அத்தியாயம் 7

வெளிநாட்டு படப்பிடிப்புக்காக ரகுராம் சென்று ஒருவாரமான நிலையில் வீட்டில் இருக்கவே விக்ரமுக்கு பிடிக்கவில்லை. மற்றுமொரு காரணம் பாரதி. அவளை பற்றி நண்பனிடம் மட்டும் தானே பகிர்ந்துகொள்வான். அவனிடம் புளம்பாமல் இவனுக்குத் தான் தூக்கம் வராதே.

ரகுராம் இல்லாமல் வீடு வெறுமையாக இருந்தாலும், பாரதியின் நினைவுகளோடு விக்ரம் ஆனந்தமாகத்தான் இருக்கின்றான்.

அடிக்கடி பாரதியை கனவில் காண்பவன் தான். தெளிவில்லாத சம்பவங்கள். எழுந்தால் சிலது மறந்து கூட போய் இருந்தது. அப்பொழுது யார் அவள் என்று தெரியவில்லை. இன்று அவள் அவனருகிலையே கண் முன் இருக்கின்றாள். பாரதியை பற்றி மட்டும் எண்ணுவதாலையே என்னவோ இன்று அவளை கனவில் கண்டான். மிக நீண்ட கனவு. கண்ட கனவை எண்ணியவாறே விக்ரம் காரியாலயம் செல்ல தயாரானான்.

எங்கோ ஒரு குளக்கரை. அதிகாலை பொழுது தனியாக நடந்துக்க கொண்டிருந்தவன் அங்கிருந்த கல்லின் மீது ஏறி “விக்ரம்….” என்று தன் பெயரை கத்தினான்.

மனம் முழுவதும் எதோ ஒரு வித ஆனந்தம். யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பியவன், கால் இடறி குளத்தில் விழுந்து விட்டான். நீச்சல் தெரியாத அவன் உள்ளே செல்ல கண்கள் சொருகலானான்.

யாரோ அவன் கையை பிடிக்க, மெல்ல கண்களை திறந்தவனுக்கு காணக் கிடைத்தது அவள் உதடுகள். யார் என்று மேலும் பார்க்க முயன்றவனை அவள் மேலே இழுக்க, அவள் உதட்டோரம் இருந்த மச்சத்தை பார்த்தவாறே மயங்கலானான்.

இருமியவாறே அவன் கண்களை திறக்க, அங்கே ஒரு அழகான பெண் “ஆர் யு ஓகே?” என்று அழகாக சிரித்தாள். அவள் வைஷ்ணவி.

பேசக் கூட முடியாமல் இவன் இரும, ரகுராம் அவனருகில் ஓடி வந்து இவனை சுமந்து கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓட, கூட இருந்தவளும் ஓடாத குறையாக இவர்களோடு வந்து சேர்ந்தாள்.

கண்விழித்த விக்ரமின் கையை பிடித்தவாறு வைஷ்ணவி காதல் பொங்கும் பார்வையோடு அமர்ந்திருக்க, “இந்த பொண்ணு தான் உன்ன காப்பாத்திச்சு. இவ மட்டும் இல்லனா என்னவாகி இருக்கும். லவ் பண்ணுறேன்னு சொன்னது மட்டுமில்லாம, உன் உயிரக் காப்பாத்த, இவ உயிரை பணயம் வச்சியிருக்கா” அதிகாலை குளத்து நீரின் குளிரை எண்ணி நடுக்கத்தோடு சொன்ன ரகுராம் அவள் தைரியத்தை எண்ணி சிலாகிக்க வேறு செய்தான்.

அவளிடமிருந்து கையை பிரித்தெடுத்தவாறே “யாரு இவ என்ன காப்பாத்தினாளா? எப்படி காப்பாத்தினாளாம்? கரையில இருந்து தூண்டில் போட்டு காப்பாத்தினாளா? இல்ல வலை வீசி காப்பாத்தினாளா?” ஏளனமாக கேட்டான் விக்ரம்.

“என்னடா சொல்லுற?” விக்ரமிடம் காதலிக்கிறேன் என்று சொன்ன போது அவன் மறுத்ததினால் அவனை குளத்தில் தள்ளி காப்பாற்றுவது போல் நாடகமாடி அவன் மனதில் இடம் பிடிக்க எண்ணுகிறாளோ என்று சந்தேகத்தோடு வைஷ்ணவியை முறைக்கலானான் ரகுராம்.

“பின்ன தண்ணில குதிச்சி என்ன காப்பாத்தினவ ட்ரெஸ்ஸு கூடவா நனையாம இருக்கும்?” நக்கலாக சிரித்தான் விக்ரம்.

“அட ஆமா…” என்று ரகுராம் யோசிக்க,

“நான் அப்போவே ட்ரெஸ்ஸ மாத்திட்டேன்” என்று பச்சையாக புளுகினாள் வைஷ்ணவி.

“என்னமா பொய் சொல்லுற?” ரகுராம் கோபமாக

“நான் என்ன கோமாலையா இருந்து எழுந்தேன். ரகுராம் என்ன தூக்கிட்டு வரும் போதே சுயநினைவுக்கு வந்துட்டேன். தண்ணி குடிப்பட்டதால தொண்டையும், நெஞ்சும் எரிச்சலாக இருந்ததால பேசல. மூச்செடுக்க கொஞ்சம் சிரமமாக இருந்ததால சோர்வா கண்ணை மூடிக்கிட்டு இங்க நடந்த எல்லாத்தையும் கேட்டுகிட்டு தான் இருந்தேன். என்னமா நீ பிளாவிடுற?” என்றதும் முகம் வெளிறினாள் வைஷ்ணவி.

விக்ரம் அவனை காப்பாற்றியவளின் உதட்டோரம் இருந்த மச்சத்தை தான் பார்த்து விட்டானே. அதை சொல்லாமல் மறைத்தவன்

“என்ன நான் கண்ணை முடித், திறந்து பதினஞ்சு நிமிஷம் இருக்குமா? நீ ட்ரெஸ்ஸ மாத்தவே இல்ல. அப்படியே மாத்தியிருந்தாலும் உன் முடி காஞ்சே இருக்காதே” என்று அவள் கூந்தலை பார்க்க, ஒரு சொட்டும் நனையாமல் காற்றிலாடி அவளை காட்டிக் கொடுத்திருந்தது.

விக்ரம் குளத்தில் விழுவான் அவனை காப்பாற்றிய பின் மாற்றிக்கொள்ள மாற்றுத்துணி கையோடுதான் கொண்டு வந்திருப்பாளா? இது கூட புரியாமல் அவள் சொன்னதை நம்புவானா விக்ரம். அதுவும் சாட்ச்சியாக ரகுராம் இருக்கும் பொழுது சரளமாக பொய் சொன்னவளை ஏளனமாக பார்த்ததோடு முகத்தை திருப்பலானான்.

துணியை மாத்தினேன் என்று பொய் கூறியவளுக்கு தலையை துவட்டினேன் என்று பொய் கூற முடியவில்லை. மாட்டிக் கொண்டு முழித்ததோடு, அவள் பொய் கூறியதற்கு சாட்ச்சி ரகுராம் தானே. அவன் தான் இவள் பொய் சொல்கிறாள் என்று கூறி விட்டானே. இதற்கு மேல் என்ன பேச? விக்ரமை காதல் பொங்க பார்த்தவள் இப்பொழுது அச்சத்தோடும், வெறுப்போடும் பார்கலானாள்.

“இவன் உசுர காப்பாத்தினவ என்று உன் மேல கரிசனை வந்தது. ஆனா நீ… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” ரகுராம் முகத்தில் அடித்தது போல் கூறிவிட, அவமானம் தாங்காமல் அங்கிருந்து ஓடினாள் வைஷ்ணவி.

“ஆமாடா மச்சான் உன்ன யாரு தான் காப்பாத்தினாங்க? ஒருவேளை குளத்துல பேய், பிசாசு இருக்குமோ? நோ, நோ பேயா இருந்தா, உன்ன தண்ணிக்குள்ள இழுத்திருக்கும். பிசாசா இருந்தா தண்ணிக்குள்ள உன்ன போட்டுத்தள்ளியிருக்குமே. தேவதை…. வாய்ப்பில்லை, ராஜா வாய்ப்பில்லை” தனியாக பேசியவாறே விக்ரமிடம் சந்தேகம் கேட்டான் ரகுராம்.

“அது ஒரு பொண்ணுதான். ஆனா நான் அவ பேஸை பார்க்கல” பார்க்கவில்லையே. பார்க்க முடியவில்லையே. பார்க்கும் நிலைமையிலையே நான் இல்லையே என்ற சோகம் அவன் குரலிலும், முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

“மூஞ்சப் பார்க்காம எப்படிடா பொண்ணுன்னு சொல்லுற?” சந்தேகம் என்று வந்தால் அதை கேட்காமல் விடமாட்டான் ரகுராம்.

உதடுகளை பார்த்தேன் என்று சொன்னால் நண்பன் கலாய்ப்பான் என்று “ஆ… நான் அவ முடியப் பார்த்தேன்” என்றான்.

“ஓஹ்… ஐ சி. ஆமா… உன்ன காப்பாத்தினவ எங்க போனா? இந்த பிசாசு வைஷ்ணவி எப்படி உள்ள வந்தா?” ரகுராமின் சந்தேகங்கள் தீரவேயில்லை.

“எனக்கு மூச்சுக்கு கொடுத்து காப்பாத்தினவ, நான் கண்விழிக்கல என்றதும் யாரையாச்சும் கூப்பிடலாமென்று ஓடியிருப்பா, அதைப் பார்த்த வைஷ்ணவி என்கிட்ட வந்திருப்பா” என்றான் விக்ரம்.

அது தான் உண்மையும் கூட. விக்ரமை பின் தொடர்ந்து வந்த வைஷ்ணவி விக்ரம் குளத்தில் விழுந்ததும் பதட்டமடைந்தது ஒருநொடிதான். யாரோ குளத்தில் குதித்து அவனை காப்பாற்றவும் அருகில் செல்லலாமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, காப்பாற்றியவளோ வைஷ்ணவி இருந்த திசைக்கு எதிர் திசையில் ஓடி மறைந்ததும், இவள் போய் விக்ரமின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

வைஷ்ணவி இருந்த திசையிலிருந்து ரகுராம் வந்ததால் எதிர் திசையில் ஓடியவளை பார்க்கத் தவறினான்.

“உன் உசுரைக் காப்பதினவல எங்க தேட? எப்படி தேடி நன்றி சொல்ல?” பெருமூச்சு விட்டான் ரகுராம்.

அலாரம் அடிக்கவே கண்விழித்த விக்ரமுக்கு கனவில் தன்னை காப்பாற்றியது யார் என்று நன்றாகவே புரிந்தது. பாரதியை அணு அணுவாக ரசித்தவனுக்கு அவள் உதட்டோரம் இருக்கும் மச்சத்தை பற்றி சொல்லவா வேண்டும்? அவள் தனக்கு மூச்சுக் கொடுத்து காப்பாற்றியது விம்பமாக தெரிய. “என் பர்ஸ்ட் கிஸ்ஸ இப்படி கனவுல வந்து திருடிட்டாளே” தனது உதடுக்கை தொட்டுப் பார்த்தவனுக்கு அவள் இப்பொழுது முத்தமிட்டது போல் தித்திக்க, விசிலடித்தவாறே வண்டியில் ஏறியிருந்தான்.

இரவு தூக்கம் தொலைந்ததே

ஒருவித ஏக்கம் வந்ததே

வாழ்கை இங்குதான்

உன் கையிலே……ஏ……

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்

பாயும் ரத்தம்

உறங்கும் போது ஏதேதோ

உளறல் சத்தம்

கனவுக்குள்ளே கண்ணாடி

வளையல் யுத்தம்

என் கவிதை கிறுக்குகெல்லாமே

நீதான் அர்த்தம்

உயிர் கூந்தல் ஏறி ஓடி

போனதே போனதே போனதே போனதே

இது காதலா முதல் காதலா

ஒரு பெண்ணிடம் உருவானதா

இது நிலைக்குமா

நீடிக்குமா நெஞ்சே

உன் பார்வையில்

உன் ஸ்பரிசத்தில்

உன் வாசத்தில் உன் கோபத்தில்

இதயத்தைதான் அபகரித்தாய்

காரணம் சொல் பெண்ணே

எங்கிருந்து தான் ஓடி வந்தானோ ரகுராம் விக்ரம் வண்டியை எடுக்கும் முன் அமர்ந்து கொண்டான்.

“டேய் எப்படா வந்த” படப்பிடிப்புக்கு வெளியூர் போனவன் அதற்குள் வந்து விட்டானா? என்ற அர்த்தத்தில் விக்ரம் கேட்க,

“இதோ இப்போ தான்” என்று சிரித்தான் ரகுராம்.

“இன்னைக்கும் உஷாரா பாரதி கூட கடலை போடவென்றே என் வண்டியில ஏறிட்டான்” நண்பனை முறைத்த விக்ரம் “உன் வண்டி என்னாச்சு? எப்போ பார்த்தாலும் ஓசிலையே டிராவல் பண்ணு”

விக்ரம் கேலி, கிண்டல் செய்தாலும் இவ்வாறு பேச மாட்டான். விக்ரமின் கோபத்திற்கு காரணம் ரகுராம் பாரதியோடு நெருக்கமாக இருப்பது தான் என்று புரியாமல், “ஒருவேளை அன்னைக்கு நடந்தத மோகனா சொல்லிட்டாளா?” மிரண்டவாறே நண்பனை ஏறிட்டான். மோகனாவிடம் இருந்து தப்பிக்க வேண்டியே வெளியூர் படப்பிடிப்புக்காக சென்றவனை அலைபேசியில் மிரட்டியே வர வைத்திருந்தாள் அவள்.

“என்னடா முழிக்கிற?”

நிச்சயமாக மோகனா சொல்லியிருக்க மாட்டாள் என்று உறுதி செய்தவாறே “நீ என்ன காலங்காத்தால முகத்த உர்ரென்று வச்சிருக்க?”

“ஒரு நல்ல கனவு கண்டேன். அந்த சந்தோசம் உன்ன பார்த்ததும் போய்டுச்சு”

ரகுராமுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நண்பன் கண்ட கனவை பற்றி விசாரித்தான்.

விக்ரம் கனவு கண்டேன் என்றால், வழமையாக ரகுராம் விசாரிப்பான். அவன் கனவாக காண்பதே அவனுடைய இறந்த காலம் தானே. அது அவனுக்கு நல்லதா? கெட்டதா? என்று அறிந்துகொள்ள வேண்டும் என்பது டாக்டரின் அறிவுரை.

“அத எதுக்கு உனக்கு சொல்லணும்?” ரகுராமின் மேல் இருந்த கோபத்தை இவ்வாறு காட்ட,

“நான் என்னடா பண்ணேன்?” நண்பனின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. ஆனாலும் அவன் பாரதியைத் தவிர வேறு எதையும், யாரையும் கனவில் காண மாட்டான் என்று அறிந்திருந்தமையால்  “நீ கனவுல கண்டது பாரதியத் தானே… என்ன இன்னைக்கு கனவுல ரெண்டு பேரும் மாலையும் கழுத்துமா வந்து உன் அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்குனீங்களா? உன் அப்பா விட்ட உதையில நீ முழிச்சிகிட்டியா?” என்று கிண்டல் செய்தான்.

பாரதியை தன்னோடு சேர்த்து ரகுராம் பேசியதும் அவன் மேலிருந்த கோபமெல்லாம் பறந்தோடியது.

“பாரதிதான் வந்தா. குளத்துல விழுந்த என்ன காப்பாத்திட்டா. எனக்கு நீச்சல் தெரியல்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு பாரேன்” பாரதி தன் கனவில் வந்ததே தன்னை காப்பாற்றத்தான் என்று பேசினான் விக்ரம்.

“அடப்பாவி… நடந்த சம்பவத்தை மறந்து, அதையே கனவா காணுற. உன்ன என்னனு சொல்ல?” நண்பனை திட்டவும் முடியாமல், உண்மையை சொல்லவும் முடியாமல் திண்டாடினான் ரகுராம்.

வண்டியிலிருந்து இறங்கிய விக்ரம் “வண்டிய பார்க் பண்ணிட்டு உள்ள வா” எங்கே அன்று போல் இன்றும் ரகுராம் பாரதியோடு முதலில் பேசுவானோ என்று அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று மறைந்தான்.   

 உள்ளே வந்த ரகுராம் மோகனாவை கண்களால் தேடி அலையலானான்.

“அவ தேடும் போது நான் ஓடியொழிஞ்சேன். இப்போ அவ என் கண்ணுல சிக்க மாட்டேங்குறாளே”

மோகனாவை முத்தமிட்டு ஓடிய ரகுராம் குற்ற உணர்ச்சியால் அவள் முன் வராமல் கண்ணாமூச்சி ஆடலானான்.

திடிரென்று அவள் முன்னால் வந்து விட்டால் “சாப்டியா? வேலையில செட்டாகிட்டியா?” என்று கேட்பவன் வராத அலைபேசி அழைப்பில் உரையாடியவாறு அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் ஓடிவிடுவான்.

“நான் அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன்? இவ கண் முன் வந்தா மட்டும் ஹார்ட் பீட் ரைஸ்ஸாகுது?” நெஞ்சை நீவிவிட்டவன் “இவ கண்ணுலையே படக்கூடாது” என்று வெளியூர் சென்றிருந்தான்.

ரகுராம் ஆடும் கண்ணாமூச்சி மோகனாவுக்கு புரியாமலில்லை. அவனை எப்படி தன் வழிக்கு கொண்டுவருவது என்று யோசிக்க, அவனோ சொல்லாமல், கொள்ளாமல் வெளியூர் சென்றுவிட்டான் என்றறிந்ததும் அவனை அலைபேசியில் பிடிக்க முயன்றாள்.

இவள் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அவன் ஏற்பானா? அலைபேசி அடித்து ஓயும் வரையில் பலிப்புக் காட்டுவான்.

ரகுராம் புறக்கணித்தால் மோகனா அமைதியாவாளா? விக்ரமின் அலைபேசியிலிருந்து அழைக்க ரகுராம் உடனே எடுத்திருந்தான்.

“நீயெல்லாம் ஆம்பளயான்னு கேக்குறேன். பேசாம சாரி கட்டி, பொட்டு வச்சிக்க. நீ அதுக்குத்தான் லாயக்கு. முத்தம் கொடுத்துட்டு மன்னிப்புக் கூட கேட்கல. இதுல இக்னோர் வேற பண்ணுறியா? எத்தனை நாளைக்கு ஓடி ஒழியிறன்ணு நானும் பாக்குறேன். ஒழுங்கு, மரியாதையா வந்து மன்னிப்புக் கேட்குற. இல்ல நடக்கிறதே வேற. சீக்கிரம் வா. வந்து சேரு” அண்ணனிடம் சொல்வேன், அப்பாவிடம் சொல்வேன் என்று மிரட்டாமல், அவளுக்கே உண்டான பாணியில் மிரட்டியிருந்தாள். 

நிச்சயமாக ஆளவந்தானிடம் போய் நிற்கமாட்டாள். ஆனால் விக்ரம் அவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்? “உங்கப்பாவை, எங்கப்பா ஜெயிலுக்கு அனுப்பினதால பழிதீர்க்க என் தங்கச்சிய பயன்படுத்திக்க பார்க்கிறியா?” என்று ஒருவார்த்தை கேட்டு விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் தான் ரகுராம் மோகனாவிடமிருந்து ஓடியொழியக் காரணமே.

“ஆமா, எத்தனை நாளைக்குத்தான் ஓடியொழிய முடியும்? மன்னிப்புக் கேட்டு விடலாம்” என்ற முடிவுக்கு வந்த ரகுராம் ஊர் திரும்பியவுடன் மோகனாவை தேடி வந்தான்.

அவளோ இயக்குனர் சதீஷ் உடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அதை பார்த்ததும் ரகுராமுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அவர்களின் அருகே சென்று என்ன பேசுகிறார்கள் என்றும் பாராமல் அவள் கையை பற்றியவன் அவளை இழுத்துக் கொண்டு தனதறைக்கு நடந்தான்.

பின்னாலிருந்து கையைப் பற்றியது யார் என்று அதிர்ந்தவாறு பார்த்த மோகனா, ரகுராம் இழுக்கவும் “ஏய் என்ன பண்ணுற கைய விடு” என்றவாறே அவனோடு நடந்தாள்.

“பேசாம வா” எதற்கு இவ்வளவு கோபம் என்று உணராமலே கோபம் கொண்டவன், அவள் வர மறுத்தால் தூக்கிச் சென்றிருப்பான் போலும்.

ரகுராம் அறைக் கதவை சாத்தியதும், “என்ன?” என்று கண்காளையே மோகனா கேட்கலானாள்.

இயக்குனர் சதீஷோடு அடுத்த விளம்பரத்துக்காக வகுத்த திட்டங்களை கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருந்தாள். பின்னாலிருந்த பார்த்த ரகுராமுக்கு அவள் கையிலிருந்த கோப்பும் தெரியவில்லை. என்ன பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

“இவனோடு இவளுக்கு என்ன பேச்சு?” தன்னையும் அறியாமல் எழுந்த கோபத்தில் இழுத்து வந்தவனால் அவள் கண்களை பார்த்ததும் பேச்சே வரவில்லை.

முக்கியமான விஷயம் பேசும் பொழுது எதற்காக இழுத்து வந்தானென்று புரியாமல் பார்த்த மோகனா அவன் பேசாமல் இருக்கவே “என்ன பிரச்சினை?” என்று கேட்க, முழித்தவன் அவள் கையை விடாது பிடித்திருப்பதை பார்த்து கையை உதறினான்.

இறுக்கப் பிடித்திருந்தவன் கையை உதறியதும் வலிக்கவே முகம் சுளித்தாள். ரகுராம் அவளை பார்த்தால் தானே அவள் வலி புரியும். என்ன செய்வது? என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறலானான்.    

அவன் தடுமாற்றம் அவள் கண்களுக்குள் நுழைந்தாலும் முளையை எட்டவில்லை. “எதுக்கு இப்போ சதீஷ் கூட பேச விடாம கூட்டிட்டு வந்த? பாரு பைல் கூட என் கைல. இத வேற கொடுக்கணும்”  ஒரு வாரம் கழித்து அவனை பார்த்ததில் மனம் மகிழ்ந்தாலும், முகத்தில் காட்டாது அண்ணன் கொடுத்த வேலை தான் முக்கியம் என்பது போல் பேசினாள்.  

“ஓஹ் ஒர்க் ரிலேடட்டாகத்தான் பேசினாளா? இது தெரியாம இழுத்துட்டு வந்துடேனே. ஆமா நான் இப்போ எதுக்காக இவள இங்க கூட்டிட்டு வந்தேன்” புரியாமல் முழித்தான் ரகுராம்.

அவன் முழிக்கவும் “என்ன தனியா கூட்டிட்டு வந்து மன்னிப்பு கேட்க போறியா” என்று கேட்டாள் மோகனா.

என்ன சொல்வது என்று யோசித்தவனுக்கு அவளே பதிலை எடுத்து கொடுத்தும் மேலும், கீழும் தலையசைத்து சமாளிக்கலானான்.

“கொரிடோர்ல வச்சி கிஸ் பண்ணிட்டு தனியா கூட்டிட்டு வந்து சாரி சொல்ல பாக்குறியா பாடிசோடா” அவனை பொய்யாக முறைத்தாள்

“அதான் யாரும் பார்க்கலையே. எங்க வச்சு மன்னிப்பு கேட்டா என்ன?” அவள் திட்டவும், இவன் ஈகோ தட்டியெழுப்பப்பட்டு திமிராக பேசலானான்.

“ஓஹ்… எப்படி மன்னிப்பு கேட்கப் போற? கால்ல விழப் போறியா?” அவன் கோபம் கொள்ளவும் இவள் சீண்ட ஆரம்பித்தாள்.

அது புரியாமல் இவள் என்றும் தன்னை மதிக்க மாட்டாள். இவ்வளவு கீழ்த்தரமாக எண்ணுகிறாளே என்று சினம் தலைக்கேற, “கால்ல விழனுமா? நினைப்புதான் உனக்கு” தான் அப்படி ஒன்றும் பெரிய தவறை செய்து விடவில்லை என்பது போல் பேசலானான்.

“ஓஹ்…  அப்போ மன்னிப்பு கேட்க மாட்டியா?” குரும்புத் தலை தூக்க, சிரிப்பை அடக்கியவாறு நின்றாள்.

“கேக்க மாட்டேன். போ… போ… இடத்தக் காலி பண்ணு” கையை அசைத்து துரத்தலான்.

“அப்போ தண்டனையை ஏத்துக்க” பூடகமாக பேசினாள்.

“தண்டனையா? என்ன தண்டனை?” ஒரே ஒரு முத்தம் கொடுத்தது குற்றமா? மன்னிப்பு கேட்க சொன்னாள், மாட்டேன் என்றதும் தண்டனையை ஏற்றுக்கொள்ள சொல்கிறாள். அப்படி என்ன தண்டனை கொடுக்கப் போகிறாள் என்று ரகுராம் அவளையே பார்த்திருக்க, அவளோ அவனருகில் வந்து அவனை முத்தமிடலானாள்.

அவளை தள்ளிவிடக் கூட தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ரகுராம்.

“நீ கொடுத்தத, திருப்பிக் கொடுத்துட்டேன். இனி நமக்குள்ள எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்கக் கூடாது” சிரித்தவாறே கதவை திறந்தவள் மூடிவிட்டு சென்றாள். 

“இதுதான் தண்டனையா? அறிவு கெட்டவ” தனக்குள் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மோகனாவை திட்டித் தீர்க்கலானான் ரகுராம்.

காதல் கண் கட்டுதே

கவிதை பேசி கை தட்டுதே

ஆசை முள் குத்துதே

அருகில் போனால் தேன் சொட்டுதே

பறவையாய் திரிந்தவள்

இறகு போல் தரையிலே விழுகிறேன்

இரவிலும் பகலிலும் தொடரும் உன்

நினைவிலே கரைகிறேன் காற்று

நீயாக வீச என் தேகம் கூச

எதை நான் பேச

கலைந்து போனாயே

கனவுகள் உரச பறித்து போனாயே

இவளது மனச இருள் போலே இருந்தேனே

விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

பார்வை கொஞ்சம் பேசுது

பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய்

எதை பேசிட தெரியாமல் நான்

கூச்சம் கொஞ்சம்

கேக்குது ஏக்கம் கொஞ்சம்

கேக்குது உயிரோ உனை

கேட்டிட தருவேனே நான்

அன்பே அன்பே

மழையும் நீ தானே கண்ணே

கண்ணே வெயிலும் நீ தானே

ஒரு வார்த்தை உன்னை

காட்ட மறு வார்த்தை என்ன மீட்ட

விழுந்தேனே கலைந்து போனானே

பறித்து போனாயே