அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது.
அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம்.
பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில் இருந்த தந்தையை சமாளித்து அவரின் பல சட்ட திட்ட கோட்பாடுகளுக்கு மண்டையை ஆட்டி, வேலையில் சேர்ந்தவள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள்.
ஆபிஸில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் ஹர்ஷா பின்னால் சுத்த, ஹர்ஷா கண்களோ வேலையில் மும்முரமாக யாரையும் கண்டு கொள்ளாமல் செல்லும் அர்ச்சனாவை சுற்றி வர துவங்கியது.
ஆணவன் பார்வையை எல்லாம் கவனிக்காதவளாக இருந்தவள் முன் போய் நின்றவன் “ஹாய் ஐ அம் ஹர்ஷ வர்தன்” என்று கைகளை நீட்ட,
அவனை புரியாமல் பார்த்தவள் “இருந்துட்டு போ…. அதனால?….” என்க,
அவனோ, “அதனால ஒன்னும் இல்லங்க. இங்க கேன்டீன்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சுருக்குன்னு கேட்டாங்க. அதான் உங்க பேர கேட்டுட்டு போலாம்னு……” என்றவனை லூசா நீ என்பது போல் அவள் பார்க்க,
அவனோ சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு “அட சீக்கிரம் சொல்லுங்க நான் போய் அவங்க குடுத்த பேப்பர்ல எழுதணும்ல”
“ம்ச்….” என்றவள் விலகி செல்ல போக, மீண்டும் அவன் முன் போய் நின்றவன் “பேர் சொல்லிட்டு போகலாமே”.
“ஹலோ யாருங்க நீங்க. உங்ககிட்ட நான் ஏன் பேர் சொல்லணும். உங்களை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது”
“ஓகே அவ்ளோதானே. இது முன்னாடி இது பின்னாடி பார்த்துக்கோங்க. இப்போ பேர் சொல்லலாமே”.
“ஹேய் என்ன கிண்டலா அதற பழைய காமெடி சொல்லிட்டு திறியர, பேர் எல்லாம் சொல்ல முடியாது” என்றவள் சென்றுவிட,
செல்பவளையே சிரிப்புடன் பார்த்தவன் ‘சுத்தி என்ன நடக்குது, யார் இருக்கான்னு பார்த்தாதானடி நான் யார்னு தெரியும். சீக்கிரமே உன் பார்வையை என் மேல விழ வைக்கறேன்’ என்று சொல்லி கொண்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
ஹார்ஷாவை திட்டி கொண்டே போன அர்ச்சனாவிடம் வந்த அவள் தோழி “என்னடி நம்ம கனவு கண்ணன் உனக்கிட்ட வந்து பேசினானே என்ன பேசினான்?”
“எதே…. நம்ம கனவு கண்ணனா. எவன் அவன்…”
“அதான் உன்கிட்ட வந்து பேசுனானே. நான்லாம் பேச போனாளே மூஞ்ச திருப்பிட்டு போவான். நம்ம ஆபிஸ்ல பல பேர் அவனுக்கு ரூட் விடறாங்க யாருகிட்டயும் சிக்காம சுத்திட்டு இருக்கவன் உன்கிட்ட இன்னைக்கு தனியா வந்து பேசறான்னா என்னவோ இருக்கு……என்னடி அது” என்று அவள் கேட்க,
அர்ச்சனாவோ “ஒரு மண்ணும் இல்ல. அம்மா…. தாயே அவன் எவனா வேணா இருக்கட்டும். எனக்கென்ன வந்தது. இப்போ நாம வேலைய பார்ப்போமா?”
“பார்க்கலாம்……ஆனா….. அவன் என்ன பேசுனான்னு சொல்லவே இல்லையே”
“அது ரொம்ப முக்கியமாடி”
“எனக்கு முக்கியம் சொல்லு”
“பெருசா ஒன்னும் இல்ல. பேர் கேட்டான். நான் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அவ்ளோதான் போதுமா. வா வேலையை கவனிப்போம்” என்ற அர்ச்சனா அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் அதுவே அவர்கள் ஆபிசில் பெரிய விஷயமாக பேசபட்டது.
“ஹேய் கேட்டியா ஹர்ஷா அச்சுகிட்ட பேர் கேட்டானாம்” என்று, அங்கு சுற்றி இங்கு சுற்றி அர்ச்சனா காதுக்கே வர,
“என்னங்கடா நடக்குது இங்க. இதெல்லாம் ஒரு விஷயமா பேசுறாங்க. என்ன ஆச்சு நம்ம ஆபிசிற்கு என்ற ரேஞ்சில் அவள் குழப்பமாக சுத்தி வர,
மீண்டும் அவள் முன் தன் வசீகர சிரிப்புடன் வந்து நின்ற ஹர்ஷா “இன்னைக்காவது பேர் சொல்லலாமே” என்க,
அர்ச்சனாதன் பார்வையை சூழல விட, அங்கு வேலை செய்யும் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது. இது நாள் வரை தன்னை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க, இன்று அனைவரின் பார்வையும் தன் மீது பொறாமையாக படிவதை கண்டவளுக்கு ஏனோ மனம் பூரிப்பாக அதை வெளியில் காட்டி கொள்ளாதவள் “ஹலோ என் பேர கேட்கதான் இங்க உங்களுக்கு சம்பளம் தர்றாங்களா போய் வேலைய பாருங்க சார்” என்றுவிட்டு சென்றுவிட,
அவனா விடுபவன் அவள் பின்னாலேயே செல்வது வழிய சென்று பேசுவது என்று இருக்க, அது அவளுக்கு மற்றவர்கள் முன் பெருமை போல் தோன்ற அவனை நிராகரித்து சென்றவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு பேச துவங்கினாள், பழக துவங்கினாள், காதலிக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால் அவள் காதல் எல்லாம் ஆபிசில் மட்டும்தான் வீட்டிற்கு சென்று போனை எடுத்தால் தந்தை ஒரு வழி பண்ணிவிடுவார் என்ற பயத்திலேயே அதிகம் போன் எல்லாம் பேச மாட்டாள்.
நேற்றுதான் தீபாவளி துணி வாங்க தாயும், தந்தையும் சென்றிருக்க, அவனோடு பேச எண்ணி அழைத்தாள், அவன்தான் ஹாசியோடு இருந்ததால் போனை அட்டன் செய்யாமல் விட்டிருந்தான். அதான் இன்று பத்திரகாளியாக அவன் முன் நின்றிருக்கிறாள்.
“இல்லடா அச்சுமா…. வீட்டுக்கு என்னோட சின்ன வயசு பிரண்ட் வந்திருந்தா அவளை வெளிய கூட்டி போற வேலை வந்துடுச்சு அதான்……”
“எது….. அவளா…. பொண்ணா….”
“அவன்னா பொண்ணுதான் அச்சு குட்டி அது கூட உனக்கு தெரியாதா” என்றவனை உக்கிரமாக முறைத்தவள் “அவன்னா பொண்ணுன்னுகூட தெரியாதா மக்கா நானு ஹான்..,…” என்று கேட்டவள் பின் “பொண்ணுங்க பிரண்ஷிப் எல்லாம் உங்களுக்கு எதுக்கு”.
“அவ சின்ன வயசு பிரண்டு அச்சு, பக்கத்து வீடு”.
“ஹோ….. சரி….. சரி பிரண்ட்தானே?…”
“சாத்தியமா பிரண்டுதான்டா” என்று சொன்னவனை நம்பியவள் “பிரண்டுதானே அப்புறம் எதுக்காக என் போனை அட்டன் பண்ணல. அட்லீஸ்ட் எடுத்து நான் வெளிய இருக்கேன்மான்னு சொல்ல, எவ்வளவு நேரம் ஆகும். உங்களுக்கு நான் ஈஸியா கிடைச்சுட்டதால என் அருமை தெரியலல்ல . என்கிட்ட பேசாதீங்க” என்று கத்தியவள் ஆபிசிற்குள் சென்றுவிட,
ஹார்ஷாவோ ‘ம்ம்…. நாலைஞ்சு பிகர் வச்சு மெயிண்டெயின் பண்றவன் எல்லாம் நல்லா இருக்கான். ஒரே ஒரு பிகர வச்சுட்டு நான் படற பாடு முடியல” என்று தலையில் அடித்து கொள்ள,
அதே நேரம் ஏதோ சொல்வதற்காக திரும்பிய அச்சு “ஓஓ….. தலையில அடிச்சுக்கற அளவுக்கு வந்துடுச்சா. இருக்கும்…. இருக்கும்…. என் பின்னாடியே சுத்தி வரும்போது இதெல்லாம் யோசிச்சிருக்கணும். ஐ ஹேட் யூ…” என்றவள் மீண்டும் திரும்பி நடக்க,
திரு திருவென விழித்தவன் ‘இவ என்கிட்ட ஐ லவ் யூனு இதுவரை ஒரு டைம் கூட சொன்னது இல்ல. ஏதோ குருட்டாம்போக்குல என் காதல் போகுது. ஆனா…. ஐ ஹேட் யூ மட்டும் அடிக்கடி சொல்றா’ என்று புலம்பியவன் அவள் பின்னாலேயே சென்று அவள் கோபத்தை சமாளித்து பேச வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி போனது.
அச்சு என்ன சொல்வாள் என்று தெரிந்து வேண்டுமென்றே மாலை தானே அழைத்து செல்வதாக சொன்னவன் முன் பெரிய கும்பிடு போட்டவள் “ நான் உசுரோட இருக்கறது உனக்கு பிடிக்கலையாப்பா. நான் உன்கூட வர்றதை மட்டும் என் அப்பா பாத்தாரு. அன்னைக்குதான் எனக்கு கடைசி நாள் ஆளை விடு”
“ஹேய் அச்சு இப்படியே சொன்னா எப்படி? என்னைக்காவது ஒரு நாள் எப்படி இருந்தாலும் நம்ம விஷயம் அவருக்கு தெரியாதானே போகுது.”
“எப்படி தெரியும். அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை” என்று அதிர்ந்து போய் உடனே சொன்னவளை குழப்பமாக பார்த்த ஹர்ஷா,
“லூசு அவங்ககிட்ட சொல்லாம எப்படி நாம கல்யாணம் செய்துக்கறது. வீட்ல சொல்லாம ஓடி போய்டலாம்னு சொல்றியா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நாளைக்கேனாலும் எனக்கு ஓகேப்பா. என்ன நீ ரெடியா” என்று அவளை நெருங்கி சென்றவளை விலக்கி நிறுத்தியவள்,
“லுக் ஹர்ஷா நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். என் வீட்ட எதிர்த்து என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு. என் அம்மா, அப்பா சம்மதத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கும்…. நடக்கணும். அது எவ்வளவு நாள் ஆனாலும் ஓகே. உன்னால எனக்காக வெயிட் பண்ண முடியும்னா பாரு. இல்லையா தாராளமா நீ வேற பொண்ண பார்த்துட்டு போலாம்” என்றவளை முறைத்தவன்,
“என்னடி பேசற. என்னை என்ன அடிக்கடி பொண்ண மாத்தர ஆளுன்னு நினைச்சியா. நானா வந்து உன்கிட்ட பேசி விழுந்தன்ல, அப்படிதான்டி பேசுவ.
எல்லாம் என் நேரம் ஆபிஸ்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் என் பின்னாடி சுத்த, நான் உன் பின்னாடி வந்தான்ல எனக்கு இது தேவைதான்” என்றவனை உணர்வில்லாது பார்த்தவள் “இப்போவும் நான் உன்னை பிடிச்சு வைக்கல தாராளமா போலாம். அப்படி சலிச்சுட்டு எல்லாம் என்கூட இருக்கணும்னு அவசியம் இல்ல”
“வெட்டி விடறதுலயே இருடி. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாம் பேசற. சரி நான் உனக்காக வெயிட் பண்றேன். உங்க வீட்ல இருக்கவங்க சம்மதத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கும் போதுமா” என்றவனை கண்டு அவள் சிரிக்க,
‘இந்த சிரிப்பை பார்க்க என்னென்ன பேச வேண்டி இருக்கு. ஏன் டா ஹர்ஷா கண்டிப்பா உனக்கு இந்த பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமா’ என்று கேட்டு அவன் மனசாட்சியிடம் “ஆமா இவதான் வேணும்” என்றவன் சொல்ல,
அவன் மனசாட்சி “சரி தலை கீழாகதான் குதிப்பேன்னு சொல்ற தொலை” என்றுவிட்டு ஓட, இவன் ஏன் இப்படி சொல்றான் என்ற கேள்வியோடு மனசாட்சியை பார்த்து வைத்தான் ஹர்ஷா.
அன்றைய பொழுது சிறப்பாக முடிய, மாலை ஹாசியை அழைக்க சென்ற ஹர்ஷா தலை வலிக்கவும் ஒரு டீ குடிக்கலாம் என்று கேன்டீன் செல்ல,
கேன்டீனோ பர பரப்பாக இருந்தது. அதை பார்த்து குழம்பியவன் ‘என்ன ஆச்சு ஏன் இப்படி ஓடறாங்க. என்ன அங்க கும்பல்’ என்று அங்கு சென்று எட்டி பார்க்க, அதிர்ந்து போனான்.
அவன் அதிர்வுக்கு காரணம் வேறு யாராக இருக்க முடியும். சட்சாத் நம்ம ஹாசிதான் அங்கு வேலை செய்யும் ஒரு நபரிடம் கத்திட்டு கொண்டு இருந்தாள்.
ஹர்ஷா, ‘இவளை…… என்னதான் இவளுக்கு பிரச்சனை போற இடம் எல்லாம் ஏதாவது சண்டை இழுத்துட்டு வர்றா’ என்று புலம்பியவன், அவள் அருகில் சென்று “ஹாசி என்ன ஆச்சு?” என்க,
அவளோ “பாரு சிக்கி. இவன் லூசு மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். புரிஞ்சுக்காமா லூசு. நீயெல்லாம் படிச்சுதான் வேலைக்கு வந்தியா” என்றவள் மீண்டும் அவனை திட்ட,
“அடியே ராங்கி போதும் நிறுத்தறியா. முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு. எதுக்கு அவனை திட்டிட்டு இருக்க” என்றவன் பேசி கொண்டிருக்கும்போதே, இவ்வளவு நேரமும் திட்டு வாங்கி கொண்டிருந்தவன் பேச துவங்கினான்.
“ஹாசினி இவர் யாரு. இவருக்காகதான் என்னை வேண்டான்னு சொல்றிங்களா” என்றவன் கேள்வியில் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு புரிந்து கொண்ட ஹர்ஷா,
ஹாசியிடம் “என்ன நடந்தது என்று கேட்க, அவளோ “பாரு சிக்கி காலைலதான் என்ன பார்த்தான். மதியம் வந்து ஹாய் சொல்லி பேசினான். இப்போ கிளம்பும்போது உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்.
சரி, நீ வர்ற வரைக்கும் வெளிய நிக்கறதுக்கு அங்க போய் ஒரு காபியாவது குடிக்கலாம்னு போனா பொசுக்குன்னு லவ் பண்றேன்னு சொல்றான். இன்னைக்குதானேடா பார்த்தன்னு கேட்டா,
லவ் அட் பர்ஸ்ட் சைட்னு பீலா விடறான். இல்ல இது சரி வராதுன்னு சொன்னா. சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டுறான்” என்றவள் சொல்ல,
ஹர்ஷாவோ “எதே…. சூசைட்டா…. அந்த அளவுக்கு எல்லாம் இவ ஒர்த் இல்லடா என்று அவள் முன்பே அவனிடன் ஹர்ஷா சொல்ல,
அதில் கடுப்பானவள் “சிக்கி….” என்று அவன் காலை ஓங்கி மிதிக்க,
“ஆஆஆ….. ராட்சசி காலை மிதிச்சுட்டாளே. ஹீல்ஸ்ங்கற பேர்ல ஒரு அடி ஸ்டூடல போட்டு மிதிச்சுட்டாளே” என்றவன் அலற,
“சார். நீங்களாவது அவங்ககிட்ட பேசி எனக்கு ஒரு பதில் வாங்கி தாங்க சார். பார்க்க ரொம்ப டீசன்ட்டா இருக்கீங்க” என்றவன் கேட்க,
அவன் தோளில் கை போட்டு தனியாக அழைத்து போன ஹர்ஷா சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பி ஹாசி அருகில் வர,
ஹாசியிடம் முதலில் ப்ரோப்போஸ் செய்தவன் ஹர்ஷாவுடன் பேசி வந்த பிறகு “தங்கச்சி சாரிம்மா உன் நிலைமை புரியாம நான் தப்பு பண்ணிட்டேன். உடம்ப நல்லா பார்த்துக்கோம்மா. எதுவும் உதவி வேணும்னா கூட கேளு. அண்ணன் நான் இருக்கேன். நான் செஞ்சு தரேன் ஓகேவாம்மா” என்றுவிட்டு அவன் சென்றுவிட,
ஹாசி செல்லும் அவனையே வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள். ஹார்ஷா கெத்தாக நின்று கொண்டிருக்க அவன் அருகில் சென்றவள் “ஹே…. சிக்கி அவன்கிட்ட என்ன சொன்ன அமைதியா போறான். நான் எவ்வளவு நேரம் பேசுனேன் தெரியுமா. கேட்கவே இல்ல.
ஆனா நீ போய் ரெண்டு நிமிஷம்தான் பேசுன. உடனே தங்கச்சின்னுட்டு போறான் என்னப்பா சொன்ன” என்றவள் ஆர்வமாக கேட்க,
அவனோ பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டி கொண்டு “உண்மையை சொன்னேன்” என்க,
“என்ன தலைவர் டையலாக்கா செட் ஆகல. வா போலாம்” என்றவள் துள்ளி குதித்து ஓட, ஹர்ஷாவும் அவள் பின்னோடு சென்றான்.
ஹாசிக்கு ப்ரொபோஸ் செய்தவனிடம் அவன் நண்பன் “என்னடா ஓகே பண்ணிடுவன்னு நினைச்சேன் இப்படி பேக் அடிச்சு ஓடி வந்துட்ட” என்று கேட்க,
அவனோ அரண்ட குரலில் “அட ஏன்டா நீ வேற. ஆளு அழகா இருக்காளே வேற எவனும் சீட்டு போடறதுக்கு முன்னாடி நாம அப்ளிகேஷன போட்டு வைப்போம்னு பார்த்தா, அது சரியான பஜாரியா இருக்கும் போலடா,
“என்கிட்ட பேசினானே அவன்தான் அவளோட இப்போதைய பாய் பிரண்டாம் ஷாப்பிங், மேக்கப் ஐட்டம், சன்டே அவுட்டிங்னு அவளை வெளிய கூட்டி போய் ஊரு சுத்த என்னால முடியல, அது மட்டும் இல்லாம பவுர்ணமி அம்மாவாசைக்கு அவ ரொம்ப உக்கிரமா இருப்பா.
அப்போ அவ பக்கத்துல போகவே பயமா இருக்கும். பாரபட்சம் பார்க்காம அடிப்பா. ப்ளீஸ் சார். நான் வேணா மாசம் முப்பதாயிரம் உங்களுக்கு சம்பளம் தரேன் எப்படியாவது அவளை நீங்க பிக்கப் பண்ணி, என்னை காப்பாத்துங்கன்னு சொல்றான்டா அவன். அதுமட்டும் இல்லாம அவ கோவமா பேசும்போது மூஞ்சுல நூறு சந்திரமுகி இருந்துச்சுடா நீ பார்த்தியா?”
“நூறா என்னடா உளறுற. நான் ஒன்னும் பார்க்கலையே.”
“ஆமா. அவ திட்ட ஆரம்பிக்கும்போதே ஓடுனவன்தானேடா நீ. பக்கத்துல இருந்த எனக்குதான் தெரியும். மாசம் முப்பதாயிரம் செலவானாலும் பரவால்ல இவளை கழட்டி விடணும்னு நினைக்கறான்னா,
அவனை இவ எவ்ளோ டார்ச்சர் பண்ணியிருப்பா?, நமக்கெதுக்குடா வம்பு. நாம பாட்டுக்கு பொத்துனாப்புல போயிட்டு வந்திடுவோம்” என்று சொல்ல,
அவன் நண்பனும் “அதுவும் சரிதான் மச்சான். நாம பாட்டுக்கு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம். நமக்கெதுக்கு இந்த காதல் கத்திரிக்கா எல்லாம். வாடா போய் சரக்கடிக்கலாம். இது உன்னோட அம்பதாவது பெயிலியர்” என்று சொல்ல,
“ஆமா மச்சா வா போய் செலப்ரேட் பண்ணுவோம்” என்றுவிட்டு இருவரும் பார் நோக்கி செல்ல,
அங்கு ஹாசியோ ஹர்ஷாவிடம் என்ன சொன்ன? என்ன சொன்ன என்று கேட்டு சலித்து போ என்று விட்டேவிட்டாள்.
ஹார்ஷா சொன்ன விஷயம் ஹாசிக்கு தெரிந்தாள் என்ன செய்வாள்.
பாய் பிரண்டு என்று சொன்னதில் மகிழ்வாளா இல்லை கிட்ட தட்ட பைத்தியம் என்று சொன்னதற்கு கோபப்படுவாளா காத்திருந்து பார்ப்போம்.