அறையிலிருந்து வெளியே வந்த முக்தாவின் பெரியம்மா, பெரியப்பாவை பார்த்து விட்டு, முக்தா கையை நகர்த்தி விட்டு தியா எழுந்து அவர்களிடம் சென்றவள் கண்களில் கண்ணீர்.
சாரிம்மா..என்னால தான் இதெல்லாம் என அவள் கண்ணீரை பார்த்த அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவன் வினித்தை பார்க்க அவன் முகம் கடுகடுவென இருந்தது.
ஆனால் அவர்களோ வெறுமையுடன், இதை நாங்கள் முன்பே செய்திருக்க வேண்டியது.
இல்லம்மா..என அவள் பேச முனைய, முக்தாவின் பெரியம்மா அவள் கையை அவர் கைக்குள் அடக்கி, நான் தான்ம்மா உன்னிடம் சாரி கேட்கணும். சீமா உன்னை பார்த்த நாளிலிருந்தே உன்னை காயப்படுத்தி தான் இருக்கா. அவளுக்காக கண்ணீர் அவசியமில்லைம்மா. இதை நான் உனக்காக மட்டும் செய்யலை. எங்க குடும்பத்திற்காகவும் தான்.
ஆனால் அம்மா..சோட்டு?
ம்ம்..என கண்கலங்கினார்.
ம்மா..நாம அக்காவை பார்த்து பேசலாம் என தியா கூற, இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த வினித் கோபமாக, “அக்காவா?” என சீற்றமுடன் எழுந்தான்.
“வினு” தியா அவனை பார்க்க, “அவ எவ்வளவு கேவலமா உன்னை பற்றி பேசினால் தெரியுமா?” வினித் பொறுமினான்.
வினு.. போதும் தியா அவனை அடக்க நினைக்க, அவனுக்கு கோபம் அதிகமாக தான் ஆனது.
“அவளெல்லாம் என்ன மனுசி?” என சீற்றமுடன் வினு பேச,
வினு..நிறுத்து. அவங்க மட்டுமல்ல நிறைய ஆட்களிடம் எல்லாத்தையும் கடந்து தான் வந்திருக்கேன். சீமாக்கா என்ன பேசி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும். அதை விட மோசமாக பேச்சையே கேட்டு தான் வந்தேன். எனக்கு தேவை பாதுகாப்பு மட்டும் தான். அதை இந்த குடும்பத்து ஆட்கள் அதிகமாகவே குடுத்தாங்க.
ரது..இப்ப நல்லா இருக்கான்னா இவங்க எல்லாராலும் தான். இந்த குடும்பத்துல்ல இருக்கிற ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். எனக்கு அரணாகவும், மருந்தாகவும் இருந்திருக்காங்க. அவங்க என்னை என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவங்களுக்கு உரிமை இருக்கு.
அஜய் மாடியிலிருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருப்பதை ராணியம்மா பார்த்து தடுக்க எண்ணவில்லை.
வினித் கோபமாக, உனக்காக எல்லாமே செய்திருக்கலாம். அதுக்காக உன்னோட கேரக்டரை தப்பா பேசக் கூடாது என சொல்ல, “அதுக்கு காரணம் நான் தான்” என ரோஹித் எழுந்தான்.
அண்ணா, “சும்மா இரு” முக்தா சொல்ல, முகி நான் பேசணும் என்ற ரோஹித், எனக்கு தியாவை பிடிச்சிருந்தது. நான் தான் அவள் பின்னே சுற்றினேன். ஆனால் அது எல்லார் மனதிலும் தவறான எண்ணத்தை தியா மீது விதைத்து விட்டது.
இதுக்கு முன் எந்த பொண்ணு பின்னும் சுற்றாத நான் அவள் பின் சுற்றுவதால் அவள் இடம் கொடுக்கிறால் என்று. ஆனால் இப்பொழுதைய தியா வார்த்தையில் தான் தெளிவாக ஒன்று புரிந்தது.
அவள் என்னை விட்டு விலக, ரதுன்னு எண்ணினேன். அது அஜய் சார் மீதான காதலும், நம்ம குடும்பத்தின் மீதுள்ள இந்த பாசமும் தான்.
அப்பா, அம்மாவுக்காக நீங்க தியாவை தவறாக பேசும் போது நான் எதற்கு அமைதியாக இருந்தேன்னு தெரியுமா? இதற்கும் அவள் மீது தவறான எண்ணம் எழும். ஆனால் அஜய் சார் பேசிட்டார். உங்களை போல் அவர் தியாவை தவறாக எண்ணாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
ரதுவை பார்த்து, எங்கே அவளை அனைவர் முன்னும் தவறாக பேசிடுவாரோ என பயத்தில் தான் இருந்தேன். ஆனால் அவர் தியாவை நம்பி விட்டுக் கொடுக்காமல் பேசினாரே! அதுவே போதும்.
எனக்கு புரிந்து விட்டது தியா. அவரை விட உனக்கு யாரும் பெஸ்ட்டாக யாரும் இருக்க மாட்டார்கள். நீ மகிழ்ச்சியா இருந்தாலே போதும். எனக்கு ஏக நிம்மதி.
ஆனால் தியா எனக்கு ஒரு சந்தேகம்? அஜய் சார் எப்படி இந்த சிடுமூஞ்சி தியாவை காதலித்தார்? என ரோஹித் கேலியுடன் உரைக்க, தியா மனம் நிம்மதி அடைந்தது.
அண்ணா, தியா அண்ணி.. உன்னிடம் தான் சிடுசிடுன்னு பேசுவாங்க. அதுவும் நீ ஃப்ளர்ட் செய்தால் மட்டும் என்று முக்தா கூற, அவளின் பெரியப்பா தியா அருகே வந்து, சாரிடா..என் பொண்ணுக்கு பதிலாக.
நீ நினைக்கிற மாதிரி அவ இல்லைடா. உனக்கு தெரிந்ததை விட மோசமா தான் இருக்கா. நானே அவளை அனுப்ப தான் எண்ணினேன் என தயங்கி, நீ எதுக்கும் கவனமா இருடா என்றார்.
“எதுக்குப்பா? கவனமாகவா?” தியா கேட்க, ராணியம்மா அருகே வந்தவர் கண்கலங்க, “என்னை மன்னிச்சிருங்கம்மா” என்று அவர் காலை பிடித்தார். அனைவரும் பதறினார்கள்.
நீயே சொல்லு..என ராணியம்மா நிமிர்வுடன் சொல்ல, தியா மனம் அடித்துக் கொண்டது.
யுகி திருமணத்தில் வைத்து சீமா தியாவை அசிங்கப்படுத்த சில ஏற்பாடுகள் செய்துள்ளாள். அவளுக்கு ரோஹித் பிரப்போஸ் செய்வான் என்று தெரிந்துள்ளது. தியாவை வீட்டிலிருந்து விரட்ட ஏற்பாடு செய்தாள்.
அனைவர் முன்னும் காதலை சொன்னால் தியாவால் மறுக்க முடியாது என எண்ணி ரோஹித் காதலை கூறிய பின் சில ஆட்களை வைத்து..என தயங்கி தியாவை பார்த்தார்.
சொல்லுங்க..என வினித் சத்தம் உயர்ந்தது.
ஆட்களை வைத்து தியாவிற்கும் அவர்களுக்கும் உடல் ரீதியான சம்பந்தம் உள்ளது என கலாட்டா செய்து அவளை அவமானத்தினால் அவள் சென்று விடுவாள். அதன் பின்னும் அவள் செல்லவில்லையென்றால் ரதுவை கடத்த கடத்தல் கும்பலிடம் பேசி இருக்காள். அனைவரும் அதிர்ந்து அவரை பார்த்தனர்.
“உங்களுக்கு எப்படிங்க தெரியும்?” பதட்டமாக அவர் மனைவி கேட்க, திருமணத்தில் தெரியாத ஆட்களாகவும் அவர்களின் விழியும் சரியில்லாது இருக்க, தனியே இருந்த ஒருவனை அடித்து விசாரித்தேன். ஆனால் என்னை பலர் சூழ்ந்து கொண்டனர்.
சீமா என் முன் வந்து அவளே எல்லாவற்றையும் சொன்னாள். என்னை நம்ம கெஸ்ட் ஹவுஸின் ஓர் அறையில் பூட்டி போட்டு விட்டாள். வெளியே தான் காவலுக்கு ஆட்கள் இருந்தனர். அதனால் தான் ரோஹித்தை அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தேன். அவன் எடுக்கவேயில்லை.
நல்ல வேலையாக அஜய் தம்பி வந்துட்டார். அவர் வந்ததும் அவளுடைய திட்டம் கெட்டுப் போய் விட்டது. என்னை வெளியே விட்டு..விட்டு..என் மனைவியை கொல்வதாக மிரட்டி யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு சொன்னா. அவளிடம் ஆட்கள் இருப்பதால் என் மனைவியை சொன்னது போல் ஏதும் செய்து விடுவாளோன்னு பயமா இருந்தது. அதான் நான் எதையும் யாரிடமும் சொல்லலை என அழுதார். அவர் மனைவியோ மயங்கி சரிந்தார்.
அனைவரும் பதட்டமாக அவ்விடம் விரைய, அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அஜய் நின்று கொண்டிருந்தான். ஆனால் தியாவோ மயங்கியவரை பார்க்க ஓடினாள்.
பாட்டி, “எல்லாமே தெரிந்து தான் அவளிடம் பேசுனீங்களா?” முக்தா சினமுடன் கேட்டாள்.
“உன்னோட அக்கா இந்த ராணியம்மா சொல்லி என்று கேட்டிருக்காள்?” அவளை அவள் வழியே விட்டு தான் பிடிக்க எண்ணினேன். அதே போல் தான் நடந்தது.
“என்ன நடந்தது? அஜய் மட்டும் வரலைன்னா தியா, ரது என்ன ஆகி இருப்பாங்க?” சீற்றமாக வினித் கேட்க, ஏதும் ஆகி இருக்காதுப்பா.
“தியா எப்ப எங்க மனசை ஜெயித்தாலோ அப்பவே அவளும் இந்த குடும்பத்தில் ஒருத்தியாகிட்டா? அவனை காவு கொடுக்க நான் என்ன பைத்தியா?” என்ற ராணியம்மா பேச்சில் குடும்பவே அவளை பார்த்தது என்றால் தியாவோ அவரிடம் ஓடி வந்து அவரை அணைத்து அழுதாள்.
அவளை விலக்கி ஆதூறமாக தடவி, உன் புருசன் வரலைன்னாலும் நான் உயிரோட இருக்கும் வரை உனக்கும் உன் மகளுக்கும் ஏதும் ஆகாதுடா.
உன் புருசன் வரலைன்னா அவனுக அதே இடத்தில் கொல்லப்பட்டிருப்பாங்க. எல்லாமே தெரிந்த சீமாவுக்கு எப்போதும் அவளுக்கு ஓர் நிழல் இருப்பதை அவள் உணரவில்லை. அந்த நிழல் அவளை நல்ல வழிக்கு கொண்டு வர தான் முயன்றது. சில நேரங்களில் நிழலால் கூட ஆபத்து வரும். அதை அவள் உணரவில்லை.
அஜய் வேகமாக இறங்கி வந்து, “அவ எங்க?” என ராணியம்மாவிடம் வந்தான்.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவர் செய்தியை வைக்க, அதில் அவள் மனநல காப்பகத்தில் இருப்பதாக ஓடிக் கொண்டிருந்தது.
ம்ம்..இரவு மனமில்லாமல் அவளை பார்க்க சென்றேன். அவளை அவள் ஆட்களே..ச்சீ சொல்லவே முடியல. நான் பார்த்து வளர்ந்து பிள்ளை. என் மனம் பதறியது. மனமில்லாமல் அவளை அங்கே நான் தான் யாருமறியாமல் சேர்த்தேன்.
அப்படியே நான் அந்நிலையில் விட்டு வந்திருந்தால் என்னை வளர்த்தவர்களும் என் கணவரும் என்னை மன்னிக்க மாட்டாங்க என கலங்கினார்.
அம்மா..செய்தியாளர்கள் உங்களை பார்க்கணும்னு வந்திருக்காங்க என ஒருவர் சொல்ல, சீமாவை பற்றி அனைவரும் கேட்க, அவ வீட்டை விட்டு ஓடிப் போனதால் தான் இப்படி நடந்தது என அவர் கூறி சமாளித்து நேர்காணலை முடித்து உள்ளே சென்றார்.
ஓடி வந்த ஒருவன்.. ராணிம்மா..நம்ம யுக்தாம்மா புருசன் இறந்துட்டாருங்க என சொல்ல, அனைவர் தலையிலும் இடி இறங்கியது.
“என்னடா சொன்ன?” ரோஹித் சீற்றமுடன் கேட்க, சின்னய்யா, நம்ம அம்மா தான் அவரை கொன்னுட்டாங்கன்னு போலீஸிற்கு கால் பண்ணி இருக்காங்க.
தாண்டவராயா வண்டியை எடுடா. நாங்க வாரோம் என சொல்ல, அனைவரும் வெள்ளை துணியை அணிந்து அங்கே சென்றனர். அனைவர் மனமும் கனத்து இருந்தது.
“அஜய், வினித்திற்கும் யுக்தாவை நன்றாக தெரியுமே!” அவர்களும் கிளம்பினர்.
கண்களில் கண்ணீரில்லாமல் இறந்தவனையே வெறித்து அமர்ந்திருந்தாள் யுக்தா. போலீஸ் ஆட்களுக்கு அழைத்த ராணியம்மா, என் பேத்தி மேல யாராவது கையை வச்சீங்க. நடக்குறதே வேற. முதல்ல எல்லாம் முடியட்டும் என்று சத்தமிட்டு அவருடன் அவர்களையும் அழைத்து சென்றார்.
மனம் வெறுத்து அமர்ந்திருந்த யுக்தாவை உலுக்கி, “ஏன்டி என் பிள்ளைய கொன்ன?” கொஞ்சமாவது கண்ணீர் வருதான்னு பாரு. நல்லவலாக நடித்து கொலை செய்த உன்னை..பாரு என யுக்தாவை கீழே தள்ளி விட்டு மிதித்த காலை ஓங்கியவர்..ராணியம்மாவின் சத்தத்தில் அமைதியானார்.
போலீஸை பார்த்து, இவள பிடிச்சிட்டு போங்க. எங்களுக்கு நஷ்ட ஈடு வேணும் இல்லை இவள் காலம் முழுவதும் ஜெயிலில் இருக்கணும் என சொல்ல, ரோஹித் கோபமாக நகர அஜய் அவன் கையை பிடித்து தடுத்து “வேண்டாம்” என ராணியம்மாவை காட்டினான். அவர் சீற்றமுடன் அவரை பார்த்தாரே தவிர வேறேதும் செய்யவில்லை.
யுக்தாவின் அம்மா, முக்தா..பின் மற்றைய அவள் வீட்டு பெண்கள் அவளருகே ஆறுதலாக அமர்ந்தனர். யுக்தாவின் அமைதியில் தியா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
காரியங்கள் நடக்க, இனி இந்த பொண்ணுக்கு வாழ்க்கையே இருக்காது. பாவம் இந்த பொண்ணு என குரல்கள் கேட்க, வினித் கோபமாக எழுந்தான்.
“எதுக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொல்றீங்க?” எங்க யுக்தாவிற்கு நல்ல வாழ்க்கை அமையும். நாங்க நடத்தி வைப்போம் என அவன் பேச,
“இவள யாரு கட்டிப்பா? கொலை செய்பவளை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா?” ஒருவர் கேட்க, வாயை மூடிட்டு வந்த வேலைய பாரும்மா என்று சீமாவின் தந்தை கூற, ஆமா..உன் பிள்ளை வள்ளல் தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே பாட்டி ஒருவர் கூற, ராணியம்மா பார்வையில் அவர் அடங்கி வெளியேறினார்.
காரியங்கள் முடிந்த பின்..போஸ்ட் மார்ட்டம் பண்ணுங்க என அஜய் சொல்ல, பொறுமை காத்த யுக்தாவோ..வேகமாக எழுந்து அவள் இறந்த கணவன் அறைக்கு சென்று அதை பூட்டி விட்டு அனைத்தையும் களைத்தாள்.
கீழே விழுந்த கோப்பை பார்த்தவள் அதை எடுத்து முழுவதுமாக பார்த்து அதிர்ந்து கண்ணீருடன் வெளியே வந்து, “பாட்டி” என ராணிம்மாவை அணைத்து அதை கொடுத்தாள்.
அதை பார்த்த அவர் இரத்தம் கொதித்தது.
எஸ் பி சார். இதை பாருங்க. இருதயம் பலவீனமானவன். இறக்கும் நிலையில் இருப்பவனை என் பேத்திக்கு ஏமாற்றி முடித்து விட்டாங்க. இவங்கள் கைது செய்ய முடியும்ல்ல? அவர் கேட்க, எஸ் மேம்..என அவர் ஏமாற்றிய குடும்பத்தையே கூண்டில் ஏற்றினார்கள்.
வீட்டிற்கு சென்ற ராணியம்மா, யுக்தாவை வெளியே நிற்க வைத்து பல வாளி தண்ணீரை அவள் மீது ஊற்றி அவளை வீட்டினுள் அழைத்து வந்து, தியாவிடம் சென்று ஏதோ கூற..அவள் யுக்தாவை அவளறைக்கு அழைத்து சென்றாள்.
அனைவரும் அமைதியாக இருந்தனர். ராணிம்மா..இது அவங்களுக்கு பத்தாது. என் பொண்ணு வாழ்க்கையையே பாழாக்கிட்டானுக என யுக்தா அப்பா சத்தமிட, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ராணியம்மா.
எல்லாம் உன் தப்பு. பிடிக்காத திருமணத்தை செய்து வைத்தால் இது மட்டுமல்ல இதுக்கு மேலேயும் நடக்கும். அவ தான் வேண்டாம்ன்னு சொன்னால்ல. அவ மனசுல்ல என்ன இருக்குன்னு தெரிந்தும் இப்படி அவள கஷ்டப்படுத்தீட்ட. அவ வாழ்க்கை பாழாகாது. அதுக்கு நான் பொறுப்பு. உன் மகள் சந்தோசமாக இருப்பாள் என்ற ராணியம்மா..அஜய் பக்கம் திரும்பி,
“எங்க பசங்கல்ல உங்களோட அழைச்சிட்டு போக முடியுமா?” முதல்ல முக்தா, ரோஹித்தையும் அழைத்து செல்ல தான் கேட்க எண்ணினேன். யுகி இங்க இருந்தால் அவளும் கஷ்டப்படுவா அவளை இந்த நிலையில் பார்க்க எங்களுக்கும் கஷ்டமா இருக்கும். எங்க பொண்ணு எங்களோட இருந்ததை விட அவள் தோழன், தோழிகளுடன் இருக்கும் போது தான் சந்தோசமாக பார்த்திருக்கேன் என்று அவர் கையை கூப்பினார்.
யுகி சரி, முக்தா ரோஹித்..அவன் கேள்வியுடன் நோக்க,
ரோஹித் பிசினஸை அவன் அப்பா பார்த்துப்பார். அவனை உங்க கம்பெனிக்கு உங்களோட அழைச்சிட்டு போய் கத்துக் கொடுங்கப்பா. நான் என்ன சொன்னாலும் அவன் கேட்பதே இல்லை. அவன் நினைப்பதை தான் செய்கிறான். அது அவனுக்கு செட் ஆகலை. நஷ்டமாகுது. அப்புறம் முகி, தியா ரதுவுடன் இருக்கட்டும். இப்ப யுகி..இடம் மாறுதல் தான் அவளை தேற்றும்.
அஜய் சிந்திக்க, வினித் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்களிடம் தனியாக பேசலாமா?” என ராணியம்மாவை தனியே அழைத்து சென்ற அஜய் சில விசயங்களை கூற, இதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தியாவை பார்த்துப்பது போல் எங்க பசங்களையும் பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு என அவர் உறுதியாக கூறினார். அவன் ஒத்துக் கொள்ள, அனைவரும் கிளம்பினார்கள் மாநகர சென்னைக்கு.
இதை தான் முக்தா, ரோஹித்திடம் இரவு ராணியம்மா பேசி இருப்பார். அந்த மகிழ்ச்சியில் தான் துள்ளி குதித்தாள் முக்தா.
ஆன்ட்டி..என ஓடி வந்தான் சோட்டு.
தியா அருகே வந்ததும் மண்டியிட்டு, மா தப்பு செஞ்சுட்டாங்க சாரி என்று சொல்ல, துடித்து அவனை தூக்கினாள்.
“உன்னை நான் எதற்கு வரவைத்தேன்? நீ என்ன செய்ற?” தேவையில்லாமல் யார் முன்னும் நீ மண்டியிடக் கூடாது என செல்லமாக அவனை அதட்டிக் கொண்டே துக்கினாள் தியா.
நிரம்ப ஆறு வயதையொத்த சிறுவன் அவன். அவன் சோட்டு. சீமாவின் புத்திரன். அவளுக்கு அப்படியே எதிர்ப்பதம். பணிவும் துணிச்சலும் ஒருங்கே கொண்டவன். ரொம்ப பாசக்காரனும் கூட.
சீமாவின் கணவன் உள்ளே வந்தார் கையில் லக்கேஷூடன்.
ஆருஷ்..எங்களை மன்னிச்சிருங்க என ராணியம்மா அவரை நோக்கி வர, ”இதெல்லாம் என்ன பேச்சு?” நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். சோட்டு அவனோட பாட்டி, தாத்தா அறையில தங்கிக்கட்டும் என்று அவர் சொல்லி விட்டு தியாவை பார்த்தார்.
வாங்கண்ணா..நாங்க பேசிட்டு வாரோம் என சோட்டுவை தூக்கிக் கொண்டு புன்னகையுடன் முக்தாவை கண்ணாலே அழைத்தாள். எல்லாரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சோட்டு, நேரா ஆன்ட்டிய கரெக்ட் பண்ண ஓடிட்ட. நாங்களெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா? முக்தா செல்லக் குரலுடன் பேசியவாறு அவர்களிடம் ஓடினாள்.
சித்தி..நீ பார்த்து நட. உன்னோட ஷூ தட்டி விட்டு மண்ண கவ்வீறாத என அவன் கலாய்க்க, ரோஹித் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
அடேய் உன்னை என்ன செய்கிறேன் பாரு என முக்தா அவனை தூக்க வர, ஆன்ட்டி விட்றாதீங்க என கத்தினான். மாறாக முக்தா அவனுக்கு கிச்சுகிச்சு மூட்ட அவனுடைய சிரிப்பில் அங்கிருந்தர்கள் முகம் விகர்சித்தது.
முகி, வா என தியா அவளை இழுத்து உள்ளே சென்றாள்.
“எதுக்கு உள்ள போற தியா?” வினித் கேட்க, அது எங்களுக்கும் சோட்டுவுக்கும் உள்ள ரகசியம். உன்னிடமெல்லாம் சொல்ல முடியாது என உதட்டை கோணி காட்டி விட்டு சென்றாள்.
அவங்கல்ல விடுங்கப்பா. சோட்டுவை சமாதானப்படுத்த தான் தியா அழைச்சிட்டு போயிருப்பா என்று ராணியம்மா ஆருஷை அமர வைத்து, அவர் குடும்பத்தை விசாரித்து விட்டு, “நீ இங்க தங்க உங்க வீட்ல விட மாட்டாங்களே!” என அவர் கேட்க, அதான் என் தங்கச்சி இருக்காலே.. அத்தையும் மாமாவும் ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு பேசி தான் என்னை வர வச்சா.
வீட்ல சீமாவை டிவோர்ஸ் செய்வதை பற்றி பேச சொன்னாங்க..சாரிம்மா என அவன் தலை கவிழ்ந்தான்.
ரோஹித் அவனருகே அமர்ந்து, மாமா..நீங்க டிவோர்ஸ் பண்ணிடுங்க. அவ என்ன வேணும்ன்னாலும் பண்ணட்டும். ஆனால் நீங்க சோட்டுவுக்காக வேற திருமணம் பண்ணிக்கணும் ரோஹித் கேட்க, அவன் அம்மாவிற்கு ஓர் யோசனை பிறந்தது.
மாப்பிள்ள, “நீங்க யுகியை திருமணம் செஞ்சுக்கிறீங்களா?” என அவர் கேட்க, அனைவரும் அதிர்ந்தனர். அவளோ ஜடம் போல அமர்ந்திருந்தாள்.
அம்மா..போதும். இதுக்கு மேல பேசாதீங்க. அவளுக்கு பிடிக்குமா? அவன் எண்ணம் என்னன்னு கேட்டும் பிடிவாதமா முடித்து வைத்து, இப்ப என்ன நடந்தது..உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? ரோஹித் கத்தினான்.
“என்னை என்னடா பண்ண சொல்ற?” அவ வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கிறா. எனக்கு பயமா இருக்கே என அழுதார் அவர்.
இதை முன்னாடியே சிந்தித்து இருக்கணும் என்ற ராணியம்மா. அவ முதல்ல மனசை சரி செய்யட்டும். பின் அதை பார்க்கலாம். “கல்யாணத்தை பற்றி அவளிடம் யாரும் பேசக் கூடாது. புரியுதா?”
அத்தை, அவளை தனியா விட பயமா இருக்கு என அஜய்யை பார்த்து, “உங்க வீட்ல பார்த்துக்க ஆள் இருக்காங்களா? அவங்க எப்படி?” என அவர் கேட்க, வினித் எழுந்து அவரிடம் வந்து..உங்களுக்கு யுகி பொண்ணு. எனக்கு தோழி. அவள் மனது மாறும். அவள் இனி எங்க பொறுப்பு என வினித் அஜய்யை பார்த்தான்.
ஆமா ஆன்ட்டி, இனி அவளை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். அவள் அங்க சந்தோசமா இருப்பா. பழையவாறு பேசுவா. பேச வைப்போம். அவளுக்கு நேரம் வேண்டும் என்று அஜய் யுக்தாவை பார்க்க, அவள் அப்பொழுதும் அப்படியே அமர்ந்திருந்தாள்.
சரிப்பா, எங்க பிள்ளைங்கல்ல உங்க பொறுப்புல விடுறோம் என அவர் சொல்ல, அஜய் அவர் கையை ஆறுதலாக பற்றினான்.
தியா, முக்தா, சோட்டு வெளியே வந்தனர். முக்தாவும் அவனும் ரகசிய பேச்சுடன் வந்தனர்.
சோட்டு கீழே இறங்கி அஜய் வினித் முன் வந்தான். அவர் கையை விடுத்து அஜய் அவனை பார்த்தான்.
இடுப்பில் கை வைத்து அஜய்யையும் வினித்தையும் மேலிருந்து கீழாக பார்த்து ஸ்கேன் செய்தான் சோட்டு.
“என்னடா பைய்யா?” வினித் அவனை தூக்க, அவன் முக்தாவை பார்த்தான். அவள் அஜய்யை கை காட்ட, அஜய்யை பார்த்து..ஓ..நீங்க தான் ரது பாப்பா பப்பாவா? எனக் கேட்டான்.
ஆமா என அஜய் அவனை துக்கினான்.
ஆன்ட்டியையும் பாப்பாவையும் எங்களிடம் கொடுத்து போயிருங்க. எங்களுக்கு அவங்க வேணும் என்றான்.
நான் வளர்ந்த பின் ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன். நீங்க அதுக்குள்ள முந்தீட்டீங்க? என அவன் சோகமாக சொல்ல, ஹ..என வினித் அவனை பார்த்து விட்டு தியாவை பார்த்தான். அவள் அமைதியாக அஜய்யை பார்த்தாள்.
அஜய் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “நீ முன்னாடியே சொல்லி இருந்தால் நான் யோசித்திருப்பேனே!”
சரி..சரி..அதான் முடியாதே! என சோகமாக அவனை பார்த்து விட்டு, பளிச்சென்ற புன்னகையுடன் அதான் என் ரது பாப்பா இருக்கால்ல. அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க. நான் அவளை பார்த்துக்கிறேன் என்றதும் அஜய் அவனை கீழே இறக்கி விட்டு அவனை போல் இடுப்பில் கை வைத்து முறைத்தான்.
அங்கிள்..பாப்பாவுக்கு என்னை பிடிக்கும். பார்க்குறீங்களா? என அவன் பாட்டி கையிலிருந்த ரதுவிடம் சென்று..சுட்கி..மாமுக்கு முத்தா..முத்தா..என அவன் கேட்க, அரிசி பற்கள் தெரிய ரதுவும் உவ்வா..உவ்வா..என இதழ்களை குவித்து விளையாடியது. அஜய் கோபமாக இதை பார்க்க, சோட்டு கண்கள் கலங்கியது.
சோட்டுப்பா..ராணியம்மா அழைக்க, எல்லாருமே போறாங்கல்ல பாட்டி என அவரை அணைத்து அவன் அழ, அஜய் மனம் உருகியது.
சாரி கண்ணா..என தியா அவனை தூக்க, “ஆன்ட்டி இனி வரவே மாட்டீங்கல்ல?” எனக் கேட்டான்.
“இவ்வளவு தெளிவா?” என வினித் சோட்டுவை ஆச்சர்யமாக பார்த்தான்.
கண்டிப்பா வருவாங்க கண்ணா..என ராணியம்மா சொல்ல, தியா அவரை பார்த்தார்.
“அவங்க கிளம்பும் போது எதுக்குடா அழுற?” அவனது மற்ற மாமாக்கள் அவனிடம் சத்தம் போட, “அண்ணா அவன் அழுறான் திட்டுறீங்க?” தியா சினமுடன் அவர்களை பார்த்தாள்.
சோட்டு கண்ணா உன்னோட சுட்கி வளர்ந்த பின் உன்னை பார்க்க கண்டிப்பா வருவா. இப்ப பப்பாகிட்ட வாங்க என ஆருஷ் அழைக்க, பப்பா..மா இல்லை. ஆன்ட்டி, அங்கிளும் போறாங்க என தியாவிடமிருந்து இறங்கி வெளியே ஓடினான்.
சோட்டு..என அனைவரும் அதிர, ரது அழுதது. தியா இரு பக்கமும் பார்த்தவாறு திண்டாட, ரோஹித் ஓடிச் சென்று சோட்டுவை அலேக்காக தூக்கினான்.
ஏன்டா மாப்பிள்ள, “நாமெல்லாம் யாரு? இதுக்கெல்லாம அழுறது?” நாம தினமும் பேசுவது போல நீ தினமும் ஆன்ட்டியையும் சுட்கியையும் பார்க்கலாம்.
அப்புறம்..நாங்க அங்கேயே தங்கப் போறதில்லைடா. நாங்க வந்துருவோம் என அவனுக்கும் முத்தம் கொடுத்தான்.
“பிராமிஸ்ஸா?”
“பக்கா பிராமிஸ்” என அவனை ஆருஷிடம் கொடுத்து, மாமா…நான் சொன்னதை கொஞ்சம் யோசியுங்க என அனைவரையும் பார்த்தான்.
வினித் அஜய்யை பார்க்க, பெருமூச்சுடன் சோட்டு அருகே வந்த அஜய்..கண்டிப்பாக நாங்க அடிக்கடி உன்னை பார்க்க வந்திருவோம் என சொல்ல, சோட்டு அஜய் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டான். அஜய் கண்ணோரம் நீர் நிறைந்து இருந்தது.
உன்னோட ஹாலிடேவுக்கு கண்டிப்பா உன்னோட ஆன்ட்டி, பாப்பாவை பார்க்க வரலாம் அஜய் சொல்ல, மீண்டும் அவனை கட்டிக் கொண்டு..அங்கிளையும் பார்க்க வருவேன் என்றான் சோட்டு.
சீமாவின் அம்மாவும் அப்பாவும் தியாவிடம் வந்து, அவள் கையை பிடித்து எனக்கு இப்ப தான் உயிரே வந்தது போல் இருக்குடா என சொல்ல, அவள் அவர்கள் காலில் விழுந்து அஜய்யை பார்த்தாள்.
சிரஞ்சீவியா குடும்பத்தோட நல்லா இருங்க என அவர்கள் மனதார வாழ்த்த, மற்றவர்களிடமும் ஆசி பெற்று, ராணியம்மாவை அணைத்து தியா வெளியேற, முகி..என சோட்டு கத்த, அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவன் கையை ஆட்ட, அவனருகே வந்து முத்தமிட்டு சொன்னதை மறந்துடாத கண்ணா என்று சொல்லி சென்றாள்.
வேலா, ஹெலி தயாரா? அஜய் கேட்க, ஜெலிகாப்டர்ல்லயா போகப்போறோம் என முக்தா மகிழ, அனைவரும் ஏறி சென்னை ஏர்போட்டிற்கு தள்ளி இருந்த பெரிய மைதானத்தில் இறங்கினார்கள். அங்கே காரை வேலனும் எமிலியும் எடுக்க, வேலா..நீயும் எமிலியும் வாங்க. நாங்க எல்லாரும் என்னோட கார்ல்லயே வாரோம் என்றான் அஜய்.
சார்..அவன் தயங்க, பின்னே பாலோ பண்ணு என காரை எடுக்க வினித் அஜய் அருகே அமர்ந்தான்.
நான் அந்த கார்ல்ல வாரேன் ரோஹித் சொல்ல, நான் சொன்னால் காரணம் இருக்கும் என அஜய் சொல்ல, பேச முடியாது வினித் அருகே அமர்ந்தான் ரோஹித். பெண்கள் ரதுவுடன் பின்னே அமர்ந்திருந்தனர். வீட்டிற்கு செல்ல கிளம்பினார்கள்.
அண்ணி, “நீங்க மாமாகிட்ட எப்ப பேசுனீங்க?” முக்தா கேட்க, விசயம் தெரிந்த பின் காலை துணிகளை அடுக்கும் போது என்னறையில் வைத்து பேசினேன்.
அண்ணாவுக்கு யாரோ சீமா அண்ணி வீடியோவை அனுப்பி இருக்காங்க. அவர் அதை பார்க்கும் முன் சோட்டு பார்த்து பெரிய ரகளையே பண்ணீட்டானாம் என தியா வருத்தமாக கூறினாள்.
அண்ணி, “சோட்டு அவன் வீட்லயே இருந்திருக்கலாம்ன்னு தோணுது?” அண்ணி ஏதாவது பேசிட்டா பிரச்சனையாகும். ராணிம்மாவும் ரொம்ப கோபப்படுவாங்கல்ல முக்தா கேட்க, சீமா அண்ணி இருந்தால் தான் பிரச்சனை வரும். இப்ப தான் அண்ணன் உடன் இருக்காங்கல்ல. அவங்க பார்த்துப்பாங்க.
சோட்டு நிலையை எண்ணி தான் வருத்தமா இருக்கு. அண்ணனாவது ஆபிஸ் வொர்க்ல்ல கவனம் செலுத்துவாங்க. அவன் தான்..என தன் மகளின் பிஞ்சு கரத்தை கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
அண்ணி, “அவனையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமோ?” முக்தா கேட்க, தியா அவளை முறைத்தாள்.
“தப்பா கேட்டுட்டேனா? உங்களுக்கு தான் அவனை பிடிக்கும்ல்ல?”
பிடிக்கும் தான். பிடிக்கிற எல்லார் கூடவும் எப்போதும் சந்தோசமா இருக்க முடியாதுல்ல என தியா அஜய்யை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்றுமே புரியல முக்தா கேட்க, சொந்தமென்று ஒன்று இருக்கு முக்தா என்ற வினித்தும் அஜய்யை பார்த்துக் கொண்டே, அவன் பார்வையை வெளியே திருப்பி..அவன் அப்பா போல் எல்லாரும் அவனுக்கு இருக்க முடியாதுல்ல..எனக் கேட்டான்.
இல்ல, அவன் எங்களுடன் இருந்தால் அவன் அப்பாவை பற்றி பேச மாட்டான். ஒரு வாரம் கூட தங்கி இருந்திருக்கான் முக்தா சொல்ல, மிரர் வழியே அவளை பார்த்த வினித்..அப்பா பற்றி வெளியே தானே பேசியதில்லை. மனதுக்குள் பார்க்கணும்ன்னு எண்ணம் இருக்க தான் செய்யும் என வினித் கூற, தியா வழிந்த கண்ணீரை சுட்டி விட்டாள்.
சிலர் உணர்வுகளை மனதினுள் மட்டும் அனுபவிப்பாங்க. சிலர் நேரடியாக காட்டிருவாங்க. இன்னும் சிலருக்கு காட்டவும் முடியாமல் காட்டாமல் இருக்கவும் முடியாமல் கஷ்டப்படுவாங்க. எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டே வந்தனர்.
அஜய் மனதினுள், “இவன் என்ன சொல்ல வர்றான்?” என சிந்தனையுடன் காரை ஓட்டினான்.
சோட்டு, “அவன் அப்பா அருகே இருப்பது தான் நல்லது” என்றான் வினித்.
ம்ம்..என்ற முக்தா தியாவை பார்க்க, அவள் விழிகள் கலங்க முக்தா அவள் கையை இறுக பற்றினாள்.
திடீரென அஜய் காரை நிறுத்தினான். அனைவரும் அவனை பார்க்க, அவர்கள் காருக்கு நேர் எதிராக இரு கார்களும் பைக்கும் வந்தது.
வினு..இவனுக எங்க இங்க? என தியா கேட்க, அஜய் அவளை பார்க்க, வினித் அஜய்யிடம் “கார்ல்ல ஏறுடா” என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அஜய் நகர, உற்று பார்த்துக் கொண்டிருந்த முக்தாவோ மகிழ்ச்சியுடன் காரிலிருந்து இறங்கி துள்ளி குதித்து ஓடினாள்.
“இவ என்ன பண்றா?” ரோஹித்தும் வெளியே வர, யுக்தா மட்டும் காரில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
போச்சு..போச்சு..டேய் வினு, ஏதாவது பண்ணு.
நான் பண்றது இருக்கட்டும். “இவளை என்ன செய்றது?” என குஷியாக ஓடும் முக்தாவை காட்டி கேட்டான்.
ஆமால்ல..தியா பதற, “யார் இவங்க?” ரோஹித் கேட்க, பள்ளியிலிருந்தே இவனுகளுக்கும் அஜய்க்கும் ஆகவே ஆகாது. எதிரும் புதிருமா தான் இருப்பாங்க. அஜய்க்கு இவனுகள பார்த்தாலே பிடிக்காது. ஆனால் நாங்க ப்ரெண்ட்ஸ் தான் என்றான் வினித்.
சந்தோஷ், விஜயேந்திரன், கரண், கார்த்திகேயன், வினித். ஐவரும் நண்பர்கள் என்றாள் தியா.
“அப்ப அஜய்?” கேள்வியுடன் அவளை பார்க்க, “சார் ஸ்டேட்டஸ் பாய்”.
நான், புழலரசன், யுக்தா சேர்ந்தே தான் இருப்போம். வினித் அவ்வப்போது எங்களுடனும் சேர்ந்து கொள்வான். யுக்தாவுடன் முக்தா இருந்த ஒரு மாதம் எங்களை விட வினித்தும் அவன் நண்பர்களும் தான் அவளுடன் சேர்ந்து சுற்றினார்கள். அவளுக்காக அவனுக கூட நாங்களும் போவோம் என்ற தியா அதிர்ச்சியுடன் கண்களை கசக்கி பார்க்க, வினு..எனக்கு மயக்கம் வருது. பிடிடா என தியா கூற, இருவரும் அவர்களை பார்த்தனர்.
அஜய் புன்னகையுடன் விஜய்யை அணைப்பதை பார்த்து அதிர்ந்தனர். முக்தாவோ போஸ் கொடுத்து, “நான் யாருன்னு சொல்லுங்க?” என கேட்க, எல்லாரும் யோசிப்பது போல் பாவனை செய்து ஒன்று போல் “அம்மு குட்டி” என்று கூற, “அண்ணா” என அனைவரையும் கட்டிக் கொண்டாள் முக்தா.
வினு..விழித்துக் கொண்டிருக்க, டேய் மறைஞ்ச மச்சான்…இப்ப தான் வழி தெரியுதா? சந்தோஷ் கேலியாக வினித்தை நோக்கி ஓடி வந்து வினித்தை அணைத்து, தியாவை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
அவள் எப்பொழுதும் போல் துப்பாக்கியை நீட்டி சுடுவது போல் பாவனை செய்ய, அவன் கீழே விழுவது போல் நடித்தான்.
டேய் போதும். ரோடுடா இது என வினித் புன்னகைத்தான். அஜய் இவர்களை பார்த்து விட்டு முக்தாவை பார்க்க, அவளோ அவர்களுடன் அரட்டையை ஆரம்பிக்க, அஜய் புன்னகைத்தவாறு முக்தா அருகே சென்று அவர்களை கவனித்தான்.
மாம்ஸ், “எனக்கு எதுவும் வாங்கீட்டு வரலையா?” முக்தா கார்த்திகேயனை பார்த்து கேட்க, நீ வர்றன்னு தான் அஜய் சொல்லீட்டானே! வாங்காமல் வருவேன்னா..என விதவிதமான பூக்களை பூச்செண்டாக அவனே செய்து..அதை அவளிடம் நீட்டினான்.
“என்ன?” கார்த்திகேயன் கேட்க, மாம்ஸ்..என அஜய்யை பார்த்து, “சொல்லலையா?” என கேட்டாள் முக்தா.
என்ன?
அக்கா?
அஜய் இல்லை என தலையசைத்து, மறந்துட்டேனே! எப்படி இவனுக கிட்ட சொல்ல? என யோசனையுடன் நின்றவனை தாண்டி நண்பர்கள் வினித் தியாவிடம் சென்று அஜய்யின் புதல்வியை கொஞ்ச..மற்றவர்கள் ஈடுபாட்டுடன் இல்லாததை பார்த்த கரண், “என்னாச்சுடா ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.
ராணியம்மா யுக்தாவின் கணவன் இறந்ததை மீடியாவிற்கு கொண்டு போக விடலை. ஆனால் ஒருவன் திருட்டுத்தனமாக எடுத்த வீடியோவை போட நேரமாக்கியதால் இவர்கள் யாரும் இதை பார்க்கவில்லை.
அம்மு குட்டி, “உன்னோட அக்கா நல்லா இருக்காலா? மாப்பிள்ள என்ன சொல்றார்?” தன் நண்பன் கார்த்திகேயனை பார்த்துக் கொண்டே கேட்க, அவனோ கவனிக்காதது போல் நின்றான். முக்தாவின் கண்ணீரை பார்த்து மற்றவர்கள் அதிர்ந்தனர்.