நீ நான் 24

“மனூ எனக்காக மாற வேண்டாம்” என ரோஹித் எழுந்து அமர்ந்தான்.

அண்ணா, “சும்மா இரு” முக்தா சொல்ல, “நீ எதுக்கு அவள அழ வச்சுட்டு இருக்க? நீ கிளம்பு” என அவன் சொல்ல, “உங்களுக்கு தலைவலி இருக்கா?” என மனீஷா அவனருகே வர பயந்து இருந்த இடத்திலிருந்தே கேட்டாள்.

“இங்க வா” என ரோஹித் அழைத்தான்.

முக்தாவை பிடித்து இழுத்து மனீஷா அவளை பார்த்தாள்.

அண்ணி..பேசுங்க.

இல்ல, அவர் தமிழ், ஹிந்தின்னு மாத்தி மாத்தி பேசுறார். இவர் பேசுறது புரியல என முக்தாவை பார்த்தாள்.

தலையணையை எடுத்து முக்தா ரோஹித் மேல விட்டெறிந்து, பாட்டி சொல்லும் போதே தமிழ் கத்துட்டு இருந்தா. இப்ப பிரச்சனையே இல்லை.

நாம தமிழ் பேசுறது. அவனுக்கு நல்லா புரியும் அண்ணி. பேச தான் வராது. இப்படி செய்யலாமே! நீங்க இருவருகே மாத்தி மாத்தி சொல்லி கொடுத்துக்கலாமே!

“எப்படி முடியும்?”

முடியும். அவனுக்கு தமிழ் புரியும். “சொல்லுடா” என மேலும் ப்ளவர் வாஷ்ஷை எடுத்தாள் முக்தா. மனீஷா அவளிடம் பதறி செல்ல, ரோஹித் தலையணையை தூக்கி எறிந்தான். முக்தா முகத்திலே வந்து விழுந்தது.

“டேய் உன்னை” என படுக்கையில் இருவரும் தலையணையை வைத்து அடித்துக் கொள்ள, அவர்களின் சண்டையை ரசித்தாலும் ரோஹித் அருகே வந்து நின்று, முக்தா தூக்கி எறிந்த தலையணையை அவன் மீது படாமல் தட்டி விட்டாள்.

இருவரும் அவளை பார்க்க, “உங்க விளையாட்டை அப்புறம் வச்சுக்கோங்க” என அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

காய்ச்சல் இப்ப இல்லை. முகி, “அஜய் மாமா வந்துட்டாரா?”

தெரியல அண்ணி. யாரையுமே பார்க்கலை. டாக்டர் ஹாஸ்பிட்டல் வரச் சொன்னார்ல்ல. “உங்களுக்கு தலைவலி இருக்கா?” என அவனது காயத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இல்லை” அவன் தலையசைத்தான்.

நான் அங்கிளை அழைச்சிட்டு சாப்பிட எடுத்து வாரேன். அப்புறம் கிளம்பலாம் என மனீஷா நகர, அண்ணி நான் எடுத்துட்டு வாரேன் என முக்தா நகர்ந்தாள்.

ரோஹித் மனீஷாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கோ ஒரு மாதிரி ஆனது. அவள் அறையை ஒதுக்கத் தொடங்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரோஹித்..ஹேய், “வொய்ஃபி இங்க வா” என அழைத்தான். அவனது அழைப்பில் பதறி அவனை பார்த்தாள்.

இங்க வான்னு சொன்னேன்..

“எதுக்கு? எனக்கு வேலை இருக்கு” என ரோஹித்தை பார்த்தாள்.

வேலையெல்லாம் மத்தவங்க பார்த்துப்பாங்க. நீ என்னருகே வா. அவள் தயங்கி நின்றாள்.

உன்னை நான் ஏதும் செய்யலை..

ஐ கான்ட் அண்டர்ஸ்டான்ட் என்றாள்.

வா என அவன் படுக்கையின் அருகே காட்டினான்.

அவனிடம் வந்து, “டூ யூ வான்ட் எனிதிங்?”

ரோஹித் புன்னகையுடன், யூ..என அவளை பார்த்தான்.

ஹா..என விலகி நின்றாள்.

நோ.என தலையசைத்தவன், இருவரும் முகி சொன்ன மாதிரி அவரவர் தாய் மொழியை கத்துக்கலாமே! என ஆங்கிலத்தில் கேட்டான்.

ம்ம்..பட் ஹௌ?

சிட் கியர் என அவளை இழுத்து அவனருகே அமர வைத்து, முதல்ல ஹிந்தி பேசிக் சொல்லித் தாரேன்.

லெட்டர்ஸ் ஐ நோ என்றாள்.

ஓ..என அவன் சிரித்தான்.

வொய் ஆர் யூ லாஃபிங்? என முகத்தை திருப்பினாள். அவன் மேலும் புன்னகைத்தான்.

ஓ.கே வேர்ட்ஸ்..சென்டன்ஸ் பார்க்கலாமே! அப்புறம் நீ சொல்லித் தா. அப்புறம் பேச ஆரம்பிக்கலாம் என்றான்.

ம்ம்..என்று அவள் சொல்ல, அலைபேசியை எடுத்து ஒவ்வொன்றாக சொல்லித் தர ஆரம்பித்தான்.

இரவென்றால் விகாஸ் குடித்து வருவதும் அவனை தாத்தா கவனித்துக் கொள்வதும், யாருடனும் பேசாத சுவாதியை பேச வைக்க மானசா செய்யும் முயற்சியுமாக ஒரு வாரம் கழிந்தது.

ரோஹித்திற்கு தலையில் ஏதும் பிரச்சனை இல்லை என்றதும் அவனும் ஆபிஸ் செல்ல ஆரம்பித்தான்.

கம்பெனி மீட் முடிந்து இரவு குடிக்காமல் விகாஸ் வீட்டிற்கு வந்தான். ஓர் அறையிலிருந்து பாடல் ஒலிக்க சலங்கை ஒலியும் கேட்டது.

அறை அருகே வந்து மெதுவாக எட்டிப் பார்த்தான். கண்ணாடி பொருட்கள் நொருங்கி கீழே கிடந்தது. காலில் இரத்தக்கறையுடன் ஆடிக் கொண்டிருந்த மானசா கண்கள் சொருக கீழே விழுந்தாள்.

ஏய், “யாரு நீ?” என விழித்து விகாஸ் அறைக்குள் வந்தான். உள்ளே இருந்த அறையில் சுவாதி உறங்கிக் கொண்டிருந்தாள்.

“பாட்டி” என கத்திக் கொண்டே மானசாவை பார்த்தான். அவனது சத்தம் கேட்டு சுவாதி விழித்து வெளியே வந்து மானசாவை பார்த்து, கண்கலங்க “மானு” என அவளிடம் வந்தாள்.

ஏய், “யாரு இந்த பொண்ணு? இங்க என்ன பண்றா?” விகாஸ் சினமுடன் கேட்டான். சுவாதி அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“தாத்தா” என சுவாதி கத்தினாள். இருவரும் என்னமோ என்று பதறி வந்தவர்கள்..மானசாவை பார்த்து, “அம்மாடி என்னாச்சு?” பாட்டி பதறி அவ்விடத்தை பார்த்தார்.

தாத்தா அவளை பார்த்து, “வீ பிள்ளைய தூக்குடா” என்றார்.

தாத்தா, “இந்த பொண்ணு யாரு? நம்ம வீட்ல என்ன பண்றா? இவ எப்ப இங்க வந்தா?” சுவாதியை முறைத்துக் கொண்டே கேள்விகளை அடுக்கினான்.

“பிள்ளைய தூக்குன்னு சொன்னேன்” தாத்தா சொல்ல, அவன் மானசாவை பார்த்தான். “தாத்தா” என சுவாதி அவரை பார்த்து அழுதாள்.

“வழிய விடுடா ராஸ்கல்” என தாத்தாவே மானசாவை தூக்கிக் கொண்டு வெளியேறினார். மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, விகாஸூம் அவர்கள் பின் அவன் காரில் சென்றான்.

மானசா பற்றி அனைவருக்கும் தெரிய வர, குடும்பம் மொத்தமும் வந்தனர்.

சுவாதி அவள் அம்மாவை பார்த்து, அம்மா…மானூ என கதறி அழுதாள். அவர் அதிர்ச்சியுடன் தன் மகளை பார்த்தார்.

சுவாம்மா, “நீ அம்மாட்ட பேசிட்ட” என அவர் தன் மகளை அணைத்து அழுதார்.

விகாஸ் திகைத்து சுவாதியையும் அவன் அம்மாவையும் பார்த்தான்.

மாம், “வாட் ஆர் யூ சேயிங்?” அவன் கேட்க, அவன் அம்மா அவன் பக்கம் திரும்ப கூட இல்லை. அவன் அண்ணன்கள் அனைவரும் அவனை முறைத்தனர். மானசா இந்த ஒரு வாரமாக சுவாதியை மனமாற வைக்க செய்த அனைத்தையும் பார்த்ததால் மானசா மீது நல்ல அபிப்ராயம் வந்திருக்கும்.

டாக்டர் வெளியே வரவும் திலீப் அவரிடம் கேட்டான்.

கால்ல கட்டு போட்டிருக்கு. விழித்து தான் இருக்காங்க..பேசுங்க என்றார்.

“என்னடி பண்ண?” என ரம்யாகோபமாக மானசாவை அடிப்பது போல் வந்தாள். மானசாவின் கண்ணீரை பார்த்து, “எதுக்கு அழுற? ரொம்ப பெயினா இருக்கா?” எனக் கேட்டாள்.

சுவாதி ஏதும் பேசாமல் மானசா அருகே நின்று கொண்டாள்.

ம்ம், “ரொம்ப வலிக்குதுக்கா” என மானசா இதயத்தை காட்டினாள். மோனூவை எண்ணி தான் கூறுகிறால் என ரம்யா கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டாள்.

விசயம் அறிந்து விக்ரமும் சிம்மாவும் வந்தனர். அவன் வீட்டினுள்ளே அடைந்திருந்த விக்ரம் இன்று தான் வெளியே வருகிறான். நேகன் பாரினில் இருப்பதால் அப்சரா வந்திருந்தாள்.

எல்லாரும் மானசாவை பார்த்து விசாரிக்க, அவனுள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.

விக்ரம் அறையை திறந்து உள்ளே வரவும் திலீப் அவனிடம் வந்து, “இப்ப எதுக்கு வந்தீங்க?” எனக் கத்தினான்.

“அவ நல்லா இருக்கால்ல திலீப்?” என விக்ரம் கேட்க, “சுவா பற்றிய எண்ணமே உங்களுக்கு இல்லைல்ல?” மேலும் கத்தினான். எல்லாரையும் பார்த்த சுவாதி மீண்டும் அவளது மனக்கூண்டுக்குள்ளே அடைந்து கொண்டாள்.

திலீப்பை சிம்மா விலக்க, விக்ரம் மானசா அருகே வந்தான்.

மாம்ஸ்..விகாஸ் அழைக்க, அவனை கூட கவனிக்காது மானசாவிடம் சென்றான். அவள் படுக்கையின் பின் மிக நலிந்த தோற்றத்துடன் இருந்த சுவாதியை பார்த்து மனம் வெசனப்பட்டாலும் மானசாவை பார்த்து அவளருகே வந்தான்.

“கட்டு போடும் அளவிற்கு என்ன செஞ்ச?” கண்ணீருடன் விக்ரம் மானசாவிடம் கேட்க, விகாஸ் அம்மா அவனை முறைத்துக் கொண்டிருந்தார். அவரை பார்த்து விட்டு மானசா விக்ரமை பார்த்தாள்.

“எதுக்கு வந்த?” எனக் கேட்டாள்.

“எதுக்கு வந்தேனா?” விக்ரம் மானசாவை பார்த்தான்.

உன்னோட கோபம் எனக்கு புரியல.

“புரியலையா? உனக்கு புரியாதுடா..எதுவுமே புரியாது” என விக்ரம் கையில் அவள் பலம் கொண்டு குத்தினாள். சுவாதி அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“மோனூ” என அவன் பேசத் தொடங்க, அவ இல்லை. உன்னால தான் எல்லாமே!

யாருக்கும் புரியவில்லை.

“முதல்ல அவங்கள பிடி இல்லைன்னா பிரச்சனையாகும்ன்னு நான் சொன்னேன்ல்ல. கேட்டீயா? இப்ப பாரு என்னோட உறவுகளை என்னிடமிருந்து பிரிச்சிட்ட” என மேலும் அவனை அடித்து அழுதாள்.

சிம்மாவிற்கு மகிழன் அழைத்தான். அண்ணா, “டிவியை பாருங்க” என சொல்ல, அறையில் இருந்த டிவியை போட்டான் சிம்மா.

ஒரு காரை பொக்லைன் போட்டு தூக்கிக் கொண்டிருந்தனர் ஆட்கள். சுற்றிலும் போலீஸ் இருந்தனர். காரிலிருந்து இறந்த சடலத்தை மீட்டனர். அவனை பார்த்ததும் கதறி அழுதாள் சுவாதி. ரம்யாவும் சுருதியும் திகைத்து அச்சடலத்தை பார்த்தனர்.

“சுவா?” என அனைவரும் பதறினார்கள்.

அப்பா, “கீர்த்துவை இவன்..இவன்..தான் கொன்றான்” என கதறி அழுதாள் சுவாதி. ஆமா..ஆமா..என கண்ணீருடன் ரம்யா அமர்ந்தாள்.

எஸ்.கே இண்டஸ்ரியலியரின் மகன் பிரகாஷ் கார் விபத்தாகி பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்திருக்கார். கார்க்கதவு மாட்டியதால் மீள முடியாமல் மூச்சிறைத்து இறந்திருக்கார் என சொல்ல, விக்ரம் விகாஸை பார்த்தான்.

நோ..என அவன் தலையசைக்க, சிம்மாவை பார்த்தான். அவனும் நானில்லை என்று சொல்ல, மானசா அமைதியாக சுவாதியை பார்த்தாள்.

“அழாதம்மா” என சுவாதி அம்மா அவள் தலையை கோத, ஆன்ட்டி “அண்ணி அழுகட்டும் விடுங்க. அப்ப தான் மனசை அழுத்தும் பாரம் குறையும்” என்றாள் மானசா.

எல்லாரும் மானசாவை பார்க்க, விகாஸூம் விக்ரமும் சுவாதியை பார்த்தனர்,

“எல்லாரும் வெளிய இருங்க” என்று மானசா சொல்ல, விக்ரம் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.

“என்னை எதுக்கு பாக்குற? வெளிய போ..” அதிகாரமாக சொன்ன மானசா, “ரம்யாக்கா நீங்க இருங்க” என்றாள்.

கண்ணை துடைத்துக் கொண்டு, “இவனையெல்லாம் கழுத்தை நெறிச்சு கொல்லணும்” ஆதங்கமுடன் அவள் பேச, “நோ” என்ற மானசா சுவாதியை பார்த்து, அண்ணீ பார்த்தீங்கல்ல தப்பு செஞ்சவன் எப்படியும் செத்துருவான். நீங்க நல்லா இருக்கீங்க. எந்த தப்பும் செய்யலை.

என்னிடம் யாராவது படிக்க சஜசன் கேட்டாலும் நானும் உங்களை போல தான் கூறி இருப்பேன். அதுக்காக நீங்க தவறு செய்ததாக இல்லை. நான் சொன்னால் கேட்பீங்கல்ல? என அன்புடன் கேட்க, சுவாதி அழுகையை நிறுத்தி அவளை பார்த்தாள்.

மானூ, “நீ என்னை நம்புறீயா?” என சுவாதி கேட்டாள்.

“நான் மட்டுமல்ல எல்லாரும் நம்புவோம். சொல்லுங்க ரம்யாக்கா” என மானசா சொல்ல, விக்ரமின் வார்த்தைகள் சுவாதியை எவ்வளவு பாதித்து உள்ளது என்று கலக்கத்துடன் ரம்யா சுவாதியை பார்த்து, ஆமா அண்ணி..நீ எந்த தப்பும் செய்யலை. இவனை போல நம்ம கீர்த்தனாவை கஷ்டப்படுத்திய எல்லாரும் சாவாங்க என்றாள் ரம்யா.

மானசா புன்னகைக்க, சுவாதி அவளை பார்த்து இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

அச்சோ அண்ணி, “கழுத்து வலிக்குது” என மானசா சிரித்துக் கொண்டே சொல்ல, சுவாதி அவளை விட்டு பாவமாக பார்த்தாள்.

சும்மா..சும்மா..என்று அவள் சொல்ல, ரம்யா புன்னகைத்தாள்.

“வலிக்குதா? எதுக்கு கண்ணாடி சில்லு மேல டான்ஸ் பண்ண?” ரம்யாவின் பாசமான வார்த்தைகள் கோபத்தில் முடிந்தது.

ஜஸ்ட் பிராக்டிஸ் பண்ணேன்.

உன் படிப்பிற்கும் டான்ஸிற்கும் என்ன சம்பந்தம்?

லாயருக்கு படிச்சா டான்ஸ் பண்ணக் கூடாதா?

மோனூ இல்லாதது கஷ்டம் தான் மானு. அதுக்காக இப்படியா பண்ணுவ? எல்லாரும் எப்படி பயந்துட்டோம்?

எல்லாருமேவா? சும்மா சொல்லாதீங்க அக்கா.

சும்மா இல்லை. மிருளா அக்காவெல்லாம் உன்னை பார்க்க கண்ணாவை வீட்ல விட்டு வந்துட்டாங்க. எல்லாரும் கம்பெனி வேலையை விட்டு உன்னை பார்க்க வந்திருக்காங்க என்றாள்.

“கண்கலங்க நிஜமாக எனக்காக தான் வந்தாங்களா?” எனக் கேட்டாள்.

உனக்காக தான். நீ இப்ப இந்த குடும்பத்துல்ல ஒருத்தியாகிட்ட மானூ..

இல்லக்கா, என்னால இந்த குடும்பத்துக்குள்ள மட்டும் தான் வர முடிஞ்சது. இந்த குடும்பத்து பொண்ணா ஆக முடியாது.

ஏன், அப்படி சொல்ற?

முடியாது. எல்லாரையும் கூப்பிடுங்க என சொல்ல, விகாஸ் விக்ரமிடம் மானசா பற்றி கேட்டான். மற்ற யாரும் அவனிடம் பேசவில்லை.

என்னோட ஒரு கேஸ் சம்பந்தப்பட்ட பொண்ணு. அவ அவளோட குடும்பத்தை இழந்துட்டா.

சுவா..விகாஸ் மெதுவாக கேட்க, விக்ரம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தான்.

சிம்மா..அவனை பற்றி விசாரிக்கணும். அவன் தானாக காரை உள்ளே விட்ருக்க மாட்டான்னு நினைக்கிறேன். யாரோ செஞ்சிருக்காங்க என்றான். விகாஸ் யோசனையுடன் நின்றான்.

அஜய் காலை உணவை முடித்து எழுந்து அவனது கம்பெனிக்கு கிளம்பினான். தியாவும் ரதுவும் அவனுக்கு முத்தமிட, வினித் முக்தாவிடம் கன்னத்தை காட்டினான். அவள் வெட்கமுடன் போ..மாமா. மேரேஜூக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்றான்.

ரோஹித் அவர்களை பெருமூச்சுடன் பார்த்து விட்டு மனீஷாவை பார்க்க, அவளோ சோட்டுவிற்கு உணவை எடுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

“சோட்டு” ரோஹித் அழைக்க, “பை பை மாமூ” என்றான் சோட்டு. அத்தை நீங்களும் சொல்லுங்க. அவளும் புன்னகையுடன் கையை ஆட்டினாள்.

ஹப்பா, “இதாவது கிடைத்ததே!” என ரோஹித் சொல்ல, “அப்புறம் என்ன அடியா வேணும்?” அவன் காதருகே வந்து முக்தா கேலி செய்தாள்.

“வந்து உன்னை கவனிக்கிறேன்” என்று அவன் செல்ல, “வினு நானும் வந்துட்டேன்” என யுக்தா படியிலிருந்து ஓடி வந்தாள்.

“சாப்பிடலையா?” வினித் கேட்க, “தியா பாக்ஸ் எங்க?” எனக் கேட்டாள்.

தியா உணவடங்கிய பாக்ஸை அவளிடம் கொடுக்க, யுக்தா அவளுக்கு முத்தமிட்டு.. “தேங்க்ஸ்டி”. ரதுகுட்டி..என சத்தமாக அழைக்க, பாப்பா திரும்பி அவளை பார்த்து எழுந்து நின்றது.

சோ..ஸ்வீட்டி என அவளுக்கும் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு, கண்ணம்மாம்மா..இன்றும் சாப்பாடு சூப்பர் என கையாட்டினாள்.

அம்மாடி, நீங்க இன்னும் சாப்பிடலை.

“மணமே சொல்லுதே எங்க கண்ணம்மா சமையலை” என சொல்ல, அனைவரும் புன்னகைத்தனர்.

யுகி, நேரமாகுது..வா..வா என வினித் முன்னே செல்ல, வாரேன் பாஸ் என அவன் பின் ஓடினாள் யுக்தா.

அக்கா..பார்த்து போ..

“பார்த்தால் போக முடியாதுடி” என யுக்தா சொல்ல, “எனக்கு தேவை தான்” என முக்தா அவளை முறைத்தாள். ஓடி வந்து அவளுக்கும் முத்தமிட்டு ஓடினாள் யுக்தா.

ராணியம்மாவை அலைபேசியில் அழைத்து சொல்லிக் கொண்டே கையிலிருந்த பைல்லை புரட்டினாள் யுக்தா. வினித் புன்னகையுடன் அவளை பார்த்தான்.

“கார்த்திக்கிற்கு ஓ.கே சொல்லிடலாமே!”

எத்தனை நாள் கஷ்டப்பட்டேன். அவரும் படட்டும் என்றாள். வினித் சிரித்துக் கொண்டான்.

அஜய் கொலை செய்தவன் பற்றிய விவரங்களை வைத்து அவன் தவறானவன். அவனுக்கு வேண்டாதவர்கள் செய்திருக்கலாம் என கேஸ் நகர்ந்தது.

“திவ்யாவை யாரோ கடத்திட்டாங்க” என நியூஸ் பரவ, உடனே சென்னை வந்தான் ரத்தன் ஷெட்டி.

முதலில் சந்தேகம் அஜய், வினித் மீது தான் அவன் ஆட்களுக்கு வந்தது. ஆனால் அஜய், வினித் தீவிரமாக கம்பெனி வேலைகளில் மூழ்கி இருப்பதால் அவர்கள் மீதான சந்தேகம் விலகியது ரத்தனுக்கு. ஆனாலும் அவன் ஆட்கள் நம்ம அஜய் குடும்பத்தை கவனித்துக் கொண்டே இருந்தனர். சிம்மா, விக்ரம், விதார்த், கார்த்திக் நண்பர்கள், சேகர் தாத்தா பசங்க என அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அவன் தேடியும் மகள் கிடைக்கவில்லை எனவும் ரௌடி பசங்க அனைவரையும் அலர்ட் செய்து வைத்திருந்தான். ஒரு நாள் கழிந்தது. அவன் கோபம் இரட்டிப்பாகி இருந்தது.

பளீர் நிற இறுக்கமான தேகம், சாம்பல் நிற கண்கள். அதில் கூலரும், முடிகளில் நரையை தொட்டிலிருந்தாலும் கழுத்து வரையிலான கூந்தல்.அதனை கட்டி இருந்தான். வயதானாலும் வலிய கை கால்கள், நடுநடுங்க வைக்கும் கணீர் குரல் என டானுக்கான மொத்த பொருத்தமும் குடி கொண்டிருந்தான் ரத்தன் ஷெட்டி.

ஷெட்டி காரு..என பயந்து ஒருவன் முன் வந்து நின்றான்.

“என்னோட பொண்ண எங்க?” கர்ஜித்தார் ரத்தன் ஷெட்டி.

“தெரியல” என சொன்ன மறுநொடி அவன் கழுத்து துண்டிக்கப்பட்டது. அருகே இருந்தவன் பதறி ஓடினான்.

ஷெட்டி கண்ணை காட்ட, ஓடியவனை இழுத்து வந்தனர்.

காரு..என்னை விட்ருங்கோ.. எமக்கு பொண்டாட்டி புள்ள இருக்கு..பொண்ணை கண்டுபிடிச்சிட்டு வா. இல்ல உனக்கும் இதே நிலைமை தான் என துண்டித்து இறந்து கிடந்தவனை காட்டினான்.

ஏய்..யாருடா? என் பொண்ணு காதலிக்கும் அந்த பையன் அஜய்யை அழைச்சிட்டு வாங்க என கத்தினார்.

“ஆகட்டும் ஜி” என்று ஒருவன் வெளியே ஓடினான்.

ஆபிஸில் மீட்டிங்கில் இருந்த அஜய்க்கு அழைப்பு வந்தது. அச்சமயம் உள்ளே ஒருவன் ஓடி வந்தான்.

அழைப்பை ஏற்றவனை காதம்பரி அழைத்திருந்தார். என்னோட பொண்ண எங்கடா? அவள் கத்த, அஜய் சார்..சில ரௌடி கும்பல் உங்களை கேட்டு வந்தாங்க.

ரோஹித் சார் அவங்களிடம், அவர் என்னோட அண்ணன் என்றதும் அவர் தலையில் அடித்து அவரை தூக்கிட்டு போயிட்டாங்க என்றார்.

“ரோஹித்தையா?” என பதறினான் அஜய்.

“என்னடா அவரை சொம்பன்னு நினைச்சியா? உன்னோட குடும்பமே காலியாகப் போகுது” என்றாள் அவள்.

போடி..என அலைபேசியை துண்டித்து வெளியே வந்தான் அஜய். மீட்டிங் ஹாலில் அனைவரும் பதைப்புடன் பேசிக் கொண்டிருந்தனர்.

ரத்தன் ஷெட்டி தவறான பார்வை நம் மீது விழுந்தால் உயிரோட வர முடியாது. பாவம் இந்த பசங்க என்றார் ஒருவர்.

கம்பெனிக்கள் பற்றி விவரங்களை கொடுக்க வந்த, ஒன் ஆஃப் த அஜய் கம்பெனியின் கவனிப்பாளன் கிருஷ்..அஜய், தியா நண்பன் என்று கூறலாம். அவன் இதை கேட்டு அஜய் கேபினுக்கு சென்றான். அஜய் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

அஜய்..அந்த ரத்தன் ஷெட்டி ரோஹித்தை தூக்கிடானாமே! என கேட்க, ஆமாடா..என்னை டென்சன் ஆக்காம கம்பெனி ஆட்களை கவனிச்சுக்கோ. இதை நான் பார்த்துக்கிறேன் என தேவையான பொருள் கிடைக்கவும் சாதாரணமாக அவன் நடந்து சென்றான்.

எல்லா நண்பர்களுக்கும், சிம்மா, விக்ரமிற்கும் விசயத்தை சொல்லி, எதற்கும் அலார்ட்டா இருங்க. தேவைன்னா சொல்றேன். அப்பொழுது மட்டும் வாங்க என சொல்லி விட்டு, ராணியம்மாவிடம் விசயத்தை சொல்லி சென்றான். அவருக்கு பதட்டம் இருந்தாலும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.

வினித் நிலைகொள்ள முடியாமல் தவித்து, அஜய்யை அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தான். அஜய் அதனை கண்டு கொண்டு காரை நிறுத்தினான்.

டேய், “நீ எங்க வர்ற? வீட்ல எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ” என அஜய் சொல்ல, கார்த்திக்கும் பசங்களும் போயிருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. உனக்கு உதவி தேவைப்படும். அதான் வந்தேன்.

ஏய்..அவன் என்னை தானடா வரச் சொன்னான்.

இங்க பாரு அஜய், “முதல்ல நீ தனியா இருந்த? இப்ப உனக்காக குடும்பம் இருக்கு. உன்னோட உயிர் முக்கியம்” என்றான் வினித்.

சரி, “வந்து தொலை” என இருவரும் கிளம்பி ரத்தன் ஷெட்டி வீட்டிற்கு வந்தனர். அங்கே காதம்பரி பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவரை பார்த்து வினித் முறைக்க, அஜய் கண்ணடித்தான்.

“என்ன திமிரு இவனுக்கு?” என காதம்பரி எண்ணினாள்.

“ஒன்றுக்கு ஒன்று இலவசம் போல வந்திருக்கீங்க?” என ஷெட்டியின் ஆள் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ஏன்? உங்களுக்கு பயமா இருக்கா?” அஜய் கிண்டலாக கேட்க, நாற்காலியை சுழற்றி ஸ்டைல்லாக நிறுத்தி அஜய்யை பார்த்தார்.

ஹலோ சார், அஜய் கூலாக கூலரை போட்டுக் கொண்டே கையை நீட்டினான்.

அவர் அவனையே பார்க்க, “பாஸ் போட்றுவோமா?” என கேட்க, சட்டென கையை தூக்கி, “போடுடா…போடு..போட்டுத்தான் பாரேன்” என ஆடிக் காட்டினான். “செவனேன்னு இருந்தவனிடம் நீங்க தானடா வம்பு பண்றீங்க?” என சொல்லிய அஜய்யை வினித் புன்னகையுடன் பார்த்தான்.

சார், ரோஹித்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனை எங்கே? என அஜய் கண்களை இடவலமாக அசைக்க, ரத்தன் ஷெட்டியோ சிரித்தார்.

“எதுக்கு சார் சிரிக்கிறீங்க? அவனுக்கு இப்ப தான் மேரேஜ் ஆகி இருக்கு. அவன் எங்களை போல இல்லை. பச்சப்புள்ள” என கிண்டலாக அஜய் கூறினான்.

அவர் மேலும் சிரித்துக் கொண்டு, இன்று தான் உன்னை நேரில் பார்க்கிறேன். ம்ம்..நல்லா இருக்கு..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு..உன்னோட பேச்சு. இதுக்கு தான் உன்னை என் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு போல. இன்னும் உன்னையே நினைச்சிட்டு இருக்கா.

“அதுக்கு நான் என்ன சார் செய்றது? எனக்கு குடும்பம் இருக்குல்ல..என்னோட பேப்ஸ் எனக்காக வெயிட் பண்ணுவாங்க. என்ன விசயம்? எதுக்காக அவனை தூக்கிட்டு வந்தீங்க? தயவு செய்து உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ண செய்தேன்னு சொல்லீடாதீங்க” என்றான் கேலியுடன்.

“அதுக்காகன்னா..உன்னை என்றோ தூக்கி இருப்பேனே!” என் பொண்ணை கட்டிக்கப் போறவன் எப்போதும் அருகே இருக்கணும். எனக்கு பின் அவன் தான் எல்லாமாய் இருப்பான். ஆனால் நீ அடமன்ட். பிடிவாதக்காரன். நமக்கு செட் ஆகாது.

வாவ்…என்னை பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்க. குட் சார்.

ஏய்..எங்க பாஸ் இதுவரை யாரிடமும் இவ்வளவு பேசியதில்லை. சொல்லு? எங்க சின்னம்மா எங்கே?

சின்னம்மாவா?

என்ன சார்? நீங்க ஜென்டில் மேன்னு நினைச்சேன். இன்னொரு வீடு எப்ப செட் பண்ணீங்க? என அஜய் மெதுவாக கேட்க, ஏய்..என அங்கிருந்தவர்கள் கத்தினர்.

நீங்க தான சொன்னீங்க? சின்னம்மான்னு? அஜய் பாவம் போல முகத்தை வைத்துக் கொள்ள, சின்னம்மா எங்க பாஸோட பொண்ணு..

ஓ..திவிய சொல்றீங்க? ஓ.கே ஓ.கே..

அஜய்யையே கண்சிமிட்டாது பார்த்த ஷெட்டி, அவர் மகளை தைரியமாக அவர் முன்னே செல்லமாக “திவி” என அழைக்கவும், அவனை யோசனையுடன் பார்த்தார்.

உங்களுக்கும் என் பொண்ணை பிடிக்குமா? எனக் கேட்டார்.

ப்ரெண்டா பிடிக்கும் சார். எனக்கு நிறைய கெர்ல் ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. ஆனால் திவி அப்பொழுது எனக்கு ஸ்பெசலா தான் இருந்தா. அப்பொழுதும் ப்ரெண்டாக மட்டும் தான்.

அப்பொழுது ஸ்பெசல்ன்னா? இப்ப..

இப்ப நல்ல பொண்ணா.. ப்ரெண்டா மட்டும் பழகினால் இப்பொழுதும் பேசுவேன் சார் என்று அஜய் கூறவும் படாரென இருக்கையிலிருந்து எழுந்தான் வினித் அஜய்யை முறைத்துக் கொண்டு.

வினித்தை பார்த்து விட்டு, அட..உட்காருடா மச்சான். இவரு இப்ப நம்ம திவி அப்பாவா பேசப் போறாரு என வினித் தொடையை திருகினான்.

வலியை பொறுத்துக் கொண்ட வினித் அஜய்யையும் ஷெட்டியையும் பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.

நீ சாகலைன்னு தெரிஞ்சதும் என்னோட பொண்ணு எங்கிட்ட ரெண்டு நாளா பேசவே இல்லை. அவளை கன்வின்ஸ் பண்ணுவதற்கும் அப்பாடா.. பொண்ணுங்கல்ல சமாளிக்கிறது கஷ்டம்ல்ல?

ஆமா சார், சில நேரம் மோகினி போலும் சில நேரம் பேய் போலும் நடந்துப்பாங்க அஜய் சொல்ல, வினித் அனைவர் முன்னும் அவன் கையில் கிள்ளினான்.

டேய்..போட்டுக் கொடுத்துறாத அஜய் வினித்தை பார்க்க, சாரிடா மச்சான்..கண்டிப்பா என்னோட தங்கச்சிட்ட போட்டு கொடுத்திருவேன் என்றான்.

“எதுக்காக என் பொண்ணை கொலை செய்ய பார்த்த?” ஷெட்டி கேட்க, இதை முன்னாடியே கேட்டுட்டு சம்பவம் பண்ணி இருக்கணும். “இப்ப கேக்குறீங்க?” என வினித் அஜய் தலையை பிடித்து, இவனுக்காக தான்..

ஓ…நண்பனுக்காகவா?

ஆமா.

நண்பனுக்காக உயிரையே கொடுப்ப போல என புதிர் போட்டு ஷெட்டி கேட்க, வினித் சொல்லும் முன் அஜய் அவன் வாயை பொத்தி..அவன் உயிரை கொடுப்பதை விட..நண்பனுக்காக நான் உயிரையும் எடுப்பேன் என சொல்லி கையை எடுத்தான். வினித் அதிர்ந்து அஜய்யை பார்த்தான்.

“இப்ப உன்னோட ப்ரெண்டு கழுத்துல கத்தி வச்சா?”

“வச்சவன் கையை வெட்டுவேன்” என்றான் அஜய்.

ம்ம்..பலே..பலே..உன்னை போல ஒருவனுடன் தான் நட்பு பாராட்டணும்.

சார், லேட் ஆகுது. நாங்க கிளம்பணும் ரோஹித்தை அனுப்புங்களேன்.

திவின்னு அழகா சொன்ன? என் பொண்ணை கண்டுபிடிச்சு கொடு.

செத்துப்போனவளை எப்படிடா கண்டுபிடிச்சு கொடுக்குறது? என அஜய் மனதில் எண்ணியவாறு “ரோஹித்தை விடுங்க நான் கண்டுபிடிச்சு கொடுக்கிறேன்”

என்னோட பொண்ணை உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னா மொத்த குடும்பமும் கையிலாசம் போயிரும்.

ஓ.கே சார் என அஜய் சாதாரணமாக சொல்ல, அஜய் உனக்கு பைத்தியமாடா பிடிச்சிருக்கு? வினித் சத்தமிட்டான்.

வினு..இவர் இப்ப டானா பேசுறார்டா. நான் மட்டும் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொன்னா நம்ம ரோஹித்தை போட்ருவாருடா..என ஷெட்டியை பார்த்து, என்னோட ப்ரெண்ட்ஸூம் எனக்காக தேடுவாங்க. தெரிஞ்சவங்க எல்லாரிடம் நான் சொல்கிறேன் என அலைபேசியை எடுத்து சிம்மா, விக்ரமை அழைத்து விசயத்தை சொல்வது போல நடிக்க, அவர்களும் ஓ.கே என்றனர்.

ஷெட்டியுடன் அஜய், வினித் பேசிய அனைத்தும் அவனது செயினின் மைக்ரோ லென்ஸ் மூலம் அனைவருக்கும் காணொளியாகிக் கொண்டிருந்தது. சிம்மாவும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மனீஷாவிற்கும் மற்றவர்களுக்கும் அஜய், வினித் பேச்சில் மூச்சே நின்றது.

சார், “என்னோட பிரதர்?” அஜய் கேட்க, ம்ம்..வருவார் என அவர் சொல்லவும் தான் எல்லாருக்கும் நிம்மதி.

ரோஹித் ஷெட்டியின் ஆட்களுடன் வந்தான். அஜய், வினித்தை பார்த்து விட்டு ஷெட்டியை பார்த்தான்.

அஜய்யும் வினித்தும் ரோஹித்தை கண்களால் ஆராய்ந்தனர். ஷெட்டியின் பார்வையோ அஜய்யை வருடிக் கொண்டிருந்தது. தியாவின் முகத்தில் பயம் நன்றாக தெரிந்தது. ராணியம்மா அவள் கையை அழுந்த பற்றி இருந்தார்.

வினு, நீ ரோஹித்தோட வீட்டுக்கு போ. நான் திவியை கண்டுபிடிச்சு இவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்.

அஜய் நானும் வாரேன். ஆமாண்ணா..நாங்களும் வாரோம் என ரோஹித் சொல்ல, போங்கன்னு சொன்னா போகணும் என பயங்கர கோபமாக அஜய் இருவரையும் பார்த்தான்.

ரோஹித் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, ஓ.கே கூல்டா. நாங்க கிளம்புகிறோம் என வினித்தும் ரோஹித்தும் கிளம்ப, ரோஹித் ஷெட்டியை பார்த்துக் கொண்டே சென்றான்.

உங்க ஆளுங்கல்ல என்னோட அனுப்புங்க. என் மேலுள்ள சந்தேகத்துல்ல தான என்னை வரச் சொன்னீங்க? என அஜய் கேட்க, வரும் போது என்னோட பொண்ணோட தான் நீங்க வரணும். உங்க வீட்டுக்கு வெளிய எங்க ஆளுங்க இருக்காங்க.

“தெரியும் ஷெட்டி காரு” என அஜய் ஷெட்டி ஆட்களுடன் சென்றான்.

சிம்மா, விக்ரம் போலீஸ் ஆட்களுடன் திவ்யாவை தேடினார்கள். அதே போல் கார்த்திக் சந்தோஷ் விதார்த் வீட்டில் பாதுகாப்பிற்காக இருக்க, அஜய்யும் கரணும் அவர்கள் ஆட்களுடன் திவ்யாவை தேடி அலசினார்கள். ஆறு, நதி போன்ற இடத்திலும் தேடல் நடக்க..இரவாகிப் போனது.

ராணியம்மாவிற்கோ மனம் அடித்துக் கொண்டிருந்தது.

இரவாகி பகலாகியும் கிடைக்காததால் ஷெட்டியின் ஆட்கள் அஜய் குடும்பத்தை கொல்ல தயாராக இருந்தனர். திவ்யா விசயம் டிவியிலும் ஒளிபரப்பப்பட்டிருந்ததால் டான் மகள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மக்களை கொல்ல அவன் தயங்க மாட்டான் என அனைவரும் அறிந்ததே!

அனைவரையும் பதற வைத்து திவ்யாவின் சடலத்தை மட்டுமே கண்டறிய முடிந்தது. ஒரு ரோட்டின் முட்புதரில் அவளின் சடலத்தை பார்த்த விஜய் முதலில் அஜய்க்கு தான் அழைப்பு விடுத்து கூறினான்.

அஜய்யோ பதறுவது போல் நடித்துக் கொண்டு ஓடி வந்தான். ரத்தன் ஷெட்டியும் அவ்விடம் வந்தான்.

சார், உங்க பொண்ணை யாரோ கொன்றுக்காங்க என அவரிடம் சென்று, சார்..எங்க நாட்டுக்காரனுக எமகாதவனுக. பார்த்து சார்..உங்க மனைவியை பார்த்துக்கோங்க. திவியை நான் இந்த கோலத்தில் பார்ப்பேன்னு நான் நினைக்கவேயில்லை என அவள் மீது பாசம் இருப்பது போல் அஜய் அழுவது போல நடித்தான்.

ஷெட்டியோ அமைதியாக தன் மகளை பார்த்துக் கொண்டே நின்றார்.

திவ்யாவை புகைப்படம் எடுத்து, அவ்விடத்தை மார்க் செய்து அவளது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். எல்லாரும் அங்கிருந்து கிளம்ப, ஷெட்டி மட்டும் அங்கேயே அமர்ந்தார். தூரத்தில் இருந்து அஜய் அவரை முறைத்து பார்த்து விட்டு கிளம்பினான்.

இந்த இடத்துக்கு யாருமே வரக் கூடாது என அஜய்க்கு அழைப்பை கொடுத்து, என்னோட பொண்ணு உயிரோட இல்லை. உன்னோட குடும்பமும் இருக்க மாட்டாங்க.

சார்..உங்க பொண்ணை கண்டுபிடிச்சு தரச் சொன்னீங்க. திவி இப்படி இந்த நிலையில கிடப்பான்னு நான் நினைக்கவேயில்லை. நான் தான் கண்டுபிடித்து கொடுத்துட்டேன்ல்ல. நீங்க கொலை செய்தவனை தேடுங்க. தேடிட்டு சொல்லுங்க. நானும் உங்கள் பக்கம் தான் என்றான் அஜய்.

அவர் அலைபேசியை வைத்து விட, அஜய் வீட்டிற்கு விரைந்து வண்டியை செலுத்தினான்.

ஷெட்டியின் ஆட்கள் அங்கு இல்லை என்றதும் தான் அவனுக்கு நிம்மதியானது. வீட்டினுள் அவன் நுழைய தியா அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

தியாவை அணைத்துக் கொண்டே அனைவரையும் பார்த்தான் அஜய். மனீஷா ரோஹித் அருகே அமைதியாக அமர்ந்திருந்தாள். அவன் வந்த போது அவள் அவனை விட்டு நகரவேயில்லை. ஒரே அழுகை. அவளை தனியே அழைத்து சென்று பேசி சமாதானப்படுத்தினான் ரோஹித்.

பேப்…ஒன்றுமில்லை அஜய் சொல்ல, திவ்யா என அஜய்யை தியா பார்த்தாள்.

எனக்கு தெரியாதும்மா..அவங்க நமக்கு மட்டுமா பிரச்சனை கொடுத்திருக்காங்க. நிறைய குடும்பம் அவங்களால அழிஞ்சு போயிருக்கும்மா என அவளிடம் நல்லவன் போல பேசி விட்டு, ரது பேப்பை எங்க? எனக் கேட்டான்.

முக்தா அவனை அடித்துக் கொண்டே, என்ன சொன்ன? இப்ப கூட அந்த திவ்யா..இல்ல..இல்ல..திவி கூட ப்ரெண்டா இருப்பீயோ? என அஜய்யை விரட்டி விரட்டி அடித்தாள்.

முகி, அவனை விடு. எல்லாரும் சாப்பிட வாங்க என வினித் அழைத்தான். யுக்தா கார்த்திக்கை பார்க்க, அவன் கண்ணை காட்டி விட்டு, “அஜய் நாங்க கிளம்புகிறோம்” என்று சொல்லி அவர்கள் கிளம்பினார்கள்.

விதார்த் வீட்டில் அண்ணா, “நீ போன வாரம் முக்கியமான வேலையாக போனேல்ல வேலை முடிஞ்சதா?” அவன் தம்பி அவனிடம் கேட்டான்.

முழுசா முடியல. முடிஞ்சிரும்ன்னு நினைக்கிறேன்.

எதுக்குடா கேக்குற? பிராஜெக்ட் வேலையா பெங்களூரு போகணும்.

என்னிடம் சொல்லவில்லை அவர்கள் அம்மா கேட்க, அண்ணாகிட்ட பேசிட்டு சொல்லலாம்ன்னு இருந்தேன்ம்மா..

நீ போயிட்டு வா. நான் அம்மாவை பார்த்துக்கிறேன் என்றான் விதார்த்.

அண்ணா, அந்த ஷெட்டி விசயத்துல்ல தலையிடாத.

நீ கிளம்புடா. நான் பார்த்துக்கிறேன் என அவன் தம்பியை கிளப்பி விட்டான்.

அஜய் விதார்த்தை அழைத்து, சொன்ன விசயம் என்னாச்சு? எனக் கேட்டான்.

கன்பார்ம் சார். உங்க அம்மா உயிரோட தான் இருக்காங்க. அதற்கான ஆதாரம் காதம்பரியின் அடியாள் ஒருவன் என அனுப்பினான். அந்த சாம்பல் உங்க அம்மாவுடையது அல்ல. யாரோ தற்கொலை செய்த பொண்ணுடையது. அதை வைத்து ஏமாத்தி இருக்காங்க சார். மத்த எல்லாமே அனுப்பி இருக்கேன்.

உங்க அம்மாவை சென்னையில தான் கடைசியா எல்லாரும் பார்த்திருக்காங்க. அவனுக்கு அவங்க இருக்கும் இடம் தெரியல. கண்டிப்பாக இங்க தான் இருக்காங்க. எப்படியாவது கண்டுபிடிச்சிறலாம்.

“தேங்க்ஸ்” எனக் கூறி அஜய் அலைபேசியை அணைத்து படுக்கையில் படுத்து ரதுவை பார்த்துக் கொண்டிருந்தான்.

தியா உள்ளே வந்தாள். அஜய் அருகே வந்து அமைதியாக படுத்துக் கொண்டாள்.

கோபமா பேப்?

திவ்யாவை நீங்க தான கொன்னீங்க? எடுத்த எடுப்பிலே கேட்க, இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க அஜூ.

ம்ம்..நான் மட்டுமல்ல..என்று முடித்தான்.

அஜய்யை அணைத்து “தேங்க்ஸ் அஜூ” என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

உனக்காக நான் எதுவும் செய்வேன் தியா.

“தெரியும் அஜூ” என அவள் அணைக்க, இருவரும் அணைத்தவாறே உறங்கினார்கள்.

விகாஸ் மானசாவை ஆழ்ந்து கவனித்தான். அவள் அவனை விட்டு விலகியே இருந்தாள். ஆனால் மற்ற எல்லாரிடமும் உரிமையுடனும் அன்புடனும் பழகி வந்தாள். தனிமையில் மட்டும் அவள் வருத்தமாகவே இருந்தாள்.