11

வெளியே மழை அடித்துக்கொட்ட, உள்ளே இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்திருக்க, நடுவே கொஞ்சமாய் மல்லிகைப்பூ தூவி, விரித்து வைத்திருந்த கல்யாண பாயை பார்த்துக்கொண்டே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனை பெருமூச்சோடு ஏறிட்டாள் நிம்மதி.

அவன் தூங்கவில்லை என்று தெரிந்தாலும், அசைவே இல்லாமல் படுத்துக்கிடந்தவனை, ‘எப்படி டா வழிக்கு கொண்டு வரது?’ என்ற எண்ணத்தில் தான் தூங்காமல் விழித்திருந்தாள்.

அவளுக்கு ஒன்றும் திருமணம் ஆனதுமே கட்டிக்கொண்டு உருளவேண்டும் என்றெல்லாம் கனவு இல்லை. அவனிடம் அதை எதிர்பார்க்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், இப்படி தன்னில் கோபம் கொண்டு இருப்பவனை எப்படி சமாதானப்படுத்துவது என்ற கவலை தான் அவளுக்கு.

‘அந்த அய்யாக்கண்ணு எருமை முத ராத்திரி முடிஞ்சபின்ன உண்மை எல்லாம் சொல்லி தொலைச்சா ஆகாதா? இப்ப இது சீரியல் மாறி எத்தனை மாசம் இழுக்குமோ!’ என்ற கடுப்பு வேறு எழ, மீண்டும் அலுங்காமல் கிடந்த பாயை பார்த்தவள், தன்னையறியாமல்,

“எடுத்த வச்ச பாலும்,

விரிச்சு வச்ச பாயும்,

வீணாகத்தான் போகுது…

இந்த வெள்ளிநிலா காயுது…” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்க, “இன்னைக்கு மட்டும் இல்லடி, இன்னும்  எத்தனை வருஷம் ஆனாலும், நீ காஞ்சே தான் கிடக்கணும்…” என்று சத்தமாய் சொன்னவன்,

“பொய் சொல்லி மிரட்டி எல்லாம் கல்யாணம் கட்டுற அளவு வில்லி ஆகிட்டீல்ல நீயி?” என்றான் புரண்டுப்படுத்து.

வேகமாய் எழுந்து அமர்ந்தவள், “ப்ச், இங்கப்பாருய்யா! சும்மா ஒன்னும் இல்லாதத எல்லாம் பெருசு பண்ணாத! நீ என்கிட்ட காசு கேட்டு வந்தா தானே, நம்ம கல்யாணத்தை பத்தி பேச முடியும்? அதுக்கு தான் அந்த அய்யாக்கண்ணுக்கிட்ட காசு தர வேணாம்ன்னு சொன்னேன்! நான் செஞ்சத மட்டும் பாக்குறியே, அதுக்கு பின்னாடி இருக்க என் ஆசைய பாக்க மாட்டியா நீனு?” என்று கேட்டதும்,

“ஆமா, பொல்லாத ஆசை” என்றான் முணுமுணுப்பாய். ஆனால், அதுக்கூட அந்நேரத்தில் அவள் காதை சேர்ந்துவிட, “சொல்லுவய்யா நீ! ஏன் சொல்ல மாட்ட… ஊரே பார்த்து சிரிச்சாலும் சுரணக்கெட்டு நீதான் வேணுன்னு வருஷக்கணக்கா காத்து கிடந்தேன்ல? அப்போ என்னை பார்க்க உனக்கு இளக்காரமா தானே இருக்கும்?” என்றாள் நெஞ்சம் விம்ம. ஏனோ இதுவரை அவன் அவளை அசட்டை செய்தபோதெல்லாம் தாங்கிக்கொண்டவளுக்கு மனைவியான பிறகும் அவனது இந்த அலட்சிய பேச்சு தாக்கியது.

அவன் தன்னை ஆசையாய் நெருங்கியிருந்தால் ஒன்றும் தோன்றியிருக்காதோ என்னவோ… இந்த நேரத்தில் கூட அவன் தள்ளி நிற்க, உண்மையிலேயே அவனுக்கு தன் மேல் ‘அந்த’ மாதிரியான உணர்வுகள் எழவே இல்லையோ… அதற்கு தான் தகுதி இல்லையோ… தன்னை அவன் கீழாக பார்கிறானோ… என்று ஏதேதோ சிந்தனைகள் வெடிக்க, கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.

அப்படியே இருந்தால், கண்ணீர் கண்ணைவிட்டு இறங்கிவிடும் என்று பயந்தவள், வேகமாய் எழுந்து தடுப்புக்கு பின்னே மறைந்தாள். கடகடவென கண்ணை விட்டு இறங்கிய கண்ணீரை அவன் காணும் முன்னே துடைத்தவள், சமையல் மேடையில் இருந்த குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

இத்தனை நாளும் ‘அவனுக்கும் தன்னை பிடிக்கும்’ என்று இருந்த நம்பிக்கை, இப்போது உடைவது போல தெரிய, ‘அவனுக்கு தன்னை  பிடிக்கவே இல்லையோ? அவனை கட்டாயப்படுத்திவிட்டேனோ?’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருக்க, அப்படியே கண்ணை மூடி சுவரில் சாய்ந்து நின்றுவிட்டாள்.

சிறு நிமிடங்களில் அவள் அருகே அரவம் கேட்டது. மெழுகின் வெளிச்சம் தடுப்புக்கு பின்னே இல்லாமல் போனதில் தெளிவான பிம்பம் புலப்படவில்லை எனினும், அருகே இருப்பது ‘அவன்’ தான் என்பது தெரிய, அசையாமல் நின்றாள்.

“என்ன பண்ற இங்க? வந்து தூங்கு!” என்றான் ஏதோ கடமைக்கு அழைப்பவன் போல.

“எனக்கு தெரியும், நீ போ” என்றவள் அவன் இருந்த திக்கை கூட பார்க்கவில்லை.

“ப்ச், ரொம்ப பண்ணாதடி! இவ்ளோ நாள் எவ்ளோ பேசிருக்கேன், பேசாமையே துரத்திருக்கேன்… அப்போ எல்லாம் இப்டி தான் கண்ணை கசக்குனியா? இப்போ மட்டும் என்ன புதுசா? தாலி ஏறுனதும், வாயை வாடகைக்கு விட்டுட்டியோ?” பேச்சில் நக்கல் இருந்தாலும், தொனியில் தீவிரமே இருக்க,  பதில் சொல்லாமல் நின்றாள் அவள்.

இரண்டு பக்க கன்னத்தையும் அழுத்தி பிடித்தபடி, அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், “பேசித்தொல” என்றான்.

அவள் அறிந்து அவனது முதல் தொடுகை!  உணர்ந்து தொட்டானா என்று தெரியவில்லை அவளுக்கு. அவளுக்கு தான் இந்த சின்ன தொடுகையிலேயே மொத்த மனநிலையும் மாறிப்போனது.

தன் கன்னம் அழுத்தும் அவன் உள்ளங்கை, தன் கழுத்தை உரசும் அவன் மணிக்கட்டு, அதையும் விட சற்று கீழே, உரசியும் உரசாத நிலையில் இருக்கும் அவன் முழங்கை, அவளை மூச்சை இழுத்துவிடக்கூட விடாது தொல்லை செய்ய, அப்படியே சமைந்துப்போனாள். இருட்டில் அவள் முகம் தெரியாததால் அவள் உணர்வுகள் அவனை எட்டவில்லை.

அவன் கண்டும் காணாத அவளது ஒரு சொட்டு கண்ணீருக்கு தனிந்துவிட்டான் அவன்.

“பேசேன்டி” என்றவன், அதே நிலையில் ஓரடி நெருங்க, இவள் தன்னைப்போல, மூச்சிழுத்து, தன் உடலை சுவரோடு ஒட்டிக்கொள்ள, அதில் தான் சுதாரித்தான் அவன்.

அவள் கன்னத்தை அழுத்திக்கொண்டிருந்த விரல்களின் அழுத்தம் தளர்ந்தது. பெருவிரல் உதடுக்கு நகர்ந்தது.  பின், மெல்ல வருடலாய் மாறிய அவன் தொடுகை, கன்னத்தில் இருந்து புலம் பெயர்ந்து கழுத்துக்கு இறங்கியது. அங்கேயே தங்கிவிடாமல் அது மேலும் கீழிறங்கப்பார்க்க, பெண்ணின் கைகள் வந்து தடுத்துப்பிடிக்க, அந்த வலுவில்லா பிடியில் இருந்து சிரமமின்றி தன் கையை உருவியவன், நேரே சென்றது அவள் இடைமடிப்புக்குத்தான்!

கசகசப்பில் முத்துக்குளித்திருந்த அவள் இடையில் வழிந்து நடந்துக்கொண்டிருந்த வியர்வை அவன் கரம் பட்டதும் வெந்நீராய் மாறிப்போனது. அங்கேயே மேலும் கீழுமாய் ஊசற்கட்டை (சீசா) ஆடிய அவன் கைகள் அழுத்தமான பிடியுடன் அழுத்தி நின்றது அங்கேயே!!!

“விடு!” என்ற தீனமான மறுப்பு அவளிடம்.

“போ!” என்ற விருப்பமற்ற விரட்டல் அவனிடம்!

நெருக்கம் கூடியதே தவிர குறையவில்லை. அவள் சுவாசிக்கும் காற்று அவன் தொண்டைக்குழியை தொடும் தூரத்தில் இருவரும் நெருங்கி நிற்க, அது பெண்ணுக்கு தான் பெரும் அவஸ்தையாகியது. ஏதாவது செய்துவிட்டால் கூட அந்த கணம் நீர்த்துப்போகும். இவன் எதுவும் செய்யாமல் நெருங்கி நின்று தவிக்க வைக்க, பொறுத்துப்பார்த்தவள், ‘தள்ளு’ என்று தன்னிரு கைகளால் அவனை நெஞ்சோடு தள்ளிவிட்டு வேகமாய் விலக, அவள் தள்ளியதில் பின்னே சென்றவன், போன வேகத்தில் முன்னே வந்து அவளை பிடித்து இழுக்கப்பார்த்தான்.

கையை குறி வைத்தவனுக்கு சிக்கியதோ அவள் முந்தானை தான்! பிடித்ததை விடாமல் அவன் அழுத்தமாய் நிற்க, தோளோடு புடவையை பற்றிக்கொண்டவள், அவன் புறமாய் கொஞ்சம் திரும்பி, “விடுய்யா!” என்றாள்.

அவன் பிடி சற்றும் தளரவில்லை.

“ஊக்கு குத்திருக்கேன், இழுத்தீன்னா கிழிஞ்சுடும்” என்றாள்.

“அப்ப நீயே கழட்டு” என்றான் அவன்.

‘ஹான்’ என விழி விரித்தவள், சற்றே பின்னே வந்து அவன் அசந்த நேரம் சட்டென முந்தியை அவனிடம் இருந்து உருவிக்கொண்டு ஓட, ஒரே எட்டில் அவளை பின்னிருந்து இடையோடு கட்டி அணைத்திருந்தான் அண்ணாமலை.

“எவ்ளோ சீண்டுன என்னை? இப்போ என்ன கை பட்டதும் ஓடுற?” காது மடலில் உதடு உரச அவன் பேசும்போது பதில் சொல்லும் எண்ணம் கூட இல்லை அவளுக்கு. இடுப்பை இறுக்கியிருந்த அவன் கரங்களை விலக்கும் முயற்சியில் இருப்பவள் போல பாசாங்காய் அவள் நெளிய, தன் மேல் உராயும் அவள் செய்கையில் அவனுக்கு இன்னமும் தான் சூடேறியது.

காதில் தொங்கிக்கொண்டிருந்த குடை ஜிமிக்கியை, கவ்விக்கொண்டன அவன் பற்கள்.  ஜிமிக்கியை தொட்டதுக்கே சிலிர்த்துக்கொண்டன பெண்ணின் ரோமக்கால்கள். அவள் நெளிவதும் அதிகமாக, அவன் உதடுகள் அவள் செவிமடலை விழுங்குவதும் அதிகமாக, நிற்க முடியாத மயக்கத்தில், “விடுய்யா!” என்றாள் அவள் கோபம் போல சிணுங்கலாய்.

“விட்டா விழுந்துடுவடி!” என்று கிறக்கமாய் சொன்னவன், “விடவா?” என்றான்.

தன் அருகே தெரிந்த அவன் முகத்தை அவள் திரும்பிப்பார்க்க, தன் கைக்குள்ளேயே அவளை தன் புறமாய் திருப்பி அணைத்தான் அண்ணாமலை.

இருட்டில் வரிவடிவாய் தெரிபவளை, இன்னமும் நெருங்கி நெற்றி முட்டியவன், “என்னடி? விடவா?” என்றான்.

அவன் நெஞ்சில் புதைந்தவள், “நான் விழுந்து ரொம்ப நாள் ஆச்சு!” என்று அவனை இறுக்கிக்கொள்ள, அதற்கு மேல் ஒரு நொடி அவன் கால்கள் தரையில் நிற்கவில்லை.  கவனிப்பாரன்றி தரையில் கிடந்த பாயில் கவனமாய் அவளுடன் விழுந்தான் அவன்.

பாயில் அலுங்காமல் கிடந்த மொட்டுப்பூக்கள் வலுக்கட்டாயமாக நசுங்கி மொட்டு விரிந்தன.

அவன் பாட்டிற்கு இசையாமல் ஆட்டம் காட்டியவள் கரங்கள் இரண்டையும் ஒரே கரத்தால் அடக்கி அவள் தலைக்கு மேலே சிறையிட்டு, தன் வேலையை கட்டுக்கடங்கா ஆர்வத்துடன் ஆரம்பித்தான் கள்வன்.

இந்த வீட்டிற்கு வரும் வரை கூட இப்படி ஒரு உணர்ச்சி பிரவாகம் அவனிடம் இல்லை. சீரியல் புருஷன் போல மாதக்கணக்கில் முதுகுக்காட்டி படுத்துக்கொள்ளத்தான் எண்ணியிருந்தான். அது அரைமணி நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போகும் என்று அவன் கிஞ்சித்தும் எண்ணவில்லையே.

அதுவும் அவள் ஸ்பரிசம் அவனை அப்படியே கட்டியிழுத்தது. கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாத அளவு! முதலில் முடியுமா இல்லையா என்று தெரிய, அவன் கட்டுப்படுத்த வேண்டும் அல்லவா? அதுவே… அந்த எண்ணமே அவனுக்கு துளியிலும் துளியாய் கூட இல்லை. அவன் மீசை உராயாத இடமே அவளிடம் இல்லை.  சுகத்திலா குறுகுறுப்பிலா என்றே தெரியாமல் அவள் முனகல்கள் முழுமூச்சாய் வர, அவன் கையில் இழுத்தாலும் வராத புடவையுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான். பொறுத்துப்பார்த்தவள், அவன் இதற்கே இந்த இரவு முழுவதும் எடுத்துக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை என்று தெரிந்ததும், அவள்தான் வெட்கம் விட்டு ஊக்கை கழட்ட, பரபரவென உருவினான்.

குடலையே அசால்ட்டாய் உருவுபவனுக்கு, புடவை எம்மாத்திரம்!  ஆனால், புடவையை போன்று வேறு எதற்கும் அவன் அதிக சிரமம் இல்லை அவனுக்கு.

இருட்டில் ஒன்றும் தெரியாததால் அவன் தன் ஒற்றை கைக்கும் உதடுக்கும் தான் அதிக வேலை கொடுத்தான். இன்னமும் அவள் கைகள் அவனிடம் தான்!

“கைய தான் விடேன்!” அவனை கட்டிக்கொள்ள துடிக்கும் வேட்கையில் அவள் கேட்க, “ம்ஹும்! என்னை தடுப்ப நீ” என்றவன் ‘அள்ளவா? கிள்ளவா?’ என்ற ஆராய்ச்சியில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

“எலும்பே இல்லாம கறி மட்டுமே ஐம்பது கிலோ தேறும் டி! கொழுப்பு தான், நிரம்பி வழியுது” அவன் பேசிக்கொண்டே கீழிறங்க, “புத்தி போகுதுப்பாரு, ச்சை” என திட்டிக்கொண்டே அவன் போக்கிற்கு இசைந்தாள்.

நேரம் போகப்போக அவன் ஆசை கூடிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் அவன் உணர்ச்சியில் வெடிக்க தயாராக, அவள் மேலே அழுத்தமாய் படர்ந்தவன், “ஒன்னு ரெண்டு மூணு எண்ணு” என்றான். சுகமயக்கத்தில் அரைக்கண்ணில் கிடந்தவள், “ஹான்?” என முழிக்க, “எண்ணு டி!” என்றவன், அவள் அதிர வைக்க ஆரம்பித்தான்.

அவன் சொன்னதற்காகவே நிதானத்துடன் மூச்சுவாங்க எண்ணியவளுக்கு, நாற்பதுக்கு மேல் அதுவும் முடியாமல் தொண்டை வறண்டுப்போக, அவன் அமைக்கும் மெட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தாள்.  எத்தனை நேரம் போனதோ? இருவர் உடலும் மழையில் நனைந்ததை போல தொப்பலாக வியர்வையில் குளித்திருந்தது. நாற்பது நானூராக போகும் வரை அவனது புயல் கரை கடக்கவில்லை.

கடந்த பொழுதோ, ‘புயலுக்கு பின் அமைதியென’ அவள் மார்பின் மீதே சரிந்து விழுந்தான். இப்போதும் அவள் கைகள் அவனிடம் தான்!

தலையை மட்டும் நிமிர்த்தியவன், “முப்பது செகண்டு தாண்டுச்சா?” என்று கேட்க, “ச்சீ!” கன்னம் சிவக்க, முகத்தை திருப்பினாள் மதி.

நிமிடங்கள் கரைய, “கையை விடுய்யா! வலிக்குது” சிணுங்கலாய் அவள் மெல்ல சொல்ல, “கை மட்டும் தானா?” என்றவன், மெல்ல தன் பிடியை தளர்த்த, இருவருமே எதிர்ப்பார்க்காத நேரம் மின்சாரம் வந்துவிட்டது. மேலே மின்விசிறி கரக் கரக்கென ஓட, மின்னி மினுங்கிய டியூப்லைட் பளிச்சென கண்ணை திறந்தபோது, பெண்ணின் கண்கள் இறுக்கமாய் மூடிக்கொண்டது.

“ஐயோ… லைட்ட அமத்து” அவள் பதற, அவளை விட்டு எழுந்து அவளுக்கு இருபக்கமும் காலிட்டு அமர்ந்தவனிடம், எந்த அசைவும் இல்லை.

“யோவ்… போய் அமத்து” கண்ணை மூடிக்கொண்டு அவள் கத்த, அப்போதும் அசையாதவனை அரைக்கண்ணில் அதீத கூச்சத்தோடு அவள் பார்க்க, தன் மேனி மீது பதிந்திருந்த அவன் பார்வையில் மொத்த உடலும் சிவக்க, கைகள் கொண்டு மறைக்க பார்த்தாள். அவளை விட வேகத்துடன் வந்து மீண்டும் அவள் கரங்களை பற்றிக்கொண்டவனுக்கு, அவள் சொன்ன பாட்டு தான் அப்போது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

அவனுக்கு உணர்வுகளை தூண்டிவிட்டு சீண்டிப்பார்க்க அவள் நினைத்ததை, அதே பாடலை வைத்து அவன் திருப்பிவிட்டான். வெட்கம் பிடுங்கித்தின்றது பெண்ணுக்கு. கண்ணை மூடிக்கொண்டாலும், அவன் பார்வை படியும் இடங்கள் எல்லாம் அவள் மேனியில் குறுகுறுத்தது.

அதிலும், “என்னடி இப்….டி இருக்க?” என்று கண்கள் சொருகி அதீத போதையின் பிடியில் நிற்ப்பவனாய் அவன் கேட்டபோது, வெட்கத்தில் வாரி அணைத்துக்கொண்டாள் அவனை.

“முன்னழகு மூச்சு வாங்கி நிற்குதடி,

உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி!

நீ எந்த ஊரில் வாங்கி வந்த

இந்த சொக்குப்பொடி…”

அந்த வீட்டில் மட்டும் பொழுது விடிந்தும் மின்விளக்கு அணையாமலே இருந்தது. மின்விளக்கு மட்டுமா!?