ஆரியன் அவன் வீட்டின் கதவை திறந்து, துரு..துரு..என சத்தமிட்டான்.
“அண்ணாவா? என் அண்ணாவா? அப்பா என்னை அண்ணா கூப்பிடுறான்” என மலர்ந்த முகமுடன் ஆரியனின் தங்கை துருவினி வேகமாக வெளியே சென்றாள்.
ஆரியன் ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்த துருவினி, அவன் பின்னே மெதுவாக தலையில் கட்டுடன் பட்டுப்புடவையில் வந்த அதியாவை பார்த்து மேலும் திகைத்தாள்.
“ஆவென” அவள் அவர்களை பார்க்க, அவள் அப்பா உத்தமசீலன் அவளருகே வந்து மூவரையும் பார்த்து தன் மகனை கூர்ந்து பார்த்து விட்டு, “உள்ள வாங்க” என்றார்.
“இருங்க இருங்க” என்ற துருவினி, நான் ஆராத்தி எடுத்து வாரேன்.
“வாட் தி கெல் இடியட்” கர்ஜித்தான் ஆரியன்.
அண்ணா..இவங்க..என துருவினி அவர்களை பார்த்தாள். அவன் சத்தத்தில் அவர்களிடம் ஓடி வந்தான் ஆகர்ஷனாவை ஒத்த வயதுள்ள தர்ஷன். அவனுக்கும் வயது எட்டு.
தர்ஷன் ஆகர்ஷனாவை முறைத்து பார்த்தான். அவள் சோர்வுடன் அவனை பார்த்தாள்.
“இவங்கள ஜஸ்ட் காப்பாற்றினேன். கண்டதையும் யாரும் என்ன வேண்டாம்” என அதியாவிடம் ஆகர்ஷனாவை கொடுத்து விட்டு, “உள்ள போ” அவன் வண்டியிலிருந்து அவளது பையை எடுத்து வந்தான்.
“வாங்க” என துருவினியும், “வாம்மா” என உத்தமசீலனும் அதியாவை அழைத்தனர். அதியா ஏதும் சொல்லாமல் மழையில் நனைந்த புடவையுடன் உள்ளே வந்தாள். மீண்டும் மழை பிடித்தது.
ஆகர்ஷனா அதியா தோளில் சாய, “பாப்பா ஆடையெல்லாம் ஈரமா இருக்கு. இங்க வாங்க” என துருவினி அழைக்க, அவளை ஆராய்ந்தாள் ஆகர்ஷனா.
அதியா ஆரியனிடமிருந்து மேலிருக்கும் அறைக்கு சென்றாள். கட்டுப்படுத்தி வைத்திருந்த மொத்த அழுகையும் கரைபுரண்ட வெள்ளமாய் வந்தது. கதறி அழுது கொண்டிருந்தாள்
ஆடையை வாங்க சென்ற துருவினி, அவள் அழுவதை பார்த்து அவள் தோளில் கையை வைத்தாள் துருவினி.
எழுந்த அதியா கண்ணீரை துடைக்க கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
“அழுகையை கட்டுப்படுத்தாதீங்க” என துருவினி சொல்ல, அவளை அணைத்து கதறி தீர்த்தாள் அதியா. துருவினிக்கு அதியாவை பார்க்க பாவமாக இருந்தது.
அழாம ஆடையை மாத்திட்டு வாங்க. பாப்பா ஆடையை எடுத்து தாங்க. நான் மாற்றிவிடுகிறேன் என சொல்லி அதியாவிடம் ஆகர்ஷனாவிற்கு அணிவிக்கும் ஆடையை வாங்கிக் கொண்டு கீழே சென்றாள்.
தலையை துவட்டி பிங்க் நிற கையில்லா ப்ராக் ஒன்றை மாற்றி விட்டு படுக்கையில் அமர்ந்து அவ்வறையை சுற்றி பார்த்தாள். அவள் அறையை விட சற்றும் மாறுபட்டு இருந்தது.
ஆரியன் மத்தியரக குடும்பத்தை சேர்ந்தவன். சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான். தர்சன் அவனுடைய மகன்.
ஆமாம், ஆரியன் திருமணமானவன். அவன் மனைவியும், அம்மாவும் கேஸ் வெடித்து விபத்தாகி இருந்தனர். தர்சனுக்கு அவன் அம்மா யாரென கூட தெரியாது.
தர்சன் பிறந்து இரு மாதத்தில் நடந்த விபத்து. அப்பொழுது துருவினி சென்னையில் படித்துக் கொண்டிருந்தாள். ஆரியனும் சென்னையில் தான் குடும்பத்தை விட்டு வேலை காரணமாக பிரிந்து இருந்தான். குழந்தையை ஆரியன் தந்தை உத்தமசீலன் வெளியே தூக்கி சென்றிருந்தார். இவர்களின் பூர்வீகம் வேலூர்.
மனம் உடைந்து இருக்கும் அவன் தன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என எண்ணி தான் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து இருந்தான். ஆனால் அவன் மனம் இறுகி போயிருந்தது. இந்த எட்டு வருடங்களாக யாரிடமும் பேசுவது கூட இல்லை. வருவான். அவனாக சாப்பிடுவான். அறைக்கு சென்று விடுவான். அவன் மகனை கூட பெரியதாக கண்டுகொள்ள மாட்டான். யாரும் அவர்களாக பேசினால் எறிந்து விழுவான். அதனால் அவன் தந்தை கூட அவனை அவன் போக்கிலே விட்டு விட்டார்.
அதனால் தான் துருவினி அண்ணா அழைத்து விட்டான் என மகிழ்வுடன் ஓடி வந்திருப்பாள்.
அதியா வீடு நவீன அரண்மனை என்றே சொல்லலாம். அவள் அறை மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கும். அதில் ஒரு பங்கு கூட இப்பொழுதுள்ள அவள் அறையில்லை. அதை எண்ணியவாறே அறையை எழுந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அழகான ஓவியத்தின் பின்னிருந்து ஒரு பல்லி எட்டிப் பார்க்க, அலறியவாறு படியிலிருந்து ஓடி வந்தாள்.
“அண்ணா, தர்சுவை பள்ளியில் டிராப் பண்றீயா? இன்று நான் போகலை” துருவினி ஆரியனிடம் கேட்க, “முடியாது” என அவன் நகர, அனைவரும் அதியாவின் சத்தத்தில் மாடியை பார்த்தனர். ஆரியனும் துருவினியும் அங்கே தான் நின்று கொண்டிருந்தனர்.
ஓடும் பதட்டத்தில் முன் போல் கால் இடற, வந்த வேகத்தில் ஆரியனையும் தள்ளி அவள் அவன் மீதே விழுந்தாள்.
அவன் சீற்றமுடன் அவளை தள்ளி விட்டு, “இரிட்டேட்டிங் இடியட்” என கத்தினான். “அம்மா அம்மா” என அதியா அழுதாள்.
“வாய மூடு” என எழுந்து அவன் சட்டையை வெளியே எடுத்து விட்டு சரி செய்தான்.
“என்னாச்சு?” துருவினி அவளை தூக்கி விட, பிக் லிசார்டு.. ஆ..வென மீண்டும் அழுது கொண்டு, நான் இவ்வளவு பெருசை பார்த்ததேயில்லை. பயமா இருந்தது. அதான் வந்தேன்..தெரியாமல் தான்..என மீண்டும் அழுதாள்.
துருவினியும் உத்தமசீலனும் அதிர்ந்து அவளை பார்த்து, ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அதிம்மா, லிசார்டு ஒன்றும் பண்ணாது. அது உங்களை பார்த்து பயந்திருக்கும். அழாதீங்க என அதியாவை சமாதானப்படுத்தி அணைத்தாள். மற்ற மூவரும் ஆச்சர்யமாக இருவரையும் பார்த்தனர்.
பாரு. உன்னோட பொண்ணு கூட பயப்படாம பேசுறா. நீ பாரு..பல்லிக்கு பயந்து ஓடி வந்திருக்க. நீ எப்படி பாப்பாவை பெத்தெடுத்த? சீறினான்.
ஆகர்ஷனா ஆரியனை முறைத்து ஏதோ கோபமாக பேச வந்தாள். ஆகு என்று அதியா கையை நீட்டினாள்.
நோ..நோ..வர மாட்டேன் என எழுந்தாள். தர்சன் அதியாவை பார்த்து புன்னகைத்தான்.
“என்ன டிரைஸ் போட்ருக்க? உனக்கு எதையும் ஒழுங்கா செய்யத் தெரியாதா?” என ஆரியன் ஆகர்ஷனா அவளுக்காக பேசுவது பிடிக்காமல் மேலும் திட்டினான்.
கண்ணீருடன் எல்லாரையும் பார்த்தாள் அதியா பாவமாக.
“அதிம்மா, நீ பிரின்சஸ் மாதிரி இருக்க. அழகா இருக்க. எங்க ஸ்மைல் பண்ணு” என துருவினி கையிலிருக்கும் அலைபேசியை பிடுங்கி புகைப்படம் ஆகர்ஷனா எடுக்க, “ஆகு..வெயிட் வெயிட்” என அவளை சரி செய்து புன்னகையுடன் எல்லாம் மறந்து போஸ் கொடுத்தாள் அதியா.
ஆரியன் அவன் தலையில் அடித்து, “எல்லாம் தேவை தான்” என நகர்ந்தான்.
“அண்ணா” துருவினி கத்த, அவன் “என் காது கேட்காது” என்பது போல் திரும்பியும் பாராது சென்று விட்டான்.
ஆரியனை தவிர எல்லாருக்கும் அதியாவின் இந்த வெகுளி குணம் பிடித்து போனது.
தர்சன் பள்ளிச்சீருடையுடன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றான்.
அதியா அவனை பார்த்து, அவனுடனும் சேர்ந்து நிற்க, ஆகர்ஷனா இப்பொழுது தர்சனை முறைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தாள்.
இருவரையும் பார்த்த துருவினி, “பாப்பா அதை கொடு” என அலைபேசியை வாங்கி “அப்பா..எங்களையும் சேர்த்து எடுங்க” என அவர்களுடன் ஆகர்ஷனாவுடன் நின்றாள் துருவினி.
நால்வரையும் சேர்த்து அவர் புகைப்படம் எடுக்க, “அங்கிள்…நீங்களும் வாங்க” அதியா அவரையும் அழைத்தாள்.
“வாங்க தாத்தா” ஆகர்ஷனா அழைக்க, அவருக்கு நெகிழ்ந்து போனது. அவரும் சேர்ந்து கொள்ள அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
இம்முறைய கிளிக் செய்யும் முன் நிறுத்தி வேகமாக நகர்ந்து நின்றாள் துருவினி. சென்ற ஆரியன் மறுபடியும் வீட்டிற்கு வந்திருந்தான். இவர்களை முறைத்துக் கொண்டிருந்தான்.
அதியா அவனை பார்த்து விட்டு, “சார், நீங்களும் வாங்க” என்றாள்.
அவளை முறைத்து விட்டு, “இப்ப தான் அழுத?” அவன் ஏளனமாக கேட்க, அவள் முகம் மாறியது.
சார், நாங்க இங்க இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லீடுங்க. நாங்க போயிடுறோம். சும்மா திட்டுறீங்க இல்லை முறைக்கிறீங்க என அவன் முன் வந்தாள்.
ஏனோ அவளிடம் எடுத்தெறிந்து பேச அவனால் முடியவில்லை. வெளிய எங்கும் நீங்க போக வேண்டாம்ன்னு தான் சொல்ல வந்தேன் என அதியாவை பார்த்து விட்டு கிளம்பினான். அவன் வீட்டினர் ஆச்சர்யமாக அவனை பார்த்தனர். தர்சன் கோபமாக நகர்ந்தான்.
“தர்சு, நில்லுடா” துருவினி அவன் பின்னே ஓட, அவன் சினமுடன் இவங்க இங்க இருக்க வேண்டாம். அப்பா ஒரு நாள் கூட என்னிடம் பேசியதேயில்லை. ஆனால் அவளிடம் மட்டும் பேசுகிறார் என கேட்டான்.
“தர்சா, அந்த பொண்ணு புதுசா நம்ம வீட்டுக்கு வந்திருக்கால்ல. அதனால பேசி இருப்பான்” உத்தமசீலன் தன் பேரனை சமாதானப்படுத்த முயன்றார்.
இல்ல, அப்பாவுக்கு என்னை பிடிக்காது. அதனால தான் என்னிடம் பேசியது கூட இல்லை என அவன் அழுதாள்.
ஆனால் அவளோட மட்டும் பேசுறார். “ஐ ஹேட் மை டாட்” என அழுது கொண்டே அவன் உள்ளே ஓடினான். அதியா அவனை பிடித்து சோபாவில் அமர வைத்தாள்.
உனக்கு சொல்லவாது அப்பா இருக்காங்க. ஆனால் எனக்கு அப்பா இல்லை. அம்மா தான். அவங்களுக்கு என்னை விட பணம் தான் முக்கியம் தெரியுமா? எங்களுக்கு இப்ப யாருமே இல்லை. உனக்கு தாத்தா, அத்தையெல்லாம் இருக்காங்க என்றாள்.
“நிஜமாகவே உங்களுக்கு யாருமில்லையா?” அவன் கேட்டான்.
ம்ம்..சிலர் இருக்காங்க. நான் வளரும் போது என் அக்காவை தவிர யாரும் என்னருகே இருந்ததில்லை. என்னுடன் பேச கூட யாருக்கும் நேரமிருக்காது.
“அக்காவா? எங்க அவங்க?” அவன் கேட்க, அதியா ஆகர்ஷனாவை பார்த்தாள்.
“அதிம்மா, என்னை எதுக்கு பாக்குற?”
“அக்கா இப்ப இல்லை” என அதியாவின் கண்கள் கலங்கியது.
உத்தமசீலன் அவர்கள் அருகே வந்து, “என்னம்மா பிரச்சனை?” அவர் கேட்ட நொடி அழ ஆரம்பித்தாள். அவரோ துருவினியை பார்த்தார்.
“உனக்கு அப்பா இல்லையா?” தர்சன் ஆகர்ஷனாவிடம் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள்.
உனக்கு அப்பா இல்லை. எனக்கு அம்மா இல்லை. நீ என்னோட அப்பாவை வச்சுக்கோ. நான் உன் அம்மாவை வச்சுக்கிறேன் என்றான் தர்சன்.
“தர்சு” துருவினி கோபமாக அழைக்க, அவளை பார்த்து விட்டு ஆகர்ஷனா தர்சனிடம் பேசினாள்.
எனக்கு அதிம்மா வேணும். அதிம்மா இல்லாமல் ஒருநாள் கூட நான் இருக்க மாட்டேன். உன்னோட அப்பா என்னிடம் மட்டும் ஏன் பேசுறார்ன்னு தெரியல. ஆனால் அவருக்கு உன்னை பிடிக்காமல் இருக்காது..
இல்ல, அவருக்கு என்னை பிடிக்காது. உன்னோட அதிம்மாவை எனக்கு கொடுத்திரு அவன் கேட்க, “நோ..எனக்கு அதிம்மா வேணும்” என அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள் ஆகர்ஷனா.
தர்சா, வேண்டாம். வா தாத்தா உன்னை பள்ளியில் விடுகிறேன்.
யாரும் வர வேண்டாம். நானே போறேன் என அழுது கொண்டே அவனது புத்தகப்பையை தோளில் போட்டான்.
ஆகு, வா நாம அவனை சமாதானப்படுத்துவோம்..
நோ..அதிம்மா..
ஆகு, நீ இரு. நான் அவனை பார்த்துட்டு வாரேன்.
போ..என்னோட பேசாத ஆகர்ஷனா கோபித்துக் கொண்டாள்.
இருக்கட்டும்மா. அவன் சரியாகிடுவான்.
“இருக்கட்டும் அங்கிள்” என தர்சனிடம் ஓடினாள் அதியா.
தர்சனிடம் கோபமாக துருவினி பேசிக் கொண்டிருந்தாள். “ஆகு, இங்க வா” என அதியா அழைத்தாள். ஆகர்ஷனா அவர்களிடம் வந்தாள்.
“பையனை திட்டாதீங்க” என்ற அதியா, தர்சனிடம் சென்று, “நாம ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாம். என்னை நீ அம்மான்னு அழைக்க முடியாது”.
“அவ மட்டும் கூப்பிடுறாள்?”
அவ..என ஆகர்ஷனாவை பார்த்தாள் அதியா.
“என்னால வேறெதுவும் சொல்ல முடியாது. நாம ப்ரெண்ட்ஸா இருந்தா நாங்க இங்க இருக்கோம் இல்லைன்னா நாங்க இப்பவே கிளம்புகிறோம்” என அதியா அடித்து பேசினாள்.
“போயிடாதீங்க” என அதியாவை கட்டிக் கொண்டு அழுதான் தர்சன்.
“நாம ப்ரெண்ட்ஸ் தான?” அதியா கேட்க, “ம்ம்..உங்களை எப்படி கூப்பிடுறது?”
“அதின்னு கூப்பிடு இல்லை அதியான்னு கூப்பிடு” அவள் சொல்ல, அதின்னு கூப்பிடுறேன் என்று ஆகர்ஷனாவை பார்த்தான்.
“சரி ஆகு, தர்சு நீங்களும் ப்ரெண்ட்ஸ் கையை குடுத்துக்கோங்க” அதியா சொல்ல தர்சன் அவளையே பார்த்தான். அவள் கையை நீட்டினாள்.
“தர்சு” துருவினி அழைக்க, “உங்க அண்ணா மாதிரி அவனை மிரட்டிக்கிட்டே இருக்க? உன்னோட அண்ணா கோபப்பட்டா உனக்கு கோபம் வருதுல்ல அது போல தான தர்சுவுக்கும் இருக்கும்” அதியா கேட்க, “நல்லா சொல்லும்மா” என அதியாவை மெச்சிக் கொண்டார் உத்தமசீலன். தன் தந்தையை முறைத்தாள் துருவினி.
வினு, கோபப்படாத. சொல்ல தோணுச்சு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி நாம எல்லாரும் ப்ரெண்ட்ஸ் ஓ.கேவா? அதியா துருவினியிடம் கேட்டாள்.
துருவினி கண்கள் கலங்க அவள் தந்தையை பார்த்தாள்.
“தப்பா சொல்லீட்டேனா?” அதியா பாவம் போல் கேட்க, “என்னோட அம்மா மட்டும் தான் என்னை வினுன்னு அழைப்பாங்க” என்றாள்.
“அதுக்கு நீ சந்தோசம் தான படணும்?” அதியா புரியாமல் கேட்க, அவங்க அம்மா நினைவு அவளுக்கு வந்திருச்சும்மா.
நான் கூப்பிடும் போது சந்தோசப்பட்டிருந்தேன்னா உன்னோட அம்மாவும் சந்தோசப்பட்டிருப்பாங்க என துருவினியை பார்க்க, அதியாவை அணைத்துக் கொண்டாள் துருவினி.
பாசிட்டிவ் திங்கிங். இப்படியே நீ சொல்றத என் மவன் பார்த்தான்..
“என்ன முறைக்க தான் செய்வாரு” என ஆகர்ஷனாவை பார்த்து, “சரிதான ஆகு?”
“ஆமா..ஆமா..ஒன்று முறைக்கிறாரு இல்ல கத்துறாரு. நாம சேர்ந்து அவரை மாத்தணும்” என்றாள் ஆகர்ஷனா.
ஆமா, அண்ணா பழையவாறு பேசினால் எங்களுக்கு போதும்.
குட் பேசினால் இல்லை பேசுவாரு..என்ற அதியா தர்சனை பார்த்து, உனக்கு அம்மா இல்லை என்றோ அப்பா உன்னுடன் கலந்து கொள்ள மாட்டேங்கிறாங்க என்றோ கவலைப்படாத. யாராவது உன்னை டீஸ் பண்ணா புன்னகையுடன் நகர்ந்து போ. அவர்களுக்கே அலுத்து போய் விட்ருவாங்க.
உன் அப்பாவுக்கு என்ன கஷ்டமோ? நாம யாரையும் எதிர் பார்த்து வாழக் கூடாதுன்னு இந்த ரெண்டு நாள்ல்ல நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் ஆகு நீ இல்லை எனக்கும் வாழ்வில்லை என அவளுக்கு என்றும் நினைவில் இருக்கணும் என்று பேசினாள்.
தர்சன் அவனாகவே துருவினியிடம், “அத்தை வாங்க கிளம்பலாம் நேரமாகுது” என சொல்ல வீட்டினர் இருவரும் மகிழ்ந்தனர்.
தர்சனை பள்ளியில் விட்டு வந்த துருவினி சத்தம் கேட்டு பதறி சமையற்கட்டுக்குள் ஓட, மற்றவர்களும் ஓடினர்.
“அதிம்மா” என அழைத்தவாறு ஆகர்ஷனா அழ, அதியாவும் அழுது கொண்டிருந்தான்.
உத்தமசீலன் அவளை பார்த்து திகைத்து, தண்ணீர் குடத்தை தூக்கி அடுப்பில் ஊற்றி விட்டு, “அம்மா..உனக்கு ஒன்றுமில்லையே?” பதறினார்.
“அங்கிள்” என அழுது கொண்டே அவரது கையை பிடித்தாள்.
“வெளிய வாம்மா” என அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான்.
துருவினி கோபமாக, “உள்ள என்ன பண்ணீங்க? எப்படி தீப்பிடித்தது?” கேட்டாள்.
பாப்பாவுக்கு ஹீட் வாட்டர் வைக்க போனேன். நான் இதுவரை கிச்சன் பக்கமே போனதில்லை. இன்று தான் அடுப்பையே பார்க்கிறேன். என அழுதாள்.
இருவரும் அதிர்ந்தனர்.
ஆமா, எங்க வீடு பெருசா இருக்கும். எங்க வீட்ல நிறைய ஆட்கள் வேலை செய்வாங்க. அதனால நாங்க கிச்சனுக்கு போக மாட்டோம். குடிக்க கூட தண்ணீர் அறையிலே இருக்கும் என்ற ஆகர்ஷனா..கை சுட்ருச்சா அதிம்மா எனக் கேட்டாள்.
ஃபையரை பார்த்து பயந்துட்டேன்.
“அம்மா, இனி கிச்சன் பக்கம் போகாதம்மா. பதறிட்டோம்” என உத்தமசீலன் நெஞ்சில் கண்ணீருடன் கை வைத்தார்.
தாத்தா, அதிம்மாவுக்கு ஏதுமில்லை.
“ம்ம் அன்று இப்படி சொல்ல தான் ஆள் இல்லாமல் தவித்து நொந்து போயிட்டேன்ம்மா” என அவர் அழுதார்.
“நான் இனி போகலை அங்கிள்” என அவர் கையை பிடித்து, சாரி என்றாள் அதியா.
துருவினி அவளை பார்த்து, “நீங்க எதுக்கு அழுதுட்டு இருந்தீங்க?” கேட்டாள்.
அது வந்து நிரா என்னை ஏமாத்திட்டு என்னோட ப்ரெண்டோட படுக்கையை ஷேர் பண்ணிட்டான்.
“அதிம்மா” கத்தினாள் ஆகர்ஷனா.
உனக்கு இதெல்லாம் புரியுமா? துருவினி கேட்க, எங்களை சுற்றி சிலர் இப்படி தான் இருந்தாங்க என்றாள் அதியா.
“யாரு நிரா? உன்னோட கணவனாம்மா?”
இல்ல அங்கிள், அவனும் நானும் காதலித்தோம்.
“வாட்?” துருவினி அதிர்ந்து அவளை பார்த்தாள்.
“அதிம்மா, சும்மா இருக்க மாட்டீயா?”
உங்களுக்கு எங்களை பற்றி சொல்லணும்ன்னா முதல்ல இருந்து சொல்லணும். வேண்டாம். அதுல சில ரகசிய விசயங்களும் இருக்கு. அதனால சொல்ற நேரம் சொல்றேன்.
“அப்ப நீங்க செக்கண்டு மேரேஜ் பண்ண தயாராக இருந்தீங்களா? அதுவும் காதலா?” துருவினி முகத்தை சுருக்கி கேட்க, “இதை பத்தி கேட்டீங்கன்னா இப்பவே நாங்க கிளம்புறோம்” என்றாள் பாப்பா. அவளோ இருவரையும் சந்தேகமுடன் பார்த்தாள்.
உத்தமசீலனோ “துரும்மா அமைதியா இரு”. எல்லார் வாழ்க்கையிலும் சில ரகசியங்கள் ஒளிந்திருக்கும். அதை துருவி துருவி கேட்கக் கூடாது.
“அது உங்களுக்கு தெரிய வேண்டாம். தெரிந்தால் நீங்களும் கஷ்டப்படுவீங்க” என்ற அதியா, “நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வரவா அங்கிள்?” என உத்தமசீலனை பார்த்தாள்.
நீங்க இருப்பது என்னோட அறை தான். நான் அறையை மாத்திக்கிறேன் என வேகமாக படிகளில் ஏறினாள் துருவினி.
அவர் புன்னகையுடன் அழகா உன்னை போலவே இருக்குடா பாப்பா என்றார் அவளிடம்.
தேங்க்ஸ் தாத்தா..
அவளை துக்கி உத்தமசீலன் சிரிப்புடன் கொஞ்சிக் கொண்டிருந்தார். படியிலிருந்து சில பொருட்களுடன் இறங்கிய துருவினி தன் தந்தையின் சிரிப்பை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பா மனது விட்டு சிரித்து எத்தனை வருடங்களாகுது. இவங்க யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அப்பா மட்டுமல்ல அண்ணாவிடமும் சில மாற்றம் வந்திருக்கு. இவங்கள இப்பொழுதைக்கு வெளியே செல்ல விடக் கூடாது என மனதினுள் எண்ணினாள்.
ஆரியன் அறைக்கு பக்கத்துக்கு அறையில் அனைத்தையும் வைத்து விட்டு, நீங்க ரெஸ்ட் எடுங்க. “ஒன்று மட்டும் கேட்கவா?”
“ம்ம் கேளுங்க ஆன்ட்டி” ஆகர்ஷனா கேட்க, “நீங்க படிச்சிருப்பீங்கல்ல? என்ன வேலை பார்க்கப் போறீங்க?”
“வேலையா?” அதியா கேட்க, “அப்புறம் உங்க செலவுக்கு என்ன செய்வீங்க?”
அதான் கார்டு இருக்கே!
காலியானால் என்ன செய்வீங்க?
ஆமா..என பாவமாக அவர்களை அதியா பார்த்தாள்.
“அம்மா இருக்கட்டும்டா. நாம பார்த்துக்கலாம்” என பெருந்தன்மையுடன் உத்தமசீலன் சொன்னார்.
அப்பா, எனக்கு அவங்க வீட்ல இருக்கிறது பிரச்சனையில்லை. அதான் பெத்து வச்சிருக்கீங்களே! சிடுமூஞ்சி..சும்மாவே இவங்கள பார்த்தாலே கோபப்படுறான். அப்புறம் அதிகமா பேசிருவான்.
அப்பா பார்த்துக்கிறேன்..
“எப்படி திட்டுறான்னு பார்க்க போறீங்களா?” அவள் கேட்க, அதியாவிற்கு மனதில் பயம் சூழ்ந்தது. அவள் விழித்து அவர்களை பார்த்தாள்.
“என்னம்மா?”
அங்கிள், நிறைய பேர் இருக்குற இடத்துல்ல நான் சென்றதேயில்லை.
“என்ன சொல்றீங்க?”
ம்ம்..காலேஜ் போனாலும் யாரும் என் பக்கம் உட்கார மாட்டாங்க. என்னோட பாதுகாப்பிற்காக. அதனால தனியா தான் இருப்பேன்.
“எனக்கு யாரையும் அதிகமாக தெரியாது” என கண்ணீருடன் உதட்டை பிதுக்கினாள்.
“யாரு நீங்க? இவ்வளவு கண்டிசனா? இப்படி இருந்தால் எப்படி வாழ்றது?” துருவினி அதியாவை பாவமுடன் பார்த்தாள்.
என்னோட அப்பா இறந்த பின் அம்மா கைக்கு கம்பெனி போனது. எப்பொழுதும் வொர்ல்ல தான் இருப்பாங்க. என்னோட அக்கா தான் எனக்கு எல்லாமே..
ஆதிரா..என்னோட அம்மா எனக்கு அம்மாவா இருந்து பார்த்ததேயில்லை. என்னோட அம்மா அக்கா தான். திறமையானவ. அவளையும் என்னை போல் தான் வீட்டுக்குள்ளே தான் வளர்த்தாங்க. ஆனால் அவள் எல்லாவற்றையும் உள்ளிருந்து கற்றுக் கொண்டாள். அவள் அம்மாவோட கம்பெனிக்கு போக ஆரம்பித்த போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பாதுகாப்பிற்கு ஆட்கள் இருப்பதால் வெளியே செல்ல கூட முடியாது. எனக்கு ரோடு கிராஸ் பண்ண கூட தெரியாது. இரு வருடத்திலே அவளுக்கு மேரேஜ் ஆனது. மாமா..என கண்ணீருடன் முகத்தை மூடி அழுதாள்.
“அதிம்மா வேண்டாம்” என அதியாவின் கையை எடுத்து அவள் கண்ணீரை துடைத்து, “நாம ரெஸ்ட் எடுக்க போகலாமா?” எனக் கேட்டாள்.
ம்ம்..அங்கிள்..என அவரை பார்த்தாள்.
போம்மா. இருவருமே சோர்வா இருக்கீங்க.
ம்ம்..என ஆகர்ஷனா கையை பிடித்து மேலிருக்கும் அறைக்கு சென்றாள்.
அப்பா, இப்படியுமா பிள்ளையை வளர்ப்பாங்க. தெளிவா பேசுறாங்க. சின்ன வலியை கூட தாங்க மாட்டேங்கிறாங்க. அழுறாங்க. எந்த வேலையும் தெரியலைன்னு சொல்றாங்க. அண்ணாவுக்கு தெரிந்தால் என்ன ஆவது?
என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது.. வாழ்க்கை பாடம் இல்லாமல் இருக்கும் பொண்ணுன்னு எனக்கு தோணலை. ஏதோ பெரிய பிரச்சனை அந்த பொண்ணுக்கு இருக்கு. ஆனால் அந்த பொண்ணு சொன்னது பொய்யல்ல. அவள் வளர்ந்த விதம் வசதி வாய்ப்பு நிறைந்த இடம். இப்பொழுது நம்ம வீட்ல எதுவும் புரியாம இருக்கா. அந்த பொண்ணு யாருடனும் அதிகம் பேசியதில்லைன்னு அவள் பேசும் போது தெரியுது.
இல்லம்மா, அந்த பொண்ணு மனசுக்குள்ள ஒத்திகை பார்க்குற மாதிரி இருக்கு. நம்ம தர்சுவுடனும் அவ பாப்பாவுடனும் தான் மனசுல்ல இருப்பதை அப்படியே பேசுறா. அந்த பொண்ணு வெளியவே போனதில்லை என்பதால் தான் நீ வேலையை பற்றி பேசும் போது பயந்தா..
“அந்த பொண்ணை நாம பள்ளியில் ஆசிரியராக சேர்த்து விடலாமா?” என கேட்டார்.
“வாவ், சூப்பர் ஐடியாப்பா. அதான் சரியாக இருக்கும்” என துருவினி புன்னகைத்தாள்.
அப்பா, நான் அவங்களுக்கும் சேர்த்து சமைத்து வச்சிட்டு ஆபிஸ் கிளம்புறேன்.
“சரிம்மா” என அவர் சொல்ல, “அப்பா படுத்துக்கவா?” துருவினி கேட்க, “படுத்துக்கோடா” என அவர் சொல்ல, அவர் மடியில் படுத்துக் கொண்டாள் துருவினி.
அப்பா, அண்ணாவுக்கு ஆகாவை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அவளிடம் அவன் பேசும் போது பாருங்களேன்.
உன் அண்ணன் பேசியதே பெரிய விசயம்மா..
ஆமாப்பா, அண்ணா பழைய மாதிரி ஆகிடுவான்னு எனக்கு நிச்சயமா தோணுது. நம்ம குடும்ப சந்தோசத்தையே இருவரும் கொண்டு வரப் போறாகங்கன்னு நினைக்கிறேன்.
“ம்ம்..இருக்கலாம்மா” என அவர் அர்த்தமுடன் புன்னகைத்தார் அதியாவின் அறையை பார்த்துக் கொண்டு.
மதிய வேளை அனைவரும் உணவுண்ண அமர்ந்தனர். அச்சமயம் உள்ளே வந்த ஆரியன் அவனாகவே தட்டை எடுத்து உணவை போட்டு யாரையும் கண்டுகொள்ளாமல் உண்டு எழுந்தான்.
கையை கழுவி விட்டு உத்தமசீலன் முன்னும் துருவினி முன்னும் சில பணக்கட்டுகளை வைத்து விட்டு நகர்ந்தார்.
துருவினி சாப்பிடாமல் எழுந்து நகர, “ஆன்ட்டி..நில்லுங்க” என ஆகர்ஷனா அழைத்தாள்.
துருவினி சினமுடன் அவளை பார்க்க, “ஹலோ..மிஸ்டர் சிடுமூஞ்சி நில்லுங்க” என்று ஆகர்ஷனா ஆரியனை அழைத்தாள். அனைவரும் அவளை திகைத்து பார்த்தனர்.
“ஆகு, சும்மா இரு” என அதியா ஆகர்ஷனா கையை பிடிக்க, “அதிம்மா, நீ தலையிடாத. பெரியவங்க பேசும் போது இடையில பேசக்கூடாது. நீ தான சொல்லி இருக்க? நீயே டிஸ்டர்ப் பண்ணலாமா?”
ஆரியன் புருவம் இடுங்க முறைத்துக் கொண்டு அவளருகே வந்தான்.
“தாத்தா, அந்த பணத்தை கொடுங்க” என சொல்ல, உத்தமசீலன் தன் மகனை பார்த்துக் கொண்டே கொடுத்தார்.
பணத்தை வாங்கிய ஆகர்ஷனா, “மிஸ்டர்..இதை நீங்களே வச்சுக்கோங்க. மரியாத தெரியாதவங்ககிட்ட என்னோட ஆன்ட்டியும், தாத்தாவும் பணம் வாங்க மாட்டாங்க”.
“வாட்?” சீற்றமுடன் கேட்டான்.
“நான் சொன்னது உங்களுக்கு கேட்கலையா?” என நாற்காலியை இழுத்து அவன் முன் போட்டு அதில் ஏறினாள் ஆகர்ஷனா.
“ஆகு” அதியா அழைக்க, “அதிம்மா பேசிட்டு இருக்கேன்ல்ல” என அவனை பார்த்து, “இன்னும் உயரமா இருக்கீங்க? உங்களை யாரு இப்படி வளர சொன்னா? ஹப்பா..இப்பவே கண்ணை கட்டுதே” என வியர்க்காத நெற்றியை அழகான கையால் தாங்கிக் கொண்டு நிமிராமல் கண்ணை மட்டும் உயர்த்தி அவனை பார்த்தாள்.
உத்தமசீலன் புன்னகைத்தார். துருவினி வியப்புடன் அவளை பார்த்தாள்.
ஆரியனோ சட்டென அவளை தூக்கி, “என்ன சொல்லணும் சொல்லு? எனக்கு வேலை இருக்கு” என அவன் முகத்திற்கு நேராக அவளை தூக்கினான்.
“இந்த பசங்களுக்கும் மட்டும் தான் வேலை இருக்குமா தாத்தா? நீங்க கேட்க மாட்டீங்களா?” என ஆகர்ஷனா உத்தமசீலனை பார்த்தார்.
“ஆமா ஆகாம்மா, பொண்ணுங்களுக்கும் வேலை இருக்கும்ல்ல. நல்லா உரைக்கிற மாதிரி சொல்லும்மா” என சொல்லி சிரித்தார்.
“என்னிடம் பேசணும்ன்னா பேசு” என ஆகர்ஷனாவின் கன்னத்தை பிடித்து அவன் பக்கம் திருப்பினான்.
இல்ல..இல்ல..என்னோட கன்னத்தை விட அதிம்மா கன்னம் ரொம்ப சாப்ட்டா இருக்கும். அதனால நான் அவங்களுக்கு நிறைய முத்தம் கொடுப்பேன்.
ஆரியன் அவளை பார்த்தான்.
அதிம்மா, இங்க வாயேன்..
நான் வரமாட்டேன்ப்பா, “எதுக்கு? அவர் முறைச்சே என்னை அழ வச்சிருவார். எனக்கு தெரியாது”.
“உன்னோட ஆகு இருக்கும் போது நீ பயப்படலாமா?”
“பயமா? இல்லையே!”
அப்ப வா..
“வாரேன்” என ஆரியன் முன் கையை கட்டிக் கொண்டு நின்றாள்.
“ஹலோ மிஸ்டர், அங்க என்ன பாக்குறீங்க? கையை கொடுங்க”.
“எதுக்கு?” ஆரியன் குரல் கம்மியது. உத்தமசீலனும் துருவினியும் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
குடு மிஸ்டர்..
ஆரியன் அவனது வலது கையை ஆகர்ஷனாவிடம் காட்டினான். அவனது விரல்களை மடக்கி ஆள் காட்டி விரலை நீட்டி வைத்து, “அதிம்மா..பக்கத்துல்ல வாயேன்” என அழைத்தாள்.
“எதுக்கு கூப்பிடுற?” என அதியா பயத்துடன் ஆரியனை பார்த்தாள். அவன் பார்வை ஆகர்ஷனாவிடம் தான் பதிந்து இருந்தது.
“வா அதிம்மா. நான் இருக்கேன்ல்ல” அவள் சொல்ல, ஆரியன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
“அடிப்பாவி, என் அண்ணாவை சிரிக்க வச்சுட்டாளே! பயங்கரமான ஆள் தான்” துருவினி மனதில் எண்ணினாள்.
ஆரியனின் விரலை இழுத்து அதியாவின் கன்னத்தை தொட வைத்து,” எப்படி சாப்ட்டா இருக்குல்ல? இப்ப பாரு என ஆரியன் விரலை அவள் கன்னத்தில் வைத்து நீயே சொல்லு?” எனக் கேட்டாள்.
வாயை பிளந்து துருவினி பார்க்க, உத்தமசீலனோ சரிதான். பாப்பாவை ரூட் போட்டு விடுறாளே! நமக்கு ஏத்த பேத்தி தான் என எண்ணினார்.
கண்களை விரித்து மீன்குஞ்சு போல வாயை திறந்து அதியா ஆரியனை பார்த்தாள். ஆரியனும் அவளை பார்த்தான். அமைதியாக இருந்தான்.
“சொல்லு மிஸ்டர்?”
“சாப்ட்டா தான் இருக்கு” என்றான் ஆரியன் அதியாவை பார்த்து.
“ஆத்தாடி, அவ்வளவு தான்” என வாயை பொத்திக் கொண்டு உத்தமசீலனிடம் ஓடி நின்று கொண்டாள் அதியா.
“அதிம்மா, அதான் ஆரு ஒன்றும் சொல்லலைல்ல? எதுக்கு பயப்படுற?” ஆகர்ஷனா கேட்க, “என்னது ஆருவா?” என துருவினி கேட்டாள்.
“வராதீங்க ஆன்ட்டி” என்று ஆரியனை பார்த்து, “ஆரு உங்களுக்கு ஓ.கே தான?”
ம்ம்..என்றான் கரகரத்த தொண்டையை செருமிக் கொண்டு.
“ஆரு, நீ சமத்து பையன்னா தாத்தா, ஆன்ட்டி கையில பணம் கொடுக்கணும். எங்க சிரிச்சுக்கிட்டே கொடு” என சொல்ல, அவன் மற்ற மூவரையும் பார்த்தான்.
“எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை” என சொல்லிக் கொண்டே அதியா உணவு மேசையில் அமர்ந்தாள்.
“இப்ப வாங்க தாத்தா, ஆன்ட்டி” ஆகர்ஷனா அழைக்க, “இவன் சிரிச்சுக்கிட்டே கொடுப்பானா? கத்த தான் போறான்” என துருவினி தன் தந்தையிடம் நீங்க போங்க. நான் வரலை என சைகை காட்டினாள்.
அவர் புன்னகையுடன் அவர்கள் முன் வந்து நின்றார். ஆரியன் அவரை பார்த்து பல்லை காட்டிக் கொண்டு பணத்தை கொடுத்து முறைத்தான்.
“ஆரு, முறைக்காத. சிரி” அவனது இதழ்களை பிரித்து சிரிக்க வைத்தாள் ஆகர்ஷனா.
“கனவா தான் இருக்கணும்” துருவினி கிள்ளி பார்த்தாள்.
“அய்யோ வலிக்குதே!” கத்தினாள்.
“வினு கனவில்லை நிஜம் தான்” என அதியா சிரித்தாள்.
“நிஜமா? அப்ப எனக்கும் கொடு” என துருவினி ஆரியனிடம் வந்தாள். அவளிடம் கொடுத்து புன்னகைத்து விட்டு, “வேறெதுவும் இருக்கா ஷனா?” கேட்டான்.
“இருக்கு..இருக்கு..நான் சொன்னதை கேட்ட ஆருவுக்கு எனது அன்பான உம்மா” என கன்னத்தில் முத்தமிட்டாள். ஆரியன் கண்கள் கலங்கியது.
“என்ன நடக்குது?” புரியாமல் எல்லாரும் அவனை பார்த்தனர்.
“அண்ணா, கண்கலங்குறானா? என்ன நினைச்சிட்டு இருக்கான்? தர்சுவை அருகே கூட விட மாட்டான்” என எண்ணியவாறு அதியாவிடம் சென்றாள்.
“குட் பாய்” என அவன் கன்னத்தில் தட்டிய ஆகர்ஷனா. எனக்கு ரொம்ப பசிக்குது. என்னை இறக்கி விடுறியா?
ஆரியன் இறக்கி விட, “பை பை ஆரு” என ஆகர்ஷனா சொல்ல, “அண்ணா பை பை” துருவினி சொல்ல, எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக சென்றான்.
“அய்யோ குட்டி தேவதையே! யூ ஆர் கிரேட். மலையை அசச்சுட்ட” என ஆகர்ஷனாவை தூக்கி சுற்றினாள் துருவினி மகிழ்வுடன். அனைவரும் புன்னகையுடன் அவர்களை பார்த்தனர்.