அத்தியாயம் 47

“ஹேய், என்னடா அழுறீங்க? நான் நல்லா தான் இருக்கேன். தினமும் வந்துருவேன்” என்றான் காவியன்.

“அண்ணா” என்று ஜீவா காவியனை அழுது கொண்டே அணைக்க, அங்கே வந்தனர் அதிரதனும் எழிலனும். இவர்களை பார்த்து இருவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஜீவா, அழுறியா? எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும். இப்படி அழுற? நான் எங்கடா போகப் போறேன்? உங்களை பார்க்காமல் இருந்து விடுவேனா? என்று காவியன் சொல்லி விட்டு, “மாயாவை பார்த்துக்கோ” என்றான். ஜீவா மேலும் அழ, அவனை விலக்கிய பாட்டி..கவனமா இருங்க. நேத்ராவை பார்த்துக்கோங்க என்று அவர் சொன்னார்.

எல்லாரும் என்ன பண்றீங்க? அதிரதன் கேட்க, மிதுன் அதிரதனை அணைத்து “பார்த்துக்கோங்க சார்” என்று நகர்ந்து காவியனை பார்த்தான்.

மிதுன்..காவியன் அழைக்க, “நீ எதுவும் பேச வேண்டாம். சார் நாங்க கிளம்புறோம்” என்று அதிரதனிடம் சொல்ல, “இருங்கடா” என்று அதீபனை அழைத்தான். அலைபேசியை பார்த்து விட்டு அதீபன் வெளியே வந்தான்.

“பாட்டி அவனை பாருங்க” என்றான் காவியன்.

நீ இருய்யா..அவன நான் பார்த்துக்கிறேன். போக போக எல்லாமே சரியாகும் என்று அதிரதனை பார்த்து புன்னகைத்தார். அவன் புரியாமல் இவர்களை பார்க்க, கிருஷ்ணன் காவியனை அணைத்து, “நீ வரல. நாங்க வந்துருவோம்” என்றான் கண்ணீருடன்.

“எங்க போறீங்கடா? இருங்க கொஞ்ச நேரம் தான் நாங்களும் வாரோம்” என்று எழிலன் வெண்பாவை பார்த்தான். அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“இல்லண்ணா, நாங்க கிளம்பணும்” என்று அருணா நளனை பார்த்தாள்.

“நான் எல்லாரையும் பார்த்துக்கிறேண்ணா” என்று ஜீவா சொல்ல, நீ என்ன பார்த்துக்க போற? எழிலன் கேட்டான்.

கிளம்பலாமா? அதீபன் கேட்க, பாட்டி எழிலனிடம் வந்து, “அக்காவை நல்லா பார்த்துக்கோங்க. நேரமிருந்தால் வந்துட்டு போங்க” என்று கிளம்பினார்.

பாட்டி, இருங்க நானும்.. என்று எழிலன் ஆரம்பிக்க, அங்கே வந்த சங்கீதன் அவன் கையை பிடித்து பேச விடாமல் நிறுத்தினான்.

என்னாச்சுடா? அதிரதன் கேட்க, “சார் உள்ள வாங்க. தெரியும்” என்றான் சங்கீதன். காவியன் அதீபனுடன் செல்பவர்களை பார்த்துக் கொண்டே நிற்க, வாடா..என்று சங்கீதன் காவியன் தோளில் கை போட்டு அழைத்து சென்றான்.

“ஆமா, எதுக்கு எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” அதிரதன் கேட்டான்.

செழியனை பார்த்த நேத்ரா, “சார் உங்க எல்லாருக்கும் விருப்பம் இருந்தால் நான் அதிரதன் சாரை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் அவளை பார்க்க, அதிரதனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவன் எழிலன் காவியனை பார்க்க, அவர்களும் அமைதியாக நின்றனர்.

சார், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். எல்லாரும் எங்க ஊருக்கு வந்து எங்க வீட்ல ஒரு வாரம் தங்கணும். அதில் பிரச்சனை இருக்கு. வசதியெல்லாம் இருக்காது என்றாள்.

என்னம்மா வினு, பழிவாங்குறியா? தினகரன் கேட்டார்.

இல்ல அங்கிள். நானும் எழிலனும் வளர்ந்த சூழல், அப்பா இருந்த இடம்..அங்கிருக்கும் மனிதர்கள் எல்லாமே அம்மாவுக்கும் காவியனுக்கும் செழியன் சாருக்கும் முக்கியமாக தெரியணுமே? என்று சொல்லிக் கொண்டே அவர்களையும் சிவநந்தினியையும் பார்த்தாள்.

கம்பெனி வேலையெல்லாம் இருக்கே? அதீபன் கேட்க, ஏன் நிது நம்ம கம்பெனிய ஒரு வாரம் பார்த்துக்க கூட ஆள் இல்லையா? இத்தனை வருசமாக ஓய்வு கூட இல்லாமல் உழைத்தவர்களுக்கு ஓய்வாக இருக்கட்டுமே? என்று செழியனை பார்த்தாள்.

அவர் புன்னகையுடன், “சரிம்மா உன்னோட உடல் நிலை சரியாகட்டும். அப்புறம் போகலாம்” என்றார்.

வினு, உனக்கு நிறைய விசயம் உன் அப்பாவை பற்றி தெரியலை. உங்க அப்பாவோட பிரைவேட் அறையில் உன் அம்மாவை கூட விட்டிருக்க மாட்டார். அதில் என்ன இருக்குன்னு பார்க்க வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் என்றார் தினகரன்.

காவியன் அலைபேசி அழைக்க, எடுத்த காவியன் புன்னகையுடன் கவனித்தான்.

என்ன மச்சான்? நான் எதுக்கு அதிரதனை மச்சான்னு சொல்ல சொன்னேன்னு இப்ப புரிஞ்சதா? அந்த பக்கம் கேட்க, ம்ம்..ரொம்ப நல்லா புரிஞ்சது. ஆனால் அது நல்லா இருந்தது. ஆனால் நீ கூப்பிடும் மச்சான் எனக்கு அருவருப்பா இருக்கே? கண்டிப்பா என்னை அழைப்பன்னு நினைச்சேன். ஆனால் ரொம்ப சீக்கிரமே கூப்பிட்டுட்ட காவியன் சொல்ல,

அலைபேசியை பிடுங்கிய தினகரன், யாருடா நீ? முதல்ல நீ யாருன்னு சொல்லு? அப்புறம் பேசலாம் என்றார்.

அங்கிள், உங்க மனைவிய விசயத்தை மறைச்சுட்டீங்க போல. பரவாயில்லை இப்ப உங்க வீட்ல இன்னொரு அழகான பொண்ணு இருக்கா போல என்று அவன் சொல்ல, தினகரன் சங்கீதனை பார்த்தார்.

அலைபேசியை வாங்கிய அதிரதன், நான் உன்னை பார்க்கணும். சந்திக்கலாமா? எனக் கேட்டான்.

“எனக்கு போட்டியா நிக்கிறவங்கல்ல வீழ்த்திய பின் தான் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பேன்” என்றான் அவன்.

நான் அப்படி இல்லையே? “என் எதிரியை நேராக சந்தித்து பின் தான் வீழ்த்துவேன்” என்றான் கெத்தாக அதிரதன்.

நாம இதில் கூட எதிராக தானே இருக்கோம் அவன் சொல்ல, யா..யூ ஆர் கரெக்ட். அன்று ஹாஸ்பிட்டலில் இருந்து பயந்து ஓடியவன் நீ தான? இவ்வளவு பயத்தை வச்சிட்டு எதுக்குடா வேண்டாத வேலையெல்லாம் பார்க்குற? அதிரதன் கேட்க,

யாரு பயந்து ஓடினா? நான் நினைச்சிருந்தா எப்பவோ என்னோட நேத்துவ தூக்கிட்டு போயிருப்பேன். அவளாக வரணும். அதுக்கு தான் இத்தனையும்.

அதிரதன் சிரித்துக் கொண்டு, நல்லா கதை அளக்குறடா. கொலைகாரனை எப்படிடா அவளுக்கு பிடிக்கும்? பிடித்து உன்னிடம் வருவாளா அவள்? என கேட்டுக் கொண்டே நேத்ராவை பார்த்தான். அவள் கண்ணில் பயம் தெரிந்தது.

இதுக்கு முன் அவள் வெளிய இருந்தா. இப்ப நான் பக்கத்துல இருப்பேனே? அதிரதன் கேட்க, அதான் குடும்பம் மொத்தமும் சேர்ந்துட்டீங்கல்ல. எனக்கான நேரம் வரமலா போகும்? அவன் கேட்க,

ஓ..இதுவும் உனக்கு தெரிந்து விட்டதா? ரொம்ப நல்லது. நீ முடிஞ்சத பாரு என்று அலைபேசியை வைத்து விட்டு காவியனிடம் கொடுத்து அவன் தோளில் தட்டினான். அந்த பக்கம் அலைபேசி சல்லி சல்லியாக நொருங்கியது.

டேய் அதிரதா, உனக்கு எமன் நான் தான்டா. உன்னை சும்மா விட மாட்டேன்டா என கத்தினான் பரத் ராஜ்.

சிவநந்தினி, யசோதா டாக்டரை பார்க்க சென்றனர். அதிரதன் காவியனிடம் வந்து அவனை அணைத்து, “நீ எப்ப வேண்டுமானாலும் உன்னோட ப்ரெண்ட்ஸை பார்க்க அழைச்சுக்கோ” என்று எழிலனை பார்த்து, “நீயும்” என்று சொல்லி விட்டு நேத்ரா அருகே வந்தான்.

“வாங்க, இன்னும் கொஞ்ச நேரம் உள்ள இருந்தா அந்த நர்ஸ் பொண்ணு கத்திடும்” என்று பாட்டி அழைக்க, அனைவரும் சென்றனர். நேத்ரா காவியனையும் எழிலனையும் இருக்க சொல்லி கூற,

“அக்கா, நாங்க வெளிய இருக்கோம்” என்று இருவரும் வெளியேறினர். காவியன் அருகே செழியன் அமர, ரணாவிற்கு முகமெங்கும் சந்தோசம். நிதின் அருகே வந்து அமர்ந்து, “மாமா பார்த்தேல்ல இனி நாங்களும் சைட் அடிப்போம்ல” என்றாள்.

அவள் தலையில் தட்டிய ரேவதி, என்னடி சொன்ன? சத்தமாக கேட்க,  அய்யோ அத்தை, மானத்தை வாங்காதீங்க? என்றாள் ரணா.

நான் கேட்கதானடி செய்தேன்?

நிதின் புன்னகையுடன், “அம்மா இந்த சீக்ரெட் யாருக்கும் தெரியக்கூடாதாம். காவியனுக்கு மட்டும் தெரிந்தால் போதும்ல” என்று எழுந்தான் நிதின்.

நீ ஏதாவது பேசுன உனக்கு மாமான்னு மரியாதையெல்லாம் தர மாட்டேன் என்று ரணா பிளாக்மெயில் செய்ய, சங்கீதன் இடைபுகுந்து, அப்படின்னா.. அண்ணான்னு கூப்பிட்டுக்கோ என்று சிரித்தவாறு நிதுனுக்கு “ஹை பை” செய்தான். இருவரும் சிரித்துக் கொண்டே ரணாவை கேலி செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுதும் காவியன் பெரியதாக காட்டிக் கொள்ளவில்லை. தினகரனுக்கு அவன் சொன்ன நினைவிலே உலன்று கொண்டிருந்தார் .வேகமாக எழுந்து சங்கீதனை இழுத்துக் கொண்டு செழியனிடம் வந்து, “நாங்க கிளம்புறோம். அவன் பேசியது ஒருமாதிரியாகவே இருக்கு” என்றார்.

அங்கிள் நானும் வரவா? காவியன் கேட்க, “இன்னொரு நாள் வாப்பா” என்று அவர் செல்ல, செழியன் ஆட்களை அவருக்கு துணையாக வீடு வரை செல்ல சொல்லி பணித்தார். காவியன் அவரை பார்த்தான்.

ஆத்வி செழியனிடம் வந்து அமர்ந்தாள். என்னாச்சும்மா? அவர் கேட்க, அவரையும் காவியனையும் பார்த்து விட்டு “ஒன்றுமில்லைப்பா” என்றாள்.

நீங்க ஏதாவது பேசணுமா? நான் வேண்டுமானால் தள்ளி இருக்கவா? காவியன் கேட்க, “இல்லடா உனக்காக நான் தயங்கல” என்ற ஆத்விகா அவள் அப்பாவை பார்த்தாள்.

என்னம்மா? அவர் மீண்டும் கேட்க, பாட்டியும் அவர்களிடம் வந்து காவியன் அருகே அமர்ந்து கொண்டார்.

அப்பா, வினு அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருமா? ஆத்வி கேட்க, இல்ல நாம தான் பிரச்சனையை முடிக்கணும் என்றான் காவியன்.

எதுக்கு அப்படி பாக்குறீங்க? அவன் அக்காவை வேறொருவனோடு திருமணம் செய்து வைத்திருக்கான். அக்காவும் சாரும் கல்யாணம் பண்ணலைன்னா தான் பிரச்சனை வேற மாதிரி போகும். அதான் சொன்னேன் என்றான்.

ம்ம்..என்று அமைதியானார். எழிலனும் நளனும் தனியே இருப்பதை பார்த்து காவியன் எழுந்து அவனிடம் சென்று அமர்ந்தான். வெண்பாவை நினைத்து எழிலன் வருந்த, நளனும் அமைதியாக இருந்தனர்.

உங்க ஜூனியர் அங்க இருக்கும் போது வருத்தப்படலாமா? என்ற காவியன், சரி எல்லாரும் இப்ப எப்படி படிப்பாங்க? என்று நளனை பார்த்து, நீங்க அவங்களுக்கு உதவ போக மாட்டீங்களா? என்று கேட்டான். அவன் எழிலனை பார்த்தான்.

“அண்ணா, உன்னோட பதிலை தான் உன்னோட ப்ரெண்டு எதிர்பாக்குறார்” என்றான் காவியன்.

அண்ணனா? என்று எழிலன் கேட்க, ஓ…எனக்கு நீ அண்ணன் இல்லையா? தம்பியா? காவியன் கேட்க, எழிலன் அவனை அணைத்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

“நளா நாங்க உன்னை அங்க விட்டுட்டு போகிறோம்” என்றான் எழிலன். அவனும் எழிலனை கட்டிக் கொண்டான்.

உள்ளே அதிரதன் வினு அருகே சென்று அமர்ந்து, உண்மையிலே நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொல்றீயா? கேட்டான்.

“வேண்டாம்ன்னா விட்டுருங்க சார்” என்றாள்.

இப்பவும் சார் தானா? அதிரதன் கேட்க, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

ஏம்மா, நீ என்னோட மாமா பொண்ணு. நீ என்னை மாமான்னு கூப்பிடணும். சார்ன்னு சொல்ற?

எனக்கு நேரம் வேணும் சார். கல்யாணம் வேகமாக நடந்தால் கூட பரவாயில்லை. முதல்ல நம்ம எல்லாரோட பிரச்சனையும் முடியணும். அப்புறம் கூட எனக்கு நேரம் தேவைப்படலாம் என்று நேத்ரா அதிரதனை பார்த்தாள்.

ம்ம்..சுயர். டைம் தான வேணும். எடுத்துக்கோ. அதான் மேரேஜ்க்கு ஓ.கே சொல்லீட்டேல்ல.

உங்களுக்கு என் மேல கோபம் வரலையா? நேத்ரா கேட்க, ம்ம்..ரொம்ப இருந்தது. ஆனால் இப்ப இல்லை. நீ தான் என்னோட மாமா பொண்ணாச்சே கோபப்பட முடியுமா என்ன? என்று கண்ணடித்தான்.

சார், அசுவோட பையன்? நேத்ரா கேட்க, நம்ம பையனாகவே வளர்க்கலாம் என்றான்.

“தேங்க்யூ சார்” என்றாள்.

“சாரை மாமான்னு கூப்பிட்டால் நல்லா இருக்கும்” என்றான்.

“சார், நான் குட்டிப்பையனை பார்க்கணுமே!” என்று தவிப்புடன் கேட்டாள்.

நேத்ரா கையை பிடித்த அதிரதன், “மனசுக்குள்ளே வச்சி நீ கஷ்டப்படாத வினு” என்று சொல்ல, அவன் கையை அழுத்தி பிடித்து மீண்டும் அழுகையை கட்டுப்படுத்தினாள். அதிரதன் எழுந்து அவளருகே நெருங்கி வந்து அமர்ந்தான்.

வினு, அழுதிரு என்றான் அதிரதன். அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் வினுநேத்ரா.

நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன் அதி? யாரு என்னுடன் அன்றிரவு இருந்தான்னு தெரியாம.. ச்சே..நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு அதி என்று கதறி அழுதாள். அதிரதன் கண்கள் சிவக்க, “உன் முடிவு என் கையில் தான்டா” என மனதில் எண்ணிக் கொண்டே நேத்ராவை இறுக அணைத்தான். பத்து நிமிடமாவது அழுதிருப்பாள்.

அதிரதன் அவளை விலக்கி அவளது கண்ணை துடைத்து விட்டு, அவள் நெற்றியில் இதழ் பதித்தான். உன்னோட கடந்த காலம் இன்றோடு முடியுது வினு. அதை பற்றி மறந்து விடு. அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உன்னோட மனச அமைதியா வச்சுக்கோ.

உன் நினைவெல்லாம் நாங்களாக தான் இருக்கணும். உன்னை நான் கட்டாயப்படுத்தல. காத்திருக்கேன். தர்ஷனுக்கு நீ வேண்டும். புரிஞ்சுக்கோ. அவனுக்காகவாது எல்லாவற்றையும் மறக்க பாரு வினு.

“நாம தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்ல. அதனால..” என்று தயங்கி அவனை பார்த்தாள்.

“சொல்லு?” என்று அவள் கையை பிடித்துக் கொண்டே அதிரதன் கேட்டான்.

அவன் நம்மை அம்மா, அப்பான்னு அழைத்தால் உங்களுக்கு பிரச்சனை இல்லையே? அவள் கேட்க, வினு செள்ளியன் தர்ஷனை நம் இருவர் பொறுப்பில் தான் விட்டுட்டு போயிருக்கான். அதனால அவன் நம் பொறுப்பு மட்டுமல்ல. “நம் மூத்த மகன் தான் தர்ஷன்” என்று அதிரதன் சொன்னான்.

“நீங்க தான் பேசுறீங்களா? என்னால நம்பவே முடியல” நேத்ரா சொல்ல, புன்னகைத்த அதிரதன் “அவளது நெற்றியில் முட்டி நீ தான் என்னை பேச வைக்கிறாய்” என்றான்.

நானா? நான் எதுவும் செய்யலையே? அவள் அவனை பார்க்க, “உன் பாசம் தான் என் காதலையும் மிஞ்சி விட்டதே!” என்றான். அவள் புன்னகைத்தாள்.

நான் பையனை தூக்கிட்டு வாரேன். காவியன் தூக்கிய கொஞ்ச நேரத்திலே தூங்கிட்டான். வெளியே அமைதியா இருப்பதை வைத்து பார்த்தால் அவன் எழுந்தது போல தோன்றவில்லை. இரு தூக்கிட்டு வாரேன் என்று வெளியே வந்த அதிரதன் பார்த்தது காவியன், எழிலன், நளன் அணைத்துக் கொண்டிருந்ததை.

டேய், எல்லார் முன்னாடியும் என்ன பண்றீங்க? அதிரதன் கேட்க, நாங்க உங்கள மாதிரி லவ்ஸ்ஸா பண்ணிட்டு இருக்கோம் எழிலன் கண்ணை துடைத்துக் கொண்டே கேட்டான்.

நீங்க என்னமும் செய்யுங்க. நான் வந்த வேலைய பார்க்கிறேன் என்று தாட்சு தர்ஷனை கொடு என்று அவனை வாங்க, “பையன் தூங்கும் போது தொந்தரவு செய்யாதடா” பாட்டி சொல்ல, “என்னோட பையனை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றான்.

பாட்டி வாயில் கை வைத்து, கண்ணா என்ன சொல்ற? உன்னோட பையனா? ஆமா செள்ளியன் சொல்லீட்டு தான் செத்து போனான். நானும் வினுவும் தான் இவனோட அம்மா, அப்பா என்றான்.

செழியா, இவனை பாரு. எப்படி பேசுறான்? யாரோ குழந்தையை.. என்று பாட்டி சொல்ல, நிது அவரிடம் வந்து யாரோ குழந்தை என்றாலும் வினுவுக்கு தாலி கட்டியவன் தானே? அவனும் இப்ப தான் இல்லையே? “இந்த குழந்தையை பார்த்தால் கண்டிப்பாக வினு நம்ம ரதனை மனசால ஏத்துப்பா” என்றான் நிதின்.

அதெல்லாம் ஏத்துக்கிட்டு ரொம்ப நேரமாகுது. “என்ன! காதல் தான் அவளுக்கு இல்லை. வர வச்சிட்டா போச்சு” என்று அதிரதன் சொல்ல, ரேவதியும் எழுந்து எப்படியானாலும் வேறொருவரின் குழந்தை என்று சொன்னார். ரவிக்குமார் முறைக்க அவர் அமர்ந்தார்.

யார் ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் நாங்க இருவருமே மனசால ஏத்துக்கிட்டோம். நாங்க பார்த்துப்போம் என்று தர்ஷனை தூக்க, அவன் விழித்து அழுதான்.

அதிரதன் உள்ளே செல்ல, தம்பி அந்த பொண்ணு இப்பொழுதைக்கு ஓய்வா தான் இருக்கணும். பிள்ளைய அந்த பொண்ணிடம் கொடுக்காதீங்க என்று ரேவதி சொல்ல, “நான் பார்த்துக்கிறேன்” என்று அழும் தர்ஷனை வினுவிடம் கொண்டு வந்து நெருங்கி அமர்ந்து அவனை பிடித்திருந்தான்.

நேத்ரா அவனிடம் பேச, குழந்தை சிரிக்க ஆரம்பித்தான். அதிரதனும் அவளுடன் சேர்ந்து கொள்ள, அவர்களது சிரிப்பு சத்தம் வெளியே கேட்டது. ஒவ்வொருவராக வாசலருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

யசோதாவும், சிவநந்தினியும் அவர்களை பார்த்து, வழியில நின்று என்ன பண்றீங்க? என்று உள்ளே வந்து அதிரதனை ரசித்து பார்த்தனர். ஒரு குழந்தையுடன் அழகாக விளையாட்டு காட்டி பேசிக் கொண்டிருந்தான்.

யசோதா பேச்சை மாற்ற தற்செயலாக உள்ளே வந்ததை போல பேச்சு கொடுத்துக் கொண்டே தர்ஷனை தூக்கினார். எல்லாரும் உள்ளே வந்தனர்.

வினு, இன்று மட்டும் நாம இங்க தங்கணும்மா.. என்று யசோதா சொல்ல, சரிம்மா..என்று காவியனை பார்த்து பசங்க கிளம்பிட்டாங்களாடா? என்று கேட்டாள்.

ம்ம்..என்றான் காவியன் வருத்தமாக.

“அக்கா, நானும் அங்கே போகணும்” என்றான் நளன். அதிரதன் அவனை பார்க்க, மாலையில் மட்டும் படிக்க உதவ செல்லணும். அதை தான் சொன்னேன் என்றான் அவன்.

இப்பவே போகணுமா? என்று அதிரதன் நளனிடம் கேட்டுக் கொண்டே எழிலனை பார்த்தான்.

நளனும் தலையசைத்துக் கொண்டே எழிலனை பார்த்தான். அதான் முடிவெடுத்துட்டோம்ல்ல. அப்புறம் என்ன? போயிட்டு வா. நீ இப்படி பார்த்தால் தான் கஷ்டமா இருக்கு என்றான் எழிலன்.

காவியன் அலைபேசி அழைக்க, மாயா அழுது கொண்டே பேசினாள்.

மாயா, எதுக்கு அழுற? காவியன் கேட்க, எல்லாரும் ரணாவை பார்த்தனர்.

காவியா, நீ என்னால தான் வர மாட்டாயா? மாயா அழுது கொண்டே கேட்க, இல்ல மாயா, அதனால் இல்லை. ஜீவா எங்க? காவியன் கேட்க, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என அவள் மீண்டும் அழுதாள்.

அவன் பேச பேச மேலும் அழுதாள் மாயா.

“ஏய் லூசு, நான் என்னோட அம்மாவோட தான் இருக்க போறேன். முதல்ல பேசுறதை கேட்டுட்டு அழு” என்றான் காவியன்.

அழுகை நின்று பக்கம் பார்க்க ஜீவாவை காணவில்லை. காவியா, ஜீவாவை காணோம். என் அருகே தான் இருந்தான்.

முதல்ல அவனை தேடு. கோபத்துல போயிருப்பான். யாராவது பேசுனா அதை முதல்ல முழுசா கேளு. அப்புறம் ரியாக்ட் பண்ணு என்றான்.

அம்மாவா? என்று மாயா கேட்க, “நீ அவனிடமே கேட்டுக்கோ” என்று காவியன் அலைபேசியை வைத்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

ஒன்றுமில்லை. ஒரு லூசு பொண்ணுக்கு பதில் கொடுத்தேன் என சிரித்தான். யசோதா அவனருகே வந்து அமர்ந்தார். ரணா முகம் சரியில்லாது போனது. காவியனும் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

தர்ஷன் சிரிப்பை பார்த்து எல்லாரும் அவன் பக்கம் திரும்ப பாட்டி மட்டும் கோபமாக அமர்ந்திருந்தார். அம்மா..என்று செழியன் அவரிடம் வந்து அவரை சமாதானப்படுத்தினார்.

சற்று நேரத்தில் ரணா யசோதாவை பார்த்து, எனக்கு ஒரு சந்தேகம் யசோ என்றாள். எல்லாரும் அவளை பார்க்க, யசோதா அருகே அமர்ந்து, நீ என்ன படிச்சிருக்க? என்று கேட்டாள். அவர் சொல்ல, ரணா யோசனையுடன், அப்படின்னா அப்பாவுடன் கம்பெனி வேலையில நீ உதவி இருக்கலாம்ல்ல யசோ? என்று கேட்டாள்.

நான் உதவலாம். ஏற்கனவே ஒருவன் பொறாமையில் தவித்து வெந்து கொண்டிருந்தான் என் அண்ணாவை பார்த்து. இதில் நானும் உள்ளே சென்றால் கொன்றுவான். அதான் ஏதும் செய்யலை என்றார் யசோ.

செழியனும் பாட்டியும் அவரை பார்க்க, என்ன பார்க்கிறீங்க? நான் உண்மையை தானே சொன்னேன். விசுவுக்கு உன் மீது ஏற்கனவே பொறாமை. இதில் நானுமா? வேண்டாம்ப்பா..என்று தான் விலகினேன்.

அதெல்லாம் சரி என்று ரணா எழுந்து முறைத்துக் கொண்டே, யசோ உன்னை மட்டும் தனியே போக விட்டுருக்காங்க? நீ மட்டும் பாரின் போய் படிச்சிருக்க? கோபமாக ரணா கேட்க,

அட என் தங்கமே, என் அம்மா என்னை போக அனுமதிச்சாங்க. நான் போனேன். உன் அம்மாவிடம் கேட்டு நீயும் போயேன் என்றார் புன்னகையுடன்.

என்னது அம்மாவிடமா? என்று ரணா திரும்பி சிவநந்தினியை பார்க்க, என்ன? என்று சிவநந்தினி புருவத்தை உயர்த்தினார்.

“அய்யோ அம்மா, நான் சும்மா தான் கேட்டேன்” என்று மலுப்பி விட்டு அமர்ந்து, “ஆத்வி நீ கேளு” என்றாள்.

ஏய் குட்டிப்பிசாசு, நீ அம்மாவிடம் அடிதான் வாங்கப் போற? என்றான் அதீபன்.

இல்லையே, நான் தான் சமத்தா இருக்கேனே? என்று யசோ, “அம்மா முறைக்கிறாங்க. கெல்ப் பண்ணு” என்றாள்.

“நீ வாய மூடிக்கிட்டு இருந்தாலே திட்டு வாங்க மாட்ட” என்றான் எழிலன். அனைவரும் புன்னகைத்தனர். ரவிக்குமார் குடும்பமும், பாட்டி, செழியன், ஆத்வி, நிதின், ரணா அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். அதீபன் நளனை ஹாஸ்டலில் இறக்கி விட்டு வீட்டிற்கு வந்தான்.

யசோ, சிவநந்தினி, நேத்ரா அறையில் இருக்க பக்கத்து அறையில் அதிரதன், காவியன், எழிலன் இருந்தனர். நேத்ரா சிவநந்தினி, யசோவிடம் நன்றாக பேச ஆரம்பித்தாள். பசங்க அதிரதனுடன் நெருக்கமானார்கள்.

மறுநாள் காலையில் நேத்ராவை பார்க்க சுஜித்ரா, விஷ்வா, அவன் அம்மா, சாரு, ஜீவா, அவள் அம்மா வந்திருந்தனர். பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்த நடந்த அனைத்தும் தெரிந்த சுஜி வருத்தப்பட்டு தர்ஷனை தூக்கினாள். அதிரதனும் பசங்களும் உள்ளே வந்தனர். அதிரதனை பார்த்து அவனுக்கு திருமணத்திற்கான வாழ்த்தை கூறினார்கள். அவன் புன்னகையுடன் நேத்ராவை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.

ஹேய், வினு..என்று சுஜியும் சாருவும் அவளை அணைத்து, அவளுக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தை தெரிவித்தனர்.

விஷ்வா நேத்ராவிடம் வந்து, வினு நீ அந்த பையனை நம்ம நிலையத்துல கூட விட்றலாமே? விஷ்வா கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.

உனக்கு என்னடா பிரச்சனை? தர்ஷன் எங்க பையன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். “ஏற்கனவே பேசியதை போல் பேசி என்னை கஷ்டப்படுத்தாத” என்றாள் நேத்ரா.

வினு, உனக்காக தான் சொல்றேன். இப்ப எதுவும் தெரியாது. எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று விஷ்வா சொல்ல, சுஜித்ரா அவனை முறைத்தாள்.

அதிரதன் அவன் தோளில் கை போட்டுக் கொண்டு அவனை பார்க்க, விஷ்வா அவன் கையை எடுத்து விட்டான்.

“நீ எதுக்கு இப்படி சொல்றன்னு புரியுது? அதை நாங்க பார்த்துப்போம். எந்த நிலையிலும் நாங்க பிரிய மாட்டோம்” என்றான் அதிரதன்.

ஆனால் சார், எப்படியும் விசயம் யார் மூலமாக தெரிந்தாலும் அந்த பையன் கஷ்டப்படுவானே?

“விஷ்வா போதும். அதை அதிரதன் பார்த்துப்பான்” என்று சுஜி கோபமானாள்.

“சுஜி, நீ அமைதியா இரு” என்றான் விஷ்வா.

சுஜி என்று நேத்ரா எழ, சாரி வினு. நாம அப்புறம் மீட் பண்ணலாம் என்று சுஜி கோபமாக வெளியே சென்றாள்.

என்னடா வேடிக்கை பாக்குற? போ..என்று நேத்ரா சொல்ல, அவன் தன் அம்மாவை பார்த்தான். அவர் தலையில் அடித்துக் கொண்டு, “போடா” என்று எறிந்து விழுந்தார்.

விஷ்வா அதிரதனை பார்க்க, அவன் தோளை குலுக்கி விட்டு நேத்ரா அருகே அமர்ந்து சாரு, கார்டு ஜீவாவை பார்த்தான். விஷ்வா அவனை முறைத்து விட்டு சுஜியை சமாதானப்படுத்த, உன்னால வினுவை மறக்க முடியலைல்ல? என்று கோபப்பட்டாள் சுஜி.

இல்ல சுஜி. அப்படியெல்லாம் இல்லை. ஒரு ப்ரெண்டா அவளுக்காக தான் பேசினேன் என்றான் விஷ்வா.

நானும் அவளோட ப்ரெண்டு தான். இப்ப அவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல்ல சந்தோசமா இருந்தேன். அவளோட குழந்தையை இழந்த நிலையில் அந்த கடவுளே அவளுக்காக தர்சுவை கொடுத்துருக்கார். நீ என்னடான்னா.

“சரி விடு. நாம கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று சுஜி சொல்ல, விஷ்வா அவளை அணைத்துக் கொண்டு,

வினு மேல இப்ப எனக்கு காதல் உணர்வு இல்லை சுஜி. சும்மா ஏதாவது நினைச்சுக்காத. அவளோட நல்லதுக்காக தான் யோசித்தேன். அவ்வளவு தான். நானும் உன்னை போல் அவள் அதிரதனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது ரொம்ப சந்தோசமா தான் இருக்கு. ஆனால் அந்த பையன் அவங்க குடும்பத்துக்கு இடைஞ்சலா இருப்பானோன்னு தோன்றியதால் தான் இப்படி பேசினேன் என்று விஷ்வா விளக்கினான். ஆனாலும் சுஜி கோபமா இருந்தாள்.

“சுஜி, ப்ளீஸ் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லாத” என்றான் விஷ்வா.

“யாரோ ஒரு பொண்ணிடமிருந்து தப்பிக்க என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும். அதான இப்படி பேசுற?” சுஜி கேட்க, “அப்படியில்லை சுஜி. எனக்கு உன்னை பிடித்து தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்” என்றான் விஷ்வா. அவள் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள்.

“பொய் சொல்லி சமாளிக்க பார்க்காத விஷ்வா” என்றாள் சுஜி. விஷ்வா அவளிடம் வந்து, நிஜமாக உன்னை பிடித்து தான் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன் என்றான்.

“திரும்ப திரும்ப பொய் சொல்லாதடா” என்று சுஜி அழுதாள். “நீ என்னை நம்ப மாட்டியா சுஜி?” என்று அவள் கையை விஷ்வா பிடித்தான்.

“விடு” என்று அவன் கையை உதறி விட்டு சுஜி நகர, அவளை விஷ்வா அவளை இழுத்து தூக்கி முத்தமிட்டான். சுஜி அதிர்ந்து பார்க்க, அவன் கண்ணடித்தான்.

அய்யோ..டேய், என்ன பண்ற? இது ஹாஸ்பிட்டல். யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க? என்று விஷ்வா அம்மா சத்தமிட, அம்மா, நீ போ. வாரேன் என்று தூக்கிய அவளை கீழே விடாமல் அவளது நெற்றி முட்டி, இப்ப நம்புறியா செல்லம்மா? என்று கேட்டான். அவள் வெட்கத்துடன் முகத்தை திருப்பினாள். அவன் புன்னகையுடன் சுஜியை கீழே இறக்கி விட்டான்.

சுஜி விஷ்வா அம்மாவை பார்த்து அவன் பின் வெட்கமுடன் மறைந்து நின்றாள். அவன் அவளை முன் இழுத்து சுஜி தோளில் கையை போட்டுக் கொண்டே அவன் அம்மாவிடம் அழைத்து வந்தான்.

என்னம்மா, உனக்கு கோபம் போயிருச்சா? அதிரதன் கேட்க, சுஜி புன்னகையுடன் நேத்ராவை பார்த்தாள்.

உங்க மேரேஜ் எப்பொழுது வச்சிருக்கீங்க? நேத்ரா கேட்க, ஒரு மாசத்துல்லன்னு அம்மா சொல்றாங்க. இந்த பிரச்சனை எல்லாம் முடிந்தவுடன் பண்ணிக்கலாம்ன்னு எனக்கு தோணுது என்று விஷ்வா, சுஜியையும் அவன் அம்மாவையும் பார்த்தான்.

“ஆமா சார், அது தான் பாதுகாப்பாக இருக்கும்” என்று காவியன் சொன்னான். அவனை பார்த்த விஷ்வா அவனை அணைத்து, “உனக்கு குடும்பம் கிடைச்சதுல ரொம்ப சந்தோசம்டா” என்றான்.

அக்காவை எப்படி சமாதானப்படுத்துனீங்க? காவியன் கேட்க, சுஜி முகம் சிவந்தது.

காவியா, இதெல்லாம் கேட்கக்கூடாதுய்யா. இது அவங்களோட பர்சனல். அப்படிதானம்மா என்று யசோதா புன்னையுடன் சொல்ல, அவள் புன்னகைத்தாள். நேத்ரா புன்னகையுடன் சுஜியை பார்த்தாள்.

“நாங்க வாரோம்” என்று விஷ்வா அம்மா சொல்ல, சுஜியும் எல்லாரிடமும் சொல்லி விட்டு அவர்களுடன் கிளம்பினாள்.

சாரிடா ஜீவா, உன்னோட அப்பா இறந்ததுக்கு வர முடியலை அதிரதன் சொல்ல, அவன் முகம் வாடியது. அதிரதன் பணம் கொடுத்தும் ஜீவாவின் அப்பாவை காப்பாற்ற முடியாமல் போனது. அவர் இறந்து விட்டார். இப்பொழுது ஜீவா வீட்டில் அவனும் அவன் தம்பியும் தான் இருக்கிறார்கள்.

“பரவாயில்லை சார். இருக்கிற பிரச்சனையில யாருக்கும் ஏதும் ஆகாமல் இருந்தாலே போதும்” என்றான் ஜீவா.

நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க? அதிரதன் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஒரு வருடத்திற்கு பின் தான் பண்ணிக்கணும். முதல்ல பணம் சேர்த்து வைக்கணும்” என்றான் ஜீவா.

ம்ம்..என்றாள் சாரு.

நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க? சாரு ஆர்வமாக கேட்க, அதிரதன் நேத்ராவை பார்த்தான்.

சாரி சாரு. கல்யாணத்துக்கு யாரையும் அழைக்க முடியாது. இந்த மாதத்தில் உடல் நலமாகிடும்ன்னு டாக்டர் சொன்னாங்க. கல்யாணம் எங்க ஊரில் கோவிலில் தான் நடக்க போகுது என்று நேத்ரா சொல்ல, சிவநந்தினி பயத்துடன் நேத்ராவை பார்த்தார்.

அக்கா, நீயா எப்படி சொல்லலாம்? குடும்பத்துல எல்லாரும் பேச வேண்டாமா? எழிலன் கேட்டான்.

என் விருப்பம் இது தான். நம்ம அம்மா, அப்பா தான் இல்லை. அவர் இருந்த இடத்திலே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்ன்னு தோணுது. விருப்பமில்லைன்னா கல்யாணத்தை நிறுத்திக்கலாம் என்றாள் நேத்ரா. அதிரதன் டென்சன் ஆனான்.

சிவநந்தினி நேத்ரா அருகே அமர்ந்து, “வினும்மா..கல்யாணம் மட்டும் அங்கே வேண்டாமேம்மா!” என்றார்.

உங்களையும், உங்க கணவரையும் யாரும் ஏதும் சொல்லுவாங்கன்னு பயமா இருக்கா? என்று குத்திக் காட்டி நேத்ரா கேட்க, அதிரதன் அவன் அம்மாவை பார்த்தான்.

அக்கா, என்ன பேசுறீங்க? காவியன் கேட்க, சிவநந்தினியை பார்த்துக் கொண்டே, “நான் உண்மையை தான கேட்டேன்” என்றாள் அவள்.

“அக்கா, விருப்பமிருந்தால் கல்யாணம் பண்ணிக்கோ. இப்படி கஷ்டப்படுத்துற மாதிரி பேசாத” என்றான் எழிலன்.

பார்றா..அத்தைக்கு மருமகன்கள் சப்போர்ட்டா? என்று காவியன், எழிலனிடம் கேட்டாள் நேத்ரா.

பண்ணலாமே? என்று எழுந்த அதிரதன் சிவநந்தியிடம் சென்று, அம்மா நீங்க என்ன கொலை குத்தமா பண்ணீங்க? காதலுக்காக ஓடி வந்தீங்க? அதனால் என்ன? நம்ம மேல தப்பு இருந்தா ஒத்துக்கணும்.

உங்களுக்கு தான் நடந்த எதுவுமே தெரியாதே? இதுக்கெல்லாம பயப்படுவீங்க? இப்ப நீங்களும் அப்பாவும் தனியா இல்லையே? நாங்க இருக்கோமே என்று அவன் அம்மாவை தேற்றி ஆறுதலாக சிவநந்தினி கையை பிடித்தான்.

நேத்ரா அவனை முறைத்து பார்த்தாள். அவளை பார்த்து புன்னகைத்த அதிரதன், “வேற ஏதாவது முயற்சி செய் வினு” என்றான்.

கண்ணா, என்ன முயற்சி? யசோதா கேட்டார்.

ஏய் வினு? என்னடி பண்ற? சாரு கோபமாக கேட்டாள்.

ஷ்..என்ற ஜீவா, “சார் நாங்க கிளம்புகிறோம்” என்று சாருவை அழைத்து சென்றான்.

யசோ, வினு நம்மள பழி வாங்கணுமாம்? அப்படித்தானே வினு? அதிரதன் கேட்க, அவனை முறைத்து பார்த்தாள்.

அக்கா, அதான் மாமா மன்னிப்பு கேட்டாங்கல்ல. இவங்க தெரிஞ்சே செய்யலை. நம்ம கஷ்டப்பட்ட மாதிரி இவங்களும் கஷ்டப்படணும்ன்னு நினைக்கிறியா? எழிலன் கேட்க, வினு கண்ணீர் தேங்கி நின்றது.

காவியன், எழிலன் வாங்க நாம வெளிய போகலாம் என்று யசோதா இருவர் கையையும் பிடிக்க, அம்மா..அக்கா..என்று காவியன் சொல்ல, அவர் கண்ணீருடன் தன் மகனை பார்த்தார்.

எழிலன் காவியனிடம் கண்ணை காட்ட, காவியன் அவரை அணைத்து விட்டு வெளிய போகலாமே? என்று “சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்” என்ற காவியன் தர்ஷனை தூக்கினான்.

“பையனை விட்டு போடா” நேத்ரா சொல்ல, மாமா அக்காவுக்கு மூளைய சரி பண்ணி விடுங்க. அப்புறம் அவங்க பையனோட பேசட்டும் என்று சொல்லி சிவநந்தினியிடம் கண்ணை காட்டினான் காவியன். அவரும் எழுந்து செல்ல, “பாவி பிளான் போட்டு தனியா விட்டு போறான்” என்று மனதில் திட்டிய நேத்ரா தேக்கி வைத்திருந்த கண்ணீர் வடிந்தது.

காவியன் உரிமையாக அதிரதனை மாமா என்று அழைக்கவும், அதிரதன் புன்னகையுடன் அவனை பார்த்தான்.

வினுவுக்கு என்ன பிரச்சனை? அழுதுகிட்டே இருக்காளே? அதிரதன் கேட்க, அவள் அமைதியாக இருந்தாள். வினு நீ பழி வாங்க தேவையில்லை. அம்மா ஏற்கனவே கஷ்டத்துல தான் வாழ்ந்தாங்க. அவங்க சந்தோச சிரித்து கூட பார்த்து ரொம்ப வருசமாச்சு. நீங்க மூவரும் அவங்க தம்பி பிள்ளைகன்னு தெரிந்ததும் அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.

அப்பாவும் அம்மா கஷ்டப்படுவது பொறுக்காமல் நாம பள்ளி படிக்கும் போதே

உங்கள் குடும்பத்தை தேட ஆரம்பித்தார். ஆனால் உன் அம்மா, அப்பா அங்கு இல்லை. அவர் என்ன தான் செய்வார்? ஓடி வந்த அந்த நேரத்தில் பிசினஸில் பிரச்சனை என்பதால் இங்கே கவனிக்காமல் விட்டுட்டார்.

தப்பு தான் வினு. உங்களோட கஷ்டம் எல்லாருக்குமே புரியுது. ஆனால் கொஞ்சமாவது யோசித்து பாரு. நாம அந்த சின்ன வயசில் சந்தித்த போதாவது உன்னோட அப்பா நடந்ததை சொல்லி இருக்கலாம். அவர் சொல்லலை. அவருக்கு அம்மா மீதுள்ள கோபம் போயிருச்சு. எழிலனும் காவியனும் மன்னித்ததை போல் நீயும் மன்னிக்கக்கூடாதா? என்று அவள் கையை பிடித்தான் அதிரதன்.

“எனக்கு கஷ்டமா இருக்கே!” என்று வினு அழுதாள்.

வினு, என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைப்பது விருப்பப்பட்டு தான ஒத்துகிட்ட? அதிரதன் கேட்க, ஏன் பழி வாங்க கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீங்களா? என இவளும் கேட்டாள். அதிரதன் அமைதியாக இருந்தான்.

“இல்ல சார், எனக்கு தோன்றியதால் கேட்டேன்” என்றாள் நேத்ரா.

சரி, நீ சொன்ன படி திருமணம் உங்க..ஷ்..நம்ம ஊர்லயே நடக்கட்டும். நீ தனியாக பழி வாங்க தேவையில்லை. எல்லாம் தானே நடக்கும் என்று எழுந்தான்.

கோபமாக இருக்கீங்களோ? நேத்ரா கேட்க, ஏன் ஓடி வந்து முத்தம் கொடுக்கப் போறீயா? அவன் கேட்க, கொடுக்க நினைத்தாலும் முடியாதே என்றாள் நேத்ரா.

என்ன? என்று அதிரதன் திரும்ப, என்னோட மாமா கோபத்தை முத்தத்தால் தான் கீழிறக்க முடியும்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று நேத்ரா கேட்க, விரைந்து அவள் படுக்கைக்கு வந்து “கொடு” என்று அவளை நெருங்கினான் அதிரதன்.

நேத்ரா அவன் நெற்றியில் முத்தமிட, இதுக்கா நான் ஆர்வமாக வந்தேன்” என்று அவளது இதழ்களை வருடினான்.

என் மாமாவுக்கு ஆசை தான். டாக்டர் சொன்னது மறந்து போச்சோ? அவள் கேட்க, போம்மா..உசுப்பேத்தி விட்டு ஓரவஞ்சனை பண்றீயே?

“ஓரவஞ்சனையெல்லாம் இல்லை” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். எனக்கு பத்தாது. இதழில் தான் வேண்டும் என்று வாயை குவித்தான்.

அதுக்கு ஒரு மாசம் இருக்கே?

கல்யாணத்திற்கு பின்னும் இதழ் முத்தத்தோட நிறுத்திடுவியோ? அதிரதன் கேட்க, “அஃப் கோர்ஸ்” என்றாள். இருவரும் சிரித்துக் கொண்டனர். பின் அவர்கள் ஒரு வழியாக வீட்டிற்கு வந்தனர்.

அனைவரையும் சேர்த்து நிற்க வைத்து ஆராத்தி சுற்றி உள்ளே அழைத்து வந்தார் சிவநந்தினி. உள்ளே வந்த யசோதா எல்லாரையும் பார்த்து, “பிரணா எங்கே?” என்று கேட்டார்.

அத்தை, அவள் நேற்று இரவு உள்ளே சென்றவள் தான் இன்னும் வரவில்லை. அவ இன்று கல்லூரிக்கு போகலைன்னு சொல்லீட்டா என்று அதீபன் சொன்னான்.

கல்லூரிக்கு போகலைன்னு சொன்னாலா? என்ற சிவநந்தினி ரணா அறைக்கு செல்ல, அதிரதனும் சென்றான். காவியனும் எழிலனும் தன் அக்காவை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தனர்.

“பிரணா கதவை திற” சிவநந்தினி சத்தமிட்டார். செழியனும் அவர்களுடன் வந்து நின்றார்.

“அம்மா, தொந்தரவு பண்ணாதீங்க. சோர்வா இருக்கு” என்றாள் ரணா.

“குட்டிம்மா முதல்ல கதவை திற” என்றான் அதிரதன்.

எல்லாரும் அங்கே வர, நேத்ரா காவியனை பார்த்தாள். அவன் கவனமும் அங்கே தான் இருந்தது.

எழுந்து வந்து லேசாக கதவை திறந்த ரணா, எல்லாரும் இங்க என்ன பண்றீங்க? என்னை தூங்க விடுங்களேன் என்று உள்ளிருந்து தலையை நீட்டி அவள் கேட்க,

ஏன்டி கல்லூரிக்கு போக மாட்டேன்னு சொன்ன? சிவநந்தினி அவளது கதவை திறக்க, “அம்மா திறக்காத..”என்று சத்தமிட்டாள்.

“எதுக்கு கத்துற? விடுடி உள்ள வாரேன்” என்றார் சிவநந்தினி.

“எல்லாரும் போங்க” என்றாள் ரணா.

அதீபன் வேகமாக கதவை தள்ளினான். கதவு திறக்கப்பட அவளை பார்த்து அதீபன் பயங்கரமாக சிரித்தான்.

என்னடி ஆடை இது? வீட்டுக்குள்ள எதுக்குடி போட்டிருக்க? சிவநந்தினி கேட்க, அதிரதன் அவளை பார்த்து, உனக்கு என்ன செய்யுது குட்டிம்மா? என்று கேட்டான்.

வெளியே வந்து அதிரதனை கட்டிக் கொண்டு, அண்ணா “நேற்றிலிருந்து யாருமே என்னை கண்டுக்கல. எனக்கு ரொம்ப குளுருது” என்று அழுதாள். அவள் தலையில் குல்லாவுடன் ஸ்வர்ட்டரால் முழுவதும் கவராகி இருந்தாள். க்யூட்டா அழகா பொம்மை மாதிரி இருந்தாள் ரணா.

அதிரதன் அவளை விலக்கி தொட்டு பார்த்து, திடீர்ன்னு எப்படி இவ்வளவு ஃபீவரா இருக்கு? அதிரதன் கேட்க, அவள் மேலும் அழுதாள்.

எதுக்கு அழுற? நிதின் கேட்க, “நேற்று என்னோட அறையில யாரோ இருந்தாங்க. திடீர்ன்னு பார்த்ததுல பயந்துட்டேன்” என்று அழுதாள்.

உன்னோட அறையிலா? செழியன் கேட்க, அதிரதனை விட்டு, அவள் செழியனை அணைத்து அழுதாள்.

யாருன்னு பார்த்தியா? தாட்சாயிணி கேட்க, இல்ல அண்ணி. நான் பயத்தில் மயங்கிட்டேன். மீண்டும் இரவில் விழித்தேன். ஆனால் என்னால எழ முடியலை. ரொம்ப குளிர ஆரம்பித்தது. அதான் இதை போட்டுக்கிட்டேன்.

விழித்த பின்னாவது எங்க யாரையாவது அழைத்திருக்கலாம்ல்ல” அதீபன் கேட்க, என்னால எழவே முடியலை என்று பேசிக் கொண்டே செழியன் மீது சாய்ந்து மயங்கினாள் ரணா.

எல்லாரும் பதற, காவியனும் பதட்டமுடன் ரணா அருகே வந்தான். அவளை தூக்கி படுக்கையில் போட்ட அதிரதன் மருத்துவரை அழைத்தான். சிவநந்தினி தண்ணீரை எடுக்க, அம்மா..வேண்டாம். இப்ப டாக்டர் வந்துடுவாங்க. அவங்க வந்து பார்க்கட்டும். அதுவரை குட்டிம்மா ஓய்வெடுக்கட்டும். எல்லாரும் வாங்க. அம்மா நீங்க மட்டும் இங்கே இருக்கட்டும் அதிரதன் சொல்ல,

நந்து ஹாஸ்பிட்டல்ல இருந்து இப்ப தான் வந்துருக்கா. நான் பார்த்துக்கிறேன் என்றார் ரேவதி.

அனைவரும் நகர்ந்தனர். காவியனை பார்த்த அதிரதன் அவன் தோளில் கை போட்டு வெளியே அழைத்து வர, அவன் திரும்பி ரணாவை பார்த்துக் கொண்டே அதிரதனுடன் சென்றான்.