அத்தியாயம் 47

ஓ…. பாப்ஸ் ”இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் கேட்க, கீர்த்துவுக்கு பெரிய கெல்ப் பண்ணி இருக்கீங்க. “தேங்க்ஸ்”

ஓய், “யூ ஆர் ஜஸ்ட் ப்ரெண்டு” பட் நான் அவளுக்கு மாம்ஸ் என்றான்.

“வாட்?” அவள் கோபமாக, உன் வேலையை காட்டாத என்றாள்

“என் வேலை என்னன்னு உனக்கு தெரியுமா?” முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுட்டு பேசு என்று கோபமானான்.

“நீ சொன்னது அப்படி தான இருக்கு?”

“விக்ரம் எனக்கு மாம்ஸ்ன்னா நான் கீர்த்துவுக்கு மாம்ஸ் தான! உறவா பேசக் கூடாதுன்னு சொல்றீயா?” விகாஸ் கேட்க, ரம்யா அமைதியானாள்.

என்ன? விகாஸ் கேட்க, ஐ அம் சாரி..நான் எல்லாரும் பேசியதை வைத்து தான் உன்னை என்று அவனை பார்த்தாள்.

புரிஞ்சுக்கிட்டா சரிதான்.

ஓ.கே நாம இனி ப்ரெண்ட்ஸ் என்று ரம்யா விகாஸ் கையை நீட்ட, ராஜாவும் திலீப்பும் உள்ளே வந்து இருவரையும் பார்த்தனர்.

யா..ப்ரெண்ட்ஸ் பட் நான் எப்படி உன்னிடம் பேசுவது? என்று விகாஸ் திலீப்பை பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் கேட்டான். ராஜா திலீப்பை பார்க்க, அவன் விகாஸை முறைத்து பார்த்தான்.

நா..முதல்ல என்னோட படிப்பை கவனிக்கணும். நீ இங்க வந்தா என்னை பார்க்க விடுதிக்கு வா. அப்புறம் கீர்த்துவையும் அழைச்சிட்டு வா..

ஆமா..அவ எங்கிட்ட பேசிட்டாலும் என விகாஸ் சொல்ல, அதெல்லாம் பேசுவா? யாருமில்லாதவங்களுக்கு பணம் தேவையாக இருந்தாலும் நாம் காட்டும் சிறு அக்கறை போதும். அவங்க நம்ம பக்கம் வருவாங்க. நானும் அவளும் ஒரே நிலையில் தான் இருக்கோம்.

“நீ உன்னோட அண்ணாவை மன்னிக்கக்கூடாதா?” விகாஸ் கேட்க, ரம்யா புன்னகையுடன்..நான் விடுதியில் சேரணும்ன்னு சொன்னது என் அண்ணாவை வெறுத்ததால் இல்லை. அவன் சந்தோசமா வாழணும்ன்னு தான். அவன் கல்யாணம்ன்னு பண்ணா துளசி அண்ணிய தான் பண்ணிப்பான். ஆனால் அவங்கள காத்திருக்க வைத்துக் கொண்டிருந்தான். என் அண்ணாவும் அவங்கல்ல தான் காதலிக்கிறான். அண்ணிக்கு நான் அண்ணா பக்கம் இருந்தால் பிரச்சனை பண்ணுவாங்க. அவன் நிம்மதியா இருக்க முடியாது.

அவன் இப்ப என்னை நினைத்து வருந்தினாலும் அண்ணியோட இருக்கான். அதுவே எனக்கு போதும். சரி..சரி..நேரமாகிடுச்சு. நான் கிளம்புகிறேன். நல்லா சாப்பிட்டு உடம்ப பார்த்துக்கோ என்று ரம்யா புன்னகையுடன் கையை நீட்ட, விகாஸூம் கை குலுக்கி விட்டு, “ஆல் தி பெஸ்ட்” .நீ நல்லா படி. எதை பற்றியும் கவலைப்படாத என்றான்.

ம்ம்..என்று அவள் எழுந்தாள். ரம்ஸ்..நான் இன்று இல்லை நாளை கிளம்புடுவேன். பார்க்கலாம் என்று விகாஸ் சொல்ல, ம்ம்..தேவையில்லாம பொண்ணுங்க பின்னாடி சுத்தாம வேலைய பாரு என்று சொல்லி விட்டு ராஜா, திலீப்பை பார்த்து ராஜாவிடம் மட்டும் தலையசைத்து வெளியேறினாள்.

கீர்த்தனா வெளியே வந்து, ரம்யா..என அழைத்தாள்.

ம்ம்..சொல்லு கீர்த்து என ரம்யா அவளருகே வந்தாள்.

“அண்ணாவோட போறீயா?” ஸ்கூல்ல உன்னை திட்டப் போறாங்க.

நோ..இன்னும் பத்து நிமிடம் இருக்கு. நான் சென்று விடுவேன். கவலைப்படாத..கீர்த்து நானும் வீயும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். நீயும் அவருடன் ப்ரெண்டாகிக்கோ. நேரமாகுது பை என அவள் செல்ல, விக்ரம் அவள் முன் பைக்கை நிறுத்தினான்.

வா..என்று அவன் அழைக்க விக்ரமுடன் புன்னகையுடன் ரம்யா சென்றாள். தூரத்திலிருந்து தன் தங்கையை மருது பார்த்துக் கொண்டிருந்தான்.

ராஜா, “போகலையா?” விகாஸ் கேட்க, எல்லாரும் கிளம்பிட்டாங்க. உன்னை பார்த்துட்டு கிளம்ப தான் வந்தோம்.

பார்த்துட்டீங்கல்ல. கிளம்புங்க என்றான்.

அம்மா மட்டும் வெளிய தான் இருக்காங்க என்றான் திலீப். அவங்கள அழைச்சிட்டு போயிடுங்க. சுவா, விக்ரம், சிம்மா மாம்ஸ் இருக்காங்க. கிளம்புங்க என கோபமாக சொல்லி விட்டு படுத்தான்.

அவர்கள் செல்லவும் சுவாதி, ரசிகாவுடன் கீர்த்தனா விகாஸை பார்க்க அவனறைக்குள் சென்றாள்.

கீர்த்தனாவை பார்த்து, கீர்த்து “நீ ஓ.கே தான? அடி ஏதும் பட்டிருக்கா?” என அக்கறையுடன் விகாஸ் விசாரிக்க, “தன் அண்ணனா இவன்?” என சுவாதியால் நம்பவே முடியவில்லை.

ம்ம்..நான் நல்லா இருக்கேன் என்று அவன் கையில் இருந்த ஊசியுடன் இணைந்திருந்த டிரிப்சை பார்த்து கண்ணீர் வந்தது கீர்த்தனாவிற்கு.

“என்னால தான உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு?” என அவள் அழ, இங்க வா..கீர்த்து என சொல்ல, மற்ற பொண்ணுங்க அவனை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனருகே கீர்த்தனா வரவும் அவளை அவனருகே அமர வைத்தான்.

நீயும் மாம்ஸூம் முதல்ல பேசும் போது எதுவுமே புரியல. ஆனால் அந்த நெருப்பினால் உன் கதறல், அழுகையுடன் நீ பேசியதும் என் காதில் தெளிவாக கேட்டது.

உங்க ஆசிரமத்தில் உள்ளவர்கள் உனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்ன்னு எனக்கு நல்லா புரியுது. அதுக்காக எல்லாத்தையும் உன் மேல போட்டுக்காத. அவங்கள நீ எதுவும் செய்யல. திடீர்ன்னு நடந்த வெடி விபத்தால் உன்னால பயத்திலும் அதிர்ச்சியிலும் நகர முடியவில்லை.

ஒரு வேலை நீ உள்ளே சென்றிருந்தால் இப்ப நீ இருந்திருக்க மாட்ட. “இதனால் விக்ரம் மாம்ஸ் நிலை? அவர் உன்னை எந்த இடத்தில் வச்சிருக்கார் தெரியுமா?” அவர் அம்மா, அப்பாவுக்கு மேல வச்சிருக்கார். நீ இன்னும் அதிலே இருந்தேன்னா அவர் ரொம்ப கஷ்டப்படுவார். நீ பேசியதை அவர் மட்டும் கேட்டிருந்தால் உடைஞ்சு போயிருப்பார்.

இறந்து போனவங்களை எண்ணி உனக்கான புது உறவுகளை இழந்திருறாத என்றான்.

அன்னம் கண்கலங்க உள்ளே வந்தார். அவரை பார்த்து அன்னம்மா, “எனக்கு ஒன்றுமில்லை” என கீர்த்தனா சொல்ல, விகாஸை பார்த்தவர்..”அம்மா, அப்பாவுக்கு மேலா இவள்?” என தொண்டை அடைக்க அவர் கேட்க, விகாஸ் அமைதியாக இருந்தான்.

“எதுக்கு அப்படி சொன்னீங்க?” இந்த பொண்ணு தான விக்ரம் வளர்ந்த வீட்டினரின் தங்கை என ரசிகாவை காட்டிக் கொண்டே கீர்த்தனாவை பார்க்க, அவளுக்கு பயம் பிடித்தது. அவள் பயத்தில் விகாஸ் கையை இறுக பற்றினாள்.

விகாஸ் அவளை பார்த்து விட்டு, அன்னத்திடம் கீர்த்தனா பற்றி கூற..”என் பிள்ளை அந்த வயசுல இவளை வளர்த்தானா?” என கீர்த்தனாவை அணைத்துக் கொண்டார்.

அன்னம் சுவாதியை பார்க்க, இது எங்க குடும்பத்துல்ல எல்லாருக்கும் தெரியும் ஆன்ட்டி. எனக்கும்..என்று அவள் அன்னத்தை பார்த்தாள்.

“அப்படின்னா? உங்களுக்கும் என்னை பிடிக்காதுல்ல?” கீர்த்தனா அழுவது போல் கேட்க, இல்லம்மா, யாரு சொன்னா உன்னை பிடிக்காதுன்னு என்று அன்னம் புன்னகைக்க, அவரை அணைத்துக் கொண்டாள் கீர்த்தனா.

“நான் உங்கள அம்மான்னு கூப்பிடலாமா?” என கீர்த்தனா கேட்க, “அப்புறம் என்ன பாட்டின்னா கூப்பிடப் போற? அப்படி தான கூப்பிடணும்?” என நொடித்து பேசினார் அன்னம்.

“அம்மா” என மீண்டும் கீர்த்தனா அவளை அணைக்க, அனைவரும் கண்கலங்க அவளை பார்த்தனர்.

நீ இங்க என்னோட இருந்திரு. ரம்யா படிக்கிற பள்ளியில் சேர்ந்துக்கோ. விக்ரம்கிட்ட பேசி சேர்த்து விட சொல்றேன் என்றார் அன்னம்.

இல்ல..இல்ல..அவ விக்ரம் மாம்ஸ் கூட தான் இருப்பா என்றான் விகாஸ்.

அன்னம் அவனை முறைக்க, நீங்க மாம்ஸ்கிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்லி விட்டு, யாராவது எனக்கு ஊட்டி விட்டால் நல்லா இருக்கும். ரொம்ப பசிக்குது என்று விகாஸ் சுவாதி, அன்னத்தை பார்க்க, அன்னம் அவனுக்கு ஊட்டி விட்டார். அனைவரும் புன்னகையுடன் அவனை பார்த்தனர்.

தேவாவும் விகாஸூடம் மன்னிப்பு கேட்டு தான் சென்றார். ஆனால் இவன்..அக்காவை விட்டு ஏதாவது செஞ்சீங்க மரியாதை இருக்காது என்று பேசி முடித்துக் கொண்டான்.

மதியம் சிம்மா வீட்டில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். ஹாஸ்பிட்டலில் இருந்து கீர்த்தனா, ரசிகா, சுவாதி, விக்ரம், விகாஸ் வந்தனர்.

“மாமா” என்று தீப்தி விகாஸீடம் ஓடி வந்து, “சாரி மாமா” என அழுதாள்.

தீப்தியை துக்கிய விகாஸ், “எதுக்கு அழுற?” என இறுகிய குரலில் கேட்டான்.

“நீ என் மேல கோபமா இருக்கேல்ல?” தீப்தி கேட்க, ஆமா..கோபமா தான் இருக்கேன். எப்பொழுதும் போது தீபு நினைவிற்காக தான உன் எரேசரை எடுத்து வந்தேன். நீ என்னை திருடன்னு சொல்லீட்ட..என்று விகாஸ் தீப்தியிடம் கேட்க, அவள் மேலும் அழுதாள்.

சரி..சரி..அழுகையை நிறுத்து, நான் உன்னை எதுவும் சொல்லலை என்றான்.

அழுகையை நிறுத்திய தீப்தி, அப்படின்னா..இந்தா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கன்னத்தை காட்டினாள். அவள் முத்தத்தில் புன்னகைத்த விகாஸ் அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

“மாமா” அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுகிட்டாங்க. அப்பா கோபத்தில் கிளம்பிட்டார். அம்மா, கோபமாக அறையில் இருக்காங்க. அழுதாங்க என்றாள் தீப்தி.

திலீப் அவன் முன் வந்து, “என்ன சொன்னாலும் கதவை திறக்க மாட்டேங்கிறா?”

“அவளை சமாதானப்படுத்தாமல் எல்லாரும் சாப்பிட்டு இருக்கீங்க?” விகாஸ் கோபமாக கேட்க, இருவரும் சண்டை போடும் போது தடுக்க சென்றவர்களிடம், எங்க விசயத்துல்ல தலையிடாதீங்கன்னு கோபமா அவ தான்ப்பா பேசினா என்று கிருபாகரன் கூற, “அதுக்காக அவளை அப்படியே விட்ருவீங்களா?”

“யார் விட்டா?” உன் மாமா கோபத்துல்ல அவள அடிக்க, அவளும் அவரை அடித்து விட்டாள். அவர் கோபத்தில் சென்று விட்டார். இவகிட்ட பேசியதுக்கு யாரும் தொந்தரவு பண்ணாதீங்க. இவர நீங்க எல்லாரும் தான கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு தாத்தா, பாட்டியை திட்டி விட்டு சென்று விட்டாள்.

எல்லாரையும் பார்த்தவன், அண்ணா..”தாத்தா பாட்டி எங்க?” அவன் கேட்க, “அவங்க அறையில இருக்காங்க” என்று சிம்மா அறையை காட்டினான் திலீப். அறைக்கதவு பூட்டி இருந்தது.

“சுஜி எங்க இருக்கா?” என்று அவன் கேட்க, மாடியை கை காட்டினான் திலீப்.

தீபு, “நீ கீழே இரு” என்று விகாஸ் மாடிப்படியில் ஏற, “எல்லார் மீதுள்ள கோபமும் உனக்கு போச்சா?” ரகசியன் அம்மா கேட்க, “இல்லை” என்று அவரையும் சேர்த்து முறைத்து சுஜியை பார்க்க சென்றான்.

விகாஸூடன் வந்தவர்களை உணவுண்ண அமர வைத்தனர். சுவாதியும் விகாஸ் பின்னே சென்றாள்.

விகாஸ் குரலை கேட்ட சுஜி தானாக கதவை திறந்து, அழுது கொண்டே அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

“மாமா அடிச்சா நீயும் அடிப்பியா? எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?” அவன் கேட்க, அக்கா..மாமா மேல தப்பில்லை சுவாதி சொல்ல, சுவா..நீ அமைதியா இரு என்று விகாஸ் சுவாதியை முறைத்தான்.

என்னதான் மாமா பிடிக்கலைன்னு அஷ்வினிகிட்ட சொன்னாலும் அவ கொஞ்சம் டேஞ்சரான பொண்ணு தான். மாமா தப்பே செய்யலன்னு நான் சொல்லலை. அவள் உறுதியாக அவர் வேணும்ன்னு நினைப்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் விலகி தான் இருப்பார்.

அவர் அவளை வேலையை விட்டு வெளியேற்றாமல் இருந்தது தான் பிரச்சனை. அதை நான் பார்த்துக்கிறேன். இனி அவ உங்களுக்கு இடையில வர மாட்டா. வா..சாப்பிட்டு ஓய்வெடு. நாம ஈவ்னிங் ஊருக்கு கிளம்புகிறோம் என்றான்.

“நான் வரல” என்றாள் சுஜி.

அக்கா, “நீ என்ன தீபுவா?” பிடிவாதம் பண்ற. மாமாவை விட நல்லவர் கிடைக்க மாட்டார். ஒழுங்கா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு சேரும் வழிய பாரு. தீபுவை பற்றியும் யோசிக்கணும் என்று தமையனாக கண்டித்தான். சுஜி அமைதியாக இருந்தாள்.

வா..என்று அவளை இழுத்துக் கொண்டு கீழே வந்தான் விகாஸ். மூவரும் கீழே வர, அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

அக்கா, “சாப்பிடு” என்று அவன் நகர, “நீ எங்க போற?” சுஜி கேட்டாள்.

“தாத்தா, பாட்டியை பார்க்க போறேன்” என்று அவர்கள் திறக்கும் வரை அறைக்கதவை தட்டிக் கொண்டே இருந்தான். கோபத்தில் இருந்த இருவரும் கதவை திறந்தனர்.

மச்சான், வாடா..என்று விகாஸ் நேகனை அழைக்க, “என்னை எதுக்கு கூப்பிடுறான்? ஏதும் ஏழரையை இழுத்து விட்டிருவானோ?” என நேகன் அஞ்சினான்.

நான் உன்னை ஏதும் செய்யலை. நீ சொன்னா தான் தாத்தா, பாட்டி சாப்பிட வருவாங்க. கூப்பிடு என்றான்.

“ஓ..இதுக்கு தானா?” என்று பெருமூச்செடுத்து விட்ட நேகன், பாட்டியை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான். ஆனால் தாத்தாவோ விறைத்துக் கொண்டு சினமுடன் இருந்தார்.

விகாஸ் என்ன பேசியும் அவர் மசியவில்லை. தன் மகன்கள், மருமகள்கள் என யார் பேச்சையும் அவர் கேட்காமலே இருந்தார்.

எழுந்த விக்ரம் சுஜித்ரா அருகே வந்து, “எழுந்திருங்க” என்றான். அவள் புரியாமல் எழ, அவள் கையை பிடித்து தாத்தா முன் வந்து நிறுத்தினான். அவள் விக்ரமையும் தாத்தாவையும் பார்க்க, அவர் அவளை கோபமாக பார்த்தார்.

பிள்ளைங்க பிரச்சனையில்ல கோபமா பேச தான் செய்வாங்க கர்னல் சார். வீட்டுக்கு மூத்தவரே இப்படி கோவிச்சுக்கலாமா? என்று தாத்தா அருகே அமர்ந்த விக்ரம், திட்டுங்க. உங்க பேத்தி தான. நல்லா திட்டுங்க என்று விக்ரம் சொல்ல, சுஜி அவனை முறைத்தாள். அனைவரும் புன்னகையுடன் மூவரையும் பார்த்தனர்.

கர்னல் சார், “கம் ஆன்..” விக்ரம் ஊக்க, சுவாதி உள்ளே வந்து சுஜியை தாத்தா பக்கத்தில் நிறுத்தி, ரெண்டு போடுங்க தாத்தா. நீங்க போடுறதுல அவ மாமாகிட்ட ஓடிறணும் என்று தாத்தா கையை இழுத்து சுஜியை அடிப்பது போல் பாவனை செய்ய, கீர்த்தனா மகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்தாள்.

சமாதானப்படுத்த உதவுவாங்கன்னு நினைச்சா. காமெடி பண்ணீட்டு இருக்காங்க. நம்ம சுவா தான் இப்படின்னா இவளோட சேர்ந்து மாம்ஸூம் மாறிட்டார் விகாஸ் சொல்ல, லவ்வுல்ல இருவருக்கும் ஒட்டிக்கிச்சு என்று ஹரிணி கேலி செய்தாள்.

சரிதான். “அமைதியா இருங்க புள்ளங்கல்லா? மாமா என்ன செய்றார்ன்னு பார்க்கணும்” சுவாதி அம்மா ஆர்வமாக கூற, விகாஸ் அவன் அம்மாவை முறைத்தான். அவன் முறைப்பை பார்த்த சுருதி அப்பா, இன்னும் எவ்வளவு நேரம் கோபம்ன்னு பார்க்கலாம் என்று சிரித்தார்.

மாமா..சிரிக்காதீங்க விகாஸ் சினமாக கூறி விட்டு உள்ளே பார்க்க, தாத்தா சிரித்து விட்டார்.

உடனே சுஜி, “சாரி தாத்தா” என்று அவர் கையை பற்றினாள். சரிம்மா..விடு. “மாப்பிள்ளகிட்ட முதல்ல பேசும்மா” என்றார்.

“சரிங்க தாத்தா” என வெளியே வந்த சுஜி பாட்டியை அணைத்து மன்னிப்பு கேட்டாள்.

எல்லாரும் சாப்பிட்டு முடிக்க, எல்லா பிரச்சனையும் ஓவர் என்று உதிரன் சொல்ல, ம்ம்..என்ற விகாஸ் அன்னத்தை பார்த்தான்.

ஹரிணிக்கு அழைப்பு வர புன்னகையுடன் எடுத்த அவள் முகம் மாறி அலைபேசியில் எதையோ தேடி பார்த்து அதிர்ந்தாள். அவள் கண்ணீர் வெள்ளமாக அலைபேசியை கீழே போட்டு விட்டு அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

அடியேய் ஹரா, “எதுக்கு அழுற?” அவள் அம்மா கத்த, ராஜா யோசனையுடன் அவளை பார்த்துக் கொண்டே கீழே கிடந்த அவளது அலைபேசியை எடுத்தான். பசங்க எல்லாரும் அவளை பிடிக்க வெளியே ஓடிச் சென்றனர்.

சுருதி ராஜா அருகே வந்து அவளது அலைபேசியை பார்த்து பாவமாக ஹரிணியை பார்த்தாள். ராஜா கோபமாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

எல்லாரும் அவளை இழுத்து வர, அனைவரையும் கோபமாக தள்ளி விட்டு அழுது கொண்டே அறைக்குள் புகுந்து கதவை சாத்தினாள்.

ஹரா..”வெளிய வா” சுருதி பதறினாள். எல்லாரும் ராஜா கையிலிருந்த அலைபேசியை பார்த்து அவனை சுற்றி வளைத்து அவர்களும் பார்த்தனர்.

“யாருடா இது?” ராஜா அம்மா கேட்க, ஹ..உம் மருமவ லவ் பண்றவன் என்றான் கடுப்பாக ராஜா.

“என்னது ஹரா லவ் பண்றாளா?” விகாஸ் கேட்க, “இரு வருட காதல்” என்றாள் சுருதி.

“இரு வருடமா?” நேகன் அலைபேசியை பிடுங்கி பார்த்தான்.

“அப்ப இந்த பொண்ணு யாரு?” அவளோட கிஸ் பண்ணிட்டு இருக்கான் நேகன் கேட்டுக் கொண்டிருக்க, நிலா என்ற எண்ணிலிருந்து வீடியோ ஒன்று வந்தது.

ஹரூ, அந்த பரதேசி உன்னை ஏமாற்றி இருக்கான். இதைப் பாரு என்று மெசேஜ் வந்திருந்தது. அனைவரும் அதை பார்த்து அதிர்ந்தனர்.

அய்யோ..கண்றாவி..கண்றாவி..”என்ன பொண்ணு அது? இந்த பயலயா இவ லவ் பண்ணா?” சுவாதி அம்மா பேச, மாம்..”நீ வாய திறந்த கொன்றுவேன்” என்று இம்முறை சுவாதிக்கு பதில் விகாஸ் சத்தமிட்டான். மகன் சத்தத்தில் அப்படியே ஒடுங்கி நகர்ந்து கொண்டார் சுவாதி அம்மா.

ஹரிணி அப்பா கோபமாக, ஹரிணி..”வெளிய வா” என கத்தினார். அவள் மேலும் அழுது கொண்டே கட்டிலில் படுத்திருந்தாள்.

மாமா..அமைதியா இருங்க என்ற திலீப், “ஹரா கதவை திற” என்று அழைத்தான்.

“நான் வரமாட்டேன்” என்று அவள் அழுதாள்.

நீ வர வேண்டாம். உன்னோட காதலனின் கேவலமான வீடியோவை பார்க்க வெளிய வா..விகாஸ் அழைக்க, ஒரு நிமிடம் அமைதியான ஹரிணி, நான் வர மாட்டேன். போடா என்றாள்.

“பாரேன் அவளுக்கு கொழுப்பை?” அவள் அம்மா சினமுடன் கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருக்க, அத்தை, “வழிய விடுங்க” என்ற ராஜா, இப்ப நீ வெளிய வரல. அவனோட வீடியோவை இணையதளத்தில் பதிவாக்கி விட்ருவேன் என்றான்.

உடனே கதவை திறந்த ஹரிணி கோபம் ராஜா மீது பாய்ந்தது.

“நீ எதுக்கு என்னோட அலைபேசியை எடுத்த?” என்று துள்ளிக் கொண்டு அவனிடம் வந்தாள். அவனோ..உடனே அந்த வீடியோவை ப்ளே செய்ய, அதிலிருந்து வந்த முணங்கல் சத்தத்தில் காதை பொத்திக் கொண்டு அழுது கொண்டே அமர்ந்தாள் ஹரிணி.

ராஜா, “என்ன பண்ற?” அவன் அம்மா அவனை திட்டி விட்டு, அவளது அலைபேசியை பிடுங்க..”அம்மா” என்று சத்தமிட்டான் ராஜா.

நீயெல்லாம் வாய் பேசவே கூடாது. இவனுடன் தான மணிக்கணக்காக பேசிட்டு இருந்த இந்த ரெண்டு வருசமா? பார்த்தேல்ல.எதிலும் கவனம் இருக்கணும். நண்பர்களை கூட பார்த்து தேர்ந்தெடுக்க கத்துக்கணும்.

“தவறாக இருக்குன்னு அன்றே சொன்னேன்ல்ல கேட்டியா”? இப்ப அவன் முன்னாடி போய் இந்த வீடியோவ நீ காட்டின. மறு நிமிடம் உன்னிடம் பிரேக்அப்ன்னு சொல்லிடுவான். அவன் நல்லா ஜாலியா கூத்தடிச்சிட்டு தான் இருக்கான்.

“நிலாவும் அன்றே எச்சரிக்கை செய்தாலா? இல்லையா? உனக்கு மூளையே வேலை செய்யல. அவனோட இருந்த பொண்ணு யாருன்னு தெரியுதா?” என்று ராஜா பேச பேச, அனைவரும் அதிர்ந்தனர்.

ராஜா, “உனக்கு ஹரா காதல் தெரியுமா? அவனையும் தெரியுமா?” ஹரிணி அம்மா கேட்க, தெரியும் அத்தை. ஆனால் அவன் ஹராவுடன் நெருங்கல்ல. நீங்க அவளை தப்பா எடுத்துக்காதீங்க. அவளோட எப்பொழுதும் நிலா இருந்து கொண்டே தான் இருந்தாள். அவங்கள தனியா விடக் கூடாதுன்னு தான் நிலாவிடம் பேசி இருவரையும் நெருங்க விடாமல் செய்தேன் என்றான்.

ஹரிணி எழுந்து, நிலா என்னோட ப்ரெண்டு. “நீ எதுக்கு இதை செஞ்ச? அவளும் என்னை ஏமாத்திட்டாளா?” என்று ராஜா சட்டையை பிடித்தாள்.

சீற்றமுடன் அவளை பிடித்து தள்ளிய ராஜா, அவ உன்னோட ப்ரெண்டு. “உனக்கு நல்லது தான் நினைப்பா?”

எனக்கு நிலா ஒருநாள் உன் அலைபேசியில் இருந்து கால் பண்ணா. நீ தான் என நினைத்து நான் பேச, அந்த பொறுக்கி காலேஜ்ல வச்சே உனக்கு டிரிங்க்ஸ்ல மயக்கமருந்து கலந்து கொடுத்து யாருமில்லா இடத்திற்கு அழைத்து சென்று..என முடிக்க முடியாமல் தலையை அவன் கைகளால் தாங்கி அமர்ந்தான்.

அவன் தனியே அழைத்து செல்வதை பார்த்து அதுவும் நீ மயக்கத்தில் இருப்பதை பார்த்து கால் பண்ணி என்னிடம் நிலா தான் சொன்னாள். “அவள் உனக்காக அவள் உயிரையே தியாகம் பண்ண தயாராக இருந்தா தெரியுமா?” யூ ஃபூல் என ராஜா கத்தினான்.

“உயிரையா?” என ஹரிணி கண்ணீருடன் ராஜாவை பார்த்தாள்.

ஆமா, என்னோட கம்பெனி உங்க காலேஜ்ல்ல இருந்து தூரமா தான் இருந்தது. நான் உடனே கிளம்பினாலும் வர நேரமாகும்ன்னு தான் அவளை உங்க வகுப்பு பசங்கல்ல வச்சு உதவ சொன்னேன். அவ நேரமா என்னமோ? பக்கத்துல்ல யாருமே இல்லை. அவளும் யோசிக்காம உன்னை அவன் தூக்கி சென்ற இடத்திற்கு தனியே போயிட்டா. அவன் உன்னிடம் தப்பா நடந்துக்க, அதை பார்த்து அங்கிருந்த இரும்பு கம்பியால் அவன் தலையில் அடித்தாள். ஆனால் அவன் அவளை கண்டுகொண்டு நகர்ந்து உன்னிடம் இருந்து அவள் பக்கம் திரும்பினான்.

அவள் பயத்தில் கையிலிருந்ததை கீழே போட எனக்கு எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. நான் பேசுவது அவளுக்கு கேட்கவில்லை. உனக்கு பதில் அவள் அவனுக்கு இரையாக இருந்த சமயம், அங்கிருந்து கண்ணாடி கிளாஸை அவன் தலையில் அடித்தாள். அவன் நகர, எழுந்து அவளை பிடித்து ஓங்கி அறைந்தான். அவள் சுவற்றில் இடித்து தலையிலிருந்து இரத்தம் ஒழுகியது. ஆனால் நிலா உன்னை காக்க, மீண்டும் அவனை தாக்க வந்து அதிக இரத்தப்போக்கால் மயங்கி விட்டாள்.

இப்பொழுது அவன் உன் பக்கம் உன்னருகே வந்து என ராஜா பல்லை கடித்தான். பின் சமாதானப்படுத்தி, எதும் நடப்பதற்குள் நான் வந்துட்டேன். ஆனால் நான் வந்து அவளை இரத்தம் வழிய தான் பார்த்தேன். ஆனால் உன்னை ஆடையற்ற நிலையில் அவனுடன்…என்று நிறுத்தி சீற்றமுடன் அவளை பார்த்து, மீண்டும் அமைதியாகி முதலில் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தேன். அவள் ரொம்ப கிரிட்டிக்கலாக இருந்தாள். உன்னையும் அங்கேயே சேர்த்தேன்.

அத்தை, மாமாவுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாங்கன்னு உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகல என்று அவன் அவர்களை பார்க்க, ஹரிணி உடலை குறுக்கி கதறி அழுதாள்.

எல்லாரும் அவளை திட்ட, பாட்டி அவளிடம் வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

“சோ..ஹராவுக்காக தான் நம்ம கம்பெனியை இடம் மாற்றி காலேஜ் பக்கத்துல்ல ஆரம்பிச்சியா?” ராஜா அப்பா கேட்டார்.

ஆமாப்பா, இதெல்லாம் தெரியாமல் மேலும் அவனுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அதிலிருந்து உன்னை நிலா கண்காணித்து வந்தாள். என்னிடம் தினமும் நடந்ததை சொல்வாள்.

அவள் அன்று சீரியசா இருந்தா. அவளுக்கு உன்னோட ப்ளட் தான் ஏற்றினார்கள் என்ற ராஜா, இருவாரத்தின் பின் தான் சரியானாள். அதுவரை நம்ம பேமிலி டூர் சொல்லி அவனை விட்டு உன்னை விலகி இருக்க வைத்தேன். ஆனால் நீ..அவனுடன் அலைபேசியில் அப்பொழுதும் பேசிக் கொண்டு தான் இருந்த.

“நிலாவோட ப்ரெண்டா இருக்க உனக்கு தான் அருகதை இல்லை” என்று சீற்றமுடன் பேசி விட்டு ராஜா நகர்ந்தான். அவன் அலைபேசியில் நிலா ஹரிணியை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

ஹரிணி அம்மா அவளை சினமுடன் அடிக்க, அதை வாங்கி அழுகையுடன் பாட்டியை அணைத்து, “பெரிய தப்பு பண்ணீட்டேன் பாட்டி” என்று அழுதாள்.

எல்லாரும் அங்கங்கு சோகமாக அமர்ந்திருந்தனர்.

விக்ரம் பேச்சை ஆரம்பித்தான்.

சிம்மா, நான் கிளம்பணும். தமிழ்- மிருளாவை ரகு கண்காணிப்பில் தான் விட்டு வந்திருக்கேன். இந்த பிரச்சனை முடியும் வரை நான் அவங்களுடன் தான் இருக்கணும் என்று கீர்த்தனா ரசிகாவை பார்த்தான்.

அண்ணா, நான் இவங்க எல்லாரும் கிளம்பும் போது நம்ம வீட்டுக்கு போயிடுறேன் என்றாள் ரசிகா.

கீர்த்தனா முகம் வாடி இருக்க, அன்னம் அவளை பார்த்து விட்டு, விக்ரம் கீர்த்தனா இங்க இருக்கட்டும். ரம்யா படிக்கும் பள்ளியில் சேர்த்து விடலாமா? எனக் கேட்டார்.

இல்லம்மா, அவ இப்பொழுதைக்கு இங்க இருக்கட்டும் என்று யோசனையுடன் அவளை பார்த்தான்.

உடனே வேல்விழி, “மாப்பிள்ள கீர்த்தனாவை எங்க வீட்ல எங்களோட இருக்கட்டுமே!” அவள் படிக்கும் பள்ளியிலே படிக்கட்டும். அவளுக்கு பாதுகாப்பாக இருக்கும். நான் பார்த்துக்கிறேன் என்றார்.

அன்னம் விக்ரமை பார்க்க, அவனும் அன்னத்தை பார்த்து விட்டு, வேல்விழியிடம்..சரிங்க ஆன்ட்டி, இந்த வருட படிப்பு உங்க வீட்ல இருந்தே முடிக்கட்டும் என்று அன்னத்தை பார்த்தான். அவர் கோபித்து திரும்பிக் கொண்டார்.

அவரை பார்த்து புன்னகைத்த விக்ரம், நான் இங்க வரும் போது அவளும் வருவா. அவள நான் பார்க்காமல் இருந்ததில்லைம்மா. அவ பள்ளியும் அவங்க வீட்டுக்கு பக்கம் தான். “அங்க இருக்கட்டுமே!” என கொஞ்சலாக விக்ரம் கேட்க,

“விக்ரம் மாமாவுக்கு கொஞ்சில்லாம் பேசத் தெரியுமா?” சுருதி கேலி செய்ய, அனைவரும் புன்னகைத்தனர். அன்னமும் சிரித்து விட்டார்.

சரி..இருக்கட்டும். ஆனால் நானும் நினைக்கும் போது பார்க்க வந்துருவேன் அன்னம் சொல்ல, கீர்த்தனா அவரை கட்டிக் கொண்டாள்.

அம்மா, நானும் அண்ணி வீட்ல தான தங்கப் போறேன். நானும் கீர்த்துவை பார்த்துக்கிறேன் என்றான் மகிழன்.

விகாஸ்..எல்லாரையும் பார்த்து விட்டு நான் மாலை கிளம்பப் போகிறேன் என்றான். திலீப், மகிழனும் சொல்ல, நானும் வீயோட என்னோட வீட்டுக்கு போறேன் என்றாள் சுஜித்ரா.

நல்ல முடிவுடி. கோபத்தை என்றும் பிடித்து தொங்கக் கூடாது என்று அவள் அம்மா அறிவுறுத்தினார்.

சரிம்மா..ஆரம்பிச்சுறாத என்று சுஜித்ரா பாட்டி, தாத்தா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

நாங்க எல்லாரும் இருந்து வாரோம் என்று சொல்லி கணவனை ரகசியன் அம்மா பார்க்க, அம்மாடி எங்களுக்கும் வேலை இருக்கு என்றார் அவர்.

சரிம்மா, அப்பா கிளம்பட்டும். நானும் ராஜாவும் இருக்கோம் ரகசியன் சொல்ல, அவர் இல்லாமல் நான் எப்படி இங்கிருப்பது என அனைவரும் கிளம்பினர்.

வேல்விழியும் கிருபாகரனும் இங்கே இருப்பதாக கீர்த்தனா எங்களோட வரட்டும் என்றனர். அவளும் சரி என்று விட்டாள்.

ராஜா தயக்கமுடன் ஹரிணி பெற்றோரை பார்த்து, ஹரா..இங்க இருக்கட்டும். அவ அங்க வந்தா கஷ்டப்படுவா என்று அவன் சொல்ல, அவள் அப்பா ராஜாவை உறுத்து பார்த்தார். சோகமாக பாட்டி மடியில் படுத்திருந்த ஹரிணியும் நிமிர்ந்து ராஜாவை பார்த்தாள்.

சரிப்பா, “அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல?” அவ இருக்கட்டும் என்றார் ஹரிணி அம்மா.

சுவாதியும் சுருதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “நாங்களும் இங்க இருந்துட்டு பெரியம்மா கூட வர்றோம்” என்றனர்.

சரி, ஒழுங்கா படிக்கணும். ஆட்டம் போடாத சுவாதி அப்பா அவளிடம் சொல்ல, நல்ல பிள்ளை போல்..”பிராமிஸ்ப்பா” என்று அவள் தொண்டையை பிடித்து அவள் பாவம் போல் செல்ல, “சுவாதி கேடித்தனம் தெரியாதா என்ன?” அனைவரும் சிரித்தனர்.

ஆமா, பிள்ளைங்கல்ல நான் பார்த்துக்கிறேன் என்றார் அன்னம்.

இப்ப முதல்ல ஓய்வெடுங்க என்று அனைவரும் படுக்க செல்ல, ராஜா ஹரிணி அலைபேசியில் உள்ளதை அழித்து அவள் கையில் கொடுத்து “கவனமா இரு” என்று அவன் அலைபேசியை நீட்டினான். அவள் தலையை நிமிராது, “இது எதுக்கு?” எனக் கேட்டாள்.

நிலா லையன்ல்ல இருக்கா என்றவுடன் பாட்டியிடமிருந்து ராஜாவின் அலைபேசியை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று அழுது கொண்டே நிலாவிடம் பேசினாள். பெருமூச்சுடன் அவன் நகர்ந்தான். ஆனால் ஹரிணியால் ராஜாவை எதிர்கொள்ள முடியவில்லை. எந்த நிலையில் அவன் தன்னை பார்த்து இருக்கிறான் என்று வலியுடனும் கூச்சத்துடனும் அவனை தவிர்த்து சுவாவிடம் அவனது அலைபேசியை கொடுத்து விட்டாள்.

மதிய உணவை முடித்து அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர். தமிழ் குடும்பம் முழுவதும் பண்ணை வீட்டிற்கு சென்றனர்.

கீர்த்தனா அன்னம் பரிதி அறையில் தூங்கிக் கொண்டிருக்க, விக்ரம் அறைக்கதவை திறந்து எட்டிப் பார்த்தான். பரிதி மட்டும் விழித்திருந்தார்.

அப்பா..”நான் உள்ளே வரவா?” விக்ரம் கேட்க, “வாப்பா” என்று அவர் அழைத்தார்.

என்னப்பா, திடீர்ன்னு? பரிதி கேட்க, கட்டிலில் கீர்த்தனாவும் அவளுக்கு அடுத்து அன்னமும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்துக் கொண்டு பரிதியை பார்த்து தயங்கி, “இங்க கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” எனக் கேட்டான்.

கட்டில் பெரியதாக தான் இருந்தது. அவர் ஆச்சர்யமாக விக்ரமை பார்த்தார்.

எனக்கு உங்க சீக்ரக்ட். அதான் நான் உங்களோட இரண்டாவது மகன்னு எனக்கு தெரியும் என்று விக்ரம் சொல்ல, பரிதி கண்கலங்க அவனை அணைத்தார்.

“அப்பா” என்று விக்ரம் அழைக்க, அவனது நெற்றியில் கண்ணீருடன் முத்தமிட்டார் பரிதி.

நேரமில்லைப்பா, மாலை கிளம்பிடுவேன். “படுத்துக்கலாமா?” அவன் கேட்க, ம்ம்..படுத்துக்கோ..உன்னோட அம்மா..என்று அன்னத்தை பரிதி எழுப்ப வர, அவரை தடுத்து, “நீங்களும் வாங்க” என்று அவரையும் அழைத்து விக்ரம் படுத்துக் கொண்டான்.

பரிதியோ மகிழ்ச்சியின் உச்சத்தில் தன் மகனின் தலையை வருட, அன்னம் மேல் கையை போட்டுக் கொண்டு விக்ரம் சிறுபிள்ளை போல் உறங்கினான். இதை கண்ட தந்தை உள்ளம் நெகிழ்ந்தது. அவரும் அவனை அணைத்து படுத்துக் கொண்டார்.

சற்று நேரத்தில் திரும்பி படுத்த அன்னம் விக்ரம் இருப்பதை பார்த்து அதிர்ந்து மகிழ்ச்சியுடன் அவன் கன்னத்தை கண்கலங்க தொட்டுப் பார்த்தார். பரிதி அன்னத்தை பார்த்து புன்னகைக்க,..”நம்ம பையன்” என்று அவரிடம் பூரிப்புடன் சொன்னார்.

ஷ்..என்று பரிதி சத்தமிட, அவரும் அமைதியாக படுத்துக் கொண்டார்.

ஹரிணி மட்டும் தூங்க முடியாமல் தனியே அமர்ந்திருக்க, அவளருகே சுருதி வந்து அமர்ந்தாள். அவளை பார்த்தவுடன் சுருதி, “பாரு என்னவெல்லாம் நடந்திருக்கு?” ராஜா மாமாவும் நிலாவும் மறைச்சிட்டாங்க. “அவ எனக்காக என்ன செஞ்சிருக்கா?” நான் தான் யார் பேச்சையும் கேட்காமல் காதல் மயக்கத்தில் இருந்தேன். அன்று மட்டும் அவன் ஏதாவது செய்திருந்தால் என் வாழ்க்கை, அம்மா, அப்பா நிலை என்னாவாகி இருக்கும்? என காலம் கடந்து சிந்தித்தாள்.

ராஜா மாமா, “உன்கிட்ட அவன பத்தி சொன்னாரா?” நீ ஏன் அவர் கூறியதை நம்பவில்லை சுருதி கேட்க, எனக்கு அவரிடம் பேச கூட விருப்பமில்லாமல் இருந்தது. அதான்..

“நம்முடன் வளர்ந்தவர் தான!” சொல்லி இருக்கலாம் சுருதி சொல்ல, அதான பிரச்சனை என்றாள் ஹரிணி.

“என்னடி சொல்ற?”

ஆமா, முதல்ல மத்தவங்கல்ல விட ராஜா மாமா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் தான் சின்ன வயசிலே என்னை டீஸ் பண்ணிக்கிட்டே இருப்பார். எனக்கு கடுப்பாக இருக்கும்படி ஏதாவது செய்து விட்டு சென்று விடுவார். அதனால எனக்கு அவர் மீது நல்ல அபிப்ராயம் இல்லை.

நாம பள்ளியில் படிக்கும் போது அவர் காலேஜ் படிக்கும் சமயம், ஒரு பொண்ணு..அவ பேரு தெரியல. என்னிடம் வந்து அவரை விட்டு விலகி இருக்க சொல்லி டார்ச்சர் பண்ணா.

“போகும் இடெமெல்லாம் பின்னாலே வந்து சொன்னால் எப்படி இருக்கும்? அப்புறம் எப்படி அவரிடம் பேச தோன்றும்?” அதான் அவரை நான் கண்டுகொண்டதேயில்லை.

ஒரு வேலை மாமாவுக்கு உன்னை பிடித்திருந்தால்..சுருதி கேட்க, பிடிக்கும்ன்னா நான் அழும் போது திட்ட மாட்டார்ல்ல.

ஏய் லூசு, அக்கறை இருந்ததால் தான் திட்டுவாங்க. உன்னோட அம்மாவும் தான உன்னை அடிச்சாங்க. உன்னை அம்மாவுக்கு பிடிக்காதா? சுருதி கேட்க, ஹரிணி சிந்தித்தாள்.

ஹரா, அதுமட்டுமல்ல..மாமா உன்னை ஆடையில்லாமல் பார்த்திருக்கார். என்னனென்ன கனவுகள் அவருக்கு வந்ததோ? சுருதி பேச, ச்சீ..ச்சீ..வாய மூடுடி வெட்கப்பட்டாள் ஹரிணி.

பாருடா, வெட்கமா? ராஜா என்னடா பண்ற? இங்க ஒருத்தி வெட்கப்பட்டுகிட்டு இருக்கா என சுருதி கூவுவது போல் மெதுவாக பேச, அய்யோ…சும்மா இருடி என்று ஹரிணி அவள் மீது பாய்ந்து அவள் வாயை அடிக்க, இவள் கத்த..என இருவரும் விளையாண்டு கொண்டிருக்க, ராஜா அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு வெளியே வந்தான்.