அத்தியாயம் 28

ரகுராம் முத்தமிடவும் மோகனா அடங்கவும் மெதுவாக முன்னேறலானான்.

பெண்மை விழித்துக்கொள்ள, அவன் கீழுதட்டை கடித்து வைத்தாள் மோகனா. 

“ஆ…” என கத்தியவன் அவளை திட்ட என்ன? முறைக்காக கூட தோன்றாமல், பாவமாய் பார்த்து “காயப்படுத்த முடிவு பண்ணா உள்காயமா பண்ணு. இப்படி பண்ணா நான் எப்படி வெளிய தலைகாட்டுவேன்” அவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல

“ஓஹ்… ஓஹ்… குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலனு சொல்லுற? உன் மூஞ்சத்தான் பேர்கனும். அப்போதான் உன் ஸ்டர்டம் கீழ வரும்”  நடிகனின் முகத்துக்கான மதிப்பை பற்றி பேசுகிறானென்று சீறினாள்.

“ஏன்டி நான் என்ன உன்கிட்ட நடிச்சிகிட்டா இருக்கேன்? எப்போ பார்த்தாலும் என் தொழிலை கிண்டல் பண்ணுற? நாளைக்கு காலையில சூரியன் கண்ணுக்கு குளிரா வரானோ இல்லையோ விடிஞ்சா நான் இந்த ரூமை விட்டுப் போகணும். நீயும் நானும் மட்டுமா இந்த வீட்டுல இருக்கோம்?

உங்கண்ணன் கிண்டல் செய்வான். உன் பாட்டி குறுகுறுன்னு பார்ப்பாங்க. உங்கப்பா என்ன சொல்வாரோ” பலபேர் முன்னால் நடித்தாலும் குடும்பம் என்று யாருமில்லாதவனுக்கு இந்த அனுபவம் புதிதல்லவா கொஞ்சம் பீதியோடுதான் கூறினான்.

“ஓஹ்… ஓஹ்… அப்பா பேசுவாரு, அப்பத்தா பேசும் என்று என்ன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போக பிளான் பண்ணுற” என்றாள் மோகனா. 

“ஏன்டி நான் என்ன சொன்னா நீ என்னத்த சொல்லுற?” என்ன இவள் சண்டை போடுவது போலயே பேசுறாளே. இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாளா? நான் பேசி வச்சது கொஞ்சமா நஞ்சமா? ஒருநாளில் கோபம் போகுமா என்று அவளை பாவமாய் பார்த்தான். 

மோகனாவுக்கு ரகுராமோடு மல்லுக்கட்டுவது பிடித்திருந்தது. வெளிநாட்டில் இருக்கும் பொழுதும் விக்ரமோடு பேச வேண்டும் என்று இவன் அலைபேசிக்கு அழைத்து இவனோடு மல்லுக்கட்டி பிபியை எகிற வைத்த பின்தான் விக்ரமோடு பேசுவாள். 

அவனை வம்பிழுத்தவளின் நெஞ்சின் ஓரம் அவன் பேசியவைகளின் தாக்கம் இல்லாமல் இல்லை. இதனால்தான் பேசினேன் என்று ரகுராம் காரணங்களை கூறினாலும், புத்திக்கு எட்டியது மனதை தொடவில்லை.

ஏதோ அண்ணன் சொன்னதற்காக என்னை திருமணம் செய்து கொண்டு சமாதானம் செய்ய கதை சொல்கிறான். கைதேர்ந்த நடிகனுக்கு இதை செய்ய முடியாதா? என்றுதான் எண்ணினாள்.

தான் தான் இவனை சிறுவயதிலிருந்தே காதலிக்கிறேன். சொல்லப் போனால் பிடிவாதமாக காதலிக்கின்றேன். ஆனால் இவனுக்கு தான் அப்படியில்லையே நான் எத்தனையாவது காதலோ என்ற பொறாமை.  இதில் கூட நடிக்கும் நடிகைகள் வேறு “ஜென்டிமென்” என்று பட்டம் கொடுத்து இவள் பொறாமையை மேலும் தூண்டிவிட்டிருந்தனர்.

“எல்லா நொள்ளக்கண்ணும் இவன் மேலதான். இவன் வேற அவளுங்களைப் பார்த்தா இளிக்கிறான்” எங்கே ரகுராம் தனக்கில்லையோ என்ற அச்சத்தில் அவர்களை வசைபாட முடியாமல் அந்தக் கோபத்தையும் இவன் மீதுதான் தீர்த்துக்கொள்வாள்.

சிலநேரம் அவனை சீண்டுபவள். சிலநேரம் கோபத்தை காட்டுவாள்.

அவன் தன்னை வேண்டாமென்றது. அதன் பின் ஏற்றுக்கொண்டது எல்லாம் தன்னோடு பிறந்த அவன் நண்பனுக்காக மட்டும் என்பது அவள் மனதில் ஆழப்பதிந்ததின் வெளிப்பாடுதான் இந்தக் கோபம். அதை ரகுராம் உணர்ந்தானா? 

“மோகனாவை தன் புறம் இழுத்த ரகுராம் “உன்ன எப்படி சமாதானப்படுத்துறதென்றே தெரியல. நீயே சொல்லு என்ன சொன்னா நீ சமாதானமடைவ?” காலம் முழுக்க இவளோடு சண்டை போட்டுக் கொண்டே வாழ முடியுமா? காலில் விழுந்துடலாமென்றுதான் அவளிடமே ஆலோசனை கேட்டான்.

“பொதுவா என்ன செஞ்சான்னுதான் கேப்பாங்க. நீ நடிகன்தானே” அவள் மனதுக்குள் இருந்த புயலோ அவனை சுற்றிச் சுற்றி அடிக்க காத்திருக்க, அவன் எதை பேசினாலும் அனல் காற்றாய் தகித்தாள்.

“என்ன பேசினாலும் அதுல தொங்குறியே உன்ன…” இவன் அவள் கன்னம் கடிக்க,

இவள் ஆசையாக காதலை சொல்ல சென்ற பொழுது யாரோ ஒருத்தியை நடுரோட்டில் முத்தமிட்டானே! அக்கணம் அக்காட்ச்சி கண்ணில் தோன்றி மறைய அவன் முத்தமிட முயல்வதாக நினைத்து “உனக்கு கிஸ் மட்டும்தான் பண்ணத் தெரியும்” என்று அவன் முகத்தை தள்ளிவிட்டாள்.

“எனக்கு என்னவெல்லாம் பண்ணத் தெரியும் என்று சொல்லுறத விட செய்யும் போது உனக்கே புரியும். எங்க நீதான் ஒத்துழைக்க மாட்டேங்குறியே. நீ ஒத்துழைச்சா உனக்கே கொழந்த பொறக்கும். நீ என்னடான்னா இன்னும் குழந்தை போல அடம்பிடிக்கிற”

மோகனாவை வெறுப்பேத்த எண்ணி ரகுராம் அவ்வாறு கூறவில்லை. அவளை சமாதானம் செய்யவும் வேண்டும். அவன் ஆசையை சொல்லவும் வேண்டும் என்று பேசியிருக்க,

“நான் என்ன குழந்தையா?” அவனை அடித்தவளின் கண்கள் கலங்க அதை அவன் பார்த்து விடாது முகத்தை மறைத்துக் கொண்டாள்.   

தன்னை அடித்தவள் சட்டென்று திரும்பவும் கோபத்தில் திரும்பினாளென்று பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு அவளை கிச்சுக் கிச்சு மூட்ட முயல, மோகனா கண்களை துடைப்பது தெரிந்ததும் பதறினான் ரகுராம்.

அவளை தன் புறம் திருப்பியவாறே “ஏய் என்னாச்சு? இப்போ எதுக்கு அழுற?” நான் என்ன சொல்லிவிட்டேன். இதுக்கே கண்ணை கசக்குறாளே. இவளோடு எப்படி குடும்பம் நடாத்துவது? என்ற அளவுக்கு ரகுராம் சிந்திக்கலானான்.

“நான் கொழந்தையா? எப்பப் பார்த்தாலும் கொழந்த கொழந்தைன்னு என்ன ஒதுக்கியே வைக்கிற?”

விக்ரம் மோகனாவை வம்பிழுத்தாலும் சரி, சண்டை போட்டாலும் சரி “குழந்தைய ஒன்னும் சொல்லாதே” என்றுதான் ரகுராமின் வாயிலிருந்து வரும்.

என்று அவன் மீது காதல் கொண்டாலோ அந்த வார்த்தை அவளுக்கு நாராசமாக ஒலித்து, ரணத்தை மட்டும் தான் கொடுத்ததென்று இவனுக்கு யார் புரியவைப்பது.

“நான் எப்போ ஒன்ன ஒதுக்கி வச்சேன்…. ப்ச்.. நீ இன்னைக்கி பேசினத்துக்கு அழல. முதல்ல எதுக்கு அழுறான்னு சொல்லு” சமாதானப்படுத்தலாமென்று இவ்வளவு நேரமும் இழைந்தவன் அதட்டினான்.

ஒரே பெண்குழந்தை. அதுவும் அன்னையில்லாதவள் என்று வீட்டார் செல்லம் கொடுத்தே மோகனா வளர்ந்திருக்க, அழாமல் கேட்டதெல்லாம் கிடைத்ததோடு, அவளை யாரும் அதட்டியதே இல்லை. கணவனாக ரகுராம் அதட்டியதும் கோபம் கொண்டாள்.

“உனக்கு என்ன பிடிக்கவே இல்ல. எதோ உன் நண்பன் தங்கச்சி என்று என் கூட பழகி இருக்க. அவன் பேச்ச மீறிய முடியாதென்று கல்யாணமும் பண்ணிகிட்ட.  என்ன கொழந்த கொழந்தைன்னு சொல்லி கொழந்தையாவே பாக்குற. நீ என்ன பொண்ணாவே பார்க்கல. உன் கண்ணுக்கு நான் பொண்ணாவே தெரியல” திருமணம் நடக்கட்டும் உன்னை பார்த்துகிறேன் என்றவள்தான் இப்படிப் பேசினாள்.

“ஏன்டி விடிய விடிய ராமாயணம் படிச்ச கதை போலவே பேசுற. நான்தான் என்ன நடந்தது. ஏன் அப்படி பேசினேன் என்று விளக்கமா, விலாவாரியா சொன்னேனே” என்ன இவள் புரிந்துகொள்ளாமல் அடம்பிடிக்கிறாளே என்ற கோபம் ஒருபுறம். இவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றும் புரியாமல் முழுபிதுங்கலானான்.  

அவனை ஏகத்துக்கும் முறைத்தவளோ  “சினிமால மட்டும் நாலு பக்கத்துக்கு டயலாக் பேசுவியே. நாளே வரிலே சொல்லிட்ட” எத்தனை வருட காதலின் வலி. ஒரே இரவில் போகுமா? இவளை பார்த்தாலே ஒதுங்கி ஓடுபவன் இன்றுதான் கூட இருக்கின்றான். அதுவும் அவள் பேசுவதியெல்லாம் கேட்டவாறு. மனதில் இருக்கும் ரணத்தைத்தான் மோகனா கக்கினாள்.  

“சரி இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை?” முதலில் இவள் எதற்காக கோபம் கொண்டாள் என்று அறிந்தால் தானே சமாதானம் செய்ய முடியும் என்று சம்மணமிட்டு அமர்ந்தவாறே கேட்டான்.  

“நீதான்” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் மோகனா.

“ஐயோ இவ கொழந்தைன்னு அடிக்கடி நிரூபிக்கிறாளே. அதைச் சொன்னா என்ன அடிப்பா” பொறுமையை இழுத்துப் பிடித்தவன் “நான்தான்னு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? தெளிவா சொல்லு” இந்தமுறை அதட்டவெல்லாம் இல்லை. அமைதியாகத்தான் கேட்டான்.

படுத்த வாக்கில் அவனை பார்ப்பது சிரமமென்று எழுந்து அமர்ந்தவள் “நீ காலேஜ் போறப்போ எனக்கு தெரிஞ்சி ஒரு லவ். எத்தனை இருந்ததோ யாருக்குத் தெரியும்? இப்போ நீ இருக்குற பொசிஷனுக்கு பொண்ணுங்க உன் பின்னாடி வருவாளுங்க. அதுல எவள நீ வச்சிருக்கியோ. இப்போவே இப்படி. நீ ஸ்கூல் போற டைம் எப்படி இருந்தியோ” பொறாமையில் பொங்கி வழிந்தாள்.

“நான் காலேஜ் போறப்போ லவ் பண்ணேனா?” தன்னிடமே கேட்டவன் “இங்க பாரு நான் ஒன்னும் சித்தரோ, புத்தரோ இல்ல. பொண்ணுங்களை பார்த்தா ஒதுங்கிப் போக. அதுக்காக பிளேபாயும் இல்ல. காலேஜ்ல நான் யாரையும் சீரியஸ்ஸா லவ் பண்ணதும் இல்ல. அப்படி பண்ணி பிரேக்கப் ஆனா இப்படி இருந்திருக்கவும் மாட்டேன்”

காதல் தோல்வியில் மனம் வெம்பும் கதாநாயகனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றான். அதை கண்ணில் கொண்டு வந்தவன் உறுதியாக மொழிந்தான். 

“ஆமா… நீ எந்த விசயத்த சீரியஸா பார்த்த? உனக்கு லவ்வும் ஒரு கேம்தான்” மீண்டும் அவனை சாடினாள்.

“என்ன பிளேபாய் என்று முத்திரைக் குத்திட்டுத்தான் பேசிகிட்டு இருக்கன்னு புரியுது. அம்மா… தாயே… நான் அப்படி என்னத்த செஞ்சேன்” தான் என்ன தவறிழைத்தோம் ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் என்று கன்னத்தில் கைவைத்தவாறே புரியாமல் பார்த்தான்.

“வெக்கமே இல்லாம நடுரோட்டுல ஒரு பொண்ண கிஸ் பண்ணியே. என்னதான் லவ்வராக இருந்தாலும் நடுரோட்டுலயா கிஸ் பண்ணுவாங்க? “

அவள் படித்ததோ வெளிநாட்டில். அங்கு இதெல்லாம் சாதாரணம். காதலனும், காதலியும் முத்தமிடுவதில் என்ன தவறு. ஏன் இவளே ரகுராமை முத்தமிட்டாளே. அவன் கொடுத்த முத்ததையும் ஆழ்ந்து அனுபவித்தாளே.

அப்படியென்றால் அநாகரிகமாக ரகுராம் நடுவீதியில் முத்தமிட்டதுதான் தவறு என்கிறாளா?  இல்லவே இல்லை. அவள் ஆசையாக காதலை சொல்ல சென்றால் அவன் அவனுடைய காதலியோடு சல்லாபமிட்டது இவள் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கவே பேசிவிட்டாள். 

“நம்ம சினிமால ஸீனுக்கு ஸீன் கிஸ்ஸிங் ஸீன் வைக்க மாட்டேங்குறாங்க என்று நானே கடுப்பாகி ஹாலிவுட் பக்கம் போலாமா என்று யோசிக்கிறேன். நீ என்னடான்னா நான் பண்ணாதத பண்ணதா சாதிக்கிற” நான் யாரையும் முத்தமிடவில்லை என்று சத்தியம் செய்து கூறாமல், நான் யாரையும் நடுரோட்டில் வைத்து முத்தமிடவில்லை என்று மாத்திரம் வாதிட்டான் ரகுராம்.  

“ஏன் உனக்கு பொண்ணுங்கள பார்த்தா கிஸ் பண்ணத் தோணுதா? சரியான காஜி புடிச்சவன்” அவன் கிண்டல் செய்வது புரிந்தாலும் முறைத்தவள் விசயத்துக்கு தாவி “பொய் சொல்லுற பாத்தியா. நானே என் ரெண்டு கண்ணாளையும் பார்த்தேன். கூட என் உடம்பிறப்பும் இருந்தான். அவன்தான் சொன்னான் நீங்க ரெண்டு பேரும் லவ்பர்ட்ஸ் என்று” அன்று நடந்ததை கண்ணில் கொண்டு வந்தவள் ஒப்பித்தாள்.

“விக்ரம் சொன்னானா? நான் செய்யாத ஒண்ண அவன் சொல்லியிருக்க வாய்ப்பில்லையே” நண்பன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டான் என்று தெரிந்தமையால் “ஆமா… என்னக்கி நீ பார்த்த?” என்று அவளிடம் அமைதியாக கேட்க, மோகனாவும் தன் மனம் உடைந்த நாளின் கதையை விலக்கினாள்.

“அண்ணகிதானே நீ ஆன்லைன்ல யாரையோ லவ் பண்ணணு அழுத” ஞாபகம் வந்ததில் கேட்டான்.

“ஆமா… நீ உன் லவ்வர கிஸ் பண்ணிக்கிட்டு இருந்த. அத பார்த்து வயிறெறிஞ்சி நான் அழுததால விக்ரம் அப்படிச் சொன்னான்” வெறுப்பை உமிழ்ந்தாள்.

“என் லவ்வர நான் கிஸ் பண்ணா நீ எதுக்கு அழணும்?” எதோ புரிவது போல் இருக்க, “அவ என் லவ்வாரே இல்ல. அங்க நடந்தது ஷூட்டிங். அத பார்த்து அழுதிருக்க. உன்ன என்னனு சொல்ல” தான் இன்னொரு பெண்ணை முத்தமிட்டதால் இவள் அழுதாளென்றால் அப்பொழுதிலுருந்தே இவள் என்னை காதலிக்கின்றாளா? அதன்பின்தான் இவள் என்னிடம் கடுமையாக நடந்துகொண்டாள். ஒருவழியாக மோகனாவின் கோபத்தின் ஆரம்பப்புள்ளியை கண்டு பிடித்திருந்தான். 

“நடிக்கிறத விட்டு டைரக்டர் ஆகலாம் என்று முடிவு பண்ணியிருக்கியா?” மோகனா சட்டென்று வேறு தலைப்புக்கு மாறவும் புரியாது முழித்தான் ரகுராம். 

“இல்ல நான் என் கண்ணால பார்த்தேன் என்று சொல்லுறேன். நீ கத சொல்லுறியே அதான்”

சட்டென்று சிரித்தவன் “இப்படி காமடி பண்ணக் கூடாது… கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் தீர விசாரிக்கிறதே மெய் என்று சொல்லியிருக்காங்கல்ல. அன்னைக்கி நடந்தது ஷூட்டிங் தான். என் பஸ்ட் ஷூட்டிங். ஆனா அந்த அட் நல்லா வரலன்னு கான்செப்ட்டையே மாத்தி எடுத்தாங்க. அந்த அட் வந்திருந்தா. அப்போவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்” நடந்தது எதுவோ அதைத்தான் சொன்னான்.

“நீ நடிகன்டா…” ஒற்றை வாக்கியத்தில் அவன் கூற்றை மறுத்ததோடு நீளமாக பேசி விளக்கம் கொடுத்தவனை அசிங்கப்படுத்தினாள்.

இவள் ஒரு குழந்தை. அடம்பிடிப்பதில் இவளை மிஞ்ச ஆளில்லை. அன்று மோகனா அழுத அழுகையை கண்ணில் கொண்டு வந்தவன் “எப்போல இருந்து இவ என்ன லவ் பண்ணுறான்னு தெரியலையே. அன்னைக்கி ஷூட்டிங்னு தெரியாம பார்த்து அழுதிருக்கா. விக்ரம் சமாதானப்படுத்த எதோ சொல்லியிருக்கான். நண்பன் துரோகி. தங்கச்சிய உசார் பண்ணிடுவேன்னு உண்மைய சொல்லாம இருந்திருக்கான்” உள்ளுக்குள் குஷியானாலும் தான் என்ன சொன்னாலும் நம்பாமல் இருப்பவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் முழித்தான்.       

“இங்க பாரு இப்போவே உங்கண்ணன கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்கலாம். என்ன அவன் லவ் பண்ணவள பல வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணி பஸ்ட்நைட் ரூம்ல இருக்கான். இல்லனா போன்ல கூட பேசியிருப்பேன்” விக்ரமின் சந்தோசத்தை கெடுக்க வேண்டுமா என்று ரகுராம் யோசித்தான். 

“என்ன எதையாவது சொல்லி என்ன சமாதானப்படுத்தலாமென்று எங்கண்ணன் ரூம்ல இருக்குறது தெரிஞ்சே அவனை இழுக்குறியா?” அவனை போலவே கன்னத்தில் கைவைத்தவள் முறைக்கலானாள்.

தன்னை போலவே நகல் செய்யவும் சட்டென்று சிரித்தவன் “நீ கொழந்தடி…” என்று வாய் வரை வந்ததை சொல்லாமல் “நீயே போய் உங்கண்ணன் ரூம் கதவை தட்டி பஞ்சாயத்தை கூட்டு. நான் வரமாட்டேன். உனக்குத்தானே உண்மை தெரிஞ்சிக்கனும் என்று அடம்பிடிக்கிற” என்றான்.

நடுஇரவில் சென்று விக்ரமின் கதவை தட்டுவது ஒன்றும் அநாகரீகமில்லை. ஆனால் இன்று செல்லக் கூடாது அதுவும் அவனுக்கு திருமணமாகிய அன்று செல்லக் கூடாது என்று தெரியாத அளவுக்கு மோகனா ஒன்றும் குழந்தையல்லவே.

“நான் போகமாட்டேன் என்று உனக்குத் தெரியும். அதான் என்ன வெறுப்பேத்துற. இரு அவனுக்கு போன் பண்ணி கேட்குறேன்” என்றவள் சற்றும் யோசிக்காமல் விக்ரமை அலைபேசியில் அழைக்கலானாள்.

மோகனா எதையும் செய்யக் கூடியவள் என்பதால் ரகுராம் அமைதியாக பார்த்திருக்க, விக்ரமின் அலைபேசி அணைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் தான் மோகனாவுக்கு கிடைத்தது.

பாரதியோடு இருக்கும் பொழுது யாரும் தொந்தரவு செய்துவிடக் கூடாதென்று விக்ரம் அலைபேசியை அணைத்திருக்க, அது ரகுராமுக்கும் தெரியவில்லை.

“என்ன ரெண்டு பேரும் பேசி வச்சி கேம் ஆடுறீங்களா?”

“உங்கண்ணன் போன எடுக்கலனதும் அதுக்கும் நான்தான் பலியாடா? பேசாம என் போனுக்கு ட்ரை பண்ணு” விக்ரமை தொடர்புகொள்ள முடியாவிட்டால் இவனைத்தானே அழைப்பாள். அதை கூறி சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” மனமாறாமல் முறைத்தாள்.

“நான் சொல்லுற எதையும் நீ நம்பத் தயாராக இல்லனா பேசுறதுக்கு வேஸ்ட். சோ நான் தூங்கப் போறேன். நீ விடிஞ்ச உடனே உங்கண்ணன் கிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வா” என்றவன் தலையணையில் தலை சரிக்க, தலையணையை பிடுங்கி மடியில் வைத்துக் கொண்டாள் மோகனா.

அவள் மடியில் படுத்துக்க கொண்டால் முகத்திலையே அடிப்பாள். கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுக்க முயன்றால், அவளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஏதாவது பேசுவாள் என்றெண்ணியவன் “சண்டை போட்டே விடியும் போலயே” என்று முணுமுணுத்தவன்,

“இப்போ என்ன தான் செய்யணும்?” கொஞ்சம் அதட்டல். கொஞ்சம் கோபம். கொஞ்சம் கரிசனை கலந்த குரலில் வினவினான்.

“தெரியல” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளின் குரலோ சோகம், கோபம் வெறுமை என கலந்து ஒலித்தது.

அவள் கையை பிடித்து தன் புறம் இழுத்தவன் அவளோடு கட்டிலை சரிந்தவாறே அவளை அணைத்துக் கொண்டு “இங்க பாரு சின்ன வயசுல நீ வீட்டுல சண்டை போட்டாலும், ஸ்கூல்ல சண்டை போட்டாலும் நான் பேசினா சமாதானமடைவ. ஆனா இப்போ என்னால காயமடைஞ்ச உன் மனச பேசி மட்டும் சரி செய்ய முடியாதுன்னு புரியுது.

இப்போதான் கல்யாணமாச்சே. நான் உன் கூடவேதான் இருக்கப் போறேன். கூடவே இருந்து என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. தண்டனை கொடுக்கனும்னா நாம தனியா இருக்கணும். அது இங்க முடியாது. அதுக்கு நாம நம்ம வீட்டுல இருக்கணும்”

  

நம்மளோடு நம்ம வீட்டுலையே இரு என்று விக்ரம் கேட்டால் மறுக்க முடியாது. நண்பனுக்காக தினம் தினம் ஆளவந்தானின் முகத்தில் முழிக்கத்தான் முடியுமா? மோகனாவிடம் கூறினால் புரிந்துக்கொள்வாளா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாமென்று அவளிடம் இப்படி பேசி வைத்தான்.

“இது கூட நல்லாத்தான் இருக்கு” ரகுராமின் அணைப்பிலிருந்து கொண்டே அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாமென்று யோசிக்கலானாள் மோகனா.

“ஹப்பா… ஒருவழியா அமைதியாகிட்டா என்ன இன்னைக்கி பஸ்ட்நைட் நடக்காது. அதான் கூடவே இருக்காளே பார்த்துக்கலாம்” இன்றைக்கு இவளை சமாளித்து விட்டேன் என்ற நிம்மதியில் உறங்கியிருந்தான் ரகுராம்.

கண்ணும் கண்ணும்தான்

கலந்தாச்சு

கலப்பில் காதல் தான்

கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு

போயாச்சு

என்னில் உன்னை

நான் சோ்த்து வைக்கலாமா

வாழும் வரைக்கும்

நான் செலவாக வரவா

பணிகாலமா இல்ல

வோ்வையா அடி காற்றாய்

நானும் தொடவா

தோள் சாயனும்

கை ஆயனும் அட நாணம்

கைதான் விடுமா

வெத்து காத்து

தான் உயிர் மூச்சு காதல்

மட்டும் தான் வாழ்வாச்சு

மத்த நேரம் ரொம்ப போராச்சு

பொண்ணுக்குள்ள

தான் என்னாச்சு மொத்த

நேரமும் ஆராய்ச்சி

பொண்ணுக்குள்ள ஆணின்

மனசாட்சி

விரலால் நானும்

உன் தேகம் நெய்யலாமா

அடடா கூச்சம்

உன்னை சும்மா விடுமா

உன் மூச்சிலும்

என் பேச்சிலும் நாம்

வாழும் வாழ்க்கை கொடுமா

விழி வீச்சிலும்

பொய் பேச்சிலும் நம்

காதல் வாழும் சுகமா

பத்து மாதம் தான்

தாய் வயிற்றில் இனி மொத்த

காலம் தான் உன்னிடத்தில்

என்னை தாங்கும் தாயும் நீயே

பிறக்கும் போது

தான் பெண்ணானேன்

வளரும் போது தான்

ஆணானேன் உன்னால்

தானே தாயும் ஆவேன்

காதில் வந்து

ஒரு வார்த்தை

சொல்லலாமா

சொல்லும் வார்த்தை

என்னை உயிரோடு விடுமா

விழியோரமா

அதிகாரமா நம் காதல்

ஆட்சி அமைக்கும்

அது தானடா

வெகு காலமா நாம்

வாழும் வரைக்கும் நிலைக்கும்