தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான்.
ஆனால் அதையும் மீறி இத்தனை வருடங்கள் கழித்து மகளை அவளது மகளுடன் பார்த்த பூரிப்பு எழுவதையும் தடுக்க முடியவில்லை.
இருவரின் முகத்தை கண்டவளுக்கு ஏனோ ‘அம்மா, அப்பா ‘ என அழைக்கு தகுதி போய்விட்டது. ஆனால் இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட திவ்யாவிற்கோ “ஐ..தாத்தா… ஆச்சி” என தன் விரிந்த கண்களை இன்னும் பெரிதாக்கிபடி, அவர்களின் அருகே செல்லலாமா வேண்டாமா.. என தீவிர யோசனையில் இருந்தாள் அந்த குட்டி தேவதை.
இம்முறை மகளை விட்டு பேத்தியை பார்க்க அப்படியே மஹாவின் ஜாடையில் இருந்தாள் திவ்யா.
அதன்பின் சற்றும் தயங்கவில்லை சங்கரன். தயங்கி நின்ற பேத்தியை வாரிக் கொண்டார் தன் கைகளுக்குள்.. கன்னத்தில் முத்தம் பதித்து, மஹாவை பார்க்க, அதே ஏக்கம் அவரின் கண்களிலும் பிரதிபலிக்க.. அவளை அப்படியே மஹாவின் முகத்தோடு ஒட்டி வைத்தவர் “இங்கே பாரு மஹா உன் பேத்தி அப்படியே உன்னை மாதிரியே, உன் ஜாடையிலேயே இருக்கா கண்கள் பளபளக்க கூற
சட்டென கண்கள் கலங்கியது மஹாவிற்கும் க்ருத்திகாவிற்கும்.. மஹா நாசுக்காய் கண்களை துடைத்துக் கொள்ள.. அதை க்ருத்திகா செய்யாமல் இருக்க, கண்ணீர் நாடியை தொட்டது. பின் சுற்றம் உறைக்க, அவளும் நாசுக்காய் துடைத்து கொண்டாள்.
அதை கண்டும் காணாமல் பேத்தியின் புறம் திரும்பினார் சங்கரன்.
“உன் பெயர் என்னடா ராஜாத்தி” என ஆசையாய் கேட்க….
“ திவ்யா” என்றாள் கன்னகுழி சிரிப்பில் விரிய…
“திவ்யா” என அழைத்துப் பார்த்தவர்
“எங்களை எப்படிமா ‘ஆச்சி தாத்தான்னு’ அடையாளம் கண்டுபிடிச்ச..” ஆச்சர்யமாய் கேட்க
“அம்மா , உங்களையும் ஆச்சியையும் போட்டோவில் காட்டினாங்க” என சொல்ல
“போட்டோவில் எதுக்குமா காட்டுற.. நேரா நம்ப வீட்டுக்கு என் பேத்தியை கூட்டிட்டு வர வேண்டியது தானே” என முகம் கொள்ளா புன்னகையுடன் கூற… ‘இவர் க்ருத்திகாகிட்ட பேசுராறா..? க்ருத்திகா செய்த செயலால் பட்ட அவமானங்கள் அனைத்தையும் இவர் மறந்துவிட்டாரா..!’
மனதில் எழுந்த மகிழ்ச்சியுடன் மஹா தன் பார்வையை க்ருத்திகாவின் புறம் திருப்ப, அவளோ சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் நின்றிருந்தாள்.
தாங்கள் இருக்கும் இடம் மறந்து அனைவரும் ஒரு வித லயிப்பில் இருக்க, தன் மேல் இருந்த கோபம் மறந்துவிட்டது என தைரியதோடெ
அதை அப்படியே பின்பற்றி “ ஆமாம்.. வீட்டுக்கு வாங்க தாத்தா வாங்க ஆச்சி” என திவ்யாவும் அழைக்க..
மஹாவும் சங்கரனும் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்க்க, அந்த பார்வையே ’பழைய விசயங்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை என கூறியது’ க்ருத்திகாவின் மகிழ்ச்சி புஸ்ஸென அப்படியே இறங்கவும் செய்தது.
மகளின் முகக் கன்றலை காண சகிக்காத மஹா கண் ஜாடையால் அதை சங்கருக்கு காட்ட.. இனி எதற்கு வீராப்பு… என “நீ கூப்பிட்டு தாத்தா வராமல் போவனா என்ன?” என பேத்தியை கொஞ்சி தன் சம்மதத்தை தெரிவிக்க..
‘அதற்கே அகமகிழ்ந்து போனாள்… க்ருத்தி… ’
“அப்பா அம்மா நீங்க ஆட்டோவில் வாங்க, நான் ஸகூட்டியில் முன்னாடி போறேன்” என
“நானும் ஆட்டோவில் தான் வருவேன்” என அடம் செய்த திவ்யாவை அவர்களுடனே ஏற்றிவிட்டு ஆட்டோவிற்கு வழிகாட்டியானாள் க்ருத்திகா.
எதற்கு வந்தோம் என அவர்களும் மறந்தனர்,எதற்காக வந்தனர் என க்ருத்திகாவும் கேட்க மறந்தாள். ஹாஸ்டலுக்கு செல்ல இருந்த தன் தாய் தந்தையை, தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தாள் க்ருத்திகா.
வீட்டை அடையும் முன்னரே அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்களை இன்முகமாய் வரவேற்றனர் விநாயகசுந்தரம்-சிவஹாமி தம்பதியினர் க்ருத்திகாவின் மாமனார் மாமியார்.
‘இவள் தனியாக குடித்தனம் நடத்துவாள் போல’ என நினைத்த சங்கரன் மஹாவிற்கு இனிய அதிர்ச்சி தான் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாகவா இருக்கிறார்கள் என.
தன் மகள் அந்த அளவு பொறுப்புள்ளவளா..! என ஆச்சர்யம் அப்போதும் நீங்கவில்லை.
இந்த சூழ்நிலையில் யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் எழுந்தது.
பேசினால் மரியாதை இருக்குமா? என்ற சந்தேகம் இரு வீட்டு பெரியவர்களுக்குமே எழ தான் செய்தது.
இரு குடும்பமுமே ஒதுங்கும் அளவிற்கு சண்டை சச்சரவு.. எழுந்திருந்தாலுல் அதனால் எழுந்த கோபம் அனைத்தையும் வயதின் முதிர்ச்சியும், காலமும் செவ்வனே சரி செய்திருந்ததாலும் யார் பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பமே ஓங்கியது. ஆனால் அதையும் உடைத்தாள் அந்த குட்டி தேவதை.
“என்ன அப்பத்தா அப்படி பார்க்கறீங்க நீங்க தானே மஹா ஆச்சியை பத்தி நிறைய சொல்லுவீங்க அந்த ஆச்சி தான் அப்பத்தா,வீட்டுக்குள்ள கூப்பிடுங்க அப்பத்தா” என
குழப்பத்தை கைவிட்டவராய் சிவஹாமி “மஹா உள்ளே வா.. வாங்க அண்ணே” என ஆரம்பித்து மட்டுமே வைக்க
“உள்ளே வாடா” சங்கரின் தோளின் மேல் கை போட்டு விநாயகசுந்தரம் அழைத்தேவிட்டார்.
பழைய உறவு புதுப்பிக்கப்பட காரணமும் வேண்டுமோ.. என எண்ணும் வண்ணம் இருந்தது அவர்களின் நடவடிக்கை.
அவ்வளவு தான் கோபமும் ,குழப்பமும் அங்கே விடைபெற அழகிய உறவோன்று புதுப்பிக்கப் பட்டது. அனைவரும் குசல விசாரிப்பில் ஆரம்பித்து விருந்தே நடந்து முடிந்து களைப்பில் சிறிய மகளையும் மறந்து போயினர்.
வெகு நேர பேச்சின் பின் களைப்பு தீற தூங்கி எழுந்து மாலையில் சுவாதினமாய் அமர்ந்து பெரியவர்கள் மீண்டும் பேசிக் கொண்டிருக்க
வெங்க்கட்டிற்கு, க்ருத்திகா தன் தாய் தந.தை வந்திருப்பதை போனில் சொல்லியிருக்க, எப்போதையும் விட சற்று சீக்கிரமாய் வந்திருந்தான்.
வந்தவன் நேரே சங்கரன் மஹா இருவரின் அருகே சென்று கேட்டது ஒரே வார்த்தை தான் “மன்னிச்சுடுங்க அத்தை, மன்னிச்சுடுங்க மாமா” என்பது தான்.
ஏற்கனவே மகளின் வசதியான வாழ்வில் மகிழ்ந்த மஹா மருமகனின் மன்னிப்பில் காஷ்மீரே சென்றுவந்தது போல் உணர்ந்தனர்.
ஆனால் சங்கரனின் கோபம் தெரிந்தவரக்கள் சற்றே பயத்தோடு பார்த்திருக்க
“சட்டென.. அய்யோ நீங்க போய், அதெல்லாம் வேண்டாம் வெங்க்கட்” என வெறுப்பை முன்னிருத்தாமல் வெங்க்கட்டை சங்கரன் ஏற்றுக் கொண்டார்.
பயத்தில் இருந்தவர்களுக்கு, அதன் பின் சுவாசம் சீராகி முகம் மகிழ்ச்சிக்கு தாவியது.
இப்படியும் நடக்குமா? நடக்குமா? என எண்ணி கொண்டிருந்தவர்களின் வாழ்வில் ‘இப்படியும் நடக்கும்’ என நடத்தி விட்டிருந்தது விதி.
அதன் பின் அவர்களது பேச்சில் வெங்க்கட்டும் இணைந்து கொள்ள மேலும் பறந்தது நேரம்.
இரவு கவிழும் நேரம் போல் வந்தான் சத்ரியன். முதலில் கண்களில் பட்டது, சங்கரனின் அருகில் அமர்ந்து படபடப்பின்றி சுவாதீனமாய் பேசிக் கொண்டிருந்த வெங்க்கட் தான். உள்ளே வந்த சத்ரியனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. எப்படி இவர்கள் சமாதானம் ஆனார்கள்….! என்ற ஆச்சர்யம் குறையாமல் பார்த்தான். அதே நேரம் கண்கள் சாத்வி இல்லாததையும் கண்டு கொண்டன்
அமைதியாக வந்து அவர்கள் முன்பு ஒருநிமிடம் தயங்கி நின்றான். “இதோ சத்ரியும் வந்தாச்சி” என்றபடி
“வாடா, இன்னைக்கு தான் கரெக்டான டைம்முக்கு வந்திருக்க. யாருன்னு அடையாளம் தெரியுதாடா? “ என சிவஹாமி ஒரு எதிர்பார்ப்புடன் கேட்க
“ம்….” என தலையசைத்து “வாங்க” என்ற அழைப்புடன் அவ்விடம் விட்டு அகன்றும் விட்டான்.
அவனின் நடவடிக்கையில் சங்கடமாய் முறுவலித்தார் சிவஹாமி “அவன் ஏதோ டென்சன்ல இருப்பான் நீ கண்டுக்காத மஹா” என பொதுவாய் சமாதனம் பேச,
“சத்ரி நில்லு” என்றவர் “காபி கொண்டு வரவா” என கேட்க
“இல்லை வேண்டாம்இப்போ தான் சாப்டேன் ” என வாய். கூறினாலும் சாத்வியின் பெற்றோரை தான் அளவிட்டுக் கொண்டிருந்தான்.
அதன் பின்பே இவருக்கும் நியாபகம் வர, “மறந்தோ போய்டேன்” “சாத்வி எங்கண்ணா?” என சிவஹாமியும் “எங்கடா சாத்வி” என விநாயகமும் கேட்க
“அவளை விட்டுட்டாப்பா வந்திருக்கீங்க….” என க்ருத்திகாவும் ஒரு சேர கேட்க…
அவ்வளவு நேரம் இருந்த லகுதன்மை போய், சங்கரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க
“அவ, இங்கே தான் இதே ஊரில் தான் இருக்கா” என்றார் அனைவருக்கும் ஒரே பதிலில்..
“இங்கேயா” என சிவஹாமி வியப்புடன் கேட்க
“தனியாவா இருக்கா” என விநாயகசுந்தரம் கேட்க
“எப்போ இருந்து, இங்கே இருக்கா” என க்ருத்திகா கேட்க
அடுக்கடுக்காய் கேள்விகள் வந்து விழுந்தது.
சங்கரன் ஏடாகூடாமாய் எதுவும் கூறும் முன்பு… .
“ இதே திருச்சியில் தான் ஹாஸ்டலில் இருக்கா வேலை பார்க்குறா ” என தயங்கி தயங்கி மஹா கூற
“என்னது வேலை பார்க்குறாளா? நம்ம வீட்டு புள்ளையை எதுக்குண்ணே வேலை பார்க்கலாம் விடுறீங்க” என சிவஹாமி ஆதங்கமாய் கேட்க
“ஆமாம்மா… நான் சொன்னதும் அவ கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பா, அடக்காத புள்ளைகளை பெத்திருக்கேன். சொல் பேச்சு கேட்டா தானே இவ வேலை பார்த்து தான் வீட்டில் அடுப்பெரியுது ” என கடுப்பாய் கூற
சாத்வியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என நின்றிருந்த சத்ரி பேச்சு போகும் திசையை வைத்தே
‘ஏதோ சரி இல்லை….’
‘ஏதோ என்ன….? ‘
‘இவர் தான் சரி இல்லை’ என நினைத்தபடியே எதையும் கேட்க பிடிக்காதவனாய் தன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டான்