ரட்சகன் பாலாவை பற்றி விசாரிக்க பிரணவ்வின் அப்பாவிற்கு போன் செய்திருப்பார். ஆனால் அவருக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாது. பிரணவ் அம்மா தான் அந்த கம்பெனியை நடத்தி இருந்திருப்பார். பாலாவை பற்றி அவரிடம் கேட்க, எனக்கு பொண்ணு இருந்தா யோசிக்காமல் அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவேன் என்றார் அவர்.
அண்ணா, “உங்களுக்கு குரு சாரை தெரியுமா?” பிரணவ் அம்மா கேட்க, ஆமா அவரு தான் இந்த கூடம் ஆரம்பிக்க எனக்கு பின் முதல் ஷேரை கொடுத்து இருக்கார்.
“அப்படியா?” அவர் கம்பெனி நடத்தாத நாடே இல்லை. அவருக்கு ஐந்து பசங்க இரு பொண்ணுங்க. அதுல கடைசி பையன் தான் பாலா. பாலகுரு. அவன் தங்கைக்கு கூட பெரிய இடத்துல நிச்சயம் முடிவு செய்ததா நேற்று தான் நியூஸ் வந்தது என்றார்.
“அவர் மகனா பாலா” என்று திகைத்தார்.
“அப்புறம் எப்படி இந்த பொண்ணு ரித்திகா உங்க கம்பெனியில பெரிய இடத்துல வச்சிருக்கீங்க? உங்க பையனுக்கும் திருமணம் செய்து வைக்க போறீங்களாமே? அவர் கேட்க, திருமணமா? அவளுடனா? எங்க ஸ்டேட்டஸ் எங்கே? அவ எங்க? பிச்சைக்காரி அவ..” என்று அவர் ரித்திகாவை பற்றி கேவலமாக பேச, அவர் அதிர்ந்து மேலும் விசாரித்ததில் “பணத்துக்காக என் மகனுடன் சுத்திக்கிட்டு இருக்கா” என்று அவர் பேச, ரட்சகன் பின் தான் ரித்திகாவை பேச அழைத்திருப்பார்.
அவள் உள்ளே சென்று, “சொல்லுங்க சார்” என்று புன்னகைக்க, “இந்த புன்னகையில தான் பசங்க எல்லாரையும் மயக்குறியாம்மா?” என்று அவர் கேட்க, அவள் துடித்து போனாள்.
பிரணவ்வோட திருமணம் முடிவு செய்யலைன்னு அவனோட பெற்றோர் சொல்றாங்க. “நீ என்ன கேவலமான காரியம் பண்றன்னு தெரியுமாம்மா?” என்று கேவலமான பார்வையை ரித்திகா மீது செலுத்த, அவள் அவர் வார்த்தையில் உடல் கூசி நின்றாள்.
சொல்லும்மா..அவர் ஆதங்கத்துடன் கத்த, அவள் பயந்து நகர்ந்தாள். போம்மா, எவ்வளவு பணம்மா உனக்கு வேணும்? அதுக்காக அவன் வாழ்க்கையை கெடுத்து உன் பக்கம் இழுத்து ச்சீ..என்று அவர் சொல்ல, அதற்கு மேல் அவர் பேசுவதை சகிக்க முடியாமல் கண்ணீருடன் வெளியே வந்தாள் ரித்திகா. கண்ணை துடைத்து மனம் வெறுத்து நடந்து அறைக்கு வந்தாள். பாலாவும் நிஷாவும் இப்பொழுது தான் அவளை தேடி நிஷா அப்பா அறைக்கு சென்றிருப்பர். ரித்திகா வேறு பக்கமாக வர இருவரும் அவளை கவனிக்கவில்லை.
“அறையில் பிரணவ் இருப்பானே!” என்று தயக்கமுடன் பார்த்த அவள் நேராக லேப் பக்கம் சென்றாள். இருவர் மட்டும் உள்ளே இருந்தனர். ஏதோ பொருளை தட்டி விட்டு ஒளிந்து நின்றாள். அலாரம் அடிக்க எல்லாரும் அங்கே வந்தனர்.
உதிரனை தவிர எல்லாரும் அவ்விடம் வந்து யாரோ அனுமதி இல்லாமல் வந்துட்டாங்கன்னு தேட ஆரம்பித்தனர். அவ்விடம் விட்டு எல்லாரும் நகர்ந்த பின் வெளியே வந்தாள் ரித்திகா. லேப்பிற்குள் சென்று அவளது பிராஜெக்ட்டை செய்து பிரிசர்வ் செய்திருந்த பொருட்களை பார்த்து அதிலிருந்த அனைத்தையும் கீழே கொட்டி விட்டு அங்கிருந்த அவளது பிராஜெக்ட் பைல்லை மட்டும் தேடி எடுத்தாள். பைல்லை எடுத்து விட்டு வெளியே வந்து அறைக்கு சென்றாள்.
பிரணவ் அவள் கையிலிருந்த பைல் என்னவென்று கூட பாராது பிடுங்கி தூக்கி எறிந்தான். ரித்திகா கதறி அழுதாள்.
ஏன்டி, உனக்கு எல்லாமே மறந்து போச்சா. உன்னோட மாமனாமே அந்த உதிரன். அவனுக்கு முத்தம் கொடுத்திருக்க, அவனுடன் வாழணும்ன்னு கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? என்று ரித்திகாவை அடித்தான் பிரணவ். அவள் ஏதும் பேசவில்லை.
உன் கனவு நடக்காது தெரியும்ல்ல. நீ யாரிடமும் ஏதும் சொல்லலைல்ல. சொன்ன அவன் உயிரோட இருக்க மாட்டான். “இது என்னடி அலங்காரம் அவனுக்காகவா?” என்று மேலும் அடித்தான். மனமுடைந்து அழுதாள் ரித்திகா.
அவளருகே வந்து அவளை முகர்ந்தான். ம்ம்..நல்ல வாசனையா இருக்க..என்று அவள் புடவையை இழுத்து தூக்கி எறிந்தான்.
ப்ளீஸ் பாஸ், இங்க வச்சி ஏதும் செய்யாதீங்க. என்னால முடியல என்று கதறி அழுதாள்.
என்னடி இங்க வச்சி வேண்டாம். “அவனுடன் படுக்கலாம்ன்னு நினைச்சியா?” “முடியலையாம் முடியலை” என்று அவன் சத்தமிட, “ஆமா கண்டவனுடன் படுக்கும் நான் காதலித்த என் மாமாவுடன் படுக்க ஆசைப்படுவதில் என்ன தவறு உள்ளது?” என்று சினமுடனும் இயலாமையுடனும் அழுது கொண்டு ரித்திகா பேசினாள்.
“உனக்கு எவ்வளவு தைரியம்? என்னையே எதிர்த்து பேசுற?”
“மறக்காத..மறக்காத..”என்று அவள் கன்னத்தில் மாறி மாறி “பளார் பளார்” என அறைந்தான். ரித்திகா மயங்கினாள். அவள் மயங்கிய பின் அவளை படுக்கையில் போட்டு அவள் ஆடையை களைந்து தூக்கி எறிந்து விட்டு அவளை கற்பழித்தான். அவள் மயக்கத்தில் தான் இருந்தாள். ஆனால் அவள் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.
அவன் எழுந்து, நம்ம இடமாக இருந்தால் இன்று முழுவதும் வச்சி செய்திருப்பேன் என்று சொல்லி விட்டு அவள் மீது போர்வையை கூட போர்த்தாமல் வெளியே சென்றான். சற்று நேரம் அவன் உள்ளே வர, வர்சன் உள்ளே ரித்திகாவை அந்நிலையில் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு மோகத்துடன் அவளை நெருங்கினான்.
ஏய்..என்று பிரணவ் சத்தமிட்டான்.
“என்னாச்சு பிரணவ்?” நிஷா அவனிடம் வந்தாள்.
ஒன்றுமில்லை. நான் அப்புறம் வந்து உன்னை பார்க்கிறேன் என்று நிஷாவை உள்ளே பார்க்க விடாமல் மறித்து நின்றான்.
“ரித்துவை பார்க்கணும்?” அவள் கேட்க, பார்க்கலாம். இப்ப அவ உறங்கிட்டு இருக்கா. அப்புறம் பேசிக்கோ என்று உள்ளே சென்று கதவை அடைத்தான்.
பிரணவ், “ஒரு முறை மட்டும்” என்று வர்சன் அவனை பார்க்க, அவன் கழுத்தை பிடித்த பிரணவ் விசயம் வெளிய போச்சு. நீ செத்தடா. இவ எனக்கு என்று அலுத்து போகிறாளோ அதன் பின் இவளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்றான் பிரணவ்.
தேங்க்ஸ் பாஸ். நான் எதையும் சொல்ல மாட்டேன் என்று அவனாகவே வெளியேறினான் வர்சன். “மூஞ்சிய பாரு இவனுக்கு ரித்து கேட்குதோ?” என்று வர்சனை திட்டியவாறு பிரணவ் ரித்திகாவை பார்த்து அவளது உடலை முழுதாக மறைத்து போர்வையை சுற்றி வைத்தான்.
பாலாவுடன் வந்த போது நிஷா வீடியோ ரெக்கார்டரை உள்ளே வைத்து சென்றிருப்பாள். அதில் அனைத்தும் பதிவாகிக் கொண்டிருந்தது. இவன் விரட்டியதில் சந்தேகம் வந்ததால் அந்த ரெக்காடரை இணைத்து வைத்திருந்த அவளது லேப்பை ஆன் செய்தாள். அதில் ரித்திகா அமைதியுடன் தூங்குவதை பார்த்து பிரணவ் சொன்னது உண்மை என நினைத்துக் கொண்டாள் நிஷா.
ரித்திகாவை தேடி நிஷாவும் பாலாவும் ரட்சகனை பார்க்க சென்றனர். அவரிடம் கேட்ட போது, அவர் அவளை பற்றி ஏதும் சொல்லாமல், நிஷா இனி ரித்திகாவிடமிருந்தும் பாலாவிடமிருந்தும் நீ விலகி தான் இருக்கணும் என்றான் ரட்சகன் ஆணையுடன்.
என்னால முடியாது. ரித்திகா என்னோட ப்ரெண்டு. சோ..அவளுடன் என்னால பேச முடியாது. அப்புறம் பாலா என்று அவனை பார்த்து, எனக்கு பாலாவை பிடிக்கும். நான் அவனை காதலிக்கிறேன். என்னால இருவரிடமும் பேசாமல் இருக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே பாலாவை பார்த்தாள். அவன் அதிர்ச்சியுடன் நிற்க, அவனை பார்த்து புன்னகைத்து விட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ” என்று அவள் அப்பாவை பார்த்து அவன் கையை கோர்த்தாள்.
அவர் பேசாமல் அவளை முறைத்து பார்த்தார். பாலா நிஷா கையை எடுத்து விட்டு அங்கிருந்து சென்றான். பின் தான் நிஷா ரித்திகாவை பார்க்க அறைக்கு சென்று பிரணவ்விடம் பேசினாள். பின் மதிய உணவை முடித்து விட்டு அறைக்கு சென்ற நிஷா லேப்பை ஆன் செய்து ரித்திகாவை பார்க்க அவள் எழாமல் தூங்க, நிஷா டேபிளிலே சாய்ந்து உறங்கி விட்டாள்.
காலை ஏழுமணியளவில் நட்சத்திரா முதலில் வெளியே வந்தாள். மாறன் அங்கே வந்து நின்றான். அவனை பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடம் மாமா..”மாறா வந்துருக்கான்” என்று அவன் பின் நின்ற அவள் பள்ளியில் படித்த சித்ராவை பார்த்து, ஹே..நீ..என்று மிகவும் மகிழ்ந்தாள்.
நட்சத்திரா,” நீ இங்கே என்ன செய்ற?” சிம்மா வரச் சொன்னான் என்று மாறன் சொல்லும் போது, சித்ரா மாறன் பின் மறைந்து நட்சத்திராவை பார்த்தாள். அவள் கையில் ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாள்.
“உங்க பொண்ணா?” நட்சத்திரா மேலும் மகிழ்ச்சியுடன் அவளிடம் வர, சிம்மா அர்சுவுடன் வந்தான்.
“இவ இருப்பான்னு நீங்க சொல்லவில்லை” என்று மாறனின் பின் மேலும் நகர்ந்தாள் சித்ரா.
சித்ரா, நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன் என்று நட்சத்திரா புன்னகைத்தாலும் சித்ராவின் ஒதுக்கம் நட்சத்திரா மனதை காயப்படுத்தியது. திமிறாக இருக்கும் போது அனைவரையும் காயப்படுத்தி இருப்பாள் நட்சத்திரா.
டேய், “இவங்கள எதுக்கு அழைச்சிட்டு வந்த?” என்று சிம்மா சினமுடன் கையை மாறனிடம் ஓங்க, அண்ணா நான் தான் வெளியே அழைச்சிட்டு போக மாட்டேங்கிறார்ன்னு பிடிவாதம் செஞ்சு வந்திருக்கேன். அடிச்சிறாதீங்க என்று சித்ரா அர்சுவை பார்த்து விட்டு விழித்து மாறனை பார்த்தாள்.
“இந்த பையன் அண்ணா மாதிரியே இருக்கான்” என்று சித்ரா நட்சத்திராவை பார்த்து, “உன்னோட பையனா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
ஆமா, என்னோட பையன் தான். ஆனால் என்று அவள் பேசும் முன் நிறுத்திய சிம்மா, “ஸ்டார் நீ எதுவும் பேச வேண்டாம்” என்றான்.
மாமா, “எல்லாரும் உங்களை தப்பா நினைக்கப் போறாங்க” நட்சத்திரா சொல்ல, “அதுக்கென்ன இப்ப?” சிம்மா கேட்டான். அவனை முறைத்துக் கொண்டே அர்சுவை அவள் சிம்மாவிடமிருந்து பறிக்க வந்தாள்.
ஸ்டார், வேண்டாம். நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். சோதிக்காத என கோபமாக சொன்னான்.
நட்சத்திரா, “பிள்ளைய வச்சிட்டு எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க?” மாறன் கேட்க, இவன் என்னோட பையன் தான். மாமாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அர்சுவை பிடித்து இழுத்தாள். அர்சு அழுதான்.
ஏய், “என்ன பண்றீங்க?” அவனை விடுங்க என்று தமிழினியன் சத்தமிட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தான். சிம்மாவிடமிருந்து அர்சு இறங்கி, ஸ்வீட்டா..என்று அழுது கொண்டே அவனிடம் ஏறிக் கொண்டு, “அம்மாவும் அப்பாவும் சண்டை போடுறாங்க” என்று மேலும் அழுதான்.
சிம்மாவை அப்பாவென சொல்லக் கேட்ட நட்சத்திரா கோபமாக அர்சுவை அடிக்க கையை ஓங்கினாள். போதும் ஸ்டார். நான் கிளம்புகிறேன். இனி உன் பக்கமே வரலை என்று சிம்மா சொல்ல, “இப்படி பாதியிலே விட்டு போனால் எப்படி?” என்று தமிழினியன் பின்னிருந்து குரல் கேட்டது. மிருளாலினி சிம்மாவிடம் ஓடி வந்தாள்.
மாறன் ஆர்வமுடன். “மிருளாலினி நீ?” என்று சுபியை தேடினான். “அவன் எங்கே?” மாறன் கேட்க, சிம்மாவிடமிருந்து மெதுவாக தமிழினியன் அருகே வந்து அவன் கையை கோர்த்துக் கொண்டாள் மிருளாலினி.
அட, பரவாயில்லை. “முன்னேறிட்டியே?” சிம்மா சிலாகிக்க, “மிருளாலினி என்ன பண்ற? சுபி எங்கே?” என்று மாறன் தமிழினியனை முறைத்து பார்த்து விட்டு சுற்றிலும் துலாவினான்.
சிம்மா அவனிடம் வந்து, அவன் இப்ப உயிரோடு இல்லைடா என்று தழுதழுத்த குரலில் கூற,” நட்சத்திரா இவனுக்கு என்ன பைத்தியமா? டேய் சுபி எங்க ஒளிஞ்சிருக்க? வெளிய வா..” என்று மாறன் சத்தமிட, அவனை பற்றி தெரிந்த அனைவர் கண்ணிலும் கண்ணீர் ஊற்றெடுத்தது.
உண்மையாகவே அவன் ஐந்து வருடங்களுக்கு முன்னே இறந்து விட்டான் என்று பரிதியும் வெளியே வந்தார்.
“என்ன சொல்றீங்க?” என்று மிருளாலினியை பார்க்க, அதுக்கு தான் உன்னை வர வைத்தேன் என்றான் சிம்மா.
இனி அது உனக்கு தேவையில்லை. போ..உன்னோட குடும்பத்தை கவனி. தமிழ் அவளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்றான் சிம்மா. தொண்டை அடைக்க பேச முடியாமல் மிருளாலினி அழுது கொண்டே செல்ல, அவள் முன் சுவாதி வந்து அவளை நிறுத்தி அணைத்துக் கொண்டாள்.
சுவாதி அணைக்கவும் மிருளாலினி பழையவாறு அழுதாள்.
அண்ணி, போதும். புரியுது. ஆனால் இனி அண்ணா இருக்கான். இனி உங்க காதலுக்காக அழுதா அண்ணனுக்கு வேதனையாக இருக்கும் என்றாள். “அவன் காதலுக்காக அவனை ஏத்துக்கிட்டதாக சொன்னீங்க? இப்ப உங்க வார்த்தை எங்க போனது?” உங்க காதல் நினைவுக்கு வந்தால் மறுநிமிடம் அண்ணாவை நினைச்சு பாருங்க. இனி அழுகை வராது.
ஒரு வேலை இதுக்கு மேல அழுதால்..என்று சுவாதி நிறுத்தி தமிழினியனை பார்த்து, பேச முடியாமல் நின்றாள். “நானும் சுபியுடன் சென்று விட்டேன்னு நினைச்சுக்கோ” என்று தமிழினியன் முடிக்க, அனைவரும் திகைத்தனர்.
“என்னடா பேசுற?” வேல்விழி கோபமாக, மிருளாலினி அவனை பார்த்து அவனிடம் சென்று வழிந்த அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “சாரி..நீங்களும் இப்படி பேசுறீங்க?” என்று அவனை அணைத்து அழுதாள்.
அவள் நிலையை புரிந்த மாறன், அவளிடம் வந்து சாரிம்மா, தேவையில்லாமல் பேசிட்டேன்னு நினைக்கிறேன். அவள பார்த்துக்கோங்க என்று தமிழினியன் கையை பிடித்தான்.
ம்ம்..என்று சுரம் இல்லாமல் மிருளாலினியை பார்த்த தமிழினியன் கண்ணில் வழிந்த கண்ணீரை அர்சு துடைத்து விட்டான்.
தமிழினியன் அர்சு கையில் முகத்தை மறைக்க முடியாமல் கண்ணீருடன் நின்றான். ஐ அம் சாரி, நிஜமாகவே அவனை நினைத்து நான் அழவே மாட்டேன். ப்ளீஸ் அழாதீங்க என்று மீண்டும் மிருளாலினி அவனை அணைத்தாள். அவளை பார்த்து விலக்கிய தமிழினியன், சரி..இரு. நான் வாரேன் என்று அர்சுவுடன் நட்சத்திராவிடம் வந்தான்.
இங்க பாரு நட்சத்திரா, “சிம்மா அவன் அப்பாவா? இல்லையா?”ன்னு அவன் நினைத்தால் மறுநிமிடம் கண்டறிய முடியும். ஆனால் அவன் எதையும் செய்யவில்லை.
அதே போல் அர்சுவையும் சிம்மாவையும் பார்க்கும் அனைவரும் அப்பா, மகனாக தான் நினைப்பாங்க. இதற்கு முன் உன் வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்ப அர்சுவுக்கு அப்பாவும், உன் பாதுகாப்பிற்கும் யாராவது கண்டிப்பாக தேவை. இதற்கு முன் நான் தனியே இருந்தேன். பிரச்சனை என்றவுடன் வர முடிந்தது. இப்ப எனக்கும் மிருளா இருக்கா.
“உன்னால தனியா எத்தனை நாள் சமாளிக்க முடியும்?” நீ சிறுவயதில் பார்த்து வளர்ந்து நீ காதலித்த உன் மாமா தான சிம்மா எதுக்கும் தயங்காமல் சிம்மாவை திருமணம் செஞ்சுக்கோ. அதான் எல்லாருக்கும் நல்லது.
“சிம்மாவும் உன்னை இந்நிலையில் விட்டு போகவும் மாட்டான். அவனுக்கு இன்னும் உன் மீது காதல் இருக்கு” என்று தமிழினியன் சொன்னான்.
மிருளாலினி அவளிடம் வந்து, நான் ஒன்று மட்டும் சொல்றேன் நட்சு. சிம்மா உன் சீமந்த அன்று பேசிய வார்த்தையை இன்று வரை சரியாக காப்பாற்றி இருக்கான். கண்டிப்பாக அவனுக்கு உன் மீதான காதலை நிரூபிக்க..இனியும் எந்த பொண்ணு பின்னும் செல்ல மாட்டான். அவன் வாழ்க்கையையும், உன் வாழ்க்கையையும் நீயே கேள்விக்குறி ஆக்கிடாத. நல்லா யோசித்து முடிவு செய் என்று தமிழினியனிடமிருந்து அர்சுவை வாங்கி சிம்மா கையில் கொடுத்து, “நாங்க எல்லாரும் சிம்மா பக்கம் தான்” என்றாள் மிருளாலினி.
ஆமாம்மா, நாங்களும் எத்தனையோ பொண்ணை பார்த்துட்டோம். ஆனால் பார்க்க கூட அவன் வரலை. “நீ ஏன் சிம்மாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது?” அன்னம் கேட்க, அத்தை, நான்..என்று நட்சத்திரா சிம்மாவை பார்த்தாள். அவன் அவள் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான்.
டேய் மச்சான், “எத்தனை முறை காதலை சொல்லி இருப்ப? இப்ப மேரேஜ் பிரப்போசல் குடுடா” மாறன் சொல்ல, சிம்மா நட்சத்திரா அருகே வந்து, “உனக்கு விருப்பம் இருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று நட்சத்திரா கையை பிடித்தான். ஆனால் உன்னை கட்டாயப்படுத்தவில்லை. நீ வருடங்கள் கூட எடுத்துக்கோ. “ஆனால் அர்சு என்னை அப்பான்னு கூப்பிடட்டுமே?” ப்ளீஸ் என்று கண்கலங்கினான் சிம்மா.
மாமா, நான்..என்று தயங்கி, சரி மாமா அர்சு உங்கள அப்பான்னு அழைக்கட்டும். ஆனால் இதனால் உங்க பதவி பாதிக்கப்படுமே! என்று முன் போல் பேசினாள். சிம்மா புன்னகையுடன், “யார் என்ன பேசினாலும் அதை பெரியதாக எண்ண மாட்டேன். வேலை போனால் என்ன? இந்த உலகத்துல வேற வேலையா இல்லை. நீ என் பக்கம் இருந்தால் போதுமே?” என்றான்.
அர்சு உன்னை அப்பான்னு அழைக்கட்டும். ஆனால் நம்ம திருமணம்? என்று அவள் தயங்கினாள்.
ஸ்டார், போதும். “வேலைய பார்க்கலாமா?” அவன் கேட்க, ம்ம்..என்று மிருளாலினியை பார்த்து அவளை அணைத்துக் கொண்டு மனதினுள், “நான் முக்கியமான எதையோ மறந்துட்டேன்னு நினைக்கிறேன். அதை எப்படி கண்டுபிடிக்க?” என்று கண்ணீருடன் இருந்தாள்.
நடந்த அனைத்தையும் பார்த்தும் கேட்டும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான் விக்ரம். அவனது பெரிய அதிர்ச்சியே அர்சு தான்.
தமிழினியன், சுவாதி, வேல்விழி, மிருளாலினி அவர்கள் வீட்டிற்குள் செல்ல, “டார்லிங்” என்று மாறனின் பொண்ணு சிம்மாவிடம் தாவினாள். அவளை தூக்கியவுடன் அர்சு கோபமாக கீழிறங்கி ஸ்வீட்டா ”அப்பா மோசம்” என்று தமிழினியன் வீட்டிற்குள் ஓட, “ஸ்டார்..இவள பிடி” என்று மாறனின் பொண்ணை அவளிடம் கொடுத்து விட்டு,
அர்சு, “அப்பாகிட்ட வாடா” என்று சிம்மா அவன் பின் ஓடிச் சென்று அவனை தூக்கி சமாதானப்படுத்தினான். மாறனின் பொண்ணு அவர்களை பார்த்து அழ, நட்சத்திரா அவளை சமாதானப்படுத்தினாள். அனைவரும் புன்னகையுடன் இருவரையும் பார்த்தனர்.
மாறனை தனியே அழைத்து வந்து சிம்மா பேச, மறைந்து நின்று ஒட்டு கேட்டான் விக்ரம்.
மாறா, நம்ம சுபி வீட்டுக்கு போ. அங்க அவனோட அம்மா என்ன செய்றாங்கன்னு கவனி. அவங்க கண்டிப்பா மிருவை சும்மா விட மாட்டாங்க. அவங்க மூத்த பையன் இப்ப ஜெயில்ல இருக்கான். ஒரு வேலை அவன் தப்பினாலும் அவன் அம்மாவை பார்க்காமல் இருக்க மாட்டான். கொஞ்ச நாள் மட்டும் கவனி. பின் அவங்கள நானே பார்த்துக்கிறேன் என்றான் சிம்மா.
அதை விட பெரிய கஷ்டத்தை தான் மிரு அனுபவித்து இருக்கா. அதான் இவங்க கல்யாணம் தடையில்லாமல் நடக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால் இப்ப வந்த கேஸ்ல விக்ரம் உள்ள வந்திருக்கான். சரியான டென்சன்டா. இந்த வாழ்க்கையும் மிருளாவிற்கு பாழானால் கண்டிப்பாக அவள் மனம் தவறான எண்ணத்திற்கு தான் போகும். அவள் மட்டுமல்ல தமிழின் வாழ்க்கையும் மொத்தமாக போயிரும்.
சரிடா, “நீ இதை கழற்ற முயன்றாயா? முடிந்ததா?” மாறன் சிம்மா கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை பார்த்து கேட்டான்.
ஏதோ பெருசா நடக்கப் போகுதாம். அது நல்ல படியாக முடிந்தால் இதுவும் ஸ்டார் கழுத்தில் உள்ளதும் தானாக கழன்று விடுமாம். ஏதோ ஜென்ம கணக்காம் நம்ம பூசாரி அய்யா சொன்னார்.
மாறா, இதை விட முக்கியமான விசயம்டா. நான் உன்னிடம் மட்டும் தான் சொல்றேன். நம்ம ஸ்டார் அவள் கணவன் என்று ஒருவனை பார்த்து பழகியதை சொன்னாலே அது அவளுக்கு நடக்கவேயில்லை. பொய் சொல்லி இருக்கா. ஆனால் இப்ப என்னுடன் சேர்ந்து வேலை செய்யும் மிளிரன் வாழ்க்கையில் அப்படியே நடக்குதுடா..என்றான் சிம்மா.
“என்ன சொல்ற? புரியலடா?” மாறன் கேட்க, அதான்..கிளப்பில் ஸ்டாரை ஒருவன் காப்பாற்றியது; அவங்க கார் விபத்தில் சந்தித்தது; போலீஸ் ஸ்டேசனில் சந்தித்தது; அவன் உயர்பதவிக்காக அவள் குழந்தையை மறைத்தது சிம்மா சொன்னான்.
சிம்மா..இப்ப கூட உன்னோட ஸ்டார் உன்னுடைய பதவியை தான் யோசித்து இருக்கா. அப்ப அவள் வாழ்க்கையில் வேற யாருமே இல்லை. அவள் உன்னை மனதில் வைத்து தான் பேசி இருக்கா மாறன் திகைப்புடன் சொல்ல, ஆமாடா அர்சு உண்மையிலே எங்க குழந்தை தான். அவளுக்கு நடந்த பிரச்சனையில நிறைய விசயத்தை மறந்துட்டா டா. ஆனால் அவள் என்னை விட்டு விலகி தான் இருந்தா. “எப்படி குழந்தை?” எங்களுக்குள் எதுவுமே நடக்கலை. ஒன்றுமே புரியலடா என்றான் சிம்மா.
அது யோசிக்க வேண்டிய விசயம் தான். ஆனால் சிம்மா..ஸ்டார் நம்மிடம் பொய் சொல்லி இருக்கா. ஆனால் அவள் சொன்ன எல்லாமே இப்ப உன் அருகில் இருப்பவனுக்கு நடக்குதுன்னா, அந்த கடவுளே உன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார். எதை செய்தாலும் சிந்தித்து செய் என்று சிம்மா கழுத்தில் கை வைக்க, இன்னும் ஷாக் அடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
எனக்கு தெரிந்து உனக்கும் ஸ்டாருக்குமான காதல் தான் உங்களை சேர்த்து வைக்குது. ஏதோ ஒன்றை நாம தவற விடுறோம். “என்னன்னு பார்க்கணும்?”
சிம்மா..நீ யாரோ இன்ஸ்பெக்டருக்கு நடக்குதுன்னு சொன்னேல்ல. அது நம்ம ஸ்டார் வாழ்க்கை மாதிரி போகுதா இல்லையான்னு தினமும் அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கோ. அப்படியே போனால் எதையும் மாற்ற கஷ்டம். அவன் வாழ்க்கை பாதை மாறினால் கண்டிப்பாக உன்னோட ஸ்டார் உனக்கு தான் என்றான்.
பிரம்மிப்புடன் புல்லரிக்க இதை விக்ரம் கேட்டாலும் இவன் காதலை கடவுள் சேர்க்கிறாராம். “இவனுக ரோமியோ, ஜூலியட்டுன்னு” நினைப்பு என்று மனதினுள் எண்ணிய படி மேலும் அவர்களை கவனித்தான் விக்ரம்.
சற்று நேரத்தில் விக்ரம் இருவரையும் பார்த்துக் கொண்டே தமிழினியன் வீட்டிற்கு செல்ல, நீ வீட்டுக்கு போ. நான் வாரேன் என்று சிம்மாவும் அங்கே சென்றான்.
கிருபாகரன் விக்ரமை பார்த்து, வரவேற்று அமர வைத்து அனைவரையும் அழைத்தார். மிருளாலினியை அழைத்து அவளிடம் விக்ரம் விசாரிக்க, இடையே வந்தான் சிம்மா.
சிம்மா, தேவையில்லாமல் நீ இடையில வராத. நம்ம பிரச்சனையை அப்புறம் பார்க்கலாம். என்னோட வொர்க்கை டிஸ்டர்ப் பண்ணாத என்றான் விக்ரம்.
தாராளமாக நீ விசாரிச்சுக்கோ. இதற்கு பின் இவங்கள பார்க்க வர உனக்கு அவசியமிருக்காது என்றான் சிம்மா.
அது என் விருப்பம். அதை நீ சொல்லக் கூடாது. வீடியோவ ரெக்கவர் பண்ண முடியாதவாறு பண்ணீட்ட. இதுக்கு மேல நீ அமைதியா இருப்பது தான் உனக்கு நல்லது. எல்லா நேரமும் பொறுமையாக இருக்க மாட்டேன் என்றான் விக்ரம்.
“எதுக்கு கோபப்படுறீங்க சார்?” இப்ப நீங்க தாராளமா விசாரிச்சுக்கோங்க. ஆனால் எங்கள் திருமணம் முடிந்த பின் கேஸ் விசயமா வந்தீங்கன்னா நல்லா இருக்கும் என்றாள் மிருளாலினி.
சரி, இப்பொழுது கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க. மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம் என்றான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு விக்ரம்.
மிரு..அவன் உன்னை விட சின்னவன் தான் சிம்மா சொல்ல, என்ன இருந்தாலும் உயர் பதவியில தான சார் இருக்காங்க. அதுக்காக மரியாதை கொடுக்கணும்ல்ல சிம்மா என்றாள் மிருளாலினி
சிம்மாவிற்கு நட்சத்திரா சொன்ன உயர் பதவி அவன் மனதை தொந்தரவு செய்தது. அமைதியானான் அவன்.
ம்ம்..இதுக்கு தான் இருவரும் சேர்ந்து இந்த கேஸை டீல் பண்ண சொன்னேன் என்று டி.ஐ.ஜி சதாசிவம் சொல்லிக் கொண்டே வந்தார். அனைவரும் எழுந்தனர்.
சார், “நீங்க வந்துருக்கீங்க?” சிம்மா கேட்க, ஆமா திருமணம் நடக்கப் போகும் வீடுன்னு சொன்ன. “இருவரும் ஒரே இடத்தில் இருந்தா அடிச்சுப்பீங்கல்ல?” அதான் நீங்க பிரச்சனையை தொடங்கும் முன் வந்துட்டேன். “சரி தான கர்னல் சார்” என்றார் அவர் தமிழினியன் தாத்தாவை பார்த்து.
“சரியான நேரத்துல வந்திருக்கீங்க?” தாத்தா கூற, இவனுகள என்னாலவே சமாளிக்க முடியாது. நீங்க கஷ்டப்படப் போறீங்கன்னு தான் வந்தேன் என்று சிம்மாவை பார்த்தார். அவன் கோபமாக நின்றான்.
சிம்மா, உங்க அம்மாவும் அந்த இடத்துல இருந்தாங்கலாமே! அவர் கேட்க, ஆமா சார்.
அவங்களையும் வர சொல்லு. மொத்தமாக முடித்து விட்டு இவனை அழைத்து செல்கிறேன் என்றார்.
சுவாதி, “அங்கிளை அழைச்சிட்டு வா” என்று தமிழினியன் சொல்ல, “எல்லாரும் எதுக்கெடுத்தாலும் என்னையே வேலை சொல்றாங்க?” அண்ணா நீயும் ஆரம்பிச்சுட்டேல்ல என்று சலித்துக் கொண்டு விக்ரமை முறைத்துக் கொண்டே சென்றாள். அவன் கவனம் முழுவதும் அவள் மீதிருக்க, பின்னே திரும்பி அவளை பார்த்தான்.
நட்சத்திராவை பற்றியும் மிருளாலினி சொல்ல, நான் அவங்களிடமும் பேசணுமே! என்றான் விக்ரம்.
சார், மது கடைசியா எங்களிடம் ஏதோ சொல்ல வந்தால் அதற்குள் சுட்டுட்டாங்க. என்னன்னு தெரியல என்றாள் மிருளாலினி. விக்ரம் யோசனையுடன் இருக்க, “சார் உங்க வேலை முடிஞ்சதா? நான் என்னோட அண்ணியை கூட்டிட்டு போகலாமா?” சுவாதி விக்ரமிடம் கேட்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் அவங்களும் வரட்டும்” என்றாள்.
சார், உங்களால் நேற்றே என் மருதாணி ஸ்பாயில் ஆகிடுச்சு. முதல்ல அண்ணியை தயார் செய்து பின் தான் நான் வைக்கணும். ஏழு மணிக்கே பங்சன் ஆரம்பித்து விடும். இப்ப நேரமாகிட்டு இருக்கு என்றாள் விக்ரமை முறைத்துக் கொண்டு சுவாதி கூறினாள்.
“என்னது? விக்ரமால் உன்னோட மருதாணி ஸ்பாயில் ஆகிடுச்சா?” டி.ஐ.ஜி கேட்க, ஆமா சார் உங்க பையன் தான் இடையில வந்துட்டார் என்று அவள் கையை பார்த்தாள்.
விக்ரம் அவளை பார்க்க, நட்சத்திரா வீட்டிலிருந்த அனைவரும் வந்தனர்.
அன்னத்தை பார்த்து விக்ரம் எழுந்தான். “உங்களுக்கு என்னை முதலிலே தெரியுமா?” விக்ரம் கேட்க, அவனை பார்த்து பரிதி அதிர்ச்சியுடன் நின்றார்.
அன்னம் பரிதியை பார்த்துக் கொண்டே, தெரியாது. ஆனால் எங்கோ பார்த்தது போல் இருக்கு என்றார் அன்னம்.
“கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறாயா?” நிறைய வேலை இருக்கு என்றான் சிம்மா.
விக்ரம் அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டே பரிதியை பார்த்தார். அவரை பார்த்தால் அவனுக்கு அவனையே பார்ப்பது போல இருந்தது. பரிதியின் கண்கள் அப்படியே விக்ரம் கண்களை போல் இருந்தது. டி.ஐ.ஜி பரிதியை பார்த்து அதிர்ந்தார். அவரும் இவரை திகைப்புடன் பார்த்தார். ஆனால் பேசாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.
அன்னமும் மிருளாலினி போல் பேச, நட்சத்திராவிடம் விசாரித்தான் விக்ரம்.
அவள் கோகுலை கணவன் என்று கூற, அதுவும் அவன் போலீஸ் என்று சொல்ல, சிம்மா விக்ரம் முன் வந்து, “நாம தனியா பேசலாமா?” என்று கேட்டான்.
முடியாது. நான் இன்னும் விசாரித்து முடிக்கலை என்று நகர்ந்து விக்ரம் நட்சத்திராவிடம் வந்து, போலீஸா எந்த வருடம் என்னவென விசாரிக்க அவள் சொல்லும் முன் தமிழினியனும் விக்ரமிடம் வந்து, சார் நாம தனியா பேசலாம். அவளிடம் நீங்க எதுவும் கேட்க வேண்டாம் என்றான்.
“நீங்கள் செய்வதை பார்த்தால் எனக்கு சந்தேகம் உங்கள் பக்கம் திரும்புகிறதே சார்” என்று தமிழினியனை பார்க்க, சார் நான் பேசிக்கிறேன் என்றாள் நட்சத்திரா.
நீ வாய மூடு. ஏதாவது பேசுன அவ்வளவு தான் சிம்மா சினமானான். அப்பா..என்று அர்சு அவனிடம் வர, சதாசிவம் அதிர்ந்து, “சிம்மா உன் மகனா? உனக்கு திருமணம் ஆகி விட்டதா?” என கேட்டார். அவன் பதிலளிக்காமல் அர்சுவை தூக்கி, நீ சுமியோட விளையாடு. அப்பா அப்புறம் வாரேன் என்று அவனை இறக்கி விட்டான்.
இல்ல சார், அவர் பையன் அர்சு இல்லை. என் கணவன் கோகுலின் மகன் தான் அர்சு என்றாள் நட்சத்திரா. சிம்மாவிற்கு கோபம் தலைக்கேறியது.
எனக்கு தெரியும். “இப்ப அதனால என்ன?” நான் பார்த்துக்கிறேன்ன்னு சொல்றேன்ல்ல சிம்மா பயங்கரமாக சத்தமிட்டான்.
நட்சு, நீ அமைதியா இரு. சிம்மா பேசிப்பான் மிருளாலினி சொல்ல, “என்னடி நீயும்?”
சார், அவங்க என்னோட பேசண்ட். அவங்க வாழ்க்கையில் நடந்த சில விசயங்களை மறந்துட்டாங்க. அதான்…ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்று தமிழினியன் விக்ரமிடம் கண்ணை காட்டினான். விக்ரமும் மாறன், சிம்மா பேசியதை கேட்டானே! சரி..என்று அவன் அமர்ந்தான்.
சிம்மா..சதாசிவம் அழைக்க, சார் எனக்கே ஒன்றும் புரியல. எப்படின்னு தெரியல. தெரிந்த பின் நான் உங்களிடம் சொல்கிறேன். இதுவரை நான் யாரையும் திருமணம் செய்யலை என்று நட்சத்திராவை பார்த்தான். அவள் கோபமாகவும் வேதனையுடன் கண்ணீருடனும் தமிழினியனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாம்ஸ், “முடிக்க நேரமாகுமா?” சுவாதி கேட்க, நட்சத்திரா அவளை பார்த்தாள்.
“மாம்ஸா?”
ஆமா, “அண்ணியோட அண்ணன் எனக்கு மாமா தான” என்று சுவாதி ஓரக்கண்ணால் நட்சத்திராவை பார்த்தாள்.
ம்ம்..என்றான் சிம்மா.
சிம்மாவிடம் வந்த சுவாதி, மாம்ஸ்..நோ வொரி. ஸ்டாருக்கு தான் உன்னை கல்யாணம் பண்ண விருப்பமில்லைல்ல. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்புறம் அர்சுவை நாம பார்த்துக்கலாம்.
அர்சு விசயத்தில் கண்டிப்பாக எல்லாரும் நம்மை ஏதும் சொல்ல மாட்டங்க. அவன் தான் உன்னை உரித்து பிறந்திருக்கானே! “எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சிம்மா தோளில் கையை போட்டாள் சுவாதி.
“ஓ.கே தான மாமா?” அவள் கேட்க, “என்னடி ஓ.கே?” என்று அன்னம் சுவாதி காதை திருகினாள்.
அய்யோ, அத்தை அமைதியா இரு. உன்னோட மருமகளுக்கு மூளை இல்லைன்னா உனக்குமா இல்லை சுவாதி மெதுவாக கேட்க, “என்ன சொன்ன? நாளைக்கே கல்யாணம் வச்சுக்கலாமா?”
சரி தான். அவனும் எத்தனை வருசமா தனியா இருப்பான் அன்னம் கேட்டுக் கொண்டே, சரி தானங்க. இந்த பொண்ணை நம்ம சிம்மாவுக்கு கட்டி வச்சிறலாம் என்றார்.
சுவாதி அம்மா கோபமாக எழுந்து, “சுவாதி” என சத்தமிட்டார்.
அத்தை, அமைதி..அமைதி. “அங்க பாருங்க” என்று மிருளாலினி சொல்ல, எல்லாரும் நட்சத்திராவை பார்த்தனர். அவள் கையை கட்டிக் கொண்டு இருவரையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுவாதி அவளிடம் ஓடி வந்து, எங்க அண்ணி திருமணம் முடிந்த பின் நான் மாமாவை கட்டிக்கிறேன். “என்ன சொல்றீங்க அக்கா?” என்று கேட்க, கட்டிக்கோ. ஆனால் அர்சு என் மகன் தான் என்றாள்.
முடியாதுக்கா. மாமா மாதிரி இருக்கான். அவனை பார்த்தால் உங்கள் கண், காது ஏதும் தெரியலையே? மாமாவை மறந்தது போல் அவனையும் மறந்துருங்க. இருவரையும் நான் பார்த்துக்கிறேன் என்றாள் சுவாதி கண்ணடித்தாள். விக்ரம் முறைப்புடன் அவளை பார்த்தான். சதாசிவம் அவனை பார்த்து புன்னகைத்தார்.
நிறுத்துங்க..நான் ஏற்கனவே டென்சன்ல்ல இருக்கேன். இவனுக வேற சிம்மா சத்தமிட்டான்.