அத்தியாயம் 21

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

கனவுக்குள்ளே

காதலைத் தந்தாய் கணுக்க

தோறும் முத்தம் கனவு

கலைந்து எழுந்து பார்த்தால்

கைகள் முழுக்க ரத்தம்

துளைகள் இன்றி

நாயனமா தோல்விகள்

இன்றி பூரணமா

விக்ரம் எந்த வேலையும் செய்யாமல் வேண்டா வெறுப்பாக காரியாலயத்தில் அமர்ந்திருந்தான். வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. நண்பனை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டேனே எல்லாம் ரதியால் வந்தது என்று அவளை தூற்றலானாள்.  

நண்பனை என்ன சொல்லி எவ்வாறு சமாதானப்படுத்துவதென்றும் அவனுக்குப் புரியவில்லை. நேற்று நடந்த சம்பவத்தினால், விக்ரம் ரகுராமின் வீட்டுக்குச் செல்லாமல், ஹோட்டல் அறையில்தான் தங்கியுமிருந்தான்.

ரகுராமுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து பேசலாமா என்றும் நினைத்தான். இது அலைபேசியில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையில்லையென்று புத்தியில் உரைக்கவே அமைதியாக தூங்கியும் போனான்.

விடிந்ததும் காரியாலயம் செல்ல வேண்டுமா? அங்கே பாரதியின் முகத்தில் விழிக்க வேண்டுமா? ரகுராமின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றினாலும், எந்நாளும் அவர்கள் இருவரையும் தவிர்க்க முடியாதே என்று நேரம் சென்றுதான் கிளம்பி வந்திருந்தான்.

வரும் பொழுதே கவனித்தான் ரகுராமின் அறையில் அவனில்லை. படப்பிடிப்புக்காக வெளியே சென்றிருப்பானென்று மோகனாவின் அறையை பார்த்தால் அவளும் வந்திருக்கவில்லை. நேற்று நடந்த சம்பவத்தால் அவளும் வரவில்லையா? பெருமூச்சோடு தனதறையை நோக்கி நடந்தான்.

“யார் வராவிட்டாலும் ரதி வந்திருப்பாள். அவளுக்குத்தான் சூடு, சொரணை இல்லையே” பொறுமியவாறே பாரதியின் அறையை கடந்தவனுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவளும் சமூகமளித்திருக்கவில்லை.

தான் மட்டும் எதற்காக வந்தோம் என்று வேலை செய்ய பிடிக்காமல் அமர்ந்திருந்தாலும், இன்றைக்கான வேலைகள் இதுதான் என்று அவன் பி.ஏ கதவை தட்டி சொல்லிவிட்டுத்தான் போனான்.

வேலை மலை போல் குவிந்துக் கிடந்தாலும் எதையும் செய்யும் எண்ணம்தான் வரவில்லை. கோப்புக்களை புரட்டுவதும், கணினியை வெறிப்பதுமாக அமர்ந்திருந்தான்.

“சார் ரகுராம் சார் வந்திருக்குறாரு. உங்கள மீட் பண்ண எபோய்ன்மென்ட் கேக்குறாரு” உள்ளே வந்த விக்ரமின் பி.ஏ தயக்கமாக கூறியவன் புரியாது முழித்தான்.

அனுமதியில்லாமல் விக்ரமை யாரும் சந்திக்க முடியாது என்பது ஒருபக்கம் இருக்க, கூடவே வேலை பார்க்கும் நண்பனை சந்திக்க ரகுராம் எதற்காக அனுமதி கேட்கிறான் இருவருக்குமிடையில் ஏதும் பிரச்சினையோ என்ற குழப்பம் அவன் முகத்தில் இருந்தாலும், எந்த பிரச்சினையும் இல்லாவிட்டால், விக்ரமிடம் திட்டும் விழும் என்று தான் தயங்கியவாறே கூறினான்.

“என்ன அனுமதி கேட்டானா?” அதிர்ந்த விக்ரம் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு “சரி உள்ள வரச் சொல்லு” என்று கதவை பார்த்தவாறு அமர்ந்து கொண்டான்.

உள்ளே வந்த ரகுராம் கையேடு கொண்டு வந்திருந்த கோப்பை விக்ரமின் புறம் வைத்தவாறே “இதுல என் பேர்ல இருக்குற கம்பனி பங்குகளை உங்க பேர்ல மாத்தின டாக்யூமெட்ஸ் இருக்கு. கம்பனிக்காக நான் சைன் பண்ண அட்வாட்ஸ்ட்மன்ட் கூட இருக்கு. நான் அந்த அட்ஸ்ல நடிக்க வேண்டாம் என்றால் போபர்ஸ் ரெடி பண்ணுங்க, சைன் பண்ணுறேன். இல்ல நடிக்கலாம் என்றா, எங்க எப்போன்னு டீடைல் மெயில் பண்ணுங்க வந்து நடிச்சி கொடுத்துட்டு போறேன். ஆ… பேமண்ட் கரெக்ட்டான டைம்முக்கு வரணும்” எனக்கும் உனக்கும் வேறு பேச்சு வார்த்தை இல்லை என்பது போல் மரியாதை பன்மையில் பேசியவன் வந்தான். சொன்னான். கிளம்பலானான்.

“டேய் நில்லுடா…” விக்ரம் ரகுராமை முறைக்க,

“என்ன சார்?” நீயும் நானும் வேறு வேறு என்று மரியாதை கொடுத்து சொன்னவன், என்னையும் மரியாதையாகவே நடத்து என்னும் விதமாக பார்த்தான். 

“எனக்குத்தான் எல்லாம் மறந்து போச்சு. நீ எதையும் மறக்கல இல்ல. நான் தான் தெரியாம, புரியாம பேசினா, நீ கோபப்பட்டு நம்ம ப்ரெண்ட்ஷிப்பையே கட் பண்ணுவியா? யாருக்காக? ரதிகாகவா?” தான் செய்தது தவறுதான். நண்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தவன் பாரதியின் மேலிருந்த மொத்த கோபத்தையும் ரகுராம் விட்டுச் செல்கிறேன் என்றதில் அவன் மீது காட்டினான்.

என்ன நடந்ததென்று பாரதியிடம் கேட்டறியாமல் அவளுக்காக வக்காலத்துவாங்க முடியாதே. அவளை தவிர்த்து, “நாம ரெண்டு பேரும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். காலேஜ்லயும் ஒன்னாதான் படிச்சோம். என்னை பத்தி உனக்குத் தெரியாதா? என்ன நண்பனா பார்த்திருந்தா உன் தங்கச்சிக்கு என்ன கட்டி வைச்சிருப்ப. சந்தேகமாத்தானே பாத்திருக்க. ஒருவேளை எதிரிய கூடவே வச்சுக்கணும் என்று நண்பனா வேஷம் போட்டியோ?”

விக்ரமின் விஷயத்தில் எதை செய்ய முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது ரகுராமின் வழக்கம். இவ்வாறெல்லாம் நடந்தது. விக்ரம் இவ்வாறெல்லாம் பேசினான் என்று மருத்துவரிடம் கூறியிருக்க, “அதிர்ச்சியடைஞ்சி அவன் மயக்கமடையாம இருக்கான்னா. ஹி ஈஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட். என்ன பழசெல்லாம் மறந்ததினால குழம்பித்தான் செய்வான். பேச வேண்டிய விதத்துல பேசி புரிய வைக்கணும்” என்றிருந்தார் மருத்துவர்.  

புரிய வைத்து விடலாமென்றுதான் இவ்வாறு பேசினான் ரகுராம்.

“ஏன்டா நான் உன்ன எதிரியாவா பார்த்தேன்? இந்த பத்து வருஷம் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. அதற்கு முன் நடந்த எல்லாம் ஞாகத்தில் தான் இருக்கிறது. பள்ளிப் பருவ நட்பை தான் சந்தேகப்பட்டது தவறுதான். நான் உன்னை பேசிவிட்டேன் என்பதற்காக நீயும் என்னை பேசுகிறாயே உனக்கும் எனக்கும் இருக்கும் நட்பு அவ்வளவுதானா?” என்று நண்பனை முறைத்தான் விக்ரம்.

விக்ரமின் நிலை தனக்கு தெரியாவிடில் விக்ரம் பேசியவற்றுக்கும், நடந்து கொண்ட முறைக்கும் நீயும் வேண்டாம். உன் நட்பும் வேண்டாமென்று ரகுராம் சினம் கொண்டு போயிருப்பானோ, என்னவோ.

ரகுராமுக்கு விக்ரமின் மனநிலை நன்றாகவே புரிந்தது. அவன் அச்சாணி பாரதி என்றவளை வைத்து சுழல, அவள் இல்லாமல் அவன் வாழ்க்கை வண்டி சீரில்லாமல் கவிந்துகிடப்பதால், யோசிக்காமல் பேசிவிட்டான். அதை பிடித்துக் கொண்டு மல்லுக்கட்ட ரகுராம் தயாராக இல்லை. விட்டுப் பிடிக்கலாம். விட்டுக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் தான் விக்ரமை காணவே வந்தான்.

“இப்போ என்ன சந்தேகம் போச்சா?  உன் தங்கச்சிய கட்டிக் கொடுக்கப் போறியா என்ன?” குறும்பு தலை தூக்கவே கேட்டிருந்தாலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுமோ என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் ரகுராம்.

“அவ தான் உன்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். உன்னையும் அவளை தவிர யாரையும் கல்யாணம் பண்ண விடமாட்டேன்னு சொன்னாளே. என்னால உன்ன காப்பாத்த முடியாது” எதை மறந்தாலும் நண்பனோடு வாயாடுவது மறக்ககுமா என்ன? விக்ரமும் பதில் பேசினான்.

ரகுராமின் அலைபேசி அடித்தது மோகனாத்தான் அழைத்தாள். “இவ ஒருத்தி… வேணாம் வேணாம்னு சொன்னாலும் விடாம துரத்துறா” என்றவாறே அலைபேசியை துண்டித்தான்.

“உன் மனசுல என் தங்கச்சிய பத்தி எந்த எண்ணமும் இல்லனு சொல்லத்தான் என் முன்னாடி போன் ஆன்சர் பண்ணியா?” ரகுராமை எவ்வாறு சமாதானம் செய்வது என்று புரியவில்லை. வம்பிழுத்தான்.

“என் மனசுல என்னவேனா இருக்கட்டும். ஆனா உன் தங்கைச்சி மனசுல நான் இல்ல இருக்கேன். அதுக்கு என்ன பண்ண போற?” விக்ரம் சொன்னதுதான். அவன் மறந்து விட்டான். ஞாபகப்படுத்த வேண்டும் என்று ரகுராம் சொல்லவில்லை. எதோ ஞாபகத்தில் சொல்லியிருந்தான்.

“இங்க பாரு என் தங்கச்சிய வேணாம்னு சொல்ல காரணம் அவளை நீ உன் தங்கச்சியா பக்குறியா? இல்ல ஆளவந்தான் பொண்ணா பாக்குறியா?” சட்டென்று கேட்டவன் “இதுக்கு முன்னாடி நாம இதை பத்தி பேசினோமா?” சந்தேகமாக ரகுராமை ஏறிட்டவனின் மண்டைக்குள் மோகனா சொன்னது வந்து போனது.

“எனக்கு உன் ப்ரெண்டத்தான் பிடிச்சிருக்கு. கட்டினா அவனைத்தான் கட்டுவேன். இல்லையா காலம்பூரா கன்னியாவே இருந்து தொலையிறேன்” தலை வலிப்பது போலிருக்க, தலையை பிடித்தவாறு யோசித்தவன்,

“கண்டிப்பா எதோ நடந்திருக்கு. அதான் நீ நோ சொன்னியா?” தான் சம்மதம் கூறியதை மறந்து. தன்னால்தான் ரகுராம் சம்மதம் கூற மறுகிறானோ என்று சந்தேகம் கொண்டான் விக்ரம்.

 “இதே கேள்வியை நீ ஏற்கனவே கேட்ட. நானும் பதில் சொல்லிட்டேன். நீ மறந்துட்ட. இனிமேல் இதை பத்தி பேசி பிரயோஜனமில்ல” ஆயாசமாக விக்ரமை பார்த்தான். மோகனாவை திருமணம் செய்துவை என்று இப்பொழுது சொன்னால் மட்டும் சரி என்பானா? சந்தேகம் கொள்வானா? மறந்து மறந்ததாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

“என் கம்பனில உனக்கு ஷெயார்ஸ் கொடுத்திருக்கேன்னா. அது நான் உனக்கு கொடுத்தது. அதை திருப்பி தரவும் வேணாம் வேலையை விட்டு செல்லவும் வேணாம்” மரியாதை கொடுத்து பன்மையில் பேசிய நண்பன் ஒருமையில் பேசியதும் அவன் கோபம் தீர்ந்து விட்டதென்று விக்ரம் அவன் வந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி மறுத்தான்.

“திரும்பவும் வேறொரு பிரச்சினையால்….”

“நிச்சயமாக வராது. ரதியால நமக்குள்ள எந்த பிரச்சினையும் வராது” நமக்குள் பிரச்சினை வரக் காரணமே பாரதிதான். அவளை விலக்கி வைத்தாலே போதும் என்று கண்டிப்போடு கூறினான்.

அவனுடைய விதி அவளோடுதான் என்றிருக்கையில் விக்ரம் நினைத்தாலும் பாரதியை அவன் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு இலகுவில் விலக்கி வைக்க முடியுமா?

ரகுராமின் அலைபேசி மீண்டும் அடித்தது அழைத்தது பாரதிதான். 

அலைபேசியை இயக்கிய ரகுராம் ஸ்பீக்கர் மூடில் போட்டிருந்தான்.

“தான் வேண்டாம் என்ற பின்னும் அவளோடு பேசுகிறானே என்று நண்பனை முறைத்த விக்ரம் பாரதி என்ன பொய்யை சொல்லப் போகிறாளோ என்று பார்த்திருந்தான்.

“சாரி ராம். எதையும் பேசுற மனநிலையில் நான் இல்ல. அதான் உன் போன் அடண்ட் பண்ணல. எனக்கொரு உதவி பண்ணுறியா?”

“என்ன பண்ணனும் சொல்லு?”

“என் ரெசிக்னேஷன் லெட்டரை மெயில் பண்ணுறேன். ப்ரொசீஜஸ் பாத்துக்க”

இதைத்தான் அவள் உதவியாகக் கேட்பாளேன்று ரகுராம் அறிந்துதானிருந்தான். ஏன்? எதற்காக? என்று காரணம் கேட்டு அவளை சங்கடப்படுத்தாமல் “என்ன திரும்ப ஆஸ்ரேலியாவுக்கே போலாமென்று முடிவு பண்ணிட்டியா என்ன?” என்று கேட்டான்.

“ஆமா… மாமா வேற லீவ்ல வந்திருக்காரு. எஸ்டேன்ட் பண்ணவும் முடியாது. அக்காக்கு வேற உடம்பு முடியாதே. இங்க கிளைமேட் அவளுக்கு ஒத்துக்காது. வராதே என்று சொல்லியும் வந்துட்டா. கவிக்கு வேற நஸரி இருக்கு” ரகுராம் போகாதே என்று சொல்லி விடாமல் காரணங்களை அடுக்கினாள்.  

“அவ அக்கா வந்ததாலத்தானே எனக்கு எல்லா உண்மையும் தெரிய வந்தது” என்று பொறுமிய விக்ரமுக்கு புரியவில்லை. கார்த்திகேயனும், பாரதியும் சேர்ந்து திட்டம் போட்டிருந்தால் பார்கவியை அழைத்து வந்திருக்கவே மாட்டார்கள் என்று. 

“உனக்கு வெல்கம் பார்ட்டி கூட கொடுக்கல. அதுக்குள்ளே குட் பாய் சொல்லுறியே. சரி குட் பாய் பார்ட்டி கொடுக்குறேன், நீ எப்போ ப்ரீ?” அவளிடம் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயம் இருக்கவே இவ்வாறு அழைத்தான் ரகுராம்.

“பார்ட்டி…. இன்னைக்கு கவி பர்த்டே. வீட்டுக்கு வாயேன்” தோழனை சாதாரணமாக அழைத்தாள்.

அவளை தனியாக சந்திக்கலாமென்று ரகுராம் நினைக்க, “வீட்டுக்கா…” என்று யோசித்தவன் கார்திகேயனையும் சந்திக்கலாமென்று சரியென்றிருந்தான்.

“என்ன அவ பொண்ணோட பர்த்டே பார்ட்டியா? உன்ன மட்டும் கூப்பிட்டுருக்கா?” என்னதான் பாரதியை தன் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டும் என்று விக்ரம் எண்ணினாலும், தன் உயிர் நண்பனேயானாலும் அவள் மீது உரிமை கொண்டாடுவது பிடிக்காமல் எழும் பொறாமை அவனை அறியாமல் தலை தூக்கி அவனை பேச வைத்திருந்தது. 

“இப்போ உனக்கு என்னதான்டா பிரச்சினை? அவளை சந்தேகப்பட்டு வேணாம்னு ஒதுக்கித்தானே வச்சிருக்க? அவ கூப்பிட்டா நீ போய்டுவியா? கூப்பிடாததுதான் பிரச்சினையா? நான் வேணா போன் பண்ணி உன்னையும் கூப்பிட சொல்லட்டா?” எதை மறந்தாலும் பாரதியை மறக்காதவன், அவளை லவ் பண்ணுறதை மட்டும் விடவே மாட்டேங்குறான் என்று விக்ரமை கேலியோடு முறைத்தான் ரகுராம்.

“அவ கூப்பிட்டா நான் எதுக்காக போகணும்? அவளுக்கும் எனக்கும்தான் எதுவுமில்லையே” என்று ரகுராமை பார்த்த விக்ரம் அதை பற்றி பேசாமல் “அதான் அவ வேலையை விட்டு போறான்னு சொல்லுறாளே. அத பாரு” என்றான்.

“நான் ஈவ்னிங் பார்ட்டிக்கு போகணும். குழந்தைக்கு என்ன கிப்ட் வாங்குறது என்று புரியல. கூடவே பாரதிக்கும் கிப்ட் வாங்கணும். அவ ஆஸ்ரேலியா போனா திரும்ப எப்போ வருவாளோ, இல்ல வராமலே இருப்பாளோ”  இந்த முறை பாரதி உன் வாழ்க்கையை விட்டுச் சென்றால் மீண்டும் வரவே வரமாட்டாள் என்பதை விக்ரமுக்கு புரியவைக்க முயன்றவாறே எனக்கு இந்த வேலைதான் முக்கியம் என்பது போல பேசியவன் அலைபேசியில் என்ன பரிசு வாங்கலாமென்று பார்கலானான்.

போனால் அவள் மீண்டும் வரமாட்டாள் என்றதும் விக்ரமின் இதயம் வலித்தது.

பாரதி பழிதீர்க்க நினைத்தால், அமைதியாக இருக்க மாட்டாள். எதையாவது செய்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் வேலையை விட்டு மீண்டும் ஆஸ்ரேலியா செல்கிறாள் என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிதான்.   

மருத்துவமனையில் கண் விழித்த பின் பாரதி தன்னை எவ்வாறு அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்துக் கொண்டாள் என்று கண்கூடாக பார்த்தவன் தானே அதை எண்ணுகையில் ஒருவேளை தனக்கு பத்து வருட காலம் மறந்து கண்விழித்ததால் அவள் என்னிடம் பொய் சொல்லியிருப்பாளோ என்று தன் மனதை சமாதானம் செய்யக் கூட முயன்றான் விக்ரம். அவள் பொய்யுரைத்ததை விட, அவள் தனக்கு இல்லை என்றதுதான் அவனுக்கு அதிகமாக வலித்திருக்க, அவள் மீது என்னவெல்லாம் குற்றம் சொல்ல முடியுமோ அனைத்தையும் கூறினான்.  

தனக்கென்று இல்லாத ஒருத்தியை பற்றி எதற்காக மீண்டும் யோசிக்க வேண்டும்? அவள் தன் கண்முன்னால்  நடமாடாமல் செல்வது சரிதானென்று ரகுராம் கேட்டதற்கு பதில் கூறாது. அவனாக ஒன்றை கூறியிருந்தான்.

ரகுராமின் அலைபேசி மீண்டும் அடித்தது. புதிய எண்ணாக இருக்க, எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையிலையே இயக்கினான். கார்த்திகேயன் பேசுகிறேன் என்றதும் மீண்டும் ஸ்பீக்கர் மூடில் போட்டவன் நலம் விசாரித்தான்.

பதிலுக்கு நலம் விசாரித்த கார்த்திகேயன் மாலை கவியுடைய பிறந்தநாள் பார்ட்டி இருப்பதாக அழைத்தவன். விக்ரமை தொடர்புகொள்ள முடியவில்லையென்று அவனுக்கும் தகவல் கூறி அழைத்துவருமாறு கூறினான்.

“ஓஹ்… நாடகம் இன்னும் முடியலையோ? அதானே பார்த்தேன்” விக்ரமுக்கு கோபம் தலைக்கேறியது.   

“மிஸ்டர் ராம் பாரதி கல்யாணத்த பத்தி பேசினா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறா. விக்ரம் ஓகே தானே. அவ கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் ஆஸ்ரேலியா போகலாம்னு இருந்தேன். பட் எனக்கு லீவ் இல்ல” பாரதி சொன்னதுதான். ரகுராம் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன சொல்கிறான் இவன்? பாரதிக்கு கல்யாணமா?” விக்ரம் புரியாமல் ரகுராமை ஏறிட்டான்.

குழந்தை கவிபாரதிய பத்தி கார்திகேயனிடம் கேட்டால், என்ன என்று ரகுராமுக்குத் தோன்றினாலும் அலைபேசியில் கேட்பது உசிதமல்லவே என்று பார்ட்டிக்கு வருகிறோம் என்று அலைபேசியை துண்டித்திருந்தான்.

“அவ வேலயை விடுறதா கத சொல்வாளாம். இவன் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு புருடா விடுவானாம். புருஷனும், பொண்டாட்டியும் அடுத்த டிராமாவ போட திட்டம் போட்டுட்டாங்களா?” ரகுராமை பார்த்தான் விக்ரம்.

“நாடகம் போட்டாங்களா? நடிக்கிறாங்களான்னு போய் பார்த்தாதான் தெரியும்” குழந்தை கவியை பற்றி அறியாமல் திட்டவட்டமாக எதையும் பேச முடியாதே என்று மறைமுகமாக வா போலாமென்று நண்பனை அழைத்தான் ரகுராம்.

பாரதி போடும் நாடகத்தை பார்க்க வேண்டுமா? பங்கேற்க வேண்டுமா? என்று வெறுப்பாக நினைத்தவன் பாரதி ஆஸ்ரேலியா சென்றால் மீண்டும் வர மாட்டாள் என்பது ஞாபகத்தில் வரவே கடைசியாக அவளை ஒரு தடவை, ஒரே ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாமென்று ரகுராமுக்கு முன்பாக கிளம்பியிருந்தான்.