அத்தியாயம் 8

“அம்மா” என்று திடீரென அலைபேசியை கீழே போட்டு கத்தினாள் ரித்திகா.

ஏய், “என்னாச்சு?” நிஷாவும், அலைபேசியில் சிம்மாவும் பதறினர்.

அண்ணா, என்று போனை எடுத்து திக்கிக் கொண்டே உன்னருகே ஏதோ என்று மீண்டும் அலைபேசியை பார்த்தாள். அவளுக்கு ஏதோ உருவமாக மட்டும் தெரிந்தது.

மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.

அத்த, “அங்கிளை பார்த்து எதுக்கு பயப்படுற?” அர்சு கேட்க, சிம்மாவிற்கு புரிந்தது.

சுபி, “பக்கத்துல்ல இருக்காயா?” சிம்மா கேட்க, சிம்மா ரித்து நல்லா வளர்ந்துட்டா என்றது சுபியின் ஆன்மா.

அண்ணா, “யார்கிட்ட பேசுற?” ரித்திகா பயத்துடன் கேட்க, “எதை பார்த்து பயந்த?” அலைபேசியில் எதுவுமேயில்லை நிஷா அலைபேசியை உற்று பார்த்தாள்.

ரித்து, “நான் எப்படி சொல்றது?” என்று சிம்மா கண்ணீர் வழிந்தது.

அண்ணா, “அழுறியா? என்னாச்சு? என்ன நடக்குது?” ரித்திகா கேட்க, “உன்னோட அண்ணி ஸ்டாரோட ப்ரெண்டு சுபி உனக்கு நினைவிருக்கா?”

அய்யோ, “எப்படி மறக்க முடியும்?” உன்னையும் அண்ணியையும் விட லவ்ஸ் பார்ட்டிக்கல்ல? ரித்திகா சொல்ல, ரித்து அவன் உயிரோட இல்லை என்றாள்.

“சுபி அண்ணாவா?” ரித்திகா அதிர்ச்சியுடன் கேட்டாள்.

ஆமா ரித்து, அவன் இறந்து ஐந்து வருடமாகுது.

“என்ன அண்ணா சொல்ற?” அண்ணி..என்ற ரித்திகா முன் இருவரும் ஜோடியாக நினைவுக்கு வந்தனர். ரித்திகா அழுது கொண்டே, “அண்ணா நிஜமா தான் சொல்றீயா?”

“ஆமா ரித்து” என்று சிம்மா அழுதான்.

அண்ணா, அவங்க எனக்கு தெரியுறாங்க. “நடப்பது கனவா? நினைவா?”

“உனக்கு அலைபேசியில் தெரியுறானா?” அர்சு பிறந்ததிலிருந்து கூடவே சுபி இருந்திருக்கான்.

“என்ன? எதுக்கு?” உன் கண்ணுக்கு தெரியலை. “என் கண்ணுக்கு எப்படி தெரியுறாங்க?” என்று கேட்டாள்.

ரித்து பெரிய பிரச்சனையில மாட்டப் போறா சிம்மா. அவளை கவனமா இருக்க சொல்லு என்று சுபியின் ஆன்மா சொல்ல, சுபி “அவளுக்கென்ன?”

“அவளிடம் சொல்லு” என்றது சுபியின் ஆன்மா.

சிம்மா ஆன்மா சொன்னதை சொல்ல, “என்ன அண்ணா சொல்றீங்க?”

எனக்கு எதுவுமே தெரியலையே ரித்திகா! நிஷா சொல்ல, எனக்கும் அவன் கண்ணுக்கு முதல்ல தெரியல. அவன் கொலை வழக்கிற்காக என சிம்மா செய்ததை சொல்ல, இருவரும் திகைத்து பார்த்தனர்.

“கொலை பண்ணிட்டாங்களா? அண்ணி என்ன பண்றாங்க?” என மிருளாலினி பற்றி சிம்மாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள் ரித்திகா.

அவங்கள பார்த்து நானும் மாமாவும் அப்படி தான் வாழணும்ன்னு ஆசைப்பட்டேன் அண்ணா. இருவரும் இப்படி பிரிவாங்கன்னு நான் நினைக்கவேயில்லை என்று ரித்திகா அழுதாள்.

ரித்தும்மா, நீ கவனமா இரு. இவன் உன் கண்ணுக்கு ஏன் தெரிகிறான்னு எனக்கு தெரியல. மேம், “உங்களிடம் பேசணுமே? உங்க நம்பர் தாரீங்களா?” சிம்மா கேட்க, “அண்ணா எதுக்கு அவங்கள தொந்தரவு பண்ற?” எனக்கு ஏதும் ஆகாது என்றாள் ரித்திகா.

ரித்திகா, “சும்மா இரு” என்று நிஷா அவள் நம்பரை சிம்மாவிடம் கொடுத்தாள். சரிம்மா, நீ ஓய்வெடு என்று சிம்மா சொல்ல, சுபி அண்ணா கவலைப்படாதீங்க. நானும் மிரு அண்ணியை பார்த்துக்கிறேன் என்றாள் ரித்திகா. நிஷா ரித்திகாவை ஒரு மாதிரி பார்த்தாள். அர்சுவிடம் சொல்லி விட்டு  அலைபேசியை வைத்த ரித்திகா நிஷா தோளில் சாய்ந்து அழுதாள்.

“நிஜமாகவே இறந்தவன் உன் கண்ணுக்கு தெரிந்தானா?” நிஷா கேட்க, ஆமா மேம், அவர் என்னை ஒருமாதிரி உற்று பார்த்தார். அதான் ரொம்ப பயந்துட்டேன் என்றாள்.

“உன்னோட அண்ணா பேர் என்ன?”

அண்ணா பேரு “சிம்மராஜன்” என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து விட்டு, மேம் என்னை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. அப்புறம் என் அண்ணாவையும் பையனையும் பற்றி யாரிடமும் சொல்லாதீங்க என்றாள்.

ஒ..”உதிரன் மச்சான் சிம்மா” இவன் தானா? அந்த குட்டிப் பையன். உதியோட தங்கச்சி மகனா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் நிஷா.

மேம், “என்ன பண்றீங்க?” சொல்லாதீங்க.

சரி, “அப்படின்னா நீ இதே போல் புன்னகையோட இருப்பாயா?” நிஷா கேட்க, ரித்திகா அமைதியானாள். அதே நேரம் உதிரன் உள்ளே வந்தான்.

உதிரனை பார்த்ததும் ரித்திகாவிற்கு, அவன் இரவு வர சொல்லி அழைத்தது நினைவு வந்தது. அவனை பார்த்துக் கொண்டே, நோ..மேம் என்னால முடியும்ன்னு தோணலை என்றாள் ரித்திகா.

நிஷா உதிரனை பார்த்துக் கொண்டே, “ஏன்?” என கேட்டாள்.

சாரி மேம், “நான் தனியா இருக்கணும்” என்றாள்.

சரி, அழுது கொண்டே இருக்காத. பெயின் அதிகமாக இருந்தா சொல்லு என்று நிஷா உதிரனை கண்ணாலே வெளியே அழைத்தாள். அவன் புரியாமல் இருவரையும் பார்த்தான். பின் நிஷாவை பார்த்து புருவத்தை உயர்த்தினான். இருவரும் கண்ணாலே பேச, இதை காணும் ரித்திகாவோ மனதினுள் வெம்பினாள். உதிரன் கையை பிடித்து நிஷா வெளியே அழைத்து சென்றாள். அவன் ரித்திகாவை பார்த்துக் கொண்டே சென்றான்.

இரவில் நிஷா ரித்திகா அறைக்கு வந்தாள்.

“இப்ப நீ ஓ.கே வா?” நிஷா கேட்க, ரித்திகா பதிலளிக்காமல் அவளையே பார்த்தாள்.

“என்ன?”

“உங்களை பற்றி சொல்லுங்க?” என்று ரித்திகா கேட்க, அவள் சொல்லத் தொடங்கினாள்.

என்னோட அப்பா கஷ்டப்பட்டு தான் இந்த “சைனிங் ப்ளூ” வை கையில் எடுத்தார். உடனே வெற்றியடையவில்லை. அவர் தோல்வியை கண்டு முயன்று தான் முன் வந்திருக்கார். அவருக்கு பின் இதை நான் தான் பார்க்கணும்ன்னு ஆசைப்படுகிறார். ஆனால் எனக்கு நார்மலான வாழ்க்கை வாழ ஆசை. இங்கிருந்தால் நினைத்த நேரம் வெளியே செல்ல முடியாது. இப்பொழுதைக்கு இங்கே இருக்கேன்.

ரித்திகா தயக்கத்துடன், “உதிரன் சார் இங்கே எப்படி வந்தார்?” ரித்திகா கேட்க, மனதினுள் புன்னகைத்த நிஷா..உதி உன்னை போல் ஒரு கம்பெனி மூலமாக வந்தான். அவனும் அவனது ஆராய்ச்சியை இங்கு காட்ட நினைக்க, ஆனால் அவனுடன் வந்தவன் உதியுடையதை அவனுடையதாக மாற்றி அவனை ஏமாற்றி என் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கினான்.

திருடிய அவனுக்கு உதியின் “டார்க் ஸ்பெயிஸ்” ஆராய்ச்சியை சரியான முறையில் விளக்க முடியவில்லை. அவன் ஏமாற்றியது தெரிந்து இந்த ஆராய்ச்சி துறையிலிருந்தே அவனை எடுத்துட்டாங்க. அவன் சென்ற பின் உதியின் அறிவுக்கு அவன் இருக்கும் இடம் அதுவில்லை என அப்பா அவருடனே வைத்திருந்தார். அவனும் லேப்பிலே தான் இருப்பான்.

“நீ மனுசனா? மிஷினாடா?”ன்னு நானும் அவனை பல முறை கிண்டல் செய்திருக்கேன். ஆனால் அவன் அதிகம் வெளியே வந்ததில்லை. இந்த வருடம் தான் உங்களை போல் கம்பெனிகளால் ஏதாவது ஆதாயமோ இல்லை உதியை போல் திறமையான ஆட்கள் கிடைப்பார்களான்னு பார்க்க தான் வெளியே வர ஆரம்பித்தான். ஆனால் அவனை போல் யாரையும் அவனோ என் அப்பாவோ பார்க்கவில்லை. இன்னும் சிலர் உதவி கிடைக்க காத்திருக்கோம். உங்க பிராடெக்ட் நல்லா இருக்கு. ஆனால் நீங்க இங்கிருக்க சம்மதிக்க மாட்டீங்கன்னு வர்சன் சொன்னான்.

இல்லையே! பாலாவுக்கும் பிரகவதிக்கும் விருப்பம் இருக்கும். அவங்க பெரிய இடத்துக்கு வர தான் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. “வர்சன் எதுக்கு இப்படி சொன்னான்? நீங்க எல்லாரையும் வைத்து கேட்டிருக்கலாமே?” ரித்திகா கேட்டாள்.

சரி, பார்க்கலாம். நான் அப்பாவிடம் பேசுகிறேன். வர்சனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் நிஷா சொல்ல, ரித்திகாவும் சிந்தித்தாள்.

சரி, “ஏதும் உதவி வேணும்ன்னா சொல்லு” என எழுந்தாள் நிஷா.

மேம்.. நீங்க உதி மா..மாமாவென சொல்ல வந்தவள் கண்ணை மூடி திறந்து, “உதிரன் சாரை மேரேஜ் பண்ணிக்க போறீங்களா?” என்று ரித்திகா கேட்க, “என்னது?” என்று அதிர்ந்தாள் நிஷா.

எல்லாரும் நீங்க இருவரும் க்ளோஸ்ன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்.

என்னோட அப்பாவுக்கு விருப்பம் தான். ஆனால் நாங்க ப்ரெண்ட்ஸா தான் பழகிக்கிட்டு இருக்கோம்.

மத்தவங்க சொல்றது சரியா தான் மேம் இருக்கு. நீங்க இருவரும் பொருத்தமா தான் இருக்கீங்க. கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

நிஷா ஏதும் பேசாமல், உனக்கு ஒன்று சொல்லவா? அவன் ஏற்கனவே அவன் குடும்பத்திடம் கோபித்துக் கொண்டு வந்திருந்தான். இதுவரை ஒருநாள் கூட அவர்கள் யாரிடமும் பேசவில்லை. ஆனால் தினமும் வருத்தப்படுவான். அவன் இந்த நிலை வரக் காரணம் அவங்க தான். அவங்க விட்டதால் தான் சாதித்து இருக்கேன்னு சொல்வான். அவன் அவனோட குடும்பத்தை பார்த்தால் சந்தோசப்படுவான். அவங்கள ரொம்ப மிஸ் பண்றான்.

நானும் அவங்கள வர வைக்கலாம். நான் சமாதானப்படுத்துறேன்னு சொன்னாலும் அவன் யார் நம்பரையும் தரவே மாட்டேன் என்று மனசுக்குள்ளவே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் என்றாள் நிஷா.

ரித்திகா கண்கலங்குவதை பார்த்து கண்டுகொள்ளாதவள் போல, “நான் கிளம்புகிறேன்” என்று நிஷா அவளை பார்த்துக் கொண்டே சென்றாள்.

ரித்திகா சிம்மாவிற்கு போன் செய்து ஏதோ பேசினாள். சற்று நேரத்தில் அவளுடன் வேலை செய்பவர்கள் அவளை காண வந்தனர். எல்லாரும் செல்லும் போது வர்சன், “உன்னிடம் பேசணும்” என்றாள் ரித்திகா.

“அவனிடம் நீ என்ன பேசப் போற?” ஓய்வெடு என்று பிரகா சொல்ல, “ப்ளீஸ் நான் பேசணும்” என்றாள். பாலா இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

பாலா, போ வர்சன் வந்திருவான் என்றாள் ரித்திகா. பாலா சிந்தனையுடன் வெளியே வந்து உதிரனை இடித்து விட்டு, ஏதும் பேசாமல் சென்றான்.

உதிரன் அவன் பின் கோபமாக செல்ல, பாரேன்டி இன்னும் கையில் அடிபட்டது கூட சரியாகவில்லை. அதற்குள் வர்சனிடம் பேசணுமாம். இன்னும் எத்தனை பேரை அலைய விடுவான்னு தெரியல இந்த ரித்திகா.

இவனை விடுடி. நம்ம பாஸை கைக்குள் போட்டது போதாதுன்னு ரித்திகா உதிரன் சாரை பார்க்கும் பார்வையே சரியில்லை. பாஸை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லீட்டு பாலா, வர்சன் போதாதுன்னு இப்ப உதிரன் சாரையும் கவிழ்க்கப் பார்க்கிறாள் ஸ்ரீ சொன்னாள்.

ஏய், “என்னடி பேசுறீங்க?” உங்களுக்கு அவள் மேல பொறாமையில கண்டதையும் பேசாதீங்க. அவளோட ஓன் பிராஜெக்டை நாம உதவினோம்ன்னு சொன்னால்ல. “இதுலவே உங்களுக்கு அவளை பத்தி தெரியலையா?”

ஸ்ரீ, உன்னோட பிராஜெக்ட்டுக்கு இங்க வரும் அருகதை கூட இல்லை என்று பிரகா சத்தமிட்டாள். பாலா அவர்களிடம் வந்து, “ஸ்ரீ என்ன சொன்ன?” என்று சினமுடன் முறைத்தான்.

பார்த்தேல்ல, ”இவனுக்கு அவளை பற்றி பேசினால் கோபம் எப்படி வருது?” இப்படி தான் எல்லாரும் அவளுக்காக பேசும் படி மயக்கி வச்சிருக்கா என்று தக்சனா கூற, பாலா கோபத்தில் அவளை அடித்து விட்டான்.

பாலா, வேண்டாம் என்று பிரகா அவன் கையை பிடித்தாள். அவள் கையை உதறி விட்டு, நீங்க பேசுறது சரிதான். அவளுக்குள் ஏதோ ஒன்று இருக்கு. அதான் எல்லா பசங்களுக்கும் அவளை பிடிச்சிருக்கு. ஆனால் அவள் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கண்ணீருடன் அவன் நகர்ந்தான்.

பாருடி பிரகா, உன்னால அவனை பார்க்க வைக்க கூட முடியாது ஸ்ரீ சொல்ல, ச்சீ..வாய மூடுடி..அவனுக்கு அவளை பிடிக்கும். எனக்கு அவனை பிடிக்கும். அவ்வளவுதான். காதலா? இல்லையான்னு எங்க மூன்று பேர் சம்பந்தப்பட்டது. அதை நாங்க பார்த்துக்கிறோம்.

நீங்க பார்த்து பேசுங்க. இல்லை நீங்க பேசுவதை நான் நம்ம பாஸிடம் கூற வேண்டி வரும். அப்புறம் உங்க வேலை போயிரும்.

பாஸாம்..பாஸ்..அவர் இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறார். அந்த தைரியத்துல பாலா உனக்கு என்று தான இப்படி பேசுற? பாரு அதையும் அந்த ரித்திகா தவிடு பொடியாக்க போறாள் என்று தக்சனா சொன்னாள்.

“வேலைய பார்த்துட்டு போங்கடி” என்று பிரகா சொல்ல. ஆவென ரித்திகா கத்தும் சத்தம் கேட்டது. உதிரன் வேகமாக அவனறைக்கு செல்ல, பொண்ணுங்க அவன் செல்வதை கவனிக்காமல் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு ரித்திகா அறைக்கு சென்றனர்.

ரித்திகா கீழே விழுந்து அடிபட்ட கையில் இரத்தம் வழிந்தது. அவள் எழ முடியாமல் இருக்க, வர்சன் சட்டை பொத்தானை அவசரமாக போட்டான்.

பட்டென கதவை திறந்து வந்த உதிரன் ரித்திகா விழுந்து கீழே கிடப்பதை பார்த்து அவளை தூக்கி விட்டு, “ஓய்வெடுக்க சொன்னா? என்ன பண்ணீட்டு இருக்க?” என்று திட்டிக் கொண்டே வந்த பொண்ணுங்களை பார்த்தான். அவர்கள் வர்சனை பார்க்க, அப்பொழுது தான் உதிரன் வர்சனை பார்த்தான்.

வர்சனை பார்த்துக் கொண்டே ரித்திகாவை பார்த்தான். அவள் கண்ணீருடன் கையை பிடித்துக் கொண்டு நின்றாள். உதிரன் அங்கிருந்த ஓர் பொத்தானை அழுத்த மருத்துவர் ஒருவர் வந்தார்.

சார், “பாருங்க” என்று உதிரன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். இப்பொழுது அவன் பார்வை பொண்ணுங்களை ஏறிட்டது.

“நான் சொன்னேன்ல்ல” என்று ஸ்ரீ பிரகவதியை கண்களால் பார்த்தாள். அவள் ஸ்ரீயை முறைத்து பார்த்து விட்டு, வர்சனிடம் வந்து அவனை பார்த்தாள்.

“என்ன நடந்தது சொல்லு?” என்று பிரகவதி கேட்க, ரித்திகா அவசரமாக நாங்க பேசிய ஒரு விசயம் ஆர்க்யூமென்ட் ஆகிடுச்சு. நான் அவனை அடிக்க வந்தேன். அவன் என்னை தள்ளி விட்டான். அதில் தான் இப்படி அடிபட்டு விட்டது என்று மனப்பாடம் செய்ததை சொல்வது போல் ஒப்புவித்து முடித்தாள் ரித்திகா. மூவரும் அவளை பார்க்க, திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கும் வர்சனை உதிரன் பார்த்தான்.

சரி, நீ கிளம்பு என்று வர்சனை பார்த்து சொன்ன உதிரன், நீ மட்டும் இரு என்று பிரகவதியை பார்த்தான். அவள் தயக்கமுடன், “சார் ஐந்து நிமிடம் மட்டும். மேம்மை பார்த்துக்கிறீங்களா?” நான் வரேன் என்றாள்.

“ஏன்?”

சார்..ப்ளீஸ் என்று வெளியே சென்ற பிரகவதி போனில் பாலாவிடம் எதையோ சொல்லி விட்டு அவனை பார்க்க அறைக்கு ஓடினாள்.

அறைக்கு வந்த வர்சனை தூக்கி போட்டு மிதித்தான் பாலா. ஓடி வந்த பிரகவதி, “நாயே அவள என்ன பண்ணப் பார்த்த?” என்று கேட்டாள். வர்சனது குரூர பார்வை பிரகவதி மேல் படர, அவள் அங்கிருந்த திரைசீலையின் பின் மறைந்து நின்றாள்.

பிரகா, நீ போ. இவனை நான் பார்த்துக்கிறேன் என்று பாலா சொல்ல, வேண்டாம் பாலா. இவனது செய்கை இங்கிருப்பவர்களுக்கு தெரிந்தால் நம்ம கம்பெனி பெயர் கெட்டு விடும். அப்புறம் நமக்கும் வேலை போயிடும் என்று நிதர்சனம் உணர்ந்து சொன்னாள்.

அவன் வர்சனை பார்த்து, இதுக்கு மேல பொண்ணுங்கல்ல தவறான கண்ணோடத்தில் பார்த்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று பாலா அடித்து விட்டு வெளியே வந்தான். பிரகவதியும் அவன் பின் வந்தாள்.

கையை கட்டி முறைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தாள் நிஷா.

மேம்..என்று பிரகவதி தயங்க, பாலாவோ “நீ எப்படியும் நில்லு” என்று “வழிய விடுங்க மேம்” என்று அவள் கையை பிடித்து நகர்த்தி விட்டு ரித்திகாவை பார்க்க சென்றான். நிஷாவும் அவர்கள் பின் சென்றாள்.

ரித்திகா அறையில் மருத்துவர் சென்ற பின், “உனக்கு அறிவேயில்லையா? தனியா ஒருவனை அறைக்கு அழைத்து பேசுகிறாய்? வெளிய உன்னோட வொர்க்கரே எப்படி பேசுறாங்க தெரியுமா?” ஆதங்கத்துடன் உதிரன் சத்தமிட்டான். ரித்திகா அவனை அமைதியாக பார்த்தாள்.

“என்ன பாக்குற?” அவன் கேட்க, “என்னை பத்தி நீங்க எதுக்கு சார் யோசிக்கணும்?” தேவையில்லாமல் உங்க நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றாள்.

“நான் எதுக்கு யோசிக்கணுமா?” டென்சன் ஆனான் உதிரன். ரித்திகா அவ்வலியிலும் மகிழ்வுடன் அவனை பார்த்தாள். அவள் படிக்கும் காலத்தில் அவன் பின் சுற்றிய போது திரும்பி கூட பார்க்காதவன் இப்பொழுது உரிமை கொண்டாட நினைக்கிறான் என்று மகிழ்ச்சியை தந்தாலும் அவளால் அவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள்?

நான்..நான்..என்று சொன்ன உதிரனுக்கு, “உன் மாமா” என்று சொல்ல வார்த்தைகள் தயக்கத்தை கொடுத்தது. ஏனென்றால் ரித்திகா மாற்றானுக்கு நிச்சயிக்கப்பட்டவள்.

சொல்லுங்க சார், நான்..நான்…என்று ரித்திகா கேலியாக சொல்ல, கடுப்பான உதிரன் அவளை நெருங்கி வந்து அவளது கன்னத்தில் கை வைத்தான். அவள் பயத்துடன் படுத்திருக்க, அவளருகே அமர்ந்து வாகாக அவளை முத்தமிட்டான். அவனை தடுக்காமல் அவளும் வாங்கிக் கொண்டாள்.

ரித்து..என இவர்களை பார்த்து கோபமாக பிரகவதி வந்தாள். அவளுடன் பாலாவும் நிஷாவும் வந்தனர்.

உதி, “என்ன பண்ணீட்டு இருக்க?” நிஷா சத்தமிட, அவன் கோபமாக வெளியே சென்றான். நிஷா அவன் பின் சென்றாள்.

பிரகா, “நான் சொல்வதை கேளு” என்று கையில் மாட்டி இருந்த குளுக்கோஸ் ஏற்றும் ஊசியை கழற்றி விட்டு பிரகவதியிடம் வந்தாள்.

எல்லாரும் உன்னை தப்பா பேசும் போது, நீ அப்படி கிடையாதுன்னு உனக்காக பேசி இருக்கேன். ஆனால் “நீ என்ன கருமத்தை பண்ணீட்டு இருக்க?” சத்தமிட்டாள்.

ப்ளீஸ், “என்னை நம்பு பிரகா, நான் தப்பானவள் இல்லை” என்று அழுதாள் ரித்திகா.

பாலா அவளை நெருங்கி, “யார் அவன்?” என்று கேட்டான். ரித்திகா கண்ணீருடன் பாலாவை பார்த்தாள்.

“யார கேட்கிறாய் பாலா?” பிரகவதி கேட்டாள்.

அதான் உதிரன் சார். “உனக்கு ஏற்கனவே அவரை தெரியுமா ரித்து?” அவளை உற்றுபார்த்தான் பாலா.

“பாலா என்ன சொல்ற?”

ஆமா பிரகா, அன்றும் உதிரன் சார் முத்தமிட்ட போது ரித்து தடுக்கவில்லை. ஏதோ நிம்மதி அவள் கண்ணில் தெரிந்தது. அப்பொழுது எனக்கு சரியாக புரியவில்லை. “சொல்லு ரித்து?” என்றான் கோபமாக.

ம்ம்..என்றாள்.

“அவரை உனக்கு எப்படி தெரியும்?” என்று பிரகவதி கேட்டாள்.

ரித்திகா எல்லாவற்றையும் சொன்னாள். சரி “அப்ப நம்ம பாஸை நீ காதலிக்கவில்லையா?” பாலா கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.

“சொல்லுடி?” என்று பிரகவதி கேட்டாள்.

ரித்திகா மனதினுள், இனி மாமா வாழ்க்கையில் நாம் நுழைவது சரியாக இருக்காது. என்னால் அவருக்கும் ஒரு பயனும் இருக்காது என்று எண்ணி, நான் பிரணவ்வை தான் காதலிக்கிறேன் என்றாள்.

பாஸ் என்று கூறினால் கண்டிப்பாக நம்ப மாட்டாங்க. அதனால் பிரணவ் என்று பெயர் கூறி அழைத்தாள்.

“பெயரை சொல்லி கூப்பிடும் அளவிற்கு உன் மனதில் பாஸ் வந்துட்டாரா ரித்து?” என்று கண்கலங்க பாலா கேட்க, பாலா நான் உனக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன். நீ முதலில் உன்னோட நிலையை பார். உனக்கான பொண்ணு வருவா என்றாள்.

போதும் நிறுத்து. நீ எதுவும் சொல்ல தேவையில்லை என்று கண்ணீருடன் பாலா வெளியே ஓடினான். பிரகவதிக்கு என்ன பேசவென தெரியாமல் அவன் பின் ஓடினாள். பாலாவை காணவில்லை. “எதிரே வந்த நிஷாவிடம் பாலாவை பார்த்தீங்களா மேம்?” என்று கேட்டாள்.

“என்னாச்சு?” நிஷா கேட்க, இல்லை ரித்து பாலாவை முழுதாக நிராகரித்து விட்டாள். அவன் அழுது கொண்டே வெளியே சென்றான் என்றாள் பிரகவதி.

“அழுதானா? அவனா? அட டீஸ் பண்ண ஒருவன் சிக்கீட்டானே!” விடக் கூடாது என்று “நீ அந்தப் பக்கம் போ” என்று நிஷா சொல்ல, இருவரும் பிரிந்து அவனை தேடினார்கள்.

அழுது கொண்டே வெளியே வந்த பாலாவை அக்கூடத்தின் காவல்காரர் வெளியே போகக்கூடாது என்று தடுத்தார். அவன் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றான்.

அவர் ரட்சகனை அலைபேசியில் அழைத்து கூறினார். அவர் நிஷாவை அழைக்க, அவள் தேடிக் கொண்டே அலைபேசியை எடுத்தாள்.

அவள் உதிரனையும் அழைத்து சொல்லி விட்டு வெளியே வந்தாள். பிரகவதியும் அங்கே தான் வெளியே செல்ல கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஹேய், “இரு போகலாம்” என்று நிஷா அவளை நிறுத்தி விட்டு உதிரனை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வரவும் காரில் பாலாவை தேடி செல்ல, நேராக இவர்கள் சென்ற கார் முன்னே கையில் மதுபாட்டிலுடன் தள்ளாடிக் கொண்டு வந்தான் பாலா.

உதிரன் காரை நிறுத்த, பிரகவதி வேகமாக இறங்கி பாலாவிடம் சென்றாள். அவன் மொடாக்குடிகாரனாய் குடித்திருக்க, உதிரனும் நிஷாவும் பாலாவை பார்த்து முகம் சுளித்தனர்.

உதிரனை பார்த்த பாலா, அங்கிள்..“ஹௌ ஆர் யூ?” என்று கேட்க, உதிரன் அவனை அடிக்க வந்தான்.

சாரி சார், பாலாவிற்கு குடித்து பழக்கமில்லை. முதல் முறையா குடித்ததால் இப்படி நடந்து கொள்கிறான் என்று அவள் அவன் தோளில் கை போட, நீங்க கார்ல ஏறுங்க. இவனை நானே பார்த்துக்கிறேன் என்று உதிரன் அவனருகே சென்று அவனை இழுத்து அவன் தோளில் போட, உதிரன் மீதே வாமிட் செய்து விட்டான் பாலா.

“மை காட்” என்று உதிரன் அவனது சட்டையை அங்கேயே தூக்கி போட்டு விட்டு பனியனுடன் அவனை காரில் ஏற்றி “இருவரும் அவனிடமிருந்து தள்ளி இருங்க” என்று ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தவுடன் ஆட்களை அழைத்து அவனறைக்கு அழைத்து செல்ல சொன்னான்.

சற்று நேரத்தில் பொண்ணுங்க இருக்கும் அறைக்கு வந்தான் வர்சன். அங்கே ஸ்ரீயும் தக்சனாவும் இருந்தனர்.

ஏய், வந்து பாலாவ பாருங்க. அவனோட அலுச்சாட்டியம் தாங்கல என்றான் வர்சன்.

எங்களால முடியாது. நீயே அவனை பார்த்துக்கோ என்றாள் ஸ்ரீ.

சினமுடன் வர்சன் அறைக்கு சென்று பாலாவை தரதரவென இழுத்து வெளியே போட்டான்.

பாலா எழுந்து புலம்பிக் கொண்டே தள்ளாடியவாறு வந்தான். உள்ளே வேலை செய்யும் அனைவரும் அவனை கேவலமான பார்வையை உதிர்த்து சென்று கொண்டிருந்தனர். “அவனுக்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகுது?” அவனுக்கு போதை தலைக்கு மேல் ஏறி இருந்தது.

அம்மா..என கையை நீட்டி புலம்பிக் கொண்டே வந்த பாலாவை பார்த்து நிஷாவும் பிரகவதியும் அப்படியே நின்றனர். அவன் நேராக நிஷாவிடம் வந்து அவளை அணைத்து அம்மா..”ரித்து ரொம்ப மோசம்” என பலவாறாக புலம்பினான்.

ஏய் பாலா, “என்ன பண்ற?” மேம் என்று நிஷாவை பிரகவதி பார்க்க, நிஷா அதிர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாரி மேம்” என்று அவளிடம் சொல்லி விட்டு அவனது முதுகில் அடியை போட்டாள் பிரகவதி. ஆனால் அவன் விலகி நிஷாவின் தோளில் சாய்ந்து நின்றான்.

அய்யோ பாலா! என்று கோபமாக பிரகவதி அவனை அடிக்க, இம்முறை அவளை நிறுத்திய நிஷா பாலாவை விலக்கினாள். அவன் பிரகவதி, நிஷா என இருவர் தோளிலும் சாய்ந்து கொண்டிருந்தான்.

டேய், “என்ன பண்ணீட்டு இருக்க?” “செக்யூரிட்டி” என்று உதிரன் சத்தமிட்டான்.

உதி, கத்தாத..என்று அவள் சொல்ல, வொர்க்கர் எல்லாரும் அவர்களிடம் வர, பாலா நிஷாவை அணைத்து நின்றான். எல்லாரும் அதிர்ச்சியுடன் இருந்தனர்.

டேய், என்று பாலாவின் காலரை பிடித்த உதிரன் அவனை இழுக்க, உதி..இரு என்று இருவரை அழைத்து இவனை உதிரனோட அறையில போடுங்க என்றாள்.

“வாட்? என் அறையிலா?” முடியவே முடியாது என்றான் உதிரன்.

“எதுக்கு இப்படி குடிச்சிருக்க?” என்று மீண்டும் உதிரன் பாலாவின் சட்டையை பிடிக்க, சார் நீங்க என்ன பேசினாலும் அவன் பேசுவதை தான் பேசுவான். அதனால இன்று மட்டும் பார்த்துக்கோங்க. ப்ளீஸ் சார் என்றாள் பிரகவதி.

“இவனை எதுக்கு நான் பார்த்துக்கணும்?” உதிரன் கேட்க, உன்னால முடியாதுல்ல உதி. “அவனை என் அறைக்கு அழைத்து போகணுமா?” நிஷா கேட்க, அனைவரும் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பேசுற நிஷா?”

போ..இன்று மட்டும் என்று நிஷா சொல்ல, நான் இவனை பார்த்துக்க மாட்டேன். ஆனால் தங்கிக்கட்டும் என்றான் சினமுடன் உதிரன்.

மேம், “அவன் சாரிடம் உளறிவிட்டானா என்ன செய்வது? என்று பிரகவதி நிஷா காதில் கிசுகிசுத்தாள்.

ஷ், “நானும் அங்கேயே போறேன்” என்று நிஷா, எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. உன் அறைக்கு நானும் வாரேன். அப்புறம் அவனை பார்த்துக்க இவளும் வரட்டும் என்றாள்.

“என்னது?” என்று முகத்தை சுருக்கினான்.

மேம், “அவன் தூங்கியவுடன் நான் சென்று விடுகிறேன்” என்றாள் பிரகவதி.

“இடையில் விழித்தால் நீ பார்த்துப்பாயா உதி?” என்று நிஷா கேட்க, “என்ன விளையாடுறீயா?” என்னால முடியாது என்றான் உதிரன்.

அப்ப பிரகவதியும் நானும் உன் அறையில் தான் இருப்போம்.

“அதான் அவனோட ப்ரெண்டு ஒருத்தன் இருக்கான்ல்ல?” உதிரன் கேட்க, இருவருக்கும் சண்டை வந்துருச்சு என்று பிரகவதி உலறினாள்.

“எதுக்காக சண்டை போட்டானுக?” நல்லா தான பேசிப்பானுக உதிரன் கேட்க, ரித்திகாவிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான் என்றா உதிரனிடம் சொல்ல முடியும்?

“அது நமக்கெதுக்கு உதி” என்று சமாளித்தாள் நிஷா.

சரி, வாங்க. வர்றவங்க இவனை வாஷ் பண்ணி விட்டுட்டு போங்க என்றான் உதிரன்.

இல்ல சார், அதை நான் பார்த்துக்கிறேன்.

“என்னது? நீ பார்த்துக்கிறாயா? அவனுக்கு ஆடையையும் மாற்றி விடுவாயா?” நிஷா கேட்க, பிரகவதி அமைதியானாள்.

எல்லாரும் வேலையை பாருங்க என்று உதிரன் சொல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கலைந்தனர். அப்பொழுதும் புலம்பலை பாலா நிறுத்தவில்லை. இடையிடையே ரித்திகாவையும் அவன் அழைக்க கடுப்புடன் அறைக்கு சென்றான் உதிரன்.

உதிரன் அறைக்கு உள்ளிருக்கும் அறைக்குள் பாலாவை போட்டு விட, மேம் நானும் அவனருகே இருந்துக்கிறேன் என்றாள் பிரகவதி.

அதெல்லாம் வேண்டாம். அவன் தனியா இருக்கட்டும் என்ற நிஷா உதிரனின் படுக்கையை சரி செய்து கொடுத்தாள்.

மேம், “சார் எங்க தூங்குவார்?”

அவன் தூங்குவான். “நீ படு” என்றாள் நிஷா.

மேம்..என்று பிரகவதி தயங்க, நீங்க யாருமே ரித்திகாவிற்கு துணைக்கு இல்லைல்ல. அவன் அங்கே போறானாம்.

மேம், “யாராவது பார்த்தால் தவறாகி விடும்” என்றாள் பிரகவதி.

“அதெல்லாம் ஒன்றும் ஆகாது” என்று நிஷா சொல்ல, மேம் ஏற்கனவே எல்லாரும் அவளை தப்பா பேசிட்டு இருக்காங்க என்று அவள் சொல்ல, கதவை திறந்து உள்ளே வந்தான் உதிரன்.

பிரகவதி எழுந்து அவனை பார்க்க, “என்ன?” அவன் கேட்டான்.

ஒன்றுமில்லை சார்.

நிஷா நீ இவங்கல்ல பார்த்துக்கோ. நான் லேப்பிற்கு போகிறேன் என்றான் உதிரன்.

நாளைக்கு மார்னிகே வொர்க் ஹெவியா இருக்கும்ல்லடா. “ஓய்வெடுக்கலையா?”

இருக்கட்டும். எனக்கு தூக்கம் வரலை. அவன் எங்கும் ஓடி விடாமல் பார்த்துக்கோ. எல்லாரும் ஓவரா பேசுறாங்க. காலையில சார் உன்னை கண்டிப்பாக பார்க்க வருவார் என்றான் உதிரன்.

நிஷா புன்னகையுடன், ஓ.கே நான் பார்த்துக்கிறேன். “நீ வேணும்ன்னா ரித்தி தனியா தான இருக்கா. அவளுக்கு துணைக்கு தங்கலாமே?” என நிஷா கேட்க, பிரகவதி விழித்து இருவரையும் பார்த்தாள்.

“நான் பார்த்துக்கிறேன்” என்று உதிரன் சென்றான்.

மேம், “சார் ரித்து அறைக்கு போவாரா இல்லை லேப்பிற்கு போவாரா?” என கேட்டாள்.

“எனக்கு என்ன தெரியும்?” நீ அவனிடமே கேட்டுக்கோ என்று அவள் சொல்ல, பிரகவதி தனியாக கொண்டு வந்த படுக்கை விரிப்பை உதிரனின் படுக்கையின் மீது விரித்தாள்.

“என்ன செய்ற?” நிஷா கேட்க, மேம் என்னோட நறுமணம் அடுத்து சார் படுத்தால் தொந்தரவா இருக்குமே!

நிஷா சிரித்துக் கொண்டு, நான் விரிக்காமலே பலமுறை தூங்கி இருக்கேன். அவன் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டான். நீ நிம்மதியாக தூங்கு என்றாள்.

பிரகவதி சிந்தனையுடன் படுத்தாள். நிஷா அவளது வேலையை தொடர்ந்தாள். அவ்வப்போது பாலாவின் சத்தம் கேட்க, நிஷா புன்னகையுடன் அவனிருக்கும் அறையை பார்த்துக் கொண்டே வேலையை கவனித்தாள்.

உதிரன் அவன் அறையிலிருந்து வெளியே வந்து ரித்திகா அறைக்கதவை திறக்க, அவள் உள்ளிருந்து பூட்டி இருந்தாள். ஆனால் தூங்காமல் அவளுக்கு உதிரன், சுபிதன் – மிருளாலினி, சிம்மா, நட்சத்திரா, அர்சு என பல நினைவுகளை மனதில் ஓட்டியவாறு படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தாள்.

உதிரன் லேப்பிற்கு செல்ல அங்கிருப்பவர்கள் அவர்களது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்தனர். அவங்களுடைய விடுமுறை காலத்திற்காக அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

“ஹாப்பி ஹாலிடே” என்று உதிரன் அனைவருக்கும் சொல்லி விட்டு, தன் குடும்ப நினைவுகளை எண்ணிக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அப்படியே அவனும் தூங்கி விட்டான். எல்லாரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.