மறுநாள் காலையில் காரின் டிரைவர் சீட்டில் தியா அமர்ந்திருக்க, தயாராகி வந்த அஜய் காரில் ஏறி அமர்ந்தான். இருவரிடமும் பலத்த அமைதி. அஜய் கையில் இருந்த மருந்தடங்கிய கட்டை பார்த்து கண்கலங்கினாள். பின் அஜய்யை பார்க்க, அவன் கொஞ்சமும் அவளை கண்டுகொள்ளவில்லை. அவள் மனம் அமைதியற்று போனது.
எப்பொழுதும் ஏதாவது பேசியும், சீண்டிக் கொண்டு வரும் அஜய்யின் அமைதி தியா மனதில் சூறாவளியை கிளப்பியது. “என்னிடம் பேச மாட்டானா?” என்ற அவளது ஏக்கப் பார்வையை கண்டு கொண்ட அஜய் மனதினுள் மகிழ்ந்தான்.
ஆபிஸிற்கு போக வேண்டாம். பிராடெட் லான்ஞ்சிங் இடத்திற்கு போ என்றான். ம்ம்..என்று அவள் காரை செலுத்தினாள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அன்று முழுவதும் அஜய் தியாவிடம் பேசவில்லை. வினித் இதை கவனித்து அஜய்யிடம் பேசி விட்டு அவனும் காணாதது போல் இருந்தான். ஆனால் அவன் எப்பொழுதும் போல் தியாவிடம் பேசினான். தியா மொத்தமாக அஜய்யினுள் சுருண்டு கொண்டாள்.
மறுநாள் அவர்கள் பிராடெக்ட் நன்றாக செல்ல அஜய்க்கும் அவர்களின் டீமிற்கும் பாராட்டை தெரிவித்த கம்பெனி பங்கீட்டாளர்கள். இனி தொடர்ந்து அஜய்யை கம்பெனி பொறுப்புகளை கவனிக்க ஏற்றுக் கொண்டனர். அவன் அனைவரும் நன்றி தெரிவிக்கும் போது தியாவிற்கும் உறுதுணையாக இருந்ததாக நன்றி நவிழ்ந்தானே தவிர வேறெதுவும் பேசவில்லை.
மதிய உணவிற்காக எப்பொழுதும் போல் தியாவுடன் உண்ண அமர்ந்த அஜய்க்கு அழைப்பு வர எழுந்து பேசி வந்த பின் வினித் நீ சாப்பிடு. நான் மாயாவை பார்க்க போகிறேன் என்று வினித் அழைக்க அழைக்க பேசாமல் நகர்ந்து விட்டான்.
இதுவரை மனதில் அழுத்திக் கொண்டிருந்த வலி தியாவிற்கு கண்ணீராக வர, வினித் முன் அழ முடியாமல் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு, வினு எனக்கு பசிக்கலை. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வாரேன் என்றாள். அவன் அவள் முன் அமைதியாக இருந்து கொண்டான்.
பின் அஜய்யை அழைக்க, நான் வீட்ல இருக்கேன். வந்துருவேன் என்று அஜய் அலைபேசியை துண்டித்து விட்டான். வினித்தும் உண்ணாமல் எழுந்து சென்றான்.
தியா அஜய் அறைக்கு வந்தாள். அவன் முன்பே வந்து அவன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து தயங்கி தியா நிற்க, “சொல்லு பேப்” என மனதில் எண்ணிக் கொண்டே அவள் வந்ததையும் கவனிக்காதது போல இருந்தான்.
தியா யோசனையுடன் அவள் இடத்தில் அமர்ந்தாள்.
தியாவை அழைத்து அஜய் அவனருகே அமர வைத்து, பைல்லை கொடுத்து அவளுடன் சேர்ந்து கவனித்தான்.
“எக்ஸ்யூஸ்மி சார்” கிருஷ்ணா அழைக்க, “எஸ்” என்று அஜய் சொல்ல உள்ளே வந்த கிருஷ், பழரசத்தை இருவர் முன்னும் வைத்தான். தியா அமைதியாக இருந்தாள்.
சார், உங்களுக்கு பாரின் கால் வந்துருக்கு. “கனெக்ட் பண்ணவா?” கிருஷ்ணா கேட்டான்.
ஓ..திவ்வியா என்ற அஜய் தியாவை பார்த்துக் கொண்டே,ம்ம்..கனெக்ட் பண்ணு. பேசி வெகு நாட்களாகிடுச்சு என்று அஜய் புன்னகைத்தான்.
“உங்க கசின் தான சார்?” கிருஷ்ணா கேட்க, “அவள் எனக்கு உறவு என்பதையும் தாண்டி” என்று அஜய் ஓரக்கண்ணால் தியாவை பார்க்க, பைல்லை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தவள் அஜய்யின் வார்த்தையில் துடித்துப் போனாள். அவளுக்கு அவனை பார்க்கும் திராணி இல்லாது போக தலையை தாழ்த்த, அவள் கண்ணீர் பைல்லை நனைத்தது.
கிருஷ், காலை கட் பண்ணிடு. நானே திவிகிட்ட பேசிக்கிறேன் என்று அஜய் எழுந்து, தியா நீங்க பார்த்துட்டு இருங்க. நான் வாரேன் என்று அறையை விட்டு வெளியேறினான்.
திவ்வி? வினித்தும் ஏற்கனவே சொல்லி இருக்கான்ல்ல. “அஜய்யோட சிறு வயதிலிருந்து வளர்ந்தவளாச்சே! அவளுக்கும் அஜூவை பிடிக்குமே! அஜூவுக்கும் அவளை பிடிக்குமோ? இருவரும் காதலிக்க ஆரம்பித்து விடுவார்களோ?”
அப்ப நான்..என் காதல்..என்று அழுத தியா..”காதலா? நான் எப்படி அஜூவை காதலிக்க முடியும்?” சூழ்நிலையால் தான் மனம் மாறி என்னை தீண்டினான். மற்ற படி என்னோட அஜூ தவறானவன் இல்லை. அவனுக்கு என் மீது காதல் இருக்கு என்று கண்களை அழுந்த துடைத்து கண்ணாடியில் பார்த்தாள். அவளது ஒப்பனை களைந்து இருந்தது. சரி செய்து விட்ட வேலையை தொடர்ந்தாள்.
அஜய் உள்ளே வந்து தியாவை பார்க்க, அவள் எந்த கலக்கமும் இல்லாமல் வேலை செய்வதை பார்த்து, அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு அவளை நெருங்கி, அலைபேசியில் முத்தங்களை அள்ளி தெளித்து, “போதுமா டியர்?” பை. “லவ் யூ” என தியா பின் நின்று சொல்லி அவளை பார்த்துக் கொண்டே அலைபேசியை வைக்க, அவளோ அவனது “லவ் யூ” வில் அதிர்ந்து அவனை பார்த்தாள்.
“முடிச்சிட்டியா?” அஜய் சாதாரணமாக கேட்டுக் கொண்டே அமர, அவளால் நிலைகொல்ல முடியவில்லை. அவன் கேள்விக்கு பதிலுரைக்காது அவனையே பாவமாக பார்த்தாள்.
“கனவுலகத்துல்ல இருக்கியா தியா?” அஜய் அதட்டலாக கேட்க, சா..சா.. சார் உங்க அலைபேசியை கொடுங்களேன் என தயங்கி தியா கேட்க, “என்னுடையதா? உனக்கு எதுக்கு?”
அ..அ..அது..அது…வந்து..என தயங்கி, “ப்ளீஸ் கொடுங்க சார்” என அவனை பார்க்காது கேட்டாள்.
“உனக்கு எதுக்கு நான் கொடுக்கணும்? நான் பாஸா? இல்லை நீ எனக்கு பாஸா?” அஜய் ஏளனமாக கேட்க, தியாவால் இதற்கு மேலும் முடியாது என உதட்டை பிதுக்கி..சாரி சார், நான் கோபத்துல்ல பேசிட்டேன்.
“கோபமா?” நான் தவறானவன் தான். “என்னுடைய அலைபேசி எதுக்கு உனக்கு?” வேலைய பாரு என அஜய் பார்வையை சிரமப்பட்டு அவனது லேப் பக்கம் செலுத்தினாலும் தியாவை அழ விடாமல் அவளை அணைத்து ஆறுதலளிக்க அவன் கை பரபரத்தது.
தியா கண்ணீருடன் அழுதவாறு, சாரி சார். நான் அதிகமா பேசிட்டேன். என்னை மன்னித்து பேச மட்டும் செய்யுங்க. பேசாமல் இருக்காதீங்க. கஷ்டமா இருக்கு என அழுதாள்.
“அழாத பேப்” என அஜய் மனம் அவனை சாய்க்க, மனதை கடினப்பட்டு அடக்கி, அவளே உன்னிடம் காதலை சொல்லணும் அஜய். அமைதியாக இரு என இடிந்துரைத்தது.
தியா அலைபேசி அழைக்க, அவள் அஜய்யையே பார்த்துக் கொண்டிருந்தாள். “அஜய் திரும்பாதடா” என அவன் மனம் மேலும் கூற, கண்களை மூடி அஜய் திறந்தான்.
“முதல்ல அலைபேசியை எடு” என்று அஜய் கோபமாக சொல்ல, அலைபேசியை எடுத்த தியா அந்த பக்கம் உள்ளவன் பேச்சில் அழுகை மிக, மாமா மாமா.. என அழுதாள்.
“மாமாவா?” என அஜய் சட்டென அவளை பார்க்க,
ஒண்ணுமில்லை மாமா. “எனக்கு அப்பா வேணும்” என்று தேம்பி தேம்பி அவள் அழ, அஜய் எழுந்து அவளருகே வரும் முன் தியா மயங்கி விட்டாள்.
அந்த பக்கம் தியாவின் அத்தை மகன் தியாவின் பெயரை கூறி பதட்டமாக அழைக்க, தியாவின் அலைபேசி அஜய் கருத்தில் பதிய மறுத்தது.
“பேப்” என்று தியாவை அஜய் தூக்க, வினித்தும் கிருஷூம் பேசிக் கொண்டே உள்ளே வந்தனர். தியாவை பார்த்து அதிர்ந்து, “என்னாச்சுடா அவளுக்கு?” என அஜய்யிடம் கத்தினான் வினித்.
தெரியலடா. மயங்கிட்டா என்றான் அஜய் கண்ணீருடன்.
இப்படியே வெளிய போகாத. கிருஷ் யாருக்கும் தெரிய வேண்டாம். டாக்டரை வர சொல்லலாம் என அலைபேசியில் மருத்துவரை வினித் அழைக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவர் அங்கே வந்தார்.
தியாவை சோதித்து, அவங்க சாப்பிடாம இருந்திருக்காங்க. மனதளவில் களைப்பா இருக்காங்க. அங்கேயே அவளுக்கு மருந்து நீரை உடலில் செலுத்தினார்கள். அது ஏறிக் கொண்டிருந்தது. அஜய் தியா கையை பிடித்து அவனது கன்னத்தில் வைத்தவாறு அமர்ந்திருந்தான்.
இதுக்கு தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டீங்களா? கிருஷ் கேட்க, மற்றவர்கள் அமைதியாக இருந்தனர். வினித் தியாவை வெறித்துக் கொண்டிருந்தான்.
“இப்படி சாப்பிடாமல் இருப்பான்னு நினைக்கலையே!” அஜய் சொல்ல, காதலித்தால் போதாது சார். எந்த நிலையிலும் அவளை கண்காணிக்கணும் என்றான் கிருஷ் சினமாக.
தியா அலைபேசியை அழைக்க, எடுத்த வினித் தியா மாமாவிடம் பேசி வைத்தான்.
சற்று நேரத்தில் தியா விழிக்க, அஜய் அவ்விடத்தில் இல்லை. தியா எழுந்தவுடன் அஜய்யை தான் தேடினாள்.
வினித் அவளை கவனித்து, மனசுல்ல என்ன இருந்தாலும் சொல்லு தியூ. நீ யாருமில்லாமல் இல்லை. உனக்கு அண்ணனாக நானும், அப்பாவாக என் அப்பாவும் இருக்கோம். அதனால உன்னோட ஸ்டேட்டஸ் எங்கேயும் குறையப் போறதில்லை. நீ கஷ்டப்படுறதை பார்க்க முடியல தியூ வினித் கண்கலங்கினான்.
“வினு” என தியா அழ, நோ..தியூ, நீ அழக் கூடாது என்ற வினித் தயக்கமுடன் நாளை காலை எனக்கு பிளைட் என்றான்.
“நாளைக்கா?” தியா அழுதவாறு கேட்க, “ஆம்” என வினித் தலையசைத்தான்.
கையிலிருந்த ஊசியை கழற்றி விட்டு அதிரடியாக தியா வினித்தை அணைத்து, போகாதடா. நீயும் என்னை தனியா விட்டு போகாதா..ப்ளீஸ் என்று கதறி அழுதாள். அவள் மீண்டும் சோர்வானாள்.
“தனியாகவா? யார் சொன்னா? நீ தனியா இருக்கப் போறன்னு?” அஜய் இருக்கான். நான், ருத்ரா, உன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்கோம் என்றான் கிருஷ்.
அஜய் பெயரை கேட்டவுடன் எனக்கு யாரும் வேண்டாம். வினு என்னையும் உன்னோட கூட்டிட்டு போயிடு. எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு என்று மேலும் அழுதாள்.
அஜய் கையை கட்டிக் கொண்டு அவள் முன் வந்து நின்றான்.
அஜய்யை பார்த்து விட்டு வினித்தை பார்த்து, நானும் உன்னுடன் வாரேன். உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நீ என் அண்ணனாக பக்கத்துல மட்டும் இரு. ப்ளீஸ் என்று சிறுபிள்ளை போல் தியா மீண்டும் அழுது கொண்டே வினித்தை அணைத்தாள்.
அவளது முதுகை தடவியவாறு கிருஷ்ஷை கண்ணாலே வெளியேற சொன்னான் வினித். அவன் சென்றவுடன் தியாவை விலக்கி அஜய்யை பார்த்தான். அவன் தியாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
அஜய்யிடம் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு, அஜய்க்கு பதில் சொல்லு தியா என வினித் கேட்க, அவனது நேரடி கேள்வியில் பதில் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தாள். அஜய் அவளருகே வந்து அமர்ந்தான். தியா வேகமாக எழுந்து, “வினு போகலாமா?” என கேட்டாள்.
“தியூ” வினித் அழைக்க, ப்ளீஸ் வினு, நாம போகலாம். நான் இப்ப சென்று பேக் பண்ணா தான் காலையில போக முடியும் என்றாள் தியா.
அஜய்யை வினித் பார்க்க, அஜய் கண்ணசைக்க வினித் தியாவை பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
“வினு” என்று தியா அவன் பின் செல்ல, அவள் கையை பிடித்து நிறுத்தினான் அஜய்.
சார், என்னை விடுங்க. நான் போகணும்.
நீ போக கூடாது.
நான் போவேன்.
தியாவை இழுத்து இறுகி கட்டிக் கொண்டு, நீ போகக் கூடாது. உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியாது. நீ போகாத என செய்வது போல் நினைத்த அஜய்..நோ..நோ..என எண்ணினான்.
நீ போக முடியாது. வினு உன்னை அழைச்சிட்டு போக மாட்டான்.
எனக்காக அவன் எதுவும் செய்வான். கண்டிப்பாக நான் போக தான் போறேன் என்றாள்.
“வினு” என அஜய் சத்தமிட, அவள் பயந்து கையை உருவ, அவன் பிடியிலிருந்து வர முடியவில்லை.
வினித் உள்ளே வந்தான். வினு..”நீ தியாவை அழைச்சிட்டு போகப் போறியா?” அஜய் கேட்க, என்னால முடியாது. நான் முக்கியமான வேலையாக போறேன். தியாவை அருகே இருந்து கவனித்துக் கொள்ள முடியாது. அதனால் தான் அப்பாவை இங்கே விட்டு போறேன்.
தியூ, உனக்கு எதுவும் வேணும்ன்னா அப்பா கிட்ட கேட்டுக்கோ. ஆனால் உன்னை வீட்டில் தங்க மட்டும் அனுமதிக்க முடியாது என்றான் உறுதியாக.
வினித் அருகே ஓடியவள், “ப்ளீஸ் வினு” என கெஞ்சினாள்.
வினு, “அதெல்லாம் ஒன்றுமில்லை” என தியா சொல்ல, அஜய் சீற்றமுடன் கட்டிட்ட கையை சுவற்றில் மீண்டும் குத்த முணைய, அஜய் என்று சத்தமுடன் அவன் அப்பா தனராஜ் உள்ளே வந்தார். அவரை பார்த்து தியா மனதில் பயம் எழுந்தது. ஆனாலும் அவன் செய்கையை நிறுத்தாமல் இருக்க, வினித் அவனை தடுத்தான்.
அம்மாடி..என்று தனராஜ் அவளிடம் வர, மற்றவர்களும் வந்தனர். தண்ணீரை தியா முகத்தில் தெளித்த வினித்திற்கு அவள் விழிக்கவும் தான் நிம்மதி பெருமூச்சு.
அஜய் அமைதியாக உணவை எடுத்து வந்து அவனறையில் இருந்த படுக்கையில் அமர்ந்தான். தனராஜ் தியாவை அஜய் அருகே அழைத்து வந்தார்.
சார், “நான் வீட்டுக்கு போகணும்” என்றாள்.
வீட்ல தனியா எப்படிம்மா? நாங்க இருக்கோம். நீ சாப்பிட்டு தூங்கும்மா என்றார் அவர்.
“நான் பார்த்துப்பேன் சார்” என்று அவளது ஓரக்கண்ணால் அஜய்யையும், கையிலிருந்த உணவையும் பார்த்தாள்.
அங்கிள்..என வினித் தயங்கி தனராஜை அழைக்க, அவனை பற்றி தெரிந்த தியா வேகமாக அவருடன் எழுந்தாள்.
நீ இரு. நான் போறேன் என்று அவள் சாப்பிட்ட பின் சொல்லுங்க என அஜய் விருவிருவென வெளியேறினான்.
அஜய் “நில்லு” என வினித் அவன் பின் செல்ல, “என்ன பிரச்சனைம்மா?” ஆதரவாக தியா தலையை வருடி கேட்டார்.
தியா அமைதியாக இருந்தாள். அவள் அமைதியில் புன்னகைத்தவர் உணவை பிரித்து தியா வாய்க்கு நீட்டினார்.
“சார்” அவள் அதிர, அஜய் உன்னை காதலிப்பதை என்னிடம் சொல்லீட்டான். ஏம்மா, “உனக்கு அவனை பிடிக்கலையா?” அவன் பொண்ணுங்களுடன் சுற்றுவான் தான். எல்லாம் அவளால் தான். இல்லைன்னா என் பிள்ளையிடம் குறை கண்டறியவே முடியாது.
ஒரு தகப்பனாக நான் அவனுடன் பழகியது கூட இல்லை. என் சூழ்நிலை தான் காரணம். சட்டென அவர் தியா கையை பற்றி, நீ மட்டும் அவனை விட்டு போகாதம்மா. அவன் எல்லாமுமாய் உன்னை பார்க்க ஆரம்பித்து விட்டான். நீ போனால் அவன் தாங்க மாட்டான். உன் பார்வையிலே அவனை உனக்கு பிடிச்சிருக்குன்னு தெரியுது. உன்னை யாரும் ஏதும் பேச மாட்டாங்க. அதை நாங்க பார்த்துக்கிறோம்மா என கண்கலங்கினார்.
சார், ப்ளீஸ் அழாதீங்க. எனக்கு அவரை பிடிக்கும். காதலும் இருக்கு. ஆனால் அவர் வேற பொண்ணை தான் காதலிக்கிறார்.
“என்னம்மா சொல்ற?” அவர் கேட்க, ஆமா சார்..சற்று நேரம் முன் தான் வேற பொண்ணுகிட்ட லவ்வை என் முன் வைத்தே கூறினார். ப்ளீஸ் சார், வினுவை என்னையும் பாரின் அழைச்சிட்டு போக சொல்லுங்களேன்.
இல்லம்மா, “நீ ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்க?”
நான் கேட்டேன் சார். நான் அவரை காதலிப்பதை அவரிடம் சொல்லாதீங்க என்றாள்.
சரிம்மா, “முதல்ல சாப்பிட்டு” என்று உணவை தியாவிற்கு அவர் கொடுக்க, நானே உண்கிறேன் சார்.
எனக்காகம்மா..என அவர் கண்கலங்க ஊட்டி விட்டார். அவர் மனது நிறைந்த மகிழ்ச்சியுடன் அவளது கன்னத்தை கிள்ளினார்.
நீ படுத்துக்கோம்மா. நான் வாரேன் என்று அவர் செல்ல, சோர்ந்து கண்களை மூடியும் தியாவிற்கு அஜய் பற்றிய எண்ணமே ஓடியது. எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
அஜய்யுடன் தனராஜ் உள்ளே வந்தார்.
ஏய், லூசு தியூ..அஜய் திவ்யாவிடம் பேசலை. என்னிடம் தான் பேசினான். உன் காதலை அவனிடம் சொல்ல வைக்க தான் செய்தான். இதை கேளு என வினித் போட்டு காட்ட, அஜய் அமைதியாக தலையை பிடித்து அமர்ந்தான்.
வினித் போட்டதை கேட்ட தியாவோ அஜய்யின் இன்றைய செய்கைகள் அனைத்தையும் ஓட விட்டு புன்னகைத்தாள்.
அங்கிள், “நீங்க வாங்க” என வினித் அவரை வெளியே அழைத்து சென்றான்.
“அஜய்” தியா அழைக்க, தலையை கவிழ்ந்து இருந்த அஜய் நிமிர்ந்தான். அவன் கண்ணீரை பார்த்து அவனிடம் தியா வேகமாக வர சோர்வில் தடுமாறியவளை எழுந்து ஓடி அஜய் அவளை பிடித்தான்.
தியா அவனை பார்க்க, “ஏதும் சொல்லி விடுவாளோ?” என எண்ணி வேகமாக அவளை விட்டு நகர்ந்தான். ஆனால் தியா அவனை இழுத்து அணைத்து கொண்டாள்.
“பேப்” ஏக்கமுடன் அஜய் அழைக்க, பேசுறதை கேளு அஜூ. எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு இன்னும் நேரம் வேண்டும். புரிஞ்சுக்கோ..ப்ளீஸ் என தியா கண்ணை சுருக்கினாள்.
மூன்று நாள் பின் என்னை விட்டு போக மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு என்றான் அஜய்.
ஓ.கே. காதலிக்க முடியலைன்னா உன்னோட தோழியாக எப்பொழுதும் உடன் இருப்பேன் என பிராமிஸ் செய்து கொடுக்க, இதாவது செய்தாளே என அமைதியானான் அஜய்.
“நீ ஓய்வெடு” என அவளை தூக்கி படுக்கையில் கிடத்தி, “தூங்கும்மா” என்று அவளருகிலே அமர்ந்து கொண்டான். அவர்களை பார்த்து மற்றவர்கள் புன்னகையுடன் நகர்ந்தனர்.
தயாராகி வந்த அஜய் தியாவை பார்த்து குறும்புடன், இந்த குளிரிலும் மேடமும் வியர்க்குது. கஞ்சா அடிச்சீங்களா? என கேட்க, “வாட்? கஞ்சாவா? நானா?இடியட்..முதல்ல வா” வினுவை பார்க்கணும். நானே டென்சன்ல்ல இருக்கேன். “நீ என்ன பேசிட்டு இருக்க?”
சரி சரி..கார்ல்ல ஏறுங்க மேடம் என அஜய் சொல்ல, இருவரும் காரில் ஏறினார்கள். சற்று நேரத்தில் ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்தனர்.
வீராவும், வினித்தும் பேசிக் கொண்டிருந்தனர். காரில் வரும் போது கூட பதட்டம் மட்டும் தியா மனதில். ஆனால் இப்பொழுது வினித் கையில் லக்கேஜை பார்க்கவும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அஜய்க்கு முன்னே அவர்களை நோக்கி அழுது கொண்டே ஓடிய தியா, அங்கிள்..வினுவை போக வேண்டாம்ன்னு சொல்லுங்க. கஷ்டமா இருக்கு என சத்தமாக அழுதாள். எல்லாரும் அவர்களை வேடிக்கை பார்க்க, அஜய் அவர்களை நோக்கி வந்தான்.
தியூ, நான் சீக்கிரம் வந்திருவேன். அழாத என்று வினித் தியாவை ஆறுதலளிக்க, அவள் அழுகை நிற்கவில்லை.
தியாம்மா, “எதுக்கு இந்த அழுகை?” வினு அவன் வேலையை முடிச்சிட்டு வந்துருவான். நமக்காக தான போறான் என்று வீரா சொல்ல, தியா அதை கண்டுகொள்ளாமல் அழுகையை தொடர்ந்தாள்.
ஆனால் அஜய் அதை கவனித்து வினித்தை சந்தேகமாக பார்த்து, “நீ கண்டிப்பாக போகணுமா?” அஜய் கேட்க,
“ஆம்” என்று தலையசைத்து, தியா உன் பொறுப்பு அஜய். நல்லா பார்த்துக்கோ என்று வினித் தியாவை நிமிர்த்தி, அஜய் உன்னுடன் இருப்பான். நான் வந்துருவேன். நீ அழக்கூடாது..என்று வினித் தியா கண்ணை துடைத்து விட்டு, ஹாப்பியா எஞ்சாய் பண்ணு. அப்பா அடிக்கடி உன்னை வந்து பார்த்துப்பார். சில நாட்கள் என்னால கால் பண்ண முடியாது. கவனமா இரு என்று தியா கையை அஜய் கையில் கொடுத்து விட்டு, அஜய்…அப்பாவையும் தியாவையும் நீ தான் பார்த்துக்கணும் என்று அழுத்தமாக கூறி விட்டு வினித் நகர்ந்தான்.
டேய் நில்லுடா, “எனக்கு மேரேஜ் பண்ணனும்ன்னு சொன்ன?” நீ இல்லாம நான் பண்ண மாட்டேன் தியா கத்தினான்.
ஹ..அத என் நண்பன் அஜய் பார்த்துப்பான் வினித் சொல்ல, வினித்திடம் மூச்சிறைக்க ஓடி வந்து, நீ போகாத. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து உன்னை ஒரு நாள் கூட பார்க்காமல் இருந்ததேயில்லை. போகாதா..ரொம்ப கஷ்டமா இருக்குடா..என வினித்தை கட்டிக் கொண்டு தியா அழ, சிலர் நடப்பதை வைரலாக்கிக் கொண்டிருந்தனர்.
அஜய் தியாவிடமிருந்து, பேப் அவன் போயிட்டு பத்திரமாக வருவான். வா..நாம போகலாம். எல்லாரும் வீடியோ எடுக்குறாங்க என்றான்.
அஜூ..வினுவை நான் பிரிந்து இருந்ததேயில்லை. ஏதாவது மீட்டிங் என்று போனால் இரவு ஒரு மணியானாலும் என்னை பார்த்துட்டு தான் வீட்டுக்கு போவான் என தியா அழ, வினித் அவளை அணைத்து..தியூ ரொம்ப முக்கியம் என்பதால் தான் போறேன். ப்ளீஸ்டா அழாத..வினுவும் கண்கலங்க பேச, அஜய் தியாவை இழுத்து அணைத்து வினித்திடம் கிளம்ப சொல்லி கண்ணசைக்க, கண்களை துடைத்துக் கொண்டு வினித் சென்று விட்டான். தியா அஜய்யை அணைத்து கரைந்தாள்.
பேப், “போகலாமா?” இன்று விடுப்பு எடுத்துக்கோ. அங்கிள் தியாவை பார்த்துக்கோங்க என்று அஜய் சொல்ல, “அங்கிள் வினு எப்ப வருவான்னு ஏன் சொல்ல மாட்டேங்கிறான்?” தியா பரிதவித்து கேட்டாள். அஜய் பார்வை கூர்மையாக வீராவை நோட்டமிட்டது.
கம்பெனி வேலையை முடிச்சிட்டு வந்துருவான்டா. உனக்கு அங்கிள் இருக்கேன்டா..என தியா தோள் மீது கையை போட்டு அவளிடம் பேசிக் கொண்டே செல்ல, அஜய் அவர்களை பின் தொடர்ந்தான்.
அல்லீ நகரத்தில்..டேய், “என்னால முடியல” என சுருதி தலையில் கை வைத்து அமர, கீர்த்தனா சிரித்துக் கொண்டிருந்தாள். அனைவரும் மகிழ்வுடன் விக்ரம் சுவாதியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அதுக்கு நான் என்னம்மா பண்றது? உன் ஆளை வர வைத்து நீயும் கொஞ்ச வேண்டியது தான?” சுவாதி பேச, “அடியேய் உனக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லையா?” சுருதி பகீரங்கமாக கேட்க, இதுககிட்ட மாட்டிகிட்டு அய்யோ..என நட்சத்திரா எழுந்தாள்.
சிம்மா புன்னகையுடன் அர்சுவை தூக்கி கொண்டு, அம்மா நாங்க வெளிய போயிட்டு வாரோம் என சிம்மா செல்ல, பரிதியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, விக்ரம் சுவாதியை பார்ப்பதை கண்டு, போச்சுடா..கீர்த்து வா..நாம ஓடிறலாம். எசகுபிசகாகிடாமல் என சுருதி கீர்த்தனாவை இழுத்து அறைக்குள் ஓடினாள்.
டேய் படவா, இங்க அம்மான்னு ஒருத்தி இருக்கேன் அன்னம் கரண்டியுடன் இருவரையும் பார்க்க, விக்ரம் அவரை அணைத்து சமாளிக்க, இப்பொழுது சுவாதி அவனை இமைதட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்களுடன் நேரம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
அன்றிரவு பரிதி தமிழின் தாத்தாவை அலைபேசியில் அழைத்து குலதெய்வம் கோவிலுக்கு செல்லவென அழைத்தார். அவரும் வருவதாக சொல்ல, அன்னம் பரிதி இருவரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்தனர். அனைவரும் வருவதாக ஒத்துக் கொள்ள, சிம்மாவிடமும் விக்ரமிடமும் மகிழ்வுடன் அதனை பகிர்ந்து கொண்டனர்.
தியாவை தவிர மற்றவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் நன்றாகவே சென்றது. தியாவை தேற்றும் முயற்சியில் அஜய் அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
ஆகாய காதலி தன் கருநிற உடலை விலக்கி சிரித்த முகமாக தன் சூரியனை காதலுடன் வரவேற்றாள். மனதை சுமந்த வலி அகன்று,
“எப்ப நீ என்ன பார்ப்ப
எப்ப என் பேச்ச கேட்ப
எப்ப நா பேச கெட்டப் பையா
எப்படா கோபம் குறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நா பேச கெட்டப் பையா…..
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்னு பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா?”
என்ற பாடல் தொலைக்காட்சியில் ஒலிக்க, அதனை ரசித்து முணுமுணுத்துக் கொண்டே துள்ளி குதித்து தயாராகிக் கொண்டிருந்தாள் தியா.
தியா..தியா..என புழலரசன் சத்தம் கேட்டு கதவை திறந்தவள் அதிர்ந்து தன் நண்பர்களை பார்த்தாள்.
தியா கதவை திறக்கவும், ஹாப்பி பர்த்டே டூ யூ ..என அனைவரும் பாடிக் கொண்டே ரோஜா இதழ்களை அவள் மீது கொட்டினர். மனீஷா தியாவை அணைத்து “ஹாப்பி பர்த்தேடி டி” என்றாள்.
மனு, நான் வந்து..தியா பேச முடியாமல் தயங்கி அஜய் அறையை பார்த்தாள். இவர்கள் கொடுத்த சத்தத்தில் அஜய் அறை சன்னலை திறந்து தியாவை பார்த்து உறைந்து நின்றான்.
அரக்குநிற புடவையும் தங்க நிற பார்டரும் கலந்த பட்டுப்புடவையில் தலையில் குண்டு மல்லிகையை பூட்டி அசத்தலாக இருந்தாள்.
கேட்டில் சத்தம் கேட்க, அனைவரும் அங்கே பார்த்தனர். கையில் பூச்செண்டுடன் ஒருவன் வாட்ச் மேனிடம் மண்றாடிக் கொண்டிருந்தான்.
ஏய், “யாருடா நீ?” என அஜய் அம்மா சினமுடன் கேட்க, மேம்..”தியா மேம் இருக்காங்களா?” அவன் கேட்க, அதான் அந்த கோஷ்டியோட என தியாவை பார்த்து அஜய் அம்மாவை உறைந்து பார்த்தார். அவ்வளவு அழகாக இருந்தாள் தியா.
அவன் உள்ளே ஓடி வந்து, “நீங்க தான் தியாவா?” என கேட்டான்.
ஆமா, “இவள் தான் தியா” என அமிர்தன் சொல்ல, இந்தாங்க மேம்..இது உங்களுக்காக. அப்புறம் இதுவும்..என அவன் பூச்செண்டையும் ஒரு கவரையும் கொடுத்தான்.
தியா யோசனையுடன் நிற்க, அதை வாங்கிய மனீஷா..ஹேய் வினித் அனுப்பி இருக்கார். பர்த்டே பேபி..உன்னோட பர்த்டேவ மட்டும் மறக்காம அனுப்பிடுறார் என கிண்டலடித்தாள்.
மனு..”அது என்ன?” என்று புழலரசன் அந்த கவரை பிரித்து பார்த்து வயிற்றை பிடித்து சிரித்தான். அவன் தலையில் அடித்த கீரன், “எதுக்கு இப்படி வயித்த பிடிச்சிட்டு இருக்க? என்ன அது?” என அவன் பார்த்து புன்னகைத்தான்.
“உன்னோட பானி பூரியா?” பாரின்ல இருந்து அனுப்பி இருக்கார். அய்யோ சீனியர் வேற லெவல்.
அய்யய்யோ..”பாரினிதா? சாப்பிடக் கூடியதா? எக்பியரி ஆகி இருக்கப் போகுது” என அமிர்தன் கேலியாக சொல்ல, சார்..இப்ப தயார் செய்து வாங்கிட்டு வந்துருக்கேன். இது சாரோட ஆர்டர் என்றான் கொண்டு வந்தவன்.
ஓ…ஹோ..என அனைவரும் சத்தமிட, தேங்க்ஸ் மேம் .ஹாப்பி பர்த்டே மேம் என்று அவன் கிளம்பினான். தியா புன்னகையுடன் அதனை பார்த்து விட்டு நண்பர்களை பார்த்தாள்.
“என்ன பாக்குற? தயாராக தான இருக்கிற?” இன்று முழுவதும் எங்களுடன் தான் என்றான் கீரன்.
“என்ன?” தியா அதிர, ஆமா..இவனுக நேற்று வாப்பா கிட்ட பர்மிசன் வாங்கிட்டாங்க. இன்று முழுவதும் உன்னோட தான் என மனீஷா துள்ளலுடனும் மகிழ்ச்சியுடனும் தியா கன்னத்தில் முத்தமிட்டாள்.
தியாவிற்கு இவர்களது அன்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவள் கண்கள் அஜய்யை ஏறிட்டது. ரசித்து பார்த்த அஜய் பார்வை சினமாக மாறி இருந்தது.
எல்லாருக்கும் தியா பர்த்டே தெரிந்திருக்கு. “நம்மிடம் இவள் சொல்லவில்லையே!” என கோபம். இதில் இவள் நண்பர்கள் வினித்தையும் தியாவையும் சேர்த்து பேசியது வேற சீற்றத்தை கொண்டு வந்திருந்தது.
அவன் கோபத்தை கவனித்து அனைத்தையும் ஓட்டி பார்த்தவளுக்கு அவன் கோபம் புரிந்து, ஏய்..”என்ன?” வினித் என்னோட வளர்ந்தவன். அவன் எனக்கு அண்ணன். “சும்மா பேசாதீங்கடா” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
“அண்ணனா? அண்ணனை பிரிந்தா அவர் பாரின் போன போது அழுத?”
டேய் லூசு, அதான் சொன்னேன்ல்ல. அவன் என்னுடன் வளர்ந்தவன். தினமும் என்னை பார்க்க வந்துருவான். கஷ்டமா இருந்தது அழுதேன்.
ஆமா..ஆமா..இவளுக்கு ஒருத்தன் பத்தாதுல்ல. “தினமும் ஒருவன் வேணும்ல்ல?” அஜய் அம்மா வார்த்தைகள் தியாவை குத்தி கிழித்தது. அஜய் கவனிக்கிறான் என தெரியாமல் அவன் அம்மா பேச,
“என்ன பேசுறீங்க? நீங்களும் ஒரு பொண்ணு தான?” ச்சே..என மனீஷா கோபமாக பேசினாள்.
தியா கண்கள் கலங்கியது. “எதுக்கு மனு கோபப்படுற? இவங்கள மாதிரி கீழ்த்தரமான பொம்பளைய நான் பார்த்ததேயில்லை தெரியுமா?” ச்சீ..சொத்துக்காக தான் இவங்க அஜய் சார் அப்பாவை கல்யாணம் பண்னி இருக்காங்க. இவங்க பேசுறாங்க. அதுவும் உன்னை.
“எங்க தியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” அவள மாதிரி தங்கமான பொண்ணை பார்க்கவே முடியாது. அஜய் சார் அம்மா என்பதால் உங்களை விடுறோம். உங்க வேலையை பார்த்துட்டு போங்க. இல்ல மரியாதை கெட்டிரும்.
“என்னடா சொல்ற?” மனீஷா கேட்க, ஆமாடா..இவங்க பாசமெல்லாம் வேஷம் தான். அஜய் சாரும் அவங்க அப்பாவும் தான் பாவம். ஏமாந்துட்டு இருக்காங்க என்றான் புழலரசன்.
“தேவையில்லாமலா? அவ உன்னை எவ்வளவு கேவலமா பேசிட்டா?” இது மட்டும் வினித் சீனியருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.
ஆமா, அவன் பெருசா கழட்டிடுவான் பாரு. சின்ன பையன் சின்னப்பையன் மாதிரி இருக்கணும் இல்லை உன்னை சும்மா விட மாட்டேன்.
போதும் அரசா, நாம போகணும்ன்னு சொன்னேல்ல. வா..போகலாம் என்ற தியா உள்ளே சென்று பூச்செண்டை வைத்து விட்டு அவளது அலைபேசியை எடுத்து வெளியே வந்து அஜய்யை பார்த்தாள். அவன் அசைவில்லாமல் அங்கேயே நிற்பதை கண்டு, மனம் பதறி அவன் வீட்டின் முன் சென்றாள்.
“இவ்வளவு பேசிட்டு இங்க எங்க வர்ற? பத்தினி வேசம் போடுறியா?” என மேலும் தகாத சொற்களால் அஜய் அம்மா பேச, அஜய் அம்மாவை அடிக்க துள்ளிக் கொண்டு வந்தான் கீரன்.
கீரா, வேண்டாம்..என தியா அவனை தடுத்து விட்டு அலைபேசியை எடுத்தாள்.
காலையிலே பார்க்க கூடாத ஆளை பார்த்து நேரம் போச்சு. வாங்க போகலாம். தியா இன்று நீ அலைபேசியை எடுக்கவே கூடாது என தியா அலைபேசியை பிடுங்கிய அரசன் அதை அணைத்து விட்டு, வாங்க போகலாம் என்று கிளம்ப, ஒரே ஒரு கால்டா..தியா கெஞ்ச, நோ..நோ..என அவளை வம்படியாக இழுத்து சென்றனர்.
அன்று முழுவதும் நண்பர்களுடன் சுற்றினாலும் அவள் மனமென்னவோ தன் மன்னவனின் வலி நிறைந்த முகத்திலே நிலை கொண்டது. நண்பர்களுக்காக மகிழ்ச்சியாக இருப்பது போல் நடந்து கொண்டாள் தியா.
மனீஷாவும் புழலரசனும் தியாவை சில பொருட்களுடன் வீட்டில் விட்டு சென்றனர்.
வீட்டினுள் சென்ற தியாவிற்கு அஜய்யை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் கதவை அடைத்து ஹாலில் விளக்கை ஏற்றி, பொருட்களை ஓரமாக வைத்து விட்டு சோபாவில் பொத்தென விழுந்தாள்.
ஏதோ வாடையில் சட்டென எழுந்த தியா அஜய்யை பார்த்து திகைத்து நின்றாள்.
அஜய்யை சுற்றி நிறைய மது பாட்டில்கள் இருந்தது. அனைத்தும் காலியாக இருந்தது.
அய்யோ..அஜூ இப்படியா குடிப்பீங்க? என அவனருகே செல்ல, மதுவின் குப்பென்ற நெடியில் தியாவிற்கு உமட்டிக் கொண்டு வந்தது.
செய்வதறியாது திகைத்த தியா, அஜய்யை தூக்க முயன்று தோற்றாள். அவன் நினைவு மொத்தமும் அகன்று மயக்கத்தில் இருந்தான்.
அஜய்யை தரதரவென இழுத்து கீழிருக்கும் குளியலறையில் சவரின் கீழே போட்டு திறந்து விட்டாள். தண்ணீர் விழ, தியா அவன் விழிக்க காத்திருந்தாள். அஜய் விழிக்காமல் இருக்க, பயந்து அவனது சட்டையை களைந்து வாடையை போக்க எண்ணி..அவளது ஷாம்பூ பாட்டிலை எடுத்து அவன் தலையில் தேய்த்து விட்டு, சோப்பையும் போட்டு விட்டாள்.
வாடையும் அகன்று விட, அவனது முகத்தில் நீர் படுமாறு சவரின் தண்ணீரை அவள் அடிக்க, மூச்சு பெரியதாக விட்டு விட்டு அஜய் விழித்தான். அவன் கண்கள் சிவந்து அவன் நிலையை காணவே தியாவின் உள்ளம் தகித்தது.
அஜூ, “இப்ப நீங்க ஓ.கே வா?” என பதட்டமாக கேட்டுக் கொண்டே அவனை அணைத்தாள். அஜய்க்கு சுயம் வர வர அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.
தியா அஜய்யை விலக்க, அவன் இறுக்கம் அதிகமானது. இருவரும் நனைந்திருக்க, அஜூ..ப்ளீஸ் என அவள் கெஞ்சவும் அஜய் அவளை விலக விட்டான்.
எழுந்திருங்க என அவனை தூக்கி விட, அஜய் நிற்க கூட தடுமாறினான்.
அய்யோ..பாத்து..பாத்து..என அவனது கையை அவளது தோளில் போட்டு தாங்கி அவனை சோபாவில் அமர வைத்து விட்டு, நான் ஆடை மாற்றி விட்டு வாரேன் என்றாள்.
அஜய் கண்கள் சுவர்கடிகாரத்தை பார்த்து மீண்டது.
அதுக்கு நேரமில்லை என குலறலுடன் சொல்லிய அஜய்யை பார்த்து, போதை இன்னுமா தெளியலை. “என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? அப்படி என்ன குடி வேண்டி இருக்கு? குடித்தால் உடலுக்கு எத்தனை பிரச்சனை வரும். உங்களுக்கு தெரியாதா?” என பொரிந்து தள்ளினாள்.
அஜய் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
நான் திட்டிட்டு இருக்கேன். “என்ன சிரிப்பு?” என அவனை அடிக்க வந்தாள். அவள் கையை பிடித்த அஜய் அவளை இழுத்து தன் மேலே போட்டுக் கொண்டு, லவ் யூ பேப்..ஹாப்பி பர்த்டே பேப் என்றவன் கண்ணில் கண்ணீர்.
“என்னாச்சு அஜூ?” என அவன் கண்ணீரை தியா துடைக்க, அவளது கையை பிடித்து அவளது உள்ளங்கையில் முத்தமிட்டு, லவ் யூ பேப். எனக்கு உன் பர்த்டே தெரியல. என் அம்மாவும் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.
இதெல்லாம் எதிர்பார்க்காம நடந்து போச்சு. சாரி பேப். உனக்காக காலையிலிருந்து இங்கேயே காத்திருக்கேன். என்னோட பேப் பர்த்டேவ என்னால கொண்டாட முடியல என போதையிலே பேசிக் கொண்டே அழுதான்.
அஜூ..என அவனை நேராக பார்த்து, “இதுக்கெல்லாமா அழுவது?” இருங்க வாரேன் என்று அவனை சோபாவில் படுக்க வைத்து விட்டு, எலுமிச்சை சாற்றை அவனை குடிக்க வைக்க, அவன் சட்டையில்லாமல் இருக்க, அங்கிருந்த போர்வையை அவள் எழுக்க, அதை தடுத்த அஜய் அவளது முந்தானையை பிடித்து இழுத்து அவளையும் அவனுடன் சேர்த்து போர்த்திக் கொண்டான். இருவரின் கண்களும் காதல் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
முதலில் சுதாரித்தது தியா தான். தன் முந்தானையை எடுத்து விட்டு அவனிடமிருந்து விலகி நகர்ந்து நின்றாள். அஜய்யின் பார்வை உச்சி முதல் பாதம் வரை தியாவை நின்று நின்று ரசித்தது. வேகமாக அங்கிருந்து சென்று பார்சல் ஒன்றை எடுத்து வந்தாள் தியா.
அதில் பர்த்டே கேக் இருந்தது. அஜய் போர்வையால் மூடி இருக்க, கேக் கட் செய்ய தயார் செய்து கொண்டிருந்தாள் தியா. அஜய் கண்கள் அவளை விட்டு விலகவேயில்லை.
இருவரின் தனிமை, அஜய்யின் காதல் பார்வை தியாவின் இதயத்தை துளைத்து காதல் பூவை பூக்க செய்து மணம் பரப்ப வைத்தது.
தியா தயங்கி அஜய்யை நாணத்துடன் பார்க்க, அவன் புன்னகையுடன் அருகே அமர சொல்லி கண்ணை காட்டினான். அவன் பார்வையில் கட்டுண்டு அவளும் அருகே அமர, இருவரும் சேர்ந்து கேட் வெட்டி மாறி மாறி ஊட்டிக் கொண்டனர்.