“ஒத்துக்காம எங்க போக போறாங்க. நான் வேணா ரேவதிகிட்ட பேசவா?”.
“அவசரப்படாத. இவங்க மனசுல என்ன இருக்குனு நாம தெரிஞ்சுக்க வேண்டாமா?”.
“அதெல்லாம் ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம். நான் என் பையனை அப்படி வளர்க்கல. உங்க பொண்ண கேளுங்க. ரஞ்சனை கட்டிக்க சம்மதமா இல்லையானு. அவதான் உங்க அம்மா மாதிரி எதாவது நொரை நாட்டியம் பேசிட்டு இருப்பா”.
“என் பொண்ணுக்கு என்ன? அவளை குறை சொல்லலேனா உனக்கு தூக்கம் வராதே. அதெல்லாம் அவ நான் சொன்னா கேட்பா” என்று தங்களுக்குள் இருவரும் பேசி கொண்டிருக்க,
தாய், தந்தை இடையில் ஓடி சென்று அமர்ந்த ஹர்ஷா “என்ன காதல் ஜோடிஸ் என்ன ரகசியம் பேசுறீங்க. என்கிட்டயும் சொல்லலாம்ல உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு நியாபகம் இருக்கா இல்லையா. ஜோடியாவே சுத்தி வர்றீங்க”
பத்மா, “எரும எந்திரிடா. இடிச்சுட்டு வந்துதான் உட்காரணுமா.எதுக்கு எங்களை பார்த்து கண்ணு வைக்கற”.
ஹர்ஷா, “ஆமா…. உங்களை பார்த்து அப்படியே கண்ணு வச்சுட்டாலும்…. ஆமா பாட்டி எங்க? உங்களை ஜோடியா உட்கார வச்சுட்டு இவங்க பொறுப்பில்லாம எங்க போனாங்க? பாட்டி….. பாட்டி….” என்று கத்த,
மகன் வாயை மூடிய பத்மா “மகனே எதுக்குடா காதுல வந்து கத்துற. நீ என்ன கத்தினாலும் வேஸ்ட். உன் பாட்டி சீரியல் பார்க்க உட்கார்ந்தா வீடே இடிஞ்சு விழுந்தாலும் கேட்காது” என்று சொல்ல,
அவர் சொன்னது போல் தன் அறையில் உன்னிப்பாக சீரியலை பார்த்து கொண்டிருந்தார் தேவகி பாட்டி.
ஹாசி, “இன்னும் மித்து வரலையா ஆண்டி”.
பத்மா, “இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தாமா. குளிச்சுட்டு வரேன்னு போனா. நீ வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டியா?”
“ம்ம்…. எல்லாம் வாங்கிட்டேன்” என்னும்போதே மித்ரா அங்கு வந்தவள் ஹாசியை ஓடி போய் அணைத்து கொண்டு,
“ஹாசி ஐ மிஸ் யூ டா……” என்று சொல்லி இறுக்கி அணைக்க, தானும் அணைத்து கொண்டவள், “என்னை பிடிச்சு வச்சது போதும் விடுறியா. நான் ஹாசி ரஞ்சன் இல்ல” என்று அவள் காதோரம் முணு முணுக்க,
அவளை தன்னில் இருந்து விலக்கிய மித்ரா முகம் சிவந்து “ச்சி…. என்னடி பேசற. நான் அவர் பக்கத்துல நின்னு பேசுனதோட சரி. டச் பண்ண எல்லாம் விட்டது இல்ல”.
“அடே அப்பா நடிக்காதடி. அங்க அமெரிக்கா வந்தப்ப நீயும் அந்த எருமையும் கார்டன்ல கட்டி புடிச்சுட்டு நின்னத நான் பார்த்துட்டேன்” என்க,
மித்ராவோ திரு திருவென விழித்து “ஹி.. ஹி…. ஹி….” இல்ல ஹாசி அது…” என்று வழிந்து வைக்க,
“கேவலமா சமாளிக்காத சகிக்கல” என்ற ஹாசி “அப்புறம் அந்த தறுதலை போன் பண்ணுனா? தங்கச்சி நாடு விட்டு நாடு போயிருக்காளே, எப்படி இருக்கா? என்னன்னு விசாரிச்சானா? அவனுக்கு இருக்கு பாரு”
“ஹேய்…. ஹேய்…. கோவப்படாதடி பாவம் அவருக்கு பயங்கர வேலையாம். செம்ம டயர்ட் ஹாசிகிட்ட கூட பேசலன்னு என்கிட்ட வருத்தப்பாட்டாரு தெரியுமா”
“ஓஹோ….. அந்த நாயி வருத்தப்படக்கூட உனக்குதான் கால் பண்ணுமா…” என்று இருவரும் மற்றவர் அறியாமல் பேசி கொண்டே இருக்க,
ஹர்ஷாவோ “ஹலோ நாங்களும் இங்கதான் இருக்கோம். என்ன அப்படி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க” என்க,
இருவரும் ஒரே போல் “ஹிஹிஹி……”
என்று சிரித்து “ஒன்னும் இல்லையே…. ஒன்னுமே…. இல்லையே……” என்க. அவனோ அவர்களை நம்பாத பார்வை பார்த்து வைத்தான்.
பத்மா, “சரி…. சரி…. போதும் வாங்க சாப்பிடலாம் நேரம் ஆகுது. பேசினா பேசிட்டே இருப்பீங்க ” என்க,
ஹாசியும், மித்துவும் ஒரே போல் “ஆமா…. ஆமா…. வாங்க சாப்பிடலாம்” என்று பத்மா பின்னால் ஓடிவிட்டனர்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டே சாப்பிட அந்த இடமே கலகலப்பாக மாறியது.
மறுநாள் காலை கிளம்பி வந்த ஹாசியிடம் மித்ரா “ஹாசி கம்பெனி எப்படி போகணும்னு தெரியுமா? வா நான் கூட்டி போறேன்”.
ஹாசி, “ம்ம்…. தெரியும். உனக்கு எதுக்கு சிரமம் நான் பார்த்துக்கறேன்”.
“அடே அப்பா. ரொம்ப பண்ணாத. வா போலாம்”.
“இல்ல மித்து அது……”
“என்ன அது……”
“ஹேய் மித்து உனக்கு புரியலையா உன்கூட வர அவ பயப்படறா. நீப்பாட்டுக்கு எங்கயாவது கொண்டு போய் தள்ளிட்டன்னா அதான்” என்றவாறு வந்த ஹர்ஷாவை ஹாசி ‘எப்படிடா……’ என்பது போல் பார்க்க,
மித்ராவோ ‘அப்படியா….’ என்று ஹாசியிடம் கேட்க,
அவளோ ‘ஆமாம்….’ என்பது போல் தலையசைத்து “ஈஈஈ….” என இளித்து வைத்தாள்.
“ச்ச…. போடி. வழி தெரியாம புள்ள கஷ்டப்படுமே ஆபிஸ் வாசல்ல போய் இறக்கி விடலாம்னு சொன்னா, என்னையே நீ கலாய்க்கறியா?. நீ எப்படி ஆபிஸ்க்கு போறன்னு பார்க்கறேன்” என்றுவிட்டு போனவளை கண்டு சிரித்த ஹாசி போன் வரவும் அதை எடுத்து பேச துவங்கினாள்.
“ஹாய்ப்பா….. என்ன இந்த நேரத்துக்கு. ஓஓ…. என்னப்பா நான் என்ன இப்போதான் முதல் தடவை ஆபிஸ் போறன்னா என்ன. ம்ம்ம்…. இனிதான் சாப்பிடணும். ஓகே…ஓகே…. அமைதியா போயிட்டு வரேன். யாருகிட்டயும் பிரச்சனை பண்ண மாட்டேன். ப்பா….. நான் என்ன சின்ன புள்ளையா எதுக்கு இப்படி சொல்றீங்க”.
‘எதே அமைதியா!…..அதுக்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லையே. கால கொடுமை. ஒரு நாள் வெளிய கூட்டி போனதுக்கே எனக்கு கண்ணு முழி பிதுங்கிடுச்சு வருஷம் பூரா வெளிய கூட்டி போற மனுஷனுக்கு அவளைப்பத்தி தெரியாதா? அதான் அலர்ட் பண்றாரு.
ஆபிஸ்க்கு வேற போறா, அந்த ஆபிஸ் என்ன ஆக போகுதோ’ என்று ஹர்ஷா தனக்குள் சொல்லி கொண்டு சாப்பிட செல்ல,
ஹாசியும் சற்று நேரத்தில் பேசி முடித்துவிட்டு வந்தவள் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள். அவளை குழப்பமாக பார்த்த ஹர்ஷா “ஹேய் நீ என் கூட வர்றியா”.
கோபமாக அவளை முறைத்தவன் “கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா. ஓலா டிரைவர் யாரு உனக்கு அண்ணனா? அவனை நம்பி போவ. மித்துவ என்னை நம்ப மாட்டல்ல. நாங்க உன்னை எங்க பேமிலில ஒரு ஆளாதான் பார்க்கறோம்.
நீதான் விலகி விலகி போற. மித்து அங்க வந்தப்ப நீங்க இப்படிதான் தனியா அனுப்புனீங்களா? கூடவே கூட்டி போய் கூட்டி வந்தல்ல. அது மாதிரி நாங்க பார்க்க மாட்டோமா. இதுல பிரண்டுன்னு வேற சொல்லிக்கறது. சரி என்னவோ பண்ணு” என்றுவிட்டு வெளியில் செல்ல போனவனை தடுத்தார் பத்மா.
“டேய் எங்க போற. சாப்பாடு வேண்டாமா? என்ன ஆச்சு? ஏன் கத்திட்டு இருக்க?.
“ஒன்னும் இல்லம்மா போன்ல ஒரு லூசு அதான்” என்று காதில் இருந்த ப்ளூ டூத்தை காட்டியவன் ஹாசியை முறைத்துவிட்டு வெளியே செல்ல,
ஹாசியோ இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இவன் கத்திட்டு போறான். இவங்களுக்கு எதுக்கு தொல்லைனுதானே பார்த்தேன்’ என்று விழித்து கொண்டு நின்றவள் பின் ஒரு முடிவு எடுத்தவளாக “ஆண்டி கோவிலுக்கு போகணும்னு சொன்னீங்களே”
“ஆமாடா. போகணும். கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு….”
“அதெல்லாம் வந்து பார்த்துக்கோங்க. வெளில கார் வெயிட்டிங் கோவிலுக்கு அதுல போங்க” என்றுவிட்டு வெளியில் சென்றவள் ஹர்ஷா பைக்கை ஸ்டார்ட்பண்ணுவதை பார்த்து வேகமாக ஓடி சென்று அதில் அமர்ந்தவள் “ம்ம்ம்…. சீக்கிரம் போலாம். லேட் ஆகுது”.
அவனோ செல்லாமல் வண்டியை உறுமவிட்டு கொண்டே இருந்தான்.
“அட என்னப்பா உன்னோட பேஜாரா போச்சு. நேரம் போவுது வண்டிய எடுப்பா. காலா காலத்துல ஆபிஸ் போய் சேரணும் இல்லைனா என்ற ஓனர் வேற கத்துவான்” என்று லோக்கல் தமிழில் பேசியவளை கண்டு சிரித்தவன்,
“ம்ம்ம்….. பைக்ல ஏசி பிக்ஸ் பண்ணுற மாடல் இன்னும் எவனும் கண்டுபிடிக்கல”.
“ஓ…. அப்படியா ஐடியா இல்லாத பசங்க. வெயில் காலத்துல மனுஷன் எப்படி பைக்ல போவான். கொஞ்சமாவது யோசிக்கறாய்ங்களா”.
“ஆமா…. ஆமா…. உன் அளவுக்கு யாருக்கும் அறிவில்லைதான். பேசாம நீயே போய் கண்டுபிடியேன்”.
“அட என்னப்பா இந்த உலகம் என்ன மாதிரி ஒரே ஒரு புத்திசாலிய வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுது. நான் இங்க என் கம்பெனிய பார்ப்பேனா…. இல்ல பைக்க பார்ப்பேனா”
“அட அறிவு கொழுந்தே. உன்னை எப்படி உங்க அம்மா சமாளிச்சாங்கன்னு தெரியலையே”.
“ரொம்ப முக்கியம். எங்க ஆத்தா என்ன காலைல எந்திரிக்கும்போதே கைல காபி கொண்டு வந்து குடுத்து தங்கம், வைரம், கண்ணுனு கொஞ்சர அம்மானு நினைச்சியா ரேவதிடா….. என்ன பண்றன்னு கேட்கும்போதே சும்மா மொத்த வீடும் அலறும்…” என்று டையலாக் பேசியவளை கண்டு ஹர்ஷாவிற்கு சிரிப்பு வர,
சிரித்து கொண்டு அசால்ட்டாக ஓட்டியவன் பின்னால் வந்த நபர் அவனை ஓவர் டேக் செய்து முன்னால் போக, நொடி நேரத்தில் சமாளித்து கொண்டவன் ‘எப்படி போறான் பாரு. கொஞ்சம் கவனிக்கலைனாலும் ரெண்டு பேரும் கீழ விழுந்திருப்போம்’ என்று அவனை திட்டிவிட்டு “அம்மா…தாயே கொஞ்ச நேரம் அமைதியா வர்றியா. நான் பாட்டுக்கு சிரிச்சுட்டே எங்கயாவது கொண்டு போய் வண்டியை விட்டற போறேன்”.
அவளை முறைத்தவன் “தாயே உன் காலுல வேணா விழறேன் கொஞ்சம் அமைதியா வாயேன்”.
“முடியாது. தனி ஒரு நபருக்கு பேச உரிமை இல்லை என்றால் ஜகத்தை கொழுத்துவோம்…….ஹேய்…. ஹேய் ஏன் வண்டிய நிறுத்தர”.
“நீ வாய மூடலைனா வண்டிய எடுக்க மாட்டேன்”.
“என்னடா உலகம் இது……சரி…. சரி முறைக்காத நான் பேசல” என்று சிறு பிள்ளை போல் உதட்டின் மேல் கை வைத்து கொண்டு முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து கொண்டவளை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
ஹாசி ஆபிஸ் வந்தவுடன் இறக்கி விட்டவன் “ஈவ்னிங் நானே பிக்அப் பண்ணிக்கறேன். என் நம்பர் இருக்குல்ல” என்று சுற்றி தன் பார்வையை செலுத்தி கொண்டே கேட்க, அவளோ அமைதியாகவே இருந்தாள்.
உடனே புருவம் சுருக்கியவன் அவளை திரும்பி பார்க்க அவளோ வேண்டுமென்றே உதட்டில் வைத்த கையை எடுக்காமல் நின்றிருந்தாள்.
அதை கண்டு கொடுப்புக்குள் சிரித்து கொண்டவன் “இப்போ பேசலாம் தப்பில்ல” என்று கிண்டல் குரலில் சொல்ல,
உடனே தன் கையை எடுத்தவள் “நம்பர்தானே நீ எங்க குடுத்த. குடுத்த மாதிரி கேட்கற.நேத்து புள்ளா உன்கூடதான் இருந்தேன் நம்பர் கொடுக்கணும்னு தோணுச்சா? அதை விடு இப்போ வரும்போது கூட……”
“ஸ்….ப்பா….. ஏன் ராங்கி கேட்கற கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டியா”.
“அதானே சொல்ல வந்தேன்”
“ஹையோ…. கேள்வி கேட்டா ஆமா இல்லைன்னு பதில் சொல்லு போதும்”
“ஆமா….. இல்லை……” என்று ஹாசி கடுப்பாக கத்திவிட்டு ஆபிஸிற்குள் சென்றுவிட,
“ஹேய் இருக்கா…. இல்லையா…. சொல்லிட்டு போடி”
“முடியாது போடா…” என்றுவிட்டு ஓடி விட்டாள்.
‘இம்சை…. பதில் சொல்லாமலே போய்ட்டா’ என்று நினைத்தவன் சரி மித்துகிட்ட இவ நம்பர் வாங்கிக்கலாம் என்று முடிவு செய்து அவன் ஆபிஸ் நோக்கி கிளம்பினான்.
தன் ஆபிசிற்கு சென்று வண்டியை நிறுத்தியவன் அருகில் வேகமாக ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க ,
“ஹையோ….. என் காலு. எவ அவ என்பது போல் நிமிர்ந்து பார்த்தவன் அங்கு நின்றிருந்த ஆளை கண்டு ஜெர்க் ஆகி விழிக்க, ஸ்கூட்டியில் வந்த நபரோ அவனையே உக்கிரமாக முறைத்து கொண்டு நின்றிருந்தார்.
“அச்சு அது……”
“பேசாத ஹர்ஷா நேத்து எத்தன டைம் உனக்கு கால் பண்ணுனேன். அதை அட்டன் பண்ணி பேசணும்னுகூட உனக்கு தோணல இல்ல. அப்புறம் அப்படிதான் பேசிட்டு இருக்கும்போதே கட் பண்ணிட்டு போற என்னதான் நீ நினைச்சுட்டு இருக்க” என்று கத்தி கொண்டிருந்தாள் ஹர்ஷ வர்த்தனின் காதலி அர்ச்சனா.
காதலியா?!!!! ஆம் காதலிதான்……
ஹர்ஷா அர்ச்சனாவை காதலிக்கிறான் என்றால் ஹாசியின் காதல் என்ன ஆகும்.
முக்கோண காதல் இதில் யார் காதல் வெற்றி பெரும் பொருத்திருந்து பார்க்கலாம்…….