வல்லவன் 18

“ஹே..சுவா” பெண் நீதிபதி அவளை அணைத்து, அவளை நிமிர்த்தி அழுதியா? கேட்டார்.

ம்ம்..தலையசைத்தாள்.

நாம ஸ்ட்ராங்கா இருந்தா தான நம்ம மோட்டிவ் நல்லபடியாக நடக்கும் என்று ஊக்க, “தேங்க்ஸ் ஆன்ட்டி” அணைத்து, இங்க எப்ப வந்தீங்க? கேட்டாள்.

அதுவா..நேற்று தான்..

மேடம் செம்ம குடி போல.. தாரா அவளை பார்த்து புன்னகைத்தாள்.

ஆமால்ல நீயும் ஆன்ட்டியும் கூட என்னை பார்த்தீங்கல்ல. நான் கனவோன்னு நினைச்சேன் சக்தி சொல்ல, கனவில்லைன்னு புரிய வைச்சிறலாமா? சக்தி கன்னத்தில் கடித்தாள் தாரா.

என்னடி பண்ற? யாராவது பார்த்து தப்பா நினைச்சுக்க போறாங்க..

இங்க லெசிபியன்ஸ்ல்லாம் இருக்க மாட்டங்கல்லடி..

“அதுக்கு?” சக்தி முகம் பிரகாசம் பெற்றது. கவின் அவர்களை பார்த்துக் கொண்டே வந்தான். அவர்கள் அவனிடம் பேச சக்தி உள்ளே சென்று ஆத்விக்கிடம் கூறினாள்.

எல்லாரும் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.

பின் தாராவின் நிச்சயத்திற்கு அவளும் அவள் அம்மாவும் எல்லாரையும் அழைத்தனர். ஆரியனை அவர் புன்னகையுடன் பார்த்து “அசத்தலான ஷூன் குடுக்குறீங்க” கேலி செய்ய, அவன் புன்னகைத்தான்.

சுவா, நாளை என்னோட நீ வரணும். நாம ஆடை எடுக்கப் போகணும் தாரா அழைக்க, அவள் ஆத்விக்கை பார்த்தாள்.

பாருடா..அவர் சொன்னால் தான் வருவீயோ? தாரா கேட்க, ம்ம்..என்று ஆத்விக்கை பார்த்தாள்.

சக்தி வந்துருவா. இங்கே வந்ததும் சுவேரா சக்தி ஆகிட்டாலா? தாரா கேலி செய்ய, சுவேரா..நல்ல தான இருக்கு.

ஏன் அண்ணா பெயரை மாத்தி வச்சிருக்கீங்க? அதியா கேட்க, ஆத்விக் அவளை பார்த்து, “சக்தின்னு கூப்பிடு போதும்” என்றான்.

உதட்டை கோணி காட்டி அதியா ஆரியனை பார்த்தாள். அவன் புன்னகைத்தான்.

“நாளைக்கு கண்டிப்பா சுவேரா வருவா தாரா” ஆத்விக் சொல்ல, அவர்கள் கிளம்பினார்கள்.

எல்லாரும் அவரவர் வேலையை பார்க்க நகர்ந்தனர். அதியாவை அதிவதினி பிள்ளைகளுடன் அழைத்து சென்றார்.

சக்தி எழ, கையை நீட்டி அவளை தடுத்த ஆத்விக், அங்கிருந்த கவினையும் சுகுமாரையும் பார்த்து, நாங்க பேசணும்.

பேசுங்க கவின் கால் மீது காலை போட்டு அமர்ந்தான். ஆத்விக் அவனை முறைக்க, வாடா அவன் அப்பா அழைத்தார்.

நீங்க போகணும்ன்னா போங்க..

அவனை உற்று பார்த்து, கண்ணா என்னாச்சு? அவன் தந்தை கேட்டார்.

அப்பா..போங்க..

அவர் சென்றார்.

சக்தி ஆத்விக்கை பார்க்க, சக்தி கையை பிடித்து “உட்காரு” என்று அமர வைத்து, என்ன சொன்னா?

யாரு? சக்தி கேட்க, சுவா நடிக்காத. உன்னோட கண்ணு காட்டிக் கொடுத்திருச்சு..

இல்ல, யாரும் ஏதும் சொல்லலை.

“சொல்லப் போறீயா இல்லை பிரஜாவுக்கு கால் பண்ணவா?”

வேண்டாம் வேண்டாம் என்று கண்கலங்க அவனை பார்த்தாள்.

பிரஜாவோட பேசக் கூடாதாம். சமீயும் என்னோட பேச மாட்டேன்னு சொல்லீட்டா. நான் பேசினால் அவன் மனசு மாறிடுமாம்..பயப்படுறா. அவளாவது பேசலாம்ல்ல அழுது கொண்டே அவனை பார்த்தாள்.

அதுக்கா அழுற? அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே ஆத்விக் கேட்க, கவினும் இவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

ம்ம்..

ஆத்விக் புன்னகையுடன், இதுல்ல என்ன இருக்கு? நீ தான் அங்க போகப் போறதில்லையே! இங்க ப்ரெண்ட்ஸ் சேர்த்துக்கோ..இதுக்கெல்லாம் அழணுமா?

ஆத்விக்கை முறைத்து, பழகியவங்கல்ல எப்படி மறக்க முடியும்?

ஏன் முடியாது? உனக்கான உறவுகளை மட்டும் மறக்காத. ப்ரெண்ட்ஸ் தானா அமைவாங்க..

வாட் டிட் யூ மீன்?

உனக்கு தான் புதுசா பேமிலி இருக்கோம்ல்ல. அப்புறம் எதுக்கு அழுற? உனக்கு அழணும்ன்னு தோணுனா அதி கூட ஜஸ்ட் வம்பு செய். உன்னோட பிராபிளம் கான்..

எதுக்கு? ஆரியன் சார்..

அவள் வாயை ஆத்விக் கையால் அடைத்து, நோ சார்..மாமா..

எனக்கு வர மாட்டேங்கிதே!

சரி வா என்று அவளை ஆரியனிடம் அழைத்து சென்றான்.

என்னை விடுங்க அவள் சொல்ல, மாமான்னு சொல்லு என ஆத்விக் ஆரியன் முன் சக்தியை நிறுத்தினான்.  நண்பர்கள் கொடுத்த பைல்லை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியன்.

“மாமா” என்று ஆரியன் கையிலிருந்த பைல்லை வாங்கி ஓரமாக நகர்த்தி விட்டு சக்தியிடம் கண்ணை காட்டினான்.

“முடியாது” அவள் தலையசைக்க, ஆத்விக் மீண்டும் கண்ணை காட்டினான்.

என்ன வேணும் சுவேரா? ஆரியன் கேட்க, சார்..அது என்று தயங்கி ஆத்விக்கை பார்த்தாள்.

மாமா, இந்த சக்தி யாருமில்லைன்னு அழுதுட்டு இருக்கா..

இல்ல..இல்ல அவள் வேகமாக சொல்ல, ஆத்விக் அவளை முறைத்தான்.

“நேரடியாக சொல்லு அத்து?” ஆரியன் கேட்க, “உங்கள மாமான்னு சொல்ல கூச்சமா இருக்காம்” ஆத்விக் சிரிக்க, அவள் அவனை முறைத்தாள்.

ஆரியன் ஆத்விக்கை பார்த்து, இதுல சிரிக்க என்ன இருக்கு? அவள எதுக்கு ஃபோர்ஸ் பண்ற? அவளுக்கு தான் அழைக்க பிடிக்கலைல்ல? என்ன இருந்தாலும் நாம சொந்தம் இல்லை தான? ஆரியன் சக்தியை பார்த்துக் கொண்டே பேசினான்.

பிடிக்கலைன்னு நான் சொல்லலை. உங்க எல்லாரையும் சார்ன்னு சொல்லீட்டு இப்ப எப்படி மாமான்னு..அதி கோவிச்சுக்கப் போறா..

“பாருடா அதியை மட்டும் அவ இவன்னு சொல்ற?” ஆத்விக் கேட்க, அது காலையில நல்லா பேசி பழகிட்டோம்.

“அப்ப நாம பழகலையா?? ஆத்விக் சினமுடன் கேட்டான்.

அது வேற..இது வேற..சக்தி சொல்ல, அது என்ன வேற?

விடு அத்து. மாற்றம் அதுவா நிகழாது. நாம தான் நிகழ்த்திக்கணும். உன்னை போல என்று ஆத்விக் தோளை தட்டினான்.

“நான் ட்ரைப் பண்றேன்” சக்தி சொல்ல, “ஓ.கே பண்ணு” ஆத்விக் அவளை பார்த்தான்.

அண்ணா, எனக்கு சாப்பிடணும் போல இருக்கு. வெளிய போகலாமா? சக்தி கேட்க, நீ எப்ப அதியா மாறுன? ஆத்விக் வாயில் கையை வைத்து, “மாமா..நம்ம வீட்ல எல்லாம் சாப்பாட்டு ராணிகளா இருக்காங்க” என்றான்.

நான் இன்று சாப்பிடவே இல்லை தெரியுமா? ரொம்ப பசிக்குது கேட்டது குத்தமா? கடுப்புடன் சக்தி கேட்க, ஆரியன் சிரித்தான்.

வது சித்திட்ட போய் கேளு..

“அவங்களிடம் எதுக்கு? மாமா சார் நீங்க சமைப்பீங்கள?” சக்தி கேட்க, “ஏய் அவரை சமைக்க சொல்றீயா?” ஆத்விக் கேட்க, “ஏன் செய்ய மாட்டீங்களா மாமா?” சார் தொடங்கி மாமா சாராகி..கடைசியில் மாமாவில் வந்து நின்றது.

குட் இதே போல..வது சித்தி, சித்தப்பாவிடம், அத்தை மாமான்னு பேசு ஆரியன் சொல்ல, நான் ஆன்ட்டி சொல்லிக்கவா?

நோ..இது தமிழ்நாடு. ஆன்ட்டியெல்லாம் வேண்டாம். அத்தை, மாமா தான் என்று ஆத்விக் கண்டிப்புடன் சொல்ல, சரி என்று நகர்ந்தாள். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

சக்தியிடம் ஆரியன் பேசிக் கொண்டிருக்கும் போது கவின் அவர்களை கடந்து தன் அம்மாவை காண சென்றான்.

அதியா, குழந்தைகள், உத்தமசீலன், துருவினி, கவின் பெற்றோர்கள் இருந்தனர். இவன் அறைக்கருகே செல்ல செல்ல சிரிப்பொலி கேட்க நின்று விட்டான். அவனுக்கு அதியாவை மிகவும் பிடிக்கும். திடீர் திருமணத்தில் அவளை விட இவன் தான் அதிர்ந்து இருக்கிறான். அவன் கவனம் மற்றவர்களிடம் இருந்தாலும் எண்ணம் அதியாவை சுற்றி வர தான் செய்தது. அவன் சிந்தனையுடன் நின்று கொண்டிருக்க, அவனை பார்த்துக் கொண்டே சக்தி அறைக்குள் சென்றாள்.

“ஹேய் சக்தி, வா” அதியா அழைக்க, அவள் கவின் பெற்றோரை பார்த்தாள்.

“என்னம்மா? ஏதும் வேணுமா?” சுகுமார் கேட்க, “ஆம்” என்று தலையசைத்து முகத்தை முழுவதும் கையால் மூடிக் கொண்டு, “அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது. ஏதாவது செய்து தர்றீங்களா? எனக்கு சமையல் வராது” என்று விரல்களின் ஓட்டை வழியாக அதிவதினியை பார்த்தாள்.

“அவர் புரியாமல் என்னை பார்த்து எதுக்கும்மா வெட்கப்படுற?” அவர் கேட்க, மீண்டும் விரல்களால் மறைத்து..மாமா என உத்தமசீலன் பக்கம் திரும்பி, “`நானும் உங்களுடன் தங்கிக்கவா?” கேட்டாள்.

அனைவரும் அவளை வித்தியாசமாக பார்க்க, துருவினி எழுந்து..உனக்கு மூளை எதுவும் குழம்பி போச்சா..வெட்கமா? இத்தனை நாள் இல்லாமல் இன்று என்ன வெட்கம்? துருவினி கேட்க, உத்தமசீலன் சிரித்தார்.

துரு, நம்மை பார்த்து வெட்கப்படலை உறவு சொல்லி அழைத்து வெட்கப்படுறா.. அப்படிதானம்மா? அவர் கேட்க, அவள் கையை எடுக்காமல் தலையை மட்டும் அசைத்தாள்.

அதியாவோ சக்தி செய்கையில் சிரித்துக் கொண்டே அவளிடம் வந்து, பேரு தான் சக்தி. மேடம் துப்பாக்கியெல்லாம் பயன்படுத்துவாங்க. உரிமையா பேச பயப்படுறியா? என்னை விட நீ மோசம் என்று அவள் கையை பிரிக்க, அதி வேண்டாம் துருவினி சொல்ல, ஆகர்ஷனாவும் தர்சனும் சக்திக்கு வந்து கிச்சுகிச்சு மூட்டினார்கள். அதியாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, கண்ணீர் வரும் வரை சிரித்தாள் சக்தி.

இதை கேட்டுக் கடுப்புடன் நகர்ந்தான் கவின்.

சரிம்மா. நிஜமாகவே பசிக்குதா? அதிவதினி கேட்க, ஆமா என தயங்கி அவர்களை பார்த்து, சும்மா அத்தை மாமா தான..கூப்பிடும்மா..காசா பணமா? இப்படி யோசிக்கிற? கேலியுடன் சுகுமார் சொல்ல, உங்களை யாராவது ஏதாவது கேட்டு விட்டால்..

அதை நாங்க பார்த்துக்கிறோம். அதி போல நீயும் நம்ம வீட்டு பிள்ளைம்மா.. தயங்காமல் அழை உத்தமசீலன் சொல்ல, சரி மாமா. நான் இன்று சாப்பிடவேயில்லை. அதான் பசிக்குது என்றாள்.

“சாப்பிடலையா? நான் கேட்டப்ப சாப்பிட்டேன்னு சொன்ன?” துருவினி சினமுடன் கேட்க, அது..கண்கலங்கினாள் சக்தி.

“அழுதிறாத. வா நான் செய்து தாரேன்” அதிவதினி சொல்ல, அம்மாடி..கிச்சன்ல்ல மண்டப உணவே இருக்கு. எடுத்து மட்டும் வச்சி கொடுங்க உத்தமசீலன் தன் மகளை பார்க்க, சித்தி..நீங்க இருங்க. நான் அவளுக்கு எடுத்து வைக்கிறேன் என்று துருவினியை சக்தியை அழைத்து செல்ல, அதிவதினியும் அவர்கள் பின்னாலே வந்தார்.

மட்டன் பிரியாணியை துருவினி சக்திக்கு எடுத்து வைக்க, அவள் புன்னகையுடன் உண்டாள். அவளருகே அமர்ந்து அதிவதினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அத்தை? உங்க மருமகள இப்படி சைட் அடிக்கிறீங்க?” ஆத்விக் அவர்களிடம் வந்தான். சக்திக்கு உணவு புரை ஏறியது. அவள் தலையை தட்டிக் கொண்டே துருவினி தண்ணீரை கொடுத்து சரி செய்து கொண்டே அவனை முறைத்தாள்.

அவ உங்கள அத்தைன்னு சொன்னால்ல அதான் கேட்டேன். தப்பா.. தோப்புக்கரணம் போடவா? துருவினியை கண்களால் வருடியவாறு கேட்டான்.

கேள்வி என்னிடம்? உன்னோட பார்வை எங்கோ போகுதே! அவர் கேலியுடன் கேட்க, “பார்க்க தான முடியும். அதான் சிறப்பாக பார்க்கிறேன்” ஆத்விக் சொல்ல, துருவினி பழம் வெட்ட இருந்த கத்தியை கையில் வைத்தவாறு அவனை பார்த்தாள்.

“எதுக்கு அத்தை ஆயுதமெல்லாம் எடுக்குறாங்க?” ஆத்விக் கொஞ்சலாக கேட்க, அம்மாடி சக்தி சாப்பிட்டு சீக்கிரம் இடத்தை காலி பண்ணு. அப்புறம் நாம தான் சேதாரமாகணும் என்று அதிவதினி சொன்னார்.

சாப்பிட விடுறியா? சக்தி உணவை மென்று கொண்டே ஆத்விக்கை பார்த்து கேட்டாள்.

பரவாயில்லை..போ..வான்னு சொல்ற? ஆத்விக் சக்தியை பார்க்க, “எனக்கு சாப்பிட தொந்தரவா இருக்குல்ல. நான் சாப்பிட்டுக்கவா? நீங்க உங்க ரொமான்ஸை அங்கிட்டு வச்சுக்கோங்க” துருவினி அறையை காட்டினாள்.

அங்க வச்சுக்கலாமா? ஆத்விக் புன்னகையுடன் கேட்க, துருவினி..வைக்கலாம். நாம வேணும்ன்னா அண்ணாவையும் அழைச்சுக்கலாமே! என்றாள்.

வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு சொல்லணும். அண்ணன், அப்பா, தங்கச்சின்னு யாரையும் இழுக்கக் கூடாது. அப்புறம் அது எப்படி ரொமான்ஸ் ஆகும்? கலவரம் ஆகாதா? ஆத்விக் துருவினியிடம் கேட்க, இருவரையும் பார்த்து விட்டு தட்டில் உணவை போட்டு ஆரியனிடம் வந்து அமர்ந்தான். கவின் அங்கே தான் ஏதோ யோசனையில் இருந்தான்.

“சுவேரா, என்ன இங்க உணவை எடுத்துட்டு வந்திருக்க?” ஆரியன் கேட்க, உங்க மச்சானும் தங்கச்சியும் அவங்க பேசுறேன்னு என்னையும் சேர்த்து சாப்பிட விடாமல் பேசிட்டு இருக்காங்க மாமா. எனக்கு ரொம்ப பசிக்குது. அதான் இங்க வந்துட்டேன். நிம்மதியா சாப்பிடலாம்ல்ல? நீங்க முடிந்தால் இருவர் பேச்சையும் நிறுத்துங்களேன் உணவை உண்டு கொண்டே ஆரியனிடம் பேசினாள்.

இதெல்லாம் நாம நிறுத்த முடியாது. அவங்க என்னமும் செய்யட்டும். எதுவும் வேணும்ன்னா சொல்லு. நான் எடுத்துட்டு வாரேன் ஆரியன் சொல்ல, உண்பதை நிறுத்தி அவனை பார்த்து, தயிர் பச்சடி வேணும். அவனும் எடுத்துக் கொடுக்க, அவள் உணவுண்டாள். இருவரையும் கவின் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் அனைவரும் ஓய்வெடுக்க, ஆரியன் மட்டும் அமர்ந்திருந்தான்.

மாலை நேரம் பறவைகள் அடைய தன் கூட்டை நோக்கி கூக்குரலோடு சென்று கொண்டிருந்தன. அப்போது எல்லாருக்கும் அதிவதினியும் துருவினியும் காஃபி தயார் செய்து கொடுக்க, அனைவரும் பேசிக் கொண்டே மகிழ்வுடன் பருகிக் கொண்டிருந்தனர்.

கேட்டை யாரோ வேகமாக இழுக்கும் சத்தம் கேட்டு வேகமாக ஆரியன் எழுந்து கதவருகே சென்றான். படாரென கதவை தள்ளும் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.

ஆரியன் வந்தவர்களை பார்த்து கண்கள் இடுங்க சிந்தனையுடன், “வாங்க அத்தை, மாமா” என்று வரவேற்றான். அவன் அத்தை வந்தவுடனே அழ ஆரம்பித்து விட்டார்.

அண்ணா, நீங்க எங்களிடம் சொல்லவேயில்லை.  நம்ம ஆரியனுக்கு திருமணம் முடிந்திருக்கு. நியூஸ் பார்த்து வரும் நிலையாகிடுச்சு. ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவேயில்லை..

அத்தை, நாங்க எல்லாருக்கும் சொல்லவில்லை. திடீர் ஏற்பாடு. அதனால் சிலருக்கு தான் சொன்னோம் ஆரியன் மென்மையுடன் பேச, எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்ன சீலா? மாப்பிள்ள தான் பேசுறார்? உன்னிடமிருந்து வார்த்தையே இல்லை” ஆரியன் மாமா கேட்க, “அதெல்லாம் இல்ல மச்சான்” அவர் தன் மகனை பார்த்தார். அவன் கண்ணை மூடி திறந்தான்.

“துரும்மா, அத்தை, மாமாவுக்கு தேனீர் போட்டு எடுத்து வாம்மா” உத்தமசீலன் சொல்ல, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்றார் மாமாவாகப்பட்டவர்.

அந்த சந்திராவுக்கெல்லாம் சொல்லி இருக்கீங்க. நாங்க உங்க கண்ணுக்கே தெரியலைல்ல. என்னோட சுந்தரி அண்ணி இறந்ததுனால தான் நாங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியல. அவங்க இருந்தால் எங்களை தான் முன் நிறுத்தி இருந்திருப்பாங்க என்று ஆரியன் அத்தை வராத கண்ணீரை துடைத்தார்.

அதியா துருவினியை சுரண்ட, அவளோ அவர்களை பார்க்க கூட விருப்பமில்லாதது போல் நின்றாள். அதியா கையை தட்டி விட்டாள்.

அதியா கையை அதிவதினி பிடித்து கண்ணாலே “அமைதியா இரு” என்றார்.

ம்ம்..என்று அவள் ஆரியனை பார்க்க, அவர்கள் பேச்சு பிடிக்காத ஆத்விக் எழுந்தான். சுகுமார் அவனை பிடித்து அமர வைத்தார்.

“அத்தை, எங்களுக்கு நேரமில்லை” ஆரியன் பொறுமையை பிடித்து பேசினான்.

“சரி மருமகனே, உன்னோட திருமணத்தை விடு. நம்ம துருவை எப்ப எங்க வீட்டுக்கு அனுப்பப் போறீங்க?” அவர் கேட்க, துருவினி குடும்பம் தவிர அனைவரும் அதிர்ந்து அவர்களை பார்த்தனர்.

“வினுவை எதுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பணும்?” அதியா கேட்க, “அதி நீ பேசாத” ஆரியன் சத்தமிட்டான்.

ஆத்விக் உணர்வில்லாத பார்வை உத்தமசீலனை பார்க்க, அவர் அவனை பார்த்து விட்டு தன் மகளை பார்க்க துருவினி கண்கள் கலங்கியது. எல்லாரும் அவளையும் ஆத்விக்கையும் பார்த்தனர்.

“தீபு, இவ்வளவு நேரம் என்ன செய்ற?” என்று வந்தவர்கள் ஒருவனை அழைக்க, “வந்துட்டேன்ம்மா” அவர்கள் முன் வந்தான் வாட்டசாட்டமான இளைஞன்.

இவர்கள் நம்ம ஆரியன் அம்மாவின் அண்ணன் குடும்பம். மகன் தீபன். சிறிய அளவில் ரெடிமேட்ஸ் வைத்திருக்கிறான்.

“சொல்லுப்பா? இப்ப தாம்பூலம் மாத்திக்கிலாமா?” உத்தமசீலனிடம் அவர்களின் மாமா கேட்க, “முடியாது” என்று எழுந்தாள் அதியா.

ஆரியனோ அவளை பார்த்து விட்டு அதிவதினியை பார்த்தான். அவன் பார்வையை புரிந்து கொண்ட அவர், “அதி உட்காரு. மாப்பிள்ள தான் பேசிட்டு இருக்கார்ல்ல. இடையில பேசாத”

அத்தை, அவர் வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.

ஏம்மா, மருமகளே நல்ல விசயம் பேசும் போது இப்படி தடுக்குற மாதிரி இடையில பேசுற? உங்க வீட்ல இதெல்லாம் சொல்லித் தரலையா? அவன் மாமா சொல்ல,

“அதெப்படிங்க? நம்ம மருமகளுக்கு பணம் தான் போதும்ல்ல. அப்புறம் பெரியவங்க பேச்சை எப்படி கேட்பாங்க? அதை விட கம்பெனிக்காக அவ அம்மாவையே கைதி மாதிரி வீட்ல அடச்சு வச்சிருக்காளே!” என்று பட்டாசை அவர் பேச, “எழுந்திருங்க” கத்தினான் ஆரியன்.

“மாமா” தீபன் சத்தமிட, இங்க பாருங்க. என்னோட தங்கச்சியை இவனுக்கு திருமணம் செய்து தருவதாக நாங்க சொல்லவில்லை..

“ஆரியா என்ன சத்தம் போடுற?” உன்னோட அம்மா தீபன் தான் உங்க வீட்டு மருமகன்னு சாகிறதுக்கு முன்னாடியே சொன்னாங்க.

என்னோட பொண்டாட்டியை பத்தி நீங்க பேச தேவையில்லை.

என்னோட அம்மா சொல்லி இருக்கலாம். யாரை எந்த இடத்துல்ல வைக்கணும்ன்னு அவங்களுக்கு தெரியாது. என்னோட வாழ்க்கையில் நடந்த தவறு போல என்னோட தங்கச்சிக்கும் நடக்க விட மாட்டேன்.

“இதையெல்லாம் விடுங்க. அம்மா இறந்த பின் வந்தீங்கல்ல? எதுக்கு வந்தீங்க? பிள்ளைங்க அம்மாவும் இந்த வீட்டு மருமகளும் இல்லாமல் கஷ்டப்படுவாங்கன்னா வந்தீங்க? உங்களுக்கு தேவையான அந்த வீட்டுக்காக தான வந்தீங்க? அதுவும் என்ன வேலை செஞ்சீங்க? இப்ப எந்த மூஞ்சிய வச்சிட்டு வந்துருக்கீங்க?” நறுக்கென்று கேட்டான் ஆரியன்.

“ஆரியா” உத்தமசீலன் சத்தமிட, அப்பா நீங்களும் அம்மா மாதிரி யோசிக்காதீங்க. இந்த தீபன் அம்மாவிடம் துரு மேல காதல்ன்னு சொல்லி அவளை தனியே சந்திக்க, அதுவும் நம்ம அம்மாவை வைத்து குடும்பத்துடன் ஏற்பாடு செய்து..ச்சே..சொல்லவே அசிங்கமா இருக்கு..

அத்தை, உங்களுக்கு பணம் வேணும்ன்னா ரெட் லைட் ஏரியால்ல இப்ப பசங்களுக்கும் மவுஸ் அதிகம் தான். உங்க தங்கமான பையனை அங்க அனுப்பி பணம் சம்பாதிங்க. அடுத்தவங்க சொத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கிடாதீங்க.

“ஆரியா” அவன் மாமா கையை ஓங்க, ஆத்விக் வேகமாக எழுந்தாள். அதற்குள் அவர் கையை பிடித்த உத்தமசீலன். என்னோட சுந்தரிக்காக தான் நீங்க செய்த எல்லாத்தையும் வேடிக்கை பார்த்தேன். ஆனால் என்னோட பசங்களை இனி தொந்தரவு செய்தீங்கன்னா என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும் சீற்றமுடன் கையை உதறி தள்ளினார்.

மாப்பிள்ள..

அந்த உறவு என்றோ முறிந்து விட்டது. எல்லாரும் வெளிய போங்க கத்தினார்.

“மாமா, நீங்க தப்பு செய்றீங்க” தீபன் சொல்ல, “போடா பொறுக்கி” அவன் கழுத்தை பிடித்து உத்தமசீலன் வெளியே தள்ளினார்.

“மாமா, என்னையவே வெளிய தள்ளீட்டேல்ல. உங்க பொண்ணை யாரும் கல்யாணம் பண்ணிக்க முடியாதபடி செய்கிறேன் பாருங்க” அவன் கத்த, அதியா முன் வந்து “போடா முடிஞ்சதை பண்ணு” என்றாள்.

எல்லாரும் அவளை பார்க்க, அவள் ஆரியனை முறைத்து பார்த்தாள்.

“இந்த வீட்ல யாரும் நல்லாவே இருக்க மாட்டீங்க” என்று ஆரியன் அத்தை சாபமிட்டு சென்றார்.

துருவினி கண்கலங்க உத்தமசீலனை அணைத்துக் கொண்டாள். ஆத்விக் ஏதும் பேசாமல் அறைக்கு சென்றான்.

துருவினி அவன் செல்வதை பார்த்துக் கொண்டே, “தேங்க்ஸ்ப்பா, தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

“நான் ஆதுவிடம் பேசுகிறேன்” சுகுமார் சொல்ல, “நானே செல்கிறேன்” என்று உத்தமசீலன் ஆத்விக்கிடம் பேச சென்றார்.

“அதி, போதும் முறைத்தது” அதிவதினி சொல்ல, ஆரியன் சிரிப்புடன் அவள் கையை பிடிக்க, அவள் சினமுடன் நகர்ந்தாள்.

“நம்ம நாட்டுக்கே உரிய பொண்டாட்டியா இருக்க அதி?” ஆரியன் சிரிப்புடன் சொல்ல, “ஆமா..என்னிடம் எதுக்கு கத்துனீங்க?” அவள் கேட்க, “அதி உனக்கு இது தான் பிரச்சனையா?” சக்தி கேட்டாள்.

“அப்புறம் என்ன? ஹாம்…வினுவை அந்த பையனுக்கு பேசினாங்களா? சொல்லவில்லை” அவள் கேட்க, “அதான் பிரச்சனையா?” முகத்தை சுருக்கி சக்தி கேட்க, “அப்புறம் கோபப்பட என்ன இருக்கு?” அதியா கேட்க, ஆரியன் அவளை இழுத்து அணைத்தான்.

ஹே..ஹே..என்னை விட்டுங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?

அவங்களிடம் நானே பேசி இருப்பேன். அவங்க உன்னை ஏதும் சொல்லக்கூடாதுன்னு சத்தம் போட்டேன்.

ம்ம்..சரி, அப்ப வினுவோட அந்த பையன்..

“அவனெல்லாம் ஒரு ஆளா அதி? அவனை போய்” ஆரியன் முடிப்பதற்குள் ஆரியனை அணைத்து, “சாரி ஆரு, கோபப்பட்டுட்டேல்ல?” எனக் கேட்டாள்.

உன்னோட கோபம் கூட உன்னை போல அழகா இருக்கு ஆரியன் சொல்ல, ஹப்பா..ஹப்பா..ஹப்பா..என சக்தி நெஞ்சை அழுத்தி, “மாமா..அப்படியே சினிமா டயலாக் பேசுறீங்க? எப்படி?” அவள் கேட்க, அவர்கள் அருகே வந்த அதிவதினி,

ஏய் நகர்ந்து நில்லுங்க மாப்பிள்ள நீங்க அந்தப்பக்கம் போகணும். அதி இந்த பக்கம் போகணும் என இருவரையும் பிரித்து விட்டு, கிளம்புங்க..கிளம்புங்க வர விரட்ட, உதட்டை தொங்கப் போட்டுக் கொண்டு, அத்தை அதி பாவம்ல்ல அதியா அவரிடம் செல்லம் கொஞ்சி கேட்டாள்.

அதெல்லாம் இல்லை போ..என்று அவளை விரட்டினார்.

ஆத்விக் உத்தமசீலனுடன் கீழே வந்தான்.

“என்னப்பா, கோபம் போயிருச்சா?” சுகுமார் கேட்க, “கவின் எங்க மாமா?” கேட்டான்.

எல்லாரும் ஓய்வெடுக்கும் போது வெளியே போனான். இன்னும் வரலை..

“வெகு நேரமாகிடுச்சே” ஆத்விக் அவனை அழைக்க, அவன் பைக் சத்தம் வெளியே கேட்டது.

ஆத்விக் வேகமாக அவனை பார்க்க ஓடினான். அந்நேரம் அழுது கொண்டே அறையிலிருந்து துருவினி வெளியே ஓடி வந்தாள்.

கவின் அவளை பார்த்து, “எதுக்கு துரு அழுற?” கேட்டான்.

ஆரியனை அவள் தேட, ஆத்விக் அவனாகவே அவளிடம் வந்தான்.

அத்து..அவன் அவன்..என்று ஏதும் சொல்லாமல் அழுதாள். சத்தம் கேட்டு அதியாவும் ஆரியனும் அறையிலிருந்து வந்தனர்.

“துரு” ஆரியன் அழைக்க, “அண்ணா” என்று அழுது கொண்டே அவனை அணைத்தாள்.

“என்னம்மா? எதுக்கு அழுற? முதல்ல சொல்லு?” உத்தமசீலன் பதறினார்.

அப்பா, அந்த தீபன்..என்னோட புகைப்படத்தை வைத்து வீடியோ ஒன்றை தவறாக எடுத்து அனுப்பி இப்பவே அவனை பார்க்க செங்கல்பட்டிற்கு போகணுமாம் இல்லைன்னா வைரலாக்கிருவானாம்..

மிரட்டுகிறான் என்று அழுதாள்.

“வீடியோவா?” ஆத்விக் அவள் கையிலிருந்த அலைபேசியை பிடுங்க, துருவினி பதறிப் போனாள். ஆத்விக் கையிலிருந்து பிடுங்கிய ஆரியன், எதையும் பார்க்க வேண்டாம். அத்து..நீ துருவோட போ. மறைஞ்சுக்கோ..துரும்மா நீயாகவே ஆட்டோ பிடி. ஆட்டோகாரனுக்கு கூட தெரியக்கூடாது.

கவின் நீ செங்கல் பட்டிற்கு அவனை பிடிக்க போலீஸ் ஆட்களுடன் போ.

அண்ணா, போலீஸிற்கு வேண்டாமே! துருவினி சொல்ல, அந்த பொறுக்கியை சும்மா விட்டால் இதை விட பெரியதாகவும் செய்து விடுவான். நீ போ..அத்து உன்னை பின் தொடர்ந்து வருவான். பயப்படாத என்றான்.

சக்தி ஆரியனிடம் வந்து, நானும் வினுவோட போனால் யாருக்கும் சந்தேகம் வராதுல்ல சார்..

ம்ம்..சரி தான். ஆனால் நீ அவளோட வந்திருப்பது அவனுக்கு தெரிந்து விடக் கூடாது.

அண்ணா, போலீஸில் பிடிச்சி கொடுக்கணும்ன்னா, நாமே வீடியோவை சப்மிட் செய்யணுமே! எல்லாருக்கும் தெரிய வருமே!

இல்ல, இது வெளிய வரைல. அதனால இந்த வீடியோ நேரடியாக நீதிபதி கையில் கொடுக்குமாறு செய்யலாம் என்றான் ஆத்விக்.

ஓ.கே கிளம்புங்க என்று சொல்ல, முதலில் சக்தியும், துருவினியும் ஆட்டோவில் கிளம்ப, ஆத்விக் பைக்கில் ஹெல்மேட்டுடன் பின் தொடர்ந்தான்.

ஆட்டோக்காரர் துருவினியை பார்த்து, “ஏதும் பிரச்சனையாம்மா?” கேட்டார்.

சக்தி சிந்தனையுடன், ஆமா சார். நாங்க போற இடத்துல்ல இவள் மட்டும் கீழ இறங்குவாள். நான் ஆட்டோவில் இருப்பதை காட்டிக்காதீங்க என்று பின் சீட்டில் முழுவதும் மறையுமாறு கவர் செய்ய, என்னாச்சும்மா?

சார், எதுவும் கேட்காதீங்க. பேசாதீங்க. போலீஸூம் இப்ப நம்ம பின்னாடி வருவாங்க. அமைதியா மட்டும் இருங்க போதும் என்றாள் சக்தி, அவள் ஆடையை மாற்றிக் கொண்டே..பேண்டு சட்டை போட்டுக் கொண்டாள்.

துருவினி வருத்தமுடன் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

துரு, நீ லைட்டா அழுவது போல நடி போதும்..அண்ணா பார்த்துப்பான் என்றாள்.

ம்ம்..துருவினி சொல்ல, தீபன் சொன்ன இடத்தில் அவன் மட்டுமல்ல நான்கு பசங்களும் இருந்தனர்.

ஹே, வந்துட்டாடா? ஒருவன் சொல்ல, “மச்சீ..யாரும் பின்னே வந்திருக்காங்கல்லான்னு பாருங்கடா” தீபன் சொல்ல, “யாருமில்லைடா” என்று ஆட்டோ நிற்பதை பார்த்து, ஆட்டோக்காரன் நிக்கிறான் டா..

“துரு டார்லிங். அவனை அனுப்பீட்டு வா” தீபன் சொல்ல, அவள் கண்கலங்க..அதை கொடுத்திரு. நான் இப்படியே போயிடுறேன்..

வீடியோவை கொடுக்கவா உன்னை வர வைத்தோம். இன்று நீ எங்கள் விருந்து ஒருவன் சொல்ல, மற்றவர்கள் உன்னோட அத்தை பொண்ணு..இப்படி நச்சுன்னு இருக்கா. இத்தனை வருசம் எப்படிடா விட்டு வச்சிருந்த? ஒருவன் கேட்க, மற்றவன் துருவினி அருகே வந்து அவளது ஆடையை பிடித்து இழுத்தான்.

அவள் மார்பை மறைத்த லெஹங்கா அவன் இழுத்ததில் அவிழ, துருவினி துடித்து போனாள். ஆனால் மனம் தளரவில்லை. அவளுடன் தான் அவள் மாமா ஆத்விக் இருக்கானே!

அவர்களை அவள் தடுக்க, அம்மாடி என்று ஆட்டோக்காரர் வெளியே வந்தார். “வேண்டாம்” சக்தி சொல்ல, அவர் கேட்காமல் சென்றார்.

குடிக்க அவர்கள் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து அவரை அடிக்க வந்தான் ஒருவன். அவனால் கையை நகர்த்த முடியவில்லை. ஆத்விக் அவனை பிடித்து வேகமாக தள்ளினான்.

டேய், இவனை கொல்லுங்கடா. இவன் என்னோட மாமா வீட்ல தான் இருந்தான்.

தீபன் துருவினியிடம் சென்று, என்னடி பெரிய ஆளையே கரெக்ட் பண்ணீட்ட போல? என்று அவள் முடியை கொத்தாக பிடிக்க, சக்தி கால்கள் காற்றிலே மிதந்து வந்து அவன் நெஞ்சை பதம் பார்த்தது.

ஆட்டோக்காரர், துருவினியை ஆட்டோவிடம் அழைத்து சென்றார். அங்கே சண்டை நடக்க, துருவினி அழுது கொண்டிருந்தாள்.

“அழாதம்மா, அந்த பையன் அதி குரூப்ஸ் வீட்டு பையனா?”

ம்ம்..என்னோட மாமா தான் என்றாள் தயக்கமில்லாமல் துருவினி.

மாமாவா?

என்னோட அண்ணா இவங்க தங்கையை தான் திருமணம் செய்திருக்கான்.

அம்மாடி, ஆரியன் அய்யா தங்கச்சியாம்மா? அவரால தான் என் குடும்பம் உயிரோட இருக்கு. என் மகளை பற்றி அவதூறாக வந்த நியூஸ் பொய் என்று நிரூபித்து எங்களை தலை நிமிர்ந்து வாழ வைத்தவர்ம்மா அவர். என்னோட பொண்ணுக்கு திருமணம் முடிந்து ஆறு வயதில் பையன் கூட இருக்கான் அவர் பெருமையுடன் சொல்ல, துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நின்றனர்.

கவின் அவன் ஆட்களுடனும், ஆரியனும் வந்திருந்தனர். ஆட்டோக்காரர் அவனை பார்த்து, “அய்யா” என்று கையெடுத்து கும்பிட, ஆரியன் அவர் கையை இறக்கி விட்டு, ரொம்ப நன்றிய்யா என்றான்.

போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆத்விக் அவர்களிடம் வந்து, “மாமா..இப்ப அவர்கள் நடந்து கொண்ட விதத்தை வைத்தே இவனுகள உள்ளேயே வச்சிறலாம்ல்ல?”

இல்ல அத்து, அவன் வேகமாக வெளியே வர வேண்டாம். வீடியோ வெளியே வராமல் நீ பார்த்துக்க மாட்டீயா? ஆரியன் கேட்க, பார்த்துக்கலாம் மாமா என்று அவன் துருவினியை பார்க்க, ஏய்யா…பாப்பாவை இந்த பையனுக்கு தான் கல்யாணம் செஞ்சு வைக்க போறீங்களா? தம்பி ரொம்ப தயங்குதே! ஆட்டோகாரர் கேட்க, ஆரியன் புன்னகைத்தான்.

இத்தனை நாள் எங்கேய்யா போனீங்க? ரௌடி பசங்க பயமில்லாமல் கொள்ளையடிக்கிறாங்க. கடை வைத்திருப்பவர்களை பணத்தை பிடுங்கி கஷ்டப்படுத்துறாங்க. எங்க பழைய ஆரியன் அய்யா எப்ப வருவாருய்யா? அவர் கேட்க, “வந்திருவார் அங்கிள்” என்றான் ஆத்விக். அவர் புன்னகையுடன், ரெண்டு எம்.ஜி.யாரை பார்த்தது போல இருக்கு என்றார்.

தல, தளபதின்னு சொல்ல மாட்டீங்களா? சக்தி கேட்க, கவின் அவர்களிடம் வந்து, “நான் ஸ்டேசன் போயிட்டு வாரேன். நீங்க கிளம்புங்க” என்று சக்தியையும் ஆத்விக்கையும் அர்த்த பார்வை பார்த்தான்.

“சரி, வாங்க மாப்பிள்ளை சார்” ஆரியனை அழைக்க, ரொம்ப நல்லதுய்யா. உங்க பொண்டாட்டி ரொம்ப அழகா இருக்காங்க என்றார். உங்களுக்கு ஏத்த ஜோடியா இருக்காங்க..

பார்த்தால் எம். ஜி. ஆர்..சரோஜாதேவி தான் என்று அவர் சொல்ல, துருவினி சிரித்து விட்டாள்.

அதி அப்படியெல்லாம் சரோஜா தேவியில்லை. அவள் ஹாசினி. ஜெனிலியா தான் என்றாள். எல்லாரும் புன்னகைத்தனர்.

எல்லாரும் வீட்டிற்கு வந்தனர். நாளைக்கு அதி நீயும் கோர்ட்டிற்கு வரணும் ஆத்விக் சொல்ல, “வருண் கேஸை யார் நடத்தப் போறா?” சுகுமார் கேட்க, “மாமா..இங்கே பிரபலமான விக்ரம் தான். அவர் நமக்கு சாதகமாக எல்லாமே தயார் செய்துட்டார்”.

“வருணிற்காக யார் வருவா?”

அது..சத்யன் சார் என்றான் ஆரியன்.

“பிரச்சனை வராது சித்தப்பா” ஆரியன் சொல்ல, ம்ம்..இவன் கேஸை முடிச்சிறலாம்ல்ல மாமா? ஆத்விக் கேட்டான்.

பார்க்கலாம். இப்பொழுதைக்கு தீபன் சிறையில் இருப்பான்.

ம்ம்..என்ற ஆத்விக், வாங்க எல்லாரும் கிளம்புவோம் அழைத்தான்.

உணவை முடித்து கிளம்பலாம். எல்லாரும் சாப்பிட வாங்க அதிவதினி அழைத்தார்..

உணவுண்டவாறே உத்தமசீலனை பார்த்த கவின் தந்தை சுகுமார், எங்க வீட்டுக்கு வருவீங்கலா? அவர் கேட்டார்.

“மாமா, நாங்க என்னோட வீட்டுக்கு கிளம்புகிறோம்” என்றான் ஆத்விக்.

ஆது..உன்னோட வீட்டுக்கு இப்ப நீ போக வேண்டாம். நாளைக்கு வொர்க்ல்ல ஜாயின் பண்ணனும்ல்ல?

பண்ணனும். அதான் என்னோட வீட்டிற்கு போகலாம்ன்னு சொன்னேன்..

ஆது, சொன்னால் கேளு. அதியும் மாப்பிள்ளையும் இங்க இருப்பாங்க. அண்ணா, வினு, சக்தி, பசங்க உன்னோட வந்தால் அண்ணா மட்டும் தனியா இருக்கணும் அதிவதினி சொல்ல, “இல்லம்மா..இருக்கட்டும்” உத்தமசீலன் சொல்ல,

சும்மா இருங்க அண்ணா. டேய் ஆது..இரு நாள் தான? வந்தால் தான் என்னவாம்? நீயும் நம்ம வீட்ல தங்கி எத்தனை வருசமாகுது உணர்ச்சி மிக கேட்டார் அதிவதினி.

ஆத்விக் உத்தமசீலனை பார்க்க, “சரி” அவர் தலையசைத்தார்.

“எதுக்கு எல்லாரும் கிளம்பணும்ன்னு சொல்றீங்க?” அதியா செல்லக்கோபத்துடன் கேட்டாள்.

“நீ உன் புருசனோட கொஞ்சிட்டு இருப்ப? எங்களை வேடிக்கை பார்க்க சொல்றீயா? அதிவதினி கேட்க, அத்தை அதுக்காக எல்லாரும் போகணுமா?” நீங்க போங்க..மாமா, துரு, பசங்களும் இருப்பாங்க..

“ஆது பாரேன்டா..விட்டால் நம் கழுத்தை பிடித்து விரட்டி விடுவால் போலடா” அதிவதினி சொல்ல, அத்தை..நீங்க தான கிளம்பணும்ன்னு சொல்றீங்க? எனக்கு சமையலே தெரியாது அதியா வருத்தமாக கூறினாள்.

“அய்யோ, இதெல்லாம் தாங்காது. துரு நாம கிளம்பிடலாம். ஆது அண்ணா வீட்ல இருந்துக்கலாம்” சக்தி சொல்ல, “நான் சொல்லீட்டு இருக்கேன். மறுபடியும் அவன் வீட்டுக்கு போகணும்ன்னு சொல்ற?” அதிவதினி சக்தியை முறைக்க, அத்தம்மா..என்னோட பொருட்கள் எல்லாமே அண்ணா வீட்ல தான் இருக்கு. குளித்தால் ஆடை கூட மாற்ற முடியாது..

அதுக்கென்னம்மா? எடுத்து வர சொன்னா ஆதுவோ இல்ல கவினோ எடுத்துட்டு வரப் போறானுக சுகுமார் சொல்ல, அவள் அமைதியாக உணவை உண்டு கொண்டே ஆத்விக்கை பார்த்தாள்.

“சரி, இரு நாட்கள் தான்” ஆத்விக் சொல்ல, எப்படா கணக்கு பார்க்க ஆரம்பிச்ச? கரண்டியை எடுத்து ஓங்கினார் அதிவதினி.

அத்தை, எனக்கு தனிமை வேணும்.

சரி, விடுறேன். ஆனால் அடிக்கடி வந்துறணும் சரியா? அவர் கேட்க, டன் என்று ஆத்விக் கட்டை விரலை காட்டினான்.

அனைவரும் சாப்பிட்டு அதிவதினி வீட்டிற்கு கிளம்ப, துருவினி, சக்தி, அதிவதினியும் ஆரியன் அறையை முதலிரவிற்கான வேலையை  தொடங்கினர்.