அத்தியாயம் 37
என்னடி? பட்டாளங்களை காணோம் அன்னம் கேட்க, அவனுக டியூசன் கிளம்ப வேண்டாமா? அதுவும் இல்லாமல் எனக்கு நீ செய்ததை காலி பண்ணிடுவானுக. அதான் நேராக அவனுகள டியூசன்ல்ல விட்டு வந்துட்டேன் என்றாள் ரம்யா.
“எனக்கு” என்று அவள் கையை நீட்ட, அவளுக்கு ஒரு பவுளை கொடுத்தார் அன்னம்.
சோ..எம்மி..என்று கீர்த்து..வா..வா..சாப்பிடலாம். நம்ம அன்னம் ஸ்பெசல் டெலிசியஸ் ஸ்வீட் பொட்டேட்டோ..
பார்க்க கேசரி மாதிரி இருக்கு கீர்த்து கேட்க, சிம்மா அருகே வந்து அமர்ந்த ரம்யா, பார்க்க தான் அப்படி இருக்கும். ஸ்வீட் பொட்டேடோவ வேக வைச்சு மசிச்சு சக்கரை சேர்த்து சாப்பிட்டால் இருக்குமே! ம்ம்..என்று அவள் சொல்ல, சிம்மா வாய் நமநமத்தது.
பாப்ஸ், ”அண்ணாவுக்கு?” சிம்மா கேட்க, “உனக்கில்லாமலா?” என்று அவனுக்கு ஒரு ஸ்பூன் கொடுத்து விட்டு, “இதுக்கு மேல உனக்கு வேணும்ன்னா அம்மாகிட்ட வாங்கிக்கோ” என்று “இந்தா கீர்த்து..” என்று இருவரும் மாறி மாறி சாப்பிட இருவர் வாயையும் பார்த்துக் கொண்டிருந்தான் திலீப்.
அதை கவனித்த ரம்யா, “யோவ் இங்க என்ன பாக்குற?” வேணும்ன்னா அம்மாகிட்ட வாங்கிக்கோ. இப்படி பார்த்த எங்களுக்கு வயிறு வலிக்கும் என்று “கீர்த்து..வா..நாம அக்காவை பார்க்க போகலாம்” என்று எழுந்து கீர்த்துவுடன் அறைக்கு செல்லலாம் என்று அவளை இழுத்துக் கொண்டு, நட்சத்திராவை பார்க்க சென்றாள்.
போங்கடி..என்று அன்னம் திலீப்பிற்கு டீயையும், அதே ஸ்வீட் பொட்டேட்டோவையும் கொடுத்தார்.
“தேங்க்ஸ்” என்று அவன் வாங்கிக் கொண்டு, “இந்த பொண்ணு இப்ப தான் கோபமா போனா?” என்று சிம்மாவை பார்த்தான்.
அவ கோபம் அதிகமா இருக்காதுப்பா. அவளுக்கு சொந்தங்கள் வேணும்ன்னு ஆசை.
அவளோட பெற்றோருக்கு திருமணம் பஞ்சாயத்துல்ல தான் நடந்தது. அவள் அப்பாவின் தவறான போக்கில் தான் மருது பிறந்தான். தாலி கட்டினாலும் அந்நாளே அவ அப்பா அம்மாவை தனியா விட்டு போயிட்டான். அவள் அம்மா உறவுகள் இதை ஏத்துக்கலை. அவள தள்ளி வச்சாங்க.
வெகு வருடத்திற்கு பின் தான் வந்தான். அப்ப மருதுவுக்கு எட்டு வயதிருக்கும். தனியா தான் பிள்ளையை பெத்தெடுத்து வளர்த்தாள். அவன் ஏதோ ரௌடி பசங்க சவகாசம் வச்சிருந்திருக்கான். அது தெரியாமல் இவ தான் உழைச்சு சோறு போட்டாள். பின் ரம்யா பிறந்த அன்று உடல் தாளாது அன்றே இறந்து விட்டாள். அவனை ஏதோ கேஸ்ல்ல உள்ள தள்ளீட்டானுக. இரண்டு வருசத்துல்லயே அவனை கொலை கேஸ்ல்ல தூக்குல்ல போட்டுட்டானுக.
மருது தான் ரம்யா பிறந்ததிலிருந்தே பார்த்துக்கிட்டான். ஆனால் அவனும் சிறியவன் தான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு தான். பிள்ளைய பார்த்துக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டான். அதனால் அவனுடைய அம்மாவோட அண்ணன் பேச உதவ முன் வந்தார். அப்பொழுதிலிருந்து அவளை அவரும் அவர் குடும்பமும் தான் பார்த்துக்கிறாங்க. மருதுக்கு மட்டும் தான் ரம்யாவின் பயம். அதுவும் அவள் தவறு செய்தால் மட்டும் தான்.
மருது அம்மாவோட அண்ணனும் சும்மா இல்லை. மருதுவை விட நம்ம ரம்யான்னா அவருக்கு உசுரு. யாரும் அவளை ஏதும் சொல்லவிட மாட்டார். மருது அவளை திட்டினால் அவள் மாமாவிடம் ஓடி விடுவாள்.
அதான் அவங்க பொண்ணு துளசி. மண்டபத்துல்ல பார்த்தீங்கல்லப்பா. அந்த பொண்ணு துளசிய மருதுக்கு முடிச்சு வைக்கணும்ன்னு அவங்களுக்கும் ரம்யாவுக்கும் ஆசை. ஏன் மருது துளசிக்கு கூட ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் மருது தான் ரம்யாவுக்காக அவன் திருமணம் செய்யாமல் இருக்கான். இவளும் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டேங்கிறான்னு சரியா புலம்புவா.
தம்பி, அந்த பொண்ணை தப்பா பேசாதீங்க. பேச்சு அதிகமா இருந்தாலும் மனசுல எதுவும் வச்சுக்க மாட்டா. கள்ளம் கபடமில்லாத பொண்ணுப்பா. அமைதியா இருக்கிற பொண்ணுங்க தான் நாம எதிர்பார்க்காததை செய்வாங்க என்று அன்னம் திலீப்பை பார்க்க, “நான் பேசிட்டு வரவா?” என சிம்மாவிடம் கேட்டான்.
அவ திட்டினா, “நாங்க பொறுப்பில்லை” என்று சிம்மா புன்னகைத்தான்.
ம்ம்..என்று திலீப் சிரித்த முகத்துடன் நட்சத்திரா அறைக்கு சென்றான்.
கீர்த்தி அர்சுவுடன் விளையாடிக் கொண்டிருக்க, காலை நீட்டிக் கொண்டு நட்சத்திரா தோளில் சாய்ந்து, எனக்கு பயமா இருக்குக்கா. அண்ணா புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். அண்ணி எத்தனை நாள் தான் காத்திருப்பாங்க. அத்தை..ஒரு வருசம் தான் கொடுத்திருக்காங்க என சோகமாக பேசிக் கொண்டிருந்தாள் ரம்யா.
திலீப் கதவை தட்ட நால்வரும் அவனை பார்த்தனர். நட்சத்திரா எழ, “உட்காருங்க” என்று ரம்யாவை பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.
ரம்யா அமைதியாக இருக்க, ஐ அம் சாரி. நீ சின்னபிள்ளை. புரியாம விளையாட்டா பண்ணாலும் தப்புன்னு தான் சொன்னேன். ஆனால் உன்னிடம் இதை எதிர்பார்க்கலை. என் மீதும் தவறு தான் என்று கீர்த்திகாவை பார்த்தான்.
ஓ..”இதுக்கு தான் வந்தீங்களா?” என்ற ரம்யா, “யாருக்கு இவரு?” என்று கேட்டாள்.
நட்சத்திரா, என்ன சொல்லணுன்னு தெரியாமல் இருக்க, நான் திலீப் என்று அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினான். அவள் “வணக்கம்” என்று கிண்டலாக கையை கூப்ப, அவன் விழிகள் விரிந்து ஓ.கே வணக்கம் என்றான் புன்னகையுடன்.
திலீப்..ஓ.கே. நான் பெயர் சொல்லி தான் அழைப்பேன். “உனக்கு ஓ.கே வா?” ரம்யா கேட்டாள்.
ரம்யா, அவர் டாக்டர்.
“அதுனால என்னக்கா?” இவர் மனுசன் தான..
கூப்பிடு. எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றான் திலீப்.
அய்யோ அக்கா, இந்த பாரு இருக்கால்ல..சொல்ல மறந்துட்டேன். அவ சரா கிட்ட லவ்வ சொல்றதுக்குள்ள என்னை கொன்றுவா போல.
“எத்தனை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தேன் தெரியுமா? அவன் பஸ்ல போனா என்ன?” பஸ் ஸ்டாப் வரை கூட தான வர்றான். அப்ப சொல்லலாம். ஸ்கூல்ல கூடவே தான் இருக்கான். “சொன்னா தான் என்னவாம்?” அவன் சென்ற பின் அழுறா.
ரம்யா, லவ்வ அவ்வளவு ஈசியா சொல்ல முடியாது. அது ரொம்ப கஷ்டம் என்று நட்சத்திரா கவலையுடன் கூற, அவளது தோளில் ரம்யா அவள் தாடையை வைத்துக் கொண்டு, “ஏங்கா அவ்வளவு கஷ்டமா இருக்குமா? நீங்க அண்ணாகிட்ட அதான் சொல்லலையா?” எனக் கேட்டாள்.
“அப்படின்னு முழுசா இல்லை” என்ற நட்சத்திரா கண்கள் கலங்கியது.
ம்ம்..கஷ்டமா தான் இருக்கும். அதை விட நம்ம காதலிக்கிறவங்கல்ல வேற ஒருவர் திருமணம் செய்யும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றான் திலீப் கரகரத்த குரலில்.
“காதல் தோல்வியா?” வாவ் திலீப்..”நீ லவ் பண்ணீயா?” என்று ஆர்வமாக அவனிடம் வந்தாள் ரம்யா.
“யாரு? அவங்ககிட்ட எப்படி காதலை சொன்ன? அவங்க ஏத்துக்கிட்டாங்களா? எத்தனை வருடக் காதல்? உன்னை ஏமாத்திட்டாங்களா?” என அவள் கேள்விகளை எடுக்க, “செட் அப்” கத்தினான் திலீப். பயந்து நகர்ந்தாள் ரம்யா.
“ஐ அம் சாரி” என்று எழுந்த திலீப் கையை பிடித்த ரம்யா, திலீப் வருத்தப்படாத. உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா லவ்வ சொல்லாத. பிடிச்சிருக்குன்னு சொல்லு. உங்க வாழ்க்கையில கடைசி வரை உங்களுடன் வரும் வாய்ப்பு தர்றீங்களான்னு” வித்தியாசமா முயற்சி செய் என்று அவள் சொல்ல, அவளை பார்த்து விரக்தி புன்னகையுடன் திலீப் சென்றான்.
உடல் பாரமாக இருக்க கண்ணை திறந்தான் விக்ரம். அவனை அணைத்து சுவாதி தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்ணீர்த்தடம் அவளது மாம்பழக் கன்னத்தில் படிந்திருக்க, அதை தொட்டு பார்த்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான். நிம்மதியான உறக்கத்தில் அவள் இருப்பதை ரசித்து பார்த்தான்.
பின் அவன் இருக்கும் அறையை பார்த்தான். விக்ரமிற்கு அனைத்தும் நினைவு வர, தலையை பிடித்துக் கொண்டு சுவாதியை பார்த்தான். அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவனை ஹிப்னடைஸ் செய்ததை பார்த்து மேலும் கோபமான விக்ரம், சுவாதியை முறைத்து அவளை விலக்கி விட்டு எழ, அவனது விலகலில் கண் விழித்த சுவாதி விக்ரமை பார்த்ததும், “விக்ரம்” என அழைத்துக் கொண்டே கீழிறங்கி வந்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே!” என்று அவனை அணைத்தாள்.
அவளை தள்ளி விட்ட விக்ரம், “எனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இங்க அழைச்சிட்டு வந்திருக்க?” எனக் கத்தினான்.
அப்படியில்லை விக்ரம். நீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க. அதான் அழைச்சிட்டு வந்தோம்.
ஓ..குடும்பமா வந்து, “என்ன பரிசோதித்து இருக்கீங்க?” யாரும் எப்படியும் போங்க என்று விக்ரம்..நான் கீர்த்து, சிம்மாவை பார்க்கணும் என நகர்ந்தான்.
சினமாக அவன் முன் வந்த சுவாதி, அவனை ஓங்கி அறைந்தாள். விக்ரம் சீற்றமாக, சுவாதி பேசினாள்.
“யாரும் எப்படியும் போங்கவா? அப்படின்னா என்ன அர்த்தம்? சொல்லுங்க விக்ரம்? உங்களுக்கு உங்க குடும்பம் நல்லா இருந்தா போதும். அப்படித்தான?” சுவாதி சத்தமிட்டாள்.
ஆமா, “அப்படி தான்” என்று விக்ரம் குரல் கம்ம, அவள் கண்ணீருடன் போங்க. இப்ப நேரம் என்னன்னு பாருங்க. மாலையாகிடுச்சு. உங்க குடும்பம் நல்லா இருக்காங்க. யாருக்கும் ஏதும் ஆகலை. அங்கே பிரச்சனையில மாட்டியது உங்க குடும்பம் மட்டுமல்ல எங்க அண்ணா, மாமா, சுருதியும் இருந்தாங்க என்று அமர்ந்தாள்.
தலையை பிடித்த விக்ரம் சுவாதி அருகே வந்து அமர்ந்தான். அவள் எழுந்து கதவை நோக்கி நடந்தாள். விக்ரம் அவளை இழுத்து அணைத்து, “சாரி சுவாதி..” நான் டென்சன்ல்ல என்று அவளை பார்த்தான். அவள் அமைதியாக இருக்க, அவளை சமாதானப்படுத்த முத்தமிட்டான். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்றாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.
இவர்களை பார்க்க வந்த நேகன் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கண்கலங்க நகர்ந்தான். ரகசியனும் ரசிகாவும் எழுந்து இவர்களை பார்தனர்.
ரசி, உன்னோட அண்ணன் எழுந்துட்டார். இரு வாரேன் என்று “மச்சான் நில்லுடா” என்று நேகன் பின் சென்று அவனிடம் பேச, அவன் ரகசியனை அணைத்து அழுதான்.
மச்சான், நீ மூவ் ஆன் ஆகிடு. இல்லை கஷ்டப்படணும் என்றான் ரகசியன்.
என்னடா, “மாம்ஸ் முழிச்சிட்டாரா?” விகாஸ் கேட்க, ம்ம்..வீ, நேகன் மச்சானை வீட்ல டிராப் பண்ணிடு. நாங்க சுவாதியையும், மச்சானையும் அழைச்சிட்டு வாரோம் என்றான் ரகசியன்.
நாங்க..ம்ம்.. ”உன்னை போய் பால் குடிக்கிற பிள்ளைன்னு நினைச்சுட்டேனேடா?” விகாஸ் ரகசியனை கேலி செய்ய, “போடா டேய்..” என்று வெட்கத்துடன் ரகசியன் உள்ளே சென்றான். விக்ரம் சிம்மாவை திட்டிக் கொண்டிருந்தான்.
இரு பெண்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். “நாங்க இல்லாம எப்படி நீ மேரேஜ் பண்ணிக்கலாம்? ரித்துவுக்கும் செய்து வச்சிருக்க?” என்ற விக்ரமின் உரிமையில் கண்கலங்க அமர்ந்திருந்த தங்கையையோ, கோபமாக முகத்தை வைத்திருக்கும் சுவாதியையோ விக்ரம் காணவேயில்லை.
ரகசியன் அதை கண்டு கொண்டு, “சுவாதிக்கு என்னாச்சு?” என்று யோசனையுடன் “வாங்க கிளம்பலாம்” என்று ரகசியன் அழைக்க, ம்ம்..என்று சுவாதியையும் ரசிகாவையும் திரும்பி கூட பாராது முன் நடந்தான் விக்ரம். ரகசியனுக்கு என்ன செய்ய என புரியாமல் இருவர் கையையும் பிடித்தான். சுவாதி கண்ணீர் ரகசியன் கையில் பட்டது.
சுவா..என்று அவன் அழைத்ததில் ரசிகாவும் சுவாதியை பார்த்தாள். “அண்ணா, போகலாமா?” எனக்கு டயர்டா இருக்கு என்று ரகசியன் கையை விட்டு சுவாதியும் முன் சென்றாள். ரசிகா ரகசியனை பார்க்க, “நீ எதுவும் கேட்காத?” நான் பார்த்துக்கிறேன். நீ வருத்தப்படாத உன்னோட அண்ணன் எப்போதும் உன்னோட அண்ணன் தான் என்று ரகசியன் சொல்ல, ரசிகா அவனை அணைத்துக் கொண்டாள் கண்ணீருடன்.
வா..போகலாம் என்று ரகசியன் அவளை அழைத்து காருக்கு வந்தான். சுவாதி முன்னே அமர்ந்திருந்தாள். விக்ரம் காரின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தான்.
சுவாதி..பின்னால போ. ரசி, “இங்க வா” என்று ரகசியன் அழைக்க, சுவாதி சினமுடன் பின் சென்று அமர்ந்து ரகசியனை முறைத்தாள்.
மச்சான், “கார்ல்ல ஏறுங்க” என்று ரகசியன் சொல்ல, ம்ம்..என்று பேசுவதை நிறுத்திய விக்ரம் ரகசியனை புன்னகையுடன் பார்த்தான். நால்வரும் காரில் செல்ல, அலைபேசியை அணைத்து விட்டு சீட்டின் பின்னே சாய்ந்து அமர்ந்தான் விக்ரம்.
மூவரும் அவனையே பார்ப்பது போல் இருக்க, அவன் மூவரையும் பார்த்தான். ரசிகா ஒரு புறம் சோகமாகவும், சுவாதி ஒரு புறம் கோபமாகவும் காரின் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ரொம்ப அமைதியா இருக்கீங்க?” விக்ரம் மெதுவாக சுவாதி தோளில் கையை போட்டான். அவள் அசைய கூட இல்லை. ரகசியனை விக்ரம் பார்க்க, அவன் விக்ரமை பார்த்து கண்ணசைத்தான். இருவரையும் விக்ரம் கவனித்துக் கொண்டே வந்தான்.
கார் நின்றவுடன் ரகசியனும் விக்ரமும் காரை திறக்கும் முன் சுவாதியும் ரசிகாவும் காரை திறந்து கொண்டே வீட்டினுள் ஓடினர்.
சுவாதி..தாத்தா அழைக்க, படிகளில் வேகமாக ஏறி பட்டென கதவை சாத்தினாள் சுவாதி என்றால் ரகசியன் அம்மா ரசிகாவை அழைக்க அவள் படிகளில் ஏறி அவளறைக்குள் புகுந்து கொண்டாள்.
விக்ரம் கார்க்கதவை கூட அடைக்காமல் இருவரின் செயல்களை அவதானித்து, “எதுக்கு இப்படி ஓடுறாங்க?” என நின்று கொண்டிருந்தான்.
ரகசியன் அவனை பார்த்து, “காரை சாத்திட்டு வாங்க” என்று அவன் உள்ளே சென்றான்.
அடியேய் சுவாதி, அவள் அம்மா கத்த, சித்தி..விடுங்க. அவங்களே வருவாங்க என்று ரகசியன் சொல்லிக் கொண்டே அவன் அம்மாவிடம் வந்து, “ரசி மீது கோபமா இருக்கீங்களாம்மா?” எனக் கேட்டான்.
இல்லடா. “என்னாச்சு? சுவாதியும் ரசியும் சண்டை போட்டுக்கிட்டாங்களா?” ரகசியன் அம்மா கேட்டார்.
விக்ரம் அவனை பார்த்துக் கொண்டே அவனருகே வந்து அமர்ந்தான்.
இவங்க பிரச்சனைக்கு காரணமானவங்க பேசினால் தான் இருவரும் வெளியே வருவாங்க என்று சொல்லிக் கொண்டே விக்ரமை பார்த்தான்.
“நானா? நான் என்ன செய்தேன்?” விக்ரம் கேட்க, உங்க தங்கச்சி உங்களுக்காக பதறி இருந்தா. “ஆனால் நீங்க விழித்து வந்து சிம்மா சார்கிட்ட அவ்வளவு உரிமையா பேசுனீங்க?” அவள் அங்கே இருப்பது கூட உங்களுக்கு தெரியல. அதான் கோபமா இருக்கா என்று ரசிகாவை சொன்னான்.
நா..நான்..யோசிக்கலை. “சாரி” என்று ரசிகா அறைப்பக்கம் அவன் செல்ல, சுவாவும் உங்களிடம் தான் கோபமா இருக்கா. ஆனால் எனக்கு காரணம் தெரியாது என்றான் ரகசியன்.
அவளை..என்று சிந்தித்த விக்ரம் இரு பக்கமும் பார்த்து விட்டு முதலில் யாரிடம் செல்ல வேண்டும் என்று புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
“புலியேயானாலும் எல்லா ஆண்களும் வீட்டுக்கு எலி தான்” என்று தாத்தா கூறி சிரிக்க, விக்ரம் அவரை பார்த்து விட்டு தன் தங்கையை பார்க்க சென்றான்.
தாத்தா, “நீங்க சுவாதியை பார்க்க தான இப்படி சொன்னீங்க?” அவர் ரசியை பார்க்க போறார் ஹரிணி கேட்க, அது பசங்க சைக்காலஜி. உனக்கு புரியாது என்று விகாஸ் சொல்ல, அவனை முறைத்த ஹரிணி நேகனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
விக்ரம் ரசிகா அறைக்கு சென்று ரசிம்மா..என அழைத்தான். அவள் திரும்பி நின்று கொண்டாள்.
“என்னோட பேச மாட்டாயா?” விக்ரம் கேட்க, “யாரு நானா?” உனக்கு என்னாச்சோன்னு பதறி உனக்காக அமர்ந்திருந்தேன். ஆனால் உனக்கு நான் கண்ணில் படவேயில்லைல்ல என்று கோபமாக பேசினாள்.
அப்படியில்லைடா. சிம்மா குடும்பம் மொத்தமும் சேர்ந்து கீர்த்துவும் அதான் பயந்துட்டேன். அதுல தான் அவனிடம் பேசிட்டு இருந்தேன். “இதுக்கெல்லாமா கோபிப்ப?”
நீ என்னோட அண்ணன் இல்லை. விக்ரம் அண்ணா இப்படி என்னை ஒரு நாள் கூட அவாய்டு பண்ணதில்லை. உன்னோட குடும்பம் வரவும் என்னை மறந்துட்ட என்று ரசிகா அழுதாள்
“உன்னை மறப்பதா? என்ன சொல்ற ரசி? நீ அவ்வளவு தான் என்னை புரிஞ்சுக்கிட்டியா?” என்று வருத்தமாக விக்ரம் கேட்க, ரசிகா அமைதியாக இருந்தாள்.
அவங்க சாகப் போறாங்கன்னு நினைவு மட்டும் தான் என்னுள் அந்நேரம் இருந்தது. “அதுக்காக உன்னை மறக்கமுடியுமா?” என்னோட வளர்ந்தவ நீ ரசி. நமக்குள்ள இரத்த பந்தம் இல்லைன்னாலும் உறவு இருக்கு. எப்பவும் அம்மா தான் இப்படி பேசுவாங்க. ஆனால் இன்று நீயும் பேசிட்ட.
“எப்பவும் விட்டுக் கொடுக்காமல் பேசுற நீயா? இப்படி என்னிடம் பேசுற?” அதுக்கு காரணம் என் சொந்த குடும்பம்ன்னா..அந்த குடும்பமே எனக்கு வேண்டாம் என்று விக்ரம் கோபமாக அமர்ந்தான்.
இல்லண்ணா..அப்படி சொல்லாத. எனக்கு கஷ்டமா இருந்தது. அதான்..சாரி அண்ணா. உன்னோட சொந்த குடும்பம் உனக்கு வேணும். அவங்க எல்லாரும் அவங்க ஊரார் எல்லாரும் உனக்கு வேணும். நான் உன்னை தினமும் பார்த்தால் மட்டும் போதும் என்று விக்ரமை அணைத்து அழுதாள்.
சாரிடா, “நான் எந்நிலையிலும் உன்னிடம் பேசாமல் இருக்க மாட்டேன்” என்று ரசிகாவிடம் சத்தியம் செய்தான் விக்ரம்.
அண்ணா, சுவாதி உன் மேல கோபமா இருக்கா. “என்னாச்சு?” ரசிகா கேட்க, அவள நான் பார்த்துக்கிறேன். “நீ கீழ போ” என்றான் விக்ரம். அவள் செல்லவும் இவன் சுவாதி அறைக்கு சென்றான்.
சுவாதி படுத்திருந்தாள். கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் கண்களை மூடிக் கொண்டாள்.
என்னோட பேபிம்மா, “என்ன பண்றீங்க?” கேட்டுக் கொண்டே சுவாதி அருகே அமர்ந்தான் விக்ரம்.
அவள் பேசாமல் இருக்க, ஷ்..ஆ..கை வலிக்குதே என திரும்பி அமர்ந்து அவளை ஓரக்கண்ணால் அளவிட்டான். அவள் கண்ணை திறந்து பார்க்க, அவன் மேலும் வலிப்பது போல் நடித்தான்.
வேகமாக எழுந்து அமர்ந்தாள் சுவாதி. அவளை விக்ரம் அவனுடன் இழுத்துக் கொண்டு, “மேடம்க்கு என்ன பிரச்சனையாம்?” என்று கேட்டான்.
“உங்களுக்கு தெரியாதா?” மரியாதையா வெளிய போயிருங்க. இல்ல..சுவாதி நிறுத்த, “இல்லண்ணா..என்ன செய்வீங்க? முத்தம் தருவீங்களா?” விக்ரம் கேட்க,
அஹ்கூம், “இது ஒண்ணு தான் கேடு” என்று கோபித்துக் கொண்டு திரும்பி அமர்ந்தாள்.
“என்னம்மா?” விக்ரம் அவளை இழுக்க, “என்ன விக்ரம் பேசுனீங்க?” குடும்பத்தை பிரிச்சு பேசுறீங்க. தாத்தா பாட்டிக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. கொஞ்சமாவது யோசிச்சீங்களா? அதே போல தான் உங்க குடும்பத்துல்ல என்னை சேர்க்காம பிரிச்சு பேசுவீங்க. “அப்புறம் நாம காதலித்து திருமணம் செய்து என்ன பிரயோஜனம்?”
சுவாதி, கோபத்துல ஏதாவது சொல்லி இருப்பேன்.
அதான் சொல்றேன் விக்ரம் சார். இது சரிவராது என்று அழுதாள் சுவாதி.
“வாட்? என்ன சரிவராது?” விக்ரம் கோபமாக, நாம என்று சொல்லும் முன் அவள் வாயில் கை வைத்த விக்ரம் அவள் முன் மண்டியிட்டு, நான் பேசியது தவறு தான். “நான் என்ன செய்யணும்?” என கேட்க, அவள் பதறி விலகினாள்.
விக்ரம், “என்ன செய்றீங்க?”
கோபத்துல்ல பேசினாலும் அது தவறு தான். அதுக்கு என்னை மன்னிச்சிரு. இனி அப்படி பேச மாட்டேன். கவனமா இருப்பேன்.
“என்ன நடந்தாலும் கூடவே இருப்பன்னு நீ தான சொன்ன சுவாதி?” எனக்காக உன்னோட குடும்பத்தோட சண்டை போட்ட போது அவ்வளவு சந்தோசம் எனக்கு. எனக்குன்னு நீ இருக்கன்னு. ஆனால் இப்ப உன் வாயாலே நாம பிரியணும்ன்னு நீ சொன்னால் என்னால தாங்க முடியாது.
எல்லாரும் உறவுகள் தான். அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி.
“நான் தூக்கி வளர்த்த கீர்த்தியும் நீயும் தான் என்னோட உயிருக்கும் மேல” என்று விக்ரம் கண்ணீர் வடிய, அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் சுவாதி.
சாரி விக்ரம், குடும்பத்துக்காக என்னை விட்ருவீங்கலோன்னு பயந்துட்டேன். அதுக்காக அவங்களும் உங்களுக்கு முக்கியம் தான். அவங்க உங்க உயிர் தான்னு எனக்கு தெரியும். இனி இதை எண்ணி நான் பயப்பட மாட்டேன் என்றாள்.
அப்ப..”எனக்கு கிஸ் வேணும்” என்றான் விக்ரம்.
அவனிடம் இருந்து நகர்ந்த சுவாதி, “இப்ப தர முடியாதே!” என்று எழ, அவளது போர்வை தட்டி விட விக்ரம் மேலே விழுந்தாள்.
“இப்ப தரலாமே!” என விக்ரம் அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.
ச்சீ…போடா என்று அவனை நகர்த்தி விட்டு எழுந்தாள். ச்சீயா? என்ற விக்ரம் அவளை இழுத்து, “அது என்ன ச்சீ?” என்று அவள் இதழ்களில் தன் அச்சாரத்தை பதித்தான்.
இருவரும் புன்னகையுடன் வர, “எப்படியோ பிள்ளைய சமாதானப்படுத்திட்டாரே!” இல்ல மூக்கை உறிஞ்சி உறிஞ்சியே எல்லாரையும் ஓட விட்ருவா சுவா என்று ஹரிணி அப்பா சொல்ல அனைவரும் நகைத்தனர்.
தியா, “சாப்பிட போகலாமா?” அஜய் கேட்க, சார், “நான் கம்பெனி கேண்டின்ல்ல சாப்பிட்டுகிறேன்” என்றாள் தியா.
“அங்க போனா வர நேரமாகுமே!” வினித்தும் நம்முடன் சாப்பிட வருவான் அஜய் கேட்க, நோ சார், அவனை கூட்டிட்டு போங்க. நான் வரலை என்றாள்.
அஜய் அவளையே பார்க்க, “என்னது சார் வேணும்?” தியா கேட்க, எழுந்து அவளது மேசையில் வந்து அமர்ந்து கையை கட்டிக் கொண்டு அவளை பார்த்தான்.
அவள் பயந்து எழுந்து நகர்ந்தாள். அவளை இழுத்து அஜய் தன்னுடன் ஒட்டி நிற்க வைத்து, “என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது? என்னை பார்த்தால் பயமாகவா இருக்கு?” என கேட்க, தியா அவனை பார்ப்பதை தவிர்த்து அவனது கையை எடுக்க முயன்றாள்.
கோபத்தை கட்டுப்படுத்திய அஜய், இறுக பிடித்த அவளது உடலை மெதுவாக நகர்த்த அவள் மூச்செடுத்து விட்டாள். உடனே அவளது இடையை பற்றி அவனுடன் இறுக்க, அவனை விலக்க முயன்று கொண்டு “சார் ப்ளீஸ் விடுங்க” என்றாள்.
“நீ முதல்ல என்னை பார்த்து பேசு” என்றான்.
நான் உங்களுடன் வேலை செய்கிறேன். “இதில் பார்க்க என்ன உள்ளது?”
இருக்கு, “பாரு” என்று அவள் தாடையை பிடித்து அவன் கண்களுக்கு நேராக அவளது கண்களை பார்க்க வைக்க, அவன் கண்கள் அவளது கண்களை தாண்டி இதழ்களுக்கு சென்றது.
அவன் பார்வையில் பயந்த தியா கண்களில் கண்ணீர் வடிந்தது. அவளது இதழ்களை நெருங்கிக் கொண்டிருந்த அவளது உவர் நீரில் அவளது தாடையை விட்டான். தியா கண்ணீர் நின்ற பாடில்லை.
“எக்ஸ்யூஸ்மி சார்” குரல் கேட்க, அவளை நகர்த்தி விட்டு எஸ், “கம் இன்” என்று விலகினாலும் அவளது இடத்தை விட்டு நகரவில்லை அஜய்.
உள்ளே வந்த கிருஷ்ணன் இருவரையும் பார்த்து விட்டு, தியா, “எதுக்கு அழுற?” என்று அஜய்யை பார்த்து, “சார் அவள இன்னும் பழி வாங்க நினைக்கிறீங்களா?” என கேட்டான்.
அஜய் பதில் கூறாமல் அவனையும் தியாவையும் பார்க்க, “சொல்லுங்க சார்? தியா எதுக்கு அழுறா?” கிருஷ்ணன் குரல் உயர்ந்தது.
ம்ம், “நான் பழி வாங்க நினைச்சது உனக்கு தெரியுமா?” என தியாவை பார்த்துக் கொண்டே அஜய் கேட்க, தியா அவனை பயத்துடன் பார்த்தாள்.
“அதான் எல்லாருக்கும் தெரியுமே! அதான் அவளோட அப்பா மீது பழி சுமத்தீட்டீங்களே! ராஜ் சார் கூட அந்த விசுவை நம்ம கம்பெனிய விட்டு வெளிய அனுப்பிட்டாரே!” என அவன் கூற, “வாட்? விசுவா?” என்று கிருஷ்ணன் அருகே வந்தான் அஜய்.
“யார் அந்த விசு?” அஜய் கேட்க, “சார் நீங்க தான கம்பெனி பணத்தை தியா அப்பா இடத்துல்ல அவனை விட்டு வைக்க சொன்னீங்க?” அவனே சொல்லி ராஜ் சாரிடம் மன்னிப்பு கேட்டான். அவன் வேலையை பறித்து எந்த கம்பெனியிலும் பணிபுரியாத படி ராஜ் சார் செய்துட்டார்.
“நீங்க விசு யாருன்னு கேட்குறீங்க?” என கிருஷ்ணன் கேட்க, அவசரமாக அலைபேசியை எடுத்த அஜய், ஆது..நான் தியா அப்பா மீது பழி போட உன்னிடம் தான சொன்னேன். “நீ எதுவும் செய்யலையா?” அஜய் கேட்க, அஜய்..நீ போதையில சொன்ன. ஆனால் சில நேரத்துல நீயே கால் பண்ணி எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லீட்ட என்றான் அஜய் தோழன் ஆதவன்.
“நானா?” சிந்தனையுடன் தலையை தேய்த்தவன். வேண்டாம்ன்னு சொன்னா..”இந்த பிரச்சனை நடந்தப்ப நான் எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொன்னதை சொல்லி இருக்கலாம்ல்ல? என்னடா பண்ணீட்டு இருந்த?” அஜய் சினமாக கேட்டான்.
சாரிடா மச்சான், நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அன்றிரவு டிரிப் போனோம். இப்ப தான் அங்க வந்துட்டு இருக்கோம்.
ப்ரெண்ட்ஸ்ஸா? நீங்கல்லாம் ப்ரெண்ட்ஸ்ஸா டா? வினித்தும் அப்பாவும் முன்பே சொல்வாங்க. நான் தான் கேட்கவேயில்லை. இதை முன்னாடியே சொல்லி இருந்தேன்னா..அநியாயமா அவர் செத்திருக்க மாட்டார்.
“என்னடா?” உன்னோட பேச்சே சரியில்லை என்று லீனா கேட்க, இப்ப தான் சரியாகவும் தெளிவாகவும் இருக்கேன். “இதுல்ல நீங்களும் கூட்டா?” என்று அஜய் கோபமாக கத்தினான்.
“சாரிடா மச்சான். நாங்க பிஸியா இருக்கோம்” என்று அலைபேசியை வைத்தனர். தலையை பிடித்து அமர்ந்தான் அஜய்.
நல்லா நடிக்கிறீங்க சார். “எப்படி டிராமா இவ்வளவு சாதாரணமா பண்றீங்க? இப்ப உங்க ப்ரெண்ட்ஸ் மேல பழியப் போட போறீங்க? கரெக்ட்டா?” என தியா சினமுடனும் ஆற்றாமையுடனும் கத்தினாள்.
“நடிக்கணுமா? நான் எதுக்கு நடிக்கணும்?” நடித்து தான் உன்னை ஏமாற்றணும்ன்னு அவசியம் எனக்கில்லை என்று அஜய் கத்த, “சார் நீங்க இதுல சம்பந்தப்படலையா?” கிருஷ்ணன் கேட்க, கிருஷ்..”உன்னோட பாஸ் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?” தியா கோபமாக கேட்டாள்.
இல்ல தியா, நம்ம அஜய் சாருக்கு விசுன்னு யாருன்னு தெரியாதுன்னு சொல்றாரு. அதுமட்டுமல்ல இவருக்கு இங்க வொர்க் பண்ற யாரையுமே தெரியாது. நம்ம கம்பெனி பக்கீட்டாளார்கள், முதலீடு செய்பவர்கள் கம்பெனிக்கு மீட்டிங் வரும் போது மட்டும் தான் வந்திருக்கார். அதிலும் பெரியதாக ஈடுபாடு காட்ட மாட்டார்.
ராஜ் சார், நம்ம வினித் கிட்ட இவரை கம்பெனிக்குள்ள சீக்கிரமே கொண்டு வரணும்ன்னு பேசியதை என்னை தவிர நம்ம கம்பெனி ஆட்கள் வேற யாரும் கேட்டாங்கன்னு தெரியல. அதனால அவரை வர விடக் கூடாதுன்னு தான் செய்திருப்பாங்கன்னு தோணது. அந்த விசுவநாதனும் சார் மீது பழி விழுந்த மறுநாளே இல்லை. அதான் நேற்று. சிலர் அவர் பாரின் போனதாக பேச்சு என்று அஜய்யை பார்த்த கிருஷ்ணன்,
“உங்கள வசமா தியா விசயத்துல்ல சிக்க வச்சிருக்கானுக. ஆனால் எதுக்கு தியா அப்பாவை பயன்படுத்தினாங்க?” என சிந்தித்தான்.
தியா கோபமாக கிருஷ்ணனை பார்க்க, “தியா..உன்னோட சந்தேகத்தை தீர்த்து வைக்க என்னிடம் ஒரு வழி இருக்கு” என்று கிருஷ்ணன் அவனது அலைபேசியில் ஓர் புகைப்படத்தை காட்டி, “இதுல யாரு விசுன்னு சொல்லுங்க?” என்றான்.
“அதான் எனக்கு தெரியாதே!” அஜய் சொல்ல, “அதான் எனக்கு தெரியுமே!” என உள்ளே வந்தான் வினித்.
வினித், “ஒட்டு கேட்டுகிட்டு இருந்தீயா?” தியா கேட்க, அவளை தவிர்த்த வினித், என்னங்க அஜய் சார்? “உங்க ப்ரெண்ட்ஸ் ரொம்ப நல்லவங்கல்ல. உங்களுக்காக உயிரையே கொடுப்பாங்கல்ல” என அஜய்யை பார்த்தான்.
வினித், “இங்க என்ன தான் நடக்குது?” அஜய் கேட்க, எனக்கு நேற்று தான் தெரிந்தது. இதோ இவன் தான் விசுவநாதன். இவன் நம்ம கம்பெனிக்கு இரு வருடங்களுக்கு முன் தான் வந்திருக்கான். அதுவும் உன் அப்பாவிடம் நல்ல பெயர் எடுத்து வந்திருக்கான். இப்ப அவன் வேலை முடிந்ததாக கிளம்பி விட்டான். ஆனால் அவன் உன் அருமை நண்பர்கள் சொல்லி தான் செய்திருக்கான். ஆனால் உன் நண்பர்களும் அவர்களாக இதை செய்யவில்லை. அவர்களை யாரோ செய்ய வச்சிருக்காங்க. அவன் போயிட்டான் என்று தான் அந்த ஆதவன் உன்னிடம் உண்மையை சொல்லி இருக்கான். எனக்கே இப்ப தான் தெளிவா புரியுது.
“எதுக்கு இதெல்லாம்? தியா அப்பா இவர்களை என்ன செய்தார்?” அஜய் கேட்க, “அதை நீ தான் கண்டுபிடிக்கணும்” என்று தியாவை பார்த்தான் வினித். அவள் அதிர்ச்சியுடன் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நீ உன்னோட அருமை ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசு என்று வினித் சொல்லவும், அஜய் அலைபேசிக்கு தெரியாத எண்ணிலிருந்து வீடியோ ஒன்று வந்தது. அவன் புருவம் சுருங்க அதை ஓட விட்டான். இப்பொழுது தியாவும் சேர்ந்து நால்வரும் வீடியோவை பார்த்தனர்.
அதில் அஜய் குடித்து விட்டு தியாவை திட்டியதும் அவள் அப்பா மீது பழி போட சொல்வதும் பின் அவனே வேண்டாம் என்று சொன்னதும் இருந்தது.
“இப்ப தெரியுதா?” அஜய் தியாவை பார்க்க, அவள் அவனது அலைபேசியை வாங்கி மீண்டும் அதை பார்த்து, வினித் இவனை பாரேன். அஜய் சார் பேசுவதையே பார்த்துட்டு போறான். “இவனை உங்களுக்கு தெரியுமா?” தியா அலைபேசியை நீட்டி கேட்க, மூவரும் உன்னிப்பாக அவனை பார்த்தனர்.
இவனா? இவன் நம்ம மிதுரன் கம்பெனி ஆள். மிதுரன் நம்ம போட்டியாளர்களில் ஒருவன். எனக்கு இவனை நன்றாக தெரியும்.
இவனை வைத்து அந்த மிதுரன் தான் செய்திருக்கான் போல சார். அந்த விசுவநாதன் விவரம் முழுவதும் எனக்கு வேண்டும் அஜய் சொல்ல, ஓ.கே சார் எடுத்திட்டு வாரேன் என்று கிருஷ்ணன் கிளம்பினான்.
கிருஷ், இரு. நானும் சாப்பிட வாரேன் தியா அவனை நிறுத்த, அஜய் இருவரையும் முறைத்தான். தியா, நாம வெளிய போகணும் என்றான் வினித்.
“வாட்?” அஜய் கேட்க, “என்ன?” வினித் புருவத்தை உயர்த்தினான். தியா இருவரையும் பார்க்க, “இரண்டு மணிக்குள்ள உங்க டேபிளுக்கு அவன் பற்றிய விவரம் வந்திரும் சார்” என்று கிருஷ்ணன் அகன்றான்.
தியா, “இந்த வேலைய நீ பார்க்கணும்” என்றான் வினித்.
நான் கொஞ்சம் எல்லாரிடமும் பேசி பழகிட்டா செய்திருவேன் என்றாள்.
நோ, “இது டேஞ்சர். இது போலுள்ள விசயத்துல தியா தலையிட வேண்டாம். இதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் அஜய். இருவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
வினித், “அவன் தியா அப்பாவை எதுக்கு தேர்ந்தெடுத்திருப்பான்?” அஜய் கேட்க, இவன் விட மாட்டான் போலவே என வினித் எண்ண, “அதான் வாயை கொடுத்துட்டு இப்படி ஒண்ணும் தெரியாமல் கேட்டால் என்னன்னு சொல்றது?” என்று தியா கேட்டாள்.
“என்ன வாயை கொடுத்தேன்?” என்று அஜய் கள்ளப்புன்னகை பூக்க, ஹேய் “தியாகிட்ட ப்ளர்ட் பண்ண கொன்றுவேன் ராஸ்கல்” என்றான் வினித்.
இல்ல இல்ல..சும்மா தான் சொல்லு என்றான் அஜய்.
நீங்க தான் என்னை பழிவாங்க பேசுனீங்க. அதான் அவனுக அதை பயன்படுத்திட்டானுக தியா சொல்ல, “நல்லா முடிச்சு வச்சுட்டாளே!” என வினித் தியாவை எண்ணி புன்னகைத்தான்.
“என்ன சிரிக்கிற?” அஜய் கேட்க, “ஒண்ணுமில்லையே?”
“இந்த வீடியோவை யார் அனுப்பி இருப்பா?” தியா கேட்க, அஜய் அலைபேசியை வாங்கிய வினித் சற்றும் யோசிக்காமல் மாயா தான் என்றான்.
யார் மாயா? தியா கேட்க, அஜய்யோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல்ல ஒருத்தி தான் என்று அஜய்யை பார்த்தான். அவன் முகம் சுருங்கியது.
சரி, “வா தியா போகலாம்” என வினித் எழ, “நானும் வாரேன்” என்று அஜய்யும் எழுந்தான்.
“இவன் என்ன செய்ய நினைக்கிறான்?” என தியா எண்ணினாலும் அஜய் மீதுள்ள பயம் குறைந்து விட்டது. அவனாகவே வேண்டாம்ன்னு சொன்னதையும் பார்த்தாலே! அதுக்காக அஜய்யை முழுதாக தியா நம்பவும் இல்லை.
“நாங்க சாப்பிட போகும் இடம் உனக்கு பிடிக்காதுப்பா” வினித் சொல்ல, “பரவாயில்லை” என்று அஜய் வினித் தோளில் கையை போட்டு புன்னகைத்தான்.
ஹலோ, “நான் ஆடையை மாத்திட்டு வரவா?” அவள் கேட்க, அஜய் அவனது டேபிளின் கீழே இருந்த கவரை எடுத்து தியாவிடம் கொடுத்தான்.
“என்னது இது?” வினித் கேட்க, ஆடையை மாத்தி எதுக்கு நேரத்தை போக்கிட்டு என்று அவளது கால்களை மறைக்கும் வண்ணம் இருக்கும் லாங்க ஸ்கர்ட்டை கொடுத்தான்.
“எப்படா வாங்கின?” வினித் கேட்க, ஆன்லைன்ல்ல ஆர்டர் செய்து வாங்கிட்டேன்.
“ஆன்லைன்னா? உடனே தர மாட்டாங்களே? எவ்வளவு?” தியா கேட்க, நான் நினைத்தால் இப்பொழுதே கூட எனக்கு வேண்டியதை வாங்கிடுவேன் என்று தியாவை பார்த்தான்.
“எவ்வளவு?” தியா அஜய்யை பார்க்க, அதெல்லாம் தேவையில்லை. வேலை நிறைய இருக்கு. நாங்க வெளிய இருக்கோம் என்று அங்கிருந்த நாற்காலியை அவனறையிலிருந்த கேமிரா பக்கம் நகர்த்தி மேலே ஏறி, அதை சுவற்று பக்கம் மாற்றி வைத்தான். தியா அவனை பார்க்க, ”பாருடா அஜய் ரொம்ப நல்லவனாகிட்டான்” என வினித் கேலி செய்ய புன்னகையுடன் அவன் தோளில் கையை போட்டு நடந்து சென்று கதவை திறந்து மூடும் போது தியாவை பார்த்து கண்ணடித்தான் அஜய்.
“திமிறப் பாரு” என்று தியா அவனை திட்டிக் கொண்டே நொடிக்குள் ஆடையை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். மூவரும் வெளியேறினார்கள்.