“ ம்…. ஆன் தி வே..” என சாத்வி கூற….

“ம் அப்படியே நேத்து மீட் பண்ணின ஹோட்டல் போ…  நான் ஜாயின்…  பண்ணிக்கிறேன்”  என சத்ரி கூற…

அவன் எதற்காக வர சொல்கிறான் என தெரிந்த சாத்வி..

“ம் ஓகே..” என ஹோட்டல் சென்றாள். அவள் வந்த பத்து நிமிடங்களின் பின் தான் வந்தான்.

வந்தவன் “எவ்வளவு ஸ்பீடா வந்தாலும், லேட் ஆயிடுச்சு” என அவள் முன்  அமர்ந்தபடியே… பேரரை அழைத்தான் சத்ரி.

“சத்ரி ,நான் அல்ரெடி சாப்பிட்டு தான் வந்தேன்..எனக்கு எதுவும் வேண்டாம்” என மறுக்க

அதை கண்டு கொள்ளாமல்  “டூ கோல்டு காபி” என நேற்று அவள் அருந்திய காபியை ஆர்டர் செய்தான்..

“ஏய் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்ல” என முறைக்க..

“நாம வந்து இருக்கிறது ஹோட்டல்…  பார்க் இல்லை…  ஞாபகம் இருக்கா”  என இன்னும் பேச எத்தனிக்க

அதற்குள்..

சாத்வி “சும்மா பேசிட்டு இருக்கிறதுக்கு மட்டும் இங்கே எல்லாரும் வந்தா ஹோட்டலை இழுத்து மூட வேண்டியது தான்” என அப்படியே சத்ரியை போல் பேசிக்காட்ட

வாய் விட்டு சிரத்தான் சத்ரி “சாவி…  உனக்கு வாய் கூடிப் போச்சு..” என சிரித்தபடியே  அவள் தலையில் மெலிதாய் ஒரு கொட்டு வைக்க..

“கரெக்டா சொன்னனா இல்லையா..!” என பதில் கேள்வி கேட்க…

“ ம் கரெக்ட் தான்….” என ஒத்துக் கொள்ளவும் செய்தான் தன் சிரிப்பை நிறுத்தி கொஞ்சம் சீரியசான குரலில்

“அம்மா அப்பாகிட்ட ஒழுங்கா பேசாமல் இப்படி தான் பேசுவாங்வளா! நேத்து சொன்னதற்கெல்லாம் தலையை தலையை ஆட்டிட்டு  அங்கே  பூலான் தேவி ரேன்ஜ்க்கு இப்படியா பேசுவ, கொஞ்சம் கூட கவலையே இல்லை” என குறைப்பட்டான் சத்ரி.

“ ம்ப்ச்…  நான் பேசினதில் எந்த தப்பும் இல்லை.. சோ…  நோ உறுத்தல் ” என சாதாரணமாய் அதை புறம் தள்ளினாள்.

அவளை முறைத்துப் பார்த்து..

“சரி அதை விடு…  அப்போ.. நான் சொன்னா தற்கொலை கூட பண்ணிப்பன்னு சொன்னது தப்பில்லையா..” என சத்ரி கவலையை அப்பட்டமாய் காட்ட

“அப்போ என்ன அப்போ.. இப்போவும் சொல்வேன்…  நீ சொன்னா கண்டிப்பா…  கல்யாணமும் பண்ணிப்பேன்…  தற்கொலையும் பண்ணிப்பேன்” என அவனை பார்த்தபடியே கூற…

அவளின் ஆழமான குரலில் திடுக்கிட்டு தான் போனான் சத்ரி…  பின் கோபத்துடன்

“அறிவுன்னு ஒன்னு இருக்கே அது உனக்கு வேலையே செய்யாதா..?” என கடுப்புடன் சத்ரி கேட்க..

“உன் விசயத்தில் கண்டிப்பா வேலையே செய்யாது..” என நேரடியாகவே ஒத்துக் கொள்ள…

கண்களை கூர்மையாகவே பதியவிட்டான் சத்ரி…  அவன் பார்வை வேறு ஏதோ கூறியது அவளிடம். என்னவென்று யோசிக்க கூட முடியவில்லை. அவளுமே சற்று ஆழ்ந்த பார்வையுடனே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் காபி வந்திருக்க , இருவரும் குடித்துவிட்டு, அடுத்து அவர்களின் பார்வைகளே அவர்களுக்கு தெரியாமல் பேசியபடி இருக்க.. அடுத்து என்ன பேச…  என ‘டோஸ் விட வந்தவனும் மறந்தான்…  டோஸ் வாங்க வந்தவளும் மறந்தாள்… ’

பின் கை கடிகாரத்தை திருப்பி பார்த்து “ இட்ஸ் கெட்டிங் லேட், சத்ரி பேங்க் போகனும்” என ஒருவழியாய் சாத்வி வாயைத் திறக்க..

‘சரி’ என்பது போல் தலையசைத்து…  இருவருமே கிளம்பினர்

இவர்கள் இங்கே பேசி முடித்திருக்க…

அங்கே சங்கரை பிலு பிலுவென பிடித்துக் கொண்டாள் மஹா….

“நீங்க சத்ரியை வேண்டாம்ன்னு சொல்வதில் வேறு ஏதோ காரணம் இருக்கு. சொல்லுங்க” என மஹா கேட்க…

“அதான் ஏற்கனவே சொன்னேனே”என சங்கரன் சமாளிக்க…

“ஊர்காரங்களை காரணம் காட்டி சமாளிக்காதீங்க…  வெங்க்கட்டை ஈசியா ஏத்துக்கிட்ட நீங்க…  ஏன் சத்ரியை வெறுக்கனும்… ” என குடைய

“வெங்க்கட் சாப்ட்வேர் இன்ஜினியர்… கைநிறைய சம்பளம் வாங்குறான்…  பாரு எவ்ளோ பெரிய வீட்டைக் கட்டியிருக்கான்” என வீட்டினை அப்போதும் ரசனையாய் பார்த்த சங்கரன்.

“சத்ரி் என்ன அப்படியா..” என குறையை சொல்லமல் விட

“அவனுக்கும் நிறைய சம்பளம் வரும்ங்க.” என மஹா சத்ரியை தாங்கி பேச…

“சத்ரி காலேஜ் கூட முடிக்கலை.. ஏதோ பைக் ரிப்பேர் பார்த்து பிழைக்குறான்…  நாளைக்கு இவன் குடும்பத்திற்கும் சேர்த்து வெங்க்கட் தான் சம்பாதிக்கனும் போல.. பைக் ரிப்பேர் பார்த்து…. என்ன சம்பளம் வாங்க முடியும். அதே போல் சாத்வியை ரமேஷ்க்கு கொடுத்தா…  அமெரிக்கா வாழ்க்கை.. அதோட இங்கே வெங்க்கட் வாங்குற சம்பளம் விட மூணு மடங்கு அதிகம்” என கண்களில் மிதந்த கனவுடன் கூற…

“பணம் முக்கியமில்லைங்க.. குணம் தான் வேணும்” என பேசிய மனைவியை கை நீட்டி தடுத்தவர்…

“ ரமேஷூக்கு தான் சாத்வி.. சத்ரிக்கு இல்லை.. இதுக்கும் மேல இந்த விசயத்தை பத்தி எங்கிட்ட எதுவும் பேசாதே..” என கண்டிப்புடன் விலகிச் சென்றுவிட்டார்..

அவர்களின் சண்டையை ஓரமாய் நன்று கவனித்த வெங்க்கட்டிற்கும் கிருத்திக்கும் மண்டையே வெடிப்பது போல் இருக்க…  ஏற்கனவே காரணம் கேட்டு அசிங்கப்பட்டதே போதும்.. இதில் தலையிட வேண்டாம்…  நான் பார்த்துக்கிறேன். என வெங்க்கட் அவளை சரி கட்டியிருந்தான்.. இதை அப்படியே சத்ரியிடமும் கூற மறக்கவில்லை வெங்க்கட்.

சாத்வியின் வாழ்வு அவளை எங்கே கொண்டு சென்று விடப் போகிறதோ.. என பயமே ஆட்கொள்ள…  சங்கரன் சத்ரி இருவரை தவிர மற்ற அனைவரும் .. பீதியுடன் சாத்வியை நினைத்தபடியே நகர்ந்தது…   சிறிது காலம்..

ரமேஷ் வரும் நாளன்று இரவே நிச்சயமும்.. மறுநாள் திருமணமும் என முடிவு செய்யப்பட்டது..

குறுகிய காலத்திலேயே பத்திரிக்கை அடிப்பதிலிருந்து…  சாத்விக்கு சீர்வரிசை வரை திருச்சியிலேயே நடந்தது.. தங்களின் கிராமத்திற்கு சாத்வியை கையோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தார் சங்கரன். மகளின் மேல் அவ்வளவு நம்பிக்கை..

சாத்விக்கு தேவையான சீர்வரிசை எல்லாம் அவளின் இஷ்டம் இல்லாமலேயே வாங்கப்பட்டிருக்க.. அவளுக்கான திருமண உடையிலிருந்து , ஏனைய சாதாரண உடைகள், நகைகள் மட்டும் வாங்கப்படாமல் இருக்க..

அதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு வழக்கம் போல் சத்ரியின் தலையில்…

“மஹா தான் ஜவுளி நகையாவது அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்கட்டுமே” என சங்கரை கேட்டிருக்க…  அவரும் சரியென்றுவிட்டார்

புடவை நகை வாங்கும் நாளும் வந்தது…

ஆவளுடன் சாத்விக்கு கால் செய்தான்… ஓர் இனிய மாலை நேரத்தில்

“ சொல்லு சத்ரி”

“ஈஃவ்னிங் ஷாப்பிங் போகனும்” என பெரிய ஜவுளி மற்றும் நகை இரண்டும் இருந்த ஒரு கடைக்கு வர சொன்னான்.

“என்ன திடீர்ன்னு..” என சாத்வி கேட்க..

“நீ வா..”என கடையின் பெயரை சொல்லி  வைத்துவிட டான்…

கிளம்பி வந்தாள்.. அழகான ஜீன்ஸ் டிசர்ட்டில்…  மகிவும் சிறிய பெண்ணாய்…  தெரிந்தாள் சத்ரியின் பார்வையில்.

“ என்ன அப்படி பார்க்குறீங்க… ”

“சேரியில் ரொம்ப மெச்சூர்டா இருந்தே…  பட் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரொம்ப குட்டி பொண்ணா தெரியுற..”  என ரசனையாய் கூற..

“ம்… ” என போலியாய் முறைத்தாள் சாத்வி…

“ எதுக்கு திடீன்னு ஷாப்பிங்… ”

“கல்யாணம்னாலே ஷாப்பிங் தானே, உனக்கு தேவையானது வாங்கனும்” என

அப்படியே அவள் முகம் எதிர்பதமாய் சுருங்க

“உன் அப்பா தான் எல்லா பிளானும் போட்டார். மாப்பிள்ளையை அவர் பார்த்துபாராம்  புடவை நகை மட்டும்  உன்னோட இஷ்டமாம்” என சத்ரி கிண்டலாய் பேச

இன்னமும் சுருங்கியது இவள் முகம்.

அதை கண்டவன் அவள் தோளில் லேசாய் தட்டி“சரி சரி, மூஞ்சை தூக்காதே, கடைக்கு வந்து புடவை நகை மட்டும் செலக்ட் செஞ்சிடு” என அவன் பேச

கலக்கமான அவள் முகம் சத்ரியையும் கலங்கடித்தது “எதுக்கு இவ்வளவு பயம்.நான் இருக்கேன், பயப்படாதே” என தைரியம் சொல்ல

“ இந்த கல்யாணம் சரிபட்டு வருமா” என நிறைய முறை மண்டையை குடைந்ததை, கண்கள் கலங்க  கேட்டாள்.

“இந்த கல்யாணம் தான் உனக்கு சரிபட்டு வரும். வேற ஒருத்தனால உன்னை மேய்க்க முடியாது, கஷ்டமும் கூட” என குரலில் அழுத்தத்தை கூட்டி பேசினான் இவன்.

“நான் என்ன ஆடா…. மாடா…  மேய்க்க ” என லகுவாய் கேட்டாள் அவனை கவனித்தபடியே

“ஏன் ஆடு மாடு மட்டும் தான் மேய்ப்பாங்களா…  குதிரையெல்லாம் மேய்க்க மாட்டாங்களா..” என அவள் கண்களை  பார்த்துக் கூற

“ குதிரையா…  நானா.. “

“ம் ஆமாம்…. குதிரை தான்…  வெள்ளை குதிரை” என கூற..

“என்ன?” இவள் கோபப்படுவது போல் நடிக்க..

“ஹேய்.. வந்த வேலையை விட்டுட்டு ,என்ன யோசனை. வா வா, செலக்ட் பண்ற வேலையை பார்ப்போம்” என அவள் கைபிடித்து பட்டுபுடவை செக்‌ஷன் சென்றான்.

“உனக்கு பிடிச்சதா பார்த்து ஒரு ஐஞ்சு புடவை நல்லதா பார்த்து எடுத்துக்கோ” என அங்கே விட்டு அவன் அருகில் இருந்த சேரில் அமர

“மாப்பிள்ளையே பிடிக்கலையாம்..இதில் புடவை ஐஞ்சாம்” மனதினுள் பேசியவள் “எதுக்கு ஐஞ்சு ” என கேட்டாள்

“அதெல்லாம் எனக்கு தெரியாது.  அத்தை,ம்.. உங்கம்மா சொன்னாங்க  எடுத்துக்கோ”  சட்டமாய் இவன் பேச

“கல்யாணமே உனக்காக தான் சத்ரி.. புடவையையும் நீயே செலக்ட் செஞ்சிடு” என கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல் சத்ரியின் அருகில் மற்றொரு சேரில் வந்து அமர்ந்துவிட்டாள்.

சேல்ஸ் மேன் இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்திருந்தார்.

சாத்வியின் நிரை அறிந்த அவனும், அவளுக்குரிய   புடவையை தேர்வு செய்ய முடிவெடுத்தான்

சேரை விட்டு எழுந்து சென்றவன் ‘அந்த கலர், இந்த கலர்’ என ரேக்கில் இருந்த புடவைகளில் ஒரு பத்து புடவையை செலக்ட் செய்தான்.

ஒவ்வொரு புடவையாய் கையில் எடுத்தவன், அதை யின்.ற இடத்திலேயே இவளை திரும்பி பார்த்தபடி, இவளோடு பொருத்தி பார்த்து, அதில் ஐந்து எடுத்து, ‘பில் போட்டுடுங்க” என சொல்லிவிட்டு, காட்டன், சில்க் என  பத்து புடவைகளையும் சேர்த்து எடுத்தான்.

அதன் பின் அதே கடையின் மேல் தளத்தில் இருந்த  நகை கடைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கேயும் இவனே செலக்ட் செய்யும் படி ஆனது. ஒரு இருபத்தைந்து பவுண் வரை வாங்கி கொண்டு, அங்கிருந்து கிளம்பினர்.

அவன் கையில் இருந்த பார்சல்களை பார்த்து..

எல்லாமே இன்னைக்கே வாங்கனுமா.. இவ்வளவையும் யாரு எடுத்திட்டு போக”  என

“இரண்டு பேரும் தான் எடுத்துட்டு போகனும், இந்த பிடி” என அவளிடமும் இரண்டை கொடுத்தான்.

 கைக்கு இரண்டு பைகளாக இருவரும் தூக்கி வந்தனர். இருவரும் ஆளுக்கொரு காரில் வந்திருக்க, சாத்வியை முன்னே போகவிட்டு, இவன் பின்னே வந்தான். சாத்வியின் அப்பார்ட்மைண்ட் வரை.