அஜய் தியாவின் வீட்டிற்கு வந்தான். அங்கே இருந்த அவனுடைய அசிஸ்டென்ட்டையும் அவனது அப்பாவையும் பார்த்து அதிர்ந்து பார்த்தான்.
வினித், “நீ இங்க எப்படி?” அஜய் கேட்க, பாஸ்..அப்பாவும் தியா அப்பாவும் ப்ரெண்ட்ஸ் என்றான் சினமுடன். அஜய் வினித்தின் அப்பாவை பார்க்க, அவர் அஜய்யை முறைத்துக் கொண்டிருந்தார்.
“அங்கிள்” என்று அஜய் அவரிடம் பேச வந்தார். கையை உயர்த்திய வினித் அப்பா ராகவீரன் “இங்க பேச வேண்டாம்” என்று தியாவையும் அவளது சொந்தங்களையும் பார்த்தார். அவர் பார்வை தியாவின் அத்தை குடும்பம் மீது பட்டு மீண்டது. அஜய்யின் அப்பாவும் அவரை ஏக்கமுடன் பார்த்தார்.
சற்றுநேரத்தில் அஜய் குடும்பத்தின் கம்பெனி ஆட்கள் வந்தனர். அஜய்யையும் அவர் அப்பாவையும் பார்த்து திகைத்தாலும் தியா அப்பாவிற்கான மரியாதையை செலுத்தினர் அனைவரும்.
வந்தவர்கள் எல்லாரும் அஜய்யை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே நகர்ந்து நின்று கொண்டனர். எல்லாரும் அவர்களுக்குள் அஜய்யை பற்றி ஏதோ முணுமுணுக்க, தியாவின் அத்தையோ அவனை கூர்ந்து பார்த்தார்.
“எதுக்கு இப்படி முணுமுணுன்னு பேசுறீங்க?” தியா அத்தை நாசுக்காக கேள்விக்கணைகளை தொடுக்க, அதில் ஒருவர் இவரது அட்டாக் இவர் மீது பழி வந்ததால் இருக்கலாம் என்று அஜய்யை பார்த்தார். அவன் குற்றவுணர்ச்சி, வலியுடன் தியா அப்பாவை பார்த்தான்.
அப்படின்னா, “இந்த பையன் கம்பெனி ஆட்களால் தானா?” தியா அத்தை எளக்காரமாக நின்றவர்களை பார்க்க, “என்ன பேசுறீங்க?” வினித் சத்தமிட, அவன் அப்பா அவனை முறைத்தார்.
“எங்களால இல்ல” என்று அஜய் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் பேசும் முன், “நான் தான் காரணம் தியா மீதுள்ள கோபத்தில் தான் செய்தேன். ஆனால் இவருக்கு இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை” என்று அஜய் பட்டென உடைத்து கதறி அழுதான்.
தியாவின் அத்தை மகன் இதை கேட்டு அதிர்ந்து நின்றான். அவள் அத்தையோ..யோக்கியன் மாதிரி உன்னோட அப்பா பேசுனாரு. இப்ப என்னவாம்? என்று அவர் பாணியில் கீழ்த்தரமான பேச்சை தொடங்க, அஜய் அப்பா தன் மகன் அருகே வந்து நின்றார் அமைதியாக. இருவரும் தலைகவிழ, அமைதியாக தன் தந்தையின் முகத்தை வெறித்தவாறு இருந்த தியா வெளியே வந்தாள்.
அத்த, “உன்னோட வேலைய மட்டும் பாரு” என்று அஜய் அப்பா, அஜய்யை மறைத்து நின்றாள்.
ஏன்டி, உன்னோட அப்பா சாவுக்கு அவன் தான் காரணம்ன்னு சொல்றான். “உனக்கு கொஞ்சமாவது கோபம் வருதா?” அப்பா..அப்பான்னு..பாசத்தை கொட்டுவ. “இப்ப அவன் செத்தவுடன் அந்த பாசம் போச்சா?” இவனுகள சும்மா விடக் கூடாது என்று கத்தினார்.
“சும்மா இருங்க” என்று வினித் சொல்ல, “பாசமா?” அதை பத்தி பேச உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை அத்தை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் என்று தியா அவளது அத்தை மகனை பார்த்து, “மாமா..உன்னோட பையன் தானா?” என்று கேட்டாள்.
அவள் கன்னத்தில் தியாவின் மாமா அறைய, அவர் மகனோ அதிர்ந்து நின்றான்.
மாமா, என்னோட அப்பா இருக்கும் வரை என் பக்கம் கூட வர மாட்டீங்க. வந்தா..”பாசமழைய பொழிவீங்க? அந்த பாசம் எங்க போச்சு?” சொல்லுங்க.
உங்க மகன் உங்களை மாதிரி குணமில்லை. அதான் கேட்டேன். வேட்டை நாய்க்கு பூனை மகனாக முடியுமா? பூனை என்றால் குறைச்சல் இல்லை. அதன் குணத்தை வைத்து தான் சொல்கிறேன்.
“அதே போல இவங்கள பத்தி தெரியாம வாய்க்கு வந்த படி பேசுறீங்க?” அப்பா மனமுடைந்து இருந்தார் தான். ஆனால் அவர் கவலை என் மீது என்பதால் தான் அவருக்கு அட்டாக் வந்தது.
நானும் முதல்ல பயங்கரமாக கோபப்பட்டேன். அப்பா சொன்ன வார்த்தைகள் தான் என்னை உறுத்தியது. என் மீதும் தவறுள்ளது தான். பெரிய இடத்துல இருக்கிற அஜய்யை சாரை எல்லார் முன்னும் அதிகமாக தான் பேசினேன். அதனால் என்னை அழ வைக்க தான் இதை செய்தார். இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவருக்கு தெரியல.
பணக்காரவங்க மேல ஏதாவது தப்பு வந்தா அது வெளிவரும் முன்னே அவங்களால அதனை உடனே சரி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வாங்க. ஆனால் நாங்க அதே வலியுடன் தான் வாழ்வோம்ன்னு அவங்களுக்கு தெரியாதுல்ல.. செல்லமாக வளர்ந்த ஒரே மகன். பணக்கார நட்பு வட்டம். சாதாரண ஊழியர்களின் நிலை அவருக்கு தெரிய அவர் என்ன அந்த கம்பெனியை கவனிக்கவா செய்கிறார்? என்று அவள் சொல்லி விட்டு அஜய்யை பார்த்தாள்.
சார், என்னோட அப்பா எப்போதும் உங்களை பற்றி தான் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை பற்றியும் அஜய் சார் பற்றியும் நிறைய சொல்வார்.
ஒரு விசயம் தான் அடிக்கடி சொல்வார். அஜய் சார் உங்களுடன் சேர்ந்து கம்பெனிக்கு வந்து உங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். பெரிய சார் ரொம்ப கஷ்டப்படுறார் என்று தான் அடிக்கடி சொல்வார் என்று அஜய்யை பார்த்து விட்டு, அவள் அத்தையை பார்த்தாள்.
இங்க சிலர் என்னை காக்கா பிடிக்க பார்க்குறீங்க. யார் எதுக்காக என்னிடம் பேச வர்றீங்கன்னு எனக்கு நன்றாக தெரியும். நீங்க நினைக்கும் எதுவும் நடக்காது. இது என்னோட வீடு. இதுக்கு மேல யாரும் ஏதும் பேச வேண்டாம். கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்க என குரல் கம்ம மயங்கினாள் தியா.
“தண்ணீர் எடுத்துட்டு வாங்க” என்று அவன் சத்தமிட, அஜய் திகைத்து தியா பேசியதை கேட்ட அதிர்விலிருந்து வெளியே வராமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் சிம்மா, நட்சத்திரா அவள் குழுவினரும் வந்து அவளை பார்த்து அவளிடம் ஓடி வந்தனர்.
மனீஷா தியாவை பார்த்து அழ, ஷ்..என்ற வினித் “வாயை மூடு” என்று டென்சனாக திட்டினான்.
நட்சத்திரா அஜய்யை பார்த்து, “இப்ப என்னடா செஞ்சு தொலைச்ச?” என்று சீற்றமானாள். அவள் சத்தத்தில் நினைவிற்கு வந்த அஜய் தியாவை பார்க்க, அவள் விழித்தாள்.
அவள் எழுந்து அனைவரையும் பார்க்க மனீஷா அவளை கட்டிக் கொண்டு அழுதாள். வினித் எழுந்து நகர்ந்து கொண்டான். எல்லாரும் அஜய்யை பார்த்தனர். அவன் மனீஷாவுடன் சென்று கொண்டிருந்த தியாவை பார்த்தான்.
அவன் எண்ணத்தில், “உனக்கு என்னையும் என் அப்பாவையும் இந்த அளவிற்கு தெரிந்து இருக்கா? நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேனே!” என்று தியாவிடம் அவன் எல்லை மீறி நடந்து கொண்டதை நினைத்து வெட்கப்பட்டான்.
“ச்சே, என்ன செய்து விட்டேன்? இவர் என்னை எவ்வளவு நம்பி இருந்திருக்கார்? தியாவிற்கு நான் இவ்வளவு செய்தும் என் மீது கோபமில்லையா?” என்று அவன் கண்ணீர் வழிய, திட்டிக் கொண்டிருந்த நட்சத்திரா அமைதியானாள்.
தியா பின் செல்ல இருந்த அஜய் முன் வந்தான் சிம்மா.
“நான்..நான்..பார்த்துட்டு வாரேன்” என்று அஜய் சொல்ல, “வெளிய வா” என்று சிம்மா சொல்ல, தியாவிற்கு நிகரான தோழி ஆறுதலாக அவளருகே மனீஷா இருக்க, பெருங்குரலெடுத்து தியா சத்தம் வெடித்து கிளம்பியது. எல்லாரும் அவளை பாவமாக பார்த்தனர்.
அஜய்க்கு அவள் அழ அழ தலை சுற்றிக் கொண்டு வந்தது. அவன் நிற்க முடியாமல் கண்ணீருடன் பின் தலையை பற்றியவாறு வெளியே ஓடி வந்து மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் உடல் வியர்வையால் குளித்தது.
பாஸ்..என்று வினித்தும் சிம்மாவும் அவன் பின் வந்தனர். அப்பொழுது கண்கள் சிவக்க, அஜய்யின் சட்டையை பிடித்து இழுத்து அடித்துக் கொண்டிருந்தான் தியாவின் அத்தை மகன்.
சிம்மா அவனை பிடித்து இழுக்க, அஜய் அசையாது அவனிடம் அடி வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்து பதறி வினித் இருவருக்கு இடையிலும் வந்து அஜய்யை நகர்த்த, அஜய்க்கு கண்கள் இருண்டது. போதையில் இருப்பது போல் அவன் தள்ளாடி ஓரிடம் அமர்ந்து சாய்ந்து கண்களை மூடினான்.
அஜய், “என்னாச்சு?” வினித் பதறி அஜய் அப்பாவை அழைத்தான். அவரும் ராகவீரனும் வெளியே வந்தனர்.
அதற்குள்ள சிம்மா தண்ணீரை எடுத்து அஜய் மீது தெளித்து விட்டு அவன் கன்னத்தை தட்டினான். அஜய் விழித்து அவன் அப்பாவை பார்த்து, “டாட் நான் வேணும்ன்னு எதுவும் செய்யலை” என்று அழுதான். “தெரியும்ப்பா” என்று அவர் தன் மகனை மனதில் வலியுடன் கட்டிக் கொண்டார்.
பின் அஜய்யை அமைதிபடுத்தி அமர வைத்தனர். மாலை நேரம் அனைத்து சடங்குகளும் தொடங்க, தியா அப்பாவிற்கான காரியத்தை அவளது அத்தை மகன் தன் பெற்றோரை எதிர்த்து செய்து முடித்தான். அவள் அப்பாவை எடுத்து சென்ற சமயம் தியா தலையில் அடித்து கதறி அழுவதை பார்த்த அஜய் மனதில் புழுவாய் அரித்தது. அவனும் அவர்களுடன் செல்ல..அவரை எரித்த சமயம் அஜய் கதறி அழுது கொண்டே தியா அப்பாவிடம் மன்னிப்பு கேட்டான்.
ஆனாலும் மனதின் வலி அவனை நெருப்பாய் சுட, “தானும் நெருப்போடு நெருப்பானால் என்ன?” என்று முன்னேறி சடலம் நெருப்பில் பிடிக்க ஆரம்பிக்கவும் அதனை பிடித்தான். அவனது செயலில் அனைவரும் அதிர, சிம்மா அவனிடம் வந்து அவனை இழுத்து ஓங்கி அறைந்தான்.
“உனக்கு என்ன பைத்தியமா? செத்து போயிருவடா” என்று சிம்மா கத்த, “நான் தப்பு செஞ்சுட்டேன்..தப்பு செஞ்சுடேன்” என கதறி அழுதான். அவனது அப்பா அவனை தேற்ற வலியில்லாமல் உடைந்து அமர்ந்தார்.
“எல்லாம் முடிந்த பின் சிந்தித்து என்ன பயன்?” முன்னே சிந்தித்து இருக்கணும். “இப்படி லூசுத்தனமா பண்றீயே? உன்னோட அம்மா, அப்பாவை யோசித்து பார்த்தாயா?” சிம்மா மேலும் அடிக்க கையை ஓங்கினான்.
சார்..என்று வினித் சிம்மாவை தடுத்தான். அஜய் அவன் அப்பாவை பார்த்து அவரிடம் சென்றான்.
அப்பா, “நான் இப்ப என்ன செய்றது?” அஜய் கேட்க, அனைவரும் அவர்களை பார்த்துக் கொண்டே கிளம்பினர்.
வினித், வா..அவன் அப்பா அவனை அழைக்க, அவன் அஜய்யை பார்த்துக் கொண்டே சென்றான். சிம்மா மட்டும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
சார், “வாங்க நேரமாகுது” என்று சிம்மா அழைக்க மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
“கொஞ்சமாம்மா” என்று தாத்தா கேட்க, முடியாது. “ஏய் இவருக்கு ஏதாவது கொடுத்த தொலச்சிருவேன் படவா?” பாட்டி இளங்கோவை மிரட்டினார்.
பாட்டி, நான் காலை ஆர்டர் கொடுத்திருக்கேன். இப்ப கொண்டு வருவாங்க. நீங்க தாத்தா பக்கத்துலயே இருங்க. இல்லை அவர் நம்மை ஏமாற்றி எடுத்துப்பார் என்றான் அவன்.
“என்னடா சொன்ன?” தாத்தா எழுந்து அவனை விரட்ட, பாட்டி “காப்பாத்து” என்று அவன் ஓடினான்.
“இவனுக்கு வேற வேலையே இல்லை” என்று ஜெனிபர் மிருளாலினியை பார்க்க, அவள் முகம் வாட்டமாக இருந்தது. “தமிழ், நீ எப்ப ஹாஸ்பிட்டலுக்கு வருவ?” என்று மிருளாலினியை பார்த்துக் கொண்டே கேட்டாள் ஜெனிபர்.
“நான் நாளையே வாரேன்” என்று அவளிடம் பேசிக் கொண்டே தமிழினியனும் மிருளாலினியை பார்த்தான்.
“நாளைக்கேவா?” முடியாது இனியா என்றார் அவன் அம்மா.
அம்மா, நான் இரு நாட்கள் வேலையை முடிச்சிட்டு..என்று மிருளாலினியை பார்த்தான். அவள் அவனை பார்க்க, மிருளா வீட்ல ஒரு வாரம் இருந்துட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுறோம் என்றான். அவள் கண்கள் விரிய, அவள் அம்மாவிற்கு மகிழ்வானது.
“ஒரு வாரம் மாமியார் வீட்ல தங்குனா ஊர் என்ன பேசுவாங்க?” சுஜித்ரா அம்மாவும் சுவாதி அம்மாவும் கேட்டனர்.
நான் அவள் பிறந்து வளர்ந்த இடத்தில் கொஞ்ச நாட்கள் இருக்க நினைக்கிறேன். “இதுல ஊர் என்ன பேசுறது?”
டேய், “உன்னோட அம்மாவை பற்றி யோசித்தாயா?” என்று அவன் மாமா ஒருவர் கேட்டார்.
அம்மா, “நீங்க என்ன சொல்றீங்க?”
உன் விருப்பம். ஆனால் இருவரும் சீக்கிரம் வந்துடணும்.
அம்மா,..ஐந்து வருசமா அந்த வீட்ல கஷ்டப்பட்ட போது கூட அவள் அம்மா வீட்டுக்கு போகல. “இவள் உங்களையும் என்னையும் பிரிப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா?” எனக் கேட்டான்.
வேல்விழி யோசனையுடன் தன் கணவர் கிருபாகரனை பார்த்தார்.
அப்படி நான் சொல்லலைடா. “உன்னால அங்க மேனேஜ் பண்ண முடியுமா?”
முடியும்மா. மிருளா எங்கிருந்தாலும் நானும் அங்கே இருப்பேன் என்றான்.
சம்மந்தி, “பிள்ளைகளுக்கு நாங்க வீடு அரேஜ் பண்ணிடுறோம்” என்று மிருளாலினி அப்பா சந்தோசமாக சொல்ல, “எதுக்கு மாமா?” நாம சேர்ந்து ஒரே வீட்டிலே இருக்கலாம் என்றான்.
சரிப்பா, ஆனால் ஒரு வாரம் தான். என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியாது என்றார் வேல்விழி.
“தேங்க்யூம்மா” என்று அவன் தன் அன்னையை அணைக்க, மிருளாலினிக்கும் அவள் குடும்பத்திற்கும் அவ்வளவு சந்தோசம். எழுந்த மிருளாலினி “தேங்க்ஸ் அத்தை” . நான் அம்மா வீட்டுக்கு சென்று வருச கணக்காகுது என்று கண்கலங்கினாள்.
“அதனால என்னம்மா? தாராளமாக போயிட்டு வாங்க” என்று வேல்விழி மனதார சொல்ல, அம்மாடி “கொஞ்சம் இங்க வா” கிருபாகரன் மிருளாலினியை அழைத்தார். அவரிடம் சென்றாள்.
நகைப்பெட்டி ஒன்றை அவள் கையில் கொடுத்தார் கிருபாகரன்.
மாமா, “என்னது இது?”
திறந்து பாரு அவர் சொல்ல, பெண்கள் எல்லாரும் குவிந்தனர்.
கழுத்தை நிரப்பும் வைர நெக்லஸ்.
வாவ்..என்று சுஜித்ரா அதை வாங்க, கிருபாகரன் அவள் கையில் அடியை போட்டார்.
நான் என்னோட மருமகளுக்கு வாங்கினேன்.
சித்தி, “இதெல்லாம் அநியாயம் இல்லையா? மிருளாவுக்கு மட்டும் தானா? எங்களுக்கு இல்லையா?” என்று செல்லமாக சுஜி கோபித்தாள்.அடியேய், அவர் மருமகளுக்கு அவர் வாங்கி தந்திருக்கார். “நான் என்ன செய்வது?” வேல்விழி புன்னகையுடன் கேட்க, இதெல்லாம் போங்காட்டம் என்றாள் தமிழினியனின் அத்தை மகள் ஹரிணி.
“எதுடி போங்கு?” வேல்விழி கேட்க, “இதான்” என்று நெக்லஸை கை காட்டினாள் அவள்.
இனியா, “மருமகளுக்கு போட்டு விடுடா” அவர் அழைக்க, மிருளாலினிக்கு அதை போட வந்தான் தமிழினியன்.
மாமா, “இதை நான் நாளைக்கு போட்டுக்கவா?” ஏற்கனவே இதை வேற போட்டிருக்கேன் என்று அவள் கழுத்தில் இருந்த தங்க ஆபரணத்தை காட்டினாள் மிருளாலினி.
சரிம்மா, உன் விருப்பம் என்றாள்.
மிருளா, “என்னோட வா” என்று தமிழினியன் தனியே அழைக்க, “எல்லார் முன்னாடியும் பொண்டாட்டிய தள்ளீட்டு போறான்” சுஜித்ரா சொல்ல, இரு கரங்களையும் இடுப்பில் வைத்து அவளை முறைத்து பார்த்தான் தமிழினியன்.
அம்மா, “போனவுடன் வந்துருவோம்” என்று மிருளாலினி கையை பிடித்து அழைத்து சென்றான்.
இப்ப வந்துருவானா? என்னவா இருக்கும்? சுஜித்ரா கேட்க, அக்கா..”நம்மை விட்டு ஐஸ்கிரீம் ஏதும் அண்ணா அண்ணிக்கு ஸ்பெசலா வாங்கி வச்சிருப்பாரோ?” அவன் தம்பி ஒருவன் கேட்க, நெவர்..இந்த நெக்லஸ் கூட வேண்டாம். எனக்கு ஐஸ்கிரீம் கண்டிப்பாக வேண்டும் என்றாள் சுவாதி.
அக்கா, நெக்லஸ் பார்க்க போட அழகாக இருக்கலாம். ஆனால் இந்த ஐஸ்கீரீம் இருக்கே..ம்ம்ம்..செம்மையா இருக்கும். ஐஸ்கிரீம் பார்க்கும் போதும் அழகு. ருசியும் டக்கர்.
கவரை பிரித்து வாயில் வைக்கும் போது..ம்ம்..கரையும் பாரேன்.ஜில்லுன்னு தொண்டையில இறங்கும் என எச்சிலை விழுங்கி அவள் ரசித்து சொன்னாள்.
தூரத்தில் இருந்து விக்ரமும் ரசிகாவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அவள் செய்கையில் இப்படி டெம்ட் பண்றாளே என்று விக்ரம் நினைத்து முடிக்க, நேகன் இடைபுகுந்து..சுவா,. “நீ சொல்லும் போதே செம்ம டெம்ட்டா இருக்கே” என்று சொல்ல,
அவன் தலையில் அடித்த விகாஸ், அவளே ஒரு லூசு. “அவளுக்கு ஒத்து பாடி கரெக்ட் பண்ண பாக்குறியா?”
“நான் ஐஸ்கிரீமை சொன்னேன்” என்று அவர்கள் மாறி மாறி சண்டை போட, என்னமும் செஞ்சு தொலைங்கடா. என்னால ஐஸ்கிரீமை விட முடியாது என்று சுவாதி தமிழினியன் சென்ற அறைக்கு செல்ல, அவள் கையை பிடித்த அவளோட அத்தை பொண்ணு “போகாதடி” என்றாள்.
“அண்ணாவை விட மாட்டேன்” என்று சுவாதி சொல்ல, “எசக்கு பிசக்கு ஆகிடாமடி” சுஜித்ரா சத்தமிட்டாள்.
“ஒரு ஐஸ்கிரீமுக்கு ஏன்டா ரோதன பண்றீங்க?” என்று விகாஸ் கேட்க, “போடா டேய்” என்று சுவாதி அவனை பார்த்து வவ்வளம் காட்டிக் கொண்டே திரும்பி தமிழினியனை முட்டி நின்றாள்.
அண்ணா..”சூப்பர்” என்று சுவாதியிடமிருந்து சுருதி குறைந்து அப்ப ஐஸ்கிரீம் என்றாள்.
“ஐஸ்கிரீமாம் ஐஸ்கிரீம்” என்று சுஜித்ரா அவர்களிடம் வர, மற்றவர்களும் வந்தனர்.
எல்லாருக்கும் மிருளாலினி கையால் அவன் தன் குடும்பத்திற்கென வாங்கிய நகையை கொடுத்தான்.
“பொண்டாட்டிய யாரும் ஏதும் சொல்லக் கூடாதுன்னு எப்படி ஆப் செய்றான்?” என்று அவன் சித்தி கூறிக் கொண்டே அவரும் வாங்கிக் கொண்டார். சுவாதி மட்டும் தனியே வந்து அமர்ந்தாள்.
ஐஸ்கிரீம் கேட்டு பிடிவாதம் செய்ய, “நீ என்ன சின்னப்பிள்ளையாடி? சுவாதி அம்மா” அவளை திட்டி விட்டு சென்றார். ரகசியன் அவளருகே வந்து அமர்ந்தான்.
“நீயும் திட்ட வந்துட்டியா?” அவள் கேட்க, “இல்லை சுவா..”என்று மறைத்திருந்த அவன் கையை நீட்டினான்.
வாவ், “என் செல்ல அண்ணா” என்று சுவாதி ரகசியனை கன்னத்தில் முத்தமிட, அவன் மறுகன்னத்தை காட்டினான்.
“அந்த பக்கம் கிஸ் வேணும்ன்னா எனக்கு இன்னொரு ஐஸ்கிரீம் வேணுமே?” என்று சுவாதி ரகசியனை பார்க்க, “ஓ.கே நாளை சாப்பிடலாம்” என்றான்.
அவள் எப்படி ரசனையுடன் ஐஸ்கிரீம் பற்றி பேசினாலோ? அதே போல் சாப்பிட, அனைவரும் எச்சில் ஊறியது.
மாமா, “எங்களுக்கு இல்லையா?” குழைந்தவாறு ரகசியனின் அத்தை பொண்ணு அவனிடம் வர, “அங்கேயே நில்லு” என்று எழுந்தான் அவன். ரசிகாவிற்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
மாமா, “எனக்கு” என்று தீபுவும் அவனிடம் வந்தாள்.
தீபு, “இங்க வா” என்று கண்ணை ரகசியன் காட்ட, குட்டியும் புரிந்து கொண்டு அவன் காட்டிய இடத்தை பார்த்து செல்ல, எங்களை விட்டு அவளுக்கு மட்டும் வாங்கி தார என்று சுஜித்ராவும் மற்ற அத்தை பொண்ணுங்களும் அவனை பிடிக்க வர தீபுவை தூக்கிக் கொண்டு சுற்றி நகர்ந்தான். எல்லாரும் மொத்தமாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர்.
“சீய்யூ” என்று அவன் வெளியே தீபுவுடன் ஓடினான்.
“எழுந்திருங்கடி” மாமாவை பிடிக்கணும் என்று அந்த பொண்ணு அனைவரையும் நகர்த்தி எழ முயன்றாள். ஓடி வந்த ரகசியன் மூச்சிறைத்து விக்ரம் ரசிகாவிடம் வந்தான்.
வழியுது துடைச்சுக்கோ. என் தங்கச்சி சாப்பிடுறத அப்படி பார்க்காத. அவளுக்கு கண்ணு பட்டிரும். இந்தா ஓரமா போ சாப்பிடு என்று ரகசியன் ரசிகா கையில் திணிக்க, எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்க என்னிடம் சாரி சொல்லவில்லை ரசிகா சொல்ல, “நான் எதுக்கு சொல்லணும்?” உன்னை போல் சுயநலவாதிக்கு நான் வாங்கி தந்ததே பெருசு என்று திரும்பி விழுந்தவர்களை பார்த்து நகைத்தான்.
மாமா ஐஸ்கிரீம்..பாவம் போல் தீபு கேட்க, மாமா உன்னை ஷாப்பிற்கே அழைச்சிட்டு போறேன் என்று விக்ரம் சார், எனக்கு ஒரே ஒரு கெல்ப் இந்த ராட்சசிகளிடமிருந்து காப்பாற்ற நீங்க தான் உதவணும்.
“நானா? இப்ப இருவரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” விக்ரம் கேட்க, ரகசியன் ரசிகாவை பார்த்தான்.
ரசி, “இருவரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? சுயநலவாதியா?” உனக்கு ஐஸ்கிரீம் என்று விக்ரம் ரசிகாவை பார்க்க, எல்லாரும் அவனிடம் வந்தனர்.
“நாம அப்புறம் பேசுவோம்” என்று ரகசியன் மீண்டும் ஓட்டம் பிடிக்க, கையிலிருந்த ஐஸ்கிரீமை பின்னே மறைத்தாள் ரசிகா.
“ரசி” விக்ரம் அழைக்க, சார், “மாமா எங்க போறாருன்னு சொன்னாரா?” ரகசியனின் அத்தை பொண்ணு கேட்க, “இல்லையே?” என்று தன் தங்கையை பார்த்துக் கொண்டே சொன்னான் விக்ரம்.
அவர்கள் நகரவும், “நீங்க லவ் பண்றீங்களா?” விக்ரம் ரசிகாவிடம் கேட்டான். அவள் மௌனம் காத்தாள்.
“சொல்லு?”
ஆமா, இன்னும் நான் சொல்லலை.
“என்னத்த சொல்றது? அதான் தெளிவா காட்டுறானே?” விக்ரம் சொல்ல, அவள் புன்னகைத்து அண்ணா, “யார்கிட்டயும் ஐஸ்கிரீமை சொல்லாத” என்று ரசிகா சொல்ல, “அடி..நான் எதை பற்றி பேசினால் நீ என்ன பேச்சை மாற்றுகிறாயா?” என்று விக்ரம் குரல் உயர, எல்லாரும் அவனை பார்த்தனர்.
தலையை அழுந்த கோதிய விக்ரம் புன்னகைத்தவாறு சுவாதியை பார்த்து விட்டு ரசிகாவை பார்க்க, அவள் அங்கே இல்லை.
அஜய், அவன் அப்பா, சிம்மா மூவரும் வீட்டிற்கு வந்தனர். ஆட்கள் யாரும் அங்கே இல்லை. நட்சத்திராவும் சிலரும் மட்டும் இருந்தனர்.
வீட்டினுள் தியா சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள். அஜய் நேராக அவளிடம் வந்து அவளது கையை பற்றி, “சாரி தியா. நான் செய்தது மிகப்பெரிய தவறு தான்” என்று அவள் கரத்தை அவன் கண்ணில் வைத்து ஒற்றினான். அவள் கண்ணை திறந்து அவனை பார்த்தாள்.
வீறிட்டு வந்த தியாவின் அத்தை மகன் அஜய்யை பிடித்து இழுத்து, வெளிய போடா. உனக்கு இந்த வீட்ல நிக்க எந்த தகுதியும் இல்லை என்று அடித்தான். அஜய் தியா கையை விடாமல், “மன்னிக்க மாட்டாயா தியா?” எனக் கேட்டான்.
சரி தியா, “நீயே அவனை வெளிய போக சொல்லு” என்றான் அவன்.
இல்ல மாமா, “அவர் பேசட்டும்” என்றாள் தியா.
தியா, அவன் நல்லவன் போல பேசி நடிக்கிறான் அவன் கூற, பரவாயில்லை மாமா. நீங்க எனக்கு ரொம்ப பெரிய உதவி செய்திருக்கீங்க. ஆனால் அத்தை, மாமாவிடமே செல்வது தான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லது என்றாள்.
நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். “நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்?” அவன் கேட்க, ப்ளீஸ் மாமா, நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்கோ. “கல்யாணத்துக்கு என்னையும் அழைப்பேல்ல? இல்லை மறந்துடுவியா?” அவள் கேட்க, அவன் கோபமாக நகர்ந்தான்.
“பேசுங்க சார்” என்று தியா அஜய் கரத்தை விலக்கி விட்டு பார்த்தாள்.
தியா, “நான்..என்னை மன்னிப்பாயா?” அஜய் பேச திணறி நிறுத்தினான். அவனை பார்த்தவுடனே அவனும் அழுதிருக்கான்னு தியாவிற்கும் மற்றவர்களுக்கும் தெரிந்தது.
“மன்னிப்பா?” அங்கிள், சார் மன்னிப்பு கேட்கிறாராம். சார் எப்பவுமே ஏதோ ஒன்று சொல்வீங்களே..ஹா.. “தி கிரேட் அஜய்”.
தி கிரேட் அஜய், “எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?”
ப்ளீஸ், “எனக்கு கஷ்டமா இருக்கு தியா”.
“கஷ்டமா? என்ஜாய் பண்ணும் அஜய்க்கு கஷ்டமா? உங்களுக்கு எதுக்கு சார் கஷ்டம்? உங்களுக்கு தான் உடனிருக்கும் உங்க அப்பா மீதே அக்கறை இல்லையே? என் அப்பா எம்மாத்திரம்?”
இல்ல தியா, என்னால தான் அவர் இறந்துட்டார் அதான்..
ஓ..”குற்றவுணர்ச்சியா?” சார் அதெல்லாம் தேவையே இல்லை. என்னோட அப்பா நீங்க வருத்தப்பட்டாலும் வருத்தம் தான் படுவாரு. நீங்க இந்த டைம்ல்ல இங்க..அச்சோ! “உங்க நேரம் வீணாகவில்லையா?”
இரவு ஏழாகப்போகுது. இப்ப உங்க ப்ரெண்ட்ஸோட மீட்டிங்க. அப்புறம் கிளப் போகணும். குடிக்கணும். கிளம்புங்க.
அஜய் உறைந்து, “உனக்கு எப்படி எல்லாமே தெரியும்?”
தெரியும் சார். அப்பா தான் சொல்வார்.
“அவர் எதுக்கு என்னை பற்றியே பேசணும்?” அஜய் கேட்க, எனக்கு தெரியாது, நானும் இதே தான் கேட்டேன். அவரிடம் பதிலில்லை. நீங்க கிளம்பலாம் சார் என்றாள்.
அவள் கரத்தை மீண்டும் பிடித்த அஜய் கண்கள் கலங்க, “நான் என்ன செய்யணுன்னு சொல்லு?” எவ்வளவு பெரிய தண்டனையானாலும் பரவாயில்லை என்றான் அஜய்.
“அதை நான் சொல்றேன்” என்றான் புழலரசன் அஜய்யை முறைத்துக் கொண்டு.
“சொல்லு?” அஜய் கேட்க, உங்க வீட்டை விட்டு வெளியே வந்து எங்களை போல் சாதாரண மக்களுடன் வாழணும் என்றான்.
“என்ன?”
“ஆமா” என்றான் புழலரசன்.
இல்ல அரசா, அதை விட பெரிய தண்டனையை அந்த கடவுள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் கொடுப்பார். அவர் கிளம்புட்டும். விட்ருங்க என்றாள் தியா.
அஜய் அப்பா தியாவை பெருந்தன்மையோடு பார்த்து, “அப்படியே உன்னோட அம்மா போல் இருக்க” என்று மனதினுள் எண்ணினார்.
இல்ல தியா, “எனக்கு தண்டனை வேண்டும்” என்று அஜய் கேட்க, அவள் விரக்தியுடன் அவனை பார்த்தான்.
அஜய் அப்பா, வினித்தை கண்ணாலே அழைத்தார். அவனிடம் அவர் ஏதோ கூற, நோ சார். “என்னால ஒத்துக்கவே முடியாது சார்” என்று அவன் சத்தமிட்டான்.
“என்ன சார்?” நட்சத்திரா கேட்க, என் கம்பெனி பொறுப்பு மொத்தமாக அஜய் வசம் ஒப்படைக்கிறேன். அவன் தான் இனி எல்லாவற்றையும் பார்த்துக்கணும். நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று தியாவை பார்த்து, கம்பெனி அசிஸ்டென்டாக வினித்தும், அஜய்க்கு பி. ஏ வாக தியாவும் இருக்கணும் என்றார்.
“என்னது?” அதிர்வுடன் அனைவரும் அவரை பார்த்தனர்.
தியாவின் நிலைக்கு என் மகன் அஜய் தானே காரணம். தியா அருகிலே இருப்பது தான் அஜய்க்கு மிகப்பெரிய தண்டனை. அதே போல் இப்ப இருக்கும் பி. ஏவை தியா அப்பா இடத்தில் போட்டு சம்பளத்தை உயர்த்தி கொடுக்கப் போகிறேன். பின் அஜய் உன் குற்றத்தை நீ அனைவர் முன்னும் ஒத்துக்கணும் என்றார்.
சார், குற்றத்தை ஒத்துக் கொண்டால் போர்டு மெம்பர்ஸ் சாரை மட்டுமல்ல நம்ம கம்பெனியை சீல் வைக்கும் நிலை வரும். இல்லை எல்லா விசயமும் மீடியா மூலம் வெளியே வரும். கம்பெனியை மூடிருவாங்க என்றான் வினித்.
எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க எல்லாரும் சேர்ந்து தான் சரி செய்யணும் என்றார் அவர்.