உங்களுக்கும் முக்தாவுக்கும் எப்படி பழக்கம்? ரோஹித் வினித் நண்பர்களிடம் கேட்டான்.
இதோ இவனுடன் தான் அவளை முதலாவதாக பார்த்தோம் என சந்தோஷ் வினித்தை கையை காட்டினான்.
ஆமா, அம்மு வினித் கையை பிடித்து தான் சுற்றிக் கொண்டே இருப்பாள் என்ற விஜய் ரோஹித் அருகே வந்து, இருவரும் சீக்ரெட்டா கூட பேசுவாங்க என்றான்.
ரோஹித் வினித்தை பார்க்க, தியா யுக்தாவுடன் தான் அவளை முதலாக பார்க்கில் பார்த்தேன். யுகியும் முக்தாவும் அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க. தியாவால சமாளிக்க முடியாது. அதனால் அவளுக்கு சாக்லெட், ஐஸ்கிரீம்ஸ் வாங்கித் தருவேன். இரு நாட்களுக்கு பின் தான் இவர்களை அவள் சந்தித்தாள். அவளை முன்னமே தெரியும் என்பதால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
“நாம எல்லாருடனும் சேர்ந்து தானடா வெளிய வருவா? என்னை மட்டும் சொல்றீங்க?”
ஆமா வருவா. எப்போதும் வினித் கையை பிடித்து அது வேணும் இது வேணும் என பேசிக் கொண்டே இருப்பாள். அப்புறம் விடுமுறை நாட்களில் எல்லாரும், கார், பைல்ல சுத்துவோம் என்றான் சந்தோஷ். விஜய் மட்டும் வினித்தையே கவனித்துக் கொண்டிருந்தான்.
அவனது அலைபேசி சிணுங்க, டேய் அவன் தான் என கார்த்திக் அழைப்பை ஏற்றான் விஜய்.
“எங்கடா இருக்கீங்க?” கார்த்திக் கேட்க, “நாங்களா..நாங்க சேர்ந்து இருக்கோம்ன்னு எப்படி உனக்கு தெரியும்?” விஜய் கேட்க, ஹ..ஆள் வச்சு பாக்குறேன் என கார்த்திக் சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.
வேற வேலையில்லை. யாருமே வீட்ல இல்ல. அதான் கேட்டேன். “அப்படி என்ன எல்லாரும் சேர்ந்து என்னை விட்டு போயிருக்கீங்க?”
அது..சும்மா தான் என்றான் விஜய்.
“சிஸ்டர் கேட்டீங்களா?” ஊர் சுத்த வெளிய போயிருக்கான். வேலைக்கு போகலை. உங்களை ஏமாத்தி இருக்கான் என கார்த்திக் பேச, மாமா..என சினமான சத்தம் கேட்டு..அடப்பாவி போட்டு விட்டானே!
பேபிம்மா..நான் இப்ப வந்திடுறேன்ம்மா என்று விஜய் தன் மனைவியிடம் பேசினான்.
மச்சான், நீ மெதுவா வா..ச ஸ்டர் ஆன்ட்டி வீட்டுக்கு போக எடுத்து வச்சுட்டு இருக்காங்க. பொறுமை..பொறுமை..என கார்த்திக் கூலாக சொல்ல, “ராஸ்கல் என்னடா பண்ணி வச்சுருக்க?” இதுக்காகவே முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் விஜய் வாயை விட்டான்.
“என்னடா சொன்ன?” சீற்றமுடன் கார்த்திக் குரல் எழ, “மாட்டிக்கிட்டேனே!” என விழித்தான் விஜய்.
“எங்க இருக்க? அம்மா, அப்பா கூட பொண்ணு பார்க்க போயிருக்கீங்களா?” ஒழுங்கா மரியாதையா வந்துருங்க. “இப்ப நீங்க வர்றீங்களா? இல்ல நான் டிராக் செய்து வரவா?”
“இதுக்கெல்லாம் எதுக்குடா டிராக் பண்ணப் போற?” இதோ..கிளம்பிட்டோம். ஆனால் மச்சான் நிஜமாகவே உனக்கு பொண்ணு பார்க்க வரல விஜய் சொல்ல, அப்ப உனக்கு பொண்ணு பார்க்கவா போன? கார்த்திக் கேட்க, விஜய் மனைவியோ நடு ஹாலில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
பாவி..பாவி..வாய மூடிட்டு இருடா. பேச வேண்டிய நேரம் பேசவே மாட்டான். இடியட்..வந்துட்டேன்டா என அனைவரும் வேகமாக பைக், காரை எடுத்தனர்.
ரஞ்சு..கவனமா இருடா. எதுவும்ன்னா கால் பண்ணு என வினித் ரோஹித்துடன் வீட்டிற்கு கிளம்பினான்.
தியாவுடன் எப்பொழுதும் உணவுண்ணும் ஹோட்டலுக்கு வந்தான் வினித். ரோஹித் அவனை கேள்வியுடன் பார்த்தான்.
கீழ இறங்கி வா..என உள்ளே சென்ற வினித் அவ்விடத்தின் அமைப்பு மாறி இருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவர்களின் சங்கர் அண்ணாவை தேடினான்.
தம்பி..என அவர் குரலில் திரும்பியவன் ஆச்சர்யமாக பார்த்தார். சர்வராக இருந்தவர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.
“அண்ணா.” வினித் மகிழ்வுடன் செல்ல, அவர் வேகமாக அவனிடம் ஓடி வந்தார்.
“எங்க தம்பி போனீங்க? தியா பாப்பா கிடைச்சுட்டாளா? நல்லா இருக்காலா?” பிள்ளைய பார்க்காம அவங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சோர்ந்து போயிட்டாங்க. அஜய் தம்பி கூட அடிக்கடி இங்க தனியா வருவார் என வருத்தப்பட்டார்.
ம்ம்..தியா வந்துட்டா. கண்டிப்பா அடுத்த முறை அழைச்சிட்டு வாரேன் அண்ணா.
“இப்ப சாப்பிட நம்ம தியாவிற்கு பிடித்த ஐயிட்டம் வேணும்?”
“என்னாச்சு தம்பி? பிள்ளைக்கு உடம்பு ஏதும் முடியலையா?”
அண்ணா..அவள பிள்ள பிள்ளன்னு சொல்லாதீங்க. அவளுக்கே பிள்ளை இருக்கு என வினித் டெல்லியில் அவர்களுக்கு நடந்த திருமணத்தையும் ரதுவையும் காட்டினான்.
ஹப்பாடா..அஜய் தம்பி ரொம்ப கஷ்டப்பட்டார்ப்பா. இப்ப தான் நிம்மதியா இருக்கு என ரோஹித்தை பார்த்து, கிளைண்டா என கேட்டார்.
வினித் புன்னகையுடன் ரோஹித் தோளில் கையை போட்டு, என்னோட மச்சான் தான். நீங்க பார்சல் எடுத்துட்டு வாங்க என்றார். ரோஹித் அதிர்ந்து வினித்தை பார்க்க, அவன் ராணியம்மாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டே ரோஹித்தை பார்த்தான். அவன் புரியாமல் பார்ப்பதை கவனித்து, “இந்தா பேசு” என அவன் அலைபேசியை கொடுத்தான்.
வினித் முக்தாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதாகவும், ராணியம்மா எண்ணத்தை ரோஹித் அம்மா சொல்ல, “மா உனக்கு பிரச்சனையில்லையா?”
“மாப்பிள்ள சும்மா இல்லையே?” பெரிய இடம். ரொம்ப நல்ல பையனும் கூட. நம்ம தியாவுக்காக உயிரை கூட பார்க்காமல் பயங்கரமா பார்த்துட்டு இருக்கார். நம்ம முகிய நல்லா பார்த்துப்பார். முகி கிட்ட சொல்லாத. அவரே பேசிக்கிறேன்னு சொல்லி இருக்கார் என அவர் பேசி வினித்திடம் பேசி விட்டு அலைபேசியை அணைத்தார்.
“இதெல்லாம் எப்ப நடந்தது?”
யுகி, தியா திருமணம் அன்று தான் பேசுனாங்க. எல்லாருக்கும் ஓ.கே முகிகிட்ட தான் பேசணும். அதை நான் பார்த்துக்கிறேன். “உங்களுக்கு ஓ.கே வா?” ரோஹித்திடம் கேட்டான் வினித்.
எனக்கு..எனக்கு..அவன் தயங்க, சரி அப்புறம் சொல்லுங்க. யுகி மேரேஜ் முடியாம எங்க திருமணம் நடக்காது என வினித் கூறிக் கொண்டிருக்க, சங்கர் வந்தார்.
ஓனராகிட்டீங்க அண்ணா..வாழ்த்துக்கள்.
ஏதோ புண்ணியம் தம்பி.
உங்க மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும் என வினித் பார்சலை வாங்கி விட்டு காரில் ஏறினான்.
மாமா சொல்லு..இல்ல வினித்துன்னு அழை, அதென்னா “ங்க” போடுற. நீ என்ன என் பொண்டாட்டியா? வினித் கேட்க, அவன் மேலும் திகைத்தான்.
வினித் அவனை பார்த்து, ஹே..கூல்..சும்மா..தான். எனக்கு பெயின் இருந்தது. இப்ப அதிகமா இல்ல. அதான் பைட் பண்ண முடிஞ்சது.
ஐ அம் ஓ.கே என்றான். ரோஹித் சிந்தனையில் மூழ்கினான்.
வினித்தும் ரோஹித்தும் வீட்டிற்கு வந்தனர். முக்தாவோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, தியாவும் சினமுடன் அமர்ந்திருந்தாள்.
இருவரும் அவர்களை பார்த்து, அவர்களிடம் வந்தனர்.
“என்னாச்சு?” ரோஹித் கேட்க, அக்காவுக்கு லூசு தான் பிடிச்சிருக்கு. அஜய் அண்ணா அக்காவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விட்டாங்க. டாக்டரும் அக்காவை இன்று முழுவதும் ஓய்வெடுக்க சொன்னாங்க.
ஆனால் அவள் கொஞ்சம் தெம்பாகவும் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பிட்டா. இப்ப சொல்ல சொல்ல கேட்காமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் என வருத்தமாக முக்தா கூறினாள்.
வினித் இருவருக்கும் இடையே அமர்ந்து முக்தாவை பார்த்து, உன்னோட அக்காவுக்கு நேரம் வேணும். அவளுக்கு தியாவை முதலில் இருந்தே ரொம்ப பிடிக்கும். அவள் பிரச்சனை போதாது என அஜய் தியாவிடம் நடந்து கொள்வதை அவளால் ஏத்துக்க முடியல. அவளை தனியா விடு. அவளுக்கு ஒரு பிளான் இருக்கு. நேரம் வரட்டும் என்றான்.
“பிளானா? என்னது?” முக்தா யோசனையுடன் அவனை பார்க்க, அவள் தலையில் கை வைத்து அழுத்தியவன்..இந்த குட்டி மூளையை கசக்காத. எல்லாமே சரியாகிடும் என முக்தாவை பார்த்து அவன் புன்னகைக்க, அவளுக்கு அவர்களது சிறு வயது எண்ணம் எழுந்தது. ரோஹித் முக்தாவை பார்த்து சிரித்தான்.
அவன் சிரிப்பதை கண்டு அவள் எண்ணம் போன போக்கை கண்டு அய்யோ எனவானது. அவனை முறைத்துக் கொண்டே யுக்தா எழ, “ஆத்தாடி ராட்சசி என்ன செய்யப் போறாளோ?” என யோசனையுடன் எழுந்த ரோஹித் அருகே முக்தா வர, அவள் ஏதும் செய்யாமல் அவனை முறைத்துக் கொண்டு, சிரிக்கிற..உன்ன அப்புறம் வச்சுக்கிறேன் என அவள் நகர, ராக வீரன் அவளிடம் வந்து எங்கம்மா போற? எனக் கேட்டார்.
அது..அங்கிள் என அவள் திரும்பி வினித்தையும் மற்றவர்களையும் பார்த்தாள்.
நீ அஜய் அறையிலனா ஓய்வெடும்மா.
இல்ல அங்கிள், நான் அங்க போக மாட்டேன். நான் வேணும்ன்னா வேற அறையில தங்கிக்கிறேன்.
ம்ம்..தங்கிக்கோ..தங்கிக்கோ..
அங்க தான் ராரா…சரசுக்கு… ராரா..உன்னோட கோஸ்ட் அங்கிள் இருப்பார். பார்த்து உன்னை முழுங்கிடாம ரோஹித் முக்தாவை கேலி செய்ய, எதுவும் செய்ய வேண்டாம்ன்னு நினைச்சா நீ சும்மா இருக்க மாட்டேங்கிறேல்ல..என ரோஹித்தை முக்தா விரட்ட, ராகவீரன் புன்னகையுடன் அஜய்யை ரோஹித் இடத்தில் வைத்து பார்த்து புன்னகைத்தார்.
ஹப்பா..முடியடி. என்னை விட்ரு என சோபாவில் மூச்சு வாங்கி ரோஹித் அமர, “உன்னால என்னை வம்பு செய்யாமல் இருக்கவே முடியாதா?” முக்தாவும் வியர்த்து அவனை இடித்து சோபாவில் சாய்ந்தாள்.
“சின்னபிள்ள மாதிரி சண்ட போடாதீங்க” என தியா சொல்ல, வினித்திடமிருந்து பதில் வந்தது.
நாமும் இவங்கல்ல போல தான தியூ. எனக்கு நம்ம நினைவு தான் வருது என வினித் தியா கையை பிடிக்க, அவன் கையை தட்டி விட்டு, எனக்கு எல்லாமே மறந்து போச்சு என்றாள்.
ம்ம்…வேற வினித் கண்கலங்க கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர். ராகவீரன் கலங்கியவாறு நகர்ந்தார். முக்தா அவரை பார்த்து விட்டு வினித்தை பார்த்தாள்.
தியா அவன் கண்கள் கலங்குவதை பார்த்து, நீ தான் எல்லாத்துக்குமே காரணம். நான் தான் அன்று ஏர்ப்போட்டில் வச்சு போகாதன்னு எப்படி அழுதேன்? கொஞ்சமாவது இறங்குனியா? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? அஜய் காதலை ஏற்றுக் கொண்ட பின் என்னால அவனிடமும் உன்னை பற்றி நேரடியாக பேச கூட முடியலை தியா அழ, வினித் சட்டென எழுந்து தியா காலடியில் அமர்ந்து அவளது கையை பிடித்தான். ரோஹித் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்தான்.
சாரி தியூ, நான் போனது அஜய்யை நீயும் காதலிப்பதால் தான். எனக்கு ஏற்கனவே திவ்யா, காதம்பரி பற்றி நன்றாக தெரியும். ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்கன்னு..அஜய் உன்னுடன் இருக்கான் என்ற தைரியத்தில் தான் சென்றேன். நீங்க இருவருமே எனக்கு முக்கியம்..என அவனது வாலட்டை திறந்து அதன் பின் மறைவான இடத்திலிருந்து அஜய், தியா, வினித் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை காட்டினான் கண்ணீருடன்.
எனக்கும் உனக்கும் நல்ல ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. ஆனால் அஜய்க்கு..“கொஞ்சம் யோசித்து பார்” என வினித்..எனக்கு என்ன தான் நண்பர்கள் இருந்தாலும் எனக்கு அப்பா, அங்கிள், நீ, அஜய் தவிர யாருமில்லை. என்னுடைய உண்மையான முகம் உங்களுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். மற்றவர்களிடம் நான் பழகினாலும் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க.
காதம்பரியை பற்றி தெரியும் என்பதால் தான் நானே இந்த விசயத்தில் தலையிட்டேன். அவ சொந்தமா பாசமா வளர்த்தவங்களையே கொலை பண்ணவ. நிறைய கொலை செஞ்சிருக்கா. எல்லாம் சொத்துக்காக தான். அஜய்க்கு இப்ப வரை இது மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த திவ்யா சுகம், சொத்து, பணம்..சிறு வழியில் வரும் பணத்தை கூட விட மாட்டாள். காதம்பரியை விட ரொம்ப டேஞ்சர். அவள் என்னை அணுகாத காரணம் அஜய் தான்.
அஜய்யை அடையாமல் விட மாட்டேன். அவனை அடைந்து என் பக்கம் வருவாளாம்.. என்னிடமே சவாலாக பேசினாள்.
நாம கல்லூரி படிக்கும் போது. அதிலிருந்து அஜய் எங்கு போனாலும் நானும் உடன் சென்றேன். என்னால எப்போதும் அவன் பக்கமே இருக்க முடியாதுன்னு தான் அஜய்க்காவே அங்கிள், வேலனை அவனை பின் தொடர்ந்து பார்த்துக் கொள்ள பணித்தார்.
அஜய் வேலன் தொடர்வதை கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தது தான் அவனை எந்த பொண்ணும் தவறாக பயன்படுத்தவில்லை. பேசியிருக்கலாம். தனியே எந்த பொண்ணும் அவனை நெருங்காமல் வேலன் பார்த்துக் கொண்டான். அவனை பெண்கள் தவறாக பார்த்தாலே வேலனது முறைப்பில் நகர்ந்து விடுவார்கள். இனி அவள் எங்களை நெருங்க முடியாது. ஆனால் உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது என்றான் வினித்.
“ஏன்டா?”
ஆமா..அவள் நினைத்ததை அடையணும் இல்லை அழிக்கணும். இதை திவ்யாவிற்கு கற்றுக் கொடுத்தது அவள் அப்பா. அந்தாளுக்கு அவள் செல்லம். ஆனால் அவள் நினைத்ததை அவள் தான் அடையணும்ன்னு சொல்வாராம். ஆனால் அவள் மீது கை வைக்க முடியாது என யாரும் என்னிடம் சொல்லவில்லை.
சொல்லி இருந்தால் கொஞ்சம் கவனமா இருந்திருப்பேன் என வினித் சொல்ல, தியா கண்ணீருடன்..”அதுக்காக இப்படியாடா செய்வ? கொலை வரை எங்களுக்காக” என அவனை அணைத்து, “ரொம்ப பெயினா இருந்ததா?” என அழுது கொண்டே அவனை விலக்கி அவன் வயிற்றில் அவள் கை வைக்க செல்ல, அவள் கைகளை தடுத்து, ம்ம்..உங்களுக்காக மட்டும் தான்.
அவள் உங்களை பிரிக்கக்கூடாது என அவளை போட தான் பாரினே கிளம்பினேன் பட் அவ இங்க வந்திருக்கா.
ஒரு வாரம் கழித்து தான் விசயம் தெரிந்தது. அதனால் வேலனிடம் கூறி பாதுகாப்பை அதிகப்படுத்தினேன். ஆனால் அவ இப்படி கேம் ஆடுவான்னு நினைக்கல. சாரி தியூ..நீ சொன்னது போல் நான் போகாமல் இருந்தால் நீ உன் காதலை அஜய்யிடம் கூறி இருக்க மாட்ட? என்னை எண்ணி வருத்தப்பட்டு இருப்ப என அவளை பார்த்து..அவள் இங்க வந்துட்டான்னு தெரிஞ்சதும் நானும் வர தயார் செய்தேன். ஆனால் அவள் ஆட்களை வைத்து என்னை அங்கேயே லாக் பண்ணீட்டா. நான் வந்திருந்தால் நீங்க பிரிய விட்டிருக்க மாட்டேன் என அவளை பார்த்தான்.
“நீ இவ்வளவு செஞ்சிருக்கியா?” என்னோட வருத்தம். எங்க நிச்சயத்தில் நீ கலந்துக்கல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். சொந்த பந்தங்களை எனக்காக அஜய் வர வைத்தாலும் நீ இல்லாதது ஏதோ இல்லாதது போல தான் இருந்தது. “மிஸ் யூ டா” என தியா மேலும் அழுதாள்.
வினித் கண்களை துடைத்து, “ஆனால் நீ சொன்னது நடந்துருச்சுல்ல?” என கேலியாக அவன் கேட்க, “என்ன?”
“நீ இல்லாம நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?” என வினித் உரக்க கத்த, தியா பக்கென சிரித்து விட்டாள். பதிலும் கூறினான்.
“அதை என் புருசன் பார்த்துப்பான்” என தியா புன்னகைக்க, இருவரும் அணைத்துக் கொண்டனர்.
இவர்களின் புன்னகையின் ஊடே கேவல் சத்தம் கேட்க, இருவரும் பிரிந்து பார்க்க, முக்தா அழுது கொண்டிருந்தாள்.
இருவரும் அவளை பார்த்து கையை நீட்ட, தியாவிடம் சென்றாலே தவிர, வினித் அருகே அவள் மனம் சென்றாலும் அவளால் செல்ல முடியவில்லை.
வினித் அவனாக அவளிடம் வர, மூவரும் அணைக்க, முக்தா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளை பார்க்க, இருவருக்கும் இடையே ரோஹித் வந்து, “என்னை விட்டுட்டீங்கடா” என அவனும் அணைத்தான். இவர்களை பார்த்து ராகவீரன் புன்னகைத்தார்.
அனைவரும் விலக, வினித் தியா அருகே அமர்ந்து, தியூ..உங்க இருவர் மீதும் எந்த தவறும் இல்லை என அவன் சொல்ல, ராகவீரன் அவர்களுடன் வந்து அமர்ந்தார். அவர் வினித்திடம் கண்ணசைக்க, அவன் கண்களை மூடி திறந்தான். இவர்களின் சைகையில் ரோஹித்தும் முக்தாவும் பார்த்துக் கொண்டனர்.
தியூ..ராணியம்மா சொன்னாங்க நீ பாப்பா வயிற்றில் இருக்கும் போது தான் அவங்க வீட்டுக்கு போனன்னு. அதுக்கு முன்னாடி எங்க போன? வினித் கேட்க, படாரென அவனை பார்த்து எழுந்தாள்.
“தியூ” வினித் அழைக்க, “ப்ளீஸ் பழசை விட்றலாமே!” என தியா கேட்க,
ஏன் தியூ..சொல்லக்கூடாதா? வினித் கேட்டான்.
நாங்க கேட்டதுக்கும் நீங்க பதில் சொல்லலை. தியூ..சொல்லுங்க என முக்தா அவளை மறித்து நின்றாள்.
இல்ல, இவங்க இருந்த நிலையில அதை சொன்னா நம்ம வீட்ல யாரும் இவங்கல்ல சேர்த்திருக்க மாட்டாங்க. இவங்க கர்பிணியாக இருந்ததால் மட்டும் தான் ராணியம்மாவே சேர்த்தாங்க. எனக்குமே யாரோ நம்மை கண்காணிப்பது போல் உணர்ந்திருக்கிறேன் என்றான் ரோஹித். வினித் அவனை பார்த்துக் கொண்டே இருந்தானே தவிர வாயை திறக்கவேயில்லை.
அவங்க இவங்க இல்லை என தியா கூற, வினித்தின் புருவம் உயர்ந்தது.
தியாவோ தலையில் கை வைத்து அமர்ந்தாள்.
“எனக்கு தெரியும் தியூ?” நீ அஜய்யை நம்பாமல் போகலை. உனக்கு அவன் அவளிடம் நடந்து கொண்ட கோபம் மட்டும் தான்னு தெரியும்.
“நீ அஜய் வீட்டிலிருந்து செல்ல வேற காரணம் இருக்குல்ல?” வினித் கேட்டான்.
ராகவீரன் எழுந்து தியா அருகே அமர்ந்து, “ஏம்மா..உனக்கு இந்த அப்பா நினைவே வரலையா?” என கேட்டார்.
நீங்க அங்கிள் தான அங்கிள். எங்களால உங்களுக்கும் ஏதும் ஆகிடுமோ என்ற பயமும், வினித்திற்கும் சொந்தம் என உங்களை தவிர யாருமில்லையே? என்னால சொல்ல முடியல அங்கிள் என தியா கூற, அவர் கண்ணீர் வடிந்தது.
அவர் கண்ணீரை துடைத்து, “நீங்களும் மறச்சுட்டீங்க?” நான் இங்கிருந்து நேராக என்னோட வீட்டுக்கு தான் போனேன். என்னோட அம்மா இறப்பிற்கு காரணம் மட்டுமல்ல என் அப்பாவின் மூக்கில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுக்காங்க நான் பக்கம் இருக்கும் போதே. அன்றிருந்த சோர்வில் ஆழ்ந்து உறங்கி விட்டேன். அவர் அவராக சாகலை. அவரை கொன்றிருக்காங்க. அதுக்கும் காரணம் காதம்பரி தான்..
அவங்கல்ல சும்மா விடக் கூடாதுன்னு தோன்றிய என் மனதில் அஜய் நினைவு தான் வந்தது. நான் ஏதாவது செய்து அவனுக்கு ஆபத்து வந்திருமோன்னு அங்கேயே இருந்தேன். மறுநாள் காலை விழித்த போது என்னுடைய கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. இருட்டு அறை. எனக்கு என்ன தான் பழி வாங்கும் எண்ணம் இருந்தாலும் இருட்டிற்கு பயப்படும் என்னுடைய இயல்பான மனம் தலை தூக்க, பயத்தில் அழுதேன். ஒருநாள் முழுவதும் இருட்டில் இருக்க, மயங்கி விட்டேன்.
அடுத்து இருநாள் கழித்து விழித்த போது உடல் சோர்ந்து இருந்தது. உடலில் ஜூவனற்றது போல இருந்தது. யாரும் என்னை ஏதும் செஞ்சுட்டாங்களோன்னு ரொம்ப பயந்தேன். பைத்தியம் பிடிக்காத ஒன்று தான் மிச்சம்.
கட்டு அவிழ்க்கப்பட்டு இருந்ததால் மெதுவாக எழுந்து தள்ளாடியவாறு நடந்து தண்ணீரை தேட, ஓரிடம் முழுவதும் சிரஞ்சுகளாக இருந்தது. என்னுள் பயம் வர, அப்படியே அமர்ந்து மெதுவாக என்னை நானே ஆராய்ந்தேன். கண்களும் மங்கலாக தான் தெரிந்தது.
கைகளில் ஊசிகள் குத்திய அடையாளம் நன்றாக தெரிந்தது. மீண்டும் எழுந்து எல்லா இடத்திலும் வேறேதும் இருக்கான்னு பார்த்தேன். ஒரிடத்தில் சில பொட்டலங்கள் இருந்தது. அது கொக்கைன். போதை மருந்து.
யாரோ வரும் சத்தம் கேட்டு பழைய இடத்திலே அமர்ந்து மயக்கத்தில் இருப்பது போல நடிக்க,
ஏய்..எழுந்திருடி..நடிக்காத என்ற திவ்யாவின் குரலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அங்க சிசிடிவி இருந்ததை நான் பார்க்கலை. அதை பார்த்து நான் எழுந்ததால் வந்திருக்கிறாள் அவள்.
அதுக்கு அவ..அஜய்யை விட்டு போக சொன்னா. இதுக்கு முன்னும் அதிகமா பேசினால் தான் எனக்கு அஜய் பற்றி தெரியும்டா. அவன் என்ன நடந்தாலும் விட மாட்டேன்னு சொன்னான். அதனால முடியாதுன்னு சொன்னேன். அவன் என்னை தேடி வந்துருவான்னு சொன்னேன்.
அவன் வர மாட்டான். அவன் எங்க திருமணத்துக்கு ஒத்துகிட்டான்னு சொன்னா. நான் நம்பவேயில்லை. அதனால் அவளுக்கு கோபம் அதிகமாகி என்னை அடித்தால்…நீ என்னை என்ன செய்தாலும் என் அஜூவை விட்டு செல்ல மாட்டேன் என்றதுக்கு அவள் பயங்கரமாக சிரித்தாள்.
“உன்னை யாரும் தொடாமல் வச்சிருக்கிறது எதுக்கு தெரியுமா?” உன் அஜய் முன் நீ மற்றவனுக்கு இரையாகணும். அதை அவன் பார்த்து உன்னை வெறுக்கணும்.
உன்னை வெறுத்தால் அவன் என்னிடம் வந்துருவான் என சொல்ல, நான் அவள் காலை பிடித்து கெஞ்சினேன். அவளோ அதற்கு மேலும் பேச பொறுக்க முடியாமல் அவளை அடித்து விட்டேன். சில பொண்ணுங்க உள்ளே வந்து அடித்தது தான் நினைவு.
மறுநாள் நான் அங்கிருந்து தான் எழுந்தேன். யாருமில்லை. முதலில் சிசிடிவியை அடித்து உடைத்து நினைவில்லாத நிலையில் அங்கிருந்து கால் போன போக்கில் சென்றேன். கார் ஒன்றில் இடித்து விழுந்தேன்.
கார் இடித்தது மட்டும் தான் நினைவிருந்தது. வேறெதுவும் இல்லை. இரு நாட்களாக யாரோ பேசுவது போல் மட்டும் அடிக்கடி கேட்டது. என்ன பேசினாங்க? யாருன்னு எனக்கு தெரியல. நான் விழித்த போது அங்கிருந்த பெரியவர் ஒருவர் என்னிடம் அன்பாக பேசினார். என் அஜய்யிடம் வந்து விடுவேன்னு ஒரு நம்பிக்கை வந்தது.
பின் தான் அது ஹாஸ்பிட்டல் இல்லை வீடு என தெரிய வந்தது. அந்த பெரியவர், வேலையாட்களை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ஒரு வாரத்திற்கு பின் உடல் சரியானது. ஆனால் அந்த போதை மருந்தின் தாக்கம் என்னை ஆட்கொண்டு இருந்தது.
எனக்கு அந்த பெரியவர் தான் உதவினார். ஆனால்..என தியா முகத்தை மூடி கதறி அழுதாள்.
தியூ..என முக்தா அவளருகே வந்து அணைத்தாள் கண்ணீருடன்.
தியாம்மா..என ராகவீரன் பதறி அவளை பார்க்க, அந்த பெரியவர் எனக்கு உதவியது கூட என உடலுக்காக என அழுத தியாவை பார்த்து அனைவரும் கொந்தளித்தனர்.
தியா பேச முடியாமல் அழ, முக்தாவால் தாங்க முடியவில்லை.
இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் முக்தா சொல்லி தியாவை அணைக்க, அமைதியான பின் தியா மேலும் தொடர்ந்தாள். ஆண்கள் இறுகிப் போய் அமர்ந்திருந்தனர்.
நான் போதையில் இருந்த போது தான் அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்நிலையிலும் அவரை தடுக்க தான் முயன்றேன்.
அந்நேரம் அதிரடியாக ஒருவன் உள்ளே நுழைந்து அவரை அடித்து இழுத்து சென்றான். அவன் யாரு? அந்த பெரியவர் யாரு? எந்த வீட்டில் இருந்தேன்? என எனக்கு தெரியவில்லை.
நான் கூட முதலில் என் அஜூ தான் வந்துட்டான்னு நிம்மதியோடு கண்ணை மூடும் போது, அந்த பெரியவர் பேசியது என் காதில் தெளிவாக விழுந்தது.
“சின்னப்பைய நீ? யாரை பிடிக்கிற? டேய்..விதார்த் இதுக்கு நீ கண்டிப்பா வருத்தப்படுவ?” எனக் கத்தினார்.
என்னை காப்பாற்றியவன் அஜூ இல்லை யாரோ ஒருவன். அவன் பெயர் விதார்த்.
“விதார்த்தா? நீ அவனை பார்த்திருக்கிறாயா?” வினு கேட்க, இல்ல..அந்த குரல் மட்டும் தான் கேட்டது. நான் சுயநினைவிலே இல்லை என தியா அழுதாள்.
தியா, “நல்லா கேட்டீயா? விதார்த் தானா?”
ம்ம்..அவன் யாருக்கோ அசிஸ்டென்ட்டு சொன்ன மாதிரி நியாபம்.
“அசிஸ்டென்டா?” வினு சிந்தித்தான்.
“உன்னால அந்த குரலை கண்டறிய முடியுமா?” வினித் கேட்க, “ஏன் உங்களுக்கு அந்த பெயரில் இருப்பவனை தெரியுமா?” ரோஹித் கேட்டான்.
ம்ம்..ஒருவன் எனக்கு தெரியும். அலைபேசியில் ஒருவனின் புகைப்படத்தை காட்டினான் வினித்.
இவன் பெயர் விதார்த். நம்ம விஜய் டீம் ஹெட் மனோகர் சாரின் அசிஸ்டென்ட்டாக இரு வருடத்திற்கு முன் இருந்தான். இவனுக்கு இந்த வருடம் தான் பிரமோசன் கிடைத்து நம்ம விஜய், கார்த்திக், கரண் போல டிடெக்டிவானான்.
“என்ன?” தியா ஆச்சர்யாக கேட்டு, “இவராக தான் இருக்குமோ?” எனக் கேட்டாள்.
தியா..இதை பத்தி யோசிக்காத வினித் கூற, நான் இன்னும் முடிக்கலைடா. அங்கிருந்து என்னை யார் வெளிய அழைச்சிட்டு போனாங்கன்னு தெரியல.
டெல்லி கெர்ஸ் ஹாஸ்ட்டல்ல இருந்தேன். எனக்கு அங்கிருந்த பொண்ணுங்க உதவினாங்க. வேலையும் பார்த்துக் கொண்டு சில மாதங்கள் எப்படியோ முடிந்தது.
முதலில் அஜூவை பார்க்க தான் எண்ணினேன். பின் தான் திவ்யாவின் பேச்சு நினைவில் வந்தது. நான் அஜூவை பார்க்க வந்தால் சந்தோசப்படுவான். என்னை கல்யாணம் பண்ணிப்பான். ஆனால் இதனால் திவ்யா சும்மா இருப்பாளா? என் அஜூவை ஏதாவது செய்து விட்டால்ன்னா என பயந்து தான் நான் டெல்லியே இருந்து கொண்டேன்.
ஒரு நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த போது மயக்கம் வந்தது. நானும் கட்டுப்படுத்த முயன்றேன் முடியாமல் மயங்கியதில் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தாங்க. அங்க தான் நான் கருவுற்று இருப்பது தெரிந்தது. எனக்கு உதவ வந்தவங்க என்னை பார்த்த பார்வையை என்னால் சந்திக்க முடியலை. இதில் மேனேஜர் சார் என்னை ரிசைன்னிங் லெட்டர் எழுதி வரச் சொன்னாங்க. எல்லாரும் என்னை பற்றி கண்டபடி பேச ஆரம்பிச்சாங்க. என்னாலும் இருக்க முடியலை. அதனால் வேலையை விட்டு வந்துட்டேன்.
இந்த விசயம் ஹாஸ்ட்டலுக்கும் தெரிய வந்தது. வயிறு தெரியும் வரை மட்டும் தங்க அனுமதிச்சாங்க. அதுவும் ஹாஸ்ட்டலில் தங்கும் பொண்ணுங்க எனக்காக ஓனரிடம் பேசினாங்க. ஆனாலும் அவங்களும் என்னை தவறா பேசினாங்க. அதனால அறையில இருந்து நான் ஒரு மாதமாக வெளிய வரலை. என்னை யாரும் பார்த்துக்கலை. என்னையும் பாப்பாவையும் நான் தான் பார்த்துகிட்டேன்.
வாமிட்.தலை சுற்றலில் சரியாக சாப்பிட முடியாமல் கவனிக்க யாருமில்லால் மத்தவங்க பேச்சில் ரொம்ப மனஅழுத்தமாகிடுச்சு. அதுல எனக்கு மூச்சு பிரச்சனை வந்து விட்டது.
விடுதி காப்பாளர் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தார். பின் அடிக்கடி காப்பாளர் என்னை அடிக்கடி என் அறையில் வந்து பார்த்துக் கொண்டார். ஆனால் அவர் பேச்சு என..பெருமூச்சு விட்டாள் தியா.
எனக்கு ஐந்தாவது மாதமாகவும் விடுதியிலிருந்து தனி இடத்திற்கு வந்தேன். எனக்கு வீடும் சாதாரணமாக கிடைக்கவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு தான் வீடு வாடகைக்கு பிடித்தேன். ஆனால் அங்கிருக்கும் ஆண்களால் தொந்தரவாக இருந்தது. அதனால் அன்று மனஅமைதிக்காக பீச் சென்றேன்.
அங்கு என்னை சிலர் விரட்டினார்கள். அவர்கள் அந்த பெரியவரின் ஆட்கள் போலும். “எப்படி அங்கு வந்தார்கள்?” என்று எனக்கு புரியல. அப்பொழுது தான் என தியா ரோஹித்தை பார்த்தாள்.
ம்ம்..நான் என் நண்பர்களுடன் வந்திருந்தேன். என் நண்பர்களுடன் சேர்ந்து அவங்களை விரட்டியடித்தேன். ஆனால் யாரும் தியாவை வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டேன்னு சொல்லீட்டாங்க. தியாவும் வேண்டாம்ன்னு சொன்னா.
“அவங்க வந்தா என்ன செய்வ?” என்று கேட்ட போது அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு அழுது விட்டாள். அதனால் தான் எங்க வீட்ல பெரியவங்க இருக்காங்கன்னு சொல்லி அழைச்சிட்டு போனேன். ஆனால் யுக்தா, முக்தாவுக்கு தியாவை தெரியும் எனவும் எனக்கு நிம்மதியானது.
பாவமாக அனைவரும் தியாவை பார்த்து ஏற்றுக் கொண்டாலும் இப்ப அவளும் எங்க குடும்பத்துல்ல ஒருத்தியாகிட்டா என அவள் முன் வந்து அமர்ந்த ரோஹித், நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன்னு நினைச்சு கூட பார்க்கல. நானும் உன்னை தொந்தரவு செய்திட்டேன் என கண்ணீர் வடித்தான்.
தியா அமைதியாக அவனை பார்த்தாள். அனைவரும் மௌனமாக இருந்தாலும் அனைவர் மனமும் கொந்தளித்தது. எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வீடியோ செய்திருந்தான் ரோஹித்.
அண்ணா..அஜய் அண்ணா..நீ கம்பெனிக்கு செல்லாமல் இவருடன் சென்றதால் கோபமாக போயிருக்காங்க. நீ போ..இல்லை நம்ம வீட்ல தெரிஞ்சா பிரச்சனையாகும் முக்தா சொல்ல, அனைவரும் அவரவர் எண்ணத்திலிருந்து களைந்து அவளை பார்த்தனர்.
ம்ம்..போறேன் என ரோஹித் எழ, தயாராகி வா ரோஹித். நானும் உன்னுடன் வரணும் என்ற வினித், தியாவின் கையை அவன் கைக்குள் வைத்து, அஜய்யிடம் நீ சொன்னது போல் இருக்கக்கூடாது. அவன் உன் மீது கோபத்தில் தான் பேசி இருக்கான். தப்பு தான். நடந்தது தெரிந்தால் என வினித் சொல்லும் போதே அவன் வாயை அடைத்தவள் கண்ணீருடன் எதையும் அவரிடம் சொல்ல வேண்டாம்.
அவருக்கு நான் அவரை சந்தேகித்து விட்டு சென்றதாகவே இருக்கட்டும் தெரிந்தால் அவரால் தான் என அவரை அவரே மன்னிக்க மாட்டார். உடைந்து விடுவார்.
ப்ளீஸ் அப்பா..சொல்லுங்க. அண்ணாவை சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க என தியா கண்கலங்க, ராகவீரன் தியாவை அணைத்து, என்னை மன்னிச்சிருடா. நானும் தப்பா தான் புரிஞ்சுட்டு இருந்திருக்கேன்.
“உன் மேல என்னடா தப்பு?” சொல்லு வினு..ராகவீரன் தன் மகனை அழைக்க, ம்ம்..தியா உன் மீது எந்த தவறும் இல்லை.
நீயும் அஜய்யும் சந்தோசமா வாழணும்ன்னு தான் நான் பாரின் போய் இவ்வளவும் செய்தேன். இதுக்கு மேல உன்னையும் அஜய்யையும் விட்டு நான் நகர்வதாக இல்லை.
உன்னையும் அஜய்யையும் கஷ்டப்படுத்தியவங்கல்ல சும்மா விட மாட்டேன் என வினித் கோபமாக கர்ஜிக்க, தியா பயத்து அவனை பார்த்தாள்.
வினு..எனக்கு பிராமிஸ் பண்ணு. நீ யார்கிட்டயும் வம்ப வளர்க்காத தியா சொல்ல, நானா வளர்த்தேன். அவங்க ஆரம்பிச்சுட்டாங்கல்ல நான் முடிக்கிறேன். என்னால பிராமிஸ் பண்ண முடியாது.
எனக்கு எல்லாமுமாய் இருந்த உன்னோட அம்மா, அப்பா, உன்னை, அஜய், அங்கிள், அம்மா, அப்பா என எல்லாரையும் அந்த காதம்பரியும் அவ பொண்ணும் செய்யக் கூடாததை செஞ்சுட்டாங்க. இனி நான் அவங்கள விட மாட்டேன் என சொல்ல, முக்தா அதிர்ந்து நின்றாள்.
ஆமா, நானும் தான். அப்படி என்னத்த கிழிக்கிறானுகன்னு பார்க்கணும்? அஜய் சாரும், தியா…நீயும் ரதுவோட சந்தோசமா வாழ்வதை பார்த்துட்டு தான் நான் டெல்லியில் கால் பதிப்பேன் என்றான் ரோஹித்.
வேண்டாம். யாரும் ஏதும் செய்ய வேண்டாம். ஏற்கனவே நான் நிறைய பேரை இழந்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாதுடா. எதுவும் செய்யாதீங்க என தியா அழுதாள்.
“அதுக்காக தான் தியா இந்த முடிவு?” இதுக்கு மேல என்னாலும் யாரையும் இழக்க முடியாது என வினித்தும் கத்தினான். தியாவால் பேச முடியலை. அழுது கொண்டே ராகவீரன் தோளில் சாய்ந்தாள்.
தியாம்மா, வினு சொல்றது சரிதான். நம்ம ரது பற்றி தெரிந்தால் கண்டிப்பாக அவங்க ஏதாவது ஆரம்பிப்பாங்கடா. அதுக்கு முன்னாடி நாம பிரச்சனையை முடிப்பது தான் சரி என்றார் அவரும்.