அத்தியாயம் 50

ஜூன்ஸ் அணிந்து கருப்பு டாப்புடன் அவிழ்க்க முடியாத ஏறிட்ட கொண்டையிட்டு இரு கை விரல்களையும் வாய்க்குள் விட்டு விசிலடித்துக் கொண்டே மேல் தளத்தின் உச்சியில் நின்ற ரித்திகா, அனைவரும் அவளை கவனிப்பதை பார்த்து கீழே குதித்து, அவள் கையில் வைத்திருந்த கண்ணாடி தம்ளரால் தீபுவை வைத்திருந்தவன் தலையில் தாக்க, அவன் இரத்தத்துடன் கீழே விழுந்தான்.

எல்லாரையும் போல் ராணியும் ரித்திகாவை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிடமும் தாமதிக்காது வேகமாக தீபுடன் வெளியேற இருக்கும் போது, இடையே வந்த ஒருவனிடம், சார்..எனக்கு சண்டையெல்லாம் வராது. எங்களை போக விட்ருங்க என அவனிடம் சொல்ல, அவன் ரித்திகாவையே பார்க்க, என்ன இப்படி பார்க்கிறான் என்று சார், இங்க வாங்களேன் என்று ரித்திகா அவனிடம் குலைந்து பேசினாள்.

ஏய், “என்னடி பண்ற? விஜயசாந்தி மாதிரி வந்துட்டு சிலுக்கு மாதிரி பேசுற?” உதிரன் மனம் கொதித்து வெளியே பேச, பெரியவர்கள் அவனை முறைத்தனர்.

விக்ரம் உதிரனை பார்த்து சிரித்தான். ரித்திகாவின் குலைவில் கட்டுண்டவன் போல வந்த அவன் கையை பிடித்து திருகி ஓங்கி எத்தினாள். அவன் நேராக தூணில் பலமாக இடித்து மயங்கினான்.

“ரம்யா” என ரித்திகா சத்தமிட்டு கொண்டே ஓடி வர, ரம்யா தீபுவை வாங்கி வெளியே ஓடினாள். இவளை பிடித்து கட்டிட்டு அவளையும் அந்த குட்டிப் பொண்ணையும் தூக்கிட்டு வாங்கடா என்று ராணி சத்தமிட்டாள்.

“நிறுத்து” என்று ரித்திகா கத்த, அனைவரும் ராணியை பார்த்தனர்.

மகிழ் இந்தா..என்று வாட்டர் பாட்டில் ஒவ்வொன்றாக மூன்றை தூக்கி போட, “இது எதுக்கு?” என ராணி கேட்க, “என்னோட தம்பி தாகம் தணிக்க” என ரித்திகா அழுத்தி சொல்ல, மகிழன் புரிந்து கொண்டு மணமேடையில் ஏறினான்

ராணி, “துப்பாக்கியை போடு” சுவாதி அவளுக்காக கூறுவது போல் கத்த, செய்வதறியாது விழித்த ராணியோ நட்சத்திராவை பார்த்து, அந்த பையனை போட்டு தள்ளு. டேய் பசங்களா நீங்க..என்று துப்பாக்கியை அடியாட்களிடம் தூக்கிப் போட்டாள். அதை எகிறி பிடித்த ரித்திகாவால் எதுவும் செய்ய முடியல. அவள் துப்பாக்கியை வைத்திருக்க அனைவரும் அவளிடம் பிடுங்க வந்தனர்.

“என்ன வேடிக்கை?” என வாட்டர் பாட்டிலை சுவாதி மகிழனிடம் வாங்கி தண்ணீரை ஊற்றி ஊற்றி அக்னியை அணைக்க, அவனும் ஊற்றி முற்றிலுமாக அணைத்தனர் சிறுகங்கல் கூட இல்லாமல்.

அண்ணி, என்னிடம் போடுங்க சுவாதி கத்த, ரித்திகா அவர்களுடன் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சமயம் மகிழன் அவளிடம் வர, ரித்திகா துப்பாக்கியை சுவாதியிடம் தூக்கி போட்டாள். அவள் அதை பிடித்து விட்டு “மாமா” என கத்திக் கொண்டே துப்பாக்கியை மேல் நோக்கி அர்சுவை கட்டியிருந்த கயிற்றில் சுட்டாள்.

அர்சு மயக்கத்தில் கீழே விழ, “கண்ணா” என்று நட்சத்திரா எழுந்து அர்சுவை நோக்கி ஓடினாள். சுவாதி திட்டத்தை அறிந்த சிம்மா, அவள் அழைத்த மறுநொடி அவ்விடம் பாய்ந்து ஓடி தன் மகன் கீழே விழாமல் தன் கரங்களால் பிடித்து கீழே விழுந்து பிரண்டு அர்சுவை காத்தான் தந்தையாக.

நட்சத்திரா இருவரையும் நோக்கி ஓடி வர, அவளை இழுத்து அவளது கூந்தலை இறுக பற்றிய ராணி “எல்லாரும் ஏமாத்தீட்டீங்க” என கத்திக் கொண்டே நட்சத்திராவை கண்டவாறு அடித்தாள்.

ஏய்..சிம்மா பதற, அர்சு விழித்து அழுதாள்.

கமான்டோ டார்லிங்..அவ வேண்டாம். எனக்கு நீ வேணும் என அவள் பைத்தியம் போல் கத்தி நட்சத்திராவை தாக்க, மயங்கி சரிந்தாள் நம் சிம்மாவின் காதல் மனைவி ஸ்டார்.

“ஸ்டார்” என்று அவனும் மற்றவர்களும் ஓர் அடி எடுத்து வைக்க, அவள் பார்வையில் அடியாள் ஒருவன் கத்தியை அவளிடம் நீட்டினான்.

ஓர் அடி எடுத்து வச்சீங்க. இவளை இங்கே கிழித்து கொல்லுவேன் என்று அவளது கையில் இருந்த கத்தியால் நட்சத்திராவின் கையில் அழுத்தமாக கீற, இரத்தம் வழிந்தது. அனைவரும் பதற, ராணி இரத்தத்தை பார்த்து பயங்கரமாக சிரித்தாள். அவள் இவ்வுலகிலே இல்லை

வாங்க, இதுக்கு மேல அங்க யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாம தான் உதவிக்கு போகணும் என்று விக்ரம் மஹாலின் முன் வந்து, சைகையால் சிம்மாவை அழைக்க, அர்சுவை தூக்கிக் கொண்டு சிம்மா நகர, அவளுடைய அடியாட்கள் சிம்மாவை தடுக்க வந்தனர். எதுவுமே ராணியின் கருத்தில் பதியவில்லை. நட்சத்திராவின் வலியில் மகிழ்ச்சியை கண்டவள் இவ்வுலகை மறந்தாள்.

விக்ரம் கண்ணசைக்க, பசங்களும் அவர்களின் அப்பாக்களும் அடியாட்களுடன் சண்டை போட, அண்ணா அண்ணி..ரித்திகா கண்ணீருடன் சிம்மாவை பார்க்க, ஷ்…என்ற விக்ரம், சிம்மாவை இழுத்து வெளியேறினான்.

எல்லாரும் வீட்டுக்கு போங்க. ரம்யா பாப்பாவோட எங்க இருக்கான்னு பார்த்து கூட்டுட்டு போங்க என்று தமிழினியன் திலீப் நீ எல்லாரையும் வீட்ல விட்டுரு.

திலீப், வாங்க என அவன் அனைவரையும் அழைத்து ரம்யா, தீபுவை தேடி செல்ல, தீபுவுடன் மறைந்து அமர்ந்திருந்த ரம்யா குசுகுசுவென பேசும் சத்தம் கேட்டு, அனைவரும் அவர்களிடம் வந்தனர்.

மாமா..என தீபு திலீப்பை அணைத்தாள்.

“எல்லாரும் நல்லா இருக்காங்களா?” ரம்யா கேட்க, அதை விக்ரமும் மத்தவங்களும் பார்த்துப்பார்.

நீ வா..திலீப் அழைக்க, “எங்க?” ரம்யா கேட்டாள்.

“உங்க அன்னம்மா வீட்டுக்கு?”

இல்ல, நான் ஸ்கூல்லு போறேன் என்று அவள் நகர, அவளை நிறுத்தி..வா என்னுடன் என்றான் திலீப்.

பிடிவாதம் பண்ணாத ரம்யா. வா..நானும் வாரேன் ரித்திகா சொல்ல, அவளை பார்த்து புன்னகைத்த ரம்யா..”க்யூட்டி செம்ம க்யூட் நீங்க?” என ரித்திகா கன்னத்தை கிள்ள, “எல்லாமே அவங்க பிளான் தான்” என்றாள் சுவாதி.

“அதான் தெரியுமே!” ரம்யா அவளை அணைக்க, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த திலீப் காரில் ஏறினான். எல்லாரும் ஏற, டிரைவர் சீட்டினருகே மட்டும் காலியாக இருக்க, ரம்யா சுருதிய அமர சொல்லி கண்ணை காட்டினாள்.

நோ..அவள் சொல்ல, சுவாதியை பார்க்க அவள் வேறு பக்கம் பார்ப்பது போல் பாவனை செய்ய, க்யூட்டி..என ரித்திகாவை பார்க்க, ஏற்கனவே மாமா கோபமா இருக்கார். இது வேறையா விட்ரு தாயே! என கை கூப்பினாள்.

வரம் அருள்கிறேன் என்று சொல்லி கையை காட்டி விட்டு ரம்யா திலீப் அருகே அமர்ந்தாள்.

“அவங்களுக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயமா இல்லையா?” திலீப் கேட்க, இனி அவளை பிடிச்சிருவாங்க. “அவள் இருந்த கோலம் தான் தெரியுமே!” அண்ணா பார்த்துப்பார் என்றாள் ரித்திகா.

ம்ம்..என்று அவன் சொல்லி காரை விரட்டினான் திலீப்.

நட்சத்திரா கையிலிருந்த இரத்தத்தை பார்த்து ராணி பைத்தியம் போல் நடந்து கொள்ள, மற்றவர்கள் அவளது அடியாட்களை தடுத்துக் கொண்டிருந்தனர். நட்சத்திரா மயக்கம் தெளியவேயில்லை.

உதிரன் வேகமாக நட்சத்திரா அருகே வந்தான். முதலில் சுற்றுப்புறத்தை கவனிக்காத ராணி..கண்ணீருடன் உதிரன் நட்சத்திராவை தூக்க அவனை பிடித்து தள்ளினாள். அவன் பேலன்ஸ் மிஸ் ஆகி கீழே நட்சத்திராவுடன் விழுந்தான்.

“அவ பக்கத்துல வராத” என நட்சத்திராவை அவள் பக்கம் இழுத்து அவளது கழுத்தில் கத்தியை வைத்து, நீ செத்துரு. நீ செத்தால் தான் என்னோட டார்லிங் என்னிடம் வருவான் என்று குரூரமாக பேசினாள்.

அவள ஏதும் செஞ்சிருறாத..ப்ளீஸ் உதிரன் கெஞ்ச, “இவ அண்ணன் தான நீ?”

“இவ என்னோட கமென்டோ பக்கம் வராம உன்னால பார்த்துக்க முடியுமா?” எனக் கேட்டாள். உதிரன் அவளை முறைத்து பார்த்தான்.

உன் தங்கை கழுத்துல கத்திய வச்சிருக்கேன். “நீ என்னை முறைக்கிற?” ராணி கேட்க, நான் உன் பக்கம் இருக்கேன் என்றான் சிம்மா.

“சிம்மா” உதிரன் சத்தமிட, “நிஜமாகவா?” அவள் மகிழ்ச்சியுடன் எழுந்து அவனிடம் வந்தாள்.

கண்டிப்பாக நான் உன் பக்கம் தான். உனக்காக என்றும் உன் அண்ணனாக அவர் போல் இருப்பேன் என்றான் சிம்மா.

“அண்ணனா?” இல்லை. நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு நீ வேண்டும் அவள் தலையை பிடித்துக் கொண்டு கத்தினாள்.

முடியாதும்மா. என்னால என்னோட ஸ்டாரை விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது. நான் கூட என்னோட காதல் தான் உயர்ந்ததுன்னு நினைச்சிட்டு இருந்தேன். அதை ப்ரூப் பண்ண கூட சவால் விட்டேன். ஆனால் என்னோட ஸ்டார் என்னிடம் காதலை கூறவும் முடியாமல் விலகவும் முடியாமல், என் குழந்தை அவள் வயிற்றில் உள்ளதை கூட சொல்லாமல் என் மீதுள்ள காதலால் அத்தனை துன்பங்களை தனியே சமாளித்து எங்க குழந்தையை பெற்று வளர்த்திருக்காள் என்று அழுதான் சிம்மா.

பின் ராணியை பார்த்து, என்னை காதலிக்கிறேன்னு சொன்னேல்ல. “ஆனால் நீ என் குழந்தையை என்ன செஞ்ச? சொல்லு?” அவளுக்கோ இல்லை என் ஸ்டாருக்கோ ஏதாவது ஆகி இருந்தால் நானும்..என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, சோர்வுடன் மாமா..என நட்சத்திராவின் சத்தத்தில் ராணி அதிர்ந்து அவளை பார்த்தாள்.

அவள் உதிரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, மெதுவாக அவர்களிடம் வந்த தமிழினியன் நட்சத்திராவை நகர்த்தி அவள் காயத்தை துடைத்து மருந்தை போட்டு, அவளது முகத்தில் நீரை தெளித்து விழிக்க வைத்திருக்கான்.

“மாமா” என அழைத்த நட்சத்திரா தமிழினியனை பார்க்க, அவன் அவளை சிம்மா அருகே அழைத்து வந்தான். ராணி அவளை முறைத்து பார்த்தாள்.

நாங்க சாக காதலிக்கல. வாழ தான் காதலித்தோம்.. காதலிக்கிறோம்.. காதலிப்போம். நீ என் மாமா அருகே வந்து என்ன செய்தாலும் அவருக்கு காதல் என்ற உணர்வை மட்டும் வரவைக்க முடியாது என நட்சத்திரா அவனை பார்க்க, ஆமாம் என்பது போல் அவனும் அவள் கையை பிடித்தான்.

ராணிக்கு கோபம் வந்து வேகமாக எழுந்தாள்.

விக்ரமை இப்பொழுது தான் அவள் பார்க்கிறாள்.

விக்ரம்..என்னோட டார்லிங்கை பாருடா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, புகழேந்தியும் அம்சவள்ளியும் மருது ஆட்களுடன் வந்தனர்.

புகழேந்தி அங்கே நடப்பதை பார்த்து ராணியால் என புரிந்து அவளருகே கோபமாக வந்தார். அம்சவள்ளி தன் மகளிடம் வந்து அவள் கையை பார்த்து அழுதார்.

ம்மா, ஒன்றுமில்லை நட்சத்திரா சோர்வுடன் சொல்ல, நட்சத்திரா நீ அதிகமா பேசாத. நான் முழுதாக எதையும் முடிக்கலை. நாம இப்பவே உனக்கு முறையான சிகிச்சையை தரணும் தமிழினியன் சொன்னான்.

புகழேந்திக்கு தன் மகளின் நிலையை பார்த்து ராணி மீது கோபம் மிக, அவரின் நடையை தடுத்து முன் வந்தான் விக்ரம்.

“வழிய விடுங்க” என்றார் அவர்.

மாமா, கொஞ்சம் சொல்றதை கேளுங்க அவன் சொல்ல, அம்சவள்ளி அவனை பார்த்தார்.

“அந்த பொண்ணை சும்மா விடக்கூடாது” என்று யோசனையுடன், “என்ன சொன்னீங்க?” புகழேந்தி கேட்க, “அதுவா?” மாமா..கொஞ்சம் சொல்றதை கேளுங்க என்றான் விக்ரம்.

“மாமாவா?” அம்சவள்ளியும் புகழேந்தியும் பரிதியை பார்க்க, ம்ம்..நான் விக்ரம். அன்னம்- பரிதியின் இரண்டாவது மகன் என்றான்.

“இரண்டாவது மகனா? எனக்கு தெரியாமல் எப்படி என் தங்கை மீண்டும் கர்ப்பமானாள்?”

“நாங்க டிவின்ஸ்” என்று அவர்கள் கதையை விளக்கினான் விக்ரம்.

இல்ல..இல்ல..நான் நம்பமாட்டேன் என்றார் அவர்.

சரி மாமா, நீங்க நம்பவேண்டாம். டி.என்.ஏ ரிப்போர்ட்ட நம்புவீங்கல்ல என்று விக்ரம் அவன் அலைபேசியை காட்ட, அனைவரும் அதிர்ந்தனர்.

“இதை எப்படா எடுத்த?” சிம்மா கேட்க, அவர்களை விட அதிர்ந்து ராணி நின்றாள்.

இல்ல..என அவள் கத்திக் கொண்டே விக்ரமை அடித்தாள்.

விடு..விடு..லய்யர் என விக்ரம் கத்தினான்.

“நீ எதுக்குடா டார்லிங் கூட பிறந்த? நான் எப்படி அவனை அண்ணன்னு அழைப்பது?” என அவள் அழுதாள்.

மாம்ஸ், “இவள மட்டும் தங்கைன்னு சொல்லீறாதீங்க?” ரசி, கீர்த்து, ரம்யா இடம் இவளுக்கு கிடையாது என விகாஸ் சொல்ல, விக்ரம் சிரித்தான்.

மாம்ஸ்..விகாஸ் கோபப்பட, நாங்க சும்மா பழகினோம். அவ்வளவு தான் என்று ராணியை பார்க்க, “விக்ரம் சும்மா இரு” சிம்மா சொல்ல, “அப்புறம் இவள என்னோட தங்கைன்னா சொல்ல முடியும்? எதை வச்சு சொல்றது?”

“சிம்மா மீதுள்ள காதல்ல தான் எல்லாமே செஞ்சிருக்க? ஆனால் நீ கொலை செஞ்சிருக்க?” நாங்க உன்னை ப்ரெண்டா கூட ஏத்துக்க முடியாது. மதுவந்தினி கேஸ நாங்க இருவருமே பாக்குறோம். யார் உன்னை அரெஸ்ட் பண்ணனும்ன்னு நீயே சொல்லு விக்ரம் சினமுடன் கேட்டான்.

அவள் அழ, அந்த பொண்ணை விடு. கோகுலுக்கு நடந்த விபத்தின் பின் இவன் நல்லா இருந்தான்னு தான் ரிப்போர்ட் ஹாஸ்பிட்டல்ல இருந்தது. நீ தான அவனை ஏதோ செஞ்சிருக்க? சொல்லு? விக்ரம் கத்தினான்.

ஆமா, நான் தான் செய்தேன். இவள் குழந்தையுடன் இருந்த போது நிறைய முறை கொல்ல முயன்றேன். முடியல. அதனால் அவனுக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவளுக்கு அந்த குழந்தையின் அப்பாவை தான் பிடிச்சிருக்குன்னா நான் சேர்த்து வைக்கப் போறேன் என்றான்.

எனக்கும் அவனுக்கும் இந்த குழந்தை சிம்மாவுடையதுன்னு முன்பே தெரியும். அவள் ஒரு முறை செத்து பிழைத்தாள். அதை நேரில் கண்ட அவனால் தாங்க முடியாமல் அழுதான். அதை நான் நேரிலே பார்த்தேன்.

முழுமாத கர்பிணியாக இருந்த போது அந்த விபத்தில் அவள் செத்துருவான்னு நினைத்தேன். அவனும் இன்னொருவனும் தான் அவளை தூக்கி மற்றவனின் காரில் போட்டனர். அவர்கள் பின் வரை செல்ல, அவளுக்கு பெயின் வந்திருச்சு. இவ அந்த பையனை பெற்றெடுத்தாள். அன்று அவன் உடைந்து விட்டான். அன்று தான் எங்களுக்குள் சண்டை வந்து கோபத்தில் அவனை வேகமாக தள்ளி விட்டேன். அவனுக்கு தலையில் அடிபட்டு இரத்தம் வந்து மயங்கினான். அதனால் தான் இப்படி பைத்தியம் போல் பேசுறான்.

அவன் பைத்தியமானாலும் இவளை பற்றி தான் பேசிட்டே இருப்பான். அவள் பார்க்கணும்ன்னு குழந்தை போல் அழுவான். இவனை சமாளிக்க போதும் போதும் என்றாகி விடும். அவன் ஏதும் பண்ணலை. எல்லாமே நான் தான் என்று தவற்றை ஒத்துக் கொண்டாலும் சிம்மாவை அவளால் விட முடியவில்லை.

ராணி ஏக்கமாக சிம்மாவை பார்க்க, அவளுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடாது என்று சிம்மா திரும்பிக் கொண்டான். நட்சத்திராவிற்கு மயக்கம் வந்தது.

“மாமா” என அழைத்துக் கொண்டே சிம்மா மீது சாய்ந்தாள். அனைவரும் பயப்பட, ஒன்றுமில்லை வீக்கா இருக்கா என்று தமிழினியன்..சிம்மா சீக்கிரம் போனால் நல்லா இருக்கும் என்று ஹாஸ்பிட்டலில் அவளை சேர்க்க சொன்னான்.

விக்ரம், “நீ பார்த்துக்கோ” என்று ராணியை பார்த்து, என்னால என்னோட ஸ்டாரை எப்பொழுதும் விடவே முடியாது. அவ இல்லாமல் நான் இருக்க மாட்டேன் என நட்சத்திராவை தூக்கிக் கொண்டு ஓட, நட்சத்திரா குடும்பமும் சிம்மாவுடன் சென்றனர்.

மற்றவர்கள் விக்ரமை பார்க்க, எல்லாரும் பத்திரமா போங்க. நான் வந்துடுறேன் என்று அவன் சொல்ல, நானும் வாரேன் என ராணி பேச்சு பிடிக்காமல்; விக்ரமை தனியே அனுப்ப பிடிக்காமல் அவனுடன் சென்றான் விகாஸ்.

எல்லாரும் நட்சத்திராவை பார்க்க ஹாஸ்பிட்டல் சென்றனர். விக்ரமும் விகாஸூம் ராணியை போலீஸ் ஸ்டேசனில் விட்டு சென்றான்.

இரவு நேரம் நட்சத்திரா விழிக்க, அவளை வீட்டிற்கு அனுப்பினர்.

எல்லாரும் அவளை பார்த்து வெளியே வர, திலீப் அனைவரையும் பார்த்து, நான் கிளம்புறேன் என்றான்.

“இந்த நேரமா?” காலையில போங்க விக்ரம் சொல்ல, இல்ல காலையில் டியூட்டியில் சேரணும் என்று திலீப் சொல்ல, நானும் கிளம்புகிறேன் என்று விகாஸூம் சொல்ல..எல்லாரும் ஒவ்வொருவராக சொல்ல, சரி கிளம்புங்க. பார்த்து போங்க. நாங்க இப்ப வரலை என்றார் தாத்தா.

மகிழன் அன்னத்திடம் கிளம்புவதாக சொல்ல, ரித்திகா அவனை பார்த்து அழுதாள். உதிரன் அவள் கையை இறுக பற்ற, “தேங்க்ஸ் மாமா” என ரித்திகா கையை பிடித்து, இன்று போல மேலிருந்தெல்லாம் குதிக்காத. கால் உடைஞ்சிரும் என்றான் கேலியாக.

ஏற்கனவே கிளம்புவதாக கூறிய அனைவரும் கிளம்பினர் விக்ரமை தவிர.

பள்ளி அருகே வரவும் திலீப் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டே பார்க்க, அவன் காதலை புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மீதான அக்கறை மட்டுமே என அவன் எண்ணிக் கொண்டே சென்று விட்டான்.

பனிசூழ அமர்ந்திருந்த கையால தேவர் சிவபெருமானை அவரை சுற்றியுள்ள அனைவரும் பார்க்க, அவரோ புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

தேவனே! சாத்தானை அழிக்க தான் இவ்விளையாட்டை ஆரம்பித்தீரோ! என்னுலகமே இருண்ட பயத்தில் அனைத்தையும் மறந்தேன் என்ற தேவதை..”இனி ஏதும் நடக்காதே!” என்ற ஐயமுடன் சிவனை நோக்கினார்.

“ஏதும் நடவாது தேவதையே!” நீவிர் உங்களது சேவையை தொடராலாம் என்றான் லிங்கேஸ்வர்.

அய்யனே! இந்த சாவான் உலகை அழிக்கக் கூடாது என்பதற்காக தான் செய்தீரா? நான் கேட்டதற்காக செய்தீர்கள் என எண்ணினேன் என்றார் பார்வதி.

“உங்களுக்காகவும் தான் தேவியே!” என்றார் அவர்.

போங்க அய்யனே! உலக மக்களுக்காக எப்பொழுதும் போல் உங்கள் திருவிளையாடலை அரங்கேற்றி இருக்கீர்கள். எல்லாம் சரி தான். ஆனால் சாவானை அழிக்க மானுடர்கள் தான் வரணுமா? பார்வதி வினவினார்.

அது சம்பூவின் வாக்கால் நடந்தது. என்ன தான் சம்பூ அரக்கியாக இருந்தாலும் நல்ல மனம் படைத்தவள். அவளது வாக்கின் படி தான் நடந்தது. சாவான் இப்பொழுது இறந்தாலும் சம்பூவிற்காக அவனுக்கு அடுத்த ஜென்ம வாழ்க்கை அவள் விருப்பப்படி சாவான் உயர் குணமுள்ளவனாக தான் பிறப்பான். ஆனால் அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியை விட துயரமாக தான் இருக்கும். இத்தனை ஜென்மத்திலும் அவன் மற்றவர்களுக்கு இழைத்த துன்பம் அவனை தாக்கும். “கர்மா ரிடர்ன்ஸ் பூமராங்” என்றார்.

“அப்படியென்றால் இனி மூன்று ஜோடிகளும் நன்றாக வாழ்வார்கள் தானா தந்தையே?” வேலன் கேட்டார்.

மானுடர்களுக்கு பிரச்சனைகள் என்றும் எப்பொழுதும் இருக்க தான் செய்யும். அவர்கள் தான் அதை சரி செய்து கொள்ள வேண்டும். இனி எல்லாம் அவர்கள் சித்தம்.

விதியை மதியால் வெல்லலாம் என்று இவர்கள் நிரூபித்து விட்டார்கள் தந்தையே! கணேசன் உரைக்க, சிவனின் சிறுபுன்னகை தவழ்ந்தது.

“அய்யனே! எம தர்மனுக்கு என்ன சொல்வீர்கள்?” நாரதர் கேட்க, சிவன் புன்னகைத்தவாறு..உலகம் அழிந்தால் எமனுக்கு வேலை இருக்காது.  நான் பேசினால் அவர் புரிந்து கொள்வார்.

நல்ல படியாக அனைத்தும் முடிந்தது. “நன்றி தேவனே!” என்று தேவதை அங்கிருந்து கிளம்ப, நாரதரும் அகன்றார்.

தந்தையே! “தேவதையால் எதுவும் மாறாமல் இருந்தால் உலகம் சாவான் பிடியில் இருந்திருக்குமா?” கணேசன் கேட்க, ஆம் கணேசா, மூன்று ஜோடிகள் உயிரும் பிரிந்திருக்கும்.

இந்த உதிரன், சுபி வாழ்க்கை முடிவு நமக்கு தெரிந்தது. “சிம்மா- ஸ்டார்” வேலன் கேட்டார்.

வேலா, ஸ்டாருன்னு சொல்லாத. சிம்மா அவன் பொறாமை கண்ணால் உன்னை எறிக்கப் போகிறான் என்று கணேசா கிண்டல் செய்தார்.

அனைவரும் நகைக்க, “முதலில் நாம் சிம்மாவை பார்த்தது எவ்வாறு? திருமண மண்டபத்தில் ஒரு பெண் ஆட்களை வைத்து கொல்ல முயன்றது தான?”

அந்த ராணி இப்பொழுது போல் நட்சத்திராவை கடத்தி மிரட்டல் விடுத்தாள் சிம்மாவிடம். அதற்கு அவன் தற்பொழுது நட்சத்திரா கூறியது போல், “நீ என்னை மிரட்டி தாலியை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் என் காதல் என் ஸ்டார் மட்டுமே!” உன் உடலில் ஆடையே இல்லை என்றாலும் எனக்கு எந்த உணர்வும் தோன்றாது. அதனால் அவளை விட்டு விடு என்று அவன் சொல்ல,

கடுப்பான ராணி நட்சத்திராவை அடைத்து வைத்திருந்த அறைக்கு சென்று அவன் கையில் விசத்தை கொடுத்து, சிம்மாவை கொன்று விடுவேன்னு சொல்லி குடிக்க வைத்து வெளியே அனுப்பி இருப்பாள். அதனால் தான் அரவமில்லா சாலையில் நட்சத்திரா சாவிற்கு போராடும் போது தான் நம் தேவதை அவளை கடந்த காலத்திற்கு அழைத்து சென்றது. சிம்மாவின் காதலை அடைய முடியாது என்று தான் மகாராணி சிம்மாவை கொல்ல எண்ணியது. மனைவி கடந்த காலம் வந்ததால் உயிராய் இருந்த சிம்மாவும் கடந்த காலம் வந்து அவர்களின் வாழ்க்கை மொத்தமாக மாறியது.

கணேசா, விதியை மதியால் வென்றாலும் எல்லையில்லா காதல் தான் அவர்களை காப்பாற்றியது. அதே போல் அரக்கனிடமிருந்து மனிதர்கள் கூட விடுபட்டிறலாம். ஆனால் வஞ்சம் கொண்ட மனிதர்கள் முன் மனிதர்களே விடுபட முடியாது.

“மானுடர்களுக்கு எதிரி மானுடர்களே!” அதையும் வென்று தேவதை கூறியது போல் எதிர்காலத்தை அவர்கள் வசமாக்கி கொண்டார்கள்.

மதிய உணவுக்காக வெளியே வந்த தியா, அவள் தோழி மனீஷாவையும் மற்ற தோழர்களையும் பார்த்து புன்னகையுடன் அவர்களிடம் ஓடினாள்.

“மனு” என்று மனீஷாவை தியா அணைக்க, ஊழியர்கள் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். அஜய்யும் புன்னகையுடன் வெளியே வந்தான்.

தியாவின் முன் வந்த வினித் கையை மார்புக்கு இடையே கட்டிக் கொண்டு அவளை முறைத்து பார்த்தான்.

வினு..என்று மனீஷாவை விட்டு நகர்ந்த தியா, “எதுக்கு முறைக்க?” என பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.

நீ இப்ப மனீஷா தோழி தியா இல்லை. அஜய் செக்ரட்டரி..என்றான் முறைத்தவாறு வினித்.

அனைவரும் அவளை பார்த்து புன்னகைக்க, தியா அஜய்யை பார்த்தாள். அவன் ஏதும் கூறாமல் தோளை குலுக்கினான்.

“என்ன இங்க வந்திருக்கீங்க?” தியா கேட்க, “உனக்கு தெரியாதா?” அமிர்தன் கேட்டான்.

என்ன? என்று அவள் எல்லாரையும் பார்க்க, உங்க பிராடெக்ட் லான்ஞ்ச் ஏற்பாட்டை அஜய் சார் எங்க கிட்ட தான் கொடுத்ததா நட்சத்திரா மேம் சொன்னாங்க. அவங்க வர முடியாதுல்ல..அதான் நாங்க எல்லாரும் வந்திருக்கோம் என்றான் கீரன்.

ஓ..என்று தியா அஜய்யை பார்க்க, “இவங்களோட மீட்டிங் ஏற்பாடு செய்” வினித் கோபமாக பேச,

நான் என்ன செய்தேன்னு கோபப்படுற? செக்ரட்டரின்னா. அதுக்கு முன்னாடி நான் இவங்களோட தோழி. ஜஸ்ட் ஹக் தான பண்ணேன் என்று தியா வினித்திடம் முகத்தை திருப்பினாள்.

“விடு வினித்” என்ற அஜய், “நாம வெளிய போய் பேசலாமா?” என கேட்டான்.

அஜய், கம்பெனி விசயத்தை இங்க தான் டீல் பண்ணனும் வினித் கண்டிப்புடன் கூற, தியா வயிற்றை பிடித்துக் கொண்டு பாவமாக பார்த்தாள் இருவரையும்.

வினித் அவளை முறைத்தான். அஜய் அட்டகாசமாக சிரித்தான்.

டேய், “வாய மூடு” வினித் அஜய்யிடம் கோபப்பட, இல்லடா..இப்ப சரியா தான வயித்தை பிடிச்சிருக்கா. நெஞ்சை அல்லவே! குறும்புடன் அஜய் கேட்டான்.

மற்றவர்கள் புரியாமல் விழிக்க, வயிற்றிலிருந்து கையை எடுத்த தியா கையை கட்டிக் கொண்டு அஜய்யை முறைத்தாள். அஜய் மேலும் சிரித்தான்.

எனக்கு ஒண்ணும் வயிறு வலிக்கல. லைட்டா பசிக்குது என்று தியா அஜய்யிடம் சினமாகவும் கொஞ்சலாகவும் கூறி விட்டு ஓரக்கண்ணால் வினித்தை பார்த்தாள்.

தியாவின் கொஞ்சல் பேச்சில் அனைவரும் அவளை உற்று நோக்க, அஜய் பேச்சை மாற்றினான்.

வினு, முதல்ல சாப்பிடலாம். பின் பேசலாம் என்று அவர்களை கம்பெனி கேண்டினுக்கே அழைத்து சென்றான்.

பாஸ் கேண்டின் வருவதை பார்த்து உண்டு கொண்டிருந்த அனைவரும் எழ, “கண்டினியூ காய்ஸ்” என்று புழலரசனை பார்த்து, “நீங்க எல்லாரும் இங்க சாப்பிடுவீங்கல்ல?” அஜய் கேட்டான்.

“சாப்பிடுவோம் சார்” என்று அனைவரும் அமர்ந்தனர்.

தியா சாப்பிட அமர, தியூ..என்று தியாவை அழைத்த வினித் அஜய்யிடம் கண்ணை காட்டினான்.

“என்ன?” தியா கேட்க, முதல்ல உன்னோட பாஸை கவனிக்கணும் என்றான் வினித்.

வினு, “பசிக்குதுடா” என்றாள் பாவமாக.

அஜய் வந்து அமரவும் பதார்த்தங்கள் அவர்களது மேசையில் அடுக்கப்பட்டது.

வினித் தியாவை முறைக்க, “செய்றேன் செய்றேன்” என்று கடுப்பாக எழுந்தாள். அவள் கையை பிடித்து அமர வைத்த அஜய், தட்டில் சில பதார்த்தங்களை வைத்து நீ முதல்ல சாப்பிடு இல்ல நெஞ்சு வலி வரப் போகுது என கிண்டலுடன் அவளிடம் கொடுத்தான். எல்லாரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். தியா அவனது கேலியில் சினமுடன் அவனை பார்த்தாள்.

வினு, நீ சாப்பிடு. நான் எடுத்துக்கிறேன் என்ற அஜய். எல்லாரும் தன்னையே பார்ப்பதை கவனித்து சிறு புன்னகையுடன் சீக்கிரம் சாப்பிடுங்க. இரவு செல்லும் முன் எல்லாவற்றையும் தயார் செய்யணும் என்றான். தியா மட்டும் கருமமே கண்ணாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

உணவு முடியவும் அவர்களது வேலை இழுத்துக் கொள்ள, செக்ரட்டரி தியா அஜய்யை கவனித்துக் கொள்வதை விட அஜய் தான் தியாவை கவனித்துக் கொள்வதை ஆச்சர்யமாக பார்த்தனர்.

மனீஷா தியாவை தனியே அழைத்து கேட்க, அவருக்கு வேற இல்லை. நாம வேலையை பார்ப்போம் என பேசி சமாளித்து அவளுடன் வேலையை தொடர்ந்து செய்து முடிக்க இரவாகியது. மாலையின் பின் அஜய் அவன் கேபினுக்கு சென்று அவன் வேலையை செய்தான்.

எல்லாம் முடிந்து புழலரசனும் மற்றவர்களும் அஜய்யை பார்க்க வந்து பின் விடைபெற்று சென்றனர். மூவரும் காரில் ஏற, அஜய் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

“சார்” தியா தயங்கியவாறு வினித்தை பார்த்தாள். அவன் ஏதும் சொல்லாமல் பின்னே ஏறிக் கொண்டான்.

“ஏறு தியா” அஜய் சொல்ல, அவள் ஏறவும் காரை எடுத்தான். திடீரென அஜய் தன் கரத்தை தியா கரத்துடன் கோர்க்க, “அஜய்” என்று அவள் கண்ணாடியில் வினித்தை பார்த்தாள். அவன் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான்.

“ப்ளீஸ் சார்” என்றாள் தியா.

அஜய், நீ இங்கேயே நிறுத்து, அப்பா வாரேன்னு சொன்னாரு என்று வினித் அவர்களுக்கு தனிமை கொடுத்து இறங்கினான்.

“வினு” தியா அழைக்க, பார்த்து போங்க. பை..தியூ. காலை சீக்கிரம். நினைவில் வச்சுக்கோ என்று அவன் நகர, அஜய் புன்னகையுடன் காரை செலுத்தினான். தியா குழப்பமாக இருக்க, அவனிடம் என் காதலை சொல்லீட்டேன். அவனுக்கு ஓ.கே தான். நீ தான் சொல்லணும் பேப் என்றான்.

“என்ன வினு ஓ.கே சொல்லீட்டானா?” என மனதில் தியா எண்ணினாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தியாவின் கையை இறுக பற்றிய அஜய், என்னை அதிகம் காக்க வைக்காத பேப். “ப்ளீஸ்” என்று அவளது உள்ளங்கையில் முத்தமிட, தியா இதயம் தொட்டது ஆணவனின் இதழ் தீண்டல்.

வீட்டிற்கு சென்று தயாராகி வந்த அஜய் நேராக தியா இருக்கும் இடத்திற்கு செல்ல அவள் அலைபேசியில் ஏதோ ரெசிபியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று அஜய் அமர, பயந்து அவள் நகர்ந்தாள்.

சார், “நீங்க எதுக்கு வந்தீங்க?” தியா சினமுடன் கேட்டாள். அஜய் அமைதியாக, முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது.

“இவருக்கு என்னாச்சு?” என சிந்தித்தவள் அவனருகே அமர்ந்து அவனது தோளில் கை வைத்த மறு நொடி புன்னகைத்த அஜய் தியா மடியில் படுத்து அவள் எழாதவாறு இறுக்கிக் கொண்டான்.

திகைத்த தியா, “எ..எ..என்ன பண்றீங்க?” என திக்கி கேட்க, அவன் முகம் வெறுமையுடன் இருந்தான். பதிலும் இல்லை.

“ப்ளீஸ் எழுந்திருங்க” என கெஞ்சுவது போல் தியா பேச, இதுவரை நான் யார் மடியிலும் தூங்கியதில்லை. கொஞ்ச நேரம் மட்டும். நான் தூங்கலை. ஆனால்..ப்ளீஸ்..என அவன் கெஞ்சினான்.

“பிரச்சனையா?” தியா கேட்க, ம்ம்..பிரச்சனை தான். சீக்கிரம் சரியாகிடும்.

“என்ன பிரச்சனை? நான் உங்களுக்கு உதவவா?”

அவளை பார்த்துக் கொண்டே, நீ என் காதலை மட்டும் ஏத்துக்கோ. அதுவே போதும்.

இல்ல..அவள் தொடங்க, ப்ளீஸ்..ம்ம்..”நைட் டின்னர் என்ன செய்யப் போற?” அஜய் கேட்க, அவள் அதிர்ந்து..நீங்க இங்க சாப்பிடக் கூடாது. நான் உங்கள் காதலை ஏற்றுக் கொள்வது ரொம்ப கஷ்டம். அதனால் அடிக்கடி வராதீங்க. கிளம்புங்களேன் என்றாள்.

அஜய் எழுந்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ப்ளீஸ் கிளம்புங்க.

உன் கண்ணில் எனக்கான காதல் தெரியுது. ஒத்துக்க மாட்டேங்கிற.

“இல்லையே!”

நல்லா தெரியுது. எனி வேஸ் நீ ஆபிஸ்ல்ல இருக்கும் போது மட்டும் சார்ன்னு அழை. வெளிய வந்தால் பெயர் சொல்லி தான் அழைக்கணும்.

ம்ம்..என்று தலையாட்டிக் கொண்டே தியா வாசலை பார்க்க, “ஓ.கே” என அஜய் எழுந்து அவள் வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்தான்.

கதவை தாழிட வந்த தியா அவன் வெளியே அமர்ந்திருப்பதை பார்த்து, உங்க அறைக்கு போங்க என்றாள்.

அஜய் அவளை பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.

அஜய்..ப்ளீஸ்..என அவள் கெஞ்சினாள்.

“உன்னோட வீட்டுக்கு வரக்கூடாது அவ்வளவு தான சொன்ன?” நான் என் அறைக்கு போக மாட்டேன். இங்கே தான் இருப்பேன். “அதெப்படி கொஞ்சமும் யோசிக்காமல் என் காதலை ஏத்துக்க முடியாதுன்னு சொல்வ?”

அய்யோ அஜய், ப்ளீஸ்..மழை வர மாதிரி இருக்கு. “இந்த குளிருல்ல என்ன செய்றீங்க?” பதட்டமாக அவனருகே வந்து, மீண்டும் அவனை செல்ல சொன்னாள்.

மழையே வந்தாலும் உன்னுடன் சேர்ந்து தான் உண்ணுவேன் இல்லை எனக்கு உணவு, தூக்கம் வேண்டாம் என்றான் பிடிவாதமாக.

அடம் பண்ணாதீங்க அஜய். கண்ணம்மாம்மா உங்களுக்கு சாப்பாடு தயார் செஞ்சிருப்பாங்க. போங்க..என அவனை இழுக்க, அவனை நகர்த்த கூட முடியலை.

மழை வர தொடங்க, “அஜய்” என அவள் அவனை இழுக்க, மழையில் அவனும் நனைந்து அவளும் நனைந்து பின்னும் அஜய் நகராமல் பிடிவாதம் செய்தான்.

சரி, “வாங்க” என தியா சொல்ல, முகம் கொல்லா புன்னகையுடன் அவள் பின் அவள் வீட்டிற்கு சென்றான்.

தியா அறைக்கு செல்ல, அவனும் பின் வந்தான்.

“எங்க வர்றீங்க?” நான் உங்களுக்கு துவாலை எடுத்துட்டு வாரேன். இங்கேயே இருங்க என்று மடமடவென ஏறினாள். அஜய் மனமகிழ்ச்சியுடன் பூனை போல் அவள் பின் வந்தான்.

அறைக்கு சென்ற தியா துவாலையை எடுத்து திரும்பி அதிர்ந்து “ஆஆஆ” வென சத்தமிட்டாள்.

ஷ்..ஷ்..என்ற சத்தத்தில் அமைதியாகவும் கோபமாகவும் பின்னிருந்து கட்டியணைத்த அஜய் பக்கம் திரும்பினாள்.

வாவ்..ப்யூட்டிஃபுல். உன்னோட முகம் சிவக்குது. “கோபமா? வெட்கமா?” அஜய் கேலி செய்ய, துவாலையை அவன் மீது தூக்கி எறிந்த தியா பேசும் முன் அவள் கொவ்வை இதழ்களை சிறையெடுத்தான் அஜய்.

அவன் மார்பில் அவனை அடித்து அவனை விட்டு விலக முயன்ற தியாவை அவனது முத்த சஞ்சாரத்தில் திளைக்க வைக்க, அவனை அடித்த தியாவின் கைகள் துவல, அவளது கைகளை தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டான் அஜய்.

தியா மூச்சுக்கு திணற, அவளது இதழ்களை விடுத்து, அவளது கழுத்தில் முகம் புதைத்தான். அவன் கைகள் அவளது இடையை வருட, இன்ப அவஸ்தையில் சொக்கிப் போனாள் காரிகை. அஜய்யின் இதழ் தீண்டல் கழுத்திற்கு கீழ் மார்பருகே செல்ல, பெண்மை விழித்தெழுந்து அவனை வேகமாக தள்ளி விட்டாள்.

மோகம் கலந்த காதலுடன் இருந்த நேரம் தியா அஜய்யை தள்ளி விட்டதும் அவனுக்கு சினம் மேலிட்டது. அதை கட்டுப்படுத்தி “பேப்” என்று மோகவலையில் சிக்குண்டு கிரங்கி அஜய் தவித்து அணைத்தான்.

தியா கோபமாக, “இதுக்கு தான் வந்தீங்களா?” என கத்தினாள்.

சட்டென மோகம் அறுபட்டு அவளை விட்டு விலகிய அஜய், “எதுக்கு வந்தேன்?” என்று அவன் கேட்ட சீற்றப் பார்வையில் கோபம் சென்று தியாவிற்கு பயம் வந்தது.

இல்ல, “நீங்க கிஸ்” என்று அவள் உதடுகள் தந்தியடிக்க, ஆமாடி, நான் உன்னை காதலிக்கிறேன். அதனால் கிஸ் பண்ணேன். “முதலில் நீ என்னை எதிர்த்தாலும் என்னை தொட அனுமதி கொடுத்த தான?” அஜய் கத்தினான்.

தியா கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

என்னை ஏன் நீ அடிக்கல? சொல்லு. உனக்கு என் மேல காதல் இருக்கு தான? உடம்புக்காகன்னா. நான் உன்னை தேடி வர தேவையில்லை.

“நான் நினைத்தால் இப்பொழுது கூட என் அறையில் நீ தினமும் இருக்கும் படி செய்ய முடியும். உனக்கு தெரியாதா?” என சீற்றமுடன் அவன் எகிறினான். தியா விக்கித்து போனாள். ஏற்கனவே அஜய்யால் ரணமான மனம் இப்பொழுதும் கிழிக்கப்பட்டது போல் உணர்ந்தாள்.

கண்ணீர் நிற்காமல் வர, அஜய் அவளது நீரோடையை பார்த்து, என்ன பேசி விட்டோம்? செட்..செட்..என அவன் பின் தலையில் அடித்தவன் அவளது கேவலில் அவன் கையை சுவற்றில் குத்தி காயப்படுத்த, தியா அவனை பார்த்து பதறி அவன் கையை பிடிக்க, அவள் கையை உதறிய அஜய் மீண்டும் சுவற்றில் குத்த விரல்கள் அனைத்தும் காயமானது.

அஜய் கையில் இரத்தத்தை பார்த்து, அஜூ..என அழுது கொண்டே அவனிடம் வந்து, நோ..அஜூ..நோ..என அவன் குத்திக் கொண்டிருந்த சுவற்றின் முன் வந்து நிற்க, அவன் கை அந்தரத்திலே நின்றது.

அஜூ..இரத்தம் வருது..என அவளது கேவல் நின்று தியா மறைத்து வைத்திருந்த காதல் பெருக்கெடுத்து அழுகையாக வெடித்தது.

கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த அஜய், அவன் இரத்தத்திற்கான அவளது அழுகையில் தியா மீதிருந்த கோபம் மறைந்து யோசனை பிறந்தது.

தியா அஜய்யை அமர வைத்து, அவளது அலமாரியில் இருந்த மென் துணிகளை எடுத்து கட்டிட்டு, வா..ஹாஸ்பிட்டல் போகலாம் என அழைக்க, அவளது கையை சீற்றமுடன் இருப்பது போல் தள்ளி விட்டு வேகமாக தியா வீட்டை விட்டு வெளியேற, அவள் அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

அஜூ..”ப்ளீஸ்” என்று தியா அழைக்க, அஜய் வெளியே அமர்ந்தான்.

அஜூ..ப்ளட் இன்னும் வருது. வா போகலாம் என அவன் கையை பிடிக்க, ச்சீ..தொடாத..என்றான்.

உடல் உறைந்து தியா கண்ணீருடன் அவனை வெறித்துக் கொண்டு நின்றாள். அந்த பக்கம் வந்த முருகன் இருவரையும் பார்த்து, அஜய் கையில் இரத்தம் வழிவதை பார்த்து பதறி அவனை அழைத்து சென்றும் தியா அங்கேயே மழையில் நனைந்து நின்று கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டே சென்ற அஜய், வீட்டிற்குள் செல்லவும் கண்ணம்மாவை அழைத்து தியாவை கவனிக்க சொன்னான். தான் சொன்னேன்ன்னு சொல்லாதீங்க என்று சொன்னான்.