அதியாவையும் ஆகர்ஷனாவையும் வீட்டில் இறக்கி விட்டு ஆரியனும் உள்ளே வந்தான்.
“ஷனா” ஆரியன் அழைக்க, என்னிடம் யாரும் பேச வேண்டாம் அதிம்மா..
ஆகு, இப்படியெல்லாம் செய்யக் கூடாது. கோபத்துல்ல சில விசயங்கள் வர தான் செய்யும். அதுக்காக கஷ்டப்படுத்துற மாதிரி பேசக் கூடாது.
நீ அழுதேல்ல அதிம்மா..
அதுக்காகவா அவரோட நீ பேச மாட்டேங்கிற?
ஆகர்ஷனா ஆரியனை முறைத்து பார்த்தாள்.
ஆகர்ஷனாவிடம் மண்டியிட்டு காதில் கையை வைத்து, “சாரி சனா” இனி இப்படி பேச மாட்டேன்.
ஷனாவோ அதியாவை பார்க்க, அதியா கண்களை சுருக்கி அவளை முறைக்க முயற்சிக்க தோற்க, ஆகர்ஷனா சிரித்து விட்டு “அதிம்மாவுக்காக மன்னிக்கிறேன்” என்றாள்.
சரி, நீங்க வெளிய எங்கேயும் போக வேண்டாம். அப்பா இப்ப வந்திருவாங்க என வெளியே சென்று பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வந்து அதியாவிடம் கொடுத்தான்.
“தேங்க்யூ சார்” அவள் வாங்கிக் கொண்டார்.
“எதுக்கு சார்?” ஆருன்னே கூப்பிடு என நகர்ந்தான்.
“ஆரு” அதியா க்யூட்டாக அழைக்க, ஆரியன் திரும்பி அவளை பார்த்தான். ஈவ்னிங் மறந்துறாதீங்க..
ம்ம்..என சொல்லி ஆகர்ஷனாவை பார்த்தான். அவள் கையசைக்க அதியாவும் கையசைத்தாள். ஆரியன் புன்னகையுடன் வெளியே வந்தாள்.
வீட்டிற்கு ஆட்டோவில் வந்த உத்தமசீலன் அவனை புன்னகை முகமாக பார்க்க நெகிழ்ந்து போனார்.
“அப்பா, எதுக்கும் கவனமா இருங்க. பார்த்துக்கோங்க” சொல்லி சென்றான்.
சற்று நேரம் கீழே இருந்து விட்டு மேலே தனியாக வந்தாள் அதியா. மேலிருந்து மற்ற வீடுகளை பார்த்துக் கொண்டிருக்க, அதியாவிற்காக காத்திருந்த சக்தி அவளிடம் கையசைத்து வெளியே வரச் சொன்னாள்.
அதியா சிந்தனையுடன் தான் வந்தாள். வெளியே வந்து பார்த்த போது சக்தி அங்கு இல்லை. இங்க தான இருந்தா? என அவ்விடத்திலே நின்றாள்.
உத்தமசீலன் அவளை பார்த்து, “அதி உள்ள வாம்மா. அங்க என்ன செய்ற?” வெளியே வந்தார்.
“அங்கிள், வந்துட்டேன்” அவள் சொல்லி வீட்டிற்குள் வர, அவர்கள் வீட்டின் முன் ஆட்கள் வந்திருந்தனர்.
உத்தமசீலன் அதியாவையும் ஆகர்ஷனாவையும் அறையில் வைத்து பூட்டி விட்டு வெளியே பாதுக்காப்பிற்காக அமர்ந்தார். ஆட்கள் நுழையும் முன் அங்கே சைரன் வச்ச போலீஸ் வந்தனர். அவர்களை பார்க்கவும் ஆட்கள் சென்று விட்டனர்.
வெளியே சன்னல் வழியே பார்த்த உத்தமசீலனுக்கு எதுவும் புரியவில்லை. ஆரியனை அழைத்து விசயத்தை சொல்ல, அவன் மறுநிமிடமே வீட்டிற்கு கிளம்பி வந்தான்.
“கூடவே நான் எப்படி இருக்க முடியும்? ஷனாவை பள்ளியிலும் சேர்க்கணுமே!” ஆரியன் அதியாவை பார்த்தான். அவளுக்கு அவன் இப்படி அவனாக பள்ளியில் பாப்பாவை சேர்க்கணும்ன்னு சொல்லவும் உள்ளம் மகிழ்ந்தது.
“நான் நினைக்கிறது நடந்தாலே போதும். பிரச்சனை சரியாகிடும். என்னோட ஆகுவை பற்றிய என் கவலை தீர்ந்து விடும்” என மனதினுள் எண்ணினான் அதியா.
“அதியா” ஆரியன் அழைக்க, “என்ன?” இருவரையும் பார்த்தாள்.
“ஷனாவை பள்ளியில் சேர்க்கணுமே! நீயும் வொர்க் பண்றீயா?”
“இல்ல இல்ல” வேகமாக பதில் வந்தது அதியாவிடமிருந்து.
“நீ தானம்மா பாப்பாவை சேர்க்கணும்ன்னு சொன்ன?”
சொன்னேன் அங்கிள். ஆனால் அவள் தயங்கினாள்.
“அதான் ஷாப்ல்ல அத்தனை பேர் மத்தியில நல்லா தான பேசுன?”
அது நீங்களும் ஆருவும் இருந்தீங்க பேசினேன். தனியாக எனக்கு வராது.
“எத்தனை நாள் வராது வராதுன்னு சொல்லீட்டு இருப்ப? பழகிக்கோ”
இல்ல..வேண்டாம். நான் வேணும்ன்னா உங்க ஷாப்ல்ல வொர்க் பண்ணவா?
ஷனா பாதுகாப்பிற்கு நீ இருப்பன்னு தான் பள்ளிக்கே உன்னை போக சொன்னது..
ஆகர்ஷனாவை பார்த்தாள் அதியா..
ம்ம்..சரி ஆகுவிற்காக தான. போறேன் என ஒத்துக் கொண்டாள்.
“ஈவ்னிங் தயாரா இரு” அவன் கிளம்பினான்.
அறைக்கு சென்று படுத்தவள் மனதில் “என்னால முடியுமா? முடியாதே!” என அழுதாள்.
மதிய உணவிற்கு பின் ஆகர்ஷனாவும் அவளுடன் இருக்க, அவளுடன் விளையாண்டாள் அதியா.
மாலை துருவினி, தர்சன் வரவும் தயாரானார்கள். மணியை பார்த்துக் கொண்டே இருந்தாள் ஆகர்ஷனா. ஆரியன் வந்து விட வேகமாக வெளியே ஓடிச் சென்று, “ஆரு கிளம்பலாமா? கிளம்பலாமா?” என குதித்துக் கொண்டே கேட்டாள்.
“நான் வினு ஸ்கூட்டில்ல வர்றேன்” அதியா சொல்ல, “அதிம்மா நானும் நானும்” என பசங்க இருவரும் அவளிடம் குதித்துக் கொண்டு வந்தனர்.
அப்பா என்னோட ஏறிப்பாங்க. நீங்க எல்லாரும் அண்ணாவோட வாங்க என துருவினி சொல்ல, ஆரியன் அவளை முறைத்தான். துருவினி நினைப்பது அதியாவிற்கு புரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “ஆகு நீ அம்மாட்ட வர்றீயா?” வேண்டுமென்றே கேட்டாள் அதியா..
“நோ, அதிம்மா. பைக்ல்ல முன்னாடி அமர்ந்தால் ஜாலியா இருக்கு. நான் ஆருவோட இருக்கேன்” என சொல்ல, “நான் அதிம்மாவுடன் இருக்கேன்” தர்சன் அவளுடன் ஏறிக் கொண்டான்.
இடையிடையே ஆரியன் பிரேக்கை அழுத்த, அவள் பயந்து அவன் தோளில் கை வைத்துக் கொண்டாள். அவனும் புரிந்து கொண்டு ஏதும் பேசவில்லை. அமைதியாகவே சென்றனர். பசங்க தான் என்ஜாய் செய்தனர்.
“பள்ளிக்கு இது போலெல்லாம் ஆடை அணியக்கூடாது. முதல்ல இன்டர்வியூக்கு ஏற்றார் போல் தயாராகணும்” என ஆரியன் அதியாவை பார்த்து, “புடவை தான் உடுத்தணும்” என்றான்.
“எனக்கு உடுத்த தெரியாதே!”
“அன்று உடுத்தி இருந்த?” அது ஒரு அக்கா உடுத்தி விட்டாங்க..
“நான் சொல்லித் தாரேன் அதி” என்றாள் துருவினி.
தேங்க்ஸ் வினு..
ம்ம்..முதல்ல வா செலக்ட் பண்ணலாம்.
“நீயா? எப்ப ஆரம்பித்து எப்ப முடிக்கிறது? கடையையே அடைச்சிருவாங்க” என்ற ஆரியன், “இரு நானே பார்க்கிறேன்” என புடவை செக்சனுக்குள் சென்று எல்லா பக்கமும் ஒரு முறை பார்த்து விட்டு மடமடவென பத்து புடவைகளை காட்டி எடுக்க சொன்னான்.
“மேம், உங்க கணவன் சூப்பராக தேர்ந்தெடுக்கிறார். அதுவும் இவ்வளவு விரைவில்” ஒருவர் சொல்ல, துருவினி சிரித்தாள்.
“அய்யோ” தலையை பிடித்தான் ஆரியன்.
சார், அவங்க ஜஸ்ட் எங்க வீட்ல தங்கி இருக்காங்க…
“அப்படியா? ஆனால் நீங்க எடுத்த புடவை எல்லாமே அவங்களுக்கு சரி பொருத்தமாக இருக்கே?” கேள்விக்கணையுடன் நிறுத்தினார் அவர்.
உத்தமசீலன் தன் மகனை புன்னகையுடன் பார்த்தார். அதியாவோ அவனை பிரமித்து பார்த்தாள்.
“அண்ணா பாரு, அவங்க சொன்னது சரி தான்” அதியாவின் தோள்பட்டையில் புடவையை வைத்து காட்டினாள். வர்ணிக்க கூட முடியாது. அவ்வளவு அழகாக அதியாவிற்கு புடவையும் அதன் கலரும் பொருந்தி இருந்தது.
வா அதி, நாம பிளவுஸ் பார்க்கலாம்.
மேம்..மேச்சிங்க பிளவுஸ் அதிலே இருக்கும்.
வாவ்..சூப்பர்..லெட்ஸ் ட்ரை என துருவினி அதியாவை ஒரு புடவையுடன் ட்ரையல் அறைக்கு அழைத்து சென்று மாற்றி அழைத்து வந்தாள்.
அதியாவை புடவையில் பார்க்கவும் தர்சன் ஓடி வந்து அவள் கையை பிடித்து, அதிம்மா ஏஞ்சல் போல இருக்கீங்க.
“என்னோட அதிம்மா எப்போதும் ஏஞ்சல் தான?” அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகர்ஷனா.
அதியா உத்தமசீலனை பார்த்தார்.
“உனக்கு நல்ல பொருத்தம்மா. மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா” இருபதலியாக அவர் கூறினார்.
அதியா ஆரியனை பார்த்தாள். அவன் ஏதும் சொல்லும் நிலையிலே இல்லை. சாதாரண மயில் துத்த கலரில் பளீரென அழகு மயிலாக தெரிந்தாள்.
“அண்ணா, ஏதாவது சொல்லு?” துருவினி அவன் தோளில் இடித்தாள்.
“அழகா இருக்கு” என்றான் கரகரத்த குரலில். துருவினி புருவத்தை உயர்த்தி தன் தந்தையை பார்க்க, அவர் இன்பமானார்.
“சரி, வாங்க கிளம்பலாம்” அவர்கள் மற்ற பொருட்களையும் வாங்கி சென்றனர்.
உணவை முடித்து படுத்து கண்ணை மூடிய ஆரியன் கண்ணில் அதியாவே தெரிய, பட்டென எழுந்து அமர்ந்து, “இது சரியில்லை” வெளியே சென்றான். மேலே வெளிச்சம் தெரிந்தது.
“அதியா தூங்கவில்லையோ!” என எண்ணிக் கொண்டே தயக்கமில்லாமல் முதல் முறையாக அவனாகவே சென்றான்.
அன்று போல் அவள் அழுது கொண்டிருந்தாள்.
“அதி” ஆரியன் அழைக்க, அவனை பார்த்து எழுந்து கண்ணீரை கூட துடைக்காமல் திரும்பி நின்றாள்.
“எதுக்கு அழுற?” தயங்கி கேட்டான்.
“நீங்க என்னை திட்ட மாட்டீங்கன்னா ஒரே ஒரு முறை மட்டும்” என கேட்டாள்.
“என்ன?” அவன் கேட்க, அழுது கொண்டே ஆரியனை அணைத்தாள். அவன் அதிர்ந்து, “அதியா..நீ நகரு. என்ன செய்ற?”
ப்ளீஸ் ஆரு, கொஞ்ச நேரம். நான் எப்போதும் அழணும்ன்னா அக்கா இருப்பா. இப்ப அவ இல்லை என மேலும் அழுதாள். அவளின் அழுகை சத்தத்தில் ஆகர்ஷனா விழித்து விடுவாளோ! என எண்ணி ஆரியனும் அவளை அணைத்து,” ஷனா விழித்து விடாமல்” என்றான்.
ம்ம்..என அவள் அழுகையை குறைத்து தேம்பியவாறு அவனை அணைத்துக் கொண்டிருந்தாள். ஆரியன் அவளை விலக்கி விட்டு “சாரி” என்றான்.
அவனை பார்த்து விட்டு, நான் தான் சாரி சொல்லணும்.
“இத்தனை நாள் எவ்வளவு விசயத்தை மிஸ் பண்ணி இருக்கேன். ஆனால் இப்ப தான் ரொம்ப கஷ்டமா இருக்கு” அவள் வேறு ஏதோ அர்த்தத்தில் பேச, “அவனோ அவள் அக்காவை இழந்த துக்கத்தில் பேசுகிறாள்” என ஆறுதலாக பேசினான். இருவரையும் ஆகர்ஷனா பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.
அதியாவை சமாதானப்படுத்தி அவளை அறைக்கு அனுப்பி விட்டு அவனும் அறைக்கு சென்றான். ஏனோ அவனுள் இனிய இன்பம்..
காலை எழுந்த துருவினி மணியை பார்த்து, நேரமாச்சு. இப்படியா தூங்குவேன்? அவளை அவளே திட்டிக் கொண்டு அவளறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவள் தந்தை காஃபி அருந்திக் கொண்டிருந்தார். ஜாகிங் முடித்து உள்ளே வந்தான் ஆரியன்.
அப்பா, நான் இப்ப தான் எழுந்தேன். நீங்களே போட்டுகிட்டீங்களா?
அவர் சமையலறை பக்கம் கண்ணை காட்டினார். “உள்ளிருந்து ஹாய் வினு, குட் மார்னிங்” என ஆரியன் எடுத்துக் கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு அதியா துருவினி கையில் காஃபியை கொடுத்தாள்.
“அதி, சூப்பரா இருக்க” என துருவினி காஃபியுடன் அவளை சுற்றிக் கொண்டு, “உனக்கு புடவை உடுத்த தெரியாது. காஃபி போட தெரியாதுல்ல?” கேட்டாள். ஆரியன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அலைபேசியை காட்டி, இதுல பார்த்து ட்ரை பண்ணேன்.
“இன்று என்ன புடவை?”
“அங்கிள், சொல்லுங்க” என அதியா அவரை பார்த்து விட்டு ஆரியனை பார்த்து, “வாங்க ஆரு. உங்களுக்கும் எடுத்து வாரேன்” என உள்ளே செல்ல இருந்தவளிடம் “வேண்டாம்மா” என உத்தமசீலன் அவசரமாக எழுந்தார்.
“என்னாச்சு அங்கிள்?”
அவனுக்கு துரு போடட்டும்.
“ஏன் அங்கிள்? நல்லா இல்லையா?” பாவமாக முகத்தை வைத்து அதியா கேட்க, இப்படியொரு காஃபியை நான் குடித்ததேயில்லை. சூப்பரா இருக்கும்மா. ஆனால் அவனுக்கு நீ போட்டால் பிடிக்காதும்மா என சமாளித்தார்.
அதே பாவமான முகத்துடன் அதியா ஆரியனை பார்த்தாள். அவன் துருவினியை பார்க்க, அவள் ஒரு சிப் அருந்து விட்டு, “அய்யோ அதி..ரொம்ப கசப்பா இருக்கு” என்றாள்.
உதட்டை பிதுக்கிக் கொண்டு, “அங்கிள் நல்லா இருக்குன்னு சொன்னாங்க?”
“ஆமாம்மா, எனக்கு நல்லா போட்டுருக்க” என அவர் சொல்ல, “குடுங்க நானும் பார்க்கிறேன்” என உத்தமசீலனிடம் வந்தாள் அதியா.
“வேண்டாம்மா, நானே குடிக்கிறேன்” என முழுவதையும் சூடாக வாயில் ஊற்றினார்.
“அங்கிள், சூடா இருக்கு” அவர் கப்பை பிடித்தாள்.
“அப்பா” துருவினி பதறினாள்.
விழுங்கிய உத்தமசீலன், “இதெல்லாம் பழக்கம் தான்ம்மா” அதியாவிடம் கூறி துருவினியை பார்த்தார்.
“அப்பா, என்ன சொன்னீங்க? இவளை விட மோசமாகவா நான் உங்களுக்கு செய்து தாரேன்”.
“என்னது மோசமாகவா? நல்லா இல்லையா?” அதியா உத்தமசீலனை பார்த்து முறைத்தாள்.
“முதல் தடவை எனக்கு போட்டு குடுத்திருக்க? நல்லா இல்லைன்னு சொல்ல முடியலைம்மா”.
“ஆமா அங்கிள், நான் உங்களுக்கு தான் முதல் முறையாக காஃபி போட்டு கொடுத்திருக்கேன்” என அவரருகே அமர்ந்து, “எனக்கு ஹாட் வாட்டர் கூட வைக்க தெரியாது. ஆகு கூட நான் செய்து எதுவும் சாப்பிடதில்லை”.
“ஓ அப்ப உன்னோட கணவனுக்கு நீ எதுவுமே செய்து கொடுத்ததில்லையாம்மா?” உத்தமசீலன் கேட்க, அதியா மௌனமானாள்.
“அப்பா” துருவினி அழுத்தி அழைக்க, “சாரிம்மா நீ கிச்சனுக்குள்ள போக வேண்டாம்மா. எனக்கு பயமா இருக்கு” என்றார்.
“என்னால சமையல் செய்ய முடியாதுன்னு சொல்றீங்களா?”
அப்படியில்லைம்மா. கற்றுக் கொண்டால் வராது என்று எதையும் கூற முடியாது. உன்னோட பாதுகாப்பிற்காக சொன்னேன்.
“பாதுகாப்பா?”
ம்ம்..அன்று போல் ஃபயராகிடாமல்..
இல்ல அங்கிள், இனி அது போல் நடக்காது. ஆனால் நானும் கத்துக்கணும். “வினு, எனக்கு சொல்லித் தருவீயா?” அதியா கேட்டாள்.
அது இருக்கட்டும். ஆகாவை காணோம்.
அவ தூங்கிட்டு இருக்கா..
“எப்பொழுதும் வேகமாகவே எழுந்திடுவால்ல?”
ம்ம்..நைட் சரியா தூங்கலைன்னா காலையில் நேரம் கழித்து தான் எழுவாள்.
ஓ..என மற்றவர்கள் கேட்க, ஆரியனுக்கு தான் பக்கென்று ஆனது. இரவு ஆரியன் மேலே வந்ததை பார்த்திருப்பாலோ என எண்ணமுடன் அவன் அவர்கள் அறையை பார்த்தான். அதியா அவனை பார்த்தாள்.
“சரி” அதியா துருவினியுடன் சென்றாள். துருவினி சொல்லித் தர அளவுகளை சரியான அளவு போட்டு காஃபியுடன் வெளியே வந்தார்.
“எனக்கு போதும்மா” உத்தமசீலன் சொல்ல, “அங்கிள் லைட்டா டேஸ்ட் பண்ணுங்க. ப்ளீஸ்” என அவருக்கும் ஆரியனுக்கும் கொடுத்து விட்டு தர்சுவை பார்க்க சென்றாள்.
தர்சனுக்கு கொடுத்து விட்டு அவள் அறையை பார்க்க, “நான் அழைச்சிட்டு வாரேன்ம்மா” என உத்தமசீலன் சொல்ல, “அப்பா, நான் பார்த்துட்டு வாரேன்” என ஆரியன் மேலே சென்றான்.
ஆகர்ஷனா தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து விட்டு அறையை பார்த்தான். மனதை கவரும் வாசனை வந்தது. அறையில் பார்த்தான். அதியா தான் வந்திருந்தாள்.
“ஆரு, அங்கிள் உங்களை கூப்பிடுறாங்க” என சொல்லி விட்டு ஆகர்ஷனாவிடம் சென்று, “ஆகு எழுந்திரு. இவ்வளவு நேரம் தூங்கக்கூடாது” அவள் முன் அமர்ந்து எழுப்பினாள். ஆரியன் செல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆகர்ஷனா எழவும் அவளிடம் காஃபியை கொடுத்து விட்டு எழுந்தாள். அவளுக்கு பின்னே நின்ற ஆரியனை பார்த்து பயந்து தடுமாறினாள்.
“அதிம்மா, விழுந்துறாதீங்க” என ஆகு சொல்லும் போது படுக்கையில் விழ வந்தவள் கையை பிடித்து இழுத்தான் ஆரியன். அவள் நேராக அவன் நெஞ்சில் இடித்து நிற்க, அவளுக்கு படபடப்பு அதிகமானது.
அவனை நிமிர்ந்து பார்த்து, “சா..சாரி ஆரு” தடுமாறினாள்.
“இட்ஸ் ஓ.கே” என ஆகர்ஷனாவை பார்த்து, “ஷனா தயாராகி சீக்கிரம் வாங்க” என்று அதியாவை அவனிடமிருந்து நகர்த்தி விட்டு சென்றான்.
இல்ல ஆகும்மா. என்னால முடியாதும்மா. வா தயாராகலாம். பள்ளிக்கு போகணும் என அவளை தயாராக்கி அழைத்து வந்தாள்.
கீழே அனைவரும் உணவுண்ண அமர்ந்தனர். துருவினி தயாராக சென்றிருந்தாள். அதி நீயும் அமரும்மா சாப்பிடலாம்..
“இல்ல அங்கிள்” அனைவருக்கும் எடுத்து வைத்து விட்டு ஆரியனிடமிருந்து ஓர் அடி தள்ளி நின்று எடுத்து வைத்து விட்டு அவளும் அமர்ந்தாள். துருவினி வரவும் அவளுடன் உண்டு விட்டு கிளம்பினார்கள்.
பத்துக்கு தான் போகணும். அதனால இருங்க. நான் தர்சுவை பள்ளியில் விட்டு வாரேன் என்றான் ஆரியன்.
அதியா பட்டென “வேண்டாம்” என்றாள்.
“என்ன?” துருவினி கேட்க, “வினு நானும் பள்ளியில் சேரணும். பாப்பாவையும் சேர்க்கணும். சார் வந்தால் தப்பா கேட்ருவாங்க” என அதியா ஆரியனை பார்க்க, அவன் கைகளை இறுக்கினான்.
“அதனால என்னம்மா?” அவன் வரட்டும். யாரும் ஏதும் பேச மாட்டாங்க.
இல்ல அங்கிள். ப்ளீஸ் என்றாள்.
அதிம்மா..ஆரு வரட்டுமே!
நோ..ஆகு சத்தமிட்டாள் அதியா. துருவினி அவளை அதிர்ந்து பார்த்தாள்.
ஆரியனோ கோபமாக தர்சனுடன் கிளம்பினான்.
“என்ன அதி?” துருவினி கேட்க, “ப்ளீஸ் இதை பற்றி பேச வேண்டாமே!”
ம்ம்..என வருத்தமுடன் அவளும் கிளம்பிவிட்டாள்.
பள்ளிக்கு உத்தமசீலன், அதியா, ஆகர்ஷனா ஆட்டோவில் சென்று இறங்கினார்கள். அவர் பார்வை சுற்றிலும் பாய்ந்தது. யாருமில்லை என உறுதிபடுத்திக் கொண்டு, வாம்மா..என அவளை அழைத்து சென்றாள்.
ஆகர்ஷனாவை பள்ளியில் சேர்க்க பாரம் ஒன்றை கொடுத்தனர். அவள் முடித்து கொடுத்தாள்.
“ஏம்மா, பொண்ணோட அப்பா பெயர் இல்லையே?”
அவளுக்கு அப்பா இல்லை.
“இல்லையா? பெயருமா இல்லை?” அந்த பொண்ணு கேட்க, ஆமா இல்லை..
“அதி” உத்தமசீலன் சத்தமிட, அங்கிள் வேண்டாம். அவளுக்கு என்னோட பெயர் போதும்.
மேம், அப்ப இங்க உங்க பொண்ணு படிக்க இடமிருக்காது.
“சரி, கொடுங்க” என்று அந்த பாரமை வாங்கி ஏதோ எழுதி விட்டு, முழுவிவரத்தையும் முடிச்சு குடுத்துட்டு வாங்க அங்கிள் என எழுந்தாள்.
தகப்பனார் பெயரில் ஆரியன் பெயரை எழுதி வைத்திருந்தாள் அதியா.
“அதிம்மா, உண்மையா இது?
அங்கிள், முடிச்சி குடுத்துட்டு வாங்க. அவர் மகிழ்ச்சியுடன் எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்து, “நீ என் மகனை கல்யாணம் பண்ணிக்கிறியாம்மா?” கேட்டார்.
சாரி அங்கிள்.
“உங்களோட பாதுப்பா ஆகு இருக்கணும்ன்னு தான் இந்த பள்ளியில் சேர்த்தேன்” என மனதில் எண்ணியவாறு அமைதியானாள்.
“சாரியா? எதுக்கும்மா?”
உங்க மகன் ஆரியன் பெயரை பயன்படுத்திக் கொண்டேன். அதுக்காக?
“என்னம்மா சொல்ற?”
என்னால ஆருவை திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆகுவை பள்ளியில் சேர்க்க மட்டும் தான் அவர் பெயரை பயன்படுத்திக் கொண்டேன். தயவு செய்து அவரிடம் சொல்லீடாதீங்க. அலைபேசி எண் கூட என்னுடையதை தான் கொடுத்திருக்கேன்..
ஏன்ம்மா? உனக்கும் பாதுகாப்பு வேணும். அவனும் ஏற்கனவே திருமணமானவன். நீயும் ஏற்கனவே திருமணமானவள்.
கல்யாணம் செய்து கொண்டால் உங்க சொத்தும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் பாதுகாப்பாக இருப்பீங்க. என் மகன் உன்னால தான் நிறைய மாறி இருக்கான். அவன் எங்களை தவிர உன்னிடம் தான் பேசவே செய்கிறான்.
ம்ம்..தெரியும் அங்கிள். ஆனால் இது சரி வராது. நான் இப்ப பிரின்சிபில்லை மீட் பண்ணனும் என அவள் ஆகர்ஷனாவை அவரிடம் விட்டு சென்றாள்.
தாத்தா, கவலைப்படாதீங்க. நாங்க ஆருவை விட்டு எங்கும் போக மாட்டோம். அதனால நாம பிளான் செய்து அதிம்மாவை ஆருவுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் ஆகர்ஷனா சொல்ல, அவர் அவளை அணைத்துக் கொண்டார்.
“நாளையிலிருந்து வர சொல்லி இருக்காங்க அங்கிள்” அதியா உத்தமசீலனிடம் சொல்லி விட்டு ஆகர்ஷனாவை பார்த்தாள். அவள் கோபமாக திரும்பிக் கொண்டாள். அதை பார்த்தும் பார்க்காதவாறு அதியா, “கிளம்பலாமா அங்கிள்?” எனக் கேட்டாள். மூவரும் வீட்டிற்கு சென்றனர்.
அறைக்கு சென்ற அதியா பின் ஆகர்ஷனாவும் சென்றாள்.
“அதிம்மா, என்னிடம் பேசாத. கோபமா இருக்கேன்” ஆகர்ஷனா சொல்ல, அதியா அவளை திரும்பி கூட பாராது அவள் அலைபேசியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஆகர்ஷனா மேலும் கோபமாக அலைபேசியை பிடுங்க, “ஏய்..என்ன பண்ற? நான் பார்த்துட்டு இருக்கேன்ல்ல” பிடுங்கி ஆகர்ஷனாவிடம் கத்தினாள்.
ஆகர்ஷனா பயந்து நகர்ந்து நின்று கண்கலங்க அதியாவை பார்த்தாள். அவள் ஆகர்ஷனாவை பாராதது போல் இருந்து கொண்டாள். ஆகர்ஷனா அமைதியாக வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.
அதியா படுத்து கண்ணை மூடினாள். அவளருகே வந்து படுத்த ஆகர்ஷனா அவள் மீது கையை போட, அதியா எடுத்து விட்டாள். ஆகுவிற்கு அழுகை வர திரும்பி படுத்து அழுது கொண்டே தூங்கி விட்டாள். அதியா இறங்கி கீழே சென்று உணவை உண்டாள்.
அவளை பார்த்த உத்தமசீலன், “ஆகா எங்கம்மா?”
“தூங்கிட்டு இருக்கா அங்கிள்” என வேறெதுவும் பேசாமல் மீண்டும் மேலே சென்றாள்.
சற்றுநேரத்தில் விழித்து ஆகர்ஷனா பார்த்த போது அதியா உறங்கிக் கொண்டிருந்தாள். ஆகர்ஷனா அவளாகவே கீழே சென்றாள்.
“ஆகா வாங்க” என அவளை தூக்கி மடியில் அமர வைத்து, “இந்த நேரம் தூங்கமாட்டீங்கல்ல? தூங்கிட்டீங்க” அவர் கேட்க, அதியாவின் செயல்களை மறைத்து தூக்கம் வந்தது தாத்தா.
“சாப்பிடலாமா?”
அதிம்மா..
“அதி சாப்பிட்டா. ஆனால் நமக்கு எடுத்து வைக்க இன்னும் வரலை” என அவர் மேலே பார்த்தார்.
“தாத்தா, நாம சாப்பிடலாமா?”
பசிக்குதா? இரு நான் அதியை அழைச்சிட்டு வாரேன்.
“வேண்டாம் தாத்தா. இன்று எனக்கு நீங்க ஊட்டி விடுறீங்களா?”
“ஓ.கே. வாங்க சாப்பிடலாம்” இருவரும் சாப்பிட்டு விட்டு விளையாடினார்கள். அதியா வருவால் என அவ்வப்போது அவர் மேலே பார்த்துக் கொண்டே இருந்தார். அவள் வரவேயில்லை.
மாலை பள்ளி முடிந்து தர்சனும் வேலை முடிந்து துருவினியும் வந்தனர்.
“அதி எங்க? அவள் காஃபி போடலையா? போட்ருப்பான்னு நினைச்சேன். அப்பா பள்ளி விசயம் என்னாச்சு?” அவள் கேட்க, பள்ளிக்கு போயிட்டு வந்ததிலிருந்தே அதி கீழே சரியாக வரலை. நாங்க மட்டும் தான் விளையாடிட்டு இருந்தோம்.
“காஃபி போட்டு எடுத்துட்டு போய் நான் பார்க்கிறேன்” என்று சமையலறைக்குள் சென்று அனைவருக்கும் கீழே கொடுத்து விட்டு, “வாங்க பசங்களா?” அதியை பார்க்கலாம் அழைத்தாள்.
“நான் வரலை” ஆகர்ஷனா சொல்ல, “ஆகா அதிம்மா கூட சண்டை போட்டீயா?” தர்சன் கேட்டான்.
“இல்லையே” ஆகர்ஷனா சாதாரணமாக சொல்ல, “புன்னகையுடன் நீ போய் பார்த்துட்டு வாம்மா” என உத்தமசீலன் சொல்ல, ஆரியன் பைக் சத்தம் கேட்டது.
“அதுக்குள்ள அண்ணா வந்துட்டான்” துருவினி காஃபியுடன் வெளியே சென்றாள்.
“நானும் வாரேன்” என ஆரியன் சினமுடன் சொல்ல, “ஆரு எதற்கெடுத்தாலும் கோபப்படாத” அவனை அடக்கினார் அவன் தந்தை.
பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு ஆரியனும் துருவினி பின்னே சென்றான்.
அதியா உடலை குறுக்கி போர்வையை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னை வரச் சொல்லீட்டு இப்படி தூங்குறா?” சீற்றமுடன் ஆரியன் பேச, ஆகர்ஷனா அவனிடமிருந்து இறங்கி துருவினிக்கு முன் ஓடிச் சென்று அதியாவை பார்த்தாள். அதியாவின் முகம் வீங்கி சிவந்து இருந்தது.
“ஆன்ட்டி, அதிம்மா அழுதிருக்காங்க” ஆகர்ஷனா அழுது கொண்டே அவளை எழுப்ப, அவள் ஏதோ முணங்கினாள்.
“அழுதாளா?”
“ம்ம்..அவளோட அக்காவை எண்ணி அழுதிருக்கலாம்” என்ற ஆரியன், என்னை எதுக்கு வெளிய போகணும்ன்னு வரச் சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கா.
“ஆரு, அதிம்மாவுக்கு சூடா இருக்கு” ஆகர்ஷனா சொல்ல, இருவரும் அவளை நெருங்கி தொட்டுப் பார்த்தனர். உடல் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது.
“அண்ணா, பீவர் அதிகமா இருக்கு” என்றவுடன் தர்சன் அவளை நெருங்கி “அதிம்மா எழுந்திருங்க” என அழைத்தான்.
மெதுவாக கண்ணை விழித்த அதியா கண்கள் நன்றாக சிவந்து இருந்தது.
“எழுந்திரு அதி” துருவினி அழைக்க, அவளுக்கோ கண்ணை விழிக்கவே முடியவில்லை. “அதிம்மா” என குழந்தைகள் அழ, “ஒன்றுமில்லைடா காய்ச்சல் தான்” ஆரியன் அவளை தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.
கண்களை லேசாக விரித்த அதியா, முணங்கியவாறு ஏதோ பேச, ஆரியன் அவளிடம் காதை கொண்டு சென்றான்.
“ஆரு, பைக்ல்ல போகணும். மூச்சு விட முடியல” அதியா சொல்ல கேட்ட ஆரியனோ, “துரு..நீ பைக்கை எடு. அப்பா பசங்களை பார்த்துக்கோங்க” என சொல்லி விட்டு, “ஷனா..அழக் கூடாது. அம்மாவுக்கு ஒன்றுமில்லை” என கூறி விட்டு துருவினியுடன் பைக்கில் ஏறினான். இருவருக்கும் நடுவே ஆரியன் மீது சாய்ந்து இருந்தாள் அதியா.
கண்களை மூடினாலும் அவள் ஏதோ முணங்க, அவன் முயன்றும் அவனுக்கு அவள் கூறுவது புரியவில்லை.
“அதி, அமைதியா வா. ஒன்றுமில்லை” அணைத்துக் கொண்டான். துருவினியோ “இப்ப மட்டும் கட்டிக்கோ” என சொல்ல, “வாயை மூடிட்டு போ” என ஆரியன் அதியாவை பார்த்தான். அவள் கைகளை நடுங்கியது. அவள் கைகளுடன் அவன் கையை கோர்த்துக் கொண்டான்.
ஹாஸ்பிட்டல் வரவும் அவளை தூக்கிக் கொண்டு மருத்துவரை அணுகினான். துருவினி பதட்டமாக மருத்துவரிடம் கேட்க, ஒன்றுமில்லை. அவங்க ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. சரியாக சாப்பிடலை. அதான் பாதி மயக்கத்துல்ல இருந்திருக்காங்க.
“மயக்கமா?” ஆரியன் கேட்டாள்.
ஆமா, அவங்க மனசுக்குள்ள ஏதோ அழுத்தம் இருக்கு. அதான் பீவரும் மயக்கமும் வந்திருக்கு. சிலருக்கு அதிக டிப்ரெசனுக்குள்ள போனா மயக்கம் வரும் தான். அது போல தான் இருக்காங்க..
டாக்டர் அவ நல்லா தான நேற்று பேசினாள், விளையாண்டாள்.
எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கம்மா.. உடல்நிலை, மனநிலை வாழும் சூழலுக்கு ஏற்பவோ அவர்களின் பிரச்சனையை பொருத்தோ மாறுபடும். எல்லாரும் மனதில் உள்ள எல்லாவற்றையும் வெளிய சொல்ல மாட்டாங்க..
காய்ச்சல் குறைய இன்ஜெக்சன் போட்ருக்கேன். இன்று இரவுக்குள்ள பீவர் குறைஞ்சிடும். அவங்களுக்கு காய்ச்சல் சரியாகவும் கொஞ்சம் வெளிய அழைச்சிட்டு போங்க. அவங்க மனநிலை மாறும் என்றார்.
அவளருகே அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியன். துருவினி அவனை பார்த்து விட்டு, “அப்பாட்ட சொல்லீட்டு வாரேன்” என அவ்வறையை விட்டு வெளியே வந்தாள்.
செவிலியர் ஒருவர் உள்ளே வந்து, அவளது கையில் ஊசியை குத்தி மருந்தை ஏற விட்டு, ஆரியனை பார்த்து, “முடிந்தவுடன் சொல்லுங்க சார்” என சென்றார்.
ஆரியன் அவளருகே நெருங்கி அமர்ந்து அவள் கையை பிடித்து, “இத்தனை நாள் இரவு அழும் போது கூட அக்காவுக்காக அழுறன்னு தோணுச்சி. ஆனால் டாக்டர் சொல்வதை பார்த்தால், நீ எதையோ நினைச்சி பயப்படுறன்னு தோணுது. நாம பேசும் போது நீ நினைக்கிறத சொல்லி இருக்கலாம்” என அவள் கையை அவன் கண்ணில் வைத்தான்.
கண்களை விழித்து அதியா ஆரியனை பார்த்தாள். ஆரியன் அவளை பார்த்து அவள் கையை படுக்கையில் வைத்து விட்டு எழுந்தான்.
“ஆரு” அழைத்தாள் அதியா.
“சொல்லு?” நிமிர்வுடன் கேட்டான்.
எனக்கு தூங்கணும் போல இருக்கு. ஆனால் தூங்க முடியல..
“தூங்கணுமா?”
ம்ம்..பாவமாக முகத்தை வைத்தாள்.
“நீ மனசுல்ல என்ன நினைச்சிட்டு இருக்க?”
நா…நான்..என கதவருகே பார்த்தாள். யாருமில்லை என்றவுடன் கண்கள் கலங்கியது.
“சொல்லு?” அவன் அமைதியாக கேட்டான்.
“ஆரு, ஆகு வரைலயா?”
“அவ அழுதுட்டு இருந்தா” என்றவுடன் அதியா கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆரியன் அவளிடம் வந்து கண்ணீரை துடைத்து விட்டு, அழாத. அமைதியா இரு. ஆகுவிற்கு எதுவும் ஆகாது. ஆகவும் விட மாட்டேன்..
அதியா அவன் கையை இறுக பற்றி, இனியும் ஆகக்கூடாது. ஆகாமல் பார்த்துக்கணும்.
ம்ம், என்னை மீறி ஷனாவை யாரும் தொட முடியாது..
“எனக்கு இது போதும் ஆரு” என அவன் கையை இழுத்து முத்தமிட்டாள். அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதியா கண்களை மூட, அவளை நெருங்கிய ஆரியன் அவள் நெற்றியில் முத்தமிட, அவள் கண்களை திறந்து அவனை பார்த்தாள்.
“நீ எதை நினைத்தும் கவலைப்படாத. நான் இருக்கேன்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “ஷனா சொன்னது சரிதான். சாப்ட்டா இருக்கு” என அவளை பார்த்தாள்.
வெட்கமுடன் அவள் கண்கள் தரையை பார்க்க, கொஞ்ச நேரத்துல்ல கிளம்பிடலாம்..
“ம்ம்..என்னை உங்க பைக்ல்ல கூட்டிட்டு போவீங்களா?” என அவள் கேட்க, போகலாம்..ஷனாவிற்கு ஏதும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன். நீ எப்பொழுதும் போல இருந்தால் போதும் என்றான்.
ம்ம்..என அவனை பார்த்து மெதுவாக நிமிர்ந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
“சாப்பிடலையா?”
சாப்பிட்டேன்..
இல்லையே சாப்பிடாமல் இருக்கிறதாலும் என டாக்டர் சொன்னாரே! அவன் கேட்க, அங்கிள் கிட்ட கேட்டுக்கோங்க. சாப்பிட்டேன்.
அவன் அவளை முறைக்க, முகத்தை சுருக்கி ஊசி குத்தி இருந்த கையை பார்த்து, “ரொம்ப வலிக்குது” என்றாள்.
ஆரியன் எழுந்து அவளது கையில் ஊசி ஏற்றப்பட்ட இடத்தை பார்க்க, “ஆரு..இந்த மாதிரி செய்யுங்க. இல்ல வீங்கிடும்” என ஊசியை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள்.
“இந்த மாதிரியா? அவன் சிரிக்க, எனக்கு வலிக்குது. நீங்க சிரிக்கிறீங்க” என இருவரும் ஏதோ பலநாள் பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் மற்றவர்கள் முன் இருவரும் நேற்றிரவு அணைத்ததையும், இதையும் காட்டிக் கொள்ளவில்லை.
சிரித்தாலும் ஊசி செலுத்திய இடம் லேசாக வீங்கி இருக்க, அதை தடவி விட்டான். கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கையை எடுத்து விட்டு எழுந்து மருந்தை பார்ப்பது போல் பார்த்து விட்டு வெளியே பார்த்தான்.
கையில் அலைபேசியுடன் துருவினி வந்தாள்.
அண்ணா, அப்பா ஏதோ பேச வந்து அதியா விழித்திருப்பதை பார்த்து அவளிடம் சென்று அமர்ந்தாள்.
“உனக்கு என்னாச்சு அதி?” அவள் கேட்க, அதியா உதட்டை பிதுக்கி அவள் ஊசியை பார்த்தாள்.
“ஹப்பா, இதுக்கே இப்படி முகத்தை சுளிக்கிற? ஆகா பிறக்கும் போது எப்படி சமாளிச்ச?” துருவினி கேட்க, அதியா அமைதியாக “எனக்கு வலிக்குது” என முகத்தை சுருக்கினாள்.
கொஞ்ச நேரம் தான்.முடிந்தவுடன் வீட்டிற்கு போகலாம் என இருவரும் மருந்து முடியவும் மருத்துவரை பார்த்து விட்டு அதியாவிடம் வந்தனர். அதியா சோர்வுடன் படுத்திருந்தாள்.
“வா கிளம்பலாம்” துருவினி அவளை அழைத்து மருத்துவரிடம் காட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.