விக்ரம் தன் போலீஸ் ஆட்களை தமிழினியன் வீட்டில் அவர்களின் பாதுகாப்பிற்காக போட்டிருந்தான். சிம்மா அர்சுவுடன் வந்து அவன் நடந்து கொண்ட விதத்தையும் அவன் அர்சுவுடன் பைக்கில் கிளம்பியதை பற்றியும் விக்ரமிடம் அவன் ஆள் கூறினான்.
அப்பா, “நீங்க வீட்டிற்கு சென்று தமிழினியன்- மிருளாலினி பங்சனிற்கு கிளம்பி வாங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு. முடித்து விட்டு நான் தயாராகி வருகிறேன்” என்றான் விக்ரம் சதாசிவத்திடம்.
சாரிப்பா, “அம்மா பேசியதை எண்ணி உன்னை நீயே சிரமப்பட்டுக்காத” என்று அவர் விக்ரமின் கையை பிடித்தார். அப்பா, “எப்பொழுதும் நடப்பது தானே!” நான் நல்லா தான் இருக்கேன். கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு.
“கை இன்னும் சரியாகவில்லையே?”
அப்பா, இது பலமான அடியில்லை. இதை விட பெரிய காயமெல்லாம் பார்த்திருக்கோம். நீங்க போகலை..வனஜாம்மா வரிந்து கட்டிக் கொண்டு என் வீட்டிற்கு வந்து விடுவார் என்று விக்ரம் ஒற்றை கண்ணடித்து சிரித்தான்.
போக்கிரி, “என்ன பேச்சு பேசுறடா?” என்று செல்லமாக அவனிடம் கடிந்தாலும் அவர் முகமும் சிவப்பேறியது.
அச்சோ, அப்பா போதும்..உங்கள் காதல் மனைவியையும் அழைச்சிட்டு வாங்க. போங்க..போங்க..என்று அவரை சமாளித்து அனுப்பி விட்டு அவன் காரிடம் வந்தான். விக்ரமின் பர்சனல் வொர்க்கர் துரை டிரைவர் சீட்டில் ஏறினார். அவர்களும் சுபிதனின் வீட்டை நோக்கி சென்றனர்.
விக்ரமின் ஆள் ஒருவர் சிம்மாவை பின் தொடர்ந்து, அவன் செல்லும் வழியை விக்ரமிற்கு தெரிவித்தான். மாறனிடம் சிம்மா சுபி அம்மாவை கண்காணிக்க சொல்லியது நினைவில் வந்து யோசனையுடன் அங்கே சென்றான்.
சுபிதனின் வீட்டிற்கு சிம்மா அர்சுவுடன் வந்தான். மறைந்திருந்த மாறன் அவன் முன் ஓடி வந்தான்.
அப்பா..அங்கிள் கத்துகிறார் என்று சொல்லிக் கொண்டே அர்சு காதை மூடினான். முகேஷ் மூலம் வந்த சாமியார் ஒருவர் அவ்வீட்டிற்கு வந்தார்.
“சிம்மராஜனா?” என்று அவர் சிம்மாவை பார்த்து கேட்டார்.
“ஆமா சாமி” என்று வீட்டை அவன் கண்ணால் காட்ட, “குழந்தையை எதுக்கு அழைச்சிட்டு வந்தீங்க?” அவர் கோபமாக கேட்டார்.
“அவனால் சுபிதனின் ஆவியை பார்க்க முடியும்” என்றான் சிம்மா.
அது உயிரோடு இருந்த போது உங்களுக்கு உறவாகவோ நண்பனாகவோ இருந்திருக்கலாம். ஆனால் இப்ப உயிரோட இல்லை. இப்பொழுதைக்கு நல்ல ஆன்மாவாக இருக்கலாம். அது மட்டும் தீய ஆன்மாவாக மாறினால் முதலில் பாதிக்கப்படுவது அவனுடன் வாழ்ந்த அவனுக்கு உரியவர்கள் தான்.
“என்ன சாமி சொல்றீங்க?” மாறன் பதட்டமாக கேட்டான்.
ஆமாம். உயிரோடு இருக்கும் போது உங்களுடன் சந்தோசமாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது அவனை விட்டு நீங்கள் மகிழ்ந்திருப்பது அதன் வலியை அதிகரிக்கும். இறப்பவர்கள் உடனே சொர்க்கவாயிலுக்கோ..இல்லை நரகத்திற்கே உடனே செல்ல மாட்டார்கள். அவர்களின் ஆன்மா..பத்து நாட்களாவது உரிமையானவரையே சுற்றி வரும். ஒரு கட்டத்திற்கு மேல் அதனால் இங்கிருக்க முடியாது. நிராசையுடன் இருப்பவரின் ஆன்மாக்கள் விண்ணுலகம் செல்லாமல் இங்கிருந்தால் விரைவிலே தீய ஆன்மாவாக மாறி விடும். பின் அது கடக்கும் பாதை அனைத்தும் சாவு தான் மிஞ்சும். அதனால் அது பேசும் அனைத்தையும் நம்பாதீர்கள் என்றார் அவர்.
ஆனால் சாமி, சுபி ஐந்து வருடமாக தன் மனைவியை பாதுகாத்து நல்ல ஆன்மாவாக தான் இருக்கிறான்.
“என்ன? ஐந்து வருடமாகவா?” வாய்ப்பேயில்லை என்றார் அவர்.
சாமி, “அவன் வெகு தீவிரமான செயல்” என்று எதையும் செய்யவில்லை. தன்னை கொன்ற தன் அண்ணனையும் அவன் ஏதும் செய்யாமல் எங்கள் மூலம் தான்..அவன் அண்ணன் அவனை கொலை செய்த காரணத்தால் நான் தான் அரெஸ்ட் செய்தேன். அவர் இப்ப ஜெயிலில் நன்றாக தான் இருக்கிறார்.
இல்லை, இதில் ஏதோ சிக்கல் உள்ளது என்ற சாமியார் கண்ணில் பட்டது சிம்மாவின் கழுத்தில் இருந்த ருத்ராட்சம்.
இது..இது..என்று அவர் பின்னே விலகினாலும் அதிர்ச்சியுடன் சிம்மாவை பார்த்தார்.
சாமி, “இது ஐந்து வருடமா இவன் கழுத்தில் தான் உள்ளது” மாறன் சொல்ல, “என் இறைவனா?” என்று கையெடுத்து சிம்மாவை பார்த்து அவர் கும்பிட்டார்.
சாமி, “முதல்ல இதை பார்க்கணும்” என்றான் சிம்மா தீவிரமாக.
பார்க்கலாம். இது என்று அவர் தொட வர, அவரை தடுத்த சிம்மா..இதை யாரும் தொட முடியாது. ஷாக் அடிக்கும். இது ஈசனுடையது என்று அவன் ஊர்ச்சாமியார் சொன்னதை அவன் சொல்லி விட்டு, சாமி சிபியையும் ஈசன் தான் எதற்காகவோ தேர்ந்தெடுத்ததாக சொன்னான் என்றான்.
“என்ன?” அவர் சிந்தனையுடன் அவ்வீட்டை பார்க்க, முதலில் இருந்ததை விட சுபி ஆன்மாவின் சத்தம் அதிகமானது. அவர் ஆட்களுடன் உள்ளே நுழைய, சுபியின் ஆன்மாவை எதிர்கொண்டார் அவர். அவருடன் வந்தவர்கள் அங்கிருந்த சாமியார் சிலரை விரட்ட, அவன் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
“எதுக்குடா இங்க வந்த?” என்று சிம்மாவை சுபிதனின் அம்மா அடிக்க, அவரை பிடித்து தள்ளி விட்ட மாறன், “உங்க பையன் உயிரோட இருக்கும் போதும் கஷ்டப்படுத்துனீங்க? இப்ப செத்து போன பிறகும் இப்படி அவனை கொடுமைப்படுத்துறீங்க?” அவன் கத்தினான்.
சுபிதனின் ஆன்மா மாறனை பார்த்து அவனருகே வர, அந்த சாமியார் இடையே வந்து அவரது மந்திர குச்சியை நீட்ட, சுவற்றில் அடித்து கீழே விழுந்தான் சுபிதன்.
மறைந்து கையில் துப்பாக்கியுடன் வந்த விக்ரம் சமைந்து சிலையாய் நின்றான். சுபிதன் விழுந்த நொடி அவன் அங்கிருந்த அனைவர் கண்ணுக்கும் தெரிந்தான்.
அங்கிள்..என்று அர்சு அழைக்க, சுபி என்று மாறன் அழுதவாறு அவன் பக்கம் செல்ல, “ஏய் போகாத” என்றார் சாமியார் அவரை பார்த்து முறைத்த சுபிதனின் ஆன்மா வீட்டிற்கு வெளியே திகைத்து நின்ற விக்ரமை பார்த்தது.
சாமி, அவனை ஏதும் செய்திடாதீங்க. எங்களுக்கு உங்க உதவி வேண்டும் என்று சிம்மா கண்ணீருடன் சாமியாருடன் பேசிக் கொண்டே வெளியே பார்த்த சிபிதனின் ஆன்மாவை தொடர்ந்து அவனும் பின்னே திரும்ப, அனைவரும் வாசலின் வெளியே நின்ற விக்ரமை பார்த்தனர்.
விக்ரம், “இங்க என்ன செய்ற? என்னை பின் தொடர்கிறாயா?” என்று சிம்மா சினத்துடன் அவனிடம் வந்தான்.
சி..சி..ம்..ம்..மா..இது..இது..என்று திக்கிக் கொண்டே விக்ரம், “ரகசியன் சொன்னது உண்மையா?” என்று சட்டென கேட்டு மூச்சு வாங்கினான்.
அவனை உள்ளே பிடித்து இழுத்த சிம்மா, அவன் தோளில் தட்ட விக்ரமின் மூச்சு சீரானது.
ஆமா, “இவன் செத்து போன மிருளாலினியின் கணவன் சுபிதன்” என்றான் சிம்மா.
சாமி..இவங்கள என்று சிம்மா கேட்க, விக்ரம் அவன் ஆளை அழைக்க, அவன் மயங்கி கீழே கிடந்தான்.
இவன் முன்னிருந்தே இங்கே தான் இருந்தான். வேற யாருமில்லை. ஆனால் இவரை பார்த்து மயங்கிட்டான் போல.
“வெளிய போங்க” சுபிதனின் அம்மா சத்தமிட, “ஏம்மா உண்மையிலே சுபிதன் உன் மகன் தானா?” அவன் மீது உங்களுக்கு பிரியமே இல்லை என்று மாறன் கோபமாக கேட்க, அவன் என்னோட மகன் தான். அவன் ஜாதகத்தில் அவனால் தான் எங்கள் அழிவு என்று அவன் திருமணத்தோடு பார்த்த போது இருந்தது.
ஆனால் அதற்கு முன்னிருந்தே உனக்கு என்னை பிடிக்காதுல்ல? சுபியின் ஆன்மா விவன, ஆமா பிடிக்காது. உங்க அப்பா நீ பிறந்த பின் தான் என்னை விட்டு போயிட்டான். அதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் கால் மேல் கால் போட்டு வாழ்ந்த என் கால் நோகும் படி உழைத்தேன். உன்னால் தான். அதனால் உன்னை முன்னமே கொல்ல நினைத்தும் என்னால முடியாது போனது. அதனால் தான் உன் மீது வெறுப்பை உமிழ்ந்தேன். எனக்கு எல்லமாய் என் மூத்த மகனான். உன்னை என் பிள்ளாயாக நினைக்கவே பிடிக்கவில்லை என்று அவர் காரமாக பேசினார்.
“இதுக்காகவா இவனை இப்படி கஷ்டப்படுத்துனீங்க? இப்ப எதுக்காக அவனை அடைக்க பாக்குறீங்க?” சிம்மா கோபமாக கேட்டான்.
இவனால் தான் இன்று நான் யாருமில்லாமல் இருக்கேன். என் மகன் ஜெயிலுக்கு சென்று விட்டான் என்று அவர் பேச, கோபமான சிம்மா அர்சுவை விக்ரம் கையில் கொடுத்து விட்டு, அவர் கழுத்தை பிடித்தார்.
மிரு, “உங்களை என்ன செஞ்சா?” ம்ம்..இவன் இறந்த பின் இவன் அண்ணன் அவளை அடைய நினைத்திருக்கான். “நீங்கள் அவனுக்கு உதவ பார்த்துருக்கீங்க? ச்சீ..நீயெல்லாம் மனுசியா?” உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு சிம்மா மேலும் நெறிக்க, “சிம்மா என்ன செய்ற?” மாறன் அவனை பிடித்து இழுத்தான். ஆனாலும் சிம்மா சினமுடன் அவர் கழுத்தை பிடித்தான்.
சிம்மா..அவங்கள விடு. இப்ப என்னோட மிரு பாதுகாப்பா இருக்கா. எனக்கு அது போதும் என்றது சுபிதனின் ஆன்மா. சாமியார் அவனின் ஆன்மாவை கூர்மையுடன் பார்த்தார்.
“அவள் பாதுகாப்பா இருக்காலா?” இருக்க விட மாட்டேன். “அவளுக்காக தான என் மகனை தூக்கி அடித்து எத்தனை முறை காயப்படுத்தினாய்? இப்ப கூட அவனை நீ இவனுடன் சேர்ந்து ஜெயிலுக்கு அவளுக்காக தான அனுப்பின? அவளை தான் உனக்கு ரொம்ப பிடிக்குமே?” அவளை உன்னுடன் சீக்கிரமே அனுப்புகிறேன் என்று சுபிதனின் அம்மா சீற்றத்துடன் பேசினார்.
“என்ன சொன்ன? என்னை தாண்டி நீயும் சரி, வேற எவனும் சரி என்னோட மிருவை தொட்டு பாருங்க. உயிரோட விடமாட்டேன்” என்று நொடிப் பொழுதில் சுபிதனின் ஆன்மா வன்மாக மாற, சாமியார் சிம்மாவை பார்த்தார்.
சுபி..என்று அழுத்தமுடனும் கோபமுடனும் சிம்மா கத்த, அவர் கழுத்தை விட்டு சிம்மாவை பார்த்தது சுபிதனின் ஆன்மா.
சுபி, “உனக்கு என்ன ஆச்சு? கோபத்தில் நீ மாறுகிறாய்?” நீ மிருவை பாதுகாக்க மட்டும் செய். போதும். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன் என்று சிம்மா சொல்ல, சுபிதனின் ஆன்மாவோ பயங்கரமாக சிரித்தது.
அனைவரும் பயத்துடன் அதை பார்க்க, நீ நினைப்பது தவறு சிம்மா. உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் முதலில் நீ காப்பாற்று. பின் என்னை பற்றி யோசி.
“என்ன சொல்ற சுபி?” மாறன் கேட்க, “என்ன மாறா? நல்லா இருக்கியா? உன்னோட பாப்பா என்ன சொல்றா?” அவன் கேட்க, நீ என்னை..மாறன் திக்க, நான் பார்க்கும் அனைவரின் கடந்த காலமும், எதிர்காலமும் எனக்கு நன்றாக தெரியும். இங்கிருக்கும் அனைவரையும் ஆபத்து நிறைந்திருக்கு. அதற்காகவே நான் வந்தேன். செய்ய வேண்டியதை செய்வேன். நீங்க எல்லாரும் கவனமா இருங்க.
சுபி,” உன்னுள் தீய குணம் ஆட்கொண்டு விட்டதா?” சிம்மா யோசனையுடன் பயத்துடனும் கேட்க, சாமியாரை பார்த்த சுபிதனின் ஆன்மா..இதை பாருங்கள் என்று அவன் ஆன்மாவின் ஊடிருந்து ஓர் வெளிச்சத்தை காட்டினான். அதில் ருத்ராசமும் வில்வஇலையும் சேர்ந்தவாறான மாலை இருந்தது.
பேயென அவனை பார்க்க வந்த சாமியாரும் அவர் ஆட்களும் சுபிதனருகே வந்து மண்டியிட்டு வணங்கினர்.
“என்ன நடக்குது?” விக்ரம் புரியாமல் கேட்க, இந்த ஆன்மாவினுள் ஈசன் பிரவேசித்துக் கொண்டிருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை என்று சாமியார் எழுந்து ஆன்மாவை தொட வர, அவன் புன்னகைத்துக் கொண்டே விலகினான். அவர் மேலும் அருகே செல்ல, “அந்த ஈசனை தொடும் தைரியம் கூட உனக்கு வந்து விட்டதோ?” சுபிதன் கேட்க, இல்ல..இல்ல..என் அய்யனை நான் பார்த்தாலே போதும் என்றார் அவர்.
ம்ம்..அவர் கண்டிப்பாக காட்சியளிப்பார். ஆனால் அவரை நீங்கள் பார்க்க முடியுமா? என்று தான் தெரியவில்லை. எனக்கான வேலையும் சரியாக முடிந்தால் அதற்குரியவர்கள் பார்ப்பர்.
நான் அவருடனே இருப்பவன். அவருக்கான எல்லா பூஜைகளையும் செய்வேன்.
“ஓ..அப்படியா? நீவிர் அந்த ஈசனையா பூஜிப்பீர்கள்?” சுபிதனின் ஆன்மா கேட்க, அவர் முகம் கொடுரமாக மாறக் கண்ட மற்றவர்கள் விலகினர்.
“எல்லாரும் வெளிய போங்க” என்று சுபிதனின் ஆன்மா கத்தியது. சாமியாராக இருந்த அவர் ராட்சத உருவம் எடுத்தார். அதை பார்த்து அனைவரும் பயந்து பின் வெளியேற, மயக்கத்தில் இருந்து எழுந்த விக்ரமின் ஆள் மீண்டும் மயங்கினார்.
“இவன் வேற?” என்று அவனை உதைத்தான் விக்ரம். அவன் எழவில்லை. இருவரின் சக்திகளும் மோத, சுபிதனின் அம்மா ஓட்டம் பிடித்தார். சுபி ஆன்மாவின் சக்தி குறைய, சிம்மா வீட்டினுள் நுழைந்தான். அனைவரும் பதறிப் போனார்கள்.
அப்பா..அப்பா..என்று அர்சு அழ, விக்ரமும் மாறனும் வீட்டினுள் வர, கதவை வேகமாக அடைத்த சிம்மா சுபிதனின் ஆன்மாவின் முன் வந்து, அந்த ருத்ராட்சத்தை நீட்டினான்.
சிம்மா..என்று சுபிதனின் ஆன்மா அவனை தள்ளி விட்டு, அதனது சக்தியை முழுதாக உபயோகித்தது. அச்சக்தியின் வீரியத்திலிருந்து ஒளியாக சீற்றமுடன் வந்த சிவனை பார்த்து சிம்மா கைகள் தானாக உயர்ந்து “சிவனே போற்றி” என்று அவன் வாய் முணுமுணுத்தது. ஈசனின் ஆயுதம் அவனை குத்தி கிழித்து தன் ஆற்றாமையால் நடனமாடினார் அய்யன் அவ்வொளி வடிவிலே. சிம்மா கண்ணீர் தானாக வடிய சுபிதனின் ஆன்மாவோ மறைந்து விட்டது. பின் அமைதியான ஈசன் சிம்மாவை பார்த்து விட்டு மறைந்து விட்டார் .
கதவை திறந்து பேயறைந்தார் போல் வந்த சிம்மாவை பார்த்து மாறன் பதற, விக்ரம் ஒதுங்கி நின்றான்.
“என்னாச்சுடா?” மாறன் கேட்க, மனித உடலினுள் சாமி வந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்ம சுபி ஆன்மாவினுள் “ஈசன்டா” என்று பிரம்மை பிடித்தவன் போல் சொல்லிக்கொண்டு வாசலிலே அமர்ந்தான்.
“ஆவியினுள் கடவுளா?” என்று விக்ரம் அழுதுறங்கிய அர்சுவை சிம்மாவிடம் கொடுத்து விட்டு ஏதும் பேசாமல் நகர்ந்தான். மாறன் சிம்மாவை அழைத்துக் கொண்டு சென்றான்.
சற்று நேரம் அமைதியாக அறையினுள் இருந்த சிம்மாவை நட்சத்திராவின் மகிழ்ச்சியான குரல் களைத்தது. வெளியே வந்து அவளை பார்த்து சொக்கி தான் போனான் சிம்மா.
மாமா, இன்னும் தயாராகலையா? நேரமாகுது நட்சத்திரா சொல்ல, ம்ம்..நீ தலையில் பூ சூடிக் கொள்ளவில்லை? என்று கேட்டான்.
“என்னால அது மட்டும் முடியாது” என்று கண்கலங்கிய அவள் சிம்மாவை பார்த்து, மாமா அரை மணி நேரம் தான். சீக்கிரம் தயாராகுங்க.
“அர்சு எங்க?”
அவன் தயாராகி சித்துவுடன் வெளியே இருக்கான் என்றாள் நட்சத்திரா.
“அவன் ஏதும் சொன்னானா?” சிம்மா கேட்க, இல்லையே மாமா என்று ஹாலில் இருந்த கண்ணாடி முன் வந்து அவளை சரி செய்து கொண்டே பேசினாள்.
“அவன் நல்லா தான இருக்கான்?” என்று சிம்மா கேட்டுக் கொண்டே நட்சத்திராவை நெருங்கினான். பட்டுப்புடவை சில சிம்பிலான அணிகலன்கள். மலர் சூட்டவில்லை என்றாலும் நறுமணமிக்க அவளது கூந்தல். சாதாரண அலங்காரமானாலும் வெகுநாட்களின் பின் பட்டுப்புடவையில் அழகாக இருந்தாள் நட்சத்திரா.
அவன் நல்லா இருக்கான். அத்தை வாங்க. நாம முதல்ல போவோம் இல்லை மிரு கோவிச்சுப்பா. மாமா தயாராகி வரட்டும் என்று நட்சத்திரா அன்னம் பரிதியை பார்க்க, அவர்கள் யாரும் அங்கே இல்லை. எங்கே போனார்கள்? என்று மீண்டும் கண்ணாடியை பார்த்தாள். சிம்மா அவளை கண்ணில் தாபத்துடன் நெருங்கி வந்தான்.
தன் மகனின் பார்வையை வைத்தே கண்டு கொண்ட பெற்றோர்கள் இதற்கு மேல் இங்கிருந்தால் சரிவராது என்று வெளியே சென்றிருந்தனர்.
“மாமா” என்று நட்சத்திரா மனம் பதற திரும்பினாள். அவளருகே நெருக்கமாக வந்த சிம்மாவின் உடலை உரசி மீண்டது பெண்ணவளின் தேகம். அவள் விழிவிரித்து நிற்க, நெருங்கிய சிம்மாவின் கட்டுப்பாடுகள் உடைந்து, அவளது இடையை பிடிக்க, அவள் ஒரு நிமிடம் கண் மூடி திறந்தாள். அவள் திறந்த நிமிடம் அவளது சிவந்த இதழ்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டான்.
மா..மா..அவள் திணறி அவன் மார்பில் குத்த, வலிக்குமா சிம்மாவிற்கு? மேலும் சுகவதையானது. அவளது கையை பிடித்து அவளை விட்டு விலகிய சிம்மா, “என்னோட ஸ்டார் ப்யூட்டிபுல்” என்றான் மோகப்புன்னகையுடன்.
அவனது புன்னகையிலும் என்னுடைய ஸ்டார் என்பதிலும் அவள் திகைத்திருக்க, “மிருவின் பின் நாம திருமணம் செய்து கொள்ளலாமா?” எனக் கேட்டாள்.
அவன் கையை உதறி விட்டு, “கனவு காணாத மாமா” என்று பட்டென சொல்லி நட்சத்திரா நகர்ந்தாலும் அவள் மனதிலும் மெல்லிய மழைச்சாரல் அக்கணம். அதை புரிந்து கொண்டு புன்னகைத்து அவனறைக்கு தயாராக சென்றான்.
ரட்சகனை பார்க்க அவரறைக்கு சென்றிருந்தனர் உதிரனும் பாலாவும். உள்ளே சென்றதும் உதிரன் அவரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டே அமர்ந்தான். பாலா இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
ரித்திகாவை பற்றி அவருக்கு தெரிந்ததை கூறி இருவரையும் எச்சரிக்க நினைத்தார்.
அந்நேரம் அவர் அலைபேசி அவரை அழைக்க, “இருவரும் வாங்க” என்று உதிரனையும் பாலாவையும் அழைத்துக் கொண்டே வெளியே சென்றார். அங்கே புகழேந்தியும், அம்சவள்ளியும் ரித்திகாவை பார்த்து அதிர்ந்து நின்று கொண்டிருந்தனர் என்றால் வந்த மூவரும் கூட அவளையும் பிரணவ்வையும் பார்த்து அதிர்ந்தனர். விசயம் கேள்வி பட்டு ஸ்ரீ, தக்சனா, வர்சன் அங்கே வந்தனர். வர்சன் கோபமாக பிரணவ்வை பார்த்து முறைத்து நின்றான்.
அதிர்ந்து நின்ற அனைவர் அருகே பிரணவ் வர, அவன் பின்னே தன்னுடையை பைகளை இழுத்து வந்தாள் ரித்திகா.
சார், “நாங்க சென்னை கிளம்புகிறோம்” என்று பிரணவ் கூற, பாலா அதிர்ந்தான். உதிரன் தன் ரித்தியை கனத்த மனதுடன் பார்த்தான்.
பிரணவ், “இன்று காலை தான வந்த? அதற்குள்ள கிளம்புற? இந்த பிராஜெக்ட் ரித்திகாவுடையது தான?” ரட்சகன் கேட்க, ஆமா சார்..எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்து முடிச்சிருவாங்க என்று அவன் சொல்ல, அம்சவள்ளி ரித்திகாவை ஆழ்ந்து கவனித்தார். அவள் உடல் சோர்வு, நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தலையை கவிழ்ந்து கொண்டு நின்றது அவருக்கு தெளிவாக தெரிந்தது.
அவர் தன் கணவனை பார்த்துக் கொண்டே மகன் உதிரன் அருகே வந்து நின்றார். இல்லப்பா..அந்த பொண்ணு ரட்சகன் கூற, அங்கிள் “அங்க நிறைய வேலை இருக்கு” என்று அவர் வாயை அடைத்தான்.
சொல்லீட்டு வா. நான் காரை எடுக்கிறேன் என்று அவன் செல்ல, ரித்திகா முதலில் ஸ்ரீ, வர்சன், தக்சனா அருகே வந்து, “வேலையை முடிச்சிட்டு வாங்க” என்று ரட்சகனை பார்த்தார்.
சார், எங்க மேரேஜ் தேதியை சீக்கிரம் வைக்கப் போறாங்களாம். எங்க திருமணம் விரைவிலே முடிந்து விடும் என்று உதிரனை பார்த்தாள். அவன் கண்கலங்க அவளை பார்த்தான்.
“அதுக்குள்ள போகணுமா?” என்று ஸ்ரீ சந்தேகமாக கேட்க, ரட்சகன் மட்டும் மருண்ட விழிகளுடன் அவளை பார்த்தார். இருவருக்கும் திருமணம் இல்லை என்று தான அவன் பெற்றோர் சொன்னாங்க. “ஏதோ தவறாக உள்ளதே! என்று இப்பொழுது தான் ரித்திகாவை அவன் மிரட்டுகிறானோ?” என்று யோசனை அவருள் பிறந்தது.
ஆமா, போகணும். விவரம் முழுவதும் என்னோட அறையில் வைத்திருக்கேன். நல்லபடியாக முடிச்சிட்டு வாங்க என்று வர்சனை பார்த்து விட்டு மீண்டும் ரட்சகனிடம் திரும்பினாள்.
அவள் தயாரித்த பிராடெக்ட்டை ரித்திகா லேப்பில் கொட்டும் போது ஒருவர் பார்த்து, அது நீங்கள் தயாரித்தது இல்லை என பேசி இருப்பார். அவருக்கு தெரியாமல் பைல்லை எடுக்கிறேன் என அதையும் மாற்றி எடுத்து வந்திருப்பாள். அறைக்கு வந்து தான் கவனித்து இருப்பாள். பிரணவால் அவளால் வெளியே செல்ல முடியாமல் போயிருக்கும்.
சார், நீங்க சொன்னது போல் நானில்லை. நான்..என்று சொல்ல வந்தவளால் சொல்ல முடியாமல் விழிகள் கலங்கியது.
“நிஷாவிடம் சொல்லவில்லையே?” அவர் கேட்க, அவங்க ஓய்வெடுக்குறாங்க போல சார். நீங்க சொல்லீடுங்க என்று புகழேந்தியிடம் வந்தாள்.
நெஞ்சடைக்க எச்சிலை விழுங்கி உயிர் கொடுத்து அவரிடம், பெரிய மாமா..என்று சரேலென அவள் கண்ணீர் புகழேந்தி கையில் பட்டது. அவர் அவளை உறுத்து பார்த்தார். “பெரிய மாமாவா?” என்று எல்லாரும் அதிர, ரட்சகன் பார்வை உதிரனை மேலிட்டது.
என்னை மன்னிச்சிருங்க பெரிய மாமா. அன்று மாமாவிற்காக..என்று நிறுத்தி, எல்லார் முன்னும் அதிகமா பேசிட்டேன். இப்பொழுது தான் அதன் தவறு புரிந்தது. நீங்க நினைப்பது போல் யார் வாழ்க்கைக்கும் நான் தடையாக இருக்க மாட்டேன். அதான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனே! என்று கண்கலங்க அவள் கூறி விட்டு, அம்சவள்ளியிடம் வந்தாள்.
அத்தை, நான் ஏதாவது தப்பா பேசி இருந்தால் “என்னை மன்னிச்சிருங்க” என்று அவள் கூற, அம்சவள்ளி ரித்திகா கையை பிடித்தார். அவள் கை ஜில்லென இருக்க, அவர் அவளை பார்த்தார். அவரிடமிருந்து பட்டென கையை உதறி விட்டு, “உதி மாமாவுக்கு நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து வையுங்க” என்று நிற்காமல் நகர்ந்தாள். உதிரனை பார்த்து பேசாமல் தலையை தாழ்த்தினாள். அவன் கண்ணீர் அவள் கையில் பட்டு தெரித்தது.
வேகமாக திரும்பினால் பாலா முன் வந்து நின்றான். பாலா..என்று அவள் கண்கள் கலங்க..அவள் பேசும் முன், நீ போகாத ரித்து..என்றான் வாயிலை பார்த்தப்படி.
நான் போய் தான் ஆகணும் பாலா. எல்லாரையும் பார்த்துக்கோ. சார் என்று ரட்சகனிடம் திரும்பிய ரித்திகா, பாலாவை சும்மா சும்மா முறைக்காதீங்க. சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் தான். அவன் மனதில் எந்த வஞ்சமும் இல்லை. முடிந்தால் அவனை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். அவன் இங்கே வேலை செய்ய தகுதி உள்ளவன் தான். பிரகவதியையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க என்று சொல்லி விட்டு பாலாவிடம் திரும்பி, “சக்திக்கு என்னோட வாழ்த்தை சொல்லி விடு பாலா” என்று அவள் நகர, எட்டி அவள் கையை பிடித்த பாலா..உன்னை காதலித்த பாலாவாக கேட்கவில்லை ரித்து. உன்னோட தோழனாக கேட்கிறேன். “போகாத ரித்து” என்று அவன் கண்ணீர் சிந்த, அவன் கையை நகர்த்தி விட்டு கடைசியாக உதிரனிடம் வந்தாள்.
உதிரன் சந்தேகமாக பாலாவை பார்த்தான். தோழனாக என்றால் ரித்துவின் திருமணத்தில் இவன் மகிழ்ந்திருக்கணுமே! என்ற பாலா பேச்சில் யோசனையுடன் மூழ்கிய உதிரனை களைத்தாள் ரித்திகா அவன் முன் வந்து.
ரித்து உதிரன் அழைக்க, ஒரு முறை அவனை பார்த்த ரித்திகா, அவளது பையை திறந்து ஒரு பரிசை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அவன் அவளை பார்க்க, “பிரிங்க மாமா” என்றாள்.
மாமா..மாமா. இவள் என்னை மாமாவென அழைத்து எத்தனை வருடங்கள் ஆகிறது? என்று அவன் பிரிக்காமல் அவளை பார்த்துக் கொண்டே நிற்க, அவன் கையிலிருந்து அவளே வாங்கி பிரித்து. அதிலிருந்த உயர்ரக கருப்பு நிற பழைய மாடல் வாட்ச் ஒன்றை அவள் அவன் கையை இழுத்து கட்டி விட்டாள்.
உதிரன் அதிர்ந்து அவளை பார்த்து, ரித்து..இது..இது..என்று பதட்டமானாள். அவன் ஏதும் பேசக்கூடாது உதிரன் திக்கி திக்கி பேசத் தொடங்கும் முன் அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் மாமா” என்று யாரையும் திரும்பி கூட பாராமல் வேகமாக அவளது டிராவல் பையை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல, காரை கொண்டு வந்து நிறுத்தினான் பிரணவ்.
எல்லாரும் ரித்திகாவை அதிர்ச்சியுடன் பார்க்க, உதிரன் கண்ணீர் நிற்காமல் அவனது எண்ணத்தில்….
மாமா, நீயே பாரு..இந்த கைக்கடிகாரத்தை வாங்கி வந்து உன்னிடம் நானே பிரப்போஸ் செய்து உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கத்திக் கொண்டே கல்லூரிப்பையை போட்டுக் கொண்டு, கண்ணை சிமிட்டி பறக்கும் முத்தத்தை அள்ளித் தெளித்த ரித்திகாவுடனான நினைவுகள் எழுந்தது.
காரில் ஏறிய ரித்திகாவோ, “ஒரு நிமிடம்” என பிரணவ் அருகே இருந்து கீழிறங்கி, உதி மாமா..எனக் கத்தினாள். நினைவுகளிலிருந்து மீண்ட உதிரனும் மற்றவர்களும் அவளை பார்த்தனர்.
உதி மாமா..” ஐ லவ் யூ” என்று அன்று போல் தன் இரு கைகளாலும் வாய் குவித்து இதழ் ஒற்றி புன்னகை கலந்த அழுகையுடன் பறக்கும் முத்தத்தை உதிரனுக்கு அள்ளித் தெளித்தாள் ரித்திகா. உதிரன் அங்கேயே மண்டியிட்டு தன் மனதில் இருந்த காதலை அழுகையாக வெளிப்படுத்தினான்.
சினமுடன் வெளியே வந்த பிரணவ், ரித்திகாவிடம் வந்து அவளை ஓங்கி அறைந்து அவளை காருக்குள் தள்ளினான். உதிரன் வேகமாக எழ, காரை விரைந்து எடுத்தான். கார் சன்னல் வழியே தலையை நீட்டி அனைவருக்கும் கையசைத்த ரித்திகாவின் பார்வை உதிரனிடம் கடைசியாக புன்னகையுடன் படிந்தது.
மாமா, மனதினுள் உன் காதலை அடக்கி வைத்து இனி நீ கஷ்டப்பட தேவையில்லை. இனி உன்னை தேற்ற அத்தை, மாமா உடனிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அவள் காரினுள் தலையை விட, பிரணவ்வோ அவளிடம் கடுகடுத்தவாறு அவள் மனதை புண்படுத்திக் கொண்டே சென்றான். அவர்கள் கார் அக்கூடத்தை விட்டு தள்ளி சென்று விட்டது.
ரித்திகாவை வெளியே பையுடன் அனைவரும் பார்க்கும் சமயத்தில் நிஷா…நிஷா..எழுந்திரு..என்று சுபிதனின் ஆன்மா கத்தியது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அங்கிருந்த பொருட்களை தன் சக்தியால் விட்டு விலாசியது. அதில் விழித்தவள் சுபிதனின் ஆன்மா குரல் கேட்டு பயந்து நாற்காலியிலிருந்து கீழே விழுந்தாள். நிஷாவிற்கு பயத்தில் சுபிதன் ஆன்மாவின் வார்த்தைகள் காதில் ஏறவேயில்லை. அதை உணர்ந்து கொண்ட ஆன்மாவோ..அவளை நினைவிற்கு கொண்டு வரும் பொருட்டு நிஷா ரித்திகா அறையில் வைத்திருந்த வீடியோவை பின்னோக்கி நகர்த்தி சத்தத்தை அதிகரிக்க செய்தது.
ரித்திகாவின் கதறல் சத்தம் கேட்டு அதை கவனிக்க மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள் நிஷா. பிரணவ் ரித்திகாவை அடித்தது; அவள் மயங்கியது; அவள் பெண்மையை அவள் மயங்கிய நேரம் அபகரித்துக் கொண்டு வெளியேறியது; வர்சன் அவளை தீண்ட முயன்றது; அதனால் அவனை பிரணவ் வெளியே அனுப்பியது; பார்த்து நிஷா தன் பொருட்கள் அனைத்தையும் தள்ளி விட்டு கதறி அழுதாள்.
வீடியோ தானே அடுத்து சில நேரத்தில் ரித்திகா விழித்து கதறி அழுதது ப்ளே ஆனது சுபியின் ஆன்மாவால். நிஷா புரிந்து கொண்டு மேலும் பார்த்தாள். பின் மெதுவாக ரித்திகா போர்வையை சுற்றி குளியலறை சென்று நேரம் கழித்து வெளியே வந்து விரக்தியான முகத்துடன் ஆடை மாற்றியது; பின் அங்கிருந்த ஏதோ மாத்திரையை அவள் எடுத்துக் கொண்டதை ஜூம் செய்து பார்த்தாள் நிஷா. அது என்னவென்று சரியாக தெரியவில்லை.
பின் சில மேக் அப் திரவியங்களை வைத்து அவளது முகத்தில், உதட்டில், உடலில் இருந்த காயத்தில் போட்டு சரி செய்து புன்னகைத்து பார்த்தாள். சரியாக பொருந்தியது. ஆனால் அவளது உடல் களைப்பும் வலிகளும் மட்டும் சரியாகவில்லை. கட்டுப்படுத்திக் கொண்டு அவள் அமர்ந்திருக்க உள்ளே வந்த பிரணவ்.
என்ன ரித்து, “எல்லாமே சரி செய்துட்ட போல? உன்னோட மாமா உன்னை பார்த்தால் கஷ்டப்படுவான்னு தான செய்த?” என்று வஞ்சகமாக புன்னகைத்தான் பிரணவ். அவள் ஏதும் பேசாமல் இருக்க, “பேசமாட்டியாடி” என்று அவளது நாடியை பற்றி இழுத்து அவளது இதழ்களை ருசிக்க வந்தவனிடம், நீ இங்கிருந்தேன்னா..கண்டிப்பா என் மாமா கையால தான் சாவ என்று அவள் அழுத்தமாகவும் முறைப்புடனும் கூறினாள்.
“சாவேனா? நானா இல்லை உன் மாமாவா?” அவனை பார்த்ததும் எல்லாமே உனக்கு மறந்து போச்சா. உனக்கு பணம் வேண்டியிருக்கு. அப்புறம் அந்த வீடியோ என்று குரூரமாக சிரித்தான் பிரணவ்.
“இப்ப என்ன செய்யணும்?” கடுப்பாக ரித்திகா கேட்க, நாம கிளம்பணும். “கடைசியாக உன் மாமாவிடம் நீ பேசிக்கோ” என்று அவள் சொல்ல, சரி என்று உடனே கிளம்ப ஒத்துக் கொண்டாள்.
“உடனே ஒத்துக்கிட்ட?” அவன் கேட்க, என் மாமாவிற்கு என் கஷ்டம் தெரிய வேண்டாம். நாம் இங்கிருந்தால் அது எப்படியாவது தெரிய வந்திரும். அவரை ஏமாற்ற முடியாது. அதனால் நாம கிளம்புவது தான் சரி என்று தான் ரித்திகா உடனே கிளம்பினாள்.
கிளம்பி விட்டாளா? நிஷா அழுது கொண்டே பதற, “போ..சீக்கிரம் உதிரனிடம் எல்லாவற்றையும் சொல்லு” என்று சுபிதனின் ஆன்மா குரல் உந்த வேகமாக அழுது கொண்டே வெளியே ஓடி வந்தாள் நிஷா.
ரித்திகா போயிட்டாம்மா. “அவள் எதுக்கும்மா இப்ப இப்படி சொல்லீட்டு போறா?” என்று உதிரன் கதறியவாறு அவன் அம்மா அம்சவள்ளி மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தான்.
நிஷாவை பார்த்த ரட்சகன், “எதுக்கும்மா இப்படி ஓடி வர்ற? உனக்கு என்னாச்சு? கண்கள் இப்படி சிவந்திருக்கே?” என்ற அப்பாவை கண்டுகொள்ளாமல் வந்தவுடன் வெளியே பார்த்தாள். பாலாவை பார்த்த நிஷா..ரித்து எங்க? போயிட்டாளா?..போயிட்டாளா? என்று அழுது கொண்டே கேட்க, மேம் நீங்க எதுக்கு அழுறீங்க? பாலா கேட்டாள்.
உதிரன் அவன் அம்மாவை விட்டு விலகி எழுந்தான். “நிஷா” அவன் அழைக்க, உதி..உதி..என்று எச்சிலை விழுங்கி, அவளை அவனோட விடக் கூடாது. அவள் கண்டிப்பாக செத்துருவா என்று நிஷா அழுதாள்.
“விளையாடுறேனா?” எல்லாமே உன்னால தான். இடியட்..என்று உதிரனது சட்டை பிடித்த நிஷா, சிறுவயதிலிருந்து உனக்கு அவளை தெரியும். “அவளிடம் உள்ள மாற்றம் உனக்கு தெரியலையா? சிறுவயதிலிருந்தே உன்னை காதலித்த அவள் இந்த ஐந்து வருடத்தில் எல்லாவற்றையும் மறப்பாலா?” என்று கத்திக் கொண்டே கதறி அழுதாள்.
நிஷா..உதிரன் பதட்டமாக, “உதி சார் ரித்து உங்களை தான் இன்னும் காதலிப்பதாக எனக்கும் தோன்றுகிறது?”
என்னது? புகழேந்தி கேட்க, உதிரா, என்னோட தோழனிடம் நான் பேசும் போது இருவருக்கும் கண்டிப்பாக திருமணம் நடக்காது என்று தான் என் தோழனின் மனைவியும் அவனும் கூறினார். அதை பற்றி பேச தான் உன்னையும் பாலாவையும் என் அறைக்கு வரச் சொன்னேன். ஏதோ தவறாக உள்ளது ரட்சகன் கூற,
அய்யோ, ரித்திகா இப்பொழுதும் உறுதியாக உதிரனை தான் காதலிக்கிறாள். ஆனால்..நிஷா நிறுத்த, பிரகவதி..அழுது கொண்டே ரித்திகாவை தேடி வந்தாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.
பாலா, இதை பாரு. ரித்திகாவின் கட்டிலில் இருந்த போர்வையும் மெத்தை விரிப்பும் என்று பிரணவ் அடித்த போது சிதறிய இரத்தத்தையும், அவளது புடவையில் இருந்த இரத்தத்தையும் காட்டி விட்டு, இந்த மாத்திரை “கருகலைப்பு மாத்திரை” என்று பிரகவதி சொல்ல, உதிரனின் மனதில் ஆணியை இறக்கியது போல் இருந்தது.
“கருகலைப்பு மாத்திரையா?” என்ற நிஷா, உதிரா..குழந்தை உண்டாகக் கூடாது என்பதற்காக அவள் எடுத்திருக்கா என்று உதிரனை இழுத்து அவளறைக்கு சென்றாள். அவன் அதிர்ச்சியுடன் அவளுடன் சென்றான்.
நிஷா அறைக்கு உதிரனை அவள் அழைத்து வர, எல்லாரும் அவள் பின் வந்தனர். “யாரும் உள்ளே வராதீங்க” என்று நிஷா கதவை அடைக்க, கையால் உள்பக்கமிருந்த நிஷாவை தள்ளி விட்டு பாலா கோபமாக வந்தான். எல்லாரும் அவன் பின் வந்தனர்.
“எல்லாரும் வெளிய போங்க” நிஷா கத்த, அமைதியா இரு நிஷா. பாலாவுடன் வேலை செய்பவர்களை மட்டும் வெளியே அனுப்பு. மற்ற எல்லாருக்கும் ரித்துவின் வேதனை கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று சுபிதன் ஆன்மாவின் குரல் ஒலிக்க, கண்ணை அழுத்தமாக துடைத்துக் கொண்டு பிரகவதி, வர்சன், ஸ்ரீ, தக்சனா எல்லாரையும் வெளியே இருக்க சொல்லி தள்ளினாள்.