமல் கேட்டான்.

நான் என்ன சொல்ல நினைக்கிறேன். இவன் என்ன உளறுகிறானென்று அவனை பார்த்தாள்.

தன்னிடமிருந்து விலகி தன்னை பார்ப்பவளுக்கு தனக்கு எல்லா உண்மையும் தெரியும். எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது என்று கூறாமல் உண்மையில் விக்ரம் அவளை இம்சைதான் செய்தான்.

“என்ன உன் மாமாக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண பிறகு பர்ஸ்ட் நைட்ட வச்சிக்கலாம்னு சொல்லுறியா? பத்து வருஷமா உனக்காக தவமிருந்தேண்டி கொஞ்சம் கருணைகாட்டு” விக்ரம் சிரிக்காமல் கேட்டதில் அவன் கோபமாக இருக்கின்றானா என அவனை பார்த்தவள்

“கொஞ்சம் முன்னாடிதான் அட்வைஸ் பண்ண. திரும்ப வேதாளம் புளிய மரத்துல ஏறிருச்சா?” தான் கார்த்திகேயனை திருமணம் செய்ய விளைந்தது அக்காவின் மேலிருந்த பாசத்தினால் தானென்று விக்ரம் புரிந்து கொண்டுதான் பேசினான் என்று உணர்ந்தவள் மீண்டும் கார்த்திகேயனை பற்றி பேசியதும் பொறாமையில் பேசுகிறானென்றிதான் பாரதி இப்படிக் கேட்டாள்.

“அதானே… நாம எதுக்கு யாரையோ பத்தி பேசணும். வா நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என்றவன் அவள் கையை பற்றி கட்டிலின் பக்கம் நகர்ந்தான்.

“ப்ச்… என்ன பேச விடுறியா? சரியான இம்ச புடிச்சவன்”

“நீதாண்டி இம்ச பண்ணுற. எப்போயோ லவ்வ சொல்லி அப்பவே ஒரு கிஸ்ஸ போட்டு. ஊர் பூரா சுத்தி. அப்பப்போ உன்ன மிஸ் பண்ணுறேன்னு பார்க்க வந்து ரொமான்ஸ டெவலப்பண்ணி. கல்யாணத்துக்கு முன்னாடியே பஸ்ட் நைட்டை கொண்டாடி. அப்பொறம் கல்யாணம் பண்ணி இப்போ ரெண்டு குழந்தையாவது இருக்க வேண்டிய நேரத்துல. இன்னும் எல்.கே.ஜி ஸ்டுடென்ட் போல இப்போதான் ஆரம்பிக்கவே செய்யிறேன். நீ என்னன்னா… பேசிப் பேசி டைம் வேஸ்ட் பண்ணுற. பஸ்ட்நைட் ரூமுக்குள்ள வந்தோமா, பத்து வருஷ லவ்வ செலெப்ரெட் பண்ணோமான்னு இருக்க வேணாம்” நீளமாக பேசி புன்னகைத்தான்.

இவளிடம் இப்படியெல்லாம் பேச வேண்டும் என்பது அவன் ஆசை. அதை அவள் புரிந்துகொள்ளவும் வேண்டுமே.

“என்ன?….” அவன் பேச்சில் கொஞ்சம் அதிர்ந்தவள் வெக்கம் வேறு வர உள்ளுக்குள் பரவிய குளிரை அவன் கண்டுகொள்ளக் கூடாதென்று உனக்கு எதோ ஆகிருச்சு என்பது போலவே பார்வையை வீசிய பாரதி.

“எப்படி எப்படி கல்யாணமாகும் முன்னாடியே உனக்கு பஸ்ட் நைட் கொண்டணனுமா?” அதை பிடித்துக் கொண்டு அவனை அடிக்கலானாள்.

“அதான் ஒண்ணுமே நடக்கலையே. இப்போ கல்யாணம் ஆகிருச்சு இப்போ கூட என்ன காய போடுற” அவள் கைகளை பற்றித் தடுத்தவன் “இங்க பாரு கவி பத்தி அம்மா சொல்லிட்டாங்க. எக்சுவலி நீயே சொல்லட்டும் என்று இருந்தேன். காசுக்காக சுற்றோகேட் மதர்ஸ் தேடிக்கலாம். ஆனா பாசத்துக்காக உன்னத்த்தவிர யாரும் சம்மதிக்க மாட்டாங்க. நீ உன் அக்காக்கு பண்ணது பெரிய உதவி அத நான் கொச்சை படுத்த விரும்பல.

உனக்கு கவிய பார்க்கணுமா? பேசணுமா? வீடியோ கால் பண்ணு. ஆனா என்னைவிட்டு ஆஸ்ரேலியா போகணும் என்று மட்டும் நினைக்காத. கவிய ரொம்ப மிஸ் பண்ணுறதா பீல் பண்ணா நாம சீக்கிரம் குழந்தை பெத்துக்கலாம். நான் எப்பவும் ரெடியாகத்தான் இருக்கேன். நீ?” குறும்பாக சிரித்தான்.

 “ஓஹ்… கவிய பத்தி தெரியுமா? தெரிந்தும் ஏற்றுக் கொண்டானா?” என்று வியந்தவள் அவளை ஆஸ்ரேலியா செல்லக் கூடாது என்றதும் காதலாக பார்க்க அவன் இறுதியில் கூறியதில் வெக்கத்தில் அவன் தோளில் முகம் புதைத்த்தவள் கடித்து வைத்தாள்.

“நோ வயலன்ஸ். நோ வயலன்ஸ்” என்றவாறே சட்டையை கழட்டியவன் அவள் பல்தடம் பதிந்திருப்பதை பார்க்க முயன்றவாறே “ஐயோ ரெத்தம் வருது போல” பொய்யாய் பதறினான்.

தான் விக்ரமை காயப்படுத்தி விட்டேனா? என்று பதறிய பாரதி காயத்தை பார்க்க முனைந்தாள்.

“ஆ… இங்க. இங்க… நல்லா பாரு” என்றவன் உள் பனியனையும் கழட்ட, அவன் படுத்தியப்பாட்டில் அவன் நோக்கம் புரியாமல் காயத்தில் கண்ணாக இருந்தாள்.

அவளை அணைத்துக் கொண்டவன் “நானும் உன்ன கடிச்சி வச்சி காயத்துக்கு மருந்து போடவா?” என்று ஹஸ்கி வாயிஸில் கேட்க, அப்பொழுதான் ஆடையில்லாமல் அவன் நெஞ்சோடு உரசிக் கொண்டிருப்பது புரிந்தது. பெண்ணவளின் நெஞ்சுக்குள் ஆசை ஓடிவந்து குடியேற, மெல்ல பதட்டம் கூடி வெக்கத்தில் சிவந்தவள் அவனை பார்க்காது தவிர்த்தாலே ஒழிய அவனை விட்டு விலக முனையவில்லை. 

இன்னைக்கி பார்த்து சாரி கட்டி செம்மையா இருக்கியா. என் கண்ண உன்ன விட்டு எடுக்கவே முடியல. அதுக்காக நைட் முழுக்க சாரிலையா இருக்க முடியும்” அவன் பேச்சில் அவள் சிவக்க, “தூங்கணும் இல்லையா. நான் அதைத்தான் சொன்னேன். நீ என்ன நினைச்ச?” என்று அவளை மேலும் சிவக்க வைத்தான் 

“வித் யுவர் பெர்மிஷன்” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய கண்களாலையே சம்மதம் கூறியிருந்தாள் பாரதி.   

பத்து வருட காதலையும் ஒன்று திரட்டி அவளை ஆழத்துவங்கினான் விக்ரம்.

நூறாண்டுக்கு ஒரு முறை

பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம்

செய்பவன் நான் அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து

வாழவா

கண்ணாளனே

கண்ணாளனே

உன் கண்ணிலே

என்னை கண்டேன்

கண் மூடினால்

கண் மூடினால்

அந்நேரமும்

உன்னை கண்டேன்

ஒரு விரல்

என்னை தொடுகையில்

உயிர் நிறைகிறேன்

அழகா….

மறு விரல்

வந்து தொடுகையில்

விட்டு விலகுதல்

அழகா…..

உயிர் கொண்டு

வாழும் நாள் வரை இந்த

உறவுகள் வேண்டும்

மன்னவா

நூறாண்டுக்கு

ஒரு முறை

பூக்கின்ற

பூவல்லவா

இந்த பூவுக்கு

சேவகம்

செய்பவன்

நீ அல்லவா

இதே சுகம் இதே

சுகம் ம்ம்ம் எந்நாளுமே

கண்டால் என்ன

இந்நேரமே

இந்நேரமே என் ஜீவனும்

போனால் என்ன

முத்தத்திலே

பலவகை உண்டு இன்று

சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை

கட்டி கொள்ளு மெல்ல

விடியட்டும் கிழக்கு

அச்சம் பட வேண்டாம்

பெண்மையே எந்தன்

ஆண்மையில் உண்டு

மென்மையே