சத்ரியின் கோபம் அடங்குவதாய் இல்லை.. இன்னும் என்ன சொல்லி இவரை வறுத்தெடுக்கலாம் என்ற போஸில் நின்றிருந்தான்.
அவனை பார்த்த சங்கருக்கு ‘ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணின எனக்கே இவன் பஞ்சாயத்து பண்றானே! பேசாமல் இவன் லாயரா போய் இருந்திருக்கலாம். இவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டனும்னு எனக்கு தலையெழுத்து.இன்னும் என்ன என்ன வச்சுருக்கானோ.. என்னவெல்ஙாம் சொல்லி வறுத்தெடுக்க போறானோ?’ என பயந்தாலும், ‘பில்டிங் ஸ்ராங்க், பேஸ்மட்டம் வீக்’ என வீராப்பாய் போஸ் கொடுத்து சங்கரும் நின்றிருந்தார்.
‘நமக்கு தெரியாமல் என்னவோ நடந்திருக்கு? எப்படி கவனிக்காமல் போனோம்.. இவன் இவ்வளவு கோபப் படற அளவுக்கு , சாத்வி மேல அக்கறை காட்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும்? அதுவும் மாமாவை குறி வச்சு தாக்குறானே..! இவரும் பம்முறாரு… நம்ம மாமனார் பம்முற ஆள் கிடையாதே’ வெங்க்கட்டின் மூளை யோசித்து யோசித்து சூடாகிக் கொண்டிருந்தது..
எப்படி இவனை நிறுத்துவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் காப்பாற்றினாள் க்ருத்திகா!
அனைவருக்கும் பால் பாயசத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“டேய் போதும்டா.. க்ருத்திகா வர்றா பார்த்து நடந்துக்கோ..” இது தான் நேரம் என விநாயகசுந்தரம் சத்ரியை அலார்ட் செய்ய..
‘எங்களுக்கு தெரியும்… ’ என சாதாரணமாய் முகத்தை மாற்றிக் கொண்டு ‘ஒரு நாள் இருக்கு மாமா உனக்கு’ என சங்கரை கண்களால் எறித்தபடியே மீண்டும் டிவியின் முன் அமர்ந்திருந்தான் சத்ரி.
அதற்காகவே காத்திருந்ததைப் போல், தன் தாயின் சேலை பிடித்து வந்த திவ்யா, சத்ரியை கண்டதும், ‘சித்தப்பா’ என அவன் மடியில் ஓடி வந்து அமர்ந்தாள் “ஏய் வாலு இவ்வளவு நேரம் எங்க போய் இருந்த.. ஆளையே காணோம்” என அவள் கன்னத்தை இரு கைகளாலும் பிடித்து மெதுவாய் ஆட்டினான்.
இவ்வளவு நேரமும் வறுத்தெடுத்தவன் இவன் தானா என்னும் வண்ணம் இருந்தது அவன் முகம். அவ்வளவு சாந்தமான முகபாவத்தை பிரதிபலித்தபடி இருந்ததான்.
“அம்மா கிச்சன்ல இருந்தாங்களா.. நான் அம்மா கூட இருந்தனா.. டிஸ்டர.ப் பண்ண கூடாது போனில் கேம் விளையாண்டுட்டு இருந்தேன்” என பேச்சு கொடுத்தபடியே சத்ரியின் பையில் இருந்த போனை ஆசையாய் பார்த்தபடியே கூற… அந்த பார்வையே கூறியது ‘இப்போது உன் போன் வேண்டும் என’
“போனில் ரொம்ப நேரம் விளையாடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா?” இவன் கண்டித்தாலும்
திவ்யாவின் கண்கள் சத்ரியின் மொபைலையே வட்டமடித்துக் கொண்டிருப்பதையும் ‘சித்தப்பா தர மாட்டாரே’ என அதை ஏக்கத்துடன் பார்ப்பதுமாய் இருந்தாள்.
சத்ரி அவளை திசை திருப்பும் எண்ணத்தோடு “திவ்யா நான் உனக்கு ஒன்னு வாங்கி இருக்கேன், என்னனு சொல்லு பார்க்கலாம்“ என அவளை தூக்கியபடி, அவள் விளையாடுவதற்கு என இருக்கும் தனியறைக்கு அழைத்துச் சென்றான்.
அறை முழுவதும் பொருட்கள் இருந்தாலும் , புதிதாய் இருந்த ஒரு பெட்டி பிரிக்கப்படாமல் இருந்தது.
அதன் அருகில் இறக்கிவிட்டான் அந்த ஆறு வயது சிறுமியை.
சத்ரி அதை பிரிப்பதற்கு உதவி செய்தாலும் , பிரிக்கும் பொறுப்பை திவ்யாவிடமே கொடுக்க, ‘என்ன சித்தப்பா இது?’ எப்படி அவளும் ஆசையுடன் பிரித்தாள். கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள் அவளுக்கு தடையாய் இருக்க பெட்டியை பிரிக்க சிரம்ப்பட்டாள்.
அதைப் பார்த்த சத்ரி, ‘என்ன வச்சிருக்க கையில்’ என அதை அவன் கைக்கு மாற்றிப் பார்த்தான்.
‘அது ரப்பர் பல்லி’ வாங்கி தந்ததே சத்ரி தான். அவ்வப் போது அதை காட்டி யாரையாவது பயமுறுத்திக் கொண்டிருப்பாள். அதைப் பார்த்வன் உதட்டில் சிறு புன்னகை வர அதை தன் கைக்கு மாற்றி கொண்டான்.
அதன் பின் எளிதாய் இவள் பெட்டியை பிரித்துப் பார்க்க உள்ளே இருந்தது பேட்டரி கார் அவ்வளவு அழகாய் ராயல் லுக்குடன் இருந்தது..
காரின் வடிவமைப்புடன் இருந்தாலும், இறகு விரித்த புறாவின் அமைப்புடன் இருந்த காரை பார்த்து ‘ஆ ‘ வென வாய் பிளந்து நின்றிருந்தாள் திவ்யா.
கண்கள் அகலமாய் விரித்து ஆசையை கண்களில் தேக்கி பார்த்திருக்க, அவளை அலேக்காக தூக்கி காரினுள் அமர வைத்து பட்டன் மூலம் அதை இயக்க கற்று கொடுத்தான் சத்ரி.
முதலில் பயந்து கண்களை மூடியவள் , பின் சத்ரி சொல்லி கொடுத்தபடி இயக்கினாள்.
அடுத்த சில நிமிடங்கிளில், அந்த சிறிய அறையை விட்டு வெளியேறி, வீட்டினுள் சர் சர்ரென ஓட்டி எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்தபடியே மீண்டும் சத்ரியன் ஹால் சோபாவில் அமர “நீ மட்டும் தான் எடுத்துகவே இல்லை.. சாப்பிடு” என அவன் கையில் பாயசத்தை கொடுத்து விட்டு
தன் தந்தையிடம் சென்று “நீங்களும் எடுத்துக்கோங்கப்பா” என டிரேயை நீட்டினாள் திவ்யா…
“இப்போ தானே சாப்பிட்டேன், வேண்டாம்மா” என மறுக்க
“உங்களுக்கு தான் ரொம்ப பிடிக்குமே… எடுத்துக்கோங்கப்பா” என வற்புறுத்தி சங்கரின் கையிலேயே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள் கருத்து.
வறட்டுக் கோபத்தை இழுத்துப்பிடித்து , இப்படிப்பட்ட சொந்தங்களின் மதிப்பை உணராமல், மகளின் சந்தோசமான வாழ்க்கையை கண் குளிரப் பார்க்காமல், பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் பேத்தியை கையில் வைத்து தாங்காமல், என அனைத்தையும் இழந்துவிட்டதாகவே தோன்றியது சங்கரனுக்கு..
இப்போவாவது ஒன்று சேர்ந்தோமே என ஒரு வகையில் நிறைவு ஏற்பட கடைசியில் மிச்சமிருந்த பாயாசத்தையும் குடித்து டம்ளரை கீழே வைக்க கண்களில் பட்டது சத்ரியின் செய்கை..
சத்ரி ஸ்பூனில் பாயாசத்தை கிளரி, பின் அப்படியே ஸ்பூனால் எடுக்க…. பாயாசத்திற்குப்பதில் அதில் வழிந்து கொண்டிருந்தது ஒரு பல்லி…
அதைப் பார்த்த சங்கரன் அடுத்த நிமிடம், ஓடி சென்று வாஸ் பேசனில் “வோ….வோக்….வோவக் வோ….” என வாந்தி எடுத்துக் கொண்டிருக்க…
தத்தமது வேலையில் இருந்த அனைவரும் சங்கரின் பின் வந்து நின்று ‘என்னாச்சு.. என்னாச்சு’ என பதறி வர
‘ம்… நினைச்சது நடந்திடுச்சு..’ என மற்றவர்கள் பார்க்கும் முன் அந்த ரப்பர் பல்லியை எடுத்து உதறி அருகில் இருந்த எம்ட்டி டம்ளிரில் போட்டுவிட்டு ஸ்பூனால் பாயாசத்தை சாப்பிட தொடங்கினான்…
சங்கரனின் வாந்தி நிற்கவும் தான் தாமதம் மஹா, சிவஹாமி, விநாயகசுந்தரம், வெங்க்கட், க்ருத்திகா என அனைவரும் “ என்னாச்சு ,என்னாச்சு “ என மீண்டும் கேட்க
அதன்பின் தான் இன்னும் தன் பதிலுக்கு காத்திருப்பவர்களை அசடுவழிய பார்த்தவர் “அது ரொம்ப சாப்பிட்டேன் போல, பஸ் டிராவல் வேற அதான் சேரலை போல ” என கூறி சமாளித்தார்.
“அண்ணே, நீங்க கொஞ்சம் ரொஸ்ட் எடுங்க” என கூறிய சிவஹாமி, க்ருத்தி மாடி ரூம்க்கு அழைச்சிட்டு போம்மா” என அனுப்பி வைத்தார்.
திவ்யாவை, தான் கூட இவ்வளவு உன்னிப்பாய் பார்த்துக் கொண்டதில்லை.. எப்போதோ தன்னிடம் கேட்டு கிடைக்காத பேட்ரி காரை , சத்ரியிடம் காட்டி ‘எனக்கு பேட்ரி கார் வேணும் சித்தாப்பா’ என கேட்டு முழுதாய் ஒரு வாரம் கூட ஆகவில்லை.. இதோ பேட்ரி காரில் குதுகலமாய் தன் மகள் வலம் வருகிறாள்.
தனக்கு நிகராய், தனக்கு இணையாய் பாசத்தைபொழியும் சத்ரியை பெருமையாய் நினைத்தபடி இருந்தான் வெங்க்கட்
மகளின் நினைவில் இருந்தவன் ஏதோச்சையாய் சத்ரியை பார்க்க, அவனோ சுவாதீனமாய் ரப்பர் பல்லியை பாயாசத்தில் போட்டதையும், வேண்டுமென்றே சங்கரன் பார்க்கும்வரை அதை ஸ்பூனில் வைத்திருந்ததையும், பின் சங்கரன் வாந்தி எடுத்ததையும் மகிழ்ச்சி பொங்க பார்த்திருந்த சத்ரியனின் எல்லா செயல்களையும் பார்த்த வெங்க்கட் அதிர்ந்து போனான்.
க்ருத்தி, அவளது தந்தையை மணிக்கு அழைத்து சென்றபின்.
வேகமாய் அவன் அருகில் வந்து அமர்ந்தான் வெங்கட்.. இன்னும் கிரிக்கெட்டில் மூழ்கி இருந்தவனை “ஏண்டா ,இப்படியெல்லாம் பண்ற ” என்றான் திகைத்த குரலில்
“எப்படி பண்றாங்க” சற்றும் பின்னடையாத குரலில்..
“ரப்பர் பல்லியை பாயாசத்தில் போட்டு மாமாவை வாந்தி எடுக்க வச்சியே அதை சொல்றேன்” கடுப்புடன் கேட்டான் வெங்க்கட்
“பார்த்துட்டியா” அசால்ட்டாய் வந்தது பதில்
சத்ரியின் அசால்ட்டான பதிலில் கடுப்பேற “எதுக்காக இப்படி மாமாவை படுத்துற” என கேட்டான் வெங்க்கட்
கிரிக்கெட்டை விட்டு பார்வையை வெங்க்கட் புறம் திருப்பி “மாமனார் மேல ஓவர் பாசமோ” என நக்கலாய் கேட்டு, பின் அழுத்தபாய் பார்த்து “சாத்வியை பத்தி கொஞ்சமும் கவலை இல்லை. இவருக்கு பாயாசம் ஒன்னு தான் குறை” என்றான் ஏக கடுப்புடன்…
“என்னடா பிரச்சனை. ஏதோ எங்ககிட்ட இருந்து மறைக்கிறீங்க? அதுவும் சாத்வியை பற்றி? என்னன்னு சொன்னால் தானே தெரியும்”
அதற்கு சத்ரி அமைதியாகவே இருக்க
“என்னன்னு சொல்லுடா. அதுவும் உன் டார்கெட் புல்லா மாமா மேல தான்.என்னனு சொல்லுடா?” என கேட்டவன்