அத்தியாயம் 16

அஜய் நட்சத்திராவிற்கு போன் செய்து, “வீட்டிற்கு கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டான்.

எல்லாருமே கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்று அவள் சொல்ல, ஓ.கே என்று அலைபேசியை வைத்து காரை வேகமாக விரட்டினான்.

ஒவ்வொருவராக வெளியே செல்ல, நட்சத்திராவும் தன் மகன், அத்தை, மாமாவுடன் வெளியேறினாள். அவள் பின் வந்த தியாவிற்கு போன் வர, வண்டியை நிறுத்தி பேசி வண்டியை எடுத்தாள். காருடன் மறைந்திருந்த அஜய் தியாவை பின் தொடர்ந்தான். அவள் நேராக ஓர் கிளப்பிற்கு வெளியே வண்டியை நிறுத்தி விட்டு, அங்கேயே நின்றாள். ஒருவன் வந்தான்.

சார், “எதுக்கு இங்க வரச் சொன்னீங்க?” தியா அவனிடம் கேட்க, இல்ல டேட்டிங்கை இங்கே வச்சுக்கலாம்ன்னு தோணுச்சு என்றான் அவன்.

சார், அப்பா சொன்னதுக்காக தான் வந்தேன். இப்ப நீங்க இங்கேயா டேட்டிங் பண்ண சொல்றீங்க? எனக்கு தப்பா தோணுது. நான் வரலை. நாளை சந்திப்போம் என்று அவள் வண்டியில் கையை வைக்க, அவள் வண்டி முன் வந்த அவன் ஏதோ சொல்ல, “வந்து தொலைகிறேன்” என்று உள்ளே சென்றாள். காரை விட்டு இறங்கி அஜய் அவர்கள் பின் சென்றான்.

அவளை அழைத்து சென்று ஓரிடத்தில் அமர வைத்து ஜூஸ் ஒன்றை குடிக்க கொடுத்தான். அவள் உஷாராக முற்றிலும் தவிர்த்தாள். அவள் முகத்தை பார்த்தாலே அவளுக்கு அவ்விடம் பிடிக்கவில்லை என்று அஜய்க்கு தெளிவாக தெரிந்தது. அவன் அவர்களை தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நன்றாக குடித்து விட்டு மட்டையாகி விட்டான். அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு வெளியே சென்றவள் வாயை மூடி தரதரவென ஓர் அறைக்கு இழுத்து சென்றான் அஜய்.

அஜய் சார், “நீங்களா?” தியா அதிர, நானே தான். உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும். “எல்லார் முன்னும் அந்த சிக்னலில் வைத்து எப்படி அசிங்கப்படுத்தினாய்? உன்னை சும்மா விட முடியுமா? விட்டால் என்ன ஆவது?” என்று அவளை நெருங்கினான்.

சார், வேண்டாம். நான் போகணும். என்னோட அப்பா எனக்காக காத்திருப்பார் என்று தியா சொல்ல, காத்திருக்கட்டும். நீ இவ்வாறு பேச காரணமே அவர் தான. உங்களை போல் ஆட்களுக்கு மானம் உயிருக்கும் மேல் தான..இன்று நடக்கப் போகும் சம்பவத்தில் என்னை போல் ஆட்களிடம் நீ வாயை திறக்கவே கூடாது என்று அஜய் அவளை கட்டாயப்படுத்த, மனம் உடைந்து அழுதாள் தியா. ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாது அவன் நினைத்ததை நிறைவேற்றினான். தியா மனமும் உடலும் வலுவிழந்து அவனை வெறுப்புடன் ஓர் பார்வையை சிந்தி விட்டு ஆடையை போட்டுக் கொண்டு அவள் செல்ல, அப்போதும் விடாது அவளை பின் தொடர்ந்தான் அஜய்.

யாருமில்லா ஓரிடத்தில் அமர்ந்து வாயை பொத்திக் கொண்டு கதறி அழுது கொண்டிருந்தாள். அதை பார்த்த அஜய் மனம் கஷ்டப்பட்டாலும் “இவளுக்கு தேவைதான்” என்று அவளை பார்த்தான். மெதுவாக எழுந்து வண்டியை எடுத்து சிம்மா ஆபிஸூக்கு சென்றாள். சிம்மா, மிளிரன் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.

தியாவை பார்த்து, “இந்த நேரத்தில் இங்க எதுக்கு வந்த?” சிம்மா கேட்டான்.

“இவனா? இவனை பார்க்க எதுக்கு வந்தாள்? நடந்ததை கம்பிளைண்ட் செய்ய வந்திருப்பாளோ!” அஜய் சிந்தனையுடன் பார்த்தான்.

சார், உங்களிடம் அப்பொழுதே பேச நினைத்தேன். ஆனால் அப்பொழுது வர முடியவில்லை. அதான் இப்ப பேச வந்திருக்கேன்.

“ஒரு மாதிரியா இருக்க? ஏதும் பிரச்சனையா?” சிம்மா கேட்க, எல்லாரும் அவளை கவனித்தனர். அவள் சங்கோஜமாக அவர்களை பார்த்தாள்.

நீங்க மத்த விவரத்தை திரட்டுங்க. நாம நாளை சந்திக்கலாம் என்று சிம்மா அனைவரையும் அனுப்பி விட்டு அவர்கள் முன்னே வெளியே ஓரிடத்தில் அமர்ந்தான். அவளையும் அமர வைத்தான்.

எனக்கு ஒன்றுமில்லை சார். நீங்க அப்படியே அர்சு மாதிரி இருக்கீங்க என்றாள் தியா. அவள் கழுத்தில் கட்டியிருந்த துப்பட்டா விலக்க, அவள் கழுத்தில் இருந்த தடத்தை சந்தேகமாக பார்த்தான் சிம்மா.

சார், எங்க மேம் பற்றி நான் பேச வந்தேன்.

“ஸ்டார் பற்றியா?” சிம்மா கேட்க, புன்னகையுடன் “ஆமா சார்” என்றாள்.

இவளை நான் என்ன செய்தேன்? இவ சிரிக்கிறா? அப்ப இந்த தண்டனை அவளுக்கு பத்தாதோ! என எண்ணினான் அஜய்.

“எதுக்கு சிரிக்கிற?” சிம்மா கோபமாக அவளை பார்த்தான்.

சும்மா முறைக்காதீங்க சார். உங்க பார்வையே நீங்க எங்க மேம்மை காதலிப்பது நன்றாக தெரியுது.

“அப்படி தெளிவா வெளிய தெரியுதா?” சிம்மா கேட்க, தியா சிரித்து விட்டாள்.

“சிரிக்காத” என்றான் சிம்மா.

இல்ல சார், அவங்க திருமணம் செய்தது போல் தெரியல.

“ஏன் அப்படி நினைக்கிற?” சிம்மா கேட்டான்.

அவங்க கணவன் இறந்தால் புகைப்படமாவது வெளியே வச்சிருக்கணுமே! அது இல்லை. ஒரு முறை நாங்க பேசும் போது சொன்னாங்க. அவங்க கணவனை ரொம்ப காதலித்ததாக சொன்னாங்க. ஆனால் அவரை பற்றி நாம் கேட்டால் கூட சரியா சொல்ல மாட்டாங்க. மீட் செய்த இடம் தெரியாது என அவள் பேசிக் கொண்டே போக..

“இப்ப என்ன சொல்ல வர்ற?” சிம்மா நேரடியாக கேட்டான்.

சார், அவங்க உங்களை நினைத்து தான் பேசி இருக்காங்கலோன்னு எனக்கு சந்தேகம். அப்புறம் நாங்க நிறைய திருமணத்திற்காக ஒன்றாக வேலை செய்திருக்கோம். சரியாக திருமணம் நடக்கும் போது அவ்விடம் நிற்கவே மாட்டாங்க. அது திருமணம் பிடிக்காமலா? இல்லை அவங்க ஆசை நிறைவேற வில்லைன்னான்னு புரியல.

“ஆசையா?”

ஆமா சார், கல்யாணம்ன்னா பொண்ணுங்க மனசுல நிறைய ஆசை இருக்கும். அது சரியாக நடக்கவில்லைன்னா டிசப்பாயிண்மென்ட் ஆகிடுவாங்க. அது போல் மேம்..என்று சிம்மாவை பார்த்தாள்.

சரி, அப்புறம்..

என்ன சார், “இப்படி கேக்குறீங்க?” உங்களையும் அர்சுவையும் எனக்கு மட்டுமல்ல பார்க்கும் எல்லாருக்கும் நீங்க தான் அவன் அப்பான்னு தெரியுது. நீங்க மேம்மிடம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கலாமே?

கேட்கலாம். “ஆனால் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே?”

கேட்டால் தான சார் தெரியும் தியா சொல்ல, “எங்க விசயத்துல உனக்கு என்ன அக்கறை?” சிம்மா கேட்டான்.

எனக்கு அம்மா இல்லை சார். அப்பா மட்டும் தான். நான் அதிகம் யாருடனும் பேச மாட்டேன். மேம் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. எனக்கு தோன்றியது அதான் பேச வந்தேன்.

“நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால் என்ன செய்வ?”

“நீங்க பண்ண மாட்டீங்க” என்ற தியா கண்கள் கலங்கியது. சற்று நேரம் முன் அவளுக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. அவள் அமைதியானாள்.

அப்ப அந்த அஜய்? சிம்மா கேட்க, சும்மா மேம் மேல அவருக்கு விருப்பம். அவ்வளவு தான் சார். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்றாள்.

சரி, நீ கிளம்பு. முதல்ல என்னோட கேஸை முடிச்சிட்டு அப்புறம் உன் மேம்மிடம் பேசுறேன் என்றான் சிம்மா.

“தேங்க்யூ சார்” என்று அவள் எழுந்தாள்.

“தனியா போகப் போகிறாயா? நானும் வரவா?” சிம்மா கேட்டான்.

“நான் போயிடுவேன் சார்” என்று தடுமாறினாள்.

“உனக்கு அடிபட்டிருக்கோ” என்று சிம்மா தியா அருகே வந்தான். வண்டியிலிருந்து விழுந்துட்டேன். நான் போயிடுவேன்.

“காயம் ஏதும் பெருசா?” சிம்மா கேட்க, நோ சார் என்று அவள் செல்ல, அஜய் மீண்டும் அவளை பின் தொடர்ந்தான். சிறிய மெடிக்கலின் முன் நின்ற தியா, அஜய் காயப்படுத்திய இடத்திற்கு மருந்திட மருந்தை வாங்கி விட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.

வெளியேவே அவள் அப்பா காத்திருந்தார். இவளுக்கு அவரை பார்த்து மனம் கசந்தது.

“இவ்வளவு நேரமாம்மா? அந்த பையன் விட வரலையா?” அவர் கேட்க, தியா கண்ணீருடன் “அவன் வேண்டாம்ப்பா” என்று அழுதாள்.

“அதுக்கு எதுக்குடா அழுற?” வேண்டாம்ன்னா விட்டிரு. வேற பையனை பார்த்துக்கலாம்.

இல்லப்பா, “கொஞ்ச நாள் போகட்டுமே!” என்று கெஞ்சுவது போல் கேட்டாள் தியா.

சரிம்மா, “முதல்ல உள்ள வா” என்று அவர் வீட்டின் கதவை தாழிட்டு உள்ளே அழைத்து சென்றார். பார்த்துக் கொண்டிருந்த அஜய் அவரை பார்த்து முதலில் அதிர்ந்தாலும் பின்..இரு உனக்கு இருக்கு என்று அவன் வீட்டிற்கு காரை செலுத்தினான்.

சிம்மா தியாவை அனுப்பிய அதே சமயத்தில் தமிழினியன் வீட்டிற்குள் இரு போலீஸூடன் உள்ளே வந்தான் விக்ரம்.  தமிழினியன் வீட்டில் அவன் பாட்டி, தாத்தா, அன்னம், நட்சத்திரா, இன்னும் சில உறவுகளும் வந்திருந்தனர்.

“யார் நீங்க? எதுக்கு வந்திருக்கீங்க?” கிருபாகரன் கேட்க, “இவரை தெரியாதா?” “எஸ். பீ விக்ரம்” என்றார் தமிழினியன் தாத்தா.

“எதுக்கு சார் வீட்டுக்கு வந்துருக்கீங்க?” தமிழினியன் கேட்டான்.

அனைவரையும் ஆராய்ந்த படியே, “உங்களுக்கும் நீங்க கட்டிக்கப் போகும் பொண்ணுக்கும் மதுவந்தினியை தெரியுமா?” என்று விக்ரம் கேட்டான். தமிழினியன் அவளை பற்றி அவனுக்கு தெரிந்ததையும் நடந்ததையும் கூறினான்.

அன்னமும், நட்சத்திராவும் விக்ரமை பார்த்துக் கொண்டே நின்றனர். தமிழினியன் பேசி முடிக்கவும் இருவரும் விக்ரம் முன் வந்து அவனை உற்று பார்த்தனர்.

“எதுக்கு சாரை இப்படி பாக்குறீங்க?” என்று போலீஸ் ஒருவர் கேட்க, நட்சத்திரா என்று தமிழினியன் சத்தமிட்டான். விக்ரம் இருவரையும் பார்த்துக் கொண்டே தமிழினியனை ஆர்வமுடன் கவனித்தனர்.

உள்ளே வந்தான் சிம்மா. தமிழினியன் தாத்தா சிம்மாவை பார்த்து, சிம்மராஜன் வாங்க..என்று புன்னகையுடன் அழைத்தார். அவரை பார்த்துக் கொண்டே வந்த சிம்மா, தன் அம்மாவும் ஸ்டாரும் விக்ரமை நெருங்கி இருப்பதை பார்த்து, “அம்மா என்ன செய்றீங்க?” சத்தமிட்டான்.

சிம்மா, இந்த பையன்..அவர் சொல்ல, “அமைதியா இருங்க” என்றான் சிம்மா. மாமா..அவர் என்று நட்சத்திரா பேச ஆரம்பிக்க, திரும்பி அவளை முறைத்தான். அவள் அமைதியானாள்.

“மாமாவா?” என்று விக்ரம் சிம்மாவை பார்த்தான்.

“இங்க எதுக்குடா வந்த?” சிம்மா கோபமாக கேட்டான்.

அதான பார்த்தேன். “எதிரும் புதிரும் ஒரே இடத்தில் சண்டை போடாமல் எப்படி?” என்று தமிழினியன் தாத்தா சொல்ல, “உங்களுக்கு எங்களை பற்றி எப்படி தெரியும்?” விக்ரம் கேட்டான்.

தெரியும் என்றார் தாத்தா.

அலைபேசியை எடுத்த சிம்மா டி.ஐ.ஜிக்கு கால் செய்து, “சார் உங்க பையன் கேஸ் பற்றி விசாரிக்கும் நேரமா இது?” பங்சன் நடக்க இருக்கும் இடத்தில் வந்து பிரச்சனை செய்கிறார் என்றான்.

அவர் அலைபேசியை விக்ரமிடம் கொடுக்க சொன்னார். விக்ரமிடம் வந்த சிம்மா கண்களால் அவனை எறித்துக் கொண்டே, அவன் அலைபேசியை விக்ரம் காதில் வைத்தான். அவர் விக்ரமை திட்டி வரச் சொன்னார்.

விக்ரம் ஏதும் சொல்லாமல் அலைபேசியை தட்டி விட்டான். அலைபேசி அணைந்தது.

ஏய் சுவாதி, “ஒழுங்கா நின்று விடு” என்று தமிழினியனின் கடைசி தம்பி விகாஸ் அவனது தங்கையான சுவாதியை விரட்டினான்.

“மகனே பக்கத்துல வந்த உன்னை ” என்று சுவாதி அவள் காலால் அங்கிருந்த ப்ளவர் வாஷ் டேபிளை தட்டி விட்டாள். அவளது இரு கை முழுவதும் மெகந்தி இட்டு காட்டன் சோலி ஆடை அணிந்திருந்தாள்.

“நில்லு” அவன் சத்தமிட்ட, பாட்டி அவன் என் மெகந்தியை அழிக்க பார்க்கிறான் என்று மூச்சிறைக்க பாட்டியிடம் வந்தாள். அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க, அண்ணா..”கெல்ப் பண்ணு” என்று தமிழினியனுக்கு அடுத்தவனான ரகசியனிடம் வந்து அவன் பின் மறைந்தாள்.

விகாஸோ சுவாதியை விடாது “குட்டி சாத்தான் நில்லுடி” என்று அவளை விரட்ட இருவரும் கபடி ஆடினர். சிம்மா அருகே வந்த சுவாதி, “சார் அவனை பிடிங்க” என்று அவன் பின் வந்தாள். அவள் அண்ணன் அவளது தோளை பற்ற அவனை தள்ளி விட்டாள். அவன் சமாளித்து அவளது பின் பக்க தோளை இடித்து நின்றான். அவள் தடுமாறி நேராக விக்ரமிடம் வந்து அவனது ஆடையின் இரு மார்பிலும் கையை வைத்தாள். அவள் கையிலிருந்த மெகந்தி முழுவதும் விக்ரமின் வெள்ளை சட்டையில் சுவாதி கை விரல்களுடன் அச்சாக பதிந்தது. அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

சுவாதியின் அண்ணனோ..பயங்கரமாக சிரித்தான். ஏய் குட்டி சாத்தான், “எப்படி? மொத்தமும் போச்சா?” என்று கேலி செய்தான்.

சுவாதி அவளது கையை பார்த்துக் கொண்டு ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

அம்மா, “இந்த எருமைமாடு என் மெகந்தியை அழிச்சுட்டான்” என்று அழுது கொண்டு விக்ரமை பார்த்து, டேய் லூசு, இடையில வந்து நீயும் அவனோட கூட்டு சேர்ந்துட்ட என்று விக்ரமை திட்ட, சிம்மா விக்ரமை பார்த்து பயங்கரமாக சிரித்தான்.

ஏம்மா, “நீ எங்க சார் சட்டை பாழாக்கிட்டு அவரை லூசுன்னு திட்டுற?” போலீஸ் ஒருவர் சத்தமிட, விக்ரம் அவரை பார்த்து, உங்களுக்கு அந்த பொண்ணே பரவாயில்லை என்று சுவாதியை பார்த்தான்.

“சாரா” என்று பின் நகர்ந்து அவள் அம்மா அருகே சென்றாள். அவள் அண்ணன் மேலும் கேலி செய்ய, கோபமாக சுவாதி அவனிடம் சென்று அவள் கையிலிருந்த மீதியை அவன் முகத்தில் அப்பி விட்டு, “இப்ப தான் ரொம்ப அழகா இருக்க” என்று முறைப்புடன் சொன்னாள்.

“மெகந்திக்காடி இந்த அக்கப்போரு?” சுவாதி அம்மா அவளை திட்ட, அம்மா..நாளையும் மறுநாளும் நிறைய வேலை இருக்கும். அண்ணா திருமணத்துக்கு நானும் தயாராகணும்ல்ல? அதான் இன்று போட்டால் சரியாக இருக்கும்ன்னு நினைத்தேன். இந்த எருமைமாட்டு பயலுக சேர்ந்து என் மெகந்தியை பாழாக்கிட்டானுக என்று அவள் விக்ரமையும் சேர்த்து சொன்னாள்.

“எருமைமாடா? நானா?” விக்ரம் கேட்க, அவள் அவனை முறைத்து ஏதும் சொல்லாமல் நின்றாள்.

தப்பா எருமைமாடுன்னு சொல்லீட்டாப்பா. ஏம்மா, அடுத்த முறை திட்டும் போது தடிமாடுன்னு சொல்லு. அதான் இவனுக்கு சரியாக இருக்கும் என்று சொல்லி சிம்மா சிரித்தான்.

டேய், “சும்மா இருக்க மாட்ட?” என்று விக்ரம் கொதித்து சிம்மாவிடம் வந்தான்.

சிம்மா, “அமைதியா இருக்கியா? இல்லையா?” அன்னம் சத்தமிட, சிம்மாவை அடிக்க சென்ற விக்ரம் அன்னத்தை பார்த்து நின்று விட்டான்.

நாளைக்கு காலை வாரேன் என்று விக்ரம் சொல்ல, “சார் நான் சொல்ல வேண்டியதை சொல்லீட்டேன்” தமிழினியன் கூற, நீங்க சொல்லீட்டீங்க. அவங்ககிட்டையும் விசாரிக்கணுமே! என்று விக்ரம் மிருளாலினியை காட்டினான்.

“அவளிடம் என்ன கேட்கணும்?” சிம்மா கேட்க, உன்னிடம் இருக்கும் புட்டேஜ், ரெக்கார்டரை தந்தேன்னா நான் வர மாட்டேன். “தர்றீயா?” விக்ரம் கேட்டான்.

முடியாது என்றான் சிம்மா.

அப்படின்னா, நான் வரத்தான் செய்வேன். சீக்கிரம் இந்த கேஸை முடிக்க சொல்லி ஆர்டர் வந்திருக்கு. சார் பார்க்கலையோ! அட..நீங்க தான் உங்க தங்கை திருமணத்தில் மும்பரமாக இருக்கீங்களே! என்று மிருளாலினியை விக்ரம் பார்த்தான்.

மிருளாலினி சிம்மாவை பார்த்தாள். சிம்மா அமைதியாக அவளிடம் சென்று, “இதை வச்சிக்கோ” என்று அவன் ஒரு பையை அவளிடம் கொடுத்தான்.

“என்னதுப்பா?” மிருளாலினி அப்பா கேட்டார்.

அப்பா, அது அவளுக்கு தேவையான பொருள்கள் தான்.

“நாங்க வாங்கி கொடுத்திருப்போம்ல்ல?” அவர் கேட்க, நான் உங்க பையன் மாதிரி. நான் வாங்கி தராமல் யார் வாங்கித் தருவா என்றான் சிம்மா. மிருளாலினிக்கும் அவள் பெற்றோருக்கும் கண்கள் கலங்கியது.

அதை பார்த்துக் கொண்டே தன் சட்டையை கழற்றிய விக்ரம் சுவாதியை பார்த்துக் கொண்டே அவள் குடும்பத்தினரிடம் “வாரேன்” என்று கூறினான்.

இருப்பா, பெரியவன் சட்டை உனக்கு சரியாக இருக்கும் என்ற சுவாதி அம்மா, டேய் போ..எடுத்துட்டு வா என்றார்.

எனக்கு வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று அன்னத்தையும் நட்சத்திராவையும் பார்த்தான்.

விக்ரம் சார், “ஒரு நிமிடம்” என்று நட்சத்திரா சிம்மாவிடம் சென்று, மாமா சட்டையை கழற்று என்றாள்.

“என்ன? நானா?” சிம்மா கேட்க, “உன்னை தான் மாமா” என்றாள் அவள்.

“அவனுடையது எனக்கு தேவையில்லை” என்றான் விக்ரம்.

வாங்கிக்கோப்பா, “சிம்மராஜனுடையது தான் உனக்கு சரியாக பொருந்தும்” என்றார் தாத்தா.

ஆமா, “இப்படியே போனால் யாராவது தப்பா நினைப்பாங்க” என்று அன்னம் சிம்மாவின் சட்டை கழற்றி விக்ரமிடம் சென்று கொடுத்தார். விக்ரம் அன்னத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்குடா அப்படி பாக்குற?” என்னோட அம்மாவை பார்த்தது போதும். நீ கிளம்பு என்றான் சிம்மா. அவனை முறைத்து விட்டு, சுவாதியையும் அவன் அண்ணனையும் பார்த்துக் கொண்டே வெளியேறினான் விக்ரம். போலீஸூம் அவனுடன் கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்த விக்ரமிற்கு அந்த வெள்ளை சட்டையை கீழே போட மனமில்லாமல் அவனறையின் ஓரிடத்தில் தொங்க விட்டு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அன்னம் நினைவு எழ, விக்ரமால் உறங்க முடியவில்லை. மனம் வலிப்பது போல் உணர்ந்து மீண்டும் மது அருந்தினான்.

சிம்மா நட்சத்திரா வீட்டிற்கு சென்று பரிதியை அணைத்து உறங்கிக் கொண்டிருக்கும் அர்சுவை பார்த்தான். மாமா..”சாப்பிடலாமா?” நட்சத்திரா கேட்க, “பசிக்கலை ஸ்டார்” என்றான் சிம்மா. அன்னம் அமைதியாக சென்று படுத்துக் கொண்டார்.

ஏன் மாமா? அவள் கேட்க, “தெரியல பசிக்கல” என்று அவனும் அவன் அம்மா அருகே சென்று படுத்துக் கொண்டான். நட்சத்திரா எல்லாரையும் பார்த்து விட்டு கதவை மூடி அவளும் படுத்துக் கொண்டாள்.

பெங்களூரு ஆய்வுக்கூடத்தில் நிஷா பதட்டமாக உதிரன் அறை அருகே வந்தாள். எதிரே வந்து கொண்டிருந்த பாலாவை பார்த்து, “பாலா ரித்துவை பார்த்தாயா?” எனக் கேட்டாள்.

“அவளோட அறையில தான இருப்பா?”

இல்ல, “அவள் எங்குமே இல்லை” என்று பதறினாள்.

“என்ன சொல்ற? எங்குமே இல்லைன்னா எங்க போயிருப்பா? வெளிய பார்த்தீயா?”

இல்லை. மற்ற எல்லா இடத்திலும் பார்த்துட்டேன். அவள் இல்லை..கூட வர்றீயா? வெளிய பார்த்துட்டு வந்திடலாம் என்று நிஷா பாலாவை அழைத்தாள். இவர்கள் பேசுவது உள்ளிருந்த உதிரனுக்கு தெளிவாக கேட்டது.

சரி, வா போகலாம் என்று இருவரும் வெளியே வந்து தேடினர். ரித்திகா ஓரிடத்தில் வந்து அழுது கொண்டிருந்தாள். பாலா அவளை பார்த்து நிஷாவிடம் கூற, இருவரும் முன்னேறினர்.

ரித்திகா அழுவதை திடீரென நிறுத்தினாள். அவள் தலைக்கு மேல் மஞ்சள் நிற ஒளி பிரகாசமாக தெரிந்தது. இருவரும் அதிர்ச்சியுடன் நின்றனர். உதிரனும் அவ்விடத்திற்கு தான் வந்து கொண்டிருந்தான். எல்லாம் சுபியின் வேலை தான்.

ரித்திகா, “நீ எதுக்கு அழுற?” சுபியின் ஆன்மா கேட்க, அவள் தலைக்கு மேலே பார்த்து சுபி அண்ணா, “நீயா?” எனக் கேட்டாள்.

நான் தான்..என்றது. அவள் எழுந்து அமர்ந்திருந்த கல் இருக்கையின் மேல் ஏறி, அவ்வொளியை பிடிக்க எக்கினாள். அது மேலும் நகர்ந்து சென்றது.

“என்ன செய்ற? எதுக்கு அழுற?”

இது என்ன ஒளி? நீ என்னோட கண்ணுக்கு தெரிய மாட்டாயா? அவள் பேசிக் கொண்டிருக்க, “நிஷா என்ன நடக்குது? ரித்து யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்?” பாலா கேட்க, அவர்கள் பின் நின்று உதிரனும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்ப, “ரித்து சொன்னது உண்மையா?” நான் கூட அவள் கற்பனையில் இருக்கான்னு நினைச்சேன் பாலா.

“என்ன சொன்னா?”

அவள் அண்ணியோட ப்ரெண்டு சுபி அண்ணா இறந்த பின் அவளிடம் பேசுவதாக சொன்னா. நான் நம்பவில்லை. ஒரு முறை அவள் அண்ணனிடம் பேசும் போது ஆவியை அலைபேசியில் பார்த்து பயந்து கீழே போட்டாள். அவள் கூறுவதை நான் நம்பவேயில்லை.

“ஆவியா?” பாலா கேட்க, ஆமா பாலா அவ சொன்ன சுபி அண்ணன் ஆவி தான் என்றாள் நிஷா.

“அவனோட ஆவி ரித்துவிடம் எதுக்கு வரணும்?” உதிரன் சிந்தனையுடன் பார்த்தான்.

ரித்திகா ஏதோ விசயத்தை கூறி விட்டு, எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கலை. என்னையும் உன்னோட அழைச்சிட்டு போ என்று அழுதாள். காற்று பயங்கரமாக அடிக்க, அவளை ஏதோ உருவம் சுற்றுவது மூவர் கண்ணுக்கும் தெரிந்தது. நிஷா பயந்து பாலா மீது மயங்கினாள்.

நிஷா..என்று அவன் அவளை தனியே தூக்கி சென்று பாலாவும் மறைந்து நின்று பார்த்தான். பக்கமிருந்த குழாய்த்தண்ணீரை நிஷா மீது தெளித்து அவளை விழிக்க வைத்து அவள் வாயை மூடினான்.

ரித்திகா காதில் கையை வைத்து கீழே அமர, காற்றின் வேகம் குறைந்து, சாவு தீர்வல்ல..நீ ஒரு நிமிடம் கூட உதிரனை விட்டு நகர கூடாது. இல்லை உன்னால் உன்னையும் காப்பாற்ற முடியாது. அவனையும் காப்பாற்ற முடியாது சுபி சொல்ல, வேகமாக எழுந்தாள்.

“மாமாவுக்கா? என்ன சொல்ற? காப்பாற்ற முடியாதா?” ரித்திகா கேட்க, ஆமா அவனை மட்டுமல்ல உன்னையும் நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை உன் அண்ணாவிடம் உன் பிரச்சனையை சீக்கிரம் சொல்லி விடு.

இல்ல, அம்மா பிராமிஸ் வாங்கி இருக்காங்க. நான் சொல்ல மாட்டேன் என்று அழுதாள்.

சரி, “உதிரனை விட்டு செல்லாதே!” என்று கூற, அவள் அமைதியாக மீண்டும் அமர்ந்தாள்.

இதற்கு முன் இவர்கள் வாழ்க்கையில் இதே கட்டத்தில் தான் ரித்திகா இருந்தாள். ஆனால் அப்பொழுது பாலா மட்டும் அவளுடன் இவ்விடத்திற்கு வரவில்லை. நிஷா உதிரனை காதலித்துக் கொண்டிருந்தாள். உதிரன், ரித்திகா உறவு தெரிந்து அவளும் பிரணவ்வும் சேர்த்து பிரித்து இருப்பார்கள். பிரணவ்வை ரித்திகா திருமணமே செய்து இருப்பாள். அவன் அவளிடம்  மான்ஸ்டர் போல் நடந்து கொள்வான். துன்புறுத்துவான், அவளை டார்ச்சர் செய்திருப்பான். அதனால் ரித்திகா தற்கொலை செய்திருப்பாள். அவள் திருமணம் செய்த பின்னும் உதிரனால் ரித்திகாவை விட முடியாமல் இருந்திருக்கும். அவள் தற்கொலை செய்து இறந்து விட்டால் என்றதும் அவனும் தற்கொலை செய்ய சென்றிருப்பான். அப்பொழுது தான் தேவதை நட்சத்திரா கழுத்தில் வில்வ இலையை மாட்டி இருப்பார். அதனால் மொத்தமாக எல்லாம் மாறி ரித்திகா உயிருடனும் உதிரன் பழைய நிலைக்கு அவர்களது ஊருக்கு ஆன்மா வந்திருக்கும்.

“என்ன அமைதியாகிட்ட?” சுபி ஆன்மா கேட்க, “அவன் வந்தால் நான் சென்று தானே ஆகணும்?”

நீ உன்னோட மாமாகிட்ட எல்லாத்தையும் சொல்லி உதவி கேள்.

இல்ல அண்ணா, நான் பெரிய மாமாவிடம் உதி மாமா வாழ்க்கையில் இடையே வர மாட்டேன்னு சொல்லி இருக்கேன். அதனால் பிரணவ் வந்தால் சென்று விடுவேன்.

பிராஜெக்ட் முடிந்த பின் தான செல்வ?

இல்லை, என்னோட டீமுக்காக தான் சொன்னேன். ஆனால் அவன் இரு வாரம் என்னை இங்கே இருக்க விட மாட்டான். ஆனால் நேரமிருக்கு. ஒரு வாரத்திற்கு மேல் தான் கண்டிப்பாக வருவான். நான் நாளை முழுவதும் உதி மாமாவுடன் நேரம் செலவழிக்கணும். எனக்கு அவருடனான நினைவுகளே போதும்.

“நான் சொல்றது புரியலையா? இருவருமே செத்து போயிடுவீங்க?” சுபி ஆன்மா கோபமாக, பரவாயில்லை அண்ணா, அவனுடன் வாழ்வதை விட சாவது மேல். “ஓ..அப்ப உதிரன்?”

அவருக்கு ஏதும் ஆகாமல் நீங்க தான் காப்பாற்றணும்.

நீ இல்லாமல் என்னால் அவனுக்கு உதவ முடியாது. நீ இங்கிருப்பதால் தான் இங்கே வந்தேன். நீ சென்று விட்டால் என்னால் இங்கே இருக்க முடியாது.

“ஏன்?”

அது தான் விதி.

“என்னால முடியாது” என்று அழுது கொண்டே இவர்கள் பக்கம் ஓடி வந்தாள். நிஷா எழுந்து ரித்திகா பக்கம் செல்ல நினைத்தாள். ஆனால் எழுந்த அவளை கீழே தள்ளி விட்டது சுபியின் ஆவி. அவள் பாலா மீதே விழுந்தாள். இருவரும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். உதிரன் யோசனையுடன் ரித்திகா பின் செல்ல இருவரும் அவனை பார்த்தனர். உதிரன் செல்வதற்குள் ரித்திகா அழுது கொண்டே அறையினுள் புகுந்து கொண்டாள். அவன் சிந்தனையுடன் அவனறைக்கு சென்றான்.

சுபியின் ஆன்மாவால் ரித்திகாவை சமாதானம் செய்ய முடியவில்லை. அவள் கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை.

மறுநாள் ரித்திகா உதிரனை தேடி அவனறைக்கு சென்றாள். அடர்ஊதா நிறத்தில் ஜியார்ஜெண்ட் புடவை சிறிய அளவிலான அழகான செயில் அவளது வளைந்த கழுத்திலும் சலசலப்புடன் கைகளில் வளையல் அணிந்து அவன் அறைக்கதவை திறந்து புன்னகையுடன் உதிரனை பார்த்தாள். அவன் எதிரே யாரோ அமர்ந்திருந்தனர். உதிரன் முகம் கடுகடுப்புடன் இருந்தது. அருகே ரட்சகனும் இருந்தார்.

மாமா, “தன்னை பார்த்து ரசிப்பான்” என நினைத்திருக்க, அவன் முறைத்து பார்த்தான். ரட்சகனும் அவளை விழிவிரிய பார்த்தார்.

உதிரன் எதிரே அமர்ந்திருந்தவன் திரும்பி ரித்திகாவை பார்த்து, “ஹாய் பேரட் கார்ஜியஸ்” என்று எழுந்தான் பிரணவ். ரித்திகா தலையில் இடி விழுந்தது போல் ஆனது. அவள் சிரிப்பு காணாமல் போனது.

அங்கிள், “பார்த்தீங்களா?” என்னை பார்த்த அதிர்ச்சியில் அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் என்று பிரணவ் சொல்ல, உதிரன் மனம் கொதித்தது.

ஓ.கே உதிரன், உங்களிடம் அப்புறம் பேசுகிறேன். நாங்க பார்த்து இரு நாட்களாகி விட்டது. நாங்கள் நேரம் செலவழித்து விட்டு வருகிறோம் என்று ரித்திகாவை அவர்கள் முன் இடையிட்டு இழுத்து கையை அவள் இடையில் போட்டுக் கொண்டே சென்றான் பிரணவ். ரித்திகா உதிரனை பார்க்க முடியாமல் மனம் சோர்ந்து அவனுடன் சென்றாள்.

உதிரனை பார்த்து கண்டுகொண்டார் ரட்சகன். இப்பொழுது அவன் தனியே இருப்பது தான் நல்லது என்று உதிரனை பார்த்துக் கொண்டே வெளியேறினார். அவர் சென்றதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சீற்றமுடன் உதிரன் விட்டு விலாசிக் கொண்டிருந்தான். பாலா கதவை திறக்க உதிரனின் பெயர் கொண்ட பலகை அவன் காலடியில் வந்து விழுந்தது. உதிரன் உடைந்து ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்.

“சார்” என்று பதறி பாலா உதிரனிடம் வந்தான். போ…உதிரன் கத்தினான்.

“என்னாச்சு சார்?” பாலா கேட்க, உதிரன் பதிலளிக்காமல் சீற்றமுடனே இருந்தான்.

சரி விடுங்க. “ரித்துவை பார்த்தீங்களா?” அவளுக்கு இன்று பிறந்தநாள். அதான் பரிசோட அவளறைக்கு போனேன். அவள் உங்களை பார்க்க வந்ததாக ஸ்ரீ சொன்னாள். “அவள் வந்தாளா?” பாலா கேட்க, “பிறந்தநாளா?” என்று உதிரன் கோபம் சென்று சிந்தனை மேலிட்டது.

“ரித்திகா நுழையும் போது இருந்த புன்னகை என்னாலா? என்னை பார்க்க வந்ததாக இவன் சொல்கிறான்?” என்று உதிரன் சிந்திக்க, நிஷாவும் அங்கே வந்து, பாலா நான் ரெடி பண்ணிட்டேன். “எங்க ரித்து?” என்று கேட்டுக் கொண்டே சிதறிக் கிடந்த பொருட்களை பார்த்தாள்.

உதிரா,” எதுக்கு இப்படி உடைச்சு வச்சிருக்க? என்னாச்சு?” நீயும் வா..நம்ம ரித்தி பிறந்தநாளை கொண்டாடலாம் என்று சொல்ல, விரக்தி சிரிப்புடன் அவளோட ஸ்பெசல் நபர் வந்து விட்டான். அவனுடன் அவள் சென்று விட்டாள். பிறந்தநாளாவது மண்ணாவது என்று கோபப்பட்டான் உதிரன்.

“என்ன சார் சொல்றீங்க? ஸ்பெசல் நபரா? பிரணவ்வா?” பாலா கேட்க, “அவன் பெயரை கூட என்னிடம் சொல்லாத” என்று உதிரன் கத்தினான். நிஷா அதிர்ந்து, “அதுக்குள்ள எதுக்கு வந்தான்?” என்று கேட்டாள்.

“அவள் பிறந்தநாள் தெரிந்து வந்திருப்பான்” உதிரன் கடுப்பாக சொல்ல, “என்னாச்சுடா இப்படி கோபப்படுற?” நிஷா கேட்க, சட்டென நிஷாவை அணைத்து உதிரன் அழுதான். பாலாவும் நிஷாவும் பார்த்துக் கொள்ள, பிரணவ் ரித்திகாவிடம் நடந்து கொண்டதையும் அவள் அமைதியாக அவனுடன் சென்றதையும் கூறினான்.

நிஷா, பாலா இருவருக்கும் பிரணவ்வின் மீது சந்தேகம் எழுந்தது. மகிழ் பேசியது பாலாவை தொந்தரவு செய்ய, அவன் எழுந்து “நான் அவளை பார்த்துட்டு வாரேன்” என்றான்.

இரு, “நானும் வாரேன்” என்று நிஷா உதிரனை விலக்கி, உதிரா பொறுமையா இரு. “நீயும் வாராயா? அவளை பார்த்துட்டு வரலாமா?” நிஷா கேட்க, “நான் எதுக்கு அவள பார்க்க வரணும்?” என்று கோபமாக உறுமினான்.

சரி, நீ இரு. வாரேன் என்று நிஷா கூறி விட்டு பாலாவுடன் சென்றாள். உதிரன் மனம் கொதித்து அமர்ந்திருந்தான். அவன் பெற்றோர் உள்ளே வந்தனர். அவனை பார்த்து அதிர்ந்தனர்.

“நீங்க ஊருக்கு போங்க” என்று உதிரன் சீற்றமுடன் கத்த, இருவரும் அவனை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவன் கேட்கவேயில்லை. இருவரும் வெளியே வந்து ரித்திகாவை பார்க்கலாம் என நினைத்தனர்.

ரித்திகா அறையில் அவள் இல்லை. பிரணவ் மட்டும் தான் இருந்தான்.

“ரித்தியை பார்க்கணும் பாஸ்” என்றான் பாலா.

ஹேய் நிஷா, “எப்படி இருக்க? சூப்பர் பியூட்டியா இருக்க?” என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். நிஷாவை மறைத்து நின்ற பாலா, “எங்க போயிருக்கா பாஸ்?” என்று கேட்டான்.

நிஷா, “உன்னோட அப்பா அழைத்ததாக சென்றிருக்கா” என்று அவன் மேலும் நிஷாவை குறுகுறுவென பார்க்க, “தேங்க்ஸ் பாஸ்” என்றான்.

நிஷா, “பேசவே மாட்டேங்கிற?” அவன் கேட்க, நிஷா பேசும் முன் பாலா இடைபுகுந்து, மேம் விரதம் இருக்காங்க பாஸ்.

“பேசுவதற்கு கூட அசிஸ்டென்ட் வச்சிருக்கியா?” ரித்துவை பார்க்கும் முன் உன்னை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவன் கூற, பாலா பிரணவ்வை முறைத்துக் கொண்டே நிஷாவை வெளியே இழுத்து சென்றான்.