எதிர்பாராத ரோஹித்தின் திருமணத்தின் அவனை பற்றிய சில குறையுடனான தகவல்களும் வெளியே வந்தது. மீடியா ஆள் ஒருவன் ரோஹித்திடம் அவன் வாழ்க்கை பற்றி கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.
அருகே நின்ற மனீஷா அவன் கையை பிடித்து, நம்மை நாமே பெருமையாக சொல்லக் கூடாது. அதான் அவர் அமைதியாக இருக்கிறார். இனி நீங்களே அவரை பற்றி எழுதும் வாய்ப்பு கிட்டும். அப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் என மலர்ந்த முகமுடன் மனீஷா உறுதியாக பதிலளித்தாள். அவளின் அழகான முகமும் உறுதியான பேச்சும்..அவ்வீட்டின் மருமகள் என்ற நிமிர்வை அனைவருக்கும் உயர்த்தி காட்டியது. அதுவும் ரோஹித் அண்ணன்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை.
“பார்த்துக்கலாம்” என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தன் மகளின் தைரியமான பேச்சு மனீஷாவின் அம்மாவை மகிழ வைத்தது. ஆனால் மற்றவர்கள் அவளை அவதூறாக பேசினர். ஆனால் அவர் யாரையும் கண்டுகொள்ளவில்லை.
கொலைக்குற்றத்திற்காக மனீஷா வாப்பா, அண்ணாவை சிறையில் ஆயுள் கைதியாக்கி இருந்தனர்.
ராணியம்மாவின் இரண்டாவது மகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அவர் மகன்களோ ரோஹித்தை எள்ளலாக பார்த்தனர்.
மனீஷாவிடம் ஏற்கனவே ராணியம்மா எல்லார் பற்றியும் கூறியதால் அனைவரையும் அமைதியாக கவனித்தாள். ரோஹித் அண்ணன்களோ கார்த்திக்கின் பின் செல்ல அதை பார்த்த ரோஹித்தும் அவர்கள் பின் சென்றான்.
ஹாய்..நான் யுகியோட அண்ணன் என அவர்கள் அறிமுகப்படுத்தி விட்டு, யுகி அவங்க ஆபிஸ்ல்ல ஒரு பையனோட சுத்துறாளாம். “உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என அவர்கள் கேட்க, புன்னகைத்த கார்த்திக்கின் முகம் மாறி புருவத்தை சுருக்கினான்.
“புரியலையா?” என ஒரு புகைப்படத்தை காட்ட, ரோஹித் அங்கே வந்து அவர்களை முறைத்தவாறு..வாங்க மாமா போகலாம்..இவனுக..
ஷ்..ரோஹித்..அவங்க பேசுறத பேசட்டும். கொஞ்சம் நேரமாவது போகும்ல்ல..வா..உட்காரு என அவனையும் அமர வைத்து, கூலாக பேசுங்க என்றான்.
“உனக்கெல்லாம் எதுக்குடா திருமணம்? ஏதாவது ஒன்று உருப்படியா செய்வீயா? முதலிரவு மேட்டராவது தெரியுமா இல்லை சொல்லித் தரணுமா?” என பெரியவன் கூச்சமில்லாமல் பேச, கார்த்திக்கோ அவர்களை அடிக்க கையை ஓங்கினான்.
அங்கே வந்த முக்தா அவர்கள் பேச்சில் திகைத்து நிற்க, சீனியர்..என சத்தமாக அழைத்தாள் மனீஷா.
“சீனியரா? ஓ..உங்களுக்கு இந்த பொண்ணை தெரியுமா? பயங்கர கெர்ல் பாய்யா நீங்க?” என சின்னவன் கார்த்திக்கை ஏளனமாக கேட்க, முகி..இவங்க உன்னோட அண்ணாக்கள் தான! என்ற மனீஷா.. அப்ப எனக்கு மாமாக்கள் என திரும்பி அவளிடம் சென்று, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதிலே சொல்ல மாட்டேங்கிற..என முக்தாவை அவர்களிடம் இழுத்து வந்தாள்.
மனூ, “நீ எதுக்கு வந்த?” இருவரும் போங்க ரோஹித் சத்தமிட்டான்.
“உன்னோட சின்ன அண்ணன் இவ்வளவு கோபப்படுவாறா? கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லு” என்று பெரிய மாமா..”கொஞ்சம் குனிங்களேன்” என அவனை குனிய வைத்து அவன் தோளில் கையை போட, ரோஹித் கொதித்தான்.
மாமா, “உங்க சீக்ரட் எனக்கு தெரிஞ்சு போச்சே!”
ஏய், “மனூ என்ன பண்ற?” கார்த்திக் சினமுடன் கேட்க, முகி “உன்னோட அண்ணா பேட்ல பெருசா எதையோ வச்சிருக்காரு. பாரேன்” என சொல்ல முக்தாவும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்து, “என்ன வச்சிருக்க?” என கையை அவன் அனுமதியின்றி தடவி எடுத்தாள்.
அது பார்த்து பதறி பட்டென கீழே போட்டாள் முக்தா. பெண்கள் அணியும் பிரா.
“என்னடா இது?” என முக்தா அவன் சட்டையை பிடிக்க, அண்ணா, “நீயா?” சின்னவன் பெரியவனை பார்த்து கேட்டான்.
அண்ணா..என ரோஹித்திடம் வந்த முக்தா, இது நம்ம சின்ன அண்ணிது. நானும் அண்ணியும் ஷாப்பிங் போன போது வாங்கினோம் என்றாள் அதிர்ச்சியுடன்.
“சின்னவன் தன் மனைவியை காதலித்து கரம் பிடித்தவனாயிற்றே!” சீற்றம் பிறந்த அவன் அவன் அண்ணனின் கழுத்தை பிடித்தான்.
கார்த்திக் அவர்களை விலக்க, சின்னமாமா..”உங்க அண்ணனே உங்க மனைவியை ஏதும் செஞ்சுறாம. பார்த்துக்கோங்க” என்றாள் எள்ளலாக.
பெரிய மாமா, நீங்க என் புருசனை பற்றி பேச தேவையில்லை. அவர் யோகிய்யன் தான். ஆனால் நீங்க தான். அய்யோ பாவம் உங்க மனைவி.
ஏய்..அவன் கோபமாக மனீஷா அருகே வந்தான். ரோஹித் இருவருக்கும் இடையே வந்தான். மனீஷா அவனை நகர்த்தி விட்டு, சின்னமாமாவும் உங்களை ஏமாத்திட்டு இருக்கார்.
ஏய், “நான் என்ன செய்தேன்?” சின்னவன் கேட்க, அவன் கையிலிருந்த அலைபேசியை பார்த்தவாறு “பேட்டனை போடுங்க” என்றாள். அவன் அப்படியே நிற்க, அவன் கையிலிருந்து அலைபேசியை பிடுங்கிய பெரியவன் பேட்டனை போட்டான்.
உங்க தம்பி அசிஸ்டென்ட்டுக்கு கால் பண்ணுங்க போதும். எல்லாமே தெரியும் என்றாள்.
அவனும் செய்ய..பாஸ்..உங்க அண்ணா கம்பெனி கொட்டேசன் கிடைச்சிருச்சு. நான் வேலையை ஆரம்பிக்கிறேன். அவர் கொடுத்ததை விட நாம மூன்று ரூபாய் கோட் செய்தால் கூட போதும். அந்த டென்டர் நமக்கு தான்.
“டேய்” என பெரியவன் சின்னவன் சட்டையை பிடித்தான்.
வாங்க…”நாம போகலாம்” என மனீஷா ரோஹித் கையை பிடிக்க, மனூ..என்ன பண்றன்னு தெரிஞ்சு தான் பண்றீயா?
“வாங்க சீனியர்” அவள் சொல்ல, ராணியம்மா சத்தம் கேட்டது. கீழே கிடந்த உள்ளாடையை காலால் மேசையின் அடியில் தள்ளி விட்டு, ரோஹித்தை மனீஷா அவள் பக்கம் இழுத்து நின்றாள். முக்தா வாயில் கையை வைத்து அவளை பார்த்தாள்.
எல்லாரும் இங்க என்ன பண்றீங்க? என்றவரின் கண்கள் விரிந்தது. மனீஷா ரோஹித் கையை பிடித்திருந்தாள். அவன் அவள் செய்கையில் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பாட்டி..நாங்க சாப்பிட அழைச்சுட்டு போக தான் வந்தோம். இவங்க பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் மாமாக்கள் இருவரும் ஏதோ செய்து கொண்டிருந்தார்களே! என மனீஷா யோசிப்பது போல் சிந்தித்து ஏதோ அவள் பேச வர, ரோஹித் அவளது வாயை பொத்தி, “பாட்டி சும்மா தான்..நாங்க சாப்பிட வாரோம். கிளம்புங்க” என சொல்ல, “சீக்கிரம் வாங்க” என இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.
“வாங்க நாம போகலாம்” என கார்த்திக்கும் அவர்களுடன் கிளம்ப, இணைபிரியா சகோதரர்களிடையே ஊடல் அதிகமானது.
அண்ணீ..சூப்பர்..உங்களுக்கு எப்படி தெரியும்? முக்தா கேட்க, அவரோட கைக்குட்டையை அவர் எடுக்கும் போது பார்த்தேன். அந்த கம்பெனி விசயம் அஜய் சார் யாருடனோ பேசிட்டு இருந்தார். அதை வைத்து கணித்தேன்..
வாவ்..சூப்பர். நீ எங்களோட வொர்க் பண்ண வந்திரு என கார்த்திக் மனீஷாவை அழைக்க, “இதுக்கே என்ன பிரச்சனையெல்லாம் வரப் போகுதோ? எதுக்கு உனக்கு தேவையில்லாத வேலை?” அவனுக பார்க்க தான் நல்லவனுக..எல்லாம் பக்கா பொறுக்கிகள் என்று சினமாக மனீஷாவை பார்த்தான் ரோஹித்.
அண்ணா, அண்ணி உனக்கு உதவ தான செஞ்சாங்க. நீ திட்டுற? முக்தா கோபமாக இருவர் கையையும் பிரித்து விட்டு மனீஷாவை இழுத்து செல்ல, அவளும் அவன் மீது கோபமாக தான் சென்றாள்.
“என்ன ரோஹித்?”
மாமா..அவனுக பேருக்கு தான் அண்ணனுக. என்னை காயப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வாங்க..என வருந்தினான்.
சரி விடு. சாப்பிட போகலாம் என கார்த்திக் ரோஹித்துடன் வந்தான். யுக்தா அவன் அம்மாவுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஹே..கார்த்திக்..என விஜய் அழைக்க, “என்ன?” என புருவத்தை உயர்த்தி கார்த்திக் கேட்க, “ரோஹித் நீ போ” என விஜய் கார்த்திக் கையை பிடித்து இழுத்து சென்றான்.
“என்னடா?”
விதார்த்தால அந்த டானோட ஆளை பிடிக்க முடியலையாம்..அவன் விதார்த்தை ஏமாற்றி கிளம்பீட்டானாம்.
“இது அவனுக்கு ஆபத்துடா?” கார்த்திக் பதற, வினித்தும் இதுக்கு தான் பயப்படுறான். அவன் ஸ்விச்சர்லாந்துல்ல இருக்கான். உடனே அவனுக்கு உதவ போகவும் முடியாது என இருவரும் பேச, ராணியம்மா கார்த்திக்கிடம் வந்தார்.
“என்னாச்சுப்பா?” அவர் கேட்க, “வேலை விசயம் பாட்டி” என விஜய் சொல்ல, “ஓ..ஏதும் உதவி வேணுமா?” எனக் கேட்டார்.
“அங்கேயா? தெரியாதே!” என் மகனுக்கு அங்க பிசினஸ் செய்றவங்க பழக்கம் என்று யுக்தாவின் தந்தையை ராணியம்மா அழைத்தார்.
மா..என்னாச்சு? என்று ராணியம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருவரையும் பார்க்க, வினித்தும் அஜய்யும் அவர்களிடம் வந்தனர்.
விதார்த் அவனை மிஸ் பண்ணீட்டான். அவனை பிடிக்கணுமே! என வினித் மீண்டும் விதார்த்தை அழைக்க, டேய் அவன் அலைபேசியை எடுக்க மாட்டேங்கிறான். “மாட்டிக்கிட்டானோ?” வினித் பதற, பயப்பட வேண்டாம். விதார்த்துக்கு ஏதும் ஆகாது என சிம்மா அவர்களிடம் வந்தான்.
சிம்மா, “அவன் அலைபேசியை எடுக்க மாட்டேங்கிறான்” வினித் சொல்ல, விக்ரம் அங்க தான் இருக்கான். பார்த்துப்பான். எங்க ஆளுங்க சிலரும் இருக்காங்க.
“எப்படி சிம்மா?” அஜய் கேட்க, எப்பொழுது விதார்த் அவனை கண்டுபிடித்தானோ அப்பொழுதே அங்க ஆளை இறக்கிட்டோம். அந்த டானால எத்தனை குடும்பம் அழிஞ்சிருக்கு. அவனை விடக் கூடாது என சிம்மா கொதித்தான்.
கோபமா பேசுறதுல்ல எதுவும் ஆகாது சிம்மா. கொஞ்சம் பொறுமையா இரு. அவன் நம்மிடம் மாட்ட மாட்டான் என கார்த்திக் கூற, கண்டிப்பாக மாட்டுவான் சிம்மா கூறினான்.
இல்ல சிம்மா, இப்ப விசயம் அந்த ரத்தனுக்கு எட்டி இருக்கும். நம்ம ஜாதகமே அவன் கையில் இருக்கும். அதனால நாம தான் கவனமா இருக்கணும்.
விக்ரமையும் விதார்த்தையும் வரச் சொல்லீரு இல்ல அவனுக உயிரோட வர முடியாது என எச்சரித்தான் கார்த்திக்.
கார்த்திக், “நீ தான அவனை பிடிக்காம விதார்த் வர மாட்டான்னு சொன்ன?” சந்தோஷூம் கரணும் கேட்டனர்.
சொன்னேன். அவனுக்கு அவன் உயிரும் முக்கியம். அவனை நம்பி அம்மாவும் தம்பியும் இருக்காங்க. “விக்ரம் கால் போகுதான்னு பாரு சிம்மா” கார்த்திக் கேட்க, அவன் அழைக்க..விக்ரம் எடுத்தான்.
ஏய், விதார்த் விக்ரம் கத்தல் மட்டும் கேட்க, சிம்மா பதறினான்.
ஏழடுக்கு மாடியிலிருந்து விதார்த்தை ஒருவன் தள்ளி விட விக்ரம் கத்திக் கொண்டே அவனை நோக்கி ஓட, விதார்த் நான்கடுக்கு மாடி விளிம்பை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான்.
“நாங்க வந்துடுறோம்” என சொல்லி விட்டு விக்ரம் அலைபேசியை வைக்க, “வந்திடுறோம்மா?” என சிம்மா சிந்தித்தான்.
மாமா..மாமா..என நட்சத்திரா சிம்மாவிடம் ஓடி வந்து துள்ளிக் கொண்டு கத்தினாள்.
“ஸ்டார் என்ன?” சிம்மா பதற, நட்சத்திராவின் பின்னே அவர்களின் மகன் அர்சலன் கையில் இலையுடன் ஓடி வந்தான்.
“அம்மா” என அந்த இலையை நட்சத்திரா மீது அர்சலன் போட, அவளோ கத்தி ஊரை கூட்டி “மாமா மாமா” என அலறினாள். எல்லாரும் அவர்களை தான் பார்த்தார்கள்.
ஹே..சார்ம், “அம்மாவை பயமுறுத்துறீங்க?” என கார்த்திக் அவனை தூக்க, அர்சுவின் பாக்கெட்டிலிருந்து புழு ஒன்று வெளியே வந்தது.
சிம்மா, “போலீஸ்காரன் மனைவி புழுவை பார்த்து பயப்படுறாங்க” என சந்தோஷ் சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர்.
ஏய், “என்ன சொல்லீட்டீங்க?” எங்க மேம் ஒரு அரக்கனையே கொன்றுக்காங்க. அவங்க செம்ம பேமஸ். தெரியும்ல்ல? என தியா நட்சத்திராவிற்கு சாதகமாக பேசி அவர்களிடம் வந்தாள்.
ஓ,…அப்படியா? என வினித் அர்சு சட்டையிலிருந்த புழுவை எடுத்து அவள் மீது போட, அவளும் கத்திக் கொண்டே அஜய்யிடம் செல்ல அங்கே சிரிப்பலை பரவியது.
சார்ம், “உங்க அம்மா பயப்படுறாங்க. நீ பயமில்லாமல் இருக்க?”
“அவன் பூரானையே பிடிப்பான்” என நட்சத்திரா தியாவை பார்த்தாள்.
ரதுவ எங்க?
“முக்தாவோட” என தேடிய தியா கையை காட்டினாள். முக்தா சின்ன பசங்களுடன் ரதுவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அனைவரும் புன்னகையுடன் பார்த்தனர்.
ரோஹித் அவர்களிடம் வந்து, “சோட்டுவும் மாமாவும் வரலையா பாட்டி?” எனக் கேட்டான்.
அவருக்கு வேலை இருக்காம் ரோஹித். முடிச்சிட்டு சோட்டுவையும் அழைச்சிட்டு வருவார். நாளைக்கு வந்திருவாங்க என்று ராணியம்மா கூறினார்.
“ஹலோ சார்” என்ற அழைப்பில் சிம்மா, “விதார்த், விக்ரம்..அதுக்குள்ள இங்கேவா?” என திகைப்புடன் கேட்டான்.
அண்ணா. நாங்க காலையிலே வந்துட்டோம்.
“விதார்த்துன்னு கத்துன” சிம்மா விக்ரமிடம் கேட்க, குழந்தையை ஒருவன் தூக்கிட்டு போனான். அதான் காப்பாற்ற சென்ற விதார்த் கட்டிடத்திலிருந்து விழப் பார்த்தான். நான் காப்பாற்றி விட்டேன்.
டேய், “என்னாச்சு? நீ ஓ.கே தான?” கார்த்திக் அர்சலனுடன் விதார்த்திடம் வந்தான்.
நான் ஓ.கே தான் சார். அவனை பிடிச்சிட்டோம் சார் என்று விதார்த் சாதாரணமாக கூற, “அந்த டான் ரத்தன் ஷெட்டி ஆளையா பிடிச்சுட்டீங்க?” ராணியம்மா வியந்து கேட்டார்.
எஸ் மேம், சிம்மா சார் நீங்களும் என கார்த்திக்கையும் அவன் நண்பர்களையும் விதார்த் பார்க்க, ம்ம்..வா போகலாம் என அவர்கள் சென்றனர்.
பரவாயில்லை பசங்க கில்லாடியாக தான் இருக்காங்க. தம்பி அந்த ஆளுக்கு உங்களை அடையாளம் தெரியுமா? விதார்த், விக்ரமை பார்த்து கேட்டார் யுக்தாவின் தந்தை.
“நீங்க தான் விதார்த்தா? “என ரோஹித் அவனை பார்க்க, ஆம் என இல்லை சார், யாருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று தலையசைத்து விட்டு வெளியே சென்றான். மற்றவர்களும் வெளியே செல்ல, ரோஹித் நகர, “நீ எங்க வர்ற?” இதுல நீ தலையிட வேண்டாம்ன்னு சொன்னேன்ல்ல. நாங்க பார்த்துக்கிறோம் என அஜய் அவர்களுடன் சென்றான்.
“என்ன பண்றாங்க? யாரை பிடிச்சிருக்காங்க?” தியா மனம் பதற, ராணியம்மாவை பார்த்தாள். விதார்த் தியா, ராணியம்மாவை பார்த்துக் கொண்டே சென்றான்.
“ஒன்றுமில்லைம்மா. வேலைய பாருங்க” என ரோஹித்தையும் உள்ளே அழைத்து சென்றார் ரோஹித்தின் தந்தை.
இவன் பெயர் மல்லேஸ்வர். விஜயவாடாவின் டான் ரத்தன் ஷெட்டியின் இடக்கை. இவனை பார்க்க கூட முடியாது. நல்ல நேரம் தனியாக மாட்டினான். “இவனை எங்கே பாதுகாப்பாக வைத்திருப்பது?” விதார்த் சிம்மாவிடம் கேட்டான்.
இவனை நாங்க பாதுகாப்பாக வைத்திருக்கோம். இவனால் வெளியே நகர கூட முடியாது. மயக்கம் தெளியும் முன் இவனை கொண்டு செல்லணும் விக்ரம் சொல்ல, “விக்ரம் நம்ம இடத்துக்கு போகலாம்” சிம்மா சொல்ல, “நானும் வருகிறேன்” என கார்த்திக் விதார்த் சொல்லிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
நோ..யாரும் வேண்டாம். அது எங்க சீக்ரெட் ஹடு அவுட். எங்களால யாருக்கும் சொல்ல முடியாது என சிம்மா காரை எடுக்க, மல்லேஸ்வர் அருகே விக்ரம் அமர்ந்து கொண்டான்.
“விசாரிக்கணுமே!” கார்த்திக் கேட்க,..ம்ம்..பண்ணலாம் என அவர்கள் சென்றனர்.
இரவு ரோஹித் அறையில் அவன் தியாவின் பிரச்சனையை சிந்தித்துக் கொண்டிருக்க மனீஷா முக்காடிட்டு அவன் முன் வந்தாள்.
அவன் அவளை அமரச் சொல்லி தயக்கமுடன் அவளது முக்காடில் கை வைக்க எண்ணினான். அவளிடம் ராணியம்மா சொல்லி அனுப்பியதால் அவள் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரோஹித் அவளது முக்காடை விலக்கி மனீஷாவை பார்க்க, அவள் எழுந்து அவளது ஆடையை எடுத்து விட்டு குளிக்க சென்று விட்டாள்.
ரோஹித் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு புதிய எண்ணிலிருந்து மேசேஜ் வந்திருந்தது. அதை எடுத்து பார்த்தவன் அதிர்ந்தான்.
உன்னையும் உன் பொண்டாட்டியையும் சும்மா விட மாட்டேன் என இருந்தது.
யாரு நீங்க?
உனக்கு தெரிஞ்சவங்க தான்.
என் அண்ணாவா?
பதிலில்லை. வெளியே சென்று விட்டனர்.
“யாராக இருக்கும்?” என ரோஹித் சாதாரணமாக விட்டு விட்டான்.
மனீஷா கையில்லாத டாப்பும், ஸ்கர்ட்டுமாக படுக்கைக்கு வந்து சிந்தனையுடன் அவனையும், அவனது அறையையும் பார்த்தாள்.
ரோஹித் எழுந்து அவனாகவே சோபாவில் படுத்துக் கொண்டான். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மனீஷா படுக்கையில் படுத்தாள்.
அது..என அவனை பார்க்காமலே..எப்படியும் உங்களுடன் தான இருக்கணும். அதான் உதவினேன். “எனக்கு பிரச்சனைன்னா நீங்க உதவ மாட்டீங்களா?”
“உதவியா?” என காற்றாகி போன உணர்வுடன் அறையை இருட்டாக்கி படுத்துக் கொண்டான்.
ம்ம்..உதவி தான். என்னோட அலா சொல்லி நான் கேட்கலாம். ஆனால் அவன் சொல்லி உங்க வாழ்க்கையையே எனக்காக மாத்திகிட்டீங்கல்ல? உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு என ரோஹித்தை பாராட்டினாள்.
அவனுக்கோ, “ஏன் கேட்டோம்?” என்றாகிப் போனது. அவன் அமைதியாக இருக்க, “குட் நைட்” என்றாள்.
“குட் நைட்” என சொல்லீ படுத்தவனுக்கு நித்திராதேவி தூர சென்று விட்டாள்.
வெகு நேரம் படுத்திருந்து விட்டு படுக்கையருகே வந்து அலைபேசி ஃப்ளாஸை உயிர்ப்பித்து மனீஷாவை பார்த்தான். அவள் கன்னத்தில் கண்ணீர் தடம் அதிகமாக அங்கங்கு தெரிந்தது. அவன் மனம் அவளுக்கு ஆறுதலாக அணைக்க துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டு பால்கனி சென்று நிலவு மங்கையை பார்த்து, “உன்னை போல் அவள் முகம் பிரகாசித்தாலும் மனம் குளிராமல் நொந்து கொண்டிருக்கிறதே!” என வருந்தினான்.
காலையிலே கார்த்திக் வினித் வீட்டிற்கு வந்தான்.
ஹே..கார்த்திக், “என்ன இந்த நேரத்துல்ல வந்திருக்க?” என வினித் கேட்க, காபித் தம்ளருடன் அனைவரும் அவனை பார்க்க, அவன் பின்னே சந்தோஷூம் ரஞ்சனும் வந்தனர். சந்தோஷ் கையில் சோட்டுவை பார்த்து அதிர்ந்து அனைவரும் எழுந்தனர்.
சோட்டு, “எப்படி உங்களுடன்?” என ராணியம்மாவின் மூத்த மருமகள் பதறி தன் பேரனிடம் வந்தார். அவனுக்கு அடிபட்டு இருந்தது.
“சோட்டு” என முக்தா அழைக்க, “அத்த” என அழ ஆரம்பித்தான் அவன்.
“ஆருஷ் மாமாவ எங்க? தலையில் தட்டிய ரோஹித்.. அப்பாவ எங்க?” என அவனிடம் வந்தான்.
“மாமா.. அப்பா”என அவன் மேலும் அழுதான்.
“என்னாச்சு கார்த்திக்?” யுக்தா அவனிடம் வந்தாள்.
அவன் தயங்கி, அனைவரையும் பார்த்து விட்டு வெளியே பார்க்க, ஸ்டெச்சரில் சடலமாக ஆருஷை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
அய்யோ, “அவருக்கு என்னாச்சு?” என எல்லாரும் பதறினார்கள்.
கார்ல்ல வரும் போது விபத்தாகி இருக்கு. நாங்க சிம்மா, விக்ரமை பார்த்துட்டு நேரம் கழித்து தான் எங்களுடைய வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம். அதிகாலை நேரமென்பதால் அதிகமாக வாகனங்கள் இல்லாமல் சாலை வெறிச்சோடி இருந்தது.
அழும் சத்தம் கேட்டு தான் அவ்விடம் விரைந்து பார்த்தோம். இவர் காரில் இறந்திருந்தார். பையன் காரின் வெளியே விழுந்திருந்தான். பையனுக்கு அங்கங்கு காயமாக இருந்தது. ஹாஸ்பிட்டல் போயிட்டு வர நேரமாகிடுச்சு என கரண் சொன்னான்.
ராணியம்மா இடிந்து அமர்ந்து விட்டார். சோட்டுவின் பாட்டி, தாத்தா கதறி அழுதார்கள். மற்றவர்களும் கண்ணீருடன் இருக்க, சோட்டு தியாவின் தோளில் சாய்ந்து அழுதான்.
மாக்கு தான் என்னை பிடிக்காது. போயிட்டா..ஆன்ட்டி அப்பாவுக்கும் என்னை பிடிக்கலை போயிட்டார்.
அப்பா..அப்பா..என தியாவிடமிருந்து சோட்டு எழுந்து ஆருஷை வைத்திருந்த பெட்டியின் மீது சாய்ந்து..வாப்பா..வா..என அழுதான்.
“தன் போல இந்த சின்னப்பையனுக்கும் நிலையா? மாஷா அல்லா..ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” மனீஷா சோட்டுவை பார்த்து கண்ணீர் உதிர்த்தாள்.
விசயத்தை இரண்டாமவர் ஆருஷ் வீட்டிற்கு சொல்ல, அவர்கள் ஆருஷ் உடலை டெல்லிக்கு எடுத்து வரச் சொன்னார்கள். அவர் உடலை அடக்கம் சீக்கிரம் செய்ய வேண்டும் என இருக்க, அதனை அனுப்பி அவர்களை வர வைத்தனர்.
“இந்த குடும்பத்துக்கு எப்ப என் பிள்ளை வந்தானோ அப்பவே அவன் உள்ளம் நோக ஆரம்பித்து விட்டான்” என ஆருஷ் தாய் சொல்லிக் கொண்டே அழ, ராணியம்மாவின் இரண்டாவது மருமகள் கோபமாக பேச, சண்டை ஆரம்பித்தது.
நிறுத்துங்க. “முதல்ல மாமாவுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க. அப்புறம் என்னமும் செய்யுங்க” என ரோஹித் சீற்றமுடன் கத்தினான்.
சோட்டு, ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள, சோட்டுவை தூக்கிக் கொண்டு அவன் அமர, அனைத்து காரியங்களையும் சோட்டுவை வைத்து செய்து முடித்தனர்.
முடித்த பின் பிரச்சனை அதிகமானது. சோட்டுவை அவர்கள் அழைத்து செல்வதாக தூக்கிக் கொண்டனர். அவனோ அவன் பாட்டி, தாத்தாவிடம் கையை நீட்டி..”பாட்டி” என அழுதான். ஆனால் ஆருஷின் தந்தை சோட்டுவை துக்கிச் செல்ல, இவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
ஒரு நிமிசம்..என்ற ரோஹித், “சோட்டு உங்களுடன் வருவதாக இருந்தால் தாராளமாக அழைச்சிட்டு போங்க” என்றான்.
அவன் சின்னப்பிள்ளை. அவனுக்கு என்ன தெரியும்?
எனக்கு தெரியும் பாட்டி. நான் அத்தை, மாமாவோட தான் இருப்பேன் என சோட்டு சொல்ல, “சொன்னா கேட்க மாட்டாயா?” என அவர் அவனை முதுகில் அடிக்க, அனைவருக்கும் சீற்றம் மிகுந்தது.
அதிசயமாக எழுந்த ரோஹித்தின் சின்ன அண்ணன், பையன் விருப்பப்படி எங்களுடன் தான் இருப்பான். “எங்க முன்னாடியே இப்படி அடிக்கிறீங்க? அவனை நீங்க எப்படி பார்த்துப்பீங்க?” என கோபமாக கேட்டான்.
“அதை பத்தி யாருடா கேட்பீங்க?” அவன் எங்க பேரன். எங்க வாரிசு.
யோவ், முதல்ல உன் பிள்ளைங்க வாழ்க்கையை பாரு. அப்புறம் சோட்டுவை பத்தி பேசலாம் என்று சோட்டுவின் சித்தப்பா பேசவும், ரோஹித் அப்பா கண்கள் கலங்கியது.
வந்ததில் இருந்து அமைதியாக இருந்த கார்த்திக்..ஓ.கே சோட்டு இருவருக்கும் பேரன் தான? நாம கோர்ட்டுல்ல பார்க்கலாம். ஆனால் கோர்ட் போனால் சோட்டுவை தான் கேட்பாங்க. அதை விட நீங்க அவனை அடித்ததாக ஒரு வார்த்தை சொன்னால் நீங்க குடும்பத்தோட உள்ள போகணும். தயாரா இருங்க. அதுவரை அவன் என்னோட இருக்கட்டும் என சோட்டுவை பார்த்து, “என்னோட வர்றீயா?” எனக் கேட்டான்.
ரோஹித் சோட்டுவிடம் வந்து, “அவங்க வீட்ல இருக்கிறியா? அவங்க வீட்லையும் பாட்டி, தாத்தா இருக்காங்க” என அவன் கேட்க, சோட்டு சீமாவின் பெற்றோரையும் ராணியம்மாவையும் பார்த்தான்.
அவர்கள் கண்ணசைக்க, எங்களால ஒத்துக்க முடியாது. “யாருன்னு தெரியாதவங்கட்ட பிள்ளையை எப்படி விட முடியும்?” ஆருஷ் தாய் கேட்க, ஆமா, “என்னவொரு அக்கறை?” என பெரியவனின் மனைவி எகத்தாளமாக கேட்டாள்.
“பெரியவங்க பேசும் போது இடையில பேசக் கூடாதுன்னு தெரியாதா?” அவன் அப்பா சத்தமிட்டார். ராணியம்மா அவளை முறைத்தார்.
அந்த பையன் தெரியாதவன் இல்லை. எனக்கு நம்பிக்கையான பையன் தான். இவங்க எல்லாருமே டிடெக்டிவ்ஸ்..சோ..நீங்க சோட்டுவை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
“டிடெக்டிவ்வா?” என சோட்டு பாட்டி, தாத்தா..கார்த்திக்கையும் அவன் நண்பர்களையும் பார்த்தனர்.
கார்த்திக்..பையன் முடிவை தான் கோர்ட்டுல்ல கேட்பாங்க. ஆனால் இதற்கான சரியான தீர்வு இதில்லை. அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னா இந்த தீர்வு சரிவராது என்றான் விஜய்.
“என்ன செய்யலாம்? சொல்லு?” கார்த்திக் கேட்க, பெரியவங்களுக்கு பின் யாரு சோட்டுவை பார்த்துப்பாங்கன்னு இரு குடும்பத்திலும் சொல்லுங்க. ஆண் பிள்ளைகள் தான் வரணும் என்றான் விஜய்.
ஆருஷின் தம்பி தயங்கியவாறு தன் மனைவியையும் பெற்றோரையும் பார்த்தான். மனைவி முகம் சுருங்கியது. ஆனால் அவன் அம்மாவோ, “என் பையன் பார்த்துப்பான்” என அவனை முன் நிறுத்தினார்.
“மனைவியோட தனியா வந்து நில்லுங்க” என விஜய் சொல்லி விட்டு ராணியம்மாவை பார்த்தான். ராணியம்மா இரண்டாவது மகனின் சின்ன பேரனை பார்த்தார். ரோஹித்தின் சின்ன அண்ணன். அவருக்கு குழந்தை இல்லை. “அவர் மனைவி முன் வர அவன் வேண்டாம்” என அவளை நிறுத்தினான்.
ரோஹித் முன் வந்தான்.
“நேற்று தான் திருமணமே முடிஞ்சிருக்கு” என ராணியம்மா சொல்ல, “அதனால என்ன பாட்டி? நாங்க பார்த்துப்போம்” என ரோஹித் அருகே வந்து நின்றாள் மனீஷா.
“சூப்பர் மனு” என தியா மனதினுள் அவளை மெச்சிக் கொண்டாள்.
“இவளை புரிந்து கொள்ளவே முடியலையே!” என ரோஹித் அவளை பார்த்தான்.
“ஆனால்ம்மா..”ராணியம்மா மீண்டும் தயங்க, “சோட்டு இனி எங்க பையன் பாட்டி” என்றாள் தீர்க்கமாக.
ஆருஷ் அன்னையோ தன் மருமகளை முறைத்து தள்ளினார். “வாயில எதையும் வச்சிட்டு இருக்காளோ?” என அவர் மனதினுள் அவளை வதைத்தார்.
ஏம்மா, “உனக்கு சோட்டு பத்தி என்ன தெரியும்?” சோட்டுவின் தந்தை வழி தாத்தா மனீஷாவிடம் கேட்டார்.
தெரியாது தான். “அவன் சின்னப் பையன் தான? என்னோட பையன் மாதிரி பார்த்துப்பேன்”.
அவன் பெரியவன் மாதிரி நடந்துப்பான். அடிப்பான்..வாய்க்கு வந்ததை பேசுவான் என்றார் ஆருஷ் அன்னை. சோட்டுவின் பாட்டி.
அது அவன் வளர்ந்த இடம் பொறுத்தது. சின்னப்பசங்க நாம செய்வதை தான் நமக்கு செய்வாங்க. இத்தனை நாள் உங்க வீட்ல தான சோட்டு வளர்ந்தான் என அவரையே திருப்பினாள்.
என்னம்மா, “எங்களை சொல்ற?”
அச்சோ..நான் யாரையும் சொல்லலை. இது பொது நியதி. நாம சொல்லிக் கொடுக்கிறதை தான் பசங்க செய்வாங்க. அதை தான் சொன்னேன்.
மனூ, “போதும்” என விஜய் புன்னகைத்தான். தியா அவனை முறைத்தாள்.
“சோட்டு இங்க வா” என விஜய் சோட்டுவை அழைத்து, “நீ சித்தப்பா கூட இருக்கணுமா? உன்னோட மாமா கூட இருக்கணுமா?” எனக் கேட்டான்.
இரு ஜோடிகளையும் பார்த்த சோட்டு, “மாமா” என்றான்.
சரி..வெயிட் பண்ணுங்க என விஜய் அதிரடியாக சோட்டுவை அடித்தான். அனைவரும் திகைத்து போனார்கள்.
ரோஹித்தோ சினமுடன் விஜய்யை அடிக்க வந்தான். கார்த்திக் அவன் கையை பிடித்து தடுத்தான்.
மனீஷா அழுது கொண்டிருந்த சோட்டுவிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தாள். முக்தா, யுக்தா, அவர்களின் சின்ன அண்ணி, பாட்டி, தாத்தா அனைவரும் சோட்டுவை சூழ்ந்து கொண்டனர்.
சீனியர், “எதுக்கு அவனை அடிச்சீங்க? இப்படியா அடிப்பீங்க? அவன் சின்னப்பையன்” என சீறினாள் மனீஷா.
“இதுக்கு தான் அடித்தேன். இதிலே பதில் கிடைத்து விட்டதே!” என்றான் விஜய்.
“வாட்?” என ரோஹித் கோபமாக கேட்டான்.
எஸ்..முதல்ல சோட்டு சித்தப்பா. நான் கேட்டவுடன் தயங்கி தன் மனைவி அம்மாவை பார்த்தார். அம்மாவின் வற்புறுத்தலால் தான் முன் வந்தார். அவர் மனைவி முகத்தை கொஞ்சம் பாருங்கள். “எள்ளும் கொள்ளும் வெடிக்குது”
ராணியம்மா ரோஹித்திற்கு நேற்று தான் திருமணமாகி இருக்கு என்ற போது, உங்க பக்கமிருந்து யாரும் ஏதும் பேசவில்லை. சோட்டுவை பார்த்துக் கொள்ள எண்ணி இருந்தால் ராணியம்மா சொல்ல வேண்டியதை நீங்க சொல்லி இருக்கணும். பேசவேயில்லை நீங்க.
அடுத்தது முக்கியமானது. நான் யாரோ ஒருவன். சின்னப்பையன் சோட்டு. அவனை அடிக்கிறேன். கொஞ்சம் கூட பதறவில்லை. சாதாரணமா நிக்குறீங்க? இதே போல தான் பார்த்துப்பீங்களா? என விஜய் சோட்டுவின் தந்தை வழி தாத்தா, பாட்டியை பார்த்து, உங்க பையன் இறந்து சடலமாக இருக்கும் போது நீங்க உங்க பேரனை கண்டுகொள்ளவேயில்லை. “உங்களோட மகன் இறந்திருந்தாலும் உங்க பேரனையும் கவனிக்கணுமா? இல்லையா?” என அவர்கள் மீதுள்ள தவறையும் சுட்டி காட்டினான்.
இதற்கு மாறாக ராணியம்மா வீட்ல தான் செய்தாங்க. நாங்க நடுநிலையா தான் நின்னு பேசுறோம். “என்னடா சொல்றீங்க?” விஜய் நண்பர்களிடம் கேட்க,
ம்ம்..சரிதான். இவங்க கூட தான் சோட்டு இருப்பான். இதுக்கு மேல அவனிடமோ இல்லை இந்த குடும்பத்திடமோ பிரச்சனை பண்ணீங்க இந்த வீடியோ வைரலாகும் என சந்தோஷ் காட்ட, “வீடியோவே எடுத்துட்டியா?” விஜய் கேட்டான்.
ஆமாடா, யாரையும் நம்ப முடியாதுல்ல..
“இவன் வேற” என கரண் சந்தோஷை முறைத்தான்.
விஜய் சோட்டு அருகே மண்டியிட்டு, “சாரிடா..அங்கிளை நீயும் அடிச்சுக்கோ” என கன்னத்தை காட்டினான். ஆனால் சோட்டு நல்ல பிள்ளையாக “தேங்க்ஸ் அங்கிள்” என அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
விஜய் அவனை இழுத்து அணைத்துக் கொண்டு, “உனக்கு உன்னோட ரோஹித் மாமா மட்டுமல்ல..நாங்க எல்லாரும் இருக்கோம்” என சொல்ல, அவன் நண்பர்களும் சோட்டுவை அணைத்தனர்.
சோட்டுவின் பாட்டி, தாத்தா குடும்பம் கிளம்பியது. சோட்டு அவர்கள் முன் வந்து அவன் பாட்டி தாத்தா கன்னத்தில் முத்தமிட்டு, “பாட்டி தாத்தா..நான் உங்களை பார்க்கவும் வருவேன்” என்றவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்து முத்தமிட்டு விடை பெற்றனர்.
தியா, “சூடா காபி” என சந்தோஷ் அமர, “இந்தா வாரேன்..என்னடா பிளான் இது? எங்க சோட்டுவையே அடிச்சுட்ட?” என தியா விஜய்யை விரட்டினாள். அவளை பார்த்து சோட்டு சிரித்துக் கொண்டே, ஆன்ட்டி..அஜய் அங்கிளை கல்யாணம் செய்து என்னை ஏமாத்தீட்டீங்க. அஜய் அங்கிள் மறந்துறாதீங்க “சுட்கி” என சோட்டு புன்னகையுடன் சொல்ல, அவனை தூக்கிய அஜய்..அவனுடன் விளையாண்டு கொண்டே அவனறைக்கு தூக்கி சென்றான் ரதுவை பார்க்க.