என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர். ஆங்கிலமே ஆட்சி செய்யும் அந்த அந்நிய மண்ணில் அழகான தமிழில் அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தி கொண்டு வந்தான் அவன்.
“அப்பா….. அம்மா…… எங்க போனீங்க…”
“ஹப்பா…. என்னடா? என்ன பிரச்சனை உனக்கு. எதுக்கு இந்த கத்து கத்தற”என்றவாறே மாடியில் இருந்து இறங்கி வந்தார் தேவராஜ். கத்தியவனின் தந்தை.
“என்ன பிரச்சனையா? எனக்கு எப்பவும் இருக்க அதே பிரச்சனைதான்……”என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போதே வீட்டு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
பெரியவர் இளையவனை போய் பார்க்க சொல்ல, அவனும் அவரை முறைத்து கொண்டே சென்று கதவை திறந்தான்.
அங்கு வெள்ளை வெளேரென்று செம்பட்டை முடியில் மேலை நாட்டுக்கே உரிய அடையாளமாக நின்றிருந்தாள் அவர்களது பக்கத்து வீட்டு பெண் கர்லின்.
“ஹாய் டஜன்….. வேர் இஸ் ரதி” என்று கேட்க, ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் முகம் கோபத்தில் சிவக்க அவரை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல,
அந்த பெண்ணோ ஒன்றும் புரியாமல் உள்ளே எட்டி பார்க்க, தேவ் அமர்ந்திருந்தார்.
“ஹேய் தேவ்…. வேர் இஸ் ரதி”(அவங்க இங்கிலிஷ்ல பேசறதை நம்ம மொழில நாம தெரிஞ்சுக்கலாம்)
தேவ், “ஹோ…. கர்லின் வாங்க. ரதி உள்ள இருக்கா”.
“அப்படியா. அவங்கள வர சொல்லுங்க. நான் கொஞ்சம் பேசணும்” என்க,
“ரேவதி….. கர்லின் ஏதோ பேசணுமாம். சீக்கிரம் வாமா” என்று மனைவியை அழைத்தவர் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க,
அவரோ “வேற ஒன்னும் இல்ல தேவ். என் பொண்ணுக்கு பர்த்டே. அதான் நைட் சின்னதா பார்ட்டி அரேன்ஞ் பண்ணியிருக்கேன். உங்களையும் இன்வைட் பண்ணலாம்னு” என்றவர் சொல்ல,
அவனோ முகத்தை உம்மென்று வைத்து கொண்டு தந்தைக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.
அவனை புரியாமல் பார்த்த அவன் தந்தையிடம்,” தேவ் டஜன்க்கு என்னாச்சு ஏன் என்னை முறைச்சுட்டு இருக்கான்”.
“அது வேற ஒன்னும் இல்ல. அவனுக்கு அவனோட முறை பொண்ணு நியாபகம் வந்துடுச்சு அதான் முறைச்சுட்டு இருக்கான்” என்று கிண்டலாக சொல்லி சிரித்து கொண்டிருக்கும்போதே, அங்கு வந்தார் தேவராஜின் மனைவி ரேவதி.
கர்லின் அவரிடம் சென்று பார்ட்டிக்கு இன்வைட் செய்துவிட்டு, தாயின் பின்னோடு ஓடி வந்த அந்த பெண்ணை பார்த்து “ஹேய் ஹனி மெதுவா வா. உனக்கு நடக்கவே தெரியாதா. கீழ விழுந்திட போற. நைட் உன் பிரண்ட்க்கு பர்த்டே கண்டிப்பா வந்திடு” என்று சொல்ல,
டஜன் என்று அழைக்கப்பட்டவன் அங்கிருந்த கண்ணாடி டம்ளரை தூக்கி போட்டு உடைத்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டான்.
கர்லினோ வந்த நேரம் சரியில்ல போலையே, இந்த பய வந்ததுல இருந்து நம்ம இந்த முறை முறைக்கறான். சகுணம் சரியில்ல. நாம கிளம்பிடுவோம்’ என்று நினைத்து கொண்டு அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பிவிட ,
ரேவதியோ மகனை முறைத்தார்.
தேவராஜ், ரேவதி தம்பதி அமெரிக்காவில் வாழ கூடிய தமிழ் மக்கள். இவர்களுக்கு நிரஞ்சன், ஹாசினி என்ற இரண்டு குழந்தைகள். நிரஞ்சனிற்கு பதி மூன்று வயது இருக்கும் போது இங்கு வந்துவிட்டனர்.
இப்போது இருவரும் படித்து முடித்து அமெரிக்காவிலேயே மிக பெரிய கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
பரம்பரை பணக்காரர்கள் இல்லை. தேவ் உழைப்பில் ஓரளவு முன்னேறிய குடும்பம் இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். (சரி…. சரி…. இவங்கள பத்தி சொன்னது போதும். அந்த பய ஏன் கோபமா இருக்கான்னுதானே கேட்க வர்றீங்க. நானும் அதுக்குதான் வெயிட்டிங். வெண்ண மவனே சீக்கிரம் சொல்லுடா)
ரேவதி, “ரஞ்சன் என்ன பழக்கம் இது. வீட்டுக்கு ஒருத்தவங்க வந்திருக்கும்போது இப்படிதான் நடந்துக்கறதா”.
“டேய் அண்ணா. அப்போ நான் பெட்ரோல் ஊத்தவா” என்றவாறு துறு துறு விழியுடனும் குறும்பு மிளிறும் குரலிலும் கேட்டாள் அவள் தங்கை.
“ஏய்…. உன்ன……” என்று ஏதோ சொல்ல வந்தவன் பேச்சை நிறுத்திய ரேவதி “என்னடா பிரச்சனை. எதுக்கு வந்ததுல இருந்து இப்படி கத்திட்டு இருக்க”.
“உங்களுக்கு தெரியாதா…. உங்களுக்கு தெரியாதா….” என்று எகிறி கொண்டு வந்த மகன் தோளில் கை வைத்தவர் “இப்போ எதுக்கு ஷோல்டரை தூக்கிட்டு வர்ற. என்ன நடந்ததுன்னு சொன்னாதானடா தெரியும்”.
“ம்ம்ம்…. ஆரம்பத்துல இருந்து எனக்கு இருக்கற அதே பிரச்சனைதான். உங்களை யாரு எனக்கு நிரஞ்சன்னு பேர் வைக்க சொன்னது”.
தேவ், “ஏன்டா? நல்ல அழகான நிறைவான பேர்டா”.
டஜன், “எதே….. நிறைவான பேரா. அது இங்க இருக்கவன் வாயில குறைவா வந்தாகூட பரவால்ல சுத்தமா வர மாட்டிக்குதே. டஜன்னு கூப்பிடறான். இதோ இப்போ வந்தாங்களே கர்லின் அவங்க கூட டஜன்னு தான் கூப்பிடறாங்க.
ரேவதி, “டேய் கண்ணா அது உங்க தாத்தா வச்ச பேருடா”.
“அவரை யாரு எனக்கு பேர் வைக்க சொன்னது. அவரு மகனுக்கு மட்டும் ஸ்டைலா தேவராஜ்னு வச்சிருக்காரு. எனக்கு மட்டும் அதர பழைய பேர வச்சிருக்காரு. அப்பாவ எல்லாரும் தேவ்னு கூப்பிடறாங்க.
அப்புறம் உங்கள ரேவதிங்கற பேர ரதினு கூப்பிடறாங்க. எல்லாத்தை விட கொடுமை எனக்கு அப்புறம் பிறந்த இந்த பிசாசுக்கு ஹாசினினு வச்சிருக்கீங்க. அதை கூட இந்த இங்கிலிஷ்காரன் ஹனினு கூப்பிடறான்.
ஆனா என்னை நிரஞ்சன்னு கூப்பிட வேண்டாம் அட்லீஸ்ட் நிரன்னாவது கூப்பிடலாம். அதை விட்டுட்டு டஜன் டஜன்னு என்னை ஏலம் விடுறானுங்க. கடுப்பா வருது.
எனக்கு ஏன் இந்த பேர வச்சிங்க. கொஞ்சம் ஸ்டைலா மாடலா ‘ஷ்….’ ல முடியற மாதிரி எனக்கும் பேர் வச்சிருக்கலாம்ல.
ஹனி, “டேய் அண்ணா ‘ஷ்’ லன்னா நம்ம மனோபாலா சார் சொன்ன பிராண்டட் பேர்தான் எனக்கு நியாபகம் வருது கு……” என்றவள் வாயை ஓடி போய் மூடியவன்.
“உன்னை பேர் வைக்க சொல்லல. உன் புள்ளைங்களுக்கு அப்படி பேர் வச்சுக்கோ. ஆனா எனக்கு இப்போ உடனே வேற பேர் வேணும்” என்று பிடிவாதமாக அமர்ந்தவனை கண்டுகொள்ளாமல் ரேவதி “ராஜ் ரோஸ்க்கு என்ன கிப்ட் வாங்கிட்டு போலாம்”என்று கேட்க,
ரஞ்சனோ “ம்மா……”
ரதி, “அட போடா உனக்கு வேற வேலை இல்லை. இங்க வந்ததுல இருந்து இதே புராணம்தான் பாடிட்டு இருக்க. எதாவது மாற்றம் வந்ததா”.
ரஞ்சன், “இல்ல……”
“தெரியுதுல நீ தலை கீழா நின்னாலும் ஒன்னும் மாற போறது இல்ல. போ போய் பாசிப்பருப்பை தயிர்ல அடிச்சு கொண்டு வா. அதை போட்டாதான் முகம் பிரஸ்ஸா இருக்கும். போ போயி எடுத்துட்டு வா” என்றுவிட்டு கணவனின் புறம் திரும்பிவிட,
ஹாசினி சத்தம் போட்டு சிரிக்க, அதில் கடுப்பானவன் அவள் தலையில் கொட்டி வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
“ம்மா……” என்று அலறிய ஹனியை சமாளிப்பதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகி போனது.
பனிவிழும் அமைதியான இரவு குடும்பத்தினர் நால்வரும் பார்ட்டி நடக்கும் வீட்டிற்கு செல்ல,
கர்லின் அவரது தோட்டத்தை அழகாக அலங்காரம் செய்து வைத்திருந்தார். அவரிடம் சென்ற ஹனி “ஹாய் கர்லின் ரோஸ் எங்க” என்று கேட்க, அவர் கைக்காட்டிய திசையில் தன் லாங் கவுனை கையில் தூக்கி பிடித்துவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் ஐந்து வயது குழந்தை.
ஹனி வேகமாக அவளிடம் சென்றவள் “செல்ல குட்டி அழகா இருக்கடி. உன் கன்னத்தை அக்கா கடிச்சுக்கவா” என்று கேட்க, அந்த குழந்தையோ அமைதியாக இருந்தது.
எப்போதும் துறு துறுப்பாக இருக்கும் குழந்தை இன்று சோகமாக இருப்பதை பார்த்த ஹனி “என்னடா என்ன ஆச்சு? ஏன் டல்லா இருக்க? உன் டார்லிங் உன்னை கண்டுக்கலையா?” என்று தன் அண்ணன்னை கை காட்டி கேட்க,
குழந்தையோ “நோ…. டஜன் சோ…. நைஸ். எனக்கு என் அப்பா நியாபகம் வந்துருச்சு” என்று கண்ணை கசக்கினாள்.
ஆம், ரோஸிற்கு தந்தை இல்லை. தாய் மட்டும்தான். அது மட்டும் இல்லாமல் நம்ம டஜன் ரோஸோட க்ரஷ். நான் வளர்ந்து பெருசாகற வரை நீ யாரையும் கல்யாணம் செய்ய கூடாது என்று கண்டிஷன் போட்டு வைத்திருக்கிறாள் என்பது உபரி தகவல்.
தங்கையை தேடி வந்த ரஞ்சன் காதிலும் ரோஸ் சொன்னது விழ, அவனுக்கும் மனது கஷ்டமாக போனது.
ஹனி, “ஹேய் மைக் எப்படி இருக்க? அங்க இடம் எல்லாம் நல்லா கம்பர்ட்டா இருக்கா” என்று பேசி கொண்டிருக்க, குழம்பி போன குழந்தை “யார்கிட்ட ஹனி பேசற” என்று கேட்டது.
“உன் அப்பாட்டதான் பேசிட்டு இருக்கேன். பாரு உன் பக்கத்துல நின்னுட்டு இருக்காரு” என்று சொல்ல,
குழந்தை அரண்டு போய் “என்ன சொல்ற ஹனி எனக்கு பயமா இருக்கு” என்று அவளை ஒட்டி நின்று கொண்டது.
“ஆமா ரோஸ். நானும் சொல்ல வேண்டாம்னு பார்த்தேன். நீ கஷ்டப்படறதை பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியல.
நான் ஒரு சீக்ரெட் சொல்றேன் அதை நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது சரியா” என்றவள் கேட்க, அந்த பிஞ்சு குழந்தையும் அரண்ட முகத்தோடு வேகமாக சரி என்று தலையசைத்தது.
“அது….. இறந்து போனவங்க எல்லாம் என் கண்ணுக்கு தெரிவாங்க”என்று ரகசியமாக சொல்ல,
குழந்தையோ ‘என்னை நீ பைத்தியம்னு நினைக்குறியா’ என்பது போல் பார்க்க,
“உண்மைதான் ரோஸ். நீ நம்பலையா. உன் அப்பா ஒரு ப்ளூ ஷர்ட் பிளாக் ஜீன் போட்டுருக்காரு” என்று சொல்ல, அப்போதும் குழந்தை நம்பாமல் பார்க்க,
“என்ன நம்பலையா ரோஸ். நான் உன் ப்ரண்ட் பொய் சொல்வேனா? சரி இப்போ உன் அப்பா உனக்காக வாங்கின சாக்கிய வாங்கறேன் அப்போவாவது நம்பு” என்றவள்,
எதிரில் பார்த்து “அப்புறம் மைக் பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்துச்சா. உங்க கைல இருக்கறதை குடுங்க. உங்க பொண்ணு நம்ப மாட்டிக்கிறா” என்று சொல்ல,
அந்தரத்தில் ஒரு சாக்லேட் ஹனி அருகில் வந்தது.
சரியா கேட்ச் பிடிக்கறாளா இல்லையா என அதை தூக்கி போட்ட ரஞ்சன் புதர் மறைவில் இருந்து எட்டி பார்த்து கொண்டிருக்க, அதை சரியாக பிடித்த ஹனி “பார்த்தியா ரோஸ் உன் அப்பா உனக்காக வாங்கிய சாக்கி இந்தா வச்சுக்கோ” என்று கொடுக்க,
இப்போது ரோஸ் கண்ணில் நம்பிக்கை வர துவங்கியது. இருந்தாலும் அவள் “ஹனி என்னால நம்ப முடியல…. ஆனா……”
“நான் இவ்ளோ சொல்றேன். நீ என்னை நம்பல பார்த்தியா. இதுக்குதான் இவ்வளவு நாள் இதை சொல்லாம மறச்சு வச்சிருந்தேன்.
“சரி…. சரி நம்பறேன் ஆனா கடைசியா ஒரே ஒரு டாஸ்க். அதை என் அப்பாவை பண்ண சொல்லு நான் நம்பறேன்” என்று சொல்ல,
ஹாசினி அதிர்ந்தாள் என்றால் அதை கேட்டு கொண்டிருந்த ரஞ்சனுக்கு பயம் வந்தது.’ஐயையோ இவ இப்போ என்ன கேட்க போறான்னு தெரியலியே’ என்று.
“ஒன்னும் பெருசா எல்லாம் இல்ல. அந்த பூந்தொட்டிய மேல தூக்க சொல்லுங்க அப்பாவ” என்று சொல்ல,
அண்ணனுக்கு கண் காட்டிய ஹனி “ப்பூ…. இவ்ளோதானா. டன்…. டன்….நீ சொன்னதையே அவரு கேட்டிருப்பாரு. இப்போ செய்வாரு” என்றவள் குழந்தையை தன்னை பார்க்க வைத்து “இங்க பாரு ரோசா இது நமக்குள்ள இருக்க சீக்ரெட் வேற யாருக்கும் தெரியக்கூடாது.
நீ சொன்ன அப்புறம் என்னோட பவர் போயிடும் சரியா” என்று ரகசியத்தை காப்பத்த சொல்லி சீரியஸான குரலில் சொன்னவள்.
“ஓகே. இப்போ பாரு. அந்த ஜாடிய உன் டாடி தூக்கிட்டாரு. ஆனா என்ன இருட்டுல நிக்கறாரு. யாரும் பார்த்து பயந்திட கூடாதுல்ல அதான்” என்றவள் ரோசை திரும்பி பார்க்க சொல்ல,
பூ ஜாடி அந்தரத்தில் நின்றது. அதை கண்டு விழி விரித்த குழந்தை “டாட்…. லவ் யூ டாட்……” என்று கண்ணீரோடு சொல்ல, அவள் தலையில் பூக்கள் விழுந்தது.
“ம்ம்…. ஹேப்பியா. உன் டாடி உன்னை பூ மழைல நினைச்சுட்டாரு. அவர் உன் கூடவேதான் இருக்காராம். நீ அழுதா அவரும் அழுவாராம். சோ.. இப்போ சிரிச்சுட்டே போய் கேக் கட் பண்ணு” என்று குழந்தையை அனுப்பி வைக்க. அதுவும் துள்ளி குதித்து கொண்டு ஓடியது.
ரோஸ் ஓடுவதை சிரிப்புடன் ஹனி பார்த்து கொண்டிருக்க, அவள் முன் மரத்தில் இருந்து தொப்பென்று குதித்தான் அவள் உடன்பிறப்பு.
“சூப்பர்டா அண்ணா. செம்மையா சொன்ன வேலைய செஞ்சுட்ட. ஆமா அந்த ஜாடி எப்படி……” என்றவள் கேட்கும் போதே தன் கையில் இருந்த கயிறை காட்டியவன் “இப்படி……” என்று சொல்லி கயிறை இழுக்க, ஜாடி அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றது.
“அருமை உடன்பிறப்பே…உனக்கும் மூளை இருக்குன்னு நிரூபிச்சுட்ட” ,
“என்னை என்ன உன்ன மாதிரி அரைவேக்காடுனு நினைச்சுட்டியா. நான்லாம் காலேஜ் டாப்பர்ம்மா”.
“ரொம்ப பெருமை பீத்திக்காத. உன் பேப்பர திருத்துனவன் புது கல்யாண மாப்பிள்ளையா இருந்திருப்பான். அதான் இருக்க சந்தோசத்துல மார்க் அள்ளி போட்டுட்டான். அதை வச்சுட்டு நீ போடற சீன் தாங்க முடியல”.
“வன்மம் கக்கப்பட்டது. ஐ வாண்ட் மோர் வயித்தெரிச்சல்”
“டேய்….. அண்ணா…….”
ரதி, “ரெண்டு பேரும் அங்க என்ன பண்றீங்க. வாங்க” என்று சொல்ல,
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு சென்றனர்.
பிறந்தநாள் பாடல் அனைவரும் பாட, ரோஸ் மகிழ்ச்சியோடு கேக் கட் செய்து முதல் துண்டை ஹனிக்கு ஊட்டிவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் ஹனி” என்று சொல்லி கண்ணடிக்க,
அதை கடுப்பாக பார்த்து கொண்டிருந்த ரஞ்சன் மரத்தில் ஏறியதால் எரிந்த கையை பார்த்து கொண்டான்.
பிறந்தநாள் விழா சிறப்பாக முடிய, குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்த ஹனியை யாரோ அழைப்பது போல் இருக்க, திரும்பியவள் அங்கு நின்றிருந்த ஆடவனை கண்டு புருவம் சுருக்கி யார் என்பது போல் பார்க்க,
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். பேசலாமா” என்று வந்தவன் கேட்க, அவளும் சம்மதமாக தலையசைத்து பேச சென்றாள்.
யாரும் இல்லாத ஒரு இடத்திற்கு சென்றவன் “ஹனி நாம கல்யாணம் செய்துக்கலாமா” என்று பட்டென்று கேட்க,
“ஆஆ……” என்று கேட்டவள், தோரணை அவனுக்கு சிரிப்பை வரவைக்க,
மெல்லிய சிரிப்புடன் மீண்டும் அதையே கேட்க, அவளோ “சாரி ப்ரோ எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு” என்றவள் வேகமாக சொல்ல,
அதிர்ந்து நெஞ்சில் கைவைத்தவன் “ஹனி ஆள் இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. ப்ரோ எல்லாம் வேண்டாம். நெஞ்சு வலிக்குது. ஒருவேலை அந்த ஆள்கூட உங்களுக்கு பிரேக் அப் ஆச்சுன்னா எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்ல. பை த வே ஐ ஆம் மார்க்.. ஜோடன் மார்க்” என்று சொல்ல,
அதில் கடுப்பானவள் “அப்படியா ப்ரோ நெஞ்சு வலிக்குதா ப்ரோ. ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகுங்க ப்ரோ. வேற வழி இல்ல ப்ரோ. அவன்தான் எனக்குன்னு நான் பிக்ஸ் ஆகிட்டேன் ப்ரோ. இனி அவன் என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது ப்ரோ” என்றுவிட்டு சென்றவள் அங்கு நின்றிருந்தவன் மேல் மோதினாள்.
வந்தது யாராக இருக்கும்……அடுத்த எபியில் பார்க்கலாம்.