மனதில் கீர்த்தனாவின் நினைவுகளில் விக்ரமும் சிக்கி தவித்தான். அலைபேசி புகைப்படத்தையே பார்க்கும் விக்ரமை கண்ட விகாஸ் கோபமாக நகர்ந்து அமர்ந்தான்.
“கோபமா இருக்கிறியா?”
ஆமா, “நீங்க எல்லாரும் என்னோட பப்ளிம்மாவை மறந்துட்டீங்க?” என கண்ணீருடன் அவன் சொல்ல, “மறந்தோமா?” என விரக்தியுடன்..அவ இல்லைன்னாலும் எல்லார் மனசுலையும் அவ இருக்கா. ஒரு மாசமாகிடுச்சு. “எல்லாரும் எதிர்காலத்தை விட்டு அழுதுகிட்டே இருக்கணும்ன்னு நினைக்கிறியா?”
விகாஸ் விக்ரமை பார்த்தான்.
“அதை நீங்க சொல்றீங்களா? என்னோட தங்கச்சி நிலையை நீங்க பார்க்கலையே!”
நீ பார்த்தாயா? இப்ப கூட மானசாவை எல்லாரும் நல்ல படியாக நடத்துவதால் கோபப்படுற. அவளை பார்த்து உனக்கு பயம் வீ.
பயமா அவளுக்கா? நக்கலாக கேட்டான்.
கீர்த்து இடத்துக்கு அவ வந்திருவான்னு பயம். ஆனால் கீர்த்து வேற அவ வேற. அவள பார்க்கும் போது கீர்த்து போல நடந்துகிட்டாலும்..பல நேரம்…என பெருமூச்செடுத்து விட்டு வேற மாதிரி தான்.
வாழ்க்கை நமக்கு பாதை போல். அடுத்தடுத்த பாதைக்கு கடந்து சென்றே ஆகணும்.. இல்லை அந்த வாழ்க்கை நம்மை மொத்தமாக முடித்து விடும்.
நம்மில் பலர் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாழ்க்கையையே வெறுக்கிறோம். நம் முன் இருக்கும் அனைத்தும் உண்மையாகாது. அதில் பொய்களும் அடங்கும். பொய்கள் வாழ்க்கையை அழிக்கும். பொய் சொல்லாமல் யாரும் இருக்க முடியாது தான். வாழ்க்கையையே பொய்யாய் வாழ்வது நம்மை அழிக்கும். கண் முன் இருக்கும் உண்மையை யாரும் நம்புவதில்லை. இது தான் பிரச்சனை..
“என்ன பொய்? உண்மை? எனக்கு எதுவும் புரியலை” விகாஸ் கேட்க, மானசாவிடமிருந்து அழைப்பு வந்தது விக்ரமிற்கு.
“இங்கிருந்து கொண்டு எதுக்கு அழைக்கிறாள்?” என விக்ரம் சுற்றும் பார்க்க, அறையின் வெளியே மானசாவை ரம்யாவும் சுவாதியும் பிடித்துக் கொண்டு அவளை நகர விடாமல் வைத்திருந்தனர். அனைவரும் அவர்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
விகாஸூம் அவளது அழைப்பை பார்த்து விக்ரம் பார்க்கும் திசை பார்த்தான். உதட்டசைவிலே விக்ரமிடம் உதவி கேட்டாள்.
ஆமா, போகக்கூடாது. நீயும் வீட்டுக்கு வரணும்மா என திலீப் அம்மாவும் அவளை நகர விடாமல் நின்றிருந்தார்.
“நாம அப்புறம் பேசலாம்” என விகாஸிடமிருந்து விக்ரம் எழுந்து ஓடினான்.
ஹேய், அவள என்ன பண்றீங்க? விடுங்க..நாங்க கிளம்பணும்.
“அண்ணா, அதுக்குள்ளவா? நீயுமா போகப் போற?” ரம்யா கோபமாக கேட்டாள். சிம்மாவும் அவன் தந்தையும் அங்கே வந்தனர். ரசிகா அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆமா, அவ தனியா போக வேண்டாம். அதான் விக்ரம் சுவாதியை பார்த்தான். அவள் அவனை தான் பார்த்தாள். எல்லாரும் அவர்களை பார்க்க, அவளுக்கு டயர்டா இருக்காம் விக்ரம் சமாளிக்க எண்ணினான்.
சரிம்மா..சரிம்மா..என அவர் வாயில் கை வைக்க, அப்பா, என்னமோ என்னை சொன்னீங்க? திலீப் கேட்க, அனைவரும் புன்னகைத்தனர்.
நான் வாரேன் அக்கா. கொஞ்ச நேரம் தாத்தா வீட்ல இருந்துட்டு வாரேன்.
“அப்ப நானும் வருவேன்” சுவாதி சொல்ல, விக்ரம் அவளை முறைத்தான்.
அண்ணீ, நீங்களுமா? ரம்யா கோபமாக பார்த்தாள்.
மானசா புன்னகையுடன், “சூப்பர் ஐடியா” என விகாஸ் அம்மாவிடம் இருவரையும் காட்டி கண்ணாலே பேசினாள்.
“ஆமா சுவா, நீ கூட பாட்டி வீட்ல எதையோ வச்சுட்டு வந்தன்னு சொன்னேல்ல? அதை எடுத்துட்டு வந்திறலாம்” என அவர் கூற, எல்லாரும் சேர்ந்தே மூவரையும் அனுப்பினார்கள்.
அப்சரா ரம்யாவை பார்த்தாள். வந்துருவாங்க என அவளிடம் மெதுவாக கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள். விக்ரமுடன் சென்றாலும் சுவாதியும் பெரியதாக அவனிடம் பேசவில்லை. மானசாவுடனே இருந்தாள்.
“அண்ணீக்கு தெரிஞ்சு போச்சோ?” என மானசா யோசனையுடன் பார்க்க, “இல்லை” என்பது போல் சுவாதி நன்றாக தூங்கினாள். மானசாவை பார்த்துக் கொள்ள வந்த விக்ரம் சுவாதியையே பார்த்துக் கொண்டிருந்தான். மானசா அதை பார்த்து அவனை ஏதும் கேலி பேசவில்லை. எங்கே பேசினால் முயற்சியையும் விட்றுவானோ? என இருந்தது. அன்றிரவும் அவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். பாட்டி தாத்தாவும் வந்து விட்டனர். விக்ரமும் அங்கேயே இருந்தான்.
ரோஹித்தும் மனீஷாவும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழத் தொடங்கினார்கள். சோட்டுவை இங்கிருக்கும் ஒரு பள்ளியிலே சேர்த்தனர். இரவு மட்டும் ராணியம்மாவுடன் தங்கினான் சோட்டு. மற்ற நேரம் முழுவதும் மனீஷா தான் அவனுக்கு எல்லாமே!
படிக்கும் போது ரதுவுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன் என நம்ம அஜ்ரதியாவையும் படுத்தி எடுத்துருவான் சோட்டு.
அந்த வாரம் அப்படியே அவர்களுக்கு சென்றிருக்கும். இருவரும் மனதளவில் அருகே வந்திருப்பர். அதனால் உடலுறவில் ஈடுபடவில்லை.
திலீப் திருமணம் முடிந்த அன்று இரவு ரோஹித் அறையில் இருக்க, சினமுடன் உள்ளே வந்தாள் மனீஷா.
“எதுக்கு சிரிக்கிறீங்க? நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே எவளோ உங்களுக்கு மெசேஜ் பண்ணீட்டு இருந்திருக்கா. நீங்களும் பதில் அனுப்பி இருக்கீங்க” அவனை அடித்தாள்.
“அய்யோ, இரு..இரு..அடிக்காத” அவளை தடுத்தான். அவள் விடாமல் அவனை அடிக்க, அவன் தடுக்க இருவரும் தரையில் விழுந்தனர்.
சிரிக்காதீங்க. வாங்க இன்று பிராக்டிஸ் ஆரம்பிக்கலாம்..
“பிராக்டிஸா?”
ஆமா..வாங்க..நேரமாகுது. முடிச்சிட்டு தூங்கணும். காலையில சீக்கிரம் எழணும். சோட்டு பள்ளிக்கு நாளை முன்னதாகவே போகணும்.
“மேடம், அவன மட்டும் தான் கவனிக்கிறீங்க?”
சோட்டு, நம்ம பையன். நான் கவனிக்காமல் வேற யாரு பார்க்கணும்..
தேங்க்ஸ்.
எதுக்கு? நானே அவனோட மிஸ் என்ன சொல்லப் போறாங்களோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
ஏன்?
அவன் நம்மகிட்ட நல்லா தான் பேசுறான். கிளாஸ்ல்ல மிஸ் கேட்டா கூட பதில் சொல்ல மாட்டேங்கிறானாம். அவனோட படிக்கிற பசங்களுடன் பேசுறதில்லையாம். ஏற்கனவே சொன்னாங்க? அவனிடம் கேட்டு அவனை கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு அமைதியா இருந்துட்டேன்.
நாளைக்கு காலையில மீட் பண்ணனும்..
ஓ..நானும் வாரேன் என ரோஹித் சொல்ல, நோ..நோ..என அவசரமாக தடுத்து விட்டு சிந்தனையுடன் அவனை பார்த்து நகர்ந்தாள்.
நானும் வாரேன்..
“நான் ஒன்று கேட்கலாமா?” என அவள் தயக்கமாக ரோஹித்தை பார்த்தாள்.
“என்னிடம் என்ன தயக்கம்? நாம தான் இப்ப ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல்ல?”
அது வந்து, “நாம சோட்டுவை தத்தெடுத்துக்கலாமா?”
“வாட்?” ரோஹித் எழுந்தான்.
இல்ல, அவன் யாருமில்லாத நேரத்தில் அழுறான். ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்தடுத்து அவனோட பெற்றோரை இழந்திருக்கான். நாம கார்டியனாக இருக்கும் வரை அவன் மனசு விட்டு பேச மாட்டான். பாட்டியும் அவனை நம்மோட நம்ம அறையில தங்க ஒத்துப்பாங்க.
ம்ம்..நான் பாட்டியிடமும் நம்ம குடும்பத்திடமும் பேசுகிறேன். ஆனால் நீ அவன் வந்தால் என்னிடம் பேச மாட்டாயே! என கண்கலங்க கேட்டான்.
அவன் கன்னத்தை கிள்ளிய மனீஷா, அப்படியெல்லாம் பேசாமல் இருக்க மாட்டேன். பிராமிஸ்..
அவன் முகம் சரியாகாமல் இருக்க, அவன் தோளில் சாய்ந்து “எத்தனை பேர் இனி என் வாழ்க்கையில் வந்தாலும் உங்களுக்கு தான் முதலுரிமை” என்றான்.
அவன் குனிந்து அவளை பார்க்க, நகர்ந்த அவள்..நான் நேரம் கேட்டேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைச்சேன்.
எதுக்கு? உன்னோட அலாவை மறக்க முடியல..என்னிடம் வர காலமாகும்ன்னு தான?
ம்ம். நானும் அப்படி தான் நினைத்தேன் என அவனை நெருங்கி அவன் கன்னத்தை பிடித்து, அலா என்னோட மனசுல இருப்பார் தான். அதுக்காக உங்களை காதலிக்க மாட்டேன்னு இல்லை. அன்று நான் கேட்ட நேரம். எனக்கில்லை உங்களுக்கு..
எனக்கா?
ம்ம். முதல்ல சின்னப்பையன் மாதிரி நீங்க நடந்துக்க கூடாது. நீங்க செய்றது அழகா க்யூட்டா இருந்தாலும் எல்லாரும் உங்களை பார்க்கும் பார்வை எனக்கு பிடிக்கலை.
அடுத்தது..உங்க அண்ணனுக பேசுமாறு நீங்க நடந்துக்க கூடாது. நீங்களும் நம்ம குடும்ப பிசினஸை நடத்தணும். அதுக்கு இன்னும் உங்களுக்கு உழைப்பு வேண்டும்.
அஜய் மாமா, உங்களை போல தான் முதல்ல இருந்தார். அவர் சிம்மா சார் மனைவி பின்னாடியும், கிளப்., பொண்ணுங்க, பார்ட்டின்னு சுத்தி நேரத்தை வீணாக்கிட்டார். தியா மீது அவருக்கு காதல் வந்த பின் தான் இந்த அளவு உயர்ந்திருக்கார். இப்ப எவ்வளவு பொறுப்பா எல்லாரையும் நல்லா பார்த்துக்கார்.
அதே போல் நீங்க நம்ம குடும்பத்துல்ல இருக்கணும். உங்க அண்ணன்களுக்கு இல்லாத நிறைய நல்ல குணம் உங்களிடம் இருக்கு. நீங்க நினைச்சா..மாமா கம்பெனி மட்டுமல்ல மத்த எல்லாவற்றையும் வீட்டையும் பொறுப்பா பார்த்துக்க முடியும்.
அன்று ரிப்போர்ட்டரிடம் உங்களை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு தான் பேசினேன். ஆனால் அது உண்மை தான். அவங்களே உங்களை பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும். அவங்க உங்களை பார்க்க தவமிருக்கணும். பெரிய பெரிய கம்பெனிகள் உயர்வதும் தாழ்வதும் ரிப்போர்ட்டர்ஸ் கையில தான் இருக்கு. உங்களால முடியும்.
நம்ம வீட்டுக்கு போன பின் எல்லாரையும் நான் பார்த்துக்கிறேன். நீங்க கம்பெனியையும், எங்களையும் மட்டும் பார்த்துக்கோங்க..
கண்கலங்க ரோஹித் அவளை பார்த்து, “அம்மாவை விட நீ என்னை அதிகம் நம்புற.. ரொம்ப தேங்க்ஸ்” என அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் கண்களை பார்த்து, உனக்காக நீ கேட்ட எல்லாமே செய்வேன். ஆனால் என்னை விட்டு நீ விலகாமல் மட்டும் இரு.
ம்ம்..கண்டிப்பாக. நான் இதே போல உங்க பக்கத்துல்ல தான் இருப்பேன் என அவன் கையை கோர்த்தாள்.
சோட்டு, நம்ம பையன் தான். நான் அதுக்கான ஏற்பாட்டை பார்க்கிறேன்.
எல்லாரிடமும் கேட்டுக்கோங்க..
நாம கேட்க வேண்டியது சோட்டு தான்..
மனீஷா அவனை அணைத்து, இனி நீங்க யாருன்னு எல்லாருக்கும் காட்டுங்க. உங்க அண்ணன்கள் இனி உங்களிடம் தவறாக பேசவே தயங்கணும்.
ம்ம்..என்று கண்ணீருடன் அவளை இறுக்கினான்.
பாஸ்..நான் மூச்சு விடணும்..
ஐ அம் சாரி என அவன் விலக, அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் இதழ்களில் முத்தமிட்டு ரோஹித்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள்.
ரோஹித் கண்கள் விரிய, “பயமுறுத்தாதீங்க” என செல்லமாக அவன் கன்னத்தை தட்டினாள்.
“நீ இப்ப என்ன பண்ண?”
“ஏன்? தெரியலையா?” என மனீஷா எழுந்து குளியலறைக்கு ஓடினாள். அவன் அவளை மறித்து, “ஓ.கே வா?” எனக் கேட்டான்.
ம்ம்..என தரையை பார்த்து வெட்கமுடன் தலையசைத்தாள்.
நேரத்தை வீணாக்காமல் மனீஷாவுடம் படுக்கையில் சரிந்தான் ரோஹித். இனி நீ இடையில வராத என அவளுக்கு தியா வாங்கித் தந்த டெட்டியை தூக்கி எறிந்தான் இன்பமுடன்.
காலை விடியல் அழகாக பிறந்தது. மனீஷா கண்களை திறந்தாள். அவளால் நகர முடியவில்லை. அவளது முந்தானை களைந்திருக்க, அவள் மார்பில் முகம் புதைத்து குழந்தை போல் கள்ளம் கபடமில்லாதவனாக அவன் கைகள் அவள் இடையை இறுக்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தான் ரோஹித்.
வெட்கமுடன் அவனை பார்த்து, இந்த முகம் மட்டும் குழந்தை போலவே இருக்கு. செய்றதெல்லாம் கேடித்தனம் என செல்லமாக அவனை கொஞ்சிக் கொண்டு அவன் மீசையை தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் உறக்கம் மெதுவாக களைய, அவனை பார்த்து கையை மெதுவாக நகர்த்தி முகத்தை மூடினாள்.
உறக்கம் களைந்த ரோஹித், வெட்கமுடன் தரிசனம் கொடுக்கும் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே அவளை முழுதாக ஆராய்ந்தான்.
“என்ன செய்கிறான்?” என கண்ணை திறந்து பார்த்த மனீஷா, “என்ன பண்றீங்க?” எனக் கேட்டாள்.
உனக்கு தடம் இருக்கான்னு பார்க்கிறேன்.
“என்ன?”
“ஜல்ஸாவில் கடி வாங்கினேல்ல?”
அய்யோ..என அவன் வாயை மூடினாள். அவள் கையை நகர்த்தி, இன்று கூட விடுப்பு எடுக்கணும்ன்னா எடுத்துக்கலாம் என ரோஹித் சொல்ல, நான் சோட்டு பள்ளிக்கு கிளம்பணும். முதல்ல வேலைய பாருங்க. பின் இதை பார்க்கலாம் என எழுந்து குளியலறைக்கு ஓடினான். ரோஹித்தின் சிரிப்பு அவளின் குளியலறைக்குள்ளும் சென்றது.
வெட்கமுடன் இருந்த அவளுக்கு திடீரென ஓர் பயம்..அனைவரும் அவளிடம் கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்து, நான் கடந்து வந்து விட்டேன். என்னோட புருசன் தான் எனக்கு எல்லாமே என குளித்து வெளியே வந்தாள்.
கையில் காஃபியுடன் உள்ளே வந்தான் ரோஹித்.
“நீங்க எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க?” அவனிடம் வேகமாக வந்தாள்.
“இனி ஒன் கப் தான் நமக்கு” என அவளது இடையை இழுத்து அவனுக்கு அருகே அவளை நிமிர்த்தி, “இட்ஸ் யூ மேம் வித் பிளசர் மை ஹப்பி” என மனீஷா புன்னகைத்து வாங்கிக் கொண்டாள்.
“எங்க போய் குளிச்சீங்க? எங்க போறது?” நான் குளிக்கலை. ஆடையை மட்டும் மாத்திட்டு போனேன்.
“வாட்?” என அவனை வேகமாக தள்ளி, குளிச்சிட்டு வாங்க..
நோ..நோ..நோ..டியர், உன்னோட சுவையான அமிர்த காஃபியை அருந்திய பின் தான் குளிக்கப் போகணும்.
ஆமா, நானும் தான். குளிக்காம கட்டிப்பிடிக்காதீங்க. சாமி கும்பிடணும்ல்ல? உன்னோட அல்லா தொழுகை.
“அதான் கெடுத்துட்டீங்களே!” என அவள் கோபமாக நகர, அவள் அழகை ரசித்து பார்த்தான்.
“சத்தத்தையே காணோம்” என திரும்பியவள் அவன் பார்வையில் திகைத்து, நீங்க பாட்டி அறையில போய் குளிங்க. நான் குளிச்சிட்டு வந்து..என அவள் பேச, அவன் அவளை தள்ளிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
இருவரும் முடித்து வர நேரமானது..
வேகமாக தயாராகி கீழே மனீஷா வர, எல்லாரும் அவளை தான் பார்த்தனர். அவள் சோட்டுவை பார்த்தாள். அவன் அவனாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“சோட்டு” என வேகமாக மனீஷா நகர, புடவை தட்டி விழ இருந்தவளை, “ஏய் பார்த்து” என மேலிருந்து ரோஹித் குதித்து பிடித்தான். அனைவரும் இருவரையும் பார்க்க, மனீஷா அவனை ஆவென பார்த்தாள்.
“டியர், எல்லாரும் பாக்குறாங்க” ரோஹித் சொல்ல, அவனை விட்டு நகர்ந்து “சோட்டு, சாரி சாரி லேட் ஆகிடுச்சுல்ல” என அவனிடம் ஓடினாள்.
ஆன்ட்டி, டைம் இருக்கு. பார்த்து வாங்க..என ரோஹித்தை பார்த்து, “மாமு உனக்கு என்ன ஹீரோன்னு நினைப்பா? கால் உடைஞ்சா உன்னை நீ தான் பார்த்துக்கணும். ஆன்ட்டி என்னுடன் தான் இனி தங்கப் போறாங்க” என்றான்.
அவன் பங்கம் செய்ததை தவிர்த்து, “இதை நான் ஒத்துக்க மாட்டேன். மன்னூ..என்னோட தான் இருப்பா” ரோஹித் அவள் கையை பிடித்து இழுக்க, நாற்காலியில் இருந்து குதித்த சோட்டு, “இல்ல ஆன்ட்டி என்னோட தான் இருப்பாங்க” என அவனும் இழுத்தான்.
டேய்..என்னோட பேத்தி பாவம்டா. இருவரும் அலப்பற பண்றீங்க? ராணியம்மா சத்தமிட, ரோஹித் பக்கம் திரும்பிய மனீஷா, “நேற்று தான சொன்னேன்” என அவனை முறைத்தான். பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு உணவுண்ண அமர்ந்தான் ரோஹித்.
மாமு, நீயும் பாட்டி அறைக்கு வந்துரு..
“நோ..சோட்டு, இன்றிலிருந்து நீ எங்க அறையில தான் இருக்கணும்” என ரோஹித் மனீஷாவை பார்த்தான்.
பேசுங்க என்றாள்.
ம்ம்..உங்க எல்லாரிடமும் ஒன்று சொல்லணும். சோட்டு இனி எங்க பொறுப்பு மட்டுமல்ல. அவன் தான் இனி எங்களோட மகன். நாங்க அவனை தத்து எடுக்க முடிவு செய்திருக்கோம். யாருக்கு விருப்பமில்லைன்னாலும் எங்களுக்கு கவலையில்லை. ஆனால் சோட்டு..நீ சொல்லு.
என்னையும், மனூ ஆன்ட்டியை அம்மா அப்பாவாக நீ ஏத்துப்பாயா?
அவன் இருவரையும் பார்த்தான்.
“அம்மாவா?” என சோட்டு மனீஷாவை பார்க்க, அவள் அவனை கட்டாயப்படுத்தக் கூடாது என அமைதியாக இருந்தாள்.
சோட்டு, இதை பற்றி பேசியது மனூ தான். அவள் உன்னை எங்க பையனாக வளர்க்கணும்ன்னு ஆசைப்படுறா? உனக்கு விருப்பம் தான?
மாமு, உனக்கு விருப்பமில்லையா?
எனக்கு இல்லாமல் இருக்குமா? நீ என்னோட லவ்லி பாய்டா..
ம்ம்…ஆன்ட்டி சித்தின்னு சொல்லணுமா?
நோ..நோ…என்னை அம்மான்னே அழைக்கலாம்.
“வேண்டாம்” என ராணியம்மா கூற, பாட்டி எனக்கு தெரியும். ஒரு வேலை எங்களுக்கு குழந்தை பிறந்தால் அது சோட்டுவின் தம்பி, தங்கையாக தான் வளர்வாங்க. எங்களுக்கு எப்போதும் சோட்டு தான் மூத்தவன் என்றாள் மனீஷா.
பிரச்சனைம்மா?
அதெல்லாம் வராது. சோட்டு நீ என்னை நம்புறேல்ல? மனீஷா கேட்க, ம்ம்..என்றான்.
சீக்கிரம் சாப்பிடுங்க பள்ளிக்கு போகணும் என்று அஜய் சொல்ல, அண்ணா..நான் இன்று சோட்டு பள்ளிக்கு சென்று வாரேன்.
“என்ன அதிசயம்? அண்ணா உனக்கு ஒன்றுமில்லைல்ல? காய்ச்சல் ஏதும் இருக்கா? ரொம்ப நல்லவனா பேசுறியே!” முக்தா கேலி செய்ய, “இனி இப்படி தான்” என ரோஹித் மனீஷாவை பார்த்து புன்னகைத்தான். ராணியம்மாவிக்கோ மகிழ்ச்சி குதியாட்டம் தான்.
வாவ்..வாவ்..சூப்பர். இங்க இன்னோரு லவ் பேர்ட்ஸ் வலம் வரப் போறாங்க போல? தியா கேட்க, மனீஷா புன்னகைத்தாள். ஆமா…குட்டி பேர்டும் இருக்கு என யுக்தா சோட்டுவை அணைத்தாள்.
இனி சோட்டு பற்றிய கவலை எனக்கில்லை என ராணியம்மா நிம்மதியாகவும் மனீஷாவை பெருமையுடனும் பார்த்தார்.
சுவாதி எழுந்து மானசாவை பார்க்க, அவள் எழாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். மணி எட்டை தொட்டிருக்க, “இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே!” என சுவாதி மானசாவிடம் வந்து அவளை எழுப்பினாள்.
மெதுவாக கண்ணை விழித்தாள் மானசா.
மானூ..மணியை பாரு..எட்டாகிடுச்சு. இன்னும் தூங்கிட்டு இருக்க?
“டயர்டா இருந்தது அண்ணி” என எழுந்து அமர்ந்தாள். இருவரும் தயாரானார்கள். சுவாதி முதலில் வெளியே வந்தாள். திலீப் ரம்யா தம்பதியினராக பாட்டி, தாத்தா காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர்.
சுவாதியை பார்த்து ரம்யா அவளிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“மானூ எங்க?”
“அவ இன்று லேட்டா தான் எழுந்தாள். இப்ப வந்திருவா” என சுவாதி சொல்லிக் கொண்டிருக்கும் போது மானசா வெளியே வந்தாள்.
“சாப்பிட வாங்க” என பாட்டி அழைக்க, அனைவரும் அமர்ந்தனர். கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக் கொண்டே வந்த விகாஸ் மானசாவை பார்த்து அதிர்ந்து நின்றான்.
“என்ன நினைத்தானோ?” எல்லாரையும் பார்த்து விட்டு அமைதியாக அமர்ந்தான்.
“விக்ரம், எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்?” அன்னம் கேட்க, “யாருக்கு?” என சப்பாத்தியை வாயில் வைத்துக் கொண்டே கேட்டான்.
“என்னடா கேள்வி இது?” அன்னம் கோபப்பட்டார்.
“ம்மா, நான் யோசிக்கிறேன்னு சொன்னதே அதிகம். இப்ப ஆரம்பிச்சுடீங்கல்ல? கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது” என விக்ரம் சொல்ல, மானசா அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய கைக்குட்டையை வேண்டுமென்றே தட்டி விட்ட மானசா டைனிங் டேபிளுக்கு அடியே குனிந்து எடுக்கும் சாக்கில் அவளது நெஞ்சை அழுத்தி பிடித்து முகத்தை சுருக்கி..உஃப் என காற்றை கீழே தள்ளி விட்டு எடுத்து நிமிர்ந்தாள். ரம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுவாதியோ சாப்பிட்டிலே கையை கழுவி விட்டு வேகமாக அறைக்கு சென்றாள்.
அண்ணி என மானசாவும், சுவா என சுருதியும், ரம்யா, ஹரிணி அவள் பின் ஓடினர்.
மானசா முன்னே சென்று அவளை அணைக்க, சுவாதியோ அழுதாள். எல்லாரும் அவளை சமாதானப்படுத்த அருகே வந்தனர்.
கீர்த்து கேட்டதற்கு நான் பதில் தான் சொன்னேன் மானூ. அவ தான் கேட்டா..பாரின்ல்லன்னா எங்க படிக்கலாம்ன்னு?
அதுக்கு கூட நான் பதில் சொல்லலை. ஆனால் அவளிடம் நான் சொன்னேன்னு சொல்லி இருக்கா. ஏன்னு தெரியல. அப்புறம்..நான் இங்க சென்னையில இருக்கும் ஹச் ஆர் கல்லூரியில தான் சேர சொன்னேன். அவளா போகணும்ன்னு நினைச்சா நான் என்ன செய்றது?
அவளுக்கு நடந்த எல்லாமே எனக்கு நடந்திருந்தால் விக்ரமிற்கும் வீக்கு நிம்மதியா இருந்திருக்கும்ல்ல. அவங்களுக்கு அவ தான் ரொம்ப முக்கியமா போயிட்டால்ல? என சொல்ல, விக்ரமும் வீயும் அவளை உறைந்து பார்த்தனர்.
“கீர்த்துவுக்கு பதில் நான் செத்து போயிருக்கலாம் மானூ. இந்த கஷ்டமே இருந்திருக்காது” என தேம்பி அழுதாள் சுவாதி.
“இல்ல, நான் அப்படி நினைக்கலை பேபி” என விக்ரம் வேகமாக சுவாதியிடம் வந்தான்.
இல்ல, நான் செத்து போயிருக்கணும்..நீங்க தான என்னை கொல்லணும்ன்னு சொன்னீங்க? சுவாதி அழுதாள்.
நான் கோபத்துல்ல பேசிட்டேன். “சாரிம்மா” என அவள் கையை பிடித்து விக்ரம் அழுதான். “வீ” க்கோ ஒன்றுமே புரியல.
நீ தான கீர்த்துவிடம் சொன்ன? அதுவும் இல்லாமல் எங்க காதல் உனக்கு பிடிக்கலைல்ல? அதனால யாரும் இல்லாத நேரம் அவளை அடிச்சேல்ல? விகாஸ் கேட்க, கோபமாக எழுந்தாள் மானசா.
அண்ணி, பாரின்னே போக சொல்லலைன்னு சொல்றாங்க…இப்படி எல்லாம் அவங்க எப்படி பேசி இருப்பாங்க. உங்களுக்கு உங்க காதல் கண்ணை மறைச்சிருச்சு. அதான் இப்படி யோசிக்காமல் உங்க தங்கைன்னு கூட யோசிக்காம பேசுறீங்க என சீறினாள்.
நீ எதுக்கு எங்க விசயத்துல்ல நுழையிற? அவ என்னோட தங்கை. நாங்க என்ன வேணும்ன்னாலும் பேசிப்போம். என்னோட கீர்த்துவிற்கு நடந்ததில் உனக்கும் பங்கிருக்கும்ன்னு தோணுது. சொல்லு? அவனுக உனக்கு என்ன உறவு? உறவு தானா இல்லை என விகாஸ் மானசாவை மேலிருந்து கீழாக பார்த்தான்.
அவன் பார்வையில் அருவருப்புடன் நகர்ந்து கண்ணீருடன் விக்ரம் அருகே வந்து நின்றாள்.
“வீ” வாயை மூடு. எதையும் தெரிந்து பேசு என தாத்தா கத்தினார்.
தாத்தா, உங்களுக்கு இவள பத்தி தெரியாது. என்னை அடைய தான் இவ என்னோட கீர்த்துவை ஆள் வச்சி செஞ்சிருக்கா. உங்களுக்கு தெரியுமா? இவள் என்னை காதலிக்கிறாளாம். அவளே சொன்னால். கேளுங்க..
என்னோட பப்புக்கு வந்தா. எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. இவ என்னோட மட்டுமல்ல எல்லாருடனும் என வீ முடிப்பதற்குள் விக்ரம் அவனை ஓங்கி அறைந்து, “அவன் சட்டையை பிடித்து அவள பத்தி என்ன தெரியும்ன்னு பேசுற? என்னடா செஞ்ச அவள?” என மீண்டும் விகாஸை அடித்தான்.
“அண்ணா” என மானசா விக்ரமை தடுத்து, விகாஸ் முன் நிமிர்வுடன் நின்றாள்.
ஆமா, உன்னை நான் காதலித்தேன் தான். ஆனால் அந்த வீ மாமா நீ இல்லை. கேவலமான வக்கிரம் பிடித்த நீ என்னோட வீ மாமா இல்லை..
விக்ரம் அண்ணா அண்ணியை கொன்றுவேன்னு சொன்னது போல நீ என்னை சொல்லி இருந்தால் நான் உன் கையால சாக கூட தயாராக தான் இருக்கேன் என கண்ணீருடன், என்னை பத்தி இவ்வளவு கேவலமா பேசிட்டேல்ல..அன்று நமக்குள்ள எதுவுமே நடக்கலை. இனி உன் முன் நான் வரவே மாட்டேன்..
உனக்கு பிடிச்ச பொண்ணுக்காக என்னை கேவலமா எல்லாருடனும் படுப்பன்னு பேசிட்ட. இதுக்கு மேல என்ன காதல்? என அழுது கொண்டே அறைக்கு ஓடிய மானசா படுக்கையின் ஓரமாக எடுத்து வைத்திருந்த அவளது பையுடன் வெளியே வந்தாள்.
வந்தவள் நேராக விகாஸ் அம்மா முன் வந்து, ஆன்ட்டி..நீங்க என்னை நம்புறீங்களான்னு தெரியல. உங்க மகனின் மேல் காதல் வந்தது உண்மை தான். அதுக்காக அவர் உடம்புக்காகவோ இல்லை அடுத்தவனுடனோ..நான் எதுவும் செய்யும் கீழ்த்தரமான பொண்ணு இல்லை.
என்னை வளர்த்தவர் அப்படி வளர்க்கலை. நானும் மத்த பொண்ணுங்க மாதிரி மானத்துக்காக உயிரையே விடும் பொண்ணு தான்.
சுவாதி அண்ணி நல்லா ஆனப் போது, என்னிடம் என்ன வேணும்ன்னு கேட்டீங்கல்ல? எனக்கு இப்ப அவசியம் ஒன்று வேணும். அது மட்டும் போதும்..
என்னை ஏதாவது ஒரு ஹாஸ்ட்டலில் சேர்த்து விடுங்க. நான் ஒரு வாரம் கழித்து உங்களை மட்டும் பார்க்க வாரேன். வந்தேன்னா இது மட்டும் செய்யுங்க. அப்புறம் ஹாஸ்ட்டல் செலவை கூட நானே பார்த்துப்பேன் என விக்ரமை பார்த்து, கேட்டேல்ல..இதுக்கு தான் அண்ணிக்கிட்ட ஹார்சா நடக்காதன்னு முதல்லவே சொன்னேன்.
எதுக்காக அண்ணிகிட்ட இப்படி நடந்துகிட்டன்னு எனக்கு புரியல. ஆனால் கீர்த்தனா சாவுக்கு காரணம் அண்ணி இல்லைன்னு உனக்கு தெரியும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீயும் என்னை தேடி வராத..என வேகமாக நடந்தாள் மானசா.
பவர், “போகாத..நான் வாரேன்” என விக்ரம் அவள் பின்னே செல்ல, ரம்யாவோ அவனையும் முந்திக் கொண்டு “எங்கேயும் போகாத மானூ” என அழுதாள்.
“சாரிக்கா” என மானசா தனது பொருட்களுடன் ஓட, சுரீரென அவள் நெஞ்சில் வலி ஏற்பட்டது. சுவாதியும் ரம்யாவும் சேர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, ஓடிக் கொண்டிருந்த மானசா முகம் வியர்வையில் குளித்தது. தாங்க முடியாத வலி அவள் இதயத்தில் ஊடுருவ, கையிலிருந்தவற்றை கீழே போட்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டே விழுந்தாள்.
ரம்யாவோ அழுது கொண்டே அவளிடம் ஓடி சென்று அவளை மடியில் போட்டு, திலீப்..காரை எடுங்க..சீக்கிரம் சீக்கிரம் பதட்டமாக கத்தினாள்.
எல்லாரும் முன் வருவதற்கு காரிலிருந்து இறங்கிய மானசா தோழன், தோழிகள் அவளிடம் ஓடி வந்தனர். சத்யா..காரை எடு ரோஸ் அழுது கொண்டே கத்தினாள்.
அவர்கள் காரில் மானசாவை ஏற்ற, அனைவரும் புரியாமல் விழித்தனர்.
“ஏய், நில்லுங்க” என விக்ரம் அவர்கள் பின் ஓட, ரம்யா அவசரமாக அப்சராவிற்கு அழைத்து விசயத்தை சொல்ல, திலீப் கோபமாக, என்ன பண்ற ரம்யா? அதட்டினான்.
விக்ரம் அங்கே வந்து, “அவங்க அவளை எங்க தூக்கிட்டு போறாங்க?” என்று பதறினான்.
“அண்ணா” என ரம்யா அவனை அணைத்து, மானூவுக்கு ஹார்ட் பிராபிளம் இருந்திருக்கு. இது நான்காவது முறை. மாரடைப்பு. போன முறையே அவளை ரொம்ப கஷ்டப்பட்டு தான் காப்பாற்றினோம். இப்ப பிழைப்பாளான்னு தெரியல..என ரம்யா சொல்ல, அவளை இழுத்து ஓங்கி அறைந்தான் திலீப்.
உதடுகள் துடிக்க, மூச்சே நின்றது போல உறைந்து இருந்த விக்ரம் கதறி அழுதான். அவன் கைகளின் நடுக்கம் குறையவேயில்லை.
“நீயும் போகப் போறீயா பவர்” என அழுதான். பின்..இல்ல..நீ போகக் கூடாது..என தரையில் கையை குத்தி காயப்படுத்தினான். அனைவரும் அதிர்ச்சியுடன் விக்ரமை பார்த்தனர்.
அன்னம் ஓடி வந்து அவனை தடுக்க, “எல்லாமே முடிஞ்சு போச்சும்மா” என அவரை அணைத்து கதறினான்.
அன்னத்தை நகர்த்தி விட்டு விகாஸிடம் வந்த விக்ரம், அவனை ஓங்கி அறைந்து விட்டு, இதுக்கு மேல என் மூஞ்சியிலே முழிக்காத. “அவ என்னோட உயிர்டா. என்னோட பேபி ஒரு கண்ணுன்னா..அவ என்னோட மறுகண்ணுடா” என கத்தினான். சுவாதி அதிர்ந்து விக்ரமை பார்த்தாள்.
இதையே தான் கீர்த்து பெயரை வைத்து முன்பே சுவாதியிடம் கூறி இருப்பான்.
அண்ணா, முதல்ல போகணும். திலீப் ப்ளீஸ் வாங்க என ரம்யா திலீப்பையும் அழைத்தாள்.
எல்லாரும் கிளம்பினார்கள். விகாஸ் அம்மாவோ அவனை பார்த்து, “பைத்தியக்காரன் மாதிரி பேசுறத விட்டு வேலையை பாரு” என கோபமாக அவர்களுடன் ஹாஸ்பிட்டல் சென்றார். திலீப்போ அவ்வப்போது ரம்யாவை முறைத்துக் கொண்டே வந்தான்.
“யார் யாருக்கெல்லாம் தெரியும்?” திலீப் கேட்க, அவள் சொன்னாள்.
விக்ரமோ பைக்கை எடுக்க, அவனை நிறுத்தி நேகன் அவன் பைக்கை செலுத்தி விக்ரமை அழைத்து சென்றான். சிம்மாவோ சிந்தனையுடன், இவ்வளவு முக்கியத்துவம் எதுக்கு இந்த பொண்ணு கொடுக்கிறான் என யோசனையுடன் சென்றான். ஒவ்வொருவர் மனதிலும் இதே கேள்வி.
பரணி இருக்கும் அதே முகப்பேர் ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்தனர். பரணியின் குடும்பம். மூச்சு பேச்சில்லாமல் அவசரமாக அழைத்து செல்லும் மானசாவை பார்த்தனர். யாரும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. தாத்தா பதட்டமாக அங்கே செல்ல, விழித்திருந்த பரணியோ மானசாவை காண துடித்துக் கொண்டிருந்தான். அவனால் அவன் குடும்பத்தை தாண்டியும் உடல் நிலையாலும் நகர கூட முடியவில்லை.
கர்னல் சேகர் தாத்தா குடும்பத்தினர் அனைவரும் வந்தனர். விகாஸூம் வந்தான். தனியாக அமர்ந்திருந்தான். மானசாவின் நண்பர்கள் அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
இவர்களுக்கு முன் வந்த விக்ரம் மானசாவை வைத்திருந்த அறை அருகிலே அமர்ந்து அழுது கொண்டிருந்தான். சுவாதி வந்தவுடன் அவனருகே சென்று அமர்ந்தாள்.
சாரி பேபி, நான் உன்னையும் கஷ்டப்படுத்தி இருக்கேன். இப்ப..அவன் கைகளை சேர்த்து வைத்து, அவளுக்கு நியாயம் கிடைக்கணும்ன்னு இவளை விட்டுட்டேன் என அவன் கையாலே அவனை அடித்தான்.
“அண்ணா” என மானசா நண்பர்கள் அருகே வந்தனர்.
நீங்களாவது சொல்லி இருக்கலாமே! என சிவந்த கண்களுடன் உடல் குலுங்க அழுது கொண்டே கேட்டான் விக்ரம்.
“பிராமிஸ் வாங்கிட்டா அண்ணா”. என்னாலும் முதல்ல நம்மவே முடியல. ஆனால் அவ நம்மகிட்ட மறைச்சு பெரிய வலிய தாங்கி இருந்திருக்கா. மோனூ அக்காவுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். அவங்க வீட்டுக்கு ஒரு முறை போன போது மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாங்க. கேட்டதுக்கு காய்ச்சலுக்குன்னு சொன்னாங்க. அதுக்கான மருந்து அதில்லை என நான் கண்டு கொண்டேன். அப்பாவுக்கு ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சு விட்டுட்டேன். சாரி அண்ணா..என ரோஜித் விக்ரமை அணைத்து அழுதான்.
“விக்ரம்” சுவாதி அழைத்தாள். அழுது கொண்டே இருந்த விக்ரம் அவளை பார்த்தான்.
“விக்ரம்” கீர்த்து அழுத போது கூட நீங்க இந்த அளவிற்கு அழவில்லை. அவளையும் என்னையும் தான உங்க இரு கண்ணாக பார்ப்பதாக சொன்னீங்க? இப்ப மானூவை சொல்றீங்க?
ஆமா மாமா, நீங்க கீர்த்துவுக்காக கதறுனீங்க அழுதீங்க. இந்த கண்ணுல்ல இருக்கும் பயம் அன்று இல்லை. “வாழ்க்கையையே தொலைத்த சிறுவன் போல அழுறீங்க?” என சுருதி அவனருகே வந்து அமர்ந்தான்.
“இந்த நேரம் என்ன கேட்குறீங்க?” தாத்தா கோபமாக, “உங்களுக்கு ஏதோ தெரியும்ல்லப்பா?” கிருபாகரன் கேட்டார்.
தெரியும். ஆனால் எல்லாமே தெரியாது என சேகர் தாத்தா விக்ரமை பார்க்க, அவன் அதிர்ந்து அவரை பார்த்தான்.
தெரியும் மாப்பிள்ள. எங்க சுவாவை எப்பொழுதும் நீங்க வெறுக்கலைன்னு எனக்கு நல்லா தெரியும். அதான் பொறுமையாக காத்துட்டு இருந்தேன்.
ஆனால் வீ..நீ எதையும் புரிஞ்சுக்காம உன்னோட தங்கையை என்னன்னமோ பேசிட்ட? உன்னை என்னால மன்னிக்கவே முடியாது என அவனிடம் வந்த தாத்தா, மானு குட்டி..உன்னோட படுக்க பப்புக்கு வரல. எதுக்கு வந்தான்னு தெரியாது. ஆனால் அன்று உன்னை உன்னோட தோழியிடமிருந்து காப்பாற்றியது அவளும் பரணியும் தான்.
அவங்க மட்டும் அவளை பிடிக்கலைன்னா..இப்ப உன்னோட மானமும் நம்ம குடும்பத்தோட மானமும் காத்துல்ல போயிருக்கும். நான் சேர்த்து வைத்த மொத்த பெயரும் போயிருக்கும்.
“தாத்தா” அவன் எழ, ஹாஸ்பிட்டலில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த குச்சியை எடுத்து விகாஸை தாத்தா அடித்தார். அவன் அம்மா அழுது கொண்டே அவர்களை பார்த்தார்.