அத்தியாயம் 4

சிம்மா, “நில்லு” என்று அவனை நிறுத்தி மன்னிப்பு கேட்டான் சுபிதன்.

“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்?”

தெரியல. ஆனால் கஷ்டமா இருக்கு.

“நீ நரசிம்மனை பார்த்திருக்கிறாயா? அவன் நல்லவன் தான?” என்று சிம்மா விசாரிக்க, “அது நீ தான்” என மனதில் எண்ணி கட்டுப்படுத்த முடியாமல் சிம்மாவை அணைத்து அழுதான் சுபிதன்.

“எதுக்குடா அழுற? அவன் ஏதும் ஸ்டாரை ஏமாற்றி விட மாட்டான்ல்ல?”

இல்ல சிம்மா. நிச்சயமாக ஏமாற்ற மாட்டான். அவனுக்கு நட்சு என்றால் எவ்வளவு உயிர்ன்னு நானும் நேரிலே பார்த்திருக்கேன்.

“ஓ அப்படியா!” என்று ஏமாற்றமாக சிம்மா சுபிதனை பார்த்து, “எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு” என்று அவன் வீட்டிற்கு சென்றான்.

சுபிதன் உள்ளே செல்ல, ஆட்கள் கம்மியாக இருந்தனர். உதிரனுடன் பேசிக் கொண்டிருந்த நட்சத்திரா, சுபிதனை பார்த்து சிம்மாவை தேடினாள்.

அண்ணா, “நீ சாப்பிட்டு வா” என்று உதிரனை அனுப்ப, “மாமா இரு..நானும் வாரேன்” என்று ரித்திகா சொல்ல, ஏய், “உட்காரு எழுந்த அவ்வளவு தான்” என்று கண்டிப்புடன் அவள் அம்மா ராதா கூறினார்.

“ராதான்னு பெயரை வச்சுட்டு சகுனி வேலைய பாரு” என்று ரித்திகா சொல்ல, அம்மா உன்னை ரித்து “சகுனி” ன்னு சொல்றா? என்று மகிழ் போட்டு விட்டேன்.

டேய், “இரு. வந்து உன்னை பார்க்கிறேன்” என்று ரித்திகா ஓட, “நில்லுடி” என்று ராதா எழுந்தார். அனைவரும் சிரித்தனர். ஆனால் நட்சத்திரா முகத்தில் சிரிப்பே இல்லை.

உதிரன் எழுந்து சிம்மாவை தேடினான். அவன் வீட்டில் இருக்க, முதல் முறையாக உதிரன் அவன் சொந்த அத்தையான அன்னம் வீட்டிற்குள் செல்கிறான். வீடு அமைதியாக இருக்க, சிம்மா..என்று சத்தமிட்டான்.

சிம்மா அவன் அறையிலிருந்து வெளியே வந்தான். “வாங்க மச்சான்” என்று அவனை அமர சொல்ல, இருக்கட்டும். “நீ என்ன பண்ற?”

நான் நாளைக்கு நேர்காணலுக்கு போகணும்ல்ல. அதான் எடுத்து வச்சிட்டு இருக்கேன்.

“எங்கே நடக்கும்?”

சென்னை தான்.

“ஓ..போயிட்டு எப்ப வருவ?” உதிரன் கேட்டான்.

சென்று மூன்று நாட்களுக்கு பின் வரலாம்ன்னு நினைக்கிறேன்.

“ஏன்?”

மச்சான், இங்க தங்க விருப்பமில்லை.

“ஏன்? செல்லம்மாவால் தான?”

சிம்மா அமைதியாக இருந்தான்.

சிம்மா இந்த இருநாள் நான் அவளை பார்த்துக்கிறேன். நீ போயிட்டு வந்து ஒரு வாரம் மட்டும் பார்த்துக்க முடியுமா?

ஒரு வாரமா?

மச்சான், நேர்காணலில் செலக்ட் ஆகிட்டா ஒரு வாரம் தான் நேரம் இருக்கும். உடனே கிளம்பணும். மூன்று மாதம் ஹைதரபாத்தில் பயிற்சி இருக்கு. பின் தான் போஸ்டிங் கிடைக்கும்.

“அப்படியா?” ஓ.கே, நான் பார்த்துக்கிறேன் என்றான் உதிரன்.

“நீங்க எங்கேயும் போகணுமா?” சிம்மா கேட்டான்.

ம்ம்..என்னோட ஓன் பிராஜெக்ட்டை நான் அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பி வச்சேன். அவங்க நாளை மறுநாள் வர சொல்லி இருக்காங்க.

“எங்க போகணும் மச்சான்?”

பெங்களூரு.

ஸ்டார் சென்னைக்கு செல்லும் போது உடனிருப்பீங்கன்னு நினைச்சேன்.

ஆக்சுவலா இந்த ஆராய்ச்சி கூடத்தின் மெயின் பிராஞ்ச் “யூ. எஸ்” ல்ல இருக்கு. சென்னையில இல்லை. பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில இருக்கு. நான் இப்ப செல்லம்மாவிடம் பேசிட்டு தான் வாரேன். அவளை பெங்களூருக்கு அழைத்தேன். அவனை விட்டு வர மாட்டேன்னு சொல்றா? தனியா விடவும் பயமா இருக்கு. குழந்தை பிறந்தால் அவளால் மட்டும் எப்படி சமாளிக்க முடியும்? உதிரன் கேட்டான்.

“தனியா எதுக்கு சமாளிக்கணும்? அதான் நரசிம்மன் இருக்கான்ல்ல?”

இருக்கான். அவனுக்கு இன்னும் இரண்டு கேஸை அங்கே முடிச்சிட்டு வரணுமாம். இரு வருடமாகுமாம். அவள் அவனுக்காக சென்னையில் காத்திருக்க போவதாக சொல்கிறாள். என்ன செய்யன்னு தெரியலை.

“இரு வருடமா?” இந்த நிலையில் இப்பொழுது இவளை தனியா விட்டதே தப்பு. “இரு வருடம் வேற ஆகுமா?” சிம்மா கோபமாக கேட்டான்.

“என்ன செய்வது? அவள் பிடிவாதம் உனக்கும் தெரியும் தான?”

“அதுக்காக? இந்த நேரத்தில் என்ன பிடிவாதம் வேண்டி இருக்கு?” சிம்மா கேட்க, உதிரன் அமைதியானான்.

தலையை அழுத்தமாக கோதிய சிம்மா, மச்சான் மூன்று மாதத்திற்கு பின் நான் சென்னை வந்து விடுவேன். பின் அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் மச்சான் அவன் ஸ்டாரை ஏமாற்றினான்னா அவனை சாவடிக்காமல் விட மாட்டேன் என்றான் சிம்மா. உதிரன் புன்னகையுடன் அவனை பார்த்தான்.

தேங்க்ஸ்டா மாப்பிள்ள, உன்னை அவ மிஸ் பண்ணிட்டா. அதான் கஷ்டமா இருக்கு என்றான் உதிரன்.

அண்ணா, “என்ன பண்ற? மாமாவை கட்டிபிடிச்சிட்டு இருக்க?” ரித்திகா இருவரிடமும் வந்தாள். உதிரன் நகர்ந்து, கண்ணை துடைத்தான். அவள் யோசனையுடன் இருவரையும் பார்த்து, “இப்ப எனக்கு என்ன தோணுது தெரியுமா? இருவரும் வீட்டை விட்டு ஓட பிளான் பண்ற மாதிரி தெரியுதே!” என்று குறுகுறுவென உதிரனை பார்த்தாள்.

“வீட்டை விட்டு ஓடவா?” சிம்மா சிரித்தான்.

அண்ணா,” ரொம்ப நடிக்காத? உன்னோட கஷ்டம் எனக்கு நல்லா தெரியுது? எதுக்கு உன்னையும் எல்லாரையும் ஏமாற்ற நினைக்கிற?” ரித்திகா கேட்க, சிம்மா முகம் மாறியது.

உடனே மூஞ்சியை தூக்கி வச்சுக்காத. அண்ணியோட ப்ரெண்ட்ஸ் ஊருக்கு கிளம்புறாங்க. அதான் அம்மா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. அப்புறம் அண்ணி முன்னாடி மூஞ்சிய தூக்காத. உன்னோட “க்யூட் ஸ்மைல்லை காட்டு” என்று கண்ணடித்தாள்.

சரி, “வாங்க போகலாம்” என்று மூவரும் வெளியேறினர். வரிசையாக எல்லாரும் நட்சத்திராவிற்கு ஒவ்வொரு பதார்த்தமாக ஊட்டி விட்டுக் கொண்டிருந்தனர்.

“இங்க என்ன நடக்குது?” உதிரன் கேட்க, அவளுக்கு உங்க அம்மா நினைவு வந்திருச்சு. “அழுதால் அதான் இப்படி?” என்று மிரு சொல்லி விட்டு சிம்மாவை பார்த்தாள். நீங்க எல்லாரும் கூட அவளுக்கு ஊட்டி விடுங்க என்று சுபிதன் சொல்ல, முதலில் ரித்திகா ஊட்டினாள். பின் உதிரன் ஊட்டி விட்டு, எதையும் நினைக்காத. எல்லாம் சரியாகும் என்றான்.

சிம்மா அருகே வர, நேராக அவன் கண்ணை பார்த்தாள் நட்சத்திரா. அவனுக்கு அப்பார்வை ஏதோ செய்தது. அவனும் ஊட்டி விட, அவளது கண்ணீர் துளிகள் சிம்மாவின் கையில் பட்டது. அவன் அவளை பார்க்க, அவள் கண்ணீருடன் தான் இருந்தாள். சிம்மா அவளை பார்த்துக் கொண்டே விலகினான்.

பாட்டி ஊட்டி விட வந்தார். பாட்டி முடிக்கவும், எனக்கு போதும் பாட்டி. பசிக்கலை என்றாள்.

“பசிக்கலையா?” இப்ப தான்டி நீ நல்லா சாப்பிடணும் என்றார் பாட்டி.

“நான் அப்புறம் சாப்பிடவா?” அவள் கேட்க, பாட்டியும் அவளை விட்டு விட்டார். மிருளாலினியும் சுபிதனும் கிளம்பினார்கள். சிம்மா..நீ இங்கிருக்கும் வரை அவளை பார்த்துக்கோ சுபிதன் சொல்ல, “எல்லாரும் என்னிடம் சொல்கிறார்கள்? அவனுக்கு தெரிந்தால் என்னவாகும்?” என்று யோசனையுடன் தலையசைக்க, அவர்கள் கிளம்பினார்கள்.

நட்சத்திரா அவளறைக்கு சென்று ஆடையை மாற்றி விட்டு படுத்துக் கொண்டாள். சிம்மா கிளம்பப் போகிறான் என்று ரித்திகா சொன்னது அவள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. அவள் மனம் வலித்தது.

“என்னாச்சும்மா?” பயமா இருக்கா அன்னம் கேட்க, “நான் உங்களை கட்டிக்கவா அத்தை?” என்று நட்சத்திரா கேட்டாள்.

அவர் அவளை அணைக்க, மனதில் இருந்த வலி தாங்க முடியாமல் அழுதாள். அவள் அழுவதை பார்த்து பதறி, “எதுக்கும்மா இப்படி அழணும்?” அன்னம் கேட்க, ஒன்றுமில்லை அத்தை. நான் படுத்துக்கவா? என்று கேட்டாள்.

அவளை படுக்க வைத்து விட்டு அன்னம் வெளியே வந்து உதிரனிடம் அழுததை சொன்னார்.

“அழுகிறாளா?” என்று உதிரன் உள்ளே வந்து நட்சத்திராவிடம், “பிரச்சனை ஏதும் இல்லைல்லடா?” என்று கேட்டான்.

“இல்லண்ணா” என்று அவன் மடியில் படுத்துக் கொண்டாள். உதிரன் சிந்தனையுடன் அவளை பார்த்தான்.

அன்றிரவு சாப்பிட்டு அறைக்கு சென்ற நட்சத்திராவை காண அறைக்கு சென்றான் சிம்மா.

மாமா, “உள்ள வாங்க” என்று அவனை அழைத்து அமர சொன்னாள். அவன் அமர அவனருகே மெதுவாக அமர்ந்தாள் நட்சத்திரா.

“நான் நாளை கிளம்புகிறேன்” என்றான் சிம்மா.

“பெஸ்ட் ஆஃப் லக்” மாமா.

அவன் அமைதியாக இருந்தான்.

மாமா..நட்சத்திரா அழைக்க, சிம்மா அவளை பார்த்தான்.

“என்னால ரொம்ப கஷ்டப்பட்டீங்கல்ல?” இப்ப இருக்கும் தைரியம் அப்ப இருந்திருந்தால் நான் அன்றே உங்களுக்கு ஓ.கே சொல்லி இருப்பேன். என்னால உங்க வாழ்க்கை பின்னாடி போயிருச்சு மாமா. இனி உங்க வாழ்க்கையில் நானில்லை. நீங்க முன்னாடி இருக்கணும் மாமா. எல்லாரும் உங்களை பற்றி நல்லவிதமாக பேசுவதை நான் கேட்கணும். அதை விட சந்தோசம் ஏதுமிருக்காது என்றாள்.

“எதுக்கு இப்ப இதெல்லாம் பேசுற? அவனுடன் ஏதும் பிரச்சனையா?”

இல்ல மாமா, அவர் மொத்தமாக கேரளாவில் இருக்கணுமாம். அதான் நான் கொஞ்ச நாள் மிரு, சுபியுடன் இருந்து விட்டு அவரை திருமணம் செய்து கேரளாவிலே தங்கலாம்ன்னு இருக்கேன் என்றாள்.

“என்ன? கேரளாவா?”

ஆமா மாமா, அவர் எடுத்த கேஸை நல்லபடியாக முடித்ததால் அவருக்கு பாராட்டு கிடைத்ததாம். நானும் அவர் பக்கத்திலே இருக்கணும்ன்னு ஆசைப்படுறார். குழந்தை அவர் அருகே இருக்கும் போது பெற்றெடுக்கணும்ன்னு நினைச்சேன். இப்ப அதுவும் நடக்கப் போகுது என்று சிம்மாவை பார்த்தாள்.

அவன் தலைகவிழ்ந்து அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்து கொள்வோம்.

“இப்ப அவரை தவறாக ஏதும் நினைக்க மாட்டாங்களா?” சிம்மா கேட்டான்.

இல்ல மாமா, பேசலாம். ஆனால் கேரளாவில் புதிதாக தான வாழ்க்கையை தொடங்கப் போறோம். அதனால் நம் சென்னை அளவிற்கு இருக்காது. எங்களுக்கு புதிது தானே!

சிம்மாவை மீறியும் அவன் கண்ணீர் தரையில் சொட்ட, நட்சத்திராவும் கண்ணை துடைத்து விட்டு, மாமா.,என்று மறுபடியும் அழைத்தாள். அவன் கண்ணீருடன் நிமிர, அவனை நெருங்கி அவன் கண்ணீரை அவளது புடவையில் துடைத்து விட்டாள். அவன் வாய் நடுக்கத்துடன் தந்தியடிக்க, அவன் கையை இழுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.

மாமா, “பையனிடம் ஏதாவது பேசுங்க” என்றாள்.

சிம்மா ஏக்கமுடன் அவளை பார்த்தான். மாமா, “பேசுங்க” என்று அவள் கண்ணீரும் வந்தது. அவள் கண்ணீரை துடைத்து விட்ட சிம்மா, குழந்தையிடம் பேசினான்.

நீங்க பையனாக இருந்தாலும் பொண்ணாக இருந்தாலும் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க. அவளுக்கு யாரிடமும் பேசி அதிகமாக பழக்கமில்லை. பழகினாலும் யார் எப்படின்னு பார்த்து பேச மாட்டா. உங்க அப்பா அம்மாவை திட்டினால் நீங்க அவள் பக்கம் தான் இருக்கணும். அவ செய்றது தான் சரின்னு நினைப்பா. நீங்களும் உங்க அப்பாவும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. நீங்களும் அம்மா சொன்ன பேச்சை கேட்டு நடந்துக்கணும். பிடிவாதம் பண்ணக் கூடாது. அப்புறம் உங்களுடனும் சின்னபிள்ளை தனமா சண்டை போடுவா. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க என்று அவளை பார்த்தான்.

வாயில் கையை வைத்து அவள் அழ, சிம்மா நட்சத்திரா கையை எடுத்து விட்டு அவளுக்கு இடப்புறமாக அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு அவனும் அழுதான். சிம்மா பேசியதை வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் உதிரன் கலங்கியவாறு.

பின் விலகி, ஸ்டார் நான் நாளைக்கு நேர்காணல் முடிந்து மறுநாளே வந்து விடுவேன். ஒரு வாரம் முழுவதும் இங்க தான். நான் வரலாமா? என்று சிம்மா கண்ணீருடன் கேட்டான்.

கண்டிப்பா மாமா, எதுவும் மாறப் போறதில்லை. ஆனால் கிடைக்கும் நேரத்தை நானும் வீணாக்க விரும்பலை. நாம ப்ரெண்ட்ஸாகவாது பழகிக்கணும் என்றாள்.

சரி, நான் வாரேன் என்று அவன் எழுந்து சென்றான். சிம்மா சென்னை செல்ல, உதிரன் நட்சத்திரா அருகிலே இருந்தான். உதிரன் செல்லப் போவதை யாரிடமும் சொல்லவில்லை. சிம்மாவும் சொல்லவில்லை. ரித்திகாவிற்கும் ஏதும் தெரியாது. அதற்கு மறுநாள் நல்ல செய்தியுடன் அல்லி நகரம் வந்தான் சிம்மா.

அனைவரும் ஸ்வீட் எடுத்துக் கொள்ள, நட்சத்திராவும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினாள். அன்று இந்த மகிழ்ச்சியில் வந்த அனைவரும் கிளம்பினர்.

பிரபசர் சார், நாளை கல்லூரியில் பார்ப்போம் என்று ரித்திகா உதிரனிடம் சொல்லி செல்ல, அவனுக்கும் கஷ்டமானது. அன்றிரவு அன்னம், பரிதி, நட்சத்திராவிடம் பெங்களூர் செல்வதை சொன்னான் உதிரன்.

என்னப்பா திடீர்ன்னு? அப்ப பாப்பா? பரிதி கேட்டார்.

மாமா, மச்சான் பார்த்துப்பாராம். அவள் கேரளா போகிறாள் என்று இருவரும் சொல்ல, அம்மாடி நீ போகணும்மா. நீ வேணும்ன்னா இங்கேயே இரேன் அன்னம் சொல்ல, எல்லார் கண்ணும் கலங்கியது.

இல்ல அத்தை, “நாங்க போகணும்” என்று அவள் வயிற்றை தொட்டாள்.

“சரிம்மா” என்று அனைவரும் அமைதியானார்கள். இது என்னோட நம்பர். ஏதும் தேவைன்னா, இல்லை பிரச்சனைன்னா கால் பண்ணு என்று உதிரன் சொல்ல, நட்சத்திரா அவனை அணைத்து அழுதாள். பின் அனைவரும் உறங்க சென்றனர்.

காலை எழுந்தவுடன் உதிரன் அனைவரிடமும் சொல்லி நட்சத்திராவை பார்த்துக் கொண்டே கிளம்பினான். அவன் ஏர்ப்போர்ட் செல்ல, அப்பொழுது தான் ரித்திகாவிற்கு விசயம் தெரிந்தது. அவள் அம்மா, அப்பாவிற்கு கடிதமாக எழுதி வைத்து விட்டு உதிரனை காண யாரையும் உதவிக்கு அழைக்காமல் தனியாக ஏர்ப்போர்ட் சென்றாள்.

ஆனால் உதிரன் சென்ற விமானம் பறக்கவும், அவள் செல்லவும் சரியாக இருந்தது. அவள் அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள். எல்லாரும் அவளை வேடிக்கை பார்த்தனர்.

ரித்திகாவின் பெற்றோர் பயத்தில் சிம்மாவிடம் சொல்ல, அவனுக்கு எங்கிருப்பால் என்று புரிந்து வேகமாக சென்றான். அவள் அழுது கொண்டிருந்த போது அவள் முன் வந்து நின்றான் சிம்மா.

அண்ணா, “மாமா சொல்லாமல் போயிட்டாங்க” என்று தேம்பி தேம்பி அழுதாள். ரித்திகாவை அவன் வீட்டிற்கு அழைத்து செல்ல, அவள் அம்மா ராதா கோபத்தில் அவளை அதிகமாகவே அடித்து விட்டார். ரித்திகா கல்லூரிக்கு செல்லாமல் இருந்தாள்.

சிம்மா பயிற்சிக்கு செல்லும் நாளுக்கு முந்தைய நாள் நட்சத்திராவை பார்க்க அன்று போல் அறைக்கு வந்தான். அவள் அழுது கொண்டிருந்தாள்.

சிம்மாவிற்கு அவளை தொட்டு ஆறுதலளிக்கவே தயக்கமாக இருந்தது.

அழாத ஸ்டார். உன்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துக்கோ. கவனமா இரு. இது என்னுடைய நம்பர். எதும் உதவி வேணும்ன்னா கால் பண்ணு. நான் கேரளாவிற்கே வந்து விடுவேன். எதற்கும் பயப்படாத. அவர் ஏதும் பிரச்சனை செய்தால் சொல்லு என்று சிம்மா தாழ்வான குரலில் சொல்ல, மாமா, “இதை வச்சுக்கோ” என்று அவன் கையில் ஸ்டார் செயினை பரிசாக கொடுத்தாள்.

சிம்மா கண்ணீருடன் அவளை பார்க்க, அவளோ கண்ணீரை துடைத்து, மாமா..நீ பெரிய இடத்துக்கு வரணும். உணவை வெளிய வாங்கி சாப்பிடாதே! நீ பயிற்சி முடித்து வரும் போது நான் இங்கு இருக்க மாட்டேன் என்று பேச முடியாமல் அவள் நிறுத்த, சிம்மாவின் கட்டுப்பாடுகள் உடைந்து அவளை அணைத்தான். இருவரும் அழுதனர்.

“பெஸ்ட் ஆஃப் லக்” மாமா என்று சொல்லும் போது அவள் கண்ணீர் நிற்கவில்லை. சிம்மா அவளை நெருங்கி, “சாரி ஸ்டார்” என்று அவளது இதழ்களில் முத்தமிட்டான். அவள் அழுகை நின்றது. ஆனால் அவன் மனம் குற்றம் செய்தது போல் வலித்தது. அவன் விலகி வேகமாக வெளியேற, மாமா..என்று அழைத்த நட்சத்திரா, நீ என்னிடம் எதிர்பார்த்தது என்று பிளையிங் கிஸ் கொடுத்து, “ஐ லவ் யூ மாமா” எப்போதும் என்றாள். சிம்மா கண்ணீருடன் சென்றான்.

இருவரின் இந்த காதலை பார்த்து பரிதி திகைத்து நின்றார். இந்த பொண்ணு அவனை காதலிக்கிறாளா? இல்லை நம்ம பிள்ளையை காதலிக்கிறாளா? என்று சிந்தனையுடன் அவளறைக்கு அருகே வந்தார். நட்சத்திரா வயிற்றில் கை வைத்து, “எல்லாம் முடிந்து விட்டது” என்று கதறி அழுது கொண்டிருந்தாள்.

மறுநாள் ஹைதராபாத் கிளம்பும் சிம்மா, நட்சத்திராவை காண துடித்துக் கொண்டிருந்தான். அவள் வெளியே வரவேயில்லை.

சிம்மா, பாப்பாவை நாங்க பார்த்துக்கிறோம். நீ கிளம்பு என்று பரிதி சத்தமாக சொல்ல, வேகமாக சன்னல் வழியாக செல்லும் சிம்மாவை கண்ணீருடன் பார்த்தாள். பரிதிக்கு அதிகப்படியாக சந்தேகம் எழுந்தது.

தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்க, இடம் கொடுப்பாளா நம் சிம்மாவின் ஆசைகாதலி? அவன் சென்ற ஒரே வாரத்தில் யாரோ ஒருவன் “நரசிம்மன்” என்ற பெயரில் எல்லாரிடமும் அறிமுகமாகி, நட்சத்திராவை அழைத்து சென்றான். பரிதி அவனிடம் நிறைய கேள்விகளை கேட்டு உறுதியாக “இவன் தான் நரசிம்மன்” என்று நம்பி விட்டார். அந்த அளவிற்கு அவனுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பினான் சுபிதன். எல்லாரும் நம்பி விட்டனர். நட்சத்திராவும் அவ்வூரை விட்டு கிளம்பினாள்.

ரித்திகா யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஆனால் படிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். சுட்டித்தனம் செய்து கொண்டிருந்த தன் பொண்ணு அமைதியாக இருப்பதை நினைத்து அவளது பெற்றோர்கள் வருந்தினர்.

பயிற்சி முடிந்து வந்த சிம்மாவிடம், நட்சத்திரா முன்னதாக சென்றதை சொல்ல அவனுக்கு அப்பொழுது பெரியதாக சந்தேகம் வரவில்லை. ஆனால் இனி தான் அவளுக்கான டாஸ்க் ஆரம்பமாகப் போகுது என்று எந்த நினைவும் இல்லாமல் சென்னையில் இருந்தாள் நட்சத்திரா.

இதற்கு முன்னான கடந்த காலத்தில் நட்சத்திராவும் சிம்மாவும் தேனீயிலிருந்து வந்த மூன்று வருடத்தில் சந்தித்து இருப்பார்கள். ஆனால் இப்பொழுது மாற்றம் ஏற்பட்டு உள்ளது. என்ன மாற்றம் என பார்க்கலாமா?

                     (ஐந்து வருடங்களுக்கு பிறகு)

சிவனாலத்தில் ஒரு பொண்ணு சோர்வுடன் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளை கடந்து நிறைய ஆட்கள் வழிபாடு முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது “வேல்விழி, கிருபாகரன் தம்பதியினரின் செல்வ புதல்வன் மனநல மருத்துவரான தமிழினியன்” அந்த பக்கம் பெற்றோருடன் வந்து கொண்டிருந்தான்.

இனியா, அந்த பொண்ணை பாரேன்டா. கண்ணிமைக்காமல் ஓரிடத்தையே வெறித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா, “ஏதாவது பிரச்சனையா இருக்கும். மனஅழுத்தமாக இருக்கும்”. அதான் இவ்வாறு அமர்ந்திருக்கிறாங்க என்று அப்பா, “அர்சு எங்க?” என்று கேட்டான்.

ஸ்வீட்டா..என்று நான்கு வயது சிறுவன் ஓடி வந்து தமிழினியனை அணைத்துக் கொண்டான். அந்த பொண்ணுக்கு இவர்கள் பேசுவது கேட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அதே தருணத்தில், வெண்மையான பட்டு சட்டை, வேஷ்டியில் சிம்மராஜன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு எதிராக சாதாரண பூனம் புடவையில் வந்த நட்சத்திரா, சிம்மாவை பார்த்து அப்படியே நின்றாள்.

மாமா..என்று கண்கள் கலங்க அவனிடம் ஓட காலை எடுத்து வைக்க, அவன் பின் அன்னமும் பரிதியும் வந்தனர். அப்படியே நின்று விட்டாள்.

இதற்கு முன் இதே போல் சிம்மாவை பார்த்த உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது. அனால் அப்பொழுது அன்னமும் பரிதியும் இல்லை. “என் கனவில் வந்தது போல் இருக்கே?” சிந்தித்தாள் நட்சத்திரா.

நட்சத்திராவை பார்த்த சிம்மா மனதில் தடுமாறினாலும் வெளியே எந்த உணர்வும் காட்டாமல் அவளிடம் வந்தான்.

மாமா..அவள் அழைக்க, “எப்படி இருக்க ஸ்டார்?” அவன் கேட்க, ம்ம்…ஃபைன் மாமா என்றாள். அன்னமும் பரிதியும் அவளை பார்த்து புன்னகையுடன் வேகமாக வந்தனர்.

“பாப்பா, எப்படி இருக்க? கேரளாவில் இருந்து எப்பொழுது வந்தீங்க? உன்னோட கணவன் எங்கம்மா? வரலையா?” பரிதி கேட்க, அவள் முகம் வாடியது.

“என்னாச்சும்மா?”

அவள் கண்ணீர் சொட்டு சொட்டாய் வர, அன்னம் பதறி அவளிடம் வந்தார்.

“அவர் இப்ப இல்லை மாமா” என்று பரிதியை பார்த்தாள்.

“இல்லைன்னா?” சிம்மா கேட்க, மாமா ரௌடிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

“என்னது?” அன்னம் பதற, “அப்படியா”? என்று கதை கேட்பது போல் சிம்மா கேட்டான்.

சிம்மா, பரிதி கோபமாக சத்தம் கொடுத்தார்.

அப்பா, பொறுமை..பொறுமை..என்றான் சிம்மா.

அங்கே அர்சுவுடன் வந்து கொண்டிருந்த தமிழினியன் நின்று விட்டான். சோர்வுடன் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த மிருளாலினி நட்சத்திராவை பார்த்து அழுது கொண்டே அவளிடம் வந்தாள்.

இனியா, “அந்த பொண்ணு நம்ம நட்சத்திராவை நோக்கி செல்கிறாள்” என்று அவன் அம்மா வேல்விழி கூற, தமிழினியன் கண்கள் கலங்கி இருந்தது. அனைவரும் நகர்ந்தனர்.

பேச வந்த சிம்மா பேச்சு, மிருளாலினியின் சத்தத்தில் தடைபட்டது.

சிம்மா, மிருடா அன்னம் சொல்ல, நட்சத்திரா முகம் கடுகடுவென மாறியது.

“நட்சு” என்று ஓடி வந்து மிருளாலினி நட்சத்திரா கையை பிடிக்க, நட்சத்திரா அவள் கையை உதறி விட்டு பின்னே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். எல்லாரும் அதிர்ந்து நட்சத்திராவை பார்த்தனர்.

நட்சு..என்னை மன்னிச்சிரு. நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிரு என்று அழுதாள் மிருளாலினி. கோவிலுக்கு வந்த அனைவரும் அவர்களை பார்த்தனர்.

வேகமாக அவள் கையை மிருளாலினி பிடிக்க, நட்சத்திரா கோபமாக நம் நட்பு என்றோ முறிந்து விட்டது. போ..என்று மிருளாலினியை பிடித்து தள்ளினாள். மிருளாலினி தமிழினியன் மீது மோதி நின்றாள் கண்ணீருடன்.

சாரி..சாரி என்று மீண்டும் நட்சத்திராவிடம் சென்று, அவளை நிறுத்த, “ஸ்டார் என்ன பண்ற?” என்ற தமிழினியனின் சத்தத்தில் சிம்மாவும் அவன் குடும்பமும் உறைந்து நின்றனர். மிருளாலினியும் அவனை பார்த்தாள்.

ஸ்டாரா? என்று மிருளாலினி தமிழினியனை பார்த்து விட்டு சிம்மாவை பார்த்தாள். இப்பொழுது தான் வேல்விழியுடன் வந்த “அர்சலனை” அனைவரும் பார்த்து திகைத்தனர். தமிழினியன் அவன் குடும்பமும், சிம்மா குடும்பமும், மிருளாலினியும் திகைத்து பார்த்தனர்.

நட்சத்திராவின் மகன் “அர்சலன்”. அச்சு அசலாக சிம்மா போல் இருந்தான்.

பாப்பா, பையன்? என்று பரிதி பதட்டமாக கேட்டார்.

மாமா, அதெல்லாம் ஒன்றுமில்லை. சொந்த அத்தை, சித்தி போல் பசங்க இருப்பாங்கல்ல. அது போல தான் “சிம்மா மாமா போல் என் மகன் இருக்கான்” என்று நட்சத்திரா சமாளிக்க பார்த்தாள்.

“அப்படி இருந்தாலும் உருவ ஒற்றுமை நூறு சதவீதம் பொருந்தாது ஸ்டார்” தமிழினியன் சொன்னான். எல்லாரும் சிம்மாவை பார்த்தனர். அவன் கோபமாக நட்சத்திராவை வெறித்து பார்த்தான்.

ஸ்வீட்டா, “இந்த அங்கிள் என்னை போலவே இருக்கார்ல்ல?” என்று அர்சு சிம்மாவிடம் ஓடி வந்தான். அன்னம் அவனை தூக்கினார். சிம்மாவும் அர்சுவை பார்த்தான்.

அம்மா..என்று சிம்மா, அர்சுவை தூக்கிக் கொண்டு, உன்னோட பெயர் என்ன? என்று கேட்டான்.

“மை நேம் இஸ் அர்சலன்” என்றது பிள்ளை.

அர்சலனா? என்று மூவரும் மேலும் திகைத்தனர்.

மாமா, “அவனை விடுங்க” என்று நட்சத்திரா சிம்மாவிடமிருந்து அர்சுவை வாங்க வந்தாள்.

நில்லு..என்று சிம்மா சத்தமிட்டான். “நீ சொல்ற சொத்த காரணத்தை நான் நம்பணுமா?” சிம்மா கோபமாக கேட்டான்.

நிஜமாக தான் சொல்றேன் மாமா. இங்க பாருங்க என்று அவள் தன் போனில் நரசிம்மனாக நடித்தவனுடன் கேரளாவில் எடுத்த புகைப்படத்தை காட்டினாள். சிம்மா வாங்கி உற்று பார்த்து விட்டு, அவன் பெயர் நரசிம்மன் இவன் தான்னு ஒத்துக்கிறேன். ஆனால் அவன் போலீஸ் இல்லை என்றான் சிம்மா.

மாமா, அவர் போலீஸ் தான். அவரும் உங்களை போல் நான்கு வருடத்திற்கு முன் எஸ்.பி யாக தான் இருந்தார்.

இல்லை. அப்படி ஒருவன் எங்க டிப்பார்ட்மெண்ட்டில் இல்லை சிம்மா சினமுடன் நட்சத்திராவை நெருங்கினான்.

மாமா, அவர் கேரளாவில்..அவள் சொல்ல, நிறுத்து என்று சிம்மா கத்தினான்.

என்ன நினைத்தானோ தமிழினியன் சிம்மாவிடம், நான் இவரை பார்த்திருக்கேன். எனக்கு இவரை தெரியும். இவர் போலீஸ் தான் என்று நட்சத்திராவை பார்த்தான்.

இல்லை..இல்லை..இல்லை..நான் என்னோட ஸ்டாரின் நலனுக்காக இவனை பற்றி “ஏ. எஸ். பி”யாக பதவியில் நுழைந்த போதே விசாரித்தேன். இவன் முகமும் எதிலிலும் இல்லை. இவன் பற்றி போலீஸ் ரெக்கார்ட்ஸ் எதிலும் இல்லை என்று சிம்மா அடித்து கூறினான்.

“இல்ல சார்” என்று தமிழினியன் பேச தொடங்கவிருந்த சமயம், “நீ யார்? நான் தான் அவளை ஸ்டார்ன்னு அழைப்பேன். நீ எதுக்கு என்னை காப்பி பண்ணுற?” என வினாக்களை வரிசையாக தொடுத்தான் சிம்மா.

மாமா, இவர் பேமஸ் “மனநல மருத்துவர் தமிழினியன்” என்னுடைய தோழர்.

“தோழனா? அவன் எதுக்கு உன்னை ஸ்டார்ன்னு கூப்பிடணும்?”

மாமா, “என்னோட பெயர் ஆங்கிலத்தில் ஸ்டார் தான?” அவர் அவராக தான் கூப்பிடுகிறார்.  நட்சத்திரா தமிழினியனை பார்த்து, இதுக்கு தான் இனியன் சார் இப்படி கூப்பிடாதீங்கன்னு முதலிலே சொன்னேன் என்றாள்.

“சொன்னாயா ஸ்டார்?” என்று வீம்பாக தமிழினியன் நட்சத்திராவிடம் பேச, என்னமும் செஞ்சு தொலைங்க. பையனை எங்களோட கூட்டிட்டு போறேன் என்று சிம்மா சொல்ல, முடியாது. அவன் என்னோட பையன். என்னுடன் தான் இருப்பான் என்று சிம்மா அருகே வந்து அர்சுவை பிடுங்க, அவனை பார். என் போலவே இருக்கான். அவனை நான் தான் அழைச்சிட்டு போவேன் என்று சிம்மாவும் அவளை தடுக்க, ஸ்வீட்டா..என்று அர்சு தமிழினியனை பார்த்து கையை தூக்கிக் கொண்டு அழுதான்.

“பிள்ளைய வச்சிட்டு என்ன சண்டை போடுறீங்க?” வேல்விழி சத்தமிட்ட, “அன்னமும் சளைத்தவர் இல்லையே!” அவன் என் மகன் போல தான இருக்கான். எங்களுடன் தான் இருப்பான். என்று எல்லாரும் அடித்துக் கொண்டிருக்க, நிறுத்துங்க என்று கோபமாக தலையை பிடித்துக் கொண்டு கத்தினாள் மிருளாலினி.

அப்பொழுது தான் நினைவு வந்தவனாய், “தனியா வந்திருக்க? சுபி எங்க?” என்று சிம்மா கேட்க, நட்சத்திரா அக்கோவிலை கண்களால் அலசினாள்.

மிருளாலினி பேச்சற்று கண்ணீர் மட்டும் வந்தது.

“வேலையா இருக்கானாம்மா?” அவனுக்கு எங்க ஊரு ஸ்பெசல் நேந்திர சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று அன்னம் அவளை கவனிக்காமல் பேசிக் கொண்டே செல்ல, அவள் கண்ணீர் அழுகையாக அனைவரும் திகைத்து நின்றனர்.

“என்னாச்சுடி? அவன எங்க?” நட்சத்திரா கேட்க, நட்சு..அவன் அவன்..அவன்..இல்லைடி என்று கதறி அழுதாள். எல்லாரும் இவர்களை மேலும் வேடிக்கை பார்க்க, வா..என்று சிம்மா அர்சலனை கையில் வைத்துக் கொண்டு மிருளாலினி கையை பிடித்து கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி மரத்து நிழலுக்கு அழைத்து வந்தான். நட்சத்திரா பதட்டமாகவும் யோசனையுடனும் அவனை கடைசி சந்தித்த நினைவுகளுடன் அவர்கள் பின் வர, எல்லாரும் அவ்விடம் வந்தனர்.

“இல்லைன்னா? எங்க போயிருக்கான்? ஏதும் பிரச்சனையா?” சிம்மா கேட்க, நட்சு, “அவன் முழுதாக என்னை தனியா விட்டுட்டு போயிட்டான்டி” என்று கதறி அழுதாள்.

“என்னடி சொல்ற?” நட்சத்திரா கண்ணீருடன் மிருளாலினியை உலுக்க, ஆமாடி அவன் இப்ப உயிரோட இல்லைடி என்று கதறி அழுதாள் மிருளாலினி. அன்னம் கையிலிருந்த பழக்கூடையை கீழே விட்டார்.

இல்லை..இருக்காது என்று நட்சத்திரா அழ, “மிரு என்ன சொல்ற? அவன் நிஜமாகவே இறந்துட்டானா?” சிம்மா கேட்டான்.

ஆமா சிம்மா, “என்னோட சுபி என்னை விட்டு போயிட்டான்” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் மிருளாலினி.

நட்சத்திரா அழுது கொண்டு மிருளாலினியை அணைத்தாள். அன்னம் கதறி அழுதார். பரிதியை அழுது கொண்டே அணைத்த சிம்மாவிற்கு சுபிதனை பற்றிய அனைத்து நினைவுகளும் ஓடியது.

அப்பா, நம்ம பூசாரி அவனுக்கு ஆசி வழங்கலை. அவனை அவர் பார்த்த பார்வை தன் கண்ணில் நிற்கிறது என்று கதறி அழுதான் சிம்மா. அர்சலன் வேகமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விழுதை பிடிக்க முயன்று கொண்டிருந்தான். யாரும் அவனை கவனிக்கவில்லை.

என்னம்மா நடந்தது? பரிதி கேட்டார்.

நட்சு, அன்று நடந்த பிரச்சனையில கோபமாக எங்களை விட்டு போயிட்ட. நீ போன பின் அவன் என்னிடம் வந்து பேசுவான்னு காத்திருந்தேன். அவன் வந்தான். இருவருக்கும் சண்டை முற்றியது. கோபத்தில் என்னுடைய துணிகளை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். அவன் என் பின்னாடியே வந்தான். ஆனால் நான் கோபமாக அவனை தள்ளி விட்டு அவனை பார்த்துக் கொண்டே நான் நகர்ந்தேன். அப்பொழுது வந்த கார் ஒன்று என்னை இடிக்க வந்தது. சுபி விரைந்து என்னை தள்ளி விட்டான். ஆனால்..என்று உதடுகள் நடுங்க அவனை அக்கார் மோதி விபத்தாகி விட்டது. அவன் தலையிலிருந்து இரத்தம் கொட்டியது.

நட்சு, யாருக்காவது அடிபட்டால் யாராவது ஒருவராவது உதவிக்கு வருவாங்க. எங்களை சுற்றி அத்தனை பேர் இருந்தாங்க. ஒருவர் கூட வரலை,

சிம்மா உங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்க கூட இருந்தாங்க. யாருமே நகர கூட இல்லை. நானாக தான் அவனை ஹாஸ்பிட்டலுக்கு இழுத்து செல்ல முயன்றேன். என்னால் அவனை துக்கவும் முடியல. ஒருவர் கூட உதவிக்கு வரலை. ஹாஸ்பிட்டல் பக்கம் தான் இருந்தாலும் நான் அவனை இழுத்து செல்வதற்குள் அவன் என்னை விட்டு போயிட்டான் என்று அழுதாள்.

சாரிடி..என்று நட்சத்திரா மிருளாலினியை அணைத்தாள்.

மிருளாலினியின் வேதனையை பார்த்தது போல் அடுத்த எபிசோடில் நம் நட்சத்திராவின் வேதனையை பார்க்கலாமா?