வல்லவன் 7

லோகு, இப்ப என்ன பண்ண?” என சினமுடன் ஆரியன் எழ, “ஆரு..எழாதீங்க” அவனிடம் சென்று, ஒன்றுமில்லை. அவங்கள நான் அங்கிள்ன்னு சொன்னேனா? அதான்..என அவர்களை பார்த்து கண்ணாலே கெஞ்சினாள்.

ஆரியனோ லோகேஷை பார்த்து, “அங்கிளா?” சிரித்தான். “பின் தான் என்ன சொன்ன? அவனை அங்கிள்ன்னு சொன்னீயா?” சினமுடன் கேட்டான்.

“டேய், சும்மா விளையாட்டுக்கு பேசியதுக்கு ஏன்டா உன்னை சொன்னது போல டென்சனாற?” பிரகாஷ் கேட்க, நேற்றைய நினைவு ஆரியனுக்கு வந்தது.

அதியாவை பார்த்து, “உனக்கு அழ மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சேன். நல்லா நடிச்சிருக்க. எல்லாமே வேணும்ன்னே செஞ்சிருக்கேல்ல?” சினமுடன் கேட்டான்.

ம்ம்..என கண்ணீருடன் தலைகவிழ்ந்து நின்றாள்.

“என்னதுடா?” லோகேஷ் கேட்க, ஆரியன் அதியாவை பார்த்தான். அவள் நிமிரவேயில்லை.

“ஒரு வேலை ஷனா கடலில் மூழ்கி இருந்தால்?”

இல்ல, ஆகுவிற்கு ஏதும் ஆக நீங்க விட மாட்டீங்க?

“ஒரு வேலை நானும் உன்னை போல கவனிக்காமல் விட்டிருந்தால்” அவன் சொல்ல, அவனிடம் ஓடிச் சென்று அவன் வாயில் கை வைத்து,  நீங்க அவளுக்கு ஏதும் ஆக விட மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.

ஆனால்..

“ப்ளீஸ் எதுவும் சொல்லாதீங்க” என கண்ணீருடன், எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் அதிகமாக பேசியது. என் அக்கா மட்டும் தான். அவளுக்கு பின் எல்லாமே ஆகு தான். எனக்கு அவளும்…அவளுக்கு நானும் தான் இருந்தோம்.  எங்களை சுற்றி வீட்டில் ஆட்கள் இருந்தாலும் என்னை விட்டு நகரவே மாட்டாள். நானும் அப்படி தான்.

அக்கா எங்களை பார்த்துக் கொண்டாலும் அவளும் வேலைன்னு போயிருவா. அம்மாவை சொல்லவே முடியாது. மாமா அக்கா இருக்கும் போதே அவர் பார்வை சரியாகவே இருக்காது. அதனால அவர் வீட்டில் இருக்கும் போது நானும் ஆகுவும் அறையை விட்டு வரவே மாட்டோம்..

இப்பொழுது அப்படி இல்லை. அவளுக்கு நான் இல்லைன்னாலும் நீங்க அவளுக்காக இருப்பீங்கன்னு அவள் நம்புறா. நான் உங்களையும் பார்த்திருக்கேன். தர்சு போலவே அவளையும் பார்த்துக்கிட்டீங்க..சொல்லப் போனால் அவனை விட ஒரு படி மேல்ன்னு சொல்லலாம்..

அவளுக்கு சிறுவயதில் இருந்தே அப்பா பாசம் கிடைக்கவேயில்லை. ஆண்களை பார்த்தாலே பயப்படுவா. மாமா..அக்காவை அடிப்பதையும், அக்கா அவர் தொந்தரவு தாங்காமல் அழுவதையும் பார்த்து தான் அப்பா என்பவனையே வெறுத்தாள். ஆனால் உங்களை பார்த்ததில் இருந்து அவளுக்கு அந்த பயம் இல்லை. அது ஏன்? எப்படின்னு தெரியல..எனக்கே கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கு.

எங்க வாழ்க்கையில் இருந்த நபர்களில் இரு ஆண்களை தான் நம்பினோம். அதில் ஒருவன் அன்று ஹோட்டலில்.. ச்சே..நேரடியாக பாப்பா பார்க்கும் நிலையாகும்ன்னு நினைக்கலை..என அழுதாள். ஆரியன் நண்பர்கள் புரியாமல் விழித்தனர்.

“அதி, என்ன சொல்ற? ஹோட்டல்ல அவன ஷனா பார்த்தாலா?” என அதிர்ந்து கேட்டான் ஆரியன்.

ம்ம்ம்..என கதறி அழுதாள். அவன் எழ, “ஆரு..வேண்டாம்” என முகத்தை துடைத்து அவனை பார்த்தாள்.

“அதனால தான் வாமிட் பண்ணாலா?”

ம்ம்..

அவள் எதையும் காட்டிக்கலை.

எங்களுக்கு பழகிடுச்சு ஆரு. ஆனால் இந்த கேவலமான செயலை அவள் பார்க்கும் நிலையை நானே அவளுக்கு ஏற்படுத்தி கொடுத்துட்டேன் என அழுதாள்.

உஃப் என காற்றை வெளியேற்றிய ஆரியன் தன் நண்பர்களை பார்த்தான். அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதியா அழுகை உண்மை என்பதால் அவர்கள் ஆரியனிடம் எதை பற்றியும் பேசவில்லை..

“அதி, இங்க வா” அழைத்தான்.

அவளை அருகே அமர வைத்து, அவளை பார்த்துக் கொண்டே பேசினான்.

“வெளிய போகாதன்னு சொன்ன பின்னும் எதுக்கு இப்படி ஷனாவை என்னிடம் விட்டு போக துணிந்த? இவ்வளவு பாசத்தை அவள் மேல வச்சுட்டு உன்னால எப்படி போக முடிந்தது?”

அம்மா, எனக்கு கால் பண்ணாங்க ஆரு. உங்க குடும்பத்தையே கொன்றுவேன்னு மிரட்டினாங்க. அதனால நான் அவங்களிடம்..ஆகுவை எதுவும் செய்யக் கூடாது. அவளை நீங்க பார்த்துப்பீங்கன்னு சொல்லி தான் முன்பே பேசி வைத்தேன்.

நீங்களே என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் படி செய்ய சொன்னாங்க. ஆனால் எனக்கு எதுவும் தெரியல. அவங்க சொல்ல சொல்ல தான் எல்லாமே செய்தேன். ஆனால் ஆகுவை பிரியும் பயத்திலும், அம்மா எனக்காக பார்த்த மாப்பிள்ளையை பார்த்ததும் பீவர் வந்திருச்சு. அதனால திட்டுனாங்க என புருவத்தை சுருக்கி உதட்டை தொங்க விட்டாள்.

ஆரியனுக்கோ கோபம் ஏறிக் கொண்டே சென்றது.

“நீ உன்னோட அம்மாகிட்டவே போயிரு” ஆரியன் சொல்லவும் பதட்டமாக நகர்ந்தாள் அதியா கண்ணீருடன்.

“டேய்” அவன் நண்பர்கள் கத்த, அவர்களை முறைத்து விட்டு அதியாவை முறைத்தான்.

ஆரு, ஆகுவிற்காக..

“வெளிய போ. ஷனாவை நானே பார்த்துக்கிறேன்” என்றான்.

அதியாவிற்கு அழுகை அதிகமாக அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியே ஓடினாள்.

“ஆரியா, என்னடா இப்படி பண்ணீட்ட?” லோகேஷ் சத்தமிட, விஷ்ணுவும் பிரகாஷூம் வெளியே வந்தனர்.

அவளுக்கு சாலையை கடக்க கூட தெரியாது. இங்க தான் வெளிய இருப்பா.

“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு” என அவனும் வெளியே ஓடினான். ஆரியன் எழுந்தான். வெளியே செல்ல அவன் எண்ணும் போது தான் செவிலியர் வந்து, சார்..டாக்டர் இப்ப வருவாங்க என்றார்.

ஆரியன் கண்கள் அவளை தேட, “என்ன சார், அந்த பொண்ணு உங்க லவ்வரா?” ரொம்ப அழுதாங்க. பிரச்சனையில்லைன்னு டாக்டர் சொன்ன பின்னும் அழுதாங்க. “உங்க ப்ரெண்ட்ஸ் பேச வருவதை கூட கேட்கவேயில்லை. எத்தனை வருட காதல் சார்?”

“எத்தனை வருடமா? நாங்கள் சந்தித்தே சில நாட்கள் ஆகுது” ஆரியன் நெஞ்சம் படபடத்தது.

சாலையை கடக்க தெரியாமல் அதியா அழுது கொண்டே நிற்க, விஷ்ணுவும் பிரகாஷூம் அவளை நோக்கி நடந்து வந்தனர். அதற்குள் அவள் வாகனங்களுக்கு இடையே சென்று விட, பைக்காரன் ஒருவன் அவளை இடிப்பது போல வந்து பைக்கை பிரேக்கிட்டு அவள் முன் வந்து நிறுத்த, பயத்தில் மயங்கி விட்டாள்.

“ஹேய்” இருவரும் அவளிடம் ஓடி வந்தனர். அந்த பைக்கில் இருந்தவனோ அவளை திட்டி விட்டு சென்றான்.

“டேய், தண்ணீர் எடுத்து வா” விஷ்ணு சொல்ல, அவளை விழிக்க வைத்தனர். அவர்களை பார்த்து விட்டு வேகமாக எழுந்தாள். லோகேஷூம் வந்திருந்தான்.

“சோ..உன்னை சிறுவயதிலே திருமணம் முடித்து கொடுத்திருக்காங்க” என லோகேஷ் கேட்க, “இதை கேட்கும் நேரமா?” விஷ்ணு அவனை திட்டினான். அவளோ எழுந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தான். மூவரும் அவளருகே அமர்ந்தனர்.

அவள் ஏதோ விசயத்தை சொல்ல அவர்கள் அதிர்ந்து, “ஆரியாவிடம் சொல்லி இருக்கலாம்ல்லம்மா?”

இல்ல அண்ணா, என்னால சொல்ல முடியல. அவரு எதுக்காக எங்களை அவர் வீட்ல தங்க அனுமதித்தார்ன்னு தெரியல. ஆனால் அவருடன் இருக்கும் போது ஆகு பாதுகாப்பா இருப்பா. அதுவே எனக்கு போதும் என எழுந்து, அவரிடம் எனக்கு பதிலாக சாரி சொல்லீடுங்க என்று நகர்ந்தாள்.

“எங்கம்மா போற?”

“அது வந்து..நான் போய்ப்பேன் அண்ணா” என அதியா சென்று விட்டாள். இது தெரியாமல் ஆரியனோ செவிலியரிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.

விசு, நம்ம ஆரியா இவ்வளவு கேர்லஸா இருந்து நான் பார்த்ததேயில்லை. இந்த பொண்ணிடம் எதுவும் விசாரிக்காமல் வீட்டுக்குள்ள விட்ருக்கான். கண்டிப்பா அவனுக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு இல்லை நாம கண்டறிந்த சின்ன விசயத்தை கூட கண்டறியாமல் இருந்துருப்பானா? என பிரகாஷ் செல்லும் அதியாவை பார்த்துக் கொண்டே சொன்னான்.

ம்ம்..சரியா சொன்னடா. அவன் பொண்டாட்டிகிட்ட கூட எப்போதும் விலகி தான் இருப்பான் லேகேஷ் சொல்ல,” ம்ம் ஆமாடா நம்ம ஆளுங்கள வச்சி இந்த பொண்ணை பாலோ பண்ண சொல்லலாமா?” பிரகாஷ் விஷ்ணுவிடம் கேட்டான்.

“ம்ம்..சொல்லு” என விஷ்ணு சொல்லி விட்டு, “வாங்க அவனை பார்க்கலாம்” அவர்களை அழைக்க, பிரகாஷ் ஒருவனை வர வைத்து அதியாவை கண்காணிக்க சொன்னான்.

“டேய், அந்த பொண்ணுக்கு சாலையை கடக்க கூட தெரியாதாம். அதனால கொஞ்சம் பார்த்துக்கோடா” என லோகேஷ் அக்கறையுடன் பேச, “மச்சி உனக்கு இது செட்டே ஆகலைடா” பிரகாஷ் சிரித்தான்.

இல்லடா, கண்டிப்பா இந்த பொண்ணால தான் நம்ம பழைய ஆரியா நமக்கு கிடைப்பான்னு தோணுது. சோ..இவங்கள நாம சேர்த்து வைக்கணும்..

அவனுக்கு தெரிஞ்சது?

தெரியாமல் பண்ணலாம். அப்பாவும் அவன் திருமணம் செய்ய தான் காத்துக்கிட்டு இருக்கார். அவரிடம் உதவி கேட்கலாம்.

“சரி, வாங்க அவனை பார்க்கலாம்” அவர்கள் உள்ளே சென்றனர்.

மருத்துவர் ஆரியனிடம் அவன் இருக்கும் அறையில் அவனை பரிசோதித்துக் கொண்டிருந்தார். மூவரையும் பார்த்த ஆரியன் கதவருகே பார்த்தான்.

மருத்துவர் அவனை கிளம்ப சொல்லி செல்லவும், “அவள எங்க? வெளிய இருக்காலா?” என்று தன் நண்பர்களை பார்த்தான் ஆரியன்.

“அவ போயிட்டா” விஷ்ணு ஆரியனை பார்க்க, “போயிட்டாளா? எங்க?”

“டேய், நீ தான போக சொன்ன? அதான் போயிட்டா” லோகேஷ் சொல்ல, அவளுக்கு பிரச்சனை இருக்குடா. “அவளை எதுக்கு தனியா போக விட்டீங்க?”

“விளையாடுறியா? நீ தானடா அந்த பொண்ணை திட்டி அனுப்பின? அந்த பொண்ணு யாருன்னு முதல்ல சொல்லு?” விஷ்ணு கேட்டான்.

“இப்ப அவள எங்க?” வேகமாக ஆரியன் வெளியே வந்தான்.

ஆரியா கோபத்தை விட்டு முதல்ல பேசு.

“பேசணுமா? இப்ப தான் போயிட்டான்னு சொன்னீங்க?”

நம்ம ஆளு பாலோ பண்ணீட்டு இருக்கான்.

“யாரு?”

ஜூவன்..

ஆரியன் புருவத்தை சுளித்தான்.

ஜூனியர்..இந்த வருடம் தான் சேர்ந்திருக்கான்.

“ஓ..கால் பண்ணி எங்க இருக்கான்னு கேளுங்க” என சொல்லி அவன் வெளியே வர, பைக் எடுத்தனர். ஆரியன் விஷ்ணுவுடன் சென்றான்.

ஆரியனும் அவன் நண்பர்களும் அரசு பூங்காவிற்குள் நுழைந்தனர். அங்கே ஆட்கள் அதிகமில்லை என்றாலும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

ஒருவரை பிடித்த விஷ்ணு விசயத்தை கேட்க, இரு பெண்களை கொல்ல ஆட்கள் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள் என சொல்லவும் ஆரியன் வேகமாக உள்ளே ஓடினான்.

அதியாவின் முன் சக்தி நிற்க, அவர்களை சுற்றி துப்பாக்கியுடன் கார்ட்ஸ் நின்றனர். சக்தி கையிலும் துப்பாக்கி வைத்திருந்தாள். ஆரியன் அதிர்ந்து பார்க்க, “இந்தாடா மச்சி” லோகேஷ் ஆரியன் கையில் துப்பாக்கியை கொடுத்தான்.

நால்வரும் மறைந்து அவர்களை சூட் செய்ய, சக்தி அவர்களை பார்க்கவும் வேகமாக அதியாவை இழுத்து வேறுபக்கம் ஓடினாள். அதியா ஆரியனை பார்த்துக் கொண்டே சென்றாள்.

இருவர் அவர்களை மடிக்கி பிடிக்க, “அதி மேம்..நீங்க போங்க. இவனுகள நான் பார்த்துக்கிறேன்” மடக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டாள் சக்தி. ஒருவன் காலில் தோட்டா துளைத்தது.

“இங்க பாரு. உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போயிடு” ஒருவன் சொல்ல, சக்தி அவர்களிடம், நான் சம்பந்தப்படாமல் இதுவரை இருந்தேன். இனி எனக்கும் சம்பந்தம் இருக்கு..

“அப்படியா? அப்ப இவள சூட் பண்ணுடா” இருவரும் தோட்டாக்களை அள்ளித் தெளிக்க, “நானும் உங்களுக்கு குறைந்தவள் இல்லைடா” அதியாவை இழுத்துக் கொண்டு அவளை மறைத்து வைத்து இவளும் மறைந்திருந்து அவர்களை தாக்கினாள்.

சக்தி தோளில் தோட்டா துளைக்க வர அதியா அவளை கீழே தள்ளி விட்டு அவளும் நகர்ந்தாள். தோட்டா அவர்களை தாண்டி சென்று சுவற்றில் பட்டது.

“மேம், நீங்க என்ன பண்றீங்க?” என சக்தி அவளை பார்க்க, அவர்களை தாக்கியவர்களை சுட்டு தள்ளி விட்டு ஆரியனும் அவன் நண்பர்களும் வந்தனர்.

ஆரியனை பார்த்து இருவரும் எழுந்தனர். அதியாவிடம் சக்தி கண்ணை காட்ட, அவள் அவனை பார்த்தாள்.

சக்தி அதியாவை விட்டு பின் நகர்ந்தாள். அதியா புரியாமல் சக்தியை பார்க்க, அவள் ஆரியனை பார்த்தாள்.

“சக்தி, நீ யாரு? துப்பாக்கி பயன்படுத்துற?” ஆரியன் கேட்க, சக்தியோ வேகமாக ஓடினாள்.

“சொல்ல வந்ததை சொல்லீட்டு போ” அதியா கத்தினாள்.

“அவள பிடிங்கடா” ஆரியன் சத்தமிட, அவன் நண்பர்கள் அவளை விரட்டினார்கள்.

“எதுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த?” ஆரியன் அவளருகே வரவும் அவள் அவனை பார்த்து பயந்து நகர்ந்தாள்.

“நான் கேட்டேன்” அவன் கத்த, அவள் கண்ணீருடன் பயந்து அழுதாள்.

இப்ப எதுக்கு அழுற? ஆரியன் அவளிடம் நெருங்கினான்.

அதியா மரத்தின் பின் மறைந்து நின்றாள்.

“அதி, உனக்கு என்னாச்சு? இங்க வா” அவன் அவளருகே வரவும், வராதீங்க. என்னோட ஆகுவை என்னிடம் விட்ருங்க.

“வாட்?”

ஆமா, எனக்கு பயமா இருக்கு. எனக்கு என்னோட ஆகு வேணும்.

“முடியாது. நீ தான அவள் பாதுகாப்பா இருக்கணும்ன்னு சொன்ன?”

ஆமா, அதான் நானே அழைச்சிட்டு போறேன்.

“என்ன பேசுற?” சீற்றமுடன் அவன் கத்த, அவள் மிரண்டு விழித்து, “எனக்கு உங்களை பார்த்தால் பயமா இருக்கு. இப்படி சூட் பண்றீங்க? அவங்களும்  மனுசங்க தான?” என மரத்தின் கீழே அமர்ந்து அழுதாள்.

“உன்னை காப்பாற்ற தான பண்ணோம்” ஆரியன் சொல்ல, “இல்ல, நீங்களும் எங்க மாமா மாதிரி தான் பண்றீங்க? எங்கள விட்ருங்க”..

“என்ன? நானும் அவனும் ஒன்றா? துப்பாக்கியை பயன்படுத்த தெரிந்தால் எல்லாரும் கொலைகாரனா?”

ப்ளீஸ், என்னோட ஆகுவை மட்டும் என்னிடம் கொடுத்திருங்க. நாங்க வேறெங்காவது போய்ப்போம்.

ஆரியனால் அதியாவை புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பொண்ணு அதியா அருகே வந்தாள்.

“மேம், நீங்க பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கீங்க? உங்களை கொல்ல வந்த ஆட்களிடமிருந்து உங்களை பாதுகாத்தவரை இப்படி பேசலாமா?”

“எப்படினாலும் கொலை கொலை தான?”

மக்களுக்காக கடவுள் அரக்கர்களை கொல்வது தெரியும்ல்ல? அதுக்காக கொலைகாரக் கடவுள்ன்னா பெயர் வச்சிருக்கோம்.

“இல்லை” என்று அதியா சிந்தனையுடன் ஆரியனை பார்த்தாள். பின் அந்த பொண்ணை பார்த்து, “தேங்க்ஸ் சிஸ்டர்” என்றாள். அந்த பெண் சென்று விட்டாள்.

சரி, நீங்க போங்க. ஆகுவை பார்த்துக்கோங்க. நான் போறேன் என அவள் நகர, அவள் கையை இழுத்து அவளை சுவற்றில் சாய்த்து, “நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நான் பேசுவதை உன்னால ஏத்துக்க முடியல. யாரோ ஒருத்தி வந்து பேசியதும் மனசு மாறுற?” சினமுடன் அவளை நெருங்கி கேட்டான்.

அதியாவிற்கு விக்கல் வர, ஆரியன் தலையை இடவலமாக அசைத்து..ஷ்..என பொறுமையை இழுத்து பிடித்து, அவளது கன்னத்தோடு கன்னம் உரச, அவள் விக்கல் நின்றது. அதியா கண்களை மூட, அவள் காதருகே சென்று, “ஷனா எப்போதும் உன்னோட வர மாட்டா. நீயும் எங்கும் போகக்கூடாது” என கட்டளையுடன் கூற, அவன் நண்பர்கள் வந்தனர்.

அதியா கண்ணீருடன் ஆரியனை தள்ளி விட்டு, “நானும் அதான் சொல்லீட்டேன்ல்ல. அவளை பார்த்துக்கோங்க” அதியா கோபமாக நகர, அவள் கையை பிடித்து, “நான் சொன்னது உனக்கு கேட்கலையா?” அவன் சீற்றமுடன் கத்தினான்.

இவனுகள தூரத்தில இருந்து பார்க்கும் போது ரொமான்ஸ் பண்ற மாதிரி இருந்தது. ஆனால் வார் நடந்துட்டு இருக்கு பிரகாஷ் கேட்டான்.

என்னத்த? இவனை வச்சுக்கிட்டு. ஒரு பொண்ணுகிட்ட பேச தெரியுதா பாரு? இவனுக்கு கல்யாணமாகி பையன் இருக்கான்னு சொன்னா எவனும் நம்பமாட்டான்.

ஆமா..ஆமா..என விஷ்ணுவும் தலையாட்டினான்.

“நான் வர மாட்டேன். நீங்க தான உங்க வீட்ல சேர்த்துக்க மாட்டேன்னு சொன்னீங்க? உங்களை பார்க்கவே கூடாதுன்னு சொல்லீட்டு இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க?” அழுது கொண்டே அதியா கேட்டாள்.

“ஏய், கோபத்துல்ல பேசியதெல்லாம் நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன செய்றது?”

நீங்க கோபமா இருக்கீங்களா? பேசுற மாதிரி இருப்பீங்களான்னு எனக்கு எப்படி தெரியும்? நாம மீட் பண்ணியே இரு வாரம் தான் ஆகுது.

அதான்..இரு வாரம் ஆகுதுல்ல..

“எனக்கு யாரையும் பிடிக்கல. நான் போறேன்” என அதியா நகர, நீ போனா உன்னை எவனாது கல்யாணம் பண்ணிப்பான்.

“பண்ணட்டும் உங்களுக்கென்ன?” அழுது கொண்டே நடந்தாள்.

“பண்ணட்டுமா? நீ வா” அவன் அதியா கையை மீண்டும் பிடிக்க, அவள் தேம்பியவாரு, “இப்ப கூட கையை ரொம்ப இறுக்கமா பிடிச்சிருக்கீங்க. எனக்கு வலிக்குது” என்றாள்.

அதி, உனக்கு ஷனாவே தேவலை..

“அதான் தெரியுதுல்ல போங்க” அவள் நடக்க, “நான் இறுக்க பிடிக்க மாட்டேன். வா வீட்டுக்கு போகலாம்”.

நான் வர மாட்டேன். வீட்டுக்கு வந்த பிறகு நீங்க மறுபடியும் என்னை போக சொன்னீங்கன்னா எனக்கு கஷ்டமா இருக்கும். அதனால நான் இப்பவே போறேன். எனக்குன்னு யாராவது இருந்தால் உங்களை திட்டுவாங்க.

“என்னை பிடிச்சவங்க யாருமில்லாததால் தான என்னை நீங்க இப்படி பேசுறீங்க? நான் எல்லாரும் இருந்தும் அநாதை தான. எனக்காக யார் பேசுவா?” என அழுதாள்.

அவளது அநாதை என்ற வார்த்தையில் திடுக்கென அவளை பார்த்தான். ஆரியன் கண்களில் கண்ணீர்.

அவன் கையை லேசாக பிடிக்க, “விடுங்க நான் போகணும்” அவன் கையை அவள் தட்டி விட, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“வாவ்…இதை தான் எதிர்பார்த்தேன். நடந்துருச்சு” மகிழ்ந்தான் லோகேஷ்.

“இதெல்லாம் பெரிய விசயமில்லை லோகு” பிரகாஷ் சொல்ல, “அடப்போங்கடா” என அவர்களை நோக்கி வந்தான் அவன்.

“என்ன சொல்லீட்ட அதி? உன்னால எப்படி இப்படி யோசிக்க முடியுது?” ஆரியன் கேட்க, அவனை தள்ளி விட்டு கண்ணீரை துடைத்து, நான் ஒன்றும் தவறாக சொல்லலை. எனக்கு அம்மாவும் சொந்தங்களும் இருந்தும் இல்லை. ஒருவருக்கு கூட என்னோட ஆசை. எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரியாது. தெரிந்த ஓரே ஆள் என்னோட அக்கா தான். அவளும் இல்லை.

எனக்கு நன்றாக தெரியும் ஆரு. நீங்க ஆகுவுக்காக தான என்னையும் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போனீங்க. அவளோட அம்மா கூட இருந்தால் தான் அவ உங்களுடன் இருப்பா. அதனால தான் என்னை அழைச்சிட்டு போனீங்க. அடிக்கடி அதனால தான் அவ அம்மா மாதிரி நடந்துக்க மாட்டேன்னு சொல்லி என்னை திட்டி வெளிய அனுப்ப பார்த்தீங்க? நீங்க கஷ்டப்பட வேண்டாம். நானே போயிடுறேன். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. என்னோட ஆகுவை நீங்க நல்லா பார்த்துப்பீங்க..

“இல்ல அதி, உன்னை வெளியே அனுப்புவதில் எனக்கு என்ன ஆகப் போகுது?”

நான் அழுதாலே என்னை திட்டுறீங்க? உங்களுக்கு பிடிக்கலை. ஆனால் எனக்கு அழுகை தான் வருது. எனக்கு யாரிடமும் வாய்ச் சண்டைக்கு போகத் தெரியாது. அன்று உங்க ஷாப்ல்ல சக்தி பேசியதுல்ல..முதல் முறையாக பேசினேன். என்னால என்னையே நம்ப முடியல. ஆனால் அன்று கொஞ்சம் தைரியம் வந்தது.

ஆனால்..என உதட்டை தொங்க விட்டு “பீச்ல்ல என்னை அதிகமா பேசிட்டீங்க. அன்று அம்மா சொல்லி கொடுத்ததை தான் செய்தேன். எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு” என அவன் நண்பர்களை பார்த்து அவர்கள் முன் அழ முடியாமல் “நான் போயிடுறேன்” என ஓடினாள்.

ஆரியன் அதிர்ந்து நிற்க, “டேய்..தனியா போறாடா” லோகேஷ் கத்தினான்.

ரோட்டிற்கு வந்த அதியா வாகனங்களுக்கு இடையே ஓட, அனைவரும் பதறி அவளிடம் ஓடி வந்தனர். வரிசையாக வந்து கொண்டிருந்த கார் பைக் மீது ஏறி அவளை நோக்கி ஆரியன் செல்ல, “ஆரியா..வேண்டாம்” விஷ்ணு கத்த, பிரகாஷ் தலையில் கை வைத்தான்.

சென்று கொண்டிருந்த அதியா, இவர்கள் சத்தத்தில் ஆரியனை பார்த்து திகைத்து அப்படியே நின்றாள். “அதி..இந்த பக்கம் வா” கத்தினான் ஆரியன். நடுரோட்டில் நின்ற அவளை பலர் திட்டி செல்ல, கார் ஒன்று ஓவர் ஸ்பீடில் வந்தது.

“அதி” என ஆரியன் டிராப்பிக்கில் நின்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்து கத்தினான். அவனையும் பலர் திட்டிக் கொண்டிருந்தனர்.

அவள் அந்த காரை பார்த்து பயந்து அமர்ந்தாள். ஆரியன் நின்ற இடத்திலிருந்து தாவி உருண்டு பிரண்டு அவளிடம் வந்து அவளையும் அணைத்துக் கொண்டு மறுபக்கம் உருண்டான். லாரி ஒன்று வர, “அதி..நகராத” என அவளை அவனுள் புதைத்து..லாரியின் நான்கு டயர்களின் இடைவெளியில் புகுந்து கொண்டான். லாரி சென்ற பின் கார்களும் பைக்கும் அவர்கள் அருகே வரவும் நின்று விட்டனர்.

ஆரியன் நிமிர்ந்து பார்க்க, அவன் நண்பர்கள் வரிசையாக நின்றனர். ஆரியன் அவளையும் சேர்த்து நிற்க வைத்தான். அவர்கள் ஓரமாக நகர்ந்து நின்றனர். ஏற்கனவே அடிபட்ட இடத்திலிருந்து ஆரியனுக்கு இரத்தம் வர துடித்து போனாள் அதியா.

“ஆரு, ப்ளட் வருது. சாரி ஆரு” அவள் கதறி அழ, “ஒன்றுமில்லை” என்று அவள் தோள்களை அணைத்தவாறு தன் நண்பர்களை பார்த்தான்.

வாடா..ஹாஸ்பிட்டல் போகலாம்..

“என்னால தான் அடிப்பட்டது” என கண்ணீருடன் அவனை பார்த்தாள். ஆரியன் அவளிடம், துரு சொன்னது சரி தான்.

“என்ன?”

“நீ கிரையிங் குயினாம்” சொன்னாள் அவன் சொல்ல, அவளோ மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, சிகிச்சையை முடித்து விட்டு மருத்துவர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்.

அதியாவோ மருத்துவரை பார்த்து, “இவரை உங்களுக்கு முன்பே தெரியுமா?” கேட்டாள்.

“நல்லா தெரியும்” என அவர் சொல்ல வர, அவர் பேச்சை நிறுத்துவது போல நாங்க கிளம்பலாம்ல்ல டாக்டர். அப்பாவிற்கு கால் கூட செய்யலை.

“ம்ம்..கிளம்புங்க” என அவர் அதியாவை பார்த்து விட்டு ஆரியனை பார்த்தார்.

பிரிஷ்கிரிப்சன் வாங்கிட்டு வாங்கடா. அதி..நாம கிளம்பலாம்.

“எனக்கு பைக் ஓட்டத் தெரியாதே!”

“நான் ஓட்டுவேன்ல்ல?”

இவ்வளவு காயத்தை வச்சுக்கிட்டு பைக் ஓட்டப் போறீங்களா?

நோ..நோ..அண்ணா, நாங்க வெயிட் பண்றோம். நீங்க வாங்கிட்டு வாங்க என அவள் ஆரியனை அமர சொல்லி அவளும் அமர்ந்தாள்.

மருத்துவரும் அவர்களுடன் அமர்ந்து அவளை பற்றி கேட்டார். அவள் அவர் கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

“உங்களுக்கு ஆரியனை தெரியுமா?” கேட்டாள்.

ம்ம்..தெரியும் அவர் சொல்ல, ஆரியனோ அவரிடம் “கிளம்புங்க” என்று கண்ஜாடை செய்தான்.

நோ..என அவர் இடவலமாக தலையசைத்தார்.

“அதி, அவருக்கு வேலை இருக்கும். நாம கிளம்பலாம்” அவன் எழ, அவன் நண்பர்களும் வந்து விட்டனர். அவர்கள் கிளம்பினார்கள்.

“அதி, வீட்டுக்கு வர்றேல்ல?” ஆரியன் கேட்க, ம்ம்..ஆனால் என அவனை பார்த்தாள்.

சரி, இனி உன்னை திட்ட மாட்டேன்..

நிஜமாக திட்ட மாட்டீங்கன்னா எனக்கு சாக்லெட் வேணும். வாங்க தந்தா நம்புகிறேன்.

“அது எப்படிம்மா? இதுக்கு நம்பிக்கை வரும்?” விஷ்ணு கேட்டான்.

அது எனக்கு பிடிக்கும் பட் சரியான ப்ளேவரா வாங்கித் தரணும்.

“ஆரியா, எப்படிடா கண்டுபிடிப்ப?”

அதியா ஆரியனை பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.

ம்ம்..கிளம்பலாம். என்னோட ஷாப்புக்கு போடா ஆரியன் அதியாவை பார்த்துக் கொண்டே சொன்னான். அவள் பிரகாஷ் பைக்கில் ஏறினாள்.

ஷாப்பிற்கு சென்றனர். ஆரியன் அவனாக நேராக சாக்லெட்ஸ் இருக்கும் இடத்திற்கு அதியா கையை பிடித்து இழுத்து சென்றான். அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தனர்.

“அதி, இதுவா? இதுவா?” என லோகேஷ் ஒவ்வொன்றாக கேட்க, அவள் ஆரியனை பார்த்தாள். பட்டர்ஸ்காட்ச் ப்ளேவர் இருக்கும் ஒரு செவ்வக வடிவ சாக்லெட்டை கொடுத்தான்.

ஆரியன் நண்பர்கள் ஆர்வமுடன் அதியாவை பார்க்க, “இதை யாரு பிரிச்சு தருவா” என கேட்டு அவர்களை மலைக்க வைத்தாள்.

“எப்படிடா கண்டுபிடிச்ச?” பிரகாஷ் கேட்க, “அது உனக்கு தேவையில்லை”  ஆரியன் அதியாவிடம், “இப்ப போகலாம்ல்ல?” எனக் கேட்டான்.

“சிஸ்டர், வேறென்ன உங்களுக்கு வேணும்?” சக்தியுடன் அன்று பேசியவன் அதியாவிடம் கேட்க, ஆரியன் பிரித்து கொடுக்க, “இது போதும்” என அதை வாங்கிக் கொண்டாள்.

சிஸ்டர், உங்களுக்கு கல்யாணமா சொல்லவேயில்லை என அவன் உரிமையாக அவளது ஆடை, அணிகலன், மேக் அப்பை பார்த்து கேட்டான்.

சிடுசிடுவென முகத்தை வைத்த ஆரியன், “உனக்கு இது தெரிஞ்சு என்ன செய்யப் போற?”

சாரி பாஸ்..

“கஷ்டமரை கவனி” என ஆரியன், “வீட்டுக்கு கிளம்பலாம்ல்ல?” மென்மையாக அவளிடம் கேட்டான்.

சாக்லெட்டை சுவைத்த படி, ம்ம்..போகலாம் என்றாள்.

“ஏன்டா, இவனுக படம் ஓட்டுற மாதிரி இல்ல?” லோகேஷ் கேட்க, “அப்படி தான் எனக்கும் தோணுது. கண்டிப்பா இவனுக லவ் பண்றாங்க. கேட்றலாமா?” பிரகாஷ் கேட்க, “லைட்டா பிட்டை போட்டு பார்க்கலாம்” லோகேஷ் சொல்லிக் கொண்டே அவர்களுடன் சென்றான்.

பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆரியனை அவ்வப் போது பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆரியன் அவர்களை பார்த்தாலும் கவனிக்காதது போல் இருந்து கொண்டான்.

“மச்சி, உனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இருக்கா?” லோகேஷ் லேசாக தொடங்க, ஆரியன் அவனை கூர்ந்து பார்த்தான். அவன் கண்கள் அவ்வப்போது அதியாவிடம் சென்றது. அவன் எண்ணத்தை ஆரியன் புரிந்து கொண்டான்.

“ஏன்டா, பொண்ணு பார்த்து வச்சிருக்கியா?” ஆரியன் கேட்டான். விஷ்ணு அதியாவை கவனித்தான். அவள் அவனது கேள்வியில் அவர்களையும் ஆரியனையும் விழித்து பார்த்தாள்.

பொண்ணு இருக்கு. நீ சொல்லேன் லோகேஷ் சொல்ல, “அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கணுமே! தர்சு, ஷனாவையும் பிடிக்கணும்”.

“ஓ, இப்படி வர்றீயா?” என லோகேஷ், “அந்த பொண்ணு விதவை. அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்கா. என்ன சொல்ற?” லோகேஷ் கேட்க, அவன் அதியாவை விதவை எனவும் ஆரியன் அவனை முறைத்து பார்த்தான்.

“முறைக்கக் கூடாது. பதில் சொல்லணும்” பிரகாஷ் சொல்ல, அதியா ஆரியனையே பார்த்தாள். அவன் அவளையும் பார்த்து விட்டு, “பொண்ணு பற்றி தெரியாமல் எப்படி திருமணம் வரை செல்ல முடியும்?”

உனக்கு தெரிந்த அருகே இருக்கும் பொண்ணு தான்..

“பொண்ணுக்கு பெயர் கிடையாதா?”

அதை சொல்ல முடியாதுடா..

சொல்லு ஆரியா, தர்சுவை நீ ரொம்ப தவிக்க விட்டுட்ட. அவன் சிரித்து நான் பார்த்ததேயில்லை. இனியாவது நீயும் தர்சுவும் சந்தோசமா இருக்கணும். அப்பாவும் துருவும் அதை தான் விரும்புறாங்க..

“தர்சு சிரித்து நான் பார்த்தேன். ஆனால் நேற்றிலிருந்து யாருக்கும் உணவு கூட இறங்கலை” என ஆரியன் சொல்ல, அதியா அவனை பார்க்காதவாறு அமர்ந்தாள். இவர்கள் அவளை பற்றி தான் பேசுறாங்க என்று கூட புரியாமல் பிரகாஷ் மீது சாய முடியாது தூக்கத்துடன் கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவன் மீது பட்டென சாய்ந்து விட அவன் பைக்கை நிறுத்தினான். அனைவரும் அதியாவை பார்க்க, ஆரியன் பிரகாஷ் பைக்கில் அவள் கீழே விழாதவாறு அவளுக்கு பின் அமர்ந்து அவளை அவன் மீது சாய்த்துக் கொண்டான்.

“இதை நாங்க எப்படி எடுத்துக்கிறது?” விஷ்ணு ஆரியனை நோக்கினான்.

கீழ விழாமல் பார்த்துப்பதாக எண்ணிக்கோ..

ஆரியா, நான் நேரடியாகவே சொல்றேன். அதி..ரொம்ப இன்னசென்ட். அவளை தனியா மட்டும் விட்றாத. முடிந்தால் உன்னருகே இன்று போல் இப்படியே வச்சுக்கோ. அந்த பக்கி வருண் கையில மாட்டுனா அவன் பூவை கசக்குவது போல நடந்திரும்.

அந்த குட்டிப் பொண்ணு மேல ஏதோ பீல் ஆகுதுன்னு சொன்னேல்லடா. அது அவளோட அதிம்மா மீதும் தான்னு சீக்கிரம் புரிஞ்சுக்கோ. கை விட்றாத..

சைந்தவி மாதிரி இவ இல்லை..அவள பற்றி அவள் முழுதாக உன்னிடம் சொல்லலை. நீ சீக்கிரம் தெரிஞ்சுக்கோ. அது தான் உங்களுக்கும் ஷனாவுக்கும் நல்லது. விஷ்ணு பேச பேச மனம் பதைத்தாலும் அமைதியாக இருந்தான் ஆரியன். அவன் மனதில் சக்தி சொன்னது நினைவிற்கு வந்தது.

“டேய், அந்த சக்தியை பிடிக்கலையா?”

“எவ்வளவு நேரம் கழித்து கேட்கிறான் பாரு. இவன் நம்ம ஆரியா இல்லைடா. விழுந்துட்டான்” லோகேஷ் கேலி செய்ய, ஆரியன் ஏதோ பேசும் முன்..நடிக்க வேண்டாம் ஆரியா. எங்களுக்கு நல்லா தெரியுது உனக்கு அதியா எவ்வளவு முக்கியமென்று..சைந்தவியிடம் காட்டாத அனைத்தும் இவள் மீது உனக்கிருக்கு.

இவளுக்கும் அவளை போல் ஏதும் ஆகக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

நிச்சயமாக இல்லைடா ஆரியா. உன்னை நீயே ஏமாத்திக்காத. நீயும் சைந்தவியும் எத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தீங்க. இருவரும் அலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை. ஆனால் அதியை பார்க்காமல் உன்னால ஒரு நாள் இருக்க முடியுமா? யோசிடா..உனக்கு காதல் வந்து விட்டது அதியா மீது.

அவளுக்கும் கண்டிப்பாக உன்னை பிடித்திருக்கும். உனக்கான அவளின் கண்ணீர்.

அவ எல்லாத்துக்கும் அழுவான்னு சொல்லீடாத ஆரியா. எனக்கு நன்றாக தெரிந்தது என ஆரியனுக்கு அறிவுரையை வழங்கிக் கொண்டே சென்றனர்.

இடையிலே அவர்களின் பேச்சை நிறுத்திய ஆரியன், “சக்தி எங்க?” சினமுடன் கேட்டான்.

“பொண்ணாடா அவ? என்னமா பைட் பண்றா..வேற லெவல்”

“சக்தி எங்க?” இம்முறை ஆரியனிடமிருந்து சீற்றமுடன் கேள்வி வந்தது.

“மிஸ் ஆகிட்டா ஆரியா” அவளை பற்றி விசாரித்து சொல்றோம்.

“அவள பிடிக்க முடியலையடா?” சினத்துடன் கேட்டான்.

“அவள பத்தி விசாரித்து சொல்றோம்டா” லோகேஷ் சொல்ல, “நீ அதை பாரு. எனக்கு ஒரு கேஷ் வந்திருக்கு. அதை நான் பார்க்கணும்” என பிரகாஷ் கூறினான்.

“ஆரியா, நீ எப்ப வர்ற?” விஷ்ணு கேட்க, ஆரியன் அமைதியாக அதியாவை பார்த்தான்.

“எங்கள விட்டு நீங்க கிளம்புங்க. நான் சொல்றேன்” என ஆரியன் சொல்ல, “மச்சி வீ ஆர் வெயிட்” என்றான் விஷ்ணு.

ம்ம்..

வீடு வரவும் அதியாவை எழுப்பினான். அவள் விழித்து வீட்டை பார்த்துக் கொண்டே இறங்கினாள்.

சரிடா பார்க்கலாம். “அதி பை பை நல்லா சாப்பிட்டு தூங்கு” லோகேஷ் கலாய்க்க, அவள் அவனை பார்த்து “சரிங்க அங்கிள்” என்றாள்.

“தேவையாடா உனக்கு?” பிரகாஷ் சிரிக்க, அவன் ஆரியனை பார்த்து, “பார்த்துடா. உன்னையும் அங்கிள்ன்னு கூப்பிட போறா?”

எனக்கு உங்களை பார்த்தால் தான் அங்கிள் மாதிரி இருக்கு அங்கிள்..அவள் புன்னகைக்க, “ஓ…செட் எதுவும் செய்ய முடியலையே!”

“நீ உள்ள போம்மா. இவன் இப்படி தான் ஏதாவது வெட்டியா பேசிட்டே இருப்பான்” விஷ்ணு சொல்ல, “ஹூ..மீ…மீ யா? வெட்டியா?” லோகேஷ் க்யூட்டா கேட்க, அவனருகே வந்த அதியா, அவன் கன்னத்தை கிள்ளி “அண்ணா, க்யூட்டா கேக்குறீங்க” என்றாள்.

“ஹேய், கையை கொடு” அவள் கையை இழுத்த லோகேஷ், “என்னோட பொண்டாட்டி கை கூட இவ்வளவு சாப்ட்டா இருக்காது. ஆரியா” என ஏதோ சொல்ல வந்தவன் அவன் பார்வையை பார்த்து, “தங்கச்சிம்மா, உனக்கு பெரிய வேலை இருக்கு. எல்லாரையும் சமாதானப்படுத்து” என சொல்லி ஆரியனிடம் பல்லை காட்டினான்.

“இதுக்கு மேல உன்னோட பல்லு வெளிய தெரிஞ்சது உன் கையில தான் இருக்கும். அடக்க ஒடுக்கமா கல்யாணம் ஆனவன் போல நடந்துக்கோ” என பிரகாஷ் சிரிக்க, “அதி உள்ள போ. நான் வாரேன்” என ஆரியன் லோகேஷிடம் வந்து, “உனக்கு கொடுத்த வேலையை ஒழுங்கா பார்த்தா நல்லா இருக்கும்”. அவர்களை பார்த்துக் கொண்டே அதியா கேட்டிற்கு முன் வந்து பெருமூச்சுடன் நின்றாள்.

“நான் உன்னோட நண்பன். மிரட்டுறீயேடா?”

“இதுல தோழனாவது பகைவனாவது” பிரகாஷ் சொல்ல, எனக்கு சக்தி பற்றி தெரியணும்.

நீ உன்னோட உடம்ப பார்த்துக்கோ. இந்தா மருந்தை சரியா போடு. அங்க பாரு. அதி ஏதோ யோசனையில இருக்கா. அதியை மிஸ் பண்ணிடாத. புரிஞ்சுக்க பாரு. வாங்கடா என விஷ்ணு நண்பர்களுடன் கிளம்பினான்.