“என்ன பேசனும்….சொல்லுங்க” வெகு வருடங்களாய் அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் என்றாலும் அந்த ஒரே வார்த்தையில் தெரிந்தது இருவருடைய அன்பும் தோழமையும் .
சாத்வியின் கூர்மையான பார்வை சத்ரியின் மீது அழுத்தமாய் படிந்தது. அந்த பார்வையில் என்ன இருந்தது என்பதை கூட உணரவே இல்லை அவனது உணர்வுகள். தான் இங்கு வந்திருக்கும் காரணம் அறிந்தால் இப்படி ஒரு தோழமையுடன் தன்னிடம் பேசுவாளா.. இந்த கேள்விக்கு சத்ரியால் பதில் சொல்ல முடியவில்லை. நிச்சயம் கேள்வி குறிதான்.அதோடு சாத்விக்கு கண்டிப்பாக பிடிக்காத விசயமும் கூட..
இவ்வாறு சத்ரியின் எண்ணங்கள் அவன் மனதில் மிதந்தபடியிருக்க
“உங்க கிட்ட தான் கேட்கறேன், என்ன பேசனும் ” என மீண்டும் சத்ரியின் கவனத்தை கவர
அவளின் குரலில் தன் நினைவில் இருந்து விடுபட்ட சத்ரி.. ஆழ மூச்செடுத்து பின் , எந்த ஒரு மேல் பூச்சும் இல்லாது “உனக்கு வரண் வந்திருக்கு.. பிடிச்சிருக்கா சொல்லு” என ரமேஷ் பற்றிய தகவல்கள் அடங்கிய கவரையும் அதனுடனே இருந்த ரமேஷின் போட்டோவையும் அவள் முன் வைத்தான்.
சாத்விக்கோ எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு தான். அதை அப்படியே கண்ணாடியாய் சாத்வியின் முகம் காட்டிக் கொடுத்தது. அதிர்ச்சியாய் அவள் மான் விழிகள் பெரிதாய் விரிந்தது.
இத்தனை வருட தனிமை வாழ்வு அவளுக்கு தைரியத்தை கொடுத்திருக்க, அடுத்த நொடி மனதை சமாதானம் செய்து சன்னமான சிரிப்புடன், இதழ்கள் விரிய
“ஓ…. இதுக்கு தான் ஹோட்டலில் விருந்தா. அதுவும் மாப்பிள்ளை பொண்ணு இல்லாமல்” என நக்கலாய் கேட்டாள் சாத்வி..
“கோவிலுக்கு போய்ட்டு ஹோட்டல் போனாங்க… நான் ஹோட்டலில் அவங்களோட ஜாய்ன் பண்ணிக்கிட்டேன்… அவ்வளவு தான் தெரியும், விருந்தா இல்லை சும்மா கேஷிவலா போனாங்களான்னு தெரியலை” என்றான் சத்ரி..
“ஓ” என இதழ்கள் ஒரு நிமிடத்திற்கும் மேல் குவிந்து பின்… ”இந்த வரண் அம்மா… அப்… அப்பா செலக்ஷனா….!” அம்மா என்ற வார்த்தை எளிதில் வந்ததை போல் அப்பா என்ற வார்தை அவ்வளவு எளிதாய் அவள் வாயில் வர வில்லை.. தெளிவாக புரிந்து கொண்டான் சத்ரி
“ம்… ஆமாம் உன் அப்பா செலக்ஷன் தான்” என்றான் அவளது கேள்விக்கு பதிலாய்
“ஓ.. அப்போ உங்க செலக்ஷன் இல்லை.. விசாரிக்கவாவது செஞ்சீங்களா? மாப்பிள்ளை எப்படின்னு” என கேட்ட சாத்வியின் குரலில்… கிலோ கணக்கில் நக்கல் நய்யாண்டி தான்
இருந்தாலும். அதை சட்டை செய்யாது “ம்.. விசாரச்சிட்டேன்… நம்ப கோதண்டம் சித்தப்பா பையன் தான்.. அமெரிக்காவில் இருக்கான்.அளவுக்கு அதிகமான சம்பளம் நல்லா பார்த்துப்பான்” என அவள் கேட்காத கேள்விகளுக்கும் சத்ரி பதில் சொல்லியபடி இருக்க..
“நீங்க நேரில் பார்த்தீங்களா? நேரில் பேசினீங்களா… இந்த கல்யாணம் அவருக்கு சம்மதமான்னு” என அவனை உன்னிப்பாய் பார்த்தபடி அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுக்க..
“அவன் பாரீனில் இருக்கான். நேரில் எப்படி முடியும்? கால் பண்ணி பேசிட்டேன் அவனுக்கு.. சாரி அவருக்கு சம்மதம்ன்னு சொன்னாங்க உன் போட்டோ கேட்டாங்க” என தன் மொபைலை அவள் முன்னே பிடித்தவனாய் “உன் போட்டோ… எதுவும் என்கிட்ட… இல்லை… ஒரு ஸ்னாப் எடுத்துக்கவா” என அவளிடம் அனுமதி வாங்கினாலும்
அவன் விரல்களும் மொபைலும் அவளை ஸ்னாப் எடுக்க மறக்கவில்லை..
“உங்ககிட்ட போட்டோ இல்லையா..? இல்லை யார்கிட்டேயும் போட்டோ இல்லையா” என மீண்டும் அவனை துருவ..
“யார்கிட்டேயும் உன் போட்டோ இல்லை.. பெண்ணா அடக்க ஒடுக்கமா வீட்டில் இருக்கனும்.. அதைவிட்டுட்டு ஊர் சுத்திட்டு இருந்தா… எப்படி இருக்கும் உன் போட்டோ..” என கடுப்புடன் சத்ரி கேட்க
சத்ரி பேசியதையும் தன்னை திட்டுவதையும் பொறுத்துக்கொள்ளாது..
“பொண்ணுன்னா? அடங்கி கிடக்கனும்னு, யார் சொன்னா?” சத்தமாய் கேட்டவள் ‘அடக்கமா இருந்தா அடக்கம் பண்ணிட மாட்டீங்க’ வாய்க்குள் முனுமுனுத்தாலும் சத்ரிக்கு நன்றாகவே கேட்டது. “அதெல்லாம் சரி, எனக்கு கல்யாணம் பேச நீங்க யாரு” அடக்கிய கோபத்துடன் கேட்டாள் சாத்வி
இவளது அத்தனை கோபத்தையும் ‘உன் கோபமெல்லாம் எனக்கு புதுசா என்ன?’ என அசால்ட்டாய் தாங்கியவன்
“உன்னோட சத்ரி” அழுத்தமாய் கூறினான்.
அதிர்ந்து விழித்தாள் “இது என்ன பதில்? நான் என்ன கேட்டால் நீங்க என்ன சொல்றீங்க” என கேட்க
“உன்னோட சத்ரி தானே… எங்கே இல்லைன்னு சொல்லு.. இப்படியே எழுத்து போய்டுறேன்..”
இதற்கு அவள் மௌனமே பதில் கூற “உன் சத்ரி தானே.. அப்போ நான் உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்காம வேற யார் செய்வாங்க” என தெனாவட்டாய் கூற
“நீங்க ஏன் செய்யனும்..? என் கல்யாணத்துக்காக ஸ்டெப் எடுக்கனும். என் அம்மா அப்பா இருக்காங்களே. அவங்களை வர சொல்லுங்க.. நான் பேசிக்கிறேன்” கோபத்தில் எரிந்து விழுந்தாள்.
“ரொம்ப தெளிவான பேசுறதா நினைப்போ” என இந்த முறை சாத்வியை கூர்மையாய் பார்த்து
“அந்தளவுக்கு உன் அம்மா அப்பாக்கு அறிவு இருந்தா, எப்போவோ உனக்கு கல்யாணம் முடிஞ்சு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா இருந்திருப்ப.. இப்படி தனியா கஷ்டபடவிட்டுட்டு இருக்கமாட்டாங்க..” என சுள்ளென விழ
“அப்போ வீட்டை விட்டு போனேன்னு சொன்னீங்க.. இப்போ கஷ்டபடுறேன்னு சொல்றீங்க.. நீங்க மட்டும் தெளிவான பேசுறதா நினைப்போ..” என சாத்வி கோபமாய் கத்த
“எது எப்படியோ.. இரண்டுமே உண்மை தானே” என அவள் வாயடைக்க
சாத்விக்கும் புரிந்தது இரண்டும் உண்மை தான் என ஆனாலும்.. அசறுவேனா? என்ற தோனியில்
“அதான் இப்போ கல்யாணத்திற்கு முடிவு செஞ்சிருக்காங்களே” என தாய் தந்தையை தாங்கி பேச…
“அதான் நானும் சொல்றேனே.. உனக்கு கல்யாணம் பண்ணணும்ன்ற எண்ணம் இருந்தா எப்பவோ அது நடந்திருக்கும். இப்படி சுயபுத்தி இல்லாமல் ,ஊர் பேச்சை கேட்டு உனக்கு கல்யாணம் பண்ண வந்து இருக்க மாட்டாங்க” என உண்மையை போட்டு உடைக்க…
இவனிடம் மல்லுக்கட்டி பயனில்லை என
‘ஓ.. ஊராரின் பேச்சுற்கு பயந்து தான் தன் திருமணமா?’ என மனம் கண்டு கொண்டாலும் “நான் எப்படி இதற்கு எப்படி சம்மதிப்பேன்னு நீங்க நினைக்கலாம்”
“அது தெரிஞ்சது தானே! ஆனால் நான் சொன்னால் கேட்பேன்னு நிச்சயம் நம்புறேன்” அழுத்தமாய் கூறினான்
“ ஒரு வேளை கேட்கல்லைனா” திமிராய் இவள் கேட்க
“கேட்கனும் கேட்டு தான் ஆகனும்” என சத்ரியும் சட்டமாய் பதில் கூற
“ஒரு வேளை லவ் எதாவது இருந்து, அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நின்னா? ” என முடிக்கும் முன்
அவளிடம் தன் பார்வையை பதித்து “என்னோட சின்ன வயசிலேயே, நான் செய்ற ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் உன்னோட சந்தோஷம் ஒன்னு மட்டும் தான் இருக்கும்.இப்போவும் அதே எண்ணம் தான் ஓடிட்டு இருக்கு.. ”
“ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்து பார்த்து செய்ற எனக்கு, உன் கல்யாணத்தை பற்றி எவ்வளவு யோசிச்சு இருந்திருப்பேன். இப்போவும் உன் சந்தோஷசத்திற்காக தான் இந்த கல்யாணம்.. நான் அவ்வளவு ஈசியா உனக்கு கெடுதல் நடக்க விடமாட்டேன்.. நம்பிக்கை வச்சு கல்யாணம் பண்ணு.. என் மேல் முழுசா நம்பிக்கை வை அது போதும்… ” என முழு மூச்சாய் பேசி விட்டு சேரின் நுனியில் அமர்ந்திருந்தவன் சற்று பின்னே தள்ளி அமர்ந்தான்.
“ஓகோ.. அப்போ எனக்கு லவ் பண்ற ப்ரிடம் கூட கிடையாதா” என வேண்டும் என்ற ஆச்சர்யம் காட்டி வினவ
“இருக்கு கண்டிப்பா ப்ரீடம் இருக்கு, ஆனா இப்போ இல்லை கல்யாணத்திற்கு பிறகு” என குதற்கமாய் பேச
அவனை எப்படி தான் அடக்க… என மனம் நினைத்தாலும் “எனக்கு இந்த வரண் வேண்டாம்..” என சத்ரியை அலைக்கழிக்க..
“அப்போ கண்டிப்பா இந்த வரண் உனக்கு செட் ஆகும்”
“நீங்களே சொன்னா ஆச்சா.. எனக்கு செட் ஆகுமா ஆகதான்னு.. நான் தான் சொல்லனும்.”
“அதெல்லாம் நல்லா செட்ட்ட்… ஆகும்” என சாத்வியை ஒரு மார்க்கபாய் பார்த்துக் கூற..
“சத்ரி டபுள் மீனிங்கா வருது வார்த்தை“ என அவன் பார்வை புரிந்து சட்டென அவனை எச்சரிக்க…
“டபுள் எல்லாம் இல்லை, சிங்கிள் மினீங் தான். இந்த வரண் உனக்கு செட் ஆகும்” இந்தமுறை பார்வை கண்ணியமாய் மாறி இருக்க..
அவன் பேச்சில் விடாது அவனை முறைக்க..
“ நிஜமா உனக்கு இந்த வரண் தான் செட் ஆகும்.. இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் அமைதியான ஆளா இருந்தா தான் பேம்லியை ரன் பண்ண முடியும்.. சோ.. சரி சொல்லிடு” என அழுத்தமாய் பேச…
“ஓ… அந்த அமைதியான ஆள் யார்.. நானா….இல்லை அவனா..” என குதற்கமாய் கேட்க…
“சாட்சாத் உன்னை கல்யாணம் பண்ணிக்க போற அப்பாவியைத் தான் சொன்னேன். உன்னை போய் யாராவது அமைதின்னு சொல்வாங்களா..?” என நக்கலாய் கேட்க
கண்களாலேயே எரிப்பது போல் பார்க்க..
“விடு.. எனக்கு இப்போ உன்னோட பதில் வேணும்.அது தான் இப்போ முக்கியம்…அதுவும் இப்போவே.. வேணும்..” என
“ச்சே… சான்ஸே இல்லை போ.. கரெக்ட்டா கெஸ் பண்ணிட்ட போ” என்றவன்
“மூனு மாசத்துக்குள்ள இந்த கல்யாணம் நடந்தாகனும். ஆனா மூனு மாதமும் உனக்கு டைம் இல்லை… நீயும் அமெரிக்கா போகனும், பாஸ்போர்ட் விசா.. எல்லாம் ரெடி பண்ணனனும்” தன்கையில் இருந்த போட்டோவை அவளிடம் காட்டி “பிடிச்சிருக்கா சொல்லு…” என கேட்கவும் செய்தான் சத்ரி