ஏய் அம்மு, “எதுக்கு அழுற?” கரண் கேட்க, கார்த்திகேயனிடம் சென்று அவனை அணைத்து, நீங்க தப்பு பண்ணீட்டீங்க. அவனுக்கு பதில் அக்கா உங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று அவள் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.
முக்தா, “என்ன பேசுற?” அஜய் சத்தமிட, அவள் கோபமாக “உங்களுக்கு என்ன தெரியும்?” நீங்க பேசாதீங்க என அவள் பேசும் முன், முகி..”என்ன பேசுறன்னு தெரிந்து தான் பேசுறியா?” ரோஹித் சீற்றமுடன் கேட்டான்.
நல்லா தெரிஞ்சு தான் பேசிறேன் அண்ணா. அக்காவும் கார்த்திக் மாமாவும் காதலிச்சாங்க. அக்கா ஏதோ சொன்னதால தான் கார்த்திக் மாமா பேசுறத நிறுத்திட்டாரு. அக்காவும் நானும் டெல்லி போயிட்டோம். அப்புறம் யார் பற்றியும் எனக்கு தெரியல. ஆனால் இப்ப அக்கா..என அவள் மீண்டும் அழ, “இப்ப என்ன?” கார்த்திக்கேயன் கேட்டான்.
மச்சி, “ஏதோ வீடியோ வந்திருக்குடா யுக்தா சம்பந்தமாக” என விஜய் சொல்ல, அனைவரும் பார்த்து அதிர, ரோஹித்திற்கோ சீற்றம் பெருகியது.
“யாருடா இதை வெளியிட்டது?” என கோபமாக சத்தம் போட்டவன்.. ராணியம்மாவை அழைத்து பேசினான்.
அவர் சொன்னதில் அவன் அதிர்ந்தான்.
“என்னாச்சு அண்ணா? பாட்டி என்ன சொன்னாங்க?”
வீடியோ கண்டிப்பாக வெளிய வரும்ன்னு அவங்களுக்கு தெரியுமாம். அதனால தான் நம்முடன் அனுப்பி வைத்தாங்களாம். அவங்க அதை அழித்து விடுவேன்னு சொன்னாங்க என அலைபேசியை வச்சிட்டாங்க.
ராணியம்மா சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் யுக்தா பற்றிய பேச்சு நின்று சீமா பற்றி வெளியே வந்தது.
அண்ணா..சீமாக்கா வீடியோ. நம்ம சோட்டு பார்த்த வீடியோ வைரலாகிட்டு இருக்கு.
அக்கா..அக்கா..உயிரோட இல்லைன்னு வருது என முக்தா சொல்ல, தியா பதட்டமாக அலைபேசியை வாங்கி பார்த்தாள்.
செத்தா..சாகட்டும். அவ உயிரோட இருந்து எல்லார் உயிரையும் வாங்கினது தான் மிச்சம்.
“என்ன பேசுற?” என தியா ராணியம்மாவை அழைக்க, அவர் தியா அழைப்பை ஏற்று “பசங்கல்ல நல்லா பார்த்துக்கோடா” என்றார் விரக்தியுடன்.
“சோட்டு கிட்ட அலைபேசியை குடுங்க” தியா சொல்ல, இங்க நாங்க பார்த்துக்கிறோம். அங்க நீங்க கவனமா இருங்க என்று அவர் குரல் கரகரக்க பேச, தியா மனம் கனத்து அமர்ந்தாள்.
நடக்கும் ஏதும் தெரியாமல் யுக்தா நித்திரையில் இருக்க, “இப்ப யுக்தா என்ன செய்றா? அவங்க வீட்லயா இருக்கா?” என சந்தோஷ் கேட்க, நால்வரின் பார்வையும் காரில் ஏறிட்டது.
“என்ன? இங்கேயா இருக்கா?” என விஜய் முன்னேறி சென்று பார்க்க, மற்றவர்களும் அவனுடன் சென்றனர். கார்த்திகேயன் மட்டும் தயங்கி நின்றான்.
ஓ, அப்ப இவருக்கு தன் அக்கா மீது விருப்பமில்லை போல என எண்ணிய முக்தா, “அண்ணா கிளம்பலாமா?” சோர்வா இருக்கு என்றாள் அஜய்யிடம்.
“இவ என்ன மாத்தி மாத்தி பேசுறா?” என எண்ணிய அஜய் நண்பர்களை பார்க்க, “யுக்தா” என குரல் கேட்டு விழித்த யுக்தா இவர்களை திடீரென காணவும் பயந்து அவள் சீட்டின் ஓரமாக ஒண்டிக் கொண்டாள்.
ஏய், “யுகி எங்கள பார்த்து எதுக்கு பயப்படுற?” சந்தோஷ் கேட்க, அவள் கண்களால் முக்தா, தியாவை தேடினாள்.
“வா யுகி” என தியா அவள் கையை நீட்ட, யுக்தா கண்கலங்க அவளை பார்த்து கண்ணாலே ஏதோ கேட்க, தியா “ஆம்” என கண்களை மூடி திறந்தாள்.
சட்டென தியா கையை விட்டு, கார்க்கதவை சாற்றி விட்டு சீட்டிற்கு கீழே தலையை குனிந்து கொண்டாள்.
அக்கா, “என்ன பண்ற?” முக்தா அவள் கையை பிடிக்க செல்ல, வினு அவளை நிறுத்தி, அவ கொஞ்சம் ஓய்வெடுக்கணும். தொந்தரவு செய்யாதீங்க. “கார்ல்ல ஏறு முகி” என்று அவன் சொல்ல, முக்தா அவனை பார்த்தாள்.
“என்ன?”
“ஏறு” என வினு சொல்லிக் கொண்டிருந்த போது துப்பாக்கி சத்தம் கேட்டு சட்டென முதுகின் பின் மாட்டிய துப்பாக்கியை எடுத்த அஜய், “எல்லாரும் கார்ல்ல ஏறுங்க” எனக் கத்தினான். வினித்தும் தியாவும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
“ஏறு தியா” என்று விஜய்யும் துப்பாக்கியை எடுத்தான். மற்றவர்களும் துப்பாக்கியை எடுக்க, கார்த்திகேயன் தன்னுடைய துப்பாக்கியை வினித்திடம் தூக்கி போட வினித் அதை பிடித்து, எனக்கு இதெல்லாம் தெரியாதுடா என்றான்.
ஆமா, சாருக்கு ஒண்ணுமே தெரியாது. நடிக்காதடா.. பாரிஸ்ல்ல வச்சி நடந்தது எல்லாமே எனக்கு தெரியும். “ஆல் டீடைல்ஸ் ஐ நோ” என கார்த்திகேயன் சொன்னான்.
அஜய்யோ, உங்க புராணத்தை அப்புறம் பேசலாம் என கடுத்தவாறு அஜய் துப்பாக்கி சத்தம் வந்த திசையை நோக்கி திருப்ப, காரருகே வந்த தோட்டாவும் அங்கே வந்தவர்கள் சூட் செய்த தோட்டாவும் உரசி கீழே விழுந்தது.
சிம்மாவும் விக்ரமும் கையில் துப்பாக்கியுடன் வந்தனர். இருவரும் பிரதர்ஸ் என்பதை வெளியிட்டு இருந்தனர்.
“அண்ணா” என தியா அழைத்துக் கொண்டு மேலும் திகைக்க, “அண்ணி இங்க என்ன நடக்குது?” முக்தா கேட்க, “எனக்கே ஒண்ணும் புரியலயே!” என்றாள்.
இவர்கள் இருக்கும் இடத்தை சுற்றி சுமார் முப்பது பேராக இருப்பர். கையில் துப்பாக்கியுடன் வந்திருந்தனர். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடை செய்ய காரை சுற்றி வினித்தின் நண்பர்கள் நின்றனர். அஜய் கார்க்கதவை மறித்து நிற்க, வினித்தும் கொஞ்சம் முன் நின்று, “யாருடா இவனுக? இத்தன பேரு இருக்கானுக? நம்மை எதற்கு?” என சொல்லும் போதே சுட ஆரம்பித்தனர் அவர்கள்.
“சூட் பண்ணுங்க” என சிம்மா சத்தம் கொடுக்க, இவர்கள் அனைவரும் அவர்களை குறி வைத்து தாக்க, அங்கே மடமடவென சரிந்தனர். சிலர் தப்ப முயல. அஜய் நீ பார்த்து வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நாங்க வாரோம் என விக்ரம் வா என சிம்மாவுடன் செல்ல, அஜய்யும் வினித்தும் காரில் சாய்ந்து நின்றனர்.
ஹப்பா, “யாருடா இவனுக?” வினித் கேட்க, தியா கார்க்கதவை திறந்து வரவும், வினித்தின் நண்பர்கள் வரவும் சரியாக இருந்தது.
“என்ன நடக்குது? யார் இவங்க? இத்தனை பேர் கொலை செய்ய வந்திருக்காங்களா? யாரை? ஏதாவது சொல்லுங்கடா?” என சந்தோஷின் சட்டையை பிடித்து, “உன்னாலவா?” என கேட்க, கோபமான அவன் “முதல்ல கையை எடு” என அவன் கத்தினான். வினித் அவனை அதிர்ந்து பார்த்தான்.
எடுன்னு சொன்னேன் என அவன் மீண்டும் சத்தம் போட, திகைத்து தியா கையை எடுத்தாள்.
இனி இங்க இருப்பது ஆபத்து. வாங்க போகலாம். “வீட்டுக்கு வாரீங்களாடா?” அஜய் கேட்க, நோ..அஜய் என்றான் சந்தோஷ் கோபமாக.
தியாவோ கேட்க தயங்கினாலும் எல்லாரையும் பார்த்து விட்டு, கரணிடம் வந்து “என்ன நடக்குது?” எனக் கேட்டாள்.
உனக்கு சொல்ல வேண்டியவங்க தான் சொல்லணும். நீ அவனிடம் தான் கேட்கணும் என்றான் கரண்.
அஜய்யை பார்த்த தியா பேச நாவெழாமல் அமைதியாக நிற்க, வினித் அருகே வந்த கார்த்திகேயன் அவனை கோபமாக முறைத்து பார்த்தான். முக்தா, ரோஹித், யுக்தா கீழே இறங்க, “என்ன?” என்று வினித் கார்த்திகேயனிடம் கேட்டான்.
அவன் ஏதும் பேசாமல் வினித்தின் சட்டை பட்டனை கழற்ற, அனைவரும் அதிர்ந்தனர். வினித் அவனை தடுக்க, கார்த்திக் அவன் கன்னத்தில் அறைந்தான்.
“கார்த்திக்” அஜய் சத்தமிட, இவனுக்கு பெரிய தியாகின்னு நினைப்புடா என அவன் சட்டையில் கை வைக்க, “வேண்டாம் கார்த்திக்” என வினித் விலக, அனைவரும் சந்தேகமாக அவனை பார்த்தனர்.
“பிடிங்கடா இவனை” என கார்த்திக் சொல்ல, மற்றவர்கள் யோசனையுடன் வினித்தின் கை, கால்களை பிடிக்க, கார்த்திக் பட்டனை கழற்றினான்.
வினித்தின் வயிற்றில் கட்டு போடப்பட்டு இருந்தது.
வினு, “என்னடா இது?” தியா கேட்க, அஜய் அவனை முறைத்தவாறு..”திவ்யா விசயமா?” எனக் கேட்டான். வினித் தலையை கவிழ்ந்தான்.
சிம்மா அங்கே வந்து, “இன்னும் கிளம்பலையா?” கிளம்புங்க என்றான்.
சந்தோஷ் நண்பர்களை பார்க்க, வாங்க நாமும் கிளம்பலாம் கரண் சொல்ல, நீங்க போங்க. எனக்கு வேலை இருக்கு என்று கார்த்திக் நழுவ பார்க்க, “எங்கடா நழுவ பார்க்கிற?” என விஜய் அவனை இழுத்தான்.
சரி, வாரேன் என்று புன்னகைத்த கார்த்திக் யுக்தாவை பார்க்க, அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.
யுகி, “கார்ல்ல ஏறு” ரோஹித் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கார்த்திக் அவனுக்கு வந்த அலைபேசியில் ஏதோ டைப் செய்தான்.
“அண்ணா” தியா சிம்மாவை அழைக்க, அவன் காதில் வாங்காதது போல, “வா விக்ரம்” என அழைத்த சிம்மா ரோஹித் கையிலிருந்த ரதுவை பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.
“அண்ணா” என தியா முன்னேற இருந்த சமயம், அவள் கையை பிடித்த அஜய் ”கார்ல்ல ஏறு” என பல்லை கடித்தான். “வினித்திற்கு ஏதும் சரியில்லை” என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். அஜய் வீட்டின் பக்கம் கார் செல்லாமல் செல்ல, தியாவும் வினித்தும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அஜய், “எங்க போற?”
வீட்டிற்கு..என்றான் அவன்.
“என் மேல கோபம் போச்சா” வினித் கேட்க, காரை நிறுத்திய அஜய்..கோபத்தை அதிகமா தான் ஆக்கி இருக்க என காரை எடுத்தான்.
“இது வீட்டுக்கு போற வழி இல்லையே!” என தைரியத்தை வர வைத்து தியா கேட்க, அவனிடம் பதிலில்லை.
அஜய் காரை வீட்டினுள் செலுத்தி காரை பார்க் செய்ய, வினித்தை பார்த்த வாட்ச்மேன்..சின்னய்யா, எப்படி இருக்கீங்க? எனக் கேட்டான்.
ம்ம்..என்ற வினித் அஜய்யை பார்க்க, எல்லாரும் உள்ள வாங்க என அழைத்தான்.
தியா அங்கேயே நிற்க, எல்லாரும் அவளை திரும்பி பார்த்தனர். அஜய் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ரதுவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
தம்பி, “பாப்பா எங்க?” கண்ணம்மா கேட்க, “வருவா” என அவர் அசட்டையாக சொல்லி உள்ளே செல்ல இருந்தவனை நிறுத்திய கண்ணம்மா, ஆலம் கரைச்சிட்டு வந்துருக்கேன். பாப்பாவும் வரட்டும் என ரதுவை பார்த்து அவர் உள்ளம் நெகிழ்ந்தது.
அஜய் அப்பொழுது தான் தியாவை திரும்பி பார்த்தான். அவள் கேட்டருகே நிற்க, வினித் அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பர்கள் வந்தனர்.
ஏதோ தவறா இருக்கு தியா. முதல்ல என்னன்னு தெரிஞ்சிட்டு பேசு.. அவசரப்பட்டு இந்த மாதிரி பண்ணாத. நம்ம வீடு தான வா என அவன் அழைக்க, அவள் அஜய்யை பார்த்தாள்.
“நாங்க எதுக்கு இங்க வந்திருக்கோம்?” என தியா அஜய்யை பார்த்துக் கொண்டே விஜய்யை பார்த்து கேட்டாள்.
அஜய் சினமுடன் அவளை முறைக்க, கண்ணம்மா வேகமாக வெளியே அஜய் கையை பிடித்து வந்து அவளருகே நிற்க வைக்க, கண்ணம்மாவை பார்க்கவும்..”அக்கா” என தியா கண்கலங்க அணைத்தாள்.
அவர் சிறு புன்னகை பூத்தாலும் அவளிடம் ஏதும் பேசவில்லை. ஆராத்தியை காட்டி அவர் உள்ளே சென்று விட, தியாவிற்கு முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது.
அஜய் அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான். அவள் புரியாமல் அங்கேயே நிற்க, ரோஹித்தை தாண்டி சென்ற அஜய் கையை பிடித்த ரோஹித், அவளுக்கு பதில் சொன்னால் நல்லா இருக்கும் என அவன் சொல்ல, அஜய்க்கு கோபம் அதிகரித்தது.
அவன் கையை சீற்றமுடன் உதறியவன், யாருக்கும் நான் பதில் சொல்ல தேவையில்லை. நான் எந்த தப்பும் செய்யலை என அழுத்தமாக அவன் கூறி விட்டு, நீ ஏதும் தெரியாமல் பேசாத என விருட்டென உள்ளே சென்றான்.
அவன் பின்னே ஓடிய வினித், “என்னன்னு சொன்னால் தான எங்களுக்கு தெரியும்” என கத்தினான்.
அஜய் கண்கள் சிவக்க, “என்ன சொல்லணும் உனக்கு?” போன அவள் இனி தெரிஞ்சுப்பா. அவளை பார்த்த போது கூட அவ விட்டு போயிட்டான்னு எனக்கு கோபம் இல்லை வருத்தம் மட்டுமே தான் இருந்தது.
“அவள் எப்பொழுது நம்பிக்கை இல்லைன்னு சொன்னாலோ?” அப்பவே எங்களோட காதல் காணாமல் போயிருச்சு. இனி சொல்ல ஏதுமில்லை.
“ஸ்டார்” என்ற சத்தத்தில் அப்படியே நின்றாள் நட்சத்திரா.
ஓர் அறையிலிருந்து ராகவீரன் வெளியே வந்தார்.
“அப்பா” என வினித் அவரிடம் சென்று அவரை அணைத்தான். அவர் மீது மருந்து வாடை அடிக்க, அதை முகர்ந்தவன் அவரை நகர்த்தி, “என்னாச்சு?” மருந்து ஸ்மல் வருது என அவரிடம் கேட்டான்.
அவர் அவனை பார்த்து, ஒன்றுமில்லைப்பா..மருந்து சாப்பிட்டேன். அதான் என வந்த ராணியம்மா வீட்டு பிள்ளைகளை வரவேற்றார். பின் தியாவை பார்த்தார். அவரை பார்த்தவுடனே தியாவிற்கு அஜய் அப்பா நினைவில் வர, கன்னத்தில் இருந்த கையை எடுத்து விட்டு, அங்கிள் “மாமா எங்க?” என கேட்க, அவர் வந்த அறையை பார்த்தார் ஏதும் பேசாமல்.
அவள் நகர, “நில்லு” என்ற அஜய்யின் சீற்றமான குரலில் அவனை அதிர்ந்து அனைவரும் பார்த்தனர். அவன் நண்பர்களோ அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.
அஜய்..நான் மாமாவை பார்க்கணும்.
“இப்ப தான் மேடமிற்கு நினைவிற்கு வருதோ?” என எள்ளலாக கேட்ட அஜய், அந்த அறைப்பக்கம் மட்டும் நீ போகக் கூடாது என அவன் எச்சரிக்கும் விதமாக.
இல்ல அஜய், “அடுத்தடுத்து பிரச்சனை?” எந்த எண்ணமும் இல்லை என்றாள்.
எண்ணமில்லை..ம்ம்..மேடமுக்கு மட்டும் தான பிரச்சனை வரும் என மீண்டும் எகத்தாலமாக பேசிய அஜய், அங்கிள் இவ அப்பாவை பார்க்கவே கூடாது.
“பார்க்கக்கூடாதா? அப்ப மாமா வெளிய வர மாட்டாங்களா?” என தியா பாவமாக கேட்க, வினித் வேகமாக அறை நோக்கி சென்று அதிர்ந்து நின்றான்.
அஜய், நடந்ததை விடு. இனி நடப்பதை பார்க்கலாம் என ராகவீரன் சொல்ல, முடியாது அங்கிள். அவ அப்பாவை பார்க்க கூடாது என அஜய் சொல்ல, வினித் தியாவை பார்த்து விட்டு அறைக்குள் சென்றான்.
தியாவும் அறைப்பக்கம் வர, அஜய் வேகமாக அறை முன் வந்து நின்று, “நீ அந்த அறைக்கு போ” என கையை அவன் அறைக்கு காட்டினான்.
ராஜ் இதிலிருந்து வெளியே வர தியா கூட உதவலாம் என்றார்.
“இவளா? உதவுவாளா? இவளால தான எல்லாமே!” என தியா மீது பழியை போட, “வேண்டாம் அஜய்” ராக வீரன் சொல்ல, சட்டென அஜய் காலில் விழுந்தா தியா.
“அண்ணி” என்று சத்தமிட்ட முக்தா, தியாவிடம் ஓடி வந்து, இதுக்கு மேல நீங்க இங்க இருக்க வேண்டாம். வாங்க போகலாம் என முக்தா இழுத்தாள்.
ஆமா கூட்டிட்டு போ. “போன முறை சொல்லாமல் ஓடிப் போனா?” இப்பேயும் போகணும்ன்னா போகட்டும் என அஜய் கூற, தன் கவலை, வலியை மறந்த யுக்தா அஜய்யை ஓங்கி அறைந்தாள்.
“அவ கழுத்துல்ல தாலி கட்டுட்டன்னு உனக்கு நினைப்பா?” அவ..என யுக்தா பேசும் முன் அவள் கையை பிடித்த தியா யுக்தாவிடம் கண்ணாலே கெஞ்சினாள்.
நீ செய்றதையும் பேசுறதையும் யோசிச்சு பேசு இல்ல கண்டிப்பா வருத்தப்படுவ என்று அஜய்க்கு எச்சரிக்கை விடுத்து விட்டு வேகமாக யுக்தா வெளியே செல்ல, வினித் வேகமாக அவள் பின் ஓடினாள். ரோஹித்தும் அவர்கள் பின் ஓடினான்.
“யுக்தா எங்க போற?” வினித் கேட்க, தியா இங்கே தான இருக்கா. நானும் இங்கே தான் இருப்பேன். “ஏன் வினு? நீயும் தியா மீது தவறு இருக்கும்ன்னு நினைக்கிறியா? அவ அஜய்யை சந்தேகப்பட்டு தான் போயிருப்பான்னு தோணுதா?” என பட்டென கேட்டு விட்டாள்.
அவர்கள் பின் வந்த வினித்தின் நண்பர்கள் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“என்ன சொல்ற?” நட்சத்திரா கேட்க, எனக்கு உங்க யாரிடமும் பேச பிடிக்கலை. “நீங்க தான் ஸ்டாரா?” என யுக்தா கேட்டாள்.
ம்ம்..
“ரொம்ப நல்லா அடிச்சீங்க” என்ற யுக்தா அவளது பொருட்கள் அடங்கிய பையை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, “உனக்கு என்ன தெரியும்?” ரோஹித் கேட்க, உனக்கு அது தேவையில்லை. நீ எதுக்கு வந்தீயோ அதை மட்டும் செய். தேவையில்லாமல் இதுக்கு மேல தியாவுக்கு உதவுறேன்னு ஏதாவது செஞ்ச தம்பின்னு பார்க்க மாட்டேன்.
அக்கா, “நீ ஓ.கே தான?” முக்தா கேட்க, ம்ம்..என்னை விட தியா தான் கஷ்டப்படப் போறா. ஆனால் நான் இருக்கும் வரை எதுவும் நடக்காது என்று திரும்பி வினுவை பார்த்து “தியாவுடையதை எடுத்துட்டு வா” என்று அவள் முன்னேறி நடந்தாள்.
“யுகி” சந்தோஷ் அழைக்க, அவனை மட்டும் பார்த்து விட்டு அவர்களை கடந்து சென்றாள் யுக்தா.
யுக்தா திட்டி விட்டு செல்லவும் அஜய் சினமுடன் படிகளில் ஏறினான். வீரா தியாவை பார்த்து, அம்மாடி ராஜூக்கு நீ செய்த சத்தியத்தை காப்பாற்றவில்லை. எப்போதும் நீ போக மாட்டன்னு சொன்ன. ஆனால் சொல்லாமல் போனதில் ரொம்ப மனசு உடைஞ்சு போச்சு அவனுக்கு.
ஆமா, அன்று நடந்த பிரச்சனையில் விக்ரம் மட்டும் வரலைன்னா இன்று உன்னோட அஜூன்னு சொல்வேல்ல அவன் உயிரோட இருந்திருக்க மாட்டான் என சிம்மா சினமுடன் சொல்ல, “என்ன தான் நடந்தது?” தெளிவா சொல்லுங்க என தியாவும் கோபமாக கேட்டாள்.
அன்று நீ சென்ற பின் எல்லா இடத்திலும் அஜய் உன்னை தேடி களைத்து வீட்டிற்கு வந்தான். திவ்யாவும் அவள் அம்மா காதம்பரியும் திமிறாக, தியா யாருடனோ ஓடிப் போனதாக சொன்னாங்க. அஜய் கோபமாக திவ்யா கழுத்தை பிடித்தான்.
அவன் அப்பா ராஜ் அவனை தடுக்க எண்ணி அவர்களிடையே வந்தார். அவரை பிடித்து கையிலிருந்த துப்பாக்கியை அவர் தலையில் வைத்து அஜய்யை மிரட்டினாள் காதம்பரி.
“அவரை விடுங்க” என அஜய் அவர்களிடம் கோபமாக வந்தான். அவனது சொத்தை அவருக்கு எழுதி தர சொல்லி மிரட்ட, அஜய் அவங்க பெயருக்கு எதையும் மாத்திறாத. அவ உன்னோட அம்மாவே இல்லை என ராஜ் கூற, அஜய் அதிர்ந்து டாட்..அம்மா தப்பு செய்றாங்க. அதுக்காக இப்படி பேசலாமா? என அவன் கேட்டான்.
இல்லடா, காதம்பரி உன் அம்மாவே இல்லை. என் மனைவியை கொன்ற பாவிடா இவ. இவளை மீறி யாராலும் ஏதும் செய்ய முடியாது. அவளுக்கு எதையும் எழுதி கொடுத்துறாத. அவங்க உன்னையும் எதுவும் செய்துடுவாங்க என அழுதார்.
அஜய் முறைத்தவாறு காதம்பரியை பார்க்க, புடவையை இழுத்து சொருகிய காதம்பரி.. ஆமா, நான் உன் அம்மா இல்லை. “நான் யார் தெரியுமா?” சின்ன வயதில் என்ன பெத்தவ என்னை அநாதையா விட்டுட்டா. என்ன செய்யன்னு யோசனையில் இருந்த போது தான் ஒரு தம்பதிகள் காரில் வரும் போது இடையில் வந்தேன்.
அவங்க பணக்காரவங்க என்பதால் அவங்க மகளாக வீட்டிற்குள் நுழைந்தேன். அவங்களுக்கு சொந்த குழந்தை வந்தால் எனக்கு பணமில்லாமல் போயிடும்ன்னு. அந்த அம்மாவை படியிலிருந்து தள்ளி விட்டு கொன்றேன். அது அவர் கணவருக்கு தெரியாது. போகப் போக எல்லாவற்றையும் என் பெயருக்கு மாற்ற பார்த்தால் அந்தாளுக்கு என் சுயரூபம் தெரிந்து சொத்தை அநாதை பிள்ளைகளுக்கு எழுதி வைக்க போனான். அதான் அவனை போட்டு தள்ளீட்டு அவன் சொத்தை எடுத்துக்கிடேன்.
அதன் பின் ரத்தன் ஷெட்டியை மீட் பண்ணும் சூழல் வந்தது. அவருக்கு என்னை பிடித்து விட்டது. அதற்காக திருமணமெல்லாம் செய்யல. லிவ்விங் டூ கெதரில் இருந்தோம். பின் தான் எங்களுக்கு திவ்யா பிறந்தாள். அவளும் வளரும் நேரம் தான் உன் அப்பா பெரிய தொழிலதிபராக வளர ஆரம்பித்து இருந்தாள்.
முதல்ல அந்த வீராவை தான் என் வழிக்கு கொண்டு வர முயன்றேன். முடியலை. பின் தான் உன் அப்பா பக்கம் வந்தேன். அவரிடம் உன்னையும் உன் அம்மாவையும் வைத்து மிரட்டினேன்.
மனுசன் பாசக்கார பயபுல்ல பயந்துட்டார். ஆனால் உன் அம்மா சும்மா இல்லை. என்னை பற்றிய அனைத்தையும் சேகரித்து என்னையே மிரட்டினாள். ஆனால் பாவம் அவளுக்கு ஆயுஸ் கெட்டி இல்லை.
கண்ணா..அதான் உன்னை வைத்து மிரட்டி தாலியை நானே மாட்டிக் கொண்டேன். உன் அப்பா என்னை திருமணம் செய்ததால் ஊரை விட்டு உன் அம்மா ஓடிட்டான்னு அனைவரையும் நம்ம வைத்தேன். அந்த வீரா மட்டும் நம்பவேயில்லை. அவன் என்னை கொல்ல முயன்று தோற்றும் போனான். இப்ப அவன் பிள்ளை என் மகளை பாலே செய்துட்டு இருந்தான் என திவ்யாவை பார்த்தார்.
ஆமாம்மா, சொத்த மாதிரி அவனை எண்ணியது தப்பா போச்சு. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா கொன்றுப்பான். அப்பா ஆளுங்க அவனை தேடிட்டு இருக்காங்க. மாட்டுனான் செத்தான் என அவள் சொல்ல, அஜய் அவளை அடித்து விட்டான்.
ராஜூம் காதம்பரியை தள்ளி விட, அவர் கோபத்தில் ஆக்ரோசமாக மாறி தனராஜை எட்டி உதைத்தார். அவர் தலையில் பலமான அடியுடன் மயங்கி சரிந்தார்.
இப்ப எழுதிக் கொடு இல்லை உன் அப்பாவை கொன்றுவோம் என காதம்பரி சொத்தை அஜய்யிடம் வாங்க எண்ண, அவனோ பிடிவாதமாக முடியாது என சீற்றமுடன் கத்தினான்.
முருகன் அவ்விடம் வர, அப்ப நீ உயிரோட இருந்தா சரி வராது என கத்தியால் காதம்பரி அஜய்யை குத்த வர, அவனை தள்ளி விட்டு முருகன் இடை புகுந்தார். சின்னய்யா..ஓடிருங்க என முருகன் சொல்லிக் கொண்டே அவர் உயிர்ப்பறவை பறந்தது.
முருகா..என அஜய் அவனிடம் ஓட, அவனை பிடித்த திவ்யா அவனை எட்டி உதைத்தாள். அஜய் பலவீனமானான்.
“இதுல்ல கையெழுத்து போடுடா” காதம்பரி கத்த, “முடியாது” என அஜய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு காதம்பரியை அடித்து தள்ள, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வந்த திவ்யா அஜய்யை கத்தியால் குத்தினாள். அவன் அங்கே விழுந்தான் என்று அவர் சிம்மாவை பார்த்தார்.
நான் தான் அன்று வர வேண்டியது நான் ஒரு கேஸ் விசயமா இருந்ததால விக்ரமை அனுப்பி, நீ வந்துட்டியான்னு பார்க்க சொன்னேன். அவன் அவன் ஆட்களுடன் சும்மா தான் போனான். அதுவும் நல்லதாக போயிற்று. அஜய்யை மருத்துவமனையில் சேர்ந்து காப்பாற்றினோம். ஆனால் தனராஜ் சார் கோமாவில் சென்று விட்டார் என்றான் சிம்மா.
துணைக்கு செவிலியர் கூட வைக்கக் கூடாதுன்னு மருத்துவர் ஆலோசனையுடன் நானே என் நண்பனை பார்த்துக்கிறேன் என வீரா சொல்லி முடிக்க, தொப்பென தரையில் அமர்ந்தாள் தியா.
தியாவின் யோசனை நீண்டு கொண்டே சென்றது.
அனைவரும் வருத்தமாக அமர்ந்திருக்க, தியா அழவில்லை.
மாமா, “சரியாகிடுவார்ன்னு சொன்னாங்களா?” என தியா கேட்க, வாய்ப்பிருக்குன்னு தான் சொன்னாங்க. உறுதியாக சொல்லலை என்றார்.
தியா எழுந்து, “நான் மாமாவை பார்க்கலாமா?” என வீராவை பார்த்தாள்.
ம்ம்..என்றார். அவள் உள்ளே சென்றாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த யுக்தா யோசனையுடன் நின்றாள். பின் அங்கிள், எனக்கு அஜய் சார் அறைக்கு பக்கத்து அறை வேண்டும் என்றாள்.
அவர் கையை காட்ட, தன் பொருட்களுடன் மாடி ஏறினாள்.
யுகி..நில்லு ரோஹித் அவள் பின்னே சென்றான். முக்தாவும் பின்னே செல்ல, மற்றவர்கள் மீண்டும் அமர்ந்தனர்.
தனராஜை வைத்திருந்த அறைக்கு சென்ற தியா அறைக்கதவை பூட்டினாள்.
அவர் அருகே வந்து அவர் கையை பிடித்து கண்ணீருடன், ஏன் மாமா ”என்னிடம் நீங்க சொல்லலை?” நான் உங்க சொந்த மருமகள்ன்னு சொல்லி இருக்கலாம்ல்ல. இத்தனை நாள் வலியில இதாவது எனக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும். இப்ப நான் உங்க மருமக தான் மாமா.
அஜய் என்னை கல்யாணம் பண்ணீட்டார். ஆனால் ரொம்ப கோபமா இருக்கார். ஒரு நாள் இல்லை ஒரு நாள் என் நிலையை அவர் புரிஞ்சுப்பார்.
உங்களிடம் தான் நான் மன்னிப்பு கேட்கணும். உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிட்டேன் மாமா. என்னை மன்னிச்சிருங்க.
நான் வந்துட்டேன்ல்ல. உங்களுக்கு ஏதும் ஆகாது. ஆகவும் விட மாட்டேன். இனி யார் என்ன சொன்னாலும் ஏன் உங்க மகனே என்னை வெளிய போகச் சொன்னாலும் போக மாட்டேன். இது சத்தியம்.
உங்களிடம் நிறைய பேசணும் மாமா. என்னால யாரிடமும் எதையும் சொல்ல முடியல. மனசை அழுத்திக் கொண்டிருக்கும் விசயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும் மாமா என அவள் சொல்லிக் கொண்டிருக்க, ரது அழும் சத்தம் கேட்டது.
கதவை திறந்த தியா பாப்பாவை தூக்கி அவரிடம் மீண்டும் வந்தாள்.
ஷ்..ரதும்மா..தாத்தா, தா..த்தா சொல்லுங்க என தியா சொல்ல, பாப்பா அழுகை நின்று தனராஜை பார்த்தது. அவர் அருகே தியா ரதுவை அமர வைக்க, ப்பா..ப்பா..என்றது ரது.
அப்பா இல்லைடா. அம்மா பாரு என ரதுவை அவள் பக்கம் திருப்பி.. தாத்தா..என அழுத்தி சொல்லிக் காட்டினாள்.
மீண்டும்..ப்பா..என்றது.
தியா புன்னகையுடன், மாமா..உங்க பேத்திக்கு நீங்க எழுந்து வந்து தான் தாத்தா சொல்ல கத்துக் கொடுக்கணும் என்று அவள் ரது கையை அவரது கன்னத்தில் வைத்தாள்.
ப்பா..என பாப்பா புன்னகைத்தது.
தியாவை பார்த்து, ம்மா..உங்கா உங்கா என அவளை பிடிக்க, “என் செல்லப்பட்டுக்கு பசிக்குதா? நாம போகலாமா?” மாமா நாங்க அப்புறம் வரோம் என தியா பாப்பாவுடன் வெளியே வந்தாள்.
கண்ணம்மா தியாவை பார்த்து, அஜய் பிள்ள கூட அவங்க அப்பாவிடம் இந்த அளவு பேசவில்லை என்று ராக வீரனிடம் திரும்பி..அய்யா, நம்ம பெரியய்யா கண்டிப்பாக எழுந்து வந்துருவார் என கண்ணீர் மல்க கூறினார். அவரும் கண்ணீருடன் தலையசைத்தார்.
யுக்தா மேலிருந்து தியா வெளியே வருவதை பார்த்து, “தியா” என ஓடி வந்து..வா நம்ம அறைக்கு போகலாம் என அழைத்தாள்.
யுக்தா, “என்ன பேசுற?” அவ அஜய் அறைக்கு தான் போகணும் வினித் சொல்ல, “எதுக்கு?” அவன் பேச்சை என்னாலே கேட்க முடியல. அதெல்லாம் முடியாது. உன்னோட பொருட்கள் எல்லாம் எங்க அறையில தான் இருக்கு. வா..என யுக்தா பாப்பாவை அவள் கையிலிருந்து பிடுங்கி செல்ல,
ம்மா..உங்கா..உங்கா..என ரது அழுதாள்.
யுகி, “என்ன பண்ற?” விஜய் கோபமாக கேட்க, “உன்னோட வேலைய பாரு” என திட்டி விட்டு யுக்தா அறைக்கு ஓட, வாரேன்டி. பாப்பாவை அழ வைக்காதடி என தியாவும் அவள் பின் ஓடினாள்.
ரதுவின் சத்தத்தில் அஜய் கதவை திறக்க, தியா அவனை இடிக்கும் முன் அவளாகவே சமாளித்து நகர்ந்து அவனை பார்க்க, யுக்தா கதவை சாத்தினாள்.
யுகி, கதவை திற. பாப்பா அழுவா என தியா பதற, நீ பிராமிஸ் பண்ணு. அந்த அஜய் பக்கத்துல்ல கூட நீ போகக் கூடாது என சொல்ல, “அக்கா உனக்கென்ன பைத்தியமா? அவ எப்படி உன்னோட தங்க முடியும்?” ரோஹித் கதவை பலமாக தட்டினாள்.
அஜய் அறைப்பக்கம் வருவதை கவனித்த தியா, பிராமிஸ்டி. நான் உங்களுடனே தங்கிக்கிறேன். நோ பிராபிளம் என சொல்ல, அஜய் முன் எடுத்து வைத்த கால்களை இழுத்து நின்று கொண்டான்.
யுக்தா கதவை திறக்க, ரோஹித் அவளிடம் சீறினான்.
“எனக்கு பைத்தியம் பிடிக்கலை” என யுக்தா கத்த, அவன் அமைதியானான். தியா ரதுவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“நீ அவ பின்னாடி சுத்துன? அவள பத்தி உனக்கு என்ன தெரியும்?” இனி தியா என் அறையில தான் இருப்பா.
அஜய் கோபமாக, “எனக்கு பாப்பா வேணும்” என்றாள். ரதுவிற்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த தியா அஜய்யை முறைத்து பார்க்க, அவனும் சளைத்தவன் இல்லை என்பது போல் முறைத்தான்.
எனக்கு பாப்பா வேணும்? அஜய் கத்த, இரவு மட்டும் அவள் என்னுடன் தங்கட்டும். மத்த படி அவ உங்களோடவே இருக்கட்டும் என அமைதியாக தியா கூறினாள்.
நான் என்ன சும்மாவா இருக்கேன். நான் காலை ஆபிஸ் போனா இரவு தான் வருவேன் அஜய் சொல்ல, தியா அவனை சிந்தனையுடன் பார்த்தாள்.
இரவு இடையிடையே பாப்பாவுக்கு பசிக்கும். நான் வேணும் அவளுக்கு.
எனக்கு பாப்பா வேணும் அஜய் பிடிவாதமாக மீண்டும் கத்தினான்.
தியா யுக்தாவை பார்த்தாள். சரி..பாப்பாவை நீங்களே சமாளிச்சுக்கோங்க என யுக்தா கூற, கண்ணம்மா மேலே வந்து யுக்தாவிடம்..
நீங்க சொல்றதுக்கு காரணம் இருக்கும்ன்னு எனக்கு புரியுது. ஆனால் இரவு தியா அஜய் பிள்ள கூடவே தங்கட்டும். குட்டிப் பிள்ளைக்காக என அவர் சொல்ல, யுக்தா சிந்தனையுடன் தியாவை பார்த்தாள்.
தியா, அவன் ஏதாவது பிரச்சனை பண்ணா உடனே என் அறைக்கு வந்திறணும் என கட்டளையுடன் கூற, அஜய் அவளை முறைத்தான்.
“என்ன முறைப்பு?” இந்த ஆம்பளைங்க கொஞ்சமும் பொறுப்பில்லாதவங்க என அவள் திட்ட, விக்ரம் கோபமாக..”வாட்? எல்லாரையும் எப்படி நீங்க சொல்லலாம்?” சினமுடன் கேட்டான்.
கையை கட்டிக் கொண்டு மேலிருந்து அவனை முறைத்து பார்த்த யுக்தா, உங்க குடும்பத்துல்ல பொண்ணுங்க இருப்பாங்கல்ல. “அவங்க எப்பொழுது அழைப்பு விடுத்தாலும் நீங்க அலைபேசியை எடுப்பீங்களா?” எனக் கேட்டாள்.
“வேலையா இருக்கும் போது போட்டால் எப்படி எடுக்க முடியும்?” விக்ரம் கேட்க, நோட் த பாயிண்ட்.
உங்களுக்கு வேலை இருக்கும் சமயம் உங்களை அழைத்தவங்களுக்கு பிரச்சனை வந்தால் அது பொறுப்பில்லாதனம் தானே!
“உங்க வாழ்க்கையில் இது நடந்திருக்காதா?” என கேட்க, விக்ரமிற்கு சுவாதி நினைவு வந்தது. அமைதியானான்.