நீ நான் 10

ரோஹித் வினித்திடம் சென்று, “மாமா அந்த விதார்த்தை பிடித்தால் தியா சொன்ன பெரியவன் யாருன்னு தெரியும்ல்ல?” எனக் கேட்டான்.

அப்படி சரியாக கூற முடியாது. முதல்ல விதார்த்தை சந்திக்க இவனுக ஏற்பாடு செய்யட்டும்.

மாமா, “அப்ப எதுக்கு?” ரோஹித் கேட்க, தியா திவ்யாவை தான டார்கெட் பண்ண சொன்னா? அது வேஸ்ட். அதுக்கு பதில் மூலக்காரணமானவனை தான் அழிக்கணும் என்றான் வினித்.

“யாரு?” ரோஹித் கேட்க, திவ்யா அப்பா ரத்தன் ஷெட்டி..

வாட்? மாமா..அவர் டான். நாம பக்கம் கூட போக முடியாது. அவனால் தான் உங்களுக்கு என ரோஹித் அதிர்ந்து வினித்தை பார்த்தான்.

மரத்தின் கிளைகளை அறுத்தால் வளர்ந்து விடும். வேரை அறுத்தால் தான் சரியாக இருக்கும்.

வேண்டாம் மாமா. பயமா இருக்கு ரோஹித் சொல்ல, நீ உன் வேலையை பாரு என வினித் கத்த, வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வேலையை நிறுத்தி வினித்தை பார்த்தனர்.

விஜய்யும் கார்த்திக்கும் வெளியே வந்தனர். அனைவரும் ரோஹித்தை பார்ப்பதை கவனித்து அவனிடம் இருவரும் வந்தனர்.

வினித் சென்றிருந்தான். ரோஹித் வியர்த்து வழிய நின்றிருந்தான்.

விஜய் அவன் தோளை தொட, சுயம் வந்த ரோஹித்.. இம்பாசிபுல். நோ..இது நடக்கக்கூடாது. நோ..நடக்கவே கூடாது என புலம்பியவாறு இருவரையும் பார்த்தான்.

நான் போகணும். இட்ஸ் டேஞ்சர் என ரோஹித் நகர, கார்த்திக் அவனை இழுத்து, “எது டேஞ்சர்?” எனக் கேட்டான்.

என்னை விடு..இடியட் என கார்த்திக்கை தள்ளிய ரோஹித், நீயெல்லாம் மனுசனேயில்லை. உனக்கு தெரியும் போது இருக்கு? என ரோஹித் பேச, கார்த்திக் புரியாமலும் கோபத்திலும் அவனை அடிக்க வந்தான்.

கார்த்திக் என்ற சத்தத்தில் கையை இறக்கினான் அவன்.

அஜய் அங்கே வந்தான். ரோஹித்தை பார்த்து, “என்ன பிரச்சனை?” எனக் கேட்டான்.

“தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?” என்னோட ராணியம்மா முதல் முறையா பெரிய தப்பு பண்ணீட்டாங்க. உங்களுக்கு தியாவையும், யுக்தாவும் அவனையும் கல்யாணம் செய்து வச்சிருக்கக் கூடாது. எனக்கு இல்லைன்னாலும் தியாவை நல்லா புரிஞ்சவனா பார்த்து செய்து வச்சிருக்கலாம்.

யுக்தாவிற்கு எத்தனையோ நல்ல வரன் வந்தது. இவனை எப்படி தான் செலக்ட் பண்ணாங்களோ? என தலையில் அடித்தவன்…நீங்க இருவரும் ஒரே மாதிரி தான் என கார்த்திக், அஜய்யை சொல்லி விட்டு, நான் பேசிட்டு வந்துடுறேன் அஜய் சார் என கண்ணில் கண்ணீருடன் நகர்ந்தான் ரோஹித்.

“என்ன சொல்றான் இவன்?” கார்த்திக் புலம்ப, அஜய்க்கு அவனது கூற்றில் உள்ளம் பதைத்தது. நானே என் தியாவை கஷ்டப்படுத்துறேன். அதை தான் சொல்கிறான் என தெளிவாக புரிந்தது.

அஜய் அலைபேசி சிணுங்க, அவன் அதை எடுத்தான். சிம்மா விசயத்தை கூறி, திலீப்பிற்கு உதவ சொல்லி சொன்னான்.

ம்ம்..எப்ப வரணும்? என்ன செய்யணும்? பிளான் இருக்கா? அஜய் கேட்க, அவர்களது பிளானை சொல்லி அப்சராவின் பாதுகாப்பை அஜய்யிடம் கொடுத்தான்.

“அந்த பொண்ணு நம்பர் அனுப்பு சிம்மா” என அஜய் வாங்கி விட்டு தன் நண்பர்களை பார்த்தான். விஜய்யும் கார்த்திக்கும் அஜய்யை பார்த்தனர்.

அஜய் தன் அறைக்கு அவர்களை அழைத்து சென்று விசயத்தை சொல்லி இரவு சந்திக்கலாம் என அனுப்பினான். அவர்கள் சென்றனர்.

ரோஹித் தன் பாட்டி ராணியம்மாவை அழைத்து பேசினான்.

மாமா..இப்படி சொல்கிறார் என ரோஹித் புலம்ப, அவர் அமைதியாக இருந்தார்.

பாட்டி,” எதுக்கு அமைதியா இருக்கீங்க?” மாமாவுக்கு ஏதாவது ஆகி விட்டால்.. நம்ம முகிக்கு அவரை பிடிச்சு தான் இருக்கு. எனக்கு பயமா இருக்கு. யுகி மாதிரி முகிக்கு ஆகிடக் கூடாது என ஆதங்கமாக கத்தினான்.

அவருக்கு ஒன்றுமாகாது. உங்களுக்கு துணைக்கு எப்பொழுதும் ஆள் இருப்பாங்க. எல்லாருக்கும்..கவலைப்படாத. ஆனால் அவரை தனியாக யாரையும் சந்திக்க விட்றாத.

“என்னால எப்படி முடியும்?” நான் அஜய் சாருடன் தான இருப்பேன்.

ம்ம்..வினித் மாப்பிள்ள உன்னிடம் சொல்லாமல் ஏதும் செய்ய மாட்டார்.

பாட்டி, எனக்கு அப்படி தோணலை. அவர் கோபமா இருக்கார். “தியா பற்றி நீங்க தெரிஞ்சே என்னிடம் சொல்லைல்ல?” ரோஹித் கேட்டான்.

எல்லாத்துக்கும் நேரம் வேணும்ப்பா. நாமே பிரச்சனையை இழுத்துக்கக் கூடாது. நான் மறைத்ததில் எந்த தப்பும் இல்லை.

தியா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. அங்க அஜய் கோபமா தான் இருப்பான். தியா அமைதியா இருக்காலோ இல்லையோ நீ அமைதியா இரு.

என்னால முடியாது. அவர் ஓவரா பண்றார் பாட்டி.

கண்ணா, அமைதி தான் நமக்கு வெற்றியளிக்கும். எல்லாரையும் பார்த்துக்கோ. பிரச்சனைன்னா உடனே நான் உனக்கு அனுப்பும் நம்பரை அழைத்து விடு. எங்கிருந்தாலும் நம்ம சாஸ்திரி வந்திருவார்.

ம்ம்..சரி பாட்டி. முயற்சி செய்கிறேன் என்று அலைபேசியை வைத்து விட்டு அஜய்யை பார்க்க சென்றான்.

அஜய் அவனை ஏற இறங்க பார்க்க, ரோஹித் அமைதி அமைதி என அவனுக்குள் அவனாக சொல்லி விட்டு, “சொல்லுங்க சார்? எனக்கு என்ன வேலை?” எனக் கேட்டான்.

இப்ப தான் யாரோ கோபப்பட்டது போல இருந்தது அஜய் கேட்க, சாரி சார். நான் இப்ப உங்க எம்பிளாயி. வொர்க்க சொன்னால் நான் பார்க்க போவேன் என அஜய்யிடம் சொல்ல, அஜய் ஓர் பெல்லை அழுத்த சிலர் அவன் முன் வந்தனர்.

உங்க பிராஜெக்ட்டை சார்கிட்ட காட்டுங்க. அவர் இதை பார்த்து என்னிடம் தெளிவாக விளக்கட்டும் என்று அஜய் ரோஹித்தை பார்த்து, “ஓ.கே வா?” எனக் கேட்டான்.

“வாங்க சார்” என மற்றவர்கள் அவனை அழைத்து சென்றனர். அஜய் செல்லும் ரோஹித்தை பார்த்தான்.

மதிய உணவு நேரத்தில் உண்ண அழைக்க சென்றான் அஜய். ரோஹித் அனைவருடன் சேர்ந்து ஜாலியாக பேசியும், கம்பெனி பற்றிய மற்ற விவரங்களையும் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அஜய்யை பார்த்து அனைவரும் எழ, அவனும் எழுந்தான்.

சாப்பிட்டு வந்து வேலையை பாருங்க அஜய் சொல்ல, மற்றவர்கள் கிளம்ப, எனக்கு பசிக்கலை. நான் இன்னும் இதை பற்றி தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு.

சாப்பிட்டு வந்து பாரு அஜய் சொல்ல, ரோஹித் அலைபேசி அழைத்தது.

எண்ணை பார்த்து அவன் கட் செய்ய, மறுபடி மறுபடி அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அஜய் அவனையே பார்க்க, இம்முறை ரோஹித் எடுக்கும் முன் அஜய் எடுத்து அமைதியாக ஸ்பீக்கரில் போட்டான்.

ரோஹித், “சாப்பிட வரலையா?” வரும் போது முடிந்தால் அஜூவையும் அழைச்சிட்டு வா. இன்று என் சமையல் தான். உனக்கு பிடிச்ச நம்ம டெல்லி ஸ்பெசல் ஃபுட் என்றாள் தியா.

எனக்கு பசிக்கலை. எதுவும் வேணாம்.

“பசிக்கலையா?” சும்மா சொல்லாத. நீயும் பசி தாங்க மாட்டேல்ல. வினுவும் பசிக்கலைன்னு சொல்றான். “எதுவும் பிரச்சனையா?” கலவரமாக தியா கேட்க, எல்லார் மீதுள்ள கோபத்தை அவள் மீது இறக்கினான் ரோஹித் அஜய் முன்பே.

நான் தான் பசிக்கலைன்னு சொல்றேன்ல்ல. “அப்புறம் என்ன?” நீயே கொட்டிக்கோ.. ”சொன்னா புரியாதா?” இப்ப சாப்பிடுறது தான் முக்கியம் பாரு. போனை வை என்று அவன் சொல்லி துண்டிக்காமல் இருக்க வைக்கிறேன். எவனும் சாப்பிட வராதீங்க. நாங்களும் சாப்பிடலை. ரது குட்டி, உன்னோட செல்லூ வரலையாம். “நான் என்ன செய்றது?” அழறத நிறுத்து என ரதுவை திட்டியவாறு அலைபேசியை வைத்தாள் தியா.

ரோஹித் தலையை பிடிக்க, “இவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் பாப்பாவை திட்டுவா?” என அஜய் சினமாக, அவ ரதுவை திட்டலை. அவள் அருகே முக்தா தான் இருக்கா. “ரது அழும் சத்தம் உங்களுக்கு கேட்டதா? என்னை வர வைக்க மேடம் டிரிக் யூஸ் பண்றா?” நான் நம்பலை. ஆனால் வினித் மாமா கிளம்பி இருப்பார்.

“உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை? உண்மையிலே வினித்தை உன் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறாயா?” அஜய் அமைதியாக கேட்டான்.

ரோஹித் அவனை பார்த்து விட்டு, உங்ககிட்ட எதையும் சொல்லுமளவுக்கு நீங்க நடந்துக்கலை. “இப்ப போகலாமா இல்லை இப்படியே பேசிட்டு இருக்கணுமா?” எனக் கேட்டான். இருவரும் கிளம்பினார்கள்.

காரிலிருந்து இறங்கிய ரோஹித் வெளியே தியா நிற்பதை பார்த்தாலும் அவன் செல்ல, அவன் பாதையை தடுத்து நின்றாள்.

ரோஹித்தோ அவளை இடித்து தள்ளி விட்டு உள்ளே செல்ல, அஜய் கார்க்கதவை திறந்தான். இவனுக மூஞ்சியே சரியில்லை. இரண்டுமே இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்கு. “சண்டை போட்டிருப்பானுகளோ? என்ன விசயமா இருக்கும்?” என அங்கேயே நின்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே அஜய்யும் உள்ளே சென்றான்.

முக்தா உள்ளிருந்து சத்தம் கொடுக்க, தியா உள்ளே வந்து அவர்களை பார்த்தாள். வினித்தும் ரோஹித்தும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

முக்தா நடப்பது தெரியாமல், இது நான் செய்தது என அவள் செய்த பதார்த்தங்களை அனைவருக்கும் எடுத்து வைத்தாள். வினித்தோ அவளது தொனதொனப் பேச்சில் எரிச்சலடைந்து, “வாய மூடுறியா?” எனக் கேட்டான்.

மாமா, “முகி என்ன செஞ்சா? எதுக்கு கத்துறீங்க?” ரோஹித் கேட்க, அவனது மாமாவில் அஜய்யை தவிர அனைவரும் அதிர, முக்தா கையிலிருந்த பாத்திரம் கீழே விழுந்தது.

ஏய்..என தியா அவளிடம் வந்து, “அடிப்பட்டிருச்சா?” என முக்தாவிடம் வந்தாள்.

வினித் எழுந்து அவளை பார்த்துக் கொண்டே அவள் மீது பட்டு விட்டதா? எனப் பார்த்தான். அவள் எடுத்த பாத்திரம் சூடானதில்லை. மோர் பாத்திரம் என்பதும் தான் வினித் சாப்பிட அமர்ந்தான்.

அவன் எழுந்து வரவும் மேலும் பயந்தாள் முக்தா.

முகி, “நீ குளிச்சிட்டு ஆடையை மாத்திட்டு வா” என தியா சொல்ல, “மேலே எதுவும் படலைல்லம்மா?” என ராகவீரன் கேட்டார்.

“உன்னை யார் இதெல்லாம் செய்யச் சொன்னது?” ரோஹித் சத்தமிட்டான் முக்தாவை.

“இதெல்லாம் பழகிக்கிறது அவளுக்கு நல்லது தான? இதெல்லாம் நடக்க தான் செய்யும். எதுக்கு திட்டுற?” வினித் அமைதியாக கேட்க, ரோஹித் அவனை பார்த்து மனதினுள் நகைத்தான்.

நீ கத்தியதில் பயந்து தான் அவ கீழ விட்டா. “எதுக்குடா கத்துன? என்னடா பிரச்சனை?” தியா கேட்க, வினித் சாப்பிடாமல் எழ, பழம் வெட்டும் கத்தியை எடுத்து, ஒழுங்கா சாப்பிடு. இன்று யாரும் சாப்பிடாமல் எழக் கூடாது.

முதல் முறையாக முகி சமைச்சிருக்கா.

ஆத்தாடி, “அவ சமையலா? ஓ..அதனால தான் கீழ போட்டியா? நீ செஞ்சதை உன்னாலவே சாப்பிட முடியல தான?” என ரோஹித் முக்தாவை கூலாக்க கேலியாக பேசினான்.

ஆனால் முக்தா கண்கலங்க வினித்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அஜய் அதை பார்த்து, முகி..முதல்ல ஆடையை மாற்றும்மா என்றான். அவனை பார்த்து விட்டு அவள் நகர்ந்தாள். ரோஹித் பெருமூச்சு விட்டான்.

“முகி சாப்பிட்டாளா?” என ரோஹித் கேட்க எண்ணி தியா பக்கம் திரும்ப, அதற்குள் வினித் கேட்டு விட்டான்.

மகனே! நீங்க என்னையவே கேட்கல என ராகவீரன் சொல்ல, ஆமால்ல.. “எப்பொழுதும் அப்பாவிடம் அக்கறையுடன் விசாரிப்ப?” நீ சரியில்லைடா அண்ணா என்றாள் தியா.

“முக்தா சாப்பிட்டாளான்னு கேட்டேன்?” வினித் கேட்க, இல்லை..உங்களோட சேர்ந்து சாப்பிட தான் காத்திருந்தாள்.

யுக்தா? வினித் கேட்க, அவ கீழ வரலையாம். அழுதிருக்கா. அவ சரியில்லை. சாப்பிட வச்சுட்டேன். வேலைய முடிச்சிட்டு அவளை பார்க்க போகணும் என்றாள் தியா.

வினித் சாப்பிடும் கையோடு எழ, “சாப்பிடாம எங்க போற?” தியா கேட்க, யுகி, முகி அறைக்கு சென்றான்.

தியா சோர்ந்து அமர்ந்தாள்.

அங்கிள், “பாப்பா எங்க?” அஜய் கேட்டான்.

கண்ணம்மா இப்ப தான் வீட்டுக்கு பின் தூக்கிட்டு போனா. சாப்பிட்டு போய் பாருப்பா என்றார் ராகவீரன்.

யுக்தா படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்க, முகி ஆடையை மாற்றி வெளியே வந்தாள்.

“வினு சாப்பிட்டக் கையோடு வந்திருக்க?” யுக்தா கேட்க, அது..என அவன் முக்தாவை பார்த்தான்.

“உனக்கு கை எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

ம்ம்..பெட்டர் என்றாள்.

“நீ வீட்ல இருந்து காரணமில்லாமல் வர வேண்டாம்” என்று வினித் சொல்ல, எதுக்கு?

ப்ளீஸ்..சொன்னா கேளு என முக்தாவின் கால்களை பார்த்து, “உனக்கு சுட்ருச்சா?” சாரி..நான் கொஞ்சம் டென்சன்ல்ல இருந்தேன். நீயும் பேசிகிட்டே இருந்தியா. அதான் கத்திட்டேன் என சொல்லி விட்டு மடமடவென கீழே சென்று சாப்பிட அமர்ந்தான்.

“என்னாச்சு இவனுக்கு?” அவனாக வந்தான். என்னிடம் விசாரித்தான். உன்னையும் விசாரித்தான். நீ பதில் சொல்லும் முன் சென்று விட்டான் என யுக்தா கேட்க, முக்தா புன்னகையுடன் நகர்ந்தாள்.

முக்தாவை பார்த்தவுடன் தான் அவனுக்கு மீண்டும் நிம்மதி. “தியா நீ சாப்பிட்டியா?” வினித் கேட்க, அவனருகே வந்து அவனை உற்று பார்த்தாள் தியா.

“என்ன?”

“உனக்கு நான் இப்பொழுது தான் கண்ணுக்கு தெரியுறேன்னோ?”

“இதாவது தெரியுதே!” என ரோஹித் சொல்லி விட்டு, கை கழுவ சென்றான். வினித் அசட்டு புன்னகையுடன் அவன் பின் சென்று, யாரிடம் எதையும் சொல்லாத.

“எதை சொல்லக் கூடாது மாமா?”

அந்த டான்..

நான் சொல்லக்கூடாதுன்னா. நீங்க ஆபிஸ் தவிர எங்க போனாலும் என்னையும் அழைச்சிட்டு போங்க.

“என்னது? அது ரிஸ்க்டா?”

அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான் ரோஹித். அஜய் வந்தவுடன் இருவரும் பேச்சை நிறுத்தினர். இருவரை பார்த்துக் கொண்டே வெளியே வந்த அஜய், நான் இரவு வர நேரமாகும் என அஜய் சொல்ல, “நானுமா?” ரோஹித் கேட்டான்.

இல்ல, “நீ என்னோட கார்ல்ல வீட்டுக்கு வந்திரு” அஜய் சொல்ல, தியாவிற்கோ “அவன் குடிக்க சென்று விடுவானோ?” என பயமாக இருந்தது. அவள் அவனையே பார்த்தாள்.

“உனக்கு என் மேல சந்தேகமா இருக்கா?” என பட்டென தியாவிடம் அஜய் கேட்க, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது. அனைவருக்கும் கோபமானது அஜய்யின் மீது.

அஜய், “என்ன பேசுற?” ராகவீரன் கேட்க, தியா வேகமாக அவள் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

வினித்திற்கோ அஜய்யை பார்த்து கோபம் எகிற, ரோஹித் அவன் கையை பிடித்து தடுத்தான்.

மாமா, “வாங்க கிளம்பலாம்” என ரோஹித் வினித்தை அழைக்க, அஜய் எல்லாத்துக்கும் மொத்தமா அனுப்பவிப்படா என கத்தி விட்டு வினித் நகர்ந்தான்.

என்ன தம்பி, “இப்படி பேசிட்டீங்க?” பிள்ள பாருங்க. அறைக்குள்ள போயிருச்சு என ரதுவுடன் வந்த கண்ணம்மா சொல்ல, “விடுங்கம்மா” என்ற அஜய் பாப்பாவை தூக்கி கொஞ்சினான்.

அஜய், உன் பேச்சு சரியில்லை. அவளிடம் பயம் தான். அவளை புரிஞ்சு வச்சிருந்தேன்னா என்ன பயம்ன்னு புரிஞ்சிருக்கும்? என ராகவீரன் கோபமாக பேசி விட்டு, தன் நண்பன் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அஜய் கிளம்ப எத்தனிக்க, முக்தா அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

கண்ணம்மாம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம். தியூ சாப்பிடலை. அவங்க சாப்பிடும் போது சாப்பிட்டுக்கிறேன் என அவளும் எழுந்து செல்ல, மனமில்லாமல் அஜய் அவனறைக்கு சென்றான். முகத்தை கோபமாக வைத்துக் கொண்டான்.

அஜய் அவனிடம் உள்ள ரிமோர்ட் மூலம் கதவை திறந்து உள்ளே சென்றான். தியா படுக்கையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.

“எதுக்கு எல்லார் முன்னும் டிராமா கிரியேட் பண்ற?” கோபமாக அவன் பேச, எழுந்த தியா அவனை முறைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். அஜய் காத்திருந்தான்.

குளித்து துவாலையுடன் வந்த தியாவை பார்த்து அஜய் அதிர்ந்தான். அவன் இருப்பதை பார்த்து அவள் அதிர்ந்து மீண்டும் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அஜய் அப்படியே நின்றான்.

“அவன் சென்று விட்டானா?” என கதவை திறந்து பார்த்த தியா முன் அஜய் வந்தான்.

கிளம்புங்க. நான் தயாராகணும். பாப்பாவுக்கு பசிக்கும் என்றாள் கரகரத்த குரலில்.

இரு வருடங்களுக்கு பின் அவளை துவாலையுடன் பார்க்க, உணர்வுகள் வெடித்தெழ, “கதவை திற” என்றான் அஜய் நேரடியாக.

“போங்கன்னு சொன்னேன்” என தியா சொல்ல, அஜய் கதவை தட்டினான். அவளுக்கோ மேலும் கஷ்டமாகிப் போனது. தியா அழுதாள்.

போங்க..நீங்க போகலைன்னா நான் வெளியே வர மாட்டேன் என அழுதாள்.

அஜய்யோ கோபமுடன், நைட் வருவேன்ல்ல. பார்க்கிறேன் என சொல்லி அவன் சென்று விட்டான். பின்னும் அவளால் நகர முடியவில்லை. பாப்பா அழும் சத்தம் கேட்டு ஆடையை மாற்றி வேகமாக கீழிறங்கி வந்து பாப்பாவை கவனித்தாள். அஜய் அங்கே இல்லை.

சற்று நேரத்தில் விஜய்யும் கார்த்திக்கும் வினித் வீட்டிற்கு வந்தனர்.

தியா சோர்வுடன் கண்களை மூடி சோபாவில் படுத்திருந்தாள். அருகே ரதுவும் முக்தாவும் விளையாண்டு கொண்டிருந்தனர்.

ஹேய் அம்மு என கார்த்திக் அவளருகே வந்து அமர்ந்தான். விஜய் முக்தாவை பார்த்தான்.

“வாங்க” என அவர்களை அமர வைத்து விட்டு அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து விட்டு தியா அருகே அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக்கின் சத்தத்தில் எழுந்து அமர்ந்திருந்தாள் தியா.

அம்மு, “அப்புறம் என்ன பண்ணப் போற?” கார்த்திக் கேட்க, அக்கா செட்டில் ஆனால் தான் நான் என்னை பற்றி யோசிப்பேன் என்றாள் பட்டென. கார்த்திக்கின் முகம் மாறியது.

“என்ன திடீர்ன்னு விஜய்?” தியா கேட்க, யுக்தாவை பற்றி வினு சொன்னான். அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்.

அவ மேல அவ அறையில தான் இருக்கா. என்னை தவிர யாரையும் அறைக்குள் விட மாட்டேங்கிறா முக்தா சொல்ல, கார்த்திக் தயக்கமுடன், “கையில வலி இப்ப அதிகமா இருக்கா? மறுபடியும் ஹாஸ்பிட்டல் போகணுமா அம்மு?”

“அவ தான் டாக்டரை பார்க்கவே விடலையே! நாங்க என்ன செய்றது?” விட்டேத்தியாக முக்தா கூறினாள். தியா கார்த்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கண்கள் அவ்வப்போது யுக்தா இருக்கும் அறையையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“நான் வேணும்ன்னா டாக்டரை இங்க அழைச்சிட்டு வரவா?” அவன் கேட்க, தேவையில்லை. வினித் ஏற்கனவே சொல்லீட்டார். இன்னும் அரை மணி நேரத்தில் டாக்டர் அக்காவை பார்க்க வந்திருவார். அவர் வந்த பின் தான் எதுவும் தெரியும் முக்தா கூறி விட்டு விஜய்யை பார்த்தாள்.

விஜய் எழுந்து முக்தா அருகே அமர்ந்து, “அம்மு கோபமா இருக்கியாடா?” எனக் கேட்டவுடன் முக்தாவின் கண்ணில் பொலபொலவென கண்ணீர் ஊற்றெடுத்தது.

“அம்மு” என கார்த்திக்கும் அவளிடம் வந்து அமர்ந்தான்.

“எல்லாமே சரியாகிடும்” என விஜய் முக்தாவை சமாதானப்படுத்த பேச, “வேண்டாம் நிறுத்துங்க” என்ற தியா, “முக்தா” என சத்தமிட்டாள்.

தியாவை பார்த்து விட்டு முக்தா எழுந்து வேகமாக யுக்தா அறைக்குள் ஓடினாள்.

“நான் என்ன செய்தேன் தியா?” விஜய் கேட்க, ப்ளீஸ் எங்களுக்கு உறுதுணையா பேசுறேன்னு எதுவும் பேச வேண்டாம். அவளை அவளே சமாதானப்படுத்தி பழகட்டும். ஒரு வேளை யுகிக்கு ஏற்பட்டது போல முகிக்கு ஏற்பட்டால் அவ யுகி மாதிரி இல்லாமல் ஸ்ட்ராங்கா இருக்கணும்ன்னு நினைக்கிறேன் என்று தியா சொல்ல…”தியா என்ன பேச்சு?” கார்த்திக் கோபமாக கேட்டான்.

எழுந்த தியா கார்த்திக் முன் வந்து, “இப்ப எதுக்கு வந்த? யுக்தாவை பார்க்க நீ எதுக்கு வந்த?” என கோபமாக கேட்ட தியா, அவனது சட்டையை பிடித்து, அவ சொன்னதை தான் நீ நம்பல. “அவளது திருமண நாளுக்கு முன்னாளில் இருந்து எத்தனை முறை உனக்கு கால் பண்ணி இருப்பா? ஒரே ஒரு முறை பேசினால் குறைஞ்சா போவ? அப்படி உன்ன அவ என்ன செஞ்சா? இப்ப அவ வாழ்க்கை நாசமா போன பிறகு நலம் விசாரிக்க வந்திருக்க? மனுசனாடா நீ?” என தியா கோபம் அழுகையாக..நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. கண்டிப்பா ஒரு நாள் இல்லை ஒருநாள் கால் பண்ணுவன்னு உறுதியா காத்துட்டு இருந்தா?

ஒரு பொண்ணு உங்களுக்கு செய்யும் அறிவுரைக்கும், சந்தேகத்துக்குமா வித்தியாசம் தெரியல? நீயெல்லாம் சி.ஐ.டி ன்னு வெளிய சொல்லாத.

அவள் உன்னை நம்பாமல் இருந்தா காத்திட்டு இருந்திருக்க மாட்டா. அன்று என்ன சொன்னால் நல்லா யோசித்து பார். உனக்கே தெரியும் என அவன் சட்டையை விட்டு தியா மயங்கினாள்.

தியா பேசுவதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த முக்தா அருகே நிழலாட திரும்பி பார்த்தவள் “அக்கா” என அழைக்க, யுக்தா மேலிருந்து கீழே ஓடி வந்தாள். முக்தாவும் கீழே வந்தாள்.

தியா, “என்னாச்சு?” விஜய் பதற, யுக்தா அவனை விலக்கி, அவளை அறைக்கு மட்டும் தூக்கிட்டு வந்து விடுங்களேன் என விஜய்யை பார்த்தாள்.

“டாக்டர்கிட்ட?” என கார்த்திக் கண்கலங்க கேட்க, அவனை நிமிர்ந்து கூட பாராது “ப்ளீஸ்” என விஜய்யை பார்த்தாள்.

அம்மாடி..என ராகவீரனும் கண்ணம்மாவும் ஓடி வந்தனர்.

“டாக்டருக்கு கால் பண்ணுங்க”என ராகவீரன் சொல்ல, நோ..அங்கிள் அக்காவை பார்க்க டாக்டர் வருவாங்க. அண்ணியையும் பார்க்கட்டும் என்றாள் முக்தா.

ஆனால்ம்மா..என கண்ணம்மா பதற, ப்ரெஷர் அதிகமாகிருக்கும். யாரும் பயப்படாதீங்க என்ற முக்தா விஜய்யை பார்க்க, அவன் தியாவை தூக்கி அஜய் அறையின் படுக்கையில் படுக்க வைத்தான். எல்லாரும் அவர்கள் பின் சென்றனர்.

ரது அழ ஆரம்பித்தாள்.

ராகவீரன் தண்ணீரை எடுத்து தியா மீது தெளித்து அவளை விழிக்க வைத்தார்.

ம்மா..ம்மா..ம்மா..என அழுத குழந்தையை தியாவிடம் கண்ணம்மா கொடுக்க, தியா பாப்பாவை அணைத்துக் கொண்டாள்.

“வழி விடுங்க” என முக்தா ஒரு பாக்ஸை எடுத்து வந்தாள். அனைவரும் வியப்புடன் முக்தாவை பார்த்தனர்.

அம்மாடி, “நீ டாக்டருக்கா படிச்சிருக்க?” ராகவீரன் கேட்டார்.

இல்ல அங்கிள், எனக்கு படிக்க ஆசை தான். அப்பா ஒத்துக்கலை. ஆனால் எனக்கு சில விசயம் தெரியும். தியா அண்ணி ஒரு மாதம் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப நான் தான் அவங்க உடல் உபாதைகளுக்கான சிறுசிறு சிகிச்சையை செய்தேன். பாட்டி தான் அண்ணி அருகே இருந்தாங்க. ரதுவை அக்கா, அண்ணா, அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க என ரதுவை வாங்கி யுக்தாவிடம் கொடுத்து விட்டு தியாவிற்கு ப்ரெஸ்ஸர் செக் செய்தாள்.

அண்ணி நீங்க அமைதியா இருங்க. நாம இப்ப எதை பற்றி யோசித்து எதுவும் மாறப் போறதில்லை. நீங்க நல்லா இருந்தா தான் பார்ப்பாவை பார்த்துக்க முடியும் என்ற முக்தா, நான் இன்னும் நீங்க பார்த்த சின்னப்பொண்ணு இல்லை. இங்கே வந்த பின் தான் எனக்கு சில விசயங்கள் தெரிய வந்தது என்று கார்த்திக்கை பார்த்து,

நீங்க பார்க்க வந்தவங்கல்ல பார்த்துட்டீங்கல்ல, “அப்புறம் வர்றீங்களா?” அண்ணி மறுபடியும் டென்சனான அவங்க உடம்பு பாதிக்கப்படும் என சொல்லி விட்டு, அக்கா “நீ அறைக்கு போ” என்று யுக்தாவிடமிருந்து பாப்பாவை வாங்கினாள்.

நான் இருக்கேன். தியா…என யுக்தா மறுக்க, என்னோட அண்ணியை நான் பார்த்துப்பேன். எல்லாரும் போங்க எனக் கத்தினாள் முக்தா.

முகி..யுக்தா அழைக்க, அய்யோ உனக்கு எவ்வளவு பெரிய கவலை. வலியோட இருக்க? போ..உன்னோட அறைக்கு போ. வெளிய வராத என முக்தா கோபமாக பேசினாள்.

இல்ல முகி..யுக்தா பேசும் முன், உன்னை புரிஞ்சுக்காத ஒருவன், உன்னை காதலித்து திருமணம் செய்து அன்றே உன்னை விட்டு போன ஒருவன்.

“இவனுக தான உனக்கு முக்கியம்?” உன் அருகே உனக்காக சிந்தித்து, உனக்காக வாழும் அம்மா, அப்பா பற்றி யோசனை இல்லை. எதற்கும் கலங்காத ராணியம்மா உன்னோட விசயத்துல்ல உடைஞ்சு போயிருக்காங்க. அவங்கள பற்றிய யோசனை இல்லை.

“உனக்கு உன் பிரச்சனை? யார் எப்படி போனால் உனக்கென்ன?” என முக்தா அழுது கொண்டே பொரிந்து தள்ளினாள்.

“சாரி முகி” என யுக்தா அவளருகே வந்தாள். முதல்ல நம்ம வீட்டுக்கு கால் பண்ணி பேசு. “உன்னை இங்க அனுப்பியது எதற்கு? ஆனால் இங்கே வந்தும் இப்படி நடந்தா எல்லாரும் கஷ்டப்படுவாங்க. உனக்கு ஏன் புரியலக்கா?

எனக்கு நல்லா புரியுது?” உன்னோட காதலும் போச்சு. வாழ்க்கையும் போச்சு. “அதுக்காக இப்படியே எத்தனை நாள் இருப்ப?” நீ படிச்சிருக்க. உனக்கு சொல்ல தேவையில்லை. நீ மாறினால் தான் நம்ம வீட்ல எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க.

“அப்பா அழுது பார்த்துருக்கியா?” அழுதார்டி..உடைஞ்சு அழுதார். என்னால எதையும் பார்க்க முடியல. அந்த வீணாப்போனவன் கூட இங்க வந்து பொறுப்பா நடந்துக்கிறான். ஆனால் உன்னால ஏன் முடியல? நீ அவ்வளவு வீக்கா?

வாழ்க்கை..காதல், கல்யாணம்ன்னு நின்னு போகாது என்ற முக்தா, தியா அண்ணி என்னை உன்னோட தங்க சொல்லி தான் உன்னோட அறையில இருக்கேன். “ஏன்னு தெரியுமா?” என முக்தா தியாவை பார்க்க, தியா கண்ணீருடன் முக்தாவை பார்த்தாள்.

நீ தற்கொலை ஏதும் செஞ்சிருவியோன்னு பயத்துல்ல தான் என்னை உன்னோட தங்க வச்சாங்க. அவங்க வாழ்க்கையில் பிரச்சனை இருந்தும் உன்னை பார்த்துக்கிறாங்க? இவங்களுக்கு தோள் கொடுக்கலைன்னாலும் உன்னை நீ சரி செய் என அழுதாள்.

அனைவரும் அதிர்ந்து யுக்தாவை பார்த்தனர். “கார்த்திக் அதிர்ந்து, கலங்கி நடப்பது உண்மையா?” என பார்த்தான்.

“சாரி தியா” என யுக்தா தியாவை அணைத்து, நான் அன்று கோபத்துல்ல பேசிட்டேன் என அழுதாள்.

“பேசினியா? என்ன பேசுன?” முக்தா கோபமாக கேட்க, அழுது கொண்டே யுக்தா அவளறைக்கு ஓடினாள்.

முகி, “எதுக்கு அவகிட்ட இப்படி பேசுற? அவ நிலையையும் யோசிக்கணும்ல்ல?” சோர்வாக தியா கேட்க, “என்ன நிலை? புடலங்கா நிலை?” என்று கோபமாக..எதையும் கடந்து வரணும்ன்னு நீங்க தான சொல்வீங்க?

“அதுக்காக இப்படியா எல்லார் முன்னும் பேசுவ?” இது அவளை மேலும் கஷ்டப்படுத்தும். போ..அவளை பாரு.

நோ..அண்ணி, நான் போக மாட்டேன். அழுதாலும் பரவாயில்லை. நான் பேசியதில் கண்டிப்பாக அவளுக்கு தவறான எண்ணம் வராது. அதுசரி. “அவ என்ன சொன்னா உங்ககிட்ட?” முக்தா கேட்க, சொல்ல முடியாது என்றாள் தியா.

போங்க..நீங்களும் உங்க ப்ரெண்ட்ஷிப்பும் என திட்டி விட்டு அமர்ந்தாள் முக்தா.

தியாம்மா, “நான் பிள்ளையை பார்த்துட்டு வரவாடா?” என கண்ணம்மா கேட்க, தியா தலையசைக்க..”வேண்டாம்” என்றாள் முக்தா.

முகி..என்று தியா அவளை பார்க்க, அவ தனியா யோசிக்கட்டுமே! ஒரு ஐந்து நிமிடம் கழித்து போங்க. இனி அவ அறையில நான் தங்க மாட்டேன். அங்கிள் எனக்கு வேற அறை வேண்டும் என்றாள் முக்தா.

“சரிம்மா” என ராகவீரன் கவலையுடன் தலையசைத்தார். அவரை பார்த்து, அய்யோ அங்கிள்..வருத்தப்படாதீங்க. யுகிட்ட அமைதியா பேசுனா பேசவே விட மாட்டா. அதான் இப்படி பேசினேன். நீங்க வருத்தப்படாதீங்க என்று விஜய் கார்த்திக்கை பார்த்தாள். மூவரும் அவர்களை பார்க்க, சாரிம்மா..என்ற விஜய் கார்த்திக்கை வெளியே இழுத்து சென்றான்.

கார்த்திக் பைக்கை அங்கேயே விட்டு, விஜய் பைக்கில் அவனையும் ஏற்றி அவர்களது ஆபிஸிற்கு சென்றனர்.

அங்கே சென்றவுடன் விஜய் கோபமாக உள்ளே செல்ல, கார்த்திக் அமைதியாக யோசனையுடன் உள்ளே வந்தான். அவன் காலில் வந்து விழுந்தது வினித் கொடுத்த கார்த்திக்- யுக்தா- கேத்ரின் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள்.

சந்தோஷை நகர்த்தி, அவனிடம் இருந்த வீடியோக்கள் அனைத்தையும் ஓட விட, கார்த்திக் அனைத்தையும் அதிர்ந்து பார்த்தான்.

“உன்னால தான் யுக்தா வாழ்க்கை மொத்தமாக போச்சு” என்று ஆதங்கமுடன் கத்திய விஜய்..இதோ..இது முழுவதும் யுக்தா உனக்கு அழைப்பு விடுத்த விவரம்.

டெல்லி சென்று ஒருவாரம் உன்னை தொடர்ந்து அழைத்திருக்கிறாள். முதலில் எடுத்து அவளை மீண்டும் காயப்படுத்துவது போல் நீ பேச, அவள் உனக்கு புரியவைக்க பேச எண்ணி..ஒரு வாரம் அழைத்திருக்காள். நீ எடுக்கலை. பின் அவள் பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் நினைக்காமல் இல்லை.

அவள் உன்னை நம்பலைன்னு நீ அவளோட நம்பிக்கையை அழிச்சிட்ட. அவ்வளவு தான்..என விஜய் தலையை பிடித்தான்.

“என்னாச்சுடா? யுகி நல்லா தான இருக்கா?” என கார்த்திக்கை முறைத்துக் கொண்டே கரண் கேட்க, “இல்லடா” என்றான் விஜய், என்னால இன்று எந்த வேலையும் பார்க்க முடியாது. நான் கிளம்புகிறேன் என விஜய் நிற்காமல் கிளம்பி விட்டான்.

கார்த்திக் மனமுடைந்து அமர்ந்தான். “இப்ப வரை என்னை தான் காதலிக்கிறாளா? நான் ஏன் யுகி விசயத்தில் முட்டாளாகிப் போனேன்?” என கலங்கினான்.

ஆமா, “இப்ப புலம்பி என்ன ஆகப் போகுது?” நீ அலைபேசியை எடுக்கலைன்னு உன்னோட அம்மா ஆபிஸூக்கு கால் பண்ணாங்க. பொண்ணு பார்க்க போகணுமாம். மாலை விரைவிலே வரச் சொன்னாங்க என சந்தோஷ் விறைப்புடன் தகவல் போல் சொல்லி விட்டு, அலைபேசியில் தியாவை அழைத்து பேசினான்.

டேய், சும்மா ஏன்டா தொந்தரவு பண்றீங்கன்னு முக்தா கத்த, சந்தோஷூம் கரணும் அதிர்ந்தே விட்டனர்.

ஆசையாக பேச ஓடி வரும் பொண்ணு இப்படி கத்துவான்னு அவனுக எதிர்பார்க்கலை.

கார்த்திக் அங்கிருந்து கிளம்ப, உன்னை மாலை தான் வரச் சொன்னாங்க என்று சந்தோஷ் மீண்டும் கூற, அதை காதில் வாங்காமல் கார்த்திக் கிளம்பி ஒயின் ஷாப் சென்றான்.

மாலை குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனை பார்த்து, கார்த்திக் பெற்றோர்கள் அதிர்ந்தனர். அவனை கரண் வீட்டில் வந்து விட, “என்னாச்சுப்பா?” அவன் அம்மா பதறினார்.

அவனிடமே கேட்டுக்கோங்க. ப்ரெண்டுன்னு தான் இவனை கொண்டு வந்து விடுறதா போச்சு என கரண் விரக்தியுடன் கூறினாலும் கார்த்திக்கை பாவமாக பார்த்துக் கொண்டே சென்றான்.

அவனின் பேச்சில் தன் மகனை பெற்றோர்கள் பார்த்தனர். இருவரும் அவனுக்கு போதை தெளிய வைக்க முயல, முழுதாக முடியவில்லை. கார்த்திக் உலறிக் கொண்டே இருந்தான்.

இன்றாவது பிள்ளைக்கு முடிவாகிரும்ன்னு எண்ணினோம். ஆனால் குடிச்சிட்டு வந்திருக்கான் என அவன் அம்மா தலையில் கை வைக்க, அவன் அப்பாவோ தன் மகன் புலம்புவதை கவனிக்க எண்ணி..”அமைதியா இரும்மா” என்று அவனருகே அமர்ந்தார்.

கார்த்திக், “இது என்ன புது பழக்கம்?” அவர் கேட்க, சாரிப்பா..சாரி…சாரி..நான் பெரிய தப்பு பண்ணீட்டேன். அவள கஷ்டப்படுத்திடேன் என்று உலறினான்.

“எவள?” அவன் அம்மா கேட்க, ம்மா..யுகிம்மா..யுகி..இல்ல இல்ல..பஜ்ஜி..ச்சூ..என்னோட புஜ்ஜிம்மா என மாற்றி மாற்றி உலறினான்.

“புஜ்ஜியா? நாய்க்குட்டியா? அவன்னு வேற சொல்றான்? என்னங்க இது?” அவர் கேட்க, “இரும்மா..புஜ்ஜியா? யாருப்பா?”

“புஜ்ஜி தெரியாதா? என்னோட புஜ்ஜிக்குட்டி” மை லவ். பர்ஸ்ட் லவ்.

“லவ்வா? இத தானடா இத்தனை நாள் கேட்டேன்?” அவன் அம்மா மகிழ்ச்சியாக..சொல்லு, “யாரு அந்த பொண்ணு? எங்க இருக்கா? பார்த்தியா? என்ன பண்றா? அழகா இருப்பால்லா?” என ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கினார்.

ஷெப்பா..என்னாலே முடியல. உன் பிள்ளை போதையில இருக்கான். அவனை தெளிய வச்சு பேசுவோம்.

தெளிய வைத்தால் சொல்லாமல் போயிருவான் என கார்த்திக் அம்மா மேலும் பேச்சு கொடுத்தார்.

“யார் புஜ்ஜி?”

புஜ்ஜி..போயிட்டா என அழுதான் போதையில்.

“என்னது? போயிட்டாளா?” என கார்த்திக் அம்மா இதயம் வெடித்தது போல அதிர்ந்தார்.

கொஞ்ச நேரம் இரும்மா. இவன் ஓய்வெடுக்கட்டும். முதல்ல பொண்ணு வீட்ல இன்று வரலைன்னு மட்டும் சொல்வோம். பின் கரணிடம் பேசலாம். அவனுக்கு தெரிய வாய்ப்பிருக்கு.

ஆமா..ஆமா..முதல்ல போனை போடுங்க என பரபரத்தார்.

அவரை பார்த்துக் கொண்டே, பொண்ணு வீட்டில் சொல்லி விட்டு கரணை பேச வேண்டும் என்று அழைக்க, கார்த்திக் நண்பர்கள் அனைவரும் வந்தனர்.