வல்லவன் 12

துருவினியிடம் வந்து, உன்னோட அண்ணா.. ஆத்விக் சொல்லும் போது துருவினி அவனை பார்க்காமல் பின்னே வரும் அவன் அம்மாவை பார்க்க, திரும்பியவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பவானி. துருவினி அதிர்ந்து அவரை பார்த்தாள்.

கன்னத்தை தடவி விட்டு அவரை முறைத்து பார்த்தான் ஆத்விக்.

ஒழுங்கா அதியை என்னிடம் ஒப்படைத்து விடு.

“என்னது? அதியை விடணுமா? அவ என்னோட தங்கச்சி. நீ அம்மா மாதிரியா பேசுற?” கோபமாக கேட்டான்.

நீ அண்ணன் மட்டும் தான். ஆனால் அவ என்னோட பொண்ணு..

“பொண்ணா?” துருவினி அவர் முன் வந்து, “உங்க பொண்ணுக்கு விருப்பமில்லாத திருமணம் செய்து வைக்க நினைக்கிறீங்க? அதை விட உங்க மூத்த பொண்ணு கொலை செய்யப்பட்டதையே மறைத்து இருக்கீங்க? இதையெல்லாம் விட உங்க பொண்ணு ஓடிப் போயிட்டான்னு அபாண்டமாக பேசுறீங்க? இது தான் அம்மாவுக்கு அழகா?” கோபமுடன் கேட்க, “அதை கேட்க நீ யாருடி?” துருவினியை அடிக்க கையை ஓங்கினார்.

பவானி கையை பிடித்த ஆத்விக், “அவ மேல கை வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். அவ உண்மையை தான கேக்குறா?” உங்க பொண்ணு அதியா இப்ப உயிரோட இருக்க காரணமே இவங்க குடும்பம் தான். அதி உங்க பொண்ணு இல்லை. என்னோட தங்கை. அவளுக்கு என்ன செய்யணும்? எப்படி செய்யணும்? அவளை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும்..

பவானி துருவினியை முறைத்துக் கொண்டே ஆத்விக்கை பார்த்து, “இவள அடிக்க வந்தா உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது?”

அதை உங்களிடம் சொல்ல தேவையில்லை.

சரி, தேவையில்லாமல் போகட்டும். “அந்த கவின் வீட்டுக்கு எதுக்கு போன?”

“அப்புறம் உங்க வீட்டுக்கா வர முடியும்?”

கவினை அதிக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறாயா?

நாங்க என்ன செய்தால் உங்களுக்கென்ன?

எனக்கு தேவை அதி மட்டும் தான்.

அச்சோ அம்மா உங்களுக்கு தேவை அதியில்லை. அதி மேல் அக்கா எழுதி வைத்துள்ள சொத்து..பணம்..

பணம் இருந்தால் நீங்க மனுசங்களை கூட வாங்கிவீங்கன்னு தெரியும் பட் நீங்க சாகும் நிலையில் இருந்தால் அந்த பணம் உங்களை சேர்க்க வேண்டியது இடத்தில் சேர்க்காது. பார்த்து பத்தரமா இருங்க. உங்க மருமகன் பயங்கர பொறுக்கி. போட்டு தள்ளீட்டு போய்கிட்டே இருப்பான். அதி தனியாக இருக்கும் வரை தான் உங்களுக்கு பாதுகாப்பு என மிரட்டி விட்டு, “வா வினு போகலாம்” துருவினி கையை பிடித்து அழைத்து சென்றான்.

“எதுக்கு வினு, அவங்ககிட்ட பேசுன?” கோபமாக கேட்டான். அவங்க அதியை பொண்ணு எனவும் எனக்கு என் அம்மா எனக்கு செய்ததும் உங்க அம்மா அவளை அழ வைத்ததும் தான் நினைவு வந்தது. மனதில் இருந்ததை கொட்டி விட்டேன்.

“உன்னோட அம்மாவா?”

“அம்மா, மை வேல்ர்டு” என்றாள் ஒரே சொல்லில்.

“சூப்பர்” புருவத்தை உயர்த்தி மெச்சிக் கொண்டான்.

நீங்க இங்க என்ன பண்றீங்க?

அதை விடு. மாம்ஸ் என்ன பண்றார்? நம்ம வழிக்கு வருவாரா?

“வாட்? அப்ப இது ஒரிஜினல் மேரேஜ் இல்லையா?” துருவினி கேட்க, உன் அண்ணா வரலைன்னா கண்டிப்பாக அதி கழுத்தில் கவின் தாலி கட்டிருவான். என்னால் ஏதும் செய்ய முடியாது.

ம்ம்..சரி..

“என்ன சரி? என்ன பண்றார்?”

அறைக்குள்ளவே இருந்தான். நீங்க பத்திரிக்கை கொடுத்து செல்லவும் அறைக்குள் போனவன் இன்னும் வரலை. அப்பாகிட்ட பேசினேன்.

உன்னோட அண்ணாவை தவிர என்னால கூட அதி, ஆகாவை பத்திரமாக பார்த்துக்க முடியாது என்றான் ஆத்விக் வருத்தமுடன்.

“என்ன சொல்றீங்க?”

ம்ம்..கவின் போலீஸ் தான் பட் ஆட்கள் பலமில்லை. எனக்கு ஆட்கள் பலமிருந்தாலும் என்னை சுற்றி நிறைய பிரச்சனைகள் இருக்கு.

உன் அண்ணா பழைய போஸ்ட்டிங்கை கையில் எடுத்தால் எங்க வீட்ல எவனையும் எதுவும் செய்ய முடியும். உங்க அண்ணாவிற்கு மும்பையில கூட ஃபேன் பேஸ் இருக்கு.

“என்ன இருந்து என்ன செய்ய? அவனுக்கு வயசாகிடுச்சாம்” சொல்லி அவனை நிமிர்ந்து பார்த்து, அதியை நாமே கடத்தி அண்ணாவிற்கு தெரியப்படுத்தினால்.

தெரியபடுத்தி நாங்க வாங்கி கட்டிக்கவா? ஆத்விக் கேட்க, அப்புறம் என்ன தான் செய்றது?

கண்டிப்பா கவின் செய்த வேலையில் மனஉளைச்சலில் தான் இருப்பார். கண்டிப்பாக இருவரையும் ஏதாவது செய்து சேர்த்து வைக்கணும்..சீக்கிரம் நடக்கணும். என் அம்மா சும்மாவே எதுவும் செய்ய தயங்க மாட்டாங்க. நான் வேற சொறிஞ்சு விட்டுட்டேன்.

நீ கிளம்பு. இரவு கால் பண்றேன்..

ம்ம்..அதியும், ஆகாவும் நல்லா இருக்காங்களா?

ஊஹூம். அதி கூட அறையை விட்டு வெளிய வந்தா? ஆகாவை சமாதானப்படுத்த முடியலை. அவளுக்கு உன்னோட அண்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு..

நான் கிளம்புகிறேன். ரொம்ப நேரமாகிடுச்சு.

ம்ம்..அவன் சொல்ல, அவள் நகர்ந்தாள்.

வினு, இந்த லாயர் ஆடை உனக்கு அழகா இருக்கு அவன் சொல்ல, புன்னகைத்து அவனை பார்த்துக் கொண்டே சென்றாள் துருவினி.

அன்றைய நாள் பொழுது கழிந்தது.

மறுநாள் காலை ஒரு முடிவுடன் எழுந்தான் ஆரியன். சீக்கிரமே கடையை திறக்க சென்றான்.

“அப்பா, அண்ணா இவ்வளவு சீக்கிரம் எதற்காக போகிறான்?” துருவினி கேட்க, “அத்தை, அப்பா அதிம்மாவை பார்க்க போறாரா?” எனக் கேட்டான்.

“உன்னோட அப்பன் அப்படி ஏதாவது உருப்படியாக செய்தால் நல்லா தான் இருக்கும்” என்று உத்தமசீலன் சொல்ல, ஆமா தர்சு அப்பா அங்கெல்லாம் போக மாட்டார் என்று சொல்லி, “நீ பள்ளிக்கு தயாராகு” என்று அவர்கள் தயாராகி சென்றனர்.

ஆரியன் கடைப்பக்கமாக துருவினி செல்வதை பார்த்த ஆரியன், “அவளோட ஆபிஸ், கோர்ட்டு இரண்டுமே இங்கு இல்லையே?” சிந்தனையுடன் அவளை பின் தொடர்ந்தான்.

ஒரு கஃபேவில் வண்டியை நிறுத்தி விட்டு துருவினி உள்ளே நுழைந்தாள். அங்கு ஆத்விக் அமர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

“சார்” அவள் அழைக்க, “இன்னும் சார் தானா வினு?” கொஞ்சலாக அவன் கேட்க, அவள் முறைத்தாள்.

உட்கார சொல்லி “இரு கேஃபெச்சினோ” பேரரிடம் ஆர்டர் கொடுத்து, துருவினியிடம், சாப்பிடுவ தான? கேட்டான்.

ம்ம்…சாப்பிடுவேன். “எதுக்கு வரச் சொன்னீங்க? பிளான் கிடைச்சிருச்சா?” அவள் கேட்க, “அவளை பார்த்து பிளான் இருந்தால் தான் என்னை பார்க்க வருவீங்களா?” கேட்டான் ஆத்விக்.

“ஆரம்பிச்சிட்டான்டா” எண்ணிய துருவினி, “சார் எனக்கு வேலை இருக்கு”.

சரி, நீ ஏதாவது பிளான் வச்சிருக்கியா?

நான் என்ன செய்றது? என்னிடம் இல்லைன்னு நேற்று தான சொன்னேன்.

அவராக தான் வரணும்.

“அவன் வர மாட்டான்” துருவினி சொல்ல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஆரியன் அவர்கள் முன் வந்தான்.

“அண்ணா” துருவினி எழுந்தாள்.

வினு உட்காரு. உட்காருங்க மாமா. காபி சாப்பிட்டு விட்டு போகலாம் ஆத்விக் கேசுவலாக சொல்ல, ஆத்விக் அலைபேசி அலறியது.

சிந்தனையுடன் அலைபேசியையும் ஆரியனையும் பார்த்து, அலைபேசியை காதுக்கு கொடுத்தான்.

“என்னடா மச்சான்? என்னை கண்காணிக்க பொண்ணா? பொண்ணு டக்கரா தான் இருக்கு” என்ற வருண் குரலில் பதறி எழுந்தான் ஆத்விக்.

“ஏய், சக்தி எங்க?” ஆத்விக் கேட்க, அதான் நீயே என்னிடம் கொடுத்துட்டேல்ல. இனி அவ்வளவு தான் மச்சான். அப்புறம் உன்னோட அருமை தோழனும் மச்சானுமாகிய கவின் என்னிடம் தான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறான் என சொல்ல, மச்சான்னு சொல்லாத. கவினுக்கோ சக்திக்கோ ஏதாவது ஆனால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் ஆத்விக் கத்தினான்.

ஆரியன் அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டு மேசை மீது வைத்தான்.

“அச்சோ மச்சான்! இதுக்கே பதறினால் எப்படி? உங்க குடும்பம் இங்க தான இருக்காங்க” என்று வருண் சொல்ல, மூவருக்கும் தூக்கி வாரி போட்டது.

பேச வந்த துருவினி வாயை அடைத்த ஆரியன் “பேசு” கண்ணாலே ஆத்விக்கிற்கு சைகை செய்தான்.

“யாரை பிடிச்சி வச்சிருக்க?”

அதுவா..சொல்றேன். முதல்ல இந்த கவினை முடிக்கணும். அவனை அதுவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாயா மச்சான்? அவன் அதனால் தான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறான். அப்புறம் இப்பொழுதே எனக்கும் அதுவுக்கும் திருமணம். உங்களை போல் என்னால பத்திரிக்கை அடிக்க முடியல.

“அவ அண்ணன் எனக்கு மச்சானாச்சே அழைக்காமல் இருக்க முடியுமா?”

“டேய்” சீற்றமுடன் ஆத்விக் சத்தமிட, அவன் கையை அழுத்தி பிடித்தான் ஆரியன்.

அதியை விட்ரு..

“அச்சோ! இன்னும் மெம்பர்ஸ் இருக்காங்களே!”

“ஆகுவும் அந்த பையன். அதான் நம்ம ஆகு, அதியை என்னிடமிருந்து காப்பாற்றி அழைத்து சென்றானே! டேய்..அவனோட பேரு என்னடா?”

பாஸ்..ஆரியன். சூப்பர் மார்கெட் வச்சிருக்கான் பாஸ்.

ம்ம்..அவன் பையனும் இங்க தான் இருக்கான்.

“தர்சுவை எதுக்குடா தூக்கின?” ஆத்விக் சினமுடன் கேட்க, நான் தூக்கலை. அவனாகவே வந்துட்டான். நான் என்ன செய்றது?

“அவனாகவா?”

பள்ளியில் வைத்து ஆகுவை தூக்கும் போது அந்த பையன் நம்மாளு ஒருத்தனை கடிச்சிட்டானாம். அதான் அவனையும் சேர்த்து தூக்கிட்டு வந்துட்டானுக..

“இன்னும் யாரையெல்லாம் தூக்கி இருக்க?”

இப்பொழுதைக்கு இவர்கள் மட்டும் தான்.

சரி மச்சான். நான் என்னோட பொண்டாட்டிக்கு தாலியை கட்டணும்.

“வேணாம்டா” ஆத்விக் சொல்ல, அலைபேசியை அணைத்த ஆரியன் அவன் நண்பர்களை அழைத்து வருண் அழைத்திருந்த அலைபேசி எண்ணை கொடுத்து,

பிரகாஷ் நான் அனுப்பிய  நம்பர் எங்க இருக்குன்னு பார்த்து சொல்லு? நாம கனெக்ட்லயே இருக்கணும் என ஆரியன், ஆத்விக், பிரகாஷ், லோகேஷ், விஷ்ணு ப்ளூ டூத் மூலம் கான்பரன்சில் பேசுவது போல ஏற்பாடு செய்து விட்டு, விசு, லோகு நீங்களும் ஆத்விக்கும் பிரகாஷ் சொல்லும் இடத்திற்கு செல்லுங்கள். “நானும் வருவேன். சீக்கிரம் கிளம்புங்க” ஆரியன் ஆத்விக்கிடம் சொல்ல, அவன் அங்கிருந்து பைக்கை விரட்டினான்.

“அண்ணா” துருவினி அழைக்க, “நீ வா” அவளை அவன் வீட்டில் விட்டு அப்பாவுடன் “உள்ளேயே இரு” என சொல்லி விரைந்து “குற்றவியல் புலனாய்வு துறை” சி.பி. ஐயின் ஹேட் ஆபிஸிற்கு சென்றான்.

அங்கிருந்தவர்கள் ஆரியனை பார்த்து திகைத்து மரியாதை நிமித்தம் வரிசையாக எழுந்து வணக்கம் தெரிவித்தனர். அவன் அமைதியாக தலையை மட்டும் அசைத்து உள்ளே சென்றான்.

ஹே, பர்ஃபைக்ட் மேன். வெல்கம் வெல்கம். கம் அன்ட் சிட்..

சார், வெரி அர்ஜெண்ட் மேட்டர். ஐ ஜாயின் மை டியூட்டி சார்.

“ஷியர் மேன். அப்பாயிண்மென்ட் ஆர்டரை அடிங்கடா” சேனாதிபதி உற்சாகத்துடன் சொன்னார்.

சார், அவர் அசிஸ்டென்ட்விழிக்க, ம்ம்..ஸ்டார்ட் தி பிரஷ்யூஜர்.

“தேங்க்யூ சார்” ஆரியன் சொல்ல, நம்முடைய மேலிடத்திலும் சொல்லி அவர்களையும் ஒத்துக் கொள்ள வைப்பது என் வேலை என்றார் அவர்.

அலைபேசியில் ஆரியனுடன் இருந்தவர்கள் மகிழ்ச்சியாக, ஆத்விக்கோ “அப்பாடா” பெருமூச்சு விட்டு அவ்விடத்தை அடைந்தான்.

கவின் இரத்தக்காயத்துடன் தொங்கவிடப்பட்டிருந்தான். அதியாவை மாலையிட்டு அமர வைத்திருந்தான். அவளருகே பல கட்டுகளுடன் வருண் அமர்ந்திருந்தான். ஆரியன் நண்பர்களும் அவ்விடம் வந்தனர்.

தர்சு, ஆகர்ஷனாவை சேர்த்து கட்டி தண்ணீர் தொட்டிக்கு மேல் கட்டிப் போட்டிருந்தனர். சக்தியும் கவினுக்கு அருகே அடிபட்டு கிடந்தாள்.

வருணை நோக்கி சினமுடன் சென்ற ஆத்விக்கை அவன் ஆட்கள் பிடித்தனர். அவனை பார்த்து லோகேஷ் கோபமாக, “இவனாக எதுக்கு உள்ள போனான்?” கோபமாக ஆத்விக்கை திட்டினான்.

“சரி நாம இப்ப உள்ள தான போகணும்” விஷ்ணு கேட்க, லைட்டா அவனுக்கு ஆட்டம் காட்டுங்க. “அதுக்குள்ள நானும் வாரேன்” ஆரியன் சொல்ல, சேனாதிபதி அவனை பார்த்து, “வொர்க்கை ஆரம்பிச்சிட்டீங்களா மேன்?”

பர்சனல் சார். வருணை பற்றி அவரிடம் மட்டும் கூறினான்.

“ஆதாரம் வேண்டுமே? அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கே!”

“சார் அவங்க குடும்பத்துல்ல நடக்கும் அத்தனை இல்லீகல் விசயத்திற்கும் ஆதாரம் வச்சிருக்கோம்” ஆரியன் சொல்ல, என்ன மேன்? ஆஃப் டியூட்டியா? இன்முகத்துடன் கேட்டார். அவன் முகம் இறுக்கமாக இருந்தது..

கிளம்புங்க. நானும் வாரேன் என்றார்.

“சார்” அவன் அழைக்க, நேரடியா பிடிச்சா எல்லாருக்கும் தெரிந்து விடும். அப்புறம் அவன் வெளியே வர முடியாதுல்ல..

“தேங்க்யூ சார்” என்று ஆரியன் சொல்ல, அனைத்தையும் கேட்டாலும் ஆத்விக் அமைதியாக இருந்தான். அவனை அதியா அருகே கட்டி போட்டு வைத்திருந்தார்கள்.

“வாங்கடா. அவங்க வரும் வரை நாம ஆட்டம் காட்டுவோம்” லோகேஷ் உள்ளே சென்று, “சார் என்னோட ரேபிட் உள்ள வந்திருச்சு. நான் பிடிச்சிட்டு போய்க்கவா” உள்ளே வந்து சாதாரணமாக கேட்க, ஏற்கனவே இவர்களை பார்த்திருந்த வருணிற்கு சினம் மேலிட்டது.

“நீங்க எதுக்கு வந்தீங்க?” கேட்டான் வருண்.

நீங்க பிளாக் மணி வச்சிருப்பீங்கல்ல. என்னோட பையனுக்கு பீஸ் கட்டணும். கொஞ்சம் தந்தீங்கன்னா நல்லா இருக்கும். வாங்கிட்டு போக தான் நான் வந்தேன் வேடிக்கையாக பேசினான் பிரகாஷ்.

“டேய், அவனுகள பிடிச்சி கட்டுங்கடா” வருண் கத்த, கட்டுங்க. அதுக்கு முன்னாடி சின்ன கேம். உங்க ஆளுங்க இருபது பேர் நாங்க மூணே பேர் தான். “ஆத்விக் நீயும் வர்றீயா? கபடி விளையாடலாம்” லோகேஷ் கேட்க, “என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படிடா தெரியுது?” வருண் கத்தினான்.

ரொம்ப….ரொம்ப ..நிறுத்தினான் விஷ்ணு.

சொல்லுங்கடா..நம்ம தல தளபதின்னு..

“லூசுகளா? இவனை பார்த்தால் அந்த காண்டாமிருகம் போல இருக்கே!” லோகேஷ் சொல்ல, “காண்டாமிருகமா?” வருண் கோபமாக எழுந்தான்.

லோகேஷ் ஓடத் தயாராக, “பிடிங்கடா அவனை” வருண் சீறினான்.

“வாங்கடா வாங்க” லோகேஷ் சாகசம் செய்து அனைவரையும் ஓட விட்டான். கடைசியில் வருண் தோளிலே கையை போட்டு “ஹப்பா முடியலை” என நெற்றி வியர்வையை அவன் மீது தெளிக்க, வருணோ வலியில் அலறினான்.

லோகேஷ் அவன் கத்தியதில் பயந்து நகர்ந்தான். கையை தானடா வச்சேன்.

அவனுக்கு அங்க பலமா அடி பட்டிருக்கு சார் என்றான் ஆத்விக்.

“இதை முன்னாடியே சொல்லி இருந்தால்” என லோகேஷ் திரும்ப, அவன் ஆட்கள் மூவரையும் பிடித்து கட்டினார்கள்.

“பந்தாவா பேசினான் பாரு. இப்ப நம்மையும் சேர்த்து கட்டி போடும் படி செய்துட்டான்” பிரகாஷ் திட்ட, ஷ்..என விஷ்ணு சொல்ல,

இதோ..வந்துட்டான்ல்ல..நம்ம ஆரியா..

“டேய் மச்சி, திரும்ப திரும்ப கட்டிப் போடுறானுகடா” லோகேஷ் சொல்ல, “உங்களை என்ன சொன்னால் என்ன செய்றீங்க?” ஆரியன் கேட்க, கேம் ப்ளே பண்ண கேட்டால் இவனுக்கு பிடிக்கலை மச்சீ..

ஆரியன் வருணை பார்க்க, “டேய் அவனையும் பிடிங்கடா” தாலியை எடுத்து அதியா கழுத்தில் கொண்டு சென்ற நேரம் தோட்டா வருண் கையை துளைத்தது. ஆரியன் அவனை சூட் செய்ய அவர்களை புலனாய்வுத் துறை ஆட்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். அனைவர் கட்டையும் அவிழ்த்து விட்டனர்.

ஆத்விக் வேகமாக கவினிடம் ஓடிச் சென்று அவன் முகத்தில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தான். அதியாவும் வாயிலிருந்ததை கையால் எடுத்து கீழே போட்டு விட்டு அங்கேயே நின்றாள்.

“பர்ஃபைக்ட் மேன். நைஸ் ஸ்டார்ட் மேன்” சேனாதிபதி ஆரியனை பாராட்ட, “அதிம்மா” குழந்தைகள் இருவரும் அவளிடம் ஓடி வந்தனர்.

“ஓய், உங்களுக்கு தண்ணீரை தெளித்து விழிக்க வைத்தது நான். உங்க அதிகிட்ட ஓடுறீங்க?” லோகேஷ் கேட்க, அதியா, குழந்தைகள் அழுது கொண்டே அணைத்துக் கொண்டனர்.

அதான் இன்னும் அழும் சத்தம் கேட்கலையேன்னு நினைச்சேன்” பிரகாஷ் அதியாவை கேலி செய்ய, ஆரியன் அவனை முறைத்தான்.

“மச்சீ, வாழ்த்துக்கள்டா. வெல்கம் டா” விஷ்ணு மகிழ்ச்சியுடன் அவனை அணைத்தான்.

ஆரியன் புன்னகையுடன் அதியா குழந்தைகளை ஏக்கமுடன் பார்க்க, “அதி” ஆத்விக் அழைக்க, அவள் கவினை பார்த்து “மாமா” அவனிடம் ஓடினாள். ஆரியன் முகம் மாற, “வெயிட் பண்ணுடா” லோகேஷ் சொல்ல, “ஓ..அதியா இந்த பொண்ணு தானா?” சேனாதிபதி கேட்க, ஆரியன் நண்பர்களை பார்த்தான்.

“நான் தான் உலறிட்டேன்டா” லோகேஷ் சொல்ல, “அப்பா” என்று தர்சன் ஆரியனிடம் ஓடி வந்தான். ஆகர்ஷனா அவர்களை பார்க்க, ஆரியன் அவளை பார்த்து கையை விரித்தான்.

ஆகர்ஷனா அழுது கொண்டே அதியாவை பார்த்தாள். கவின் ஆத்விக்கிடம் கண்ணை காட்ட, “அதி” ஆரியன் அழைக்க, எப்பொழுது அழைப்பான் என எண்ணினாளோ என்னமோ ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தாள்.

“ஆரு, நீங்க எல்லாரும் போலீஸா? நீங்களுமா ஆரு?” என மாலையுடன் நின்ற அதியாவை பார்த்து, “அதை தூக்கிப் போடு” என்றான்.

“ஆரு” அவள் பாவமாக பார்க்க, “அழுதிறாதம்மா எனக்கு ஏற்கனவே காது வலிக்குது” பிரகாஷ் சொல்ல, “அண்ணா எனக்கு அழுகையா வருது” என்றாள்.

சேனாதிபதி அவளை பார்த்து புன்னகைத்து, “அழுகை வருதா?” என ஆரியனை பார்த்தார்.

ம்ம்..என ஆரியனை பார்த்து, “ஆரு நான் அத்தை, மாமாவை பார்க்க போறேன்” என ஆகர்ஷனாவை விட்டு அவள் நகர, “அதி” ஆரியன் அழைத்தான்.

“நான் வர மாட்டேன்” என அவள் கவினிடம் சென்று நிற்க, “சரி ஷனா நாம வீட்டுக்கு போகலாம். வெளிய எங்காவது போகலாமா? ப்ளே ஸ்டேசன் கேட்டீங்கல? போகலாம்” ஆரியன் சொல்ல, “மாமா நீயும் என்னை அழைச்சிட்டு போவேல்ல?” கவினிடம் அதியா கேட்க, ஏய் வெல்லக்கட்டி “நான் ஹாஸ்பிட்டல் போகணும்” என்றான்.

ஆத்விக் புன்னகையுடன், “பை பை அதி” என கவினையும் சக்தியையும் அழைத்து செல்ல, “அண்ணா, நானும் வாரேன்” என அவர்கள் பின் அதியா ஓட, அவள் கையை பிடித்து நிறுத்திய ஆரியன், “இது என்ன ஆடை? இப்படி உடுத்தாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல?”

“ஆரு, நான் குளிச்சிட்டு வந்து வீட்ல தான இருப்போம் என மாற்றினேன். அப்படியே தூக்கிட்டு வந்துட்டான் அந்த பைத்தியக்காரன்”.

ஹா..உங்களிடம் நான் பேச மாட்டேன்ல்ல?” அதியா சொல்ல, ஷனா அதிம்மாவை வீட்டுக்கு வர சொல்லு..

இல்லை முடியாது. என்னை வரக் கூடாதுன்னு சொன்னதால நான் வர மாட்டேன்.

“அண்ணா” அவள் அழைக்க, அவன் அப்பொழுதே போயிட்டான் விஷ்ணு புன்னகைத்து, “சார் நாமும் கிளம்பலாம்” என சேனாதிபதியை அழைத்தான்.

“டேய், இதை சப்மிட் பண்ணிடுங்க” என்று பென் டிரைவ் ஒன்றை ஆரியன் கொடுத்தான்.

சார், இதுல்ல வருண் குடும்பத்து தவறுகளுக்கான ஆதாரங்கள் மொத்தமும் இருக்கு என்று சொல்ல, அதியா அவரை பார்த்துக் கொண்டு, நான் கேட்டதுக்கு கூட நீங்க பதில் சொல்லவில்லை ஆரு..

“நாங்க குற்றவியல் புலனாய்வு துறையில் வேலை செய்கிறோம்” என்றான் விஷ்ணு.

அப்படின்னா? நீங்க எல்லாருமே சி.ஐ.டி யா? “ஆரு” என அதியா அவனை பார்க்க, “ஆம்” தலையசைத்தான் ஆரியன்.

அதியாவின் முகம் மாறியது.

“தங்கச்சிம்மா உனக்கு தெரியுமா?” நம்ம ஆரியா இந்த வேலைக்கு வந்த புதியதில் ஒரு பள்ளிக்கு கேஷ் விசயமா போனான். அங்க ஒரு குட்டிப் பொண்ணு அவளோட ப்ரெண்டுகிட்ட லவ் லெட்டர் கொடுத்து இவனிடம் கொடுக்க சொன்னாள்..

“என்னது? குட்டிப் பொண்ணா?” அதியா சிரித்தாள்.

இதுல சிரிக்க என்னம்மா இருக்கு? சேனாதிபதி கேட்க, எல்லாரும் பெரிய பொண்ணுங்கள இம்பிரஸ் பண்ணுவாங்க. ஆனால் “ஆரு” வயிற்றில் கை வைத்து அவள் சிரிக்க, “அந்த குட்டிப் பொண்ணு நீ தான்” ஆரியன் அவளை பார்த்தான். அவனுக்கு கஷ்டமாகவும் இருந்தது. அதே போல் அதியா இந்த அளவிற்கு சிரித்து அவன் பார்த்ததில்லை என்பதால் ரசித்தும் பார்த்தான்.

சிரிப்பு நின்று கண்களை பெரிதாக்கி அவனை பார்த்தாள்.

“நானா?” என்று சிந்தனையில் மூழ்கினாள். “பெங்களூர் வந்தீங்களா?” ஆரியன் அருகே வந்தாள்.

“அதிம்மா, பப்பி லவ் தப்புன்னு நீ சொன்ன?” ஆகர்ஷனா கேட்க, “ஆகு” ஆரியனை பார்த்தாள்.

ஆமா, நான் என உதட்டை பிதுக்கிக் கொண்டு, நான் தான்..உங்களை அடுத்து நான் பார்க்கவில்லை. அதான் மறந்துட்டேன்.

“மறந்துட்டியா?” விஷ்ணு கேட்க, “ஆம்” தலையசைத்தாள்.

அண்ணா, அன்று அந்த பொண்ணை காப்பாற்ற மேலிருந்து குதித்தாரா? ஹூரோ மாதிரி தெரிந்தார்..அதான் கொடுத்தேன்.

“தங்கச்சிம்மா, அதுல என்ன எழுதி இருந்த?” லோகேஷ் கேட்க, தெரியலையே..மறந்துட்டேன்..

“எனக்கு நினைவிருக்கு” ஆரியன் சொல்ல, எல்லாரும் அதிர்ந்தனர்.

“டேய், உனக்கு அதியை முதலிலே தெரிந்ததா?”

இல்லை. இந்த லெட்டர் விசயம் பேசவும் தான் கடிதம் மட்டும் நினைவுக்கு வருது..

“என்னடா எழுதி இருந்தா?” லோகேஷ் ஆரியனிடம் கேட்க, “வேலையை பாருடா” ஆரியன் சேனாதிபதியை பார்த்து, “சார், ஆர்டர் வந்தவுடனே என்னால வர முடியாது. ஒரு வாரம் மட்டும் விடுப்பு எடுத்துக்கவா?”

“டேய், இங்க எல்லாருக்கும் வேலை கிடைக்கிறதே பெரிய விசயமா இருக்கு? இவ்வளவு சாதாரணமா கேக்குற?” விஷ்ணு சினமுடன் கேட்டான்.

“சார், ஆரியன் அவரை பார்க்க, நான் பேசிட்டு சொல்றேன். காரணம் கேட்பாங்களே!” அவர் கேட்க, இன்றிரவுக்குள் காரணத்தை சொல்கிறேன். சார் அந்த வருண் குடும்பத்தில் யாரும் தப்பிக்கக் கூடாது என்றான்.

நம்ம பசங்க பார்த்துப்பாங்க ஆரியன். நீங்க என்ன காரணமென்று இரவு சொல்லுங்க? அவர் சொல்லி, அதியாவை பார்த்து, “வாரேன்ம்மா” என்றார்.

அவள் தலையசைக்க, “அதிம்மா வீட்டுக்கு போகலாமா?” தர்சன் கேட்க, அவள் பதில் கூறாது நின்றாள்.

ஆரியன் தன் நண்பர்களை பார்க்க, அவர்கள் புரிந்து கொண்டு நகர, “பசங்களை வெளியே நிற்கும் ஆத்விக்கிடம் விட்டு போங்க” அவன் சொல்ல, அதியா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஷனா, நீ நம்ம வீட்டுக்கு வருவேல்லடா?

“அதிம்மா வந்தா வருவேன்” என சொல்லி அவள் செல்ல, மாமாவுடன் வீட்டிற்கு போங்க. நான் உன்னோட அதிம்மாவை அழைச்சிட்டு வாரேன் என்றான்.

“இருவரும் சண்டை போடக் கூடாது. சரியா?” தர்சன் கேட்க, ஆரியன் புன்னகையுடன் அவன் தலையை கோதி விட்டு, போங்க. நாங்க வந்திடுவோம் என்றான்.

“இல்ல, நானும் வாரேன்” அதியா அவர்களுடன் கிளம்ப, ஆரியன் சட்டென அவள் கையை பிடித்து அவனுடன் நிறுத்திக் கொண்டு, “நாங்க வாரோம். ஆத்விக்கிடம் சொல்லுங்க” தன் நண்பர்களிடம் சொல்லி அனுப்பினான்.

“மச்சீ, என்ஜாய்” லோகேஷ் சொல்ல, “போடா டேய்” ஆரியன் அவன் தலையில் அடித்தான்.

“பாருடா இவனை” அவன் பிரகாஷை பார்க்க, “பாரு அதி மாதிரி பண்ற?” அவன் லோகேஷை கேலி செய்தான். அவர்கள் சென்றனர். அதியாவிற்கு நெஞ்சு படபடத்தது.

ஆரியன் அதியாவை அவன் பக்கம் திருப்பினான். அவள் அமைதியாக தரையை பார்த்தவாறு நின்றாள்.

புன்னகைத்த ஆரியன், “அதி வெட்கமா?” அவன் கேட்க, “இல்லை” கண்களை உயர்த்தி அவனை பார்த்தாள்.

அவளது தாடையை உயர்த்தி அவளை பார்த்தான் ஆரியன். அவள் மீண்டும் தலைகவிழ்ந்து நின்றாள்.

அதி என்னை பாரு..

ம்ம்..என நிமிர்ந்தாள்.

குட். என்னோட கண்ணை பாரேன்.

முடியாது தலையசைத்தாள்.

பேசணும்..

“என்ன பேசணும்?”

நமக்கு பதினொரு வருடம் வித்தியாசம் இருக்கு.

ம்ம்.. தெரியும்

எனக்கு வேலையும் ரொம்ப முக்கியம்..

ம்ம்..

ஏற்கனவே  திருமணம் ஆனவன்..

ம்ம்.. தெரியும்

தர்சு..

தெரியும்.

அவன் பேசும் முன் அதியா பேசினாள்.

எனக்கு உங்களை மறந்துடுச்சு. ஆனால் இப்ப கூட என அவனை பார்ப்பதை தவிர்த்து, பிடிக்கும் என்றாள்.

பிடிக்கும்ன்னா?

அவனை முறைத்து, பிடிக்கும் என்றாள்.

“மேடம் முறைக்கிறீங்க?”

“ஆமா, நீங்க என்னை வீட்டை விட்டு விரட்டிட்டீங்க. எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” கண்ணீருடன் பேசினாள்.

ஆரியன் அவளை அணைத்து, எனக்கு பயம் அதி. அதான் நீங்க என் பக்கம் இருந்தால் என்னால அமைதியாக எதையும் வேடிக்கை பார்க்க முடியாதுல்ல?

“எதை திருமணமா?” அதியா கேட்க,

ம்ம்..எனக்கு முதலில் உன்னை பார்க்கும் போது மத்த பொண்ணுங்க மாதிரி இம்பிரஸ் பண்ண நடிக்கிறியோன்னு நினைச்சேன். ஆனால் அது தான் உன் உண்மை குணம் எனவும் முதலில் உன்னை நம்பினேன். ஷனா பாதுகாப்பிற்காக நீயாக உன் பெயரை எங்களிடம் கெடுத்துட்டு வருணை திருமணம் செய்ய நீ சென்ற போது என்னால அதை ஏற்றுக் கொள்ளவே முடியல. நீ எப்படி என்னை விட்டு போகலாம்ன்னு தோணுச்சு. அவ்வளவு கஷ்டமா இருந்தது.

நல்ல இம்பிரசன் எப்போது காதலாக மாறியதுன்னு எனக்கே தெரியல அதி. உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

“அப்ப என் மேல கோபத்துல்ல என்னிடம் நீங்க அப்படி பேசலையா?”

ஊகூம், என்ன இருந்தாலும் நீ என்னோட சின்னப் பொண்ணு. திருமணம்  ஆகலைன்னு சொல்லவும் நான் எப்படி உன்னை காதலிக்க முடியும்ன்னு தோணுச்சி. அதான் நான் உன்னை வெளியே அனுப்பினேன். ஆனால் இப்படி பத்திரிக்கையோட அத்து வருவான்னு நினைக்கலை என கண்கலங்கினான்.

அதியா அவனை பார்த்து சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற?” கோபமாக கேட்டான்.

அந்த பத்திரிக்கை உங்களுக்காக ஒன்று மட்டும் தான் அடிச்சாங்க. எல்லாம் அண்ணா பிளான் தான். மாமா எனக்கு பிரப்போஸ் செய்து வீட்டுக்கு வந்த பின் அவரே என்னிடம் வந்து பேசினார். அவருக்கும் அண்ணா, அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்குமாம். ஏன்னு கேட்ட போது, அவர் தான் உன்னிடம் சொல்லணும்ன்னு சொன்னார். இப்ப தான் அவங்களுக்கு ஏன் உங்களை பிடிச்சிருக்குன்னு தெரியுது..

“கவின் திருமணம் வேண்டாம்ன்னு சொன்னானா?”

இல்லை..இல்லை..மாமாவுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். ஆனால் எனக்கு உங்களை தான பிடிக்கும். அதனால மாமா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலை.

“நாளைக்கு நம்ம மேரேஜ் வச்சுக்கலாமா?” ஆரியன் கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தாள்.

“மேரேஜா?”

“வேண்டாமா?” அவளை அணைத்துக் கொண்டே கேட்டான்.

அது வந்து..அவள் தடுமாறினாள்.

“உனக்கு என்னை பிடிக்கலையா?”

“பிடிக்கும். உடனே எப்படி? இப்ப தான் வருண் மாமாவை பிடிச்சிட்டு போயிட்டாங்கல்ல?”

“இல்ல, உன் மனசுல்ல வேற என்னமோ இருக்கு?” அவளை நகர்த்தி ஆரியன் கேட்க, வந்து..என தயங்கி அவனை பார்த்தாள்.

உங்க மனைவி..

அவள் உயிரோட இல்லை..

“ஓ, அதான் தர்சனை கண்டுகொள்ளாமல் மனைவியை நினைச்சுக்கிட்டே இருந்தீங்களா?” கண்கலங்க அதியா அவனை பார்த்தாள்.

அதியா நெற்றி முட்டி, அவளை பற்றி நீ எண்ணவே வேண்டாம். நான் காதலிக்கும் பொண்ணு நீ மட்டும் தான். இப்பொழுதில்ல எப்போதும் என்றான் ஆரியன்.

அதியா அவனை அணைத்துக் கொண்டு, “என்னை மறுபடியும் வெளிய போன்னு சொல்ல மாட்டீங்கல்ல?” அவன் முகத்தை அன்னாந்து பார்த்தாள். அவள் மூக்கோடு அவன் மூக்கை உரசி, “இனி மேடம் சொல்றது தான்” என்றான்.

நிஜமாகவாக?

ம்ம்..

“கண்ணீருடன் அதியா ஆரியனை பார்த்து, ஆரு நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்கல்ல?” எனக்கு எதுவுமே தெரியாது. அண்ணா கத்துக்க சொல்லி இருக்கான். கத்துக்கிறேன். ஆனால் என்னால அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்றாள்.

அவளை இறுக அணைத்து, “கண்டிப்பா ஏமாத்த மாட்டேன். பிராமிஸ்”.

“ஆரு, எல்லாருமே என்னை ஏமாத்திதான் இருக்காங்க தெரியுமா? எனக்கு இப்ப அழுணும் போல இருக்கு” அதியா சொல்ல, ம்ம்…அழு என்று அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“அழும் போது அசிங்கமாக இருப்பேன் ஆரு. சிவப்பா இருக்கும். பார்க்க நல்லா இருக்காது” அதியா அழுது கொண்டே சொல்ல, அவள் முகத்தை கையில் ஏந்தி “அழு, நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்கும்” என்றான்.

அதியா அழ, ஆரியன் அவளையே கண்ணிமைக்காது ரசித்தான்.

“ஆரு, நான் அழுறதை பார்த்து சிரிக்கிறீங்க?” மேலும் அழுதாள்.

க்யூட்டா இருக்குல்ல. அதான் சிரிப்பு வருது.

“அழும் போது எப்படி க்யூட்டா இருப்பேன்? பொய் சொல்லாதீங்க”.

“நீயே பாரு” அவன் அலைபேசியில் கேமிராவை ஆன் செய்தான்.  அவள் அழுது கொண்டே பார்த்து அழுகையை நிறுத்தி அவனை பார்த்து, “நான் அசிங்கமா இருக்கேன்” என்றாள்.

ஆரியன் அட்டகாசமாக சிரித்தான்.

“சிரிக்கிறீங்க?” மேலும் சிணுங்கினாள். ஆரியன் அவளை காதலுடன் பார்த்துக் கொண்டே அவளை முத்தமிட நெருங்கினான்.

“ஆரு, பசிக்குது” அழுது கொண்டே அவள் சொல்லவும் விலகினான்.

போகலாமா? அவன் கேட்க, ம்ம்..என்று அழுகையை நிறுத்தி அவனை நகர விடாமல் அணைத்துக் கொண்டாள். புன்னகையுடன் ஆரியனும் அவளை அணைத்துக் கொண்டான்.

“ஆரு, நாளைக்கே திருமணம்? எப்படி ஏற்பாடெல்லாம் நடக்கும்?” அவள் கேட்க, “இனி என்னால் தாமதிக்க முடியாது. வீட்ல எல்லாரிடமும் சொல்லணும். வா போகலாம்” அதியாவை அவன் பைக்கில் ஏற்ற, அவள் அவன் இடையில் கையிட்டு அணைத்துக் கொள்ள, ஆரியன் மனமெங்கும் புது பரவசம் பரவியது. புன்னகையுடன் சென்றனர் இருவரும்.

கவின் பெற்றோரிடம் ஆத்விக் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஆரியன் நண்பர்கள் குழந்தைகளுடன் வெளியே வந்தனர்.

அத்தை உங்க பையனை பாருங்க. நான் கொஞ்ச நேரத்துல்ல வாரேன் என்று அலைபேசியை வைத்து ஆரியன் நண்பர்களை பார்த்தான்.

“அங்கிள், அதிம்மாவுக்கும் ஆருப்பாவுக்கும் வொர்க் அவுட் ஆகிடுச்சு” ஆகர்ஷனா சொல்ல, “அடப்பாவமே! இதுக என்ன பெரிய விசயமெல்லாம் பேசுதுக?” விஷ்ணு கேட்டான்.

“இப்ப இருக்கும் பிள்ளைகள் நம்மை போல இல்லை சார்” ஆத்விக் சொல்லிக் கொண்டே இருவரிடமும் குனிய, தர்சன் அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் அங்கிள்” என்றான்.

எதுக்கு?

“எனக்கு அம்மா வரப் போறாங்கல்ல” அவன் குஷியாக பேசினான். அவன் கன்னத்தில் முத்தமிட்டு, அவள் உங்களை பார்த்துக்க மாட்டா. நீங்க தான் அதியை பார்த்துக்கணும்.

நாங்க அதிம்மாவை பார்த்துப்போம் மாமா. எனக்கு முத்தா கொடுக்கலை ஆகர்ஷனா கேட்க, அவளை தூக்கி முத்தம் கொடுத்து விட்டு, மத்தவங்களிடம் இப்படி கேட்கக்கூடாது. ஓ.கேவா டா?

சரி மாமா..

“எனக்கு கை ரொம்ப வலிக்குது அங்கிள். வீட்டிற்கு போகலாமா? அத்தையை பார்க்கணும் போல இருக்கு” தர்சன் சொல்ல, “எனக்கும் தான்” மனதில் எண்ணியவாறு ஆத்விக் குழந்தைகளுடன் ஆரியன் வீட்டிற்கு சென்றான்.