வெளியே வந்த வர்சன் அலைபேசியை எடுக்க, பிரணவிடம் கூறப் போகிறான் என்று பிரகவதி அவனை தடுக்க அவள் கழுத்தை பிடித்து வர்சன் தூக்க, பக்கமிருந்த பொருள் ஒன்றை எடுத்து அவன் தலையிலே அடித்தாள் தக்சனா. அவன் தலையை பிடித்துக் கொண்டு பிரகவதியை விட்டு கீழே விழுந்தான்.
“ஸ்ரீ அவனை பிடிச்சு கட்டு” என்று பிரகவதி கழுத்தை பிடித்துக் கொண்டே சொல்ல, அங்கே வேலை செய்யும் ஆட்கள் நிலையை அறிந்து அவனை ஆட்டோமேட்டிங் லாக்கில் பிடித்து அடைத்தனர். ஒருவன் ஓடி வந்து பிரகவதியிடம் அருந்த தண்ணீர் கொடுத்தான். அவனை பார்த்து புன்னகையுடன் “தேங்க்ஸ்” என்று கூறி வாங்கி பருகினாள்.
“இப்ப நீங்க ஓ.கே வா?” அவன் கேட்க, ம்ம்..என்று தலையசைத்தாள்.
“என்னடி நடக்குது? ஆள் மாறுதே!” ஸ்ரீ சொல்ல, உங்க லவ்ஸ்ஸ அப்புறம் வச்சுக்கோங்க என்று தக்சனா இருவரையும் பார்த்தாள். பிரகவதி வெட்கத்துடன் நெளிய, அடியேய்..அப்புறம் வெட்கப்படலாம். இப்ப நாம ரித்துவுக்கு கால் செய்வோம் தக்சனா கூறினாள்.
“என்னது? நீயா பேசுற?”
ஆமா, நான் தான். திடீர்ன்னு அவளுக்கு உயர்பதவி கொடுத்த கோபம் தான். ஆனால் இவளை கஷ்டப்படுத்தி தான் நம்ம பாஸ் கல்யாணம் பண்ணிக்கப் போறாருன்னு இப்ப தான தெரியும். ரித்திகா அவள் ஆசைப்பட்ட அவள் மாமா உதிரன் சாருடனே நாம சேர்த்து வைக்கலாம். கால் பண்ணு என்று தக்சனா கூறினாள்.
இல்ல தக்சு, “ரித்து அலைபேசி என்னிடம் தான் இருக்கு” என்று ரித்திகாவின் அலைபேசியை காட்டினாள் பிரகவதி.
பிரகா, ”அலைபேசியை எதுக்கு வச்சிட்டு போயிருக்கா? மறந்திருப்பாளோ?” அவள் குடும்பத்திடம் அவள் இதில் தானே பேசணும் என்று ஸ்ரீ கேட்க, ஆமால்ல என்ற பிரகவதி அவளது அலைபேசியை ஆன் செய்தாள். அதில் வந்த உதிரனின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தாள்.
“இங்க பாருங்கடி” என்று பிரகவதி அதை ஸ்ரீ, தக்சனாவிடம் காட்ட, அந்த பையனும் அதை பார்த்தான்.
கண்டிப்பாடி..பிரச்சனை சாதாரணமாக தெரியல. பெருசு தான் போல..”கல்யாணம்ன்னு அவளும் தானே சொன்னா? அவள் எதையோ நமக்கு புரிய வைக்க பார்த்திருக்காலோ?” பிரகவதி கேட்க, ஒரு இளவும் புரியலடி என்றாள் ஸ்ரீ.
அதே நேரம் அறையினுள் நிஷாவின் லேப் தானாக அனைவர் பக்கமும் திரும்ப, அனைவரும் பயத்துடன் அவ்வறையை பார்த்தனர்.
யாரும் பயப்படாதீங்க. இந்த ஆன்மா யாரையும் ஏதும் செய்யாது. ரித்திகாவின் சுபி அண்ணன் தான் என்றாள்.
“சுபியா? அப்படி யாரும் அந்த பொண்ணுக்கு அண்ணா இல்லையே?” அம்சவள்ளி கேட்க, உங்க பொண்ணோட ப்ரெண்டு ஒருவன் வந்தானேல்ல. இவர் கூட பளீரென ஒன்று விட்டாரே என்று உதிரன் அவன் அப்பாவை சினமுடன் பார்த்தான்.
ஆமா, அந்த பையனுக்கு கூட திருமணம் முடிந்த புதிதாக அந்த பொண்ணு என்று அம்சவள்ளி தன் மகனை பார்க்க, அவன் இப்ப உயிரோட இல்லை. அவன் ஆவி தான் ரித்திகிட்ட பேசுச்சு என்றான்.
உதி, உனக்கு..நிஷா தயங்க, எனக்கு எதுவுமே முழுதாக தெரியாது. அன்று இரவு அவள் பேசியதையும் பாலாவும் நீயும் என்று உதிரன் இருவரையும் பார்த்தான். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் மேலும் கீழே விழுந்தது.
ரித்திகாவின் வீடியோ ப்ளே ஆனது. அதை பார்த்து அனைவரும் கொதித்தனர். உதிரன் மனம் உடைந்தது. தரையில் கையை அடித்து அடித்து வேதனையில் அழுத தன் ரித்திகாவை பார்த்து பிரணவ்வின் மீது கொலை வெறியானது உதிரனுக்கு.
அம்சவள்ளி சுவற்றில் சாய்ந்து கண்ணீருடன் அமர்ந்து விட்டார். வர்சனையும் அனைவரும் பார்த்தார்களே! அனைத்தையும் பார்த்து விட்டு புகழேந்தி கோபமாக வெளியே செல்ல ரட்சகனும் வெளியேறினார்.
உதிரன் மனம் உலைகலனாக கொதித்து அடங்கமாட்டாமல் வெந்து கொண்டிருந்தது. புகழேந்தியை பார்த்த பிரகவதி அவரிடம் வந்தார். அவர்களை பார்த்த அவர், “அவன் எங்கே?” என்று தன் வேட்டியை மடித்து கட்டினார்.
“யாரு அங்கிள்?” ஸ்ரீ கேட்க, “உங்களோட இருந்தானே அவன்” என்று அவர் கேட்க, “வர்சனா?” அவனை அங்கே என்று தக்சனா கையை காட்டிய மறு நிமிடம் உள்ளே சென்றார் புகழேந்தி.
சார், வேண்டாம் என்று ரட்சகன் அவர் பின் சென்றார். ஆனால் வர்சனை பார்த்த மறு நிமிடமே அவனை அதிலே வைத்து அவன் முகத்திலே குத்தி அவனை காயப்படுத்தினார்.
“போதும் சார்” என்று ரட்சகன் அவரை இழுத்து வெளியே வந்தார். பிரகவதி கையிலிருந்த ரித்திகா அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தாள். மகிழனின் புகைப்படத்துடன் கால் வந்து கொண்டே இருந்தது. அலைபேசியை பிரகவதி எடுக்க, அக்கா..என்று மகிழன் கதறி அழுதான்.
தம்பி, “நான் உன்னோட அக்கா இல்லை” பிரகவதி சொல்ல, அவனோ அக்கா..அக்கா..என்பதை தாண்டி ஏதும் பேசாமல் அழுது கொண்டே இருந்தான்.
ஏய், “எதுக்கு இப்படி அழுற?” நான் ரித்து இல்லை. அவளோட கோலீக் என்றாள் பிரகவதி.
அதை கேட்ட மகிழனோ, என்னோட அக்காவிடம் நான் பேசணும். கொடுங்க என்று அவன் மேலும் அழுது கரைந்தான்.
பிரகவதி “அவனிடம் எப்படி சொல்ல?” என்ன சொல்லவென புரியாமல் இருந்தாள். வீடியோவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பாலா கோபமாக கதவை திறக்க, உதி..”நாம லேட் செய்யும் ஒவ்வொரு நொடியும் ரித்திக்கு ஆபத்து” என்று நிஷா உதிரன் கையை பிடித்து இழுத்தாள்.
உதிரனும் அம்சவள்ளியும் எழுந்தனர். சாரிப்பா..எங்களாலும் என்று அம்சவள்ளி தொடங்க, “போதும் யாரும் ஏதும் பேச தேவையில்லை” என்று உதிரன் அவன் அம்மாவிடம் கோபத்தை காட்டி விட்டு வெளியே வந்தான்.
பாலாவிடம் பிரகவதி விசயத்தை சொல்ல, உதிரனும் நிஷாவும் அவனை பார்த்தனர்.
பாலா அலைபேசியை வாங்கி மகிழ், “எதுக்கு அழுற?” என்று கேட்டான்.
நான் என்னோட அக்காவிடம் பேசணும்.
இப்ப அவளிடம் பேச முடியாது. அவள் கிளம்பி விட்டாள். நீ என்னன்னு சொல்லு என்று அலைபேசி ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
அண்ணா, “எதுக்கு சத்தம் போடுறீங்க?” என்று அழுது கொண்டே மகிழன் கேட்க, அனைவரும் அங்கே கூடினர்.
“முதல்ல சொல்லு” பாலா மேலும் கத்தினான்.
அண்ணா, “எங்க அம்மா, அப்பா இறந்துட்டாங்க” என்று தேம்பி தேம்பி அழுதான்.
“என்னடா சொல்ற?” உதிரன் அலைபேசியை வாங்கி கேட்டான்.
நீ..நீங்க..உதி மாமாவா? மகிழன் கேட்க, ஆமா “அம்மா, அப்பாவுக்கு என்னாச்சு?” உதிரன் கேட்க, “மாமா” என்று மகிழன் மீண்டும் கதறி அழுதான்.
மாமா..அன்று நீங்க சொல்லாமல் போயிட்டீங்கன்னு அக்கா உங்க மேல கோபமா இருந்தா. யாரிடமும் பேசாமல் தனிமையாக இருக்க தொடங்கினாள். அம்மாவும் அப்பாவும் அவளை பார்த்து மிகவும் வருந்தினர். என்னாலும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்படியே நான்கு வருடங்கள் சென்றது.
விடுமுறைக்காக நானும் அவளும் சென்னையிலிருந்து எங்க ஊருக்கு போனோம். என்ன செய்து கொண்டிருந்தால் என்று எங்களுக்கு தெரியல. ஆனால் அம்மா மட்டும் அவளறையில் இருந்து அழுது கொண்டு மயங்கி விட்டார். அன்று ஆரம்பித்த பிரச்சனை தான்.
அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம். அம்மாவுக்கு மார்பக புற்றுநோய் என்று சொன்னார்கள். பெரியம்மா, பெரியப்பா, சிம்மா அண்ணாவிடம் கூட நாங்க சொல்லலை. பணமும் அதிகம் தேவைப்பட்டது. எங்க ஊர்ல வச்சி பார்க்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க. அதனால சென்னை அழைச்சிட்டு வந்தோம்.
அம்மாவிற்கு புற்றுநோய் என்ற அதிர்ச்சியில் அப்பாவிற்கு மாரடைப்பு முதலாவதாக வந்தது. பணத்திற்காக அக்கா ரொம்ப கஷ்டப்பட்டா. வீட்டை விற்றால் எல்லாருக்கும் தெரிந்து விடும் என்று அக்கா வேலை செய்யும் கம்பெனியில் லோன் ஏற்பாடு செய்தாள்.
“யாரிடமும் இதை சொல்லக்கூடாது” என்று அம்மா சத்தியம் வாங்கிக் கொண்டார். அதனால அப்பா கம்பெனியில் பணம் கேட்டோம். ஆனால் அவங்க வேலையை விட்டு போனால் தான் பணம் தருவதாக சொன்னாங்க. அதனால் அப்பா வேலையை விட்டு பணம் வாங்கினார். ஆனால் அது அம்மா சிகிச்சைக்கு போதவில்லை. பணமில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம் என்று மூக்கை உறிஞ்சிய மகிழ், இந்த இரு மாதத்திற்கு முன் அக்கா வேலை சம்பந்தமாக அவங்களோட கம்பெனி வாயிலாக வெளியூரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஹட் ஆபிஸிற்கு சென்றாள். அங்கு தான் அந்த பிரணவ் அக்காவை பார்த்தான். இருவரும் நன்றாக பழகி இருக்காங்க.
ஆனால் மாமா, அவள் திரும்பி ஊருக்கு வரும் போது அவனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னாள்.
உதி மாமாவை தான காதலிக்கிறன்னு நான் அவளிடம் கேட்ட போது, “என்னிடம் சொல்லாமல் போனவனை விட இவன் பெட்டர்” என்றும் அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னா. நானும் அவள் கஷ்டப்படாமல் இருந்தால் போதும்ன்னு விட்டுட்டேன். அவன் எங்க அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். மொத்த செலவையும் பார்த்துக்கிறேன்னு சொன்னான். ஆனால் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக சிகிச்சை செய்தாலும் கண்டிப்பாக பிழைப்பாங்கன்னு சொல்ல முடியாதுன்னு சொல்லீட்டாங்க. ஆனால் இப்ப ஒரு வாரமாக ரொம்ப நல்லா இருக்காங்கன்னு ரிப்போர்ட் வந்தது. நாங்க சந்தோசமா இருந்தோம்.
இடைப்பட்ட காலத்தில் அப்பாவிற்கு மீண்டும் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. அம்மாவின் சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கு என்று மருத்துவர்கள் சொன்னாலும் எனக்கு என்னமோ அவரை பார்க்க உடல்நிலை மோசமானது போல் தெரிந்தது. ஆனால் நான் மருத்துவர்களை முழுதாக நம்பினேன். இப்பொழுது இப்படி ஆகி விட்டது. அம்மா இறந்ததை அப்பாவிடம் மறைக்க எண்ணினேன். ஆனால் செவிலியர்கள் மூலம் விசயம் அவருக்கு தெரிந்து அவரது மாரடைப்பில் இதயம் பலவீனமாகி எங்களை விட்டு அவரும் போயிட்டார் என்று அழுதான்.
“நீ அன்று அலைபேசியில் ரித்துவை அப்படி திட்டுன?” பாலா கேட்க, “என்ன திட்டினான்?” உதிரன் கேட்க, “அக்காவுக்கு திருமணம் அவனுடன் தான்” என்று எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த பிரணவ்விடம் பணத்திற்காக திருமணம் செய்து கொள்வதாக அக்கா சொன்னது போல் அவன் நண்பர்களிடம் அலைபேசியில் உரையாடியதை கேட்டு அக்காவிடம் பேசினேன்.
அம்மா, அப்பா சிகிச்சைக்கான பணத்திற்காக திருமணம் அவனை செய்வதாக சொன்னாள். என்னால அதை தாங்கவும் முடியல. ஏத்துக்கவும் முடியல. இதையெல்லாம் வேடிக்கை என்னால பார்க்க முடியாமல் தான் பகுதி நேர வேலைக்கு சென்றேன். அதை அவள் ஏத்துக்காமல் என்னிடம் கோபப்பட்டாள். அதனால் தான் நானே என் அக்காவை ரொம்ப கேவலமா பேசிட்டேன் என்று மேலும் அழுதான்.
நான்..நானும்..இதே போல் தான் அவளிடம் பேசிட்டேன் உதிரா. “ஐ அம் சோ சாரிப்பா” என்று ரட்சகன் கூற, அப்பா, ”நீங்க என்ன பேசுனீங்க?” நிஷா கோபமாக கேட்டாள்.
இல்லம்மா, பாலாவும் உதிராவும் அவளை என்று..சொல்ல முடியாமல் தயங்கினார்.
“ஏன் சார்? ஏற்கனவே கஷ்டத்தில் இருந்திருப்பா. இது வேறயா?” உதிரன் சினமாக, அம்சவள்ளி தலைகவிழ்ந்து அவரும் தன் கணவனை பார்க்க, அவர்களும் அவளிடம் பேசியதை சொல்ல, உதிரனும் பாலாவும்..இதுக்கு மேல பேசாதீங்க என்று மனம் அழுந்த கத்தினார்கள்.
சாரிப்பா, “அப்பா தெரிந்து பேசவில்லை” அம்சவள்ளி சொல்ல, அம்மா..”இப்ப கூட உன்னோட புருசனுக்காக தான பேசுற?”
இவங்க எல்லாருக்கும் ரித்துவை பற்றி ஏதும் தெரியாது. ஏம்மா..இவருக்கு தெரியாதா? உதிரன் கோபமுடனும் ஆற்றாமையுடன் கத்தி விட்டு, “இப்ப அவன் எங்க தான் போறான்?” என்று உதிரன் சீற்றமுடன் கத்தினான்.
அக்கா, “எங்க மாமா? இத்தனை நாள் அவளுடன் தான் இருந்தீங்களா? அத்தை, மாமாவும் அங்க தான் இருக்காங்களா? நீங்க எல்லாரும் ஒண்ணா இருக்கீங்க? அக்கா போயிட்டான்னு பாலா அண்ணா சொன்னாங்க? எங்க போனா?” என்று குரல் உடைந்து மகிழன் அமைதியாக கேட்டான்.
சாரி மகிழ், அவள் அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்ற கோபத்தில் நான் அவள் கஷ்டத்தை புரிஞ்சுக்கலை என்று கதறி அழுதான் உதிரன்.
“என்ன சொல்றீங்க? அவள் உங்க பக்கம் இருந்தால் இருக்கும் புன்னகை இல்லையா? என்ன பேசுறீங்க?”
சாரி மகிழ், “நாம அவளுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்கலாம்” என்றான்.
நிஷா கோபமாக, “என்ன உதிரா பார்க்கப் போற?” அவள் இருக்கும் போது நாங்கள் கண்டறிந்ததை கூட நீ காணவில்லை. நீ இருக்கும் இரு அறை தள்ளி தான் அவள் அவனிடம் அடி வாங்கி இருக்கா. அவளை அவன்..என்று கதறிய நிஷா கோபமாக உதிரனை அடித்தாள்.
உதிரன் மண்டியிட்டு சாரி ரித்து..சாரி ரித்து..என்று அவன் அழுவதை கேட்ட மகிழன், “அக்காவை அவன் என்ன செய்தான்?” பதறினான்.
உதிரனிடமிருந்து அலைபேசியை பிடுங்கிய நிஷா, மகிழ் நீ யாரையும் நம்பாத. முதல்ல சிம்மாவை அழைத்து எல்லாவற்றையும் சொல்லு. முதல்ல ரித்துவை காப்பாற்றணும் என்றாள் நிஷா.
“சிம்மாவை உனக்கு தெரியுமா?” உதிரன் கேட்க, நல்லா தெரியும். ரித்து அவள் அண்ணாவுடன் பேசும் போது நானும் அவரை பார்த்திருக்கேன். நான் அவரிடம் பேசி கூட இருக்கேன் என்ற நிஷா அவள் அலைபேசியில் சிம்மாவின் புகைப்படத்துடன் இருந்த எண்ணை காட்டினாள்.
“ஏன் மாமா, நீங்க பக்கமிருந்து அவளை கை விட்டுட்டீங்க?” என்று மகிழ் சொல்ல, உதிரன் மனதினுள் குற்றவுணர்ச்சி எட்டி பார்த்தது. அதை அவள் தனக்காவனள். “அவளை அவன் எப்படி?” என்று எண்ணிய உதிரன் வேகமாக நிஷா அறைக்கு சென்று அந்த வீடியோவை பார்க்க, அதில் பிரணவ் கூறிய வீடியோ என்பதை பார்த்து, ரித்துவின் அலைபேசியை பிடுங்கி, “மகிழ்..வீடியோ எதை பற்றியும் ரித்துவோ இல்லை அவனோ உன்னிடம் பேசி இருக்காங்களா?” எனக் கேட்டான்.
“வீடியோவா? என்ன வீடியோ? எனக்கு தெரியாதே!” மகிழ் சொல்ல, பாலா சிந்தனையுடன் மகிழ் நாம நினைச்ச எல்லாமே தப்பு. அவள் பணத்துக்காக திருமணம் செய்வதாக அவனிடம் ஒத்துக்கலை. ஏதோ வீடியோவை வைத்து அவளை மிரட்டி வச்சிருக்கான் என்று பாலா சொன்னான்.
“அது என்ன வீடியோவாக இருக்கும்?”அனைவரும் சிந்திக்க, எல்லாம் எல்லாருக்கும் தெரிந்து விட்டதே! ரித்திகாவை காப்பாற்ற கிளம்புங்க என்று சுபிதனின் ஆன்மா பயங்கரமாக கத்த, நிஷா காதை அடைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
மேம்..என்று பாலா அவள் தோளில் கை வைக்க, அவனை பார்த்து..பாலா பெருசா ஏதோ நடக்கப் போகுது. அந்த ஆன்மா கத்துவதை என்னால தாங்க முடியல என்று அவள் மெதுமெதுவாக கையை எடுக்க, உதிரனும் பாலாவும் அங்கு இல்லை.
“அவங்க எங்க?” என்று நிஷா பார்க்க, அவர்கள் அலைபேசியை அணைத்து விட்டு வெளியே ஓடினர். “இருங்க நானும் வாரேன்” என்று அவளும் அவர்களுடன் சென்று காரில் ஏறினாள்.
நானும் வாரேன்ப்பா..புகழேந்தியும் அம்சவள்ளியும் தன் மகனிடம் கேட்க, இதுவரை நீங்க செய்த உதவியே போதும். இதுக்கு மேல என்னோட ரித்துவை நான் பார்த்துக்கிறேன் என்று பாலா, “சீக்கிரம் காரை எடு” என்று அவனை அவசரப்படுத்தினான். விருட்டென கார் பறந்தது.
சார், நாங்களும் போகணும். உள்ளே இருப்பவனை சும்மா விட்றாதீங்க. அவனை இங்கிருக்கும் போலீஸிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று புகழேந்தியும் அம்சவள்ளியும் அவர்கள் காரில் கிளம்பினார்கள்.
தமிழினியன் வீட்டிலிருந்து அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். சுவாதி, சுஜி மற்றும் சுவாதியின் அத்தை பொண்ணுங்க எல்லாரும் தயாராகி மிருளாலினி அறையில் கேலியுடனும் அவளை சிவக்க செய்து கொண்டே அவளை தயாராக்கிக் கொண்டிருந்தனர். சுபி பிரச்சனை முடியவும் அனைவரிடமும் சிம்மா விசயத்தை கூறி இருப்பான். அதனால் மனதில் இருந்த சிரமத்தை தள்ளி வைத்து மகிழ்வுடன் அவளும் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அம்மாடி, நீ சிம்மாவோட வா. அவன் தனியா வந்தா நல்லா இருக்காது என்று அன்னம் சொல்ல, அவரது தூண்டிலை அறிந்த நட்சத்திரா, அத்தை “மாமாவை நீங்க அழைச்சிட்டு வாங்க” என்று அர்சுவை தூக்கி அவள் செல்ல, சரிம்மா..நீ போ. ஆனால் எங்க பேரன் என்னுடன் தான் வருவான் என்று அவர் சொல்ல, அவளால் செல்ல முடியாமல் நின்றாள்.
என்னம்மா, “கிளம்பலையா?” பரிதி புன்னகையுடன் கேட்க, நாம சேர்ந்தே போகலாம் என்று அவளும் சிம்மா தயாராக காத்திருந்து அனைவரும் சேர்ந்தே கிளம்பினார்கள். மண்டபத்தினுள் சேர்ந்து செல்லவேண்டாம் என்று அவள் ஓர் திட்டத்தை வகுக்க, உரிமையுடன் சிம்மா அர்சுவை தூக்கிக் கொண்டே நட்சத்திரா கையை பிடித்து முன்னேறினான்.
மேம், “யாரும் தவறா நினைக்க மாட்டாங்க” என்று மனீஷாவும் புழலரசனும் வந்தனர்.
சார், “நீங்க கையை விடாதீங்க” என்று அவன் கூற, அவனை பார்த்து சிம்மா கண்ணடித்து “தேங்க்ஸ் பிரோ” என்று நட்சத்திரா கையை இறுக்கமாக பிடித்து, “ஸ்டார் நீ கையை விட்டால் நான் எல்லார் முன்னும் உன்னை கிஸ் பண்ணிடுவேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
மாமா..என்று அவள் கையை பிடுங்க அவளால் சிம்மாவின் இரும்புபிடியை தவிர்க்க முடியவில்லை. அவள் மனதினுள் ஓர் துள்ளல். வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டே அவள் வர, மனீஷாவும் புழலரசனும் இருவரையும் பார்த்து சிரித்தனர்.
மனு, “நம்ம குழுவில் எல்லாரும் வந்துட்டாங்களா?” நட்சத்திரா அவளை திரும்பி பார்க்க, மேம் தியா மட்டும் இன்னும் வரலை. கால் பண்ணா எடுக்க மாட்டேங்கிறா என்று அவள் கூற, சரி நான் கால் பண்ணி பார்க்கிறேன் என்று நட்சத்திரா சிம்மாவை கையை பார்க்க, அவனாகவே விட்டான்.
அவனுக்கும் தியா சொன்னது நினைவுக்கு வந்தது. திருமண நேரம் நட்சத்திரா இருக்க மாட்டாள் என்று கூறியதை யோசித்துக் கொண்டே உள்ளே சென்றான். இவர்களுக்கு முன் விக்ரம் அங்கே அமர்ந்திருந்தான். சிம்மா அவனை பார்த்து விட்டு விலக, அப்பா..அங்கிள் என்று சிம்மாவிடமிருந்து இறங்கி விக்ரமிடம் ஓடினான் அர்சு.
அர்சு, “இங்க வா” என்று சிம்மா அவனை பிடிக்க அவன் பின் வந்தான். ஆனால் விக்ரம் அதற்குள் அர்சுவை தூக்கிக் கொண்டான். ஆட்கள் யாரும் வர ஆரம்பிக்கவில்லை. அங்கங்கு ஒவ்வொருவராக அமர்ந்திருந்தனர்.
“பிரச்சனை தான்” என்று சிம்மா அர்சுவை வலுக்கட்டாயமாக வாங்கி தூரமாக சென்று விக்ரமை பார்த்தான். தமிழினியன் வீட்டினர் அனைவரும் அவனது அடிப்பட்ட கையை பற்றி அக்கறையுடன் விசாரித்து சென்றனர். தாத்தா மட்டும் அவனுடன் பேசிக் கொண்டே அமர்ந்து விட்டார். விக்ரம் கண்கலங்க கேட்பாருக்கு பதிலளித்ததை பார்த்து கலங்கினார் பரிதி.
அப்பா, வருத்தப்படாதீங்க. இந்த ஒரு வருடம். எப்படியாவது அவனை நம்ம வீட்டுக்கு வர வைத்து விடலாம் சிம்மா சொல்ல, அந்த பொண்ணு சொன்னாலே! அவள் அம்மா வீட்டில் இருந்தால் தானே! என்று சிம்மா புன்னகையை உதிர்த்தான்.
“என்னப்பா செய்யப் போற?”
“நடக்க வேண்டியது நல்லபடியாக நடக்கும் அப்பா” என்றான் சிம்மா.
தியா..அன்று அஜய்யுடன் சண்டை போட்ட அதே சிக்னல் அழகான லாங் சுடியில் தேவதையென நின்று கொண்டிருந்தாள். அதே போல் வந்த அஜய் முதலில் அவளது அழகை ரசித்தாலும் அவளை வம்பு செய்யவென அவளை நெருங்கி காரை நிறுத்தி சீண்டினான். அவள் அவனை முறைக்க அவன் மேலும் சீண்டினான். சிக்னல் போடும் முன் அவள் வண்டியை எடுத்து விட்டாள்.
அஜய் வேகமாக கீழிறங்கி அவளுக்கு எவ்வளவு தைரியம்? என்று முறைத்தான். அதே நேரம் ஓர் பேருந்தின் ஊடே அவள் வண்டியுடன் செல்ல, “ஏய்” என்று அவளை நோக்கி ஓடினான் அஜய்.
பேருந்து சமாளித்து அவளை கடக்க, எதிர்பாராத நேரத்தில் ஓர் கார் ஒன்று மறுபக்கம் அவளது வண்டியை உராய, அவளை நோக்கி சென்ற அஜய்..அவளது இடையில் கையிட்டு அவளை பிடித்து தூக்கினான். அவளது வண்டி தூக்கி எறியப்பட அவள் இதயம் படபடவென துடித்தது. அத்துடிப்பை அஜய்யால் உணர முடிந்தது.
தியாவை காப்பாற்றி அவனும் கீழே விழுந்தான். பெரியதாக ஏதும் அடிபடவில்லை இருவரும். ஆனால் அவளது வண்டி தள்ளி சென்று விழுந்தது. எழுந்தவள் அவளை பற்றி கூட யோசியாது அவளது வண்டியை எடுக்க ஓடினாள். அனைவரும் அவர்களை திகைத்து பார்த்தனர்.
அஜய் கோபமாக வண்டியிடம் சென்ற தியாவை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவளும் அவன் மேல் கோபமானாள்.
“உனக்கு என்ன தான் பிரச்சனை?” அன்று நான் சொன்னது எனக்காக இல்லை. பொதுநலன் கருதி தான் பேசினேன். “அதுக்காக இப்படி செஞ்சுட்ட?” யாருக்கும் ஏதும் தெரியாது என்று நான் அமைதியாக தான் விட்டுட்டேனே!
“அப்புறம் எதுக்கு என்னோட அப்பாவின் வேலையில் கை வச்ச?” அதுவும் என்று அழுத தியா, “அவர் மேல் பணம் திருடிய குற்றச் சாட்டி வேலையை விட்டு அனுப்பி இருக்க? என்னோட பிரச்சனையில அவரை எதுக்கு இழுத்த? அவர் மனமுடைந்து விட்டார் தெரியுமா?” அவர் உங்க கம்பெனிக்காக முப்பது வருடமாக உழைத்து இருக்கார். “போன வருடம் தான் மேனேஜர் போஸ்டிங் கிடைச்சதுன்னு எவ்வளவு சந்தோசப்பட்டார் தெரியுமா?”
“நீயெல்லாம் மனுசனா?” ச்சீ..என்று அவள் கத்தி விட்டு வண்டியை தூக்க, அங்கங்கு அவள் வண்டி பழுதாகி தொங்கிக் கொண்டிருந்தது. அவள் அதை விட்டு நகர முடியாமல் அங்கேயே அமர்ந்தாள்.
அவள் அப்பா என்றதால் அவன் செய்தான். இப்படி முப்பது வருடம் அவன் கம்பெனியில் வேலை செய்பவர் என்று அவன் பார்க்கவும் இல்லை. கவனிக்கவும் இல்லை. கம்பெனி மீட்டிங் மட்டும் தான் அட்டென் செய்வான் அஜய். அதனால் அங்கு வேலை செய்பவர்களை பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது. ஆனாலும் பழிவாங்க அவரை பயன்படுத்தியது அஜய்யின் மிகப்பெரிய தவறு தானே!
அதை அவன் உணர்ந்தாலும் அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “அதுக்கு என்ன செய்ய சொல்ற?” என்று எரிச்சலாக கேட்டான்.
“என்னை தொந்தரவு செய்யாதே!” என்று அவள் கத்த, அவளை கண்டுகொள்ளாமல் அவன் சென்று விட்டான். எல்லாரும் அவளை வேடிக்கை பார்த்தனர். அவள் அலைபேசி ஒலிக்க நட்சத்திராவிடம், மேம் இன்று என்னால வர முடியாது. நாளை வருகிறேன் என்று அவள் அங்கேயே அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் ஒருவன் அங்கு வந்து, அவளது வண்டியை பார்த்து, “மேம் நான் பார்க்கவா?” என்று கேட்டான்.
அவள் கண்ணீருடன் தலையை மட்டும் அசைத்தாள். அவன் சரி செய்து விட்டு “அஜய் சார் தான் பார்க்க சொன்னார்” என்று சொல்லி விட்டு அவன் செல்ல, பணத்தை அவன் கையில் தியா திணித்து விட்டு உன்னோட உதவிக்கு நன்றி. அடுத்தவன் பணம் எனக்கு தேவையில்லை என்று அவள் கூறி விட்டு வண்டியை எடுத்து நேராக பீச்சிற்கு சென்றாள்.
அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அஜய் உதட்டில் புன்னகை தொட்டு சென்றது. அவள் பீச்சில் சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு சென்றாள். வருத்தமாக அவள் தந்தை உறங்குவதை பார்த்து விட்டு அவளும் அவருடன் வந்து படுத்துக் கொண்டாள்.
சிம்மா ஓரிடத்தில் வந்து அமர, நட்சத்திரா மிருளாலினி தயாரானதை பார்த்து அவளிடம் பேசி விட்டு அவளது குழுவினருடன் அமர்ந்து தியாவை பற்றி சிந்திக்கலானாள். தமிழினியனும் அவனது தம்பிமார்களும் அவனுடன் வந்தனர். தமிழை தவிர அனைவரும் ஒரே கலர் கோர்ட் சட்டை அணிந்திருந்தனர். அவன் கேட்டதற்கு சரியான பதிலுமில்லை.
மிருளாலினியை மேடைக்கு அழைத்து வர, விரிந்த அவளது கூந்தல் அதனூடனான அணிகலங்கள், ஹேர் அக்சசரிஸ், அவளது கை, கால்களில் மருதாணி படர்ந்து அடர்சிவப்பு நிற சேரி மாடல் லெஹங்கா முழுவதும் கற்கள் பதிக்கப்பட்டு தேவலோக அப்சரசாக வந்தாள். அவளுடன் சுவாதி சோஜி லெஹங்காவுடனும், அவளது அத்தை பொண்ணுங்களும், சுஜியும் உடன் வந்தனர்.
தமிழினியன் தன் தம்பிகளுக்கு மத்தியில் அமர்ந்து தன் அழகான மனைவியை சைட் அடித்துக் கொண்டிருந்தான். மிருளாலினி மார்பில் தவழும் தாலியை பார்த்து அங்கே சலசலப்பு ஏற்பட்டது.
அப்பொழுது விளக்குகள் அணைந்து ஓர் பெரிய திரையில் பள்ளியில் தூரமாக இருக்கும் மிருளாலினியை தமிழினியன் ஏக்கமாக பார்க்கும் புகைப்படங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தது. அதில் நிறைய படத்தில் மிருளாலினியுடனான சுபியை எடுத்து எடிட் செய்து இருவரும் மட்டும் இருக்குமாறு தயார் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அதை பார்க்கும் போது இந்த இரு நாட்களாக மிருளாலினி தமிழினியன் சேர்ந்தது போலான புகைப்படமும் இருக்க, அதை பார்த்த மக்கள் மத்தியில் சலசலப்பு குறைந்தது.
தமிழினியனே அதை அதிர்ந்து பார்க்க, மிருளாலினி மேடையில் நின்று அவனை தான் தேடினாள்.
கையில் மைக்குடன் வந்தான் இளங்கோவன்.
கோ..தமிழினியன் எழ, “உட்காருடா மச்சான்” என்று இளங்கோ திரும்பி மிருளாலினியை பார்த்தான்.
என்ன மிருளா மேடம், “எப்படி இருக்கீங்க?” என்று அவன் மைக்கில் கேட்க, அவள் அவனை முறைத்தாள்.
தமிழினியனை எழ விடாமல் அவன் தம்பிகள் பார்த்துக் கொள்ள, ம்ம்..”எல்லாரும் என்ன எண்ணுகிறீர்கள்?” என்று எனக்கு தெளிவாக தெரியுது.
மிருளாவிற்கு திருமணம் முடிந்து அவள் கணவன் இறந்தும் என்று அவன் நடந்ததை கூற தமிழினியன் கோபமாக தன் தம்பிகளை முறைத்து விட்டு அவனிடம் வந்தான்.
தமிழ், நீ என்னை அடிக்கணும். அவ்வளவு தான. அடிக்கலாம். நான் பேசிய பின் மொத்தமாக உன்னிடம் வாங்கிக்கிறேன் என்று மிருளாலினியையும் வந்த விருந்தாளிகளையும் பார்த்தான்.
தமிழுக்கு மிருளாலினி மேலுள்ள காதலையும், அவளுக்கு சுபி மேலுள்ள காதலை பேச அவன் ஆரம்பிக்கும் முன் மேடையிலிருந்து இறங்கிய மிருளாலினி கையிலிருந்து தட்டாலே அவனை அடிக்க வந்தாள்.
தமிழ், “காப்பாத்துடா” என்று கோ அலற, ஆமா சுபியை காதலித்து திருமணம் செய்து அவன் போனவுடன் தான் இத்தனை வருடத்திற்க்கு பின் தான் இவர் காதல் எனக்கு தெரியும். இவர் காதல் பிடித்ததால் நான் இவரை திருமணம் செய்து கொள்கிறேன்.
அரேஜ் மேரேஜ் செய்வது போல் தான் இதுவும். என்ன திருமணத்தின் முன்னே இவர் கையால் எனக்கு தாலி கிடைத்து விட்டது. ஆனால் அதுக்காக நான் திருமணம் செய்யலை என்று இளங்கோவை பார்த்து,
யோவ்,” நீ தான ஒத்த ரோசாவை வைத்துக் கொண்டே என் பின்னே சுத்தின? உன்னோட நண்பன் காதல் கூடவா தெரியல?” கோபமாக அவள் அவனை அடிக்க வந்தாள்.
“மிருளா” என்று கத்திய சத்தத்தில் அவள் அதிர்ந்து நிற்க, தமிழினியன் அவள் தோளை பற்றி அவள் கையை பிடித்துக் கொண்டான்.
கோ, உன் பின் சுற்றியது அவனுக்காக இல்லை. தமிழுக்காக தான் என்றாள் இளங்கோவின் செல்ல ராட்சசி ஜெனிபர்.
ஜெனி, “அமைதியா இரு” தமிழினியன் சொல்ல, இவள் எப்படி என் புருசனை பற்றி பேசலாம்? அவள் கோபமாக மிருளாலினியுடம் கையை ஓங்க, கண்ணீருடன் மிருளாலினி நின்றாள்.
உன் புருசனை அவள் பேசியது தப்பு தான். அவள் பின் ரோஜாவுடன் சுத்தியவன் எனக்காக என்று அவளுக்கு தெரியாது. “உன் புருசனை நான் சுத்த சொன்னேனா?” தமிழினியன் கேட்டான்.
அடேய் மச்சான், இளங்கோ தமிழினியனை பார்க்க “இது தேவையாடா உனக்கு?” ஜெனி கோவை அடித்தாள்.
நிறுத்துடி, “எல்லாம் உன்னால் தான்” என்று கோ ஜெனி பக்கம் அனைத்தையும் திருப்பினான்.
“என்ன?” கோபமாக ஜெனி சீற்றமாக, ஆமா ப்ரெண்டுன்னு நீ தமிழை காதலிச்ச. நான் தமிழை மிருளாவோடு கோர்த்து விட்டு அவர்களை சேர்த்து விட்டால் தானாக நீ என் பக்கம் வருவன்னு தான் என்றும் என் நண்பனின் காதலுக்காக என்று அவன் சொல்ல, ஜெனி கண்கலங்க நின்றாள்.
ஏன்டா தம்பி, “உங்க காதல் கதையா யாராவது கேட்டாங்களா?” நிச்சயத்தை ஆரம்பிங்கப்பா..
யோவ், சாப்பாட்டை இப்பவே போட சொல்றேன். “இப்ப என்ன சொல்ற?” கோ கேட்க, அப்ப ஓ.கே சாப்பிட்டு வந்து உன்னோட காதல் கதையை கவனிக்கிறேன் என்றார் அவர்.
“பங்சனுக்கு வந்தியா? திங்க வந்தியா? சோத்துக்கு செத்தவனே!” கோ சத்தமிட, “யார பார்த்து என்ன சொல்லீட்ட?” அவர் மனைவி அவனருகே வர, கோ ஜெனி பின் ஒளிந்தான்.
“என்னை காரணம்ன்னு சொல்லீட்டு என் பின்னா ஒளியிர?” அக்கா இவனை வச்சி செஞ்சிட்டு இரு நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்புங்க.
அடிப்பாவி, “நான் உன் புருசன்டி” அவன் மனம் தவிக்க, தமிழினியன் சிரித்துக் கொண்டே, மிருளா நீ போ..என்று டேய், “இதை அணைத்து விடு” என்று தமிழினியன் சொன்னான்.
“எனக்கு எதுவும் தெரியாது” என்று மிருளாலினி ஜெனிபரிடம் அப்பாவியாக கூற, தமிழினியன் மேலும் அவளை ரசித்தான்.
“இந்த மூஞ்சிய வச்சுட்டு தான் தமிழை உன் பக்கம் இழுத்து வச்சுட்ட” என்று ஜெனிபர் பேச, ஹலோ ஓவரா பேசாதீங்க. எங்க அண்ணிய பத்தி பேசினீங்க. அவ்வளவு தான் என்று சுவாதி அவர்களிடம் வந்தாள்.
“அண்ணியா? அதுக்குள்ளவா?” ஜெனிபர் கேட்க, அதுக்குள்ள இல்லாம..”உங்கள மாதிரியா?” என்று துடுக்காக சுவாதி கேட்க, விசயம் சீரியசாகப் போகுதுன்னு உணர்ந்த மிருளாலினி, சுவாதி கையை பற்றி “வேண்டாம்” என்று தலையசைத்து, அவள் கையை பிடித்து நகர, அம்மாடி அப்படியே எங்க மாப்பிள்ள பையனையும் மேடைக்கு அழைச்சிட்டு போம்மா என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அவள் நின்று தமிழினியனை பார்த்தான். அவன் இதழ்கள் புன்னகைக்க கண்களை பார்த்த மிருளாலினிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
அவள் சுவாதியை கையை விட்டு செல்ல, விக்ரமிற்கு பின்னிருந்த பெண்மணி ஒருவர், அந்த பொண்ணு சுவாதியை பார்த்தேல்ல. இத்தனை பேர் இருக்கோம்ன்னு கொஞ்சமாது யோசிக்குதான்னு பாரேன். இப்படி திமிறா பேசுது. இவளையெல்லாம் எந்த மாமியா ஏத்துப்பா என்று அவர் கிசுகிசுப்பது போல் சத்தமாக பேசினர். விக்ரம் அவர்களை பார்த்து முறைத்தான்.
“அதை நீங்க பேசுறீங்களா?” சுவாதி வாய் துடுக்குள்ள பொண்ணு தான். “அவளுக்கு பிடித்த அவளோட அண்ணியை பேசியதால் கோபத்தில் வந்து பேசுறா? அதுக்கு திமிரு பிடிச்ச பொண்ணுன்னு சொல்லுவீங்களோ?” என்று காரசாரமான குரல் கேட்டு, குரலில் அதிர்ந்து விக்ரம் திரும்பி அவன் அம்மாவை பார்த்தான். வனஜாவும் ரசிகாவும் வந்திருந்தனர். இருவரும் நேராக விக்ரம் அருகே வந்து அமர, விக்ரமிற்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.
தமிழினியனும் மேலே சென்று மிருளாலினி கையில் பூங்கொத்து ஒன்றை கொடுத்து விட்டு, அவளது வெண்டைபிஞ்சு விரல்களில் மோதிரத்தை அணிவித்தான்.
சடங்குகளை முடித்து பெரியவர்கள் ஆசி வழங்க, “சாப்பாடு இன்னுமா தயாராகலையா?” ஒருவர் கூட்டத்தில் வினவ, சுவா..என்ன? கிருபாகரன் கேட்க, “இருங்க பெரியப்பா” என்று அவள் அண்ணன்களிடம் கண்ணை காட்டினாள்.
எங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக என் அண்ணா, அண்ணியின் முன் இதோ..நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு உணவருந்த செல்லுங்கள் என்று அண்ணி…வாங்க என்று மிருளாலினியை சுவாதி கீழே அழைத்து வந்தாள். தமிழினியனை சுவாதியின் அண்ணன் கீழே அழைத்து வந்தான்.
“என்ன பண்ற சுவாதி?” மிருளாலினி பதற, சின்னதா நடனம் தான் அண்ணி..”வாங்க முதல்ல நாம பண்ணலாம்” என்று அவள் சொல்ல, தமிழினியனுக்கும் இவர்களது திட்டம் புரிந்து தன் தம்பியின் கையை விடுத்து சுவாதியிடம் வந்து, சுவாதி “அவளுக்கு நடனம் தெரியாது” என்றான் தமிழினியன்.
அண்ணா, நாளைக்கு உங்க மேரேஜ் டான்ஸ் இருந்தால் தான் கலைகட்டும் என்றாள். அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே! எங்களுக்கு பதில் நீங்க ஆடுங்க என்றான் அவன்.
“அண்ணி, அண்ணாவால இப்ப தப்பிச்சுட்டீங்க?” இந்த சுவாதி உங்களை என்றாவது ஒருநாள் ஆட வைப்பேன் என்றான்.
அட, “விலகுடி” என்று விகாஸ் மைக்கை எடுக்க, பாடி தொலைச்சிறாதடா. எல்லாரும் ஓடிருவாங்க என்று சுவாதி அவள் அண்ணனை கேலி செய்ய, அங்கே சிரிப்பலை பரவியது.