அத்தியாயம் -4

வீட்டிற்கு வந்த ஹாசினியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் கிருஷ்ணன், பத்மா தம்பதியர்.

அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் “நல்லா இருடா. நம்ம பழக்கம் அப்படியே இருக்கு. ரேவா பொண்ண நல்லா வளர்த்துருக்கா இல்லங்க” என்று பத்மா சொல்ல,

“ம்கூம்….. உங்க அம்மாக்கு ஒழுங்கா வளர்க்க தெரியலியே என்ன பண்றது” என்று தேவகி பாட்டி முகத்தை நொடித்து கொண்டு சொல்ல,

பத்மா கணவனை முறைக்க அவரோ ஹாசியிடம் பேச துவங்கிவிட்டார். “அப்பா நல்லா இருக்காரா டா. எப்போ இங்க வரேன்னு சொன்னாங்க”.

இனி தங்கள் திருமணம்தான் அதற்கு கண்டிப்பாக அவர்கள் வந்துதானே ஆக வேண்டும் என்று நினைத்தவள் சிரிப்புடன் “சீக்கிரம் வருவாங்க மாமா” என்றுவிட்டு அவர்களுக்கு வாங்கி வந்ததை எடுத்து கொடுக்க துவங்கினாள்.

பாட்டி “ஏன்டிம்மா ஏதேதோ மெஷின்னு கண்டுபுடிக்காராங்களே அதுமாதிரி புடிக்காத மனுஷங்கள உள்ள அனுப்புனா அவங்களுக்கு பதிலா வேற ஆள் வெளிய வர மாதிரி பொட்டி எல்லாம் கண்டுபிடிக்கலையா?” என்று மருமகளை பார்த்து கொண்டே கேட்க,

ஹாசி புரியாமல் விழிக்க, ஹர்ஷா சத்தமாக சிரிக்க துவங்கினான்.

பல்லை நற நறவென கடித்த பத்மா கணவனை பார்த்து முறைக்க, அவரோ ‘நான் ஏன் உன்னை பார்க்க போறேன் என்பது போல் கமுக்கமாக மனைவி பக்கம் பார்வையை திருப்பாமல் அமர்ந்திருந்தார்.

ஹாசி, “என்ன பாட்டி சொல்லறீங்க. அது மாதிரி எல்லாம் ஒன்னும் கண்டுபிடிக்கல. இந்தாங்க உங்களுக்கு இந்த ஹெட்செட் வாங்கிட்டு வந்தேன் ஜாலியா பாட்டு கேட்டுட்டே இருங்க” என்றவள் அதை கொடுக்க,

“எனக்கு எதுக்கும்மா இதெல்லம்” என்று கேட்டாலும் வாய் எல்லாம் பல்லாக வாங்கி கொள்ள. அதை தொடர்ந்து பத்மா “அதுல பாட்டு கேட்கணும்னா முதல்ல காது கேட்கணும்” என்று முணு முணுக்க,

“யாருக்குடி காது கேட்காதுன்னு சொல்ற” என்ற பாட்டி கத்தலில் பத்மா அதிர்ச்சியாக, மற்ற இருவரும் சிரிக்க துவங்கினர்.

“ஆண்டி மித்ரா எங்க காணோம்”.

“அவள இன்னைக்கு சீக்கிரம் ஆபிஸ்க்கு வர சொன்னாங்களாம் அதான் கிளம்பிட்டா. நீ போய் குளிச்சு பிரஸ் ஆகிட்டு வாடா சாப்பிடலாம்” என்றவரிடம் சம்மதமாக தலையசைத்தவள் எழுந்து கொள்ள,

அவளை மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்து சென்றவர் “இந்த ரூம்ல நீ தங்கிக்க டா. நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கறேன்” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

அறைக்குள் சென்றவள் மனம் தன்னவனை வெகு வருடங்கள் கழித்து பார்த்ததில், பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து போய் இருந்தது. அதனால் மனதுக்கு பிடித்த பாடலை முணு முணுத்து கொண்டே பயண களைப்பு நீங்க குளிக்க சென்றவள் நிதானமாக குளித்து முடித்து,ஒரு குறுத்தியை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வர, அப்போதுதான் கவனித்தாள் எதிர் அறையில் இருந்து ஹர்ஷா வெளி வருவதை ‘ஓ எதிர் அறை சிக்கி அறையா’ என்று நினைத்தவள் அவன் சிரிக்கவும் தானும் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு கீழே சென்றாள்.

அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுபவளிடம் ஹர்ஷா “நீ ஆபிஸ்ல எப்போ ஜாயின் பண்ணனும்” என்று கேட்க,

“நாளைக்கு ஜாயின் பண்ணனும். ஆனா.,…” என்று இழுத்தவளை புரியாமல் பத்மா பார்க்க,

“கொஞ்சம் திங்ஸ் வாங்கணும். மித்து இருந்தா அவகூட போய் வாங்கிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா….சரி நானே போய்க்கறேன்”,

கிருஷ்ணன், “ ஏன்மா தனியா போகணும் ஹர்ஷா ஈவ்னிங் சீக்கிரம் வர சொல்றேன் அவன்கூட போ”.

“இல்ல அங்கிள் பாவம் அவருக்கு ஏன் சிரமம்”

“எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல. ரெடியா இரு. நாம பிரண்டுதானே அப்புறம் என்ன பார்மலா பேசற ஈவ்னிங் வந்த உடனே கிளம்பலாம்” என்றவன் அனைவரிடமும் சொல்லி கொண்டு ஆபிஸ் சென்றுவிட்டான்.

ஹர்ஷா செல்லவும் பத்மாவை பார்த்த ஹாசி “ஆண்டி ட்ராவெல் பண்ணுனது டயர்டா இருக்கு. நான் போய் தூங்கறேன். நானா எழுந்து வரேன் அது வரை எழுப்பாதீங்க ப்ளீஸ்” என்க. அவர் சம்மதம் சொன்னவுடன் தனக்கென கொடுத்த அறைக்கு சென்றவள் மன நிம்மதியோடு உறங்க துவங்கினாள்.

மாலை பத்மா வந்து எழுப்பும் வரை உறங்கியவள் அருகில் சென்றவர் “ஹாசி திங்ஸ் வாங்கணும்னு சொன்னியே ஹர்ஷா வந்துட்டான்” என்ற பத்மா குரலில் அடித்து பிடித்து எழுந்தவள் “சாரி ஆண்டி நல்லா தூங்கிட்டேன். அவர் வர்றதுக்கு முன்னாடியே எழுப்பி இருக்கலாம்ல. பாவம் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு”

“ஹேய்…. ரிலாக்ஸ்…எதுக்கு இவ்ளோ பதட்டம். ஒன்னும் இல்ல. அவன் இப்போதான் வந்தான் வெயிட் பண்ணுவான். நீ மெதுவா கிளம்பி வா அதுக்கு முன்னாடி இந்த காபிய குடிச்சுடு” என்றவர் சென்றுவிட,

வேக வேகமாக கிளம்பியவள் கீழே வர, ஹர்ஷா யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான். அவன் அருகில் சென்றவள் “சாரி பார் த லேட்…” என்க,

உடனே போனை கட் செய்தவன் “இட்ஸ் ஓகே…. இட்ஸ் ஓகே….. போலாமா” என்று முன்னால் செல்ல, அவனை புருவம் சுருக்கி பார்த்தவள் “போன் பேசிட்டே போலாமே. ஏன் கட் பண்ண ஹர்ஷா”.

“அது ஒன்னும் பிரச்சனை இல்ல. என் பிரண்ட்தான். வா போலாம்”.

“இல்ல…. நான் டிஸ்டர்ப் பண்ணிட்டனா…. நீவேணா பேசிட்டு வா”

“அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்றேன்ல வா போலாம்” என்று பைக்கில் அமர,

அதை கண்டு ஆச்சர்யம் அடைந்தவள் பைக்லயா போறோம்” என்று உற்சாகமான குரலில் கேட்க,

“ஆமா. இங்க இருக்க ட்ராபிக்ல பைக்ல போனாதான் சீக்கிரம் வீட்டுக்கு வர முடியும். வா” என்றவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் “சூப்பர். எனக்கு பைக் ரைடுதான் பிடிக்கும். வா…. வா…” என்று மனம் நிறைந்த மகிழ்வோடு சென்று பைக்கில் ஏற. பெரிய மால் நோக்கி வண்டி செல்ல துவங்கியது.

ஹர்ஷா அமைதியாக வர, ஹாசி தன்னவனுடனான தனிமை ரசித்து கொண்டு வந்தாள்.

மால்க்கு வந்த பின் ஹாசி தனக்கு தேவையான அனைத்தையும் வாங்க. ஹர்ஷா அங்கு ஓரமாக போட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து போனை நோண்ட துவங்கினான்.

எவ்வளவு நேரம் போனில் மூழ்கினானோ தீடிரென்ற சல சலப்பு எழ, என்ன ஆனது என்று நிமிர்ந்து பார்த்த ஹர்ஷா ஹாசி செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனான்.

“ என்னை இடிக்கணுமா. இப்போ இடிடா பார்க்கலாம்” என்றவள் அவன் சட்டை காலரை பிடித்து ஓங்கி அறைய, அவனோ பேந்த பேந்த விழித்து கொண்டு இருந்தான்.

“பொண்ணுன்னு மரத்துக்கு சேலை கட்டி வச்சாக்கூட இடிப்பானுங்க. நல்லா இன்னும் ரெண்டு போடுங்க அக்கா. என்னையும் இந்த நாயி இடிச்சுட்டுதான் இருந்தான்” என்றொரு பெண் வர,

“நீ அப்போவே அடிக்காம. என்கிட்ட வந்து சொல்றியா? உன்னை மாதிரி அமைதியா போற பொண்ணுங்கனாலதான் இவனுங்களுக்கு என்ன வேணா பண்ணலாங்கற தைரியம் வருது.

தப்பு பண்ற நாயே தைரியமா தப்பு பண்ணும்போது உனக்கென்ன வந்தது. திரும்பி ஓங்கி ஒரு இடி அவன் பாயிண்ட்லயே இடிக்க வேண்டியதுதானே” என்று ஹாசி அந்த பெண்ணை திட்ட,

‘எதே பாயிண்ட்லயா…” என்று திகைத்து எழுந்தவன் அவள் அருகில் செல்ல,

அந்த பெண்ணோ ‘நான் என்னடா பண்ணுன்னேன். இன்னும் ரெண்டு அடி போடுன்னு சொன்னது ஒரு குத்தமா’ என்பது போல் விழிக்க,

ஹர்ஷாவோ ‘ஆத்தாடி சரியான ராங்கியா இருப்பா போலயே’ என்று முணகி “ஹாசி அவனைவிடு”.

“முடியாது ஹர்ஷா. இவனை இன்னும் ரெண்டு போட்டாதான் என் கோபம் அடங்கும்” என்று சொல்ல,

அடங்கமாட்டேங்கறாளே என்று முணு முணுத்தவன் “சொன்ன கேளு ஹாசி எல்லாரும் பார்க்கறாங்க”

“பார்த்தா பார்க்கட்டும் எனக்கென்ன? இந்த நாய்தான் அவமானப்படணும். எனக்கென்ன வந்தது” என்க,

தலையில் கை வைத்தவன் தங்களை சுற்றி இருக்கும் கும்பலை பார்த்துவிட்டு “ஹாசி நான் சொன்னா கேட்பியா மாட்டியா? அவனை விடு”.

“முடியாது…” என்றவள் எதிரில் இருந்தவன் தலையில் நங்கென்று கொட்டி “எல்லாம் உன்னாலதான். எதுக்குடா இடிச்ச” என்று சொல்லி சொல்லி அவன் முடியை பிடித்து ஆட்ட, அவனோ வலியில் கத்த துவங்கினான்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அவ்வளவுதான் என்று நினைத்தவன் அடுத்த நொடி அவள் கைகளை பிடித்து தர தரவென இழுத்து வர துவங்கினான்.

“விடு ஹர்ஷா என்னை இன்னும் நாலு சாத்து அவனை சாத்திட்டு வரேன். அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும். இனி அவன் வாழ்க்கைல எந்த பொண்ணு மேலயும் கை வைக்க கூடாது” என்று கத்தி கொண்டே வர,

அந்த ஷாப்பில் இருந்து வெளியே வந்தவன் அவள் கைகளை விட்டுவிட்டு “நீ கொஞ்சம் கூட மாறவேமாட்டியா. சின்ன வயசுல எப்படி வம்ப இழுத்துட்டு வருவியோ அப்படியே இருக்க. அவன் திருப்பி உன்னை அடிச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா” என்று திட்ட,

அவளோ இப்போ நான் என்னடா ரியாக்ட் பண்ணனும். ஏன்டா சண்டையை முழுசா போட விடாம இழுத்துட்டு வந்தன்னு கோபபடவா, இல்லை என் ஆளு என் கையை பிடிச்சுட்டான்னு சந்தோஷப்படவா?’ என்று புரியாது விழித்து கொண்டு நிற்க,

அவள் முன் கைகளை அசைத்தவன் “ஹேய் என்ன கனவு கண்டுட்டு இருக்கியா. நான் பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன். நீ பதில் பேசாம இருக்க. எதுக்கு அவனை அடிச்ச. என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல” என்று கத்த,

அவளோ கூலாக “ம்ம்…. நாய் பாஷை எனக்கு தெரியாதுனு அர்த்தம்” என்றுவிட்டு காபி ஷாப் நோக்கி செல்ல,

அவள் பதிலில் ‘பே……’ வென்று விழித்தவன் “ஹேய் ராங்கி நில்லுடி. என்ன கொழுப்பா?”

“எனக்கில்லை….”

“அப்போ எனக்குன்னு சொல்றியா?”

“அப்படி நான் சொல்லலியே”

“திமிரு…. திமிரு உடம்பு புல்லா திமிரு’ என்றவன் சொல்ல,

ஹாசியோ “பிரண்ட இப்படியா திட்டுறது. நான் பாவம் இல்ல” என்று அப்பாவி போல் விழிக்க, அவளை மேலும் கீழும் பார்த்தவன் “அது எப்படி எல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாத மாதிரி பேசற”.

“நான் என்ன பண்ணுன்னேன்?”

“எது…. மறுபடியும் முதல்ல இருந்தா” என்று அலறியவனை அங்கிருந்த சேரில் அமர வைத்தவள் “இங்கயே வெயிட் பண்ணு சிக்கி நான் போய் காபி வாங்கிட்டு வரேன்” என்று சென்றுவிட,

எங்க இருந்து வந்த கேசுடா இது என்று குழம்பி போனான் ஹர்ஷா.

“இந்தா சிக்கி உன் காபி” என்று அவன் முன் ஹாசி காபியை வைக்க, அப்போதுதான் அவள் அழைப்பை கவனித்த ஹர்ஷா “ஹேய் நீ என்னை சிக்கின்னா கூப்பிட்ட”.

“ஆமா. அப்படிதான உன்னை நான் கூப்பிடுவேன்.”

“ஆமா. ஆனா…. அதை நீ மறக்கவே இல்லையா?”.

“நீ மட்டும் என்னை ராங்கின்னு கூப்பிடுறதை மறந்துட்டியா என்ன?” என்க,

அவனும் சிறு சிரிப்புடம் இல்லை என்றுவிட்டு காபியை பருக துவங்கியவன் மீண்டும் நினைவு வந்தவனாக “ஆமா அவனை எதுக்கு அடிச்சன்னு சொல்லவே இல்லையே”

“அதுவா. அந்த நாயி ஒரு பொண்ணை இடிச்சுட்டு நின்னுட்டு இருந்தான். அந்த பொண்ணு என்னடான்னா அவனை திட்டாம பயந்து பயந்து விலகி நின்னுச்சு அதான் நான் போய் வேணும்னே அவனை இடிச்சுட்டு அவன் என்னை இடிச்சான்னு ரெண்டு காட்டு காட்டிட்டு வந்தேன். எப்படி என் சாமர்த்தியம்” என்று பெருமையாக பார்க்க,

அவனோ “நல்ல வேளை உன்கூட நான் வந்தேன் மித்து வந்திருந்தா பேஷண்ட் ஆகி ஹாஸ்பிடல்ல போய் படுத்திருப்பா” என்க,

ஹாசியோ வெளியில் சிரித்தாலும் மனதில் ‘அவ பயந்த புள்ளன்னு உங்ககிட்டதான் நடிக்கறா. ஆனா எனக்குதானே தெரியும் அந்த பூனை பீரே அடிக்கும்னு’ என்று நினைத்தவள் அதன் பின் பொதுவாக ஹார்ஷாவுடன் பேச, அவனும் அதன்பின் எந்த தயக்கமும் இல்லாமல் சகஜமாக பேசினான்.

ஆணவனின் பேச்சும், சிரிப்பும் பெண்ணவளின் காதலை இன்னும் இன்னும் அதிகமாக்க, அவனுக்கோ அவள் நல்ல தோழியாக மனதில் பதிந்து போனாள்.