வல்லவன் 19

மாமா, துரு அறையில போய் தாயாராகுங்க சக்தி ஆரியனை அனுப்பி விட்டு, அவளும் அதிவதினியும் ஆரியன் அறையையும் மற்ற வேலைகளையும் கவனித்தனர்.

துருவினி அதியாவை தயார் செய்தாள். அதியா அவ்வப்போது அவளை பார்க்க, “என்ன அதி புதுசா பாக்குற மாதிரி பாக்குற?” என்று துருவினி கேட்க, “உனக்கு அத்துவை பிடிக்கும் தான?” அதியா கேட்க, துருவினி மௌனமானாள்.

“ஏன்? அவனை பிடிக்காதா?” அதியா கேட்க, எதுக்கு அதி இதெல்லாம்? நீ தயாராகு. அண்ணா வெயிட் பண்ணுவான்..

சொல்லு? என்று துருவினி கையை தடுத்து கேட்டாள்.

எனக்கு பெருசா நம்பிக்கையில்லை. அவ்வளவு தான்.

அதான் ஏன்?

நாளை கண்டிப்பா சொல்றேன். இப்ப உங்களது நல்ல நேரம் என்னால் தடை பட வேண்டாம். அண்ணாவிடம் இதை பற்றி கேட்டுறாத..

கேட்டால் வருத்தப்படுவார். அவர் வருத்தப்படணுமா? ஏற்கனவே உங்க திருமணத்தில் அம்மா இல்லாதது அவனுக்கு பெரிய வேதனையாக இருந்திருக்கும். அதுவும் அவனுக்கு பிடித்த நீ..உன்னுடன் அவங்க நேரம் செலவழிக்கலையேன்னு வருத்தப்படுவான்..

அதியா அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

அதி அண்ணாவிடம் போய் சாப்பாடு பற்றி பேசக் கூடாது துருவினி சொல்ல, அதியா குனிந்து அவள் வயிற்றை பார்த்தாள்.

ஓய், இப்ப தான சொன்னேன்?

வினு, லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு.

உன்னை கொல்லப் போறேன் பாரு. உன்னை எப்படி என்னோட அண்ணன் சமாளிக்கப் போறானோ? துருவினி புலம்ப, அதெல்லாம் ஆரு பார்த்துப்பார். நீ கவலைப்பட வேண்டாம்.

ம்ம்..பாவம் என் அண்ணன் என்று அவளை முழுவதுமாக தயார் செய்து அதியாவை கண்ணாடி முன் நிறுத்தினாள்.

வாவ் வினு, என்னை விட நீ ரொம்ப அழகா இருக்க? அதியா ஐஸ்கட்டியை அவளுக்கு வைக்கப் பார்க்க, போதும் அதி. மீதியை அண்ணாவிடம் காட்டு என்று அவளை கீழே அழைத்து வந்தாள்.

அதிவதினி அதியாவை பார்த்து, அதிம்மா என தொடங்க, சித்தி அவங்களே பார்த்துக்கட்டும். எப்படியும் உள்ள போய் சாப்பிட தான் போறாள் துருவினி சிரிக்க, “வினு” அவளை முறைத்தார் அதிவதினி.

அத்தை, நீங்களே சொல்லுங்க..அங்க இருக்கும் உணவுப் பொருட்களை பார்த்து இவள் சாப்பிட தான போகிறாள்? சக்தி கேட்க, எல்லாரும் என்னை என்ன நினைச்சீங்க? அதியா கொந்தளித்தாள்.

“பேசுறத நிறுத்தீட்டு போம்மா” துருவினி சொல்ல, “அத்தை” அதியா அதிவதினியை அணைக்க வந்தாள்.

சும்மா சும்மா கட்டிப் பிடிக்காத. அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ துருவினி சொல்ல, அதன்படி அதிவதினியிடம் ஆசி பெற்று அதியா அவரை பார்க்க, கையில் அணிந்திருந்த வளையலை கழற்றி அவளுக்கு போட்டு விட்டார்.

“அத்தை” அதியா பதற, இது என்னோட அம்மா. உன்னோட பாட்டி போட்டு விட்டது. இனி உனக்கு சொந்தம் என்றார்.

அவளோ அணைத்துக் கொள்ள, இம்முறை துருவினி அவளை தடுக்காமல் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

சக்தி அவர் சத்தம் கொடுக்க, கையில் பால்செம்புடன் வந்தாள்.

உள்ளே சென்று இதை கொடுத்துட்டு மாப்பிள்ள காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் அதிவதினி சொல்ல, நான் காலில் விழ மாட்டேன் அதியா சொல்ல, அதி இது எல்லா வீட்டினரின் வழக்கம் தான். கண்டிப்பாக செய்யணும்.

“சரி கொடுங்க” அதை வாங்கி நடக்க, அடிக்கப் போற மாதிரி நடக்குற? அதிவதினி முகம் சுருக்கினார்.

“அத்தை, நான் உங்க அதி. மாமியார் மாதிரி நடந்துக்காதீங்க” அவள் சொல்ல, அவங்க சொல்றதுல்ல என்ன தப்பு இருக்கு? துருவினி..நம்ம ஆகா, தர்சுவிடம் போனால் இப்படி தான் நடந்து போவாயா?

நல்லா தான நடக்குறேன் அவள் சொல்ல, “அதி அத்தையை பாரு” என நளினமாக அதிவதினி நடந்து காட்ட, “அத்தை பயங்கர கலையெல்லாம் கத்து வச்சிருக்கீங்க?” சக்தி வாயை பிளந்து பார்த்தாள்.

லவ் மேரேஜ்ல்ல? இது கூடவா தெரியாமல் இருக்கும் துருவினி சொல்ல, நானும் தான் ஆருவை காதலிக்கிறேன் அதியா சண்டைக்கு வந்தாள்.

நான் கேட்பதற்கு பதில் சொல்லு. உன்னோட இடது பக்கம் சிக்கன் லாலிபப், மட்டன் பிரியாணி, பிஸ் ப்ரை, எக் இன்னும் அசைவ உணவுகள் இருக்கு. மறுபக்கம் அண்ணன் இருக்கான். “யாரை தேர்ந்தெடுப்ப?” துருவினி கேட்க, சக்தி சிரித்தாள்.

சிரிக்காத என தாடையில் கையை வைத்து அதியா இடது புற வானம் நோக்க..பறப்பன, ஊர்வன அனைத்தும் சமைத்து தயாராக இருந்தது. வலப்புற வானத்தில் தன் இனிய மனையாளுக்காக ஆரியன் பட்டு வேஷ்டி சட்டையுடன் அமர்ந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சுவது போல இருந்தது. அவளுக்கான இதயம் ஆரியன் கண்ணில் தெரிய, படாரென நிமிர்ந்து மூவரையும் பார்த்தாள்.

என்ன? என்ன? ஆர்வமுடன் இருவரும் கேட்க, அதிவதினி புன்னகைத்தார்.

சாப்பாடு தான்..

“என்ன இப்படி சொல்லீட்ட?” சக்தி கேட்க, ஆமா..நான் சாப்பிடாமல் சென்று விட்டால் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிருவீங்க. நான் நன்றாக சாப்பிட்டு என்னோட ஆருவிடம் சென்று விடுவேன். அவர் எனக்காக காத்திருப்பார்.

“நான் சொல்லலை. என்னோட அண்ணா பாவம்” அவளது எண்ணத்தை நினைத்து துருவினி மனதினுள் சிரித்துக் கொண்டாள்.

நேரம் போய்க்கிட்டே இருக்கு. சக்தி மாப்பிள்ளையை நீ தான் அவர் அறைக்கு அழைச்சி வரணும் அதிவதினி சொல்ல, துருவினி கண்ணசைத்தாள்.

சக்தி ஆரியனை காண செல்ல, “அதிம்மா உட்காரேன்” என்று அதிவதினி துருவினி அறைக்கு சென்றார்.

“எதுக்கு அறைக்கு போறாங்க?” அதியா கேட்க, “இரு வருவாங்க” என்று துருவினி சொல்ல, அதிவதினி அதியாவிடம் வந்து ஒரு பாக்ஸை நீட்டினார்.

“என்ன அத்தை இது?” அதியா கேட்க, இதுல ரெண்டு செயின் இருக்கு. மாப்பிள்ளை பெயர் போட்டது உனக்கு. உன் பெயர் போட்டது அவருக்கு.

“அவரிடம் நீங்களே கொடுக்கலாம்ல்ல?” அதியா புரியாமல் கேட்க, ஆம்பளைங்க நமக்கு நிறைய வாங்கித் தருவாங்க. நாமும் ஏதாவது செய்யணும்ல்ல? இது நீ உனக்கும் அவருக்கும் வாங்கியது..

“அத்தை, நான் வாங்கலையே!”

கவின் தான் வாங்கி உன்னிடம் கொடுக்க சொன்னான். உன்னோட கார்டில் பணமில்லைன்னு தெரியும். அதனால தான் செய்திருக்கான். வாங்கிக்கோம்மா.

“அத்தை ஆருவுக்கு தெரிந்தால் கோபப்பட மாட்டாரா?” அதியா பயத்துடன் கேட்க, “அதெல்லாம் நீ தான் சமாளிக்கணும்” துருவினி கூறினாள்.

அதியா தயங்கிக் கொண்டே நிற்க, அதிவதினி அவளை பார்த்து, உன்னோட மாமாவுக்கு திருமணம் முடிந்திருந்தால் யோசித்திருக்க மாட்டேல்ல? கவலையுடன் கேட்க,  அங்கே வந்த சக்தியும் துருவினியும் அவரை பாவமாக பார்த்தனர்.

இல்ல அத்தை. அப்படியெல்லாம் இல்லை. ஆரு என்னை நம்புவார் என்று வாங்கிக் கொண்டாள் அதியா.

அத்தை, மாமாவை அவர் அறையில் விட்டு வந்துட்டேன். “அதி நீ தான் கிளம்பணும்” சக்தி அவளை இடிக்க, சும்மா இரு. திரும்பவும் ஆடையை சரி செய்யணும்..நேரமாகிடும்.

சரி செய்யணுமா? சக்தி கேலியுடன் கேட, போடி என்று வேகமாக அறைக்கு வெளியே நின்று உதட்டை பிதுக்கி பார்த்தாள்.

“என்ன?” சைகையில் அதிவதினி கேட்க, “பயமா இருக்கு அத்தை” அதியா சொல்ல, “இவ்வளவு நேரம் வாயாடிட்டு இப்ப என்ன பயம்?” துருவினி கேட்டாள்.

அதிவதினி தலையசைத்து “போ” என்றார்.

கதவை தள்ளிக் கொண்டு அதியா உள்ளே சென்றாள். ஆரியன் அப்பொழுதும் கையில் பைல்லுடன் இருந்தான். அவன் கையிலிருந்த பைல்லை பார்த்து நிம்மதியுடன் கதவை தாழிட்டாள். ஆரியன் பைல்லில் மூழ்கி இருந்தான்.

“ஹப்பாடா” மெதுவாக உள்ளே வந்து, பழங்கள் ஸ்வீட் இருக்கும் இடத்திற்கு சென்று பால்ச்செம்பை வைத்து விட்டு, இனிப்பை கையில் எடுத்தாள். ஆரியன் அவள் எதிர்பாராத நேரம் வந்து அவள் கையிலிருந்ததை அவன் வாயில் வைத்து சுவைத்தான். அதியா ஆரியனை முறைத்தாள்.

ஆரு, நான் எனக்காக எடுத்தேன். நீங்க வேணும்ன்னா இதை ஏதாவது எடுக்கலாம்ல்ல? சிணுங்கியவாறு கேட்டாள். ஆரியன் அவளை முழுதாக அளவெடுத்தான்.

திருமணத்திற்காக போடப்பட்ட மெஹந்தி, கையில்லா சில்வர் பிளைவுஸ் அடர் பச்சை நிற ஜியார்ஜெட் புடவை. அவளது அங்கங்கள் தெரியுமாறு இருந்தது. அவளது பால்நிறத்திற்கு ஏற்றவாறு புடவை அவளை தூக்கி காட்டியது.. தலையை அழகாக விரித்து அதில் பூக்களை நிரப்பி இருந்தாள் துருவினி. ஆரியன் பார்வையில் மோகம் நிரம்பி வழிந்தது.

“ஆரு” அவனை ஓரக்கண்ணால் பார்த்த அதியா, ஆரியனுக்கு முதுகு காட்டி பால்செம்பை மட்டும் நீட்டினாள்.

“ஏன்? உன் அழகை நான் ரசிக்கக் கூடாதா?” ஆரியன் கேட்க, “ஆரு இப்படி பார்த்தீங்கன்னா நான் எப்படி பேசுறது?”

“பேசணுமா?” ஆரியன் கேட்க, இல்ல..இல்ல என்று திரும்பி..அது வந்து என்று வெட்கமுடன் கண்களை மட்டும் உயர்த்தி அவனை பார்த்தாள்.

“எது வந்து?” ஆரியன் அவளை நெருங்க, பட்டென அவன் காலில் விழுந்து, அத்தை உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கணும்ன்னு சொன்னாங்க..

அதுக்காக இப்படியா விழுவ? நான் என்னம்மோன்னு பயந்துட்டேன்.

“பயமா? ஆருவுக்கா?” அதியா கேட்க, ஆரியன் அவளை இழுத்து தன்னுடன் நெருக்கி..ம்ம்..பயம் தான். என்னை மயக்கும் ஜில்லுவிடம் மட்டும்.

“எனக்கு மட்டுமா?” உதட்டை பிதுக்கினாள்.

அவள் உதட்டை பிடித்து, என்னோட பொண்டாட்டி என்னுடன் கடைசி வரை இருக்கணும். அந்த பயம்.

ஏன் ஆரு? நான் இருக்க மாட்டேன். உங்களோட சண்டை போடுவேன்னு நினைக்கிறீங்களா? அதியா கேட்க, வாழ்க்கை எப்படி மாறும்ன்னு தெரியாது அதி. நான் முதல் திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் சந்தோசமாக தான் செய்தேன். ஆனால் அவளின் பேச்சு இம்மி அளவில் கூட என் மனதில் ஒட்டவில்லை. அப்பவே உசாராக இருந்தது நல்லது தான்..

ஆனால் என் அதியின் முதல் செய்கையே என்னை கவர்ந்தது. “சேடிஸ்ட்” அப்படியா என்னை பார்த்தால் அப்படி தான் தெரியுதா? கேட்டான்.

அது ஒரு ப்ளோல்ல வந்திருச்சு..

அதி ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வச்சுக்கோ. என்னோட மனதில் வந்த முதல் பொண்ணும் நீ தான். கடைசியும் நீ தான். நாம பிரிந்தாலும் உன்னோட இந்த சில நாள் நினைவுகளே போதும் ஆரியன் பேசினான்.

“ஆரு, நான் போக மாட்டேன். உங்களை விட்டு எப்போதும் போக மாட்டேன். உங்களுக்கு முன் சாகும் நிலை வந்தாலும் அந்த எமதர்மனுடன் சண்டையிட்டேனும் உங்களிடம் வந்துருவேன்” அதியா அழுது கொண்டே சொல்ல, இவ்வார்த்தையை எதிர்பார்க்காத ஆரியன் அதிர்ந்து கண்ணீருடன் அவள் வாயை மூடினான்.

சொல்லாத அதி. ஒருநாள் கூட உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியாது. நம்ம வாழ்க்கையின் இறுதி முடிவு ஒரே போல் தான் இருக்கும். வாழ்ந்தால் சேர்ந்து வாழணும் இல்லைன்னா அவன் சொல்லாமல் அவளை பார்த்தான்.

“ஆரு” வேண்டாம் அவனை இறுக அணைத்தாள்.

கண்ணீரை தட்டி விட்டு, அப்புறம் உன்னோட விது அத்தை என்ன சொன்னாங்க? ஆரியன் கேட்டான். இந்தாங்க நாம பாலை ஷேர் செய்து குடிக்கணும். அப்புறம் என்று பாக்சை பார்த்து, இது நமக்காக என்று ஆரியன் கையில் அதியா கொடுத்தாள்.

“இதை எப்ப வாங்கின?” அவன் கேட்க, அது எதுக்கு உங்களுக்கு ஆரு. இதை எனக்கு போட்டு விடுங்க. அடுத்து நான் போட்டு விடுவேன். இதை எக்காரணம் கொண்டும் நீங்க கழற்றவே கூடாது. சரியா? அவள் கேட்க, “என்னோட மனைவி ஆணைப்படியே” கையை விரித்தான் ஆரியன்.

“ஆரு” அவனை தழுவிக் கொண்டாள் அதியா. இருவருக்குள்ளும் மோகத்தீ பரவ, அவனை விட்டு விலகி சன்னலை பிடித்து நின்றாள்.

“அதி” கிரங்கி ஆரியன் அழைத்தான். அவனது அழைப்பில் திரும்பி வெட்கத்துடன் தரை நோக்கினாள். ஆரியன் அவளை தழுவியவாறு, “ஐ நீடு யூடி ஜில்லு” அழைத்தான். அவள் சம்மதமாக தலையசைத்தாலும் அவள் கைகளில் நடுக்கம் தெரிந்தது அவனுக்கு.

அதியாவை கைகளில் ஏந்திய ஆரியன் அவளை படுக்கையில் போட்டு, அவள் மீது படர்ந்து, அவளது பிறை நெற்றியில் முத்தமிட்டான். பின் அவளது கண்கள், மூக்கு, காது என்று வந்தவன்..அவள் கன்னத்தை பார்த்து, நான் உன்னை முதலில் தொட்டது இந்த மாம்பழக் கன்னம் தான்டி..

அவள் எண்ணத்தில் ஆகர்ஷனா ஆரியன் கையை பிடித்து அவள் கன்னத்தில் தொட வைத்தது நினைவில் வந்தது. வெட்கமுடன் ஆரியனை பார்க்க முடியாமல் புன்னகையுடன் கண்களை மூடினாள்.

“கண்ணை மூடாதடா” ஆரியன் செல்லமாக “டா” போட, ம்ம்..என்று கண்ணை திறந்து இரு கண்களும் சிலமணி நேரங்கள் காதல் வார்த்தைகள் பேசியது. பின் அவன் மேனியில் ஊர்வலம் நடத்தி அவள் காதருகே வந்து, வலிக்காம பார்த்துக்கிறேன். வலித்தால் சொல்லு..என்று களவு மொழி பேச, அவள் வெட்கமுடன் தலையை அசைத்தாள்.

அவ்வறையின் முணங்கல் சத்தத்தின் ஊடே “ஜில்லு” என்று ஆரியனும், “ஆரு” என்று அவளும் செல்லமாக முணங்க, திடீரென மாமா..மாமா..அதியா முணங்க

ஆரியனுக்கு நெஞ்சுகாலியானது போல தோன்ற, வேகமாக அவளை விட்டு நகர்ந்தான் கண்ணீருடன்.

ஆரியன் அருகே இல்லாததை உணர்ந்த அதியா மெதுவாக கண்ணை திறந்து பார்க்க, அவன் சினமுடன் அவளை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

“ஆரு” அதியா அழைக்க, கண்ணீருடன் ஆரியன் திரும்பியதை பார்த்து பதறி அவனிடம் வந்தாள்.

“வராத நில்லு” சத்தமிட்டான்.

“என்னாச்சு ஆரு?” அவள் பதற, “என்னவா? உனக்கு இப்ப அவன் தான் நினைவு வரணுமா?” தடுமாற்றத்துடன் வேதனையுடன் சீற்றமுடனும் கேட்டான்.

“ஆரு” அதியா சத்தமிட்டாள்.

“நீ தான கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கேட்ட?” ஆரியன் கேட்க, “எதுக்கு இப்படி பேசுறீங்க ஆரு? எவன் நினைவு?” புரியாமல் அதியா குரல் நடுங்க கேட்டாள்.

“எவனா? உன் மாமா கவின் தான? நான் உன்னை தொடும் போது அவனை அழைத்தால் என்ன நான் நினைப்பது?” ஆரியன் சீற்றம் பெருகியது.

“நான் எப்போது அழைத்தேன்?” அதியா அழுது கொண்டே கேட்க, மனமில்லை என்றாலும் அறியும் எண்ணத்தில் “மாமான்னு முணங்கியது?” ஆரியன் கேட்க, அழுகை நின்று கண்ணீருடன், “என்னை நம்பலையா?” என்று அவனை பார்த்து விட்டு படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு அழுதாள்.

“அதியா, நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை?” மேலும் ஆரியன் சினக்க, மனமுடைந்த அதியா போர்வையை விலக்காமல்,

“மாமான்னா..கவின் மாமா தான் எனக்கு மாமாவா? கணவனை மாமான்னு யாரும் அழைக்க மாட்டாங்களா? இப்ப தான் அத்தையிடன் நீங்க என்னை முழுசா நம்புவீங்கன்னு பெருமையா சொல்லீட்டு வந்தேன். இவ்வளவு கேவலமா நினைச்சுட்டீங்க ஆரு?”

வருண் மாமா என்னை கட்டாயப்படுத்தி என்னை தொட்டிருந்தால் கூட, வெறிநாய் பட்ட உடல்ன்னு ஊசி போட்டிருப்பேன். ஆனால் ஆரு..என அதியா கதறி அழுதாள்.

“என்ன சொல்ல வர்ற?” ஆரியன் மெதுவாக அதியாவிடம் அமர்ந்தான். அவன் போர்வையை விலக்க, வேண்டாம் என்னை தொடாதீங்க. எந்த ஆம்பளை என் பக்கம் வந்தாலும் நடுங்குவேன். ஏன்னா..நான் நிறைய வீட்ல பார்த்திருக்கேன். ஆனால் இன்று நடுங்கலை ஆரு. என்னோட உடம்பை எறிச்சிடலாமான்னு தோணுது என்று அழுதாள்.

“அதி” திகைத்து ஆரியன் அழைக்க, எனக்கு உங்களை மாமான்னு அழைக்கணும்ன்னு ஆசையா இருந்தது. எல்லார் முன்னும் அழைத்தால் வினு, சக்தி கிண்டல் பண்ணுவாங்கன்னு மனசுக்குள்ளவே வச்சிருந்தேன். இப்ப உங்களுக்கு என் மீதான காதலில் ஆசை வெளியே வந்து, “உங்களை தான் மாமான்னு அழைத்தேன். என்னை நீங்க இவ்வளவு மோசமா நினைச்சுட்டீங்க?” அழுதாள்.

அவள் கூறியதை கேட்டு, “அதி, நீ என்னை தான் மாமான்னு அழைத்தாயா? சாரிடா” அவளை போர்வையுடன் தூக்கி அணைத்தான்.

என்னை தொடாதீங்க ஆரு. நான் உங்களோட பேச மாட்டேன். உங்களிடம் இன்னொன்றும் சொல்லணும் அவள் சொல்ல, போர்வையை எப்படியோ விலக்கி அவள் முகத்தை தாங்கினான். அவள் அவனை பார்க்க முடியாமல் கண்களை மூடினாள்.

கண்ணை திறடி. நீ திடீர்ன்னு மாமான்னு சொல்லவும் அந்த ஆசையான அழைப்பு அவன் என்று பயந்து விட்டேன். என்னை மன்னிச்சிருடா..

இந்த இரண்டு செயினும் கவின் மாமா என் சார்பில் வாங்கியதாம். என்னிடம் உங்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்பதால் வாங்கினாங்கன்னு அத்தை கொடுத்தாங்க. இதை சொன்னால் கோபப்படுவீங்கன்னு தான் மறைத்தேன். நீங்க என்னை இவ்வளவு தவறாக எண்ணிய பின்னும் சொல்லாமல் இருந்தால் நீங்க சொன்னது உண்மையாகிடுமோன்னு பயமா இருக்கு. நான் சொல்லீட்டேன். அதை கழற்றிடுங்க. நான் இதை அத்தையிடமே கொடுக்கிறேன் என்றாள் தேம்பியவாறு.

அவளை இழுத்து அணைத்து, சந்தேகப்பட்டது என் தவறு தான். அதி நீயும் அம்மா போல என்னை விட்டு போயிருவியோன்னு வாய்க்கு வந்ததை பேசிட்டேன் அவன் சொல்ல, அவனை பார்த்த அதியாவிற்கு துருவினி, ஆரியன் அவன் அம்மாவை மிஸ் பண்றான்னு சொன்னது எண்ணத்தில் வந்தது.

ம்ம்…ஆரு, எனக்கு சோர்வா இருக்கு. “தூங்கவா?” அதியா கேட்க, “சரிடா நீ தூங்கு” அவன் படுக்கையில் படுத்து அவளை அவன் மார்பில் போட்டுக் கொண்டான்.

“ஆரு, நாம கொஞ்ச நாள் தள்ளியே இருப்போமா?” அதியா கேட்க, அவளை நகர்த்தி விட்டு கோபம் போகலையாடா?

எனக்கு கஷ்டமா இருக்கு. அழணும் போல இருக்கு. யாருமே இல்லாதது போல மனசுல ஏதோ..ஏதோ..பண்ணுது அவள் உதட்டை தொங்க விட்டு அழுதாள்.

அதிம்மா, சாரிடா. நான் கொஞ்சமும் யோசிக்காமல் பேசிட்டேன். வேணும்ன்னா என்னை அடிச்சிக்கோ ஆரியன் சொல்ல, அதியா அவனை பார்த்து இனி இப்படி பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என்றாள்.

கண்டிப்பாடா. என்னோட அதி என்னை தான் காதலிக்கிறாள் ஆரியன் குழந்தை போல் அழ, அவனை அதியா தழுவிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“நான் ஒன்று கேட்கவா ஆரு?”

என்ன அதி? பயத்துடன் ஆரியன் கேட்க, அவள் இதழ்களால் அவன் கன்னத்தை ஒத்தி விட்டு அதுவந்து..உங்களோட இடது பக்கம் உங்களுக்கு பிடித்த உணவு இருக்கு. மறுபக்கம் நான் இருக்கிறேன். நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க? அதியா துருவினி கேட்டதை கேட்க, அவனோ அவள் கேட்ட மறுநொடியே அதி தான் என்றான்.

“நானா? நீங்க சாப்பிடலைன்னா அன்று முழுவதும் உங்களுக்கு உணவு இருக்காது” அதியா அவன் முகத்தை ஏறிட்டாள்.

உணவென்ன உணவு? எனக்கு என்னை விட நீ தான் மகிழ்ச்சியாக இருக்கணும் என்றான்.

“அப்புறம் எதுக்கு இப்படி கேட்டீங்க?” அவள் மீண்டும் அதிலே வந்து நின்றாள்.

சாரிடா அதி. எனக்கு அம்மா தான் எல்லாமே. அப்பா ஆர்மியில் இருந்த போது நானும் துருவும் அம்மாவிடம் தான் வளர்ந்தோம். அப்போது தான் இன்று பார்த்தேல்ல இந்த மாமா குடும்பம் தான் உதவியா இருந்தாங்க. அதான் முதலில் அமைதியாக இருந்தேன். அம்மா உன்னை போல தான் ரொம்ப வெகுளி. எல்லாரும் அவங்கள எளிதாக ஏமாத்திருவாங்க. அதே போல அவங்களை ஏமாத்தி வந்த அந்த சைந்தவியால் எங்களை விட்டு போனாங்க..

நீயும் அப்படி இருக்கக் கூடாது அதி. நீ தைரியமா இருக்கணும். உன்னை ஏமாற்ற எண்ணுபவர்களை அருகே விடவே கூடாது அவன் சொல்ல,

ம்ம்..ம்ம்…

கடைசியாக..கவினும் நீயும் அடிக்கடி நெருக்கமா வேற இருந்தீங்கல்ல..அதான் உனக்கு அவனை பிடிக்குமோன்னு பயந்துட்டேன். அதனால் தான் இப்படி பேசிட்டேன். இனி இப்படி நடக்காதுடா அதிம்மா..

போதும் ஆரு. இதை மட்டுமல்ல..நானும் உங்களை முழுதாக நம்புவேன்னு மட்டும் மறக்காதீங்க.

ம்ம்..என்று அவன் சொல்ல, “அவ்வளவு தானா?” அதியா அவள் பாணியில் கேட்க, கண்ணை துடைத்து அவளை பார்த்து, “உன்னை கஷ்டப்படுத்தினேன்ல்ல.. என்னை அடிச்சிக்கோ” ஆரியன் சொல்ல, அவனை நெருங்கி வந்த அதியா அவன் இதழ்களில் முத்தமிட்டாள்.

இருவரின் கூடலுக்கு பின்னான ஊடல் முடிந்து மீண்டும் கூடல் இனிதே தொடர்ந்தது.

அதிவதினி அவர் வீட்டிற்கு வந்ததும் தன் மகனை தேடினார். அவன் ஆத்விக்குடன் வெளியே சென்றிருப்பதாக சுகுமார் சொல்லவும் கவினிற்கு அழைத்தார். அவன் அலைபேசியை எடுக்கவில்லை. அதனால் ஆத்விக்கை அழைத்தார். அவன் அதை எடுத்து, யாரு? என்னோட பேபிவாம்மாவா? உலறலுடன் பேசினான்.

“ஆது, குடிச்சிருக்கியா?” அதிவதினி சினமுடன் கேட்க, அத்தை..நான் லிட்டில் பைட் தான் குடிச்சேன். அத்தை கார் ரொம்ப வேகமா போகுது என்று ஜூ..ஜூ..என அவன் தோளில் சாய்ந்திருக்க கவினை தட்டிக் கொடுத்தான்.

“ஆது நீயா கார் ஓட்டுற?” அதிவதினி பயத்துடன் கேட்டார்.

அங்கிள்…தான்..அங்கிள் ஆத்விக் அழைக்க, உனக்கும் தங்கச்சிம்மாக்கும் வேற வேலையே இல்லையா? எப்ப பாரு என்னை அங்கிள்ன்னு சொல்லியே மானத்தை வாங்குறீங்க? லோகேஷ் அவனை முறைத்தான்.

மானத்த வாங்க முடியாது அங்கிள். அத்தை..இந்த அங்கிள் ரொம்ப கூல். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட அதிக்கு நல்ல துணை கிடைச்சிருச்சு அவன் உலற, நோ..கத்தினான் கவின் போதையில்.

“ஆண்டவா? இவனுக அலப்பற தாங்க முடியலடா” என்ற லோகேஷ், கவின் மறுபடியும் ஆரம்பிக்காதடா.

“ஆது, அலைபேசியை கொடு. நான் பேசுகிறேன்” பிரகாஷ் கேட்க, நோ..நோ..என்ற கவின் அலைபேசியை கீழே தட்டி விட, அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிவதினிக்கு தன் மகனும் குடித்திருக்கிறான் என தெரியவும் கண்கள் கலகியது. என்ன தான் அதி திருமணத்திற்காக எல்லாம் செய்து ஆரியன் கையில் ஒப்படைத்தாலும், தன் மகனை தேற்றும் எந்த வழியும் அவருக்கு புலப்படவில்லை.

“பிரகாஷ் கவின் அம்மாவிற்கு கால் செய்து வெளியே வரச் சொல்லு” லோகேஷ் சொல்ல, அவன் அழைத்து சொல்லி சற்று நேரத்தில் கவின் வீட்டிற்கு கார் வந்து நின்றது.

வெளியே நின்றிருந்த அனைவரும் ஆத்விக்கும் கவினும் முழுக்குடிகாரனாக வந்து இறங்கியதை பார்த்து அதிர்ந்து நின்றனர். தன் மகனை தாங்கிக் கொள்ள பெற்றோர்கள் இருவரும் செல்ல, ஆத்விக் தள்ளாடியவாறு நின்றான்.

கவின் இறங்கி அவன் அம்மாவை பார்த்து, “அம்மா எனக்கு வெல்லக்கட்டி வேணும்” அழ, அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர். அவர்கள் அவனை வீட்டிற்குள் இழுத்து சென்றனர்.

“மச்சான், நான் உனக்கு வேற வெல்லக்கட்டி வாங்கித் தரவா?” ஆத்விக் அவனை நோக்கி நடந்து தடுமாற, பிரகாஷூம் லோகேஷூம் அவனை பிடித்தனர்.

“டேய், முதல்ல ஸ்டெடியா நில்லு” ஆத்விக்கை அவர்கள் இழுக்க, நான் வர மாட்டேன். என்னோட மச்சான் சோகமா இருக்கான். அவனுக்கு வேற வெல்லக்கட்டி வாங்கிட்டு தான் வருவேன் ஆத்விக் அவர்கள் இருவரையும் தள்ளினான்.

வெல்லக்கட்டி தானடா, இதோ இப்பவே கடையில வாங்கிட்டு வாரேன் லோகேஷ் சொல்ல, “இது வேறடா மாமா..பிகர்..பிகர்” அவன் சொல்ல,

“ஹப்பா, இவனை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலை” லோகேஷ் தலையில் கை வைத்து அங்கேயே அமர்ந்தான்.

உத்தமசீலன் வெளியே வந்து இவர்களை பார்க்க, துருவினி வெளியே இருந்த பக்கெட்டில் நீர் இருப்பதை பார்த்து ஆத்விக்கை ஒரு பார்வை பார்க்க, “வேண்டாம் துரு” சக்தி அவளை தடுக்க..

இதுக்கு மேல விட்டால் கண்டவாறு பேச ஆரம்பித்து விடுவார் என்று விரைந்து பக்கெட்டை எடுத்து அவனை நோக்கி செல்ல, “துரும்மா” உத்தமசீலன் சத்தமிட்டார். அவரை கண்டுகொள்ளாமல் அவனருகே செல்ல அவன் சட்டென திரும்பவும் மூச்சே நின்றது போல துருவினி அப்படியே நின்றாள்.

“வினு டார்லிங், நீயும் இருக்கியா?” என அவள் எதிர்பார்க்காத நேரம் துருவினியை இதழ்களை சிறைபிடித்தான் ஆத்விக். சக்தி வாயில் கை வைத்து கண்களை விரித்து பார்க்க, “இதுக்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன்” உத்தமசீலன் தலையில் அடித்தார்.

“ஆது, என்ன பண்ற?” பிரகாஷ் அவனை பிடித்து இழுக்க, “வினு டார்லிங் லவ் யூ” ஆத்விக் போதையில் அவன் காதலை கூறி விட, அவளோ திகைத்து பின் சுதாரித்து..ச்சீ..டர்ட்டி.. டர்ட்டி..என் மேலும் வாடை அடிக்குது என வெளியே இருந்த தண்ணீர் குழாயில் நீரை பிடித்து அவள் வாயை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“ஏம்மா, அவன் செய்ததற்கு எதிர் வினையா? குடித்ததற்கு எதிர்வினையா?” லோகேஷ் துருவினி அருகே வந்து சந்தேகம் கேட்டான். அவனை முறைத்து விட்டு ஆத்விக்கை பார்த்தாள். அவன் வந்த காரின் வெளியே சாய்ந்து அமர்ந்திருந்தான் இல்லை அவனை அமர வைத்திருந்தனர்.

“அவரை உள்ளே கொண்டு வாங்க” என்று உத்தமசீலனை பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றாள்.

லோகேஷூம் பிரகாஷூம் ஆத்விக்கை அறையின் படுக்கையில் கிடத்தினர். அவர்கள் பின் வந்த உத்தமசீலன், “நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்” இந்த விசயம் எதுவும் ஆரியனுக்கோ அதிக்கோ தெரிய வேண்டாம் .

ஓ.கேப்பா என்று இருவரும் அங்கிருந்து அகன்றனர். சக்தி உள்ளே வந்தான். ஆத்விக் அமைதியாக கண்களை திறந்தும் மூடியும் படுத்திருந்தான்.

“ஆது, எதுக்கு குடிச்சீங்க?” உத்தமசீலன் கேட்க, “அப்பா, ஐ மிஸ் யூ” என்று அவர் கரத்தை இறுக பற்றினான். அவர் அவன் படுக்கையில் அவனை நெருங்கி அமர்ந்தார்.

“அப்பா, நம்ம அதி இனி பாதுகாப்பா இருப்பா. இப்ப தான் நிம்மதியா இருக்கு” உத்தமசீலன் கையை அவன் கண்ணில் வைத்து ஒற்றினான். அவர் அமைதியாக அவனை பார்க்க, சக்தி அவரை கவனித்துக் கொண்டிருந்தாள்.

இன்று நீங்கள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். அப்பா..அவன் வரப் போறான்..உங்களை கொன்றவனுக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

உத்தமசீலன் அதிர்ந்து அவனையும் சக்தியையும் பார்த்தார். அவள் “ஆம்” தலையசைத்தாள்.

என்னம்மா?

சார் அப்பா அவர் கண் முன்னே கொலை செய்யப்பட்டார். இது அவருக்கு மட்டுமே தெரியும். அவரது சிறுவயதில் நடந்தது.

“யாரும்மா?”

“டேய் சங்கர நாராயணா, உன்னை சும்மா விட மாட்டேன்டா” கத்தினான் ஆத்விக். சக்தி வேகமாக அறைக்கதவை சாத்தினாள்.

“ஆது, அமைதியா இரு” உத்தமசீலன் சொல்ல, அப்பா எங்ககிட்ட வந்துட்டீங்களா? போகாதீங்க என சொல்லிக் கொண்டே அவர் தோளில் சாய்ந்து கண்ணை மூடினான். அவன் தலையை நகர்த்தி அவர் மடியில் போட்டுக் கொண்டார் உத்தமசீலன். அவன் அவர் கையை விடவேயில்லை.

சங்கர நாராயணன். வருண் பெரியப்பா. பாரின்ல்ல இருக்காங்க.

இங்க தான் இருந்திருக்காங்க. அவர் காதல் திருமணம் என்பதால் வீட்டை விட்டு வெளிய அனுப்பீட்டாங்க. அதி குரூப்ல்ல தான் வேலை செய்தார். நம்ம ஆத்விக் சார் அப்பா அதிகுணன். அவருக்கு ஏமாற்றுபவர்களை பார்த்தாலே பிடிக்காது. கம்பெனியில நிறைய பணத்தை கணக்கு காட்டாமல் எடுத்ததால் அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க.

அவர் குடும்பத்தின் உதவியை நாடினார். ஆனால் அவர்கள் யாருக்கும் இவர் மீது நம்பிக்கை இல்லாததால் உதவவில்லை. இவராக ஆத்விக் அண்ணா அப்பா அறைக்குள் நுழைந்து அவரை கொன்றிருக்கார். அண்ணா அங்கே தான் இருந்திருக்கிறார். அந்த ஆள் இவரை கவனிக்கவில்லை. அதிர்ச்சியில் பேச்சில்லாமல் இருந்ததால் அண்ணா உயிரோட இருக்காங்க.

கொன்று விட்டு, இவர் மகன்களுடன் பாரின் கிளம்பீட்டார்.

அவர் மனைவி?

இவரை பற்றி முழுவதும் அறிந்த அவங்க டிவோர்ஸ் பண்ணீட்டு வேற குடும்பத்தை தேடிக்கிட்டாங்க. நம்ம அதியை பற்றி ஓடிப் போனவன்னு சொன்னது போல வது அத்தையையும் அவரையும் பற்றி கிளப்பி விட்ருக்காங்க. ஆனால் மாமா அத்தையை முழுதாக நம்பினார். அதனால் தான் அத்தை மொத்தத்தையும் விட்டு வந்துட்டாங்க..

ஓ..இவ்வளவு நடந்திருக்கா? அவனோட குடும்பமாக இருந்தாலும் அவனை யாரும் நம்பவில்லை. பின் எப்படி அவனை காப்பாற்ற பாரின்ல்ல இருந்து வருவான்? உத்தமசீலன் கேட்க,

காப்பாற்ற இல்லை சார்..அவர் தான் அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு. இவர் இங்கேயே இல்லை என்பதால் இவர் மீது எந்த பழியும் வராது. சொத்தை கவர்மெண்ட்டை எடுக்க விடாமல் இவர் அனுபவிக்க எண்ணி தான் அவர் வந்திருக்கார்.

வந்திருக்காரா?

ம்ம்..வந்துட்டார் மாமா. அவர் நம்ம அதிகுணன் சாரை கொலை தான் செய்தார் என்பதற்கான வீடியோவே இருக்கு. அதை கொடுத்து அவர் அப்பாவை கொன்றவனை உள்ள தள்ள ஏற்கனவே நாங்க ஏற்பாடு செய்துட்டோம்.

உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுது? மாப்பிள்ளை உன்னிடம் சொன்னாரா?

இல்ல மாமா, என்னோட சின்ன அண்ணாவும் ஆத்விக் அண்ணாவும் நல்ல நண்பர்கள். அண்ணா என்னிடம் ஒரு கேஷ் விசயமாக பேச வந்து போது சொன்னான்.

ம்ம்..ஆரியனுக்கு சொல்ல தோணலையா? சக்தியிடம் உத்தமசீலன் கேட்டார்.

உங்க மகனோட பர்பெட் வேலை உங்களுக்கு தெரியாதா? இன்று மாலையே அவருக்கும் எல்லாம் தெரிந்து விட்டது.

சரிம்மா..நீ போ. ஓய்வெடு..

மாமா, அண்ணாவை படுக்கையில் போட்டு நீங்களும் உறங்க போங்க.

உத்தமசீலன் புன்னகையுடன், “கொஞ்ச நேரம் கழித்து போறேன்ம்மா” என்று அவர் ஆத்விக் தலையை வருடியவாறு அவனை பார்த்தார்.

மாமா, தேங்க்ஸ் என்ற சக்தி, இன்று அவரோடவே படுத்துக்கிறீங்களா? அவர் ரொம்ப குடிச்சிருக்கார். உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?

இல்லம்மா, எனக்கு பிரச்சனையில்லை. மாப்பிள்ள மனநிலையில் குடி அவசியம் தான். நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பும்மா அவர் சொல்ல, சக்தி கதவை திறந்து வெளியே வந்தாள்.

துருவினி கையை கட்டிக் கொண்டு அவளை முறைத்து பார்த்தாள்.

எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருது. “குட் நைட் வினு” சொல்லி சக்தி ஓடி விட்டாள். கதவை திறந்து இருவரையும் பார்த்த துருவினி அங்கிருந்து நகர்ந்தாள். உத்தமசீலன் தன் மகளை பார்த்து புன்னகைத்தார்.