அத்தியாயம் -9

“ஏய் என்ன லந்தா மேலே வந்து மோதினது நீ!! கத்திரிக்காய்ககு கைகால் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு வாய் ரொம்பத்தான் நீளுது”

“ ஆமா இவரு பெரிய மன்மதரு மேலே வந்து மோதிறதுக்கு லைன்ல நிக்கிறாங்க! ! கைக்கால் முளைச்சா கொத்தவரங்காய் மாதிரி இருந்துக்கிட்டு பேச்சை பாரு”

“ நானும் பார்த்திட்டே இருக்கேன் பிராக்கு பார்த்திட்டு வந்து மேல மோதினது மட்டும் இல்லாம ராங்கா வேற பேசுவியா நீ?? “ என்றான்

“எல்லாம் ரைட்டாதான் வந்தேன் !! நீதான்டா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வற”

“ பார்ரா, நான்தான் வரனு தெரியுதில்ல விலகி நின்னா என்னவாம்?? உங்களுக்கு தான் கண்ணு நல்லா தெரியுதே” என்று கேட்க

“ ஓஹோ அப்போ நீ வேணுமின்னு வந்து மோதுவ நான் விலகி போகனுமாக்கும்??”

“ நான் எங்கடி அப்படி சொன்னேன்?? தேவையில்லாம ட்விஸ்ட் பண்ணாதே”

“ சொல்ல வேற செய்வியா நீ!! இல்லை சொல்லித்தான் பாறேன்” என்றாள்.

அவளை மேலிருந்துக்கீழ் பார்த்தவன்  “இப்ப என்னத்தான்டி உனக்கு வேணும்” என்றுஆற்றாமையுடன் கூறினான்.

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தெரியாமல் செய்துவிடடேன் என்று சொல்லி சிம்பிளாக முடிக்க வேண்டிய விசயத்தை ஏதோ கொலைக்குற்றம் செய்தது போல் நின்று வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தாள் அவனும் என்ன தான் செய்வான்.

“ ஈசிஆர்ல  3 பிஹெஜ்கே அபார்ட்மெண்ட் ஒன்னு வேணும் வாங்கித்தரியா?” என்று கேட்டாள்.

“ஹான்  உனக்கு ஏன் நான் வாங்கித்தரனும்” என்றான்‌.

“ முடியாதுல்ல அப்ப மூடிட்டு போயா, கேட்கிறான் கேள்வி “

“இரு இரு வெயிட்,  இப்ப நான் கேட்டதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன சம்மந்தம் “ என்றிட

“ பண்றெதெல்லாம் பண்ணிட்டு கேள்வி வேற கேட்கறியா நீ!! ஒழுங்கா ஓடிடு!! இனிமே என் கண்ணுல பட்டுத்தொலைச்சிடாதே நான் இருக்கற காண்டுக்கு உன்னை” என்று அவன் கழுத்தை நெறிப்பதுபோல் கொண்டு சென்றவள் “  போயா அங்கிட்டு” என்றவள் விறுவிறுவென நடந்துச்சென்றுவிட்டாள்.

“ என்னடி பண்ணேன் சொல்லிட்டு போ” என்று கணேசன் சத்தமாக கத்த பக்கத்திலிருந்த பூ ஜாடி பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.

“ ஜஸ்ட் மிஸ்னு நினைக்காத நெக்ஸ்ட் டைம் மிஸ் ஆகாது” என்று  கூறிவிட்டு செல்ல பேவென முழித்துக்கொண்டு நின்றிருந்தான் கணேசன்.

இதேசமயம்  ஸ்ரீயின் அறைக்கு முன் நின்று சுற்றுமுற்றி நோட்டமிட்டுக்கொண்டிருந்தான் வேந்தன்.  யாரும் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டவன் கதவில் கைவைக்க கதவு தாழிடப்படாமல் இருந்தது.  மெல்ல சத்தம் வராமல் உள்ளே நுழைந்தவன்

“ கதவை திறந்து வைச்சிட்டு எங்கே போனா ” என்று யோசித்துக்கொண்டே அறையை சுற்றி கண்களை சுழற்றி பார்க்க பாத்ரூமிலிருந்து நீர்விழும் சத்தம் கேட்டது.

“ மேடம் குளிக்கறீங்களா குளிங்க குளிங்க “ என முணுமுணுத்தவன் ஒவ்வொரு இடமாக தேடத்தொடங்கினான்.

“ எங்கே வச்சிருப்பா??” என்று கொண்டே மேசையில் அவனது புகைப்படங்கள் பறத்தி வைக்கப்பட்டிருந்தது.

“ நம்ம ஃபேஸ் மாதிரி இருக்கே?” என்றுக்கொண்டே அதன் அருகில் சென்றுபார்க்க அதில் லேபில் மருந்துகளை சோதித்துக்கொண்டிருக்கும் வேந்தன். நோயாளிகளை சோதித்துக்கொண்டிருக்கும் வேந்தன். ஹாஸ்பிடலில் ரவுன்ட்ஸ் போய்க்கொண்டிருக்கும வேந்தன். நண்பர்களுடன் கேட்டினில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் வேந்தன் என அவனை அனைத்து கோணங்களிலும் புகைப்படம் எடுத்து வைத்திருந்தாள். அனைத்தையும் ஒருகுறுஞ்சிறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன் கண்கள் ஒருப்புகைப்படத்தில் கூர்மையாகின. அந்த புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்தவன் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று மேசையை சுற்றி ஆராய்ந்து கொண்டிருக்க

“ நீ இங்கே என்ன பண்ணுற” என்ற சத்தத்தில் திரும்பிப்பார்த்தவன் ஒருகணம் அப்படியே திகைத்து நின்றுவிட்டான். தலைக்குக்குளித்துவிடடு ஈரக்கூந்தலில் நீர் வடிய  மார்பில் பூந்துவளையுடன் நின்றிருந்தவளை கண்டவன் கண்களை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அவளை உச்சி முதல் பாதம் வரை பாரத்தவன் பார்வையிலேயே கபாளிகரம் செய்துக்கொண்டிருந்தான்.

அவனையே புருவம் சுருக்கி பார்த்தவள் “ இதை எப்படி உனக்கு கிடைச்சது??” என்றுக்கொணடே அவனது அருகில் வர “ ஏன் இதையும் மறைக்கலாம் என்று பார்த்தியா??” என்று கேட்டான்.

அவனது கேள்வியை கண்டுக்கொள்ளாமல் “ முதல்ல அதை கொடு” என்று அவன் கையிலிருந்த ஃபைலை பிடுங்க பார்க்க” ஆஹான்” என்று அதனை தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டவன் “ முடிஞ்சா எடு பார்ப்போம் “

என்றான்.  அவள் நின்றிருந்தவாக்கிலேயே அவனது பின்னால் கையை  விட்டு ஃபைலை பறிக்க பார்த்தாள்.

 அவள் ஃபைலின் மீதே கவனமாக இருக்க இருவரும் கிட்டத்தட்ட உரசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.  இவ்வளவு நெருக்கத்தில அவளை கண்டதும் சற்று நிலைத்தடுமாறியவன் பிடி தளற சட்டென ஃபைலை பிடுங்கியவள் அவனிலிருந்து விலகிக்கொண்டாள்.

“பெர்மிஷன் இல்லாம  அடுத்துவங்க திங்க்ஸ எடுக்கறது மேனர்ஸ் இல்லன்னு டாக்டர் சார்க்கு தெரியாதா?” என்றாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் தான் இருக்கும் நிலை உணர்ந்தவள் அவசரமாக பெட்ஷீட்டால் தன்னை போர்த்துக்கொண்டு “ இப்படித்தான் ஒரு பொண்ணோட ரூமுக்கு பெர்மிஷன் இல்லாம வருவாங்களா?”என்றாள்.

“ ரூம லாக் பண்ணாமவிட்டா இப்படித்தான் நடக்கும் அது உன் தப்பும்மா” என்று பெட்டில சாவகாசமாக அமர்ந்து கொண்டே கூறினான்.

 “ துறந்து இருந்த உள்ளே வந்துடுவீங்களா? முதல்ல வெளியே போங்க??”என்றாள்‌

“ அதெல்லாம் போகமுடியாது!! ஐ வான்ட் டூ டாக் டூ யூ!! இப்பவே” என்று  அழுத்தமாக கூறினான்.

அவன் தோரனையே சொன்னது பேசாமல் போகமாட்டேன் என்று, அவனை பற்றி நன்கு அறிந்தவள் அவள் தான் கடைசியில் இறங்கி வர வேண்டியிருந்தது.

“ இப்படியே எப்படி பேசறதாம்?? வெளியே வெயிட் பண்ணுங்க நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்” என்றிட “ஏன் இப்படியே மாத்தலாமே இடம் தான் தாராளமா இருக்கே!!” என்று கட்டிலில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு கூறினான்.

“ உங்க முன்னாடியா? வெளியே போங்க” என்றிட “ வெளியே போறத யாராவது பார்த்தா ரிஸ்க் ஆகிடும்டி! டியூப் லைட்” என்றான்.

“ சரி பாத்ரூம்குள்ளயாவது போங்க!” என்றாள்.

” ம்ம்க்கும் இனி மறைக்க உன்கிட்ட ஒன்னும் இல்லை!! அப்பறம் எதுக்கு இந்த பில்டெப்பெல்லாம்”என்றுக்கொண்டே பால்கனி பக்கம் செல்ல “ பாத்ரூம் இந்தப்பக்கம்” என்று குரல்கொடுத்தாள்.

“ தெரியும் தாயே கண்ணாடியை கலட்டிடுறேன்!!ஒன்னுமே தெரியாது  போதுமா??”என்றவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.

“ ரொம்பத்தான்” என்று உதட்டை சுளித்தவள் கையில் சிக்கிய தாவணியை  எடுத்துக்கொண்டு அவசரமாக அணிந்தவள்  குரல்கொடுக்க விறுவிறுவென வந்தவன் அவளது தாவணியில கைவைக்கப்போக“ டோன்ட் டச் மீ” என்று கையை தட்டிவிட்டாள்.

 “ ஓவரா பண்ணாதடி நியாயத்துககு கோபப்பட வேண்டியது நான்!! ஒண்ணும் பண்ணிட மாட்டேன்!!” என்றவன்  அவளை நெருங்கி நின்றான்.

அவள் கையைக்கட்டிக்கொண்டே நிற்க அவளது தாவணியை விலக்கியவன் அவளது மணிவயிற்றை வருடி தனது மகவை உணர அவளது விழிகள் அதிர்ந்து விரிந்துக்கொண்டன.

“என்ன‌ இவனுக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா??எல்லாத்தையும் அழிக்க முடிஞ்ச மேடம் உங்களால இதை அழிக்க முடியலைல!!” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ப்ரெக்னன்சி ஸ்டிக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதனை பெற்றுக் கொண்டவள் “ஆமாம் முடியலை!! ரொம்ப ஸ்ரோங்ல!!” என்று மாறிக்கேட்டாள்.

“ எப்படி உன்னால இப்படி பேச முடியுது ஸ்ரீ!! உனக்கும் குழந்தைத்தானே??” என்று நெகிழ்ச்சியாக கேட்டான்.

“ கல்லுக்குள் ஈரமோ??” என்று இகழ்ச்சியாக புன்னகைத்தவள் “உங்கக்குழந்தை என்று வரும் போது மட்டும் பதறுதோ ??ஊருல இருக்கறவன் குழந்தையை கொல்லும்போது தெரியலையா?? தப்புன்னு”  என்றாள்.

“ இதுப்பார் பழசை எல்லாம் மறந்திடு!! நியூவா லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம் நீ நான் நம்ம குழந்தை இது மட்டும்  நமக்கு போதும்” என்று அவளது கையைப்பற்ற போக வெடுக்கென கையை இழுத்துக்கொண்டாள்.

“ சுத்தி வளைச்சு பேச‌ விரும்பல வேந்தன்  இப்படி ஒருத்தன அப்பன் என்று என் குழந்தைக்கு கைகாண்பிக்க எனக்கு விருப்பம் இல்லை! அதுக்கு இந்த குழந்தை பிறக்காம இருக்கலாம் என்று தான் கலைக்க நினைச்சேன்!!ஆனால் முடியல! நீ திடீரென இப்படி முன்னாடி வந்து நிற்ப என்று நான் எதிர்பார்க்கவில்லை, எது எப்படி இருந்தாலும் உன்கூட என்னால வாழ முடியாது வேந்தன்!! இதுதான் என் முடிவு” என்று தீர்க்கமாக கூறினாள்.

“ஃபைன்  ஃபிக்ஸ்ல” என்றவன் “ அப்போ இதைக்கொஞ்சம் பார்த்திட்டு உன்முடிவை சொல்லு” என்று தன் தொலைப்பேசியில் இருந்த வீடியோவை ஓடவிட  கைகால் கட்டப்பட்ட நிலையில இளம்பெண் ஒருத்தி சேரில் அமர்ந்திருக்க அவளைச்சுற்றி பத்து பதினொரு அடியாட்கள் கையில் கத்தி தூக்கியுடன் நின்றிருந்தார்கள்.

“ ஸ்ரே இவ எப்படி??” என்றுக்கொண்டே அதிர்ந்தவள் எச்சில் விழுங்கி அவனையே  பார்த்தாள்.

“ கனடாக்கு ஃபளைட் ஏத்திவிட்டவ இங்கே எப்படின்னு யோசிக்கிறியா??” என்றவன் அவள் தோள்களில் கைப்போட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்தவன்  “ மாமன பத்தி ரொம்ப தப்பா புரிஞ்சு வைச்சிருக்க செல்லக்குட்டி!! எனக்கு ஒன்னு வேணுமின்னா அதுக்கு நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன் அது உனக்கே தெரியும்!! சொல்லு இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா??” என்று கண்ணடித்துக்கேட்டான்.

அவள் அறுவறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் “ பாருடா !! அப்போ சம்மதிக்க மாட்டே” என்று கொண்டே நம்மரை டயல் செய்தவன் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும் “ டேய் அவளை போட்டு வீடியோ அனுப்புடா” என்றிட “ வேந்தன் அவளை விட்டுடுங்க வேந்தன் அவ பாவம் அவளுக்கு ஒன்னுமே தெரியாது” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

“ ஒரு நிமிடம் இருடா” என்றவன் “ என்னம்மா இந்த நேரத்தில் இப்படி கத்தலாமா என் பாப்பா பயப்படுமில்லை!! ரிலாக்ஸாக இரு சில்” என்றிட “ வேந்தன் விட்டுடுங்க வேந்தன் ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

“ இல்லடாம்மா இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரல போல !! வெயிட்  , ஃப்ரூவ் பண்ணகடலாம்” என்றவன் திரும்பி

“ டேய் வீடியோ கால் எடுடா” என்று போனை கட் செய்துவிட்டு வீடியோ கால் போட்டான்.

“ டேய் அவளை காட்டுடா” என்றதும் ஸ்ரே என்கிற ஸ்ரேயா முழுவதுமாக திரையில் காட்டப்பட்டாள்.

“ ம்ம்ம் இப்போ சொல்லு ஓகேயா??” என்றிட “ ஓகே ஓகே கல்யாணம் பண்ணிக்கறேன் ,அவளை விட்டிடு விட்டிடு” என்றிட “ சமத்து” என்று அவள் கண்ணத்தில் அழுந்த முத்தமிட்டான்.

தனது நிலையை எண்ணி வெட்கியவள் தலைக்குனிந்து அமர்ந்திருக்க  “ எங்கே நீ மாமாவுக்கு கொடு பார்ப்போம்” என்று கண்ணத்தை தொட்டு காண்பித்தான்.

அவள் அப்படியே அமர்ந்திருக்க “ நீ தேற மாட்ட” என்றவன் “ டேய் முடிச்சு விட்டுடுங்கடா” என்று சொன்ன அடுத்த நொடி ஸ்ரேயாவின் தலைக்குள் நான்கைந்து புல்லட்டுகள் சரமாறியாக இறக்கப்பட்டது. நாற்காலியில் கைகால்கள் கட்டப்பட்டு தலை தொய்ந்து போய் இரத்தம் வடிய சடலமாக திரையில் காட்சியளித்தாள் ஸ்ரேயா.

“ ஸ்ரே “ என்று கத்த “ மூச்!! இப்போதானே சொன்னேன்??”  என்று வாயில் விரல் வைத்து அதட்டினான். வாயில் வைத்து அவனையே   வெறித்துப் பார்க்க போனை கட் பண்ணியவன் வேறொரு நம்பருக்கு வீடியோ கால் செய்தான்.

அழைப்பு ஏற்கப்பட்டதும் “ சார் வணக்கம் சார் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!! எப்படி இருக்கீங்க??” என்று பயில்வான் கணக்கில் ஒருவன் பேசிக்கொண்டிருக்க “ ரொம்ப பிசி கிரி அதான் வர முடியலை வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?” என்று சாவாகாமாக பேச  இருவரையும் மாறிமாறி பார்த்தவள் இதயம் வெளியே வந்து விழுமளவுக்கு துடித்துக்கொண்டிருந்தது.

  கொல்லமாட்டான் என்று நம்பிக்கையுடன் இருக்க நொடிப்பொழுதில் ஒரு உயிரை பறித்துவிட்டானே??

அதுவும் தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்று நினைக்கும் போது அவளுக்கு மூளையே வேலை நிறுத்தம் செய்துவிட்டது. அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்திலேயே வியர்த்து போய் அமர்ந்திருந்தாள்.

“ டேய் கிரி அவனை காட்டுறா “ என்றதும் “அவன் அரைமயக்கத்துல கிடக்குறான் சார் !!” என்றான்.

 “உயிர் இருக்குல்ல காட்டுடா “ என்றதும் கந்தலாக ஒரு உருவம் திரையில் காட்டப்பட்டது. யாரு அது என்று அடையாளம் காணவே முடியாத அளவு உருக்குலைத்து வைத்திருந்தார்கள்.

அவள் திரையையே உற்று பார்த்தவள் “ வெங்கடேஷ் “ என்று மெல்ல முணுமுணுக்க  “ என்னடா இப்படி சிதைச்சிட்டீங்க பாவம்ல” என்று உச்சுக்கொட்டிக்கொண்டே கேட்டான் வேந்தன்.

“ வாயையே திறக்கல சார் அதான் நாலு ரவுண்ட் எக்ஸ்ட்ராவா ஆகிடுச்சி” என்றிட “ டேய் எவிடென்ஸ் எல்லாம் எடுத்தாச்சுல்ல?” என்று கேட்டான்.

“ அதெல்லாம் பக்காவா முடிஞ்சது சார்!! ஒன்னுவிடாம எல்லாத்தையும் கறந்தாச்சு” என்றிட “ அப்போ போட்டுடு” என்றதும் “ அதுதான் நான் ஓகே சொல்லிட்டேனே வேந்தன் மறுபடியும் ஏன் இப்படி பண்றீங்க??” என்று தவிப்பாக கேட்டாள்.

“ நீ தான் கிஸ் பண்ணலயே பேபி!! இப்பவே இப்படி முரண்டு பிடிச்சா எப்படி நான் உன்னை நம்புறது!!” என்று அவளை போலவே பேசிக்காட்டினான்.

“அது வந்து”என்றவள் “ கிரி போ” என்றவன் மீதி வார்த்தைகளை உள்வாங்கி கொண்டது என்னவோ அவள்தான். அவனது முகத்தை பற்றியவள் அவசரமாக முத்தமிட திரையில் அந்த தடியன் சிரிக்கும் சத்தம் நாராசமாக அவளது காதுகளில் ஒலித்தது. அவளது இதழில் ஆழ்ந்து முத்தமிட்டவன் அப்படியே போனை கட் செய்துவிட்டு கட்டிலில் தூக்கிப்போட்டான்.

பின்பு அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் முத்தமிட்டு கொண்டே அவளுடன் மெத்தையில் சரிந்தான்.

 மெல்ல அவள் மேல் படர்நதவன் அவளது ஆடைமேல் கைவைக்க அவனது கையை பற்றி தடுத்தவள் “ பாப்பா” என்று வாயெடுக்க மீண்டும் அவளிதழை சிறைசெய்து விடுவித்தவன் “ ஐ க்னோ  ஹவ் டூ ஹான்டில்” என்றவன் அவளை ஆளத்தொடங்கி விட்டான். அவனது தொடுகையை சகித்துக்கொள்ள முடியாமல தவித்துப்போனது என்னவோ அவள்தான்.

சிறிது நேரத்தில் அவளிலிருந்து விலகியவன் “ உன்னை பார்த்தாலே கன்ட்ரோல் போய்டுது, என்ன பணணிடி என்னை மயக்கின??” என்று கொண்டே அவளது இதழில் இதழ்பதித்தவன் வெளியேறிச்செனறுவிட்டான்.  கண்ணில் நீர்வடிய விட்டத்தை பார்த்து கொண்டே படுத்திருந்தாள் ஸ்ரீ. தன்னை மறைத்துக்கொள்ளக்கூட தோன்றாம்ல அப்படியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

தனது அறைக்குள் நுழைந்து தனது பாக்கெட்டில் கைவிட்டு அவளது சிங்க பென்டண்ட் இட்ட செயினை  எடுத்தவன் பார்த்தான்.

“ யாருகிட்ட” என்று அதனை தூக்கிப்போட்டு பிடித்தவன்

தனது தொலைப்பேசியை பாக்கெட்டில் கைவிட்டு தேட காணவில்லை

~தொடரும்