அத்தியாயம் 10

தமிழினியன் நேராக அவனறைக்கு சென்று மிருளாலினியை படுக்கையில் போட்டு அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். அனைவரும் அவ்விடம் வர, அர்சு..உன்னோச ஸ்வீட்டாவோட அம்மா, அப்பா கையை பிடிக்க சொல்லு என்று சுபிதனின் ஆன்மா சொல்ல, அவன் அவர்களிடம் சொன்னான். தமிழினியன் எழுந்தான்.

நேராக அவர்களை மிருளாலினி அருகே வந்து அமர வைத்தான். அவன் அம்மா அப்பாவை பார்த்து, அவளோட கையை பிடிங்க என்றான்.

“எதுக்கு? என்ன பண்ணப் போற? அது..ஏதும் செய்யாதுல்ல?” பயத்துடன் அவர் கேட்க, “இல்லை” என்று தலையசைத்து, சுபி “நாங்க தயார்” என்றான் தமிழினியன்.

சுபிதனின் ஆன்மா அவர்கள் கை மீது கையை வைத்தது. ஏதோ ஒளி போல் அனைவர் கண்ணுக்கும் பிரகாசம் ஒன்று தெரிந்தது.

மிருளாலினி வளர்ந்த விதம், சுபியுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த மகிழ்ச்சியும், துன்பமும் நேரில் பார்ப்பது போல் சுபியின் ஆன்மா அவர்களுக்கு தெரிய வைத்தது.  சுபி முதல் முறை தமிழினியன் கையை தொட்ட போது தமிழினியன் அனைத்தையும் பார்த்திருப்பான்.

சுபிதன் ஆன்மா கையை எடுக்க, வேல்விழி தன் கணவனை அணைத்து அழுதார்.

சுபி இறந்த பின் அவனது வீட்டில் மிருளாலினி பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை. அவன் அண்ணன் அவளை அடைய நினைக்கும் போதெல்லாம் சுபியின் ஆன்மா காப்பாற்றி இருக்கும். ஆனால் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? அவனில்லாமல் அவளால் இயங்கி இருக்கவே முடியாது. இதில் அவன் அம்மாவும் அண்ணியும் வீட்டிலுள்ள வேலை மட்டுமல்லாமல் அவர்களது சொந்த வேலையையும் பார்க்க வைத்து அவளை ஓய்வெடுக்க சிறிதும் நேரமில்லாமல் கொடுமைப்படுத்தி இருந்தார்கள்.

வேல்விழி ஒன்றும் மோசமானவரெல்லாம் இல்லை. அவர் மகன் மிருளாலினியால் மனதளவில் கஷ்டப்பட்டதை நேரிலே பார்த்து இருந்ததால் அவள் மீது கோபம். மற்றபடி எல்லாரிடமும் நன்றாக தான் நடந்து கொள்வார். நட்சத்திராவை காப்பாற்றி தமிழினியன் அழைத்து வந்த போது கூட மறுப்பில்லாமல் அருகிலே இருந்து பார்த்துக் கொண்டார் வேல்விழி. ஆனால் கணவன் இல்லாமல் வாழும் அவள் தன் மகனை பார்க்க ஆரம்பித்து விடுவாளோ? என்ற பயம் இருந்தது. அர்சு பிறந்த போது கிருபாகரன் குடும்பம் இருவரையும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். வேல்விழியின் பயத்தை நட்சத்திராவே தகர்த்தெறிந்து விட்டாள்.

ஒருமுறை நட்சத்திரா தனியாக பிள்ளையுடன் மருத்துவமனை சென்ற போது, தமிழினியன் அவளை அழைத்து செல்லவதாக கூப்பிட்டான்.

இல்ல சார், பையனோட நாம சேர்ந்து சென்றால் பார்ப்பவர் கண்ணுக்கு தவறாக தெரியும். என் கணவன் இறந்திருந்தாலும் என்னால அவரை தவிர யாருடனும் எங்கும் செல்ல முடியாது என்று மறுத்து தனியாகவே சென்றிருப்பாள். அதனால் அவள் குடும்பம் சகஜமாகவே பழகி இருப்பர். கோவிலுக்கு கூட மகனுடன் முதலிலே வந்து விட்டாள். பின் தான் தமிழினியன் குடும்பம் வந்தனர்.

இப்பொழுது வேல்விழி மிருளாலினியிடம் வந்து அமர்ந்தார்.

என்னம்மா, “இப்ப எதுக்கு எங்க பிள்ளை பக்கத்துல வர்றீங்க?” போங்கம்மா.  நான் பார்த்துக்கிறேன் என்று அன்னம் சொல்ல, “கொஞ்ச நேரம் இருக்கேன்” என்று வேல்விழி தன் கணவனையும் மகனையும் பார்த்தார்.

தமிழ் எல்லாரையும் வெளிய அனுப்பிட்டு நீ மட்டும் அவ பக்கத்துல இரு. நான் உங்களிடம் தனியாக பேசணும் என்றது சுபியின் ஆன்மா. அவன் தன் அம்மாவை பார்த்துக் கொண்டே சொல்ல, அனைவரும் வெளியே சென்றனர்.

எப்படியாவது அவளை எழுப்பு, இனி நீங்க என்ன செய்தாலும் என்னால் உங்கள் யாரிடமும் பேச முடியாது என்றது சுபிதனின் ஆன்மா.

தண்ணீரை தெளித்து மிருளாலினியை எழுப்பினான் தமிழினியன். அவள் எழுந்து தன் புடவை முந்தானையால் முகத்தை துடைத்து விட்டு தமிழினியனை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

சார், “நான் எப்படி இங்கே வந்தேன்?” அவள் கேட்க, தமிழினியன் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

மிரு, உன்னோட கையை நீட்டு குரல் கேட்க, கோபமாக முகத்தை திருப்பி கையை கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

“கோபமா?” நான் சொல்வதை செய். ஒரு மணிநேரம் தான் இருக்கு. இதற்கு மேல் என்னால யாரிடமும் பேச முடியாது என்றது சுபிதனின் ஆன்மா.

“அர்சுவால் உன்னை பார்க்க முடியாதா?” மிருளாலினி கேட்க, அவனால் நான் இவ்வுலகில் இருக்கும் வரை பார்க்க, கேட்க முடியும்.

“நீ என்னுடன் இருந்தது போல் நட்சுவுடன் இருந்த தான? அவள் எப்படி மறந்தா?” என மிருளாலினி கேட்க, தமிழ் அவளை பார்க்கும் போது மயங்கி விழுந்தது தான அவனுக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்னதாக நடந்த விபத்தில் அவளை காப்பாற்றினேன். என் ஆன்மா வெளி வந்த சமயம் நடந்தது என்பதால் என்னால் என்னோட சக்தியை கட்டுப்படுத்த முடியலை. தெரியலை. அவளை தள்ளி விட்டு அவள் பின்பக்க தலையில் அடிபட்டு விட்டது. இரத்தம் வந்து கட்டுடன் தான் இருந்தாள். ஆனால் அவளோட முக்கியமான தருணமான மருத்துவரை பார்க்க சென்றதிலிருந்து அனைத்தையும் மறந்து விட்டாள்.

சொல்லப் போனால் நாம் நரசிம்மனாக நடிக்க வைத்தவனை உண்மையிலே கணவனாக எண்ணி வாழ ஆரம்பித்து விட்டாள். அவளது கைப்பையில் இருந்த நம்முடன் அவன் எடுத்த புகைப்படம். சிம்மாவிற்காக சித்தரிக்கப்பட்ட, மாலையுடனான அவனுடன் திருமணம் என அவள் திருமணமானவள் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றது சுபிதனின் ஆன்மா.

“என்ன சொல்றீங்க? அவளுக்கு திருமணமாகலையா?” காதலித்து திருமணம் செய்தவன் போலீஸ் என்றும் அவன் இறந்து விட்டான் என்று தான் எங்களிடம் சொன்னாள். அவளை பார்த்த போது அடிக்கடி எதையோ மறந்துட்டேன்..மறந்துட்டேன்னு சொன்னதால் நானும் இரு மாதத்திற்கு ஒரு முறையாவது அவளை செக் பண்ணுவேன். ஆனால் அவள் ஆழ்மனதிற்குள் மட்டும் என்னால போக முடியலை என்றான் தமிழினியன்.

உன்னால அவள் ஆழ்மனதை மட்டுமல்ல சிம்மாவின் ஆழ்மனதையும் படிக்க முடியாது.

உன்னை கூட என்னால உணர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. ஏன் அவர்களை செய்ய முடியாது? தமிழினியன் கேட்டான்.

“இறைவனால் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்றது சுபிதனின் ஆன்மா.

“தேர்ந்தெடுப்பதா? இறைவனா?” மிருளாலினி கேட்க, என்னவென்று என்னால முழுதாக கூற முடியாது. உனக்காக மட்டும் நான் வரலை மிரு. இங்கு பல பேரை காக்க தான் ஈசன் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்.

“எனக்காக நீ வரலையா?” மிருளாலினி கண்ணீருடன் கேட்டாள்.

நீ நினைப்பது போல் நடக்கும் அனைத்தும் சாதாரணமில்லை. நான் இவ்வுலகில் இருக்க தகுதி அற்றவன். அப்படிப்பட்ட என்னை ஈசன் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம்.

என்னுடைய முதல் வேலை. நீ தான். உன்னுடைய பாதுகாப்பு. அது நிச்சயமாக தமிழினியனால் தான் கிடைக்கும்.

“ஏன்? என் அருகே நீ இருக்க மாட்டாயா? பார்க்கவேண்டாம். பேசவேண்டாம். பக்கத்திலாவது இருக்கலாம்ல்ல?” என்று அழுது கொண்டே மிருளாலினி கேட்டாள்.

முடியாது. எனக்கு இன்னும் வேலை இருக்கு. நம் சம்பந்தவர்களுக்காக தான்.

இருக்கட்டும். தாராளமாக உன் வேலையை செய். என் அருகிலே இருந்து செய்ய முடியாதா?

மிரு, சிறுபிள்ளை போல் அடமா பேசாத. நான் இறந்துவிட்டேன். இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் வந்தது என் வேலைக்காக தான்.

ஓ.. “உன் வேலைக்காக தான வந்த?” நான் தான் உன்னை தொந்தரவு செய்கிறேன்ல்ல. நீ சொன்னது போல் நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் நீ தேர்ந்தெடுத்தவரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் என் அம்மாவிடம் போறேன். அவங்க சொல்றவரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் சினமுடன்.

“பைத்தியமாடி நீ?” நான் சொல்ல வருவது உனக்கு புரியலைல்ல என்று தமிழ் அவளோட கையை பிடி என்று ஆன்மா சொல்ல, முடியாது என்று படுக்கையிலிருந்து இறங்கினாள் மிருளாலினி.

என்னோட ஒரு வேலை சரியாக முடியவில்லை என்றால் என்னால் முக்தி பெற முடியாது. என்னால் இறைவனடி சேர முடியாது. என் ஆன்மா ஓரிடத்தில் மாட்டிக் கொள்ளும் வெளியே வர முடியாது. அதனால் மரணத்தை விட கொடுமையான வலி தான் ஏற்படும். உனக்கு அது தான் ஆசை என்றால் நான் இப்பொழுதே ஈசனிடம் சென்று, இதிலிருந்து விலகி என் கொடுமையான வலியை அனுபவிக்கிறேன் என்று பேசாமல் அமைதியானது.

சுபி..சுபி..என்று தமிழினியன் சத்தம் கொடுக்க, சற்று நேரம் அமைதியாக இருந்த மிருளாலினி தமிழினியனை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்த்தான்.

சுபி, “நீ சும்மா தான சொல்ற? இங்க தான இருக்க?” அவள் கேட்க, பதிலில்லாமல் இருந்தது. தமிழினியன் கதவை திறந்து வெளியே வந்தான். சிம்மாவும் அவர்களிடம் ஓடி வந்தான்.

சிம்மா மிருளாலினியை பார்த்து, “சுபி போகவதாக சொல்றான். உன்னிடம் ஏதும் சொன்னானா?” அவன் கேட்க, “போகப் போறனா? எதுக்கு?” நட்சத்திரா கேட்டாள். அவளை தவிர்த்து மிருளாலினியை பார்த்தான்.

“சுபி நிஜமாகவே போயிட்டியா?” என்று மிருளாலினி அழுதாள்.

போகலை..சொல்லு, “நான் போகணுமா? நான் சொல்வதை நீ செய்கிறாயா?” சுபியின் ஆன்மா கேட்க, பட்டென “கேட்கிறேன்” என்று ஒத்துக் கொண்டாள்.

தமிழ், உன் அம்மா அப்பாவிடம் ஒரே ஒரு வேண்டுகோள். எனக்கு பத்து நிமிடம் மட்டும் உன் உடம்பு வேணும் என்று தமிழினியனிடம் கேட்க, சிம்மா அதிர்ந்து, “எதுக்கு கேக்குற?” என்று பதறினான்.

நான் அவனை ஏதும் செய்யமாட்டேன். என்னால நல்ல உள்ளத்தை ஏதும் செய்ய முடியாது சிம்மா. என்னோட மிருவுக்கு சில விசயங்களை புரியவைக்கணும் என்றது சுபிதனின் ஆன்மா.

தமிழினியன் அவன் அம்மா, அப்பாவிடம் சொல்ல, அவர்கள் பதறினார்கள். சிம்மாவும் அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். அரைமனதாக ஒத்துக் கொண்டனர் அவர்கள்.

உன்னோட அறைக்கு மிருவுடன் வா தனியே என்றது ஆன்மா.

இருவரும் உள்ளே சென்றனர். மிரு கையை நீட்டு என மிருளாலினி கை மீது தமிழினியன் கையை வைத்து மந்திரம் ஒன்றை சுபிதனின் ஆன்மா சொல்லிக் கொண்டே அவன் கை மீது கையை வைத்தது.

சுபிதனும் தமிழினியனும் சந்திக்கும் முன்னதாகவே கிராமத்து பொண்ணாக பள்ளிக்கு வந்த மிருளாலினியை முதலில் சந்தித்தது தமிழினியன். அவளது அழகான முகம், மனது, குழந்தைத்தனமான பேச்சு எல்லாம் அவனை ஈர்த்து அவளை காதலித்தான்.

இடையில் வந்தான் சுபிதன். தமிழினியனின் காதல் தெரிந்து அவர்களது பிரச்சனையில் சுபிதன் தமிழினியன் காதலை இடை கொண்டு வந்தான். என்னால முடியாது என்று தமிழினியன் மறுக்க, உன்னோடது காதலே இல்லை என்று தமிழினியன் காதலை கொச்சை படுத்தினான்.

கோபமான தமிழினியனும் தன் காதலை பணயமாக வைத்து ஓவியப் போட்டியில் கலந்து தோல்வி கண்டு, தன் காதலியை துறந்தான். ஆனால் சுபிதன் எல்லை மீறாமல் மிருளாலினியுடன் தோழியாகவே பழகி வந்தான்.

காதலியையும் காதலையும் துறந்த தமிழினியன் எப்போதும் போல் தூரத்தில் இருந்தே அவளை ரசித்தான். ஒருநாள் மிருளாலினி தன்னுடன் படிக்கும் ஒரு பொண்ணிடம் சுபிதனிடம் காதலை கூறப் போவதாக சொல்ல தமிழினியன் உடைந்து போனான். அவள் காதலை அவனிடம் கூறக் கூடாது என்று தமிழினியன் நேராக மிருளாலினியை நோக்கி வந்து கொண்டே தன் கையில் கூரான காம்பஸை எடுத்து அவள் அருகே வந்தவுடன் அவனது மணிக்கட்டிலேயே கிழித்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினான். அன்று அவனை காப்பாற்றியது மிருளாலினியும் அவள் தோழியும் தான். மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கேயும் அவர்களுடைய பள்ளி ஆசிரியை ஆசிரியருடன் அவளும் இருந்தாள். அவன் கண்களில் அவளை தவறவிட்ட ஏக்கம். அவன் விழித்தவுடன் அவள் நிம்மதியாக கிளம்ப, வேல்விழி பதறிக் கொண்டு வந்தார்.

அவருக்கு விசயம் தெரிந்து தன் மகன் அவளை மறக்க செய்ய வேறொரு பள்ளியில் அவனை சேர்த்து விட்டார். அதிலிருந்து அவனை அவனே தனிமை படுத்தி இருப்பான். கேட்பவருக்கு பதில் மட்டும். மற்றபடி யாரிடமும் ஏதும் பேசுவதில்லை.

அப்படியொரு நாள் கல்லூரி சென்று அவன் வரும் போது சுபிதனும்  மிருளாலினியும் ஒன்றாக காதலித்து சுற்றுவதை பார்த்து மேலும் உடைந்து விட்டான். அதனால் பொண்ணுங்க பக்கமே அதிகம் போவதேயில்லை. அவன் வாழ்க்கையில் பொண்ணாய் உயிராய் நேசிப்பதும் நேசித்ததும் அவன் அம்மா வேல்விழியும், மிருளாலினியும்.

அவன் அம்மா அவன் வலியை உணர்ந்தாலும் அவளிடம் காதலை தன் மகன் கூறவில்லை என்று அவன் மீது கோபம் வரவில்லை மாறாக மிருளாலினி மீது சினத்தை வளர்த்துக் கொண்டது அத்தாயுள்ளம்.

அதன் பின் இன்று தான் அவளை கோவிலில் பார்த்திருக்கிறான். அவளின் சோர்வான தோற்றத்தில் அவளை பார்த்துக் கொண்டே அவன் கண்கள் சுபிதனை தேடி இருக்கும். அவன் இல்லை என்றதும் தான் அதிர்ந்து அவளை கவனித்தான்.

கல்லூரியில் நட்சத்திராவை பார்த்து ஈர்ப்பு வந்திருக்கும் சுபிதனுக்கு. ஆனால் அவன் அவளிடம் நெருக்கம் காட்ட மொத்தமாக மிருளாலினி விலகினாள். அவள் விலக்கத்தை தாளாத பின் தான் நானும் அவளை காதலிக்கிறேன் என்று சுபிதன் உணர்ந்து அவளிடம் தன் காதலை கூறி பின் நட்சத்திரா உதவியுடன் திருமணம் செய்தனர்.

அனைத்தையும் பார்த்து கண்கலங்கி படுக்கையில் அமர்ந்தாள் மிருளாலினி.

மிரு, “இப்ப என்ன சொல்ற?” என் காதலை விட தமிழ் காதல் தான உயர்ந்தது. “நீ திருமணம் செய்ய இதை விட முக்கியமான காரணம் தேவையா?”

“எனக்கு இவரை நினைவிலே இல்லையே?” என்றாள்.

சரி விடு, தமிழ் கொஞ்ச நேரம் நான் என்னோட மிரு மடியிலே படுக்கணும். உங்க உடல் வேணும் என்று கேட்ட நிமிடமே “எடுத்துக்கோ” என்றான் தமிழினியன். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் வாரேன். பத்து நிமிடம் தான் என்றான்.

ஒரு நிமிசம், “உங்களுக்கு பயமா இல்லையா?” மிருளாலினி தமிழினியனிடம் கேட்டாள்.

முதலில் பயம் இருந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. “அவனை பற்றி எனக்கு தெரியாதா?” என்னிடம் உன்னை காதலிப்பதாக சொல்லி தான் போட்டியே செய்தோம். ஆனால் பின்னும் உன்னை காதலிப்பது போல் நடித்து என்னை ஏமாற்றி உன்னை நிஜமாகவே காதலித்து திருமணம் செய்திருக்கான்.

இனி அவன் ஏமாற்றினால் அது என்னை ஏமாற்றுவதாக இருக்காது. உன்னை ஏமாற்றுவதாக இருக்கும். உன்னை அவன் ஏமாற்ற மாட்டான் என்று நேரமாகுது சீக்கிரம் வா..பேசிட்டு வா. நானும் உன்னிடம் பேசணும் என்றான் தமிழினியன்.

“இவனுக என்னை இந்த அளவிற்கு காதலிக்கிறானுகளா?” என்று மிருளாலினி விழித்துக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் சுபிதனின் ஆன்மா தமிழினியன் உடலுக்குள் சென்றது.

மிரு அவன் அழைக்க, தமிழினியனை பார்த்தாள் மிருளாலினி.

சுபி, “அவனெங்கே?” பதட்டமானாள் மிருளாலினி, அவன் புன்னகையுடன் அவன் ஆழ்மனதில் அவனுக்கு அவனே கட்டு போட்டுக் கொண்டிருக்கிறான்.

“கட்டா?”

ஆமா, அவனும் உன்னை காதலித்தவன் தானே! நம்முடைய ரொமான்ஸை பார்க்க அவனுக்கு கஷ்டமா இருக்கும்ல்ல என்றது சுபிதனின் ஆன்மா.

அப்படின்னா, “நீ இவர் உடலிலே தங்கிப்பாயா? உன்னால இருக்க முடியுமா?” அவள் கேட்க, மிருளாலினியை அமர வைத்து அவளது மடியில் தலை வைத்து படுத்தான்.

மிரு, “லவ் யூ” என்றது சுபிதனின் ஆன்மா.

ம்ம்..என்றாள்.

“அவ்வளவு தானா? நான் உன்னருகே வரணும்ன்னு குதியா குதிச்ச?” இப்ப உன்னோட சுபிதன் தான் உன் மடியில் படுத்திருக்கேன்.

தெரியல சுபி. ஒருமாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு.

நான் போயிருவேன். “என்னிடம் பேச தோணலையா? இல்லை தமிழ் உடலில் இருப்பதால் உன்னால் என்னை நெருங்க முடியலையா?” சுபிதனின் ஆன்மா கேட்டது.

அப்படியில்லை சுபி. எனக்கு கஷ்டமா இருக்கு.

“யாரை நினைத்து..?”

அவள் கண்ணீருடன் “குழந்தை” என்று அழுதாள். ஆழ்மனதில் இருந்தாலும் இருவரையும் தமிழினியனால் கவனிக்க முடிந்தது.

ம்ம்..நம் குழந்தை. நீ தமிழை திருமணம் உடனே செய்தாக வேண்டும் இல்லை. நம் குழந்தை உனக்கு கிடைக்காது என்றான்.

என்ன? அவள் திகைத்து கேட்க, எழுந்து அமர்ந்து அவள் கையை பிடித்த சுபியின் ஆன்மா..ஆமா..என்னுடைய வேலையும் எந்த இடறும் இல்லாமல் முடிந்தால் உன் வயிற்றில் நான் உங்கள் குழந்தையாக பிறப்பேன். இல்லையென்றால் தான் நான் கூறியது எனக்கு நடக்கும்.

“நிஜமாக தான் சொல்றீயா சுபி?” என்று எமோஸ்னலாக அவனது கன்னத்தை தொட்டாள். இருவரும் ஒன்றி முத்தமிட, அவன் ஆன்மா வெளியே வர அவனிருந்த இடத்திற்கு தமிழினியன் வந்தான். இருவரின் இதழ்களும் உரச அவன் பதறி நகர்ந்தான். ஆனால் மிருளாலினி அவனுக்கு இதழ்முத்தம் கொடுத்தாள். தமிழினியன் கண்ணிலிருந்து சொட்டு நீர் ஆறாய் ஓடியது. வேகமாக அவள் விலக, தமிழினியன் அவளை அணைத்தான்.

இதை தான் எதிர்பார்த்தேன் தமிழ். “சொல்லு உன் காதலை இப்பவே சொல்லு” சுபிதனின் ஆன்மா சொல்ல, மிருளாலினிக்கு ஒருமாதிரி ஆனது. சுபிதன் சத்தம் கேட்கவும் அவனும் விலகினான்.

“நீ சொல்ல மாட்டேல்ல?” என்று சுபிதனின் ஆன்மா கத்த, இருவரும் காதை மூடினர்.

பயங்கரமாக அறைக்குள் காற்று வீச, மிருளாலினி அவளாகவே தமிழினியன் பின் வந்து அவனை கட்டிக் கொண்டு கண்ணை மூடி நின்றாள். மெதுவாக காற்றின் வேகம் குறைய, “மிரு கண்ணை திறந்து பாரு” என்ற சுபிதனின் ஆன்மா. தமிழினியனின் படுக்கை விரிப்பை அகற்றி தூக்கி போட்டது. அதன் பின் முழு உருவமாக வரையப்பட்ட மிருளாலினியும் அழகான புன்னகையிலான கலரான ஓவியம் இருந்தது.

அதை பார்த்து அதனிடம் ஓடிச் சென்று படுக்கை அருகே அமர்ந்து அவளையும் ஓவியத்தையும் தொட்டு பார்த்தாள்.

நாம் இருவரும் வாழ்ந்து விட்டோம். ஆனால் மிரு இவன் உன்னுடன் இப்படி உன் புகைப்படத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றது சுபிதனின் ஆன்மா.

“என்ன?” என்று அவள் தமிழினியனை பார்க்க, “அவன் புண்பட்ட மனம் அவள் கண்ணுக்கு இன்று புலனானதே! தன்னை பற்றி கேவலமாக நினைத்து விடுவாளோ?” என்று அவன் மண்டியிட்டு கதறி அழுதான்.

இப்ப கூட உனக்கு அழ தான தெரியுது. “சொல்லுடா? உன்னோட காதலை அவளிடம் சொல்லு” என்று சுபிதனின் ஆன்மா கத்தியது. மிருளாலினி ஓர் ஓரமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

சுபிதனின் சத்தம் கேட்கவில்லை. மிருளாலினி தமிழினியனின் அழும் சத்தம் மட்டுமே அவ்வறையில் ஒலித்தது.

கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். தமிழினியன் முகத்தை துடைத்து விட்டு கதவை திறந்தான். அர்சு உள்ளே ஓடி வந்தான். மிருளாலினி அருகே வந்து, மேசையின் அடியிலிருந்து எதையோ இழுக்க, தமிழினியன் பதறினான். அதிலிருந்து ஒரு பாக்ஸை எடுத்து மிருளாலினியிடம் அர்சு நீட்ட, அமர்ந்திருந்த அவள் அதை வாங்க, “திறக்காத” என்று அவளிடம் நெருங்கி வந்து கொண்டிருந்தான் தமிழினியன்.

அவள் திறந்து அதிலிருந்த தாலியை எடுத்து பயத்தில் அதை தூக்கி போட்டாள். கீழே விழாமல் தமிழினியன் பிடிக்க சுபிதனின் ஆன்மா தன் சக்தியால் மிருளாலினியை நோக்கி தமிழினியனை தள்ளியது. அவன் நேராக அவள் மீது விழ இருந்தவனது சட்டையை பிடித்து நிறுத்தி சக்தியால் அவனை அசையவிடாமல் செய்தது.

அர்சு.. சுபிதனின் ஆன்மா சத்தமிட, தாலியை எடுத்த அர்சு தமிழினியன் கையிலிருந்த தாலியை அவனது இருகைகளிலும் மிருளாலினி கழுத்தில் அணியுமாறு பிரித்து வைத்து விட்டான்.

இப்பொழுது சுபிதனின் ஆன்மா சக்தியை அகற்றி அவன் சட்டையை விட நேராக அவன் கையிலிருந்த தாலியை மிருளாலினி கழுத்தில் போட்டு விட்டு அவனது இரு கைகளையும் சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் ஊன்றி நின்றான்.

அதில் கண்ணாடி அவன் கையை கிழித்து பதம் பார்த்ததில் வந்த இரத்தம் மிருளாலினியின் பிறைநெற்றியில் திலகமாய் படிந்தது.

இதை பார்த்த அனைவரும் அதிர்ந்து நின்றனர். அவள் கழுத்தில் விழுந்த தாலியை அவள் பார்த்துக் கொண்டே கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கையிலிருந்த இரத்தத்தையும் அவளது நெற்றியில் திலகமாய் பட்ட இரத்தத்தையும் அதிர்ந்து தமிழினியன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது நெற்றியிலிருந்து இரத்தம் வடிய அதை தொட்டு பார்த்து விட்டு கண்ணீருடன் எழுந்தாள்.

“மிரு- தமிழ் திருமண நல்வாழ்த்துக்கள்” என்றது சுபிதனின் ஆன்மா. அவள் கண்ணீரை துடைத்து விட்டு வேகமாக வெளியே ஓடி நட்சத்திரா வீட்டிற்கு சென்று அவளறையை பூட்டிக் கொண்டாள். கண்ணீர் ததும்ப தன் மிருவை பார்த்துக் கொண்டிருந்தது நட்சத்திரா வீட்டில் சுபிதனின் ஆன்மா.

“இனியா” என்று வேல்விழி பதறி தன் மகன் கையில் வழிந்து கொண்டிருந்ததை இரத்தத்தை பார்த்து அவனறையில் இருக்கும் முதலுதவி பெட்டியை திறந்தார். அவன் கொஞ்சமும் அதை கண்டுகொள்ளாமல் வெளியே ஓடி வந்தான்.

நட்சத்திரா அறைக்கதவை தட்டிக் கொண்டிருக்க, தமிழினியனும் அவன் அப்பா கிருபாகரனும் உள்ளே வந்தனர்.

சார், நீங்க முதல்ல உங்க கையை பாருங்க. நான் அவளை பார்க்கிறேன் என்றாள் நட்சத்திரா.

“எப்படி பார்ப்ப? இப்படி எவ்வளவு நேரமா கத்துவ?” சிம்மா கேட்டுக் கொண்டே கதவை உடைக்க முனைந்தான். அதற்குள் சுபிதன் வீட்டிலிருந்து எடுத்து வந்த லக்கேஷூடன் வெளியே வந்தாள் மிருளாலினி.

மிரு, “இந்த நேரத்துல எங்க போகப் போற?” மணி பன்னிரண்டாகப் போகுது நட்சத்திரா பதட்டமானாள். அனைவரையும் பார்த்து விட்டு தமிழினியன் கையை பார்த்தாள்.

நீ இதை பெரியதாக எடுத்துக்காத. எங்காவது விசாரித்து கழற்ற பார்க்கலாம் என்று தமிழினியன் சொல்ல, அவனருகே வந்து அவன் கன்னத்தில் அறைந்தாள்.

மிரு..சுபிதனின் ஆன்மா சத்தமிட, அவள் கேட்காதது போல் “இது என்ன கயிறா?” தூக்கி எறிய.. என்று தமிழினியனின் மேற்கையை பிடித்து அவன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

வெளியே கண்ணீருடன் முதலுதவி பெட்டியுடன் வேல்விழி கண்ணீருடன் நின்றார். அவரிடம் அவனை நிற்க வைத்து, முதல்ல மருந்தை போட்டு விடுங்க என்றாள்.

“நீ எங்கம்மா போற?” அவர் கேட்க, ஏதும் என்னிடம் நீங்க சொல்லணுமா? என்று வேல்விழியிடம் மிருளாலினி கேட்டாள்.

இல்லம்மா, “இனியா சொன்னது போல் கழற்றிடாதம்மா” என்றார் பதட்டமாக.

“என்ன செய்யலாம்?” அவள் கேட்க, நீ எங்க வீட்டுக்கே வந்துரு. நாங்க உன்னை பார்த்துக்கிறோம் என்றனர்.

“என்ன சொல்றீங்க?” உங்க பையன் என்னால நிறைய கஷ்டப்பட்டிருக்கார். அதுவும் நான் ஏற்கனவே திருமணமானவள். “இது எப்படி சரியாக வரும்?” என்று தமிழினியனை பார்த்தாள். அவன் கண்ணீருடன் அவளை பார்த்தான்.

“இப்ப மருந்தை போடுறீங்களா? இல்லையா?” என்று அவள் கேட்க, நீ போட்டு விடலாம்ல்லம்மா என்று அன்னம் சொன்னார்.

“நானா?” இது தெரியாமல் தான என் கழுத்துல விழுந்தது. இவரால் தான விழுந்தது. “இவர் தான் ஏதோ செய்யப் போவதாக சொல்றாரே! நான் எப்படி போட்டு விடுறது?” என்று கேட்க, அனைவரும் ஆச்சர்யமாக அவளை பார்த்தனர்.

பின் ஏதும் பேசாமல் வேல்விழியை மிருளாலினி உறுத்து பார்க்க, அவர் தன் மகனுக்கு மருந்தை போட ஆரம்பித்தார். இவள் லக்கேஜை இழுத்துக் கொண்டு தமிழினியன் வீட்டிற்குள் சென்று அவனறைக்குள் வைத்து விட்டு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று கதவை அடைத்தாள். அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

வேல்விழி மருந்தை போட்டு முடிக்க உடனே கதவை திறந்து வெளியே வந்தாள் மிருளாலினி.

“நான் உங்கள் அறையில் படுத்துக்கவா?” என்று வேல்விழியிடம் கேட்டாள். அவன் அம்மாவும் அப்பாவும் விழித்தனர்.

நான் பேசணும். “உள்ள வா” என்று தமிழினியன் அவளை அழைத்தான். இருவரும் உள்ளே செல்ல, அர்சு கையில் செயினுடன் வந்து, மிருளாலினியிடம் கொடுத்து “சாரி” என்றான். அவள் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

அவன் சென்றவுடன் அவளிடம் கதவை தாழிட சொன்னான் தமிழினியன். அவளும் அவ்வாறே செய்தாள்.

“நீ என்ன பேசுனன்னு புரிந்ததா?”

“என்ன பேசினேன்?” சரியாக தான் பேசினேன். தாலி உங்க கையால தான் என் கழுத்தில் விழுந்தது. எல்லாம் அவனோட திட்டமாக இருந்தாலும் என் கழுத்தில் விழாமல் தவறி கூட இருந்திருக்கலாம். ஆனால் தவறவில்லை. “அவன் தான் தெளிவா சொல்லீட்டானே!” அவன் என் வாழ்க்கையில் இல்லைன்னு..அவன் இல்லைன்னாலும் தனியா நான் இருந்திடுவேன் “என் கழுத்தில் இத்தாலி விழாமல் இருந்திருந்தால்” என்று அவனை பார்த்தாள்.

“தாலிக்காக மட்டும் எப்படி வாழ முடியும்?”

“ஏன் சார்? உங்களை போல் வாழ என்னால முடியாதா?” என்றாள் குத்தலாக.

இல்லை, நான் என்று அவனது படுக்கையை பார்த்தான். அதில் இருந்த புகைப்படம் மாறாமல் இருந்தது. அதை பார்த்துக் கொண்டே அவளை பார்த்தான்.

சாரி, உனக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து என் படுக்கையில்…என்று குற்றத்தை ஏற்று அவளை பார்த்தான்.

“எதுக்கு நின்று கொண்டே பேசணும்?” எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. “நாம உட்கார்ந்து பேசலாமே?”

“உட்கார்ந்து பேசணுமா?” என்று அவளை பார்த்தான். அவள் சோர்வுடன் அமர்ந்தாள். அவனும் அமர்ந்தான்.

சரி, “எப்பொழுதிலிருந்து என்னை லவ் பண்றீங்க?”

அவன் தலைகவிழ்ந்து “சாரி” என்றான்.

“நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன சொல்றீங்க?”

அவன் அவளை பார்த்து, “நான் தான் உன்னிடம் பேசணும்ன்னு சொன்னேன். நீ என்னை கேள்வி கேட்கிறாய்?”

அவள் சினமுடன்,” நான் தான் கேட்பேன்” என்றாள்.

இல்லை, சுபி என்று தமிழினியன் அறையை சுற்றி பார்க்க, அவன் இங்க தான் இருக்கான். நான் என்ன சொல்லப் போறேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான். அவனுக்கு தான் நேரமில்லையே! முதலில் அவனிடம் பேசிட்டு வாரேன் என்று திரும்பினாள்.

சுபி..அழைத்தாள்.

சொல்லு மிரு.

நான் உனக்காக காத்திருப்பேன். எனக்கு மகனாக பிறக்கணும்ன்னு நீ தான் சொன்னேல்ல. நான் நீ சொன்னதை ஏத்துக்கிறேன். உன் மீதான என் காதல் என்னை பைத்தியமாக்கி விட்டது. அதான் அம்மா, அப்பாவையும் மற்ற யாரையும் யோசிக்காமல் இருந்திருக்கேன். என்னை தெளிய வச்சு மற்றொரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்ட. “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள். தமிழினியன் திகைத்தும் மகிழ்வுடனும் அவளை பார்த்தான்.

தமிழ், மிருவை நல்லா பார்த்துக்கோ. “உன்னுடைய காதல் இனி உன் வசம் தான்”. இனி நீ எதற்காகவும் உன்னை நீயே காயப்படுத்திக்காத. மிரு, அவன் எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டான். பார்த்துக்கோ. இருவரும் சந்தோசமா இருங்க. “ஆல் தி பெஸ்ட்” என்று சுபிதனின் ஆன்மா குரல் ஒடுங்கி காணாமல் போனது.

சற்று நேரம் அமைதி நிலவியது. தமிழினியன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். அவள் அதை பார்த்து விட்டு, நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க. என்னால சுபியை முழுதாக மறக்கமுடியாது. அதுக்காக உங்களை காதலிக்க மாட்டேன்னு சொல்லலை. உங்கள் மீது காதல் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் உங்களுடன் வாழ முடிவெடுத்துட்டேன். அவன் பொருட்கள் இங்க தான் இருக்கும் என்று அவள் கையிலிருந்த செயினை பார்த்துக் கொண்டே எழுந்து அவள் எடுத்து வந்த சுபிதன் பொருட்களுடன் அதையும் வைத்து அதனை மூடி விட்டு, அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

“எனக்கு நீங்க எத்தனை வருட சீனியர்?”

“மூன்று வருடம்”

“அப்படின்னா வயது முப்பதுக்கு மேலா?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தான்.

“நீங்க டாக்டரா இருக்கீங்க? ஹை கிளாஸ் பர்சனா இருக்கீங்க? அம்மா, அப்பாவும் அன்பானவர்கள். உங்கள் பின் எந்த பொண்ணும் வரலையா?”

வருவாங்க.

“அப்புறம்?”

“எதுக்கு கேக்குற?”

ஆமா, “சுபி மாதிரி உங்களுக்கு முதல் காதலோ? இல்லை என்னை பார்த்த பின்னோ வேற பொண்ணு மேல காதல் வரவேயில்லையா?”

என் முதலும் நீ தான்.. கடைசியும் நீ தான்.

“அப்ப எந்த பொண்ணுமே இல்லையா?”

இல்லை.

“நிஜமாகவா?”

ஆமா, ஆனால் என்னோட ப்ரெண்டு ஒரு பொண்ணு என்னை காதலித்தாள். அவள் எங்களது நண்பனை தான் திருமணம் செய்து கொண்டாள். அவர்களுடன் தான் வேலை பார்க்கிறேன் என்றான்.

ம்ம்..”உங்களுக்கு அந்த பொண்ணு மேல விருப்பம்?” என்று கேட்டாள்.

இல்ல..இல்ல..நான் அதிகம் பொண்ணுங்களுடன் பேச மாட்டேன்.

ம்ம்..”சரி” என்று அவனை நெருங்கி அமர்ந்தாள் மிருளாலினி.

நீ கொஞ்சம் தள்ளி அமரேன்.

“ஏன்?” என்று அவனை பார்த்தாள்.

அது வந்து..என்று அவன் தயங்கினாள். அவன் கையை பிடித்து வேல்விழி கட்டிட்ட இடத்தை ஊதி விட்டாள் மிருளாலினி. அவன் அவளை பார்த்தான்.

“எதுக்கு பாக்குறீங்க?”

“சுபிக்காக அப்படி அழுத? இப்ப தாலிக்காக தான் என்னை கல்யாணம் செய்வது போல் பேசுறீயா?”

இல்லை. எனக்கு தாலி சென்ட்டிமென்ட் இருக்கு. அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா? எனக்கு உங்க காதல் புடிச்சிருக்கு.

அவன் கண்கலங்க, அவனை திருப்பிய மிருளாலினி, எனக்காக இப்படி ஒரு ஜூவன் இருக்குன்னு முன்னாடியே தெரிந்திருந்தால்..அதை விட சுபியை பார்க்கும் முன் நீங்கள் என்னை காதலித்தது தெரிந்தால் உங்களது காதலை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன் என்று சொல்ல, அவளை அணைத்து தமிழினியன் அழுதான்.

டாக்டர் சார், முதல்ல வெளிய போகணும் இல்ல நம்மை தப்பா நினைச்சுட்டு இருப்பாங்க என்றாள் மிருளாலினி.

அவன் எழுந்து கதவை திறந்தான். எல்லாரும் இருவரையும் பார்க்க, கண்ணீருடன் அவன் அம்மாவை அணைத்து அழுதான் சிறு பிள்ளையாக தமிழினியன்.

“என்னாச்சுடா? நல்லா தான பேசுனா? உன்னை மறுபடியும் நிராகரித்து விட்டாளா?” வேல்விழி வருத்தமாக கேட்டார்.

அவரை விலக்கி, அம்மா..அவளுக்கு என்னோட காதல் பிடிச்சிருக்குன்னு சொல்லீட்டா..

சுபி..என்று சிம்மா அழைக்க, சத்தமேயில்லை. ஆனால் அர்சு ஓரிடம் பார்த்துக் கொண்டிருக்க, அவன் இருக்கிறான் என்று எல்லாருக்கும் புரிந்தது.

“அப்ப கல்யாணம் தான?” நட்சத்திரா மிருளாலினி அருகே சென்று கேட்டாள்.

ம்ம்..”பெரியவங்க விருப்பம்” என்று வேல்விழியை பார்த்தாள்.

அடியேய், இதை முதல்ல அம்மா, அப்பாவிடம் சொல்லு. ரொம்ப சந்தோசப்படுவாங்க என்றாள் நட்சத்திரா.

“இன்னும் அர்சு தூங்கலை?” என்று மிருளாலினி கேட்க, அவன் இப்படி தான் ஒரு நேரம் சீக்கிரம் தூங்கிடுவான் இல்லை விழித்திருப்பான்.

சிம்மாவை பார்த்து, ரொம்ப நேரமாகிவிட்டது. “நீயும் நட்சத்திரா வீட்டிலே தங்கலாமே?” என்று கேட்டாள் மிருளாலினி.

அம்மா, அப்பா இங்க இருக்கட்டும். நான் என்னோட இடத்திற்கே போகிறேன் என்று சொல்லிக் கொண்டே சிம்மா நட்சத்திராவை பார்த்தான். மிருளாலினியும் தமிழினியனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அவர்களுக்கு சுபி சொன்னானே? இருவரையும் சேர்த்து வைக்க சொல்லி..அதை நினைத்துக் கொண்டே பார்க்க,

இப்படியே பார்த்துட்டு இருக்காம போய் தூங்குங்க. மத்ததை நாளை பார்த்துக்கலாம். அம்மாடி நாளை உன் அம்மா, அப்பாவை பார்க்க போகலாம் என்றார் கிருபாகரன்.

“சரிங்க மாமா” என்று அவள் வேல்விழியுடன் செல்ல, நட்சத்திரா வீட்டிற்கு அர்சுவுடன் அன்னம், பரிதி சென்றனர். சிம்மா அவன் காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்றான்.