“அஜய்” வினித் அழைக்க, அவன் முகம் கோபமாக வினித்தை பார்த்தான்.
கோபத்தை தள்ளி வை. நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் வினித் சொல்ல, நீ தியாவை என் பொறுப்பில் விட்டு போறன்னு நினைச்சேன். அவ எனக்கு துணைக்கு இருக்கணும்ன்னு சொல்ற அஜய் சினமுடன் கேட்டான்.
அஜய், சிறுவயதிலிருந்தே நம்மை ஒருவருக்கு ஒருவர் தெரியும். அதே போல் உனக்கு தெரியாத நிறைய விசயங்கள் உன்னை சுற்றி இருக்கு. தியாவிற்கு மட்டுமல்ல உனக்கு நம்ம கம்பெனி விசயத்தை தவிர பர்சலாகவும் எதிராளிகள் இருக்காங்க. உனக்கு தியாவும், அவளுக்கு நீயும், உங்களுக்கு என் அப்பாவும் இப்பொழுதைக்கு துணைக்கு இருந்துக்கோங்க. உங்க எல்லாருக்கும் ஆபத்து இருக்கு. கவனமா இருங்க.
உன்னை பார்க்கும் போதே தெளிவா தெரியுது. “உனக்கு தியாவை பிடிச்சிருக்குல்ல அஜய்?” வினித் கேட்க, அஜய் அமைதியாக வினித்தை பார்த்தான்.
“சொல்லு?” வினித் கேட்க, ஆமா எனக்கு தியாவை பிடிச்சிருக்கு என்றான் அஜய்.
சாரி அஜய், அவள உன்னால வாழ்நாள் முழுவதும் பார்த்துக்க முடியாது. அவளை உன்னோட இப்பொழுதைக்கு தான் விட்ருக்கேன். ஆனால் அவளிடம் காதல் என்று நிற்காத.. உன்னை பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். அதுவும் சிறுவயதிலிருந்தே.
உன் பின்னே சுற்றிய பொண்ணுங்கள பத்தி நான் சொல்லத் தேவையில்லை. நீ எல்லை மீறலைன்னாலும் அவங்களுடன் நிறைய நாட்கள் தங்கி இருந்திருக்க. அவளால் மத்த விசயத்தை தாங்கிக்க முடியும். ஆனால் குடும்பம் என்ற விதத்தில் தனக்கு உரிமையானவனை வேற பொண்ணு அப்ரோச் பண்றத தாங்க முடியாது. இது பொறாமையாக இருக்காது. அவளுக்கு வலியாக இருக்கும்.
நம்ம பள்ளியில் ஒரு பொண்ணு என்னிடம் காதலை சொன்னால்ல..அன்றிலிருந்து ஒரு வாரமாக தியூ என்னிடம் பேசலை.
அவள் என்னை காதலிக்கிறாளோ என்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது காதல் இல்லை. அதீத அன்புன்னு புரிந்தது. இப்ப கூட நமக்காக தான் அவ பேசவே செய்றா. அவ அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்படுவா என்று வினித் சொல்ல, ம்ம்..அப்புறம் என்றான் அஜய்.
“கிண்டலாடா?” வினித் கோபமாக, “உனக்கு தான் என்னை பற்றி தெரியுமே! தியாவை அவ்வளவு சீக்கிரம் விடுவேன்னு நினைக்கிறியா?” நீ சொல்றது சரி தான். என்னுடன் பழகிய பொண்ணுங்களால் அவளுக்கு ஆபத்து வரும் தான். ஆனால் நாங்க தான் எப்போதுமே சேர்ந்து தான இருக்கப் போறோம் அஜய் சொல்ல, புரிஞ்சுக்கோ அஜய் வினித் மீண்டும் கோபமானான்.
இல்லை வினித், நிறைய பொண்ணுங்களுடன் பேசி பழகி இருக்கேன். ஏன் நட்சத்திராவை விட தியாகிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. அவள பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. இன்று காலை தான் உனக்கு பிடித்த ஆடை போட்டுக்கோன்னு சொன்னேன். அது அவளுக்காக முதலில் சொன்னாலும் இப்ப அவ போட்டிருக்கும் ஆடை எனக்கு சுத்தமா பிடிக்கலை.
நான் அவளுடன் ஊர் சுற்றவோ, நேரம் செலவழிக்கவோ நினைக்கலை. அவள் எப்போதும் என்னுடன் இருக்கணுன்னு தோணுது. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணிடுச்சு.
“வாட்? கல்யாணமா? உன்னையா?” முடியவே முடியாது வினித் சொல்ல,
ஏன்டா அவளை நீ இன்னும் காதலிக்கிறேல்ல அஜய் கேட்க, மண்ணாங்கட்டி..உன்னால காதலிக்கவோ அவளை காதலிக்க வைக்க கூட முடியும். ஆனால் அவளுடன் வாழ முடியாது. நீ சந்தோசமா இருப்ப. ஆனால் அவ கஷ்டப்படணும்.
“ஏன்?” தியா என் பக்கம் இருக்கும் போது எனக்கு ஏதோ தோணுது. ஆனால் தெரியல. அவள் தான் எனக்கு வேண்டும். இனி எந்த பொண்ணுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் இனி பப்பிற்கு போக மாட்டேன். என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் தவிர்த்து விடுவேன். எனக்கு அவள் மட்டும் போதும் என்றான் அஜய்.
சரி..என்று பெருமூச்செடுத்து விட்ட வினித், உன்னோட அம்மாவை நீ பார்க்கவோ, பேசவோ, உறவாடவோ கூடாது. முடியுமா? உன்னால உன் அம்மா இல்லாமல் இருக்க முடிந்தால் நானே உன்னை தியாவிற்கு திருமணம் செய்து வைக்கிறேன்.
தெரியும் அஜய். உன்னால முடியாது. நல்லா நினைவில் வச்சுக்கோ. தியாவை உனக்கு கல்யாணமெல்லாம் செய்து வைக்க முடியாது. அவள் சொன்னது போல் அவள் இருக்கும் வீட்டின் பக்கம் நீ செல்லவே கூடாது என வினித் சொல்ல, இருவரின் பேச்சும் முற்றி சண்டையிட்டு அஜய் கோபமாக வெளியேற, அங்கே வரவேற்பறையில் கிருஷ், ருத்ரா, தியா சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அஜய்க்கு மேலும் கோபம் வந்து, வேகமாக வெளியே செல்ல..”அஜய் சார்” என்று கிருஷ்ணன் அவன் பின் செல்ல, தியாவும் ருத்ராவும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அஜய் காரை நோக்கி நடக்க, கிருஷ்ணன் அவன் முன் வந்து நின்றான். டமாரென்ற சத்தத்துடன் அஜய் கார் வெடித்தது. அதிர்ச்சியில் அஜய் வெலவெலத்து அப்படியே நிற்க கிருஷ் பயந்து கீழே விழுந்தான். கார்ட்ஸ் அனைவரும் ஓடி வந்து அஜய்யை மறைத்து நின்றனர்.
“சார்” என்று காரையும் அஜய்யையும் புரியாமல் கிருஷ்ணன் பார்க்க, வெடி சத்தத்தில் ஆபிஸ் ஆட்கள் வெளியே வந்து வேடிக்கை பார்க்க, தியாவும் ருத்ராவும் பதறி அவர்களிடம் வந்தனர்.
ருத்ரா கிருஷ் கீழே விழுந்திருப்பதை பார்த்து பதறினாள். தியா வேகமாக அஜய் அருகே வந்து அவனுக்கு வியர்த்து இருப்பதை பார்த்து, அஜய் உங்களுக்கு ஒன்றுமில்லைல்ல? என்று கேட்டுக் கொண்டே அவளது கைக்குட்டையை எடுத்து அவனுக்கு வியர்வையை துடைத்து விட்டாள். வினித்தும் வெளியே ஓடி வந்து பார்த்தான்.
போலீஸூக்கு கால் பண்ணுங்க ஒருவர் சொல்ல, ஸ்டேசனுக்கு விசயத்தை சொன்னான் கார்ட்ஸ் ஒருவன்.
அஜய், கிருஷ்..உங்களுக்கு ஏதும் அடிபடலைல்ல? என வினித் இருவரிடமும் வந்து ஆராய்ந்தான்.
பாஸ், நீங்க உள்ள போங்க. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம் கார்ட்ஸ் சொல்ல, எப்பொழுதும் வினித் ஆதரவாக அஜய் கையை பிடித்து அழைத்து செல்வான். அவன் அதே போல் அஜய் கையை பிடிக்க வர, ஆமா சார் வாங்க உள்ள போகலாம். யாருன்னு பார்த்துக்கலாம் என்று தியா அஜய் கையை பிடித்து அழைத்து சென்றாள்.
தியா சரியா நடந்து கொண்டாலும் அஜய்யின் காதலை எண்ணி வினித்திற்கு மேலும் பயம் கூடியது. இவனும் உள்ளே சென்றான். கார்ட்ஸ் ஒருவன் அஜய் முன் வந்து நின்றான்.
“என்ன?” அஜய் கேட்க, “பாஸ் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?” எனக் கேட்டான்.
ம்ம்…எனக்கு இருக்கு என்றான் கிருஷ். எல்லாரும் அவனை பார்க்க, “தியா அந்த வீடியோவில் இருக்கும் விதுவாக இருக்குமோ?” அவன் கேட்க, வினித் யோசனையுடன் அவனாக இருக்குமா? என சிந்தனையுடன்..அவனை கண்காணிக்க சொல்லுங்க என்றான்.
“இந்த வீடியோ விசயம் அவனுக்கு தெரியாதுல்ல?” தியா கேட்க, கண்டிப்பாக சொல்ல முடியாது. அங்க சிலர் சிசிடிவியையும் சோதனை செய்ய வாய்ப்பிருக்கு. அவன் உன் செயலை பார்த்திருக்க வாய்ப்பிருக்கு என்ற அஜய்..இது எனக்கு வைத்ததா? இல்லை தியா..என அவளை பார்த்தான்.
உங்களில் யாருக்கோ தான். இருவருக்குமே கூட இருக்கலாம். இதுக்கு தான் நாம ஒத்துமையா இருக்கணும் என்றான் வினித்.
இருக்கலாம். நான் சொன்னதுக்கு நீ ஒத்துக்கோ. நான் உன்னிடம் பர்மிசன் கேட்கணும்ன்னு அவசியமில்லை. ஆனாலும் கேட்கிறேன்ல்ல. நீ யோசிக்கலாம்ல்ல? அஜய் மீண்டும் தியாவை இழுத்தான்.
“பைத்தியமாடா நீ? இப்ப எதுக்கு அதை இழுக்குற?” இந்த விசயம் வேற..உங்க உயிர் சம்பந்தப்பட்டது என்று மீண்டும் சினமுடன் வினித் பேச, மனது சரியில்லைன்னா உயிரோட இருக்கிறதுல்ல என்ன அர்த்தம் இருக்கு என அஜய் சாதாரணமாக சொல்ல, வினித் கோபமாக அஜய்யை அடித்தான்.
இதுவரை இவர்கள் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து இருவரையும் பார்த்தனர்.
வினித், “எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க?” என்ன பேசுறீங்கன்னே புரியலை. “அஜய் முதல்ல இப்ப என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க?” தியா கேட்க, அஜய் அவளை ஆழ்ந்து பார்க்க, வினித் தியாவை மறைத்து நின்றான்.
அஜய் சிரித்தான்.
சார், “உங்களுக்கு என்னாச்சு? ஏதும் அடிபடலையே!” கிருஷ்ணன் கேட்க, “ஏன்டா மண்டை காலியாகிடுச்சு நினைக்கிறீயா?” அஜய் அவனை முறைத்துக் கொண்டு கேட்க, தியா அலைபேசி ஒலித்தது.
“என்னமும் செஞ்சு தொலைங்க” என அலைபேசியை எடுத்து அதிர்ந்தாள் தியா.
இவர்கள் எண்ணியது போல விதுரன் தான் பாம் வைத்து இருவரையும் கொல்லப்பார்த்திருக்கான். அந்த வீடியோவை அழிக்க சொல்லி அவன் கூற, அதிர்ச்சியிலிருந்து மீண்ட தியா, என்னிடம் வீடியோ ஏதுமில்லை என்றாள்.
அஜய் அலைபேசியை வாங்க, தியா..உன்னுடைய எண்ணிலிருந்து தான் வீடியோ வந்திருக்கு விதுரன் சீற்றமுடன், நீ மட்டும் அழிக்கலைன்னா..இப்ப கார்ல்ல பாம் வெடிக்காது. உங்க ஆபிஸ்ல்ல தான் வெடிக்கும் என்றான்.
இல்ல..வேண்டாம் தியா பதற, அவளது கையை இறுக பற்றிய அஜய், “நல்லா மிரட்டுற? சார் படம் நிறைய பார்ப்பீங்களோ?” என்று கேட்டான்.
டேய் அஜய், வீடியோவை அழிச்சிடு என்று கத்தினான் அவன்.
முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ என்று அஜய் சொல்ல, “அஜய் சும்மா இருங்க” என்ற தியா “நிஜமாகவே என்னிடம் இல்லை” என்றாள்.
இல்லைன்னா எப்படி உன்னுடைய அலைபேசியில் இருந்து நான் உலறிய வீடியோ வந்தது? இதில் என்னை ஏமாற்றி என்ன வேலையெல்லாம் செய்திருக்க?” உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவன் சொல்ல, அஜய் அவளது அலைபேசி கவரை பிரிக்க, அஜய் இது என்னுடையதில்லை என்றாள் தியா வினித்தை பார்த்துக் கொண்டு.
“நடிக்காதடி” விதுரன் சொல்ல, “ஏய் என்னடா அவள டி போட்டு பேசுற? சங்க அறுத்துருவேன்” அஜய் சொல்ல, “இருக்கிற பிரச்சனையில் இது வேறையா?” என்று வினித் அஜய்யிடமிருந்து அலைபேசியை வாங்கினான்.
அப்ப என்னோட அலைபேசி. என்னோட குடும்ப புகைப்படம். என்னோட அம்மா, அப்பா எனக்காக பாடிய பாட்டு எல்லாமே அதுல்ல தான் இருக்கு. வினு எனக்கு அது வேணும் என அழ ஆரம்பித்தாள் தியா. எல்லாரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
அஜய் அவள் தோளில் கை வைக்க, எனக்கு அலைபேசி வேணும் என்று அஜய்யை அணைத்து தியா அழ, தியா இங்க வா. அவன் கிட்ட போகாத என்று வினித் தியாவை இழுத்து கட்டிக் கொள்ள, தியா அவன் மோசம். அவனிடம் போகாத என அஜய் அவளை இழுத்து கட்டிக் கொள்ள, இருவரும் மாறி மாறி அவளை இழுக்க, அவள் அழுகை நின்று புரியாத மழலை போல் இருவரையும் விழித்து பார்த்தாள்.
“என்னடா பண்றீங்க? பாம் செட் செய்து வெடிக்க வைத்தால் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் அவளுக்காக அடிச்சிட்டு இருக்கீங்க?” விதுரன் கேட்க, தியா இருவரையும் விட்டு விலகி நின்று அவர்களை பார்த்தாள்.
தியா, வா..அஜய் அவளை அழைக்க, ஹ..என்று புருவத்தை சுருக்கி அவனை பார்த்தாள்.
டேய் போதும். நீங்க எடுத்த வீடியோ எப்படியும் உங்களிடம் தான இருக்கு. முதல்ல விசயத்தை சொல்லுங்க. இல்ல உங்க கம்பெனி பூம்..தான் என்று மிரட்டுவது போல் விதுரன் சொல்ல, கிருஷ் அலைபேசியில் தான் இருக்கு என்று ருத்ரா சொல்ல, “எதுக்குடி சொன்ன?” என்று கிருஷ் அவளை திட்ட, அவர்களும் சண்டை போட்டனர்.
எனக்கு பொறுமை இல்லை. சொல்லுங்க? விதுரன் கத்தினான்.
“முதல்ல அஜய்யை எதுக்கு கம்பெனிக்குள்ள வர விடாம பண்ண நினைக்கிற?” வினித் கேட்க, ஒருவர் சொல்லி செய்தேன். அவங்க கம்பெனி ஷேரை தருவதாக சொன்னாங்க.
“ஓ பணத்துக்காக அவனை வர விடாமல் பண்ண? யாருன்னு சொல்லு?” வினித் கேட்க, “முடியாது” என்றான் விதுரன்.
ஓ.கே வேலா, நீங்க உங்க வேலைய காட்டுங்க என்ற அஜய், வினித் கையில் இருந்த அலைபேசியை தட்டி அதை பிடித்து, விது டியர், உங்க மேசைக்கு கீழ பார்த்துட்டு சொல்லுங்க என்றான்.
விதுரன் பார்த்துட்டு வேகமாக அறை விட்டு வெளியே வர, “எங்க ஓடுறடா விது?” இப்ப ஓர் அடி நடந்த பூம்..என சத்தம் இருக்கும். ஆனால் உன் இதயத்துடிப்பு இருக்காது.
“ஏன்னு கேளுடா?” அஜய் கேலியாக பேச, ம்ம்..என்ன? அவன் பயத்துடன் கேட்க, “நீ தான் பீஸ் பீஸ் ஆகிடுவியே!” என்றான் அஜய்.
சாரி அஜய், நான் சொல்லிடுறேன். உன்னோட ப்ரெண்டு லீனா தான் உன்னை மாட்டி விட சொன்னா. அவளோட எப்பொழுதும் நீ இருக்கணும்ன்னு தான் செஞ்சா.
“அது எதுக்கு தியா அப்பாவை பயன்படுத்தினாள்?”
அது வந்து அஜய்..உன்னையும் தியாவையும் நிறைய இடத்தில் சேர்த்து பார்த்திருக்காளாம். அது அவளுக்கு பிடிக்கலை. அதான் இப்படி செய்தாள்.
“நாங்க சேர்ந்தா?” என்று அஜய் தியாவை பார்க்க, தியா கண்கள் கலங்கியது. அவனுக்கு அந்த பப் நினைவிற்கு வந்து, “அன்று அவள் வரவில்லையே?” என சிந்தித்து, “எப்ப நாங்க? அவ ஏதாவது சொன்னாலா?” அஜய் விதுரனிடம் கேட்க, ரோட்ல பல முறை பார்த்ததாக சொன்னால் என்றவுடன் தியாவுடன் சிக்னலில் சண்டை போட்டது; அவளுக்கு ஆபத்து நேரம் உதவியது என அஜய் எண்ண, அஜய்..என்று வினித் கோபமாக அழைத்தான்.
அவனை பார்த்த அஜய் தியாவை பார்க்க, அவள் அறையில் இல்லை.
ஏய், “தியா எங்கடா போனா?” அஜய் கேட்க, இதுக்கு தான் சொன்னேன் அஜய். அவள விட்ரு என்று வினித் சினமுடன் வெளியே செல்ல, அஜய் அவன் பின் செல்ல சென்றான். அவன் அப்பா உள்ளே வந்து அவனிடம் விசாரித்தார். அவன் விசயத்தை சொல்ல, இதுக்கு தான்ப்பா அந்த பப்பிற்கே போக வேண்டாம்ன்னு சொன்னேன். பாரு உன்னால அந்த பொண்ணு கஷ்டப்பட வேண்டியதா போச்சு.
இல்லப்பா, அதெல்லாம் இல்லை. தியாவை இதுக்கு மேல கஷ்டப்பட விட மாட்டேன். நான் அந்த லீனாவை பார்த்துட்டு வாரேன் என்றான் அஜய்.
“கார்ட்ஸ் சாருடன் போங்க” தனராஜ் சொல்ல, நோ டாட், நானே பார்த்துக்கிறேன். “என்னோட ப்ரெண்ட்ஸா இருந்தவங்க தான?” அஜய் சொல்ல, வினித் அவர்களிடம் வந்து தியாவை காணும் என்றான்.
“ருத்ராவும் தான போனா” கிருஷ்ணா சொல்ல, அங்கே ஓடி வந்தாள் ருத்ரா.
“தியா எங்க?” அஜய், வினித் பதற, தனராஜ் தன் மகனை முறைத்து விட்டு, எல்லாரையும் தேட சொல்லுங்க என்று அவர் சொல்ல, வினித் அவள் அழுது கொண்டே வெளியே ஓடும் போது கார் ஒன்று அவளை தூக்கி சென்றது. நான் அந்த கார் பின்னே ஓடினேன். ஆனால் அவளை பிடிக்க முடியவில்லை.
கார்ட்ஸ் அவங்கள விரட்டி போயிருக்காங்க என்றாள். உடனே வேலன் அவர்களை அழைக்க, சார் அவங்க மிஸ் ஆகிட்டாங்க என்றனர்.
“வாட்? எப்படிடா விட்டீங்க?” அஜய் கோபமாக கேட்க, “எல்லாமே உன்னால தான்” என்று வினித் அவளை அடித்தான்.
வினு, தியாவுக்கு ஒன்றும் ஆகாது. பதறாத..அவள அந்த பொண்ணு தான் கடத்தி இருக்கணும். அஜய் போனால் தியாவை விட்ருவா என்ற தனராஜ், நீயும் தியாவும் பத்திரமாக எந்த சேதாரமும் இல்லாமல் வரணும். புரியுதா அஜய்? என்று அவர் அதட்டினார்.
கார்ட்ஸை அழைத்து அஜய் செல்ல, வினித் சும்மாவா இருப்பான்? அவனும் அஜய்யுடன் கிளம்பினான். செல்லும் போது போலீஸார் மூலம் கார் எண்ணை சொல்லி, அந்த காரை டிராக் செய்து கண்டறிந்தனர்.
அஜூ வா..வா..என்று சிரித்த முகத்துடன் அரைகுறை ஆடையுடன் லீனா அஜய்யை அணைக்க வந்தாள். வினித் இடையே வந்து அவளது கழுத்தை பிடித்து, “தியா எங்க? அவள என்ன செஞ்ச?” கத்தினான்.
அஜூ..லீனா அஜய்யை பார்க்க, அவன் கண்களோ அவ்விடத்தை ஆராய்ந்தது. பல மிஷின்கள் அங்கிருக்க, தியா மயக்கத்தில் ஓரிடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தாள்.
கார்ட்ஸ் யோசிக்காமல் அவ்விடத்தை தங்களது துப்பாக்கிக் கொண்டு டப்டப்டப் என தோட்டாவை செலுத்த, அங்கிருந்த அடியாட்கள் விழத் தொடங்கினர்.
அஜூ, “என்ன பண்றாங்க?” நிறுத்த சொல்லு என்று லீனா கத்த, அவளை வெறித்து பார்த்த அஜய்..எவன் செத்தாலும் பரவாயில்லை. தியாவிற்கு சின்ன கீறல் கூட ஏற்படக் கூடாது என அஜய்யும் கத்தினான்.
அஜூ..என்று லீனா கோபமாக அங்கிருந்த ஓர் பொத்தானை அழுத்த, இரண்டாக கூறு போடும் மிஷின் ஒன்று அவளை நோக்கி செல்ல, அஜய்யும் வினித்தும் பதறினார்கள்.
அஜூ என்று லீனா அஜய்யை நகர விடாமல் பிடித்திருக்க, வினு போ..என்று அஜய் கத்திக் கொண்டே லீனாவை வேகமாக பிடித்து தள்ளி விட்டு அஜய்யும் வினித்தும் செல்ல, தியா கண்விழித்து நடப்பதை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
வினித் அவளது கட்டை அவிழ்க்க, தியாவை கூறு போடும் அந்த மிஷினிடமிருந்து சட்டென அவளை தன்னுடன் சேர்த்து இழுத்து அஜய் விழுந்தான். தியா அழுது கொண்டே அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
அஜய் அவளை பார்த்துக் கொண்டிருக்க, லீனா கையில் கத்தியுடன் தியாவை குத்த வந்தாள். வேலன் அவளது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்ட, போலீஸ் அங்கே வந்து அவளை பிடித்தனர்.
அஜூ, “என்னை விட சொல்லு” என லீனா கத்த, தியா அஜய்யிடமிருந்து விலகி அவளை பார்த்தாள்.
அஜூ..நான் லீனா. “உனக்கு நான் தான எல்லாமே!” நான் உன்னை காதலிக்கிறேன்.
“வாட்?” என அஜய் சிரித்தான். தியா அவனை கோபமாக முறைத்தாள்.
அஜூ..
ஏய்..கேவலமா நடிக்காத. ஏற்கனவே உனக்கும் அந்த விதுரனுக்கும் பழக்கம் இருக்குன்னு எனக்கு முன்பே நல்லா தெரியும். இப்ப கூட உன்னிடம் பணத்திற்காக செய்ததாக சொன்னான். ஆனால் நீ அவனுக்கு கொடுத்தது பணமா? இல்லை என்று அவளை கீழிருந்து மேலாக பார்த்தான்.
அஜய், “என்ன சொல்ற?” வினித் கேட்க, அவனை தவிர்த்த அஜய்..”மேடம் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைக்கிறியா? அப்புறம் உன்னோட இன்னொரு திட்டம்” என்று அஜய் லீனாவை பார்க்க, “என்ன திட்டம்? ஒன்றுமில்லையே?” அவள் கேட்க, வேலா..அஜய் சத்தமிட்டான்.
பாஸ், இப்ப கிடச்சிடும் என்றான் அவன்.
உள்ளே வந்த கார்டு ஒருவன் சில புகைப்படங்களை கொடுத்தான். அதை வாங்கிய அஜய் லீனா மீது விட்டெறிந்து, “இது எங்க நடந்தது?” உங்க திட்டம் நினைவுக்கு வருதான்னு பாரு. மறுபடியும் இல்லைன்னு சொல்லாத..என்றான்.
லீனா அஜய்யை முறைத்தாள்.
என்னை மேடம் காதலிக்கிறீங்களா இல்லை என்னை ஏமாத்தி எங்களுடையதை சுருட்ட பிளான் செய்தீர்களா? என்ற அஜய் வினித்தை பார்த்தான்.
வினு, “மேடம் பிளான் என்ன தெரியுமா?” அவங்க வயித்துல்ல குழந்தை இருக்கு. அது என் குழந்தைன்னு ஏமாற்றி திருமணம் செய்து எங்க சொத்தை அடிக்க அந்த விதுரனுடன் சேர்ந்து திட்டம் போட்ருக்காங்க.
அது விதுரனின் குழந்தை. நான் பப்ல்ல தங்கி இருந்தாலும் என்னோட அப்பா கண்ணு என் மேல தான் இருக்கும். அது யாருக்கும் தெரியாது. அவர் ஆட்களை வைத்து எப்பொழுதும் பாதுகாப்பார். இத்தனை வருடங்கள் எனக்கே தெரியாமல் எனக்கு உதவியாக இருந்தவன் என்று வேலனது தோளில் கையை போட்டு, இவன் தான். இன்று தான் இந்த கருப்பு உடையில் அவனை பார்க்கிறேன்.
“எவ்வளவு பர்பக்ட்டா இருக்கான்ல்ல?” என்று அவனது தோளை தட்டினான் அஜய்.
“உங்கள சும்மா விட மாட்டேன்டா” என்று லீனா கத்த, போடி போடி உன் சம்பந்தப்பட்ட எல்லாரும் உன் அப்பா கூட உள்ள தான் இருக்கப் போறார். “பாவம் உன் குடும்பம்ல்ல? அட..உனக்கு தான் உன் தங்கை மேல அக்கறையே இல்லையே? அவ பாதுகாப்பா இருப்பா. நான் அவளை பாரின் அனுப்பிட்டேன். வேலா அந்த பொண்ணு கிளம்பிட்டால்ல?”
“எஸ் பாஸ்”, இன்னும் கொஞ்ச நேரத்தில் பாதுகாப்பாக லேன்டாகிடுவாங்க என்றான் வேலன்.
“தட்ஸ் மை பாய்” என்று அஜய் புன்னகைத்தான். வினித் அவனை சுற்றி சுற்றி பார்க்க, “எதுக்குடா வயசுக்கு வந்த பிள்ளைய சுத்துற மாதிரி சுத்துற?”
“எப்ப இதெல்லாம் நடந்தது?” இந்த ஒரு மாதமாக தான் என்றான் அஜய்.
“நட்சத்திரா?” வினித் கேட்க, பிடித்து தான் சுத்தினேன். ஆனால் இப்ப பிரச்சனையில்ல. “இப்ப என்ன சொல்ற நண்பா?” அஜய் கேட்க, முடியவே முடியாது. உன்னை முழுசா நம்ப மாட்டேன் என்று வினித் சிரிக்க…ஹப்பா, உன்னை சரிக்கட்ட முடியலடா மச்சான் என்று தியாவை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
அவள் இந்த அஜய்யின் புது அவதாரத்தில் அசந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். லீனாவை அழைத்து சென்றனர்.
சற்று நேரத்தில் எல்லாரும் கம்பெனிக்கு வந்து விட, தியாவை பார்த்து தனராஜ் ஓடி வந்து அவளிடம், “அந்த பொண்ணு உன்னை எதுவும் பண்ணலைல்லடா?” என்று பதட்டமாகவும் பாசமாகவும் கேட்க, தியா பதிலளிக்காமல் அவரை பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
அஜய் அவரிடம் வந்து, அவ ஓ.கே தான் டாட். நீங்க தான் பயமுறுத்துறீங்க என்றான்.
“உனக்கு எப்படி வேலா பற்றி தெரியும் அஜய்?” தனராஜ் கேட்க, டாட் இது பெரிய ரகசியம் பாரு. அவன் பப்பிற்கு வருவான். குடிக்க மாட்டான். பொண்ணுங்க பக்கத்துல வந்தா கூட பக்கம் செல்ல மாட்டான். இதில் தான் சந்தேகம் ஆரம்பித்தது. பின் அவன் என்னை பின் தொடர்வதை கவனித்து கண்டறிந்து விட்டேன்.
டாட், “நான் உங்களிடம் தனியா பேசணுமே?” என்று வினித், தியாவை பார்த்தான்.
“வா தியூ போகலாம்” என்று வினித் அவளை அழைக்க, “அது என்னடா தியூ?” அஜய் கேட்க, சார்ட் நேம்டா. அதான் அந்த அஜூ மாதிரி என்று வினித் சிரிக்க,
டேய் உன்னை.. என்று அஜய் எழ, “வா தியூ ஓடிறலாம்” என்று வினித் தியாவை இழுத்து வெளியே ஓடினான். தியா புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சென்றாள்.
“என்னப்பா?” தனராஜ் கேட்க, “டாட் நமக்கு சொந்தபந்தங்கள் யாருமே இல்லையா?” மாம் வீட்டினரையும் நான் பார்த்ததில்லை. உங்க சொந்தங்களையும் நான் பார்த்ததில்லை.
அதை பற்றி சொல்லும் நேரம் வரும் போது கண்டிப்பாக சொல்கிறேன். இப்ப சொல்ல முடியாதுப்பா. நீ முதல்ல நம்ம கம்பெனியை நன்றாக நடத்தி பலமடங்காக்கும் போது நானே சொல்கிறேன். ஆனால் அஜய் யாரையும் முழுதாக நம்பாதப்பா. அது யாராக இருந்தாலும் என அவர் அழுத்தி கூற, “நீங்க மாம்மை சொல்றீங்களோன்னு தோணுதே!” அஜய் சொல்ல, அவர் அதிர்ச்சியை வெளியே காட்டாமல் அப்படியில்லைப்பா என்றார்.
“ஓ..தியா, வினித்தை சொல்றீங்களா?” அஜய் கேட்க, நோ..நோ..என உடனே பதிலளித்தார்.
நீங்க எந்த பொண்ணு மீதும் ஏன் திவ்யா கிட்ட கூட பாசமா பேசியதில்லை. ஆனால் தியாவுடன் பேசும் போது ரொம்ப பாசமா தெரியுதே! அஜய் கேட்க, அவர் இதழ்களில் புன்னகை அரும்ப, “அது தெரியலப்பா” என்று எழுந்தார்.
“எனக்கு அப்படி தெரியலையே!” என அஜய் கூர்மையான பார்வையை செலுத்த, எனக்கு அந்த பொண்ணோட குணம் பிடிக்கும். அவங்க அப்பாவை பார்க்க நம்ம கம்பெனிக்கு நிறைய முறை வந்திருக்கா. “வேற எதுவும் தெரியணுமா?” அவர் கேட்க, அஜய் மனதினுள் “மாம் பற்றி இப்ப வேண்டாம்” என்று அவன் சிந்தனையை தள்ளி வைத்து விட்டு, நோ டாட் என்றான்.
சரிப்பா, கவனமா இருங்க. கிளம்புகிறேன் என்று அவர் சென்று விட்டார்.
வினித்தும், தியாவும் கிருஷ்ணன் டீமிற்கு சென்று அவர்கள் பிராஜெக்டிற்காக உதவிக் கொண்டிருந்தனர். அஜய் அழைப்பு விடுங்க இருவரும் கிளம்பினார்கள்.
“எதுக்குடா கூப்பிட்ட?” எவ்வளவு வொர்க் இருக்கு என்று வினித் சொல்ல, தியா வினித்தை கண்ணால் சைகை செய்ய, “என்ன?” அவன் தியாவிடம் கேட்டான்.
“என்னோட அலைபேசி?” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி அவள் கேட்க, அதுவோ அஜய் மேசையில் இருந்தது.
அவனை முறைத்த தியா சற்று பின் நகர்ந்து அவன் காலில் ஓங்கி மிதித்தாள்.
அய்யோ..டேய் யப்பா. அவ அலைபேசிய கொடுத்துரு இல்லை நான் காலை அடமானம் வைக்கணும் போல. உனக்கு இதுக்கா நான் கீல்ஸ் வாங்கித் தந்தேன்.
வினித் காலை பார்த்து பதறிய தியா, அய்யோ..சாரிடா சாரி சாரி. நான் பழைய நினைவிலே செய்துட்டேன்.
“என்ன? இவ்வளவு பெரிய கீல்ஸ் போட்டதை மறந்துட்ட என்ன யோசிக்கிற?” வினித் கேட்க, அஜய் இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“முதல்ல உட்காருடா” என்று அவள் காலில் இருந்த கீல்ஸை கழற்றி விட்டு, இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன். “கேட்டியா?”
“ஏன்? உனக்கு என்னை மிதிக்க தோதா இல்லையா?” வினித் கேட்க, அஜய் சிரித்தான். இருவரும் அவனை பார்த்தான்.
பாவி..சிரிக்கிறடா. வலிக்குது என்றான் வினித்.
“சாரிடா” என்று அவன் காலை குனிந்து தியா ஊதிக் கொண்டிருக்க, “வழிய விடு” என்று அவளை நகர்த்தி அஜய் தரையில் அமர்ந்தான்.
ஏன்டா, “அவ மிதிப்பான்னு தெரிஞ்சே காலை அப்படியே வச்சுட்டு இருந்தியா?” என வினித்திடம் பேசிக் கொண்டே அஜய் ஆயின்மெண்ட் ஒன்றை போட்டு விட்டான். இது போல் அக்கறையாக கவனிக்கும் அஜய்யையும் அவள் பார்த்திருக்க மாட்டாள்.
அவ மிதிப்பான்னு தெரிஞ்சு எதுக்குடா காலை நான் வக்கணும். ஏதோ எனக்கு நேரம் சரியில்லை என்றான் அவன்.
“என்னது?” தியா கேட்க, ஒண்ணுமே இல்ல தாயி. என்னை விட்ரு என்றான் வினித். பின் அவர்கள் வேலையை கவனித்தனர்.
“தியா” அஜய் அழைக்க, “என்ன சார் வேணும்?” என்று அவனிடம் வந்தாள்.
“இந்தா” என்று அலைபேசியை கொடுத்து விட்டு அவன் வேலையை தொடர்ந்தான். அலைபேசியில் அவளது பொக்கிஷம் பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதியாக அவளும் வேலை செய்து கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் ஒரு தேவைக்காக இணையதளத்திற்குள் சென்றாள். அவளது அலைபேசியில் நிறைய குறுஞ்செய்தி வந்திருந்தது. அவள் ஆன் செய்யவும் வந்த சத்தத்தில் அஜய்யும் அவளை கவனித்தான்.
அவளுடைய நண்பர்கள் நட்சத்திரா- சிம்மாவிற்கு வாழ்த்தை கூறி காமெடியாகவும் சீரியசாகவும் செய்த செய்தியை பார்த்து புன்னகையுடனும் கவலையுடனும் பார்த்தாள். பின் நினைவு வந்தவளாக சிம்மாவிற்கு அழைக்க எண்ணினாள். ஆனால் தயக்கமாக இருக்க விட்டு விட்டாள். அவளும் சில செய்தியை அனுப்ப, அவளுக்கு கால் வந்தது.
“சொல்லுடா” என்று காதில் அலைபேசியை வைத்துக் கொண்டே அவள் முடித்த பைல்களை அஜய் மேசையில் வைத்து விட்டு, “எனக்கு ஒன்றுமில்லை. நியூஸ்ல்லயா” என்று அஜய்யை பார்த்து, பின் அமைதியாக “யாருக்கும் ஏதுமில்லை” என்றாள்.
என்னை விடு. “மனு என்ன செய்றா? சாப்பிட்டீங்களா?” என விசாரிக்க..ம்ம், சாப்பிட்டோம்.
நான் இனி தான்..
எதுக்கு? கொன்றுவேன். நான் வினித்துக்கும் எடுத்துட்டு வந்துருக்கேன். நாங்க சேர்ந்து சாப்பிடுவோம்.
உனக்கெல்லாம் இல்லை. போடா. அதான் உன்னோட ஆள மாலை மீட் பண்ணப் போறேல்ல. முடிஞ்சா தியாவிற்கு பானிபூரி வாங்கிட்டு வந்து தா..
“வாட்? முடியாதா?” சரிடா..நான் உன்னை கவனிக்கிற விதத்துல்ல கவனிச்சுக்கிறேன் என்று முகம் மலர தியா பேச அஜய் அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென அமைதியானாள். “இருக்கேன் சொல்லு?”
அரசா, போதும்..என்னால முடியல. மொக்க போடாத. எதுவும் செய் என்று அலைபேசியை வைத்து விட்டாள்.
மீண்டும் அழைப்பு வர, “என்னடா பிரச்சனை?” அவள் கோபமாக கேட்க, ஹ.ஓ..ஐ அம் சாரி சாரி என்று “நான் எதுக்கு சாரி சொல்லணும்?” நான் கோபமா இருக்கேன். கால் பண்ணாதீங்க என தியா மீண்டும் வைக்க, மீண்டும் அலைபேசி ஒலித்தது.
அஜய் பொறுக்க மாட்டாமல் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான். “சார்” என்று அவள் அழைக்க, “மறுபடியும் சாரா?” அண்ணா சொல்லுன்னு சொன்னேல்ல சிம்மா குரல் கேட்க, அதை கேட்டவாறு அவளை பேச சொல்லி சைகை செய்தான் அஜய்.
அவள் அமைதியாக இருக்க, “பேசு” என்றான் அஜய்.
“அண்ணாவா? அதெப்படி? சொல்லாமல கொல்லாமல் கல்யாணம் பண்ணீட்டீங்க? மேம் மேரேஜூக்கு நாங்க என்ன கிப்ட்லாம் பண்ணலாம்ன்னு பேசி வச்சிருந்தோம் தெரியுமா?” அதை விட அன்று உங்க ஸ்டேசன்ல்ல வந்து சொன்னேன்ல்ல. “மேம் முகத்தை கவனிச்சீங்களா?” என தியா கேட்டாள்.
அய்யோ கடவுளே! “நான் என்ன கேட்டேன்? நீங்க இப்படி பர்சனல் எல்லாம் பேசுறீங்களே?” என அஜய்யை பார்த்துக் கொண்டே தலையில் அடித்தாள்.
“என்ன கேட்ட?” சிம்மா கேட்க, அதான் மேரேஜ் எக்சைட்மென்ட். “அப்புறம் பயந்தாங்களா?” என தியா கேள்விகளை அடுக்க, “ஹப்பா..எத்தனை கேள்வி கேக்குற? நான் தான் இப்படி எல்லாரிடமும் கேட்டு பழக்கம்?” சிம்மா சொல்ல, விசயத்தை சொல்லுங்க.
இல்ல, அவ பயப்படல. சந்தோசமா இருந்தா. அதுவும் அவளோட பெற்றோரும் என்னோட பெற்றோரும் வெகு வருடங்களுக்கு பின் பேசினாங்கல்ல. மேடம் ஹேப்பி தான்.
“நீ சொல்லு? அந்த அஜய் ஏதாவது டிஸ்டர்ப் பண்றானா?” சிம்மா கேட்க, தியா சட்டென அஜய் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி, “நான் அப்புறம் கால் பண்றேன்” என்று சொல்லி அணைக்க, அவளை நெருங்கிய அஜய் அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கினான்.
சார், ப்ளீஸ் எதுவும் யாருக்கும் தெரியாது. நீங்களா எதுவும் சொல்லிடாதீங்க என்றாள்.
“என்னை பற்றி கேட்டான்ல்ல? நீ ஏன் எதுவும் சொல்லாமல் அலைபேசியை வச்சுட்ட?” அஜய் அவளை நெருங்கி வந்தான். அவள் அவளது மேசையில் இடித்து நிற்க, நான் உன்னை என்ன செய்தேன்னு சொல்லி இருக்கல்லாம்ல்ல.
இல்ல, சொல்லத் தோணலை என தியா முகத்தை திருப்பினாள்.
“ஏன் தோணலை?” என அஜய் அவள் இரு கன்னத்தையும் அவன் ஒரு கையால் இழுத்து அவள் கண்கள், மூக்கு, உதடு என ஆழமான பார்வையை கிரக்கமுடன் செலுத்த, அவள் கண்கள் படபடத்தது. அவள் இதழ்கள் நடுங்கியது.
“சொல்லு? ஏன் சொல்லலை? சொல்லி இருந்தால் அவன் உன்னை என் பக்கமே விட்டிருக்க மாட்டேனே!” அஜய் கேட்க, அவள் இதழ்களில் மெதுவாக அவன் இதழ்களால் தீண்ட, அவள் கண்களை மூடினாள்.
அவன் கைகளோ அவளது தோளை அழுந்த பற்றி இருக்க, அவள் இதழ்களில் மென்மையாக முத்தம் கொடுக்க வந்து கொடுக்காமல் நகர்ந்து அவளை பார்த்தான். அவள் கண்கள் திறக்கப்பட, அவன் தள்ளி நிற்பதை பார்த்து..”சாரி சார்” என்று நகர இருந்தவளை இழுத்து அணைத்து, “ரொம்ப பயந்துட்டியா?” உன்னை டார்கெட் பண்ணுவான்னு நினைக்கலை என்று, உனக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயந்துட்டேன் என பெருமூச்செடுத்து விட்டு கண்கலங்க நகர்ந்தான்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என தியா அஜய்யை பார்த்து, அன்று “அந்த பப்ல்ல நடந்தது வீடியோவாக பதிவாகி இருக்குமா?” என கேட்டாள்.
இப்ப இல்லை. நான் அன்றே அழிச்சுட்டேன் என்றான் அவன்.
“ஆனால் என் மனசுல அந்த காயம் அழியல” என்று கண்ணீருடன் அவள் இடத்தில் அமர்ந்தாள்.
சாரி, அன்று முட்டாள் தனமாக அவன் சொல்ல, “ஓ.கே சார்” என்று கண்களை துடைத்து வேலையை கவனித்தாள் தியா. அஜய்யால் தான் கவனம் செலுத்த முடியாமல் போனது. அவள் சொன்ன காயம் அவன் கொடுத்ததாயிற்றே! அப்பொழுது அவள் யாரோ ஒருத்தி. ஆனால் இன்று அவள் தான எல்லாம் என்று அவன் நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டான். அவள் அவ்வப்போது அவனை பார்த்துக் கொண்டு தான் வேலை செய்தாள்.