சில மணி நேரம் மௌனம் நிலவ, நேகன் அங்கே வந்தான். எழ எண்ணிய அப்சரா அவன் மீதுள்ள கோபத்தில் அவள் இருப்பதை காட்டிக் கொள்ளவில்லை. அவனும் அவளையும் அவள் பெற்றோரையும் கவனிக்கவில்லை.
தாத்தாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன், “நாம தனியா பேசணும்” என்றான்.
“என்ன மாப்பிள்ள பேசணும்?” ராஜாவின் தந்தை வினவ, “மாமா” என அவரை தயங்கி பார்த்தான் அவன்.
எல்லார் முன்னாடியும் பேசிருப்பா. “என்ன விசயம்?” தாத்தா கேட்க, விக்ரமை பார்த்துக் கொண்டே நேகன் எழுந்து நின்றான்.
“நான் சுவாதியை திருமணம் செய்து அழைச்சிட்டு போகலாம்ன்னு இருக்கேன்” என நேகன் பட்டென கூற, “இதை பற்றி பேச வேண்டிய நேரமாப்பா?” என கிருபாகரன் கேட்டார்.
அண்ணா, “சும்மா இருங்க” என்ற விகாஸ் அம்மா எழுந்து, எங்களால இதுக்கு மேல எங்க பொண்ணை இப்படி பார்க்க முடியாது. அவளோட படிப்பு முடிந்து மூணு வருசமாச்சு. விக்ரம் மாப்பிள்ள தான் திருமணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறார். அதனால நம்ம நேகன் மாப்பிள்ளையை சுவாவுக்கு முடிச்சிறலாம்.
அப்சராவின் திட்டம் தான் இதுவாக இருந்தது. ஆனால் இப்பொழுது நிஜமாகவே நேகன் சுவாதியை கல்யாணம் செய்வதை பற்றி பேசவும் அவளுக்கு ஏனோ மனம் பிசைந்தது. கண்கள் கலங்கியது. அவளுடைய பெற்றோர் அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தனர். அவள் அங்கிருப்பதே தெரியாமல் நேகன் பேசினான்.
“கொஞ்ச நாட்கள் காத்திருக்கலாமேம்மா?” தாத்தா கேட்க, இல்ல மாமா, “நீங்களும் அவளை பார்த்துட்டு தான இருக்கீங்க?” எப்படி இருந்தவ..ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்க அவளுக்கும் ஏதும் ஆகிடுமோன்னு மனசு அடிச்சிட்டு இருக்கு என விகாஸ் அம்மா அழுதார். அவரின் பேச்சில் விக்ரம் சுவாதியை பார்த்தான். அவள் எதையும் உணராமல் அமர்ந்திருந்தாள். ஆனால் விக்ரமிற்கு அவள் அம்மா பேசியதை ஏற்று அமைதியாக இருக்கிறால் என கோபம் வந்தது.
அவகிட்ட கேட்டா ஒத்துக்க மாட்டாளே! பொட்ட பிள்ளையை வச்சுட்டு அதுவும் அவள் படும் கஷ்டத்தை பார்க்க முடியலம்மா. நான் முடிவெடுத்திட்டேன். சொல்லுங்க என விகாஸ் அம்மா, கணவரை துணைக்கு அழைத்தார்.
அவர் தன் மகளை பார்த்து அவளருகே வந்து அமர்ந்து அவளது தலையை ஆதூறமாக வருட, அப்பொழுது கூட அவள் எதையும் காட்டவில்லை.
“சுவா” என சுருதி அவளை உலுக்க, வேகமாக எழுந்து சுவாதி அறைக்கு சென்று விட்டாள். அவள் பின் சுருதி செல்ல, சுருதி “நில்லு” என நேகன் தடுத்து விட்டு அவன் நகர, விக்ரம் கோபமாக எழுந்தான்.
விக்ரமிற்கு அழைப்பு வர, சிம்மாவென எடுத்து ஏதும் பேசாமல் காதில் வைத்தான்.
ம்ம்..இங்கேயே அழைச்சிட்டு வா. பேசிக்கலாம் என விக்ரம் அமர்ந்தான். சிம்மாவும் மற்றவர்களும் வந்து கொண்டிருந்தனர்.
அப்சராவின் பெற்றோர் எழவும் தான் நேகன் அவர்களை பார்த்து அப்சராவை கண்களால் அலசினான். அவள் கண்கலங்க அவனை பார்க்கவும் நேகனுக்கு உள்ளம் வலித்தது.
அச்சமயம் அவளது அலைபேசி ஒலிக்க, நேகன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை வீட்டினரும் கவனித்தனர்.
“இப்பவா? என்னிடம் சொல்லாம எதுக்கு இப்படி செஞ்சீங்க? எங்க இருக்கீங்க?” என அப்சரா பதட்டமாக பேசவும், “ஏய், குட்டிப்பொண்ணு பிரச்சனையா?” சந்தோஷ் கேட்டான்.
“இப்ப தான சொன்னேன். நான் ஒன்றும் குட்டிப் பொண்ணு இல்லை” என நேகன் மேல் உள்ள கோபமும் அவளை அலைபேசியில் அழைத்தவனின் கோபத்தையும் சந்தோஷ் மீது திருப்பினாள்.
சந்தோஷை பார்த்து, அவனது காதருகே சென்று எனக்கு இப்பவே உங்க உதவி வேணும். “வர்றீங்களா?” எனக் கேட்டாள்.
அப்சரா, “ஏதும் பிரச்சனையா?” விக்ரம் கேட்க, ம்ம்..என்று நேகனை பார்த்து விட்டு, தன் பெற்றோரை பார்க்க, அவள் தந்தையோ “வேண்டாம்” என தலையசைத்தார்.
“ப்ளீஸ் டாட்” என உதட்டசைத்து விட்டு கண்களால் கெஞ்சினாள்.
நோ..என அவர் கண்ணாலே எச்சரிக்கை விடுக்க, “சார் எழுந்திருங்க” என சந்தோஷிடம் மெதுவாக பேசினாள். அவன் எழவும் “சாரி டாட்” என அவன் கையை பிடித்துக் கொண்டு, “ஓடி வந்திருங்க” என அவனையும் இழுத்துக் கொண்டு கேட்டருகே சென்றாள்.
“சரா” என்ற அழைப்பில் நின்று திரும்பி தன் அன்னையை பார்த்தாள்.
வேண்டாம்டா. எனக்கு மனசு சரியில்லை. விபரீதம் ஏதும் ஆகிடாமல் என சொல்ல, நீ சொன்ன மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் மாம். இது தான் கடைசி என்று அவள் கேட்டை திறந்தாள். எல்லாரும் வெளியே வந்து அவளை பார்த்தனர்.
“சந்தோஷோ என்ன பொண்ணு இவள்?” என்று தான் அப்சராவை பார்த்துக் கொண்டே அவளுடன் சென்றான்.
யாருக்காக போற? அவள் தந்தை சத்தமாக கேட்க, பிரபாகரன் மகன் அவர் காதலியோட ஓடிப் போகப் போறாரு. அவருக்கு உதவ போகிறேன் என்று அவள் செல்ல, அஜய் யோசனையுடன் நிற்க, “பிரபாகரன் மகனா? அந்த பையன் சரியில்லைன்னு பேச்சு வந்ததே!” என ரகசியன் தந்தை சொல்ல..
சார்..உங்க பொண்ணு அவனை சந்திக்கக் கூடாது. போக விடாதீங்க. ஹாஸ்பிட்டலில் ஆதாரத்தை எடுக்கும் முயற்சியில் நாங்க இருக்கும் போது எங்களை ஒரு கார் பின் தொடர்வது போல இருந்தது. நான் கூட சனா ஆட்களாக இருக்கும்ன்னு எண்ணினேன். அந்த காரை நேற்று உங்களது ஹாஸ்பிட்டல் முன் பார்த்தேன். நான் பார்க்கும் போதெல்லாம் அவன் காரில் தான் இருந்தான்.
அவன் சொன்ன பொண்ணு உங்க பொண்ணு தான்னு நினைக்கிறேன். அவன் ஓடிப் போகலை. அப்சராவை கடத்தப் போகிறான் என அஜய் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.
ஏங்க, “நம்ம சரா” என அப்சரா அம்மா அழ, அவர் யாருக்கு கால் செய்ய, “சந்தோஷிற்கு கால் பண்ணுங்க” என கார்த்திக் சொல்ல, நேகனோ சுவாதியை கூட பாராது அவர்கள் சென்ற திசைப்பக்கம் ஓடினான்.
மாப்பிள்ள..மாப்பிள்ள..என விகாஸ் அம்மா அழைப்பது கூட காதில் விழாமல் நேகன் சென்றான். விக்ரம், கார்த்திக் மற்றவர்களும் செல்ல, அவர்களின் பின் அவள் பெற்றோரும் சென்றனர்.
மெயின் ரோட்டின் ஓரத்தில் சந்தோஷ் தலையில் அடிபட்டு கீழே விழுந்திருந்தான். அனைவரும் பதற, விக்ரம் அதை பார்த்து, சிசிடிவி இருக்கு என அலைபேசியை எடுத்து டிப்பார்ட்மெண்ட் ஆட்களுக்கு அழைத்து விசயத்தை சொல்ல, அவர்கள் கண்டறிந்து இடத்தை சொல்ல, பைக்கில் அனைவரும் வந்து இறங்கினார்கள்.
அப்சரஸ்..அப்சரஸ்..என நேகன் அழைக்க, பின்னே சென்ற விக்ரமை தடுத்த அஜய்..”கொஞ்சம் வெயிட் பண்ணு. நேகன் காதலை அப்சராவிடம் சொல்லும் நேரம் வந்திருச்சு” என சொல்ல, “என்ன பேசுறீங்க அஜய்?”
ஆமா, “பாருங்க” என அஜய் மறைந்து நின்று வீடியோ எடுக்க, அப்சராவின் குரல் கேட்டது.
“பத்திரம் டா…பத்திரம். ஒன்னு பத்திரம்…இரண்டு பத்திரம்.. மூணு பத்திரம்” என அவளது தலைவர் சின்சானின் டயலாக்கை அள்ளி தெளித்து அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.
அப்சரஸ்..என மாடி ஏறியவன் அவள் அவனுடன் கபடி ஆடிக் கொண்டு பேசுவதை பார்த்து நேகன் சிரித்தான். அவன் சிரிப்பில் அவளை பார்த்த பிரபாகரனின் மகன் ” நில்லுடி, என்ன பத்திரம்?” என கை கொண்டு எட்டி பிடிக்க..”ஒத்து மவனே ஒத்து இல்ல விடுவேன்டா எத்து” என அவன் அவனை எட்டி விட்டாள் ஓர் உதை. பாவம் நம்ம அப்சுவுக்கு தான் கால் வலித்து விட்டது. அந்த மாடு நகரவேயில்லை.
அவன் கோபமாக அவளை பாய்ந்து பிடிக்க வந்தான். அவனை பிடித்து தள்ளிய நேகன் அவனை புரட்டி எடுக்க, அவள் பின்னிருந்து ஒருவன் அவள் வாயை பொத்தி இழுத்தாள். அவள் அவனை கடித்து விட்டாள்.
“நாயாடி நீ? இப்படி கடிக்கிற?”
“கடிப்பேன் டா….கடிப்பேன். என் உயிருள்ளவரை கடிப்பேன்” என அவள் அவனை விரட்டினாள். நேகனுக்கும் அவனுக்கும் சண்டை நடக்க போலீஸார் வந்தனர். அவர்கள் அவனை பிடிக்க, அவள் பெற்றோரோ தன் மகளை பார்த்து நிம்மதியுடன் உள்ளே வந்தனர்.
அப்சரா கோபமாக நேகனை பார்த்து, “நீ எதுக்குடா வந்த? போ..நான் நாளையும் ஒருவனுக்கு கெல்ப் பண்ணப் போவேன். அவன் என்னை கொன்றாலும் நீ வரக் கூடாது” என அவனை அடித்தாள்.
“நீ போக கூடாது” என நேகன் கண்கலங்க அவளை அணைத்து, “பயந்தே போயிட்டேன்” என்றான்.
“நீ எதுக்குடா பயப்படணும்?” என அவனை தள்ளி விட்ட அப்சரா.. போ..நான் சொல்லி தான் சுவாதியை கல்யாணம் பண்ணிக்கிற? போ..அவளை பாரு என அவள் வேகமாக நடந்தாள்.
ஏய், அப்சரஸ் என மண்டியிட்டு, “இந்த மாமனுக்கு ஏத்த பொண்ணு நீ தா என் செல்லக்குட்டி..” என சின்சான் போல சொல்லி நேகன் புன்னகைக்க, அப்சரா புன்னகையுடன், “சரி விடு தலைவரே!” என அவனிடம் வந்து அணைத்துக் கொண்டாள்.
“இந்த பொண்ணை காதலிக்கிறன்ன எந்த வெங்காயத்துக்கு சுவாதியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன? இவ சொல்லி தான் செஞ்சியா?” என விக்ரம் கோபமாக நேகனை அடிக்க வந்தான்.
ஹலோ, நிறுத்துங்க சார். நீங்க எதுக்கு அவளுக்காக பேசுறீங்க? உங்களுக்கு தான் அவளை பிடிக்காதே! என அப்சரா கோபமாக கேட்டாள். விக்ரம் அமைதியானான்.
நேகனின் புன்னகைத்த முகம் மாறியது. அப்சு..இவரு சுவாவை கொல்லப் போறாராம். “காதலிக்கும் பொண்ணை கொல்லும் அளவிற்கு அவள் என்ன செய்தாளாம்?” என கோபமாக கத்தினான்.
அவளால..தான்..என்னோட கீர்த்து இந்த நிலைக்கு வந்தா என விக்ரம் சொல்ல, திரும்ப திரும்ப இதையே சொல்றீங்க என நேகன் கோபமானான்.
என்னோட கீர்த்துவை பாரினுக்கு படிக்க போக சொன்னதே சுவாதி தான். அவ சொல்லலைன்னா உங்க மாமா வீட்ல்ல பாதுகாப்பா இருந்திருப்பா.
“வாட்? பாரின்னுக்கு படிக்க போக சொன்னாளா?” என நேகன் கேட்க, இல்ல..அவள் அப்படி சொல்லவேயில்லை என சுருதி கோபமாக அங்கே வந்தாள்.
படிக்கும் கோர்ஸ் பத்தி கீர்த்துவும் சுவாதியும் டிஸ்கஸ் பண்ணாங்க. அதுல கீர்த்திக்கு பிடிச்ச கோர்ஸ் சென்னையை விட பாரின்ல்லயும் கோயமுத்தூர்லயும் இருக்கிறதா பேசினாங்க. கீர்த்து அவளாக தான் பாரின் போணும்ன்னு சொன்னா? சுருதி கோபமாக விக்ரமை முறைத்தாள்.
“எப்படியும் அவ சொன்னதால தான போனா? சுவாதி தான் காரணம்” என விக்ரம் அடித்து பேச, ச்சே..என சுருதி கோபமாக பேச வந்தாள்.
சுருதி, வேண்டாம். இனி பேசி எந்த பயனும் இல்லை. வா நாம கிளம்பலாம் என நேகன் அழைக்க,
“அண்ணா..சுவாதியை பார்த்துக்கிறேன்னு விட்டு வந்துட்ட. என்ன இதெல்லாம்?” என அவனிடம் கோபமாக கேட்டாள். அப்சரா அவன் கையிலிருந்து அவள் கையை உறுவ, அவள் கையை இழுத்து இறுக பற்றினான் நேகன். சுருதி கோபமாக வெளியே சென்றாள்.
அஜய் அனுப்பியதை பார்த்து வீட்டில் அதிர்ந்து இருந்தனர். விகாஸ் அம்மாவும் சுருதியுடன் வந்திருந்தார்.
நேகன் அருகே வந்து, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். “என்னோட பொண்ணு என்ன விளையாட்டு பொம்மைன்னு நினைச்சீங்களா?” என விக்ரமை முறைத்து விட்டு..
ஒருத்தன் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வேற பொண்ணிடம் காதலிப்பதாக சொல்றான். மற்றவன் தேவையில்லாத பழியை அவ மேல போட்டு அவளை காயப்படுத்துறான்.
இத்தனை நாள் உங்களுக்குள் ஏதோ பிரச்சனை போலன்னு அமைதியா இருந்தது தப்பு. அவளை பேசாமல் கஷ்டப்படுத்தியதுக்கு அவளை கொன்றிருக்கலாம். நீங்க தான சொன்னீங்க கொல்றேன்னு.. போய் கொன்னுட்டு தலையை முழுகிட்டு போங்க என விக்ரமிடம் விகாஸ் அம்மா தன் ஆதங்கத்தை கொட்டி விட்டு சென்றார்.
எல்லாரும் வீட்டிற்கு வந்தனர். சிம்மாவின் காரும் வீட்டின் முன் வந்தது.
காரிலிருந்து அழுது கொண்டே இறங்கிய மானசா நேராக வீட்டிற்குள் ஓடிச் சென்று தாத்தாவின் பின் நின்று கொண்டாள். உள்ளே வந்தவர்கள் அவளை புரியாமல் பார்த்தனர்.
“பவர்”..விக்ரம் அழைக்க, அவள் மெதுவாக அவர் பின்னிருந்து எட்டிப் பார்த்தாள். உள்ளே கோபமாக வந்து கொண்டிருந்தான் பரணி.
மானு, “எங்க இருக்க?” என அவன் கத்த, இங்க பாருப்பா. நீ அவள காதலிக்கிறன்னு தெரியுது. “அதுக்காக அவ எப்படி உன்னோட வீட்டிற்கு வருவா?” சிம்மா கேட்டான்.
அவ எனக்கு யாரோ இல்லை. என்னோட சொந்த அத்தை பொண்ணு தான். அந்த உரிமையில தான் கூப்பிடுறேன் என்றான் பரணி.
“உரிமையா?” என கோபமாக மானசா அவன் முன் வந்து, “இத்தனை நாள் இல்லாத உரிமை இப்ப எங்கிருந்து உனக்கு வந்தது? இந்த ஒரு வருசமா எனக்கு உன்னை தெரியும். அப்பொழுது சொன்னீயா?”
அப்பொழுது மாமா உன்னுடன் இருந்தார்.
“மாமாவா? தினமும் அக்காவை காலேஜ்ல்ல விட வருவாரே அப்ப உனக்கு அவர் மாமா இல்லையா?”
பரணி, “அதெல்லாம் சொல்ல முடியல. நீ வா” என பரணி அவள் கையை பிடிக்க, விக்ரமோ சீற்றமுடன், “அவளோட கையை எடு” எனக் கத்தினான்.
சார், நீங்க ஜஸ்ட் கெல்ப் பண்ணீங்க. அவ்வளவு தான். ஆனால் நான் அவளுக்கு உரிமையுள்ளவன்.
சும்மா உரிமை உரிமைன்னு பினாத்தாத. என்னோட அம்மா பெயருக்கு கலங்கம் உண்டாக்கியதே உன்னோட அப்பா தான் என கோபமாக மானசா, அம்மாவும் அப்பாவும் எந்த தப்பும் செய்யலை. ஆனால் என் அம்மாவை வீட்டை விட்டு அனுப்ப உன் அப்பா தான் எல்லாமே செய்தார்.
அம்மா பெயர் கெட்ட பின் உங்க கௌரவத்துக்கு என்னோட அம்மா தேவையில்லாமல் போயிட்டாங்க. ஒருத்தர் கூட அவங்கள நம்பல. அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. சொல்லப் போனால் என் அப்பா யாருன்னே என் அம்மாவுக்கு தெரியாது. அப்படி பட்டவங்கள ஒன்னா இருந்தாங்கன்னு ஊர் முழுக்க நம்ப வச்சு..என் அப்பாவை எப்படி அடிச்சீங்க? எதையும் நான் மறக்க மாட்டேன்..ஒழுங்கா போயிரு என கத்தினாள்.
அப்பா கோபத்துல்ல தான்..
கோபத்துல்ல இப்ப நான் உன்னை நெருப்புல்ல கொளுத்துறேன். உங்க வீட்ல எல்லாரும் ஏத்துப்பாங்களா? என கேட்க,
மானு என்ன பேசுற? மோனூ மாதிரி உனக்கு ஏதும் ஆகக் கூடாதுன்னு தான் சொல்றேன். உங்களை தாத்தாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் உங்களுக்காக காத்திருந்தார். உன்னிடம் காதலை சொன்ன பின் அவர் முன் நிறுத்தணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
அய்யோ..திரும்ப திரும்ப என் மேல காதல் கீதல்ன்னு சொல்லாத. நீ காதலித்தது என் அக்காவை..லூசுப்பயலே என திட்டினாள்.
நல்லா திட்டிக்கோ. மோனூவை தான் காதலிக்கிறேன். எனக்கும் புரியது. அவள் விசயம் போல உன் விசயத்தையும் என்னால விட முடியாது. உனக்கு ஏதாவது ஆனால் பரணி கண்கலங்கினான்.
அதெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாங்க இருக்கோம் என விக்ரம் சொல்ல, அவனை முறைத்த பரணி “நீங்க முதல்ல அவளுக்கு யாரு? நான் பார்க்கும் போதெல்லாம் மானூவோடவே இருக்கீங்க?” அவன் சீற்றமுடன் கேட்டான்.
அவரு என்னோட வெல் விசர். அவ்வளவு தான். போதுமா? என்னை நிம்மதியா இருக்க விடுங்களேன் என தரையில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கியவாறு அழுதாள்.
“சாரி மானூ” என அழுது கொண்டே பரணியும் சென்றான். எல்லாரும் விநோதமாக மானசாவை பார்த்தனர்.
விகாஸூம் சுவாதியும் தத்தம் தனித்தனி அறையினுள் படுத்திருந்தனர்.
“எழுந்திரு மானூ” விக்ரம் அவள் கையை பிடிக்க, அவன் கையை தட்டி விட்டு தாத்தாவிடம் சென்று, “நானும் இங்கேயே இருக்கட்டுமா?” எனக் கேட்டாள்.
“இரும்மா” என அவர் சொல்ல, பாட்டியோ கோபமாக, “நீ யாருன்னே தெரியாது? நீ பாட்டுக்கு வர்ற போற? இப்ப தங்கப் போறேன்னு சொல்ற? எங்க பேரனும் இங்க தான் தங்குறான். நீ எப்படி இங்கே இருக்கலாம்?”
“பாட்டி” அவள் அழைக்க, அனைவருக்கும் மானசா மீது சீற்றம் எழுந்தது. அவள் தாத்தாவை பாவம் போல் பார்க்க, “இருந்துக்கோம்மா” என்றதும் தான் விக்ரமிற்கு நிம்மதி. அவன் சுவாதியை தேட, அவள் அங்கில்லை.
மாமா, “இந்த பொண்ணுக்கு வழி சொன்னீங்கல்ல? எனக்கும் சொல்லுங்க? என்னோட சுவாதிக்கு கல்யாணம் பண்ணனும்?” விகாஸ் அம்மா சினமுடன் கேட்டார்.
கொஞ்ச நாள் போகட்டும்மா..
மாமா, இதையே தான் உங்க மாப்பிள்ள இரண்டு வருசமா சொன்னாரு. காரணத்தை பார்த்தீங்கல்ல? அவரோட தங்கச்சிக்கு நடந்ததிற்கு காரணம் என் பொண்ணுன்னு சொல்றாரு?
சரிம்மா, “பார்க்கலாம்” என நேகனை பார்த்தார் அவர்.
தாத்தா, நான் சுவாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னால் விக்ரம் அண்ணா ஏதாவது பேசுவார்ன்னு எதிர்பார்த்து தான் பேசினேன். ஆனால் நான் அப்சராவை தான் காதலிக்கிறேன். இவளை சந்திக்கவில்லை என்றாலும் என்னால நம்ம சுவாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு இப்பொழுது அவள் மீது காதல் இல்லை. நீங்க வெளியில இருந்தே மாப்பிள்ளை பாருங்க. விக்ரம் அண்ணாவுக்காக சுவாவை இப்படியே வைத்திருப்பது சரியில்லை என நேகன் முடித்தான்.
விக்ரம் கோபமாக நகர, மானசா எழுந்து, “நீங்க சுவா அண்ணிக்கு மாப்பிள்ளை பாருங்க. நான் அவங்கள இங்கிருந்தே சரி செய்கிறேன்” என்றாள்.
“அண்ணியா?” என விகாஸ் அம்மா கேட்க, ஆமா..சிம்மா அண்ணாவை சுவா அண்ணி மாமான்னு கூப்பிட்டா. உங்க சுவாதி எனக்கு அண்ணி தான?
ம்ம்..பலே கில்லாடி தான்ம்மா நீ. எங்க அப்பாவையே சம்மதிக்க வைத்து தங்கப் போறன்னு பார்த்தால் எல்லாரையும் முறப் போட்டு கூப்பிடுற? சுஜித்ராவின் அப்பா கேட்டார்.
தாத்தா, “யாருமில்லாத எனக்கு எல்லாரையும் முறப் போட்டு அழைக்கும் தகுதி இல்லையா?” என பாவமாக மானசா கேட்டாள். ரம்யாவோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன ரம்யாக்கா? இப்படி பாக்குற? மானசா கேட்க, “இல்ல ஒன்றுமில்லை” என ரம்யாவின் குரல் தழுதழுத்தது.
நீ கூப்பிடும்மா..என அவர் சொல்ல, “உன்னால என்னோட பொண்ணுகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியுமா?” என விகாஸ் அம்மா மானசாவிடம் சிநேகமாக கேட்டார்.
“நேரம் வேணும் ஆன்ட்டி. உடனே நான் பேச உங்களில் ஒருத்தி இல்லையே!” நான் பார்த்துக்கிறேன். என்னை நம்பி இங்கேயே அவங்கள விட்டு போங்க. பாட்டி இருக்காங்கல்ல பார்த்துப்பாங்க. நானும் முயற்சிக்கிறேன்.
என்னோட அக்காவும் அடிக்கடி வந்து பார்த்துட்டு போகட்டும் என்றாள்.
“இவள் வித்தியாசமா பேசுறாளே!” என ரம்யா சிந்தனையுடன் அவளை பார்த்தாள்.
நேகா, “திலீப் கல்யாணத்தோட உங்க மேரேஜையும் வச்சுக்கலாமா?” தாத்தா கேட்க, “ஒரு நிமிடம்” என்ற அப்சராவின் தந்தை நேகன் முன் வந்தார்.
“என்ன அங்கிள்?”
நீங்க இங்கேயே இருக்கிறதா இருந்தா என் பொண்ணை உங்களுக்கு திருமணம் முடித்து தாரேன் என்றார்.
அங்கிள் அங்க வேலை..அவன் இழுக்க, அப்ப சரிப்படாது என அவர் அப்சராவை அவன் கையிலிருந்து பிரித்து அழைத்து செல்ல, அவளோ நேகனை பார்த்துக் கொண்டே சென்றாள். அவன் அம்மாவும் பின் சென்றார்.
“அங்கிள்” என பின்னே ஓடி வந்த நேகன் நான் வாரேன். இம்முறை பாரின் சென்று செய்ய வேண்டியதை முடிச்சிட்டு வந்திடுறேன். சுவாவை பார்த்துக்க ஆள் இருக்காங்கல்ல. நான் நாளையே கிளம்புகிறேன் என அவன் சொல்ல, அப்சரா அவனருகே வந்து அவன் கையை கோர்த்துக் கொண்டு அவள் தந்தைக்கு பழிப்பு காட்டினாள். அவளது அழகான செயலில் அனைவர் மனமும் உருகிப் போனது.
பெற்றோர் இல்லாமல் வளர்ந்த நேகனுக்கு அப்சரா சரியாக இருப்பாள் என அனைவரும் எண்ணிக் கொண்டனர். வாங்க வேலையை பார்ப்போம் என அனைவரும் நகர, விக்ரம் மானசாவை தனியே இழுத்து சென்று, “என்ன பண்ணீட்டு இருக்க? உன்னை ஹாஸ்ட்டல்ல நானே சேர்த்து விடுகிறேன்” என சொல்ல, கையை எடுடா. உன் மேல வச்சிருந்த மரியாதை, பாசத்தை நீயே அழிச்சிட்ட. போயிரு..நானே சுவா அண்ணியை சந்தோசமாக வாழ வைப்பேன்.
சார், “கொலை பண்ணுவீங்களோ?” அவங்க காதலுக்கு நீ கொஞ்சமும் அருகதை இல்லாமல் போயிட்ட.
தெரிஞ்சுட்டு பேசு.
தெரிஞ்சு தான் பேசுறேன். நீ தான் முட்டாள். கைக்கு கிடைக்கும் மாணிக்கத்தை தவிர விட்ட துரதுஷ்டசாலி என கோபமாக பேசி விட்டு நகர்ந்தாள். விக்ரம் கண்ணீருடனும் கோபமுடனும் அவளை பார்த்தான்.
அன்னம் தன் மகனை இழுத்து ஓங்கி அறைந்தார். என்ன நினைச்சுட்டு இருக்க? கீர்த்தனா மேல இருக்கும் பாசம் உன் கண்ணை மறைச்சிருச்சு விக்ரம் என பேசியவர் கையை பிடித்து, சிலர் பட்டு தான் திருந்துவாங்கம்மா.. வா..நாம கிளம்பலாம் என பரிதி அன்னத்தை அழைத்து சென்றார். விக்ரம் தலையை பிடித்து கொண்டு கதறியவாறு அமர்ந்தான்.
சோபாவின் கை விளிம்பில் படுத்தவாறே தூங்கி விட்டாள் மனீஷா. அவளது கையில் இருந்த அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. விழித்த ரோஹித் முதலில் தலையை பிடித்தான். பின் சத்தம் கேட்டு மனீஷாவை பார்த்து படுக்கையிலிருந்து இறங்கி வந்து அவளது அலைபேசியை எடுத்து அமர்ந்து, அதனை பார்த்தான்.
அதில் இருந்த வீடியோவில் பள்ளிச்சீருடையில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான் புழலரசன். முதலில் அவனது வீடியோவாக வந்தது. பின் இருவருமே தனியே இருக்கும் புகைப்படங்கள் இருந்தது. இதுவரை மனீஷாவிடம் ரோஹித் காணாத புன்னகை அதில் முழுவதும் பிரதிபலித்து இருந்தது.
அடுத்ததில் மனீஷா புழலரசனிடம் காதலை சொன்ன காட்சி படமாக்க பட்டு இருந்தது.
மனூ, “நீ தான் முதல்ல காதலை சொன்னீயா?” என் தூங்கும் அவளை பார்த்தான். அடுத்த வீடியோவை பார்த்து அதிர்ந்து விட்டான் ரோஹித். அவன் மன சாட்சியோ உன்னால மனூவுக்காக உயிரை கொடுக்க முடியுமா ரோஹித்?..பாரு அவனோட வலியை என இடிந்துரைத்தது.
ஆம்..புழலரசனை மனீஷாவின் வாப்பாவும் அண்ணாவும் கொன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஆட்களை வைத்து அடிக்கும் போது தனியாகவே அனைவரையும் சமாளித்திருந்தான் புழலரசன். மனூவின் சொந்தங்கள் என்பதால் அவர்கள் கொடுக்கும் அடியை எவ்வித எதிர்ப்பும் இன்றி அடியை வாங்கிக் கொண்டிருந்தான்.
நிறுத்துங்க என்ற அவளது வாப்பாவும் அண்ணனும் அவன் முன் வந்து நின்றனர்.
எதுக்கு இப்படி அடி வாங்கிட்டு இருக்க? போயிரு..உனக்கு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். என்னோட பேட்டி திருமணம் நடக்கணும் இல்லை அவளையும் கொல்லுவோம் என்றார்.
“மனூ உங்க பொண்ணு. நீங்க எதுவும் செய்ய மாட்டீங்க. அவ கழுத்துல்ல நான் தான் தாலி கட்டப் போறேன்” என்று தாலியை காட்டினான்.
இங்கிருந்து முதல்ல உயிரோட போ..அப்புறம் பார்க்கலாம் அவர் சொல்ல, அவரின் அலைபேசி சிணுங்கியது.
“பொண்ணு ஓடிட்டா” என அந்த பக்கம் உள்ளவர் கூறவும், இவனை முடிங்கடா. அவ எப்ப வீட்டை விட்டு போனாளோ அவளும் செத்து போயிட்டா..இவனை முடிச்சிட்டு நாம அவளை முடிச்சிடுவோம். எனக்கு நம்ம மதம் தான் முக்கியம் என்ற அவரை வெறித்து பார்த்தான் அவன்.
எல்லாரும் அவனை அடிக்க, தடுக்க தொடங்கினான் புழலரசன். பொறுமை இழந்த அவள் அண்ணன் கத்தியால் அவன் முதுகில் கத்தியால் குத்த கீழே விழுந்தான்.
“இவன் சாகட்டும். வாங்கடா” என அவர் கிளம்ப, அவர் காலை பிடித்து அவளை விட்ருங்க என கெஞ்சினான்.
அவர்கள் யாருமே கேட்கலை. கோபமாக அவர்களை பார்த்த புழலரசன், “நில்லுங்க” என நடக்க முடியாமல் அவர்கள் முன் வந்து ஒரு குச்சியை ஊன்றி..என்னோட மனூ மேல யாரும் கையை வைக்க முடியாது. அவ மேல சிறிய கீறல் கூட விழாது. இந்த தாலி அவ கழுத்துல்ல கண்டிப்பாக ஏறும். அவ வேற குடும்பத்து பொண்ணான பின் உங்களால அவளை ஏதும் செய்ய முடியாது.
அவர் சிரித்துக் கொண்டு, “இந்த நிலையிலும் என் முன் நிற்க என்ன தைரியம் இவனுக்கு? போடுங்கடா இவனை” என ஓரமாக நகர்ந்து நின்றார்.
சண்டையில் அவன் வயிற்றில் கோடாரியும், கத்தியும் வெட்டு பட..உயிரே போகும் வலியில் கத்தினான் அவன்.
உங்கள போக விட மாட்டேன்டா.
வாப்பா..அவ அந்த அஜய் வீட்டுக்கு தான் இவனை தேடி போயிருப்பா..என சொல்ல, கீழே விழுந்த புழலரசன் சார்ட் கட்டில் ஓடி வந்தான் அஜய் வீட்டிற்கு இரத்தக்களறியுடன். அதை தான் நாம் முன் பார்த்தோம்.
சாகப் போறோம்ன்னு தெரிஞ்சே இவ்வளவு வலி காயத்துடன் மனூவை காப்பாற்ற முயற்சி செய்திருக்கார். “என்னால இந்த தலைவலியை கூட தாங்க முடியலையே!” என ரோஹித்திற்கு புழலரசன் அவன் கண் முன்னே இறந்த நாள் நினைவிற்கு வந்தது.
உயிர் போகும் நிலையிலும் புன்னகையுடன் இறந்த அவனை எண்ணி ரோஹித் வியந்து சிந்தனையுடன் இருந்தான்.
யாரோ அவனை கவனிப்பது போல இருக்க மனீஷாவை பார்த்தான். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
முக்தா வாசலில் நின்று மனீஷாவை பார்த்து விட்டு, “அண்ணா” என மெதுவாக அழைத்தாள்.
“வா” என முக்தாவை பார்த்து ரோஹித் அழைக்க, இருவரும் படுக்கையில் அமர்ந்து மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.
ரோஹித் புழலரசனை பற்றி முக்தாவிடம் கேட்டான்.
அண்ணா, கேரிங் பர்சன்.அவங்க தான் பள்ளியில் புட்பால் டீம்ல்ல முதலாக இருப்பாங்க. கோச்சிங்க போகும் போது மட்டும் தான் அந்த பசங்களோட பேசுவாங்க. பள்ளியில் பெரிய இடத்து பசங்களா இருக்கிறதுன்னால்ல அவரை யாரும் பெருசா மதிக்க மாட்டானுக. அதை அவரும் கண்டுகொள்ள மாட்டார். ஆனால் பொண்ணுங்க சிலருக்கு அவர் விளையாடும் கேம் பிடிக்கும்.
மனூ அண்ணி அங்க தான் படிச்சாங்க. அவங்களை அதிகமா பார்த்ததில்லை. ஆனால் அக்காவும் தியூவும் பேசி பார்த்திருக்கேன். அவங்க அப்ப இருந்தே அண்ணாவை லவ் பண்ணி இருக்காங்க.
இத்தனை வருட காதலன் திருமணம் செய்யும் நேரம் அவங்க கண் முன்னே அவங்க குடும்பத்தாளுங்களால செத்து போனா எவ்வளவு வலிக்கும்? கொஞ்சம் யோசித்து பாரு. அவங்க உன் பக்கம் தான் அண்ணா..
அவங்களால அவங்க காதலை மறக்க முடியாது. அதுக்காக உன்னை வேண்டாம்ன்னோ இல்லை பிடிக்கலைன்னு இருந்தா உனக்காக அழுதிருக்க மாட்டாங்கடா. அவங்க எப்படி பயந்துட்டாங்க தெரியுமா? அரசன் அண்ணா மாதிரி உனக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயந்துட்டாங்க. அவங்க தான் டாக்டரிடம் விசாரிச்சாங்க. தியூவும் அக்காவும் தான் அவங்கள சமாதானப்படுத்துனாங்க. உன்னை பிடிக்காமல் இல்லைடா..காதலிக்க முடியலை. மத்த படி உன் மேல பாசம் நிரம்பவே வச்சிருக்காங்க.
மனீஷா மெதுவாக திரும்ப, அண்ணா..படுத்துக்கோ. கண்ணை மூடி “அமைதியா இரு” என முக்தாவும் ரோஹித் அருகே படுத்து தூங்குவது போல் நடித்தாள்.
மனீஷா விழித்து அமர்ந்து முக்தாவை பார்த்து எழுந்தாள்.
“இவ என்ன செய்றா?” என இருவர் அருகே வந்த மனீஷா, ஏற்கனவே பெயின்ல்ல இருக்காரு. அவரை தொந்தரவு பண்றா என்று முக்தா அருகே வந்தாள்.
முக்தா வேண்டுமென்றே ரோஹித் மீது காலை போட, முறைத்து இடுப்பில் கை வைத்து அவளருகே வந்த மனீஷா அறையில் மயிலிறகை பார்த்து, அதை எடுத்து வந்து முக்தாவின் பாதத்தில் வைத்து கிச்சுகிச்சு மூட்டினாள்.
பாதம் கூச..தாங்க முடியாமல் “அண்ணி..என்னை விட்ருங்க” என கத்தினாள்.
ஏய், “எதுக்கு கத்துற? வாய மூடு. அவரு தூங்கட்டும். இங்க வா” என அவளை சோபாவில் இழுத்து அமர வைத்து, “நீ எப்ப வந்த? எதுக்கு வந்த?”
சும்மா தான் அண்ணாவை பார்க்க வந்தேன். தூங்கிட்டு இருந்தீங்க. அதான் நானும் படுத்து தூங்கிட்டேன்.
சரி..என ரோஹித்தை பார்க்க, முக்தாவுடன் அவள் சோபாவில் அமரவும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களை மூடிக் கொண்டான்.
“எனக்கு ஹிந்தி பேச கத்து தர்றீயா?” எனக் கேட்டாள்.
“நானா? என்னால முடியாதுப்பா” என முக்தா மனீஷாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
ப்ளீஸ்..ப்ளீஸ் முகி, உனக்கு எதுவும் வேணும்ன்னா கேளு. நான் வாங்கித் தாரேன்.
“எனக்கு நிறைய வேணுமே?”
“நிறையவா? என்ன வேணும்?” வருத்தமாக அவள் கேட்க, முக்தா அடுக்க ஆரம்பித்தாள்.
“பாவம் போல முகத்தை வைத்த மனீஷா இவ்வளவு வேணுமா? என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே?”
“இல்லையா? நான் கிளம்புகிறேன்”.
போகாத..இரு இரு. நான் என்னோட ப்ரெண்ட்ஸிடம் வாங்கித் தாரேன் என மனீஷா அலைபேசியை எடுக்க, அண்ணி “வேண்டாம் வேண்டாம்.. நான் சும்மா தான் கேட்டேன்”.
தியா அண்ணிட்ட கேட்டுக்கலாம்ல்ல..
அவ பாப்பாவை பார்த்துக்கணும்ல்ல. நீங்க எல்லாரும் சோட்டு கூட தமிழ் பேசுறீங்க. அவருக்கு ஏன் தெரியல? என மனீஷா கேட்க, அவனுக்கு அப்ப விருப்பமில்லை.
ஓ..சரி..உனக்கு ஹிந்தி எனக்கு சொல்லித் தர விருப்பமில்லையா?
அப்படியெல்லாம் இல்லை அண்ணி. உங்களையும் அண்ணாவையும் தொந்தரவு பண்ற மாதிரி இருக்கும்ல்ல?
மனீஷா முக்தாவை முறைத்தாள்.
நீங்க அலைபேசியில் ஹிந்தி பேசிக் கத்துக்கோங்க. பின் நாம பேசி..உங்களுக்கு சொல்லித் தாரோம்.
ம்ம்..சோட்டு எங்க? அவனை நான் பார்க்கவேயில்லை.
அவனை பாட்டி பார்த்துக்கிறேன்னு சொல்லீட்டாங்க. நீங்க அண்ணாவை பார்த்துக்கோங்க என முக்தா நகர, “முகி ஒரு நிமிசம்”, உன்னோட அண்ணாவை நீயும் இடையில வந்து பார்த்துக்கிறீயா?
“ஏன் அண்ணி? உங்களுக்கு அவனை பார்த்துக்க பிடிக்கலையா?”
இல்ல..அவருக்கு..என தயங்கி ரோஹித்தை பார்த்தாள். அவன் மீண்டும் நடித்தான்.
முக்தா அவனை பார்த்துக் கொண்டே, அண்ணி எதிலும் தயங்க வேண்டாம். நாம ஒரே குடும்பமாகிட்டோம்ல்ல. அவனுக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு இங்க எல்லாருக்கும் தெரியும்.
ம்ம்..அதான் பிரச்சனை என்றாள்.
“வாட்?” முக்தா கேட்க, “ஆம்” என தலையசைத்து, அவரை போல என்னால அவரிடம் நெருக்கமாகவோ இல்லை காதலிக்கவோ முடியல. அவர் கோபப்படுறார் என அழ ஆரம்பித்தாள் மனீஷா.
“அண்ணி” முக்தா ரோஹித்தை பார்க்க, அவன் அவளை பார்த்தான்.
கோபப்பட்டாலும் பரவாயில்லை. அவர் பக்கம் நான் போகக்கூடாதாம். அது அவருக்கு டிஸ்டர்ப் ஆகுதாம். “அவருக்கு அடிபட்டு இருக்கும் போது நான் எப்படி கண்டுக்காம இருக்க முடியும்?” என மனீஷா மேலும் அழுதாள்.
அண்ணி, அவன் புரிஞ்சுப்பான். நீங்க அவன் சொன்னது போல அவனை விட்டு தள்ளியே இருங்க.
அவர் யாரோ ஒருவர்ன்னா தள்ளி இருக்கலாம். அவர் என்னோட புருசன். “அவர் கஷ்டத்துல்ல இருக்கும் போது யாரோ போல நான் எப்படி வேடிக்கை பார்ப்பேன்?” கோபமாக கண்ணை துடைத்துக் கொண்டே கேட்டாள்.
அவன் உங்க புருசன் தான. அப்படின்னா அவனுக்கு பேசி புரிய வையுங்க. அவன் உணர்வுகளையும் மதிக்கணும்ல்ல. இன்னும் அரசன் அண்ணாவையே நினைச்சிட்டு இருந்தா சரியா? என்ற முக்தாவின் கேள்வியில் மீண்டும் அழுதாள் மனீஷா.
ப்ளீஸ் அண்ணி, அழாதீங்க. காதலித்து மறப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். ஆனால் உங்க வாழ்க்கை மாறிடுச்சு. அண்ணாவே என் அண்ணா கையில் உங்கள விட்டு போயிட்டாங்க. அண்ணா உயிரோட இல்லை. நீங்க ரோஹித்தை புருசனா ஏத்துக்கிட்ட மாதிரி, அவர் காதலையும் ஏத்துக்கோங்க. அவன் நல்லா பார்த்துப்பான். என்ன கொஞ்சம் சேட்டை செய்வான். சமாளிப்பது கஷ்டம் தான் என அவனை பார்த்தாள்.